PDA

View Full Version : நட்பே!



kavitha
10-04-2004, 11:57 AM
நட்பே!

* துணை கிடைத்ததும்
தனை மறந்தது
ஒரு நட்பு!

* துணை கிடைக்காததால்
நீ என்றது
இன்னொரு நட்பு!

* துக்கத்தை மறைத்தது
ஒரு நட்பு!
நான் துக்கப்படுவேன் என்று!

* பொய் சந்தோசம் காட்டியது
நான் துக்கப்படக்கூடாது என்று
இன்னொரு நட்பு!

நட்பே!
உண்மையை உண்மையாக
ஏற்றுக்கொள்ளத்தான் நீ!

துக்கத்தை ரெண்டாக்கி
இன்பத்தை ரெட்டிப்பாக்காவிட்டால்
பிறகு நான் எதற்கு?

தோற்றாலும் ஜெயித்தாலும்
தோள் கொடுக்கத்தான் நான்!

மறுக்கவும் மறைக்கவும்
இதில் என்ன இருக்கிறது?

Nanban
10-04-2004, 03:42 PM
நல்லது...
நட்பை, நட்பாக வைத்திருப்பது தான், எல்லோருக்கும் நல்லது.
நட்பை உறவாக மாற்ற முனைகையில் தான், சங்கடங்கள் நேருகின்றன....

பாரதி
10-04-2004, 11:48 PM
உண்மையான நட்புக்கு எதையும் ஒளிக்கத் தெரியாதே...? பாராட்டுக்கள் கவி.

இக்பால்
11-04-2004, 12:09 PM
உண்மைதான் தங்கை.
நட்பிடம் உண்மையை மறைக்காலாதுதான்.
அப்படி ஒரு நட்பு கிடைக்கும்பொழுது யார்தான் மறைப்பார்கள்?
தானாகச் சொல்ல மாட்டார்களா? பொய்யங்கு ஏது தங்கை?
-அன்புடன் அண்ணா.

இளசு
13-04-2004, 09:41 PM
நிறைய சிந்திக்க வைக்கிறது....


பாராட்டுகள் கவிதா..

kavitha
14-04-2004, 07:04 AM
பாராட்டி ஊக்குவிக்கும் உள்ளங்களுக்கு நன்றி!

பென்ஸ்
04-08-2006, 05:57 PM
கவி....

சில நேரங்களில் எதோ புரியாத விஷயங்கள்
மனதை அடைத்து கொண்டிருக்கும்... அதை என்ன
என்று சுற்றி சுற்றி பாத்தாலும் விடை கிடைக்காது...
அச்சமயஙக்ளில் எங்கோ யாரோ பேசும் சில
வார்த்தைகள் பதில் கொடுக்கும்...

தெரிந்த விஷயமாகவே இருக்கும் ...
ஆனால் அதை வாழ்க்கை பாடமாக படிக்கும் போது
மனதில் உறைந்துவிடும்.... இங்கு உங்கள் கவிதை
கூட ஒரு சிறு பாடமாக...

ஆனால் ஒரு முறை படித்தவுடனே இந்த கவிதை
புரிந்தது குறிப்படதக்கது :D :D

நண்பனின் பதில் "செர்ரி இன் த பிளம்ப்" போல்...

இன்னும் சிறு கேள்வி மனதை குடைந்து கொண்டே....
நட்பு, ரத்தபாசமென்று எல்லா உறவுகளும் கூட
எதாவது ஒன்றை எதிர் பார்த்து தான் வருகிறதோ... ????

உங்கள் மன்ற வரவையும், கவிதைகளையும் எதிர் பார்த்து கொன்டு.... (குறிஞ்சி தோழி.. :) ...)...


நட்புடன்...

mgandhi
08-08-2006, 06:17 PM
"தோற்றாலும் ஜெயித்தாலும்
தோள் கொடுக்கத்தான் நான்!
இந்தவரிகள் நன்றாக இருக்கிறது

meera
31-08-2006, 08:37 AM
உன்னை நினைக்காமல்
நான் இல்லை
என் நினைவிலும்
நி தவறவில்லை
உலகை மறக்கலாம்
ஆனால்
உன்னை............
மரணம் உன்னை
மணந்து கொண்டாலும்
மங்கையின் மனதில்
உனக்கு மரணம் இல்லை
இந்த மண்ணில்
அவள்
வாழும் வரை..............

இளசு
31-08-2006, 08:32 PM
வாருங்கள் மீரா
அழகிய கவிதையுடன் மன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கும்
உங்களுக்கு வரவேற்பும் வாழ்த்தும்.

உங்கள் பதிவாவது எங்கள் கவீ -யை அழைத்து வரட்டும்..

மயூ
01-09-2006, 04:53 AM
உன்னை நினைக்காமல்
நான் இல்லை
என் நினைவிலும்
நி தவறவில்லை
உலகை மறக்கலாம்
ஆனால்
உன்னை............
மரணம் உன்னை
மணந்து கொண்டாலும்
மங்கையின் மனதில்
உனக்கு மரணம் இல்லை
இந்த மண்ணில்
அவள்
வாழும் வரை..............

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் மீரா!

மரணம் உன்னை
மணந்து கொண்டாலும்
மங்கையின் மனதில்
உனக்கு மரணம் இல்லை

என்னை ரெம்பவும் கவர்ந்த வரி!

ஓவியா
05-04-2007, 12:07 AM
நட்பே!

* துணை கிடைத்ததும்
தனை மறந்தது
ஒரு நட்பு!


* துணை கிடைக்காததால்
நீ என்றது
இன்னொரு நட்பு!


* துக்கத்தை மறைத்தது
ஒரு நட்பு!
நான் துக்கப்படுவேன் என்று!


* பொய் சந்தோசம் காட்டியது
நான் துக்கப்படக்கூடாது என்று
இன்னொரு நட்பு!


நட்பே!
உண்மையை உண்மையாக
ஏற்றுக்கொள்ளத்தான் நீ!

துக்கத்தை ரெண்டாக்கி
இன்பத்தை ரெட்டிப்பாக்காவிட்டால்
பிறகு நான் எதற்கு?

தோற்றாலும் ஜெயித்தாலும்
தோள் கொடுக்கத்தான் நான்!

தூள், ஆனாலும் பிரிஸ்டேஜ்'னு சொல்லிகினு ஜேயித்தப்பின் ஓடிப்போகும் நட்பும் ஜாஸ்தியா இருக்கு..

மறுக்கவும் மறைக்கவும்
இதில் என்ன இருக்கிறது?



கவி,
கவிதை ரொம்ப உணர்ச்சி பூர்வமாக இருகின்றது.

நட்புதான் நெஞ்சுக்கு அதிக நெருக்கம்.

நல்ல சிந்தனை.
சிக்கனமாக சுருங்க சொல்லி கவிதையின் சிறப்பை பெற்று விட்டீர்கள். பாராட்டுக்கள்

ஓவியா
05-04-2007, 12:18 AM
உன்னை நினைக்காமல்
நான் இல்லை
என் நினைவிலும்
நீ தவறவில்லை

அடடா

உலகை மறக்கலாம்
ஆனால்
உன்னை............

அதே அதே சபாபதி

மரணம் உன்னை
மணந்து கொண்டாலும்
மங்கையின் மனதில்
உனக்கு மரணம் இல்லை

இதான் பெண் மனசு

இந்த மண்ணில்
அவள்
வாழும் வரை.............

ஆமாம் ஆமாம் ஆமாம்.


மீரா மிகவும் அருமையான கவிதை,

கவிதையை ரசித்தேன்.

அனேகமாக இந்த கவிதை சில பெண்களுக்கும் மட்டுமின்றி சில ஆண்களுக்கும் பொருந்தும். என் முதல் சினேகிதி காதலுக்காக தற்கொலை, பக்கத்து விட்டு அண்ணன் காதலுக்காக பைத்தியமாகி செத்துப்போனார், மேல் மாடி பெண் காதலுக்காக மாடியில் இருந்து குதித்து உயிர் விட்டாள்,

அச்சோ
காதல் ஒரு கொடுமையடா.....
ஆதன் கொடும்பாவியை எரிங்கடா :waffen093: :waffen093:


(டா'க்கு மன்னிக்கவும், அதுதான் வசனத்திற்க்கு சரியா பொருந்துது)

kavitha
10-04-2007, 11:31 AM
அச்சோ
காதல் ஒரு கொடுமையடா.....
ஆதன் கொடும்பாவியை எரிங்கடா :waffen093: :waffen093::D சூப்பர்மா கண்ணு!

kavitha
10-04-2007, 11:33 AM
வாருங்கள் மீரா
அழகிய கவிதையுடன் மன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கும்
உங்களுக்கு வரவேற்பும் வாழ்த்தும்.

உங்கள் பதிவாவது எங்கள் கவீ -யை அழைத்து வரட்டும்..
நன்றி மீரா :)

அரசன்
10-04-2007, 04:53 PM
நட்பிற்கு நல்லதொரு இலக்கணம்

ஓவியா
10-04-2007, 05:00 PM
:D சூப்பர்மா கண்ணு!

டேங்க்ஸ் கண்ணு :icon_08: