PDA

View Full Version : பங்குச் சந்தை -- ஒரு பார்வை

karikaalan
01-06-2005, 06:15 AM
நண்பர்களே,

பலரும் ஆவல் தெரிவித்ததால், இப்பகுதியை எச்சரிக்கையுடனே தொடங்குகிறேன். எனக்கு தினசரி ஒரு Newsletter வருகிறது. அதிலிருந்து எடுக்கப்பட்டவைதான் இப்பகுதியில் வரும் செய்திகள். முதலீடு செய்வதும் செய்யாததும் படிப்பவர்களின் ஏகோபித்த உரிமை. அதில் அடியேனுக்கு எந்தப் பங்கும் இல்லை.

ஜூன் 01 2005

நேற்று சந்தை மிக நிதானமாகவே வர்த்தகம் தொடங்கினாலும், விரைவிலேயே சூடு பிடித்தது. மூடும்போது மும்பை ஸென்ஸெக்ஸ் 51 பாயிண்டுகளும் (6715), நிப்டி 15 பாயிண்டுகளும் (2087) உயர்ந்தன. இதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுவது ரிலையன்ஸ் க்ரூப் பங்குகளான ரிலையன்ஸ் எனெர்ஜி & ரிலையன்ஸ் காபிடல். ITC & டாடா டீ, SBI பங்குகளும் முன்னேற்றத்துக்கு உதவின. வர்த்தகத்தில் பங்குகளின் எண்ணிக்கையும் வளர்ச்சி கண்டன.

இப்போதைய நிலையில் பார்த்தால் REL, ரிலையன்ஸ் காபிடல், அர்விண்ட் மில்ஸ், குஜராத் ஆல்கலிஸ் & கெமிகல்ஸ், டாடா டீ மற்றும் வங்கி பங்குகள் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புகள் நிறையவே தென்படுகிறது.

புதியதாக நிப்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பங்குகளான எஸ்கார்ட்ஸ், இந்தியா சிமெண்ட், வீடியொகான் இந்தெர்னேஷனல், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை வர்த்தகர்களால் சேகரிக்கப்படுகின்றன. இரண்டு மூன்று வாரங்களில் இவற்றின் வளர்ச்சி தெரியலாம்.

===கரிகாலன்

மன்மதன்
01-06-2005, 06:35 AM
என்னுடைய ரூம் மேட் இந்த துறையில்தான் வேலை பார்க்கிறார். அங்கு சென்று நான் எப்படி வேலை பார்க்கிறார்கள் என்று பார்த்தேன்.. கட்டம் கட்டமாக விலை பட்டியல், வினாடிக்கு வினாடி மாறுகிறது.. ஷேர்களை வாங்கி விற்பதுதான் இவ்ர்கள் வேலை.. சனி, யிறு விடுமுறை மற்றும் அமெரிக்காவில் விடுமுறை என்றால் இவருக்கும் விடுமுறை..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
01-06-2005, 06:45 AM
நன்றி அண்ணா,

இப்பதிவின் மூலமாக எங்களது பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

மற்றவர்களும் தங்கள் தகவல்களை தெரிவியுங்கள்.

pradeepkt
01-06-2005, 07:05 AM
எனக்கென்னவோ இந்த நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் சேர்க்கப் படும் விலக்கப் படும் நிறுவனங்களிலேயே ஏதும் அரசியல் கலந்திருக்குமோ என்று தோன்றுகிறது. பெரும்பாலான மக்கள் நம்பும் இந்த இரண்டு குறியீடுகளின் தரத்தை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள், கரிகாலன் அண்ணா?

Mano.G.
01-06-2005, 11:41 AM
தொழிலாளி வர்கத்திலிருந்து முதலாளிகள் ஆக
நமது மக்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய
சங்கதி , இந்த பதிப்பை பதித்த உங்களுக்கு
நன்றியும் வாழ்த்துக்களும்.

மனோ.ஜி

karikaalan
02-06-2005, 06:10 AM
02.06.05

நண்பர்களே,
சென்ற வாரம் எடுத்த வேகம், நேற்று சற்றே வலிமை குறைந்து காணப்பட்டது. வாங்குவோர் (Bulls) ஈர்ப்பிழந்து போயினரோ எனும்படி ஆகியது. தமது பொஸிஷன்களை ஒருங்கிணைத்துக்கொண்டு மேற்கொண்டு வாங்குதல் துவங்குவார்கள் என்று தெரிகிறது.

BSE ஸென்ஸெக்ஸ் 15 பாயிண்டுகள் உயர்ந்து 6729-ல் நின்றது. NSE 2087-l நின்றது.

கரெக்ஷன் எந்த நேரமும் வரலாம்; ஆனால் விரைவிலேயே மேலெழும்பத் துவங்கும். மருந்துக் கம்பெனிகள் இன்னும் மேலே போகலாம். ஆர்கிட் (Orchid) கெமிகல்ஸ் ரூ.20/பங்கு மேலேறியது.

FMCG துறை பங்குகளான ஹிந்துஸ்தான் லீவர், கோல்கேட், நிர்மா மற்றும் டாபர் (Dabur), தற்போதைய விலையிலிருந்து கணிசமாக மேலேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Capital Goods துறையும் நல்ல முன்னேற்றம் காணும் அறிகுறிகள் வலிமையாக உள்ளன.

===கரிகாலன்

aren
16-10-2005, 03:21 PM
கரிகாலன் அவர்களே,

இந்திய பங்கு சந்தை இப்படி ஜெட் வேகத்தில் போய்க்கொண்டேயிருக்கிறதே. இது இப்பொழுது ஓயும் போல தெரியவில்லையே. ஒரேயடியாக ஒரு நாள் சரிக்கினால் நம் இந்தியர்களால் எழுந்திருக்கமுடியுமா?

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
17-10-2005, 04:46 AM
BSE 8202

NSE 2484

ஆரென் சொல்வது... ஏற்றம் பெரிய அளவில் உள்ளது...

மிகப்பெரிய சரிவு வராமல்... பிரதமர், நிதியமைச்சர் தடுப்பார்கள் என எண்ணுகிறேன்

இளசு
17-10-2005, 08:46 PM
அண்ணல் எங்கே?
பங்கு சந்தை பதிவுகள் போன்ற உங்கள் பங்களிப்பு மன்றத்துக்கு இன்றியமையாத தேவை..
விரைவில் அண்ணல் வரவேண்டும்... வருவார்!

தஞ்சை தமிழன்
21-10-2005, 01:12 PM
நண்பர்களூக்கு வணக்கம்,

நமது கணணீயிலேயே பங்கு சந்தகளை கண்காணீக்கவும் மற்றும் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியுமாமே,

அதைபற்றி விளக்கம் முடியுமா?

pradeepkt
21-10-2005, 03:09 PM
கண்டிப்பாக நம் கணினியில் இருந்தே பங்குகளை வாங்க விற்க கண்காணிக்கவும் முடியும்.
கண்காணிப்பதற்கு http://www.moneycontrol.com ஒரு நல்ல தளம். அங்கே நமது பெயரைப் பதிந்து கொண்டு நம்மிடம் இருக்கும் பங்குகளை உள்ளிட்டால் அவ்வப்போது சென்று பார்த்துக் கொள்ளலாம். அத்தோடு பங்குச் சந்தையில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளையும் அலசல்களோடு இந்தத் தளம் தரும்.

வாங்க விற்க நாம் நேரடியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஐசிஐசிஐ (http://www.icicidirect.com), ஷேர்கான் (http://www.sharekhan.com) போன்ற தளங்கள் நமக்கு புரோக்கர்களாகச் செயல்படுகின்றன. வருடத்திற்கு கொஞ்சம் கட்டணத்தைக் கட்டிவிட்டால் நாமே பங்குகளை நம் சார்பாக அவர்களை வாங்க/விற்கச் சொல்லலாம். முன்பு புக் பில்டிங் என்ற முதல் பங்கு வெளியீட்டை இணையம் மூலமாக வாங்க இயலாதிருந்தது. ஆனால் இப்போது ஐசிஐசிஐ இதையும் செய்வதாகக் கேள்விப் படுகிறேன்.

பங்குச் சந்தையில் இருந்து சில காலமாக ஓய்வில் இருப்பதால் எனக்குத் தெரிந்த அளவு சொல்லி இருக்கிறேன். கரிகாலன் அண்ணா வந்து இன்னும் நிறையச் சொல்லுவார். மற்ற நண்பர்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

தஞ்சை தமிழன்
22-10-2005, 12:58 PM
பிரதீப்பின் தகவலுக்கு எனது அன்பான நன்றி.

இளசு
23-10-2005, 01:55 PM
தஞ்சை தமிழன் கேட்டதும், தம்பி பிரதீப் தகவல்கள் தந்தார்.. நன்றி பிரதீப்.

எனக்கு பிடிபடாத விசயம் இது.
அனைவரும் அண்ணலை எதிர்பார்த்து......

kavitha
20-12-2005, 09:10 AM
அண்ணல் எங்கே?
பங்கு சந்தை பதிவுகள் போன்ற உங்கள் பங்களிப்பு மன்றத்துக்கு இன்றியமையாத தேவை..
விரைவில் அண்ணல் வரவேண்டும்... வருவார்!

பணிபளுவால் மன்றம் வர இயலவில்லையாம். விரைவில் வருவதாகத் தெரிவித்தார்.

இளசு
22-12-2005, 05:45 AM
நன்றி கவீ... நல்ல சேதிக்கு..

நம் அனைவரின் கனிவான விசாரிப்புகளையும், ஆவலான காத்திருப்பையும் அண்ணலுக்குச் சொல்லுங்கள்..

இராசகுமாரன்
03-02-2006, 08:03 AM
அனைவரது விழிகளும் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் எப்போது 10,000 புள்ளிகள் என்ற மைல் கல்லை தாண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

பட்ஜெட்-க்கு பிறகு தான் இதை தொடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு முன்பே தொட்டு விடும் போல் உள்ளது.

வர்த்தக நிறுவனங்களின் வருடாந்திர முடிவுகள் நல்ல நிலையில் வந்து கொண்டிருக்கின்றன. பெப்ரவரி 1-ம் தேதி 9983 புள்ளிகள் வரை சென்று திரும்பியது. இப்போது 9800 புள்ளிகளில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

மும்பை சச்சின் எப்போது செஞ்சரி அடிப்பார் என்பது போல... அனைவரையும் ஆவலுடன் பார்க்க வைத்திருக்கிறது, மும்பை பங்கு சந்தை.

தாமரை
03-02-2006, 10:32 AM
ஜாக்கிரதை யப்பா..
பட்ஜெட்டுக்கு அப்புறம் ஒரு படுகுழி இருக்குதப்பா..
கையில இருப்பதை இப்போ வித்து காசு பாரப்பா..
புதிய முயற்சிகளை அக்டோபர் வரை தள்ளிப்போடப்பா

அந்த ஜக்கம்மா சொல்லரா.. ஜக்கம்மா சொல்லரா...

உயரும் போது விற்பதும் இறங்கும் போது வாங்குவதும் மிக நல்லது...

அப்போதுதான் சந்தை சம நிலையில் இருக்கும்.

அறிஞர்
03-02-2006, 09:18 PM
வாங்க விற்க நாம் நேரடியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஐசிஐசிஐ (http://www.icicidirect.com), ஷேர்கான் (http://www.sharekhan.com) போன்ற தளங்கள் நமக்கு புரோக்கர்களாகச் செயல்படுகின்றன. வருடத்திற்கு கொஞ்சம் கட்டணத்தைக் கட்டிவிட்டால் நாமே பங்குகளை நம் சார்பாக அவர்களை வாங்க/விற்கச் சொல்லலாம். முன்பு புக் பில்டிங் என்ற முதல் பங்கு வெளியீட்டை இணையம் மூலமாக வாங்க இயலாதிருந்தது. ஆனால் இப்போது ஐசிஐசிஐ இதையும் செய்வதாகக் கேள்விப் படுகிறேன்..

பிரதீப் icici பாங்க் மூலம் யாராவது பங்கு வாங்கியிருக்கிறீர்களா. நான் முயற்சித்த பொழுது.. முதல் வருடம் 18%, 2ம் வருடம் 7.5%, மூன்றாம் வருடம் 7% பணம் எடுத்துக்கொள்வார்களாம். இது ரொம்ப ஓவராக தெரிகிறது.

தெரிந்தவர்கள் விவரம் சொல்லுங்கள்

அறிஞர்
06-02-2006, 08:39 PM
பங்குச்சந்தை முதன்முறையாக 10,000 புள்ளிகளை தொட்டுள்ளது..

மேலும் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பதாக சொல்கிறார்கள்....

நாடு நல்ல முறையில் முன்னேறினால் சரிதான்

இராசகுமாரன்
08-02-2006, 02:41 PM
ஆமாம், அறிஞரே.. நேற்றும் இன்றும் 10,000 -க்கு மேலேயே பங்கு சந்தை பறந்து கொண்டிருக்கிறது. இனி profit booking வரும் நேரம். அதனால் குறைய வாய்ப்பிருக்கிறது.

இந்த வருடத்தில் 12,000 புள்ளிகளை தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், இது ரொம்பவே சூடான சந்தையாக தெரிகிறது. அதனால், புதியவர்கள் மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக் கொண்டு சிறிது ஒதுங்கி இருந்து Mutual Fund-களில் பணத்தை போட்டு விட்டு பங்கு சந்தையை வேடிக்கை பார்ப்பது தான் சிறந்தது என்று படுகிறது.

என்னை பொருத்தவரை, இந்த அரசாங்கம் தாக்கு பிடிக்கும் வரை, கம்யூனிஸ்ட்கள் காலை வாரி விடாதவரை, இந்த பங்கு சந்தை இன்னும் உயரத்தில் பறந்து கொண்டே இருக்க வாய்ப்புள்ளது.

இராசகுமாரன்
08-02-2006, 02:50 PM
பிரதீப் icici பாங்க் மூலம் யாராவது பங்கு வாங்கியிருக்கிறீர்களா. நான் முயற்சித்த பொழுது.. முதல் வருடம் 18%, 2ம் வருடம் 7.5%, மூன்றாம் வருடம் 7% பணம் எடுத்துக்கொள்வார்களாம். இது ரொம்ப ஓவராக தெரிகிறது.

இது ரொம்ப ஓவராக தெரிகிறது அறிஞரே..
சரியாக பார்த்தீர்களா?
சென்ற வருடம் நான் கணக்கு ஆரம்பிக்க நினைத்த போது பார்த்தேன்,
இவ்வளவு இல்லையே? விசாரித்து விட்டு கூறுகிறேன்.

நீங்கள் இருக்கும் இடத்தில் Stock Brokers யாரும் இல்லையா?
அவர்கள் மூலம் செல்வதே சிறந்தது.
இங்கே Geojit (http://www.geojit.com/) இருக்கிறார்கள் நல்ல சர்வீஸ்.
அவர்கள் கிளை பல நாடுகளில் உள்ளது.
அங்கேயும் இருக்க வாய்ப்புள்ளது, தேடிப் பாருங்கள்.

அறிஞர்
09-02-2006, 02:30 PM
நான் இந்த இடத்திற்கு புதிது என்பதால் இன்னும் சரியாக தெரியவில்லை.

இந்தியாவில் இருக்கும் நல்ல ப்ரோக்கர்ஸ் பற்றித்தெரிந்தால் தகவல் கொடுக்கவும்.

மேலும் icici mutual funds பற்றி விசாரித்து வருகிறோம். நல்ல தகவல் கிடைத்தால் தருகிறேன்.

அறிஞர்
09-02-2006, 02:31 PM
ஆமாம், அறிஞரே.. நேற்றும் இன்றும் 10,000 -க்கு மேலேயே பங்கு சந்தை பறந்து கொண்டிருக்கிறது. இனி profit booking வரும் நேரம். அதனால் குறைய வாய்ப்பிருக்கிறது.

இந்த வருடத்தில் 12,000 புள்ளிகளை தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், இது ரொம்பவே சூடான சந்தையாக தெரிகிறது. அதனால், புதியவர்கள் மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக் கொண்டு சிறிது ஒதுங்கி இருந்து Mutual Fund-களில் பணத்தை போட்டு விட்டு பங்கு சந்தையை வேடிக்கை பார்ப்பது தான் சிறந்தது என்று படுகிறது.

என்னை பொருத்தவரை, இந்த அரசாங்கம் தாக்கு பிடிக்கும் வரை, கம்யூனிஸ்ட்கள் காலை வாரி விடாதவரை, இந்த பங்கு சந்தை இன்னும் உயரத்தில் பறந்து கொண்டே இருக்க வாய்ப்புள்ளது.
12000 புள்ளிகள் என்பது மிகப்பெரிய சாதனையே...

பேசாமல் இந்தியாவில் உள்ளவர்கள் பங்குச்சந்தையை கற்று... அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம் எனத்தோன்றுகிறது

இராசகுமாரன்
12-02-2006, 03:46 PM
12000 புள்ளிகள் என்பது மிகப்பெரிய சாதனையே...

பேசாமல் இந்தியாவில் உள்ளவர்கள் பங்குச்சந்தையை கற்று... அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம் எனத்தோன்றுகிறது

நானாவது 1200 புள்ளிகளோடு நிற்கிறேன்.
என் நண்பர், 20000 புள்ளிகள் வரை செல்லும் என்கிறான்.
எல்லாம் "சிதம்பர" ரகசியம்.

இராசகுமாரன்
14-03-2006, 07:12 PM
இந்திய பங்கு சந்தை இன்னும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்க.. முன்னனுபவம் இல்லாத சவுதி பங்கு சந்தைக்கு கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பலத்த சரிவு. விசயம் தெரியாமல் அத்தனை பணத்தையும் கொட்டியிருந்த பல சவுதி சேக்குகள் "ஷேக்"-காகியுள்ளார்கள்.

இதனால் மாரடைப்பு, இரத்த கொதிப்பு ஏற்பட்டு சவுதியில் அனைத்து மருத்துவமனைகளும் "ஹவுஸ் ஃபுல்".

நம்ம நாட்டிற்கு இந்த நிலைமை வராது என்று நினைக்கிறேன்.

சுபன்
14-03-2006, 07:28 PM
இந்திய பங்கு சந்தை இன்னும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்க.. முன்னனுபவம் இல்லாத சவுதி பங்கு சந்தைக்கு கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பலத்த சரிவு. விசயம் தெரியாமல் அத்தனை பணத்தையும் கொட்டியிருந்த பல சவுதி சேக்குகள் "ஷேக்"-காகியுள்ளார்கள். :D :D :D

karikaalan
23-03-2006, 09:41 AM
இந்திய பங்கு சந்தை இன்னும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்க.. முன்னனுபவம் இல்லாத சவுதி பங்கு சந்தைக்கு கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பலத்த சரிவு. விசயம் தெரியாமல் அத்தனை பணத்தையும் கொட்டியிருந்த பல சவுதி சேக்குகள் "ஷேக்"-காகியுள்ளார்கள்.

இதனால் மாரடைப்பு, இரத்த கொதிப்பு ஏற்பட்டு சவுதியில் அனைத்து மருத்துவமனைகளும் "ஹவுஸ் ஃபுல்".

நம்ம நாட்டிற்கு இந்த நிலைமை வராது என்று நினைக்கிறேன்.

லேட்டஸ்ட் செய்திப்படி, மத்தியகிழக்கு ஷேக்குகள் இந்தியப் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்! 12000 என்ன அதற்கு மேலும் போகும்!!

===கரிகாலன்

aren
23-03-2006, 09:55 AM
கரிகாலன் அவர்களே, வாருங்கள். உங்களை இங்கே மீண்டும் காண்பது மிகவும் மிகிழ்ச்சியை அளிக்கிறது.

இனிமேல் தொடர்ந்து வந்து இந்த மாதிரி அருமையான செய்தியை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தாமரை
23-03-2006, 10:03 AM
லேட்டஸ்ட் செய்திப்படி, மத்தியகிழக்கு ஷேக்குகள் இந்தியப் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்! 12000 என்ன அதற்கு மேலும் போகும்!!

===கரிகாலன்
ஷேக்கான ஷேக்குகள் ஷோக்காக இந்தியாவில் முதல் போடுகிறார்களா..

ம்ம்ம்ம்.... பணம் வருது,,, வருதுங்கறாங்க.. நம்ம கண்ணில மட்டும் தெரியவே மாட்டேங்குதே..

aren
23-03-2006, 10:05 AM
ஷேக்கான ஷேக்குகள் ஷோக்காக இந்தியாவில் முதல் போடுகிறார்களா..

ம்ம்ம்ம்.... பணம் வருது,,, வருதுங்கறாங்க.. நம்ம கண்ணில மட்டும் தெரியவே மாட்டேங்குதே..

ஆமாம் எல்லாத்தையும் பாங்கிலேயே வைத்திருந்தால் எப்படி தெரியும். கொஞ்சம் வெளியே எடுங்கள்.

தாமரை
23-03-2006, 10:14 AM
ஆமாம் எல்லாத்தையும் பாங்கிலேயே வைத்திருந்தால் எப்படி தெரியும். கொஞ்சம் வெளியே எடுங்கள்.
பணத்தை சம்பாதிப்பதில் கெட்டிகாரன் பணம்தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

நான் ஸ்டாக்கில் பணம் போட்டால் அங்கேயும் மன்றத்தை போல பதட்டம் ஏற்பட்டு எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் னு ஓடிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்குது..

karikaalan
23-03-2006, 10:28 AM
பங்குச்சந்தையில், நீண்ட காலம் (5 ஆண்டுகள்) காத்திருக்க முடிபவர்கள் எப்போழுதுமே பணம் பண்ணியிருக்கிறார்கள்.

குறுகியகாலத்தில் பணம் பண்ணவேண்டும் என்றிருந்தால், சட்டையைக்கூட இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

===கரிகாலன்

pradeepkt
23-03-2006, 04:53 PM
கரிகாலன் அண்ணா,
உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

இராசகுமாரன்
20-04-2006, 02:13 PM
பெப்ரவரி 8-ம் தேதி நான் கணித்த 12,000 புள்ளிகளை இன்று மும்பை பங்குச்சந்தை தொட்டு விட்டது. இது ஒரு நல்ல முன்னேற்றம். அடுத்த இலக்கு 15,000 ஆகத் தான் இருக்க வேண்டும்.

இனி என்னைப் போன்ற சாதாரண ஆட்களெல்லாம் பங்குச் சந்தை பக்கமே தலை வைத்து படுக்க முடியாத அளவு ரொம்ப சூடாக இருக்கு. அதனால், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய தகவல்கள் கீழே:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விவரங்கள் காண சிறந்த தளங்கள்:

1) www.amfiindia.com
2) www.valueresearchonline.com
3) www.mutualfundsofindia.com

புதிதாக வந்துள்ள Mutual Funds:

Sundaram Rural Fund, Templeton Fund, Fidelity Fund.
(யாராவது முதலீடு செய்தீர்களா?)

தாமரை
20-04-2006, 02:35 PM
புதிதாக வந்துள்ள Mutual Funds: Sundaram Rural Fund, Templeton Fund, Fidelity Fund. யாராவது முதலீடு செய்தீர்களா?
நான் டெம்பிள்டனில் முதலீடு செய்கிறேன்..

இராசகுமாரன்
20-04-2006, 02:42 PM
நான் டெம்பிள்டனில் முதலீடு செய்கிறேன்..

நல்ல சாய்ஸ் செல்வன். ஆனால், எனக்கு ஃபிடிலிட்டியின் வெளிநாட்டுக் கம்பெனிகள் கூட்டு வைத்துக் கொள்ளப் போகும் நலிந்த கம்பெனிகளில் முதலீடு செய்யும் concept ரொம்ப பிடித்துள்ளது.

பரஞ்சோதி
20-04-2006, 05:24 PM
கரிகாலன் அண்ணாவின் வருகையால் இப்பகுதி பங்கு மன்றம் போல் சூடு பிடித்திருக்கிறது.

எனக்கு பங்குக்கள் பற்றி ஒன்றுமே தெரியாது, புரியவும் மாட்டேங்குது.

இருப்பதை வைத்து மகிழ மனசை தேற்றிக்கிட்டேன் :)

அறிஞர்
20-04-2006, 07:16 PM
இந்திய பங்கு சந்தை மகிழ்ச்சியான வேகத்தில் செல்கிறது....

காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரையில் சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக்கொள்ளலாம்...

கரிகாலன் அண்ணன் சொல்வது போல்.. சட்டை இழக்க தயாரா இறங்கினா சம்பாதிக்கலாம்

இராசகுமாரன்
14-05-2006, 01:27 PM
பங்கு சந்தையைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள இதோ தமிழில் ஒரு நல்ல வலைப்பூ:

http://tamilstock.blogspot.com/

அறிஞர்
16-05-2006, 10:30 PM
நல்ல கட்டுரைகள் உள்ளன...

மீண்டும் பங்குச்சந்தையில் தற்காலிக சரிவு

தாமரை
18-05-2006, 11:32 AM
நல்ல கட்டுரைகள் உள்ளன...

மீண்டும் பங்குச்சந்தையில் தற்காலிக சரிவு

பங்குச் சந்தையில் வரவும் சரிவும் சகஜமே.. பொறுமை வேண்டும்.இந்த வாரச் சரிவு இன்னும் எத்தனை நாட்கள் என பொறுமையுடன் கவனிக்க வேண்டும்..

அறிஞர்
18-05-2006, 01:58 PM
இதுவரை இல்லாத அளவு.. இன்று மிகப்பெரிய சரிவு.. 887 புள்ளிகள்

முடிவாக இன்று 11,330 புள்ளிகள் உள்ளன.

10 மிகப்பெரிய சரிவுகள்

1. மே 18, 2006 - 887 புள்ளிகள் (7%) (மொத்த புள்ளிகள்- 11,330)
2. ஏப்ரல் 28, 1992 - 570 புள்ளிகள் (12.7 %) (3,870)- ஹர்சத் மேத்தா
3. மே 17 2004 - 565 புள்ளிகள் (>11%) (4,505) பாஜக ஆட்சி முடிவு
4. மே 15, 2006 - 463 புள்ளிகள் (11,822)
5. ஏப்ரல் 4, 2000 - 361 புள்ளிகள் (4,691)

6. மே 12, 1992 - 334 புள்ளிகள் (3,086)
7. மே 14, 2004 - 330 புள்ளிகள் (5,070)
8. மே 6, 1992 - 327 புள்ளிகள் (3561)
9. ஏப்ரல் 12, 2006 - 306 (11,356)
10. மார்ச் 31, 1997 - 303 புள்ளிகள் (3,361)

தாமரை
22-05-2006, 09:09 AM
ஜாக்கிரதை யப்பா..
பட்ஜெட்டுக்கு அப்புறம் ஒரு படுகுழி இருக்குதப்பா..
கையில இருப்பதை இப்போ வித்து காசு பாரப்பா..
புதிய முயற்சிகளை அக்டோபர் வரை தள்ளிப்போடப்பா

அந்த ஜக்கம்மா சொல்லரா.. ஜக்கம்மா சொல்லரா...

உயரும் போது விற்பதும் இறங்கும் போது வாங்குவதும் மிக நல்லது...

அப்போதுதான் சந்தை சம நிலையில் இருக்கும்.
ஜக்கம்மா!..

zilzilman
22-05-2006, 09:27 AM
பங்கு வர்த்தகம் குறித்த உங்கள் வினாக்களுக்கு விடையளிக்க காத்திருக்கிறேன்

அறிஞர்
22-05-2006, 09:51 PM
பங்கு வர்த்தகம் குறித்த உங்கள் வினாக்களுக்கு விடையளிக்க காத்திருக்கிறேன் தங்களை பற்றி கூறுங்களேன்.. அனைவரும் அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் கேள்வி கேட்கிறோம்... தாங்களும் முடிந்தால் தற்போதைய நிலைமை பற்றி கட்டுரை தாருங்கள்

karikaalan
24-05-2006, 08:03 AM
கடந்த வாரச் சரிவு, இந்தத் திங்கள் சரிவு காரணங்களால் மும்பையிலும் அஹ்மதாபாத்திலும் தற்கொலை வழக்கமாக செய்துகொள்ளும் இடங்களில் போலீஸார் வலம் வருவதாகக் கேள்வி... மெய்யாலுமேதான்.

ஆவணங்களால் ஏற்பட்ட குழப்பங்கள், சிலரை கோவாணாண்டியாக்கியதன் எதிரொலிதான் இது!

===கரிகாலன்

pradeepkt
24-05-2006, 12:05 PM
ஆகா கரிகாலன் அண்ணா வந்துவிட்டார்.

அண்ணா,
கொஞ்சம் இதைப் பத்தி எடுத்து விடுங்களேன். செய்தி சேனல்கள் கூட அவர்களுக்கு வேண்டிய மாதிரிதான் செய்தி வெளியிடுகிறார்கள். ஒரு நல்ல அலசலை நாங்கள் எதிர்நோக்குகிறோம், உங்களூக்கு நேரம் இருக்கும் போது செய்யுங்கள்.

saguni
10-01-2007, 12:44 AM
நானும் கடந்த பல வருடங்களாக மீயூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். நண்பர்கள் சிலர் சொல்வது போல் 8.5 அல்லது 10.5 அல்லது 20 சதவீத லாபத்தை வரியாக கட்டவேண்டுமென்பது இந்திய முதலீட்டாராக இருந்தால் உண்மைதான். ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஒருவருட காலத்திற்கு பின் வரும் லாபங்களுக்கு வரிவிலக்கு. உங்களுக்கு ஏதாவது தகவல் தேவையெனில் விளக்கமளிக்க தயாராய் உள்ளேன்.

karikaalan
21-01-2007, 02:54 PM

நண்பரே!

வருமானவரியைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது தவறு.
யாராக இருந்தாலும், பங்குகளை ஒரு வருட காலம் வைத்திருந்து பிறகு விற்றால் அதனால் ஏற்படும் லாபத்தின் மீது வருமான வரி கிடையாது.

ஒரு வருட காலத்திற்குக் குறைந்தகாலம் வைத்திருந்து விற்று கிடைக்கும் லாபத்தில், அவர் இந்தியாவில் வாழ்பவராக இருந்தால் 10% வரி. மௌரீஷியஸ் பேர்வழிகளுக்கு அதிகபட்சம் 6% வரி. வேறு NRI-களுக்கு எப்படி என்று ஓரிரு நாட்கள் கழித்து சொல்கிறேன் -- கேட்டறிந்து..

===கரிகாலன்

PS: இளவல்ஜி ஒருமுறை கூறியிருந்தார் -- தங்களிடம் -- பெயரை மாற்றிக்கொள்வது பற்றி சிந்திக்கலாமே என்று..

அறிஞர்
22-01-2007, 04:57 PM
கரிகாலன் அண்ணனின் பதிலுக்கு நன்றி...

நேரம் கிடைக்கும்பொழுது பயனுள்ள தகவல்களை கொடுங்கள் அண்ணா...

tamil81
22-01-2007, 05:05 PM
கண்டிப்பாக நம் கணினியில் இருந்தே பங்குகளை வாங்க விற்க கண்காணிக்கவும் முடியும்.
கண்காணிப்பதற்கு http://www.moneycontrol.com ஒரு நல்ல தளம். அங்கே நமது பெயரைப் பதிந்து கொண்டு நம்மிடம் இருக்கும் பங்குகளை உள்ளிட்டால் அவ்வப்போது சென்று பார்த்துக் கொள்ளலாம். அத்தோடு பங்குச் சந்தையில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளையும் அலசல்களோடு இந்தத் தளம் தரும்.

வாங்க விற்க நாம் நேரடியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஐசிஐசிஐ (http://www.icicidirect.com), ஷேர்கான் (http://www.sharekhan.com) போன்ற தளங்கள் நமக்கு புரோக்கர்களாகச் செயல்படுகின்றன. வருடத்திற்கு கொஞ்சம் கட்டணத்தைக் கட்டிவிட்டால் நாமே பங்குகளை நம் சார்பாக அவர்களை வாங்க/விற்கச் சொல்லலாம். முன்பு புக் பில்டிங் என்ற முதல் பங்கு வெளியீட்டை இணையம் மூலமாக வாங்க இயலாதிருந்தது. ஆனால் இப்போது ஐசிஐசிஐ இதையும் செய்வதாகக் கேள்விப் படுகிறேன்.

பங்குச் சந்தையில் இருந்து சில காலமாக ஓய்வில் இருப்பதால் எனக்குத் தெரிந்த அளவு சொல்லி இருக்கிறேன். கரிகாலன் அண்ணா வந்து இன்னும் நிறையச் சொல்லுவார். மற்ற நண்பர்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பங்குகளை நாமே நமது கணிணியிலிருந்து இடைதரகர் இன்றி வாங்கவும் விற்கவும் முடியும்
ஒவ்வொரு பங்கு நிறுவனங்களும் ( icici direct, kotak decurities , india infoline....etc ) இரண்டு வகையான் கணக்குகளை அளிக்கிறது
ஒன்று online account
இரண்டு offline account
இதில் offline account என்பது பங்கு தரகர்களிடம் கூறி அவர் நம்முடைய கணக்கில் சேர்ப்பது ஆகும்

]online account நாமே நமது கணிணி கொண்டு நமக்கான்
கடவுச் சொல்லை பயன்படுத்தி வாங்கி விற்க முடியும்
தரகர் தேவையில்லை

online account பெற தொடர்புடைய பங்கு நிறுவன இணையதளத்தை
அணுகியோ அல்லது custmor care யை அணுகியோ பெறலாம்
சந்தேகம் ஏதேனும் இருப்பின் கேளுங்கள்
நன்றி