PDA

View Full Version : உடனடிச்செய்திகள்Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12

அறிஞர்
01-06-2005, 01:07 AM
முக்கியமான.. செய்திகளை இங்கு தாருங்கள்...

சுவேதா
01-06-2005, 01:17 AM
சிறிலங்கா இராணுவ புலனாய்வுத் துறையின் கட்டளை அதிகாரி ரி.நிசாம் முத்தலிப் (வயது 39) இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.இரத்மலானைகொத்தலாவலஇராணுவகல்லூரியில்கடமையாற்றிவந்தமுத்தலிப், மெனிங்டவுணிலிருக்கும்தனதுவீட்டிலிருந்துஇன்றுகாலைகொத்தலாவெலஇராணுவகல்லூரிக்குச்சென்றுகொண்டிருந்தபோது

கிருலப்பனையில்வீதிசமிக்ஞைக்குஅருகில்காலை 7.50 மணிக்குஅவர்மீதுதுப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது.அவரின்பயணவிபரங்களைஏற்கனவேதுல்லியமாகஅறிந்திருந்தஇருதுப்பாக்கித்தாரிகள்அவரின்வாகனம்

அந்தஇடத்திற்குவரும்வரைமோட்டார்சைக்கிளில்காத்திருந்துபின்அவரின்வாகனத்தைத்தொடர்ந்துசென்றுள்ளனர்.வீதிசமிக்ஞைக்குஅருகேமுத்தலிப்பின்வாகனம்மெதுவாகசென்றபோதுபின்புறமாகவந்ததுப்பாக்கிதாரிகள், வாகனபின்இருக்கையில்அமர்ந்திருந்தமுத்தலிப்பின்மீது 10 முதல் 15 வரைதுப்பாக்கிச்சூடுகள்நடத்தினர்.முத்தலிப்பின்தலைக்கேகுறிவைத்துதுப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில்படுகாயமடைந்தமுத்தலிப்கொழும்புஅப்பல்லோமருத்துவமனையில்அவசரசிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்பட்டார்.அவருக்குவைத்தியர்கள்சத்திரசிகிச்சைசெய்யமுயன்றபோதிலும்முத்தலிப்மரணமடைந்துவிட்டார்.முத்தலிப்சுடப்பட்டஇடத்திற்குமிகஅருகாமையில்தான்பொல்லஹெங்கொடஇராணுவமுகாம்அமைந்துள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. துப்பாக்கிதாரிகளின்மோட்டார்சைக்கிளில்இலக்கம்குறிப்பிடப்படாமல்இருந்துள்ளது.முத்தலிப்படுகொலைதொடர்பானஆரம்பவிசாரணைகளைகிருலப்பனைபொலிசாரும்கொழும்புகுற்றப்புலனாய்வுத்துறையினரும்மேற்கொண்டுவருகின்றனர்.9 மில்லி மீற்றர் துப்பாக்கியே இவரது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் 5.5 ரக துப்பாக்கி ரவைகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதகவும் பொலிசார் தெரிவித்தனர்.மேலதிகவிசாரணைகள்இரகசியப்பொலிஸாரிடம்கையளிக்கப்பட்டிருப்பதாகசிரேஸ்டபொலிஸ்அதிகாரியொருவர்தெரிவித்தார்.திருகோணமலையில்பிறந்தமுத்தலிப்இராணுவத்தின்மட்டக்களப்புமாவட்டபுலனாய்வுத்துறைதலைமைஅதிகாரியாகபணியாற்றிவந்தார். அண்மையிலேயேஇவர்கொழும்பிற்குமாற்றலானார்என்பதுகுறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 பிள்ளைகள்உள்ளனர். முத்தலிப்பின்மனைவியும்இராணுவத்தில்கடமையாற்றுகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது.வன்னிப்பகுதியில்இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின்ஊடுருவல்கள், வன்னியில்ஆழஊடுருவிதாக்குதல்நடத்திவிடுதலைப்புலிகளின்பிரமுகர்களைபடுகொலைசெய்தமைபோன்றநடவடிக்கைகளின்பின்னணியில்இவரின்செயற்பாடுகுறிப்பிடத்தக்கவகையில்இருந்தது.வவுனியாவில்சமாதானகாலத்தில்விடுதலைப்புலிகளுக்குஆதரவாகசெயற்பட்டமக்கள்மத்தியில்குழப்பத்தைஏற்படுத்தியது, தமிழ்மக்களைகைதுசெய்துசித்திரவதைசெய்ததுபோன்றவற்றிலும்இவரதுபங்களிப்புஇருந்தது.தமிழீழவிடுதலைப்புலிகளால்முன்னெடுக்கப்பட்டசம்பூர்தாக்குதல், மூதூர்மற்றும்கட்டுநாயக்காவிமானத்தாக்குதல்கள்குறித்தபுலனாய்வுத்தகவல்களைப்பெறுவதில்இவர்முக்கியபங்குவகித்ததாகதெரிவிக்கப்படுகிறது.1994 ஆம் ஆண்டு வெள்ளவத்தை ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டு பிடிக்கவும் முக்கிய பங்காற்றிய இவர் மிலேனியம் சிற்றி இராணுவ நடவடிக்கைப் பிரிவின் உதவித் தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.சிறிலங்காஇராணுவத்திற்காகபாரியசேவையாற்றியதாககருதப்படுகிறமுத்தலிப்சுட்டுக்கொல்லப்பட்டதுசிங்களஇராணுவத்தைகடும்அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும்கொழும்புத்தகவல்கள்கூறுகின்றன.முத்தலிப்பின்படுகொலைகுறித்துதங்களுக்குஅறிவிக்கப்படாததால்அதுகுறித்துதாங்கள்கருத்துத்தெரிவிக்கமுடியாதெனபோர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின்பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

(இச் செய்திகள் புதினம் எனும் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)

சுவேதா
01-06-2005, 01:26 AM
சாவகச்சேரி அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் பலி-மூவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 23:32 ஈழம்] [ம.சேரமான்]
சாவகச்சேரி அருகே கச்சாய் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மூவர் படுகாயமடைந்தனர்.
தென்மராட்சியின் சாவகச்சேரி கச்சாய் கிராமத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இக்கிராமத்தில் இன்று மாலை 6.30க்கு இக்குண்டுவெடிப்பு நடந்தது.
இதில் கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி காண்டீபன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் அப்பாத்துரை பாக்கியராஜ் (வயது 21), செல்லத்துரை சையோ (வயது 20), குணசேகரம் ரஞ்சிதா (வயது 7) ஆகியோர் படுகாயடமைந்துள்ளனர்.
காயமடைந்தோர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கு பின்னர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்த கந்தசாமி காண்டீபன் சடலம் யாழ். வைத்தியசாலையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
( இச் செய்தி புதினம் எனும் தளத்திளிருந்து எடுக்கப்பட்டவை)

அறிஞர்
01-06-2005, 02:47 AM
தாய்லாந்தில் நடந்த மிஸ்யூனிவர்ஸ் போட்டியில் கனடாவின் நத்தாலியா உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்...

பரஞ்சோதி
01-06-2005, 04:22 AM
மீண்டும் மன்றத்தில் செய்திகள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது உடனடி செய்தி இடம் என்பதால் மிக மிக முக்கியமான செய்திகளை மட்டுமே இங்கே கொடுக்கலாம்.

தினசரி செய்திகளை தேதி வாரியாக தனித்தனி தலைப்பில் கொடுக்கலாமே.

gragavan
01-06-2005, 04:59 AM
அறிஞரே உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. கொசகொசவென இருக்கிறது.

மன்மதன்
01-06-2005, 05:02 AM
சுவேதாவின் முதல் செய்தியும் ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இங்கே செய்திகளை சுருக்கி தாருங்கள். விரிவான செய்திகளை நண்பா பரம்ஸ் சொன்னது போல தேதி வாரியாக தனி தனி தலைப்பாக கொடுங்கள்.

செய்திகளுக்கு நன்றி சுவேதா, அறிரே..

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
01-06-2005, 05:06 AM
வேறு தளங்களிலிருந்து எடுத்து போடும் போது, அதை யுனிகோடுக்கு மாற்றிய பின்பு கொடுங்கள், அறிஞரின் பதிவு எனக்கு தெரிகிறது ஆனால் இராகவன் அண்ணாவுக்கு தெரியவில்லை, காரணம் எழுத்துரு.

மேலும் அந்த செய்தியையே சுருக்கமாக நாலு வரிகளில் கொடுத்தால் மக்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அறிஞர்
01-06-2005, 06:55 AM
நல்லது ராகவன்..... மாற்றிவிட்டேன்...

இன்று புதிதாக இருந்ததால்.. முயற்சித்தேன்....... எனக்கு தெரிந்ததால்.... (தினகரன் பாண்ட்) எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்தேன்...

பரம்ஸ் கூறியபடி.... முக்கியமான செய்திகளை சுருக்கமாக இங்கு பதிக்கலாம்...

நண்பர்கள் விரும்பினால்... தினமும் செய்தி தனித்தலைப்புக்களில் தரட்டும்.. எந்த ஆட்சேபணையும் இல்லை

அறிஞர்
15-06-2005, 08:27 AM
தேதி: 2005/06/15

இந்தியா முழுவதும் ஓரே கட்டணம்!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5207)

கிரீஸ் தலைநகரில் நடந்த தடகள் போட்டியில் ஜமைக்கா வீரர் அசபாபவல் 100 மீ தூரத்தை... 9.77 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நாளை தமிழக முதல் அமைச்சர் ஆண்டிப்பட்டி செல்கிறார்..

தமிழகத்தில் விவசாய கடன்களை ரத்துசெய்யவேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

முத்துலெட்சுமி வீரப்பன்... விஜயகாந்தை நல்ல தலைவர் என பாராட்டியுள்ளார்.

மன்மதன்
15-06-2005, 10:18 AM
தேதி: 2005/06/15

இந்தியா முழுவதும் ஓரே கட்டணம்!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5207)


முத்துலெட்சுமி வீரப்பன்... விஜயகாந்தை நல்ல தலைவர் என பாராட்டியுள்ளார்.

நன்றி அறிஞரே..

மிஸஸ் வீரப்பன் 'கேப்டன் பிரபாகரன்' படம் பார்க்கவில்லையா..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
15-06-2005, 11:05 AM
நன்றி அறிஞரே..

மிஸஸ் வீரப்பன் 'கேப்டன் பிரபாகரன்' படம் பார்க்கவில்லையா..

அன்புடன்
மன்மதன்பார்ததால் தான் பாராட்டியுள்ளார்... மாலைமலரில் விவரத்தை படிக்கவும்

thempavani
15-06-2005, 11:37 PM
இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையினை நிராகரித்துள்ள ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியேறியுள்ளது.

thempavani
15-06-2005, 11:46 PM
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இனி புகை பிடிப்பது உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது.

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இத் தடை அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அறிஞர்
16-06-2005, 01:41 AM
இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையினை நிராகரித்துள்ள ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியேறியுள்ளது.எதிர் கட்சியான ரணில் கட்சி ஆதரவு அளிப்பதால் அரசுக்கும், தமிழர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை

இளையவன்
16-06-2005, 01:55 AM
சிறிலங்கா ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான ஜே.வி.பி அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ள பொதுக்கூட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜே.வி.பியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

thempavani
24-06-2005, 12:57 PM
இலங்கையில் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு கைசாத்து

gragavan
24-06-2005, 03:30 PM
இலங்கைத் தீவில் அமைதி திரும்பி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது என் ஆவல். அது நிறைவேற ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

அறிஞர்
23-07-2005, 08:43 AM
இன்று காலை எகிப்தில் ரெட்சீ என்ற சுற்றுலா தளத்தில் குண்டு வெடிப்பு.. கிட்டத்தட்ட 50 பேர் பலியாயிருக்கலாம் என எண்ணுகிறார்கள்

பரஞ்சோதி
23-07-2005, 08:51 AM
என்னுடைய மேலாளர் அங்கே தான் செல்ல இருந்தாராம், நேற்று திடிரென்று திட்டத்தை மாற்றி இன்று செல்வதாக இருந்தாராம், இப்போ தான் தொலைபேசியில் அழைத்து சொன்னார்.

suma
23-07-2005, 01:21 PM
கோர்ட்டுக்கு லல்லு செல்ல இருந்த பாதையில் மர்ம மனிதர்கள் சிலர் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பிரியன்
04-09-2005, 02:50 PM
வீடியோகான் முத்தரப்பு ஒரு நாள் போட்டிதொடரில் ஜிம்பாம்வேக்கு எதிரான இறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது,,, 36க்கு 4 விக்கட் என்ற நிலையில் பின் தங்கியிருந்த இந்தியா இப்போது 231/5 45 ஓவர்களில். இன்னும் 30 பந்துகளில் 20ரன்கள் எடுக்க வேண்டும்...

யுவராஜ்சிங் அபார சதம்


237/5 (45.4)
245/5 (47)
249/6 (47.4)

இந்தியா 11 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
யுவராஜ்சிங் - 120(124) - (12*4, 1*6)
தோனி - 67* (63) - (1*4 , 3*6)

இளசு
29-10-2005, 09:23 PM
டெல்லியில் வெடிகுண்டுகள்..
பண்டிகிஅக்கு கடைக்கு வந்த பொதுமக்களைக்
கொன்று குவித்த நாசகார தீவிரவாதிகள்
நாசமாய்ப் போகட்டும்.
அப்பாவி பொதுமக்களைக் கொன்று 'கொள்கை 'பற்று' தீவிரம் காட்டும் மூளைசலவை ஆன, மூளையை அடகுவைத்த காட்டுமிராண்டி மிருகங்கள்
கண்டுப்டிக்கப்பட்டு அழிக்கப்படட்டும்.
இறந்த மக்களுக்கு அஞ்சலி.
இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதல்.
காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனை.

பரஞ்சோதி
30-10-2005, 04:43 AM
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்.

பரஞ்சோதி
09-11-2005, 06:28 PM
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாருக்கு இரங்கல் தெரிவிக்கலாம்.

இளசு
09-11-2005, 10:10 PM
உடல்நலமின்றி இருப்பதாய் செய்திகள் அண்மையில்.


எளிய பிறப்பு -- உயர்ந்த பதவி.
எளிமை - நேர்மை - பதவிக்கேற்ற பெருந்தன்மை.


கே.ஆர். நாராயணன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

பாரதி
09-11-2005, 10:27 PM
முன்னால் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அவர்களின் மறைவுக்கு வருத்தத்துடன் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

mukilan
09-11-2005, 11:01 PM
தனது வாழ்வின் இறுதி நாட்களில் சமூக நலப் பணிகள் செய்து வந்தவர். ஏழைகட்கு மருத்துவ உதவி சென்று சேர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு தன் நண்பர்களைக் கொண்டு நலத் திட்டங்கள் வகுத்தவர். மிக எளிய வகுப்பைச் சார்ந்து தன் கடும் உழைப்பினால் நாட்டின் முதல் குடிமகன் ஆன முன்னாள் குடியரசுத்தலைவருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இளசு
13-11-2005, 10:33 PM
டெல்லி வெடிகுண்டு சதிகார மிருகங்களுக்கு அரபு நாட்டில் இருந்து பண உதவி வந்திருப்பதாக செய்தி.

இந்த வகைக் குற்றவாளிகளுக்கும் வக்காலத்து வாங்க வக்கீல்கள் வருவாங்க -இல்லையா?

pradeepkt
14-11-2005, 05:17 AM
நேற்றிரவு பீகார் மாநிலம் ஜெகானாபாத் ஜெயிலை நக்சல்பாரிகள் முற்றுகையிட்டுத் தகர்த்தனர்.
சிறைக்கைதிகள் 500 பேர் வரை வன்முறையால் விடுதலை செய்யப் பட்டனர்.
இதில் சிறையில் இருந்த முக்கிய நக்சல் தலைவரும் ஒருவர்.
நாடு முழுவதும் இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

mukilan
24-01-2006, 04:19 AM
இன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 ஆண்டுகளாக கனடாவை ஆண்டு வந்த லிபரல்ஸ் கட்சியை விட முக்கிய எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 11 தொகுதிகளில் அதிக இடங்கள் வென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது.இன்னமும் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் கனடாவின் அடுத்த பிரதமர் ஆகிறார்.
நடந்த தேர்தலில் 45 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர் என்பதும் சென்ற ஆட்சியில் இந்திய வம்சாவளியினர் மத்திய அமைச்சர்களாக (கேபினட்) இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. லிபரல்ஸ் கட்சியினர் கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தினரை ஆதரித்து வந்தனர். கன்சர்வேட்டிவ்களின் முடிவு என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

அறிஞர்
25-01-2006, 11:05 PM
கன்சர்வேட்டினர் வென்றுள்ளனர். ஆனால் தனித்து ஆட்சி அமைக்க போதுமான பலம் இல்லை. எனவே முக்கியமான விசயங்களில் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றமுடியாது.... பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறது என.

மொத்தம் - 308

கன்சர்வேட்டிவ் - 124 (36.3%)
லிரல்ஸ் - 103 (30.2%)
இதர 3 கட்சிகள் - 81

aren
26-01-2006, 12:35 AM
கன்சர்வேட்டினர் வென்றுள்ளனர். ஆனால் தனித்து ஆட்சி அமைக்க போதுமான பலம் இல்லை. எனவே முக்கியமான விசயங்களில் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றமுடியாது.... பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறது என.

மொத்தம் - 308

கன்சர்வேட்டிவ் - 124 (36.3%)
லிரல்ஸ் - 103 (30.2%)
இதர 3 கட்சிகள் - 81

மைக்கேல் ஹார்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பிரஸ்டன் மானிங் தொடங்கிய ரிபாஃர்ம் பார்ட்டி 7 - 8 வருடங்களுக்கு முன்பே கன்சர்வேடிவ் கட்சியைத்தன் கட்சியுடன் இணணக்கும்படி கூறினார். அவர்கள் மறுத்துவந்த்தால் லிபரல் கட்சியை வெல்வதற்கு ஆள் இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஹார்பர் ரிபாஃர்ம் பார்ட்டியின் தலைவராக வந்தபொழுது அவர் எப்படியோ கன்சர்வடிவ் கட்சியை சமரசம்செய்து இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைத்ததலாம், ஆல்பர்டா மட்டுமில்லாமல் கணடாவின் அனைத்து பகுதியிலிருந்தும் இவருக்கு ஆதரவு கிடைத்து லிபரலை தோற்கடித்துவிட்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆனால் முழுமையான பலம் இல்லையாதலால் இவரை லிபரல் கட்சி ஆட்சியை சரியாக நடத்தவிடாது கஷ்டப்படுத்தும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்தல் வரும் என்பது நிச்சயம். பார்க்கலாம் ஹார்பர் எப்படி சமாளிக்கிறார் என்று.

ஜான் கிரிஸ்டியானை மட்டமாக பேசிய பெளல் மார்டினால் தனியாக நிமிர்ந்து நிற்கமுடியவில்லை. லிபரல் கட்சிக்கு பெரும் அவமானம்.

சுபன்
27-01-2006, 06:33 PM
ஜெனீவாவில் பேச்சு இரு சாராரும் இணக்கம்

சுபன்
28-01-2006, 01:24 AM
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று சனிக்கிழமை லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.


நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையையொட்டி அன்ரன் பாலசிங்கமும் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கமும் இலங்கை வருகை தந்தனர் என்பது குறிப்பிடதக்கது.


நன்றி புதினம்.கொம்

அறிஞர்
28-01-2006, 08:21 AM
இலங்கை செய்தி தாள்களில்... அரசு பேச்சு வார்த்தை தயாராகி வருவதாக செய்திகள் உள்ளன.... அமைதி திரும்ப பிராத்தனைகள்

சுபன்
28-01-2006, 02:51 PM
இந்தோனேசியாவில் பூகம்பம்

aren
28-01-2006, 02:55 PM
இந்தோனேசியாவில் பூகம்பம்

மறுபடியுமா?

சுபன்
28-01-2006, 02:58 PM
மறுபடியுமா?

மேலதிக விபரங்கள் thatstamil.com இணய தளத்தை பார்க்கவும்

சுபன்
28-01-2006, 10:06 PM
இந்தியத் தரப்பினருடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு இந்தியா சென்றுள்ள நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்திய அரச அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சியாம் சரண் ஆகியோரை ஆகியோரை எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசினார்.

shanker
28-01-2006, 10:10 PM
loooose man u

சுபன்
28-01-2006, 10:56 PM
loooose man u

நண்பரே நீங்கள் இவ்வாறு பதிப்பது சரியல்ல

aren
29-01-2006, 12:24 AM
loooose man u

நண்பரே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. யாரையோ திட்டுவது போல் இருக்கிறது. தமிழில் தட்டச்சு செய்யுங்கள். அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

pradeepkt
30-01-2006, 05:32 AM
திட்டுவதையா, யாரைத் திட்டுகிறார் என்பதையா :D :D

வட்டா
03-02-2006, 05:07 PM
தமிழில் தட்டச்சு செய்வது பிரச்சினை எனறுதான் ஆங்கிலத்தில் பதித்துள்ளார்.ஆனால் ஆங்கிலமும் பிரச்சினை போல் தெரிகிறதெ

aren
04-02-2006, 02:14 AM
திட்டுவதையா, யாரைத் திட்டுகிறார் என்பதையா :D :D

இரண்டும்தான். என்னைத் திட்டினால் எதற்கு என்னைத் திட்டுகிறார் என்று தெரிந்துகொண்டு நான் செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்புக் கேட்க ஒரு சந்தர்பம் கிடைக்கும் இல்லையா? அதற்காகத்ததன்.

சுபன்
04-02-2006, 11:54 AM
அந்தமானில் நிலநடுக்கம்.

சுபன்
21-02-2006, 09:23 PM
இலங்கைத் தீவில் யுத்தமா? சமாதானமா? என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெனீவா பேச்சுக்கள் இன்று புதன்கிழமை தொடங்குகிறது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே ஜெனீவாவின் சாட்டியு டி பொசி அரண்மனைக் கோட்டையில் நோர்வே அனுசரணையுடன் இப்பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

இருதரப்புப் பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்பாக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவரும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் சிறப்புரை ஆற்றுகிறார்.

சுவிற்சர்லாந்து நேரம் காலை 9 மணிக்கு இருதரப்புப் பேச்சுக்கள் தொடங்குகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் பா. நடேசன், சமாதான செயலகத்தின் இளந்திரையன், கேணல் ஜெயம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இருநாள் பேச்சுக்களும் 6 மணிநேரம் நடைபெறும். இருநாள் பேச்சுக்களின் முடிவில் ஊடகவியலாளர்கள் மாநாடு நடைபெறும்.


தமிழர்களின் நீதி மறுக்கப்படுவதும் ஒப்புக்கொள்ளப்படுவதும் ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா தரப்பு வெளிப்படுத்துகிற போக்கைப் பொறுத்ததே.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அதன் சரத்துகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் இனியும் மறுப்பது தொடர்ந்தால் தமிழ் மக்களை வரலாறுதான் விடுதலை செய்யும்.

நன்றி:-புதினம்.கொம் (http://www.eelampage.com)

மயூ
05-03-2006, 05:52 AM
சங்கதி தெரியுமோ. இண்டைக்கு வவுன தீவில் விடுதலைப்புலிகளின் முகாம் தாக்கப்பட்டுள்ளது. இராணுவம் தாங்கள் இல்லை எண்டு மறுத்திட்டினம். எங்க போய் முடியப்போகுதோ தெரியவில்லை????

gragavan
12-04-2006, 09:55 AM
இன்று காலை கன்னட நடிகர் இராஜ்குமார் பெங்களூரில் இராமையா மருத்துவமனையில் இயற்கை எய்தினார். ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 78. அவருடைய சகோதரரை சிறிது காலத்திற்கு முன்னர் இழந்தது அவரை மிகவும் பாதித்தது என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அவரது குடும்பத்தார்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

pradeepkt
12-04-2006, 10:31 AM
இப்போதுதான் இந்தச் செய்தியைப் பதியலாம் என்று வந்தேன்.

அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பெங்களூர் சில இடங்களில் மக்கள் உணர்ச்சிவசப் படுவதால் நண்பர்கள் அனைவரும் சிறிது கவனமாக இருக்கவும். என் தம்பி அலுவலகத்திற்கு விடுமுறை விட்டு விட்டதாக அறிகிறேன்.

gragavan
12-04-2006, 05:15 PM
டீவியில் ஒரு காரும் ஜீப்பும் எப்படித் தாக்கப்பட்டு தள்ளப்பட்டு உருட்டப்பட்டு எரிக்கப்பட்டன என்பதை மிகவும் விலாவாரியாகக் காட்டினார்கள். முதல்வன் படத்தில் வருவது போல போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

பெண்கள் கூட கல்லைப் போட்டு ஜீப் கண்ணாடியை உடைத்த வீரதீரக் காட்சியைக் கண்டு பெண்ணுரிமை பற்றிப் பேசுகின்ற என்னைப் புல்லரிக்க வைத்தனர்.

ஜீப்பும் காரும் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து பிறகு பட் பட்டென்று அங்கங்கு வெடித்து கொழுந்து விட்டெரியும் காட்டி மிகவும் தத்ரூபமாக கிராபிக்ஸ் போல இருந்தது.

எங்கள் அலுவலகத்தில் மாலை ஐந்து மணிக்கே மொத்தப் பேரையும் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு....நாளைக்கு அலுவலகம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.

மதி
12-04-2006, 05:21 PM
நானும் கேள்விப்பட்டேன்..இந்த நிகழ்வுகளைப் பற்றி. இன்னும் இரண்டொரு நாட்களுக்கு பதட்டம் நிலவும் போல தெரிகிறது..

டாக்டர்.ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..!!!

அறிஞர்
13-04-2006, 03:36 PM
உடல் குன்றி.. முதிர்ந்த வயதில் மரணமடைந்துள்ளார்....

எதற்கென்று உணர்ச்சிவசப்படுவது....விவஸ்தையில்லாமல் போய்விட்டது....

நல்ல ஜனநாயகம் வாழட்டும்...

aren
13-04-2006, 03:42 PM
ராஜ்குமார் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆனால் இப்படி மக்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது.

மக்கள் சொத்து அநியாயமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது பெங்களூரில்.

gragavan
14-04-2006, 03:33 AM
இன்று பெங்களூரில் இயல்பு நிலை திரும்பியது. மக்கள் வழக்கம் போல வெளியே நடமாடினார்கள். கடைகள் திறக்கத் தொடங்கின. பேருந்துகள் ஓடத் தொடங்கின. நானும் அலுவலகம் வந்திருக்கிறேன்.

மயூ
15-04-2006, 05:14 AM
தமிழீழத்தின் தலைநகராக அறியப்பட்ட திருமலையில் சிங்கள்க் காடையரின் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 16 பேர் பலி 50 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி. காலம் காலமாக தமிழரை ஏமாற்ற நினைப்பவர்களிற்கு விரைவில் பதிலடி கிடைக்கும். இராணுவமும் காவல்துறையும் வழமைபோல் சிங்களக்கடையருக்கு பாதுகாப்பு கொடுத்ததாக தெரிகின்றது. இலங்கை அரசு விசயத்தை மூடி மறைத்துள்ளது.

மயூ
16-04-2006, 05:22 AM
திருகோணமலையில் வெள்ளியன்று மீண் டும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்த வன்செயல்களில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இரண்டு தமிழர்கள் மற்றும் ஓர் இந்தி யப் பிரஜை ஆகியோரின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
கிண்ணியாவில் வெள்ளிக்கிழமை சிங் களக் குண்டர்கள் நடத்திய கொடூரத் தாக்கு தலில் நடேசபுரம் பகுதியைச் சேர்ந்த சோம சுந்தரம் மகேஸ்வரி(வயது 60) என்ற வயோ திபப் பெண் கத்தியால் குத்தப்பட்டுக் கொல் லப்பட்டார்.
இந்தியப் பிரஜையான பெங்களூர் இராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜோதிடரான வெங்கடசாமி வெங்கட்ராமன்(வயது 30) என்பவரும் திருமலை மாவட்டச் செயலகத் தில் சிற்ழியராகப் பணிபுரியும் தண்ணி மலை நமசிவாயலிங்கம்(வயது 28) என்ப வரும் வன்செயலில் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.
திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு உத் தரவு இன்று காலை 6 மணிக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

edwp cjad;.fhk;

அறிஞர்
20-04-2006, 07:12 PM
இலங்கை சம்பவங்கள் மனதை பாதிக்கிறது.. அமைதி, சமாதானம் திரும்ப பிராத்தனை செய்வோம்

gragavan
21-04-2006, 05:19 AM
தென்னிலங்கையில் அமைதி திரும்பி தமிழர்களும் ஏனையவர்களும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ இறைவனை வழிபடுவோம்.

ராசராசன்
26-04-2006, 12:01 PM
nfhOk;gpy; mike;Js;s =yq;fh ,uhZtj;jpd; jiyikafj;jpw;Fs; நேற்று eil ngw;w Fz;L ntbg;gpy; =yq;fh ,uhZtj; jsgjp ruj; nghd;Nrfh cl;gl 27Ngu; gLfhakile;Js;sJld; NkYk; vz;ku; nfhy;yg;gl;Ls;sdu;.

,uhZt jsgjp nyg;bdd;l n[duy; ruj; nghd;Nrfhit ,yf;F itj;J ,d;W Nkw;nfhs;sg;gl;l jhf;Fjypy; gil mjpfhhp xUth; tPuh; xUth; cl;;gl;l 8 Ngh; tiu tiu gypahfpdh;.
,NjNtis rk;gtj;jpy; gLfhakile;j ,uhZt jsgjp nyg;bdd;l; n[duy; ruj; nghd;NrfhTf;F rj;jpurpfpr;ir mspf;fg;gl;L tUtjhf njhptpf;fg;gLfpwJ. gpe;jpf;fpilj;j jfty;fspd; gpufhuk; mth; Mgj;jhd fl;lj;ijj; jhz;bAs;shh; vd itj;jparhiy tl;lhuq;fs; njhptpj;Js;sd.
,uhZt jdgjp ruj; nghd;Nrfh> jiyikafj;jpd; nfhk;gdp tPjp Eiothapypd; mUfpy; gfy; Nghrdj;jpw;fhf gpw;gfy; 1.35 mstpy; ntspNawpaNtisapy; mthpd; thfdj;jpw;F ,lJGwkhf fh;g;gpzpia Nghy te;j ngz; xUtNu jw;nfhiy jhf;Fjiy Nkw;nfhz;ljhf ,uhZt tl;lhuq;fs; njhptpj;Js;sd.

http://sankathi.com/images/stories/April2006/colombo_blast.jpg

,e;j jhf;Fjiy Nkw;nfhz;ljhf $wg;gLk; ngzpd; fhy; gFjp khj;jpuNk fz;Lgpbf;fg;gl;Ls;sjhf ];jy jfty;fs; njhptpf;fpd;wd.
,e;j rk;gtj;jpy; ,uhZt jsgjpapd; ghJfhg;G gphptpd; Nk[h; gphpahy; tpf;fpukrpq;f cl;gl giltPuh;fs; %th; mNj ,lj;jpy; caphpoe;jdh;. ,uhZt itj;jparhiyapy; mDkjpf;fg;gl;Ls;s Nehahspfis ghh;itapl te;j %d;W nghJkf;fSk; rk;gtj;jpy; nfhy;yg;gl;ldh;.
,NjNtis muR jiyth; nrayfj;jpy; murhq;fj;jug;gpdh; jw;rkak; ehl;bd; ghJfhg;G njhlh;gpy; tpNrl fye;Jiuahlypy; <Lgl;Ls;sjhf njhptpf;fg;gl;Ls;sJ.

http://sankathi.com/images/stories/April2006/colombo_blast2.jpg

,Nj Neuk; cr;r ghJfhg;G gpuNjrkhd ,uhZt jiyikafj;jpy; ,uhZtj;jug;gpdh; $WtJ Nghy xU jw;nfhiy jhf;Fjy; eilngw ve;jtpj re;jh;g;gKk; ,y;iy. ,J cs;tptfhu hPjpahd gpur;rpidahfNt ,Uf;fNtz;Lk; vd;gNjhL jw;nfhiyf;Fz;Lj;jhf;Fjy; vdf;$wg;gLtJ ntWk; fz;Jilg;Ng vd;W gy;NtW mtjhdpfSk; fUj;J ntspapl;Ls;sdh;.

-நன்றி சங்கதி.

அறிஞர்
27-04-2006, 09:09 PM
இந்த தாக்குதல் கண்டிக்க தக்கது.... அமைதியான வாழ்வு திரும்ப இரு தரப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்

தீபன்
04-05-2006, 05:39 PM
வடமராட்சியில் 7 அப்பாவி இளைஞர்கள் படுகொலை

யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தினரது ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதலில் ஏழு அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். வடமராட்சி நெல்லியடிச் சந்திக்கு 300 மீற்றர் அருகில் நவிண்டிலில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை முகாமுக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு ஓட்டோ வாகனங்களில் இருந்த ஏழு அப்பாவி இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பலமணி நேரங்களாக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படவில்லை. படுகொலை செய்யப்பட்டவர்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

அனைவரும் நெல்லியடி அருகாமையில் உள்ள இராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.

படுகொலை செய்யப்பட்டோர் விவரம்:

மணியம் சுபாஸ் (வயது 19)
நவரத்தினராசா நாசன்னா (வயது 19)
தாமோதரம்பிள்ளை மஞ்சு (வயது 17)
பாலச்சந்திரன் கிரிசாந்தன் (வயது 18)
நாகரட்ணம் நகுலேஸ்வரன் (வயது 18)
ஒரு குழந்தையின் தந்தையான கோவில்மணி சின்னமணி (வயது 21)
ஒரு குழந்தையின் தந்தையான செல்வராசா சுமன் (வயது 22)

இச்சம்பவத்தை அடுத்து அந்தக் கிராமத்தில் மக்கள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர்.

சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள ஈ.பி.டி.பி. முகாமுக்குள் இந்த இளைஞர்கள் கைக்குண்டு வீசியதால் அவர்களைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-புதினம்.கொம்

தீபன்
15-06-2006, 05:44 PM
கெப்பிட்டிக்கொல்லாவ கிளைமோரில் பலி 64 ஆக உயரந்தது- 94 பேர் காயம்!

அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவவில் இன்று வியாழக்கிழமை காலை கிளைமோர் கண்ணிவெடியில் பயணிகள் பேரூந்து சிக்கியது. இதில் 15 குழந்தைகள் உட்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 94 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் பெருமளவானோர் சிங்களவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


வவுனியாவின் தென் கிழக்கில் 23 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கொங்கெல்லவ விகார அல்வில்லாவ பகுதியில் கனுககவெ எனும் இடத்திலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவ நோக்கி 150 பயணிகளுடன் சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து சென்று கொண்டிருந்த போது யாக்கவெல்ல எனும் இடத்தில் கிளைமோரில் சிக்கியது.
இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர், பௌத்த பிக்கு உட்பட மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 70 பேர் கெப்பிட்டிககொல்லாவ, அனுராதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 குழந்தைகள், 3 பெண்களை உள்ளிட்ட 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 5 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

இரு கிளைமோர்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.


புதினம்.கொம்

சுபன்
15-06-2006, 07:33 PM
என்ன நடக்க போகுதோ?? இதை தொடர்ந்து??

மயூ
16-06-2006, 08:44 AM
பழிக்குப் பழி இரத்தத்திற்கு இரத்தம் எனப்போய் இறுதிலி ஈழப்போர் பலஸ்தீனப் போர் போல மாறப்போவது மட்டும் இப்போதைக்கு உறுதியாக தெரிகின்றது.

ஓவியா
13-07-2006, 04:56 PM
http://news.bbc.co.uk/1/hi/england/london/5173808.stm

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/5175916.stm

நான் வசிக்கும் கட்டிடத்தில் தீ,..............:eek: :eek: :eek: :eek:
அந்த சாக்லெட் கலர் கட்டிடத்தில்தான் நான் வசிக்கின்றேன்,
அது பல்கலைகலகத்தின் வசிப்பிடம்...
கட்டிடத்தில் பாதிக்கு மேல் தீயில் அழிந்து விட்டது

Hendon Police Training College,
a police station,
a student halls of residence and
a number of homes near the blaze in Colindale were evacuated

நான் நலம்
(ஆனால் கையில் ஒன்னுமே இல்லை,
நைட்டியுடன் ஓடி வந்தேன்....
இதுவரை என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை நான் பார்த்ததில்லை......
காசு மற்றும் பார்ச்போர்டை மறந்துவிட்டென்,
ஆனால் மறவாமல் கைத்தொலைபேசியை எடுத்து வந்தேன்.... )

இன்று வரை உள்மனதில் எதோ ஒரு பயம் இருக்கிறது....

இனியவன்
13-07-2006, 05:11 PM
கவலை வேண்டாம் தோழரே,

அறிஞர்
13-07-2006, 05:30 PM
நான் நலம்
(ஆனால் கையில் ஒன்னுமே இல்லை,
நைட்டியுடன் ஓடி வந்தேன்....
இதுவரை என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை நான் பார்த்ததில்லை......
காசு மற்றும் பார்ச்போர்டை மறந்துவிட்டென்,
ஆனால் மறவாமல் கைத்தொலைபேசியை எடுத்து வந்தேன்.... )

இன்று வரை உள்மனதில் எதோ ஒரு பயம் இருக்கிறது.... தாங்கள் நலமுடன் இருப்பது குறித்து சந்தோசம்... இரவு எங்கு தூங்கினீர்கள்.... எப்பொழுது ரூமுக்கு திரும்புவீர்கள்.. உதவ நண்பர்கள் யாரும் இருக்கிறார்களா

pradeepkt
14-07-2006, 05:02 AM
கவலைப் படாதீர்கள்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. இனி எல்லாம் நலமே! பாஸ்போர்ட் வேறு வாங்கிக் கொள்ளலாம் அல்லவா?

sarcharan
14-07-2006, 05:20 AM
http://news.bbc.co.uk/1/hi/england/london/5173808.stm

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/5175916.stm

நான் வசிக்கும் கட்டிடத்தில் தீ,..............:eek: :eek: :eek: :eek:
அந்த சாக்லெட் கலர் கட்டிடத்தில்தான் நான் வசிக்கின்றேன்,
அது பல்கலைகலகத்தின் வசிப்பிடம்...
கட்டிடத்தில் பாதிக்கு மேல் தீயில் அழிந்து விட்டது


நான் நலம்
இன்று வரை உள்மனதில் எதோ ஒரு பயம் இருக்கிறது....


கடவுளுக்கு நன்றி...

தாமரை
14-07-2006, 05:33 AM
தங்கை நலமாய் இருப்பதே ஆறுதல்.. கடவுளுக்கு நன்றி.. கவலைப்படாதீர்கள்..

மதி
14-07-2006, 05:42 AM
நல்லவேளை. கடவுளுக்கு நன்றி பல. தாங்கள் நலம் தானே?

ஓவியா
14-07-2006, 12:43 PM
நன்பர்களே நான் நலம்.

ஆனால் அடுத்த திங்கள் வரை நாங்கள் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாது,
என்று கட்டளை ..இன்று வரை காவல் அதிகாரிகள் பலத்த பாதுக்காப்புடன் செயல் ஆற்றுகின்றனர்....

பாஷ்போர்ட், பணம், லாப்டோப், நகைகள் எல்லாம் இருக்க என்று தெரியவில்லை.....
(இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு)

கடவுளுக்கு நன்றி.

உங்கள் அனைவரின் மடல் கண்டு மனதுக்கு சந்தொஷம்.
நன்றி

aren
16-07-2006, 02:26 AM
ஓவியா, உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே, அதுவே மனதிற்கு சந்தோஷம்.

இப்பொழுது என்ன செய்கிறீர்கள். நண்பர்கள் யாராவது உதவினார்களா?

gragavan
16-07-2006, 05:19 AM
ஓவியா, வருந்தற்க. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது எனக் கொள்க. பெரியதைச் சிறியதாக்கி உங்களைக் காத்திருக்கிறான் ஆண்டவன். இனியெல்லாம் சிறப்பாக நடக்கும் பாருங்கள்.

மயூ
16-07-2006, 11:32 AM
கவலை வேண்டாம் தோழரே,
கடவுளே நன்றி!:) :)
உங்களுக்கு எதுவும் நேராமல் காத்தமைக்கு இறைவனுக்கு நன்றி..:) :)
ஓவியாக்கா அதென்ன செல்போனை மட்டும் காப்பாற்றியிருக்கிறீங்க....

ஓவியா
17-07-2006, 11:42 AM
நன்பர்களே நான் நலம்

இன்னும் பல்கலைகலகத்தின் வசிப்பிடத்திற்க்கு திரும்ப வில்லை...

மற்றவை அடுத்த மடலில்

தீபன்
19-07-2006, 05:57 PM
இன்றுதான் இந்த செய்தியை படித்தேன் சகோதரி... வாழ்த்துக்கள்... நீங்கள் தப்பியமைக்கு... நல்லகாலம், தீயின் கரங்கள் தீண்டி இந்த ஓவியம் காயம்பட்டுவிடவில்லை...

இன்னுமா மனதில் அச்சம்... எங்களை நினையுங்கள்... அது தானாகவே விலகிவிடும். தீக்குள் தீய்ந்தபின்னும் மீண்டும் எழும் பீனிக்ஸ்சாய் எழுந்து வாருங்கள் சகோதரி...

ஓவியா
20-07-2006, 03:42 PM
நேற்று ஒரு துக்க செய்தி
ஒரு மாணவன் காதலிக்கு காதலை புரிய வைக்க
விடுதியின் அறையில் தூக்கில் தொங்கிவிட்டான்.....

(காதல் கொடுமையா.....இல்லை காயம் கொடுமையா...?
நினைக்கவே ரொம்ப வலிக்கிறதுப்பா)

வீடு (அறை ) திரும்பியாகிவிட்டது
நான், என் அறை அனைத்தும் நலமே.....

தமிழ்மன்ற நன்பர்களின் கனிவான மடல்கலுக்கு நன்றிகள்

இனியவன்
20-07-2006, 03:45 PM
[QUOTE=ஓவியா]நேற்று ஒரு துக்க செய்தி
ஒரு மாணவன் காதலிக்கு காதலை புரிய வைக்க
விடுதியின் அறையில் தூக்கில் தொங்கிவிட்டான்.....

வாழப் பயந்த கோழை
நித்தம் நித்தம் பயந்து வாழப் பிடிக்காமல்
மாட்டிக் கொண்டாரோ என்னவோ,
ஆழ்ந்த அனுதாபங்கள்,

aren
21-07-2006, 12:19 AM
நேற்று ஒரு துக்க செய்தி
ஒரு மாணவன் காதலிக்கு காதலை புரிய வைக்க
விடுதியின் அறையில் தூக்கில் தொங்கிவிட்டான்.....

(

வாழத்தெரியாத ஒரு கோழைக்கு
சாவதற்கு தைரியம் இருக்கிறது

அந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மயூ
21-07-2006, 03:36 AM
நேற்று ஒரு துக்க செய்தி
ஒரு மாணவன் காதலிக்கு காதலை புரிய வைக்க
விடுதியின் அறையில் தூக்கில் தொங்கிவிட்டான்.....
தமிழ்மன்ற நன்பர்களின் கனிவான மடல்கலுக்கு நன்றிகள்
பசங்க திருந்த மாட்டாங்க என்பதற்கு அடுத்த உதாரணம்.
பெண்கள் பின்னால் போகாதே!!!
அவர்களை பின்னால் வரவை அன்பனே!!

mgandhi
12-09-2006, 07:36 PM
அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் போலீஸ் ஏட்டாக இருந்தார். இவரது மகள் சங்கீதா (22) விருதுநகரில் உள்ள ஒரு கல்லுரியில் ஹாஸ்டலில் தங்கி எம்.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சிவசுந்தரம் (22).
சங்கீதாவுக்கு சிவசுந்தரம் மாமா உறவாகும். இதனால் சிவசுந்தரம் சங்கீதாவிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். சங்கீதா பல முறை மறுத்தும் அவர் தொந்தரவு செய்துள்ளார். நேற்று காலையில் சங்கீதா வகுப்பறையில் அமர்ந்திருந்தார். இவருக்கு முன்பாகவே அங்கு காத்திருந்த சிவசுந்தரம் ஒரு கையில் தாலியுடனும், ஒரு கையில் கத்தியுடனும் சங்கீதாவை நெருங்கி, தாலி கட்ட முற்பட்டபோது சங்கீதா தடுத்துள்ளார். சிவசுந்தரம் சங்கீதாவின் இடது கையில் கத்தியால் குத்தி காயப்படுத்தினார். சத்தம் கேட்டு உடன்படிக்கும் மாணவிகள் சிவசுந்தரத்தை பிடித்தனர். இதனால் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜன், சிவசுந்தரத்தைக் கைது செய்தார்.ந்தரம்

அறிஞர்
12-09-2006, 10:28 PM
ஆஹா மக்கா இந்த பகுதியில முக்கியமான/பரபரப்பான உலக செய்திகளை போட சொன்ன.... இப்படி போஸ்டிங்க் போடுறீங்க........

இனி இது மாதிரியான சின்ன சில்லறை விசயங்கள் வேண்டாம்.

mgandhi
16-09-2006, 07:03 PM
கியூபாவில் நடக்கும் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கு கொள்வதற்காக ஹவானா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப்பும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தியவுடனான தனது பிரச்சனைகளை சுமூகமான முறையில் தீர்க்க தான் உறுதிபூண்டுள்ளதாகக் கூறும் பாகிஸ்தான் அதே நேரம் காஷ்மீர் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்பட்டால் தான் இருதரப்பு உறவுகள் சீரடையும் என்று கூறுகிறது.

ஒரு பயனுள்ள விவாதத்தினை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாராப் தெரிவித்திருந்தனர்.

அணி சேரா நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அணி சேரா நாடுகள் அமைப்பின் மாநாட்டிற்கு உத்வேகம், புத்துயிர் கொடுக்க வேண்டுமானால், உலகத்தில் தீவிரவாதம், நோய் ஒழிப்பு, சக்தித்துறை பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, போன்ற உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, அணி சேரா நாடுகளின் அமைப்பின் முடிவு மையமாக இருக்க வேண்டும் என்றார். அத்தோடு ஒரு அமைப்பாக, தாங்கள் பயங்கரவாத எண்ணங்களை எப்போதுமே நிராகரித்திருப்பதாகவும் கூறினார்.

mgandhi
19-09-2006, 05:23 PM
தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டது
நாளை முதல் மனு தாக்கள் தெடக்கம்
அக்டேபர் 13\15 வாக்கெடுப்பு நடை பெறும்

mgandhi
12-10-2006, 08:03 PM
http://www.dinamalar.com/news/photos/fpn1.jpg

pradeepkt
13-10-2006, 05:55 AM
எப்படித்தா அரசியலில் சண்டைக் கோழிகளாக இருந்தாலும் இந்த அரசியல் நாகரீகம் வரவேற்கக் கூடியதே...
நேற்று ஜெயா டிவியில் ஜெ. வைகோ பிரச்சாரத்தைப் பார்த்து மகிழ்ந்தே

meera
13-10-2006, 07:12 AM
செய்திகள்
நியூயார்க் நகர கட்டிடம் மீது சிறு விமானம் மோதி 2 பேர் பலி
நியூயார்க், அக்டோபர் 12, 2006 : 9/11ல் நடந்த சம்பவத்தைப் போன்று புதன் மதியம் நியூயார்க் மான்ஹாட்டன் அப்பர் கிழக்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது சிறு விமானம் ஒன்று மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தார்கள்.

meera
13-10-2006, 07:14 AM
கிரண் தேசாய்க்கு புக்கர் விருது
லண்டன், அக்டோபர் 12, 2006 : செவ்வாய்க்கிழமை கிரண்தேசாய் அருந்ததிராயை விட குறைந்த வயதில் தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ் என்ற தனது இரண்டாவது நாவலுக்காக மதிப்பு மிக்க புக்கர் விருதை (பரிசுத் தொகை ரூ.42 லட்சம்) வென்றுள்ளார்.

மன்மதன்
13-10-2006, 09:31 AM
கிரண் தேசாய்க்கு வாழ்த்துகள்..

crisho
13-10-2006, 11:15 AM
தாய் எட்டு அடி பாய்ந்தால் சேய் பதினாரடி பாயும் என்பதை நிரூபனமாக்கியவர்!!

தாய் அநிதா தேசாய் மூன்று முறை இவ் விருதுக்காக தேர்வு செய்யப்ப்ட்டவர்... ஆனால் வெற்றி பெறவில்லை....

சேய் கிரண் தேசாய் விருதை வென்றுவிட்டார்....

வாழ்த்துகள் கிரண் தேசாய்!

meera
14-10-2006, 05:05 AM
வங்கதேசத்தை சேர்ந்த யுனூஸ் மற்றும் கிராமீன் வங்கிக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு

ஓஸ்லோ, அக்டோபர் 14, 2006 : இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுகடன் வல்லுனர் முகம்மது யூனூஸ் மற்றும் அவரது கிராமீன் வங்கிக்கு அளிக்கப்படுகிறது என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு பொருளாதார மற்றும் சமூக வாய்ப்பளித்ததன் மூலம் அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் வறுமைப்பிடியிலிருந்து மீண்டு முன்னேற வாய்ப்பளித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அறிஞர்
18-10-2006, 12:28 PM
எல்லா நோபல் பரிசுகளையும் சேர்த்து ஒரு பதிவு கொடுக்கலாம்.

gragavan
18-10-2006, 12:51 PM
நோபல் பரிசுக்காக பலமுறை பரிந்துரைக்கப்பட்ட தமிழர் ஆர்.கே.நாராயண். ராசிபுரம். கே. நாராயணன் என்பது அவரது முழுப்பெயர். அவருக்கு அந்த விருது கிட்டாதது நோபல் பரிக்குத்தான் இழுக்கு. அதை அப்போதைய பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்தியர்களும் எழுத்துத் துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிஞர்
19-10-2006, 12:53 PM
இப்பொழுது இந்தியர்களும் எழுத்துத் துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர் காலத்தில் தங்களை அந்த துறையில் ஜொலிப்பவராக காண ஆசை... :) :) :) :)

mgandhi
22-10-2006, 07:02 PM
இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்
லண்டன், அக். 20-

இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

வலுவடைந்த அல்கொய்தா

அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா நடத்திவரும் நடவடிக்கைகள் முழுப்பலனைத் தரவில்லை. அல்கொய்தா தலைவர்களும், மற்றவர்களும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்கள் இந்த 4 ஆண்டு காலத்தில் மேலும் பலம் அடைந்து உள்ளனர். மேலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். அமைப்பு ரீதியாக மேலும் வலுவடைந்து உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் ரெயில் நிலையங்களிலும், பஸ்களிலும் குண்டு வைத்து வெடிக்கச்செய்தனர். இதில் பலர் உயிர் இழந்தனர். இதைவிட பெரிய அளவில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

அது ஒரு தொடக்கம் தான்

ஏற்கனவே நடந்த தாக்குதலை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுகிறார்கள். இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த மிக அதிகமான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்து நாட்டுக்கும் காலம்காலமாக இருந்து வரும்தொடர்பு காரணமாக இங்கிலாந்தில் எளிதில் தாக்குதல் நடத்த முடியும் என்பது அவர்கள் முடிவு. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் இரு நாடுகளுக்கும் இடையே சென்று வருகிறார்கள். அவர்களில் தீவிரவாதிகள் எளிதில் ஊடுருவ முடியும் அதோடு அவர்கள் அனைவரையும் கண்காணிப்பது கடினம் என்பதும் அல்கொய்தா தலைமைக்கு வசதியாக அமைந்து விட்டது.

இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினர்களில் சிலரை, தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதற்கு வசதியாக வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவும் முடியும் என்று அல்கொய்தா தலைமை நினைக்கிறது. இந்த காரணங்களால் இங்கிலாந்து நாட்டை தாக்குதலுக்கான இலக்காக அல்கொய்தா தேர்ந்து எடுத்து உள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல்

கடந்தஆண்டு ஜூலை மாதத்துக்குபிறகு பலமுறை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டனர். இதை இங்கிலாந்து போலீஸ் உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடித்தது. இது தொடர்பாக பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு அந்த வேலைக்கு இன்னொரு தீவிரவாதி நியமிக்கப்படுகிறான். இப்படி பஞ்சம்இல்லாமல் தீவிரவாதிகள் கிடைப்பதும் இங்கிலாந்து தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஒரு காரணம் ஆகும்.

mgandhi
24-10-2006, 06:45 PM
விடுதலைப்புலிகளின் தன்னாட்சி கோரிக்கை மீது அரசியல் தீர்வு காண, இலங்கை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தலைவர்கள் சந்திப்பு

இலங்கையில், தமிழர்கள் வாழும் பகுதிக்கு தன்னாட்சி வழங்க கோரி, 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.

இலங்கையின் ஆளும் கட்சியான "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி'', இந்த பிரச்சினை பற்றி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் ஆலோசிக்க முன்வந்தது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் சார்பில், அதிபர் மகிந்தா ராஜபக்சேயும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயும் கொழும்பு நகரில் நேற்று சந்தித்து பேசினார்கள்.

ஒப்பந்தம் கையெழுத்து

இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். 3 பக்க ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தன்னாட்சி கோரிக்கை மீது சமரச பேச்சு வார்த்தை நடத்துதல், நார்வே துதுக்குழுவுடன் இணைந்து செயல்பட்டு, அரசியல்தீர்வு காண்பது ஆகியவற்றை ஏற்கிறோம். சிறந்த நிர்வாகம், சமூக வளர்ச்சி போன்றவற்றில் ஆளும்கட்சியுடன், எதிர்க்கட்சி இணைந்து செயல்பட முடிவு செய்யப்படுகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையில், எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி, இரு கட்சிகளும் செயல்படும். அதே நேரத்தில் தீவிரவாதத்தையும், மனித உரிமை மீறல்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

ராஜபக்சே பேட்டி

இந்த ஒப்பந்தம் பற்றி அதிபர் ராஜபக்சே கூறியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க, இந்த ஒப்பந்தம் மிகவும் துணை செய்யும். ஜெனீவாவில் 28, 29-ந்தேதிகளில் நடக்க இருக்கும் பேச்சு வார்த்தைக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், "தேசிய நலன் கருதி, விடுதலைப்புலிகள் பிரச்சினையில் தீர்வு காண ஒத்துழைக்க சம்மதிக்கிறோம். அதே நேரத்தில் தேச நலனுக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்போம்'' என்றார்.

அறிஞர்
24-10-2006, 08:49 PM
இருவரும் சேர்ந்து.. தமிழருக்கு நலன் செய்தால் மகிழ்ச்சியே... இது ஜெனிவா கூட்டத்திற்காக ஏற்படுத்த நாடகமாக இருந்து விடக்கூடாது.

ஓவியா
25-10-2006, 05:46 PM
நன்றி
மோகன் காந்தி.

இது நடக்குமா.....நடக்காத என்று காத்திருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்திதான்

mukilan
14-12-2006, 02:23 PM
விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் காலமானார். அவர் ஆத்மா சாந்தியடைவதாக. அவர் ஆற்ற நினைத்த பணிகள் நிறைவேறிட இறைவனை வேண்டுகிரேன்.

ஓவியா
14-12-2006, 02:32 PM
அடடா
ரொம்ப துக்கமான செய்திதான்,
மதிப்புமிகு மனிதர், மிகவும் வருத்தமாக உல்லது

ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

அவரின் பணியினை காலம் போற்றும்

அறிஞர்
14-12-2006, 03:05 PM
தமிழருக்கு பெரிய இழப்பு.

ஆண்டன் பாலசிங்கம் ஈழத்தமிழருக்காக ஆற்றிய பங்கு பெரியது. அன்னாரின் விருப்பப்படி... ஈழத்தில் போர் ஓய வேண்டும் என்பதே என் ஆவல்.

mgandhi
19-12-2006, 05:12 PM
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான புதிய சட்டத்தில் புஷ் கையெழுத்திட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம்

அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு பயன்படுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க செனட் சபையும் மக்கள் பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் அளித்தன. இதைத்தொடர்ந்து இது தொடர்பான புதிய சட்டத்தை அமெரிக்க அரசு உருவாக்கியது.

புஷ் கையெழுத்து

"இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு சட்டம்" என்ற இந்த புதிய சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் நேற்று கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் நடந்தது.

புஷ் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.

அணுஉலை

இந்த சட்டத்தின் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இனி இந்தியாவின் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான அணுஉலைகளையும் எரிபொருளையும் அமெரிக்கா சப்ளை செய்யும். உலகில் அணு ஆயுத பரவலை தடுக்கும் முயற்சியில் இந்தியாவும் பங்குகொண்டு செயல்பட இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்.

புதிய சட்டத்தில் கையெழுத்திடும் முன் பேசிய ஜனாதிபதி புஷ், இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் ஒரு முக்கியமான சாதனை என்றும் இதன்மூலம் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மேம்படுவதோடு சர்வதேச சமுதாயமும் பயன் பெறும் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டங்கள் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளின் படி செயல்படும் என்று கூறிய புஷ், இந்தியாவின் சிவில்

அணுசக்தி திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய புதிய சட்டம் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மனோஜ்
23-02-2007, 07:24 PM
தகவலுக்கு நன்றி மோகன் காந்தி

அறிஞர்
23-02-2007, 07:48 PM
தகவலுக்கு நன்றி மோகன் காந்தி
ஆஹா .. அன்பரே 2 மாதத்திற்கு முன்பு கொடுத்த தகவல்..

karikaalan
07-03-2007, 03:38 PM
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது இடது தொடையில் கொப்புளம் வெடித்து அறுவை சிகிச்சை இரண்டு முறை நடந்து நடக்கவே கஷ்டப்பட்டு தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். ஒரு மாதத்துக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். இன்னும் இரத்தக் கசிவு நின்றபாடில்லையாம்.

சீக்கிரம் குணமடைய வேண்டுவோம்.

===கரிகாலன்

அறிஞர்
07-03-2007, 03:43 PM
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது இடது தொடையில் கொப்புளம் வெடித்து அறுவை சிகிச்சை இரண்டு முறை நடந்து நடக்கவே கஷ்டப்பட்டு தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். ஒரு மாதத்துக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். இன்னும் இரத்தக் கசிவு நின்றபாடில்லையாம்.

சீக்கிரம் குணமடைய வேண்டுவோம்.

===கரிகாலன்
புது செய்திதான்...
வயதில் இளையவர்தானே...
ஏன் இந்த பிரச்சனைகள்...
ஒரு மாதம் ஓய்வா...

மன்மதன்
07-03-2007, 03:51 PM
கண்ணுபட்டிருக்கும்..

paarthiban
07-03-2007, 04:02 PM
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது இடது தொடையில் கொப்புளம் வெடித்து அறுவை சிகிச்சை இரண்டு முறை நடந்து நடக்கவே கஷ்டப்பட்டு தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். ஒரு மாதத்துக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். இன்னும் இரத்தக் கசிவு நின்றபாடில்லையாம்.

சீக்கிரம் குணமடைய வேண்டுவோம்.

===கரிகாலன்

AIMS -மருத்துவமனை என்னாச்சு???!!!

karikaalan
07-03-2007, 04:04 PM
AIMS -மருத்துவமனை என்னாச்சு???!!!

நல்லாவே கேக்குறீங்களே!!

tamil81
07-03-2007, 05:35 PM
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது இடது தொடையில் கொப்புளம் வெடித்து அறுவை சிகிச்சை இரண்டு முறை நடந்து நடக்கவே கஷ்டப்பட்டு தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். ஒரு மாதத்துக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். இன்னும் இரத்தக் கசிவு நின்றபாடில்லையாம்.

சீக்கிரம் குணமடைய வேண்டுவோம்.

===கரிகாலன்

இந்திய அரசு மருத்துவ மனைகளின் தலைவர் தனியார் மருத்துவ மனையில் வாழ்க வளமுடன்

இளசு
07-03-2007, 05:36 PM
AIMS -மருத்துவமனை என்னாச்சு???!!!


ஆஹா... வெவரமான ஆளா இருக்கியளே..

எல்லாம் வேணுகோபாலுக்கே வெளிச்சம்!!!:confused:

aren
08-03-2007, 03:03 AM
AIMS -மருத்துவமனை என்னாச்சு???!!!


அந்த பக்கமே தலைவைத்து படுக்கமாட்டாரே. அப்படியிருக்கையில் அங்கேயே மருத்துவமா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.

karikaalan
08-03-2007, 06:44 AM
அந்த பக்கமே தலைவைத்து படுக்கமாட்டாரே. அப்படியிருக்கையில் அங்கேயே மருத்துவமா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.

தொந்தரவு கொடுப்பதென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்!

வேணுகோபால், பெயருக்கு எதிர்மாறாக கட்டை பிரும்மச்சாரி. பாச்சா பலிக்கவில்லை போலும்!!

அறிஞர்
09-03-2007, 12:26 PM
அன்புமணிக்கு ஒரு மாதம் ஓய்வு என்றீர்...

ஆனால், சண்டிகாரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்த விழாவில், குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி நினைவு பரிசை வழங்கியுளாரே...

karikaalan
12-03-2007, 06:02 AM
அன்புமணிக்கு ஒரு மாதம் ஓய்வு என்றீர்...

ஆனால், சண்டிகாரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்த விழாவில், குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி நினைவு பரிசை வழங்கியுளாரே...

அறிஞர்ஜி

இரண்டு நாட்கள் தலைநகரிலிருந்து தெற்கே சென்றதால், தங்களது சந்தேகத்திற்கு உடனே விடையளிக்க இயலவில்லை.

மீண்டும் இன்று விசாரித்ததில் தெரிய வந்தது:
தாங்கள் குறிப்பிட்டது போலுள்ள விழாக்கள், பாராளுமன்றத்தில் நட்சத்திரக்கேள்விகளுக்கு விடையளிப்பது (வாரத்தில் இரண்டு நாட்கள், அதுவும் காலை 11-லிருந்து 12 வரை), இவற்றுக்கு வேறு வழியில்லாமல் சங்கடத்துடனே கலந்து கொள்கிறாராம்.

யாது காரணத்தால் இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்தும் ரத்தக் கசிவு நின்றபாடில்லை என்று ஆய்ந்து அறியமுடியவில்லை.

ஒருவேளை அமெரிக்கா வந்தாலும் வரலாம்.

===கரிகாலன்

அறிஞர்
12-03-2007, 06:14 AM
யாது காரணத்தால் இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்தும் ரத்தக் கசிவு நின்றபாடில்லை என்று ஆய்ந்து அறியமுடியவில்லை.

ஒருவேளை அமெரிக்கா வந்தாலும் வரலாம்.

===கரிகாலன்
உதவி தேவைப்பட்டால் நம்மை அணுக சொல்லுங்க.... ஜீ.....

விரைவில் பூரண சுகம் அடையட்டும்.

சுட்டிபையன்
16-04-2007, 02:27 PM
சென்னை விமான நிலையத்தில் விமானிகள் அடிதடி

ஏப்ரல் 16, 2007

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 விமானிகள் கிண்டலடித்து பேசி கொண்டிருந்த போது அது பிரச்சனையாகி இருவரும் அடித்துக் கொண்டு உருண்டனர்.

பாரமெளண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளான விஜய் பார்மர்(57) மற்றும் அமெரிக்காவின் ஜோசப் கிராண்ட் பாக்ட்(55), இருவரும் நேற்று காலை பணிக்கு வந்தபோது கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜோசப் விஜய்யை பார்த்து, நீ விமான ஓட்ட வைத்திருக்கும் லைசென்ஸ் உண்மையானதா எனக் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே சண்டை முற்றியது.

விஜய்யின் கன்னத்தில் ஜோசப் அறைந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டனர். இதைப் பார்த்த விமான ஊழியர்கள், பயணிகள் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு இருவரும் பணிக்கு திரும்பினர்.

விஜய் மதுரை விமானத்தை இயக்கிச் சென்றார். ஜோசப் ஹைதராபாத் விமானத்தை இயக்கிச் சென்றார்.

மதுரையில் இருந்து சென்னை திரும்பிய விஜய் மருத்துவமனைக்கு சென்று தன்னை ஒருவர் அடித்துவிட்டதாக கூறி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கான மருத்துவ சான்றிதழும் வாங்கி கொண்டார்.

பின்னர் அந்த சான்றிதழுடன் விமான நிலைய போலீஸாரிடம் சென்று தன்னை ஜோசப் அடித்துவிட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து ஜோசப் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் விமானிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பல விமான நிறுவனங்களும் வெளிநாட்டினரை விமானிகளாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/16/airport.html

ஓவியா
17-04-2007, 02:34 AM
காலை வணக்கம்

அமேரிக்காவின் வெர்ஜினிய டெக் பல்கலைகலகத்தில் 33 அப்பாவி மாணவர்கள் துப்பாக்கி எந்திய ஒரு ஆடவனால் கொடுரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் வருத்தமான செய்தி.


முதல் துப்பாக்கி சுடு காலை 7:15 வாக்கிலும், இதில் குறைந்தது இரண்டு மாணாக்கள் மட்டுமே சுடப்பட்டதாகவும்,

இரண்டாவது மோதல் 2 மணி நேரம் கழித்து 9:15 மணியளவில் நடந்துள்ளதாகவும், இதில் குறைந்தது 45 மாணவர்கள் சுடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுல்லது.

(கவனிக்க, மொத்த போலிஸ் கூட்டமும் அங்கே குழுமிய பிந்தான் இரண்டாவது மோதல் அரங்கேரியுள்ளது)


இதுவரை நடந்த பல்கலைகலக துப்பாக்கிச் சுட்டு வரலாரிலே முதலிடம் பிடிக்கும் இந்த செய்தி மிகவும் துக்கமான செய்தியாக அன்னாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஆகக்கடைசி தகவலின்படி,
அந்த ஆடவன் ஆசியாவை சேர்ந்தவனாகவும், கடந்த ஆகஸ்டு மாதம் 7 திகதிதான் அமேரிக்காவினுல் நுலைந்ததாகவும் தெரிவிக்காப்பட்டுள்ளது.

மிகவும் இளவதுடையவனாகவும், சம்பவத்தின் பொழுது அவனும் தன்னைதானே சுட்டுகொண்டு, தற்கொலை செய்துகொண்டான் என்றும் கூறப்படுள்ளது.


நன்றி, வணக்கம்

மதி
17-04-2007, 03:35 AM
மிகவும் வருந்தத்தக்க செய்தி..
சம்பவத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

pradeepkt
17-04-2007, 04:46 AM
அமெரிக்க வரலாற்றிலேயே இது ஒரு கருப்புப் புள்ளி என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு எப்போதோ ஒரு சாமியார் பேச்சைக் கேட்டுக் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டனர். இப்போதோ Gun Control அது இது என்று என்ன என்ன எழவோ இருந்தாலும் இப்படி ஒரு படுகொலை. இனிக் காரணங்கள் கண்டு பிடிக்க போலீஸ் புலிகள் அலைவார்கள்.

இது அந்தச் சமுதாயத்தின் சீரழிவு என்றுதான் கொள்ள வேண்டும்.

சுட்டிபையன்
17-04-2007, 04:53 AM
அமெரிக்காவில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நசடைபெறுவது சர்வசாதாரனமாகப் போய்விட்டது

பரஞ்சோதி
17-04-2007, 07:39 AM
மிகவும் கொடுமையான செய்தி.

கேட்டவுடன் மனம் கலங்கியது, பிள்ளைகளை இழந்த பெற்றோரை நினைக்கயில் கண்ணீர் வருகிறது.

மனோஜ்
17-04-2007, 07:53 AM
மிகவும் வருந்ததக்கசெய்தி

banupriya
17-04-2007, 08:11 AM
என்ன ஒரு வெறிச்செயல் பாருங்கள் செய்தியைக்கேட்ட உடன் பதறிப்போய்விட்டோம் பல்கலைக்கழக வளாகத்தில் இப்படி நடந்திருக்கிறது .இறந்த 33 மாணவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அவர் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார்.
மாணவர்களிடம் துப்பாக்கி கலாச்சாரம் மலிந்துகிடக்கிறது அங்கே.

mgandhi
17-04-2007, 08:37 AM
மிகவும் வருத்தமான செய்தி.

ஓவியன்
17-04-2007, 01:07 PM
என்ன ஒரு வெறிச்செயல் பாருங்கள் செய்தியைக்கேட்ட உடன் பதறிப்போய்விட்டோம் பல்கலைக்கழக வளாகத்தில் இப்படி நடந்திருக்கிறது .இறந்த 33 மாணவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அவர் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். மாணவர்களிடம் துப்பாக்கி கலாச்சாரம் மலிந்துகிடக்கிறது அங்கே.

அவருடைய பெயர் லோகநாதன் என்று அறியப் பட்டுள்ளது.

சுட்டிபையன்
18-04-2007, 01:40 PM
காலநிலை மாற்றம் தொடர்பாக வரலாற்றில் முதற் தடவையாக விவாதிக்கிறது ஐ.நா. பாதுகாப்புச் சபைஉலகப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை வரலாற்றிலேயே முதன் முதலாக நேற்று செவ்வாய்க்கிழமை கூடியுள்ளது.
பிரிட்டனால் ஆரம்பித்து வைக்கப்படும் இவ்விவாதத்தின் கருப்பொருள் சக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை என்பன பற்றியதாகும்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றுவரும் ஓர் விடயம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது தொடர்பாக நாம் ஆராயவுள்ளோமென தனது பெயரை குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்காலநிலை மாற்றத்திற்கெதிராக செயற்படாமல் இருப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் அதிகளவு விலையைச் செலுத்த வேண்டி வருமென பிரிட்டன் கருதுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாம் கூடுகிறோம். இங்கு என்ன தீர்மானம் எடுக்கப்பட்டாலும் ஐ.நா. பாதுகாப்புச் சபை இதனை ஆராய்வதற்காக முன்வந்தமை தொடர்பில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம் எனத் தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா. சீனா போன்ற நாடுகள் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்காத போதும் இவ்விவாதத்திற்கு தலைமை தாங்கும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மார்க்கிரட் பெக்கற் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இவ்விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்குமே முக்கியத்துவம் வழங்குவதனால், இதற்கு அப்பாற்பட்ட விடயங்களில் தாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லையென ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த திங்கட்கிழமை சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அதிகாரியொருவரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், காலநிலை மாற்றம் நிகழ்காலத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதுடன், இது அமெரிக்கர்களையும் அமெரிக்க இராணுவ செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் . அதேவேளை, உலகில் அதிக பதற்றமான நிலைமையையும் உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் காலநிலை மாற்றம் தீவரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பன வளர்ச்சியடைவதற்கும் அடித்தளமிடுவதுடன், இராணுவச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் ஓர் ஸ்திரமற்ற நிலையைத் தோற்றுவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் வளர்ச்சியடைந்து வரும் முக்கிய விடயங்களில் ஒன்றாக இருப்பதனால் நாம் அது தொடர்பாக வித்தியாசமான கோணங்களிலும் வித்தியாசமான முறைகளிலும் சிந்திக்க வேண்டுமென மேற்குலக பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுட்டிபையன்
18-04-2007, 01:42 PM
அவருடைய பெயர் லோகநாதன் என்று அறியப் பட்டுள்ளது.

வேர்ஜீனியாவில் பலியானவர்களில் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பேராசிரியரும் ஒருவர்

அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழ்நாடு கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி. எஸ். லோகநாதன்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் அமெரிக்காவில் சுமார் 30 வருடமாக வாழ்ந்துவருவதாக அவருடைய சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தமது கூட்டுக் குடும்பத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


மனைவி மற்றும் குழந்தையுடன்
தமது கல்வியறிவை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்க்குடன் அங்கு சென்ற தமது சகோதரர் இப்படியாக ஒரு கல்வி நிறுவனத்தில் பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டமை தமக்கு மிகுந்த கவலையை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்களின் வாயிலாக மாத்திரம் தாம் தீவிரவாதத்தைப் பார்த்து வந்ததாகக் கூறிய அவர், தற்போது அதற்கு தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தப் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பான அவர்கள் சிலரின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

http://img02.picoodle.com/img/img02/8/4/18/f_20070417143m_27aeb35.jpg

சுட்டிபையன்
18-04-2007, 01:45 PM
துவக்குச் சூடு முதற் தடவையாக இடம்பெற்றபோது பல்கலைக்கழகத்தை மூடாதது ஏன்?அமெரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிகளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகக் கருதப்படுவதுடன், முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றவுடன் பல்கலைக்கழகத்தை மூடாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.

எட்டு வருடங்களுக்கு முன்பு கொலம்பைன் உயர்தர பாடசாலையில் 15 பேர் பலியான சம்பவத்தின் பின்னர் தற்போது வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இரு சம்பவங்களில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

முதலில் அங்கிருந்த விடுதியினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்று இரு மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்த பிறிதொரு கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்தவுடன் சில மாணவர்கள் ஜன்னலால் குதித்து தப்பியுள்ளதுடன், சிலர் தங்கள் பக்கம் துப்பாக்கி திரும்புமுன் தப்புவதற்காக இறந்தவர்கள் போல் பாவனை செய்துள்ளனர்.

துப்பாக்கிதாரியின் நோக்கம் என்ன? அவர் தனித்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டாரா? போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாத வினாக்களாகவே உள்ளன. இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை.

முதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பல்கலைக்கழகம் மூடப்படாதது ஏன் என உறவினர்களும் நண்பர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

வேர்ஜினியா மாநிலம் முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளதுடன், நடைபெறவிருக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இச்சம்பவம் தொடர்பான மேலதிக விடயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியா
19-04-2007, 03:39 AM
சுட்டிபயைன் என்ற சஞ்சய் அவர்களே,
முடிந்தளவு பதிவுகளை வேறு தளதிலிருந்து அப்படியே வேட்டி ஒட்டுவதை தவிருங்கள்.

அப்படியே முக்கிய தகவல் என்று என்னி இங்கே இடவேண்டுமேன்றும் கருதினால், தயவு செய்து எங்கிருந்து எடுத்தீர்கள் என்று மேற்க்கோள் காட்டுங்கள்.

எழுதியவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மன்றத்தின் விதிமுறை.

நன்றி.

ஓவியா
19-04-2007, 03:47 AM
அமேரிக்காவின் வெர்ஜினிய டெக் பல்கலைகலகத்தில் 32 அப்பாவி மாணவர்கள் துப்பாக்கி எந்திய ஃஜொ ஸ்ஸுவெங் ஹுவை என்ற ஆடவனால் கொடுரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தின் தொடர்பாக கிடைத்த தகவலின் படி இங்கு அந்த ஆடவனின் புகை படத்தை கணோட்டமிடுங்கள்.

சுட்டி
http://www.msnbc.msn.com/id/18183171/displaymode/1107/s/2/framenumber/1/

அன்புரசிகன்
19-04-2007, 04:01 AM
அவனை ஆடவனெனிலும் காட்டுமிராண்டி எனலாம்.

சுட்டிபையன்
19-04-2007, 04:05 AM
சுட்டிபயைன் என்ற சஞ்சய் அவர்களே,
முடிந்தளவு பதிவுகளை வேறு தளதிலிருந்து அப்படியே வேட்டி ஒட்டுவதை தவிருங்கள்.

அப்படியே முக்கிய தகவல் என்று என்னி இங்கே இடவேண்டுமேன்றும் கருதினால், தயவு செய்து எங்கிருந்து எடுத்தீர்கள் என்று மேற்க்கோள் காட்டுங்கள்.

எழுதியவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மன்றத்தின் விதிமுறை.

நன்றி.

அப்படியே ஆகட்டும் ஓவியாக்கா..............

ஓவியா
19-04-2007, 04:08 AM
அவனை ஆடவனெனிலும் காட்டுமிராண்டி எனலாம்.

அன்புக்கு அன்பு காலை வணக்கம்.

அன்பு ஒரு விசயம். இந்த செய்தியில் அவன் தன் பக்கமுள்ள ஞாயயத்தை எடுத்து உரைத்துள்ளான். கொலைக்கு என்ன காரணம் என்று இன்னும் சரிவர முடிவாகவில்லை. காத்திருப்போம்.

அன்புரசிகன்
19-04-2007, 04:20 AM
அன்புக்கு அன்பு காலை வணக்கம்.

அன்பு ஒரு விசயம். இந்த செய்தியில் அவன் தன் பக்கமுள்ள ஞாயயத்தை எடுத்து உரைத்துள்ளான். கொலைக்கு என்ன காரணம் என்று இன்னும் சரிவர முடிவாகவில்லை. காத்திருப்போம்.

காலை வணக்கம்.

உங்களின் ஆராய்ச்சிக்கட்டுரையின் தீவிரம் தெரிகிறது...வாழ்த்துக்கள்.

சுட்டிபையன்
25-04-2007, 03:43 AM
அரை இறுதி கிரிக்கெட் போட்டிக்காக விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம்


கொழும்பு: நேற்று (செவ்வாய்) உலக கோப்பை கிரிக்கெட் அறையிறுதியில் நியூஸிலாந்துடன் இலங்கை அணி மோதுவதால் நேற்று இரவு மட்டும் போர் நிறுத்ததில் ஈடுபடுவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தனர். நாங்களும் போட்டியை பார்க்க வேண்டியிறுக்கிறது என்று விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்தார். ஏ எப் பி செய்தி நிறுவனத்திற்கு ரெலிபோனில் பேசிய அவர் இத்தகவலை தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் காலை தான் யாழ்ப்பானத்தின் வட பகுதியில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்நிலையில் தான் இரவில் இந்த போர்நிறுத்த அறிவிப்பு வெளியானது. இலங்கை கிரிக்கெட் அணியில் இரு தமிழர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமும் இந்த போட்டிக்காக கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பை இலங்கை முழுவதும் தெரியும்படி செய்துள்ளது. இதற்காக இலங்கை அரசு நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது.

நன்றி தினமலர்

karikaalan
12-05-2007, 06:22 PM
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்தும், MP பதவியிலிருந்தும் விலகுவதற்கு ராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் சேர்ப்பித்துவிட்டாராம். கடிதம் கொடுத்தகையோடு ஊட்டிக்குச் சென்றுவிட்டார்.

கலாநிதி மாறன் ஸ்விட்சர்லாந்து வழியாக வெள்ளி இரவே அமெரிக்கா சென்றுவிட்டார்.

அடுத்த தொலைதொடர்பு அமைச்சர் யார்?

===கரிகாலன்

மனோஜ்
12-05-2007, 07:05 PM
தயாநிதி மாறன் மந்திரி பதவியிலிருந்தும், MP பதவியிலிருந்தும் விலகுவதற்கு ராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் சேர்ப்பித்துவிட்டாராம். கடிதம் கொடுத்தகையோடு ஊட்டிக்குச் சென்றுவிட்டார்.

கலாநிதி மாறன் ஸ்விட்சர்லாந்து வழியாக வெள்ளி இரவே அமெரிக்கா சென்றுவிட்டார்.

அடுத்த தொலைதொடர்பு அமைச்சர் யார்?

===கரிகாலன்

நல்லவங்களுக்கு காலம் இல்லை என்பது இதுதானா

mgandhi
17-06-2007, 05:34 PM
சர்வதேச விண்வெளி மையத்தை விட்டு நாளை மறுநாள் புறப்படுகிறது அட்லான்டிஸ் 21ம் தேதி தரையிறங்குகிறார் சுனிதா

mgandhi
19-06-2007, 06:46 PM
சென்னை துறமுகத்தில் லாரி டிரவர்கள்&கிளீனர்கள் போராட்டம் 3&வது நாளாக தொடர்கிறது பல கோடி பொருட்கள் அழுகும் அபாயம்

mgandhi
20-06-2007, 05:52 PM
ஒருமனதாக தேர்ந்தெடுத்தால் மீண்டும் போட்டியிட
தயார்: 3வது அணியிடம் கலாம் தகவல்

mgandhi
24-06-2007, 05:40 PM
கேரளாவில் கனமழைக்கு ஒரே நாளில் 24 பேர் பலி ? ரயில் போக்குவரத்து ரத்து

mgandhi
25-06-2007, 06:15 PM
மதுரை மேற்குத் தொகுதியில் நாளை (26-6-2007) இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

mgandhi
26-06-2007, 04:25 AM
கம்போடியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது : 22 சுற்றுலா பயணிகள் கதி என்ன?

உத்தரபிரதேசம் சிறையில் கலவரம் : 3 கைதி உள்பட 5 பேர் பலி

நாகாலாந்தில் இன்று லேசான நிலநடுக்கம்

namsec
26-06-2007, 12:15 PM
தேனி அருகே பயிற்சி பெற வந்த தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் முருகன்மலை பகுதியில் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்களும் மூடை மூடையாக கைப்பற்றப்பட்டது. 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு மக்கள் போர்படை என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். 4 பேரில் ஒருவர் வக்கீல் மற்றொருவர் சட்டக்கல்லுரி மாணவர் என தெரிய வந்துள்ளது. 4 பேர் விவரம் வருமாறு: கும்பக்கரை செம்மங்குழி அண்ணாநகரை சேர்ந்த வேல்முருகன், (மதுரை சட்டக்கல்லுரி மாணவர்) இவரது சகோதரர் முருகன் ( வக்கீல் ) , சேலம் சின்னமலுரை சேர்ந்த பழனிவேல் , சமயநல்லுரை சேர்ந்த முத்துச்செல்வன் . 4 பேரும் புதிய அப்பினி கீழ் தீவிரவாத பயிற்சி பெற தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி : தினமலர்

அறிஞர்
26-06-2007, 01:36 PM
தேனியில் தீவிரவாதிகளா.. மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம்

namsec
26-06-2007, 01:46 PM
ஒரு நாள் கிரிகெட் போட்டியில் இந்தியா 240/8

namsec
26-06-2007, 01:49 PM
சென்னை மின்சார ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக்; சென்னை சென்ட்ரலில் போக்குவரத்து பாதிப்பு

aren
26-06-2007, 02:28 PM
சென்னை மின்சார ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக்; சென்னை சென்ட்ரலில் போக்குவரத்து பாதிப்பு

இனிமேல் தானியங்கி ரயில்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
26-06-2007, 02:29 PM
இனிமேல் தானியங்கி ரயில்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.
ப*ல* நாடுக*ளில் உள்ள*தே.. கொஞ்ச*ம் செல்வாகும்..

aren
26-06-2007, 02:32 PM
ப*ல* நாடுக*ளில் உள்ள*தே.. கொஞ்ச*ம் செல்வாகும்..

இங்கே சிங்கப்பூரில் வெகு ஜோராக ஓடிக்கொண்டிருக்கிறதே. சரியான சமயத்தில் வந்துவிடுகிறது.

mgandhi
26-06-2007, 07:09 PM
நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

aren
27-06-2007, 12:18 AM
நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். கண் துடைப்பிற்கு எதற்கு அரசாங்கம் அநியாயமாக செலவு செய்யவேண்டும். அந்த பணத்தை வேறு ஏதாவது நல்ல செலவிற்கு உபயோகித்துக்கொள்ளலாம்.
ஒன்றும் நடக்கப்போவதில்லை.

namsec
28-06-2007, 03:36 PM
ஜனாதிபதிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

namsec
28-06-2007, 03:40 PM
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை : 100 கோடி அபராதம்

பல கோடி ரூபாய் போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்கிக்கு, ஒரு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பல்வேறு விதிகளின் கீழ் இந்த தண்டணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் எந்தவொரு கோர்ட்டும் இந்தஅளவிற்கு தண்டனை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

namsec
28-06-2007, 03:41 PM
பப்புவா நியூ கினியா தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

namsec
28-06-2007, 03:42 PM
பஞ்சாபில் சீக்கிய மத குரு கேபிந்த் சிங்கை அவமதித்த விவகாரத்தில் கடந்த மாதம் பெரும் கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து கலவரத்துக்கு காரணமான தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் ரஹீம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதனை சீக்கியர்களின் உயர் மட்டக் குழு ஏற்க மறுத்து விட்டது. இந்நிலையில் குர்மீத் சிங்கை கைது செய்ய பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகிறார்கள். குர்மீத் சிங் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் பஞ்சாபில் மீண்டும் பதட்டமான நிலை உருவாகியுள்ளது.

ஓவியா
28-06-2007, 03:53 PM
பப்புவா நியூ கினியா தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

6.7 ரிக்டர் அளவு சற்று பயங்கரமான நிலைதான்.

namsec
28-06-2007, 03:56 PM
அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன் நாளை சந்திப்போம்

அமரன்
28-06-2007, 03:57 PM
அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன் நாளை சந்திப்போம்

சரிங்க சித்தரே நாளையும் சூடான செய்திகளுடன் வாங்க.

mgandhi
28-06-2007, 05:59 PM
காந்திஜியின் கடைசிக் கடித ஏலத்தில் பங்கேற்க அரசு முடிவு


காந்திஜியின் கடைசிக் கடிதத்தை கைப்பற்றும் முயற்சியாக லண்டனில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 3-ம் தேதி லண்டனில் நடைபெறும் இந்த ஏலத்தில் இந்திய அரசு சார்பில் கலந்து கொள்ளுமாறு நேரு நினைவு அருங்காட்சிக நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

aren
28-06-2007, 09:44 PM
காந்திஜியின் கடைசிக் கடித ஏலத்தில் பங்கேற்க அரசு முடிவு


காந்திஜியின் கடைசிக் கடிதத்தை கைப்பற்றும் முயற்சியாக லண்டனில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 3-ம் தேதி லண்டனில் நடைபெறும் இந்த ஏலத்தில் இந்திய அரசு சார்பில் கலந்து கொள்ளுமாறு நேரு நினைவு அருங்காட்சிக நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த கடித்தத்தில் விலைதான் உயரும். இந்த விஷயத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் இந்திய அரசு குறைந்த விலையில் இதை வாங்கியிருக்காலாமோ?

அறிஞர்
28-06-2007, 10:21 PM
இதனால் இந்த கடித்தத்தில் விலைதான் உயரும். இந்த விஷயத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் இந்திய அரசு குறைந்த விலையில் இதை வாங்கியிருக்காலாமோ?

நீங்க கூறுவது முற்றிலும் உண்மை....

சூரியன்
29-06-2007, 05:29 AM
சரியான கருத்து

namsec
29-06-2007, 11:41 AM
இந்தியா தெ.ஆப்ரிக்கா 2வது ஒரு நாள் போட்டி : தெ.ஆப்ரிக்கா 97/3

namsec
29-06-2007, 11:43 AM
கார் குண்டு வெடித்து சிவகங்கை நகராட்சி தலைவர் பலி : 10 பேர் படுகாயம்

namsec
29-06-2007, 11:45 AM
பாக்தாத்தில் குண்டு வெடித்து 5 அமெரிக்க வீரர்கள் பலி

namsec
29-06-2007, 11:47 AM
அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு வருவதால் அணு கதிர் வீச்சு ஆபத்து உள்ளது. எனவே கப்பல் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேல்முருகன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஷா தலையிலான பெஞ்ச் அமெரிக்க கப்பல் வருகைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

namsec
29-06-2007, 11:48 AM
மணப்பாறையில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர்கள் முருகேசன் காந்திமதி தம்பதியரின் 15 வயது மகன் திலீபன் ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த விவகாரம் தொடர்பாக டாக்டர் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள சிறுவன் திலீபனை போலீசார் தேடி வருகிறார்கள். இதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சிறுவன் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுவன் திலீபன் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த வாரியத்தில்தான் ஜாமீன் கேட்க வேண்டும். அவர்களுக்குத்தான் ஜாமீன் கொடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவை பைசல் செய்தார்.

namsec
29-06-2007, 11:48 AM
கேரளாவில் தீயணைப்பு படைக்கு ரூ.34 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கப்பட உள்ளது என்று சட்டசபையில் இன்று அறிவிக்கப்பட்டது. தீ விபத்து நடக்கும் இடத்துக்கு உடனுக்குடன் செல்லவும், தீயை அணைக்கவும், மீட்புபணிகளுக்காகவும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

namsec
29-06-2007, 11:54 AM
கடந்த 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு இந்தோனேசியாவில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சேத விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

அமரன்
29-06-2007, 11:58 AM
சுடச்சுடச் செய்திகள் கொடுக்கும் சித்தருக்கு நன்றி. இந்தோனேசியாவில் இப்போதெல்லாம் நிலநடுக்கம் வழக்காமகிவிட்டது.

namsec
29-06-2007, 04:31 PM
3,500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து ராணியின் மம்மி கண்டுபிடிப்பு

மீனாகுமார்
29-06-2007, 04:46 PM
சிவகங்கைல நகராட்சி தலைவர் சென்ற காரில் குண்டு வெடித்து உடல் சிதறி பலியானார். 10 பேர் வேற காயம். சிவகங்கையே பரபரப்பா இருக்குது.

லண்டன்ல வெடிக்காத குண்டுக்கு 7 லட்சம் செய்தி வெளிவந்தாச்சு.

namsec
30-06-2007, 05:53 AM
மும்பையில் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்புட்டுள்ளது.

மும்பையில் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்புட்டுள்ளது.மழை காரணமாக சாலை,ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களும் இயங்வில்லை. மழை காரணமாக றகரத்தின் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. கனமழை பெய்த மதுங்கா, லோயர் பரேல், பந்த்ரா ஆகிய பகுதிகளில் 108 மிமி மழை பெய்துள்ளது.அடுத்த 25 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் எந்தவித வேலையும் செய்யமுடியாமல் வீடுகளில் தங்கியுள்ளனர்.மழை காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

namsec
30-06-2007, 05:54 AM
விழுப்புரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சத்துணவை சோதனை செய்து பார்த்த போது அதில் பல்லி விழுந்து கிடந்தது. இதனால், சத்துணவு சாப்பிட்ட 64 மாணவர்களும் அன்னியூர் ஆரம்ப சுகாதார நிலைத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

namsec
30-06-2007, 05:55 AM
விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றன.
சென்னைதிருச்சி அகல ரயில் பாதையில் விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு விரைந்து சென்று பழுதை சரி செய்தனர். திடீரென ஏற்பட்ட இந்த பாதிப்பால் திருச்சியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றன. இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த பாதிப்பில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அரை மணி நேர தாமதமாக வந்து சென்றன. இதனால் அதிகாலை வரை விழுப்புரம் மார்க்கமாக சென்ற அனைத்து ரயில்களும் தாமதமாக சென்றன.

namsec
30-06-2007, 08:34 AM
கொல்கட்டாவில் ஹிஸ்புல் தீவிரவாதிகள் கைது

கொல்கட்டாவில் 2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கம் ஹவுரா மாவட்டதில்

namsec
30-06-2007, 08:36 AM
30 − 6 − 2007

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது

கன்னியாகுமரியில் இன்று கடல் திடிரென கடல் உள்வாங்கியது.
கன்னியாகுமரியில் அடிக்கடி கடல் சீற்றம் எற்பட்டு வருகிறது. இன்று கடல் திடிரென கடல் உள்வாங்கியது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதேபோல் ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் அங்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

namsec
30-06-2007, 12:20 PM
30 − 6 − 2007 இந்திய நேரம் 17.48

பா.ஜ., மூத்த தலைவர் கார் விபத்தில் மரணம்

பா.ஜ., மூத்த தலைவரும், டில்லி மாநில முன்னாள் முதல்வருமான சாகிப் சிங் சர்மா சாலை விபத்தில் இன்று மரணமடைந்தார். சர்மா, டிரைவர் உட்பட மூவர் இன்று மதியம் 02.30 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியுடன் ஏற்பட்ட விபத்தில் சர்மா உட்பட காரில் பயணம் செய்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மினி லாரியின் டிரைவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

namsec
30-06-2007, 12:47 PM
30 − 6 − 2007 நேரம் 18.20


வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் ரிசர்வ் பாங்க் திட்டம்

புதுடெல்லி, ஜூன் 30-
பேப்பர் ரூபாய் நோட்டுக்கு பதில் பிளாஸ்டிக் ரூபாய்களை வெளியிட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் திட்டமிட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ஒரு சில ஆண்டுகளில் சிதைந்து விடுகின்றன. மேலும், கள்ளநோட்டு புழக்கமும் அதிகரித்துள்ளது. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க பாலிமர் பிளாஸ்டிக் பேப்பரில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது பற்றி ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றன. இது எளிதில் கிழியாது, தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ருமேனியா, பிரேசில் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள் உபயோகத்தில் உள்ளன. இதேபோல் இந்தியாவிலும் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் வெளிவரவிருக்கிறது. சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்படும்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாராவதால் அதே போல் கள்ளநோட்டுகளை தயாரிக்க முடியாது. மெக்சிகோவில் புழக்கத்தில் உள்ள பாலிமர் டெக்னாலஜி ரூபாய் நோட்டில், ஸ்டாம்ப் அளவிற்கு ஜன்னல் போன்ற டிசைன் உள்ளது. இதை போலியாக அச்சிடுவது மிகவும் சிரமமாம்.

நன்றி தமிழ்முரசு

சூரியன்
30-06-2007, 01:03 PM
நல்ல தகவல் நாம்செக்

namsec
30-06-2007, 04:18 PM
மும்பை கன மழை : 5 பேர் பலி

மும்பையில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. மும்பையில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையை தொடர்ந்து ரயில் மற்றும் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழைக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

namsec
30-06-2007, 04:19 PM
நொய்யல் ஆற்றில் வெள்ள அபாயம்

ஸ்ரீவானி அணைப்பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதனால், ஆற்றின் கரையோர பகுதிகளான பெரூர் , புழுவாம்பட்டி, மாதாம்பட்டி, ஆலந்துறை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நிர்வாகம், வருவாய்துறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

namsec
01-07-2007, 06:52 AM
ஜப்பானில் இன்று லேசான நிலநடுக்கம்

ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் எதுவும் இல்லை.

namsec
01-07-2007, 07:18 AM
1 − 7 − 2007கோவை மாவட்ட மலைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கலா? போலீஸ் அதிரடி வேட்டை

தேனி மாட்டம் பெரியகுளம் மலை பகுதியில் ஆயுதபயிற்சியில் ஈடுபட்டு வந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தமிழக மக்கள் இயக்கம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாவட்ட வன பகுதிகளான அணைகட்டி, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

namsec
01-07-2007, 07:21 AM
பிரதீபா பாட்டீல் இன்று சென்னை வருகை

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் இன்று சென்னை வருகிறார்.
டில்லியில் இருந்து இந்தியன் விமானம் மூலம் பகல் 12.40 மணிக்கு சென்னை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கு செல்கிறார். பின்னர், மகளிர் பேரணியை பார்வையிடுகிறார். இரவு 8 மணியளவில் முதல்வர் கருணாநிதி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். இரவு 9.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரூ செல்கிறார்.

mgandhi
01-07-2007, 06:59 PM
இலங்கை அரசுக்கும்வி.புலிகளுக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சவார்த்தையை நார்வே நடத்த வேண்டும்: ராஜபக்சே கோரிக்கை

namsec
01-07-2007, 07:17 PM
இந்தோனேஷியா கடலுக்கடியில் நிலநடுக்கம்

இந்தோனேஷியா கடலுக்கடியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தின் சேதங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

நன்றி தினமலர்

namsec
01-07-2007, 08:17 PM
2 − 7 − 2007 நேரம் 1.50 (இரவு)

இந்தியா தென்ஆப்ரிக்கா 3வது ஒருநாள் கிரிக்கெட் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மழை காரணமாக தாமதமாக இந்திய நேரப்படி ( 8.30 ) மணிக்கு துவங்கியது. மழை காரணமாக போட்டிக்கு 31 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 31வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து நிதானமாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

mgandhi
02-07-2007, 05:59 PM
சிவகங்கை நகராட்சி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவரின் மனைவி தற்கொலை

mgandhi
03-07-2007, 06:55 PM
இந்தியபாகிஸ்தான் ஒருநாள் போட்டி மழையால் ரத்து

namsec
04-07-2007, 08:06 AM
காரைக்குடியில் எலி காய்ச்சலுக்கு 2 பேர் பலி : 75 பேர் மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள மக்களுக்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த எலி காய்ச்சலுக்கு காரைக்குடி பகுதியை சேர்ந்த கிராமவாசிகள் குழந்தைவேலு, ராம பாண்டி ஆகியோர் பலியானார்கள். மேலும் 75 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

aren
04-07-2007, 09:19 AM
இந்தோனேஷியா கடலுக்கடியில் நிலநடுக்கம்

இந்தோனேஷியா கடலுக்கடியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தின் சேதங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

நன்றி தினமலர்


இந்தோனேஷியாவிற்கு ஏன் இப்ப*டி ந*ட*க்கிற*து என்று தெரிய*வில்லை. பாவ*ம் இந்தோனேஷிய*ர்க*ள்.

namsec
04-07-2007, 12:59 PM
குற்றால அருவிகளில் அலைமோதும் கூட்டம்

குற்றால சீசன் அருமையாக இருந்ததால் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குற்றாலத்தில் காலையில் லேசான சாரல் தலைகாட்டியது. பின்னர் இளம் வெயில் அடித்தது. பிற்பகல் மழை மேகக் கூட்டங்கள் பொதிகை மலையை வலம் வந்து லேசான சாரல் மழையை பொழிந்தது. இதனால், குளு குளு நிலைமை ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டுக் கொண்டு தண்ணீர் விழுந்தது.
ஐந்தருவியில் நான்கு கிளைகளில் மிதமாகவும், சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் பரவலாகவும், தேனருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றில் அதிகமாகவும் தண்ணீர் விழுந்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நன்றி தினமலர்

namsec
04-07-2007, 01:07 PM
குடிநீர் திட்டங்களுக்காக ரூ.6500 கோடி ஒதுக்கீடு : பிரதமர் அறிவிப்பு

டில்லியில் இன்று குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. இதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், 2006 2007ம் ஆண்டில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.6500 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

namsec
04-07-2007, 01:09 PM
சென்னை: தங்கம், மெமரி கார்டு கடத்திய மூவர் கைது

இலங்கையில் இருந்து வந்த இரண்டு பயணிகளிடம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் ரூ.18 லட்சம் மதிப்புள்ள, மெமரி கார்'களை சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் ராஜன் கூறியதாவது: விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கடந்த 3ம் தேதி வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளை, கண்காணித்தனர். அப்போது, இலங்கையில் இருந்து வந்த சசிகரன், மோகன்ராஜ் ஆகியோர் தங்கள் பேக்கேஜ்களுடன், கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றனர்.
சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவர்கள் இருவரையும் சோதனையிட்டபோது, அவர்கள் இருவரும் ஒன்றரை கிலோ எடையுள்ள, ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதே தினம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது என்ற பயணியிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர், போலி ஆவணங்கள் மூலம் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன், டிஜிட்டல் கேமரா ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இரண்டாயிரத்து 12, "மெமரி கார்டு'களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு கஸ்டம்ஸ் கமிஷனர் ராஜன் கூறினார்.

namsec
04-07-2007, 01:11 PM
விம்பிள்டன் டென்னிஸ் : சானியா ஜோடி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றுவருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி, லிசா ரேமண்ட் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி 60, 67, 61 செட் கணக்கில் லிசா ரேமண்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.


ந*ன்றி தின*ம*ல*ர்

mgandhi
04-07-2007, 06:29 PM
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலிலிருந்து பிரதீபா பாட்டீல் விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

namsec
05-07-2007, 06:45 AM
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி அலு<வலகத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றபோது குண்டு வெடித்து பலியானார். ரிமோட் மூலம் குண்டு வெடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலையில் கவுன்சிலர் உள்பட 2 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை சிவகங்கை பஸ் நிலையம் அருகே 5 பயங்கர வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளனர். நகராட்சி தலைவர் குண்டுவீசி கொல்லப்பட்டுள்ள நிலையில் இப்போது பஸ் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பென்ஸ்
05-07-2007, 06:54 AM
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலிலிருந்து பிரதீபா பாட்டீல் விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதையே இவரும் செய்தால் நலம்.

இதயம்
05-07-2007, 07:00 AM
அதையே இவரும் செய்தால் நலம்.

ஹா..ஹா..ஹா..!!

namsec
05-07-2007, 11:51 AM
தமிழக சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் இயக்குவது தொடர்பான கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் நடந்தது. சுற்றுலாத்துறை அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களான ஊட்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு மதுரை மற்றும் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் சேவை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த தகவலை சுற்றுலாத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


நன்றி தினமலர்

வரவேற்க்க வேண்டியதிட்டம்

namsec
05-07-2007, 11:52 AM
ஆகஸ்ட் 10ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஷெகாவத் ஜனாதிபதி பதவிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ந*ன்றி தின*ம*ல*ர்

namsec
05-07-2007, 11:54 AM
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி அலு<வலகத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றபோது குண்டு வெடித்து பலியானார். ரிமோட் மூலம் குண்டு வெடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலையில் கவுன்சிலர் உள்பட 2 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை சிவகங்கை பஸ் நிலையம் அருகே 5 பயங்கர வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளனர். நகராட்சி தலைவர் குண்டுவீசி கொல்லப்பட்டுள்ள நிலையில் இப்போது பஸ் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


நன்றி தினமலர்

namsec
05-07-2007, 11:55 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நன்றி தினமலர்

mgandhi
05-07-2007, 06:49 PM
தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்து
விட்டது-ராமதாஸ் திடீர் அறிவிப்பு

aren
05-07-2007, 06:56 PM
தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்து
விட்டது-ராமதாஸ் திடீர் அறிவிப்பு


இப்படி சொல்கிறார் என்றால் அடுத்த தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டு சேர்வதற்கு ஆயத்தம் செய்கிறார் என்று அர்த்தம்.

இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. தனித்து நின்று ஒரு முறையாவது சொந்த பலத்தைக் காட்டினால் அனைவருக்கும் செளகரியமாக இருக்கும்.

இதில் விஜயகாந்த் − ஒரு மாணிக்கம். தனித்து நின்றே போராடுகிறார்.

ஓவியன்
05-07-2007, 07:02 PM
.இதில் விஜயகாந்த் − ஒரு மாணிக்கம். தனித்து நின்றே போராடுகிறார்.

சிங்கம் தனியாகத் தான் வரும் போல.......

பொறுத்திருந்து பார்ப்போம்.

namsec
06-07-2007, 06:45 AM
தீவிரவாதிகளுக்கு தனி இணையதளம் : ஆஸ்திரேலியா போலீஸ் அதிர்ச்சி

லண்டன் மற்றும் கிளாஸ்கோ வெடிகுண்டு கார் சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் சபில் அகமதுவின் சகோதரர் கபில் அகமது கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்க முயற்சித்து தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவிரவாதிகள் தங்களது தலைமையான அல்குவைதா அமைப்பை தொடர்பு கொள்ள தனி இணையதளம் உருவாக்கி இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அந்த இணையதளத்தில் 45 டாக்டர்கள் தீவிரவாத அமைப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா போலீசார் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி தினமலர்

namsec
06-07-2007, 01:49 PM
இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது

எய்ட்ஸ் வந்தால் மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்று அச்சத்தின் காரணமாகவும், அரசு மற்றும் தனியார் சமூக அமைப்புகளின் விழிப்புணர்வு பிரசாரத்தின் பலனாகவும் இந்தியாவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.1 லட்சமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 2 முதல் 3 லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அன்புமணி தெரிவித்தார். புதுடில்லியில் நடந்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சயில் கலந்து கொண்ட அமைச்சர் அன்புமணி கடந்த ஆண்டை இந்த ஆண்டில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்றார். தற்போது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்போரில் 0.36 சதவீதத்தினரே முற்றிய நிலையில் உள்ளனர். இந்த அளவும் கடந்த ஆண்டை விட 0.9 சதவீதம் அளவு குறைந்துள்ளது. 2011க்குள் எய்ட்சை இந்தியாவிலிருந்து முற்றிலும் விரட்ட வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தற்போது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையில் இந்தியாவை விட குறைந்திருந்தாலும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தென் ஆப்ரிக்கா முதலிடத்திலும், நைஜீரியா 2வது இடத்திலும் உள்ளன.

நன்றி தினமலர்

namsec
06-07-2007, 01:51 PM
பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் விமானம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முயற்சி

பாகிஸ்தானில் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை வலுத்து வரும் நிலையில் இன்று அதிபர் முஷாரப்பின் விமானம் மீது ராக்கெட் தாக்குதல் நடந்த முயற்சி நடந்துள்ளது. அங்குள்ள ராவல்பிண்டி பகுதியில் முஷாரப்பின் விமானம் பறந்தபோது இந்த முயற்சி நடந்ததாகவும், தீவிரவாதிகளின் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினமலர்

ஓவியன்
06-07-2007, 01:56 PM
தகவல்களுக்கு நன்றிகள் சித்தரே!

mgandhi
07-07-2007, 07:32 AM
மேற்கு வங்கத்தில் வெள்ளம் உச்ச கட்டத்தை தாண்டியது, மீட்பு பணிக்கு ராணுவம் அழைப்பு.

ராஜஸ்தானில் ஜஸ்வந்த் சாகர் அணை உடைந்தது, 60 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

namsec
07-07-2007, 01:05 PM
கூடுதல் விமானங்களை இயக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஏற்பாடு

சென்னை, கொச்சி, ஐதராபாத் மற்றும் மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது வாரந்தோறும் 71 விமான சர்வீஸ்களை இயக்கி வரும் இந்த நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 85 சர்வீஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து சென்னைக்கு வாரந்தோறும் 11 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 8 விமானங்கள் இயங்கி வருகின்றன. அக்டோபர் 28ம் தேதி முதல் வாரந்தோறும் 14 விமானங்கள் இயக்கப்படும். நாள்தோறும் 2 விமானங்களை இயக்குவதன் மூலம் பயணிகள் தங்கள் வசதிப்படி சென்று வர இயலும். மேலும் மாணவர்களைக் கவரும் வகையில் அவர்கள் 20 கிலோ வரையான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

namsec
07-07-2007, 01:05 PM
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெட் போன் அணிய தடை

சென்னை நகரில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெட் போன்கள் அணிந்து செல்வதற்கு போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.
பெருகி வரும் விபத்துகளை தடுக்கும் வகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் செல்பவர்களை கண்காணிக்க 5 மையங்கள் நகரின் முக்கிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது

namsec
09-07-2007, 09:02 AM
துணை ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கியது

துணை ஜனாதிபதி ஷெகாவத்தின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முடிகிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. வரும் 23ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். 24ம் தேதிக்குள் வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

namsec
09-07-2007, 09:02 AM
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கியது

சென்னை மருத்துவக் கல்லுரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுரி, மதுரை மருத்துவக் கல்லுரி உட்பட தமிழகத்தில் உ<ள்ள 14 மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு பல் மருத்துவக் கல்லுரியில் உள்ள 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இது தவிர தனியார் மருத்துவக் கல்லுரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 251 இடங்கள், பல் மருத்துவக் கல்லுரிகளில் 326 இடங்களும் உள்ளன. இந்திய மருத்துவக் கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் அனுமதியளிக்கப்பட்ட மூன்று மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 300 இடங்களுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் இன்று காலை துவங்கியது. வரும் 16ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் நீடிக்கும். இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து துவங்கவுள்ளது.

நன்றி தினமலர்

namsec
09-07-2007, 12:12 PM
உமர் அப்துல்லா மீது கொலை முயற்சி தாக்குதல்

காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லாவைக் கொல்லும் திட்டத்துடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இருந்து அதிர்ஷ்வசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகனும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, ஸ்ரீநகர் தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது இவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினர். அவருடன் சென்ற மூன்று பாதுகாப்பு வீரர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நன்றி தினமலர்

namsec
09-07-2007, 12:25 PM
மும்பையில் எண்ணெய் எரிவாயு நிறுவனக் கப்பல் கடலில் மூழ்கி 5 ஊழியர்கள் பலி

மும்பையில் அரேபியக் கடல் பகுதியில் 17 ஊழியர்களுடன் சென்ற கப்பல் திடீரென கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தில் 5 ஊழியர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மும்பையில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய்இயற்கை எரிவாயு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக ஏராளமான சரக்குக் கப்பல்கள் உள்ளன. அவற்றுள் சாமுத்ரிகா10 என்ற கப்பல் 14 ஊழியர்களுடன் மதியம் கடலுக்குள் சென்றது. சிறிது துரம் கடந்த கப்பல் திடீரென கடலில் மூழ்கியது. இதனைக் கண்ட நிறுவன ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதனால் கடலில் தத்தளித்தவர்களில் 9 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனினும் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் கப்பல் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2005ல் இதே போன்று மும்பையில் அரேபியக் கடல் பகுதியில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.


நன்றி தினமலர்பதிப்பு எண் 600

namsec
09-07-2007, 12:29 PM
செக்யூரிட்டிகள் கைது ரூ.2.6 லட்சம் கொள்ளை! சென்னை ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில்

க்கின்பாதம்ஸ் புத்தக கடையில் திருடிய செக்யூரிட்டிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த ரூ.2.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் பிரபலம் வாய்ந்த க்கின்பாதம்ஸ் என்ற புத்தகக்கடை உள்ளது. இது 150 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் நிர்வாகியாக இருப்பவர் வெங்கடேசன் ராமநாதன் (28). இவர் கடந்த 6ம் தேதி இரவு செக்யூரிட்டிகள் மூலம் கடையை பூட்டி விட்டுச் சென்றார். 7ம் தேதி காலையில் கடையைத் திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. பணம் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.2.60 லட்சம் பணத்தையும் காணவில்லை. இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசில் வெங்கடேசன் ராமநாதன் புகார் செய்தார்.
துணை கமிஷனர் ராமசுப்பிரமணி, உதவி கமிஷனர் அமரவர்மன், இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடையின் பூட்டு உடைக்கப்படவில்லை. ஆனால் கடைக்குள் பீரோ திறந்து கிடந்தது. பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதனால் 6ம் தேதி இரவு செக்யூரிட்டிகளாக இருந்த குமார், ஜெயராமன், பழனி ஆகியோர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, திருடவில்லை என்றனர். ஆனால் அவர்கள் அன்றைய தினம் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்தது.
அவர்களது கைரேகையை பதிவு செய்து, கடையில் கிடைத்த கைரேகையுடன் போலீசார் ஒப்பிட்டுப் பார்த்தனர். அவை வேறு கைரேகையாக இருந்ததால், அவர்களை விடுதலை செய்தனர். போலீசார் வேறு கோணத்தில் விசாரணையைத் திருப்பினர். அதே கடையில் காலை நேரத்தில் பணியில் இருந்த இரண்டு பேர், சம்பவத்துக்குப் பிறகு 2 நாள் விடுமுறையில் சென்றது தெரிந்தது. அவர்களது பெயர் அப்துல் ஹமீது (22). ஜாவித் (24). இவர்கள் இருவரும் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள். இதனால் தனிப்படை போலீசார் வாணியம்பாடி சென்று அவர்களை நேற்று மாலையில் பிடித்து விசாரித்தனர். முதலில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றவர்கள், பின்னர் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களது கைரேகையும் கடையில் பதிவாகியிருந்த கைரேகையும் ஒன்றுபோல இருந்தன.
இவர்கள் இருவரும் சின்சியர் செக்யூரிட்டி சர்வீசஸ் (எஸ்.எஸ்.எஸ்) என்ற செக்யூரிட்டி நிறுவனத்தில் ஊழியர்களாக உள்ளனர். இந்த செக்யூரிட்டி ஆபீசின் தலைமை அலுவலகம் மதுரையில் உள்ளது. சென்னை அண்ணாநகரில் கிளை அலுவலகம் உள்ளது. இவர்கள் கடந்த 28 நாட்களுக்கு முன்னர்தான் க்கின்பாதம்ஸ் கடையில் செக்யூரிட்டிகளாக பணிக்குச் சேர்ந்தனர். பணம் வைக்கப்படும் இடத்தைப் பார்த்து வைத்துக் கொண்டனர். கொள்ளையடிக்கத் திட்டம் போட்டுவிட்டு, சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இருவரும் முன்னதாகவே 2 நாள் விடுமுறை வாங்கிக் கொண்டனர்.
6ம் தேதி இரவு 8 மணிக்கு கடையை அடைக்கும்போது அப்துல் ஹமீது கடைக்குள் இருந்து கொண்டார். ஜாவித் கடையை பூட்டி விட்டு சாவியை கடையின் நிர்வாகியிடம் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டார். பின்னர் இரவு பணி செய்யும் செக்யூரிட்டிகள் மது அருந்தி விட்டு தூங்கியதும் இரவு 10 மணிக்கு ஜாவித் கடைக்குள் போயிருக்கிறார். உள்ளே பணத்துடன் தயாராக இருந்த அப்துல் ஹமீதை அழைத்துக் கொண்டு வெளியில் வந்துள்ளார். பின்னர் கடையை பூட்டிவிட்டு இருவரும் பஸ்சில் வாணியம்பாடி சென்றனர். பூந்தமல்லி அருகே போகும்போது பஸ்சில் இருந்தபடியே கடைச் சாவியை தூக்கி வீசி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


நன்றி தமிழ்முரசு

mgandhi
09-07-2007, 05:53 PM
மூன்றாவது அணியில் இணைய தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு:
பரூக் அப்துல்லா

mgandhi
09-07-2007, 05:55 PM
ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்
ஜெயலித்தா,

aren
09-07-2007, 06:49 PM
ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்
ஜெயலித்தா,

அப்படின்னா பெட்டி கைமாறியாச்சு என்று அர்த்தம். அடுத்த தேர்தலுக்கு இப்பொழுதே பேரம் ஆரம்பமாகிவிட்டது என்று தெரிகிறது.

namsec
10-07-2007, 11:31 AM
பெரியகுளம் மலையில் ஆயுத பயிற்சி : முக்கிய தீவிரவாதி சிக்கினான்

பெரியகுளம் முருகமலை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நக்சல் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முக்கிய குற்றவாளிகளை தேடி தமிழகம் முழுவதும் க்யூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் வனப்பகுதியில் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் அருகே கிச்சம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான சுந்தரமூர்த்தி, கார்த்தி உள்பட 3 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி தினமலர்

mgandhi
10-07-2007, 06:35 PM
சட்டீஸ்கர் : நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் 23 பாதுகாப்பு படைவீரர்களை காணவில்ல

mgandhi
10-07-2007, 06:36 PM
பிரதீபா பாட்டீலுக்கு எதிராக இணையதளம் : பா.ஜ., வெளியிட்டது

namsec
11-07-2007, 05:58 AM
உளூந்தூர்பேட்டை அருகே 2 அரசு பஸ்கள் மோதல் : 8 பேர் பலி 24 பேர் படுகாயம்

namsec
11-07-2007, 05:59 AM
மேட்டூர் அணை 25ம் தேதி திறப்பு : தமிழக அரசு இன்று அறிவிப்பு

aren
11-07-2007, 06:00 AM
உளூந்தூர்பேட்டை அருகே 2 அரசு பஸ்கள் மோதல் : 8 பேர் பலி 24 பேர் படுகாயம்


ஏன் இப்படி கண் தெரியாமல் ஓட்டுகிறார்களோ என்று தெரியவில்லை.

பஸ்களும் சரியாக இருக்கிறதா பிரேக் பிடிக்கிறதா என்று பார்த்துவிட்டு ஓட்டுனர்கள் வண்டியை எடுக்கவேண்டும். இப்படி செய்தால் கொஞ்சமாவது விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

namsec
11-07-2007, 06:00 AM
துணை ஜனாதிபதி தேர்தல்: ஏ.பி.பரதனை நிறுத்த இடதுசாரிகள் முடிவு

aren
11-07-2007, 06:01 AM
மேட்டூர் அணை 25ம் தேதி திறப்பு : தமிழக அரசு இன்று அறிவிப்பு


மக்களுக்குத் தண்ணீர் தேவைபடும்பொழுது ஒன்றும் கிடைக்காது. தேவை படாத சமயங்களில் அள்ளிவீசுவார்கள்.

namsec
11-07-2007, 06:09 AM
அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்த விமானம் : 5 பேர் சாவு

namsec
11-07-2007, 08:22 AM
அதிகாரிகள் நியமன விவகாரம் : மதுரையில் 16ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

namsec
11-07-2007, 08:23 AM
அரக்கோணத்தில் இன்றும் பயணிகள் ரயில் மறியல் : ரயில் போக்குவரத்து பாதிப்பு

namsec
11-07-2007, 01:16 PM
சினிமா ரசிகர் மன்றத்தினர் முட்டாள்கள் : பா.ம.க.,ராமதாஸ் ஆவேசம்

mgandhi
11-07-2007, 05:52 PM
கூட்டுறவு சங்க தேர்தல்கள் அனைத்தும் ரத்து : கருணாநிதி அறிவிப்பு

mgandhi
11-07-2007, 05:53 PM
இந்தோனேஷியா : பயணிகள் படகு மூழ்கியதில் 45 பேரை காணவில்லை

mgandhi
11-07-2007, 05:54 PM
கிளின்டனின் புதிய புத்தகம் செப்டம்பரில் வெளியீடு

namsec
12-07-2007, 05:52 AM
பாகிஸ்தானில் முஷாரப்புக்கு எதிராக கிளர்ச்சி : பதட்டம் நீடிக்கிறது

namsec
12-07-2007, 05:53 AM
திண்டுக்கல் அருகே அரசு விடுதியில் உப்புமா சாப்பிட்ட 120 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

namsec
12-07-2007, 05:55 AM
நக்சல்கள் தாக்குதல் அபாயம் : ஆந்திரா சட்டீஸ்கர் எல்லையில் உஷார் நிலை

namsec
12-07-2007, 05:56 AM
அர்த்தமற்ற கருத்து : அத்வானி குற்றச்சசாட்டுக்கு காங்., பதிலடி

namsec
12-07-2007, 05:57 AM
பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா முடிவு

namsec
12-07-2007, 05:58 AM
பீகாரில் மின்னல் தாக்கி 5 பெண்கள் பலி

mgandhi
12-07-2007, 05:30 PM
ஊழியர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 60ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

aren
13-07-2007, 01:29 AM
ஊழியர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 60ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இது ஒரு நல்ல முடிவு. பல குடும்பங்களில் 55 வயதை கடந்த பின்னர் அவர்களது மன ஓட்டங்கள், எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வது என்ற திணரல், ஓய்வு வயதை 60ஆக உயர்த்தியதால் இன்னும் இரண்டு வருடங்களாவது இந்த பிரச்சனைகளை ஏழை மக்கள் தள்ளிப்போடலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்