PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12

nambi
10-10-2010, 02:02 AM
புது தில்லி, அக். 8: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள ஈழத் தமிழர் பிரஷாந்த் செல்லதுரை (24) ஒரு தங்கம் உள்பட 2 பதக்கங்களை வென்றுள்ளார்.

÷ஜிம்னாஸ்டிக்ஸ் வீரரான இவர், ஆஸ்திரேலியாவுக்காக 2 பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார்.

÷இவரது பூர்வீகம் இலங்கை. இனக்கலவரம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்தது இவரது குடும்பம். தற்போது சிட்னியில் வசித்துவரும் பிரஷாந்த் ரேடியாலஜி மாணவர்.

÷ஆர்வம், உழைப்பு, திறமை காரணமாக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார் பிரசாந்த். தில்லி காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இவர், ஜிம்னாஸ்டிக்கில் பொம்மல் ஹார்ஸ் பிரிவில் தங்கமும், பாரலல் பார்ஸ் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளார்.

இரண்டு போட்டிகளிலும் பதக்கம் வென்று ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்லாமல் தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

÷கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக இவர் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
....தினமணி 08.10.2010

nambi
10-10-2010, 11:57 AM
.....`விளையாட்டுக்காக வைத்ததாக' போலீசில் வாக்குமூலம்


ஊத்தங்கரை, அக்.10-

ஊத்தங்கரை அருகே ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்ததாக பள்ளிக்கூட மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். விளையாட்டுக்காக பாறாங்கல் வைத்ததாக, அவன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

தண்டவாளத்தில் பாறாங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூர் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் இருந்தது. திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 7 மணியளவில் அந்த வழியாக வந்தபோது, தண்டவாளத்தில் பாறாங்கல் இருப்பதை டிரைவர் பார்த்து விட்டார்.

உடனடியாக, என்ஜின் வேகத்தை குறைத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலின் முன்பகுதியில் சிக்கிய பாறாங்கல் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு தண்டவாளத்தின் வெளிப்புற பகுதியில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மாணவன் கைது

நேற்று அதிகாலையில் ராமகிருஷ்ணம்பதியை சேர்ந்த சங்கீதா (வயது 13) என்கிற சிறுமி பால் கேனுடன் தண்டவாளத்தை கடந்து சென்றார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சில மாணவர்கள் நேற்று முன்தினம் தண்டவாளம் பகுதியில் விளையாடி கொண்டிருந்ததை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சில மாணவர்களிடம் விசாரித்தபோது, தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த அரசன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற 15 வயது மாணவன் பிடிபட்டான். போலீசார் அவனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவன் போலீசாரிடம் கூறியதாவது:-

விளையாட்டாக...

ரெயில்வே தண்டவாளத்தையொட்டி எங்களுடைய நிலம் உள்ளது. வழக்கம்போல, நிலத்திற்கு காலை 6 மணியளவில் வந்தேன். அப்போது, விளையாட்டுத்தனமாக பாறாங்கல்லை எடுத்து தண்டவாளத்தில் வைத்து விட்டேன். அதனால், ரெயில் நிறுத்தப்பட்டு விடுமா? அல்லது ரெயில் சக்கரத்தில் சிக்கி பாறாங்கல் நசுங்கி விடுமா? என்பதை தெரிந்து கொள்ளவே பாறாங்கல் வைத்தேன்.

இவ்வாறு அரசன் தெரிவித்தான்.

மாணவன் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்சிறுத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

பாறாங்கல் வைத்த மாணவன் பற்றி துப்பு கொடுத்த மாணவி சங்கீதாவுக்கு போலீசார் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

.....தினத்தந்தி 10.10.2010

nambi
12-10-2010, 03:37 AM
சென்னை, அக்.11: முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்டது தொடர்பாக சென்னை மாநகர மத்தியக் குற்றப் பிரிவு போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

÷அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதுரையில் அக்டோபர் 18-ல் நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதையொட்டி அவருக்கு கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது.

÷இந்நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் அலுவலகத் தனிப்பிரிவுக்கு திங்கள்கிழமை பகல் 1.30 மணிக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறீர்கள். எனவே, உங்களைச் சுற்றியுள்ள நபர்களில் 3 பேர் ஊடுருவி உள்ளோம்.

÷முதல்வரின் கார் வெளியே செல்லும்போது குண்டு வைப்போம் என்று இ-மெயிலில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

÷இந்த கொலை மிரட்டல் இ-மெயில் குறித்து மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாநகர காவல்துறை ஆணையர் டி.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

...தினமணி 12.10.2010

nambi
12-10-2010, 03:40 AM
புது தில்லி, அக். 11: காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை ஒசாயேமி ஒலுடமோலா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அவரது தங்கப் பதக்கம் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.

÷மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சாலி பியர்சன் முதலாவதாகவும், ஒலுடமோலா இரண்டாவதாகவும் வந்தனர். இதில் பியர்சன் போட்டி தொடங்குவதற்கு முன்பே ஓடத்தொடங்கியதால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒலுடமோலாவுக்கு தங்கம் கிடைத்தது.

÷இந்நிலையில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் ஒலுடமோலாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் (ஏ சாம்பிள்) அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டதற்கான அறிகுறி தென்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது சிறுநீர், இரண்டாவது சோதனைக்காக (பி சாம்பிள்) அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகே அவரது பதக்கம் பறிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

÷இந்நிலையில் பல் வலி காரணமாக மட்டுமே அவர் போட்டியின்போது வலி நிவாரண மருந்து உட்கொண்டார். இது தடை செய்யப்பட்ட மருந்து பட்டியலில் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது என்று நைஜீரிய தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...தினமணி 12.10.2010

nambi
12-10-2010, 03:43 AM
மதுரை, அக்.12-

தமிழ்நாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை தவிர, மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களும் ஆங்கிலத்திலேயே நடைபெறுவது வழக்கம். ஆனால், முதன் முறையாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நேற்று தமிழில் நடைபெற்றது. தலைமை வகித்த கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை தவிர, மற்ற அனைவரும் தமிழிலேயே பேசினார்கள்.

வரவேற்புரையாற்றி, ஆண்டறிக்கை சமர்ப்பித்த பல்கலைக்கழக துணைவேந்தர் கற்பக குமாரவேல், தலைமை விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட மேடையில் உரையாற்றிய அனைவரும் தமிழில் பேசியதால் விழா முழுவதும் தமிழிலேயே நடைபெற்றது. இதனால் பேராசிரியர்களும் மாணவர்களும் பெரிதும் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில், 232 பேருக்கு டாக்டர் (பி.எச்.டி. முனைவர்) பட்டங்களை கவர்னர் பர்னாலா வழங்கினார். மேலும், சிறந்த மதிப்பெண் பெற்ற 74 மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

....தினத்தந்தி 12.10.2010

nambi
12-10-2010, 03:55 AM
நியூயார்க்: 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராகிறது இந்தியா.

நாளை ஐநாவின் பொது அவையில் நடக்கும் தேர்தல் மூலம் இந்தப் பதவியில் அமர்கிறது இந்தியா. இந்த தேர்தலிலிருந்து கஜகஸ்தான் திடீரென்று விலகிக் கொண்டதால், ஆசிய பிராந்தியத்திலிருந்து இந்தியா உறுப்பினராவது எளிதாகியுள்ளது.

இந்த பதவிக்காக ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு நாடு தேர்வு செய்யப்படும். ஏற்கெனவே இந்தப் பொறுப்பில் உள்ள நாடுகள்: ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி மற்றும் உகான்டா. இவற்றுக்கு பதில்தான் புதிய உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.

அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களின் சார்பில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இரண்டு உறுப்பினர் பதவிக்கு கனடா, ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் நாடுகள் மோதுகின்றன.

ஆப்ரிக்காவுக்கு தென்னாப்பிரிக்காவும், ஆசியாவுக்கு இந்தியாவும் உறுப்பினர் பதவியைப் பெறுகின்றன. முன்னதாக இந்தப்பதவிக்காக இந்தியாவுடன் மோதிய கஜகஸ்தான் விலகிக் கொண்டது.

இதன் மூலம் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா இணைந்து BRIC அமைப்பாக செயல்படவிருக்கிறது. "சர்வதேச அளவில் மிகப்பெரிய மாறுதல்களை இந்த நாடுகள் சாதிக்கும்" என்கிறார் ஐநாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி.

இந்த உறுப்பினர் பதவிக்காக கிட்டத்தட்ட கடந்த 3 ஆண்டுகளாக முயன்று வந்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவுக்கான தேர்தலில் ஜெர்மனி வென்றால், ஜி 4 அமைப்பில் உள்ள இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுமே ஓரணியில் நின்று நிரந்தர பாதுகாப்பு சபையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
....தட்ஸ் தமிழ் 12.10.2010

அன்புரசிகன்
12-10-2010, 04:05 AM
நல்லதொரு சைகை...

nambi
13-10-2010, 01:53 AM
புது தில்லி, அக்.12: அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் பாரபட்சமாகவும் நடந்துகொண்டதால் கர்நாடக மாநில ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யவேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தில்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இல்லத்தில் கட்சியின் உயர்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை கூடியது. பாஜக தலைவர் நிதின் கட்கரி, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கைய்ய நாயுடு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எடியூரப்பாவும் ஈஸ்வரப்பாவும் கூட்டத்தில் விவரித்தனர். அதன் பிறகு, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசுக்கு எதிராக ஆளுநர் பரத்வாஜ் செயல்பட்ட விதம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் பாரபட்சமாகவும் நடந்துகொண்டதால் ஆளுநர் பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் கர்நாடக மாநிலப் பொறுப்பாளருமான அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

கர்நாடக மாநில பாஜக அரசைக் கவிழ்க்க ஆளுநர் பரத்வாஜ் 5 கட்ட வழிமுறைகளை கையாண்டுள்ளார்.

பாஜக அரசைக் கவிழ்க்க ஆளுநர் மாளிகையை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் ஈடுபட ஊக்குவித்துள்ளார். பாரபட்சமற்ற முறையில் செயல்படும் விதத்தை அவர் முழுவதும் இழந்துவிட்டார். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் காவலனாகவும் அவர் இருக்க முடியாது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சட்டப்பேரவைத் தலைவரை ஆளுநர் வலியுறுத்தினார். சட்டப்பேரவைத் தலைவரை தானே வழிநடத்தவேண்டும் என்பதுடன் அவரின் அதிகாரத்தையும் பறித்துக்கொள்ள முற்பட்டார் ஆளுநர்.

அப்படியே எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால், பேரவைத் தலைவரின் பரிந்துரைகளை ஏற்க மாட்டேன் என ஆளுநர் பிடிவாதமாக இருந்தார்.

பேரவையில் நடந்த நிகழ்வுகளை தவறாகத் திரித்து குறிப்பிட்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி 2-வது முறையாக பேரவையில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல்.

இவ்வாறாக பாரபட்சமற்ற முறையில் நடக்க தவறிய ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லை. அதனால் அவரை மத்திய அரசு உடனே திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும் என்றார் அவர்.

......தினமணி 13.10.2010

nambi
13-10-2010, 01:54 AM
சென்னை, அக். 12: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ: இலங்கை அரசு செய்த இனக்கொலை குறித்து உலக நாடுகளில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில் ராஜபட்சவை பாதுகாப்பதற்காக இந்திய அரசு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

தமிழக மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன. பிரதமர் மன்மோகன்சிங்கும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும்தான் இந்த துரோகத்துக்குப் பொறுப்பாளிகள்.

திருமாவளவன்: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காமன்வெல்த் நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டிக்கும் வகையில் அவ் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விழாவைப் புறக்கணிக்க வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி: காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜபக்சே இந்திய அரசால் அழைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
.....தினமணி 13.10.2010

nambi
13-10-2010, 02:02 AM
பெங்களூரு:திருமணமான இரண்டு மாதத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த புது மணப்பெண், பெங்களுரில் பாலியியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (32); பெங்களூரில் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த மலர்விழி (24) என்பவருக்கும் இரண்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.மலர்விழி, திருமணத்திற்கு முன்னதாக டி.வி.எஸ்., கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். திருமணத்திற்கு பின் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, கணவருடன் பெங்களூரு பி.டி.எம்., லே அவுட் இரண்டாவது ஸ்டேஜில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மலர்விழியின் உறவினர், மலர்விழி வீட்டிற்கு போன் செய்துள்ளார்; போனை யாரும் எடுக்கவில்லை. மலர்விழியின் மொபைலுக்கு போன் செய்துள்ளார். மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பீதியடைந்த அவர், பி.டி.எம்., லேஅவுட்டிற்கு விரைந்தார்.வீட்டில் மலர்விழி பாலியியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரது கணவர் பாலசுப்ரமணியனுக்கு தகவல் கொடுத்தார். மைக்கோ லேஅவுட் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
....தினமலர் 13.10.2010

nambi
13-10-2010, 02:38 AM
புதுடில்லி : சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் எவ்வளவு என்பதை அமலாக்க பிரிவு இயக்குனரகம் வெளியிட வேண்டும் என, மத்திய தகவல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலுள்ள வசதி படைத்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் காட்டப்படாத பணத்தை சுவிஸ் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பாக முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் லட்சக்கணக்கான கோடிகளில் இருக்கும் என கூறப்படுகிறது. சுவிஸ் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரத்தை வெளியிடக்கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வி.சந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த கமிஷன், அமலாக்கபிரிவு இயக்குனர் ராகவிடம் விவரம் கேட்டு இருந்தது. இதற்கு பதிலளித்த இயக்குனரகம், தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாக்க இயக்குனரகத்திற்கு பொருந்தது. இதிலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரியிருந்தது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முழு விவரங்களையும் வெளியிட இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதை ஏற்க மறுத்த தகவல் கமிஷன், வஜாஹத் அபிபுல்லா மற்றும் ஏ.என்.திவாரி, தகவல் கமிஷனர் ஷைலேஷ் காந்தி மற்றும் எம்.எல்.ஷர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தனது உத்தரவில் கூறியதாவது:அமலாக்க பிரிவு இயக்குனரகம் நடத்தி வரும் விசாரணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், விசாரணையின் தன்மையை பற்றியோ, யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது பற்றியே தகவலை வெளியிட தேவையில்லை. தற்போது நடைபெறும் விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த தொகை எவ்வளவு என்பதை மட்டும் வெளியிடலாம். வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை முழுவதையும் கணக்கிட முடியாது என்ற கமிஷனின் வாதத்தை ஏற்கும்பட்சத்தில், விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டுள்ள மொத்த தொகை குறித்த விவரங்களை வெளியிடலாம்.இவ்வாறு தகவல் ஆணைய குழுவின் பெஞ்ச் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

.....தினமலர் 13.10.2010

nambi
13-10-2010, 02:39 AM
புதுடில்லி : காமன்வெல்த் போட்டியின் வரலாற்றில், இந்தியா முதல் முறையாக அதிக தங்கப்பதக்கம்(32) வென்று சாதனை படைத்துள்ளது. தவிர, வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தையும் அதிகளவில் கைப்பற்றியுள்ளது.

டில்லியில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இம்முறை, போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பதால், நமது நட்சத்திரங்கள் எழுச்சி கண்டனர். நேற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைக்க, அதிக தங்கம் வென்று சாதித்தது. பெண்கள் 10 மீ., "ஏர் பிஸ்டல்' அணிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து, அனு ராஜ் சிங் ஜோடி பங்கேற்றது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா, கனடா ஜோடிகள் தலா 759 புள்ளிகள் பெற்று, சமநிலையில் இருந்தன. இதையடுத்து இலக்கை எத்தனை முறை சரியாக தாக்கினர் என பார்க்கப்பட்டது. இதில் 14 முறை மட்டும் தாக்கிய கனடாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்தியா, ஆஸ்திரேலியா 21 முறை தாக்கியிருந்த போதிலும், சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இந்திய ஜோடிக்கு தங்கம் வழங்கப்பட்டது.மற்றொரு வெள்ளி: பெண்கள் 50 மீ., புரோன் துப்பாக்கி சுடுதல் போட்டியும் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் முதல் உலக சாம்பியன் தேஜஸ்வினி சாவந்த், 594 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியா, வேல்ஸ் வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலத்தை கைப்பற்றினர்.

சம்ரேஷ் ஏமாற்றம்:இந்திய வீரர் சம்ரேஷ் ஜங் கடந்த 2006 காமன்வெல்த் போட்டியில் ஐந்து தங்கம் வென்று அசத்தி இருந்தார். நேற்று நடந்த 25 மீ., "ஸ்டாண்டர்டு பிஸ்டல்' அணிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். இதில் 1103 புள்ளிகள் பெற்ற சம்ரேஷ், சந்திரசேகர் குமார் சவுத்ரி ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதேபிரிவில் சிங்கப்பூர், இங்கிலாந்து வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் கிடைத்தது.

புதிய சாதனை: இதையடுத்து இந்திய அணி முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில், 32 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்ததுள்ளது. தவிர, துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 14 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் (2002) போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 30 தங்கம், 22 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் வென்று இருந்தது.
....தினமலர் 13.10.2010

nambi
13-10-2010, 02:41 AM
புது தில்லி, அக். 12: காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பெனால்டி ஷூட் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. அதன் பிறகு நடந்த கூடுதல் நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. கடைசியாக ஷூட் அவுட் முறையில் யார் வெற்றி என்பதை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது.

இதில் இந்திய வீரர்கள் சர்வன்ஜித் சிங், விக்ரம் பிள்ளை, சந்தீப் சிங், அர்ஜுன் ஹாலப்பா மற்றும் ஷிவேந்திர சிங் ஆகிய அனைவரும் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கிளென் கிர்காம் அடித்த பந்தை, இந்தியாவின் கோல் கீப்பர் பாரத் சேத்ரி அருமையாக பாய்ந்து தடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

தில்லி தியான்சந்த் ஹாக்கி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் ஆஸ்திரேலியா 3 கோல்கள் அடித்தது. நியூஸிலாந்து கோல் ஏதும் போடவில்லை. இருப்பினும் இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடும் வகையில் நியூஸிலாந்து விளையாடி 2 கோல்களை அடித்தது. ஆஸ்திரேலியாவும் தன் பங்குக்கு 3 கோல்களை அடித்தது.

முதல் பாதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிலே இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சைமன் ஆர்சர்டும், கிளென் டர்னரும் தலா 2 கோல்கள் அடித்தனர்.

ஜேசன் வில்சன் மற்றும் டெஸ்மண்ட் அபோட் தலா ஒரு கோல் அடித்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் பிளேர் ஹில்டனும், கேப்டன் பில் பர்ரோஸýம் தலா ஒரு கோல் அடித்து கோல் வித்தியாசத்தை சற்றுக் குறைத்தனர்.

பாகிஸ்தானுக்கு 6வது இடம்: கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் இம்முறை 6வது இடத்தையே பிடித்தது.

5 மற்றும் 6வது இடத்துக்கான போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவும், பாகிஸ்தானும் மோதின.

....தினமணி 13.10.2010

nambi
13-10-2010, 02:44 AM
சென்னை:"தமிழகத்தில் மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு குண்டு பல்புகளுக்கு பதிலாக, குழல் விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், கடலூரில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்தினால் 600 மெகாவாட் வரை மின்சாரம் சிக்கனமாகும்' என, தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக மின்வாரியம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது. திறனை 13 ஆயிரத்து 638 மெகாவாட்டாக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்கள் நிறைவடைய உள்ளன. எதிர்கால தேவையை, மின் சேமிப்பின் மூலம் சரிகட்ட முயற்சி நடத்து வருகிறது.அரசு அலுவலகங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின் தேவையைக் குறைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள், சார்பு அலுவலங்களில் குமிழ் விளக்குகளுக்கு (குண்டு பல்புகள்) தடை செய்யப்பட்டுள்ளது.

குறைந்த விலையுடைய குண்டு பல்புகளால் 75 சதவீதம் எரிசக்தி, வெப்பமாக விரயமாகிறது. குழல் விளக்குகள்தான் இதற்கு சரியான மாற்று என்றாலும், அதிக விலையால் குழல் விளக்குகளை மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய எரிசக்தி திறனுக்கான செயலகம், "பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம் மூலம், குண்டு பல்புகளுக்கு பதிலாக, உயர்தர குழல் விளக்குகளை 15 ரூபாய்க்கு வழங்கும் மாற்றுத் திட்டம் வரையறுத்துள்ளது. இதற்கான விலை வித்தியாசத்தை, தூய்மை மேம்பாட்டு இயங்கமைப்பு திட்டம்' மூலம் சமன் செய்து கொள்வர்.

இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மின் வாரியத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2.12 கோடி மின் நுகர்வோரில், 1.35 கோடி வீட்டு பயனீட்டாளர்கள் மின் மீட்டர் பொருத்தியுள்ளனர். முன்னோடியான குழல் விளக்கு வழங்கும் திட்டம், கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 4.5 லட்சம் வீடுகளுக்கு துவங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இப்பணிகள் முடியும். இதன் மூலம் மின் தேவை 30 மெகாவாட் குறையும்.

தமிழகத்தில் 1.35 கோடி வீடுகளுக்கும் இதை செயல்படுத்தினால் 500 முதல் 600 மெகாவாட் வரை மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக 60 சதவீதம் பகுதிக்கு 8.2 லட்சம் வீட்டு பயனீட்டாளர்களுக்கு டிச., 2011ல் முடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத பகுதிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

....தினமலர் 13.10.2010

nambi
13-10-2010, 02:50 AM
சண்டீகர், அக். 12: பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஜக்தார் சிங் ஹவராவின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்-ஹரியாணா மாநில உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மேதாப் சிங் கில் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பஞ்சாப் போலீஸ்காரர் பல்வந்த் சிங்கின் தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதுபோல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஷாம்சர் சிங், குர்மீத் சிங், லட்வந்தீர் சிங் ஆகிய மூவரின் ஆயுள் தண்டனையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி 10 மாடிகளைக் கொண்ட பஞ்சாப் தலைமைச் செயலக கட்டடம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் மற்றும் 17 பேர் கொல்லப்பட்டனர். திலாவர் சிங் என்பவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 2007 ஜூலையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜக்தார் சிங் ஹவாரா மற்றும் பல்வந்த் சிங் ஆகிய இருவருக்கும் கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த கொலையில் தொடர்புடைய ஷாம்சர் சிங், குர்மீத் சிங், லட்வந்தீர் சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டிருந்த நவ்ஜோத் சிங் விடுவிக்கப்பட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனு மீது விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கொலைச் சதியில் முக்கிய நபராகச் செயல்பட்ட ஜக்தார் சிங் ஹவராவின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் சாகும் வரை அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில் பிற குற்றவாளிகளின் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

வெடிபொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நசீப் சிங்குக்கு கீழ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. ஆனால் தீர்ப்பளிக்கும் முன்பே தண்டனையை அனுபவித்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மொத்தம் 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்டிருந்த 3 வெளிநாட்டவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் தலைமறைவாக உள்ளனர். மேலும் இருவர் சிறையில் இருந்து தப்பிவிட்டனர்.
...தினமணி 13.10.2010

nambi
13-10-2010, 06:08 AM
உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இலங்கை 39 இடத்தை வகிக்கின்றது. 2010 ஆம் ஆண்டுக்கான "உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்" கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் ஆபிரிக்க நாடுகளில் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்புக் காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும் இன்று கிட்டத்தட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.

இந்த பட்டியலின்படி பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேசியாவுக்கு கிடைத்துள்ளது.

84 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் சீனாவுக்கு 9 ஆவது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39 ஆவது இடத்தையும் நேபாளம்,பாகிஸ்தான் 57 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தியாவோ 67 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.இங்கே பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவு உலகின் எடை குறைந்த நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65 ஆவது இடத்திலிருந்தது.இந்த ஆண்டு 67 ஆவது இடத்துக்கு நழுவியிருக்கிறது.

....தமிழ்வின் 13.10.2010

nambi
13-10-2010, 04:03 PM
திருச்சி: திருச்சியில் உள்ள மிகவும் பிரபலமான புனித ஜோசப்ஸ் (தூய வளனார்) கல்லூரி முதல்வரான பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.

திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது குளிர்பானம் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்ப்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார், மேரியை மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சியின் மிகவும் பழமையான, பிரபலமான கல்லூரி தூய வளனார் கல்லூரி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படித்த கல்லூரி இது. இக்கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

.....தட்ஸ்தமிழ் 13.10.2010

திருச்சி : திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் உள்ள புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி முதல்வராக இருப்பவர் ராஜரத்தினம். இவர் மீது அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி போலீசில் புகார் அளித்தார். இன்று திருச்சி ஆஸ்பத்தரியில் மருத்துவ பரிசோதனையும் நடந்தது. இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

...தினமலர் 13.10.2010

nambi
13-10-2010, 06:02 PM
http://thatstamil.oneindia.in/img/2010/10/13-dr-samigiri-siddhar-200.jpg

கோவை: டிவி மூலம் பொதுமக்களிடையே பிரபலமான காதொலி சித்தர் என அழைக்கப்படும் பிரபல சித்த வைத்தியர் சாமிகிரி சித்தர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். நோய்வாய்ப்படாமல், யாருக்கும் சிரமம் தராமல் சாக வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

பல்வேறு டிவி சானல்களில் ஒளிபரப்பாகும் சித்த வைத்தியம் குறித்த நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கொடுத்து வந்தவர்தான் இந்த காதொலி சித்தர். கோவையைச் சேர்ந்தவர். அங்கு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சித்த மருத்துவ மையத்தை நடத்தி வந்தார். வயது 75 ஆகிறது.

இவருக்கு 6 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். அவரது மனைவி சிவாத்தாள் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

சாமிகிரி சித்தரின் வீடு ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில் உள்ளது. அந்த வீட்டில் அவர் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாமிகிரி சித்தர் வழக்கம்போல் தனது அறைக்கு படுக்க சென்றார்.

நேற்று காலை அவரது அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகன்கள் பார்த்தபோது இறந்து கிடந்தார்.

இதுபற்றி ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்தது. நான்கு பக்க தற்கொலைக் கடிதத்தையும் அவர் எழுதி வைத்திருந்தார்.

அதில்,

எனக்கு 75 வயது ஆகிவிட்டது. என்னுடைய மனைவி சிவாத்தாள் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அவள் இறந்தபிறகு நான் மிகுந்த துன்பப்பட்டேன். 46 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து வந்த சிவாத்தாள் மனைவி என்ற நிலையில் ரதியாகவும், பதிவிரதையாகவும் இருந்து வந்தாள். என்னோடு வாழ்ந்து அவள் 11 குழந்தைகளை பெற்றெடுத்தாள்.

அவள் இறந்தபிறகு நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். எனது கடைசி காலத்தில் நான் நோய்வாய்ப்பட்டு சாக விரும்பவில்லை. மேலும் நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவும் விரும்பவில்லை. நான் கஷ்டப்பட்டால் என் மக்களும் கஷ்டப்படுவார்கள். அதனால்தான் நான் மேலோகம் செல்ல விரும்புகிறேன்.

என்மீது என் மகன்கள், மகள்கள் மிகவும் பிரியமாக இருந்து உள்ளனர். நான் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அவ்வாறு பிரியமாக இருந்தவர்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் என் மனைவி சென்ற இடத்துக்கே சென்று விடுகிறேன்.

சித்த வைத்தியம் கற்றுக்கொண்டு எனது மூளையை பயன்படுத்தி மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து பலருக்கு பயனுள்ளவனாக இருந்திருக்கிறேன். நிறைய புத்தகங்கள், பாடல்கள் எழுதி உள்ளேன்.

நாத்திகனாக இருந்த என்னை பாட்டெழுத தஞ்சைக்கு ராமையா என்பவர் அழைத்துச்சென்றார். அங்கு பாடல் எழுத கற்றுக்கொண்டபிறகு நான் ஆத்திகன் ஆனேன்.

என் மனைவி சிவாத்தாளின் வண்ணப்படத்தை என் மார்போடு கட்டி எனது உடலை அடக்கம் செய்யுங்கள் என்று எழுதியுள்ளார் சாமிகிரி சித்தர்.
....தட்ஸ்தமிழ் 13.10.2010

கோவை: கோவை வைத்தியர் சாமிகிரி சித்தர் இறப்பிற்கு சயனைடே காரணம் என தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனையில் சாமிகிரி சித்தர் தற்கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து சயனைட் விஷம் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். மேலும் இறந்த மனைவியின்றி தனித்து வாழ விரும்பாததால் சாமிகிரி சித்தர் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதியுள்ளார். காது கேளாதவருக்கு கோவையில் சிகிச்சை மையம் நடத்தி வந்தவர் 75 வயது சாமிகிரி சித்தர்.
....தினகரன் 13.10.2010

nambi
14-10-2010, 05:53 AM
புதுதில்லி,அக்.13: கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி கவிழ்வது நிச்சயம் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஆளுநர் பதவியிலிருந்து ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் போகப்போவது நிச்சயம் என்ற அளவுக்கு அரசியல் களம் மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவை அவர் இழந்துவிட்டார்.

எடியூரப்பா பதவி இழக்கக்கூடிய நேரத்தில் அவசரகுடுக்கையாகச் செயல்பட்டு அவருக்கு அரசியல் மறுவாழ்வு அளித்துவிட்டாரே என்று கர்நாடக காங்கிரஸôரும் தில்லி மேலிட காங்கிரஸôரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராகக் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுவருவதை மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் முதலில் அடையாளம் கண்டு அரசியல்ரீதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ள உத்தி வகுத்தது.

அடுத்தடுத்து சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் தோற்ற சோகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆளுநர் பரத்வாஜ், தான் இன்னும் காங்கிரஸ்காரர்தான் என்று காட்டிக்கொள்ள, எடியூரப்பாவைக் கவிழ்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினார். குமாரசாமியின் முயற்சிகளுக்குத் துணை நின்றார்.

பேரவையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவும் வாக்கெடுப்பு நடந்தபோதும் கடந்த திங்கள்கிழமை நடந்த அமளி காரணமாகவும், குரல் வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் அறிவித்ததாலும் பாரதிய ஜனதா அரசுக்கு பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்தன. அதை ஜனநாயகப் படுகொலை என்றே அனைவரும் வர்ணித்தனர். இப்படி பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆட்சிக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்ட சூழலில் அவர்கள் எளிதில் தப்பிக்கும்படியான காரியத்தைச் செய்துவிட்டார் பரத்வாஜ்.

சட்ட நிபுணர் என்று தன்னைத்தானே அடிக்கடி பாராட்டிக் கொள்ளும் பரத்வாஜ், பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 உறுப்பினர்களின் மனு மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பு எதையும் திட்டவட்டமாகக் கூறுவதற்குள்ளாகவே மீண்டும் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டுவிட்டார்.

எதிர்ப்பாளர்கள் 16 பேர் குறைந்த நிலையில், வாக்கெடுப்பில் வெற்றி நிச்சயம் என்பதால், ஆளுநரின் ஆணையை ஏற்பதாக நல்ல பிள்ளையைப் போல ஒப்புக்கொண்டுவிட்டார் எடியூரப்பா. இதனால் அரசியல்ரீதியாக எடியூரப்பாவுக்கு எதிராக எழுந்த கண்டனக்கணைகளின் முனைகள் மழுங்கிவிட்டன. தேவையே இல்லாமல் இப்போது காங்கிரஸ் கட்சி வில்லனாகிவிட்டது.

இந்த ஆத்திரம் தாங்காமல்தான் கர்நாடக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையா, ஆளுநர் பரத்வாஜை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ""அரசியல் சட்டத்திலும் இதற்கு வழியில்லை, இதற்கு முன்னதாக இப்படி நடந்ததாக முன் உதாரணமும் இல்லை, ஆளுநர் தன் போக்கில் செயல்பட்டிருக்கிறார்'' என்று ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார்.

மீண்டும் நடைபெறும் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றிபெற்ற பிறகு, மறுபடியும் வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் கோரினால்கூட மக்களும் பிற அரசியல் கட்சிகளும் அதில் சுவாரசியம் காட்டமாட்டார்கள். ""எத்தனைமுறைதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது?'' என்று மக்களே கேள்வி கேட்பார்கள். அதைவிட பெரிய ஆபத்து, அரசை எதிர்த்த சுயேச்சைகளில் சிலரும் பாரதிய ஜனதா உறுப்பினர்களில் சிலரும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, மீண்டும் எடியூரப்பாவையே ஆதரிப்பது என்ற முடிவையும் எடுக்கக்கூடும். அதற்கு பேரம் பேச நிறைய அவகாசமும் சந்தர்ப்பங்களும் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்துவிடும். இதனால்தான் காங்கிரஸ்காரர்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் இழந்து நிற்கிறார் பரத்வாஜ்.
.....தினமணி 14.10.2010

nambi
14-10-2010, 05:55 AM
சாண்டியாகோ: சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய 33பேரும் 69நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சிலியில் அடகாமாவில் உள்ள தங்க மற்றும் தாமிர சுரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 700மீட்டர் ஆழத்தில் வேலை பார்த்த சுரங்க தொழிலாளர்கள் 33பேர் சிக்கி கொண்டனர். முதலில் அவர்கள் இறந்ததாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது. நிலத்தில் ஒரு துளையிட்டு அதன் வழியாக அவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 69நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் நேற்று முதல் நபராக பிளாரன்சோவை என்பவரை மீட்டனர். அவரை அந்நாட்டு அதிபர் கைகொடுத்து வரவேற்றார். அதனைதொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கிய எஞ்சிய தொழிலாளர்களும் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து 69நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வெற்றிகரமானது. மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட மீட்புகுழுவினருக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்*டோர் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
....தினமலர் 14.10.2010

nambi
14-10-2010, 06:15 AM
டெல்லி: காமன்வெல்த் போட்டியில், ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு இந்தியா வை ஊக்கப்படுத்தவுள்ளார். அதேபோல மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சாய்னா நெஹ்வால் ஆடுவதை பிரதமரின் மனைவி குர்சரன் கவுர் பார்த்து உற்சாகப்படுத்தவுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே இன்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. காமன்வெல்த் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்தியா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மூன்று முறை காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற, உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை நிச்சயம் வீழ்த்துவோம் என்று இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடந்தஅரை இறுதிப் போட்டியில், டை பிரேக்கரில் 5-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது இந்தியா.

மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை இந்தியாவே எதிர்பார்த்துள்ளது.

இன்றைய போட்டியை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து பார்த்து ரசிக்கவுள்ளார்.இதனால் இந்திய வீரர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். பிரதமரின் வருகையால் கூடுதல் நம்பிக்கையுடன் அவர்கள் காணப்படுகின்றனர்.

காமன்வெல்த் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் இன்று கோலாகலத்துடன் பலவண்ண ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெற இருக்கிறது.

பதக்கப்பட்டியலில் இன்றைய நிலவரப்படி இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டவாது இடத்தில் இங்கிலாந்தும் இடம் பெற்றுள்ளன.
,,,தட்ஸ் தமிழ் 14.10.2010

nambi
15-10-2010, 02:06 AM
துடெல்லி : டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகலமான கலை நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவு பெற்றது. பதக்க பட்டியலில் 38 தங்கப்பதக்கங்கள் உட்பட 101 பதக்கங்களை பெற்று, 2வது இடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் என்ற எந்த சர்வதேச போட்டிகளிலும் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இதனால்தான், கிரிக்கெட்டில் மக்கள் காட்டிய ஆர்வத்தை மற்ற போட்டிகளில் காட்டவில்லை. கடந்த 1982ம் ஆண்டு டெல்லியில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. அதிலும் 14 தங்கப்பதக்கங்களை வென்று 6வது இடத்தைதான் இந்தியா பிடித்தது.

இந்த நிலையில், 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா 2002ம ஆண்டு பெற்றது. கடந்த 3ம் தேதி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரமாண்டமாக தொடக்கவிழா நடந்தது. இந்தியாவில் முதல் முறையாக நடந்த இந்த போட்டித் தொடரில் (அக். 3&14), காமன்வெல்த் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த மொத்தம் 71 அணிகள் களமிறங்கின.

நீச்சல், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்சில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்தே அதிக பதக்கங்களைக் குவித்து முதலிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்திய அணி அதிக பதக்கங்களை குவிக்கத் தொடங்கியதால் 2வது இடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இங்கிலாந்து, இந்தியா மாறி மாறி 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

போட்டி முடிவதற்கு ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் இங்கிலாந்து 37 தங்கப்பதக்கங்களுடன் 2வது இடத்திலும், இந்தியா 36 தங்கப்பதக்கங்களுடன் 3வது இடத்திலும் இருந்தன. கடைசி நாளான நேற்று மகளிர் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் ஜ்வாலா & அஸ்வினி ஜோடியும், ஒற்றையர் பிரிவில் சாய்னா நெஹ்வாலும் தங்கம் வென்றதை அடுத்து இந்தியா 38 பதக்கங்களுடன் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை அள்ளியது. ஆஸ்திரேலியா 177 பதக்கங்களுடன் (74 தங்க, 55 வெள்ளி, 48 வெண்கலம்) முதலிடத்தையும், இங்கிலாந்து 142 பதக்கங்களுடன் (37 தங்கம், 59 வெள்ளி, 46 வெண்கலம்) 3வது இடத்தையும் பிடித்தன. சர்வதேச போட்டி ஒன்றில் இந்தியா சாதனை படைத்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நிறைவு விழா:

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இங்கிலாந்து இளவரசர் எட்வர்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர் பென்னல் உட்பட பலர் கலந்து கொண்டனர். வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்க உள்ளது. காமன்வெல்த் கொடி அந்த நாட்டு பிரதிநிதியுடன் ஒப்படைக்கப்பட்டு, விழா நிறைவு பெற்றது. காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன் குறை சொன்னவர்கள், போட்டி முடிந்தபின் டெல்லி சாதித்துவிட்டதாக புகழாரம் சூட்டினர்.

.......தினகரன் 15.10.2010

nambi
15-10-2010, 02:13 AM
பெங்களூர், அக்.15-

கர்நாடகத்தில், முதல்-மந்திரி எடிïரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த 6-ந் தேதி வாபஸ் பெற்றனர்.

கவர்னர் கட்டளை

இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்ததால், மாநில கவர்னர் பரத்வாஜ் கேட்டுக் கொண்டதன் பேரில், எடிïரப்பா கடந்த 11-ந் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வெற்றி பெற்றார்.

அன்று சட்டசபை கூடும் முன் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை (இவர்களில் 11 பேர் பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்கள், 5 பேர் சுயேச்சைகள்) சபாநாயகர் போப்பையா பதவி நீக்கம் செய்தார். இதனால் அவர்களால் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால், அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த கவர்னர் பரத்வாஜ், கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ததோடு, மீண்டும் 14-ந் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி `மெஜாரிட்டி` பலத்தை நிரூபிக்குமாறு முதல்-மந்திரி எடிïரப்பாவை கேட்டுக் கொண்டார். அதை எடிïரப்பா ஏற்றுக் கொண்டார்.

16 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு

இதற்கிடையே பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்.எல்.ஏ.க்களும், தங்களுக்கு எதிரான சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், 2-வதாக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கையை நேற்று முன்தினம் நிராகரித்த நீதிபதிகள், 2-வதாக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு, 16 எம்.எல்.ஏ.க்களின் மனு மீது வருகிற 18-ந் தேதி ஐகோர்ட்டு வழங்கும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறினார்கள்.

சட்டசபை கூடியது

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்-மந்திரி எடிïரப்பா 2-வது முÛறாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக கர்நாடக சட்டசபை நேற்று காலை 11 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கூடியது.

கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான சித்தராமையா எழுந்து; பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்.எல்.ஏ.க்களின் மனு மீது ஐகோர்ட்டில் இன்னும் விசாரணை முடிவடையாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் போப்பையா, கவர்னர் பிறப்பித்த உத்தரவின் பேரில் 2-வதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் கூட்டத்தை தள்ளி வைக்க இயலாது என்று கூறி விட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

இதைத்தொடர்ந்து, "இந்த சபை எடிïரப்பா தலைமையிலான அரசு மீது நம்பிக்கை தெரிவிக்கிறது" என்ற 2 வரி நம்பிக்கை தீர்மானத்தை எடிïரப்பா தாக்கல் செய்தார்.

அதன் மீது ஓட்டெடுப்பு நடைபெறுவதாக சபாநாயகர் அறிவித்ததும், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் எடிïரப்பா அரசு மீது நம்பிக்கை உள்ளதாக கூறினார்கள். பின்னர் டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடைபெற்றது.

இதில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 106 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 100 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்ததாகவும், இதனால் வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் போப்பையா அறிவித்தார்.

சுயேச்சை எம்.எல்.ஏ.

கர்நாடக சட்டசபையில் மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் நீங்கலாக உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 208. இவர்களில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த மணப்பா வஜ்ஜல், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.சி.அஸ்வத் தவிர மற்ற 206 உறுப்பினர்களும் நேற்று சபைக்கு வந்து இருந்தனர்.

இவர்களில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 105 பேரும், வர்த்தூர் பிரகாஷ் என்ற ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.யும் (மொத்தம் 106 பேர்) வாக்கு அளித்தனர். (அரசுக்கு ஆதரவாக இருந்த மொத்தம் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.

அரசின் மீது அதிருப்பதியில் இருந்த மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.யான வர்த்தூர் பிரகாஷ், நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்கு அளிக்கப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.)

எதிர்க்கட்சியான காங்கிரசைச் சேர்ந்த 73 உறுப்பினர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 27 பேரும் (மொத்தம் 100 பேர்) தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.

மகிழ்ச்சி

கடந்த 11-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் பெரும் ரகளை ஏற்பட்டது. ஆனால் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், ஆளும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உற்சாக குரல் எழுப்பியும், ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் எடிïரப்பாவின் அருகில் சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்றைய கூட்டம் முடிவடைந்ததும் சபாநாயகர் போப்பையா, மறு தேதி குறிப்பிடாமல் சபையை ஒத்தி வைத்தார்.

கவர்னருடன் சந்திப்பு

பின்னர் வெளியே வந்த முதல்-மந்திரி எடிïரப்பா, கர்நாடகத்தில் பாரதீய ஜனதாவுக்கு உள்ள செல்வாக்கு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

அதன்பிறகு அவர், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பரத்வாஜை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் தனது அரசுக்கு உள்ள மெஜாரிட்டியை நிரூபித்து விட்டதாக கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடிïரப்பா மீண்டும் வெற்றி பெற்றதை பெங்களூரில் பாரதீய ஜனதா தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சட்ட சிக்கல் உருவாகுமா?

16 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் 18-ந் தேதி கூறப்படும் தீர்ப்புக்கு இந்த 2-வது நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு கட்டுப்பட்டது என்று கர்நாடக ஐகோர்ட்டு கூறி இருப்பதால், எடிïரப்பா அரசுக்கு ஆபத்து முழுமையாக நீங்கி விட்டதாக கருத முடியாது.

16 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறுமானால், அவர் மறுபடியும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டிய நிலை ஏற்படலாம். அத்துடன் புதிய சட்ட சிக்கல்களும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
....தினத்தந்தி 15.10.2010

nambi
15-10-2010, 02:18 AM
சென்னை : ""மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடும், மனித நேயத்தோடும் பணிகளை ஆற்ற வேண்டும்,'' என, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையின் 125வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. சேப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேறுகால முதல் நிலை சிகிச்சை பிரிவு கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். தமிழக சுகாதாரத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இதய நோய் தடுப்பு மற்றும் மகளிர் கருப்பை வாய், மார்பகப் புற்றுநோய் தடுப்புத் திட்டப் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: மருத்துவமனைக்கு வந்ததும் அதற்கேற்ப உடல்நிலையும் சரியில்லை. உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனை விழாவிற்கு வரவில்லை. பிறருடைய உடல்நிலை சரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனையில் திறப்பு விழாவில் கலந்து கொள்வது இத்தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் என் கடமை. எம்.எல்.ஏ., என்ற முறையில், முதல்வர் என்ற நிலையில், அக்கடமையை நிறைவேற்ற உடல் நிலை இடம் தராவிட்டாலும் வந்திருக்கிறேன். இந்தியாவில் முதல்முறையாக தொகுதி மேம்பாட்டு நிதியை பொதுகாரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியை மத்திய அரசு எம்.பி.,க்களுக்கு வழங்கியிருந்தது. அதை சட்டசபை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டு, இன்று தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகையை இதுபோன்ற நல்ல காரியத்திற்கு செலவழித்திருக்கிறோம்.

கட்டடங்கள் கட்டினால், அங்கே இத்தனை மருத்துவர்கள் என கணக்கு காட்டினால் மாத்திரம் பயனில்லை. அக்கட்டடங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், அவர்களுக்கு உதவுகிற செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை நண்பர்கள் அனைவரும் ஏதோ கடமையாற்றுகிறோம் என இல்லாமல், இப்பணியை மனிதநேய மனப்பான்மையோடு நிறைவேற்றுவோம் என்ற உணர்வை பெற்று மக்களை காப்பாற்ற வேண்டும். காசு, பணம் பெரிதல்ல. மருத்துவமனைக்கு வந்த நோயாளியை மருத்துவர்கள் கவனிக்க மறுத்ததால், சரியாக கவனிக்காததால் உடல்நலிவு தீரவில்லை; உயிரும் காப்பாற்றப்படவில்லை என்ற செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. அப்பத்திரிகை செய்திகளில் சில, இந்த அரசுக்கு விரோதமாக வெளியிடப்பட்டாலும் கூட, அவற்றையெல்லாம் "இல்லை' என ஆக்குகின்ற வகையில் மருத்துவத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் பாடுபட வேண்டும்; ஒத்துழைக்க வேண்டும்.

சாதாரண, சாமான்ய ஏழை மக்களுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அனைவரும் பாடுபட வேண்டுமென்று மருத்துவத் துறையில் இடம் பெற்றுள்ள அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து துறைகளையும் விட, மருத்துவத்துறை தான் மனிதாபிமானத்தோடு உடன்பாடு கொண்ட துறை.மருத்துவத் துறையில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், "அவர்கள் மனிதாபிமானம் அற்றவர்கள்; மனிதாபிமானத்திற்கு மரியாதை கொடுக்காதவர்கள்; மனிதாபிமானத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள்' என்ற பழிக்கு ஆளாக நேரிடும். அனைவரும் மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு மருத்துவத் துறை பணிகளை ஆற்ற வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முதல்வர் வழங்கினார். விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் மாலதி, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ், மருத்துவக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) கனகசபை, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம், சமூக மகப்பேறியல் நிலைய இயக்குனர் மோகனாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
....தினமலர் 15.10.2010

nambi
15-10-2010, 02:27 AM
சென்னை, அக். 14: மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலவைத் தேர்தலில் ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெயர் சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்த சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 16, 17, 30, 31 ஆகிய நான்கு நாட்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வருகின்றன. இதனால், அந்த இரு தேதிகளிலும் நடக்க இருந்த சிறப்பு முகாம்கள் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரிகள், அந்தத் தேதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பணியில் இருக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு வருவோருக்குத் தேவையான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனவும் தனது செய்திக் குறிப்பில் பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்ப படிவம் 18-ம், ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 19-ம் பயன்படுத்தப்படுகிறது.

....தினமணி 15.10.2010

nambi
15-10-2010, 04:28 PM
சென்னை, அக்.15: பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும்வகையில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வ மின் அஞ்சல் முகவரியை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

234 எம்எல்ஏக்களுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட மின் அஞ்சல் முகவரிகளை விடியோ கான்பரன்சிங் மூலமாக கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது ஏழை, எளியவர்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த மின் ஆளுமை திட்டம் முதன்முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், திருவாரூர் மற்றும் நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
...தினமணி 15.10.2010

nambi
15-10-2010, 04:32 PM
லாகோஸ்: நைஜீரியாவில் உள்ள பிரபல பெட்ரோலிய நிறுவனத்தின் பள்ளி அக்வா இபாம் மாநிலத்தில் உள்ளது. இங்கு இந்தியாவைச் சேர்ந்த பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். நைஜீரியாவில் உள்ள தாதா கும்பல், எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து மாமூல் கேட்டது. மறுத்தால், அந்நிறுவனம் நடத்தும் பள்ளியின் தலைமை ஆசிரியையை கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்தது. இதையடுத்து ஆசிரியைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ஆசிரியையின் காரை மர்ம கும்பல் நேற்று வழிமறித்தது. டிரைவர் மற்றும் பாதுகாவலரை சுட்டுக் கொன்று ஆசிரியையை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. பிணைத் தொகைக்காக இவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
...தினகரன் 15.10.2010

nambi
15-10-2010, 04:38 PM
கொழும்பு, அக்.15- இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் விரைந்து குடியமர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

தில்லியில் ராஜபட்சவுக்கு பிரதமர் இன்று விருந்து அளித்தார். அப்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, "இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களில் விரைவாக குடியமர்வு செய்ய வேண்டும். இப்பிரச்னையில் இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இதன் மூலம் தமிழர்களின் துயரத்தை களைவதில் இலங்கை அரசு வெற்றி பெறலாம்." என்று இந்தியத் தரப்பில் ராஜபட்சவிடம் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
...தினமணி 15.10.2010

nambi
15-10-2010, 04:40 PM
சென்னை: மதுரையில் வரும் 18ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடாது என்று தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும், டெலிபோன் மிரட்டல்களும் வருவதாக, கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அ.தி.மு.க. எம்.பி. மனோஜ்பாண் டியன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், சேகர்பாபு, செந்தமிழன் ஆகியோர் நேற்று மாலையில் உள்துறை செயலர் ஞானதேசிகனிடம், மிரட்டல் குறித்து புகார் மனு கொடுத்தனர்.
...தினகரன் 15.10.2010

nambi
16-10-2010, 06:41 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தொடர் கொலை மிரட்டல் வருவதைப் போல முதல்வர் கருணாநிதி க்கும் வர ஆரம்பித்துள்ளது. 2வது முறையாக முதல்வரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் வந்துள்ளது.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதியைக் கொலை செய்யப் போவதாக கூறி மிரட்டல் கடிதம் வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்.எம்.எஸ். மூலம் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. சென்னை போக்குவரத்து போலீசின் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த எஸ்.எம்.எஸ். மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. முதல்வர் வீட்டை வான்வழியாக குண்டு வீசி தகர்ப்போம் என்று அந்த எஸ்.எம்.எஸ். தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ். சென்னை செம்பாக்கத்திலிருந்து கோபிநாத் என்பவர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

.....தட்ஸ்தமிழ் 16.10.2010

nambi
17-10-2010, 05:36 AM
புதுதில்லி, அக்.16: அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்திருக்கிறது.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோயில் கமிட்டி, நிர்மோகி அகாரா, பாபர் மசூதி கமிட்டி ஆகிவற்றுக்கு வழங்க வேண்டும் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது.


இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயல் கமிட்டிக் கூட்டம் லக்னௌவில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு வாரியத்தின் தலைவர் மௌலானா ரபே ஹாஸ்னி நட்வி தலைமை வகித்தார். அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது.


"அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்டிருக்கும் தடைகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது இந்திய முஸ்லிம்களின் உரிமை" என இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்ததாகவும். அதனால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பிரச்னையை பேச்சுமூலம் சுமுகமாகத் தீர்ப்பதற்கு முகமது ஹாசிம் அன்சாரி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் வரவேற்பில்லை.

...........தினமணி 17.10.2010

nambi
17-10-2010, 05:40 AM
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை பெட்ரோல் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 72 பைசா உயர்த்தியது.

இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலை உயர்வுக்கு பின்னர் டில்லியில் பெட்ரோல் விலை ரூபாய் 52.55 ஆக உயர்ந்தது. சென்னையிலும் லிட்டருக்கு 72 காசுகள் உயர்த்தப்பட்டது.

முன்னதாக நேற்று பாரத் பெட்ரோலியம் பெட்லோல் விலையை லிட்டருக்கு 70 பைசா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விலை நிர்ணயத்தை மத்திய அரசு பொறுப்பில் வைத்திருந்த வரை, இந்த விலை உயர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது முதல் மூன்று முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட பிறகே இதுகுறித்த செய்தியை அறிவிக்கின்றன பெட்ரோல் நிறுவனங்கள்.

உலகில் பெட்ரோல் மற்றும் டீஸல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

....தட்ஸ்தமிழ் 17.10.2010

nambi
17-10-2010, 06:29 AM
புதுடில்லி: காமன்வெல்த் போட்டிக்கு, தான் இசை அமைத்து கொடுத்த பாடல் பிரபலமாகமல் போனதற்கு மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர். ரஹ்மான். இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்கு பாடலின் ட்யூன் தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இளைய தலைமுறையினரை மட்டும் மையப்படுத்தி இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் இப்பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது. இதற்காக வருத்தப்படுகிறேன். எனது இப்பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இதுபோன்று நடக்காது, மிகவும் கவனமாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

........தினமலர் 17.10.2010

nambi
17-10-2010, 12:15 PM
மேட்டூர் காவல்நிலையத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி மீது துப்பாக்கியை நீட்டி சுட்டுவிடுவேன் என்று மிரட்டிய போலீஸ்காரரை பெரியார் திக தொண்டர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக நான்கு பெரியார் திகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேட்டூர் காவல்நிலையத்திலும் இன்று மாலை 6 மணிக்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. காவல்நிலையத்தில் உள்ள கடவுள் படங்களுக்கு மாலை அணிவித்து, துப்பாக்கிகளுக்கு பொட்டு வைத்து, சந்தனம் தெளித்தனர்.

அப்போது அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தினர், ‘’மத விசயங்களை பின்பற்றுவது அரசு விதிகளுக்கு புறம்பானது.

அரசு விதிகளை மீறும் எந்த செயலையும் எதிர்க்க வேண்டும் என்று பெரியார் சொல்லியிருக்கிறார். அதனால் காவல்நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை எதிரிக்கிறோம்’’ என்று கூறினர்.

இதனால் காவலர்களுக்கும், பெரியார் திகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் பெரியார் திகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை கேள்விப்பட்டு பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி அங்கே வந்தார். அப்போது அவரை நோக்கி துப்பாக்கியை காட்டிய காவலர் ஒருவர், ‘’இதற்கு மேலும் ஒரு அடி எடுத்துவைத்தால் சுட்டுவிடுவேன்’’ என்று மிரட்டினார்.

அந்த சமயம் காவலர் மீது ஒருவர் பாய்ந்து தாக்கினார்.

இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எனவே சம்பவ இடத்திற்கு எஸ்.பி. ஜான்நிக்கல்சன், டிஐஜி வெங்கட்ராமன் ஆகியோர் விரைந்துள்ளனர்.

...நியு இந்தியா...16.10.2010

பதட்டம் நிலவுவதால் கொளத்தூர் மணி மேட்டூரில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் தங்கி இருக்கிறார்.

nambi
18-10-2010, 12:41 PM
யாழ்ப்பாணம்: திட்டமிட்ட வகையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை ராஜபக்சே அரசு வழங்கியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவியுடன் நடந்து வருவதாக இலங்கையின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை அதிபர் ராஜபக்சே வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பெர்ணான்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கூட்டுறவு சங்கங்களின் மூலம் அடுத்த மூன்று மாத காலத்துக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வட பகுதியில் வசித்த மக்கள் முள்வேலி முகாம்களில் வாடும் நிலையில், சிங்களர்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தமிழ்ப் பகுதிகளுக்குமே சிங்களப் பெயர்களைச் சூட்டுவதிலும், தமிழரின் கலாச்சார அடையாளங்களை அழிப்பதும் முனைப்பு காட்டுகிறது இலங்கை.
.....தட்ஸ்தமிழ் 18.10.2010

nambi
18-10-2010, 12:47 PM
நவம்பர் மாதம் 5ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சார்பில், சிறப்பு கைத்தறி கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துவங்க உள்ளது.

சிறப்பு கைத்தறி கண்காட்சியை நாளை காலை 10 மணிக்கு கைத்தறி துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் இயங்கி வரும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ், காதிகிராப்ட், பூம்புகார் மற்றும் கைத்தறி குழுமங்களும், இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு வைக்கின்றன. வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்காட்சிக்காக சுமார் 75 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கும் வகையில், காஞ்சிபுரம், திருப்புவனம், ஆரணி பகுதிகளில் உற்பத்தியான பட்டுப் புடவைகளும், சிறுமுகை, சேலம், பரமக்குடி கைத்தறி சேலை ரகங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.

இதுமட்டுமல்லாமல் கோவையில் உற்பத்தியான கோரா பட்டு, நெகமம் பருத்தி சேலை, பட்டு மற்றும் பட்டு ரக வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறை, திரைச்சீலை, தரை விரிப்புகள் மற்றும் கால் மிதியடிகளும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்கிழமையன்று துவங்கும் இந்த கண்காட்சி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்காக இந்த கண்காட்சி திறந்திருக்கும்.

...வெப்துனியா 18.10.2010

nambi
18-10-2010, 12:54 PM
சென்னை, அக்.18: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒருகால பூஜைத் திட்டத்தின்கீழ் நிதி உதவிபெறும் கோயில்களின் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது சட்ட அமைச்சர் துரைமுருகன், அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ரூ. 2 கோடியே 78 லட்சம் செலவில் 10 ஆயிரம் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

....தினமணி 18.10.2010

nambi
18-10-2010, 12:56 PM
மும்பை: தனது பேரனும், சிவ சேனா கட்சியின் நிர்வாகத்தலைவர் உத்தவ் தாக்*கரேயின் மகனுமான ஆதித்யாவை அரசியலில் அறிமுகம் செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் பால் தாக்கரே. தசாரா பண்டிகையை*யொட்டி சிவ சேனா கட்சியின் சார்பில் விழா மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் பால் தாக்கரே (81) கலந்து கொண்டார். இதில் தனது பேரன் ஆதித்யா(20)வை கட்சியின் இளைஞர் அணித்தலைவராக நியமித்து அரசியலில் அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் அதற்கான வீரவாளினை பரிசாக வழங்கி முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்தார். புதிய அரசியல் அத்தியாயம் காண இருக்கும் ஆதி்த்யா, சிவ சேனா கட்சியின் நிர்வாகத்தலைவராக இருக்கும் உத்தவ் தாக்க*ரேயின் மகன் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆதித்யா யுவசேனா அமைப்பின் தலைவராக இருந்தார்.

.....தினமலர் 18.10.2010

nambi
18-10-2010, 01:02 PM
http://www.dinakaran.com/image/tamil-daily-news-998.jpg


மும்பை: அவசர சிகிச்சை பிரிவில் அரை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை மானபங்கம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் தெரியவந்ததாவது:

நவிமும்பை பகுதியில் உள்ள ஐ.சி.எல். பள்ளி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை துர்கா பூஜைக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வாஷி பகுதியை சேர்ந்த 30 வயதுள்ள ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் கணவருடன் பூஜையில் பங்கேற்க வந்தார். பூஜைக்கு வந்த சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் குறைந்தது. அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள லோட்டஸ் என்ற தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

டாக்டர் விஷால் வான்னே (26) என்பவர் ஆஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதித்து பரிசோதித்தார். ஐ.சி.யூ.க்குள் யாரும் வரக்கூடாது என்று சொல்லி அங்கிருந்தவர்களை வெளியேற்றினார். பூஜைக்கு பளிச்சென வந்திருந்த ஆஷாவை அப்படியே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆஷாவின் அழகில் மயங்கிய விஷால் மனம் பதறியது. ஏதோ முடிவு செய்தவராக, ‘ஆஷாவுக்கு ரெஸ்ட் தேவைப்படுகிறது. இன்று ஒரு நாள் இங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும். நீங்கள் வெளியே இருங்கள்’ என்று கூறி ஆஷாவுடன் வந்திருந்த அவருடைய கணவர் மற்றும் உறவினர்களை டாக்டர் அனுப்பி விட்டார். மருத்துவமனையின் மற்றொரு பகுதிக்கு சென்று ஆஷாவின் கணவர் தூங்கினார். உதவிக்கு வந்தவர்கள் புறப்பட்டு சென்று விட்டனர்.

டாக்டர் விஷாலும் மருத்துவமனையை விட்டு வெளியேறினார். பின்னர் அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனைக்குள் வந்தார். நேரே ஆஷா இருந்த ஐ.சி.யூ. அறைக்கு சென்றார். தூக்கத்தில் ஆஷாவின் அழகு அவரை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருக்கிறது. தன் பொறுப்பை மறந்தார். ‘ஏதோ’ கண்களை மறைத்தது. சுற்றும் முற்றும் ஒரு ரவுண்ட்ஸ் வந்திருக்கிறார். மற்ற அறைகளில் நோயாளிகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். நர்ஸ்களும் அவரவர் அறையில் அயர்ந்திருந்தனர்.

விஷாலின் உடல் பரபரத்தது. இன்னதென்று அறியாமல் செய்கிற பாவியாய் ஆஷாவின் மேல் படர்ந்திருக்கிறார் விஷால். மருந்து தந்த மயக்கத்தில் இருந்த ஆஷாவால் எதையோ உணர முடிந்ததே தவிர, எழுந்து பார்க்கவோ, எதிர்ப்பு காட்டவோ முடியாமல் போனது. ‘ஏன் இந்த டாக்டர் இப்படி.. ஐயோ.. என்ன நடக்கிறது?’ என்று ஆஷாவின் கண்கள் மட்டும் பதற.. விழித்து எழ முடியாத கணத்திலேயே அனைத்தும் முடித்திருந்தார் விஷால். ஆஷாவை ஒழுங்குபடுத்தி அப்படியே பெட்டில் விட்டுவிட்டு வெளியேறி விட்டார் விஷால்.

காலையில் ஓரளவுக்கு தேறி எழுந்து அமர்ந்த ஆஷாவுக்கு, இரவில் நடந்த சம்பவம் புரிந்தது. தன்னிடம் அத்துமீறிய டாக்டரின் கோர முகம் நினைவுக்கு வந்தது. கணவனிடம் குமுறி அழுதாள். தலையிலடித்துக் கொண்டு ஆவேசப்பட்ட கணவர், போலீசுக்குப் போனார். வாஷி ஸ்டேஷன் போலீசார் முதலில் தயங்கினர். ‘ஏம்மா.. நல்லா யோசிச்சு சொல்லுமா.. அவர் டாக்டர். எதுக்கோ சந்தேகப்பட்டு அவர்கிட்ட விசாரிக்க முடியாது’ என்று போலீசார் கூறினார். ஆனால், ஆஷா அடித்துச் சொன்னார். ‘‘ராத்திரி நான் இருந்த நிலைமைல என்னால எதிர்க்க முடியல. மற்றபடி நடந்ததெல்லாம் தெரியத்தான் செஞ்சது’’ என்றார்.

போலீஸ் படை மருத்துவமனைக்குள் புகுந்தது. டாக்டரிடம் தனியே விசாரித்தது. சிரமம் கொடுக்காமல் உடனே உண்மையை ஒப்புக்கொண்டார் டாக்டர் விஷால். கைது செய்து டாக்டரை சிறைக்கு அனுப்பியது போலீஸ். ஆஷா பலாத்காரம் செய்யப்பட்ட படுக்கையில் படிந்திருந்த கறைகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுபற்றி மண்டல போலீஸ் துணை கமிஷனர் அசோக் துதே கூறும்போது, ‘‘டிஜிபியின் உத்தரவுப்படி உடனடியாக குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். பாதுகாப்பு குறைபாடு பற்றி மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது’’ என்றார்.

.....தினகரன் 18.10.2010

nambi
18-10-2010, 01:09 PM
கடையம்: கடை யம் அருகே நேற்று காலை 2 வயது குழந்தை யை கழுத்து அறுத்துக் கொன்ற வாலிபர் அதை தடுத்த தாயையும் கத்தியால் குத்தினார். பின்னர் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்.

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவி தபசுன். இவர்களுக்கு நிவாஸ் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. ஆசிக் பெங்களூரில் பலசரக்கு கடை வைத்துள்ளார். மனைவியும், மகனும் மட்டும் கடையத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஆசிக் வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகன் மணி என்பவர் வந்தார். தபசுனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு அவர் தண்ணீர் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்போது அருகில் நின்ற குழந்தை நிவாஸை தூக்கிய மணி, தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார். கதறித் துடித்த தபசுன் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அவரின் கழுத்திலும் மணி கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தபசுன் படுகாயம் அடைந்தார். உடனே பயந்து போன மணி தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக் கொண்டு அதே இடத்தில் சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த தபசுனை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பை டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம் மற்றும் கடையம் போலீசார் மணியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

....தட்ஸ்தமிழ் 18.10.2010

nambi
18-10-2010, 01:13 PM
சென்னை, அக்.18 (டிஎன்எஸ்) தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மாணவர்-பெற்றோர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

சென்னையில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளைக் கண்டித்து பெற்றோரும், பல்வேறு அமைப்பினரும் அவ்வப்போது போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர். இதற்காக தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராய நகர் நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நேற்று (அக்.17) நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில;

* தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரங்களை எல்லாரும் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிக்கல்வி இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்.

* கல்விக்கட்டண விவரம் ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டண விவரங்களை பள்ளி தகவல் பலகையில் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூட்டமைப்பின் ஆலோசகரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன், பொதுசெயலாளர் சண்முகசுந்தரம், ஆலோசகர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். (டிஎன்எஸ்)
...சென்னை ஆன்லைன் 18.10.2010

nambi
19-10-2010, 11:51 AM
டெல்லி- காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக 25 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிக்காக ஸ்டேடியங்கள் கட்டியது, ஸ்டேடியங்களை புதுப்பித்தது, போட்டி உபகரணங்கள் வாங்கியது, போட்டி ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, போட்டி ஜோதி நடத்தப்பட்டது உள்பட அனைத்து ஏற்பாடுகளிலும் ஊழல் நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மத்தியத் தணிக்கைக் குழு, ஊழல் ஒழிப்புத்துறை, வருமான வரி துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் போட்டி அமைப்புக் குழுவினர் கையாண்டு வந்த பைல்களை வாங்கி ஆய்வு செய்தனர். தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகி றார்கள். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இதே பாணியில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி வேட்டையைத் தொடங்கினார்கள். டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதிகளில் 25 இடங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ஒப்பந்தம் வகையிலும் எவ்வளவு கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்ற தகவல்களையும் சேகரித்தனர். இது குறித்து எந்தவித தகவல்களையும் வெளியிட வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்ட 25 இடங்களில் பெரும்பாலானவை ஒப்பந்தக்காரர்களின் அலுவலகங்களாகும்.

சோதனைக்குள்ளான ஒப்பந்தக்காரர்களில் டெல்லி பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுதன்ஸ் மிட்டலும் ஒருவராவார்.

இவரும், இவரது உறவினர்களும்தான் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் காண்டிராக்டுகளை பெருமளவில் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மத்திய தணிக்கைத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த விசார ணைக் காகவே 100 பேர் கொண்ட அதிகாரிகள் படையை மத்திய கணக்கு தணிக்கைத் துறை உருவாக்கி இருக்கிறது.

இவர்கள் காமன்வெல்த் போட்டி நடந்த ஸ்டேடியங் கள், விளையாட்டு கிராமம், போட்டி அமைப்புக்குழு அலுவலகம் உள்பட 20 இடங்களில் உள்ள கணக்குகளை தணிக்கை செய்வார்கள். இந்த தணிக்கையில் ஊழல் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் திட்டமிட்டப்படி 3 மாதத்துக்குள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப் பிப்பார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கைத் துறை சார்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.
....தட்ஸ்தமிழ் 19.10.2010

nambi
19-10-2010, 11:53 AM
மும்பை : இந்தியாவின் வெளிநாட்டு கடன் மேலும் 4.1 சதவீதம் உயர்ந்து ரூ 12,28,950 கோடியானது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 1,080 கோடி டாலர் கடன் உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 48,600 கோடி!

குறுகிய கால அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்கள் 540 கோடி டாலரும், நீண்ட காலக் கடன்கள் 21,520 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளன.

வணிக கடன்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்களும் கணிசமாக உயர்ந்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் மாதாந்திர புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்த காலாண்டு ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்ட காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனில், வெளிநாட்டு வணிக கடன்கள் 27.3 சதவீத அளவிற்கும், குறைந்த கால கடன்கள் 21.2 சதவீத அளவிற்கும், பன்னாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்கள் 16.4 சதவீத அளவிற்கும் இருந்தது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் செய்த டெபாசிட் 17.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது என ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...தட்ஸ்தமிழ் 19.10.2010

nambi
19-10-2010, 11:55 AM
பெர்னே, அக்.18: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தேர்வு செய்வதில், ஃபிபா (சர்வதேச கால்பந்து சம்மேளனம்) உறுப்பினர்கள் இருவர் முறைகேடுகளில் ஈடுபட முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க ஃபிபா உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2010ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 2014ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது.

2018 மற்றும் 2022ம் ஆண்டு போட்டிகளை நடத்தும் நாடுகளை தேர்வு செய்ய டிசம்பர் 2ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பணம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்க, ஃபிபா உறுப்பினர்கள் முன்வந்ததாக பிரிட்டிஷ் பத்திரிகையான "சண்டே டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என்ற பேரில் சண்டே டைம்ஸ் நிருபர்கள் இருவர், ஃபிபா அதிகாரிகள் அமோஸ் அடமு, ரெனால்ட் தெமரி ஆகியோரை சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியை நடத்தும் நாடுகளை தேர்வு செய்யும் செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்.

நைஜீரிய நாட்டவரான அமோஸ், தேர்தலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்க 8 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் நைஜீரியாவில் கால்பந்து மைதானங்களை அமைத்து தருமாறு கேட்டுள்ளார். தஹிதி நாட்டவரான ரெனால்ட் நியூசிலாந்து நாட்டில் 23 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் கால்பந்து அகாதெமியை உருவாக்கி தந்தால் அமெரிக்காவுக்கு ஆதரவு உறுதி என தெரிவித்துள்ளார் என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என ஃபிபா தெரிவித்துள்ளது.
....தினமணி 19.10.2010

nambi
19-10-2010, 12:00 PM
புதுடெல்லி: விமானத்தில் ஏறியதும் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடும்படி விமான பணியாளர்கள் கூறிவிடுவார்கள். இறங்கும்போதும் முழுமையாக தரையிறங்கி வெளியே வந்த பிறகுதான் சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும். ஆனால் இனி தரையிறங்கி விமானம் ஓடு தளத்தில் சென்று கொண்டிருக்கும்போதே செல்போன்களை பயன்படுத்தலாம்.

இதற்கான அறிவிப்பை விமான போக்குவரத்து இயக்கக உயர் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி விமான பணியாளர் செல்போனை சுவிட்ச் ஆன் செய்ய அறிவுறுத்துவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினகரன் 19.10.2010

nambi
19-10-2010, 12:16 PM
நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வந்திருந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த வருட முற்பகுதியில் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் நோர்வேயின் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட சொல்ஹெயிமின் இந்த விஜயமே, யுத்தம் முடிவடைந்ததன் பின் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையும்.

இவ் விஜயத்தின் போது சொல்ஹெய்ம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசஉயர் அதிகாரிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
......தமிழ்வின் 19.10.2010

nambi
22-10-2010, 02:02 AM
சென்னை, அக்.21 (டிஎன்எஸ்) சென்னை அமைந்தகரை கஜலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் தம்பி அரசு. உடற்பயிற்சி ஆசிரியர். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவரின் மகன் வெங்கடேசுக்கு போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பெற்று இருந்தார்.

அதேபோல என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த ராணி என்பவரின் உறவினருக்கு சப்- இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் வாங்கி இருந்தார்.

ஆனால் சொன்னபடி இருவருக்குமே அவர் போலீஸ் வேலை வாங்கி கொடுக்கவில்லை. திடீரென தலைமறைவாகிவிட்டார். அப்போதுதான் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

எனவே இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தம்பி அரசுவை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அமைந்தகரை போலீசார் தம்பிஅரசுவை கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். (டிஎன்எஸ்)

....ஆறாம்திணை 21.10.2010

nambi
22-10-2010, 02:14 AM
ர்.

ஆனால் சொன்னபடி இருவருக்குமே அவர் போலீஸ் வேலை வாங்கி கொடுக்கவில்லை. திடீரென தலைமறைவாகிவிட்டார். அப்போதுதான் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து அமைந்தகரை போலீசார் தம்பிஅரசுவை கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். (டிஎன்எஸ்)

....ஆறாம்திணை 21.10.2010

சொன்னபடி....வாங்கித்தரவில்லை...சொன்னபடி.... வாங்கித்தருபவர்களும் இருக்கிறார்களா? கையூட்டு கொடுத்து வேலை பெறுவது சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டதா?

ஒரு வேலை கையூட்டு கொடுத்து விட்டு இங்கே பொதுமக்களிடம் சேவைக்கட்டணமாக (சர்வீஸ் சார்ஜ்) போக்குவரத்து குற்றத்திற்காக மாட்டினால் இவ்வளவு? புகார் கொடுத்தால் இவ்வளவு? புகார் பதிய வேண்டுமென்றால் இவ்வளவு? புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் இவ்வளவு? நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்றால் இவ்வளவு? நடைபாதைக் கடைக்காரர்களிடம் தின வசூல் (டிவிசன் வசூல்) என பல வகை வசூல்கள் எல்லாம் (கையூட்டுகள்) சட்டப்பூர்வமாக்கப்பட்டதா? அதற்கு முன்பணமாக இவ்வளவு கொடுக்கவேண்டும் என்று அரிதியிட்டுவிட்டார்களா?

இந்த தவறுகள் தெரிந்த விஷயம் தான்.... ஞாயப்படுத்துவது மாதிரியான செய்தி......?

என்னத்தை செய்தி போடறாங்க? சாமான்யருக்கு தெரிந்த சட்டம் கூட படித்த மேதாவிகளுக்குத் தெரியவில்லையே?

nambi
22-10-2010, 02:36 AM
பீகார் சட்டப் பேரவைக்கு இன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிநத நிலையில், 53 விழுக்காடு வாக்குப் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டப் பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதில் 47 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 635 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1.06 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. 10,454 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், சராசரியாக 53 விழுக்காடு வாக்குப் பதிவாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
...வெப்துனியா 22.10.2010

nambi
22-10-2010, 02:41 AM
புது தில்லி, அக்.21: சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுவரும் சுற்றுச்சூழல் பூங்காவை வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைக்கிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தில்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தார் ஸ்டாலின். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியது:

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜனவரியில் பிரதமர் சென்னைக்கு வருகிறார். அப்போது அடையாறில் 358 ஏக்கர் நிலப்பரப்பில் 100 கோடியில் அமைக்கப்பட்டுவரும் சுற்றுச்சூழல் பூங்காவையும் திறந்துவைக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். பூங்கா அமைக்கும் பணிக்கு இதுவரை 20 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பூங்காவை திறந்துவைக்க சென்னை வருமாறு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தை பிரதமரிடம் அளித்தேன். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்தார். இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை என்றார் ஸ்டாலின்.
அழகிரி மகன் திருமணத்துக்கு அழைப்பு: ஸ்டாலினுடன் மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரியும் பிரதமரைச் சந்தித்தார். அப்போது தனது மகன் துரை தயாநிதியின் திருமண அழைப்பிதழை பிரதமரிடம் வழங்கி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழகிரி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் அழகிரி சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். பிரதமருடனான சந்திப்பின் போது தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.
......தினமணி 22.10.2010

nambi
22-10-2010, 02:44 AM
http://www.dinamani.com/Images/article/2010/10/22/justicegovindarajan.jpg

சென்னை, அக். 21: தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தமிழக அரசின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும்
இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.

இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீஸýம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10 கட்டணம்

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை நடுநிலைப் பள்ளிக்கு ஆண்டுக் கட்டணமாக 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சமர்ப்பித்த லாப, நஷ்ட கணக்கு விவரங்களின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கு மேல்முறையீட்டில் கட்டணத்தை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்
532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது


அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கலாம்

நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் வசூலித்திருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குழுவின் இறுதி முடிவுக்கு இது கட்டுப்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.

பெற்றோர்கள் மகிழ்ச்சி: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை வெளியிட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எங்களது பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த விவரத்தைக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பலாம் என்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சாலமன் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்பதே இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. இந்தக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி குழு இறுதி முடிவு எடுக்கும் வரை பள்ளிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. இதுதொடர்பாக, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
.....தினமணி 22.10.2010

nambi
22-10-2010, 04:19 AM
புதுடில்லி: திருமணம் செய்யாமல், பாலியல் மற்றும் உடல் ரீதியாக மட்டும் குடும்ப நடத்தும் பெண், மனைவி ஆக முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது.


தமிழகத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் பேச்சியம்மாள் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். பேச்சியம்மாள், வேலுச்சாமியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். இதுகுறித்து குடும்பநல கோர்ட்டில் நடந்த வழக்கில் பேச்சியம்மாளுக்கு விவாகரத்து மற்றும் மாதம் ரூ.500 வழங்க உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேலுச்சாமி மேல்முறையீடு செய்தார்.

அதில் தமக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், பேச்சியம்மாளுடன் சில காலம் மட்டுமே வாழ்ந்து வந்ததாகவும், திருமணம் செய்யவில்லை என்றார். ஆகவே அவருக்கு நான் விவாகரத்து தர அவசியமில்லை என்றும் வாதிட்டார். இருவரின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில் பேச்சியம்மாளின் விவாகரத்து அளிக்க உத்தரவிட்ட கீழ்நீதிமன்றம் மற்றும உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்தது. மேலும் ஒரு பெண் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால், அவர் மனைவிக்கான உரிமை பெற முடியாது என்றும், மனைவிக்கான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால், அவர் அத்தகுதியை பெற முடியும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
.....தினமலர் 22.10.2010

nambi
22-10-2010, 04:33 AM
சென்னை: திமுகவுக்காக ஜெயலலிதாவைப் பகைத்துக் கொண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.
....தட்ஸ்தமிழ் 22.10.2010

nambi
22-10-2010, 04:36 AM
சென்னை : இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என்று சென்னை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையை நீதிபதி அக்பர்அலி வாசித்தார்.

அதில் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் கடந்த 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு டக்ளஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வஜ்ரவேலு எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து கோர்ட்டு விசாரணை நாளைய தினத்துக்கு தள்ளி வைத்தார். அன்றையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
....தட்ஸ்தமிழ் 20.10.2010

nambi
22-10-2010, 04:50 AM
சென்னை, அக்.21: சென்னை கொடுங்கையூரில் ரூ 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை வேலூரில் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த விவரம்:
சென்னை கொடுங்கையூர் அருள் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் கிருஷ்ணானந்த். சென்னை அண்ணா நகரில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி முடிந்த பின் சிறுவன் கிருஷ்ணானந்த், கொடுங்கையூரில் டியூஷனுக்கு செல்வது வழக்கம். இதேபோல, புதன்கிழமை இரவும் கிருஷ்ணானந்த் டியூஷனுக்கு சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் சிறுவன் கிருஷ்ணானந்த் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சிறுவனின் தந்தை சிவகுமாரிடம் செல்போனில் இரவு 9.30 மணியளவில் பேசிய மர்ம நபர், கிருஷ்ணானந்தை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ 5 லட்சம் கொடுத்தால் சிறுவனை விடுவித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். போலீஸôருக்கு தகவல் கொடுத்தால் சிறுவனை கொன்று விடுவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் அளித்தார்.

போலீசார், கடத்தியவரின் செல்போன் அழைப்பை வைத்து அவர் வேலூர் அருகே இருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து வேலூர் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அப்போது கடத்தப்பட்ட சிறுவனுடன் காரில் வந்தவர்களை வேலூர் செக்போஸ்ட் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி 2 பேரைக் கைது செய்தனர். சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான்.

...தினமணி 22.10.2010

nambi
22-10-2010, 04:55 AM
சிவபெருமான், விபூதி, கபாலம்.. இதெல்லாம் தலைப்பில் எட்டிப் பார்த்தால் கூட அபசகுனமாகப் பார்ப்பார்கள் சினிமாக்காரர்கள்.

ஆனால் நம் மண்ணின் கலைஞன் பாலாவுக்கும் சரி, அவரது இளவல் சசிகுமாருக்கும் சரி, அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல... 'கதைக்கு கனத்தைத் தரும் தலைப்பா... நான் கடவுள் என்றுதான் வைப்பேன்' என்ற பிடிவாதம்... வித்தை தெரிந்தவனிடம் மட்டுமே நிரந்தரமாய்க் குடி கொண்டிருக்கும் பிடிவாதம் அது.

இதோ, சசிகுமார் தனது அடுத்த படத்துக்கு ஈசன் என்றே தலைப்பு வைத்திருக்கிறார்.

என்ன கதை?

"கதை என்று ஒரு வடிவத்துக்குள் இதை அடக்கிவிட முடியாது. சொல்லித் தெரிந்து கொள்ளுவதை விட, பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் இது," என்கிறார் சசிகுமார் எடுத்த எடுப்பிலேயே.

மதுரை வாசம் வீசிய அவரது கதைக் களத்தில் முதல்முறையாக சென்னைத் தமிழ் பேசப் போகிறது.

"ஆமா...சென்னை நகரை மையப்படுத்தின கதைதான். ஈசன் அழிக்கிறவன் மட்டுமில்லையே... காக்கிறவனும் கூட. அதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்னு சொல்லணும். சமுத்திரக் கனி அட்டகாசம் பண்ணியிருக்கார். கூடவே தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனும்" என்கிறார்.

நாடோடிகளில் மனசைக் கவர்ந்த அபிநயாதான் இந்தப் படத்தின் நாயகி.

படத்தை முழுசாக எடுத்த முடித்த பிறகே தலைப்பை அறிவித்திருக்கிறார் சசி என்பது குறிப்பிடத்தக்கது.

சரி... இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து நடிகர் விக்ரம் ஏன் விலகினார்?

"ஒரு தயாரிப்பாளரா அவருக்கு இதுதான் முதல்படம். படத்தின் பட்ஜெட் அவரை கொஞ்சம் யோசிக்க வச்சிருக்கும்னு நெனக்கிறேன். அதை எங்கிட்ட வெளிப்படையா சொன்னார். நான் கொஞ்சமும் யோசிக்கல... நானே தயாரிச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்பவும் அவரும் நானும் நல்ல நண்பர்களே... இதுக்காக போய் சண்டை போட்டுக்குவாங்களா?" என்கிறார் மகா கூலாக!

சரி... படம் வெளிவந்த பிறகு அதன் வெற்றியைப் பார்த்து, அடடா நல்ல வாய்ப்பை விட்டுட்டோமே என்று வருத்தப்பட வேண்டிய நிலை விக்ரமுக்கு வரவேண்டும் என்று இருந்தால், அதை மாற்றவா முடியும்!
...........தட்ஸ்தமிழ் 17.10.2010

nambi
22-10-2010, 04:59 AM
திருச்சி: திருச்சி பாதிரியாரும், செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வருமான ராஜரத்தினம் மீது 3வதாக கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக புதிதாக ஒரு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த கட்டாயக் கருக்கலைப்பை நடத்திய பெண் டாக்டர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. மேலும், பாதிரியாரால் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை மிரட்டியதாக கூறப்படும் திண்டுக்கல் பாதிரியார், கருமாத்தூர் பாதிரியார், மதுரை பாதிரியார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவர் அக்டோபர் 11ம் தேதி திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ராஜரத்தினம் மீது புகார் கொடுத்தார்.

அதில் தன்னை பாதிரியார் ராஜரத்தினம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பம் அடைந்து கட்டாயமாக கருக்கலைப்பு செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து ராஜரத்தினம் தலைமறைவாகி விட்டார். அவர் மீது காவல்துறையினர் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் வழக்குகளைப் பதிவு செய்தனர். பிளாரன்ஸ் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கருக்கலைப்பு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கட்டாயப்படுத்தி அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக ராஜரத்தினம் மீது புதிய வழக்குப் போடப்பட்டுள்ளது.

கட்டாயமாக கருக்கலைப்பு செய்த திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்குப் பதிவாகவுள்ளது. இவர் மேரிக்கு 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது பாதிரியார் தனது காரில் மேரியையும், அவரது சகோதரி மற்றும் தோழியை அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் விட்டுச் சென்றாராம்.

இது போக மேரி, ராஜரத்தினம் மீது புகார் கூறியபோது அவரை கடுமையாக மிரட்டியதாக கூறப்படும் மதுரை, கருமாத்தூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.

இதுதவிர கருக்கலைப்பு நடந்தபோது அதற்கு சாட்சியாக இருந்த மேரியின் சகோதரி, தோழி ஆகியோரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளனர்.
....தட்ஸ்தமிழ்.தினத்தந்தி 22.10.2010

nambi
23-10-2010, 03:20 PM
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய போரின் இறுதிகட்டத்தில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச விதி மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நிபுணர் குழு ஒன்றை அமைத்தார்.

அந்தக் குழு தமிழர்களிடம் இருந்து சாட்சிகளையும், ஆதாரங்களையும் சேகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழர்கள் தமது சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அனுப்பி வைக்க ஏதுவாக மின்னஞ்சல் முகவரி ஒன்றை உருவாக்கியுள்ளது.

panelofexpertsregistry@un.org என்ற இந்த முகவரிக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை அனுப்பப்படும் தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், சாட்சியங்கள், ஆதாரங்கள் பத்திரமாகவும் இரகசியமாகவும் காக்கப்படும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

...வெப்துனியா 23.10.2010

nambi
23-10-2010, 03:25 PM
துபாய்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக் இணையதளம். ஆப்கன் வார் டைரி என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான 77 ஆயிரம் ஆவணங்களை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக். இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கடும் கண்டனமும், எச்சரிக்கை விடுத்தது.


விக்கிலீக் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மீது சுவீடனில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஈராக் போர் பற்றிய அமெரிக்க ராணுவ ரகசியங்களை அக்டோபர் மாதம் வெளியிடப் போவதாக விக்கிலீக் அறிவித்திருந்தது.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட அல்&ஜசீரா டி.வி, கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நடந்த ஈராக் போரில், பொதுமக்கள் 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் பலியானதாக விக்கிலீக் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியது. மேலும், ஈராக் மக்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததும், உண்மையான பலி எண்ணிக்கையை அமெரிக்கா மறைத்ததும் வீக்கிலீக் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளதாக கூறியது.

இச்செய்தி அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்காவுக்கும், அதன் தோழமை நாடுகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தனி நபரோ அல்லது நிறுவனமோ தகவல் வெளியிடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், ராணுவ ரகசியங்களை வெளியிடுவது அமெரிக்க படையினருக்கும், ஈராக் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
..தினகரன் 23.10.2010

nambi
23-10-2010, 03:40 PM
சென்னை: போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனை விவகாரம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கொடுங்கையூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானதால், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் நடத்திய அதிரடி விசாரணையில் போலி மற்றும் காலாவதி மருந்துகளை விற்பனை செய்து வந்த கும்பலின் முக்கிய குற்றவாளியான பிரதீப் சோர்டியா, மீனாட்சிசுந்தரம் உட்பட 19 பேர் கைது செய்யப்பட் டனர். 6 பேர் சரண் அடைந்தனர். 13 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான மீனாட்சிசுந்தரத்துக்கு சொந்தமான காலாவதி மற்றும் போலி மருந்துகளை விற்பனை செய்து வந்த ‘’வசந்த மீனா எண்டர்பிரைசஸ்” மற்றும் “மீனா ஹெல்த் கேர்” ஆகிய இரண்டு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
...தினகரன் 23.10.2010

nambi
23-10-2010, 03:50 PM
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் பள்ளிகளுக்கும் கட்டணத்தை நிர்ணயித்துள்ளதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த கமிட்டியின் தலைவரான நீதிபதி கோவி்ந்தராஜன் பதவி விலகுவதாக தகவல் வெளியானதால் பரபரப்பு கூடியது.

தனியார் பள்ளிக்கூடங்கள் கணக்கு வழக்கே இல்லாமல் கட்டணம் வசூலித்து வருவதாக அரசுக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு நபர் கமிட்டியை நியமித்தது. இந்த கமிட்டி பல்வேறு பள்ளி நி்ர்வாகங்கள், பெற்றோர்களிடம் கருத்தை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

இக்கமிட்டி அளித்த பரிந்துரையின்படி புதிய கட்டண நிர்ணயத்தை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதை பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் ஏற்கவில்லை. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடின. உயர்நீதிமன்றம், இதற்கு இடைக்கால தடை விதித்தது.

இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த தடை உத்தரவு விலக்கப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு நீக்கத்தை பள்ளிக்கூடங்கள் அமல்படுத்தாமல் கூடுதல் கட்டணத்தையே தொடர்ந்து வசூலித்து வருகின்றன. இதுதொடர்பாக தினசரி தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் பெற்றோர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதும், மோதல்கள் மூளுவதுமாக உள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர்கள் கோரி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம்தான் இந்த கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த பட்டியலைப் பார்த்த பலருக்கும் பெரும் குழப்பம். காரணம், மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

மொத்தம் 10,934 பள்ளிகளுக்குரிய கட்டண விவரம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாணவர்களிடம் எந்த வகையான கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனவும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில், அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன கேந்திரி வித்யாலயா பள்ளிக்கு முதல் வகுப்பிற்கு ரூ.3,005, பிளஸ்-2விற்கு ரூ.9,600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு நடத்தும் பள்ளியாகும்.



இவை மத்திய அரசு நேரிடையாக நடத்தும் பள்ளிகள். 8-ம் வகுப்பு வரை மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை. இலவச கல்விதான். எஸ்.சி., எஸ்.டி. மாணவ- மாணவிகளுக்கு பிளஸ்-2 வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



இது பற்றி நீதிபதி கோவிந்தராஜனிடம் தெரிவித்தபோது இதுகுறித்த ஆட்சேபனை கடிதத்தை கமிட்டிக்கு அனுப்புமாறும் அதை கருத்தில் கொண்டு நடந்த தவறை திருத்தி கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக கூறினார்.


இந்த நிலையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்துள்ளதாகவும், தனது உடல்நிலை காரணமாக கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோவிந்தராஜன் அரசுக்குத் தகவல் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு குழப்பத்தை நீக்கி, பெற்றோர்களின் விரக்தியைப் போக்க வேண்டும், தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

..தட்ஸ்தமிழ் தினமலர்...23.10.2010

nambi
23-10-2010, 03:55 PM
புதுடெல்லி : தமிழகத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மீது பச்சையம்மாள் என்பவர் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வேலுச்சாமியுடன் பல ஆண்டுகள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததால் தனக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவிட கோரினார். இந்த வழக்கில் பச்சையம்மாளுக்கு மாதம் ரூ. 500 வழங்கும்படி வேலுச்சாமிக்கு உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து வேலுச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, டி.எஸ்.தாகூர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், திருமணம் செய்யாமல் கணவன் & மனைவியாக வாழும் பெண்கள், ஜீவனாம்சம் பெற 4 நிபந்தனை விதித்தது.

மேலும், ‘ஒரு ஆண் தனது பாலியல் உறவு விருப்பத்தை பூர்த்தி செய்யவோ அல்லது வேலையாளாகவோ ஒரு பெண்ணை ‘வைத்துக் கொண்டு’, அவருக்கு வேண்டிய எல்லா வசதிகளை செய்து கொடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், அவர்கள் இருவரையும் கணவன் & மனைவியாக கருத முடியாது’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். இதில், ‘வைத்துக் கொண்டு’ என்பதை குறிப்பதற்காக ‘கீப்’ என்ற ஆங்கில வார்த்தையை நீதிபதிகள் பயன்படுத்தினர்.

மத்திய அரசு வழக்கறிஞரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், ‘கீப்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நீதிபதிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, தாகூர் முன்னிலையில் நேற்று ஆஜரான இந்திரா, ‘‘நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பயன்படுத்திய ‘கீப்’ என்ற வார்த்தை மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த 21ம் நூற்றாண்டில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு எதிராக, நாட்டின் உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்?

இதேபோல், ஒரு ஆணை தாங்கள் ‘கீப்’பாக வைத்துக் கொண்டு இருப்பதாக பெண்கள் கூறலாமா? இந்த வார்த்தையை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும். இனிமேல் இந்த நீதிமன்றத்தில் ஆஜராக நான் விரும்பவில்லை. அதில் இருந்து விலகுகிறேன்’’ என்றார். அப்போது நீதிபதி தாகூர் குறுக்கிட்டு, ‘‘கீப் என்ற வார்த்தையை விட ‘கன்குபைன்’ (பாலியல் விருப்பத்தை நிறைவேற்றும் பெண்) என்ற வார்த்தை பொருத்தமாக இருக்குமா?’’ என்று இந்திராவிடம் கேட்டார். அதற்கு, ‘கீப்’ என்ற வார்த்தைக்குதான் எதிர்ப்பு தெரிவித்தேன்’’ என்று இந்திரா கூறினார்.

பெண் உரிமைக்கு போராடுபவர்

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான இந்திரா ஜெய்சிங், பெண்கள் உரிமைக்காக போராடுபவர். குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசு அமைத்த குழுவில் இடம் பெற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
....தினகரன் 23.10.2010

nambi
23-10-2010, 04:18 PM
சரியான பொருளுள்ள வார்த்தைகள் கூட சமூக வழக்கத்தினால் தவறான வார்த்தையாக மாறிவிடுகிறது....''மாமா'' என்று கூப்பிடுவதை கூட தமிழ், ஆங்கிலம் (அங்கில்) இரண்டிலுமே நெருடலான கண்ணோட்டம் தான் சமூகத்திடம் உள்ளது.....மாறுபட்டு பார்ப்பவர்கள் பாரத்து கொண்டுதான் இருப்பார்கள்.

''இழவு'' என்றால் கூட தவறான சொல்லாகத்தான் எடுத்து கொள்ளப்படுகிறது...இது எரிச்சல் என்பதே காலங்கலாமாக வழங்கப்பட்டு வந்தது நடுவில் வேறுமாதிரியான பொருளை சமூத்திடையே உணர்த்தியது. பிள்ளைகளை ''இழவு கொட்டாதே '' என்று வையும் தாய்மார்களை இன்றும் காணலாம், என்றைக்கும் காணலாம்.

சட்டத்தின்படி வழங்கப்பட்ட வார்த்தையான ''concubine'' என்ற வார்த்தை தரும் உடபொருளைவிட ''வைத்துக்கொண்டு'' எனபதற்கான ஆங்கில வார்த்தை "keep" இது பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் வழக்குரைஞர் நீதிபதிகளை பார்த்து கேட்டது ஞாயமானது தான், குறிப்பேட்டில் இருக்கவேண்டியது சற்று சிந்திக்கவேண்டியதும் கூட.... போகிறப் போக்குல ஆண்களுக்கும்......வாங்கி கொடுத்து போய் விட்டார்...:D

எப்படியோ! இந்த தீர்ப்பை பெண்கள், ஆண்கள் என இருபாலருமே பரவலாக வரவேற்கின்றனர் என நினைக்கிறேன்....

nambi
26-10-2010, 10:40 AM
சென்னை, அக்.26: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் போரில் இருவரும் கொல்லப்பட்டதால் அவர்களது பெயர்களை சென்னை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐயின் வேண்டுகோளை ஏற்று தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

1991 மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ்காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்திய சட்டவிதிகளின்படி குற்றவாளியின் இறப்புக்குப் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவிழந்துவிடும். தற்போது பிரபாகரன், பொட்டுஅம்மான் இருவர் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் உயிருடன் இல்லை என்பதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது.

மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலரும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக கூறிவந்த நிலையில் அவர்களின் பெயர்களை நீக்கும் நீதிமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

...தினமணி 26.10.2010

nambi
26-10-2010, 10:47 AM
சவுதி அரேபியாவில் குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நபீக்கின் மேன்முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அது உறுதி செய்துள்ளது.

தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா கொலை செய்ததாக 2007 ஆம் ஆண்டில் டவாதமி உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

அதனை எதிர்த்து அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை தற்போது சவுதி உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மாத்திரமே ரிஷானா தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று அவரது விவகாரங்களை கவனித்து வருகின்ற சமூக சேவகரான டாக்டர். துரத்துள் கிபாயா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ரிஷானா தற்போது டவாதமி சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த சனிக்கிழமை தான் அவரைச் சென்று பார்த்தபோது அவரது உடல்நிலை மற்றும் மனநிலை நன்றாக இருந்ததாகவும் டாக்டர் கிபாயா கூறியுள்ளார்.

ரிஷானா சவுதி செல்லும் போது ஒரு சிறுமியாக, பணிப்பெண்ணுக்கான வயதை எட்டாதிருந்ததாக கூறியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு உலக நாடுகள் சவுதி அரேபியாவை வலியுறுத்த வேண்டும் என்றும் ஒரு அறிக்கையில் கேட்டுள்ளது.

இதற்கிடையே, ரிஷானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

ரிஷானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை சவுதி உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
...பிபிசி 22.10.2010

nambi
26-10-2010, 10:54 AM
மெல்போர்ன், அக்.26: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டு மீது ஷூ வீசப்பட்ட சம்பவத்துக்கு தற்போதைய பிரதமர் ஜூலியா கில்லார்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாரையும் மரியாதைக்குறைவாக நடத்தும் இதுபோன்ற செயலுக்கு மன்னிப்பே கிடையாது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் "ஏபிசி" தொலைக்காட்சியில் பிரபலமான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹோவர்ட் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அவரை பத்திரிகையாளர் டோனி ஜோன்ஸ் பேட்டி எடுத்தார்.

இந்நிலையில், இராக் நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி வைத்தது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அங்கு ராணுவத்தை அனுப்பியது சரியான முடிவு தான் என்று ஹோவர்ட் தெரிவித்தார். அப்போது, திடீரென பார்வையாளர்களில் ஒருவர் தனது இரு ஷுக்களையும் கழற்றி ஹோவர்ட் மீது வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், அவை ஹோவர்ட் மீது படவில்லை. இதையடுத்து, ஷு வீசிய நபர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்

...தினமணி 26.10.2010

nambi
26-10-2010, 11:01 AM
சென்னை, அக்.26: 1996-ம் ஆண்டு தான் எழுதிய சிறுகதையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர் என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் தனது வழக்கறிஞர்களுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் செய்தார்.

1996-ல் ஜூஹிபா என்ற பெயரில் தான் எழுதிய சிறுகதை ஒரு இதழில் வெளியானது. அந்த சிறுகதையில் இருந்து எந்திரன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடன் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக தமிழ்நாடன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
...தினமணி 26.10.2010

nambi
26-10-2010, 11:03 AM
கரூரில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நமீதா கலந்துகொள்ளச் சம்மதித்திருந்தார்.

அதற்காக அவர் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும் டிரைவர் உடுப்பு அணிந்த ஒருவர் வந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல வந்த டிரைவர் நான் தான் என்று சொல்ல, அவருடன் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

ஆனால், உண்மையிலேயே நமீதாவை ஏற்றிச் செல்ல வந்த டிரைவர் இதைக் கவனித்து விழா குழுவினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டார்.

பிடிப்பட்ட நபர் தான் நமீதாவின் ரசிகர் என்று சொல்ல, மச்சான்களின் வேகத்தைப் பார்த்து கலங்கிப் போயிருக்கிறார் நமீதா.

...வெப்துனியா 26.10.2010

nambi
26-10-2010, 11:05 AM
பழனி, அக். 25: மகள் ரகசிய திருமணம் செய்து கொண்டதால், அவமானம் அடைந்து, பழனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

பழனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (50). பழனி காந்தி மார்க்கெட்டில் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (45), மகள்கள் தேவி (25), ஷாலினி (23), மகன் பாண்டி (21). மகள்கள் இருவரும் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து வந்தனர். மகன் பாண்டி, ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார்.

தேவியும், பழனி சத்யா நகரைச் சேர்ந்த மாரியப்பனும் சில மாதங்களாகக் காதலித்து வந்ததாகவும், சில நாள்களுக்கு முன் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த கோதண்டபாணி, மகளை அழைத்து விசாரித்ததாகத் தெரிகிறது.

இந் நிலையில், தேவி மாரியப்பனுடன் சென்று விட்டாராம். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய கோதண்டபாணி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தென்னைமர மாத்திரையை குளிர்பானத்தில் கலந்து, அனைவரும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

முன்னதாக, தன் மனைவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, வாடிப்பட்டியில் உள்ள அவரது சகோதரருக்கு கோதண்டபாணி தொலைபேசியில் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலையில் உறவினர் வந்து பார்த்தபோது அனைவரும் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸôர் வந்து பார்வையிட்டனர். அப்போது கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், அவர்களது சாவுக்கு மகளின் ரகசிய திருமணமே காரணம் என்றும், மகளைத் தவறாக வழிநடத்தி தங்கள் சாவுக்குக் காரணமானவர்கள் என்று சிலரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் டி.எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
...தினமணி 26.10.2010

nambi
26-10-2010, 11:08 AM
பெங்களூர், அக்.26: கர்நாடக அமைச்சர்கள் ஜனார்தன ரெட்டி, அவரது சகோதரர் கருணாகர ரெட்டி உள்ளிட்ட ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் 7 பேரின் வீடுகள், அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தில்லியில் இருந்து 3 குழு, சென்னையில் இருந்து 1 குழு உள்ளிட்ட 10 குழு இந்தோ-திபெத் எல்லை போலீசாரின் உதவியுடன் இந்த சோதனையை நடத்தியது

ஹோஸ்பேட்டையில் 4 சுரங்கங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், மாலை வரை சோதனை தொடரலாம் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
...தினமணி 26.10.2010

nambi
26-10-2010, 11:12 AM
கொழும்பு, அக்.25: தில்லி காமன்வெல்த் போட்டியில் குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் மஞ்சு வன்னியராச்சி ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

÷"காமன்வெல்த் விளையாட்டு ஊக்க மருந்து தடுப்பு கமிட்டி அனுப்பியுள்ள கடிதத்தில், வன்னியராச்சி ஊக்க மருந்து எடுத்துக்கொண்டது சாம்பிள் - ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதம் வன்னியராச்சி முன்னிலையில் இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மேற்கொண்டு குத்துச்சண்டை சம்மேளனமே முடிவெடுக்க முடியும்' என இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஹேமசிரி பெர்ணான்டோ திங்கள்கிழமை தெரிவித்தார்.

÷காமன்வெல்த் வரலாற்றில் 72 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை முதன்முறையாக தில்லி போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றது.

இந்நிலையில் சாம்பிள்- பி சோதனையிலும் வன்னியராச்சி ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது உறுதி செய்யப்பட்டால், அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்படும்.

மேலும், அவருக்கு 2 ஆண்டுகள் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்வதிலிருந்து தடை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவித்தன.

÷தில்லி காமன்வெல்த் போட்டியில் 3 நைஜீரிய வீரர்கள், தலா ஒரு இந்தியர், இலங்கை வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 26.10.2010

nambi
26-10-2010, 03:38 PM
http://www.dinamani.com/Images/article/2010/10/26/octopus.jpg


பெர்லின், அக். 26: கடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் முடிவுகளைக் கணித்துக் கூறிய ஆக்டோபஸ் பால் ஜெர்மனியில் இன்று இறந்தது.

தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் முடிவுகளை ஆக்டோபஸ் பால் கணித்துக் கூறியது. பால் இருந்த தொட்டிக்குள் போட்டியில் பங்குபெறும் அணிகளின் தேசியக் கொடிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டன. எந்த நாட்டின் கொடி இருக்கும் பக்கத்தில் பால் போய் அமர்கிறதோ அந்த நாடே வெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டது. ஜெர்மனி கலந்து கொண்ட போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவற்றின் முடிவுகளை பால் கணித்தது. பாலின் அனைத்துக் கணிப்புகள் அப்படியே பலித்தன.

இதனால், இந்த ஆண்டு உலகக் கோப்பையில் நட்சத்திர விளையாட்டு வீரர்களைக் காட்டிலும் இந்த ஆக்டோபஸே பரபரப்பாகப் பேசப்பட்டது. இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பெயின் அணி பாலை தங்கள் நாட்டுக்கு அழைத்துவர பெரும் முயற்சி எடுத்துக் கொண்டது. எனினும் பால் வளர்க்கப்பட்ட பண்ணை நிர்வாகம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை

பாலின் உடலை முழு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை பண்ணை நிர்வாகம் செய்து வருகிறது.
.....தினமணி 26.10.2010

nambi
27-10-2010, 06:27 AM
புதுதில்லி, அக். 26: செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி நவம்பர் 1-ல் அறிமுகப்படுத்தப்படும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக இது ஹரியாணாவில் மட்டும் அமலுக்கு வரும்.

செல்போன் நிறுவனம் வழங்கும் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றாலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதையடுத்து, வேறு செல்போன் நிறுவனத்தின் சேவையில், ஏற்கெனவே இருக்கும் அதே செல்போன் எண்ணைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தது.

இந்த வசதி வரும் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக ஹரியாணா மாநிலத்தில் மட்டும் இந்த வசதி கிடைக்கும் எனவும் படிப்படியாக நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

இந்த வசதி நடைமுறைக்கு வருவதாக ஏற்கெனவே 3 முறை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நாளில் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

....தினமணி 27.10.2010

nambi
27-10-2010, 06:29 AM
திருப்பூர் : "இயன்றவரை தூய தமிழில் பேசுங்கள்' என, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்.பி., அருண் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, கட்டுப்பாடு அறையில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன்கள் வரை போலீசார் தூய தமிழில் பேச ஆரம்பித்துள்ளனர்.

போலீஸ் ஸ்டேஷன்களில், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. வழக்குகள் தொடர்பாகவும், வழக்குப்பதிவு குறித்தும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த மைக் அறிவிப்புகளிலும், 90 சதவீதம் ஆங்கில வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன.கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளின் உத்தரவை தெரிவிக்கும்போதும், மற்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல்களை பரிமாறும்போதும் ஆங்கிலச் சொற்களையே போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.மேற்கு மண்டல காவல் துறையில், கூடுமானவரை ஆங்கிலத்தை தவிர்த்து தூய தமிழில் பேசுமாறு, ஐ.ஜி., சிவனாண்டி உத்தரவிட்டுள்ளார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், திருப்பூர் எஸ்.பி., அருண், போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுமானவரை போலீசார் தூய தமிழில் பேசுமாறு அறிவுத்தியுள்ளார்.கடந்த இரு நாட்களாக, போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார், தூய தமிழில் பேசி வருகின்றனர்.

திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, தூய தமிழில் பேசுவது துவங்கியுள்ளது.மைக்கில், "வடக்கு காவல் நிலையம், தொடர்பு கொள்ளுங்கள்... கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசுகிறோம்.... கண்காணிப்பாளர் உத்தரவு, துணை கண்காணிப்பாளர் அழைக்கிறார். அலைபேசியில், ஆய்வாளரை தொடர்பு கொள்ளுங்கள்; விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டீர்களா, இத்தகவலை உடனடியாக தங்கள் உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது,' என்பது போன்ற உரையாடல்களில் போலீசாருடனும், போலீஸ் ஸ்டேஷன்களுடனும் போலீசார் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

இதுமட்டுமின்றி, மொபைல் போன்களில் பேசும் போலீசாரும், நேரில் சந்தித்துக் கொள்ளும் போலீசாரும்,""வணக்கம் ஐயா, ஓய்வாக இருக்கிறீர்களா? பணியில் உள்ளீர்களா, தகவலை தெரிந்து கொண்டீர்களா; வழக்கு தொடர்பான விசாரணையில் என்ன தகவல் உள்ளது,'' என ஒருவருக்கொருவர், தூய தமிழில் பேசிக் கொள்வது, வித்தியாசமாக உள்ளது.

சுருக்கமாக, ஆங்கில வார்த்தைகளில் இதுவரை தகவல்களை மைக்குகளில் உடனுக்குடன் பரிமாறிக் கொண்ட போலீசார் சிலர், தூய தமிழில் பேச திணறுகின்றனர். தூய தமிழில் வார்த்தைகளின் நீளம் அதிகமாக இருப்பதால் ஒரு தகவலை சொல்லி முடிக்கவே, சில நிமிடங்கள் கூடுதலாக ஆகிறது.அனுபவம் வாய்ந்த போலீசார், ஆங்கில வார்த்தைக்குரிய தமிழ் வார்த்தைகளை உடனுக்குடன் தெரிவித்து விடுகின்றனர். பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளே பேசி வந்த போலீசார், தமிழ் வார்த்தைகள் தெரியாமல் சில விநாடிகள் திணறி, பின் சமாளித்து, கொச்சை தமிழில் பதில் கூறுகின்றனர். இன்னும் சிலர், ஆங்கிலத்திலேயே கூறி முடிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், "தூய தமிழில் பேசுவது இனிமையாக உள்ளது; ஒருவர் தூய தமிழில் பேசும்போது, எதிரில் பதில் அளிப்பவரும் எளிதில் தூய தமிழுக்கு மாறி விடுகிறார். ஆங்கிலத்தில் மிக பரிச்சயமான வார்த்தைகளை, தமிழில் பேசுவது சிரமம் என்றாலும், நாளடைவில் இது பழக்கமாகி விடும்,' என்றனர்.

தூய தமிழில் பேசுவதை உத்தரவாக இல்லாமல், இயன்றவரை பேச முயற்சியுங்கள் என்று மட்டுமே போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார். எனினும், போலீசார் மிகுந்த ஆர்வத்துடன் தூய தமிழில் பேசி வருவதால், காவல் நிலையங்களில் ஒலிக்கிறது தமிழ்.


...தினமலர் 27.10.2010

nambi
27-10-2010, 06:33 AM
ஆரணி, அக். 26: ஆரணி அருகே நகை வியாபாரி செவ்வாய்க்கிழமை சென்ற காரை வழிமறித்து | 2 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

அதில் இருவர் பிடிபட்டனர். தலைமறைவானர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

நகை வியாபாரி

விழுப்புரம் காமராஜ் தெருவை சேர்ந்தவர் கெüதம் சேட். இவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் விழுப்புரத்தில் இருந்து 3 பைகளில் நகைகளை எடுத்துக் கொண்டு காரில் ஆரணி நோக்கி செவ்வாய்க்கிழமை வந்தார்.

விழுப்புரம், ஆனாங்கூரை சேர்ந்த செல்வம் (42) காரை ஓட்டி வந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த நகை செய்யும் கதிர்வேல் (30) என்பவரும் உடன் வந்தார்.

காரை வழிமறித்து கொள்ளை:

இவர்கள் வந்த காரை சேத்துப்பட்டு-ஆரணி சாலையில் உள்ள காட்டேரி கிராமத்தில் ஒரு கும்பல் வழிமறித்து காரின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளது. கெüதம்சேட்டை அரிவாளால் வெட்டியதோடு, இரும்பு கம்பாலும் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த 12 கிலோ தங்க நகைகளையும் அக்கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கொள்ளையர்களை பிடிக்க முயன்ற கிராம மக்கள்:

இதைப்பார்த்த கிராம மக்கள் அந்தக் கும்பலை விரட்டியுள்ளனர். அப்போது கையில் வைத்திருந்த அரிவாள், கம்புகளை காட்டி மிரட்டிவிட்டு, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இரு கார்களில் தப்பிச் சென்றனர்.

இவர்களின் கார்கள் விண்ணமங்கலம் வழியாக ஆரணிச் சாலையில் சென்றபோது, அப்பகுதியினர் சைக்கிள்கள், பைக்குகளை சாலையின் குறுக்கே நிறுத்தி அவற்றை தடுத்து நிறுத்த முயன்றனர். தேவிகாபுரத்திலும் பொதுமக்கள் வழிமறிக்க முயற்சித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி பன்னீர்செல்வம் தலைமையில் இக்கொள்ளை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் உஷார்படுத்தப்பட்டன.

இருவர் கைது

இந்நிலையில், திண்டிவனம், வெள்ளிமேடைபேட்டை (சந்தைமேடு) பகுதியில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பை நிறைய நகைகள் கைப்பற்றப்பட்டன. மீதமுள்ள 2 பைகளுடன் தலைமறைவானவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

காயமடைந்த கெüதம் சேட்டு சேத்துப்பட்டு ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

...தினமணி 27.10.2010

nambi
28-10-2010, 02:45 AM
வேலூர், அக். 27: கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் திமுகவினருக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

வேலூர் கோட்டையின் தெற்குப்புறத்தில், சுற்றுலா நிதி ரூ. 83 லட்சத்தில் 15 ஏக்கர் பரப்பில் பெரியார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 கிலோ மீட்டர் சுற்று கொண்ட நடைபாதை, புல்வெளிகள், மின் விளக்குகள், வண்ண நீரூற்றுகள், ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டு, அதில் காற்றடைத்த பலூனில் குழந்தைகள் நடக்கும் வண்ணம் வாட்டர் பால் விளையாட்டு, குழந்தைகள் தானே இயக்கும் வகையில் பேட்டரியினாலான சிறிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கேட்டிங், வில் அம்பு விளையாட்டு, துப்பாக்கி சுடுதல், பல்வேறு வகையான ஊஞ்சல்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை புதன்கிழமை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

"கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் திமுகவினர் மட்டுமே பயன்பெறுகின்றனர் என்பது தவறான குற்றச்சாட்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பின்றி இவ்வாறு கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டை உரிய ஆதாரங்களோடு அவர் நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். இத்திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் பொறுக்க முடியாமல் ஜெயலலிதா இவ்வாறு கூறுகிறார்' என்றார் மு.க.ஸ்டாலின்.

இவ்விழாவில், அமைச்சர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

....தினமணி 28.10.2010

nambi
28-10-2010, 02:50 AM
மும்பை: ஒரு மாத கைக்குழந்தையை பாத்ரூம் அறையிலிருந்து தாயே தூக்கி எறிந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைச் சேர்ந்த மனிஷ்-தீபிகா தம்பதிக்கு சென்ற மாதம் இரட்டை குழந்தை (ஆண், பெண்) பிறந்தது. இதில் பெண் குழந்தையை மட்டும் மனிஷ்- தீபிகா தம்பதியினர் ஆரம்பத்திலிருந்து, வெறுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக தாய் தீபிகா உட்பட குழந்தைகளை மனிஷ் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

தீபிகா நடத்திய நாடகம்!

அறையில் திடீரென கூச்சலிட்ட தீபிகா தனது பெண் குழந்தையை யாரோ திருடி சென்றுவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மருத்துவமனை முழுவதும் குழந்தையை தேடிப் பார்த்தனர். குழந்தையை யாரும் திருடிச் செல்ல முடியாது என்று ஒரு நேரத்தில் யோசித்த மருத்துவர்கள் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் ரகசிய கேமரா மூலம் தீபிகா அறையில் நடந்தது குறித்து பார்த்து வந்தனர்.

குழந்தையை டவலில் கட்டி தூக்கி எறிந்த தீபிகா!

பெண் குழந்தையை தீபிகா டவலில் கட்டி பாத் ரூம்மிற்கு எடுத்துச் சென்றார். 1 மணி நேரத்திற்குப் பிறகு வெளிவந்த தாய் தீபிகாவின் கையில் குழந்தை இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக பரிசோதித்து பார்த்ததில் பாத்ரூம் அறையின் ஜன்னலுக்கு அருகிலிருக்கும் சாக்கடையிலிருந்து குழந்தையைப் பிணமாக எடுத்தனர்.

போலீசாரிடம் புகார்!

உடனடியாக மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விரைந்த வந்த போலீசார் தாய் தீபிகாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். குற்றத்தை ஒப்புக்கொண்ட திபிகா, குழந்தையை பாத்ரூம் ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தது நான் தான் என்று கூறினார்.

தீபிகா கைது!

இதனையடுத்து தீபிகாவை போலீசார் கைது செய்து குழந்தையை கொன்றதற்கான காரணத்தை விசாரித்து வருகின்ற நிலையில் தீபிகாவிடமிருந்து ஆண்குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

மனிஷிடம் விசாரணை!

மனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண் குழந்தையை மட்டும் ஆரம்பத்திலிருந்து வெறுத்து வந்ததாக கூறிய மனிஷ், பெண் குழந்தையை வளர்ப்பதில் எந்தவித தயக்கமும் காட்டவில்லை என கூறியுள்ளார்.

பெண் உரிமைக்காக பெண் அமைப்பினரும் குரல் கொடுக்கும் வகையில், தாயே பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
..தினகரன் 28.10.2010

nambi
28-10-2010, 02:56 AM
ஜம்மு, அக். 27: காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தையொட்டிய எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினர். இது இந்த வாரத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல். கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர் மோரே ஷேக்தாக் உயிரிழந்தார்.

÷பூஞ்ச் மாவட்ட கிருஷ்ணகாதி பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பாகிஸ்தான் வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசினர். மேலும் இந்திய நிலைகளை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

÷இந்தத் தகவலை இந்திய ராணுவ அதிகாரி சதேஷ் துவா தெரிவித்தார்.

இந்தியப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இரவு வரை இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தியத் தரப்பில் சேதம் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

÷கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் இதேபோன்று தாக்குதல் நடத்தினர். சரமாரியாக சுட்டதோடு ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்கினர்

÷இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக உள்ள தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காகவே பாகிஸ்தான் படையினர் திடீரென தாக்கியதாகத் தெரிகிறது.

÷இம் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது இது நான்காவது முறை. ஏற்கெனவே அக்டோபர் 1-ம் தேதி மற்றும் 2-ம தேதி கிருஷ்ணகாதி மற்றும் ஜாலாஸ் துணைக் கோட்டப் பகுதியில் தாக்குதல் நடத்தினர்.

செப்டம்பர் 28, 29-ம் தேதிகளில் கெர்னி மற்றும் கேஜி துணைக் கோட்டப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு: இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலுக்கு ஏற்கெனவே கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பை சிறிதும் பொருள்படுத்தாமல் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

...தினமணி 28.10.2010

nambi
28-10-2010, 02:57 AM
புதுடில்லி: ரயில் பயணிகளுக்கும் விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா இதனை தெரிவித்தார். ரயில்வே அமைச்சகமும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் இணைந்து இக்கார்டை அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் ரயில் பயணிகள் புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களிலும் பயன்பெற முடியும். இத்திட்டத்தை ஆன்-லைன் மூலமாகவும் பெற முடியும். இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்

...தினமலர் 28.10.2010

nambi
28-10-2010, 03:00 AM
புனே, அக்.27 (டிஎன்எஸ்) கால்பந்து கிளப்புகள் மோதும் போட்டி உலகில் மிகவும் பிரபலமானதாகும். அதில் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கால்பந்து கிளப்புகள் மிகவும் புகழ் பெற்றது.

முன்னணி வீரர்களை கால்பந்து கிளப்புகள் கோடிக்கணக்கான பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளன.

இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் கிளப்புகளில் ஒன்று பிளாக்பர்ன் ரோவர்ஸ், இங்கிலாந்து நாட்டில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்து கிளப் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ளது.

இந்த கால்பந்து கிளப்பை இந்திய நிறுவனம் ஒன்று வாங்க முடிவு செய்துள்ளது. புனேயை மையமாக கொண்ட வி எச் குரூப் பிளாக்பர்ன் ரோவர்ஸ் கிளப்பை வாங்குகிறது.

இது தொடர்பாக அந்த கிளப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வி எச் குரூப்புக்கு ரூ.325 கோடியில் விற்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் இது குறித்து முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்.

இந்தியாவில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கவும், வரும் 2030-ல் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கேற்ற சூழலை உருவாக்கவும், இந்திய நிறுவனங்கள் கால்பந்து அணிகளை வாங்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் லிவர்பூல், நியூகேஸில் அணிகளை வாங்க முயற்சித்து வருகின்றனர். (டிஎன்எஸ்)

...ஆறாம்திணை 28.10.2010

nambi
28-10-2010, 03:03 AM
கோலாலம்பூர், அக்.27: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் பிரச்னை: மலேசிய வாழ் தமிழர்களால் ஏற்படும் பிரச்னைகளை மலேசியா திறம்பட நிர்வகிக்கும் என நம்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்றும் இதைத் தாங்களே தீர்த்துக் கொள்வதாக மலேசிய பிரமதர் நஜீப் ரஸôக் கூறியதாக மன்மோகன் சிங் கூறினார். மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடியாகும். இதில் 8 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 2007-ம் ஆண்டு 20 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.

...தினமணி 28.10.2010

nambi
28-10-2010, 03:28 AM
பரங்கிமலை : கொழும்பிலிருந்து சென்னைக்கு நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினம், வைரகற்களை கடத்தி வந்த இலங்கை நபரை, புறநகர் போலீசார் கைது செய்தனர். கொழும்பிலிருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்னை வரும் ஒரு பயணி, விலை உயர்ந்த நவரத்தின கற்களை கடத்தி வருவதாக சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கமிஷனர் உத்தரவுப்படி, பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் குப்புசாமி, விமான நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், குறிப்பிட்ட விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை கண்காணித்து வந்தனர். பின், ரகசிய தகவலில் கூறப்பட்ட அங்க அடையாளங்கள் கொண்ட ஒருநபரை பின் தொடர்ந்தனர். அந்த நபர், அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு டாக்சியில் ஏற முயன்ற போது தனிப்படை போலீசார் மடக்கினர். விசாரணையில், அவர் இலங்கை, காலேவை சேர்ந்த முகமது ஷபீக் (43) என்பது தெரிந்தது. பின், விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரிடம் சோதனை நடத்தினர். இச்சோதனையில் சந்தேகப்படும்படி எந்த பொருளும் சிக்கவில்லை.

இதையடுத்து, முகம்மது ஷபீக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரின் வயிற்று பகுதியை எக்ஸ்-ரே படம் எடுத்தனர். இதில், முகம்மது ஷபீக்கின் வயிற்றில் வித்தியாசமான வடிவத்தில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. இது குறித்து கேட்டபோது, ஷபீக் உண்மையை கக்கினார்.

போலீசாரிடம் முகம்மது ஷபீக் கூறுகையில், "இலங்கையை சேர்ந்த ராசிக் என்பவர், என்னிடம் விலை உயர்ந்த நவரத்தின கற்களை கொடுத்தார். விமான நிலைய சோதனையில் சிக்கக் கூடாது என்பதற்காக அவற்றை, பாலிதீன் பாக்கெட்டுக்களில் நிரப்பி, விழுங்கினேன். இந்த வகையில், 42 பொட்டலங்களை விழுங்கி, எடுத்து வந்தேன். சென்னை சேர்ந்ததும் இந்த பாக்கெட்டுக்களை எடுத்து, அங்கு மண்ணடியில் உள்ள மெட்ரோ லாட்ஜில் தங்கியிருக்கும் ஜெய்ப்பூரை சேர்ந்த குமார், ஷபீர், ரபீக் ஆகியோரிடம் ஒப்படைக்கும்படி ராசிக் கூறினார்,' என்றார்.

புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கூறும்போது,"முகமது ஷபீக்கின் வயிற்றிலிருந்து 2 ஆயிரத்து 65 நவரத்தினம் மற்றும் வைரக்கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. மருத்துவ உதவியுடன் ஆறு மணிநேரத்திற்கு பின் வெளியே எடுக்கப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய். முகமது ஷபீக் இதுபோல் மூன்று முறை இலங்கையிலிருந்து நவரத்தினங்களையும், வைரங்களையும் கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது. இந்த நவரத்தின கற்களை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருக்கும் நபரிடம் கொடுப்பதற்கு, முகமது ஷபீக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் கூலி பேசப்பட்டுள்ளது,' என்றார்.

வாழைப்பழ சிகிச்சை! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், முகம்மது ஷபீக் விழுங்கிய பாலிதீன் பொட்டலங்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது, "வாழைப்பழங்களை சாப்பிட்டால் பொட்டலங்கள் தானாக வெளியே வந்துவிடும்' என்று முகம்மது ஷபீக் மருத்துவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, முகம்மது ஷபீக் தொடர்ந்து 10 வாழைப்பழங்களை உண்டார். அடுத்த சில நிமிடங்களில் முகம்மது ஷபீக்கின் வயிற்றில் இருந்த 42 பொட்டலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தது. எவ்வித மருத்துவ சிகிச்சையும் இன்றி போலீசார், முகம்மது ஷபீக் விழுங்கிய நவரத்தினங்கள் மற்றும் வைரங்களை பறிமுதல் செய்தனர்.

.........தினமலர் 28.10.2010

ஆன்டனி ஜானி
28-10-2010, 04:25 AM
இப்படி கதைகள் எல்லாம் உன்களுக்கு எப்படி கிடைக்குது........ ரெம்ப நல்லா இருந்து

nambi
28-10-2010, 11:37 AM
இப்படி கதைகள் எல்லாம் உன்களுக்கு எப்படி கிடைக்குது........ ரெம்ப நல்லா இருந்து

சமூகத்திடமிருந்துதான்!....:D

(சமயத்தில்.....நிஜம் கூட கதையாக மாறும்....கதை கூட நிஜமாக மாறும்...)

nambi
28-10-2010, 11:54 AM
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாராகும் படம் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. இந்த படத்தில் கரண், அஞ்சலி, சரவணன், கஞ்சாகருப்பு நடிக்கின்றனர். வடிவுடையான் இயக்குகிறார். நேற்று பிற்பகல் குலசேகரத்தை அடுத்த மங்கலம் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் காரில் அந்த இடத்துக்கு வந்தது. காரிலிருந்து இறங்கியவர்கள், இயக்குனர் வடிவுடையானை பார்த்து, குமரி மாவட்டத்தை இழிவுபடுத்தி படம் எடுக்கிறாயா?Õ எனக் கூறி சரமாரியாக அவரை தாக்கினர். இதில் வடிவுடையானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த கும்பலில் சிலர், அஞ்சலியை நோக்கி வந்தனர். பயந்துபோன அஞ்சலி ஓட, அவரை அந்த கும்பல் துரத்தியது. அருகில் உள்ள வீட்டுக்குள் அஞ்சலி புகுந்தார். ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரின் காரை தாக்கிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அஞ்சலி கூறும்போது, ஷூட்டிங் நடக்கும்போது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அவர்கள் யார் என்றே தெரியாது. என்னை நோக்கி ஓடி வந்தனர். இதனால் பயந்து, அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து
தப்பினேன். அதை இப்போது நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறது என்றார்.

....தினகரன் 27.10.2010

ஆன்டனி ஜானி
28-10-2010, 02:57 PM
:sport-smiley-002: :sport-smiley-002:இது நடந்தது உண்மையான ரவுடிகள் வெரடினார்களா இல்ல நிஜமா ஒன்றும் புரியல தல

nambi
29-10-2010, 02:42 AM
:sport-smiley-002: :sport-smiley-002:இது நடந்தது உண்மையான ரவுடிகள் வெரடினார்களா இல்ல நிஜமா ஒன்றும் புரியல தல

....நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் அவ்வளவு நிகழ்வுகளையும் சமூகத்திறகு ஒருசேர தெரிவிக்கும் பணியை பத்தரிகைகள் செய்கின்றன....ஒன்றிற்கு மேற்பட்ட பத்திரிகைகள் இதை தெரிவித்திருக்கின்றன...செய்தி வெளியிடும் தன்மைகளில் பத்திரிகைகள் ஒன்றிற்கொன்று வேறுபடலாம்....உண்மையிருப்பதினால் தான் வெளியிடுகிறார்கள். இது பத்திரிகா தருமம்....

....உதாரணமாக மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இப்படி செய்தி வெளியிடுவார்கள்...ரத்த வெள்ளத்தில் மிதந்தார்...

...அவ்வளவு ரத்தமா? ஒருவர் உடலில் இருக்கிறது...:D

....துடிதுடித்து இறந்தார்...துடிதுடித்து இறந்ததை பார்த்தவர்கள் கூறியதை வைத்து செய்தி வெளியிடுவது...

....அப்படித்தான் ஒட ஒட விரட்டினார்கள்...ரௌடிகள் (போக்கலிகள்) விரட்டினார்கள் எனபதும் கூட அப்படித்தான்....

...இதில் விரட்டினார்கள், தாக்கினார்கள் எனகின்றளவு வரைக்கும் உண்மை....அவர்கள் யார்? எதற்காக விரட்டினார்கள்? என்பதற்கான உண்மைகள் இன்னும் பல மறைந்து இருக்கலாம்....விசாரணையின் முடிவில்தான் தெரியும்...? அதுவும் பத்திரிகையின் வாயிலாக, இன்னும் சில ஊடகங்களின் மூலமாக வெளியிட்டார்கள் என்றால்....

....சந்தேகம் வரவேண்டியது தான்? இவ்வளவு சந்தேகமா? தசவதாரம் பல்ராம் நாயுடு மாதிரி '' டவுட்டுதான் இங்க வேலையே''.....:D

nambi
29-10-2010, 05:46 AM
http://thatstamil.oneindia.in/img/2010/10/29-malarvizhi-naveen-200.jpg
சென்னை: பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த புது மணப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெயசெல்வனின் மகள் மலர்விழிக்கு (24) விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

பாலசுப்பிரமணியம் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுவதால் மனைவி மலர்விழியுடன் மைக்கோ லே அவுட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்.

கடந்த 11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மலர்விழி, கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

விசாரணையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த நவீன் (25) என்ற வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் நவீனும் மலர்விழியும் உறவினர்கள்.

மலர்விழியை திருமணம் செய்ய அவர் விரும்பியதாகவும் ஆனால் இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து நவீன் தான் மலர்விழியை கொலை செய்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நவீனை பிடிக்க பெங்களூர் போலீசார் பல தனிப் படைகளை அமைத்தனர். இதனால் நவீன் தலைமறைவானார்.

இந் நிலையில் நேற்று சென்னை மாம்பலம் போலீசாருக்கு தியாகராய நகர் மேன்சன் ஒன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தங்களின் மேன்சனில் தங்கியிருக்கும் ஒரு வாலிபர் மயங்கிக் கிடப்பதாக தகவல் தரப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஒரு மருந்தை அதிக அளவில் குடித்து மயங்கியது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

உரிய சிகிச்சை அளித்து அவரை மருத்துவர்கள் தெளிய வைத்தனர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர், பெங்களூரில் மலர்விழி கொலை வழக்கில் தேடப்படும் நவீன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நவீன் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

நவீன் கைது குறித்து பெங்களூர் மைகோ லேஅவுட் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்தனர்.

இன்று நவீனை அவர்கள் பெங்களூர் அழைத்துச் செல்கின்றனர்.

...தட்ஸ்தமிழ் 29.10.2010

nambi
29-10-2010, 05:51 AM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடப்பது தொடர் கதையாகி விட்டது. இந்நிலையில் 12 வயது இந்திய மாணவரை பள்ளியில் வைத்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத அந்த சிறுவன் மெல்போர்னில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 18-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அவரை அடையாளம் தெரியாத 2 மாணவர்கள் தாக்கியுள்ளனர். அவரை பின்தொடர்ந்த வந்த அந்த 2 பேர் திடீரென்று அவரைப் பிடித்து கீழே தள்ளி முகத்தில் தாக்கியுள்ளனர்.

இதில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அதில் அவர் கண்ணில் துத்தநாகத் தகடு பொருத்தவிருக்கின்றனர். இதனால் அவர் கண் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்படுமோ என்று அம்மாணவரின் தந்தை அச்சம் தெரிவித்துள்ளார்.

....தட்ஸ்தமிழ் 29.10.2010

nambi
29-10-2010, 06:03 AM
கெய்ரோ: பின்லேடன் மிரட்டல் குறித்த ஆடியோ கேசட் ஒன்றை அல்-ஜசீரா டி.வி நேற்று வெளியிட்டது. அதில் பிரான்ஸ் மக்களுக்கு பின்லேடன் மிரட்டல் விடுத்திருந்தான். ஆடியோ கேசட்டில், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அமெரிக்க தலைமையிலான போருக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள். எங்கள் நிலத்தை அமெரிக்கா ஆக்கிரப்பு செய்துள்ளது. அதற்கு நீங்கள் ராணுவத்தை அனுப்பி உதவுகிறீர்கள். முஸ்லிம் மக்களை கொலை செய்கிறீர்கள்.

இது எந்த விதத்தில் நியாயம்? பிரான்ஸில் முஸ்லிம்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். இதற்கெல்லாம் பதிலடி கிடைக்கும். ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் நாட்டினர் 4 பேரை கடந்த மாதம் கடத்தியதற்கு காரணம் இதுதான். ஆப்கானிஸ்தானை விட்டு பிரான்ஸ் படை வெளியேறுவது நல்லது’ என்று பின்லேடன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
....தினகரன் 29.10.2010

nambi
29-10-2010, 06:08 AM
http://www.dinamani.com/Images/article/2010/10/29/28exjud.jpg

கொச்சி, அக்.28: நக்ஸலைட் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை முன்னாள் ஐ.ஜி- லட்சுமனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

÷நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பற்றிய விவரம் வருமாறு: 1970ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நக்ஸலைட் தலைவர் ஏ. வர்கீஸ், திருநெல்வேலி அருகே உள்ள வனப் பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து 1998-ம் ஆண்டு சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர், காவல்துறை அதிகாரிகள் லட்சுமணா மற்றும் விஜயன் உத்தரவின்பேரில் வர்கீûஸ கொன்றதாக ஒப்புக் கொண்டார். உடனே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

÷இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் பி. ராமச்சந்திரன் நாயர் (இப்போது உயிருடன் இல்லை), காவல்துறைத் தலைவர் லட்சுமணா உத்தரவின் பேரில் வர்கீûஸ கொலை செய்துள்ளார் என்று நீதிபதி எஸ். விஜயகுமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையை லட்சுமணா செலுத்த வேண்டும் என்றும், இந்தத் தொகை உயிரிழந்த நக்ஸலைட் தலைவர் வர்கீஸ் குடும்பத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மற்றொரு குற்றவாளியான காவல்துறை முன்னாள் துணை ஆணையர் பி. விஜயன் குற்றமற்றவர் என அறிவித்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

÷குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வைக்கம் புருஷோத்தமன் நாயர் வாதிட்டார். சாதாரண நபரை, நக்ஸலைட்டாக சித்தரித்து அவரது கைகளைக் கட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

÷தீர்ப்பைக் கேட்டதும் லட்சமணாவின் மனைவி மற்றும் வழக்கறிஞரான அவரது மகள் ஆகியோர் கண்கலங்கினர். தனக்கு 70 வயதாகிறது என்றும், அதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு லட்சுமணா, நீதிபதியிடம் கோரினார். தன்னை திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் மேற்கொண்டனர்.

÷இந்தத் தீர்ப்பு தங்கள் குடும்பத்துக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக வர்கீஸின் சகோதரர் தாமஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மற்றொரு குற்றவாளியான விஜயனை நீதிமன்றம் விடுவித்தது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். போலி என்கவுன்ட்டர் நடத்தும் காவல்துறையினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று முன்னாள் நக்சல் தலைவர் கே. அஜிதா கூறினார். இருப்பினும் இப்போதும் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் இதுபோன்ற போலி என்கவுன்ட்டர்கள் நடப்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்ப்பை வர்கீஸின் நண்பர் குரோ வாசு வரவேற்றுள்ளார்.÷

போலீஸ்-பத்திரிகையாளர் மோதல்: நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே சிறிது மோதல் ஏற்பட்டது. லட்சுமணாவை புகைப்படம் எடுப்பதற்கு போலீஸôர் தடுத்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது.

.....தினமணி 29.10.2010

nambi
29-10-2010, 06:12 AM
http://img.dinamalar.com/data/large/large_115741.jpg

சென்னை : சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட், சிறைத்துறை ஐ.ஜி., திரிபாதி, தலைமையிட ஐ.ஜி., காந்திராஜன் உள்ளிட்ட, ஐந்து ஐ.ஜி.,க்கள், கூடுதல் டி.ஜி.பி.,க் களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக அரசு முதன்மை செயலர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி, மாநில போக்குவரத்துக் கழக முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த ஐ.ஜி., முத்துக்கருப்பன், கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, இயக்குனர், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையின் கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த ஐ.ஜி., ராஜா, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, மாநில போக்குவரத்து திட்டமிடுதல் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புறநகர் கமிஷனராக உள்ள ஐ.ஜி., சங்காராம் ஜாங்கிட், கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று சென்னை புறநகர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஐ.ஜி., திரிபாதி, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமையிட ஐ.ஜி.,யாக உள்ள காந்திராஜன், கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று சென்னை, அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...தினமலர் 29.10.2010

nambi
29-10-2010, 06:19 AM
மும்பை, அக்.29-

மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள வாசை நகரில் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்த அனில் அய்டோடிகா (வயது 44) என்ற போக்குவரத்து போலீஸ்காரர், போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு ஆட்டோவை மறித்து, அதன் டிரைவர் மகேந்திர கெவாத்திடம் (22) விசாரித்தார். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால் அபராதம் விதித்தார்.

இதனால் ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற மகேந்திர கெவாத், சிறிது நேரத்தில் ஒரு சிறிய பக்கெட்டில் பெட்ரோலை கொண்டு வந்து, அதை போக்குவரத்து போலீஸ்காரர் அனில் அய்டோடிகா மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதனால் உடல் கருகிய அனில் அய்டோடிகா ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் மகேந்திர கெவாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் ஆவார்.

....தினத்தந்தி 29.10.2010

சூரியன்
30-10-2010, 09:44 PM
http://img.dinamalar.com/data/large/large_117132.jpg

புதுடில்லி : அரிய வகை வன விலங்குகளை வேட்டையாடுவோருக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. புலி போன்ற வன விலங்குகளைக் கொன்றால், ஒரு கோடி ரூபாய் அபராதத்துடன், ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.வன விலங்குகளை வேட்டையாடுவோரை கட்டுப்படுத்த, வனத் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், அது பெரிய அளவுக்கு பயன் அளிக்கவில்லை. விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க, தற்போது மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு, தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்ட மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:புதிய சட்ட திருத்தத்தின்படி, வனவிலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் மேலாண்மை மற்றும் அறிவியல் துறை என்ற இரண்டு அமைப்புகள் உருவாக்கப்படும். புதிய சட்ட திருத்தம், சர்வதேச அளவிலான வனவிலங்கு சட்டத்துக்கு ஏற்றவகையில் இருக்கும்.விலங்குகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரைமுறைப்படி பிரிக்கப்பட்டு, அட்டவணைப் படுத்தப்படும். இதன்படி, புலி போன்ற விலங்குகள், முதல் பிரிவில் வரும். முதல் பிரிவில் உள்ள புலி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கொலை செய்வோருக்கு, ஐந்து லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஐந்தாண்டில் இருந்து அதிகபட்சமாக ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.இரண்டாவது பிரிவில் உள்ள அரிய வகை பறவைகள் போன்றவற்றை வேட்டையாடுவோருக்கு, மூன்றில் இருந்து ஐந்தாண்டு வரை, சிறை தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விலங்குகளை துன்புறுத்துவோருக்கும் தண்டனை உண்டு.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர்:31.10.2010

வானவர்கோன்
30-10-2010, 10:28 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQQwvxKuj45DjRtIJvys1n-J3vegBM08q39iARlMqNpq1zu39s&t=1&usg=__F9Hu6wwyKeJc329gzYC4VenAU3g=
ஐரோப்பாவில் கோடை காலம் முடிவடைந்து இன்று 2010.10.31 குளிர் காலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு கடிகாரம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு ஒரு மணி நேரத்தால் பின்னோக்கிச் செல்கின்றது, அந்தவேளையில் புதிய நேரம் அதிகாலை 2.00 மணியாக இருக்கும்.

nambi
01-11-2010, 09:13 AM
சென்னை, அக். 31: ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்து, அமெரிக்க அதிபர் ஆகியுள்ள ஒபாமா இந்தியா வருவதை இடதுசாரி கட்சிகள் எதிர்க்கலாமா என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பல நூறு ஆண்டுகளாக கருப்பு இனத்தைச் சேர்ந்த மக்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டனர். அமெரிக்காவிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் கொடூரமாக வதைக்கப்பட்டனர்.

அத்தகைய ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது, அவரை வாழ்த்தி வரவேற்க இந்திய மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கொள்கைகள் இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், ஒபாமா வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இடதுசாரி கட்சிகள் கூறியுள்ளன.

உலகம் போற்றும் புரட்சியாளரான கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ, ஒபாமாவின் நேர்மையைப் பாராட்டியுள்ளார். அமெரிக்காவை கடுமையாக எதிர்க்கும் வெனிசூலா அதிபர் சாவேஸ்கூட ஒபாமாவை கடுமையாக விமர்சனம் செய்வதில்லை.

எனினும், இந்திய இடதுசாரி கட்சிகள் மட்டும் ஒபாமா வருகையை எதிர்க்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்த அரசுகளை கவிழ்த்துவிட்டு, ஒரு பொம்மை அரசை உருவாக்கி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களைக் கொண்டு போய் நிறுத்தியதற்கு சோவியத் ரஷியாவை இடதுசாரிகள் கண்டித்தது உண்டா?

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசலப் பிரதேசத்தை, தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது எனக் கூறும் சீன அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியது உண்டா?

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை, பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று கூறி வரும் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, சீனப் பிரதமர் வென்ஜியாபோ இந்தியா வரும்போது அவரை எதிர்த்துப் போராட இடதுசாரிகள் முன்வருவார்களா?

கருப்பு இனத்தில் பிறந்து, அமெரிக்க அதிபராகி உள்ள ஒபாமாவை இந்திய நாட்டின் மக்கள், கட்சி, மத எல்லைகளைக் கடந்து வரவேற்க வேண்டும்.

எனவே, இடதுசாரி கட்சிகள் தங்கள் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

...தினமணி 01.11.2010

nambi
01-11-2010, 09:15 AM
சென்னை: சென்னையில் உள்ள பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள்.

சென்னையில் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தையும், பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலையும் இணைக்கும் வேலை நடந்து வருகிறது. இதையடுத்து லிப்ட் உள்ளிட்டவற்றை மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லிப்ட் மாற்றும் பணியின்போது திடீரென அதன் ஒயர் அறுந்து போனது. இதில் லிப்ட்டின் கீழ் சிக்கி கேரளாவைச் சேர்ந்த ஜோஸ், டோம் என்கிற தாமஸ் ஆகியோர் பலியானார்கள்.

இருவரது உடல்களையும் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
...தட்ஸ்தமிழ் 31.10.2010

nambi
01-11-2010, 09:18 AM
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் உள்ள் தனியார் செல்போன் தொழிற்சாலையில் ரோபோ தாக்கி இளம்பெண் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த டி. புதூரைச் சேர்ந்தவர் அம்பிகா (22). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் செல்போன் (நோக்கியா) தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று தொழிற்சா*லையில் உள்ள ரோபோ (இயந்திர மனிதன்) பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று இளம் பெண் அம்பிகாவை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
...தினமலர் 01.11.2010

nambi
01-11-2010, 09:21 AM
மும்பை, நவ.1: ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மகாராஷ்டிரத்தில் முதல்வர் அசோக் சவாண் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அம்மாநில ஆளுநர் சங்கரநாராயணனை எதிர்க்கட்சியினர் இன்று சந்தித்து வலியுறுத்தினர்.

மும்பை கொலபா பகுதியில் கார்கில் போர் வீரர்களுக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அசோக் சவாணின் மாமியார் உள்பட 3 உறவினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 31 அடுக்குகளைக் கொண்டது இந்த பிரமாண்ட குடியிருப்பு.

இந்த விவகாரம் இப்போது மகாராஷ்டிரத்தில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே தலைமையில் பாஜக, சிவசேனைத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் ஆளுநரை இன்று சந்தித்து சவாண் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குழுவினர் ஆளுநரை கேட்டுக்கொண்டனர்.

...தினமணி 01.11.2010

nambi
01-11-2010, 09:23 AM
உலகில் முதல் தடவையாக இராணுவ நீதிமன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவியை பறிக்க முடியாதென ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும் தமக்கு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஐரோப்பாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முடியுமா என தாம் ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் இராணுவ நீதிமன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி பறிக்கப்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நபர் ஒருவருக்கு இராணுவ நீதிமன்றில் தண்டனை விதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுகம்பல போபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொத அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தண்;டனை விதிக்கப்பட்டமைக்கு பிரித்தானிய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்து வருவதா அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
....நெருடல் 01.11.2010

nambi
01-11-2010, 09:27 AM
சென்னை: தீபாவளி நெருங்கிவிட்டதால் மக்கள் துணிகள் மற்றும் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்க சென்னையில் குவிந்துள்ளனர் மக்கள். குறிப்பாக தியாகராய நகரில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஜவுளிக் கடைகளுக்கு வந்ததால் போக்குவரத்து திணறிப் போனது.

ஜவுளி, பாத்திரங்கள், நகைகள் என எல்லாவற்றுக்கும் சென்னையில் மக்கள் நாடும் முதல் இடம் தி நகர்தான்.

சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான ஜவுளிக்கடைகள் இங்குள்ளன. இந்தக் கடைகள் அனைத்திலுமே கூட்டம் திமிலோகப்படுகிறது.

நகை மற்றும் பேன்சி பொருட்கள் கடைகளிலும் அத்தனை சுலபத்தில் உள்ளே நுழைய முடிவதில்லை. தங்கம் சவரனுக்கு ரூ 15000க்கும் மேலே விற்கப்படுகிறது (சேதாரமெல்லாம் சேர்த்து ரூ 16000). ஆனாலும் மக்கள் கூட்டம் நகைக் கடைகளில் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தி.நகருக்கு மட்டும் சுமார் 2,500 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு தி நகர் பகுதியின் முக்கிய சாலைகளில் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தும் சாலையில் நடக்கக் கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது.

ரங்கநாதன் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். நேற்று மட்டும் ஒரேநாளில் 10 லட்சம் மக்கள் திநகரில் குவிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிலர் சைக்கிள்களை தலையில் தூக்கிக் கொண்டு சாலைகளை கடந்த காட்சியைப் பார்க்க முடிந்தது.

கூட்டத்தை கண்காணிக்க 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பாதுகாப்பு பணிகள் போலீசார் மேற்கொள்கின்றனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பிக்பாக்கெட், செயின் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருடர்களை பிடிக்க போலீசார் மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனர். கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், ஒலி பெருக்கி மூலம் "உங்களுடைய குழந்தைகள் பத்திரம்; பொருட்கள் பத்திரம்" என பொதுமக்களை போலீசார் உஷார்படுத்தி வருகின்றனர்.

வாகனங்கள் நிறுத்துவது மக்களுக்குப் பெரும் பாடாக உள்ளது. முன்பு தி நகர் பாலத்தின் அடியில் நிறுத்தி வந்தனர். இப்போது அங்கு நிறுத்தக் கூடாது எனழ அறிவிக்கப்பட்டதால், பள்ளி ஒன்றில் நிறுத்த வேண்டியுள்ளது. தனியார் வாகன நிறுத்துமிடங்களில் மணிக்கு 5 ரூபாய் என வசூலிக்கின்றனர்.

பிரபலமான சில ஜவுளிக் கடைகள் பார்க்கிங் வசதியை அளிக்கின்றன. ஆனால் அந்தக் கடையில் ஏதேனும் பொருள் வாங்காமல் உங்களால் மீண்டும் வாகனங்களை எடுக்க முடியாது. சில கடைகளில் இப்படி பொருள் வாங்காமல் வாகனம் மட்டும் நிறுத்த ரூ 200 வரை செலுத்த வேண்டும் என்கிறார்கள். இந்தத் தொல்லையைத் தவிர்ப்பதற்காகவே, பெயருக்கு ஒரு பொருளை வாங்கி பில்லைக் காட்டிவிட்டு வண்டியை எடுத்துச் செல்கிறார்கள்!

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி களை கட்டுகிறது

இதேபோல நெல்லை மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது.

தீபாவளி பண்டிக்கை இன்னும் சில நாட்களே உள்ளதால் ஜவுளி கடைகளில் கூட்டம அலைமோதி வருகிறது.

நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களான நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய பெரிய ஜவுளி கடைகள் மட்டுமின்றி சாதாரண ஜவுளி கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

'எந்திரன் ஐஸ்வர்யா'வுக்கு செம கிராக்கி!

மேலும் பெண்கள் மத்தியில் எந்திரன் ஐஸ்வர்யா ராய் மாடல் சேலை விற்பனை ஜோராய் நடக்கிறது. முன் மாதிரி புது துணிகள் டெய்லர் கடைக்கு கொண்டு செல்வது குறைந்து ரெடிமேட் ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் நெல்லை மாவட்டத்தில் ஜவுளி கடைகளில் தீபாவளி விற்பனை வெகு ஜோராய் உள்ளது. ஜவுளி கடைகள், நகை கடைகளிலும் மக்கள் கூட்டத்தை கவரும் வண்ணம் அன்பளிப்பு அறிவிப்புகள், தள்ளுபடி, அறிவிப்புகளூம் உள்ளது.
...தட்ஸ்தமிழ் 01.11.2010

nambi
01-11-2010, 09:29 AM
டெல்லி: பிரபல இசையமைப்பாளர்களுக்கு இந்திரா காந்தி தேசிய விருது வழங்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாடுபட்டதற்காக இந்த விருதினை அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் வழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்.

தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, நாராயணபுரத்தில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமும், ஆஸ்கார் விருது நாயகனான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா, இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாளான நேற்று, டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் நடந்தது.

ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கு, தேசிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி விருது வழங்கினார். ஆசிரம தலைவர் சுவாமி வியாப்தானந்தா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கினார்.
...தட்ஸ்தமிழ் 01.11.2010

nambi
01-11-2010, 09:33 AM
சான்யா (சீனா) : அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா மில்ஸ், 2010ம் ஆண்டிற்கான உலக அழகியாக (மிஸ் வேர்ல்டு) தேர்வு செய்யப்பட்டார்.நடப்பு 2010ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, சீனாவின் சான்யா நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதான அலெக்சாண்டிரியா மில்ஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை போட்ஸ்வானாவைச் சேர்ந்த எம்மா வாரசும், மூன்றாவது இடத்தை வெனிசுலாவைச் சேர்ந்த அட்ரியானா வாசினியும் பெற்றனர். உலகம் முழுவதிலும் இருந்து 119 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற மானஸ்வி மாம்காய் 20வது இடத்தைப் பிடித்தார்.உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்சாண்டிரியா மில்ஸ் கூறுகையில், ""மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை, ஒவ்வொருவருக்கும் உதவ விரும்புகிறேன். மிஸ் வேர்ல்டு ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம்,'' என்றார்.

...தினமலர் 30.10.2010

nambi
01-11-2010, 06:55 PM
சென்னை, நவ.1: திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை முடிவுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு முடிவுசெய்யும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே, கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. உதாரணங்கள்: 'சிவாஜி', 'ஏகன்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'கோவா', 'எந்திரன்' போன்ற திரைப்படங்களாகும்.

ஆனால், இந்தத் துறையில் அறிமுகமாகி, படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குநராகவும், கதை-உரையாடல் எழுதுபவராகவும் வளரத் தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள்; கேளிக்கை வரிவிலக்குக்கான அரசின் நிபந்தனைகளைப் புரிந்து கொள்ளாமலும், அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்படத் தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களைச் சூட்டுவதும்; அவற்றுக்குக் கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரச்சாரம் செய்வதும்; அதனடிப்படையில், இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினர்க்கு, இந்த வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை அரசியல் நோக்குடன் வெளியிட்டு வருவதும் இப்பொழுது வழக்கமாக ஆகத் தொடங்கியுள்ளது.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்பட்டிருக்கிறதா அல்லது திரைப்படங்களுக்கு இடப்பட்டுள்ள தலைப்புக்கான பெயர்கள் கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்குமுன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல. அந்தக் குழு ஒப்புக் கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது என்பதையும் அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை துறைதான் வழங்கும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...தினமணி 02.11.2010

nambi
01-11-2010, 06:56 PM
கொழும்பு, நவ.1- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அரசுக்கு எதிராகவும் செய்தி வெளியிடும் இணையதளங்களை முடக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான உத்தரவு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில், இலங்கை அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வந்த "லங்காநியூஸ்வெப்" இணையதளத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடை செய்திருந்தது என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

....தினமணி 02.11.2010

nambi
01-11-2010, 07:03 PM
கொழும்பு, நவ.1- விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனுக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை வைக்க இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் செயல்படும் இலங்கைத் தமிழர் அமைப்பு ஒன்று சிலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சிலை அமைக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிரான்ஸ் அரசுடன் அங்குள்ள இலங்கைத் தூதரகம் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 நவம்பர் மாதம் இலங்கை ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் தமிழ்செல்வன் உயிரிழந்தார்.

....தினமணி 02.11.2010

nambi
01-11-2010, 07:08 PM
சென்னையில் பள்ளி மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமுள்ள நேரங்களில் நெரிசலில் சிக்கித் தவிக்காமல் சென்று வர 12 வழித் தடங்களில் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளை நெரிசல் நேரத்தில் நிறுத்தி ஏற்றிக் கொள்வதிலும் சென்ன்னை மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் அக்கறை காட்டுவதில்லை.

இந்த நிலையில் பல வழித் தடங்களில் நிறுத்தப்படும் ஓரிரு பேருந்துகளில் பெரும்பகுதி மாணவ மாணவியர் முட்டி மோதிக்கொண்டு ஏறி வருகின்றனர். இதனால் பேருந்தில் நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை இருந்து வருகிறது.


இதனைத் தவிர்க்கும் வகையில் பெசண்ட்-நகர் அயன்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 23சி, மற்றும் 29ஏ, 11ஜி, 12பி, 21எல், 27டி, 29சி, 47, 5பி, 6டி, 37பி, 38சி ஆகிய 12 வழித் தடங்களில் காலை, மாலை இருவேளையும் இரண்டு முறை சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

...வெப்துனியா 01.11.2010

nambi
02-11-2010, 03:01 PM
நியூயார்க், நவ.2- அமெரிக்காவில் ஐநா அலுவலகம் முன் "நீதி கோரும் சீக்கியர்" அமைப்பைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, 1984-ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"அந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர இப்பிரச்னையில் ஐநா தலையிட வேண்டும்." என்று நீதி கோரும் சீக்கியர் அமைப்பின் வழக்கறிஞர் குர்பத்வந்த் பனுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

...தினமணி 02.11.2010

nambi
02-11-2010, 03:08 PM
சென்னையில் கடத்தப்பட்ட மாணவன் கீர்த்தி வாசனை பணம் கொடுத்தே கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டோம் என்றும், சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே தங்களுடைய குறிக்கோளாக இருந்தது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.

சென்னை அண்ணா நகர் இசட் பிளாக் 7வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் கிரானைட் நிறுவனம் நடத்திவரும் ரமேஷ். இவரது மகன் கீர்த்தி வாசன் (வயது 13) முகப்பேர் டி.ஏ.வி. பள்ளியில் 9வது வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கமாக பள்ளிக்கு காரில்தான் கீர்த்தி வாசன் சென்று வருவான். நேற்றும் பள்ளி முடிந்து மாலை 3.30 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக காரில் ஏறும் போது திடீரென இரண்டு பேர் உள்ளே புகுந்து உட்கார்ந்துகொண்டு ஓட்டுநரை மிரட்டி காரை ஓட்டச் சொல்லியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஓட்டுநரை இறக்கிவிட்டு காருடன் சிறுவன் கீர்த்தி வாசனை கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து கீர்த்தி வாசன் கடத்தல் குறித்து காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கோவையில் சிறுவர்கள் இருவர் கடத்தி கொல்லப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை தீவிரமாக மாணவனை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுவந்தது.

இந்நிலையில், மாணவன் கீர்த்தி வாசன் இன்று பத்திரமாக மீட்கப்பட்டான்.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் இராஜேந்திரன் மாணவனை மீட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாணவன் கீர்த்தி வாசனும் உடனிருந்தார்.

கடத்தல் குறித்த தகவல் அறிந்ததும் இரண்டு பேர் கொண்ட தலைமையில் தனிப்படைகள் அமைத்து மாணவன் கீர்த்தி வாசனை தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டோம். நேற்று இரவு முதல் சிறுவனுடைய தந்தையுடனும், கடத்தல்காரர்கள் செல்ஃபோன் மூலமாக சிறுவனுடனும் தொடர்ந்து பேசினோம்.

இதற்கு கீர்த்தி வாசனின் தந்தை பெரும் உதவியாக இருந்தார். இதில் முக்கிய விஷயமென்னவென்றால், கடத்தல்கார்கள் சென்னையை விட்டு வெளியே போகாவண்ணம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு தடுத்தனர்.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதைக் கண்டறிந்த பின்னர், அவர்களிடம் பேசி ஒரு குறிப்பிட்ட குறைந்த தொகையை அளித்தே சிறுவனை மீட்டோம். எங்களைப் பொறுத்தவரையில் சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது. அதனை சாதித்துவிட்டோம் என்று கூறினார்.

கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடத்தில் இருப்பது தெரிந்ததும் அங்கு சோதனை நடத்தியிருக்கலாம். ஆனால், சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதால் அதனைத் தவிர்த்தோம் என்று ஆணையர் கூறினார்.

எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அது முக்கியமில்லை. ஆனால் பெரிய தொகை கொடுக்கப்படவில்லை. குறைந்த பணமே கொடுத்து மீட்டோம் என்று பதிலளித்தார்.

மேலும், கடத்தியவர்கள் இரண்டு பேர் என்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறிய ஆணையர், இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

இரண்டு கார்களைப் பிடித்துள்ளோம். அதில் ஒன்றுதான் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் என்றும், அது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

...வெப்துனியா 02.11.2010

nambi
02-11-2010, 03:20 PM
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை புதுவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தக் கொலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், ரவி சுப்பிரமணியம், அப்பு உள்பட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவரானார். பின்னர் நடந்த விசாரணையில் அவர் பல்டி அடித்து பிறழ் சாட்சியானார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது காஞ்சீபுரம் வட்ட திமுக செயலாளர் சங்கர், வங்கி அதிகாரிகள் கணேசன், குப்புசாமி, பத்மராகம், கோவில் வாசலில் செருப்புக்கடை வைத்திருக்கும் நாராயணசாமி, எழுத்தர் கோவிந்தராஜ், கோசாலை பணியாளர் கணபதி, காமாட்சி அம்மன்கோவில் நிர்வாகி செல்லப்பா, வரதராஜபெருமாள் கோவில் உதவியாளர் பாலகுமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

இதில் கணபதி, பாலகுமார், நாராயணசாமி ஆகியோர் ஏற்கனவே அளித்த சாட்சியத்துக்கு மாறாக பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவர்கள் பிறழ் சாட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அதில் இதுவரை 65 சாட்சிகள் பல்டி அடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று சாட்சிகளிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், சங்கராச்சாரியார் தரப்பு வழக்கறிஞர்கள் தினகரன், லட்சுமண ரெட்டியார் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி ராமசாமி ஒத்தி வைத்தார்.

இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்பட 17 பேருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர்களது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர்.

...தட்ஸ்தமிழ் 02.11.2010

nambi
03-11-2010, 07:00 AM
சென்னை : சென்னை பள்ளி மாணவன் கீர்த்திவாசனை கடத்திய கும்பல் சிக்கியது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிரானைட் அதிபர் ரமேஷின் மகன் கீர்த்திவாசன்(13) நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து காரில் வீடு திரும்பினான். அப்போது, திடீரென காரில் ஏறிய இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளவிட்டு மாணவனை கடத்திச் சென்றனர். பள்ளி மாணவன் துணிகரமாக கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும், கடத்தல் கும்பலைப் பிடிக்க முழுவீச்சில் காவல்துறை களமிறங்கியது. இந்நிலையில் நேற்று மாணவன் பத்திரமாக வீடு திரும்பினான். தொடர்ந்து கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடத்தல் கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

...தினமலர் 03.11.2010

nambi
03-11-2010, 07:03 AM
கோவை: சக மாணவர்கள் கேலி செய்து கிண்டல் செய்ததால் மனம் உடைந்த 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவையைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஸ்வேதா. 11 வயதான இவர் அங்கு ஒரு பள்ளியில் படித்து வந்தார். வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் ஸ்வேதாவை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ஸ்வேதா தனது வீட்டில் தீக்குளித்து விட்டார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...தட்ஸ்தமிழ், தினத்தந்தி 03.11.2010

nambi
03-11-2010, 07:05 AM
மும்பை, நவ.2: வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. புதிய விதிகள் வீட்டுக் கடன் பெறும் நிபந்தனைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

புதிய விதியின்படி வங்கிகள் வீட்டின் மதிப்பில் அதிகபட்சம் 80 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுவோர் அல்லது வாங்குவோர் மொத்தத் தொகையில் 20 சதவீதத்தை கட்ட வேண்டியிருக்கும்.

மேலும் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகள் வாங்குவோருக்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரூ. 75 லட்சம் வரையான கடன் பெறுவோருக்கு கடன் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளின் சதவீதம் 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ. 75 லட்சத்துக்கு மேல் கடன் பெறுவோர் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும். இப்போது இந்த வரம்பு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளது.

வீட்டுக் கடன் வழங்குவது அதிகரிப்பதால் வீடுகள் சார்ந்த ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பாரா வளர்ச்சி காணப்படுகிறது. உண்மையான நிலவரத்தைக் காட்டிலும் பெரிதுபடுத்தப்பட்ட வர்த்தகமே நடைபெறுகிறது. இத்தகைய வர்த்தக நடைமுறையைக் கட்டுப்படுத்த விதிகளைக் கடுமையாக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

மேலும் வங்கிகள் வீட்டுக் கடனுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை தொடக்கத்தில் நிரந்தர வட்டி விகிதத்திலும் பின்னர், சுழற்சி வட்டி விகிதத்திலும் நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.

....தினமணி 03.11.2010

nambi
03-11-2010, 06:44 PM
சென்னை : அண்ணாநகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டது எப்படி என்ற பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.

சென்னை, அண்ணாநகர், "இசட் பிளாக்' 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்; கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் கீர்த்திவாசன் (13); முகப்பேர் பகுதியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த திங்கள் கிழமையன்று பள்ளிக்கு சென்ற கீர்த்திவாசன், மாலை 3 மணிக்கு காரில் வீடு திரும்பினான். காரை, டிரைவர் கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார். கார் பள்ளி அருகில் இருந்து கிளம்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அதில் ஏறிய இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளிவிட்டு கீர்த்திவாசனை காரில் கடத்திச் சென்றனர். டிரைவர் கோவிந்தராஜ் உடனடியாக தனது முதலாளி ரமேஷிடம் தகவல் தெரிவித்தார். ரமேஷ், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதற்கிடையில் கடத்தியவர்கள், ரமேஷை தொடர்பு கொண்டு, "போலீசை அணுகினால் மகனை உயிருடன் பார்க்க முடியாது' என்று மிரட்டினர். இந்த சம்பவத்தால் சென்னை போலீசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் அக்கா, தம்பி இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, இந்த சம்பவம் நடந்துள்ளதால் சென்னை போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பவம் குறித்த தகவல் வந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் ஆலோசனை கூட்டத்தில் இருந்தனர். தகவல் கேள்விப்பட்டதும் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். கார் டிரைவர் கோவிந்தராஜ், கீர்த்திவாசனின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடனடியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மாணவன் கடத்தப்பட்ட, "செவர்லெட் டவேரா' கார், பாடியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் அருகில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, கீர்த்திவாசனின் புத்தகப்பை, கடத்த பயன்படுத்திய கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பள்ளியில் இருந்து மாணவனை கடத்திய இருவரும், மற்றொரு காரில் கீர்த்திவாசனை மாற்றி விட்டு, இந்த காரை அப்படியே விட்டுச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், அன்று இரவே கீர்த்திவாசனின் தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், மூன்று கோடி ரூபாய் தரவேண்டும் என நிபந்தனை விதித்தனர். மொபைல் போன், அண்ணாநகரில் இருந்து பயன்படுத்தியது தெரிந்தாலும், அந்த போன் சிக்கவில்லை. தொடர்ந்து பல முறை கடத்தல்காரர்கள் தங்கள் மொபைலில் இருந்து ரமேஷை தொடர்பு கொண்டனர். ஆனால், மொபைல் போன் குறித்த விவரங்கள் போலீசிற்கு சிக்கவில்லை; இந்த விஷயம் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அண்ணாநகர் முழுவதும் "சீல்' செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், ரமேஷ் மூலம் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 1.5 கோடி ரூபாயாக தொகையை குறைத்தனர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் கடத்தல்காரர்கள் இருவரும் ரமேஷை தொடர்பு கொண்டனர். அப்போது பணம் எடுத்து வர வேண்டிய இடம் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்று கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்த ரமேஷ், காரில் இருந்த கீர்த்திவாசனை மீட்டு வந்தார். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் பணத்துடன் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமங்கலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், "மாணவனை மீட்டுவிட்டோம். கடத்தல்காரர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பிடித்து விடுவோம்' என்றார். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடத்தல்காரர்கள், போலீசிடம் சிக்கினர்.

துப்பு துலங்கியது எப்படி?: நேற்று முன்தினம் பிற்பகல் 1:30 மணியளவில் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் இடத்தை முடிவு செய்ததும், ரமேஷ் வீட்டிற்கு அடுத்த இரண்டு தெருக்கள் தாண்டி ஒரு இடத்தை ரமேஷ், கடத்தல்காரர்களிடம் கூறியுள்ளார். போலீசார், ஆலோசனைப்படி பணத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்ற ரமேஷ், கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார். டூவீலரில் வந்த கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ரமேஷால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. டூவீலர், "நம்பர் பிளேட்'டும், "கர்சீப்'பால் மூடப்பட்டிருந்தது. இதை போலீசார் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதால் போலீசார் தங்கள் அதிரடி நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்தனர்.

கடத்தல்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் போது அருகில் நின்றிருந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் ரக காரின் சாவியை ரமேஷிடம் தந்து, " டிக்கியில் பாருங்கள்' என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். உடனடியாக டிக்கியை திறந்து பார்த்த போது. அதில், கீர்த்திவாசன் இருந்தது கண்டு, உடனடியாக அவனை மீட்டனர். அதற்குள் இருவரும் டூவீலரில் தப்பினர். டூவீலர் வேகமாக சென்ற போது நம்பர் பிளேட்டில் கட்டப்பட்டிருந்த, "கர்சீப்' விலகியது. அப்போது தெரிந்த வாகனத்தின் எண், போலீசிற்கு துருப்புச் சீட்டாக மாறியது. இதைக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அடுத்தடுத்து பல மர்மங்கள் விலகின. முதலில் போலீசார், கைதேர்ந்த கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தனர். தொடர்ந்து வாகனத்திற்குரியவர் யார் என்பதை விசாரித்த போது தான் போலீசாருக்கு உண்மை பிடிபட்டது. வாகனத்தின் உரிமையாளர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.

விஜய் குறித்த விவரங்களை ஆராய்ந்த போது, அவர் ரமேஷின் தூரத்து உறவினர் என்ற விவரமும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று நள்ளிரவில் விஜய் வீட்டிற்கு சென்று, அவரை பிடித்து விசாரித்ததில், தனது சித்தப்பா மகன் பிரபு குறித்த தகவல்களை கூறியுள்ளார். உடனடியாக இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின் போது முதலில் மறுத்த இருவரும், போலீசாரின் பிடி இறுகியதும், கீர்த்திவாசனை கடத்தியது நாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பணம் 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயும் மீட்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணத்தாசையே கடத்தலுக்கு தூண்டுதல்: கீர்த்திவாசனை கடத்தியதாக பிடிபட்டுள்ள இருவரும் ரமேஷின் தூரத்து உறவினர்கள். திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ரமேஷ், தனது மேலாளராக கங்காதரன் என்பவரை நியமித்துள்ளார். அவரது நெருங்கிய உறவினர்கள் தான் பிடிபட்ட விஜய் மற்றும் பிரபு என்பது விசாரணையில் தெரியவந்தது. ரமேஷின் மேலாளர் கங்காதரன், தனது முதலாளியின் பிசினஸ், ஆங்காங்கே இடம் வாங்கியது, கோடி கோடியாக நடக்கும் வர்த்தகம் குறித்த விவரங்களை தனது உறவினர்களான விஜய் மற்றும் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பணி வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், கங்காதரன் அளித்த விவரங்கள் அவர்களை உசுப்பேற்றி விட்டுள்ளது. ரமேஷின் மகனை கடத்தி, அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கறக்க திட்டமிட்டனர். கிடைக்கும் பணத்தை கொண்டு புதிய தொழிலை துவக்கி செட்டிலாகி விடலாம் என நினைத்து, கீர்த்திவாசனை கடத்தியதும், தெரியவந்தது. ஆனால், பணத்தை பெற்ற இருவரும் அதில் இருந்து எதையும் எடுத்து செலவு செய்யவில்லை என கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட பணம் முழுவதையும் போலீசார் மீட்டுள்ளனர். கடத்திய இருவரும் நன்கு படித்து, லண்டன் வங்கி மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றியிருந்தாலும், உருப்படியாக எந்த வேலையிலும் வெகுநாட்கள் நீடித்ததில்லை என்று கூறப்படுகிறது. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, தற்போது கம்பிக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர்.

....தினமலர் 04.11.2010

nambi
04-11-2010, 05:39 AM
மும்பை: ஒபாமாவின் ஒருநாள் மும்பை பயணத்துக்கு அமெரிக்க அரசு ரூ900 கோடி செலவிடுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பையில் 6, 7 தேதிகளில் தங்குகிறார். இந்த பயணத்துக்கான பாதுகாப்பு, முன்னேற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் கப்பலுடன் மும்பையில் முகாமிட்டு செய்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி இருப்பதால் அமெரிக்க அதிபர் வந்து செல்லும் வரை மும்பை துறைமுகத்துக்கு வரும் அனைத்து கப்பல்களும் பல மைல் தூரத்துக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒபாமா மும்பையில் தங்கி இருக்கும் 2 நாட்களும், அவருடன் 3 ஆயிரம் பேர் இருப்பார்கள். இவர்களில் அமெரிக்க பத்திரிகையாளர்களும் அடங்குவர். ஒபாமாவின் மும்பை பயணத்துக்காக தாஜ் நட்சத்திர ஓட்டலை அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டனர். ஒபாவின் இந்த மும்பை பயணத்துக்காக அமெரிக்க அரசு நாளொன்றுக்கு ரூ900 கோடி வீதம் மொத்தம் ரூ1,800 கோடி செலவு செய்கிறது.

ஒபாமா விமானம் மும்பையில் இறங்கும்போது விமான நிலையம் அரை மணி நேரம் மூடப்பட்டு இருக்கும். இது தவிர கொலாபாவில் உள்ள சிகாரா ஹெலிகாப்டர் தளத்தையும் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதங்களை எடுத்து வர அனுமதிக்க கிடையாது என்பதால், ஒபாமாவின் பாதுகாப்பை மகாராஷ்டிரா போர்ஸ் ஒன் படை எடுத்துக் கொள்ள இருக்கிறது.

.....தினகரன் 04.11.2010

nambi
04-11-2010, 06:15 AM
சென்னை: "தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையில் நடந்த பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த அவசர அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பெருமாள் சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், பெற்றோர், ஆசிரியர், பள்ளி வேன் டிரைவருடன் உடனடியாக கூட்டம் நடத்த வேண்டும். வேன் டிரைவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அடையாள அட்டை வழங்குவதுடன், மாணவர்களை அழைத்து வரும் டிரைவர்கள் குறித்த முழு விவரங்களையும் வைத்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் அன்னிய நபர்களை அனுமதிக்கக் கூடாது. சந்தேகப்படும்படியான நபர்களை கண்டால், போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி நுழைவாயில் மற்றும் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதேபோல், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமலர் 02.11.2010

peace
06-11-2010, 07:17 PM
வரவேற்க தக்க விஷயம்

nambi
07-11-2010, 06:21 PM
http://www.dinamani.com/Images/article/2010/11/8/08obama.jpg

மும்பை, நவ.7: இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஒபாமா, ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள பள்ளி சிறுவர்களுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.

÷அமெரிக்க அதிபர் என்ற பந்தா ஏதுமின்றி இயல்பாக குழந்தைகளுடன் கலந்து நடனமாடி மகிழ்ந்தார் ஒபாமா. கணவருக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதைப் போல குழந்தைகளின் நடனத்திற்கேற்ப நடனமாடியதோடு, ஜால்ரா கருவியை இசைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் மிஷேல் ஒபாமா.

÷மராத்தி கிராமிய இசைக்கேற்ப இவர்களிருவரும் குழந்தைகளுடன் இணைந்து குதூகலித்தது பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யமளிப்பதாக இருந்தது.

÷அதிகாரிகள், ராணுவ தலைவர்கள், பிற நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள் இவர்களுடன் அலுவல் ரீதியான சந்திப்பு போன்ற வழக்கமான பணிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமான நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

÷அதிபர் தங்கியிருந்த மும்பை தாஜ் ஹோட்டலுக்கு அருகில் அமைந்திருந்த ஹோலி நேம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இவர்களிருவரும் கலந்து கொண்டனர்.

÷"நமஸ்தே', "குட்மார்னிங்' என்று குழந்தைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அணியும் வழக்கமான உடை அல்லாமல் கருப்பு நிற பேண்ட், மடித்துவிடப்பட்ட வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற டை இவற்றுடன் வந்திருந்தார் ஒபாமா.

ரோஸ் நிறத்திலான சட்டை, சாம்பல் நிறத்தில் கட்டம்போட்ட ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார் மிஷேல்.

÷கொண்டாட்டத்தின் தொடக்கமாக விளக்கை ஏற்றி வைத்தனர் அமெரிக்க தம்பதியினர். இவர்களை இந்திய பாரம்பரிய உடையணிந்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர். குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டும், கைகுலுக்கியும், குழந்தைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர் அமெரிக்க தம்பதியினர். தங்களது செல்போன் கேமிராவில் புகைப்படம் எடுப்பதில் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

÷குழந்தைகள் நடன நிகழ்ச்சி தொடங்கியதும், அமெரிக்க தம்பதியினரால் தங்களது ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் இருக்கையிலிருந்து எழுந்து குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்தனர். மும்பை நகருக்கு முதலில் வந்த

மீனவ சமுதாயத்தினரின் பாரம்பரிய "கோலி' நடனத்துக்கு நடனமாடினர்.

குழந்தைகள் ஆடுவதைப் போல தானும் ஆடிக் காட்டி தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார் மிஷேல். தனது கணவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கவே ஒபாமாவும் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடினார்.

÷குழந்தைகளுடன் மட்டுமன்றி அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சகஜமாக பேசி மகிழ்ந்த ஒபாமா தம்பதியர், புகைப்படம் எடுத்துக் கொள்ள மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். குழந்தைகளுக்கு "ஆட்டோகிராபும்' போட்டுக் கொடுத்தனர்.

÷கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் கொண்டாடினார் ஒபாமா. வெள்ளை மாளிகையில் முதல் முறையாக தீபாவளி கொண்டாடியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இம்முறை தீபாவளியை மும்பையில் குழந்தைகளுடன் கொண்டாடினார்.
...தினமணி 08.11.2010

nambi
07-11-2010, 06:38 PM
சென்னை : தமிழகத்தை அச்சுறுத்திய "ஜல்' புயல் சிறிது பலவீனமடைந்து நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. பலத்த மழையின் காரணமாக தமிழகத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். சென்னை கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான "ஜல்' புயல் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே நேற்று மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த "ஜல்' புயல், சென்னைக்கு அருகே 150 கி.மீ., தொலைவில் இருந்த போது பலவீனமடைந்தது. புதுச்சேரி, நெல்லூருக்கும் இடையே புயல் நள்ளிரவில் கடந்தது.புயலையொட்டி பெய்த பலத்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் நெடுஞ்சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டன.சென்னையில் கடலோரங்களில் உள்ள மீனவர் வசித்த வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்ததால் மீனவர்களின் படகுகளும், வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், திருமண மண்டபங்களிலும், பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல பகுதிகளில் மரங்கள் மின்கம்பங்களின் மேல் சாய்ந்ததால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. பலத்த மழைக்கு சென்னையில் ஒரு வங்கி அதிகாரியும், கன்னியாகுமரியில் கடலில் குளித்த ஒருவரும் பலியாயினர். தஞ்சை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் விவசாய நிலத்தில் தேங்கியிருப்பதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்களில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை துணை முதல்வர் ஸ்டாலின் சென்று பார்வையிட்டார்.தொடர் மழையின் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகமானதால், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை :புயல் சின்னத்தின் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் உட்பட 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இன்று காலை நிலவரத்தை வைத்து மாவட்ட நிர்வாகமே விடுமுறை குறித்து முடிவு எடுக்கலாம்.தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகளில் இன்று இடைநிலைத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. அவை ஒத்தி வைக்கப்பட்டு நாளை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.சென்னை பல்கலைக் கழகம் சார்பில் இன்று நடப்பதாக இருந்த தேர்வுகள், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. "தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என துணைவேந்தர் திருவாசகம் அறிவித்துள்ளார்.

...தினமலர் 08.11.2010

அமரன்
07-11-2010, 08:01 PM
சுமத்திராவில் சுனாமி.. இலங்கை அண்டிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு.. இந்தியா, தமிழகத்தை சுற்றிய புயல்... பயத்தை வரவைக்கும் அபாயத் தழும்புகள்..

சுடச்சுடச் செய்திகளை மன்ற மக்களுக்குத் தரும் நம்பிக்கு நன்றி!

nambi
08-11-2010, 06:29 AM
பாராட்டுக்கு நன்றி அமரன்!

nambi
08-11-2010, 06:30 AM
சென்னை: கிரந்த எழுத்துக்களை யுனிகோட் வடிவத்தில் மாற்றுவதற்கான பரிந்துரையில் ஐந்து தமிழ் எழுத்துக்களும் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி, மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவருக்கு எழுதியுள்ள கடிதம்: இந்திய பாரம்பரிய எழுத்துக்களான சமஸ்கிருதம் மற்றும் கிரந்தத்தின் எழுத்துருக்களை உருவாக்க, யுனிகோட் கூட்டமைப்புக்கு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை பரிந்துரை செய்துள்ளதாக தமிழக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்தப் பரிந்துரை, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமுதாயத்திடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கு முன், தமிழறிஞர்களிடையே தேவையான அளவு கலந்தாலோசிக்கப்படவில்லை என, அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, கிரந்த எழுத்துருக்களில் ஐந்து தமிழ் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் எதிரொலியாக, தமிழக நிதியமைச்சர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் மூத்த அமைச்சர்கள், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் தலைவர் அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கனிமொழி எம்.பி., சிங்கப்பூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர் அரவிந்தன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தை, கடந்த 4ம் தேதி நடத்தினேன். இந்தக் கூட்டத்தில், "அந்தப் பரிந்துரையை இறுதி செய்வதற்குமுன் பரந்துபட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும்' என, ஒருமித்தகருத்து எழுந்தது. இதுதொடர்பான ஆலோசனை நடத்தி, பரிந்துரையை அளிக்க தமிழக அரசு, ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்க உள்ளது. மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரை யுனிகோட் கூட்டமைப்புக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த பரிந்துரையின் மீது முடிவெடுப்பதை ஒத்திவைக்கும்படி கூட்டமைக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான நீங்கள் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பான முன்னேற்றங்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்வேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

...தினமலர் 06.11.2010

nambi
08-11-2010, 08:58 PM
சென்னை, நவ.8-

நடிகர் கமல்ஹாசன் 56-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்த்து கூறினார்.

பிறந்த நாள்

`உலக நாயகன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமல்ஹாசன், 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி பிறந்தார். `களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் தனது 4-வது வயதில் திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவரை அவர், 214 படங்களில் நடித்து இருக்கிறார்.

இப்போது, அவர், `மன்மதன் அம்பு' என்ற புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது அவருடைய 215-வது படம்.

கருணாநிதி வாழ்த்து

கடந்த 50 வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் தனது 56-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

நேற்று அவர் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தார். அவருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதாவது:-

உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிறுவயது முதல் தமிழ்த்திரையுலகில் வளர்ந்து, தற்போது பெருமைப்படத்தக்க இடத்தையும், பெரும்புகழின் சிகரத்தையும் எட்டியிருக்கிறீர்கள். கோடிக்கணக்கான திரைப்பட ரசிகர்களின் இதயத்தில் உங்களுக்கென சிறப்பானதொரு தனியிடத்தை பெற்றிருக்கிறீர்கள்.

நீங்கள் சிறந்த கற்பனை வளம் கொண்ட கவிஞர் என்ற உண்மையையும், உலகுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள். கலைஞனுக்கான திறமைகள் அனைத்தையும் கற்றுணர்ந்த வித்தகர் என்பதை ஏற்கனவே நிரூபித்தும் விட்டீர்கள். தமிழ் திரையுலகில் நீங்கள் என்றென்றும் ஏற்றமிக்க இடத்தை தொடர்ந்து பெற்று வளர எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

பிறந்தநாளையொட்டி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சி நிலையம் அருகில் உள்ள அண்ணா கலையரங்கில் நடந்தது. இயக்கத்தின் கோவை மாவட்டப்பொறுப்பாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

20 ஏழைப்பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்ற 2 பேருக்கு 3 சக்கர சைக்கிள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்துக்கு 50 போர்வைகள், ஏழைப்பெண்களுக்கு கிரைண்டர், மிக்ஸிகள், ஏழை, மாணவ-மாணவிகள் 250 பேருக்கு நோட்டு, புத்தகம், சலவைத்தொழிலாளர் 5 பேருக்கு இஸ்திரி பெட்டி ஆகியவைகளை கமல்ஹாசன் வழங்கினார்.
..தினத்தந்தி 08.11.2010

nambi
08-11-2010, 09:00 PM
சென்னை, நவ. 7: நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தமிழக அரசின் செயலற்ற தன்மைகளை விமர்சித்துப் பேசும் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியைக் குறைகூறிப் பேச வேண்டாம் என அதிமுக எம்.பி.க்களுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியிருப்பதாகத் தெரிகிறது.

எம்.பி.க்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்ட அலுவல்கள் தொடங்குகின்றன.

இந்தக் கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளைத் தெரிவிப்பதற்கான, அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் ஜெயலலிதா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

தொலைத் தொடர்புத்துறையில் "2 ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் பற்றி பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டும் என எம்.பி.க்களுக்கு ஜெயலலிதா அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.

நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா பதவி விலகாமல் இருப்பதாக ஜெயலலிதா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்.

எனவே இந்த விஷயம் குறித்து அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்று தெரிகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் பற்றியும் அதிமுகவினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னை எழுப்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு சரியாகக் கையாளாமல் போனதால்தான் இந்த இரு பிரச்னைகளும் மோசமான நிலையை எட்டியுள்ளன என்று ஜெயலலிதா அறிக்கைகள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதே குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.

எனினும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியைத் தன் பக்கம் இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. காங்கிரஸ் இருக்கும் பக்கம்தான் பலம் அதிகமாக இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகி இருப்பதால் திமுகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சியைப் பிரித்துவிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க வேண்டாம் என்ற அறிவுரை, அக் கட்சியினரிடம் நல்ல பெயரைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

...தினமணி 08.11.2010

nambi
08-11-2010, 09:04 PM
வகிரி, நவ. 7: திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி இறந்தது தொடர்பாக 2 டாக்டர்கள், செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சுபஹானி மனைவி

ஜமீலா பீவி (23). கடந்த ஜூன் 25-ம் தேதி பிரசவத்துக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சில மணி நேரத்தில் இறந்தார்.

இதற்கு மருத்துவர்கள் கவனக்குறைவே காரணம் எனக் கூறி ஜமீலாபீவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி, அவரது கணவர் சுபஹானி போலீஸில் புகார் செய்தார்.

இக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டம், தர்னாவில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தமிழக முதல்வரின் நிவாரண நிதியாக ரூ. 2.5 லட்சம் தொகையை சுபஹானியிடம் ஆட்சியர் மு. ஜெயராமன் வழங்கினார்.

சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஜமீலாபீவி அனுமதிக்கப்பட்டபோது, பணியில் இருந்த மருத்துவர்கள் கற்பகராஜ், சித்ரா சங்கரேஸ்வரி, செவிலியர் ஜானகி ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
...தினமணி 08.11.2010

nambi
08-11-2010, 09:05 PM
புதுதில்லி, நவ.8- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை அவர் உரையாற்றியபோது இதைத் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததற்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பெரிய வளம் அதன் மக்கள்தான். இந்தியாவின் வெற்றிக்கு காரணம் ஜனநாயகமே. உலகத்தில் மாற்றம் கொண்டு வரும் வகையில் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்திய-அமெரிக்க நட்புறவு நீண்ட நாள் தொடரும்.

அமெரிக்காவும் இந்தியாவும் இருபெரும் ஜனநாயக நாடுகள். இருநாடுகளின் அரசியலமைப்புச் சட்டமும் "மக்களாகிய நாம்..." என்ற வார்த்தைகளுடன் தான் தொடங்குகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட வேண்டும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை எதிர்பார்க்கிறேன். அதில், நிரந்தர உறுப்பினராக இந்தியா இருக்க வேண்டும். உலகில் இந்தியாவுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும்.

இவ்வாறு ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார்.

ஒபாமா தனது உரையை முடிக்கும்போது "ஜெய் ஹிந்த்" என்று கூறி முடித்தார். பின்னர் தனது இருக்கையில் அமரும் முன் இந்திய பாணியில் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
...தினமணி 09.11.2010

nambi
08-11-2010, 09:10 PM
கொழும்பு, நவ.8- இலங்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரை சந்திக்க தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் ஆர்வத்துடன் வந்து செல்வதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (82) அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் உடனிருந்து கவனித்து வருகிறார்.

வல்வெட்டித்துறை பகுதிக்கு சுற்றுலா வரும் சிங்களர்களில் பெரும்பாலானோர் பார்வதியம்மாளை நேரில் சந்தித்துவிட்டு செல்கின்றனர். சிலர் அவரது காலை தொட்டு வணங்கிச் செல்கின்றனர். இவ்வாறு வாரம்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் அவரை பார்த்துவிட்டுச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
...தினமணி 09.11.2010

ஜனகன்
08-11-2010, 09:24 PM
நண்பி அவர்களே!
எல்லாருக்கும் பயன்படற மாதிரியான தகவல்கள்,செய்திகள் கொடுத்திருக்கீங்க,கொடுத்திட்டே இருங்க.
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

nambi
10-11-2010, 05:30 AM
நன்றி! ஜனகன்! நெடுநாள் கழித்து தங்களை மன்றத்தின் எழுத்தில் சந்தித்தற்கு மிக்க மகிழ்ச்சி!

nambi
10-11-2010, 05:31 AM
கோவை: கோவையில் சிறார்களை கடத்திக் கொலை செய்த கொலையாளி மோகன் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் என்கெளன்டர் மூலம் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து வக்கீல்கள் சிலர் கோவை கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் சிறார்கள் முஷ்கின், ரித்திக் ஆகியோரைக் கொன்ற இரு கொலையாளிகளில் ஒருவரான மோகன கிருஷ்ணனை கோவை அருகே வைத்து நேற்று போலீஸார் என்கெளன்டரில் சுட்டுக் கொன்றனர். போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டதாலும், தப்பி ஓட முயன்றதாலும், அவனை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றதாக கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கோவையில் பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில் கோவை கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் சிலர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனித உரிமைகளை மீறும் வகையில் போலீஸார் இப்படி நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேசமயம், இவர்களின் போராட்டத்தை எதிர்த்து இன்னொரு பிரிவு வக்கீல்கள் கூறி போலீஸாரின் செயலைப் பாராட்டி கோஷமிட்டதால் அங்கு மோதல் மூளும் நிலை ஏற்பட்டது. இந்தப் பிரிவு வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் திரண்டனர். அவர்கள் எண்கெளண்டரை எதிர்த்த வக்கீல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் இட்டனர்.

மேலும் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் நடந்தது. இதில் ஒருவர் கீழே தள்ளப்பட்டு காயமடைந்தார். இந்த போட்டி போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் பெரிய அளவில் அமளி ஏதும் ஏற்படவில்லை.

....தடஸ்தமிழ் 10.11.2010

nambi
10-11-2010, 05:33 AM
கோவை: கோவையில் இரு குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ்(25) என்கவுன்டரில் நேற்று கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் மாநகர காவல்துறை சார்பில் நேற்று மதியம் மாவட்ட தலைமை செசன்சு கோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வுசெய்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி பாஸ்கரன், இதுபற்றி விசாரணை நடத்த 7வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தெய்வத்துக்கு உத்தரவிட்டார். அதை ஏற்று அவர் நேற்று மாலை விசாரணையை துவக்கினார்.மாலை 6.15 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மோகன்ராஜ் உடலை பார்வையிட்டு, எந்தெந்த இடங்களில் குண்டுபாய்ந்துள்ளது என்பதை குறிப்பெடுத்தார். அதன்பின்னர், பிரேத பரிசோதனை நடத்த உள்ள டாக்டர் ஜெயசிங், மோகன்ராஜின் தந்தை ராதாகிருஷ்ணன்(55), மோகன்ராஜ் மனைவி ஆரோக்கியமேரியின் தம்பி பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

என்கவுன்டரை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளீர்களா என கேட்டார். ஆனால், யாரும் நேரில் பார்த்ததாக தகவல் தெரிவிக்கவில்லை.இதையடுத்து, என்கவுன்டர் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், என்கவுன்டரின்போது மோகன் ராஜால் சுடப்பட்டு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சப்&இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோரை நேரில் பார்வையிட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்று 2வது நாளாக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்த உள்ளார்.அதன்பின்னர், மோகன்ராஜ் உடலை பரிசோதனை செய்வதற்கு கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை பிரிவு டாக்டர் ஜெயசிங்குக்கு உத்தரவிட உள்ளார். பின்னர், மோகன்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

...தினகரன் 10.11.2010

nambi
10-11-2010, 05:37 AM
புது தில்லி, நவ.9: இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார்.

தில்லி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க தம்பதிகளுக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷீத், வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ஜே ரோமரும் வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டார்.

தில்லி விமான நிலையத்திலிருந்து காலை 8.54 மணிக்கு அதிபரின் சிறப்பு விமானமான ஏர்ஃபோர்ஸ்-1 விண்ணில் சீறிப் பாய்ந்தது. தில்லியிலிருந்து புறப்பட்ட ஒபாமா, இரண்டு நாள் பயணமாக ஜகார்த்தா செல்கிறார். தனது சிறு வயதில் நான்காண்டுகள் ஜகார்த்தாவில் ஒபாமா இருந்துள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை மும்பைக்கு வந்த ஒபாமா, இரண்டு நாள் மும்பையில் தங்கியிருந்தார். பின்னர் தில்லி திரும்பிய அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றினார்.

மும்பையில் தங்கியிருந்த போது இந்திய, அமெரிக்க நிறுவனங்களிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் குறிப்பாக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கும் ஜிஇ எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தமும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும், போயிங் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்கவையாகும்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க அமெரிக்கா ஆதரிக்கும் என்றும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்திய நிறுவனங்கள் மீதான தடை விலக்கப்படும் என்ற அறிவிப்பும், அணுசக்தி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் குறிப்பிடத்தக்கவையாகும்.

...தினமணி 10.11.2010

nambi
10-11-2010, 05:39 AM
சென்னை, நவ.9: தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இவ்வாறு எச்சரித்தார்.

பள்ளிக் கட்டணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் உடல்நலம் காரணமாக கடந்த மாதம் ராஜிநாமா செய்ததையடுத்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவிராஜ பாண்டியனை தமிழக அரசு சமீபத்தில் நியமித்துள்ளது. அக்கமிட்டி தனது பரிந்துரைகளை அளித்ததும் அடுத்த ஆண்டில் இருந்து புதிய கட்டண விகிதத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தும் என அமைச்சர் தெரிவித்தார்.

எந்த பள்ளியாவது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் பார்வையாளராக இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

...தினமணி 10.11.2010

nambi
10-11-2010, 05:46 AM
சென்னை, நவ.9-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

19 ஆண்டுகளாக சிறையில்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார். வேலூர் மத்திய சிறையில் இருந்த நளினி, இப்போது சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அரசுக்கு அவர் மனு கொடுத்தார். அந்த மனுவை 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு பரிசீலித்தது. பின்னர், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யும் ஆலோசனைக்குழு தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் 31-10-07 அன்று, நளினியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆலோசனைக்குழு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த குழு, நளினியின் கோரிக்கையை பரிசீலித்தது. பின்னர், ஆலோசனைக்குழு தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நளினியின் கோரிக்கை 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, ஐகோர்ட்டில் நளினி மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:-

குற்றத்தின் தன்மை

ஆலோசனைக்குழு தெரிவிக்கும் கருத்துகளை முழுமையாக நம்பி, எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில், முக்கிய குற்றவாளிகளுக்கு நான் அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு அதன்மூலம் சதித்திட்டத்தில் பங்கேற்றதாகவும், அதனால் என் மீதான குற்றம், கடும் குற்றம் என்றும் ஆலோசனைக்குழு கூறியுள்ளது.

மருராம் என்பவருக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துகளை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. கைதிகளின் மறுவாழ்வை கருத்தில் கொண்டுதான், முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதன் நோக்கத்தை பரிசீலிக்காமல் எனது கோரிக்கையை அரசு நிராகரித்து இருக்கிறது. குற்றத்தின் தன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு நிராகரித்திருக்கிறார்கள்.

அரசுக்கு நோட்டீஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச், ``கடைசி நிமிடம் வரை இந்த சதித்திட்டம் பற்றி எனக்கு தெரியாது'' என்று தெரிவித்துள்ளது. எனவே, என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கூறி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.


....தினத்தந்தி 10.11.2010

kathir_tamil
11-11-2010, 05:05 AM
""தமிழ் வழியில் பயின்றால், வாழ்க்கையில் சோபிக்க முடியாது என்ற கருத்து பரவலாக உள்ளது; அது தவறானது,'' என முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசினார்.

திருவாரூர் மாவட்டம், கோவில்வெண்ணி அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டில் அதிக மார்க் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பரிசு வழங்கும் விழா நடந்தது. 68 மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: அடித்தளம் நன்றாக அமைய, மாணவர்கள் நன்கு கற்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றால், வாழ்க்கையில் சோபிக்க முடியாது என பரவலாக உள்ள கருத்து தவறானது. நானும், தமிழ் வழியில் பயின்றவன் தான். ஆறாவது வகுப்புக்குப் பிறகு தான் ஆங்கிலம் பயின்றேன். ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்தும் திறமை இருந்தால் மட்டும் போதும்.வாழ்க்கை நடைமுறை குறித்து அறிய கிடைக்கும் ஒரே நூல் திருக்குறள். நேர்மையும், ஒழுக்கமும் தான் வாழ்வின் அடிப்படை தேவை. அது இல்லாவிட்டால் முன்னேற முடியாது.இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் நான்காண்டை நன்றாக படிக்க வேண்டும்.

அவரவர் தான் படிக்கும் துறையில் ஆழ்ந்த அறிவை பெற வேண்டும். அவர்களுக்கு நிர்வாகத் திறமையும் வேண்டும். யார், யார் எப்படி எனத் தெரிந்து வேலை வாங்க வேண்டும். சிறந்த பொறியாளராக இருந்தால் மட்டும் போதாது; சமூக உணர்வும் வேண்டும்.நான், 1965ல் இந்திய - பாகிஸ்தான் போரின் போது காயமடைந்த வீரர்களுக்காக ரத்த தானம் செய்தேன். இதுவரை 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளேன். தொழிலை நேர்மையாக நடத்த முடியாது என்பது தவறான அபிப்ராயம். நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் என்பது, மற்றவர்கள் மத்தியில் உங்களுக்கு உயர்வைத் தரும்.இவ்வாறு கோபால்சாமி பேசினார்.



செய்தி: தினமலர்

kathir_tamil
11-11-2010, 05:17 AM
இந்திய அணியின் நட்சத்திர வீரர் லட்சுமண், தனது சொந்த மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறார் லட்சுமண். இந்த ஆண்டு பங்கேற்ற 7 டெஸ்டில் இவர் 704 ரன்கள் குவித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருக்கும் போதெல்லாம், தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது இவரது சிறப்பம்சம்.

லட்சுமண், இதுவரை சர்வதேச அளவில் 115 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில், ஒரு முறை கூட இவரது சொந்த ஊரான ஐதராபாத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை. கடைசியாக இங்கு கடந்த 1988ல் டெஸ்ட் போட்டி நடந்தது. ஆனால், லட்சுமண் 1996ல் தான் அறிமுகமானார்.
தற்போது இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கான்பூரில் தான் நடக்க இருந்தது. பின் உலக கோப்பை போட்டிக்காக, ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்டு, தயாராக உள்ள ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. 22 ஆண்டுகளுக்குப் பின், இங்கு நாளை துவங்கும் போட்டியில் லட்சுமண் பங்கேற்பதன் மூலம், இவரது நீண்ட கால கனவு நிறைவேறுகிறது.

இதுகுறித்து லட்சுமண் கூறியது:
பொதுவாக ஐதராபாத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது சொந்த ஊரான இங்கு, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது, சற்று மனவேதனையாகத்தான் இருந்தது. சச்சின் மும்பையிலும், டிராவிட் பெங்களூரிலும், டில்லியில் சேவக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

வீரர்களின் கனவு:
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தனது சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுக்கு இடையே போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இங்குள்ள லால்பகதூர் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளேன். ஆனால், முதன் முறையாக சொந்த மண்ணில் இப்போது தான் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

நினைவில் நிற்கும்:
எனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியவர்கள் அனைவரும் எனது ஆட்டத்தை பார்வையிட வருவார்கள். இது வித்தியாசமான அனுபவத்தை தரும். போட்டியில் என்ன நடக்கும் என இப்போது தெரியாது. என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.

***** தினமலர் *********


நாமும் வாழ்த்துவோம் ......

nambi
11-11-2010, 10:17 AM
இஸ்லாமாபாத்: இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பார்லிமென்ட்டில் உரையாற்றியபோது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்றார். இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை ஆலோசனை நடத்தி கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களை பின்பற்றுவதில் இந்தியாவிடம் பல வேறுபாடுகள் உள்ளன. அதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருப்பது பாகிஸ்தானுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்துள்ளதுÕ என பாகிஸ்தான் அமைச்சரவை வெளியிட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
....தினகரன் 11.11.2010

nambi
11-11-2010, 10:22 AM
http://www.virakesari.lk/news/admin/images/ang-sang-suki.jpg


மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி நாளை மறுநாள் 13ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு இராணுவ அரசு தெரிவித்துள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.

இந்நிலையில், அங்கு கடந்த 7ஆம் திகதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில், இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஆங் சான் சூகி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. பொதுத்தேர்தலில் இராணுவ அரசுக்கு ஆதரவான ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆங் சான் சூகி நாளை மறுநாள் 13ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஜனநாயகத்துக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் போராடி வருகின்றார்

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்ட பின், நாட்டின் அரசியல் நிலை மாறுமா என்பது பற்றிக் கூற முடியாது என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள், பாராளுமன்றின் இரு சபைகளிலும் 77 சதவீதத்திற்கு மேல் உள்ள இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
...வீரகேசரி, வெப்துனியா 11.11.2010

nambi
11-11-2010, 10:36 AM
கொழும்பு: இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையாக சண்டை நடந்த வன்னி உள்ளிட்ட வட இலங்கைப் பகுதிக்குச் செல்ல பிபிசி நிருபர்களுக்கு தடை விதித்துள்ளது இலங்கை அரசு.

இலங்கையில் போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் போர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுபற்றி செய்தி சேகரிக்க பிரிட்டனின் பி.பி.சி. நிருபர்கள் குழு ஒன்று இலங்கை வந்திருந்தது. அவர்கள் விசாரணை கமிஷன் விசாரிக்கும் வட பகுதிகளுக்குச் செல்ல முற்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு இலங்கை ராணுவ துறை அனுமதி மறுத்துவிட்டது.
போர் காலங்களில்தான் ராணுவத்திடம் அனுமதி பெற்று விட்டு வடபகுதிகளுக்கு செல்ல வேண்டும். தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மீண்டும் போர் வர வாய்ப்பே இல்லை என்றும் இலங்கை கூறி வருகிறது. ஆனாலும் இன்னும் ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது.

வட பகுதிக்கு செல்ல அனுமதி கிடைக்காததால் பி.பி.சி. நிருபர்கள் குழு கொழும்பு நகரிலேயே முடங்கி கிடக்கிறது. 2 மாதத்துக்கும் முன்பும் இதே போல பி.பி.சி. நிருபர்கள் குழு வடபகுதிக்கு செல்ல முயற்சித்தது. அப்போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிறநாட்டு ஊடகக் குழுக்களுக்கும் அனுமதி மறுத்து வருகிறது இலங்கை.
...தட்ஸ்தமிழ் 11.11.2010

nambi
11-11-2010, 10:39 AM
புதுடெல்லி-: பல்கலைக்கழக மாணவி ஒருவரை, ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு டெல்லியை சேர்ந்த இளம்பெண் (19) ஒருவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நொய்டாவில் உள்ள தனியார் கம்பெனியில் பகுதிநேர வேலையும் பார்த்து வந்தார். கடந்த புதன் கிழமை (நவ.3ம் தேதி), தனது கம்பெனி வேனுக்காக, காலை 6 மணி அளவில் மந்தவாலி ரயில்வே காலனி அருகில் காத்திருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் ராம்வீர் (25), தனது நண்பர்கள் 3 பேருடன் வந்தார். மாணவி தனியாக நிற்பதையறிந்த கும்பல், அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவுக்குள் தூக்கி போட்டுக் கொண்டு பறந்தது. யமுனை ஆற்றின் அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவரை இழுத்து சென்றனர். பின்னர் மாணவியை நான்கு பேரும் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இளம்பெண் மயங்கி சரிந்தார். வெகுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த கதியை அறிந்து கதறி துடித்தார். அதை கண்டு கொள்ளாத ஆட்டோ டிரைவர் ராம்வீர், அந்த பெண்ணின் மொபைல் நம்பரை வாங்கி கொண்டார். ‘அழாத.. எப்ப கூப்பிட்டாலும் நீ வரணும்.. இல்லேனா இங்க நடந்தத வெளில சொல்லிருவோம்.. உனக்குதான் பிரச்னை’ என்று மிரட்டியுள்ளார். சுமார் 10 மணி நேர கொடுமைக்கு பின்னர், மாணவி வீட்டுக்கு திரும்பினார். தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் கூறி அழுதார்.
‘குடும்ப மானம் போய் விடுமே..’ என்ற பயத்தில் முதலில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஆனால் ராம்வீர் மீண்டும் போன் செய்து தொல்லை கொடுக்கத் தொடங்கியதால் போலீசுக்கு சென்றனர். அவர்கள் மாணவியின் அம்மா மூலம், ராம்வீரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்செய்து வளைத்துப் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

..தினகரன் 11.11.2010

nambi
11-11-2010, 10:57 AM
கோவை : கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக் ஆகியோரை கடத்திச்சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்த வேன் டிரைவர் மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனையடுத்து அவனது உடலை சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியிலுக்கு கொண்டு வர அவரது ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மோகன்ராஜ் உடல் கோவையிலேயே தகனம் செய்யப்பட்டது. மேலும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசாருக்கு ரூ 25 ஆயிரம் வெகுமதி வழங்கினர் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள். ஆனால் இதனை உடனடியாகப் பெற்றுக் கொள்ளமுடியாது என்றும், மேலிட அனுமதி பெற்ற பிறகு பெற்றுக் கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துவிட்டனர்.

....தினகரன் 11.11.2010

nambi
11-11-2010, 11:02 AM
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க வரும் தமிழக பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக திருமலையில் தமிழக அரசு சார்பில் விடுதி கட்டப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழகத்தில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரமோற்சவம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் தங்க இடமின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கர்நாடக பக்தர்களுக்காக அந்த மாநில அரசு சார்பில் திருமலையில் திருமண மண்டபம் மற்றும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல் சில நாட்களுக்கு முன்பு திருமலைக்கு வந்த புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், ஆளுநர் இக்பால்சிங் ஆகியோர் புதுச்சேரி அரசு சார்பில் விடுதி கட்ட தேவஸ்தானத்திடம் அனுமதி பெற்றுச் சென்றனர். இந்நிலையில், தமிழக பக்தர்கள் தங்குவதற்காக திருமலையில் தமிழக அரசு சார்பில் இடம் வாங்கி விடுதி கட்ட வேண்டும் என திருப்பதியை சேர்ந்த பிரஜா காங்கிரஸ் கட்சி தலைவர் முனிசந்திரா, தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பர்னாலா ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு சார்பில் திருமலையில் 1 ஏக்கர் நிலம் வாங்க, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உத்தரவிட்டார். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் தமிழக அரசு சார்பில் விடுதி, திருமண மண்டபம் கட்ட ஆந்திர அரசு அனுமதி அளிக்கும் என தெரிகிறது.
....தினகரன் 11.11.2010

nambi
11-11-2010, 11:05 AM
தஞ்சாவூர், நவ. 10: தஞ்சாவூரை அடுத்த புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் நவம்பர் 13, 14-ம் தேதிகளில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 2010 ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.சி.ஏ., பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரியின் முதல்வர் வி. ஆறுமுகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னையைச் சேர்ந்த மாநில தொழில்பயிற்சி வாரியத்துடன், கிங்ஸ் கல்லூரி இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த சி.டி.எஸ். மென்பொருள் நிறுவனம், தனது வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான பொறியியல் வல்லுநர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. சுமார் 3,000 பட்டதாரிகள் வரை தேர்வு செய்யப்படலாம்.

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி விவரங்களை......................................... என்ற வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு கிடைக்கப்பெற்ற பதிவு எண்ணுடன் நவம்பர் 13-ம் தேதி காலை 8 மணிக்கு கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் நடக்கும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு நவம்பர் 14-ம் தேதி தொழில்வளம், மனிதவள நேர்காணல் நடத்தப்படும். இதிலும் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு அன்றே பணி ஆணை வழங்கப்படும்.

இந்தப் பணியில் சேருபவர்களுக்கு ஓர் ஆண்டு ஊதியமாக ரூ. 3 லட்சம் வரை கிடைக்கும். பட்டதாரிகள் 10, பிளஸ் 2 தேர்வில் 60 சதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பு வரை கல்வியில் இடைநின்றல் இருக்கக் கூடாது.

தஞ்சாவூர் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து வசதியும், கல்லூரியில் தங்க இடவசதியும் இலவசமாக செய்துதரப்படும் என்றார் ஆறுமுகம். கல்லூரி வளாக அலுவலர் டி.ஆர்.எஸ். முத்துகுமரன், வேலைவாய்ப்பு பயிற்சியாளர் எஸ். ஜான் இம்மானுவேல், கல்லூரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
...தினமணி 11.11.2010

nambi
12-11-2010, 01:49 PM
நியூயார்க், நவ.12: மரண தண்டனையை ரத்து செய்யும் விதத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 107 நாடுகள் வாக்களித்துள்ளன. தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் உள்பட 38 நாடுகள் வாக்களித்துள்ளன. 36 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தன.

மரண தண்டனையை ரத்து செய்ய வகை செய்யும் இதே தீர்மானம், 2007-லும் ஐ.நா. பொது சபையில் கொண்டுவரப்பட்டது. அப்போது தீர்மானத்தை ஆதரித்து 104 நாடுகளும், எதிர்த்து 54 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பதில் இருந்து 29 நாடுகள் ஒதுங்கியிருந்தன.

மரண தண்டனையை எதிர்க்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதன் மூலம் இதை அறிய முடிகிறது. அதேபோல எதிர்த்த, வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிய நாடுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று ஐ.நா. சபை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

....தினமணி 12.11.2010

nambi
12-11-2010, 02:10 PM
நாடு... ஏன்?... உலகம் முழுக்க இது தான் ஓடிட்டிருக்கு போலிருக்கிறது!:D

nambi
15-11-2010, 01:29 AM
சிறுமியை கற்பழித்துக் கொன்ற தொழிலாளிக்கு
இன்று காலை நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி, நவ.15-

சேலம் அருகே சிறுமியை கற்பழித்து கொன்ற தொழிலாளிக்கு இன்று காலை நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுமி பிணம்

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள புளியம்பட்டி செட்டிக்காட்டை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது 9 வயது மகள் பழனியம்மாள். அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி, பழனியம்மாளின் பெற்றோர் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு சென்றனர். அதையொட்டி அன்று பழனியம்மாள் அருகே உள்ள தாத்தா வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்தாள். 12-ந் தேதி அன்று பள்ளிக்கு சென்ற சிறுமியை செட்டிக்காட்டை சேர்ந்த செல்வம் (வயது35) என்ற தொழிலாளி நைசாக வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்து, அவளை கொலை செய்து சாக்குமூட்டையில் வீசிச் சென்றார். புகாரின்பேரில், செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு, செல்வத்துக்கு தூக்கு தண்டனை விதித்து மார்ச் 12-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இன்று தூக்கிலிட உத்தரவு

செல்வத்தின் அப்பீல் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டும் கடந்த செப்டம்பர் 21-ந் தேதி தூக்குதண்டனையை உறுதி செய்தது. தீர்ப்பின் நகல் சேலம் கோர்ட்டுக்கு வந்தது.

இதையடுத்து சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ராகவன், செல்வத்தை, நவம்பர் 15-ந் தேதி (இன்று) அதிகாலை 6 மணிக்கு தூக்கில் இட வேண்டும் என உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

இந்த நிலையில் செல்வம், கோவை இலவச சட்ட உதவி மையம் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அம்மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜ×, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

செல்வம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜய குமார் வாதிடுகையில், `தூக்கு தண்டனை கைதியின் அப்பீல் மனு, சுப்ரீம் கோர்ட்டால் விசாரித்து முடிக்கப்படும்வரை, அவரை தூக்கில் போட முடியாது. ஆனால், செல்வம் அப்பீல் செய்ய சென்னை ஐகோர்ட்டு 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ள போதிலும், அந்த அவகாசம் முடிவதற்குள் அவரை தூக்கில் போட அவசர கதியில் முயற்சி செய்கின்றனர்` என்று குற்றம் சாட்டினார்.

அரசுக்கு நோட்டீசு

அதைக் கேட்ட நீதிபதிகள், சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டனர். எனவே, மறுஉத்தரவு வரும்வரை செல்வத்தை தூக்கில் போடக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

தூக்குத் தண்டனை கைதிகள் அப்பீல் செய்வதற்கு முன்பே, அவர்களை தூக்கில் போடக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தலைமை நீதிபதிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கடைசி நேரத்தில் நிறுத்தி வைப்பு

இதற்கிடையே, கோவை சிறையில் தூக்கிலிடப்படும் இடம் மற்றும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கோவை மத்திய சிறைக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பேக்ஸ் செய்தி ஒன்று வந்தது. அதில், "கோவை சிறையில் 15-ந் தேதி நிறைவேற்றப்படும் செல்வத்தின் தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக நிறுத்தி வைக்கவும்'' என கூறப்பட்டிருந்தது. இதனால் கடைசி நேரத்தில் தொழிலாளி செல்வத்தின் தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


....தினத்தந்தி 15.11.2010

nambi
17-11-2010, 02:29 AM
சென்னை: சென்னை அருகே 4 பள்ளி மாணவிகளை வேனில் கடத்திய கும்பல் அவர்களுக்கு மயக்கம் தெளிந்ததால் கீழே தள்ளிவிட்டுச் சென்று விட்டது.

சென்னை அருகே உள்ள குன்றத்தூர் வள்ளுவர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நதியா (12), பூங்கொடி (12), மீனா (13), காயத்திரி (13). இவர்களை நேற்று காலை பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கையில் அங்கு வேனில் வந்த ஒரு கும்பல் கடத்தியது.

பின்னர் அவர்களை மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்துள்ளனர். ஆனால் வழியில் மாணவிகளுக்கு மயக்கம் தெளிந்து அவர்கள் கூச்சலிட்டதால் அவர்களை கீழே தள்ளிவிட்டு அக்கும்பல் ஓடி விட்டது.

இது குறித்து பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம் மாணவிகளின் பெற்றோர்களுக்கும், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் பெற்றோர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தலைமையாசிரியை சஸ்பெண்டு

சேலம் கிச்சிப்பாளையம் பாவடி தொடக்கப்பள்ளியில் 4-வது வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவியை பள்ளிக்கு பெயிண்ட் அடிக்க வந்த தொழிலாளி கடத்திச் சென்று பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அந்நேரத்தில் அந்த வழியாக வந்த ரோந்துபணி போலீசார் சிறுமியை மீட்டு, பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியை கைது செய்தனர்.

இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி வாசு மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பள்ளி தலைமையாசிரியை காயத்ரியிடம் விசாரணை நடந்தியதில் அவருக்கு சிறுமி கடத்தப்பட்டதே தெரியாது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இது குறித்து தொடக்க கல்வி அதிகாரி வாசு கூறுகையில்,

பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அவர்கள் தினமும் பள்ளிக்கு நடந்து வருகிறார்களா, வாகனத்தில் வருகிறார்களா என்பதை ஆசிரியர்கள் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து அதை பராமரிக்க வேண்டும்.

மேலும், அவர்கள் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிச் செல்லும்போதும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

..தட்ஸ்தமிழ் 13.11.2010

nambi
17-11-2010, 02:32 AM
தாம்பரம், நவ.17-

குரோம்பேட்டை அம்பாள் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 14). குரோம்பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகிலா (14). குரோம்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் துர்கா (14). இவர்கள் மூவரும், குரோம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

நேற்று பள்ளிக்கு சென்ற மூவரும் வீடு திரும்பவில்லை. எத்தனையோ இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்களின் பெற்றோர், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

....தினத்தந்தி 17.11.2010

nambi
17-11-2010, 02:39 AM
ஓமலூர் தனியார் பள்ளி மாணவி கொலை:
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்
ஓமலூர், நவ.17-

ஓமலூர் தனியார் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவியின் பெற்றோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலை தோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுடைய மகள் சுகன்யா (வயது 17). இவர் கடந்த 2007-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்டனர். அங்கும் மாணவி இல்லாததால் இது குறித்து ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவி சீருடையுடன் பிணமாக கண்டு எடுக்கப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்

இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதி பள்ளியை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 22 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாணவியின் சாவில் மர்மம் நிலவியதால் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றக் கோரி பொது மக்கள் போராடி வந்தனர். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில் 50-க்கு வயதுக்கு மேற்பட்ட சில நபர்களால் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதும், மாணவியின் கர்ப்ப பையில் சிலரது விந்தணுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஓமலூர் பஸ் நிலையம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் கரு.வெ.சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் மாணவி சுகன்யாவின் தந்தை சண்முகம், தாய் வெண்ணிலா, தாய் மாமன்கள் சண்முகம், சின்னக்கண்ணு, தாத்தா நடராஜ் மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகு நந்தகுமார், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிற் சங்க தலைவர் கிருஷ்ணராஜ், கருப்பூர் நகர காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், ஓமலூர் நகர காங்கிரஸ் தலைவர் பரமசிவம், இளைஞர் காங்கிரஸ் அரவிந்த்குமார், சச்சு, உலகநம்பி, சேதுராமன், திண்டமங்கலம் மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவிக்கு அஞ்சலி

முன்னதாக காலை 9.30 மணி அளவில் உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்பு மாணவியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டு போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் கரு.வெ.சுசீந்திரகுமார் கூறும்போது, மாணவியின் சாவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தந்தை உருக்கம்

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற மாணவியின் தந்தை சண்முகம் கூறும்போது, எனது மகள் கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை. அவளது சாவில் எங்களுக்கு சந்தேகம் இருந்ததால் இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். எனது மகளின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னுடைய மகளுக்கு ஏற்பட்ட இது போன்ற கொடுமையான நிலைமை பள்ளியில் படிக்கும் வேறு எந்த குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது. எனது மகள் இறந்து விட்டாலும், அவளை போன்ற மற்ற குழந்தைகளுக்கு இது போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இவ்வாறு மாணவியின் தந்தை மிகுந்த உருக்கத்துடன் தெரிவித்தார்.

....தினத்தந்தி 17.11.2010

nambi
17-11-2010, 02:45 AM
பள்ளி முதல்வர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு போலீஸ் கமிஷனர் பேட்டி


சென்னை, நவ.17-

சென்னையில் குழந்தைகள் கடத்தலை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், பள்ளிக்கூட முதல்வர்களோடு நேற்று ஆலோசனை நடத்தியபிறகு இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

ஆலோசனை கூட்டம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை வழிநடத்துவது குறித்தும் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னையில் உள்ள பள்ளி முதல்வர்களோடு கமிஷனர் ராஜேந்திரன் இந்த ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள் சஞ்சய் அரோரா, ஷகில் அக்தர், இணை கமிஷனர்கள் தாமரை கண்ணன், சக்திவேல், சேஷசாயி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

துளிர் தொண்டு நிறுவன அமைப்பாளர் வித்யாரெட்டி, மனோ தத்துவ டாக்டர் சபியா சுல்தானா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 120-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட முதல்வர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் கமிஷனர் ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த ஆண்டு ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளேன். அப்போது பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஏற்று ஒருசில பள்ளிக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி முதல்வர்கள் கண்காணிப்பு கேமரா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். கேமராக்களை பள்ளிக்கூட வாசலிலும் பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.

பள்ளிக்கூடங்களில் நடக்கும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக காலதாமதம் செய்யாமல் போலீஸ் உதவியை நாடவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காலதாமதம் செய்தால் பிரச்சினை விபரீதமாகும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் எடுத்து கூறப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் மூலம் பிரச்சினைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளோம். அதுபோல, பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

காவலாளி

எல்லா பள்ளிக்கூடங்களிலும் மெயின் கேட்டில் திறமையான, நன்கு பயிற்சி பெற்ற காவலாளியை நியமிக்க வேண்டும் என்று எடுத்து கூறியுள்ளோம். அந்த காவலாளி தான் மாணவ-மாணவிகளை தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பவராக இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர்கள் சங்க கூட்டம் பள்ளிகளில் நடக்கும்போது அந்த கூட்டத்துக்கு அருகில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களையும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளோம். மாணவ-மாணவிகளை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வரும் இடைப்பட்ட காலத்தில் கொடுக்க வேண்டிய பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளோம்.

இதில், மாணவ-மாணவிகளை அழைத்து வரும் பள்ளி வேன், மற்றும் ஆட்டோ டிரைவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பள்ளி வேன் டிரைவர்களை வேலைக்கு அமர்த்தும்போது குறைந்தபட்சம் 10 ஆண்டு டிரைவிங் அனுபவம் உள்ளவராக பார்த்து நியமிக்க வேண்டும். அவருடைய போட்டை மற்றும் முகவரி அடங்கிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் எடுத்து கூறியுள்ளோம். வேன், ஆட்டோ டிரைவர்களின் விவரங்களை பெற்றோர்களுக்கும் எடுத்து சொல்ல கேட்டுள்ளோம். டிரைவர்களை மாற்றும்போது அதுபற்றி தகவல்களையும் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

கம்ப்ïட்டர் அறிவு

இங்கு பேசிய துளிர் அமைப்பை சேர்ந்த வித்யாரெட்டி, டாக்டர் சபியா சுல்தானா ஆகியோர் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நல்ல கருத்துக்களை சொன்னார்கள். குழந்தைகள் இப்போது கம்ப்ïட்டர் அறிவில் சிறந்து விளங்குகிறார்கள். அது சில நேரங்களில் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடுகிறது. இதுபோன்ற நேரத்தில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி? என்று ஆசிரியர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டுள்ளது. சென்னையில் 700 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இன்றைய கூட்டத்துக்கு வராத பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் தேவையான அறிவுரைகள் உரிய ஏற்பாடுகள் மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

வித்யாரெட்டி

துளிர் தொண்டு நிறுவன அமைப்பாளர் வித்யாரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரும்பாலும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் பாலியல் பலாத்காரத்தில் போய் முடிகின்றன. இந்தியா முழுவதும் நடக்கும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 53 சதவீதம் பாலியல் பலாத்காரத்தில் தான் முடிகிறது. பள்ளி குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களிலேயே பாலியல் பலாத்காரத்தை சந்திக்கும் நிலை உள்ளது. தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பாட்டு டீச்சர்கள் போன்றோர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்துள்ளன. குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போதும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். டிïசன், மிïசிக் கற்றுக்கொள்ள செல்லும் இடங்களிலும் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. தவறு செய்யும் ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்தினர் காப்பாற்றக்கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வித்யாரெட்டி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சாந்தோம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாமஸ் கூறும்போது, பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் இணைந்து செயல்படுத்தும் வகையில் இன்றைய கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
...தினத்தந்தி 17.11.2010

nambi
17-11-2010, 07:55 AM
சென்னை, நவ.15: கோவை என்கவுன்டர் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கோவையில் சிறுவர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் கொன்றதாக போலீஸôர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதில் மனு அளிக்க வேண்டும். அப்போது, என்கவுன்டர் குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

...தினமணி 16.11.2010

nambi
17-11-2010, 07:59 AM
சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் ஹசன் திருவள்ளூர் அருகே மீட்கப்பட்டுள்ளார்.

பாரிமுனையை சேர்ந்த தொழிலதிபர் காஜாவின் மகன் ஹசன் நேற்றிரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

ஹசனை விடுவிக்க ஒன்றரை கோடி ரூபாயை 12 மணிக்குள் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டியிருந்தனர்.

கடத்தல்காரர்களை பிடிக்க நேற்றிரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் திருவள்ளூரில் கடத்தல்காரர்கள் ஹசனை இறக்கி விட்டு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கெடு முடிந்த நிலையில் ஹசனை தாங்களாகவே விடுவித்துள்ளனர் கடத்தல்காரர்கள். இதனிடையே ஹசனை கடத்தியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

...வெப்துனியா 17.11.2010

nambi
17-11-2010, 08:08 AM
15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்றவர்


செங்குன்றம், நவ.17-

15 வயதுக்கு உட்பட்ட 9 சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

9 சிறுமிகள் கற்பழிப்பு

பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் எரிக் மார்டின் (54). இவர் புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தார். அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். இவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

இந்த நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 15 வயதுக்கு உட்பட்ட 9 சிறுமிகளை எரிக் மார்டின் வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டார். இதுதொடர்பாக பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

15 வருடம் ஜெயில் தண்டனை

அப்போது, ஜாமீனில் வெளியே வந்த அவர் நேபாள நாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார். இந்த சூழ்நிலையில், அவர் மீது நடைபெற்று வந்த வழக்கில் பிரான்ஸ் கோர்ட்டு அவருக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

நேபாளத்தில் சுமார் ஒரு வருடம் தங்கி இருந்த அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.

இந்தியாவில் உத்ராஞ்சல், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு சென்னைக்கு வந்த மார்டின், மாதவரம் நடேசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்.

சர்வதேச போலீசுக்கு மாற்றம்

இந்த நிலையில், எரிக் மார்டினை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை பிரான்ஸ் போலீசார் நாடினார்கள்.

இது தொடர்பாக சர்வதேச போலீசார் விசாரித்தபோது, எரிக் மார்டின் இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது. சென்னையில் இருக்கும் அவரை கைது செய்ய சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின் பேரில் சூப்பிரண்டு சம்பத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னையில் கைது

இந்த நிலையில், நேற்று எழும்பூருக்கு வந்த, எரிக் மார்டினை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரை அழைத்துக் கொண்டு போலீசார் அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவை தொலைந்து விட்டதாக கடந்த 2006-ம் ஆண்டில் அவர் உத்ராஞ்சல் போலீசில் புகார் செய்திருப்பது தெரிய வந்தது.

மேலும், பிரான்சில் இருக்கும் அவருடைய தந்தை செலவுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வருவதையும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள மார்டினிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

------

மாடல் அழகி மூலம் போலீசார் மடக்கினார்கள்

மோசடி மன்னன் சைபுதீனை கைது செய்ய கடந்த 3 மாதங்களாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. அவர் மும்தாஜ் பேகத்திடம் தனது உண்மையான வீட்டு முகவரியை கொடுக்கவில்லை. அவரது செல்போனும் போலி முகவரி மூலமே வாங்கப்பட்டுள்ளது. இதனால் சைபுதீனை பிடிக்க போலீசார் தந்திரம் ஒன்றை கையாண்டனர். மாடல் அழகி ஒருவரை ஆர்குட் இணையதளம் மூலம் சைபுதீனோடு பேச வைத்தனர்.

மாடல் அழகியும் அவரோடு தொடர்பு கொண்டு பேசி காதலிப்பது போல் நடித்தார்.

சைபுதீன் அதை உண்மை என்று நம்பி பழக ஆரம்பித்தார். மாடல் அழகியையும் மோசடி செய்ய முயற்சித்தார். முதலில் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டினார். நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் பிறந்த நாள் கொண்டாடப்போவதாகவும், அதற்கு வரும்படியும் மாடல் அழகி அழைப்பு விடுத்தார்.

சைபுதீன் தனக்கு பின்னால் விரிக்கப்பட்டுள்ள போலீசாரின் வலையை அறியாமல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்போன் ஒன்றையும் பரிசளித்தார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.


.....தினத்தந்தி 17.11.2010

nambi
17-11-2010, 08:12 AM
வேலூர், நவ. 16: தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, சிறையிலிருக்கும் மூவரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர்.

வேலூர் சிறையில் இருக்கும் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் அண்ணாமலை சந்தித்து மனுவில் கையெழுத்துப் பெற்றுச் சென்றதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

,,,தினமணி 17.11.2010

nambi
17-11-2010, 08:16 AM
உதவி இயக்குநர்களை விமர்சித்துப் பேசியதற்காக மிஷ்கின் மன்னிப்பு

உதவி இயக்குநர்கள் சுய இன்பம் அனுபவிப்பவர்கள் என்றும் வேறு பல வார்த்தைகளிலும் விமர்சித்ததற்காக இயக்குநர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மிஷ்கின் ஒரு பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில் உதவி இயக்குநர்களை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் வெகுண்ட உதவி இயக்குநர்கள், இயக்குநர்கள் சங்கத்தின் முன்திரண்டு போராட்டம் நடத்தினர். மிஷ்கின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தற்போது மிஷ்கின் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நிஜமாகவே நான் வருத்தப்படுகிறேன். உதவி டைரக்டர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று அப்படி சொல்லவில்லை. சில வார்த்தைகள் தவறிவிட்டன. அதனால் அவர்கள் காயப்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்கிறேன்.

உதவி டைரக்டர்களின் கோபத்தில், நியாயம் இருப்பதை உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

...தட்ஸ்தமிழ் 17.11.2010

பாலகன்
17-11-2010, 08:19 AM
தருமபுரி பஸ் எரிப்பில் ஈடுபட்டவர்கள் அந்த பஸ்ஸில் இருந்தவர்களை இறக்கிவிட்டுவிட்டு பிறகு பஸ்ஸை கொளுத்தியிருக்கலாம். உள்ளே இருக்கும் உயிர்களை மதிக்க தவறியவர்களை விடக்கூடாது. விடவேகூடாது.

தகவல்களை தரும் நண்ப நண்பிகளுக்கு நன்றிகள்

nambi
17-11-2010, 08:20 AM
இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக அந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியை இலங்கைத் தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டு வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அந்த பேட்டியில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

...தினமணி 15.11.2010

nambi
17-11-2010, 08:24 AM
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 22ம் திகதி காலை சுப முகூர்த்தத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் ஏழு பேர் உள்ளிட்ட அமைச்சுப் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் இவர்கள் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

ஜனாதிபதி, இரண்டு சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதான அமைச்சரவை செயலாளர்கள் இருவர் ஆகியோரினால் புதிய அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்து வந்த சிலருக்கும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மூன்று பேருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஊவா, மத்திய மற்றும் வட மாத்திய மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஜோதிட காரணங்களுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரiவியல் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

...தமிழ்வின் 17.11.10

nambi
17-11-2010, 08:51 AM
சென்னை, நவ.17-

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மானேஜர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்ததால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டவர் போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார் (வயது 56). அதன்பிறகு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இவர் பணியில் இருந்து `டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.

அதன்பிறகு தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கோட்டை நத்தம் கிராமத்தில் வசித்து வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முகப்பேரிலும் இவருக்கு வீடு உள்ளது.

சென்னைக்கு சிகிச்சை வரும்போது அங்குதான் தங்குவார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே சிகிச்சை பெற்ற வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். சூப்பிரண்டு பிரேம்குமாருக்கு, மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

.....தினத்தந்தி 17.11.10

plasticschandra
17-11-2010, 05:36 PM
முக்கியமான.. செய்திகளை இங்கு தாருங்கள்...
ரீச் மரபு காப்பாளார் விருதுகள்.
இடம்: சர். பிட்டி தியாகராசர் ஹால்
ஜி. என். செட்டி சாலை.
தி.நகர், சென்னை 600018. மாலை 6-8 மணி.
19ஆம் தேதி நவம்பர் 2010
புராதன சின்னங்கள், மரபுகள் பேணி காக்கும் ஒரு தன்னார்வக்குழு.
see: www.conserveheritage.org

nambi
19-11-2010, 01:04 PM
நில ஊழல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை இனியும் எத்தனை முறைதான் அரவணைத்து பாதுகாப்பது என்று சலிப்படைந்துபோய்விட்ட பா.ஜனதா தலைமை, அவரை பதவி விலகுமாறு கூறிவிட்டதாகவே டெல்லியில் தகவல்கள் அலையடிக்கத் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே ரெட்டி சகோதரர்கள் ஏற்படுத்திய சிக்கல்களிலிருந்து எடியூரப்பாவை ஒருமுறை காப்பாற்றி விட்டது பா.ஜனதா தலைமை.அடுத்தபடியாக அண்மையில் எடியூரப்பாவுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியபோது ஏற்பட்ட அரசியல் சுழலிலிருந்தும் அவரை மீட்டு, அவரது முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொடுத்தனர் டெல்லி பா.ஜனதா தலைவர்கள்.

சரி... இனியாவது கவனமாக செயல்பட்டு ஆட்சியை காப்பாற்றிக்கொள்வார் எடியூரப்பா என்று நினைத்திருந்த டெல்லிக்காரர்களுக்கு, இடியாக வந்திறங்கியது எடியூரப்பா மீதான ஊழல் புகார் குற்றச்சாற்று சேதி!

தனது மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கிக் கொடுத்தார் என்று எடியூரப்பா மீது மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனல் குற்றச்சாற்றுக்களை அள்ளி வீசினார்கள்.

எடியூரப்பாவின் முறைகேடான செயலுக்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக நேற்றுமுன்தினம் குமாரசாமி பத்திரிகையாளர்களிடம் காட்டிய ஆவேசத்தை பார்த்து, பா.ஜனதா வட்டாரமே சற்று ஆடித்தான் போனது.

இதனையடுத்து எடியூரப்பாவை டெல்லியிலிருந்து தொடர்புகொண்ட பா.ஜனதா பெரும் தலைகள், " ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாம் காங்கிரஸை பழித்துக்கொண்டிருக்கும்போது, பதிலுக்கு காங்கிரஸார் நம்மை நோக்கி கை நீட்ட ஏதுவாக நடந்துகொண்டுவிட்டீர்களே..." என்று கூறி ஏகத்திற்கும் போட்டு தாளித்து எடுக்க, அவர் அரண்டே போனார்!

இதனையடுத்துதான் முறைகேடாக தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒதுக்கிய நிலத்தை திரும்ப ஒப்படைக்க அவசர அவசரமாக உத்தரவிட்டார் எடியூரப்பா.

அதன்படி எடியூரப்பாவின் மகனும், மகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை அரசிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டனர்.
...வெப்துனியா 19.11.2010

nambi
19-11-2010, 01:07 PM
ஆஸ்லோ: நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சீனா, ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட 6 நாடுகள் மறுத்துவிட்டன.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சீனாவைச் சேர்ந்த லியு ஜியாபோவுக்கு அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. லியு சீன அரசின் அதிருப்தியாளர் ஆவார். இதனால் சீன அரசு கடும் கோபத்துடன் உள்ளது. நார்வே அரசையும் அது கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த நிலையில், சீனா உள்ளிட்ட ஆறு நாடுகள், நோபல் பரிசு வழங்கும் நிழ்ச்சியை புறக்கணிக்கவுள்ளன.

இது குறித்து நோபல் இன்ஸ்டியூட் தலைவர் கெய்ர் லன்டெஸ்டாட் கூறியதாவது,

இன்று காலை வரை 36 நாடுகளின் தூதர்கள் எங்கள் அழைப்பை ஏற்றுள்ளனர். 16 பேர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 6 பேர் நிராகரித்து விட்டார்கள்.

சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கியூபா, மொராகோ, ஈராக் ஆகிய 6 நாடுகள் எங்கள் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டன என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு அனைத்து நாட்டு தூதர்களும் அழைக்கப்படுவார்கள். அவர்கள் நவம்பர் 15-ம் தேதிக்குள் தாங்கள் வருவதும், வராததும் பற்றி தெரிவிக்க வேண்டும்.

லியூவுக்கு நோபல் பரிசு அளித்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்று பெய்ஜிங் எச்சரித்துள்ளது. 54 வயதாகும் லியூ, சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் முக்கியப் பிரமுகர் ஆவார். தற்போது 11 ஆண்டு சிறைவாசத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்லோவில் இருக்கும் சீன தூதரகம் இந்த நோபல் பரிசு விழாவை புறக்கணிக்கும்படி பிற நாட்டு தூதரகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.

இன்னும் எந்தெந்த நாடுகள் தங்கள் நிலை பற்றி தெளிவுபடுத்தவில்லை என்பதைத் தெரிவிக்க லன்டெஸ்டாட் மறுத்துவிட்டார். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா தூதரகங்கள் தங்கள் நாட்டு அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்த பிறகே இந்த அழைப்பை ஏற்க முடியும் என்று கூறியுள்ளன என்று நார்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையை மிகைப்படுத்த வேண்டாம் என்று லன்டெஸ்டாட் எச்சரித்தார். ஏனெனில் சில தூதர்கள் ஏதாவது காரணங்களுக்காக வராமல் இருப்பது வழக்கம்.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த விழாவுக்கு 10 நாட்டு தூதர்கள் வரவில்லை. அவர்கள் வராததற்கு ஏதாவது அரசியல் காரணம் இருக்கும். தூதர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ரஷ்ய தூதரைத் தொடர்பு கொண்டு நீங்கள் ஏன் வரவில்லை என்று கேட்டால் நான் ஆஸ்லோவில் இல்லை. அதனால் தான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பார் என்று அவர் தெரிவித்தார்.
...தட்ஸ்தமிழ் 19.11.2010

nambi
19-11-2010, 01:11 PM
கொழும்பு, நவ.19: இலங்கை அதிபராக மஹிந்த ராஜபட்ச 2-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் இருப்பார்.

பதவியேற்பு நிகழ்ச்சி அதிபர் அலுவலகத்துக்கு வெளியே நடைபெற்றது. மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாகக் கூறி இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தன.

ஜனவரியில் ராஜபட்ச மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தோல்வியுற்றார். தேர்தல் முடிந்த சிலவாரங்களில் பொன்சேகா கைது செய்யப்பட்டார். பின்னர் மோசடி செய்த குற்றத்துக்காக பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

....தினமணி 19.11.2010

பாலகன்
19-11-2010, 01:39 PM
தகவல்களை தரும் தம்பிக்கு சாரி சாரி :D நம்பிக்கு நன்றிகள்

nambi
19-11-2010, 01:53 PM
திருப்பூர், நவ.18: தொடரும் பருத்தி நூல் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் 30 லட்சம் ஜவுளித் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் (படம்) தெரிவித்தார்.

மிகக் கடுமையான நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், ஜவுளி உற்பத்திக்கு தடையின்றி நூல் கிடைக்க வழிவகை செய்யவும் உடனடியாக நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் ஜவுளித் தொழில் அமைப்புகள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தலைமையில் நடக்கும் இப்போராட்டம் குறித்து அதன் தலைவர் ஏ.சக்திவேல் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

ஜவுளித்தொழில் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. இப்போராட்டத்துக்கு அரசு செவிசாய்த்து நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் என நம்புகிறோம்.

இல்லையேல் அடுத்த கட்ட போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும். அரசியல் அல்லாமல் ஜவுளித்தொழில் துறையினர், தொழிலாளர்களைக் கொண்டு இப்போராட்டம் நடக்கும்.

மிகக் கடுமையான நூல் விலையேற்றம் மட்டுமின்றி, நூல் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஜவுளித் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், கடந்த 4 மாதங்களில் திருப்பூரில் மட்டும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் பெறுதல், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்வதன் மூலம் இதை அறிய முடிகிறது.

தற்போது இந்திய அளவில் பின்னலாடை உற்பத்தியில் 80 சதவீதப் பங்கை திருப்பூர் அளிக்கிறது. தவிர, விசைத்தறி உற்பத்தியில் 80 சதவீதமும், உள்நாட்டு ஜவுளி வர்த்தகத்தில் 60 சதவீதத்தையும் தமிழகம் கொண்டுள்ளது. தொடரும் இந்நூல் விலையேற்றம், தட்டுóப்பாட்டால் விரைவில் தமிழகத்தில் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கக் கூடும். ஏற்கெனவே, வங்கிக் கடன்களை திருப்பிச்செலுத்த முடியாத நெருக்கடியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சிக்கியுள்ளனர்.

ஜவுளித்தொழில் அமைப்புகள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளை அடுத்து பஞ்சு ஏற்றுமதி 55 லட்சம் பேல் என நிர்ணயிக்கப்பட்டது. அதைக் காட்டிலும் தற்போது பருத்தி நூல் ஏற்றுமதிக்கு 629 மில்லியன் கிலோ வரை பதிவாகியுள்ளது. அதில் இதுவரை 433 மில்லியன் கிலோ ஏற்றுமதியாகிவிட்டது. இந்நூல் சீனா, வங்கதேசம், பிரேசில், தென்கொரியா போன்ற ஜவுளித் தொழில் போட்டி நாடுகளுக்கு அனுப்பப்படுவதால் சர்வதேசச் சந்தையில் இந்திய ஜவுளி வர்த்தகத்துக்குப் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.

நாட்டின் ஜவுளித் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு மத்திய அரசு உடனடியாக பருத்தி நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். அதன் மூலமே நூல் விலை குறைவதுடன், தட்டுப்பாடின்றி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு நூல் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என்றார்

....தினமணி 19.11.10

nambi
19-11-2010, 01:56 PM
திருச்சி: திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் நேற்று இடிக்கப்பட்டது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சக்திவேல் காலனியில் இருந்து பின்புறம் உள்ள முத்து மாரியம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் பாதையில் 150 மீட்டர் நீளம், 9 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இது தீண்டாமை சுவர். இதை இடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதே நேரத்தில் இந்த சுவர் தனியாருக்கு சொந்தமானது. இதில் போக்குவரத்து நடைபெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்பி லிங்கம், இந்த சுவரை பார்வையிட்டு தீண்டாமை சுவர் அல்ல என்று கூறினார்.

திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சர்ச்சைக்குரிய அந்த சுவரை இடித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜாமுகமது முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்ச்சந்திரன், உதவி கமிஷனர்கள் ஞானசேகரன், பழனிச்சாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் இருந்தனர். கமாண்டே பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மவுலானா கூறுகையில், ‘‘இது தீண்டாமை சுவர். சுவர் இருந்த இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 89ம் ஆண்டு வரை இந்த இடம் புது அரிஜன தெரு என்றுதான் ரேஷன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர், திருத்தம் செய்யப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு என்று மாறியது.

சுவரை இடிக்கக்கோரி 25 ஆண்டாக போராடி வந்தோம். இந்த சுவரினால் 5 தெருவை சேர்ந்த மக்கள் ஒன்றரை கிமீ சுற்றி செல்ல வேண்டியிருந்தது. சுவர் இடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். இடத்தின் உரிமையாளர் சம்சுகனி ராவுத்தரின் தம்பி மகன் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ‘‘சுவர் இடிக்கப்பட்டது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளோம்‘‘ என்றார்.

...தினகரன் 19.11.10

nambi
21-11-2010, 07:04 AM
வாடிப்பட்டி, நவ.21-

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள் கொன்று வீசப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தாய், குழந்தைகள் கொலை

மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே கடந்த 11-ந் தேதி 2 குழந்தைகளின் உடல்களும், ஆண்டிபட்டி அருகே மழை நீர் சேகரிப்பு தொட்டியில் ஒரு பெண் பிணமும் கண்டுபிடிக்கப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர்கள், ராமநாதபுரம் கேணிக்கரை பாரதி நகரைச் சேர்ந்த முத்துச்சாமி என்ற முகமது என்பவரின் மனைவி ஆதிலாபானு (வயது 27), அவருடைய மகள் ஹாஜிரா பானு (7), மகன் முகம்மது அஸ்லாம்கனி (5) என்று தெரியவந்தது.

மேலும் கடந்த 8-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்காக ஆதிலாபானுவை குழந்தைகளுடன் ஒருவர் அழைத்துச் சென்றதாகவும், அப்போது முதல் அவரை காணவில்லை என்று ஆதிலாபானுவின் தாயார் கேணிக்கரை போலீசில் புகார் செய்திருந்ததும் தெரியவந்தது.

கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

இதை வைத்து விசாரித்ததில் அவர்களுடைய குடும்ப நண்பரான வாலாந்தரவையைச் சேர்ந்த ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். குடும்ப நண்பராகப் பழகி விட்டு பணத்துக்காக ஆதிலாபானுவையும், அவருடைய குழந்தைகளையும் கடத்திக் கொலை செய்ய, ஜெயக்குமார் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தெரிவித்த தகவலின் பேரில் அவருடைய அத்தை மகன் முனியசாமி (28), நண்பர்களான வாலாந்தரவையை சேர்ந்த கார் டிரைவர் நாகூர்மீரான் (19), ராமநாதபுரம் ஷேக் தகஷத் என்ற சூடாமணி (19- கீழக்கரையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிப்பவர்), தமிமுல் அன்சாரி (21), பட்டினம்காத்தானைச் சேர்ந்த ஷா நவாஸ் (20- மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிப்பவர்) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இவர்கள் 5 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

"மண்டபம் ïனியன் முன்னாள் தலைவராக இருந்தவர் சீனிக்கட்டி. இவரிடம் ஆதிலாபானுவின் கணவர் முத்துசாமி என்ற முகமது டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு சீனிக்கட்டியின் தங்கை மருமகன் கொலை செய்யப்பட்டார். இவர் மலேசியாவில் வசிக்கும் எங்களது நண்பர் சாகுல் அமீதுவுக்கும் உறவினர் ஆவார்.

இந்த கொலை வழக்கில் முத்துசாமி என்ற முகமது முக்கிய சாட்சியாக இருந்தார். ஆனால் அவர் சாட்சி சொல்ல மறுத்து விட்டதால் சாகுல் அமீதுக்கு முத்துசாமி என்ற முகமது மீது முன்விரோதம் இருந்து வந்தது.

மலேசியாவிலும் தகராறு

இந்த நிலையில் முத்துசாமி என்ற முகமது மலேசியாவுக்கு சென்று அங்கு ஓட்டல் தொழில் செய்து வந்தார். அவருடன் அவருடைய மனைவி ஆதிலாபானுவும், குழந்தைகளும் இருந்தனர். ஏற்கனவே இருந்த முன்விரோதத்தையொட்டி முத்துசாமி என்ற முகமதுவை சாகுல் அமீது மலேசியாவில் வைத்து அடித்து விட்டார்.

இதுபற்றி தெரிந்து அவர் மீது ஆதிலாபானுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அங்கிருந்து அவர் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். தனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்த ஜெயக்குமாரிடம் சாகுல் அமீதுவுடன் ஏற்பட்ட தகராறு பற்றி தெரிவித்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று ஆதிலாபானு கூறியுள்ளார்.

நயவஞ்சக சதி

இந்த விவரத்தை ஜெயக்குமார் தனது அத்தை மகன் முனியசாமியிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது நண்பரான சாகுல் அமீதுவுடன் போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார். அப்போது தான் தன்னை தீர்த்துக்கட்ட திட்டம் போடும் ஆதிலாபானுவை கொலை செய்ய சாகுல் அமீது திட்டம் போட்டார்.

இதை நிறைவேற்றுவதற்காக மலேசியாவில் இருந்து சாகுல் அமீது சொந்த ஊருக்கு வந்தார். கொலை சதியை நிறைவேற்ற ஜெயக்குமாரை பயன்படுத்த முடிவு செய்து அவருக்கு பணம் தருவதாக கூறி சம்மதிக்க வைத்தார். அவரது திட்டப்படி ஆதிலாபானுவை குழந்தைகளுடன் வரவழைத்து கார்களில் கடத்திச் சென்று ஓடும் காரில் வைத்து தலையணை மற்றும் துணியால் மூச்சை திணறடித்து கொலை செய்தோம்.

புதைத்து எடுத்தோம்

பின்னர் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு உடல்களை எடுத்துச் சென்று சாகுல் அமீதுவுடன் சென்று புதைத்தோம். ஆனால் இதற்கு தோட்டத்துக்காரர் சம்மதிக்காததைத் தொடர்ந்து அங்கிருந்து பிணங்களை தோண்டி எடுத்து கொடைக்கானல் மலையில் வீசி விடுவது என முடிவு செய்து காரில் எடுத்துக் கொண்டு வந்தோம்.

மதுரை நகருக்குள் வராமல் அலங்காநல்லூர் வழியாக வாடிப்பட்டிக்கு வந்த போது பொழுது விடியத் தொடங்கி விட்டது. காரில் இருந்த பிணங்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. எனவே போலீஸ் சோதனைச்சாவடிகளில் சிக்கி விடுவோம் என்று கருதி குழந்தைகளின் பிணங்களை துணியில் சுற்றி விராலிப்பட்டி பாலம் அருகிலும், ஆதிலாபானுவின் உடலை ஆண்டிப்பட்டி அருகிலும் வீசி விட்டு அங்கிருந்து தப்பினோம். ஆனால் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கியதில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.

மேற்கண்டவாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தப்பியவர்களுக்கு வலைவீச்சு

இந்த பயங்கர கொலை சம்பவத்தை நிறைவேற்றி விட்டு மீண்டும் மலேசியாவுக்கு தப்பிய சாகுல் அமீது, அவருடைய நண்பர்கள் மணிவண்ணன், முகம்மது ஆகிய 3 பேரையும் கைது செய்து ராமநாதபுரத்துக்கு கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் பிடியில் அவர்கள் 3 பேரும் சிக்கினால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

........தினத்தந்தி 21.11.10

nambi
22-11-2010, 04:18 AM
புதுடெல்லி: நில மோசடியில் சிக்கியுள்ளதை தொடர்ந்து, பதவி விலக வேண்டும் என்று கட்சி மேலிடம் கட்டளையிட்டும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடர்ந்து முரண்டு பிடிக்கிறார். இதனால் மேலிடத்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கா*லை 11 மணிக்குள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கெடு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சில நிபந்தனைகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

...தினகரன் 22.11.2010

nambi
22-11-2010, 05:55 AM
நியூஜெர்ஸி: அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமியை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து அவமானப்படுத்தியதாக இலங்கைத் தமிழ்ச் சங்கம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் பணியாற்றியவர் பிரகாஷ் எம் சுவாமி. தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இவர் ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் சென்று செய்தி சேகரிக்க அங்கீகாரம் பெற்றுள்ளார்.

நியூஜெர்சி நகரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பும் இணைந்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதற்காக பிரகாஷ் சுவாமிக்கும் முறையான அழைப்பு அனுப்பியிருந்தன.

எனவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அவர் நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி சென்றார்.

அரங்கத்தில் நுழைந்த அவரைச் சிலர் தடுத்து நிறுத்தி, "உங்களை யார் இங்கே அழைத்தது, நீங்கள் இந்திய, இலங்கை அரசுகளின் சார்பில் உளவு பார்க்க வந்த ஏஜென்ட், நீங்கள் இங்கே வர வேண்டாம்'' என்று கூறி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

'நீங்கள் தந்த அழைப்பின்பேரில்தான் வந்தேன்' என்று கூறி, அழைப்பிதழையும் அடையாள அட்டையையும் அவர் காட்டிய பிறகும் கூட அவரை வெளியேறுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார்களாம்.

கூட்டத்திலிருந்து வெளியேறிய அவர் நியூயார்க்கில் பிற நிருபர்களிடம் இதை தொரிவித்து முறையிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகார அட்டை பெற்றுள்ள என்னை, செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்தது தவறு; அழைப்பு அனுப்பிவிட்டு பிறகு வெளியேறுமாறு கூறி அவமானப்படுத்தினார்கள்; என் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தினார்கள்.
நியூஜெர்சி மாகாண கவர்னரிடமும் மனித உரிமைகள் அமைப்பிடமும் இது குறித்து நிச்சயம் புகார் செய்வேன் என்றார் பிரகாஷ் சுவாமி.

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் உள்ளிட்ட இலங்கை தமிழ் தலைவர்களை பேட்டியெடுத்து வெளியிட்டவர் பிரகாஷ் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதியால் கவுரவிக்கப்பட்டார் பிரகாஷ் எம் சுவாமி. இதனைத் தொடர்ந்தே அவருக்கு புலிகளிடம் இந்த 'மரியாதை' கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதே செம்மொழி மாநாட்டில்தான் ஈழ இலக்கியவாதிகள் சிவத்தம்பி, ஜெயராஜ் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்; முதல்வர் கருணாநிதியால் கவுரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...தட்ஸ்தமிழ் 22.11.2010

nambi
23-11-2010, 10:10 AM
இலங்கையில் மதங்களுக்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற போதும், சில இடங்களில் அதில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

சர்வதேச மதங்களின் சுதந்திரம்,தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து, மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள், மகா சங்கத்தினர் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தவிருந்த மாநாட்டை, குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அமெரிக்க நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
...தமிழ்வின் 23.11.2010

nambi
23-11-2010, 10:12 AM
சென்னை:சர்வதேச எல்லையைத் தாண்டி இந்தியக் கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 16 பேரை பொலிஸார் கைது செய்தனர். இந்தியக் கடலோர காவல்படையினர் சனிக்கிழமை காரைக்கால் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 35 மைல் தூரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய மூன்று படகுகளை சுற்றி வளைத்தனர்.

அவர்கள் இலங்கை மீனவர்கள் என தெரிந்தது. சர்வதேச எல்லையை மீறிய குற்றத்திற்காக அவர்களைப் பிடித்து சென்னை துறைமுகம் பொலிஸில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் குணவர்மன் விசாரணை நடத்தினார். ஜாசரா, வேகா மற்றும் சிங்களே ஆகிய படகுகளில் லலித் என்பவர் தலைமையில் பிரியந்த ஜெய்வீர், துஷாந்த். சமன்குமார். ஷாஜி தனுஷ்கர் உட்பட 16 மீனவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டம் கோட்பே பியர் துறைமுகத்தில் இருந்து வந்தது தெரிந்தது. அவர்களைப் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 16 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிக்கிய மீனவர்களுக்கு சிங்கள மொழி மட்டுமே தெரிந்ததால், பொலிஸார் விசாரிக்கத் திணறினர். இதுபோன்று எல்லை மீறி சிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படும். இதன் படி ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த பிறகும் பிற்பகல் வரை தூதர அதிகாரிகள் வராததால் உரிய முறையில் விசாரிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
...தினமலர், தினக்குரல் 23.11.2010

nambi
23-11-2010, 10:17 AM
புதுடெல்லி, நவ.23-

நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை விற்றதாக,. டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி

மத்திய அரசு உள்துறை இலாகாவின் பாதுகாப்பு பிரிவில் இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி இந்தர்சிங் பணியாற்றி வருகிறார். அவர், உள்துறை ரகசியங்களையும், தேச பாதுகாப்பு பற்றிய தகவல்களையும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு விற்றதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு டெல்லியில் வடக்கு பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் போலீஸ் தனிப்படையினர் துருவித்துருவி சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய தகவல்கள் உறுதிப்பட்டன.

கைது ஆனார்

இதைத்தொடர்ந்து அதிகாரி ரவி இந்தர் சிங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1994-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர்.

இதுபற்றி உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில், ``அதிகாரி ரவி இந்தர் சிங் மீது சமீபகாலமாக சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அவரை ஒரு மாதமாக போலீசார் கண்காணித்தனர். அதன் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது'' என்று கூறினார்.

....தினத்தந்தி 23.11.2010

nambi
23-11-2010, 12:36 PM
சியோல்: தென் கொரியாவில் ஒரு தீவு மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் நடத்தியதால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குண்டுகள் வந்து விழுந்தன. இந்த திடீர் தாக்குதல் காரணமாக பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தென் கொரியா பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

வடகொரியாவின் தாக்குதலில் 60 முதல் 70 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. இதில் ஒருவர் பலியானார்.

இந்த தாக்குதலை தென் கொரியா ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் மேல் விவரங்களை அது வெளியிட மறுத்து விட்டது.

வட கொரியாவின் இந்த திடீர் தாக்குதலால் தென் கொரியாவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தைகளில் சரிவு:

இந்த தாக்கத்தால் உலக பங்கு சந்தைகளிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பல சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையிலும் (நிப்டி) மும்பை பங்குச் சந்தையிலும் (சென்செக்ஸ்) சரிவு ஏற்பட்டது.

மோதலைத் தவிர்க்க முயற்சி-தென் கொரிய அதிபர்

இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரிதாக வெடித்து விடாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இருப்பினும் வட கொரியா தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தென் கொரியா எச்சரித்துள்ளது.
...தட்ஸ்தமிழ் 23.11.2010

nambi
24-11-2010, 01:01 AM
புது தில்லி, நவ.23: நாட்டில் உள்ள சில தொழிலாளர் சட்டங்கள், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில் பெரும் தடைக் கற்களாக உள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இவற்றில் உரிய மாற்றங்கள் செய்யும்போதுதான் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை 43-வது இந்திய தொழிலாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்விதம் கொண்டு வரப்பட்ட சட்டங்களில் சில எதிர்பார்த்த அளவுக்கு பயனைத் தரவில்லை. எதார்த்தமான நிலையில் அவற்றை அணுக வேண்டியுள்ளது. தொழிலாளர் சட்டங்களில் சில கடுமையாக உள்ளன. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பது தடைபடுகிறது. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்ட சட்டங்கள் பலவும்,அவர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. வெறுமனே காகிதத்தில் மட்டும் சட்டங்கள் இருப்பதில் என்ன பயன்?

தொழில்துறையும், ஊழியர்களும் ஒருங்கிணைந்து விரைவான பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். இதற்காக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அத்துடன் ஊழியர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசு நிறைவேற்றும் கொள்கைகளின் பலன்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அப்போதுதான் கொள்கைகளில் உள்ள குறைகள் நன்கு தெரியவரும். இதன்மூலம் எதிர்வினைகளைத் தடுக்க முடியும்.

சிறு, குறுந் தொழில்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அரசு நன்கு உணர்ந்துள்ளது. ஏனெனில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலை வாய்ப்பை அளிப்பது இத்துறைதான். கிராமப் பகுதிகளில் சிறு, குறுந்தொழில்கள் பெருகுவதன் மூலம் நகர்ப்புறங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்வது தவிர்க்கப்படும். இதற்காக ஐடிஐ-க்களின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பணவீக்கம் பற்றி: நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. விரைவான பொருளாதார வளர்ச்சியை அரசு எதிர்பார்க்கிறது. அதேசமயம் அது ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மேற்கொள்ளும் அனைத்து பொருளாதார சீர்திருத்தங்களும் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படுகிறது. இதனாலேயே சமூக நல மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் 9 சதவீதம் முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தை 4 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. ஆனால் அதையும் அரசு திறமையாக எதிர்கொண்டு சமாளிக்கும் என்று குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த பணவீக்கம், உணவுப் பணவீக்கம் ஆகியன குறைந்து வருகின்றன. இருப்பினும் அது சாதாரண மக்களைப் பாதிக்கும் வகையில் அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். உணவுப் பணவீக்கம் நவம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.30 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் பொதுவான விலைவாசி உயர்வு 8.58 சதவீதமாக இருந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

.....தினமணி 24.11.2010

nambi
24-11-2010, 01:08 AM
சேலம்: உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை.
தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கக் கூட்டம் சேலத்தில் நடந்தது.

அதில் பேசிய திருமாவளவன், தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும். அதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை.

தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்த இருக்கிறோம். தமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த 3வது பெரிய சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாகியுள்ளது.

நாம் நடத்தும் இறையாண்மை மாநாடு வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அதற்காக இறையாண்மை மாநாட்டில் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

.....தட்ஸ்தமிழ் 24.11.2010

nambi
24-11-2010, 01:22 AM
முசாபர்நகர் : உத்தர பிரதேசத்தில் காதல் திருமணத்தை தடுக்கும் வகையில், திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களில் உள்ள கிராமங்களில் காதல் திருமணம், ஒரே கோத்திரத்தில் திருமணம் ஆகியவைக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. காதல் திருமணம் மற்றும் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யும் தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பஞ்சாயத்துகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன், இதே மாவட்டத்தில் உள்ள சோரம் கிராமத்தின் அனைத்து காப் பஞ்சாயத்தில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதை தடுக்க, 1955ம் ஆண்டு இந்து திருமண சட்டத்தில் மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
...தினமலர் 24.11.2010

nambi
24-11-2010, 01:28 AM
புது தில்லி, நவ.22: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைப் பற்றி காங்கிரஸ் எம்.பி. ஜகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான "சாக்ஷி' டி.வி.யில் வெளியான கருத்துகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது மிக முக்கியமான விவகாரமாகும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஜகன்மோகன் ரெட்டியின் சாக்ஷி டி.வி.யில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பானது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சாற்றல் அற்ற தலைவர். அவருக்கு தலைவருக்குரிய திறமை கிடையாது. அவரது செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. சோனியா காந்தி, இந்தியாவின் குடியரசுத் தலைவரோ, பிரதமரோ கிடையாது. எனினும் அவர்தான் நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறார் என்று விமர்சிக்கப்பட்டது. இப்படி அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும் குறிவைத்து தாக்கும் விதத்தில் அமைந்திருந்தது. இடையிடையில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் விட்டு வைக்கவில்லை. மன்மோகன் சிங் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். அவருக்கு பிரதமருக்குரிய எந்த அதிகாரமும் கிடையாது என்றும் அந்த டி.வி. விமர்சித்தது.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை மட்டுமல்லாது ஆந்திர காங்கிரஸôரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதை புரிந்து கொண்ட சாக்ஷி டி.வி. நிர்வாகம் அதே நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒளிபரப்பியது. ஆனால் சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு எதிரான விமர்சனங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு ஒளிபரப்பியது.

இருப்பினும் சாக்ஷி டி.வி. நிகழ்ச்சியால் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கும் ஆந்திர காங்கிரஸôருக்கும் ஏற்பட்ட கோபம் குறையவில்லை.

இது தொடர்பாக மாநில காங்கிரல் தலைவர், மாநில முதல்வர் கே. ரோசய்யா ஆகியோரிடமிருந்து அறிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பரிசீலிப்பதாக மொய்லி கூறினார். இருப்பினும் ஜகன்மோகன் ரெட்டி மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தில்லிக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு கட்சித் தலைமை மாநில முதல்வர் ரோசய்யாவை கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, மாநில தலைவரிடமிருந்தும் விவரங்களைக் கோரியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவரின் டி.வி.யே கட்சித் தலைவரை இப்படி தாக்கி நிகழ்ச்சியை ஒளிபரப்பலாமா என்று ஆந்திர காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஒருமித்தக் குரலில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே இந்த நிகழ்ச்சி பிரதமர் மன்மோகன் சிங்கையோ, கட்சித் தலைவர் சோனியா காந்தியையோ தாக்கி எடுக்கப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்று சாக்ஷி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரியதர்ஷினி ராம் விளக்கம் அளித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பில் ஜகன்மோகன் ரெட்டி தலையிடுவது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 125 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை விவரிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை என்றும், இந்நிகழ்ச்சி ஞாயிறன்று மூன்று முறை ஒளிபரப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயம் ஜகன்மோகன் ரெட்டியின் ஏற்பாட்டின் பேரில்தான் ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்று குற்றம்சுமத்தியுள்ளனர்.
...தினமணி 24.11.2010

nambi
24-11-2010, 01:33 AM
சென்னை, நவ.24-

பிரசார் பாரதி அமைப்பை கண்டித்து, சென்னையில் தூர்தர்ஷன் ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.

ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி சொத்து

மத்திய அரசு நிறுவனங்களாக உள்ள தூர்தர்ஷனும், ஆல் இந்திய ரேடியோவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரசார் பாரதி என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுவதும் 1745 ஒளிபரப்பு நிலையங்களும், ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி சொத்துகளும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், பிரசார் பாரதி அமைப்பில் உள்ளவர்கள் பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், இதனால், தூர்தர்ஷனுக்கும், ஆல் இந்திய ரேடியோவுக்கும் வருமானம் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஒளிபரப்பு நிறுத்தம்

இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோ நிலையங்களில், நேற்று காலை 9 மணி முதல் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடு முழுவதும் தூர்தர்ஷன் சேனல்கள் அனைத்தும், குறிப்பாக ஆசிய விளையாட்டு போட்டிகள் தெரியவில்லை.

சென்னை தூர்தர்ஷன் அலுவலக வளாகத்தில், 594 தூர்தர்ஷன் ஊழியர்களும், 300 ஆல் இந்திய ரேடியோ ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.அஜந்தா தலைமை தாங்கினார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில்...

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரசார் பாரதி அமைப்பை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராட்டம் குறித்து தூர்தர்ஷன் ஊழியர் சிலர் கூறும்போது, ``கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு போனஸ் பிரச்சினைக்காக பெரிய அளவிலான போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். அதன் பிறகு, இப்போதுதான் ஒளிபரப்பை நிறுத்தி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துகிறோம். பிரசார் பாரதி அமைப்பில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இதனால், அரசு வரும் வருமானம் குறைந்து வருகிறது. இதனால், பிரசார் பாரதி அமைப்பை தடை செய்துவிட்டு மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோவை கொண்டு செல்ல வேண்டும். இந்த போராட்டம் 25-ந் தேதி (நாளை) காலை 9 மணி வரை நடைபெறும்'' என்றனர்.

...தினத்தந்தி 24.11.2010

nambi
24-11-2010, 01:38 AM
யன்கூன், நவ.23 (டிஎன்எஸ்) பத்து ஆண்டுகளுக்கு பின் மியான்மர் எதிர்க்கட்சி தலைவி தனது மகனை சந்தித்தார். நெகிழ்ச்சியான இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.

மியான்மரின் எதிர்க்கட்சி தலைவி சூ கியூ (65). ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால் 20 ஆண்டுகள் இவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சூ கியூ வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சூ கியூவின் 2-வது மகன் கிம் ஆரிஸ் (33) பாங்காக் நகரில் தங்கியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் சூகி யூவை சந்தித்தார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தாயை நேரில் சந்திக்க மியான்மர் அரசிடம் விருப்பம் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு பாங்காக்கில் உள்ள மியான்மர் தூதரகம் விசா வழங்கியது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் யன்கூன் வந்து சேர்ந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய அவர் தன்னை சந்திக்க அங்கு காத்திருந்த தனது தாயார் சூ கியூவை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தாயும் மகனும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.

நெகிழ்ச்சியான இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.(டிஎன்எஸ்)

....ஆறாம்திணை 24.11.2010

nambi
24-11-2010, 03:02 AM
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவி மையத்தினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார். 5 நாள் அரசுமுறைப்பயணமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு சென்றிருந்த இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இந்திய தொழிலாளர்கள் 24 மணி நேர உதவி *மையம் ஓன்றை திறந்து வைத்தார்*. அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இங்குபணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்த மையத்தினை அர்ப்பணிக்கிறேன். இவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே தங்க*ளது குறைகளை நிவர்த்தி செய்ய குழு ஒன்று இந்த உதவிமையத்தில் இயங்கி வருகிறது. இந்த குழு தகுந்த நேரத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு உதவிடும் என்றார். இங்கு 1.75 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 24 மணி நேரமும் உதவிட இந்திய வெளிநாட்டு வாழ் விவகாரத்துறை அமைச்சகத்தின் *முயற்சியால் இந்த *மையம் தொடங்கப்பட்டுள்ளது.

...தினமலர் 24.11.2010

nambi
24-11-2010, 03:10 AM
பீகார் தேர்தல்...வாக்கு எண்ணிக்கை நிலவரம்.....

ஐக்கிய ஜனதாதளம் 126 இடங்களில் முன்னிலை...(ஐ.ஜனதாதளம்..பாஜ,க கூட்டணி)

ராஷ்டிரிய ஜனதா தளம் 34 இடங்களில் முன்னிலை...

காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை

மற்றவை 12 இடங்களில் முன்னிலை...

மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்கிறார்....

...சன்செய்திகள் காலை 09.40 மணி நிலவரம்...

nambi
25-11-2010, 05:19 PM
சென்னை நகரின் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள அழகு வாய்ந்த செம்மொழி பூங்காவை முதல்வர் கருணாநிதி புதன்கிழமையன்று திறந்துவைத்தார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா என்ற பெயரில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் முன்பு உட்லண்ட்ஸ் டிரைவின் ஓட்டல் இருந்தது.

தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்து ரூ.8 கோடி செலவில் செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு இணையாக செம்மொழி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தாவரத்தின் தமிழ் பெயர், ஆங்கில பெயர் மற்றும் தாவரவியல் பெயர் ஆகியவற்றை அதன் அருகே எழுதி வைத்திருப்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலைஉயர்ந்த தாவரங்களும் இங்கு பதியப்பட்டுள்ளது.

சிறப்பு வாய்ந்த செம்மொழி பூங்காவை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை மாலை திறந்து வைத்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திறப்புவிழா நிகழ்ச்சியில், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

...இந்நேரம்.காம் 23.11.2010

nambi
25-11-2010, 05:29 PM
ஹைதராபாத், நவ.25: ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக இதுவரை இருந்த கிரண்குமார் ரெட்டி அம்மாநிலத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கிரண்குமார் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து நேற்று இரவு கிரண்குமார் ரெட்டி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆஸாத், பதவி விலகிய முதல்வர் ரோசய்யா மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல்வராகப் பதவியேற்றுள்ள கிரண்குமார் ரெட்டி, கட்சி மேலிடத்துடன் கலந்தாலோசித்து புதிய அமைச்சரவையை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
...தினமணி 25.11.2010

nambi
26-11-2010, 11:40 AM
ரோடக், நவ. 25: செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவன சேவைக்கு மாறும் திட்டம் நாட்டில் முதன்முறையாக ஹரியாணாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரோடக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல், திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின்படி 8 முன்னணி நிறுவனங்களின் சேவைகளுக்கு மாற முடியும். மற்றொரு நிறுவன சேவைக்கு மாறும்போது ரூ. 19 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு நிறுவன சேவையில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் வாடிக்கையாளராக இருந்திருக்க வேண்டும்.

முதல்கட்டமாக ஹரியாணாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
....தினமணி 26.11.2010

nambi
26-11-2010, 11:43 AM
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்து பதவி விலகிய ஆ. ராசா தலித் என்பதால் பழிவாங்கப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். சென்னையில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில், ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வீரமணி இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:

ராசா தலித் இனத்தின் தளபதி. நமக்கு எந்தெந்த காரணத்தினால் எல்லாம் ராசாவை பிடிக்குதோ மற்றவர்களுக்கு அந்த காரணத்தினால் அவரை பிடிக்கவில்லை. ஒரு தலித் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்று நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் இதுதான் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.
...இந்நேரம்.காம் 26.11.2010
இதற்கெல்லாம் காரணம் ரெண்டு சாமிகள். சு.சாமி(சுப்பிரமணியம் சாமி)யும், சோ(துக்ளக் சோ இராம)சாமியும்தான். ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒருவர் குற்றவாளி என்று பழிவாங்கப்பட்டிருக்கிறார்.

ராசா குற்றவாளி என்று ஊடகங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? சிறு இடைவெளி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஊழலை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.

இவ்வாறு கி. வீரமணி பேசினார்.

கருஞ்சட்டை தமிழர்- ஆசிரியர் சுப.வீரபாண்டியன், பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பு செயல் இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பார், ரமேஷ்பிரபா ஆகியோரும் இக்கூட்டதில் கலந்து கொண்டு பேசினர்.

nambi
26-11-2010, 11:48 AM
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்டிரீஸ் நிறுவனத்திற்கு உரிமையாளரான முகேஷ் அம்பானியின் வீடு 27 மாடிகளை கொண்டது. இந்த வீட்டில் இருந்து பார்த்தால் மும்பை நகரம் முழுவதும் தெளிவாக தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது .பலகோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு குறித்து போர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது. அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் வீடு கட்டிய நிலையில் மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது மின் கட்டண தொகை. கடந்த செப்டம்பர் மாதம் முகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய மின் பயனீட்டின் அளவு சுமார் 6லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட்டுகளாகும். இதன் மதிப்பு சுமார் 70லட்சத்து 69 ஆயிரத்து 488 ஆகும். இது நடுத்தர குடும்பத்தினரின் 7 ஆயிரம் வீடுகளின் மூலம் கட்டப்படும் மின் கட்டண தொகையாகும்.
...தினமலர் 26.11.2010

nambi
26-11-2010, 12:03 PM
புதுடெல்லி: வீட்டுக் கடன் வழங்கியதில் ரூ. 42,750 கோடி மோசடியை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதில் முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இதில் 2 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் பெற தகுதியில்லாத போலி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்து பல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரநாயர் மற்றும் பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த மூன்று உயரதிகாரிகள் உட்பட 8 பேரை சிபிஐ நேற்றுமுன் தினம் கைது செய்தது.

இவர்களில் இடைத் தரகர்களாக செயல்பட்ட தனியார் நிதிநிறுவனங்களின் அதிகாரிகளும் அடங்குவர். வீட்டுக்கடன் வழங்கப்பட்ட பெரும்பான்மையான தொகை தகுதியான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 2 ஆயிரம் கோடி, ரியல் எஸ்டேட் நடத்தாத போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது விசாரணை யில் தெரியவந்துள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் அந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தற்போது ரூ. 42 ஆயிரத்து 750 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. முழுமையாக ஆவணங்களை சரி பார்த்த பின்னர் தான் துல்லியமாக கூற முடியும் என்று சிபிஐ அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

எல்ஐசி வீட்டுக் கடன் திட்டத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அதிகாரியான சுரேஷ் கட்டானி, பண விவகாரங்களில் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் சர்மா ஆகியோர் இந்த மோசடிக்கு பின்னணியில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ள தாக தெரிகிறது. இவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு இடைத்தரகர் களாக இருந்துள்ளனர்.

இவர்கள் தான் கடன் தொகையை நிர்ணயிப்பது, அதை வழங்குவது ஆகிய பணிகளை செய்துள் ளனர். இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை பங்குச்ச ந்தைகளில் எந்தெந்த நிறுவனங் களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக மும்பை பங்குச்சந்தை யில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினரும் இந்த மோசடியில் இறங்கியவர்கள் எப்படி வரிஏய்ப்பு செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 17 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது சிபிஐ போலீசார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த மோசடி குறித்து விவாதிக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில் நிதித்துறை அதிகாரிகள் கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இதில் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டுள்ள பொதுத்துறை வங்கி அதிகாரிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் எல்ஐசி சேர்மன் டி.எஸ். விஜயன் கூறுகையில், “ வீட்டுக் கடன் நிர்வாக அமைப்பில் எந்த குறைபாடும் இல்லை. சில உயரதிகாரிகள் தவறாக நடந்திருக்கலாம். எல்ஐசியின் சொத்துகளுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாங்களும் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதற்கிடையே மூத்த பொதுமேலாளர் சந்திரசேகர் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா கூறுகையில், “ இந்தியாவில் உள்ள வங்கி நிதி வளத்துடன் ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவானது. இந்த விவகாரத்தை மிகப் பெரிய அளவில் பெரிதுபடுத்த தேவையில்லை என்றார்.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய வீட்டு வசதிக் கடன் குறித்த விவரங்களை நிதி அமைச்சகம் கோரியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் திடுக் கிடும் தகவல்கள் அம்பலமாகும் என்றும், இதில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

.....தினகரன் 26.11.2010

தற்பொழுதய செய்தி வீட்டு வசதி கடனை வங்கிகள் மூலம் பெற்ற பணத்தினை பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தாமல் பங்குசந்தையில் பல்லாயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளனர்.....

...கலைஞர் செய்திகள்..

nambi
27-11-2010, 10:30 AM
புதுதில்லி, நவ.27- ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி கட்சி நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலர் ராகுல் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சாக்ஷி தொலைக்காட்சி ஜெகனுக்கு சொந்தமானது என்பதும், அவரது அரசியலுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விசுவாசமான காங்கிரஸ்காரராக இருந்தார். ஆனால், அவரது மகன் குழப்பமான நிலையில் உள்ளார்.

கட்சி நடத்தை விதிகளை ஜெகன்மோகன் ரெட்டி மீறியுள்ளார். எனவே, கட்சியின் தேசியமட்டத்தில் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
...தினமணி 27.11.2010

nambi
27-11-2010, 11:01 AM
வாஷிங்டன், நவ.27-

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் (அரசு தலைமை வக்கீல்) பதவிக்கு கமலா ஹாரிஸ் என்ற தமிழ்ப்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலாவின் தாயார் சியாமளா, சென்னையில் மருத்துவராக பணியாற்றியவர். பின்னர், அமெரிக்காவில் குடியேறிய அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு பிறந்த கமலா, தற்போது கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகி இருக்கிறார். இந்த பதவிக்கு வரும் முதல் பெண் இவர் என்பதும், வெள்ளையர் அல்லாத இனத்தை சேர்ந்த முதல் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பல வாரங்களாக, பல கட்டங்களாக நடந்த இந்த தேர்வில் ஜனநாயக கட்சி சார்பாக கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் ஸ்டீவ் என்பவர் போட்டியிட்டார்.

...தினத்தந்தி 27.11.2010

nambi
27-11-2010, 11:11 AM
சென்னை: இதுவரை நான் விளம்பரங்களில் நடித்ததில்லை. ஆனால் இனி நடிக்கப் போகிறேன். அந்தப் பணத்தை எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்காக தரப் போகிறேன், என்றார் நடிகர் கமல்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச் சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.

இம்மாதிரி குழந்தைகளுக்கு பொது மக்கள் தரும் ஆதரவு அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கும் வாழ அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த உரிமைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

இதுவரை நான் விளம்பர படங்களில் நடித்ததில்லை. விளம்பர படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததும், அதை நான் பயன்படுத்தவில்லை. அந்த வாய்ப்புகளை நான் தவிர்த்து வந்தேன்.

இனி விளம்பர படங்களில் நடிக்க உள்ளேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன்.

நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைவிட, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல," என்றார்.

.....தட்ஸ்தமிழ் 27.11.2010

nambi
27-11-2010, 11:17 AM
காங்கேயம் : ""தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011 ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும்; அதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் இருக்காது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோடு - பழநி ரயில் திட்டத்தால் வாழ்க்கை இழப்போர் நலச்சங்கம் சார்பில், வாழ்வுரிமை மாநாடு காங்கேயத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த ராமதாஸ் அளித்த பேட்டி: ஈரோடு - பழநி ரயில் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு உரியது. இத்திட்டத்தை செயல்படுத்த நூறாண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால், மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆனால், அத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும், வீடுகள் கட்டித் தர வேண்டும். இதற்காக, நில ஆர்ஜித கமிட்டி அமைத்து செயல்பட வேண்டும். இத்திட்டம் குறித்து மத்திய அரசிடம் விளக்கமாக எடுத்துக் கூற உள்ளோம். இத்திட்டத்திற்காக போராடுவதால், நான் அரசுக்கு எதிரானவன் என மாநில அரசு கூறி வருகிறது.



பா.ம.க., என்றுமே மக்களுக்காக போராடும். வறுமையை ஒழிப்போம் என அரசு முடிவெடுத்து செயல்படுவதாகக் கூறி வருகிறது. ஆனால், மதுக்கடைகள் அதிகரித்துள்ளதால், வறுமை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. இதேபோல், பருத்தி ஏற்றுமதியில், "ஆன்-லைன்' வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மாநில அரசு, இலவச மின் மோட்டார்களை இரண்டு லட்சம் பேருக்கு வழங்குவதாகக் கூறி செயல்படுத்தியது. இதில், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். அதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் இருக்காது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

.....தினமலர் 27.11.2010

nambi
27-11-2010, 11:03 PM
புதுடெல்லி, நவ.26-

பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த புதிய நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு வழக்கு

குறிப்பாக, தென் மாவட்டங்களில் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிகழச்சியை கண்டு களிக்க, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளில், காளை மாடுகள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி, அந்த போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இறுதி கட்ட விசாரணை

இந்த வழக்குகளில் அவ்வப்போது ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டு, பின்னர் இடைக்கால அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விலங்குகள் நல வாரியம் சார்பில் இது தொடர்பாக தொடரப்பட்ட `அப்பீல்' வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் முன்னிலையில், இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில், தலைமை வக்கீல் கோபால் சுப்பிரமணியம் இந்த வழக்கில் ஆஜர் ஆனார்.

புதிய நிபந்தனைகளுடன் அனுமதி

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளை நடத்துவதற்கு புதிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தீர்ப்பு கூறினார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நீதிபதிகள் விதித்த நிபந்தனைகள் விவரம் வருமாறு-

போட்டி நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளின் விவர பட்டியலை சென்னையில் உள்ள விலங்குகள் நல வாரியத்திடம் வழங்கி அனுமதி பெற வேண்டும்.

ஜனவரி முதல் மே மாதம் வரை

அதே போல், போட்டி நடைபெறும் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் காளைகளின் பட்டியலை வழங்க வேண்டும். கலெக்டர்கள் எழுத்து பூர்வமாக அனுமதி வழங்கிய பிறகு தான் அவருடைய கண்காணிப்பில் போட்டிகளை நடத்த வேண்டும்.

விலங்குகள் நல வாரிய நிர்வாகிகளும் போட்டியை கண்காணிப்பார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மட்டுமே இந்த போட்டிகளை நடத்த வேண்டும்.

ரூ.2 லட்சம் `பிணைத் தொகை'

தமிழ்நாட்டில் 129 இடங்களில்தான் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாக தமிழ அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசு அறிவித்து இருந்த அந்த இடங்களில் மட்டும்தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.

போட்டி நடத்துவதற்கு முன்பாக, போட்டியை நடத்தும் நிர்வாகிகள், ரூ.2 லட்சம் வரை `டெபாசிட்' செய்ய வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பாதிப்புக்கு உள்ளானால், அந்த நிதியில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

ஒளிப்பதிவு காட்சிகள்

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு திருத்த சட்ட மசோதாவின் வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் கோபால் சுப்பிரமணியம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது குறித்து ஒளிப்பதிவு எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தமிழ்நாட்டில் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தும் குழுவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர்.
....தினத்தந்தி 26.11.2010

nambi
29-11-2010, 04:13 AM
சென்னை, நவ. 28: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான தொழிற்சங்க பிரதிநிதித்துவ (அங்கீகார) தேர்தலில் 73,450 வாக்குகள் பெற்று திமுக-வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொ.மு.ச.) வெற்றி பெற்றுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், தொ.மு.ச. 54,448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.) 19,002 வாக்குகள் பெற்று 2-வது இடத்தையும், தேமுதிகவின் ஆதரவுடன் போட்டியிட்ட அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை (ஏ.டி.பி.) 15,765 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான தொழிற்சங்க பிரதிநிதித்துவ (அங்கீகார) தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 13 சங்கங்கள் போட்டியிட்டன. இதில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 173 பேர் வாக்களித்தனர்.

சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து பணிமனை கேன்டீன் வளாகத்தில் சனிக்கிழமை (நவம்பர் 27) வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே தொ.மு.ச. முன்னிலை வகித்து வந்தது. அதற்கடுத்த இடங்களில் சி.ஐ.டி.யூ.வும், ஏ.டி.பி.யும் முன்னிலை பெற்று வந்தன.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 12 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் கண்காணிப்பு பணிக்காக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஹாதி தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியது:

போக்குவரத்து தொழிற்சங்கத் தேர்தலில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 173 வாக்குகள் பதிவாகின. இதில் 574 வாக்குகள் செல்லாதவை. மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 599 வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.

இதில் தொ.மு.ச. 73,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது 57.31 சதவீதமாகும். அடுத்து சி.ஐ.டி.யூ. சங்கம் 19,002 வாக்குகள் பெற்றுள்ளது. இது 14.83 சதவீதமாகும். ஏ.டி.பி. சங்கம் 15,765 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 12.30 சதவீதமாகும் என்று தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், தமிழக அரசுடனான ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பங்கேற்கும்.

முதல்வரிடம் வாழ்த்து: வெற்றி பெற்றதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தொ.மு.ச. தலைவர் செ. குப்புசாமி, பொதுச் செயலாளர் மு. சண்முகம் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தொழிற்சங்கங்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

தொ.மு.ச. 73,450.

சி.ஐ.டி.யூ. 19,002.

ஏ.டி.பி. 15,765.

ஐ.என்.டி.யூ.சி. 4,824.

பட்டய டிப்ளமோ தொழிற்சங்கம் 3,942.

பாட்டாளி தொழிற்சங்கம் (பாமக) 2,857.

டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் சங்கம் 2,307.

பணியாளர் சம்மேளனம் 2,204.

ஏ.ஐ.டி.யூ.சி. 1,912.

நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் சங்கம் 293.



....தினமணி 29.11.2010

nambi
29-11-2010, 05:01 AM
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது மூன்று நாள் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணா சிறுபான்மை சமூக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என எதி்ர்பார்க்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற விடயங்கள், அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தம்முடன் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ள முக்கிய அரசியல் சூழ்நிலையில், இந்திய உயர்மட்ட அமைச்சர் ஒருவர் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்காது விஜயத்தை முடித்துக்கொண்டுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் விடயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் கலாநிதி கீதபொன்கலன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுக்கின்றமையை உணர்ந்த இந்தியா, தனது கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்த முனையும் நடவடிக்கையாகவும் இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தை பார்க்க முடியுமெனவும் கீதபொன்கலன் கருத்து தெரிவித்தார்.

.....பிபிசி தமிழோசை 28.11.2010

nambi
29-11-2010, 05:14 AM
வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கா, நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அச்சமடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும், ஒருங்கிணைந்த கொரியா மீது தாக்குதல் நடத்த கோரி தென்கொரியா வலியுறுத்தியிருப்பதாகவும் விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய தகவல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் அபாயகரமானவை என்றும் இதனால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
.....தினகரன் 29.11.2010

nambi
29-11-2010, 05:29 AM
வாஷிங்டன், நவ. 29:பொறுப்பு வாய்ந்த உலக வல்லரசாக சீனா நடந்து கொள்ளவில்லை என்று அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கைன் குற்றம் சாட்டியுள்ளார்.தென் கொரிய தீவு மீது வடகொரியா திடீர் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியானதை
தொடர்ந்து அமெரிக்காவும், தென்கொரியாவும் அங்கு கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
.
இந்த பிரச்சனையை சுட்டி காட்டி பேசிய அமெரிக்க செனட்டின் குடியரசு கட்சி உறுப்பினர் ஜான் மெக்கைன் பொறுப்புள்ள வல்லரசாக சீனா நடந்து கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.கொரிய தீபகற்பத்தில் சீனாவின் நலனுக்காக புதிய பிரச்சனையை அந்த நாடு தோற்றுவிப்பது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.

தென் கொரிய தீவு மீதான வடகொரியாவின் தாக்குதலை சீனா கண்டிக்கவில்லை. அந்த தீவுக்கு தென் கொரியா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதால் பிரச்சனை ஏற்பட்டு அங்கு போர் பதட்டம் உருவாகியுள்ளது.
......மாலைசுடர் 29.11.2010

nambi
29-11-2010, 05:49 AM
புதுடெல்லி, நவ.29-

நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு

நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்று கடந்த 1985-ம் ஆண்டு, முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. அப்போது, ரூ.31 ஆயிரத்து 584 கோடி முதல் ரூ.36 ஆயிரத்து 786 கோடி வரை கருப்பு பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது, அப்போதைய இந்திய பொருளாதாரத்தில் 16.53 சதவீதம் ஆகும்.

அதன் பிறகு, பொருளாதாரம் 31 மடங்கு அதிகரித்து விட்டது. எனவே, தற்போதைய நிலையில் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்று அறிய மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக ஆய்வு நடத்த உத்தேசித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி

அதையொட்டி, இந்த ஆய்வு நடத்துவது தொடர்பாக, 4 நிறுவனங்களிடம் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி யோசனை கேட்டுள்ளார். நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி, இந்திய புள்ளியியல் நிறுவனம், நேஷனல் கவுன்சில் பார் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச், நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஆகிய 4 நிறுவனங்களும் இம் மாத இறுதிக்குள் தங்களது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வு குறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன், மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரிகள் வாரியம், அமலாக்க இயக்குனரகம், பொருளாதார விவகாரத்துறை, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகளும், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மந்திரிசபை செயலகம், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த ஆய்வில் ஈடுபடுவார்கள்.

கருப்பு பணம் எவ்வளவு என்பதுடன், அது எப்படி வந்தது, அது, உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ அன்னிய செலாவணி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு நடத்தப்படும்.

வெளி நாடுகளில் பதுக்கல்

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றியும் ஆய்வு செய்யப்படும். அப்பணம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா? என்றும் ஆய்வு செய்யப்படும். கருப்பு பணம் சம்பாதிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பற்றியும், அவை வெள்ளை பணமாக மாற்றப்படும் வழிமுறைகள் பற்றியும் ஆய்வு நடத்தப்படும். கருப்பு பணத்தை கண்டறிந்து, அவற்றுக்கு வரி விதிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆய்வு நடத்துமாறு கேட்டுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


...தினத்தந்தி 29.11.2010

nambi
29-11-2010, 01:56 PM
சித்தூர்: ஆந்திர அரசியலில் புதிய திருப்பமாக கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் அதிரடி திட்டம் வகுத்துள்ளது. கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த நினைக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை ஓரங்கட்ட, பிரஜா ராஜ்யம் கட்சியுடன் கைகோர்க்கவும், அந்தக் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவரான ரோசய்யாவை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. ரோசய்யா, முதல்வர் பதவியை ஏற்றதில் இருந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஒய்.எஸ்.ஆரின் மகனும் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி, கட்சியின் உத்தரவை மீறி பல மாவட்டங்களில் ஆறுதல் யாத்திரை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் மீது சோனியாவுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி பிரச்னைகளை சரியாக சமாளிக்க முடியாததால் முதல்வர் பதவியில் இருந்து ரோசய்யா ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்றார். இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி தனிக் கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வந்தன. இதுதொடர்பாக அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

அதே நேரத்தில், ஜெகனுக்கு சொந்தமான டி.வி. சேனலில் சோனியா மற்றும் ராகுல் காந்தியைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் மேலிடம் கோபமடைந்தது. ஜெகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார். கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக துணை முதல்வர் பதவியை ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. துணை முதல்வர் மற்றும் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஜெகன் ஆதரவாளர்களை அமைச்சரவையில் சேர்க்கவே கூடாது என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரவை பட்டியலுடன் டெல்லி சென்றுள்ள முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கட்சித் தலைவர் சோனியா காந்தி, அகமது பட்டேல், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் கிரண்குமார் ரெட்டி சிபாரிசு செய்த 32 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது.

பட்டியலுடன் கிரண்குமார் ரெட்டி இன்று மாலை ஐதராபாத் திரும்புகிறார். நாளை அல்லது நாளை மறுதினம் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை பட்டியல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒருவர் என்ற கணக்கில் அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு ஜெகன்மோகன் ரெட்டி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. அப்படி நடவடிக்கை எடுக்கும்போது, சில எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக செல்லலாம் என கருதப்படுகிறது. அந்த நிலையில், ஆட்சிக்கு எந்த சிக்கலும் வராமல் தடுக்க, பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் ஆதரவை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிரஞ்சீவியுடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல் ஆகியோர் டெல்லியில் இருந்து போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

ஆதரவு அளிக்கும் பட்சத்தில் கூட்டணி ஆட்சிக்கும் காங்கிரஸ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, பிரஜா ராஜ்யம் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், அவரது கட்சியினருக்கு 3 அமைச்சர் பதவி வழங்கவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இன்று மாலை ஐதராபாத் திரும்பும் முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சிரஞ்சீவி சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி அமையும். துணை முதல்வராக சிரஞ்சீவி பதவியேற்பார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அமைத்திருந்த மக்கள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக ராஜினாமா செய்யும்படி முதல்வர் கிரண்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த கமிட்டியின் தலைவராக ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும், ஜெகன்மோகனின் ‘காட்பாதர்’ என்றழைக்கப்படும் கே.வி.பி.ராமச்சந்திர ராவ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உள்பட கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஜெகன்மோகன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தடுத்த திருப்பங்களால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

...தினகரன் 29.11.2010

காங்கிரசிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி விலகல்....ஆதரவாளர்களால் சோனியா படங்கள் கிழித்து எறியப்பட்டன...உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டன.

...சன்செய்திகள்.

nambi
29-11-2010, 02:32 PM
பெங்களூர்: நித்யானந்தா சாமியார் மீது ராம்நகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் நித்தி மீது பல புகார்களை கர்நாடக சிஐடி சுமத்தியுள்ளது. மேலும் இதில் இளம்பெண் ஒருவரின் 27 பக்க பாலியல் புகாரும் குற்றப்பதிரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நித்தி ரஞ்சிதா வீடியோ உண்மை எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. பாலியல் புகார், மோசடி, ஏமாற்றுதல் பல பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் சிஐடி போலீஸ் குற்றப்பத்திரிக்கை குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது.

...தினகரன் 29.11.2010

nambi
29-11-2010, 02:45 PM
http://thatstamil.oneindia.in/img/2010/11/29-saranya-200.jpg

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவரும், பேராண்மை படத்தின் நாயகிகளில் ஒருவருமான சரண்யாவைக் காணவில்லை என்று அவரது தாயார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் சரண்யா. அப்படத்தில் இவர்தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தி் சந்தியா நாயகியாகி விட்டார். இருந்தாலும் சரண்யாவை, சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் பாலாஜி.

பின்னர் பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது மழைக்காலம் என்ற படத்தில் தனி நாயகியாக நடித்து வருகிறார். இவரை 3 மாதங்களாக காணவில்லையாம். இதுகுறித்து இப்போது புகார் கொடுத்துள்ளார் அவரது தாயார்.

இதுகுறித்து அவரது தாயார் மஞ்சுளா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்தார்.

அதில், என் மகள் சரண்யா காதல் படத்தில் அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்துள்ளார். நான் கோடம்பாக்கம் தங்கா நகரில் மகளுடன் வசித்து வந்தேன்.

மூன்று மாதத்துக்கு முன்பு திடீரென்று சரண்யா மாயமானார். அவளை எங்கே தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அப்போதும் வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

சரண்யா படங்களில் நடித்ததால் அளவுக்கு அதிகமாக அவரிடம் பணம் உள்ளது. யாரோ தூண்டி விட்டு சரண்யாவை என்னுடன் வரவிடாமல் தடுக்கின்றனர்.

நான் தனியாக கஷ்டப்படுகிறேன். எனக்கு 3 ஆபரேஷன் நடந்துள்ளன. அப்போதும் அவள் பார்க்க வரவில்லை. சரண்யாவை கண்டு பிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மஞ்சுளா கூறுகையில், ஷூட்டிங் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு மூன்று மாதங்களுக்கு முன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். உடல்நிலை சரி இல்லாத நிலையிலும் பார்க்க வரவில்லை. யார் பிடியிலேயோ அவர் இருக்கிறார்.

எனது சொத்தில் கூட இனிமேல் உரிமை கொண்டாட முடியாது. அவரது நிலைமை என்ன ஆனது என்று எனக்கு பயமாக இருக்கிறது என்றார் மஞ்சுளா.

....தட்ஸ் தமிழ் 29.11.2010

சரண்யா தனது தாயாரின் குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்.....புகார்கள் அனைத்தும் பொய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

...சன்செய்திகள்...சரண்யாவின் தொலைபேசி உரையாடல்

nambi
30-11-2010, 11:16 AM
அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் ஏற்கனவே பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பிரபல "விக்கிலீக்ஸ்" இணையதளம்.

இந்நிலையில் தற்போது ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகளாக செயல்பட்டு தங்கள்நாட்டு தலைமைக்கு திரட்டி அனுப்பிய ரகசிய தகவல்களையும் அம்பலப்படுத்தி அமெரிக்காவை வெலவெலக்க வைத்துள்ளது.

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைத்தது, பாகிஸ்தானின் அணு ஆயுத மூலப்பொருட்களை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது என "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள வில்லங்கள் ஏராளமாக அணிவகுக்கின்றன.

சுமார் 150 உலக நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் நாள்தோறும் வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அளித்து வரும் தகவல்களை கைப்பற்றியே, "விக்கிலீக்ஸ்" அவற்றை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின்

ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது "விக்கிலீக்ஸ்"

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் காய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக்கழித்ததாம்.

மேலும் பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்ட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் "விக்கிலீக்ஸ்" அம்பலப்படுத்தியுள்ள தகவலில் இடம்பெற்றுள்ளது.

சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம்." பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

....வெப்துனியா 29.11.2010

nambi
30-11-2010, 11:18 AM
வாஷிங்டன், நவ.30: இந்தியா சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக்கூடும் என்பது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பலமுறை பேசியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவுடன் பலமுறை பேசியுள்ளோம். இந்தியாவைப் போல பல்வேறு நாடுகளுடனும் பேசியுள்ளோம். வரும் நாட்களில் இதுகுறித்து தொடர்ந்து பேசுவோம் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலி தெரிவித்தார்.


லட்சக்கணக்கான அமெரிக்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருவதை முன்னிட்டு, வெளியிடப்படாமல் உள்ள ஆவணங்கள் குறித்து இந்தியாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்கிலீக்ஸிடம் எத்தகைய ஆவணங்கள் உள்ளன என்பதும், அது எந்தமாதிரியான திட்டங்கள் வைத்துள்ளது என்பதும் தெரியவில்லை. எங்களது நிலையை தெளிவுபடுத்திவிட்டோம். அந்த ஆவணங்கள் கண்டிப்பாக வெளியிடப்படக்கூடாது என குரோலி தெரிவித்தார்.


250,000 ஆவணங்களில் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 3000 ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவைகளை விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிடவில்லை. இத்தகைய ரகசிய ஆவணங்கள் வெளியானால் நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று பி.ஜே. குரோலி தெரிவித்தார்.
...தினமணி 30.11.2010

nambi
30-11-2010, 11:23 AM
தேனி: தேனி மாவட்டத்தில் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது மாணவியை பெற்றோரும், ஊர் மக்களும் சேர்ந்து அரசிடம் ஒப்படைப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச் சென்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மி நாயக்கன்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை கணித ஆசிரியர் மகேந்திரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து கூலி வேலை செய்யும் அம்மாணவியின் பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் படித்தும் அதிகாரிகள் தங்கள் மகளை பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினர். மேலும், அதற்கு தண்டனையாக தங்கள் மகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச் சென்றனர்.

இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது,

பள்ளியில் நீங்கள் எங்கள் மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால், உங்கள் அஜாக்கிரதையினால் எங்கள் மகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். மானம் மரியாதையைப் பெரிதாக நினைக்கும் எங்களுக்கு இனி எங்கள் மகள் தேவையில்லை. குடும்ப மானம் காற்றோடு போய்விட்டது. அதனால் இனி அவளை உங்களிடமே ஒப்படைக்கிறோம். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் செயலுக்கான தண்டனையாகும் என்று கூறினார்கள்.

பெற்றோரின் இந்த செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அம்மாணவியை கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்த்தனர்.

இதற்கிடையே ஆசிரியர் மகேந்திரன் நேற்று பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

...தட்ஸ்தமிழ் 30.11.2010

nambi
30-11-2010, 01:17 PM
புதுடில்லி : செல் போன் வாடிக்கையாளர்கள் பலரையும் புலம்ப வைக்கும் ஒரு விஷயம் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள். நேரம், காலம் பார்க்காமல் வரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் எரிச்சலில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் திட்டம் ஜனவரியில் இருந்து செயல்படவிருக்கிறது . 2011 ஜனவரி முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் எல்லாம் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட நம்பர்களில் இருந்தே வரும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்க வேண்டுமா இல்லை புறக்கணிக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யமுடியும். இதே போல் ஏற்கனவே அமலில் இருக்கும் நேஷனல் டூ நாட் கால் டைரக்டரியிலும் சில மேம்படுத்தப்பட்ட மாறுதல்கள் செய்யப்படுகின்றன. தற்போது நடைமுறையில் என்.டி.என்.சி.,யில் பதிவு செய்து 45 நாட்களுக்குப் பிறகு தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., கள் தடை செய்யப்படுகின்றன. ஆனால் புதிய நடைமுறையின் கீழ் , பதிவு செய்த 7வது நாளிலேயே தேவையற்ற அழைப்புகள், மெசேஜூகளை தடை செய்ய முடியும். மேலும் *டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்.டி.என்.சி., டைரக்டரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எண்களுக்கு விதிமுறையை மீறி அழைப்புகள் விடுத்தால், முதல் 5 அத்துமீறல்களுக்கு பைன் மட்டும் போடப்படும். ஆறாவது முறையாக அத்துமீறல் நடந்தால் எந்த எண்ணில் இருந்து அழைப்பு விடுக்கப்படுட்டதோ, அந்த எண்ணின் சேவை துண்டிக்கப்படும்.

....தினமலர் 28.11.2010

nambi
30-11-2010, 01:18 PM
புதுடில்லி : தொலைபேசிகளில் வேண்டாத தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு கணிசமான அபராதம் விதிக்கும் நடைமுறையை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) இன்று முதல் செயல்படுத்துகிறது.



தொலைபேசிகளில், குறிப்பாக மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற பல்வேறு விதமான விளம்பரங்கள், தொலைபேசி வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. ஒருமுறை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, இதுபோன்ற அழைப்பு வந்ததால் கடுப்பானார். இந்த பிரச்னைக்கு முடிவுகட்டும்படி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் எதாவது ஒரு முறையில் இது போன்ற அழைப்புகளும், குருந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன.



"அழைக்காதீர்' பட்டியலில் தங்கள் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், என கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த "டிராய்' முடிவு செய்துள்ளது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங் கள் "700' என்ற இலக்கத்தில் துவங்கும் தொலைபேசி எண்ணில் தங்கள் விளம்பரத்தை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிமார்க்கெட் நிறுவனங்கள் தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.



வாடிக்கையாளரின் எதிர்ப்பை மீறி விரும்பத்தகாத அழைப்புகளை அனுப்பும் தொலைபேசி நிறுவனத்துக்கு முதல்முறை ஒரு லட்ச ரூபாயும், நான்காவது முறை இந்த தவறை செய்யும் போது 10 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் "டிராய்' முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையை இன்று முதல் டிராய் அமல்படுத்துகிறது. மொபைல் போன் நிறுவனங்களின் தேவையில்லாத அழைப்புக்காக வாடிக்கையாளர் சேவையை அணுகினால் "ஆங்கில பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; மாநில மொழி பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; அதன் பிறகு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என காத்திருக்க வைப்பது வாடிக்கை. அப்போது அதற்காகும் கட்டணம் நுகர்வோர் தலையில் விழும். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவது என்றாலும், இதற்கான நடைமுறைகளும் "டிராய்' மூலம் தெளிவாக்கப்பட்டால் தான் "பெஸ்கி கால்' என்றழைக்கப்படும் அர்த்தமற்ற அழைப்புகள் தொந்தரவு நிஜமாகவே தீரும். டிராயின் தற்போதைய நடவடிக்கைகள் இதற்கு தீர்வு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


...தினமலர் 30.11.2010

nambi
30-11-2010, 05:21 PM
புதுச்சேரி : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் வழக்கு பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. நேற்று 62வது சாட்சி தான் முன்பு சொன்னதை மறுத்து வாக்குமூலம் அளித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிரது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

நேற்று வழக்கு விசாரணை க்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 8 பேர் ஆஜர் ஆனார்கள்.

இந்து அறநிலையத்துறை மேலாளர் ரவிக்குமார், பால் பூத் விற்பனையாளர் சதீஷ்குமார், வங்கி மேலாளர்கள் மோகன்ராஜ், வைத்தியநாதன், ராம்குமார் ஆகியோரிடம் நேற்று சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சதீஷ்குமார் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்ததை மாற்றிக் கூறினார். இதைத் தொடர்ந்து அவரது சாட்சியம் பிறழ்சாட்சியாக பதிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் ஆவணங்களை தாக்கல் செய்தனர். சாட்சி விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 118 சாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இதுவரை 62 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதால் வழக்கு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

....தட்ஸ்தமிழ், தினத்தந்தி, தினமலர் 30.11.2010

nambi
30-11-2010, 07:34 PM
வாஷிங்டன் : உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றில் இந்தியா பற்றிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களும் உண்டு.



ஈரானின் அணு உலைகளை அழிக்கும்படி சவுதிஅரேபிய மன்னர், அமெரிக்காவை வற்புறுத்தியது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, "ஆல்பா டாக்' என பட்டப்பெயர் இட்டது போன்ற பல்வேறு பரபரப்புத் தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன. "விக்கி லீக்சின்' இந்தச் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்குப் பெயர் பெற்ற "விக்கி லீக்ஸ்' இணையதளம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் அட்டூழியத்தை 90 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் மூலமும், ஈராக்கில் நடந்த அமெரிக்க அட்டூழியத்தை நான்கு லட்சம் ரகசிய ஆவணங்கள் மூலமும் வெளிப்படுத்தியது. இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை துரத்த ஆரம்பித்தது. சமீபத்தில் அவரைக் கைது செய்வதற்கு சுவிட்சர்லாந்து கோர்ட் ஒன்று உத்தரவிட்டது.



இந்நிலையில், அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக ஜூலியன் சமீபத்தில் தெரிவித்தார். அவற்றை வெளியிடக் கூடாது எனக் கூறிய அமெரிக்கா, அவற்றைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மிரட்டலும் விடுத்தது. தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையும் விடுத்தது. ஆனாலும் சொன்னபடியே, ஜூலியன், பிரிட்டனில் இருந்து வெளியாகும், "தி கார்டியன்', நியூயார்க்கின் "தி நியூயார்க் டைம்ஸ்', ஜெர்மனியின் "டெர் ஸ்பைஜெல்', பிரான்சின், "லீ மாண்டே', ஸ்பெயினின் "எல் பைஸ்' ஆகிய ஐந்து பத்திரிகைகள் மூலம், இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை நேற்று முன்தினம் இந்திய நேரப்படி நள்ளிரவில் வெளியிட்டார். இந்த ஆவணங்கள் மூலம் உலக நாடுகளை அமெரிக்க கண் ணோட்டம், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒற்றர்களாக வேலை பார்த்தது, சின்னச் சின்ன தீவுகளில் இருந்து தனது அமைச்சரவையில் உள்ள ஹிலாரி கிளின்டன் வரை அனைவரையும் அமெரிக்கா உளவு பார்த்தது என, அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளும் இப்போது வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளன.



ஆவணங்கள் கிடைத்தது எப்படி? ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைத்தளத்தில் பிரேட்லி மேன்னிங் (22) என்ற வீரர், அமெரிக்க தூதரகங்களின் இணையதளங்களில் இருந்து மிக ரகசியமாக இந்த விவரங்களை "சிடி' யில் பதிவு செய்தார். இதற்காக ஒரு நாளில் 14 மணிநேரம் செலவிட்டுள்ளார். இப்படி எட்டு மாதங்களுக்கும் மேல் செலவிட்டு இவ்விவரங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 1.6 கிகாபைட்ஸ் கொண்ட அனைத்தையும் ஒரு "தம்ப் டிரைவ்' -ல் பதிவு செய்து, "விக்கி லீக்ஸ்' இணையதளத்திற்கு அளித்துள்ளார். ஏழு மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இவர், 2011ல் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.



இந்தியா பற்றிய ரகசிய ஆவணங்கள்: "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மூவாயிரத்து 38 ரகசிய ஆவணங்களும் உள்ளன. "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் இவற்றை வெளியிட்ட போது, உலகம் முழுவதும் அந்த இணையதளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்ததால், தொழில்நுட்ப ரீதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்தியா பற்றி என்னென்ன விவரங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை. எனினும், பாக்., பிரச்னை குறித்து ஆப்கனில் இந்தாண்டு துவக்கத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியா விலக்கி வைக்கப்பட வேண்டும் என துருக்கி விரும்பியதால், இந்தியா அழைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இரண்டாயிரத்து 278 ஆவணங்களும், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மூவாயிரத்து 325 ஆவணங்களும், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இரண்டாயிரத்து 220 ஆவணங்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் தினசரி நடவடிக்கைகள், கூட்டங்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.



பாக்.,ன் யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சி: அணுகுண்டு தயாரிக்க உதவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தானின் அணு உலையில் இருந்து எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்றதையும், அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அந்த ஆயுதங்கள் தலிபான்களின் கைகளில் சிக்கிவிடக் கூடும் என அமெரிக்கா பயப்பட்டது. ஆனால், நேற்று பாக்., வெளியிட்ட அறிக்கையில் அணு ஆயுதங்கள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.



அமெரிக்கா கடும் கண்டனம்: "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தனிநபர்கள், உலக நாடுகளின் அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என, அனைவரது உரையாடல்களையும் வெளியிட்டுள்ள "விக்கி லீக்சின்' இச்செயல், சட்டவிரோத மானது. இதனால் அமெரிக்க வெளியுறவு நலன்கள் மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டணி மற்றும் நட்பு நாடுகளின் நலன்களும் பாதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஈரானை தாக்க சவுதி வற்புறுத்தல்



* அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் முனைந்துள்ள ஈரான் மீது போர் தொடுத்து, அதை அழிக்க வேண்டும் என சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா, பஹ்ரைன் மன்னர் ஹமாத், அபுதாபி மன்னர் ஷேக் முகமது ஆகியோர் தொடர்ந்து அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். சவுதி மன்னர், "அந்தப் பாம்பின் தலையை வெட்டி விடுங்கள்' என ஈரான் குறித்து கூறியுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.



* ஐ.நா.,வில் பணியாற்றும் முக்கிய உயரதிகாரிகளின் டி.என்.ஏ.,சாம்பிள், கைவிரல் ரேகைகள் பற்றிய விவரங்கள், அவர்களின் இ-மெயில்கள், "பாஸ்வேர்டு'களும் அமெரிக்காவால் சேகரிக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.



* சீனாவில் இயங்கிய "கூகுள்' இணையதளச் சேவைகளில் சில இன்டெர்நெட் திருடர்கள் ஊடுருவி ஆவணங்களைத் திருடியதன் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்பட்டது. அமெரிக்க அரசு, தொழிலதிபர்கள் மற்றும் தலாய் லாமா ஆகியோரின் கம்ப்யூட்டர்களில் சீன அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நெட் திருடர்கள் புகுந்து தகவல்களைத் திருடியுள்ளனர்.



* வடகொரியா அழிக்கப்பட்ட பின் ஒன்றிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்து, அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆலோசித்துள்ளன. இதற்காக சீனாவுக்கு சில வர்த்தக சலுகைகளை தென்கொரியா ஏற்படுத்தித் தர வேண்டும் என, அமெரிக்க தூதர் தென்கொரியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.



* இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரண்டாண்டுகள் முன்பு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உயரதிகாரிகள், ஒசாமா பின்லாடனுக்கு எதிராகப் போர் தொடுப்பது பற்றி அமெரிக்கா தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்பினர்.



* ஆப்கன் துணை அதிபர் கடந்தாண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற போது அவரை 240 கோடி ரூபாயோடு, அந்நாட்டு அதிகாரிகள் பிடித்தனர். அப்போது அமெரிக்கா தலையிட்டு அவரை விடுவித்தது.



* வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அடங்கிய கப்பலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி சீனாவை அமெரிக்கா வற்புறுத்தியது. அந்த ஏவுகணைகள் மூலம் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்கா நம்பியது.



* ஏமன் அதிபர், அமெரிக்காவின் ஆசியப் படைகளுக்கான தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரசிடம், ஏமனில் உள்ள அல் - குவைதா பயங்கரவாதிகளைஅழிப்பது குறித்துப் பேசிவிட்டு,"வெடிகுண்டுகள் எங்களுடையவை, அமெரிக்காவினது அல்ல என்று தொடர்ந்து நாங்கள் கூறுவோம்' என்கிறார்.



சர்ச்சை ஜூலியன்: ஊபல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் இணையதளம்தான் "விக்கிலீக்ஸ்'. ஊஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவருமான ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர். ஊஆப்கானிஸ்தானில் அமெரிக்க அட்டூழியம் குறித்த 90 ஆயிரம் ஆவணங்கள், ஈராக்கில் அமெரிக்க அட்டூழியம் குறித்த நான்கு லட்சம் ஆவணங்கள் இதுவரை இந்த இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஊஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஊஅமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சாரா பாலின் என்பவரின் இ-மெயிலில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.



விளாடிமிர் புடினுக்கு நாயின் பெயர்



* பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ என்பவரின் தவறான நடத்தை, மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பற்றிய விமர்சனமும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.



* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.



* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.



* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை "ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.



* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், "வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.



* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு "பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.


....தினமலர் 30.11.2010

nambi
01-12-2010, 01:33 AM
சென்னை, நவ. 30: செம்மொழிப் பூங்கா நுழைவுக் கட்டணமாக ரூ. 5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

""செம்மொழி பூங்காவுக்குள் செல்ல டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர மக்களின் நடைப் பயிற்சிக்காக காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், பொது மக்களின் பார்வைக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும்.

பூங்கா நுழைவுக் கட்டணமாக நபருக்கு ரூ. 5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கை பயன்படுத்த நாளொன்றுக்கு ரூ. 15 ஆயிரமும், நடைப்பயிற்சிக்கு மாதாந்திர கட்டணமாக ரூ. 150-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாகன கட்டணம்: வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனத்துக்கு முதல் 3 மணி நேரம் வரை ரூ. 5-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 மணி நேரம் வரை ரூ. 10-ம், அதற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 5-ம், மாக்சிகேப்/ வேன் கட்டணம் முதல் மூன்று மணி நேரத்துக்கு ரூ. 25-ம், அதற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 25 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வாகனங்கள் மட்டுமே நிறுத்த அனுமதியுண்டு.

பிளாஸ்டிக்குக்குத் தடை: செம்மொழி பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவினை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் தொடர்பான பொருட்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பண்டங்களை தவிர்க்க வேண்டும். பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், சிறுவர்களுக்காகவும் தனியாக உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
...தினமணி 30.11.2010

nambi
01-12-2010, 01:37 AM
சென்னை,நவ.30: சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோகஸ் அகாதெமி குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை சனிக்கிழமை (டிச.4) நடத்தவுள்ளது.

குரூப்-1 முதல் நிலைத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் ஃபோகஸ் அகாதெமி மாணவர்கள் 43 பேர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை (டிச. 3) முதல் தொடங்கவுள்ளது.

மேலும் முதன்மைத் தேர்வினை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மாதிரித் தேர்வும் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விரும்பும், தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 94427 22537, 044-3200 0809.
....தினமணி 01.12.2010

nambi
01-12-2010, 01:40 AM
சென்னை, நவ. 30: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

இது குறித்த விவரம்: தமிழகத்தில் பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் பொது மக்களிடம் இருந்து ஊழியர்களால் லஞ்சமாக பணம் பெறப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.

இது தொடர்பாக திடீர் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் முடிவு செய்தனர். இதற்காக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சென்னையில் ரூ. 45 ஆயிரம் பறிமுதல்: சென்னை செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் டி.எஸ்.பி.க்கள் திருநாவுக்கரசு, சரஸ்வதி, இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், ராமச்சந்திரமூர்த்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதை அறிந்த இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களிடம் இருந்த பணத்தை வீசி எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஓரிரு இடைத்தரகர்கள் தனிப்படையினர் கையில் சிக்கினர். அவர்களிடம் இருந்த பணம், தூக்கி வீசப்பட்ட பணம் என மொத்தம் ரூ. 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் போலீஸôர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தனிப்படை போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
...தினமணி 01.12.2010

nambi
01-12-2010, 01:42 AM
சென்னை, நவ.30: அருந்ததியினத்தவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று "தினமணி'யில் நவம்பர் 22-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, அருந்ததியின பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

"தமிழ்நாடு அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினத்தவர்களுக்கு தமிழக அரசு 3 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவேட்டில் ஆதிதிராவிடர் என்று மட்டுமே பதிவு மேற்கொண்டு வந்த நிலையில், அந்தப் பிரிவில் "அருந்ததியர்' என தனியாக வகைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்களது ஜாதிச் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே அருந்ததியர் பிரிவுக்கான காலியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு பதிவு செய்வதற்கு 31.08.2010 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் "அருந்ததியர்' பிரிவைச் சேர்ந்த பதிவுதாரர்கள் தங்களின் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.

இதனால், வேலையளிக்கும் துறைக்கு பட்டியல் அனுப்பும்போது "பரிந்துரை பதிவு மூப்பினை' நிர்ணயிப்பதில் வேலைவாய்ப்புத் துறைக்கு பெரும் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

எனவே, இதைச் சரி செய்வதற்காகவும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும், அருந்ததியினத்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அருந்ததியின பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்து அருந்ததியின பதிவுதாரர்களும், தங்களது ஜாதிச் சான்றிதழை டிசம்பர் 10-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மட்டுமே அந்தந்த காலக்கட்டத்தில் வரும் "அருந்ததியர்' பிரிவு உள்ஒதுக்கீட்டுக் காலியிடங்களுக்குத் தகுதியானதாகக் கருதப்படும்.

குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் பதிவு செய்பவர்களின் பெயர்கள், எதிர்காலத்தில் வரும் காலியிடங்களுக்கான இடஒதுக்கீடுகளுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 01.12.2010

nambi
01-12-2010, 01:55 AM
சென்னை, டிச.1-

1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்புவரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதாவிட்டாலும் கட்டாயமாக அவர்களை பாஸ் செய்யவேண்டும் என்று மெட்ரிகுலேசன் முதல்வர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் குற்ற நடவடிக்கை

மாணவர்கள் கடத்தல், மாணவர்கள் பள்ளியை விட்டு ஓடி ரெயில் ஏறி அல்லது பஸ்ஏறி வெளியிடங்களுக்கு செல்லுதல், தேர்வில் தோல்விஅடைவதால் தற்கொலைசெய்தல் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் போன்ற குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

இதை தடுக்க சென்னை மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டம் நேற்று புரசைவாக்கம் டவுட்டனில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ முருகன் தலைமை தாங்கினார். மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.

மாவட்ட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி பேசியதாவது:-

தனி ஏடு

எதிர்கால சமுதாயம் நல்ல சமுதாயமாக அமைவதற்கு அடிப்படையான இடம் பள்ளிகள்தான். பள்ளிக்கூடங்களில் அடிக்கடி தவறு செய்யும் மாணவர்கள், பிற மாணவர்களிடம் தகராறில் ஈடுபடும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு தனி ஏடு நிர்வகிக்கவேண்டும். அதாவது பிரச்சினைக்குரிய மாணவர்கள் ஏடு என்று அதற்கு பெயர் வைக்கவேண்டும்.

மாணவர்கள் சிலர் பிரச்சினையோடு காணப்பட்டால் அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சினை அல்லது பள்ளியில் என்ன பிரச்சினை என்பதை ஆசிரியர்கள் அல்லது கல்லூரி முதல்வர்கள் கேட்டு அந்த பிரச்சினையை போக்கவேண்டும்.

மார்க்கை விட நன்னடத்தை முக்கியம்

அதிக மார்க்கு எடுக்கவேண்டும் என்பதை காட்டிலும் சிறந்த ஒழுக்கமுள்ள மாணவர்களாக இருந்து குறைந்தமார்க்கு எடுத்தாலே போதும். ஒரு பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி எடுப்பதை விட 80 சதவீததேர்ச்சி எடுத்து சிறந்த பண்புள்ள மாணவர்களை உருவாக்கினால் போதும். ஒழுக்கத்திற்கும் பண்புக்கும், நன்னடத்தைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

வகுப்பறையில் 10 சதுர அடிக்கு ஒரு மாணவர் தான் உட்கார வேண்டும்.

மத்திய அரசு உத்தரவுபடி 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை உள்ள எந்த மாணவர்களையும் எக்காரணம் கொண்டும் பெயிலாக்கக்கூடாது.பாஸ் பண்ணவேண்டும்.

தேர்வு எழுதாவிட்டாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வராவிட்டால் அவர்களின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள்பேசவேண்டும்.

மாணவர் சேர்க்கை

மாணவர்களை ஜுன் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை சேர்க்கவேண்டும். சேர்க்கும்போது அப்பா பெயரை சொல்ல மாணவனின் தாய் விரும்பாவிட்டால் தந்தை பெயரை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. அதே போல பிறப்பு சான்றிதழும் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. பால்வாடியில் ஏற்கனவே கொடுத்த சான்று இருந்தால் போதும்.

மேலும் மாணவர்சேர்க்கையின்போது சாதி அல்லது மதம் சொல்ல விரும்பாதவர்களிடம் கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி எவர்வின் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் புருசோத்தமன் கூறுகையில், மார்க்கை விட நன்னடத்தை தான் முக்கியம் என்று கல்வி அதிகாரிகள் முடிவு எடுத்து இருப்பதை வரவேற்கிறேன் என்றார்.

....தினத்தந்தி 01.12.2010

nambi
01-12-2010, 01:58 AM
சிகாகோ, டிச.1-

அமெரிக்காவில் 15 வயது மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளிக்குள் நுழைந்து 23 மாணவர்களை வகுப்பு ஆசிரியருடன் சிறைப்பிடித்தான். அவர்களை 5 மணி நேரம் சிறையில் அடைத்து வைத்து இருந்த அவன் பிறகு அவர்களை எந்த வித காயமும் இல்லாமல் விடுதலை செய்தான். பிறகு அந்த மாணவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான். இதில் காயம் அடைந்த அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

ஆசிரியருடன் மாணவர்களும்

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள மரினெட்டே என்ற நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் மாலை 3 மணிக்கு பள்ளிக்கூடம் விடுவதற்கு முன்பாக ஒரு மாணவன் அந்த பள்ளிக்கூடத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தான். அவன் ஒரு வகுப்பு அறையில் இருந்த 23 மாணவர்களையும், அவர்களது ஆசிரியரான பெண்ணையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தான்.

அவர்கள் யாரும் வகுப்பு அறையை விட்டு வெளியேறக்கூடாது என்று எச்சரித்தான். பிறகு வகுப்பு ஆசிரியர் மூலமாக அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை போலீசுக்கு தெரியப்படுத்தினான்.

அதே பள்ளிக்கூடத்தில் படிப்பவன்

அதன் பிறகு தான் போலீசார் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர். பின்னர் 7 மணி அளவில் 40 பேர் கொண்ட போலீசார் குழு பள்ளிக்கூடத்துக்கு விரைந்தது.

அதன்பிறகு தான் அந்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் அதே வகுப்பு அறையில் படிக்கும் மாணவன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவன் பெயரை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். ஆசிரியையும் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களும், அந்த மாணவனுக்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான்

கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகி விட்டபோதிலும் இந்த பிரசினையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், 5 மாணவர்கள் பாத்ரூம் செல்ல அவனிடம் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அவன் அனுமதி கொடுத்தான். அப்போது போலீசார் கதவை உடைத்து வகுப்பு அறைக்குள் நுழைந்தனர்.

வகுப்பு அறை வாசலில் அந்த மாணவன் துப்பாக்கியுடன் நின்று இருந்தான். போலீசார் அவனை குறி பார்த்தபடி, சரண் அடையும்படி கோரினார்கள். உடனே அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான்.

விடுதலை

இதில் பலத்த காயம் அடைந்த அவன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆசிரியரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை.

இந்த சிறைப்பிடிப்பு சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவன் என்ன கோரிக்கை வைத்தான் என்பதும் தெரியவில்லை.

....தினத்தந்தி 01.12.2010

nambi
01-12-2010, 03:03 AM
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கள் மாட்டை கொன்ற சிறுத்தைக்கு விஷம் வைத்துகொன்ற மலைகிராமத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது ஆசனூர் வனப்பகுதி. இதற்குட்பட்ட கேர்மாளம்மேற்கு வனத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண் உத்தரவின்பேரில் சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி சதீஷ் மேற்பார்வையில் வனரோந்து படை ரேஞ்சர் சிவமல்லு, வனவர் உதயராஜ், வனக்காப்பாளர்கள் கவிராஜ், பழனிசாமி, சம்பத் உள்ளிட்ட தனிப்படையினர் கேர்மாளம் மேற்கு வனப்பகுதியில் சென்று இறந்த சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிவஇரக்க பள்ளம் என்ற இடத்தில் சுமார் 4 வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. மேலும் அந்த சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறையினர் விசாரித்ததில் பத்திரிபடுகை கிராமத்தை சேர்ந்த பெரியமாதன் (35), சிவசாமி (20) ஆகிய இருவரும் தங்களுடைய கருவுற்ற மாட்டை வனப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தபோது சிறுத்தை அடித்து இறந்ததாகவும் மீதம் இருக்கும் மாடுகளை காப்பாற்ற அந்த சிறுத்தைக்கு இறந்த மாட்டின் உடல்மீது விஷம் வைத்ததாகவும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேல் விசாரனைக்காக இருவரையும் ஆசனூர் ரேஞ்சர் சண்முகத்திடம் ஒப்படைத்தனர்.

...வெப்துனியா 01.12.2010

nambi
01-12-2010, 03:06 AM
''மிருகத்தை மனுஷன் கொன்றாலும் கைதா?'' :confused:

nambi
02-12-2010, 01:14 PM
சென்னை:தமிழகம் முழுவதும் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று சென்னையில் தொடங்கி¤வைத்தார்.


ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் கோவை மண்டலங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வசதியை, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:


முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில்தான் 99 சதவீதம் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்த வசதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரிசையில் நின்று காத்து கிடப்பதை விட, வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி வருகின்றனர். தற்போது, 7 வங்கிகளின் மூலம் மட்டுமே இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
மின்பற்றாக்குறையை போக்க புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, கரும்பு சக்கை, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும். 2 லட்சம் இலவச மின்மோட்டார் இணைப்பு தரும்போது, கூடுதலாக 750 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்.


குறிப்பிட்ட 50 போஸ்ட் ஆபீஸ்களில் மட்டுமே மின்கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. இதுவும் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமப்புற பகுதிகளில் கையடக்க கருவி மூலம் மின்கட்டணத்தை வசூல் செய்யும் திட்டம் விரைவில் கொண்டுவர உள்ளது. மக்களிடம் மின்கட்டணம் வசூலித்ததும், அவர்களிடம் உடனே ரசீது வழங்கப்படும்.

இதுவும் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார். நிகழ்ச்சியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் சி.பி.சிங், மின்சார துறை செயலாளர் டேவிதார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
...தினகரன் 02.12.2010

nambi
02-12-2010, 01:17 PM
புதுடில்லி: SMS என்றழைக்கப்படும் குறுஞ்செய்தி மூலம் பணம் அனுப்பும் வசதி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பணம் செலுத்தும் அமைப்பு மூலம் இந்த வசதி நாட்டிலுள்ள செல் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் செல் போன் வைத்திருக்கும் நபர், தனது வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். இதற்கு இனைய வசதி தேவையில்லை. இது வரை ஒரே வங்கிக்கிடையே மட்டும் பணம் பரிமாற்ற வசதி இருந்து வந்தது. தற்போது நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதியுடன், ஒரு வங்கியின் கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். ஸ்டேட் வங்கி, HDFC, ICICI, Axis வங்கி ஆகிய வங்கிகள் இத்திட்டத்தில் இனைந்துள்ளன. மேலும் 7 இந்திய வங்கிகள் திட்டத்தில் சேருவதற்கான வழிவகைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

...இந்நேரம்.காம் 01.12.2010

nambi
02-12-2010, 01:37 PM
மும்பை : கடன்கள் மீதான அனைத்து கட்டணங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வட்டி விகிதம் மட்டுமல்லாமல் இதர கட்டணங்களையும் பிற வங்கிகளுடன் ஒப்பிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். வீடு, வாகனம் மற்றும் கல்வி உட்பட பல்வேறு கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இத்தகைய கடன்களுக்கு வட்டி வசூலிப்பது மட்டுமில்லாமல் விண்ணப்பம் மற்றும் நடைமுறை கட்டணம், தவணை தாமத கட்டணம் என பல வகையில் வாடிக்கையாளர்களை வங்கிகள் சுரண்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

வங்கிகள் கடன் வழங்கும்போது, பல்வேறு கட்டணங்கள் குறித்து தெரிவிப்பதில்லை என வாடிக்கை யாளர்கள் ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: கடன் வழங்குவதில் வங்கிகள் வெளிப்படையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான கடன்களுக்கும் விண்ணப்ப மற்றும் நடைமுறை கட்டணம், தவணை தாமத கட்டணம், திட்டம் மாறுதல் கட்டணம், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் திருப்பித் தரப்படும் விண்ணப்ப கட்டணம், முன்பணம் செலுத்த வேண்டிய விவரம் மற்றும் இதர கட்டணம் பற்றிய எல்லா தகவலையும் வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

....தினகரன் 17.11.2010

nambi
02-12-2010, 02:50 PM
வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
....தினமணி 02.12.2010

nambi
02-12-2010, 02:53 PM
அமெரிக்க தூதரக மற்றும் பாதுகாப்புத் துறை ரகசியங்களை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்" இணைய தள தலைவர் ஜூலியன் அசாஞ்சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது தாயார் கிறிஸ்டியன் அசாஞ்சே அச்சம் தெரிவித்துள்ளார்.

தமது மகன் உண்மையை வெளிக்கொணர முயலும் ஒரு வலிமையான மற்றும் அதி புத்தி சாதுரியம் உள்ளவர் என்றும், உலக நன்மைக்காகவே அவர் இதனை செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இராணுவ ரகசியங்களை வெளியிடும் "விக்கிலீக்ஸ்" இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா, உளவு பார்த்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய ஸ்வீடனிலுள்ள என்கோபிங் என்னுமிடத்தில் ஒரு மாநாடு ஒன்றை நடத்தியபோது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணியையும் மற்றும் ஸ்டாக்ஹோமில் வேரொரு பெண்ணையும் கற்பழித்ததாக புகாரின் அடிப்படையில், இண்டர்போல் காவல் படையினரும் அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...வெப்துனியா 02.12.2010

nambi
02-12-2010, 07:53 PM
லண்டன்:"பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை' என்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு, புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.



காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயை நோயை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த கருத்துக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.புற்றுநோய் மற்றும் அது தொடர்பான உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் முடிவு சமீபத்தில், பல்கலைக்கழகத்தின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:புற்றுநோயை, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. முறையான உணவு பழக்கவழக்கங்கள், சிகிச்சை முறை உள்ளிட்டவற்றின் மூலம் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும். காய்கறிகளும், பழங்களும் நமது உடல்நலத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், புற்றுநோயை அவை கட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்கப்படவில்லை.



புகைப்பிடிக்கும் பழக்கம், மது, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களே புற்றுநோய்க்கு முக்கிய காரணம்.உடல் பருமன் குடல், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில், புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதால், நுரையீரல், வாய், குடல் பகுதிகளில் புற்றுநோய் பாதிக்கும். நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், குணமாக்கக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

....தினமலர் 02.12.2010

nambi
02-12-2010, 07:55 PM
நியூயார்க்:"போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அருகில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, பேறுகாலத்திற்கு முன்பாகவே, குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். கடந்த 1997ம் ஆண்டிலிருந்து, 2008 ம் ஆண்டுவரை 14 ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. டோக்கியோவிலிருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள ஷிசுயோகா பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சாதாரணமாக, பெண்களுக்கு 40 வாரங்களில் குழந்தை பிறக்கும். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, பெரும்பாலும் 37 வாரங்களில் குழந்தை பிறந்து விடுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அருகில் 200 மீட்டர் இடைவெளியில் வசிக்கும் 15 சதவீத பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.



இதற்கு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வாகன இரைச்சல், வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் போன்றவையே காரணம். இதுதவிர, வயது மற்றும் வேலைகளின் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும் குறைபிரசவங்களுக்கு காரணம். எங்களது ஆய்வில் பங்கெடுத்த 50 சதவீத பெண்களுக்கு, சிக்கலான பிரசவ அனுபவமே ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
....தினமலர் 02.12.2010

nambi
02-12-2010, 08:04 PM
முதல்-அமைச்சர் கருணாநிதி தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்று அவர் கூறி உள்ளார்.


சென்னை, டிச.2-

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விளக்கம்

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.

மந்திரிகுமாரி நாடகம்

எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.

அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.

கலைவாணர் பந்தயம்

அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.

நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்-அமைச்சர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.

அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்-அமைச்சரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.

அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.

எளிமையான வீட்டில்....

இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன். முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.

1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்-அமைச்சர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.

45 ஆயிரம் ரூபாய்க்கு வீடு

இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.

நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

ரூ.10 கோடி கிடைத்தது

முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.

புத்தக கண்காட்சி

வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

செம்மொழி மாநாடு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.

உளியின் ஓசை படம்

2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.

2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று துÖய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.

மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி

23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.

25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

பிறந்தநாள் விழா

என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.

நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.

எந்த சொத்தும் வாங்கவில்லை

இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். `சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.

நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.

அதிக ஊதியம் பெற்றவன்

தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்து என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்-அமைச்சராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.

குறைகாண்போர்

இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்-அமைச்சர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.

5-வது முறை முதல்-அமைச்சர்

நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்-அமைச்சராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

....தினத்தந்தி 02.12.2010

nambi
02-12-2010, 08:24 PM
லண்டன்: இலங்கையில் இறுதிப்போரின் போது தமிழ்ப் போராளிகளின் கண்களைக் கட்டி, துடிக்கத் துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை ராணுவம், அதே காலகட்டதச்தில் ஏராளமான தமிழ்ப் போராளிப் பெண்களை கற்பழித்து கொடூரமாகக் கொன்றுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தை பிரிட்டனின் சேனல் 4 தொலைக் காட்சி நேற்று வெளியிட்டது.

மனித இனத்தையே வெட்கித் தலைகுனியச் செய்யும் மிக மோசமான, வக்கிரமான, கொடூரமான செயல்கள் இவை என சர்வதேச சமூகம் அதிர்ச்சியுடன் கருத்து வெளியிட்டுள்ளது. இந்த போர்க்குற்றத்துக்குக் காரணமான அனைவரும் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் வற்புறுத்தியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மற்றும் சில பொதுமக்களை கண்களைக் கட்டி, துப்பாக்கியால் தலையின் பின்புறம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி இதனை ஒளிபரப்பியது. தமிழ்நாட்டு/ இந்திய ஊடகங்கள் ஒன்றில் கூட இக்காட்சிகள் வெளியாகவில்லை.

இந்த வீடியோவை போலியானது என்று கூறி தப்பிக்கப் பார்த்தது இலங்கை அரசு. ஆனால் சர்வதேச புலனாய்வு அமைப்புகள், இவை போலி அல்ல உண்மையே என்பதையும், எந்தக் காலகட்டத்தில் நடந்தன என்பதையும் உறுதிப்படுத்தின.

இந்த நிலையில் மேலும் சில போர்க்குற்ற ஆவணங்களை அல்-ஜஸீரா வெளியிட்டது.

இப்போது மீண்டும் சேனல் 4 தங்களிடம் உள்ள முக்கிய வீடியோ ஆதாரத்தினை முழுமையாக வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேவின் போர்க்குற்றத்துக்கு மிக வலுவான ஆதாரம் இது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில், தமிழ்ப் போராளிகள் பலரையும் நிர்வாணப்படுத்தி பின்புறம் கைகளைக் கட்டி ஈவிரக்கமின்றி மிகக் கொடூரமாக சுட்டுக் கொல்கின்றனர் சிங்கள ராணுவத்தினர். அவர்கள் இறந்த பின்னும் உடல்களை தோட்டாக்களால் குதறி வெறியாட்டம் போடுகின்றனர்.

அடுத்து இந்த புதிய வீடியோவில், சிங்கள ராணுவம் தமிழீழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சுட்டுத்தள்ளும் காட்சிகள் அடங்கியுள்ளன. அவை முழுமையாக ஒளிபரப்ப முடியாத அளவுக்கு கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள கொடுமைகளுக்குள்ளானவர், பெண் விடுதலைப்புலி உறுப்பினரும், விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டு வந்த 'ஒளிவீச்சு'க்கு செய்தியாளராக இருந்தவருமான இசைப்பிரியா என தமிழ்நெட் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று சேனல் 4 இல் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில் நிர்வாணமாக ஏழு பெண்கள் இறந்து கிடக்க்கிறார்கள். இவற்றுக்கருகில் நின்று பேசுபவர்களின் உரையாடல்களிலிருந்து இந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

சேனல்- 4 விரிவாக இந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய போதிலும், ஒரு கட்டத்தில் அதற்கு மேல் காட்சிகள் ஒளிபரப்பமுடியாத அளவுக்கு காட்சிகள் கொடூரமாக இருக்கின்றன. பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்களின் நிர்வாண உடல்கள், மற்றும் சூழ நின்று கொண்டிருப்பவர்களின் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய உரையாடல்கள் என்பன காரணமாக தொடர்ந்து ஒளிபரப்ப முடியவில்லை என்று சேனல் 4 செய்தி அறிவிப்பாளர்கள் கூறினர்.

இருப்பினும் அக்காணொளியை ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கு சேனல் 4 அனுப்பி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தட்ஸ்தமிழ், தினமணி01, 02.12.2010

ஆன்டனி ஜானி
03-12-2010, 05:25 PM
அருமையான திட்டங்கள் அமலுக்கு வரட்டும்,
வாழ்த்துக்கள் .....

nambi
04-12-2010, 05:42 AM
சென்னை, டிச.4-

இங்கிலாந்து நாட்டில் தங்கியிருக்கும் போர்க்குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகம் அருகில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, தமிழ் மாணவர் கழகம், அகில இந்திய பாரம்பரிய மீனவ சங்கம் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் பேரணியாக இங்கிலாந்து துணை தூதரகம் நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகளுடன் வந்த பெண்களும் கலந்து கொண்டனர்.
....தினத்தந்தி 04.12.2010

nambi
04-12-2010, 05:45 AM
சென்னை: ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன் என்றும் அதற்காக வழங்கப்பட்டிருப்பதுதான் டாக்டர் பட்டம் என்றும் கூறினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் இசைப் பெருவிழா மற்றும் விஜயகாந்துக்கு மனிதநேய சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள சர்வதேச தேவாலய மேலாண்மை நிறுவன தலைவர் ஜான் வில்லியம் மனிதநேய சமூக சேவைக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.

விழாவில் விஜயகாந்த் பேசுகையில், "கட்சி தொண்டர்களுக்கு இந்த டாக்டர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன். சிறுபான்மையினர் என்று கூறி உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாம் பெரும்பான்மை என்பதை இன்னும் 7 மாதத்தில் நிரூபிப்பேன்.

இலவசம் என்று கொடுத்து மக்களை கெடுத்து வருகிறார்கள் என்று நான் கூறினால், விஜயகாந்த் கம்ப்யூட்டர் இலவசமாக கொடுக்கவில்லையா என்கிறார்கள். அது மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு. மக்களை வாழ வையுங்கள், சந்தோஷப்படுத்துங்கள். இந்த நாட்டில் ஏழைகள் இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டை சீரமைக்கத்தான் எனக்கு இந்த பட்டம் தரப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். நிச்சயம் ஊழலற்ற ஆட்சியை என்னால் அமைக்க முடியும்...", என்றார்.
...தட்ஸ்தமிழ் 04.12.2010

nambi
04-12-2010, 05:48 AM
இப்பொழுதெல்லாம் ''தேர்ச்சி'' அடைவதற்கு...... முன்னமே ''டாக்டர்'' பட்டம் தரப்படுகிறது....:confused:

nambi
05-12-2010, 11:59 PM
பீஜிங், டிச.5- பிரபல தேடுபொறி இணையதளமான கூகுள் சீனாவில் சிதைக்கப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.


சீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் சிதைக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.


சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன். கூகுள் இணையதளத்தில் அவர் தனது பெயரை டைப் செய்து தேடியபோது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்களின் தொடர்புகள் வந்துள்ளன. இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக சிதைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இத்தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.


மேலும், விக்கிலீக்ஸை மேற்கொள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் "கார்டியன்" நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது
...தினமணி 05.12.2010

nambi
06-12-2010, 12:01 AM
கொழும்பு, டிச.4- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் பிரிட்டன் நாட்டின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் காரணமாக அவர் ராஜபட்சவுடன் லண்டன் வருவதற்கான அனுமதி வழங்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


ஏற்கெனவே, அவருக்கு நுழைவு அனுமதி வழங்க அமெரிக்காவும் மறுத்தது. கடந்த செப்டம்பர் மாதம், அதிபர் ராஜபட்ச ஐநா சபையில் உரையாற்ற சென்றபோது டக்ளஸ் தேவானந்தா உடன் வர அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அவரது மனுவை அமெரிக்க அரசு நிராகரித்தது.


இந்தியாவில் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் அவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


...தினமணி 05.12.2010

nambi
06-12-2010, 03:22 AM
கருணாநிதியிடம் நாளை அறிக்கை தாக்கல்


வடகிழக்கு பருவ மழையால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சேத விவரங்கள் பற்றி, முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அவர்கள் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

சென்னை, டிச.6-

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

நிவாரண பணிக்கு ரூ.100 கோடி

கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் பலத்த மழையினால் 9 மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கி, மழை-வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார்.

சேத விவரங்களை மதிப்பிடுவதற்காக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 8 உயர் அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று நேரில் ஆய்வு செய்து மழை-வெள்ள சேத விவரங்களை மதிப்பீடு செய்தனர்.

கருணாநிதியிடம் அறிக்கை

இன்றும் அவர்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மழை-வெள்ள சேதங்கள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் அறிக்கை தயாரிக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பும் அவர்கள், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, நாளை மாலை தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு, மழை-வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

176 பேர் பலி

மழையினால் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்ட கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் விவசாய பயிர்கள், வீடுகள் மற்றும் சாலைகள் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 33 பேர் பலியானார்கள். நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் 9 பேர் மழையினால் இறந்தனர். அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் 26 பேர் பலியாகி உள்ளனர்.

1762 கால்நடைகளும் மழைக்கு பலியாகியுள்ளன. 26 ஆயிரத்து 919 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் சராசரியாக 4.47 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக நாகை மாவட்டத்தில் 27.58 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டத்தில் 18.21 மில்லி மீட்டரும், கடலூர் மாவட்டத்தில் 17.77 மில்லி மீட்டரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16.27 மில்லி மீட்டரும், சென்னையில் 11.31 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரத்தில் 67.40 மில்லி மீட்டர் மழை கொட்டியது.
...தினத்தந்தி 06.12.2010

nambi
07-12-2010, 02:06 AM
கொழும்பு, டிச.6- பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இலங்கையில் பயிற்சி முகாம் அமைத்திருந்த தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இலங்கையில் லஷ்கர் இயக்கம் முகாம்களை அமைத்ததாக விக்கிலீக்ஸ் தகவலை மேற்கொள் காட்டி இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இதுகுறித்த தகவல் வெளியானபோது, அதை இலங்கை அரசு மறுத்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் லஷ்கர் தீவிரவாதிகள் பயிற்சி முகாம் அமைத்ததை விக்கிலீக்ஸ் தகவல் உறுதிபடுத்தியுள்ளது.

சமீபத்தில் காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சு வன்முறை சம்பவங்களின் பின்னணியில் லஷ்கர் தீவிரவாதிகள்தான் இருந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர் தீவிரவாதிகள்தான் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 06.12.2010

nambi
07-12-2010, 02:18 AM
சென்னை, டிச. 6: இலங்கையில் முகாம்களில் 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் தமிழர்கள் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் விவரம்: எனது இலங்கைப் பயணத்துக்கு முன் தாங்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருந்த விவரங்களை இலங்கை ஆட்சியாளர்களுடன் விவாதித்தேன்.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும், இந்த ஆண்டு இறுதிக்குள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

முகாம்களில் வாழும் தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் இந்தியா ஒத்துழைப்பும், உதவியும் அளித்து வருகிறது.

இலங்கைக்குச் சென்றிருந்தபோது, வடக்குப் பகுதியில் வேளாண் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 500 டிராக்டர்களை வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்தேன்.

முகாம்களில் வாழும் தமிழர்கள் அமைதியான, கௌரவமான வாழ்வை வாழ அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும்.

எனது இலங்கைப் பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்பட்டது.

தமிழர்கள், பிற சமுதாயத்தினரை அழைத்து அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரை கேட்டுக் கொண்டேன் என்று கடிதத்தில் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ், முகாம்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 07.12.2010

nambi
07-12-2010, 02:22 AM
சென்னை, டிச. 6: இயக்குநர் சீமான் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது.

இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு சிறையில் அடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அந்த வழக்கில் அரசு ஆஜராகி வாதாடவில்லை. கடைசியாக டிசம்பர் 6-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி, நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜேம்ஸ் பீட்டரின் வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கு மீதான விசாரணையை வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அதன் பிரதியை நீதிபதிகளிடம் வழங்கினார்.

மனுவில் கூறியிருப்பது:

ஆள் கொணர்வு ரிட் மனு கடந்த 4.8.10-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணைக்காக செப்டம்பர் 21-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது. அன்று விசாரணை நடைபெறாததால் அக்டோபர் 7-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது. அப்போதும் விசாரணையில்லை.

அரசு சார்பில் வாய்தா வாங்கியதை அடுத்து, அந்த வழக்கு அக்டோபர் 22-ம் தேதி, நவம்பர் 3, 16, 25 தேதிகள், டிசம்பர் 3-ம் தேதி என விசாரணை நடைபெறாமல் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு வேண்டுமென்றே விசாரிக்கப்படாமல் தள்ளிப்போடப்படுகிறது.

எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, சீமான் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகளுக்கு மாற்றும் வகையில், தலைமை நீதிபதியிடம் வழக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.
....தினமணி 07.12.2010

nambi
07-12-2010, 02:24 AM
சென்னை : பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ம.தி.மு.க.,வில் இருந்து நேற்று விலகினார். "யார், ஆளவந்தான், கந்தசாமி' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு. மேலும், பல படங்களை வெளியிட்டு வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். ம.தி.மு.க., துவங்கியது முதல் அக்கட்சியில் உள்ளார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பதவியில் உள்ள தாணு திடீரென அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
....தினமலர் 07.12.2010

nambi
07-12-2010, 01:25 PM
லண்டன், டிச.7- விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜே (39) லண்டனில் கைது செய்யப்பட்டார்.

இன்று, மத்திய லண்டன் காவல் நிலையத்திற்கு சரணடைய வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சுவீடன் நாட்டில் ஜுலியன் அசான்ஜேக்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்டர்போல் போலீஸார் அவரை மிகவும் தேடப்படும் நபராக அறிவித்தனர். இந்நிலையில், அசான்ஜே லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஜுலியன் அசான்ஜே கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து ரகசியத் தகவல்களை வெளியிடும் பணி பாதிக்கப்படாது என்று விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
...தினமணி 07.12.2010

nambi
07-12-2010, 01:28 PM
சென்னை,டிச 6: கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் திரைப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலை முதல்வர் கருணாநிதி ஜனவரி 2-ல் வெளியிடுகிறார்.

கவிஞர் வைரமுத்து 30 ஆண்டுகளாக எழுதிய 7,000 திரைப்பாடல்களில், தேர்வு செய்யப்பட்ட 1,000 பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரை தரப்பட்டுள்ளது. பாடல் உருவான விதம், பாடலின் சூழலுக்கான காரணம் உள்ளிட்ட விஷயங்கள் முன்னுரையில் கூறப்பட்டுள்ளன.

திரைப்படத்துறையில் வைரமுத்து முதலில் எழுதிய ""பொன்மாலை பொழுது...'' (நிழல்கள்) பாடலில் தொடங்கி ஷங்கர் இயக்கத்தில் வெளியான "எந்திரன்' படத்தில் அவர் எழுதிய ""அரிமா அரிமா...'' பாடல் வரை தொகுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியின் 8 பக்க அணிந்துரையோடு வைரமுத்துவின் 15 பக்க ஆய்வுரையும் இடம் பெற்றுள்ள இந்த நூல் 1216 பக்கங்கள் கொண்டது.

ஜனவரி 2-ல் நூல் வெளியீடு: ஜனவரி 2-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் கருணாநிதி நூலை வெளியிட, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து பெற்று கொள்கின்றனர்.

இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, இராம.நாராயணன், வி.சி.குகநாதன், மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, எஸ்.ஜானகி உள்ளிட்ட திரையுலத்தினர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

விழாவின் தொடக்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களைத் திரையில் பாடிய பின்னணிப் பாடகர்களே மேடையிலும் பாட உள்ளனர்.

ஏற்கெனவே 1993-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்களின் தொகுப்பு இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
....தினமணி 07.12.2010

nambi
07-12-2010, 01:32 PM
டெல்லி: சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. சென்னை சேத்துப்பட்டு எம்.வி.நாயுடு தெருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பில் உடல்கள் சிதறி, எதிர் வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது வந்து உடல் பாகங்கள் விழுந்தன. அந்த அளவுக்கு குண்டு வெடிப்பு மிக பயங்கரமாக நடந்தது.

இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக், ரபிக் அகமது, ஹைதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில், இந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது. ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை வாங்கியதாக மூவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தவிர, அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

....தட்ஸ்தமிழ், தினமணி 07.12.2010

nambi
07-12-2010, 01:41 PM
கொழும்பு, டிச.7- பிரிட்டன் அரசு நரியைப் போன்று செயல்பட்டு வருகிறது என்று இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விடுதலைப் புலிகளிடம் பிரிட்டன் பணிந்து சென்றாலும், அதிபர் ராஜபட்ச ஒருபோதும் அவ்வாறு அடிபணிய மாட்டார் என்றும் மெர்வின் சில்வா கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னனுக்குப் பிறகு இலங்கையை ஐக்கியப்படுத்திய தலைவராக ராஜபட்ச விளங்குகிறார் என்றும் அவர் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபட்சவின் பிரிட்டன் பயணத்தின்போது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக "சேனல் 4"-ல் பரபரப்பான விடியோ வெளியானது. மேலும், லண்டனில் வாழும் தமிழர்களின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கை காரணமாக ராஜபட்சவின் உரையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரிட்டன் அரசை இலங்கை அமைச்சர் தற்போது கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
....தினமணி 07.12.2010

nambi
07-12-2010, 01:46 PM
கல்லூரி ஆசிரியர் பணிக்கு நெட், ஸ்லெட் தேர்வு அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசுக் கல்லூரிகளில் 1,034 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஸ்லெட், நெட் தேர்வுகள் அவசியம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து எம்.பில். படித்தவர்கள் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு, உதவிப் பேராசிரியர் பணிக்கு இரு தேர்வுகளையும் எழுதியிருப்பது அவசியம் என்று தீர்ப்பளித்துள்ளது.
...அந்திமழை 07.12.2010

nambi
07-12-2010, 01:51 PM
என்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன். எனக்கென்று தனித்துவம் உள்ளது என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

மன்மதன் அம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு செய்த காட்சியை நேற்று பத்திரிக்கையாளர்களுக்காக போட்டுக் காட்டினர்.

அடையாறு பார்க் ஷெரட்டனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகை சங்கீதா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

'அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?', என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

இதற்கு கமல் பதில் கூறுகையில், "நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம்.

பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்...," என்றார்.

56 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே, தங்கபஸ்பம் சாப்பிடுகிறீர்களா?, என்று ஒருவர் கேள்வி எழுப்ப,

"வயதை பற்றி பேசக் கூடாது. இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே இளைமைதான். எல்லோரும் மூன்று வேளை சாப்பிடுவது மாதிரி நானும் மூன்று வேளை சாப்பிடுகிறேன். தங்க பஸ்பம் எதுவும் சாப்பிடுவதில்லை. தங்கபஸ்பம் சாப்பிடுகிற அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால், அதையும் சினிமாவிலேயே போட்டிருப்பேன்..." என்றார்.

சினிமாவுக்கு ஒத்திகை அவசியமா? என்று கேட்டதற்கு, "5 லட்சம் செலவில் நடைபெறும் நாடகத்துக்கே ஒத்திகை தேவைப்படும்போது, 50 கோடி செலவில் தயாரிக்கும் சினிமாவுக்கு ஒத்திகை அவசியம் இல்லையா? சினிமாவுக்கு ஒத்திகை பார்ப்பது, என் கண்டுபிடிப்பு அல்ல. மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்திலேயே ஒத்திகை இருந்தது. ஒத்திகை பார்ப்பதற்கு என்றே அந்த ஸ்டூடியோவில், மிகப்பெரிய 'ஹால்' இருந்தது...", என்றார் கமல்.

மன்மதன் அம்பு படத்தின் படப்பிடிப்பை சொகுசுக் கப்பலில் படமாக்கப்பட்டது குறித்து கூறுகையி், மன்மதன் அம்பு' படத்தின் கதை, உல்லாசப்பயணம் சம்பந்தப்பட்டது. அதில் நான் முன்னாள் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த படத்தின் கதைப்படி, கப்பல் தேவைப்பட்டது என்றார் கமல்.

மாதவன் தொடர்ந்து உங்களது படத்தில் நடிக்கிறாரே என்ற கேள்விக்கு, மாதவனுக்கும், எனக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால்தான் என்றார்.

இனி நீங்கள் எழுதும் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நல்ல கதை யார் எழுதினாலும், அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால், நான் நடிக்க தயார் என்றார் கமல்.
..தட்ஸ்தமிழ் 05.12.2010

ஆன்டனி ஜானி
07-12-2010, 02:20 PM
காலையில் பேப்பர் படிக்க மறந்து விட்டேன் நண்பா
நீங்க குடுத்த இந்த செய்தி எனக்கு ரெம்ப உதவியா இருந்து

வாழ்த்துக்கள் .....

nambi
08-12-2010, 01:48 AM
புது தில்லி, டிச. 7: வரும் மார்ச் முதல் பாலிதீன் உறையில் (பிளாஸ்டிக் பாக்கெட்டில்) குட்கா, பான் மசாலா பொருள்களை விற்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

இந்த புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 8 வாரங்களில் ஆய்வு நடத்துமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி அடங்கிய பெஞ்ச், இது தொடர்பான மனுவை விசாரித்து இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த நடவடிக்கையால் குட்கா, பான் மசாலா நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக அந்த நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பாக்கெட்டுகளுக்கு மாறுங்கள் அல்லது நிறுவனத்தை மூடி விடலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

சிகரெட் காகிதத்திலும், பீடி இலையிலும் விற்கப்படுவதால் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருந்து தப்பி விட்டன.

குட்கா, பான் மசாலாவால் ஏற்படும் உடல்நலத் தீங்குகள் குறித்து 8 வாரங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளாஸ்டிக் மேலாண்மை, அகற்றுதல் விதிகள் 2009 தொடர்பாக இறுதி முடிவு எடுத்து அதை 8 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

குட்கா, பான் மசாலா பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
...தினமணி 08.12.2010

விகடன்
08-12-2010, 09:29 AM
''மிருகத்தை மனுஷன் கொன்றாலும் கைதா?'' :confused:

மிருகத்தை மனுஷன் கொன்றால்த்தான் கைது.:sprachlos020: மனுஷனை மனுஷன் கொன்றால் பாராட்டுத்தான். உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது இந்தியாவின் கீழே ஒரு தேசம்:icon_b:

nambi
08-12-2010, 12:03 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காவல் நிலைய இடத்தை பட்டா போட்டு விற்பனை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் வசிப்பவர் ராமசாமி. இவரது மகன் மூர்த்தி. இவர்கள் இருவரும் எரியோட்டில் சுமார் 216 ஏக்கர் நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.

இதில், காவல் நிலையம், வீடுகள் அடங்கிய நிலத்தை தேனியை சேர்ந்த சரவணன் வாங்கியுள்ளார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எரியோட்டு ராமசாமி, அவரது மகன் மூர்த்தியை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும், மோசடியில் தொடர்புடைய மூன்று நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
...தட்ஸ்தமிழ் 08.12.2010

nambi
08-12-2010, 12:14 PM
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 முதல் 2.00 வரை உயர்த்தப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி கூறுகிறது.

“நாடாளுமன்றக் கூட்டத்தொடர் டிசம்பர் 13ஆம் தேதி முடிகிறது. அதன் பிறகு பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்படும். அப்போது டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.00 உயர்த்தப்படும் சாத்தியம் உள்ளது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை பீ்ப்பாய்க்கு 90 டாலர் வரை உயர்ந்துள்ளதால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசுவார் என்றும், அதன் பிறகு அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடி விலை ஏற்றத்தை இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது போல், டீசல் விலை மீதான அரசுக் கட்டுப்பாட்டை நீக்குவது குறித்தும் அரசு முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது.
..வெப்துனியா 08.12.2010

nambi
08-12-2010, 12:16 PM
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் இணையதளம். இதனையடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலை மறைவானார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 2 பெண்கள் அளித்த புகாரின்பேரில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிராக ஸ்வீடன் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனைத்தொடர்ந்து லண்டனில் போலீசார் அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யும் படி உயர்நீதிமன்றத்தில் அசாஞ்சே தனது வக்கீல் பார்க் ஸ்டீபன் மூலம் மனு செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
...தினகரன் 08.12.2010

nambi
08-12-2010, 12:32 PM
சட்ட மேலவைக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு சட்ட மேலவையின் பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் முதலியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் பத்து நாட்களுக்கு, அதாவது வரும் 17ஆம் வரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

பெயர் சேர்த்தல், நீக்கல் முதலியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ஆம் தேதி முடிவதாக இருந்தது. தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக, இந்த கால அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

டிசம்பர் 17ஆம் தேதி வரை, நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முறையே படிவம் 18 அல்லது படிவம் 19இல் விண்ணப்பிக்கலாம் என்று பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
...வெப்துனியா 08.12.2010

nambi
08-12-2010, 12:34 PM
கொழும்பு, டிச.8- இலங்கையைச் சேர்ந்த 50 பேர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலிகள் உள்ளனரா என்பது குறித்து தாய்லாந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...தினமணி 08.12.2010

nambi
08-12-2010, 12:37 PM
சென்னை, டிச. 7: மழை நிவாரணத்துக்கு 500 கோடி நிதியை ஒதுக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த குடிசைகள் அல்லாத 3.2 லட்சம் பிற வீடுகளுக்கு தலா 1,500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் தமிழக அரசின் உயர்நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எட்டு பேர் கடந்த இரண்டு நாட்களாக தனித்தனியாக ஆய்வு நடத்தினர். தங்களது ஆய்வு அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியிடம் செவ்வாய்க்கிழமை அளித்தனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்காக, மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் குடிசை அல்லாத வீடுகள், பயிர்ச் சேதம் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. மேலும், சாலைகள், குளங்கள், ஏரிகளை தாற்காலிகமாக சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இதற்கு உத்தேசமாகத் தேவைப்படும் 500 கோடி நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயிரிழப்புக்கும், சாலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க 1,607 கோடி தேவைப்படுகிறது. இந்தத் தொகையை மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கோரிப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

203 பேர் பலி: மழை, வெள்ளத்தால் இதுவரை 203 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 2 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று, மழை, வெள்ளத்தால் இதுவரை 5 ஆயிரத்து 68 கால்நடைகள் இறந்துள்ளன. கறவை மாடு, உழவு மாடு போன்றவை இறந்திருந்தால் அவைகளுக்கு

10 ஆயிரம் வீதமும், கன்றுக்குட்டிகளுக்கு 5 ஆயிரம் வீதமும், ஆடுகளுக்கு ஆயிரம் ரூபாய் வீதமும், கோழிகளுக்கு முப்பது ரூபாய் வீதமும் நிவாரணமாக ஒரு வார காலத்துக்குள் வழங்கப்படும்.

மேலும், மூன்று லட்சத்து 20 ஆயிரம் குடிசைகள் அல்லாத பிற வீடுகளும் வெள்ள நீர் பெருகிய காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிவாரணமாக வீட்டுக்கு தலா 1,500 வீதம் உடனடியாக வழங்கப்படும்.

மீனவர்களின் படகு, கட்டுமரம், வலை ஆகியன முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தால் புதிதாக வாங்குவதற்கு 7,500 வீதமும், ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் அவைகளை பழுது பார்ப்பதற்கு 2,500 வீதமும் நிவாரண உதவியாக வழங்கப்படும்.

நீரில் மூழ்கிய பயிர்கள்: மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆணையாளர்களின் அறிக்கையின்படி, சுமார் 15 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்தவுடன் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் முழுமையாகக் கணக்கிடப்படும்.

50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8 ஆயிரம் வீதமும், நெல் தவிர மற்ற பயிர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலும் நிவாரணம் அளிக்கப்படும். மேலும், மறுசாகுபடிக்குத் தேவையான விதை, உரம் போன்ற இடுபொருட்களைப் போதிய அளவு இருப்பு வைத்து வழங்கவும், பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வேளாண்மைத் துறை மற்றும் கால்நடைத் துறை மேற்கொள்ளும்.

நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய ஒன்பது மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வார்கள்.

வடிகால் திட்டங்கள்: கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்துக்கு வடிகால் வசதி முறையாக இல்லாததுதான் காரணம் என பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடலூரில் வெள்ளாறு, பரவனாறு, உப்பாறு ஆகிய ஆற்றுப் படுகைகளில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான திட்டமும், காவிரி டெல்டா பகுதிகளில் கொள்ளிடம், அரிச்சந்திரா நதி, வெண்ணாறு, பாமிணியாறு, கோரையாறு, வளவனாறு, வெட்டாறு போன்ற டெல்டா பகுதிகளில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நீண்ட கால வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் திட்டங்களைத் தீட்டி வருங்காலத்தில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...தினமணி 08.12.2010