PDA

View Full Version : கல்லுக்குள் ஈரம்!!



poo
13-04-2004, 05:16 PM
வயிறு நிறைந்த இரவுகள்..

வறண்டுபோனதின் மாயமென்ன...

உணவுக்கு கதறும் பிள்ளைகள்..

தேடியும் கிடைக்கவில்லை....

தேற்றவும் வார்த்தைகளில்லை...

கூட்டுக்குள்ளே தவித்தன - தூக்கனாங்குருவிகள்...



மரித்துப்போக மனமில்லை...

தூக்கிப்போக திறனில்லை..

சிறகுகள் விரிக்கும்வரை பொறு - விதி...

அமைதி..



மெதுவாய் இறங்கினேன்...



பொய்த்துவிட்ட பூமியால்

தொலைத்துவிட்ட மனிதம்..



மறந்துபோன மேகங்களை..

மரத்துப்போன மனங்களை...மன்னித்தேன்..



கதவுகள் திறக்கும்வரை

வெற்றுக்காற்றை புசித்தாலென்ன..

சிறகுகள் முளைக்கும்வரை

காத்திருக்கும் பறவைகளைப்போல..



கரிசல்காட்டில் பூத்துக்கொண்ட ஞானத்தில்

உள்வைத்தேன்... உண்டிவில்லை!!

இளசு
13-04-2004, 09:34 PM
காற்று - இல்லையெனில் நிமிடங்களில் மரணம்..

நீர் - இல்லையெனில்

நாட்கணக்கில் நா வரண்டு

அதே சிந்தனையாய்

அடக்கமாட்டா வேட்கையாய்

முடிவில் உயிர் வற்றி மயங்கும்..



உணவு இல்லையெனில்.....



பசி வந்தால் எல்லாமும் பறந்துவிடுமாம்..

பசிப்பிணி என்றார் முன்னோர்..

ஜெகத்தை அழிக்கும் நெருப்பென்றான் அதில் ஒருவன்...



என்னவும் செய்யத்தூண்டும் பசிகள் பல உண்டு இவ்வுலகில்...

வயிற்றுப்பசி அதில் தலையானது....

அப்பசியை வென்ற ஞானம்...

வந்தனம்... வந்தனம்....

இக்பால்
14-04-2004, 06:01 AM
உணவிருக்கும் வறுமை

.....கொடுமை.

உணவில்லா வறுமை

.....கொடுமையிலும் கொடுமை.

எல்லாம் மறக்கும்.

அன்பை மறக்கும்.

நன்றியையும் மறக்கும்.

சுய நலங்கள் மிஞ்சும்.

பொறுமையை இழக்கும்.

உலகை வெறுக்கும்.

மற்றவரை தூற்றும்.

இயற்கைதானே!!!

இயற்கையை மிஞ்சுபவர்

......சிலரே.

அந்தச் சிலரில் ஒருவராக

எல்லோரும் ஆக...

மனிதம் மிஞ்சும்.



மனிதத்துக்கு நல்ல வரிகள் தந்த பூ, இளசு அவர்களுக்கு நன்றி.

மனிதம் நிலைத்திருக்க இறைவனை வேண்டுவோம்.



-இக்பால்.

kavitha
14-04-2004, 06:30 AM
போதும் என்று சொல்லக்கூடியது வயிறு ஒன்று தான்!

அதைக்கூட நிவர்த்தி செய்ய இயலா தாயும் தாய் நாடும்!

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்றாள் மூதாட்டி ஔவை!

வறுமையை ஒழிக்க ஏதாவது செய்யத்தான் வேண்டும்!

சனத்தொகை கட்டுப்பாடு இல்லாமல் இது சாத்தியமல்ல!