PDA

View Full Version : பனி துளிகள்..



rush8080
01-04-2003, 12:03 PM
பனி துளிகள் கொண்டு பிரம்மன்

படைத்து விட்ட சித்திரமே

உயிர் துளிகள் பறிக்கின்றாய்

என் உயிர் துளிகள் பறிக்கின்றாய்..



இரவு பகல் தெரியவில்லை

ஏன் என்றும் புரியவில்லை

ஏனடி கொல்லுகின்றாய்

ஏன் என்னை கொல்லுகின்றாய்?..

******************

புன்னகை வீசி என் மனதை

பறித்து சென்ற பெண்ணவளே

உன் பெயரும் தெரியவில்லை

எங்கே நீ என்னவளே?



மல்லிகை போன்ற மலர் விழியால்

என்னை மயக்கி சென்றவளே

இத்தனை காலம் காத்திருக்கேன்

எங்கே நீ என்னவளே?



உன்னை நான் பார்த்த நிமிடம்

வேர்த்து இதயம் நின்று போச்சு

அன்றோடு பெண்ணே பெண்ணே

நீதானே எந்தன் மூச்சு



காதல் இருந்தால்

அன்பே நீ வா..

இல்லை என்றால்

துளி விசம் தா..

*************

இமைகள் மறைக்கும் உன் விழிகள்

இரண்டு அழகிய நிலவுகளோ

விழியின் மேலே புருவம் இரண்டும்

நிலவை மறைக்கும் மேகங்களோ?



கனவில் இன்று வருவாயோ

கண் மூடி கொள்கின்றேன்

இரவுகளை எதிர் பார்க்கின்றேன்

இனியவளே உனை நினைக்கின்றேன்



நீ சிந்தும் புன்னகைகள்

என்ன விலையோ

சொல்லு பெண்ணெ

நான் எந்தன் உயிரை தந்து

விலைக்கு வாங்க

வருவேன் அன்பே



காதல் இருந்தால்

அன்பே நீ வா..

இல்லை என்றால்

துளி விசம் தா..

இளசு
01-04-2003, 07:23 PM
எங்கோ ஓர் சாலை வளைவில்

உன் பிம்பம் தொலைந்ததடி.....

அங்கேயே நின்றுகொண்டு

என்னுயிர் புலம்புதடி......



ஆப்பிள் பெண்ணை நினைவுபடுத்துகிறது உங்கள் ஏக்கக்கவிதை...!

பாராட்டுகள் நண்பரே!

kanni
02-04-2003, 03:59 AM
என்ன நன்பரே உங்கள் ஏக்கத்தை கவிதை ஆக்கியதைப் போல்

அத்தனை உருக்கமாய் இருக்கின்றது? உங்கள் ஆவல் நிறை வேற

வாழ்த்துக்கள். கவிதைக்கும்தான் ம் ம்ம் நன்றாய் இருக்கின்றது

உங்கள் கவிதை. தொடருங்கள் மேலும் உங்கள் பதிவுகளை.

கன்னி

Narathar
02-04-2003, 05:46 AM
எங்கேயோ அவளைப்பார்த்துவிட்டு.................

இப்படி ஏங்குகிறீரே...??? சீக்கிரமே அவள்

உங்களை தேடிவரட்டும்.

( அவள் வந்ததும் கவிதை எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்!! )

Nanban
10-01-2004, 11:51 AM
காதலை வேண்டி, கவிதை எழுதியவருக்கு காதல் கிட்டியதா, இல்லையா.......