PDA

View Full Version : அழகு



rush8080
01-04-2003, 12:01 PM
கொடி போல் உன் இடை அழகு

கனி போல் உன் சுவை அழகு

பனி போல் உன் இமை அழகு

பால் போல் உன் விழி அழகு..



அடியே நீ எனக்கழகு

அலை போல் உன் கூந்தல் அழகு

கிளியே உன் சிரிப்பழகு

கீழ் உதட்டு மச்சம் அழகு..



கனியே உன் கால் அழகு

கவிதை போல் உன் கை அழகு

பழமே உன் பல் அழகு

என் பார்வைக்கு நீ அழகு..



அன்பே நீ மலரழகு

மான் போல் உன் நடை அழகு

சின்ன சின்ன விரல் அழகு

சிற்பம் போன்ற நீ அழகு..



கண்னே இந்த பூ அழகு

கண்ணீரிலும் நீ அழகு

குயிலே உன் குரல் அழகு

கொவ்வை போன்ற உதடழகு..



ஆளாகி நீ அழகு

அலை பாயும் கண்ணழகு

அணிந்திருக்கும் ஆடை அழகு

அன்பு கொண்ட நெஞ்சம் அழகு..



மூவாறு வயதழகு

மூக்கின் மேல் கோபம் அழகு

இரண்டெழுத்து பெயரழகு

உன் இதயத்து காதல் அழகு..

aren
01-04-2003, 12:45 PM
பதினெட்டு வயதான காதலியின் அழகை அனு அனுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். அவளிடன் உள்ள அனைத்தும் உங்களுக்கு அழகாகத் தோன்றுகிறது. கொடுத்து வைத்தவள். பாராட்டுக்கள்.

Mano.G.
01-04-2003, 01:01 PM
அழகு ஆபத்துக்கு வழி

என முன்னோர்கள் கூறினார்கள்

இக்கவிதையோ இன்பம் எனக்கூறியுள்ளது

நீங்களே முடிவு செய்யுங்களேன்



மனோ.ஜி.

இளசு
01-04-2003, 07:04 PM
அழகை அழகான மொழியில் அழகான கவிதையாய்ச் சொன்ன அழகு அருமை!

Nanban
10-01-2004, 11:48 AM
அழகிய இசை நடையில் இன்பமான கவிதை.... எழுதிய நண்பர் எங்கிருந்தாலும் வாழ்க......

அறிஞர்
15-06-2005, 04:45 AM
எத்தனையான ரசனை..
அணு அணுவாய் ரசித்து
காதலியை அழகியாய்
மாற்றிய விதம்
அழகு....

pradeepkt
15-06-2005, 05:04 AM
எத்தனையான ரசனை..
அணு அணுவாய் ரசித்து
காதலியை அழகியாய்
மாற்றிய விதம்
அழகு....

அறிஞரே,

அழகி காதலியாக வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் காதலி அழகியாகத்தான் இருப்பாள், சந்தேகமென்ன?

அறிஞர்
15-06-2005, 05:14 AM
அறிஞரே,

அழகி காதலியாக வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் காதலி அழகியாகத்தான் இருப்பாள், சந்தேகமென்ன?

காதலனுக்கு காதலி அழகியாய் தெரிவாள்.. அனைவருக்கு அல்ல.....

அதில் நான் ஒருவரியை சேர்த்து இருக்கலாம்..

காதலியை உலகிற்கு (உலகத்திற்கு ) அழகியாய்... மாற்றி கவிதை வடித்தாரோ என...

pradeepkt
15-06-2005, 05:18 AM
சரியாச் சொன்னீங்க.
காதலியை உலக அழகியாக மாற்றி விட்டார்.

மன்மதன்
15-06-2005, 05:49 AM
எத்தனை அழகு கவிதை..
அன்புடன்
மன்மதன்

gragavan
15-06-2005, 06:04 AM
அழகான கவிதை. காதலில் நீங்கள் மாட்டியுள்ளீர்கள் என்று தெரிகிறது. வாழ்த்துகள்.

பரஞ்சோதி
15-06-2005, 11:50 AM
மிக அருமையான கவிதை, எழுதியவருக்கு வாழ்த்துகள், அவர் எங்கே இருக்கிறார் என்பது தான் கேள்விக்குறி.

தேடி, ரசித்து, நமக்கு கொடுத்த மன்மதருக்கு நன்றி.

பிரியன்
15-06-2005, 12:00 PM
கண்ணுக்கு மையழகு.
கவிதைக்கு பொய் அழகு...

சுவேதா
18-06-2005, 02:01 PM
நண்பனே!
அழகான உன்
கன்னியவளை
உலக அழகியாக
மாற்றிவிட்டாய்!

அவளயே கை பிடித்து
உன் அவளின்
பார்வைக்கு நீ
நல்ல மணாளனாய்
உன் புகழ் அவள்
பாடச் செய்!

:) :D மிகவும் நன்றாக அழகை வர்ணித்துள்ளீர்கள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!

kavitha
20-06-2005, 06:24 AM
"என் பார்வைக்கு நீ அழகு.."

இந்த வரியில் உள்ளது எல்லா அழகும்... எழுதியவரின் முழுப்பெயர் என்ன மன்மதன்?

பிரசன்னா
12-09-2005, 02:33 PM
எத்தனை அழகு கவிதை..
அழகை அழகான மொழியில் அழகான கவிதையாய்ச் சொன்ன அழகு அருமை!
பாராட்டுக்கள்.

pradeepkt
13-09-2005, 04:59 AM
எத்தனை அழகு கவிதை..
அழகை அழகான மொழியில் அழகான கவிதையாய்ச் சொன்ன அழகு அருமை!
பாராட்டுக்கள்.
பேராசிரியரே,
எனக்கு ஒரு குழப்பம்
இங்கே பாராட்டுகள் என்பது இலக்கணப்படி சரியா, அல்லது அந்த "க்" என்ற ஒற்று தேவையா?

gragavan
13-09-2005, 07:53 AM
பாராட்டுகள் என்பதே சரி. க் இங்கு ஒற்று அல்ல. வெறும் கிக் (அதான் கள் இருக்கிறெதே). சொல்லப் போனாலில் வரும் ப் தான் ஒற்று.

வாழ்த்துகள் என்பதே சரி. வாழ்த்துக்கள் என்பது தவறு.
வாத்துகள் சரி. வாத்துக்கள் தவறு.

pradeepkt
13-09-2005, 08:39 AM
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மட்டும் ஏன் இதை இத்தனை நாள் விட்டு வச்சிருந்தாங்க.
பெரும்பெரும் எழுத்தாளர்களின் கதைகளிலெல்லாம் நான் படிச்சிருக்கனே..

gragavan
13-09-2005, 08:43 AM
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மட்டும் ஏன் இதை இத்தனை நாள் விட்டு வச்சிருந்தாங்க.
பெரும்பெரும் எழுத்தாளர்களின் கதைகளிலெல்லாம் நான் படிச்சிருக்கனே..ஆனைக்கும் அடி சறுக்குந்தானே.........கற்றது கைமண்ணளவு. இன்னொரு தப்பு....பவளம். எல்லாரும் இப்ப பவளமுன்னு எழுதுறாங்க. உண்மையிலேயே அது பவழம்.

pradeepkt
13-09-2005, 08:49 AM
இதையும் ரெண்டு விதமாவும் படிச்சிருக்கனே...

Narathar
15-09-2005, 01:22 PM
யாரந்த சூப்பர் ஸ்டாரினி?