PDA

View Full Version : நினைவு



kavitha
10-04-2004, 07:16 AM
இப்படியாகத்தான் நினைக்கிறேன்
"நினைக்கக்கூடாது" என்று!

...

samuthira
10-04-2004, 11:24 AM
இரு வரியின் ஆழம்
மறப்பதிலா மாறும்?

Nanban
10-04-2004, 03:55 PM
விரட்ட, விரட்ட
எட்டிச் சென்று
மீண்டும் வந்து
ரீங்காரிக்கும்
வண்டின் ஒலி தரும்
பயங்கள்....

நினைவுகளும் அதனுடன் இணைந்தவை தான்...

மறுக்க நினைக்கும் பொழுது தான், அது திமிறும்.....

விரட்ட நினைக்காதீர்கள்....

அலட்சியப் படுத்துங்கள்

தன்னைப்போல, விலகிப் போய்விடும்...

இக்பால்
11-04-2004, 12:02 PM
நினைக்கக் கூடாது
என
நினைக்கிறீர்களா
தங்கை?!

இளசு
13-04-2004, 09:43 PM
நல்ல முரண்...

தொகையும் முரணும் இணைந்த வாழ்க்கைக்கவிதை...

சுவாரசியம் கூட்டத்தான் இப்படியோ...


நல்ல கவிதை கவிதா.... பாராட்டுகள்..

kavitha
14-04-2004, 07:03 AM
விரட்ட நினைக்காதீர்கள்....

அலட்சியப் படுத்துங்கள்

தன்னைப்போல, விலகிப் போய்விடும்...

முடியவில்லையே நண்பரே!
அன்பை அவமானப்படுத்த
மனம் மறுக்கிறதே!

இக்பால்
14-04-2004, 09:24 AM
அன்புக்கு அன்பாக
அறிவுரை கூறலாமே.

kavitha
14-04-2004, 11:36 AM
சரியாக சொன்னீர்கள் அண்ணா!
அப்படித்தான் மடியில் போட்டு
ஆசுவாசப்படுத்தி வருகிறேன்.
பிரிவு நிரந்தரமல்ல!
வாழ்க்கையும் ஒருவழிப்பாதையல்ல!
அது ஒரு வட்டம் என்று!

அமரன்
01-11-2007, 06:01 PM
படிக்க விருப்பத்துடன் வந்து
முடியாது திரும்பிய அன்பர்களுக்கு...!

அறிஞர்
02-11-2007, 01:47 PM
"நினைக்கூடாது" என நினைக்கையிலே
மீண்டும் நினைக்க தூண்டும் மனது....

அருமை கவி... புதியவர்களின் கருத்து தான் என்னவென்று பார்ப்போம்.

பூமகள்
02-11-2007, 02:52 PM
இப்படியாகத்தான் நினைக்கிறேன்
"நினைக்கக்கூடாது" என்று!
அழகான முரண் கவி.. வாழ்த்துகள் சகோதரி கவிதா.

"நிதம் உன் பெயரை
துடித்தே பழக்கப்பட்ட உள்ளம்..
கல்லமில்லாமல் நினைத்து வைக்கிறது
மூளை மறக்க நினைத்தும்...!!

நிஜம் சொல்லி மறத்துப் போக
வைக்க முனைகையில்
மறுத்து நிதம் வதைக்கிறது
என் உள்ளம்..!!"

மாறிவிடு இல்லையேல்
மறித்துவிடு..!! இப்படி
சொல்லி பயமுறுத்தி
என் மனசை
கைப்பிடிக்குள்
கட்டிவைத்திருக்கிறேன்....!"

ஓவியன்
22-11-2007, 10:57 PM
இப்படியாகத்தான் நினைக்கிறேன்
"நினைக்கக்கூடாது" என்று!

ஆகா அருமையான முரண்..!! :icon_b:
கிட்டத் தட்ட இதே கருவில் நான்
மறதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10793) என்ற தலைப்பில் எழுதியது இது...


மறக்க வேண்டும் உன்னை
இன்றே இப்போதே இக்கணமே!.
முடிவுடன் இறங்கினேன்
வீதியில் உத்வேகமாய்!.

அங்கு எங்கோ இருந்த
ஒரு பலசரக்குக் கடையின்
பாதிப் பெயர், என் மனதில்
உன் பெயரைச் சொல்ல!.
மறந்து தான் விட்டேன்.

உன்னை
மறக்க வேண்டும் என்பதையும்!.

ஓவியன்
22-11-2007, 11:00 PM
நினைவுகளும் அதனுடன் இணைந்தவை தான்...
மறுக்க நினைக்கும் பொழுது தான், அது திமிறும்...
விரட்ட நினைக்காதீர்கள்....
அலட்சியப் படுத்துங்கள்
தன்னைப்போல, விலகிப் போய்விடும்...


என்னே யதார்த்தமான உண்மை..
விரட்டுவதிலும் வலியது
அலட்சியப் படுத்துதல்...

அருமையான கருத்து அண்ணா..!!

ஆதி
23-11-2007, 02:37 AM
சங்க கால பாட்லெல்லாம் நினைவும் நினைவை சார்ந்ததாகவும்தான் எழுதப்பட்டன...

"சுணையில் உள்ள சிறுநீரை-தன்
பிணைப் பருகட்டுமென ஆண்மானும்-தன்
இணைப் பருகட்டுமென பெண்மானும்-உள்ள
நீரை இரண்டும் பருகாமல் இருக்கும்-இதை
கண்டபின்பும் தலைவர்க்கு என்நினைவு வாராமலா போகும்"
என தலைவி கூருவதாக ஒரு பாடலுண்டு..

- சங்க இலகியம்

"பெய்ரூட்டின் என் நண்பர்களே, நீங்கள் இறந்தவர் உறங்கும் பைன் மரக்காட்டுகள கடந்து போகையில், மெதுவாக நடந்து செல்லுங்கள், உங்கள் காலடி சப்தம் அவர்கள் உறக்கத்தைக் கலைத்துவிட கூடாது, செல்மாவின் கல்லறை முன் சிறிது நேரம் மௌனமாய் நில்லுங்கள், ஜிப்ரானின் எல்லா மகிழ்ச்சியும் புதையுண்டது இங்குதான், அவன் துயரம் வளர்ந்துயரம் ஸைப்ரஸ் மரம் போல் உயர்கிறது மனதுக்குள் சொல்லுங்கள்.."

- கலில் ஜிப்ரான் - முறிந்த சிறகுகள்


இரவில் உன்
நினைவுகள் கொசுக்கள்

ஒருவர் நினைவை
ஒருவர் கொழுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம்
நான் மெழுகுப்பத்தியாய்
நீ ஊதுப்பத்தியாய்
எரிந்து முடிந்த நம் காதலை
உன் மணம் ஞாபகமுட்டடும்

- கவிக்கோ அப்துல் ரகுமான் - பால்வீதி


இன்னும் இன்னும் எண்ணற்ற இலக்கியங்கள்..

நினைவு நிமித்தமாகவே எழுதப்பட்டவை..

உங்களுடையதும் அப்படித்தான் அழகான நினைவுகளில் அழியாத வரிகளாய்..

நன்றி ஆதி

பென்ஸ்
23-11-2007, 03:48 AM
சங்க கால பாட்லெல்லாம் நினைவும் நினைவை சார்ந்ததாகவும்தான் எழுதப்பட்டன...



நன்றி ஆதி
தரமான ஒரு அழகிய பின்னூட்டம்....
கவி,
இப்படியே நினைக்கும் போது கண்டிப்பாக போய்விடும் :)

சுகந்தப்ரீதன்
26-11-2007, 08:38 AM
சாதாரண வரிகள் கூட கவிதா போன்ற கவிஞர்களின் கைப்பட்டால் கவிதையாகி விடுகிறது.. வாழ்த்துக்கள்..!