PDA

View Full Version : உணர்வுகளோடு



kavitha
10-04-2004, 05:51 AM
உணர்வுகளோடு



கனன்றுகொண்டிருக்கும்

தீப்பிழம்பின் மேற்சாம்பலில்

நம் புன்னகை பூக்கள்

கருகாமலிருக்கின்றன!



என் இதயத்தை நானே

அறுவைசிகிச்சை

செய்து கொள்ளும்பொருட்டு

பார்வையாளனாக

வந்துபோகிறாய் அவ்வப்போது!



சிறுக சிறுக

சேர்த்துவைத்து

கட்டிய கோட்டையை

செல்லரிக்கச்செய்து

அதன் ஓட்டைகளில்

காற்று வாங்கிக்கொள்கிறாய்!



ஆறவிட்ட ரணத்தின்

அடித்தளத்தை

சொறிந்துபார்த்து

உயிரோடிருப்பதை

உறுதி செய்துகொள்கிறாய்!



எழுதி வையுங்கள்

என் கல்லறையில்...



"உயிரோடிருக்கும்போதே

உணர்வுகளோடு

புதைக்கப்பட்டவள்" என்று!

samuthira
10-04-2004, 11:34 AM
பொறுங்கள் தோழி பேனாவை தேடிக் கொண்டிருக்கிறேன்

எழுத்துப் பிழைத் திருத்தம் செய்யப்பட்டது.-இக்பால்.

Nanban
10-04-2004, 03:52 PM
அதீத உணர்ச்சி மேம்பாட்டில் எழுதியதைப் போலிருக்கிறது.... நன்றாக இருக்கிறது.....

தொடருங்கள் கவிதா.....

(தனிப்பட்ட பிரச்னைகளால் எழும்பிய உணர்வுகள் என்றால், மீண்டு சந்தோஷ கணத்திற்கு வந்து சேர வாழ்த்துகள்...)

இக்பால்
11-04-2004, 12:01 PM
Ũ Ţ¡ ,

Ţ¡ á.

kavitha
14-04-2004, 04:51 AM
நன்றிகள் பல!

சமுத்திரா, இக்பால் அண்ணா, நண்பர் அனைவருக்கும்.

சமுத்திரா இன்னுமா தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? தொடருங்கள் ஆவலாய் காத்திருக்கிறேன்.

kavitha
14-04-2004, 06:13 AM
(தனிப்பட்ட பிரச்னைகளால் எழும்பிய உணர்வுகள் என்றால், மீண்டு சந்தோஷ கணத்திற்கு வந்து சேர வாழ்த்துகள்...)

நண்பரே! துக்கம், சந்தோசம் இரண்டுமே ரசிப்பிற்குரியவை! முழுமையாக
ரசிக்கக்கற்றுக்கொண்டால் துக்கமும் இனிமையான ஒன்று தான்!

உங்கள் கவிதைகளால் தொடர்ந்தால் மேலும் சந்தோசிப்பேன்.

பென்ஸ்
18-02-2006, 09:22 AM
உணர்வுகளோடு

கனன்றுகொண்டிருக்கும்
தீப்பிழம்பின் மேற்சாம்பலில்
நம் புன்னகை பூக்கள்
கருகாமலிருக்கின்றன!

என் இதயத்தை நானே
அறுவைசிகிச்சை
செய்து கொள்ளும்பொருட்டு
பார்வையாளனாக
வந்துபோகிறாய் அவ்வப்போது!

சிறுக சிறுக
சேர்த்துவைத்து
கட்டிய கோட்டையை
செல்லரிக்கச்செய்து
அதன் ஓட்டைகளில்
காற்று வாங்கிக்கொள்கிறாய்!

ஆறவிட்ட ரணத்தின்
அடித்தளத்தை
சொறிந்துபார்த்து
உயிரோடிருப்பதை
உறுதி செய்துகொள்கிறாய்!

எழுதி வையுங்கள்
என் கல்லறையில்...

"உயிரோடிருக்கும்போதே
உணர்வுகளோடு
புதைக்கப்பட்டவள்" என்று!

இவை வலிமையான வரிகள்.. வலி சொல்லும் வரிகள்...

ஆனால் சாடல் இயலாமையின் வேளிப்பாடோ என்று தோன்றும்... பிரிய இயலாமையாக கூட இருக்கலாம் :)

கடைசி வரிகள் மட்டும் இன்னும் ஏதோ இடக்கு முடக்காய்
இருப்பதாய் தோன்றியது... "உணர்வுகளோடு புதைக்கபடுதல்"
விளக்கலாமா???

மனம் கொள்ளை கொள்லும் கவிதை....

இங்கு எழுதி வைக்கிறேன்...

வாசிக்கும் போதே
கவிதையோடு
புதைக்கப்பட்டேன்....

ஓவியா
29-04-2007, 12:35 AM
உயிரோடிருக்கும்போதே
உணர்வுகளோடு
புதைக்கப்பட்டவள்" என்று!

இந்த வரியில் வலியின் உச்சத்திற்க்கு சென்று வந்தது போல் இருந்தது.

வலி சொல்லும் கவிதை. அழகிய வார்தைகளின் கோர்வை. சபாஷ்.

நான் முடிந்தவரை என் மனதிற்க்குள் இளகிய எண்ணங்களை மட்டும் விதைப்பவள். விதைப்பதை தானே அருவடை செய்வோம் என்ற அதீத நம்பிக்கை உண்டு அதனால் உங்கள் கவிதையை என்னால் ரசிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

நல்ல கவிதைக்கு பாராட்டுகிறேன்.