PDA

View Full Version : முடிவதை மட்டும் நினை



இளசு
02-04-2003, 07:30 PM
முடிவதை மட்டும் நினை


1993

ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்

வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை

கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர

பண்டம் மட்டும் அல்ல
பண்பாடும் கைமாறியது
காலவெள்ளத்தில் வாழ்க்கை
திசைமாறியது
ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
மீண்டும் என் வழி மாறியது

2003

வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
"என்னாச்சு டெர்மாட்?"
கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு

சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
இடைவிடா பயிற்சி இரு வருடம்

எத்தனை எத்தனை தடைக்கற்கள்
எப்படி தாண்டினாய் இளைஞனே

சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்

"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:

Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

Narathar
03-04-2003, 03:38 AM
இளசு நீங்கள் எழுதியிருப்பது கதையா? கவியா?
ஒருமுறை படித்தால் கதை போல் தோன்றுகிறது
மறுபடி படித்தால் கவிதைபோல் தோன்றுகிறது
அதனால் நான் மூன்றாம்முறை படிக்கவில்லை............. நாராயனா!!!

இளசு
03-04-2003, 07:56 AM
இளசு நீங்கள் எழுதியிருப்பது கதையா? கவியா?

ஒருமுறை படித்தால் கதை போல் தோன்றுகிறது

மறுபடி படித்தால் கவிதைபோல் தோன்றுகிறது

அதனால் நான் மூன்றாம்முறை படிக்கவில்லை............. நாராயனா!!!



வசனத்தை வரிபிரிச்சி

வார்த்தைகளை ஒடச்சி மடக்கி

கவிதன்னு பேரும் வச்சு

கணினி மேல ஏத்திவுட்டா.....



"ராபணா"ன்னு போட்டு ஒடச்சாரு :lol:

"நாராயானா"ன்னு சொல்லும் நாரதரு!

rambal
03-04-2003, 09:52 AM
கதையோ? கவிதையோ?
எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
சொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்
கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்
என்பது மறுக்க முடியாத உண்மை..
என்னைத்தொட்ட வரிகள்...




"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்: </span>
Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை


எல்லோர்க்கும் இது சத்திய வாக்கு..
வாழ வேண்டும் என்று துடிப்பவனுக்கு இது கீதை,பைபிள், குரான்..
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்..

பாராட்டுக்கள் இளசுவிற்கு..

Narathar
03-04-2003, 10:03 AM
கதையோ? கவிதையோ?
எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
சொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்
கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்


அவரு கஷ்டப்பட்டு எவ்வளவோ பந்தி பந்தியா எழுதியிருக்காரு......
நீங்க என்னவோ அதை துளி என்கிறீர்களே???..... நாராயனா!!!!

rambal
03-04-2003, 10:08 AM
கதையோ? கவிதையோ?

எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு

சொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்

கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்





அவரு கஷ்டப்பட்டு எவ்வளவோ பந்தி பந்தியா எழுதியிருக்காரு......

நீங்க என்னவோ அதை துளி என்கிறீர்களே???..... நாராயனா!!!!



உணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..




எதிர் சீட்டு:

இதுக்குத்தான் பெரிய அறிவாளி மாதிரி எழுதக் கூடாது.. நாரதருக்கு புரிய மாட்டேங்குது பார்த்தியா.

திருப்பி அதுக்கு ஒரு விளக்கம் எழுத வேண்டியிருக்கு பார்த்தியா?

புரிகிறமாதிரி எழுது ராம்...

Narathar
03-04-2003, 10:12 AM
உணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..



கண்ணீர்துளியோ பன்னீர்த்துளியோ..... துளி எப்பவும் துளிதானே?

rambal
03-04-2003, 10:19 AM
உணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..



கண்ணீர்துளியோ பன்னீர்த்துளியோ..... துளி எப்பவும் துளிதானே?

எதிர் சீட்டு:
இதுக்கும் மேல புரியலைன்னா ராம் பதில் சொல்ல மாட்டாரு. நான் தான் பதில் சொல்வேன்.
ஒரு துளி விந்தின் பயணம் கேவலமா?
அணையின் விரிசலில் இருந்து வரும் சிறு துளி கேவலமா?
சிறு துளி பெருவெள்ளம் மடையர்கள் சொன்னதா?
துளி என்பது கேவலமான விஷயம் இல்லை..
அதை கேவலமாக பார்க்கும் மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..
ஏதோ எழுத வேண்டும் என்று எழுதாதீர்கள்..

Narathar
03-04-2003, 10:29 AM
நான் ஏதோ எழுதவேண்டும் என்று எழுதியிருந்தால்.....
துளியின் இத்தனை பெருமைகள் புரிந்திருக்குமா? யாரும் அறிந்திருப்பாரா?
துளிக்குள் இத்தனை விஷயங்களை நீங்கள்தான் இங்கு சொல்லியிருப்பீர்களா?
நாராயனா..............!! நாராயனா!! நாராயனா!!!

anushajasmin
04-04-2003, 09:40 AM
உங்கள் கவிதை மிக யதார்த்தமாக இருந்தது. பலவித மனக் கஷ்டங்களில் இருந்து வந்த எனக்கு உங்களின் இந்தக் கவிதை ஒரு வித ஆறுதலைத் தந்தது.நன்றி

poo
04-04-2003, 03:56 PM
அண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்!!!

நன்றியுடன் பாராட்டுக்கள்!!!

இளசு
04-04-2003, 04:46 PM
பலவித மனக் கஷ்டங்களில் இருந்து

இனிய தோழியே
கஷ்டங்களை கடந்த காலத்தில் குறிப்பிட்டு என்னை மகிழவைத்தீர்கள்.
எதுவுமே கடந்துபோகும்... கஷ்டங்கள் கூட....
எந்த கருமேக விளிம்பிலும் கதிர்வெளிச்சம் உண்டு...
எந்த மன இருள் இரவுக்கும் விடிவெள்ளி உண்டு..

எல்லாமே நன்மைக்கே...
நன்மைகளே விளைய விழையும்
நண்பன்......

இளசு
04-04-2003, 04:48 PM
அண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்!!!


அது மட்டும் போதாது தம்பீ.....
படித்தபடி நடக்க வேண்டும்.

இளசு
04-04-2003, 04:52 PM
கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்

முத்துத் துளிகளைவிட வேறு என்ன பெரிய பரிசு உண்டு.....?
நன்றி இளவலுக்கு!!!

puppy
15-01-2004, 12:22 AM
எல்லோரும் கண்டிப்பாய் படிக்க வேண்டிய ஒன்று...தாமதமாக படித்து
கருத்து சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என்னை நினைத்தே.....

என்ன சொல்ல ? நான் என்ன சொல்ல ? அருமை இளசே

இக்பால்
15-01-2004, 04:04 AM
பத்து வருட இடைவெளி. நல்ல கவிதை. பாராட்டுக்கள் அண்ணாவுக்கு.

நன்றிகள் பப்பிக்கு.-அன்புடன் இக்பால்.

samuthira
15-01-2004, 04:59 AM
புரிந்து சேர்ந்த தோழி
புதிதாய் கற்ற கணினி
இவற்றோடு நண்பர் டெர்மாட்டுக்கு
தமிழென்னும் தேனை குழைத்து
கவிதையாய் நீ தந்த மருந்து
மனித நேயம் மறைய வில்லை நண்பா...
உலகில் அவை மலர தொடங்குகிறது......

இளசின் இளகிய மனம்
இனிய கவிதையில் தெரிந்தாலும்,
நண்பர் டெர்மாட்டின் தன் நம்பிக்கை
நம்மக்கெல்லாம் தனி பாடம்...


துளியான விஷயத்தை தூள் கிளப்பிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

இக்பால்
15-01-2004, 05:02 AM
சமுத்திரா...திரும்பிப்பார்க்க வைக்கிறீர்கள். பாராட்டுக்கள்.



-அன்புடன் அண்ணா.

பாரதி
15-01-2004, 02:04 PM
தை மாதம்
முடிவதை நினை..!
மனதில் தைத்த கவிதை
மனதை தைத்த கவிதை...

கடினமான பாடத்தை எளிதாய் சொன்ன கவிதை அண்ணா...
(ஒட்டியதற்கும் என் நன்றி.)

முத்து
15-01-2004, 04:55 PM
மிக அருமையான கவிதை ( கதை..?)

உலகத்தில் கற்க வேண்டியது ,புரிய வேண்டியது,

தெரிந்து கொள்ளவேண்டியது ஆயிரம் ...ஆயிரம் ..

மிக அருமை ...

நன்றி அண்ணா ....

இ.இசாக்
16-01-2004, 06:02 AM
"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்: [/color]
Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை


இளசு அண்ணா நீங்கள் நினைத்தது நடக்கும்
ஆம் நீங்கள் முடிந்ததை நினைப்பவர்.
மகிழ்கிறேன் அண்ணா.

சேரன்கயல்
16-01-2004, 08:40 AM
இனிய இளசு...
தன்னம்பிக்கை என்பது எவ்வளவு அவசியம், எவ்வளவு சக்தி வாய்ந்த அம்சம் என்பதை இங்கே மீண்டும் உங்கள் அனுபவ பகிர்வால் உணர்த்தியிருக்கிறீர்கள்...
இயலாமையின்போது, முடியாததை நினைத்து அழுது புலம்புவதை விட்டு, அப்போதும் முடியக்கூடியவற்றை நினைத்து புன்னகை பூக்க சொல்லும் உங்கள் டெர்மார்ட்டின் வார்த்தைகள்...அபாரம்...
அழகான அனுபவத்தை இங்கே உணர்வலை சிதறாமல் வரைந்து சென்ற இனிய இளசுவுக்கும், இங்கே என்னைப் போன்ற சிலரை இழுத்து வந்த பப்பிக்கும், நன்றிகளும்...வாழ்த்துக்களும்...

நிலா
16-01-2004, 11:01 PM
அருமையான கவிதை!நன்றி தலை!

aren
19-01-2004, 11:48 AM
அருமையான கவிதை
இளசு அவர்களின்
கைவண்ணத்தில் மெருகேறி
நம் மன்றத்தில்
ஒரு மகுடமாக
வந்திறங்கியிருக்கிறது

இதைப் படிக்க நினைவுகூர்ந்த பப்பி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

அலை...
26-01-2004, 03:37 AM
நன்றி இளசு...
என்னை செதுக்கிக் கொள்ள
இன்னுமொறு உளி கொடுத்தமைக்கு..

Rangaubai
01-02-2004, 02:39 AM
அன்பரே,
தங்கள் கவிதை தரும் காட்சி எனக்கு ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறது:

"பொறி இன்மை யார்க்கும் பழிஅன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மைப் பழி"

அதாவது, நமது உடல் ஊனமோ, பொருளாதார ஊனமோ, மற்ற ஊனங்களோ நமக்கு ஒரு கீழ்மை தரக் கூடியது அல்ல. ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, முயற்சியற்று வீழ்ந்து கிடப்பதே கீழ்மை தரக் கூடியது.

டெர்மாட்டின் வெற்றி அவரது 'ஆள்வினை உடைமை".

வெற்றி பெற்றவர்க்கும், அதை வெளிக் கொணர்ந்தவர்க்கும் என் பாராட்டுக்கள்.

thiruarul
01-02-2004, 06:09 PM
<span style='color:#005bff'>தங்களது பதிப்பு எமது தமிழ்கூறும் நல்லுலகத்துள்ளார் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய படிப்பினையை உள்ளடக்கியுள்ளது.
முக்கியமாக <u>" புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம் கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு......... " </u> என்ற வரிகள்
எதற்கெடுத்தாலும் மனந்தளர்ந்து கண்ணீர்சிந்தும் வழக்கத்திற்கும் பரம்பரையியலிற்கும் ஏதாவது சம்பந்தமுண்டோ என எண்ணுமளவிற்கு அது எம்மத்தியில் விரவியுள்ளது.
இதற்கு எமது கீழைத்தேயப் பாரம்பரியமான பாசம், குடும்ப உறவு என்பன குழந்தை வளர்ப்பில் செலுத்தும் ஆதிக்கம் ஒருவகையில் காரணமாகவுள்ளன.
சாதாரண காய்ச்சல் கண்ட பிள்ளையைச் சுற்றியுள்ள சுற்றத்தார் காட்டும் அக்கறை மற்றும் அதீத கவனிப்பு இதற்குச் சிறு உதாரணம்.
அப்பிள்ளை வளர்ந்த பின்பும் அத்தகைய ஒரு அக்கறையை சுற்றத்திடம் எதிர்பார்க்கிறது.
இது ஒருவரது தனிப்பட்ட மனஉறுதி பிரச்சினைகளைத் தனித்துக் கையாளும் ஆற்றல் என்பவற்றில் எதிரிடையான தாக்கத்தைச் செலுத்துகிறது.
காய்ச்சலுக்கே இத்தனை ஆர்ப்பாட்டமெனில் கால் போனால்...............!
இந்த வகையில் மேனாட்டாரின் குழந்தை வளர்ப்பு முறைகளில் பொருத்தமான நல்ல அம்சங்களை எமது வருங்கால இளஞ்சந்ததியை வளர்த்தெடுக்கும்போது பிரயோகிப்பது பற்றி நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும்.</span>
அன்புடன் திருவருள்

kavitha
13-02-2004, 04:10 AM
(நான் ஏற்கனவே பதித்தது வரவில்லை.அதனால் மீண்டும்)
யானைக்கு தும்பிக்கை!
மனிதனுக்கு நம்பிக்கை!
தன் நம்பிக்கை!


" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.

நம்பிக்கை ஊட்டும் வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்.

Iniyan
17-12-2004, 05:58 PM
Originally posted by இளசு@Apr 3 2003, 01:30 AM
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.


சத்தியமான வரிகள். சக்தி தரும் வரிகள். இன்றே இப்போதே இங்கேயே.......எனத் துடித்தெழ செய்யும் வரிகள்.

இளசு
19-11-2005, 10:17 PM
கருத்து தந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும்

ஒருங்குறிக்கு மாற்றிய நண்பர் சுடருக்கும் நன்றிகள்.

அன்பு திருவருள் அவர்களுக்கு--

முடிவதை நினைத்து மனம் தேறி வாருங்கள் நண்பரே...

mukilan
20-11-2005, 01:50 AM
நானும் பல தருணங்களில் கடந்த காலங்களில் இப்படி நடந்திருந்தால் என்றெல்லாம் கற்பனை செய்து நாட்களை வீணடித்திருக்கிறேன். இனி முடிய்ம் என நினைப்பது பற்றி மட்டுமே கனவு காணப் போகிறேன். கவிதைக்கு நன்றி அண்ணா!

பாரதி
20-11-2005, 03:58 PM
நீண்ட நாட்களுக்குப்பின் மேலெழுப்பிய இக்கவிதையை படித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. அண்ணாவிற்கும் சுடருக்கும் நன்றி.

இளசு
22-07-2007, 07:09 AM
முகிலன்.. பாரதி...

நன்றிகள் இனிய இளவல்களுக்கு..

ஆதவாவின் விமர்சனம் எழுதுவது திரியில் முகிலனைப்பற்றியும் கண்ஸைப்பற்றியும் சொல்லித் தொடங்கி இருக்கிறேன்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10991

ஆதவா
22-07-2007, 07:43 AM
Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

மிகச்சிறந்த கவிதை.. ஒரு சம்பவத்தோடு. உண்மைச் சம்பவமாய் எனக்குப் படுகிறது அண்ணா.

இறுதியாய் உதிரம் உதிருவரை சொல்லிக் கொண்டிருக்கும் மந்திர வாக்கியம். சாதிப்பது எதுவும் எளிதில் அல்ல.. முன்பொரு சமயம் கவிதை எழுதிவைத்திருந்தேன்.

எளிது இனிது
வலிது கொடிது.

ஆனால் இந்த கவிதை படித்தபின்னர்தான் தெரிகிறது வலியதும் இனியது ஆக்கும் என்று... முடிவதை நினைப்பதால்... ஊனம் உற்றவர்கள் பலர் முடியாத காரியங்களை முடித்துக் காட்டுகிறார்கள். திங் வாட் யு கேன் டு....

ஒரு பெட்டிக்குள் அடங்கியிருந்த எனது மனதை வெட்டவெளியில் திறந்துவிட்ட இளசு அண்ணாவுக்கு எனது நன்றி,,,

பாரதி
23-07-2007, 12:33 AM
எப்போதும் முடிவில்லாமல் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் கவிதை. திஸ்கி மன்றம் போலவே இங்கும் இதை ஒட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

namsec
23-07-2007, 01:21 PM
முடிவதை மட்டும் நினை

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

நினைத்ததை முடிக்க முயர்ச்சி செய்

முயர்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்

நினைக்கும் பொழுது தெரியாது எது முடியும் எது முடியாது என்று அப்படி என்னி கொண்டே இருந்த்தால் உன் வாழ்க்கை கடந்துவிடும்.

அமரன்
09-11-2007, 03:20 PM
எப்போதும் முடிவில்லாமல் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் கவிதை. திஸ்கி மன்றம் போலவே இங்கும் இதை ஒட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.
ஒட்டி வைத்துள்ளேன் அண்ணா...!

பாரதி
09-11-2007, 03:48 PM
என் நெஞ்சார்ந்த நன்றிகள் அமரன்.

ஷீ-நிசி
14-11-2007, 05:17 PM
மிக எளிமையாக அழகாக பயணிக்கிறது கவிதை... இளசுவின் ஸ்டைலில்!

முடிவதை மட்டும் நினை!
'முடிவு' அதை மட்டும் நினைக்காதே!

பூமகள்
22-11-2007, 11:09 AM
இளசு அண்ணாவின் பின்னூட்ட கவிகளையே பார்த்து படித்த எனக்கு முதல் கவிதை ஸ்பரிசம் இந்த ஒட்டிவைத்து அழகு பார்த்த கவிதைப்பூ மூலம் கிடைத்திருக்கிறது.

அந்நிய தேசத்தில்
அன்பு நட்பு..!
எதிரெதிர் திசையில்
எதார்த்த வாழ்வுநெறிகள்..!
எட்டிப் பார்த்தது
உண்மை தோழமை..!

பிரிந்த இரு உளம்
சேர்ந்து சந்தித்த தருணம்..!

அழகு கோலத்தின் ஒரு பாதி
அலங்கோலமாய்..!
அதிர்ச்சியிலும் ஆறுதல்..
தன்னுயிர் கன்னியும் கண்துடைக்கும்
கணினியும்..!!

முடிவதை மட்டும் நினைத்து
முகம் சிரிக்கும்
ஒவ்வொரு நாளும்..!!

அழகான கருத்து பொதிந்த கவிதை..!!
வாழ்வின் தத்துவம் சொன்ன கவிதை..!!:icon_b:

பாராட்டுகள் இளசு அண்ணா..! :)

இளசு
12-07-2008, 10:36 PM
ஒட்டச் சொன்ன பாரதி
ஒட்டி அழகுபார்த்த அமரன்

வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..

அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!

தீபா
13-07-2008, 01:00 AM
ஒட்டச் சொன்ன பாரதி
ஒட்டி அழகுபார்த்த அமரன்

வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..

அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!

அட என்ன ஒரு லைன்..... உங்கள் இருவருக்கும்..

முடிவதை மட்டும் நினை என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த வரிகளுக்கு மேலும் கவிதை பூசியிருக்கிறார் ஒருவர்.... கண்டுபிடியுங்களேன்...

அவரும் மன்றத்தில்தான் இருக்கிறார்..

ஓவியா
24-05-2009, 12:48 AM
முடிவதை மட்டும் நினை


1993

ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்

வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை

கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர

பண்டம் மட்டும் அல்ல
பண்பாடும் கைமாறியது
காலவெள்ளத்தில் வாழ்க்கை
திசைமாறியது
ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
மீண்டும் என் வழி மாறியது

2003

வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
"என்னாச்சு டெர்மாட்?"
கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு

சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
இடைவிடா பயிற்சி இரு வருடம்

எத்தனை எத்தனை தடைக்கற்கள்
எப்படி தாண்டினாய் இளைஞனே

சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்

"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:

Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை


ஓவ்வொரு பூக்களுமே பாடல்தான் ஞாபகம் வந்தது,

கவிதைக்கதையை படித்து 'உன்னால் முடியும்' என்ற உற்ச்சாகம்தான் குழந்தையாய் பிறந்தது.

நன்றிகள் இளசு.

lenram80
24-06-2009, 07:17 PM
Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

அப்பாடா.. 'என்றும் இளசு' - உடன் கருத்துப் போர் செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பம்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
முடியாதது என்று ஒருவனுக்கு எப்படி முயற்சி செய்யும் முன்னரே தெரியும்?

காந்திக்கு நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. 1910 -ல் அவருக்கு தெரியாது நமக்கு 'நிச்சயமாக சுதந்திரம் கிடைக்கும் என்று' . ஆனால் 'முடியும்' என்ற எண்ணம் இருந்தது.

ஆகாயத்தில் மனிதன் பறக்கலாம் என்ற சிந்தனையை நினைத்தால், "Impossible" என்றே தோன்றும். ஆனால் ரைட் பறந்தானே. அவன் முடியாதது என்று நினைத்திருந்தால் நடந்தோ, புகை வண்டியிலோ பயணம் செய்திருக்கலாமே.

எனவே.. நினைக்கும் போது, "முடியும் / முடியாதது " என்று எண்ணம் தேவை இல்லை.ஏனெனில் உனக்கு தெரியாது உன்னால் முடியுமா முடியுமா இல்லையா என்று. பிறந்த குழந்தை நடப்பதில்லை. கற்று கொண்டு தான் நடக்கிறது.

அப்படியென்றால், புலிகள் தோற்றதற்கு காரணம் என்ன? முடியும் என்று நினைத்து போராடினார்களா? இல்லை முடியாது என்று நினைத்திருந்தார்களா? முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாமல் போய் விட்டது.
2009-ல் இப்படி நடக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் ஏன் இப்படி 20 வருடமாய் போராடப் போகிறார்கள்?

எதிர் காலத்தை கணிக்க தான் முடியும். உறுதி படுத்த முடியாது.

எனவே...
நினை!
கள்!
செய்!

இளசு
25-06-2009, 08:51 PM
தென்றல், ஓவி, லெனின் - மூவருக்கும் நன்றி!

ஹ்ஹ்ஹ்ஹா... லெனின்...
அழகான மறுபார்வையை முன்வைத்து
அருமையான கருத்தாடலுக்கு அடித்தளம் போட்டிருக்கிறீர்கள்..

முன்னர் ராம்பால், நண்பன், பூ, பப்பி, லாவண்யா நிலா, முத்து, பாரதி
என கவிதையில் களம் காண ஒரு பட்டாளமே இருந்தது..

இன்று இனிய பென்ஸ், ஆதவன், ஆதி, சிவா என இருக்கிறார்கள்.

அவர்களில் யாராவது வந்து
இந்த இரு முனைகளை எடைபோட்டு
கருத்தாட மாட்டார்களா என ஏங்குகிறேன்..

அப்படி யாரும் வாராமல்போகும் நிலை வந்தால்
நானே மல்லுக்கட்ட வந்தாலும் வருவேன்..

காத்திருக்கலாமா லெனின்?

அறிஞர்
25-06-2009, 09:18 PM
தன்னம்பிக்கையூட்டம் கவிக்கு நன்றி இளசு.
---------
முடியும் என முயற்சி செய்யவேண்டியது நம் கடமை.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்... என்ற வாக்கின் படி வெற்றியை எதிர்பார்த்தல் நல்லது.

முயற்சியில்லாமல் தூங்கினால் எதையும் சாதிக்க இயலாது.

முயற்சி செய்து.. முடிவு பாதகமாக வந்தால்... கற்றுக் கொண்ட பாடங்களை எண்ணி மகிழ வேண்டியது தான்.
------------
இந்த முயற்சி.. தனி மனிதனுக்குரியது (குழுவுக்கானதல்ல)....

பாரதி
26-06-2009, 12:51 PM
மீண்டும் மீண்டும் படிக்க முடியும் - முடியும் என்ற உற்சாகம்தான் பிறக்கிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எப்போதேனும் மனதில் பிறக்கும் வியப்பூட்டக்கூடிய கவிதை தந்த அண்ணனுக்கு நன்றி.

கவிதை சொல்வதும் முடியாது என்பதைக்குறித்தல்ல; முடியும் என்பதையே வலியுறுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்.

பொதுவாக கருத்தாடுவதை விட கவிதையில் வந்த கருத்தைக் கண்டோமென்றால் - கழுத்தெழும்பு முறிந்த நிலையிலும், இரண்டு வருட காலம் இடைவிடாமல் முயற்சி செய்ததையும், அந்த நிலையில் தன்னால் எதை சாதிக்க முடியுமென பட்டியலிட்டு சாதிக்க விரும்புவதையும்தானே கவிதையும் கூற வருகிறது?

“உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்” - தன்னால் முடியாது என்று நினைத்திருந்தால் இந்த வாக்கியங்கள் மெக்டெர்மாட்டிடம் இருந்து வந்திருக்கவே இயலாது.

கவிதை வாக்கியங்களை எதிர்மறையாக நோக்க வேண்டிய அவசியம் இல்லை - தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயலும் ஒரு அற்புத இளைஞனின் வார்த்தைகளாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.

அமரன்
26-06-2009, 03:22 PM
சின்ன வயசில் பாடப்புத்தகத்தில் படித்தது. இலக்குப் பார்.. அம்பை விடு என்ற பாடம். இதுவே அதன் சாரம்சம்..

மாணாக்கர்களை சோதிக்க எண்ணினார் வில்வித்தைக் குரு துரோணாச்சாரியார். ஒரு மரம்.. அதன் ஒரு கிளையில் பொம்மைக் கிளி. கிளியின் கழுத்தில் அம்பால் அடிக்கவேண்டும் என்பது இலக்கு. ஒவ்வொருவரும் வில்வளைத்து நாணேற்றி இலக்குப் பார்க்கும்போது துரோணர் கேப்பார், மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? கிளி தெரிகிறதா? கிளியின் கழுத்து தெரிகிறதா?.. எல்லாரும் எல்லாம் தெரிகிறது என்று சொல்லக் கர்ணன் சொல்வான் "மரம் தெரியவில்லை; கிளை தெரியவில்லை; கிளிதெரிகிறது".. அவனாலும் கிளியின் கழுத்தை கொய்ய முடியவில்லை. அர்ச்சுனன் வந்தான். கிளியின் கழுத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இலக்கை அடித்தான்.

அர்ச்சுனால் மட்டுமே முடியும் என்று அறுதியாக நம்பியதால் அவனை இறுதியாக அழைத்தார் துரோணர்.(?)

இந்த அம்பால் இதனைத்தான் செய்ய முடியும். இதனைச் செய்தால் இதனை அடையமுடியும் என்பதை நினைத்து முடித்தான் அர்ச்சுனன்.

இருவரும் முடிவதை மட்டும் நினைந்துள்ளார்கள். இப்போதும் அர்ச்சுனர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் களங்களும் வீரர்களும் முன்பு போல இல்லை. பல கருத்துப் போர்கள் நெறிபிறழ்ந்து தடம் புரள்வதும் இதனால்தான். இதனை உணர்ந்து முடிவதை மட்டும் நினைப்பவர்கள் எவரும் தோற்பதில்லை.

சேவலை வளர்த்து முட்டைபோடு என்றால் முடிகிற காரியமா?

பேடை வளர்க்க வேண்டும். இதுவே முடிவதை நினை.

அமரன்
26-06-2009, 03:35 PM
எத்தனை வாட்டிப் படித்தாலும் பச்சைக் காய்கறியாய் இந்தக்கவிதை.

வாழ்த்த வாகில்லை. வணங்கி நிற்கிறேன் அண்ணா!.

lenram80
26-06-2009, 04:51 PM
சேவல் கோழி முட்டை போடுவது, ஆண்கள் கர்ப்பமாவது, சிகப்பு பேனா பச்சையாக எழுதுவது, குதிரைக்கு கொம்பு முளைப்பது, புலி புல் தின்பது - போன்ற இயற்கையாகவே முடியாதவைகளையா இளசு " Not What You Can't Do " - ல் சொல்லுகிறார்?

இல்லை. இவை எல்லோருக்கும் தெரியும் "முடியாதவை" என்று. அப்படி என்றால், "Not What You Can't Do " - ல் சொல்ல வருவது என்ன? இந்த வாக்கியமே குற்றம்( நன்றி: நக்கீரன் :) )

நினைக்கும் போது எப்படி "முடியும் முடியாது" என்று நினைக்க முடியும்?

ராமேஸ்வர குழந்தை வளர்ந்து ஜனாதிபதி ஆகிறது? வறுமைக்கு பிறந்த குழந்தை மைக்கேல் ஜாக்சன் ஆகிறது? எப்படி? எனவே "முடியும்" என்ற ஒரே நினைப்பு தான் உள்ளது.

குறிப்பு:
இந்த சிறந்த கவிதையை குறைத்துப் பேசுவது என் நோக்கமல்ல. 'என்றும் இளசு' இன்னும் இப்படி 'என்றும் நிலைக்கும் கவிதை'களை இன்னும் தர வேண்டும்.

பென்ஸ்
19-08-2009, 06:11 PM
அன்பின் இளசுவின் நண்பருக்கு என் ஊக்கங்கள்...
இளசு, இது பலமுறை வாசித்த கவிதைதான் என்றாலும், கவிதையின் கருத்து கேள்விக்கு வந்த போது கவிதை திரிசங்கு லோகத்தில் தொங்குவது போல எனக்கு தோன்றும்... அதனால் பணி பளுவிலும் களம் குதித்துவிட்டேன்...
மனிதனால் முடியாது என்று எதுவும் கிடையாது என்று சொல்லும் அளவிற்க்கு சாதனைகள்...
ஆனால் எல்லாம் ஒரு தனி மனிதனால் முடியுமா என்று சொல்லும் போது... கடினமே...
ரைட் பறந்ததும் அப்படிதான்... ஆதி கால மனிதனின் கனவு கரு, இறக்கை கட்டி பறது, தோற்று, பலூன் கட்டி மலையில் இருந்து குத்தித்து, கிளைடர் கட்டி கால் உடைத்து.. அப்படா எத்தனை தோல்விகள்... அந்த தோல்விகளை எல்லாம் படிகளாக்கி பழம் பறித்தார்கள் ரைட்...
டெர்மாட்.. தான் சிறப்பாக வாழ தன்னால் சின்ன சின்ன வெற்றிகளை படிகளாக்க நினைக்கிறார்...
வெற்றி எப்போது அதன் கடைசி வடிவிலையை எடைபோட படுகிறது... அது கடந்து வந்த பாதையால் அல்ல... பாதைகள் வேறாயிருக்கலாம்... டெர்மட் தன் கண்ணுக்கு தெரிந்த தெளிவான பாதையில் பயணிக்கிறார்...
ராபர்ட் பிராஸ்டின் "தி ரோட் நாட் டேக்கன்" ந் கடைசி வரிகள் போல, சாதனையாளராகவும் விரும்பலாம்... உங்களுக்கு வெற்றிய அடைய நேரமோ, அதன் வழியோ தெரியாமல் ஒரு புதையல் வேட்டை போல செய்யலாம்...
இளசு.. உங்கள் நண்பரை நீங்கள் 2013 சந்திக்க விரும்புகிறென், அதனால் வரும் மூன்றாம் பத்தி எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாரதி
04-04-2010, 05:14 PM
ஏழாண்டுகளுக்குப் பின்னரும் இளசாய் இருக்கும் இது போன்ற கவிதைகளை எப்போதாவது காண ஆவல்.

CEN Mark
29-12-2010, 07:50 AM
முடிவதை மட்டும் நினை




முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

கவிக்கு அடி, தளை, தேமா, புளிமா, எதுகை, மோனை, இலக்கணம், தலைக்கனம் இதெல்லாம் தேவைதான். ஆனால் நமக்கு அவர் சொல்ல வந்த விஷயங்களை அவரால் முடிந்த வரை கவிதை வடிவில் சொல்ல முனைந்திருக்கிறார். அந்த நல்ல உள்ளத்தை பாராட்டுவதோடு அவரை பாதித்த பதிவுகள் நம்மையும் பாதித்திருக்கிறது என்றளவில், அவரது முயற்சியை வரவேற்போம்.

tamizpriya
07-04-2011, 11:39 PM
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
- நன்றாய் இருக்கிறது