PDA

View Full Version : வேண்டுகோள்!



நிலா
21-04-2003, 10:11 PM
அலைகளின் துள்ளலில் ஆனந்தம்
காற்றின் மோதலில் காவியம்
பூக்களின் மலர்ச்சியில் மோகம்
சிறுவிஷயமும் சிந்தையைத் தொட
பிரம்மனே உனக்கோர் வேண்டுகோள்!

பசியெடுக்கா ஜென்மம்
விழிமூடா உறக்கம்
வெறுப்பறியாவேலை
பிதற்றலிலும் இன்பம் கிடைக்க
பிரம்மனே உனக்கோர் வேண்டுகோள்!

தோட்டத்தில் விண்மீன்கள்
கூடத்தில் வெண்ணிலவு
முற்றத்தில் மேகக்கூட்டம்
வீட்டினுள் வானம்,வரவுக்காய் காத்திருக்க
பிரம்மனே உனக்கோர் வேண்டுகோள்!

பிறப்பினிலே பெருமை கொள்ள
படைத்ததற்காய் ஆஸ்காரும் உனக்காக
அழகான காதலியை அனுப்பிவிடு எனக்காகய்
பிரம்மனே உனக்கோர் வேண்டுகோள்!

lingam
21-04-2003, 10:42 PM
பிரம்மன் உங்கள் வேண்டுகோளை நிவர்த்தி செய்வாராக. அழகாக எழுதியுள்ளீர்கள்.

lavanya
21-04-2003, 11:28 PM
அருமையான கோரிக்கைகள் ...பாராட்டுகள் நிலா

இளசு
22-04-2003, 11:46 AM
எங்கியோ போறாப்ல போயி
கடைசியில அழகான காதலி கேட்கத்தான் பிரம்மன் கிட்ட
அவ்வளவு விஸ்தாரப் பேச்சா???

அருமை நிலா. வாழ்த்துகள்.

poo
22-04-2003, 04:14 PM
எப்போதே அணுப்பிவிட்டேன்..
விண்ணப்பம் கேட்டுப்பெற

அவள் தொலைபேசியல்ல.. (பிரம்மன் என்ன டெலிபோன் எக்ஸேஞ்சா??!! நாராயணா!..)
வேண்டுகோள் ஏற்றுத்தான்
செய்வேனென்றால்.. நான் பிரம்மனல்ல..
தொலைத்துவிட்டு தேடுகிறாய்..
உன்னைத்தேடு உன்னில் அவளிருப்பாள்..

-பாராட்டுக்கள் நிலா!!

நிலா
23-04-2003, 12:39 AM
பாராட்டிய உள்ளங்களுக்கு நன்றி!

Nanban
02-06-2003, 12:18 PM
படைப்பிற்காக ஆஸ்கார்..... பிரம்மன் என்ன சினிமா கலைஞனா?

அறிவியல் படைக்கும் ணொபெல் ப்ரிழெ வேண்டுவது தானே?