PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12

nambi
19-08-2010, 04:11 PM
சென்னை : "சென்னையில் புதிய விமான நிலையத்தை கைவிட்டால், இழப்பு தமிழகத்திற்கு தான்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் தொழில் பொரு ளாதார முன்னேற்றங்கள் காரணமாக, தற்போதைய சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்துகளில் நெரிசல் ஏற்படுவதை அனைவரும் நன்கறிவர். நாடு முழுவதும் விமானப் போக்குவரத்துகளில் ஏற்படும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முக்கிய தலைநகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை விமான நிலையங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. கர்நாடகா, ஆந்திராவில் ஏற்கனவே கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைத்து, தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டனர். சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

திருப்பெரும்புதூரில், "கிரீன்பீல்டு' விமான நிலையம் புதிதாக அமைப்பது தொடர்பாக, 2007 மே மாதம் தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தி.மு.க., சார்பில் அன்பழகன், காங்கிரஸ் சார்பில் சுதர்சனம், யசோதா, அ.தி.மு.க., சார்பில் ஜெயகுமார், பா.ம.க., சார்பில் மணி, மலையப்பசாமி, மார்க்சிஸ்ட் சார்பில் கோவிந்தசாமி, நந்தகோபால், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியம், ம.தி.மு.க., சார்பில் வீர.இளவரசன், தே.மு.தி.க., சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடக்கும் போதே புதிய விமான நிலையம் (கிரீன்பீல்டு) அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 4,821 ஏக்கர் பகுதியில் மேற்கொள்வதென்றும், புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளையும் இந்திய வானூர்தி ஆணையமே ஏற்று நடத்த வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.

அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்ற மாநகரங்களில் விமான நிலைய விரிவாக்கம் நடந்து, தமிழகத்தில் மட்டும் செய்யவில்லை என்றால், அப்போதும் இதே எதிர்க்கட்சிகள் ஆட்சியாளர்கள் மீது குறை கூறி போராட்டம் நடத்த முற்படுவார்கள். தற்போது நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எந்த இடமும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது மண் பரிசோதனை அளவில் தான் நடக்கிறது. மண் பரிசோதனைக்காக அதிக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் தேவையான இடத்தை தான் தேர்ந்தெடுப்பர். அதற்குள்ளாகவே ஆர்ப்பாட்டம் என்று இவர்கள் ஆரம்பித்துவிட்டால், மத்திய அரசு இந்த திட்டத்தையே கைவிட முன்வந்தால் அதனால் இழப்பு நமது மாநிலத்துக்குத் தான்; மத்திய அரசுக்கு ஒன்றும் பாதகம் ஏற்பட்டு விடாது.

வேறு இடத்துக்கு மாற்றுமாறு ராமதாஸ் கூறுகிறார். பல இடங்களை பார்வையிட்டு, அங்கெல்லாம் விமான நிலையத்தை அமைத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவர் என்பதை எல்லாம் கணக்கிட்டு தான், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடியிருக்கும் மக்களையோ, விளைநிலங்களையோ வேண்டுமென்றே பறிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தவிர்க்க முடியாத நிலையில் ஒரு சிலரது இடங்களை எடுக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதில் அரசு அக்கறையோடு உள்ளது.

திருப்பெரும்புதூர், "கிரீன்பீல்டு' விமான நிலையத்துக்கான இடத் தை தேர்வு செய்ய, 4,200 ஏக்கர் பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 64 இடங்களில் மண் பரிசோதனைகள் நடந்துள்ளன. திருப்பெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் தாலுகாவில் இப்பணிகள் முற்றிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலனை நடக்கின்றன. புதிய விமான நிலையமே தேவையில்லை, விரிவாக்கம் தேவையில்லை என்று தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

..........தினமலர் 19.08.2010

nambi
20-08-2010, 02:53 PM
சென்னை : ""சிலைகளை திருடுவது பொருளாதார குற்றம் மட்டுமல்ல; கலாசாரத்தின் மீதான தாக்குதல். சிலை திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., டோக்ரா தெரிவித்தார்.

தமிழகத்தில், கோவில் சிலைகளை திருடுபவர்களை தடுக்கும் விதமாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காதர்பாட்சா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் சந்தேகத்திற்கிடமான நிலையில் சிலர் நிற்பதாக தகவல் கிடைத்தது. அவர்களை தனிப்படையினர் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் ஒரு அடி உயரமுள்ள பிரதோஷ அம்மன் உலோக சிலை இருந்தது. அவர்கள் திருச்சி, லால்குடியைச் சேர்ந்த ஜஸ்டின் (37) மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஆல்ரின் பிரபு (23) என்பது தெரிந்தது. நடராஜர் சிலை உள்ளிட்ட ஏழு சாமி சிலைகள், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகில் தில்லை தலத்தில் உள்ள கிரிதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடியுள்ளனர். அவர்களிடம் இருந்து நான்கு சிலைகள் மீட்கப்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
....தினமலர் 20.08.2010

nambi
20-08-2010, 03:09 PM
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 3 மடங்காக அதிகரிக்க இந்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த உயர்வு போதாது என்று பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, மாதம் 16 ஆயிரம் ரூபாயாக உள்ள சம்பளம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர, தினப்படி, தொகுதி சுற்றுப்பயணப்படி, அலுவலக ஊழியர் ஊதியம், இலவச விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், அரசுத்துறைச் செயலர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் புகார் கூறுகிறார்கள். அரசுத்துறைச் செயலர்களின் ஊதியம் 80 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அதைவிட ஒரு ரூபாயாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

வெள்ளி காலை மக்களவை கூடியதும், ஆர்ஜேடி, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், அமைச்சரவையின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

நாடாளுமன்ற நிலைக்குழு 80,001 ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ள நிலையில், அரசு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பது நியாயமில்லை என்று உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இது பெரிய அவமானம், இதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும் என ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். பின்னர், எங்கள் ஊதியத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்டவாறு, அவையின் மையப்பகுதிக்கு வந்தார்கள். இருக்கைக்குத் திரும்புமாறு மக்களவைத் தலைவர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை.

கேள்வி நேரத்தை நடத்த விடாமல் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும், கூச்சல் நீடித்ததால் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே, சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வுத் திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்தபோது, சில அமைச்சர்கள் அத்தகைய உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து, தற்போது இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

....பிபிசி தமிழோசை 20.08.2010

nambi
20-08-2010, 03:12 PM
மதுரை, ஆக. 19: 2006, 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்தல் சலுகையை வழங்கியும், 2009-ம் ஆண்டில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு பதிவை புதுப்பித்துக்கொள்ள ஒரு சிறப்புச் சலுகையையும் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள், 4-10-2010-க்குள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். 2006-ம் ஆண்டுக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஏற்கெனவே மேற்கூறிய ஆண்டுகளில் சலுகையின் அடிப்படையில் புதுப்பித்த பதிவுதாரர்களும், மீண்டும் ஒருமுறை இச்சிறப்புச் சலுகையின் அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

4-10-2010-க்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் அதன் பிறகு பழைய பதிவு மூப்பின்றி மறுபதிவு செய்திருந்தாலும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிச்சம்மா ஆறுமுகம் ஓர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
....தினமணி 20.08.2010

nambi
20-08-2010, 03:15 PM
புது தில்லி, ஆக. 19: விமானக் கடத்தல் குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

விமானக் கடத்தல் தடுப்பு (திருத்த) மசோதா-2010-ஐ மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

விமானக் கடத்தலைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக இந்த திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. 1999-ம் ஆண்டில் காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது, 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை விமானங்களை மோதி தகர்த்தது போன்ற சம்பவங்கள் உலகை உலுக்கியவை. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுப்பதற்கு வசதியாக இந்த மசோதாவைத் தயார் செய்துள்ளது.
...தினமணி 20.08.2010

nambi
20-08-2010, 03:25 PM
கோவை, ஆக. 19: கோவை சட்டக் கல்லூரிக்குள் மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

÷சென்னை சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் போலீஸôரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

÷சட்டக் கல்லூரி மாணவனை தாக்கிய போலீஸôரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை சட்டக் கல்லூரிக்குள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்டம் துவங்கியதுமே கல்லூரி நுழைவாயில் மூடப்பட்டது.

÷இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், "வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸôர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீஸôரால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு | 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மாணவரை தாக்கிய போலீஸôரை பணிநீக்கம் செய்வதோடு அவர்களை கைது செய்ய வேண்டும்' என்றனர்.
....தினமணி 20.08.2010

nambi
20-08-2010, 03:27 PM
புதுடில்லி : சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நகர்ப்புறங்களில் 4ல் ஒருவரது வீட்டில் வீட்டு உபயோக பொருளாக கணினி மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு கணிப்பொறியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது . கடந்த 3ஆண்டுகளில் 19 %ல் இருந்து 38% ஆக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. நகரங்களில் 28 மில்லியன் பேர் கணினி வைத்திருக்கின்றனர். 76 நகரங்களில் மட்டும் 55% கணினிகள் விற்பனையாகியுள்ளன. எஞ்சியுள்ள 45 % கணினிகள் மற்ற 4500 நகரங்களில் விற்பனையாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கணினி விற்பனை அதிகரித்துள்ளது.

.....தினமலர் 20.08.2010

nambi
20-08-2010, 03:41 PM
கோவை, ஆக.19: கோவை சிங்காநல்லூரில் காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும், மகளும் கருகி உயிரிழந்தனர்.

÷சிங்காநல்லூர் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் தாமஸ் (49). தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜான்சி (45). தனியார் பள்ளி

ஆசிரியை. இவர்களது மகள் அல்போன்ஸô (22). ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் பயின்று வந்தார்.

÷இவர்களது வீட்டில் உள்ள தனி அறையில் அல்போன்ஸô புதன்கிழமை இரவு உறங்கியுள்ளார். வீட்டின் ஹாலில் இவரது தந்தையும், தாயும் உறங்கினர். நள்ளிரவு நேரத்தில் அல்போன்ஸôவின் அறையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் பதறிப்போன தாமஸýம், ஜான்சியும் கதவை திறந்து, தங்களது மகளை காப்பாற்ற முயன்றனர். தீயில் சிக்கி அல்போன்ஸô உயிரிழந்தார். அவரை காப்பாற்றச் சென்ற தந்தை, தாய்க்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வந்து வீட்டில் பரவி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர்.

இதுகுறித்து உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே அப் பகுதி மக்கள், தீக்காயம் அடைந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மதியம் தாமஸ் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜான்சி சிகிச்சை பெற்று வருகிறார்.

÷இச் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸôர் கூறியது: அல்போன்ஸô தங்கிய அறையில் இருந்த மின்சார ஸ்விட்ச்சுகளில் மின்கசிவு இருந்துள்ளது. அவர் திரவ கொசு விரட்டி கருவியை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட மின்கசிவால் படுக்கையில் தீப்பிடித்துள்ளது. அந்தத் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. இதில், அந்த அறையில் இருந்த சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு, மேலும் தீ வேகமாகப் பரவியது. இந்த விபத்தில் சிக்கித்தான் தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஜான்சியிடம் விசாரணை நடத்தியதில் வீட்டில் உள்ள ஸ்வீட்ச்சுகளில் மின்கசிவு இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார் என்றனர்.

÷அல்போன்ஸô தற்கொலைக்கு முயன்றபோது தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். யாரேனும் வேண்டுமென தீவிபத்தை ஏற்படுத்தியுள்ளனரா எனவும் சிங்காநல்லூர் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

மற்றொரு தீ விபத்து: சாயிபாபாகாலனி என்எஸ்ஆர் சாலை 6-வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு ராஜபாளையத்தை சேர்ந்த இந்திராணி (52) குடியிருந்து வருகிறார். கணவரை பிரிந்த இவர், தனது மகள் சூர்யாவுடன் (26) வசிக்கிறார். அதே பகுதியில் இவர் இன்டர்நெட் மையத்தை நடத்துகிறார்.

÷இவரது வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வியாழக்கிழமை மதியம் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் சிக்கி இந்திராணியும், சூர்யாவும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அப் பகுதி மக்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

....தினமணி 20.08.2010

nambi
21-08-2010, 02:07 PM
சேலம், ஆக. 20: மாநில அரசுகளின் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி

கூறினார்.

சேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.39 கோடி கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.273 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.36 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து கருணாநிதி பேசியது:

சேலத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது திறப்பு விழா காணும் இந்தப் புதிய அலுவலகம் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 51 துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு மிகப் பெரிய அலுவலகமாகத் திகழ்கிறது. இதேபோல் ரூ.139 கோடி மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன மருத்துவமனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானதாகத் திகழ உள்ளது.

நுழைவுத் தேர்வு:

மருத்துவமனைகள் மத்திய அரசின் பொறுப்பில் வரும். அப்படி வந்தால் இனி நுழைவுத் தேர்வு உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுக ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு இருந்தால் கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது, உயர்ந்த பதவிகளுக்கு வர முடியாது என்ற காரணத்தால், நுழைவுத் தேர்வு என்னும் கதவு இல்லாமலேயே மாணவர்கள் முன்னேறி வர வசதியாக சட்டம் இயற்றினோம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதில் எந்தக் கட்சிக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. காங்கிரஸ், பாமக கட்சிகள் இதே கருத்து உடையவை. அதிமுக கூட நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மத்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறது, ஆனால் இவர் கடிதம் எழுதுகிறார் என்று அறிக்கை வெளியிட்டார்.

கடிதத்தின் பலனே இது...

நான் கோரிக்கைகளுக்காகவும், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன். நுழைவுத் தேர்வு குறித்த கடிதத்தில் சாமானிய குடிமகன்களின் வாழ்வை நுழைவுத் தேர்வு அழித்துவிடும் என்று தமிழக மக்களின் மனதை பிரதிபலித்து கடிதம் எழுதினேன். அதன் பலனாகத்தான் இப்போது நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு என்ற தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது.

உரிமைகளை பறிக்கக் கூடாது:

அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு எடுக்கும் முறையில் இருந்தால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மத்திய அரசு எடுக்கும் நுழைவுத் தேர்வு முடிவானாலும், வரி விதிப்பு போன்ற எந்த செயலாக இருந்தாலும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிந்தே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இங்கிருந்து எழும் குரல் பொதுவான விஷயங்களுக்கு ஒருமித்த குரலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றார் முதல்வர்.

.....தினமணி 21.08.2010

nambi
21-08-2010, 02:20 PM
http://www.dinamani.com/Images/article/2010/8/20/20blup.jpg

சென்னை, ஆக.20: அரசு அலுவலகங்களில் சாதாரண குமிழ் மின்சார விளக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது; இதற்கு மாற்றாக மின் சேமிப்புக்கு உகந்த சி.எஃப்.எல். (காம்பக்ட் ஃபுளுரோசென்ட் லேம்ப்ஸ்) குழல் விளக்குகள் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவின்படி இனி அலுவலகங்களுக்கு பல்புகளை வாங்கும்போது, சி.எஃப்.எல். விளக்குகள் தான் வாங்க வேண்டும்; குமிழ் விளக்குகள் வாங்கக்கூடாது என்று எரிசக்தி

துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சி.எஃப்.எல். விளக்குகள் பயன்படுத்தும்போது, 1,840 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் இப்போதைய மின் தேவை 11,000 மெகா வாட் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 10,214 மெகா வாட்டாக உள்ளது. இதிலும் முழு அளவுக்கு உற்பத்தி இருப்பதில்லை. அதனால் தமிழகத்தின் இப்போதைய மின் பற்றாக்குறை 3,000 மெகா வாட் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க குறைந்த மின் நுகர்வு கொண்ட சி.எஃப்.எல். விளக்குகளை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சாதாரண குண்டு குமிழ் விளக்குகள் பயன்படுத்துவதால் 40 வாட்ஸ் அல்லது 60 வாட்ஸ் மின்சாரம் செலவாகிறது. இதற்குப் பதிலாக சிறு குழல் விளக்குகள் பயன்படுத்துவதால் 14 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே செலவாகிறது.

இதனால் சிறு குழல் விளக்குகள் (சி.எஃப்.எல்.) பயன்படுத்துவதால் மின் நுகர்வு மிகவும் குறையும். மின்சார சேமிப்பும் அதிகரிக்கும்.

4 கோடி குண்டு பல்புகளுக்கு 2,400 மெகா வாட் மின்சாரம்:

60 வாட்ஸ் மின் நுகர்வு கொண்ட 4 கோடி குண்டு பல்புகளை ஒரு மணி நேரம் பயன்படுத்துவதால் 2,400 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. அதேசமயத்தில், மின்சேமிப்பு திறன் கொண்ட 14 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்புகளை ஒரு மணி நேரம் பயன்படுத்துவதால் 560 மெகா வாட் மின்சாரம் மட்டுமே செலவாகிறது.

1,840 மெகா வாட் மின் சேமிப்பு:

4 கோடி குண்டு விளக்குகளுக்கு செலவாகும் 2,400 மெகா வாட் திறன் மின்சாரத்துக்குப் பதிலாக, சி.எஃப்.எல். குழல் விளக்குகள் பயன்படுத்தும் போது 560 மெகா வாட் மின்சாரம் மட்டுமே செலவாகிறது. இதன்மூலம் 1,840 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

எனவே அதிக அளவிலான குண்டு குமிழ் விளக்குகளை சி.எஃப்.எல். பல்புகளாக மாற்றினால் இன்னும் அதிக மின்சாரம் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

......தினமணி 21.08.2010

nambi
21-08-2010, 02:24 PM
சென்னை, ஆக. 20: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிடப்படுகிறது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.ஆர். வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 631 கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட். மற்றும் எம்.எட். தேர்வு முடிவுகள் ​www.tnteu.in​​ என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு முடிவின் தொகுப்பு பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் கல்லூரிகளுக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
....தினமணி 21.08.2010

nambi
21-08-2010, 02:28 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி தனியார் தாமிர ஆலையிலிருந்து ஏற்றுமதிக்காக உரிய அனுமதியில்லாமல் வேனில் கொண்டு செல்லப்பட்ட, 18 கோடி ரூபாய் மதிப்பு பிளாட்டினம், பல்லாடியம் உலோகத்தை, மத்திய கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தனியார் தாமிர ஆலையில், தாமிர உற்பத்தியின்போது அதிலிருந்து "டோரே ஆனோடு' என்ற பொருள் கிடைக்கிறது. இதில், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லாடியம் ஆகிய உலோகங்களின் கலவைகள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆலையிலிருந்து, சீலிடப்பட்ட 36 பெட்டிகளில் "டோரே ஆனோடு' ஏற்றிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, சென்னை சென்ற வேனை, மத்திய சுங்கம் மற்றும் கலால்வரித்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள், நேற்று தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் மடக்கி சோதனை செய்தனர். தங்கம், வெள்ளி உலோக கலவைகள் வேனில் கொண்டு செல்லப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில் அதில் தங்கம், வெள்ளியை தவிர்த்து விலைமதிப்பில்லா பிளாட்டினம் மற்றும் பல்லாடியம் உலோக கலவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, உரிய அனுமதியில்லாமல் அந்த இரண்டு உலோக கலவைகள் இருப்பதை மறைத்து கொண்டு சென்றதற்காக, 18 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 36 பெட்டி "டோரே ஆனோடை' அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுதொடர்பாக வேன் டிரைவர் மற்றும் அதிலிருந்த மூவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டில், 500 கிலோ பிளாட்டினம் மற்றும் பல்லாடியத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக, கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 750 கோடி ரூபாய் வரிஏய்ப்பு தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை துணைத்தலைவர் வரதராஜனை, கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

....தினமலர் 21.08.2010

nambi
21-08-2010, 02:35 PM
திருப்பதி திருமலைக்கு செல்லும் நடைபாதையில் கடந்த 1 1/2 மாதமாக சிறுத்தைப்புலி நடமாட்டம் பக்தர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. 2 சிறுமிகளை சிறுத்தை கடித்ததால் மலைப்பாதை மாலை 4 மணியில் இருந்து அதிகாலை 6 மணிவரை மூடப்பட்டது.
நாளை (22-ந்தேதி) முதல் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்பட்டது.
மான் பூங்காவுக்கு வந்த சிறுத்தைப்புலி அங்கிருந்த மான் ஒன்றை அடித்துக் கொன்றது. இதை கண்காணிப்பு பணியில் இருந்த வன ஊழியர்கள் பார்த்துவிட்டனர். சுமார் 1 மணி நேரம்வரை சிறுத்தைப்புலி அங்கு இருந்தது. வனத்துறையினர் கூண்டு வைத்து அதை உயிருடன் பிடிக்க முயன்றனர். ஆனால் சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதனால் பக்தர்களிடையே மீண்டும் பீதி ஏற்பட்டு உள்ளது.
...நியுஸ் இந்தியா 21.08.2010

nambi
21-08-2010, 02:39 PM
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்தவர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அ*திபர் ஒபாமா முஸ்லீம் என அந்நாட்டு மக்கள் 18 சதவீதம் பேர் நம்பியிருந்ததாக அங்கு நடத்தப்பட்ட ஒரு ஓட்டெடுப்பில் தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளை மாளிகை செய்திப் பிரிவு செயலர் பில் பர்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : அதிபர் ஒபாமா கிறிஸ்தவர். அவர் தினமும் பிரார்த்தனை செய்கிறார். கிறிஸ்தவ பாஸ்டர்களிடம் இருந்து ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் எந்த விதமான மதக் கொள்கையை பின்பற்றுகிறார் என்பது பொதுமக்கள் விவாதத்துக்கும், கருத்து கணிப்புக்கும் எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை என்றும் கண்டிப்புடன் *தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ரிசேர்ச் சென்டர் போல் என்ற நிறுவனம் இந்த ஓட்டெடுப்பை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.....தினமலர் 21.08.2010

nambi
22-08-2010, 04:01 PM
சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக மேகங்கள் உருவாகி மழை பெய்து வருவதாகவும், தொடர்ந்து மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
....வெப்துனியா 22.08.2010

nambi
22-08-2010, 04:04 PM
சென்னை: "மெட்ராஸ் ஹெரிடேஜ் லவ்வர்ஸ்' அமைப்பின் சார்பில், சென்னை நகரம் உருவாக்கப்பட்டதன் 371வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவில் உள்ள பகவான்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமத்தில் நடந்த விழாவில், சென்னை நகரின் பெருமைகள் அடங்கிய சிறப்பு அஞ்சல் உறையை, சென்னை கோட்ட அஞ்சல் துறை தலைவர் (வர்த்தக வளர்ச்சி பிரிவு) மூர்த்தி வெளியிட, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.

இந்த அஞ்சல் உறையின் முன்புறம், பச்சையப்பரின் அஞ்சல் தலையும், பாய்மர படகும், பின்புறம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய சென்னை கடற்கரை மற்றும் அதையொட்டி அமைந்திருந்த சாலை, "பேங்க் ஆப் மெட்ராஸ்' கட்டடம், சென்னை துறைமுகம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதன் விலை 25 ரூபாய். நிகழ்ச்சியில், சென்னை கோட்ட அஞ்சல் துறை தலைவர் (வர்த்தக வளர்ச்சி பிரிவு) மூர்த்தி பேசும்போது, "நம் வாழ்வின் பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது சுவையான அனுபவம் மட்டுமல்ல; நல்ல பழக்கமும் கூட. சென்னை நகர மக்களின் பண்டைய வாழ்க்கை முறை, நகரின் பராம்பரியம், பண்பாட்டு பெருமைகளை இளம்தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது' என்றார்.
எஸ்.பி.ஐ., வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திரசேகரன் பேசும்போது," மெரீனா மற்றும் அதையொட்டி அமைந்துள்ள நீளமான சாலையும், ரிப்பன் பில்டிங், பழைய எஸ்.பி.ஐ., வங்கி கட்டடம் என வெள்ளை, சிவப்பு நிறங்களில் அமைந்துள்ள கட்டடங்களும் சென்னைக்கே உரிய தனிச்சிறப்புகள். இச்சிறப்புகளை உணர்த்தும் வகையில், சென்னை வார விழாவில் மேற்கொள்ளப்படும் நடைபயணங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்' என்றார்.

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராஜன் பேசும்போது, "பணி நிமித்தமாக பெங்களூரு, மும்பை, லண்டன் போன்ற பல இடங்களுக்கு சென்றுள்ளேன். சென்னைக்கு எந்த நகரமும் இணையாகாது என்பது என் அனுபவ உண்மை. நகரமயமாதலில் சென்னை இன்று பெரும் மாற்றத்தை கண்டு வந்தாலும், அதன் பராம்பரிய பெருமைகளை போற்றுவது நம் அனைவரின் கடமை' என்றார்.

விழாவில், 1940, 50ம் ஆண்டுகளில், சென்னை நகரில் நடுத்தர வர்த்தகத்தின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து, இன்ஜினியர் ராம் மோகன் எழுதிய "பலாதோப்பு நாள்' எனும் நூல் வெளியிடப்பட்டது. "மெட்ராஸ் ஹெரிடேஜ் லவ்வர்ஸ்' அமைப்பின் நிறுவனர் ஹேம்சந்திர ராவ், உறுப்பினர் சேஷாத்திரி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
....தினமலர் 22.08.2010

nambi
22-08-2010, 04:08 PM
பெட்ரோல் விலையை மீண்டும் லிட்டருக்கு ரூ. 1 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது 81 டாலராக உள்ள போதிலும், சமீப காலத்தில் 90 டாலர் வரை அதிகரித்து . இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம்.

இந்நிலையில் இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

முன்பு பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தி வந்தது. இப்போது எண்ணெய் நிறுவனங்களே விலையை தன்னிச்சையாக உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை உயர்த்த உள்ளன. பாராளுமன்ற கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரம் வரை நடக்கிறது. நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்தினால், எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

எனவே நாடாளுமன்றம் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேட*ல் தொட*ர்பான தகவ*ல்க*ள்
...வெப்துனியா 22.08.2010

nambi
22-08-2010, 04:12 PM
பெங்களூரு: பெங்களூரு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்தில் 22 பேர் இயற்கையாக தான் இறந்துள்ளனர் என, மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா தெரிவித்துள்ளார். பெங்களூரில் காமாட்சி பாளையா பகுதியில், பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் உள்ளது. மாநில சமுக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில் 2,500 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களில் இந்த மையத்தில் 22 பேர் இறந்தனர். "பிச்சைக்காரர்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி வற்புறுத்தியது. இதையடுத்து மாநில அரசு, பிச்சைக்காரர்கள் இறந்ததற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், மாநில உள்துறை அமைச்சர் ஆச்சாரியா தலைமையிலான நான்கு அமைச்சர்களை கொண்ட குழு, பிச்சைக்காரர்கள் நலவாழ்வு மையத்தை நேற்று பார்வையிட்டு, அங்குள்ளவர்களிடம் பிரச்னைகளை கேட்டறிந்தது. இங்கு தங்கியுள்ளவர்களுக்கு தரமான உணவு, சுத்தமான தண்ணீர் போன்றவற்றை வழங்கும்படி டாக்டரான அமைச்சர் ஆச்சாரியா உத்தரவிட்டார். இது குறித்து ஆச்சாரியா குறிப்பிடுகையில், "இங்கு தங்கியிருக்கும் பலர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள். அவர்கள் அடுத்தடுத்து இறந்தது தான் பிரச்னையாகி விட்டது. வயதான நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருந்துள்ளது. எனவே, இறந்தவர்கள் அனைவரும் இயற்கையாக தான் மரணம் அடந்துள்ளனர்' என்றார்.
....தினமலர் 22.08.2010

nambi
23-08-2010, 05:01 PM
சென்னை: தமிழகத்தில் புதிய தலைமை தகவல் ஆணையர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். முதலமைச்சர் முன்னிலையில் நடைபெறும் இந்த தேர்வில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதாவிற்கு பதிலாக ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். முந்தைய தலைமை தகவல் ஆணையர் ராமகிருஷ்ணன் ஓய்வு பெறுவதால் புதிய தலைமை தகவல் ஆணையர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். தேர்வில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும்.
....தினகரன் 23.08.2010

nambi
23-08-2010, 05:21 PM
கேரள நடிகர் சங்கமான அம்மாவின் புறக்கணிப்பை மீறி மிக கோலாகலமாக நடந்தது கமல்ஹாசனுக்கான பாராட்டு விழா. கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமை தாங்கினார்.

விழாவில் பேசிய அச்சுதானந்தன், இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் கமல்ஹாசன் என பாராட்டினார். கமலுக்கு பல்வேறு திரைப்பட சங்கங்கள் நினைவுப் ப*ரிசினை வழங்கின.

கமல்ஹாசன் பேசுகையில், தனது இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மலையாள சினிமா என்றார். மேலும் எல்லா குறைகளுடனும் என்னை நடிகனாக்கியது மலையாள சினிமாவும், மலையாளிகளும்தான் என்றார் அவர்.

கமல்ஹாசன் சார்பில் இன்று திருவனந்தபுரத்தில் கண்தான பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்.

கமலுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை கைரளி தொலைக்காட்சி இன்று ஒளிபரப்புகிறது.

....வெப்துனியா 23.08.2010

nambi
24-08-2010, 02:36 PM
பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்ற சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் தொடர்பாக அருணாச்சல் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கெகாங் அபாங் இன்று கைது செய்யப்பட்டார்.

கெகாங் அபாங் அருணாச்சல் பிரதேச மாநில முதலமைச்சராக இருந்தபோது, பொதுவிநியோகத் திட்டத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட பொது நலன் வழக்கை விசாரித்த கவுஹாத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அருணாச்சலப் பிரதேச அரசு அமைத்தது.

இந்த ஊழல் புகாரை விசாரித்த புலனாய்வுக் குழுவினர், மோசடியான பில்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இது தவிர மேலும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலும், இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அபாங்கை இன்று கைது செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரி செளகான் தெரிவித்தார்.
...வெப்துனியா 24.08.2010

nambi
24-08-2010, 02:58 PM
புதுடில்லி : பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறினர். கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் தற்போதைக்கு தண்ணீர் தர முடியாது என்றும், மழை பெய்த பின்னர் தண்ணீர் தருவதாக கர்நாடக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
...தினமலர் 24.08.2010

nambi
24-08-2010, 03:01 PM
சென்னை, ஆக.24: திமுகவுடனான உறவு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசை காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இது திமுக-காங்கிரஸ் இடையிலான உறவை பாதிக்கும் என முதல்வர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், திமுக அரசை விமர்சிக்க மாநில காங்கிரசார் யாருக்கும் அதிகாரம் தரப்படவில்லை என்றும் தில்லியில் நேற்று தெரிவித்தார். அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து இன்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, ஆஸாத்தின் கருத்துக்கள் கூட்டணி தர்மத்தை வலுப்படுத்துகிறது என்றும் அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
....தினமணி 24.08.2010

nambi
24-08-2010, 03:05 PM
''எனக்கோ, என்னுடைய கட்சிக்கோ விடுதலைப்புலிகளுடன் எந்த காலத்திலும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் குமரன் பத்மநாதன் இலங்கையில் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரனிடம் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரும் ஆலோசனை சொன்னதாகவும், இத்தகவலை கே.மகேந்திரன் ம.திமு.க. தலைவரிடம் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை நான் முழுமையாக மறுக்கிறேன். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். எனக்கோ என்னுடைய கட்சிக்கோ விடுதலைப்புலிகளோடோ, மேற்கூறிய நடேசனோடோ எந்த காலத்திலும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை.

இலங்கைத் தமிழர்கள் சொல்லோணா துயரத்திற்கு ஆளான போது இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியான சுமுகத் தீர்வுகாண வேண்டும் என்ற நிலையைத்தான் நாங்கள் தொடர்ந்து வலிறுத்தினோம். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் எங்கள் கட்சி வலியுறுத்தியது. இப்போதும் எங்கள் கட்சி அதையே வலியுறுத்துகிறது.

விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதுமே ஏற்புடையதல்ல. எனவே போர்நிறுத்தம் குறித்து என்னிடம் நடேசன் பேசியதாக குமரன் பத்மநாதன் அளித்துள்ள பேட்டியில் கூறப்படுவது உண்மையானது அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று மகேந்திரன் கூறியுள்ளார்.
.....வெப்துனியா 23.08.2010

nambi
24-08-2010, 03:25 PM
சென்னை : ""என்னை ஊழல் கட்சி என சொல்லும் விஜயகாந்த், படத்தில் நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி பேசியிருப்பது, கேலியாக இருக்கிறது,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் கேள்வி - பதில்:

தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவர்களோடு கூட்டணி கிடையாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?

அதை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. ஒரு ஒப்பீட்டு உதாரணத்தை சொன்னால், பொதுமக்களுக்கு விளக்கம் கிடைக்கும். தி.மு.க., தலைவனாக இருக்கும் நான், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் கிடைக்கும் ஊதியம் முழுவதையும், வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்குகிறேன். சில நேரம், அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலும் சேர்த்து விடுகிறேன்.உதாரணமாக, சுனாமி நிவாரணத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ஸ்டாலின் மூலம் 21 லட்ச ரூபாயை நேரில் வழங்கச் செய்தேன். என் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம், இதுவரை 2,049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எனது பொற்கிழி அறக்கட்டளை மூலம், 17 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கியிருக்கிறேன். ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டையே மருத்துவமனையாக மாற்றிட வழங்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்; மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார்.இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன் என கூறும் நண்பர் விஜயகாந்த், ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி இப்படி பேசியிருப்பது, உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது. பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டாமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையைப் பார்த்தீர்களா?
அவரது மறுப்பு அறிக்கையை பார்த்தேன். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியையும் நாளேடுகளில் படித்தேன். அந்த பேட்டி உண்மையல்ல என மகேந்திரன் எம்.எல்.ஏ., மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்டு விமான நிலையம் உட்பட தமிழகத்தில் வரக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம், அரசியல் உள்நோக்கத்தோடு, ஒரு சில கட்சிகள் எதிர்ப்பதால், நாட்டிற்கும், மக்களுக்கும் தானே இழப்பு?
இந்த பிரச்னை பற்றி, "தினமலர்' நாளிதழில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கணபதி என்பவர், "இது உங்கள் இடம்' பகுதியில் எழுதியுள்ளார். அதில் அவர், சில குறைகளைத் தெரிவித்திருந்த போதும், சில உண்மைகளையும் தெரிவித்துள்ளார். உண்மை பொதுமக்களுக்குத் தெரிகிறது. அது மாத்திரமல்ல, ஏதோ உள்நோக்கத்தோடு தான், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதும் பொதுமக்களுக்கு புரிந்துள்ளது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
....தினமலர் 23.08.2010

nambi
24-08-2010, 03:27 PM
திருப்பதி, ஆக. 23: திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நகைகள் காப்பீடு செய்யப்பட உள்ளன என திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மற்றும் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் பல்வேறு கோயில்களின் நகைகளை காப்பீடு செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நகைகளை கூடிய விரைவில் காப்பீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுமாறு தேவஸ்தான வாரிய நிர்வாகப் பிரிவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

திருப்பதி கோயிலுக்கு மன்னர் கிருஷ்ணதேவ ராயர் அளித்த அதிக மதிப்புள்ள சில நகைகள் மாயமாகிவிட்டன என அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
....தினமணி 24.08.2010

nambi
24-08-2010, 03:42 PM
சூரில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மதன்குமாரின் இருந்து 8 சவரன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பங்களாப்பள்ளியில் அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வரும் மதன்மாறன், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குடியாத்தம், கர்நாடக மாநிலம் கோலாரில் மதன்மாறன் மீது 7 வழக்குகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

.....வெப்துனியா 24.08.2010

nambi
24-08-2010, 03:45 PM
ருவனந்தபுரம் : கேரளாவில் ஓணத்தையொட்டி கடந்த 6 நாளில் மட்டும் ^155 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
கேரளாவில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப கால கணக்குபடி, இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஓணம் பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி, மது விற்பனை கடந்த ஆண்டைவிட மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாளில் மட்டும் ^155.61 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது கடந்த வருடத்தைவிட 18 சதவீதம் அதிகமாகும். நேற்று முன்தினம் மட்டும் ^30 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இன்றும், நாளையும் மது விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திருச்சூர் அடுத்த சாலக்குடி கேரளாவில் அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரை தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாளில் ^30 லட்சத்துக்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரம் அடுத்த பாலராமபுரம், கருணாகப் பள்ளி முறையே ^22 லட்சம், ^21 லட்சத்துடன் 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளன.

விற்பனையில் ரம் முதல் இடத்தை பெற்றுள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவீதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தை பிராந்தி பெற்றுள்ளது.
இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது. தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த விற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.

....தினகரன் 24.08.2010

nambi
24-08-2010, 03:54 PM
கொழும்பு, ஆக.22- 2002-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் - அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை காணவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ஆவணங்கள் அமைதிக்கான செயலகத்திலும் இல்லை, பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திலும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நகல் அரசு தகவல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த ஒப்பந்தம் தொடர்பான முழுத் தகவல்களையும் தாம் வெளிப்படுத்தப் போவதாக அமைச்சரும் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளார் என்றும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.
...தினமணி 22.08.2010

nambi
25-08-2010, 04:56 AM
பெங்களூரு : பெங்களூரு *தொடர் குண்டு வெடிப்பில் தனக்கு தொடர்பு இருப்பதாக மகதானி ஒப்புக்கொண்டதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்தார். ஆச்சார்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானி நாசரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது , கடந்த ஏப்ரல் 17ம் தேதியன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே அடுத்தடுத்து நடந்த 2 குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டதாக *கூறினார். மதானியை கர்நாடக போலீசார் கடந்த வாரம் கேரளாவில் வைத்து கைது செய்தனர். அவரை போலீசார் ஆகஸ்ட் 26 ( நாளை) வரை காவலில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

...தினமலர் 25.08.2010

nambi
25-08-2010, 05:00 AM
வான்கூவர், ஆக.24: அடைக்கலம் கோரி கனடாவில் தஞ்சமடைந்த 443 இலங்கைத் தமிழர்களை சிறையிலேயே வைத்திருக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி எம்.வி. சன் சீ எனும் சரக்குக் கப்பலில் சென்ற இலங்கைத் தமிழர்களை கனடா மற்றும் அமெரிக்க கடற்படை கண்டுபிடித்தது. இவர்கள் அனைவரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 380 பேர் ஆண்கள், 63 பேர் பெண்கள், 49 பேர் குழந்தைகளாவர்.

தங்களுக்கு கனடாவில் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கனடாவின் குடியேற்ற மற்றும் அகதிகள் வாரியம் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

அகதிகளாக வந்தவர்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அகதிகள் குறித்த ஆவணங்களை அளிக்க கால அவகாசம் தேவை என குடியேற்ற துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோர்களுடன் சிறையிலும், கொஞ்சம் பெரிய குழந்தைகள் காப்பகங்களிலும் பராமரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடா நாட்டு சட்டப்படி அகதிகளாக தஞ்சம் கோருவோர் முதலில் சிறையில் அடைக்கப்படுவர். பின்னர் குடியேற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி, தஞ்சம் கோருவோரைப் பற்றிய தகவலைத் திரட்டுவர். இதன் பிறகே அகதிகளாக தஞ்சம் அளிக்கலாமா என்பது தீர்மானிக்கப்படும்.

சன் சீ சரக்குக் கப்பல் 90 நாள் பயணமாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளது. இறுதியில் கனடா கடல் எல்லையில் பயணிக்கும்போது கடற்படையினர் இடைமறித்து இந்த கப்பலை பரிசோதித்ததில், கப்பலில் பயணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவுக்கு கடந்த ஓராண்டில் வந்துசேரும் இரண்டாவது அகதிகள் கப்பல் இதுவாகும். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
....தினமணி 25.08.2010

nambi
25-08-2010, 05:05 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட்டுக்குள் சென்று ஆய்வு நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொடநாடு எஸ்ட்டேட்டுக்குள் தேயிலை ஆலை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது விதிமுறையை மீறி, புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு இந்த எஸ்டேட்டுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் உள்ளே நுழைய முடியாமல் திரும்பி விட்டனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் கட்டப்பட்டுள்ள தேயிலைத் தோட்டத்தை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் , இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
....தட்ஸ்தமிழ் 25.08.2010

nambi
25-08-2010, 05:13 AM
சென்னை: ரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும், தமிழ் ஈழ மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட துரோகப்படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக, ராஜபக்சே அரசின் கைக்கூலியாக, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார். அவர் சொல்வது அனைத்தும் ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

வைகோதான் ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படாமல் தடுத்தவர், அவருக்கு பிரபாகரன் மரணமடைந்தது குறித்துத் தெரியும். ஆனால் வேண்டும் என்றே பொய்யாக பேசி வருகிறார் என்று கூறியிருந்தார் கேபி என்கிற குமரன் பத்மநாதன்.

இதற்கு பதிலளித்துள்ளார் வைகோ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோதான் காரணம் என்று, சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன், என் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப்புலிகள் பலியாக நேர்ந்தது என்று, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார்.

இப்படிக் கூறிய குமரன் பத்மநாதன், 2002-ம் ஆண்டு இறுதியில், சர்வதேசப் பொறுப்பில் இருந்து பிரபாகரனால் நீக்கி வைக்கப்பட்டவர். பகைவர்களுக்குக் கையாளாகி விடக்கூடாதே என்ற நிலையில், 2008-ம் ஆண்டில், சர்வதேச ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

ரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும், தமிழ் ஈழ மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட துரோகப்படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக, ராஜபக்சே அரசின் கைக்கூலியாக, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்.

இலங்கையில் போரை நிறுத்துவதற்கு, தி.மு.க. தரப்பிலே முயற்சித்ததாகவும், இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஒரு திட்டத்தைச் சொன்னதாகவும், இந்தத் திட்டம் குறித்து, வைகோவுக்கும், பழ.நெடுமாறனுக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் காலமாதலால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ்-தி.மு.க.வுக்கு பெயர் வந்துவிடும் என்றும், அதனால், இந்தத் திட்டத்தைப் புலிகள் ஏற்க விடாமல் தடுக்க முயல்வோம் என்றும், புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசனிடம் கூறப்பட்டதாகவும், நடேசன் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் கூறியதால், மகேந்திரன் என்னிடம் கூறி விட்டாராம்.

தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையைப் புலிகள் கைவிட்டால், விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று நடேசனிடம் நான் கூறி விட்டதால், இந்தப் போர் நிறுத்த முயற்சி கைகூடாமல் போனதாகவும், பத்மநாதன் என் மீது பழி சுமத்தி உள்ளார்.

பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். போர்நிறுத்தம் ஏற்பட்டால், என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004-ம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான். ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

....தட்ஸ் தமிழ் 25.08.2010

nambi
25-08-2010, 05:29 AM
பிஜிங்: சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மகாணத்தின் தலைநகர் ஹார்பினில் இருந்து லிண்டுவுக்கு பயணிகள் விமானம் 91 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. லிண்டுவில் தரையிறங்கும் நேரத்தில் ஓடு பாதையையும் தாண்டி ஒடியது. இதனையடுத்து விமானம் தீப்பிடித்தது. இத்தீவிபத்தில் 43 பேர் பலியாயினர். மற்றவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

....தினமலர் 25.08.2010

nambi
25-08-2010, 05:39 AM
புது தில்லி, ஆக.24: ஒரிசாவில் பாக்ûஸட் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா குழுமம் | 8,000 கோடி முதலீட்டில் பாக்ûஸட் சுரங்கம் அமைக்க முடிவு செய்திருந்தது.

காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் விதிகளை மீறும் வகையில் இந்த சுரங்கம் அமையும் என்பதால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். வன பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
÷ஒரிசா மாநிலம் நியம்கிரி மலைப் பகுதியில் இந்த சுரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதல் கட்ட அனுமதி சில ஆண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் கட்ட அனுமதிக்கான பரிசீலனையின்போது, விதிமீறல் தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழல், வனப் பகுதி பாதிக்கப்படும் என்பதைக் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ஒரிசா சுரங்க நிறுவனமும் (ஓஎம்சி) ஸ்டெர்லைட் பாக்ûஸட் நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளவிருந்தன. லான்ஜிகர், காலஹந்தி,ரயகதா உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சுற்றி இத்திட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது. இத்திட்டம் தொடர்பாக வன ஆலோசனைக் குழு (எப்ஏசி) அளித்த பரிந்துரைகளை ஏற்று அனுமதி மறுக்கப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
...தினமணி 25.08.2010

nambi
25-08-2010, 05:51 AM
காத்மாண்டு, ஆக.24: நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் வெளிநாட்டினர் 6 பேர் உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.

காத்மாண்டுவுக்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் மகாவார்நுர் மாவட்டத்தில் ஷிகார்புர் கிராமத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அக்னி ஏர்லைன்ஸ் என்ற தனியாருக்குச் சொந்தமான இந்த விமானத்தில் 11 பயணிகளும் மூன்று பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர். இதில் ஆறு பயணிகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என பயணிகள் பட்டியலில் தெரியவந்துள்ளது என்று காட்மாண்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மலைப்பகுதியில் கனமழை பெய்துவருவதாலும் புகை மூட்டம் அதிகம் இருப்பதாலும், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலை வழி துண்டிக்கப்பட்டு, விபத்து நடந்த பகுதிக்கு நடந்து மட்டுமே செல்ல முடியுமாம்!
...தினமணி 25.08.2010

KONGU
25-08-2010, 12:24 PM
பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சமாளிக்கிறோம் : மாநில டி.ஜி.பி., க்கள் மாநாட்டில் சிதம்பரம் பேச்சு


புதுடில்லி : டில்லியில் மாநில போலீஸ் டி.ஜி.பி., க்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் துவக்க உரையாற்றிய சிதம்பரம் : இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் பயங்கரவாத ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மாவோயிஸ்டுகளை ஒடுக்க போலீஸ் படை பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய* மாவோயிஸ்டுகள் அதன் பிறகு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காஷ்மீரில் கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடந்து வந்த வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. காஷ்மீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர அசாம் மாநிலத்தில் இருக்கும் உல்பா பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளனர். கடந்த 21 மாதங்களில் இந்தியாவில் பெரிய அளவில் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை என்பது இந்தியா பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதற்கு ஒரு சான்று. ஆனால் தற்போது புதிதாக காவி பயங்கரவாதம் பரவி வருகிறது. இது குறித்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.




இன்று முதல் 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் 2ம் நாளான நாளை பிரத*மர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். தமிழகம் சார்பில் டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

nambi
26-08-2010, 04:19 AM
கள்ளக்குறிச்சி, ஆக. 25: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு கார்கள் நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 14 பேர் மீது சின்னசேலம் போலீஸôர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
÷தேமுதிக முன்னாள் மாநில வர்த்தக அணி துணைச் செயலர் ரா.சுப்பராயலு, முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.பி.ஆர்.செழியன். முன்னாள் மாவட்டப் பொருளாளர் தா.மு.சக்திவேல், ரவிசெல்வம் உள்ளிட்ட பலரும் கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளைம், ஏம்பேர், தென்கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு சின்னசேலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதற்காக சென்றனர்.
÷சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே சென்றபோது சின்னசேலம் ஒன்றியச் செயலர் கு.சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுப்புராயலு, செழியன் கார்களை மடக்கி வீச்சரிவாள் மற்றும் கற்களால் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் செழியன் மேல் விச்சரிவாள் மற்றும் கட்டை, கற்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் சுப்பராயலு, செழியன் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரின் கார்களும் சேதமடைந்தன. அதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும்.
÷இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் ஒன்றியச் செயலர் சின்னசாமி (38), அங்கமுத்துவின் மகன் தாமோதரன் (37), கோவிந்தராசுவின் மகன் அறிவழகன் (32), கருப்பனின் மகன் குமார் (30), தர்மலிங்கத்தின் மகன் வெங்கடேசன் (28), பழனிவேலின் மகன் பெரியசாமி (58) உள்ளிட்டோர்களை கைது செய்தனர்.
÷மேலும் சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் ராமசாமியின் மகன் சுப்பராயலு (54), ரங்கநாதனின் மகன் செழியன் (35), முருகனின் மகன் த.மு.சக்திவேல், குருசாமியின் மகன் ரவிசெல்வம் (38) உள்ளிட்டோர்களை சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளர் ஏ.லட்சுமி கைது செய்து வழக்கு தொடர்ந்தார்.
.....தினமணி 26.08.2010

nambi
26-08-2010, 04:22 AM
http://thatstamil.oneindia.in/img/2010/08/25-hitler200.jpg


பெர்லின்: ஜெர்மனியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த அடால்ப் ஹிட்லர் யூத மற்றும் வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்று டி.என்.ஏ. சோதனைகளி்ல் தெரியவந்துள்ளது.

ஜெர்மன் இனத்தை சுத்தப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தவர் ஹிட்லர்.

இந் நிலையில் ஹிட்லரின் 39 உறவினர்களின் எச்சிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏக்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் யூத இனத்தோடும், வடக்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோ பகுதியைச் சேர்ந்த பெர்பர்ஸ் இனத்தினரோடும் உயிரியல்ரீதியில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

புலனாய்வு பத்திரிகையாளரான ஜூன் பால் முல்டேர்ஸ் டி.என்.ஏ. ஆய்வை நடத்தி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்கில் வசிக்கும் ஹிட்லரின் தங்கை வழி பேரனான அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் (வயது 61), ஆஸ்திரியாவில் வசிக்கும் ஹிட்லரின் சித்தி மகனான நார்படர்ட் உள்பட 39 பேரிடமிருந்து இந்த டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

இதில் Haplogroup E1b1b என்ற 'ஒய் குரோமேசோம்' இருந்தது. இவை ஜெர்மானியர்களில் பொதுவாகக் காணப்படாத குரேமோசோம் ஆகும். இவை யூதர்கள், அஸ்கென்சி இனத்தினர் மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வடக்கு ஆப்பிரிக்க இனமான பெர்பர்ஸ் இடையே மிக அதிகமாகக் காணப்படும் குரோமோசோம் ஆகும்.

ஹிட்லருக்கு சுமார் 20 தலைமுறைகளுக்கு முன் அவரது முன்னோர்கள் யூத மற்றும் வடக்கு ஆப்பிரிக்க இனத்தினரைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

....தட்ஸ் தமிழ், தினமலர்...26.08.2010

nambi
26-08-2010, 04:26 AM
புது தில்லி, ஆக.25: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் மேலும் கூறியிருப்பது: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கவும், போரில் பாதித்த மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. இப்போதும் செய்து வருகின்றது.

போரில் பாதித்த மக்களுக்கு 2600 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. 70 ஆயிரம் வேளாண் பொருள்கள் அடங்கிய பைகள் அளிக்கப்பட்டன. போரினால் நசிந்துபோன விவசாயத் தொழிலுக்கு புத்துயிரூட்டும் நோக்கில் இவ்வுதவி அளிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு, மத்திய பிராந்தியங்களின் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளுக்கு இடையே மீண்டும் மக்கள் சகஜமாக சென்றுவரும் நோக்கில் 55 பஸ்கள் வழங்கப்பட்டன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான மருத்துவ சேவைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கை, கால்களை இழந்து முகாம்களில் தங்கியிருந்த அப்பாவி மக்களுககு செயற்கை கை, கால்களை பொருத்தும் முகாம் நடத்தப்பட்டது.

ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டையால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 4 லட்சம் சிமென்ட் மூடைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதவிர, போரில் பாதித்த மக்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுத் தொகையாக | 500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தப்படும் ரயில்வே கட்டமைப்பு, துறைமுகம், திரிகோணமலையில் நிறுவப்படும் அனல்மின் நிலையம், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கலாசார மையம் உள்பட இன்னும் ஏராளமான திட்டங்களுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டிவருகிறது.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் அங்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ் தமிழர் உள்பட இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை பிரிவினரும் ஏற்கத்தக்க வகையில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படுவது அவசியம். இதை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது.

சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வந்திருந்த போதும் இதுகுறித்து அவரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் நிரந்தர அரசியல் தீர்வு காணுவற்கான உறுதி அளித்தார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.

....தினமணி 26.08.2010

nambi
26-08-2010, 04:33 AM
சென்னை, அக. 25: தமிழதத்தில் 2011-ம் கல்வியாண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றத்தை (ஏ.ஐ.சி.டி.இ), தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறினார்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் என மொத்தமுள்ள 471 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் பி.இ. இடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆக. 24) முடிவடைந்தது.

கலந்தாய்வின் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 883 பேர் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர். இது குறித்து அமைச்சர் பொன்முடி புதன்கிழமை அளித்த பேட்டி:அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 பி.இ. இடங்களுக்கு, 1 லட்சத்து 69 ஆயிரத்து 665 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 234 பேர் தகுதியுடைய விண்ணப்பதாரர்களாக தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 68 ஆயிரத்து 222 மாணவர்கள், 43 ஆயிரத்து 661 மாணவிகள் என 1 லட்சத்து 11 ஆயிரத்து 883 பேர் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர்.

கலந்தாய்வில் அதிக மாணவர்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்களில் 30 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. ஆனால், நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து உள்ளிட்ட அறிவுப்புகளால் இந்த ஆண்டு நிரப்பப்படாத இடங்கள் 8 ஆயிரத்து 172-ஆக குறைந்துள்ளது.
புதிய கல்லூரிகளை அனுமதிக்க வேண்டாம்...: இந்தியாவிலேயே பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளின் கீழ் 1.30 லட்சம் பேர் பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்தியாவில் பொறியியல் படிப்பு என்பது அவசியமாக கருதப்படுகிறது. பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெரும் 6 லட்சம் பேரில், 1.30 லட்சம் பேர்தான் பொறியியல் படிப்புகளில் சேருகின்றனர்.

எனவே, பொறியியல் கல்லூரிகளில் கற்பிக்கும் முறைகளிலோ அல்லது கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையிலோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இருந்தபோதும், 2011-ம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது என ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி வழங்குவதற்கு முன்பே கூடுதலாக 120 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏ.ஐ.சி.டி.இ.-யின் அனுமதி உடனடியாக பெறப்படும்.

அதிக கட்டண வசூல் தொடர்பாக தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மன்றம் 6 கல்லூரிகளில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தக் கல்லூரிகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோல் முதல் தலைமுறை மாணவர்களிடம் முழுக் கட்டணத்தையும் செலுத்துமாறு வலியுறுத்தும் கல்லூரிகள் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
....தினமணி 26.08.2010

nambi
26-08-2010, 04:37 AM
அன்புக்கும், கருணைக்கும் ஓர் மகத்தான கட்டமைப்பை உருவாக்கி அதை உலகம் எங்கிலும் தழைத்துப் பரவச் செய்து, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தெய்வத் திருஉருவமாக விளங்கும் அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை 2010 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி இந்திய நாடும் அதன் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறார்கள்.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/1008/25/images/img1100825074_1_1.jpg

கடந்த 2003இல் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவராக போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டார். ஆசிவதிக்கப்படுதல் என்பது, "கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களில் ஒருவர் பாவமன்னிப்பு கோரியவர் அல்லது வீர மரணம் அடைந்த தியாகி என்ற முறையில் புனித வாழ்க்கைக்கு, ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, அதாவது சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத் தகுதியானவர் என கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் என்ற முறையில் போப்பாண்டவரால் பிரகடனம்" செய்யப்படுவதாகும்.

அன்னை தெரசாவின் வாழ்க்கை 'கடவுளின் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கு' சேவை செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை என மதிப்பிடுவதற்கு உரியதாகும். பைபிளின் 'கடைசித் தீர்ப்பில்' விவரிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும், நேசிக்கப்படாதவர்களுக்கும் சேவை செய்தல் என்ற கட்டளைக்குக் கட்டுப்பட்டு மெய்யாகவே வாழ்ந்தவர் என்ற முறையில் 'சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு' அவர் தகுதியானவர்:

"பிறகு அவரின் வலது கைப்பக்கத்தில் இருந்தவர்களை நோக்கி அரசர் கூறுவார், என் தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள், உலகின் அடித்தளத்தில் இருந்து உங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுங்கள்; நான் பசியாக இருநூதேன் நீங்கள் எனக்கு சாப்பிடுவதற்குக் கொடுத்தீர்கள்; நான் தாகத்துடன் இருந்தேன் நீங்கள் எனக்குக் குடிப்பதற்குக் கொடுத்தீர்கள்; புதியவனான என்னை உள்ளே அழைத்துச் சென்றீர்கள்; நிர்வாணமாக இருந்த எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்ற என்னை வந்து கவனித்தீர்கள்; சிறையில் இருந்தபோது என்னை வந்து பார்த்தீர்கள்.

அதைத் தொடர்ந்து அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நியாயவான் கூறுவார் 'எப்போது நாங்கள் உங்களை பசியுடன் பார்த்தோம், உங்களுக்கு உணவளித்தோம்; அல்லது எப்போது நாங்கள் உங்களை தாகத்துடன் பார்த்து உங்களுக்கு குடிப்பதற்குக் கொடுத்தோம்? எப்போது நாங்கள் உங்களைப் புதியவராகப் பார்த்து உள்ளே அழைத்துச் சென்றோம் அல்லது நிர்வாணமாக இருந்த உங்களுக்கு ஆடை அணிவித்தோம்? அல்லது எப்போது நாங்கள் உங்களை நோயாளியாக அல்லது சிறையில் பார்த்தோம்?

இதற்குப் பதில் அளித்து அரசர் சொல்லுவார், ஆமென், என் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்கின்ற காலம் வரையிலும், இதை நீங்கள் எனக்குச் செய்வதர்கள் ஆவீர்கள்."

முன்னாள் யுகோஸ்லேவியாவில் உள்ள மெசடோனியாவைச் சேர்ந்த ஸ்கோப்ஜே நகரில், 1910 ஆகஸ்ட் 26இல் ஆக்னஸ் கான்ஸா பொஜாக்ஸியு ஆகப் பிறந்த அன்னை தெரசா எப்போதுமே சுதந்திரமானவராகவும், கீழ்ப்படிந்து நடப்பவராகவும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில கருத்துக்களும் எதிர்பார்ப்புகளுக்கும் அறைகூவல் விடுப்பவராகவும் இருந்தார். எதிர்பார்த்ததற்கு முரணாகத் தோன்றினாலும் கூட மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதற்கு விருப்பம் உடையவராகவும், அவரது மனசாட்சியைப் பின்பற்றி நடப்பவராகவும் இருந்தார் என்பதற்கு அவரது சொந்த வாழ்க்கைக் கதையில் பல்வேறு காட்சிகள் அடங்கியுள்ளன.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/1008/25/images/img1100825074_1_2.jpg

எதிர்கால அன்னை தெரசா, 1928இல் அவரின் குடும்பத்தையும் அவருக்குத் தெரிந்த வாழ்க்கையையும் விட்டு விலகி வெகு தொலைவில் இருந்த அயர்லாந்தில் அவரின் சமய வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த வாழ்க்கைக்கு வந்த பின் அவரது தாயாரை அவர் மீண்டும் ஒருபோதும் சந்திக்கவே இல்லை. சிலருக்கு மட்டுமே புரிந்த மொழியில் அவர் பேசினார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் "மிகவும் சிறியவராக, அமைதியும், கூச்சமும் நிறைந்வராக இருந்தார்" என்று சகோதரி ஒருவர் நினைவு கூர்ந்திருக்கிறார். அந்த சமயப் பிரிவின் மற்றொரு உறுப்பினர் அவர் 'சாதாரணமான' பெண் ஆக இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். எப்படி இருந்தபோதிலும், அசைக்க முடியாத உறுதி, சுய கட்டுப்பாடு என்ற ஒரு தனிச்சிறப்பான பண்பு அவரின் வாழ்க்கையில் எப்போதுமே ஓர் அங்கமாக இருந்து வந்தது. லோரெட்டோ சகோதரிகள் அமைப்புடனான அவரது இணைப்புக்க அலு வலுவூட்டியது. அவரது வாழ்க்கை முழுவதிலும் அந்தப் பண்பு நிறைந்திருக்கிறது.

ஓராண்டு கழித்து, 1929இல் டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ சகோதரிகள் அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக ஆக்னஸ் கான்ஸா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதல் உறுதிமொழி ஏற்ற பிறகு, கொல்கத்தாவில் உள்ள புனித மேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். செல்வந்தர்களின் புதல்விகளுக்கான பாதுகாக்கப்பட்ட அந்த பள்ளிச் சூழலில்தான், "ஏழைகளிலும் பரம ஏழைகளுக்கு" சேவை செய்யும் தெரசாவின் புதிய வாழ்க்கைத் தொழில் உருப்பெற்று வளர்ந்தது. 1946இல் ஓய்வெடுப்பதற்காக டார்ஜிலிங் சென்றபோது தெரசா கேட்ட "இரண்டாவது அழைப்பின்" தெளிவான செய்தியாக அது இருந்தது.

அவருக்கு அது கடவுள் காட்டிய திசைவழி என்பதில் "ஒருபோதும் சந்தேகம் கொள்ளாத" தெரசா அந்த வழியைப் பின்பற்றுவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். "தெருக்களில் இறங்கிச் செல்வதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த லொரேட்டோ சகோதரிகள் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கும் முடிவு செய்தேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏசு சிறித்துவைப் பின்பற்றி குடிசைப் பகுதிகளுக்குச் சென்று ஏழைகளிலும் பரம ஏழைகள் மத்தியில் அவருக்கு சேவை செய்யுமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நான் கேட்டேன்" என்று தெரசா குறிப்பிட்டிருக்கிறார்.
.....வெப்துனியா 26.08.2010

nambi
26-08-2010, 04:43 AM
http://img.dinamalar.com/data/large/large_70284.jpg


மதுரை : மகள் அடிக்கடி காதலர்களை மாற்றியதால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என கருதிய தந்தை, விஷ ஊசி போட்டும், மருந்து கொடுத்தும் 18 வயது மகளை கொலை செய்தார். இதற்கு உடந்தையாக இருந்ததாக, அரசு மருத்துவமனை ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனி, ராமநாதன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி(47). பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்ஷாப் நடத்துகிறார். இவருக்கு மனைவி லட்சுமி, இரு மகன்கள், மகள் மாரிச்செல்வி(18) உள்ளனர். மகள் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.நேற்று முன்தினம் மதியம், மாரிச்செல்வி விஷம் குடித்ததாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்தனர். அப்போது, தாயார் லட்சுமி, "எங்களது ஒர்க்ஷாப்பில் வேலை செய்த அலங்காநல்லூர் கோட்டைமேட்டைச் சேர்ந்த மூர்த்தியுடன்(24) வந்த இரண்டு பேர், காலில் விஷ ஊசி போட்டதாகவும், காதில் மருந்து ஊற்றியதாகவும் என் மகள் தெரிவித்தாள். மூர்த்தியிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும்' என்றார்.மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மாரிச்செல்வி கொலையில், தந்தை ரங்கசாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கொலைக்கான பின்னணி:சில ஆண்டுகளாகவே மாரிச்செல்வி ஒருவரை காதலிப்பதும், பின் வேறு ஒருவரை காதலிப்பதுமாக இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புகூட, ஒரு காதலர் மாரிச்செல்வி வீட்டிற்கே வந்து, திருமணம் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். எஸ்.எஸ்.காலனி போலீசார் தலையிட்டு, அந்த நபர் மீது, "பெட்டி கேஸ்' போட்டு அனுப்பினர். உடனடியாக மாரிச்செல்விக்கும், தாய்மாமன் மோகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மோகன், கம்பி கட்டும் தொழிலுக்காக சிங்கப்பூர் சென்றார். அதுவரை சென்னை வடபழநியில் உள்ள சகோதரர் மாரிமுத்து வீட்டிற்கு, மாரிச்செல்வியை, ரங்கசாமி அனுப்பி வைத்தார். அங்கும் ஒருவரை காதலித்த மாரிச்செல்வி, மொபைல் போன் ஒன்றை காதலனுக்கு பரிசாக அளித்தார். இதையறிந்த மாரிமுத்து கண்டித்ததால், மாரிச்செல்வி மாயமானார். வடபழநி போலீசில் புகார் செய்யப்பட்டது.அவர், கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரை அழைத்துக் கொண்டு கடந்த 15ல் பெற்றோர் மதுரை திரும்பினர்.

மாரிச்செல்விக்கும், மோகனுக்கும், நாளை நெல்லை மாவட்டம் தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே, மோகனின் செயல்பாடுகள், ரங்கசாமிக்கு திருப்தி அளிக்கவில்லை. அவருக்கு திருமணம் செய்து வைத்தாலும், மகளின் காதல் தொடரும் எனக்கருதி, அவரை கொலை செய்ய முடிவு செய்தார். ஒர்க்ஷாப்பில் பணிபுரியும் மூர்த்தியின் உதவியை நாடினார். அவர், தனது நண்பர்களான பரவையில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் வேல்முருகன்(35), அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பாலமுருகனை(41), ரங்கசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். நால்வரும் அடிக்கடி சந்தித்து, எப்படி கொலை செய்வது என ஆலோசித்தனர்.

கொலை நடந்தது எப்படி? கடந்த 23ம் தேதி, விஷ ஊசி போட்டு, கொலை செய்ய முடிவு செய்தனர். திருமண செலவிற்காக வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வரும்படி மனைவி லட்சுமி, மகன் சண்முகராஜாவை, ரங்கசாமி அனுப்பினார். பின், வேல்முருகன், பாலமுருகனை "ஏசி' மெக்கானிக் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தார். மூர்த்தியும் உடன் இருந்தார். கொலை செய்ய ஆயத்தமாவதற்குள், லட்சுமி, சண்முகராஜாவும் வீடு திரும்பியதால், கொலையாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தற்கொலை "நாடகம்:நேற்று முன்தினம் மீண்டும் வங்கிக்கு மனைவி, மகனை அனுப்பிய ரங்கசாமி, மாரிச்செல்வியிடம் "வீட்டை முன்பக்கம் பூட்டிக்கொள். பின்பக்கம் திறந்து வைத்திரு. "ஏசி' மெக்கானிக் வருவர்' எனக் கூறி, வெளியே கிளம்பினார். சிறிது நேரத்தில், மூர்த்தி உட்பட மூன்று பேர் வந்தனர். "ஏசி'யை சரிசெய்வது போல் நடித்த அவர்கள், மாரிச்செல்வி வாயை பொத்தி, படுக்க வைத்தனர். காலில் விஷ ஊசி போட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, வாய், காதில் பூச்சிமருந்து ஊற்றினர். சிறிது நேரத்தில் மாரிச்செல்வி மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி, மூவரும் வெளியேறினர்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி சத்தம் போட, அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். ஒன்றும் அறியாதது போல் ரங்கசாமியும் ஓடி வந்தார். அந்த நேரத்தில் வங்கியிலிருந்து மனைவியும், மகனும் வர, மூர்த்தி உட்பட மூன்று பேர் விஷ ஊசி போட்ட விவரத்தை கூறி மாரிச்செல்வி மயக்கமடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் ரங்கசாமி உடனிருந்தார். அங்கு மாரிச்செல்வி இறந்தார். இக்கொலை வழக்கில் மாரிச்செல்வி தந்தை ரங்கசாமி,மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

....தினமலர் 26.08.2010

மதுரை:மதுரை எஸ்.எஸ்.காலனி ராமநாதசெட்டியார் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (47). இவரது பதினெட்டு வயது மகள் மாரிச்செல்விக்கு விஷம் கொடுத்தும், விஷஊசி போட்டு கொலை செய்த, மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகனை போலீசார் நேற்று பகல் கைது செய்தனர். இந்த கொலையை செய்யத்தூண்டியும், அதற்காக திட்டமிட்ட மாரிச்செல்வியின், தந்தை ரங்கசாமி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
....தினமலர் 26.08.2010

nambi
26-08-2010, 04:47 AM
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகனுக்குச் சொந்தமான சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியுள்ளது.

ஒசாமா பின் லேடனின் மருமகன் அல் கயார். இவரது சொத்துக்களை முடக்க அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அல் கொய்தா அமைப்புக்கு நிதி வழங்குவதில் அல் கயார் முக்கியப் புள்ளியாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இதையடுத்தே அவருக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சவூதி அரசு கடந்த ஆண்டு அதிகம் தேடப்படும் 85 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில் கயாரும் ஒருவர். அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் களை நடத்த கயார் பெருமளவில் நிதி வசூல் செய்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அல் கொய்தாவின் முக்கிய நிதியளிப்புப் புள்ளியாக உருவெடுத்தார் கயார். அந்த சமயத்தில் அல்கொய்தாவுக்கு பெருமளவில் நிதி வழங்கி வந்தவரான அல் கொய்தாவின் முன்னாள் தலைவரான முஸ்தபா அல் யாசித்தை பாகிஸ்தானில் வைத்து ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றது. இதையடுத்தே கயார் முக்கிய நிதிப் புள்ளியாக மாறினார் என்பது அமெரிக்காவின் கருத்து.

ஏற்கனவே கயாரின் சொத்துக்களை முடக்கி ஐ.நா.வும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

....தட்ஸ் தமிழ் 25.08.2010

nambi
26-08-2010, 04:51 AM
ஹைதராபாத்: போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் நடிகர்கள் யார் யார் என்று ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பில்லை என்று நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த 19ம் தேதி 'கோகைன்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு அந்த போதை பொருளை சப்ளை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார்.

நைஜீரியா வாலிபரிடம் இருந்து ஒரு 'லேப் டாப்' கம்ப்ïட்டர், செல்போன், 50 ஆயிரம் ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் வந்த சொகுசு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும், நைஜீரியா வாலிபரிடம் போதைப் பொருளை வாங்கி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் பிரமுகர்கள் உள்பட பல முக்கிய புள்ளிகளுக்கும் சப்ளை செய்ததாக ஒத்துக்கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நைஜீரியா வாலிபர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தனக்கு 800 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 60 பேர் நடிகர் நடிகைகளாம்.

தனது வாக்குமூலத்தில், 2008ம் ஆண்டு உயர் கல்வி படிப்பதற்காக ஹைதராபாத் நகரத்துக்கு வந்தேன். ஆனால், எனக்கு படிக்க எங்கும் இடம் கிடைக்கவில்லை.

நான் 'விசிட் விசா'வில் நைஜிரீயாவில் இருந்து வந்திருந்தேன். எனக்கு உயர் படிப்பு படிக்க இடம் கிடைக்காத நிலையில் நான் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டது. விசா காலமும் முடிந்து விட்டது. அதை நீட்டிப்பதற்கும் எனக்கு பணம் இல்லை.

அப்போது இங்கிருந்த எங்கள் நாட்டைச் சேர்ந்த எதில் என்ற வாலிபருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் போதை பொருளை கொடுத்து சப்ளை செய்யச் சொன்னார். அதில் எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பின்னர் நானே போதை பொருளை சப்ளை செய்யத் தொடங்கினேன். ஆனால் போலீசாரிடம் பிடிபட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

நடிகர்-நடிகைகள் தொடர்பு:

நைஜீரியா வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பை போலீசார் சோதனை செய்தபோது அதில் 800 வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பான பெயர், விலாசம், தொலைபேசி எண்கள் சிக்கின.

இந்த 800 பேரில் 60 பேர் பிரபல நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மந்திரிகளின் மகன்கள், எம்.பிக்களின் மகன்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன்கள், பிரபலங்களின் மகள்கள் என்பகிறார்கள்.


இதற்கிடையே பிரபல தமிழ்-தெலுங்கு நடிகை த்ரிஷா, கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் இருந்து தெலுங்கு பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கண்டனமும், மறுப்பும் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், "என்னுடைய தொலைபேசி எண் நைஜீரியா வாலிபருக்கு எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருளை பயன்படுத்தும் பழக்கமும் எனக்கு இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் என் மீது புரளியை கிளப்பி விட்டுள்ளனர். என் மேலாளர் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.

இதற்கு முன்பும் இதுபோல என்மீது பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னர் வெளியானது. இந்த விஷயத்திலும் உண்மை வெளிவரும். என் பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
....தட்ஸ் தமிழ் 26.08.2010

nambi
26-08-2010, 05:01 AM
இலங்கையில் சிலாபத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மிருக பலிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது.

இந்தச் சடங்கை நடத்தக் கூடாது என்று அகில இலங்கை பிக்குமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலாபம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

ஆனாலும், அந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுக்கப்ப்பட்டது.

இந்த மிருக பலிச் சடங்கு பல காலமாக நடந்து வருவதாக பிபிசியிடம் கூறிய ஒரு ஆலய நிர்வாகி, உள்ளூர் மக்கள் இந்த சடங்குக்கு மிகுந்த ஆதரவைத் தந்ததாகவும், கூறினார். அது மாத்திரமின்றி அனைத்து மத மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மிருக பலிச் சடங்கை அகில இலங்கை இந்து மாமன்றம் என்னும் அமைப்பும் கண்டித்திருந்தது.

ஆனால், இன்று ஆலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பேச்சியம்மன் சிலைக்கு முன்பாக பக்தர்களால், மூன்று ஆடுகளும் சுமார் 7 கோழிகளும் பலியிடப்பட்டு, அவை அங்கேயே சமைக்கப்பட்டு வந்திருந்த அனைத்து இனமக்களுக்கும் பகிரப்பட்டதாக ஆலய நிர்வாகி தமிழோசையிடம் தெரிவித்தார்.
....பிபிசி தமிழோசை 26.08.2010

nambi
26-08-2010, 05:02 AM
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக வழங்கும் வரை ஐ.தே.கட்சி, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லாது. என்று அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் குறித்து உறுதியான நிலைப்பாட்டை அறிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எம்மால் கூற முடியும். எவ்வாறாயினும் பொது மக்களுக்கும் நாட்டின் ஜனநாயகத்திற்கும் பாதகமான அரசியலமைப்பு ஒன்றிற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வமான வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
....தமிழ்வின் 26.08.2010

nambi
27-08-2010, 04:38 AM
திருச்செங்கோடு, ஆக.26: லஞ்சம் தொடர்பாக மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு சீததாராம்பாளையத்தில் வசிப்பவர் விவசாயி ஏ.சி.வெங்கடாசலம் (57). இவருக்குச் திருநகர் காலனியில் சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு மும்முனை மின்சாரம் கேட்டு கடந்த மாதம் 5-ந் தேதி தேவனாங்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் வெங்கடாசலம் விண்ணப்பம் கொடுத்தார்.

÷இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய வணிக ஆய்வாளர் கணபதி, தனக்கும் மற்றவர்களுக்கும் சேர்ந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின்இணைப்பு தருவதாகக் கூறினாராம். இது குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் வெங்கடாசலம் புகார் செய்தார். அவர்கள் ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடாசலத்திடம் கொடுத்தனர்.

கணபதியை திருநகர் காலனிக்கு வரச் செய்த வெங்கடாசலம், அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.நோட்டுகளை அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அவரைக் கைது செய்தனர். பின்னர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சோதனையிட்டனர். இந் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பெரியசாமி, சேலம் ஆய்வாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
....தினமணி 27.08.2010

nambi
27-08-2010, 04:55 AM
சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் இருந்தால், அவற்றைக் களைவதற்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. குழு அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் குழு பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
....தினமலர் 27.08.2010

nambi
27-08-2010, 05:02 AM
ஹைதராபாத், ஆக. 26: தேர்வில் காப்பி அடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட நீதிபதிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆந்திரத்தில் எல்எல்எம் (சட்ட மேல்படிப்பு) படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு கடந்த 24-ம் தேதி பல மையங்களில் நடைபெற்றது. இதில் வாரங்கலில் உள்ள காகதீய பல்கலைக்கழக அரசினர் கல்லூரியிலும் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆந்திர மாநிலத்தில் கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் சிலரும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக சட்ட மேல்படிப்புத் தேர்வை எழுதினர்.

அப்போது பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஒரு நீதிபதி, தனது விடைத்தாளின் கீழே சட்டப் புத்தகத்தை வைத்து காப்பியடித்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அந்த அறையில் தேர்வு எழுதிய நீதிபதிகள் சிலரிடம் சோதனையிட்டபோது ஏராளமான "பிட்' பேப்பர்கள் (புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட பக்கங்கள்) கைப்பற்றப்பட்டன. மேலும் வழக்கறிஞர்கள் இருவர் காப்பியடித்தபோது பிடிபட்டனர்.

இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

....தினமணி 27.08.2010

nambi
27-08-2010, 08:40 AM
புதுடில்லி : இந்திய ராணுவ உயர் அதிகாரிக்கு சீன அரசு விசா வழங்க மறுத்துள்ள விவகாரம் வெளியுறவு மட்டத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் விசா மறுக்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ராணுவ உயர் அதிகாரிக்கு விசா மறுத்ததை அடுத்து சீனாவுடனான ராணுவ தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
...தினமலர் 27.08.2010

nambi
27-08-2010, 08:51 AM
மதுரை, ஆக. 26: மதுரையில் ரூ.128 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு, சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா செப். 12-ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி அலுவலகச் செய்திக் குறிப்பு: மதுரை விமான நிலையத்தில் ரூ.180 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன. 17,500 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகள், குளிரூட்டப்பட்ட அறைகள், ஓடுதளத்தின் நீளம், பன்னாட்டுப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் சர்வதேச தரத்துடன் கூடிய விரிவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதன் திறப்பு விழா செப். 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 27.08.2010

nambi
27-08-2010, 08:58 AM
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா. முகங்கொடுக்க நேரிட்டதாக ஜோன் ஹோம்ஸ் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை ஐ.நா. வகித்து வந்தது.

யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முயற்சிக்கையில் அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரசாரங்களை சமநிலைப்படுத்த முயற்சித்தபோதெல்லாம் ஐ.நா.கடும் அழுத்தங்களுக்குட்படநேர்ந்தது.

இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தத்தில், இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான பணியைச் சீராகவே செய்ய முடிந்தது. எனினும் பொதுமக்களின் சேதங்கள் உட்பட பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படாமலே இருக்கின்றது.

யுத்தத்தின்போது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று. மூதூரில் ஏ.சி.எப். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை" என்றார்
....வீரகேசரி 27.08.2010

nambi
27-08-2010, 09:09 AM
புதுதில்லி, ஆக. 26: "காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தியதற்கு மக்களவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுவதோடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சிவசேனை மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்தப் பிரச்னையில் சிவசேனை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது உள்துறை அமைசச்ர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்தப் பிரச்னை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. மக்களவையில் சிதம்பரத்தின் கருத்தைக் கண்டித்து முதலில் சிவசேனை உறுப்பினர்கள் சந்திரிகாந்த் கைரே, சுபாஷ் வாங்கடே, கணேஷ் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து, அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சிதம்பரம் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனை கட்சிப் பத்திரிகை சமனாவில் எழுதப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பினர். தில்லியில் மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

ஹைதராபாத், அஜ்மீர், கோவா, மலேகாவ், மோதாசா (குஜராத்) ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

....தினமணி 27.08.2010

nambi
27-08-2010, 09:14 AM
மும்பை, ஆக.25 (டிஎன்எஸ்) டெபாசிட்டுக்கள், கடன்களுக்கான வட்டி வீதத்தை அடுத்த சில வாரங்களுக்கு உயர்த்தப்போவதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் 5 இந்திய தொழில்கள் இணையத்தின் மாநாடு ஒன்றில் பங்கேற்கும்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட் இதைத் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் மாதம் வரை வட்டி வீத உயர்வு இல்லை என்றார். தற்போதைய நிலையில் பணப்புழக்க நிலை சரியான திசையில் சென்றுக்கொண்டிருப்பதால் வட்டி வீதத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

எனினும், செப்டம்பர் மாதத்தில் முன்கூட்டிய வரி செலுத்துகைகள் தொடங்குவதால் பணப்புழகத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். (டிஎன்எஸ்)

nambi
27-08-2010, 09:22 AM
திருவள்ளூர், ஆக. 24: போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் வேலையில் சேர்ந்தவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தது.

÷வேலூர் மாவட்டம், கங்காபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பனின் மகன் வெற்றிச்செல்வன் (40). இவர் கடந்த 2001-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

÷அப்போது கல்வித் துறை அதிகாரிகள் இவரது சான்றிதழை ஆய்வு செய்த போது ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது. போலீஸôர் வெற்றிச் செல்வனை கைது செய்து விசாரித்து வந்தனர். ÷இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து செவ்வாய்கிழமை நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

÷அதில், வெற்றிச்செல்வன் மீது மோசடி, போலி சான்றிதழ் தயார் செய்தல், அதன் மூலம் பணியில் சேருதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ஒரு பிரிவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் வீதம் 6 வருட சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ÷மேற்கண்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறினார்.
...தினமணி 27.08.2010

nambi
28-08-2010, 10:06 AM
புதுதில்லி, ஆக.28- அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியிடப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அவரது உருவம் கொண்ட 5 ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் பேசுகையில், "அன்னை என்கிற வார்த்தைக்கு முழுமையான மற்றும் உண்மையான அர்த்தமாக விளங்கியவர் தெரசா. கடவுள் எல்லா இடத்திலும் நேரடியாக வரமுடியாது என்பதால் தான் தெரசா போன்றோரை படைத்துள்ளார்." என்றார்.

அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவைப் பணியை 5 ரூபாயுடன் தான் தொடங்கினார் என்று நாணயம் வெளியீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

....தினமணி 28.08.2010

nambi
28-08-2010, 10:10 AM
சென்னை, ஆக.26 (டிஎன்எஸ்) மணலியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

2008-ம் ஆண்டு நான் நோக்கியா எண் 81 மாடல் செல்போனை ரூ.14,200-க்கு வாங்கினேன். அதில் குறைபாடு இருந்தது. 5 தடவை சரி செய்த பிறகும் குறைபாடு போகவில்லை. இதனால் மாற்று செல்போன் தருமாறு கேர் சென்டரில் கேட்டேன் ஆனால் தர மறுத்து ரிப்பேர் செய்ததற்காக ரூ.2,500 வாங்கிவிட்டனர். இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதற்கு ரூ.35 ஆயிரம் நஷ்டஈடும், புது செல்போனும், வழக்கு செலவுக்கு ரூ.7 ஆயிரமும் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை, நுகர்வோர் நல நீதிமன்ற தலைவர் பூமிநாதன், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் விசாரணை செய்து, குறைபாடுள்ள செல்போனை வழங்கியதற்காக நோக்கியா நிறுவனம் ரூ.10 ஆயிரம் அபராதமாகவும், வழக்கு செலவுக்கான ரூ.2 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும். புதிய செல்போனையும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
(டிஎன்எஸ்) 27.08.2010

nambi
28-08-2010, 10:15 AM
தஞ்சாவூர்: தனது கணவரே தன்னை ஆபாசப் படம் எடுத்து மிரட்டுவதாகவும், மேலும் பல பெண்களை அவர் ஆபாசப் படம் எடுத்து வைத்துள்ளதாகவும் டாக்டரின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தஞ்சை பொன்நகரில் வசித்து வரும் அனுராதா (25) வழக்கறிஞருடன் வந்து மாவட்ட எஸ்பி செந்தில்வேலனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். என்னுடைய சித்தியின் கொடுமை தாங்காமல் எனக்கு 15 வயதிலேயே என் தந்தை திருமணம் செய்து வைத்தார்.

அந்த திருமணம் மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால், என் கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் விசாரணை செய்து அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று உத்தரவிட்டனர். மேலும் எனது 2 குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த போது திருச்சியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு படித்து வந்தார்.

ஒருநாள் வேலை விஷயமாக அவரை சந்தித்துப் பேசியபோது, குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கினேன். மறுநாள் தான் எனக்கு சுயநினைவு வந்தது.

மயக்கநிலையில் இருந்த என்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் என்னை நிர்வாணமாகவும் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களை அவரது மொபைலில் மெமரிகார்டில் பதிவு செய்து வைத்துள்ளார். இதை வைத்து அடிக்கடி என்னை மிரட்டி என் வீட்டிற்கு வந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் தடுக்க என்னை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டு, கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

நான் அவருடன் குடும்பம் நடத்தியபோது அவர் பல பெண்களின் ஆபாச படங்களை பதிவு செய்து வைத்துள்ளது தெரியவந்தது.

அவர் மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, அங்கு கருக்கலைப்பு செய்து கொள்ளும் சில பெண்களின் படங்களையும் அவர் எடுத்து வைத்துள்ளார். நான் இதுபற்றி கேட்டபோது, என்னையும், எனது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.

அச்சமான சூழ்நிலையில் அவருடன் இருக்க பிடிக்காமல் விலகி வந்துவிட்டேன்.

இப்போதும் தொடர்ந்து என்னை அவர் மிரட்டி வருகிறார். போலீசில் புகார் கொடுத்தால் எனது ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.

எனவே எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே என் கணவரிடம் இருந்து எனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரிடம் உள்ள எனது ஆபாசப் படங்களை கைப்பற்றி அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
....தட்ஸ் தமிழ் 28.08.2010

nambi
28-08-2010, 10:21 AM
சென்னை : தர்மபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் நக்சலைட் சுந்தரமூர்த்திக்கு தடா சிறப்பு நீதிமன்றம் 5 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தர்மபுரி ரயில் நிலையத்துக்கும் பாலக்கோடு ரயில் நிலையத்துக்கும் இடையே கமலாபுரம் ரயில்வே பாலத்தில் 1992ம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டது.


இந்த குண்டு வெடிப்பில் தண்டவாளம் பல அடி தூரம் தகர்க்கப்பட்டது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம், ராமயம்பட்டியைச் சேர்ந்த நக்சலைட் சுந்தரமூர்த்தி (46), வேலு (எ) பூபாலன் (43), சிசுபாலன் (49) ஆகியோரை கியூ பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் பிச்சம்பாளையத்தில் பதுங்கியிருந்த சுந்தரமூர்த்தியை 2007 ஜூலை 9ம் தேதி அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தடா சட்டப் பிரிவுகளிலும், வெடிமருந்து சட்டப் பிரிவுகளிலும், ரயில்வே சட்டப் பிரிவிலும், இந்திய தண்டனைச் சட்டம் 120&பி பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார்.



அதில் கூறியிருப்பதாவது: சுந்தரமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தடா சட்டம் பிரிவு 3 (3) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 12&பியின் கீழ் ஆயுள் தண்டனையும் தடா சட்டப் பிரிவு 3 (3) (2) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120&ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தடா சட்டம் பிரிவு 4 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120&பியின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. வெடிமருந்து தடுப்பு சட்டம் பிரிவு 3ன் கீழ் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 150 (2) (எ)ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

...தினகரன் 28.08.2010

nambi
28-08-2010, 10:31 AM
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில்......முதல்வர் கருணாநிதி.....


தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லை எனும் நிலையை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதிலும் உள்ள 21 லட்சம் குடிசைகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றிடும், “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக இந்த நடப்பு நிதியாண்டில் ஒரு பயனாளிக்கு ரூ.75 ஆயிரம் மானியத்துடன் ரூ. 2 ஆயிரத்து 250 கோடி செலவில் 3 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது. முழுவதும் மாநில அரசின் நிதியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த மகத்தான திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மிகுந்த முன்னுரிமை அளித்து, முனைப்புடன் செயலாற்றி 3 லட்சம் கான்கிரீட் வீடுகளையும் 31.3.2011க்குள் கட்டி முடித்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருப்பும் மத்திய அரசு வழங்கும் 33,750 ரூபாயுடன் தமிழக அரசு வழங்கும் 26,250 ரூபாயையும் சேர்த்து இதுவரை ரூ. 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், ஒரு குடியிருப்புக்கு தமிழக அரசு வழங்கும் நிதி ரூ. 26,250 என்பதில், மேலும் ரூ. 15 ஆயிரம் கூடுதலாகச் சேர்த்து இனிமேல் ரூ. 41,250 வழங்கிட தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
....வெப்துனியா 28.08.2010

nambi
28-08-2010, 11:01 AM
சென்னை : தமிழகத்தில் அமையவுள்ள சட்ட மேலவைக்கான தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு அதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைகிறது. இதையடுத்து அதற்கான தொகுதிகள் நிர்ணயம்,தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார். இதில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகளான காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், பிராந்திய கட்சிகளான திமுக, அதிமுக, பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள தொகுதி வரைவுப் பட்டியலும் வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

....தினமலர் 28.08.2010

nambi
28-08-2010, 11:04 AM
டெல்லி: அடுத்த வாரம் பெட்ரோல் மீண்டும் விலை 70 பைசா உயரவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள சமீபத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 வரை உயர்ந்தது. இந் நிலையில் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா வரை உயரும் என்று தெரிகிறது.

இது குறித்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை ஆலோசனை நடத்தி விலை உயர்வை அறிவி்க்கவுள்ளன.

இப்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அது முடியும் வரை இந்த நிறுவனங்களை காத்திருக்கச் சொல்லியுள்ளது மத்திய அரசு.

வரும் 31ம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் விலை உயர்வை அறிவிக்கவுள்ளனர்.
.....தட்ஸ்தமிழ் 28.08.2010

nambi
28-08-2010, 11:12 AM
புதுதில்லி, ஆக.27 (டிஎன்எஸ்) ரூ.2 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதா, 30ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

தற்போது, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு வருமானவரி கிடையாது. இனிமேல், ரூ.2 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கும் வரி கிடையாது என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால், மாதச் சம்பளக்காரர்கள் பெரிதும் பலன் அடைவர்.

சுமார் 60 ஆண்டுகளாக அமலில் உள்ள தற்போதைய வருமான வரி சட்டம், மிகவும் சிக்கலாக இருப்பதால், அந்த சட்டத்துக்கு மாற்றாக, நேரடி வரி சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது.

அதில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட்டது. அதில், வைப்புநிதியில் இருந்து பணம் எடுக்க வரி விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. வருமானவரி சலுகைகள் மற்றும் வீட்டுக்கடன் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தற்போது, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு வருமானவரி கிடையாது. இனிமேல், ரூ.2 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கும் வரி கிடையாது என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால், மாதச் சம்பளக்காரர்கள் பெரிதும் பலன் அடைவர்.

மேலும், நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரி, 30 சதவீதமாக நீடிக்கும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கார்ப்பரேட் வரி மீதான செஸ் வரி மற்றும் சர்சார்ஜ் நீக்கப்படுகிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் பலன் அடையும்.

மேலும், வீட்டுக்கடன்களுக்கான வரி ஊக்கத்தொகை நீடிக்கும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நேரடி வரிகள் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இம்மசோதா, 30ஆம் தேதி, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன், சட்டமாக மாறும். இந்த சட்டம், அடுத்த நிதி ஆண்டில் (2011-2012) அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனவே, அடுத்த நிதி ஆண்டில் இருந்து, வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(டிஎன்எஸ்)..28.08.2010

nambi
30-08-2010, 03:03 PM
பாட்னா, ஆக. 29:பிகாரில் அடுத்த தேர்தலில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.

பாஸ்வான், தனது சகோதரர் பசுபதி குமார் பரûஸ துணை முதல்வர் பதவியில் அமர்த்தப் பார்க்கிறார். எமது கூட்டணி வென்றால் முஸ்லிமுக்கு முதல்வர் பதவி என அறிவித்த பாஸ்வான் இப்போது அதுபற்றியே பேசாமல், துணைமுதல்வர் பதவியையும் தனது சகோதரருக்கே கொடுத்திட போராடிவருகிறார் என ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன.

இந்நிலையில் நிருபர்களிடம் சனிக்கிழமை பாஸ்வான் கூறியதாவது: எமது கூட்டணி தேர்தலில் வென்றால் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது பற்றி பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். பிகாரிலும் பிற இடங்களிலும் உள்ள முஸ்லிம்கள் முன்னேற்றம் காண எமது கூட்டணி அயராது பாடுபடுகிறது என்றார் பாஸ்வான்.

.....தினமணி 30.08.2010

nambi
30-08-2010, 03:09 PM
சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தி.க. தலைவர் கி.வீரமணி, பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன் , ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது,

வளர வேண்டிய பிள்ளைகள் அநியாயமாக தீக்கிரையானதை நினைக்கையில், அவர்கள் பெற்றோர்கள், உடன் இருந்த மாணவிகளின் மனநிலையை பார்க்கும்போது இந்த தீர்ப்பு சமூக விரோதத்திற்கு எதிராக அளிக்கப்பட்டதாகும்.

இதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கோ, ஜாதி மத கண்ணோட்டத்திற்கோ இடமே கிடையாது. மேலும், இதில் சட்டக் கண்ணோட்டம் மட்டுமல்ல, நியாயக் கண்ணோட்டமும் உள்ளது என்று அவர் கூறினார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது,

சட்டம் தனது பணியை செவ்வனே செய்துள்ளது. தாமதமாக தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்த பிறகே உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் பயணம் செய்த வாகனத்தை தாக்கி ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு ஈடு இணை கிடையாது என்று அவர் கூறினார்.

....தட்ஸ்தமிழ் 30.08.2010

nambi
30-08-2010, 03:13 PM
காலங்கடந்த நீதி.......... கண்மணிகளை இழந்த பெற்றோரின் மனதின் ஆறாத புண்ணாக வருத்திக்கொண்டிருக்கும் புத்திர சோகத்தை...........?

nambi
30-08-2010, 03:16 PM
புது தில்லி, ஆக.29: ஆயுதங்களுடன் சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் அனைத்து மாநில அரசுகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக துணை ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. எனினும் துணை ராணுவ நடவடிக்கையால் எதிர்பார்த்த அளவுக்கு பலன்கிட்டவில்லை. அமைதி வழிக்குத் திரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கான திட்டத்தையும் கடந்த ஓராண்டுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

ஆனால் இத்திட்டத்துக்கும் பெரிய அளவில் பலன்கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்தே வருகிறது.

நிதியுதவி திட்டம் பெரும்பாலான மாவோயிஸ்டுகளின் கவனத்தை சென்றடையவில்லை. இத்திட்டம் குறித்து மாவோயிஸ்டுகளுக்கு விழிப்புணர்வும் இல்லை என்று மத்திய அரசு கருதுகிறது.

இதனால் இத்திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. நிதியுதவி திட்டம் மாவோயிஸ்டுகளின் கவனத்தை சென்றடையும் விதத்தில் மாநில அரசுகள் விளம்பரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
....தினமணி 30.08.2010

nambi
30-08-2010, 03:19 PM
இலங்கைப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் பணிபுரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கைத் தரப்பு, சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

....வீரகேசரி 30.08.2010

nambi
30-08-2010, 03:28 PM
சென்னை: வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அறிவொளி மதிகலந்திரி என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் Ôமதுரை கூட்டத்தை ஜெயா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜெயாவும், அவரது கூட்டமும் மதுரையில் குண்டு வைத்து கொல்லப்படுவார்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து டிஜிபி லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டு முன்பு ஏற்கனவே 3 பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரிவு போலீசார் 3 குழுக்களாக ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஒரு எஸ்ஐ, 3 போலீஸ் ஏட்டுகள் இடம் பெற்றுள்ளனர். சட்டம் & ஒழுங்கு எஸ்ஐ ஒருவரும், தினமும் பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார். இதுதவிர, துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ஜெயலலிதா வீட்டை சுற்றி போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, டிஜிபி லத்திகா சரண் கூறுகையில், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இசட்&பிளஸ் பாதுகாப்பில் உள்ளார். அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் பங்கேற்கும் கூட்டங்களிலும், அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மதுரையில் அவர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்’’ என்றார்.

.........தினகரன் 30.08.2010

nambi
30-08-2010, 03:34 PM
நாகமலை,: மதுரை அருகே நேற்று காலை ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் பேட்டரி பாக்ஸ் வெடித்து தீப்பற்றியது. இதில் உடல் கருகி 4 ஆண்கள் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நரியம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (21), இவரது நண்பர்கள் குமார்(40), கோவிந்தன் (23), பாண்டி (38) ஆகிய 4 பேர், செக்கானூரணியில் நடந்த விசேஷத்தில் கலந்து கொண்டு நேற்று காலை ஷேர் ஆட்டோவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு ஆட்டோவில் 5 பேர் செக்கானூரணிக்குப் புறப்பட்டனர். நேற்று காலை 10.40 மணியளவில் செக்கானூரணியை அடுத்த கண்ணனூர் விலக்கு பகுதியில் சென்றபோது ஆட்டோக்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது திடீரென ஷேர் ஆட்டோவின் பேட்டரி பாக்ஸ் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஷேர் ஆட்டோவில் வந்த பாண்டியராஜன் உள்பட 4 பேர் உடல் கருகி அதே இடத்திலேயே இறந்தனர். ஷேர் ஆட்டோ எரிந்து எலும்புக் கூடானது.

மற்றொரு ஆட்டோவில் வந்த ராமன் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

....தினகரன் 30.08.2010

nambi
30-08-2010, 03:38 PM
புது தில்லி, ஆக.29: சர்வதேச போலீஸôரால் (இண்டர்போல்) தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் 650 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சா வழியினருக்கு 656 கைது வாரண்ட் நோட்டீûஸ உலக குற்றவியல் கண்காணிப்பு அமைப்பான இண்டர்போல் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் பிறநாடுகளில் குற்றம்புரிந்தவர்கள்.

இவர்கள் எங்கு வசித்தாலும், சொந்த நாட்டுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இவர்களை கைது செய்யுமாறு இண்டர்போல் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச போலீஸôரிடம் இருந்து கைது வாரண்ட் நோட்டீஸ் பெற்ற இந்தியர் மற்றும் இந்திய வம்சா வழியினர்கள் குறித்த விவரத்தை அஸ்வினி ஸ்ரீவத்சவ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு சர்வதேச காவல் துறை சார்ந்த இந்திய அமைப்பு அளித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய போலீஸ் அமைப்பான சர்வேதச போலீஸ் அமைப்பில் (இண்டர்போல்) 188 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச போலீஸôரால் தேடப்படுபவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதம், பாலியல் புகார் போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள்.

கடந்த 2005 முதல் 2010 மே வரையில் 656 கைது வாரண்ட் நோட்டீஸýகள் இந்தியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 2007-ல் 133 பேருக்கும், 2006-ல் 119 பேருக்கும், 2008-ல் 85 பேருக்கும், 2005-ல் 95 பேருக்கும், 2010-ம் ஆண்டு மே வரையில் 75 பேருக்கும் இந்த நோட்டீஸýகள் அனுப்பப்பட்டுள்ளன.

சௌதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், அமெரிக்கா, ஹாங் காங், ரஷியா, பெலாரஸ், எகிப்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தான் அதிக குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நிதி மோசடி, பாலியல் புகார், ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது,

இ-மெயில் மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்கள்தான் அதிகம்.

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சிலரின் விவரம்:

ஹாஜி இப்ராகிம்-பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வழக்கு, சயீக் அன்வர்-நாடுகளுக்கு இடையே போரை ஏற்படுத்த முயன்றது, ஷாஜகான்-குண்டுவைத்தது, இக்பால்-சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக கைது வாரண்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

.....தினமணி 30.08.2010

nambi
30-08-2010, 03:43 PM
காரைக்குடி: 2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டி இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி மண்டலம் ஐ.ஓ.பி. சார்பில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கி நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம் நடந்தது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் 643 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,

மாணவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால் 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

எனது அரசியல் வாழ்க்கையில் பெருமகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம் ஆகும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.

கல்விக் கடனுக்கான வட்டி விவரம் பற்றி நிதித் துறையினர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளனர். கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டியே கிடையாது.
.....தட்ஸ்தமிழ் 30.08.2010

nambi
30-08-2010, 03:46 PM
900 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கைகளுடன் மருத்துவமனை இருந்தது பற்றிய கல்வெட்டு காஞ்சீபுரம் அருகே கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆலய சுவரில் இருந்து பழைய கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் 900 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலுடன் இணைந்து ஒரு மருத்துவமனை செயல்பட்டது பற்றி அரிய தகவல் கிடைத்து உள்ளது.

இதுபற்றி தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியதாவது:-

பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் கரையோரம் திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த ஆலயத்தில் வீர சோழன் என்று பெயரிடப்பட்ட 15 படுக்கை கொண்ட மருத்துவமனை இருந்தது தெரியவந்துள்ளது. இதில் நிறைய ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். கோதண்டராமன், அஸ்வத்தமன், பகத்தன் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களும், பல செவிலியர்களும் ஊழியர்களும் இங்கு பணியில் ஈடுபட்டு வந்து இருப்பது தெரியவருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் எலும்புருக்கி நோய், சிறுநீரக கோளாறு, மூலவியாதி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து உள்ளது.

மேலும் இங்கு 20 வகையான ஆயூர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மருந்து கிட்டங்கிகளும் அங்கு செயல்பட்டு இருந்ததாக கல்வெட்டில் உள்ள தகவல் தெரிவிக்கிறது. இந்த மருத்துவமனையில் டி.பி. நோய்க்கு பஞ்சக தைலம் மூலம் நோய் குணப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவருகிறது.

இந்த ஆலயத்தின் கிழக்கு பிரகார முதல் தூணில் வீரராஜேந்திர சோழர் காலத்தின் முக்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கல்வெட்டு மூலம், அங்கு வேத கல்லூரி செயல்பட்டதும், இந்த கல்லூரியில் ரிக்வேதம், இலக்கணம் உள்ளிட்ட 8 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டதும், இந்த கல்லூரியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் இருந்துள்ளதும் தெரியவருகிறது. மேலும் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதியும் இங்கு அமைந்து இருந்த விவரம் கல்வெட்டில் தெரியவருகிறது.

இவ்வாறு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியுள்ளனர்.

....இந்நேரம்.காம்...30.08.2010

nambi
30-08-2010, 03:53 PM
நியு ஆர்லியன்ஸ், ஆக.30: தான் ஒரு முஸ்லீம் என ஐந்தில் ஒரு அமெரிக்கர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு குறித்து கவலைப்பட போவதில்லை என அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

ஒபாமா முஸ்லீம் என 18 சதவீத மக்கள் நம்புவதாக பியு ஆராய்ச்சி மையம் இம்மாதத் தொடக்கத்தில் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது. மார்ச் 2009-ல் 11 சதவீதத்தினர்தான் நம்பியதாகவும், அது இப்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒபாமா கிறிஸ்துவர் என கடந்த ஆண்டு 48 சதவீதத்தினர் நம்பியதாகவும், அது இப்போது 34 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

தனது மதம் தொடர்பான குழப்பத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒபாமா, இதுபோன்ற வதந்திகளுக்காக தான் பெரிதும் கவலைப்படப் போவதில்லை என்றார்.
....தினமணி 30.08.2010

nambi
30-08-2010, 03:55 PM
கான்பூர், ஆக.30: கங்கையை மாசுபடுத்திய 65 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 28-ம் தேதி கான்பூர் ஐஐடி ஏற்பாடு செய்திருந்த கங்கை ஆற்று நதிநீர்ப் படுகை நிர்வாகப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கங்கையை சுத்தப்படுத்துவதில் உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலின்மை குறித்து விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை மாசுபடுத்திவந்த 65 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படாமல் உள்ளது என்ற மத்திய அமைச்சரின் கருத்தில் தங்களது துறைக்கு உடன்பாடு இல்லை என உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி ராதேஷ்யாம் தெரிவித்தார்.
.....தினமணி 30.08.2010

nambi
31-08-2010, 04:22 PM
பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களுடன் தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை மென்மேலும் கவரும் வகையில் இலவச சிம்கார்டு கூப்பன்கள் விநியோகத்தை முகவர்கள் மூலம் துவக்கியுள்ளது.

பொதுமக்கள் கூடுமிடங்களில் கூப்பன்களை விநியோகித்து வருகிறது. இலவச சிம்கார்டு பெற ஒரு புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய முகவரி சான்று, மாணவர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை BSNL முகவர் அல்லது கார்டு விற்பனையாளர்களிடம் கொடுத்து சிம்கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
...இந்நேரம்.காம்..31.08.2010

nambi
31-08-2010, 04:33 PM
மதுரை, ஆக.31 (டிஎன்எஸ்) ஒரு டிக்கட் கட்டணத்தில் 2 பேர் விமானத்தில் பயணம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை 'ஏர் இந்தியா' அறிவித்துள்ளது.

மழைகாலத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் விவரம் வருமாறு:-

சாதாரண எகனாமி வகுப்பு கட்டணம் செலுத்தும் பயணிகள், எக்சிக்யூடிவ் வகுப்பில் பயணம் செய்யலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கை இல்லாதநிலையோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யும் சூழலோ ஏற்பட்டால், அவர்கள் எகனாமி வகுப்பில் தான் பயணம் செய்ய வேண்டும். இதனை காரணம் காட்டி, கட்டணத்தை திருப்பிதர கோரமுடியாது.

மற்றொரு சலுகையாக, முழு எகனாமி வகுப்பு கட்டணம் செலுத்தும் பயணிகள் தங்களுடன் ஒருவரை எகனாமி வகுப்பில் அழைத்து செல்லலாம். அவர்களுக்கு எக்சிக்யூட்டிவ் வகுப்பு சலுகை வழங்கப்படாது. அதே போன்று முழு எக்சிக்யூட்டிவ் கட்டணம் செலுத்தும் பயணிகள் தங்களுடன் அதே வகுப்பில் ஒருவரை இலவசமாக அழைத்து செல்லலாம்.

மற்றொரு சலுகையாக ரெயின்போ என்ற சூப்பர்சேவர் பேக்கை ஏர்இந்தியா அறிமுகம் செய்கிறது. இதன்படி ரூ.21 ஆயிரத்து 328க்கு 4 கூப்பன்கள் தரப்படும். அதை பயன்படுத்தி ஏர் இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் என்று குறிப்பிட்ட அனைத்து விமானங்களிலும் பயணம் செய்து கொள்ளலாம். ஒருமுறை செல்ல ஒரு கூப்பன் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால் தில்லியில் இருந்து திருவனந்தபுரம், கோவை, கோழிக்கோடு, கொச்சி செல்லும் விமானங்களுக்கு மட்டும் ஒரு கூப்பனுக்கு பதில் 2 கூப்பன்களை அளிக்க வேண்டும். இந்த சலுகையும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மேலும் விவரங்களுக்கு 1800 180 1407 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
...ஆறாம்திணை 31.08.2010

nambi
31-08-2010, 04:35 PM
இந்தியாவில் சர்வரை அமைக்கவும், தனது மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை ஆராயவும் ஒப்புக்கொண்டுதையடுத்து பிளாக்பெர்ரி செல்பேசி சேவை இந்தியாவில் தொடர்வதற்கு எதிரான முட்டுக்கட்டை நீங்கியது.

கனடா நாட்டின் செல்பேசி நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் பிளாக்பெர்ரி செல்பேசிகளை தயாரித்து, உயர் தொழில்நுடப் 3 ஜி சேவையை அளித்து வருகிறது. ஆனால் தனது சேல்பேசியைக் கொண்டு அனுப்பப்படும் மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை என்கிரிப்ட் செய்து அனுப்புவதால் அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அவைகளை ஆராய தங்களுக்கு தொழில் நுட்ப ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தகவல் தொடர்பு அமைச்சகம் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.

இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம், இந்தியாவில் சர்வரை வைக்கவும், தங்க்ளுடைய சேவைகளை ஆராய்ந்து பார்க்கவும் இந்திய அரசிற்கு தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தித்தர ஒப்புக் கொண்டது.

இந்த வசதிகள் அளிக்கப்பட்ட 60 நாட்களில் பிளாக்பெர்ரி சேவை தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து முடிவிற்கு வருவோம் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
....வெப்துனியா 31.08.2010

nambi
31-08-2010, 04:47 PM
கொழும்பு: இலங்கை வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் இன்று தமிழர் தாயகத்திற்கு விஜயம் செய்தார்.

4 நாள் பயணமாக நிரூபமா ராவ் நேற்று இலங்கை போய்ச் சேர்ந்தார். இன்று அவர் முதலில் வவுனியா சென்றார். பின்னர் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கும் சென்றார்.

அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைளை கேட்டறிந்தார். நாளை அவர் முல்லைத்தீவுக்கும், திரிகோணமலைக்கும் செல்லவுள்ளார்.

திரிகோணமலை பயணத்தின்போது பிள்ளையானை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்வது, மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது, மறு சீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விரைந்து செய்து வருவதாக இலங்கை கூறி வருகிறது. ஆனால் இதில் பெரும் சுணக்கம் காணப்படுவதாக ஈழத் தமிழ் கட்சிகள், அமைப்புகள் கூறி வருகின்றன. இதில் உண்மை நிலையை கண்டறிவதற்காகவும், விரைவில் இலங்கை வரவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகவும் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாளை நிரூபமா ராவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர்கள் சந்திப்பார்கள் என அக்கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு திட்டம் நிரூபமாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நிரூபமா தமிழர் பிரதிநிதிகளை சந்திப்பாரா, மாட்டாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

....தட்ஸ்தமிழ் 31.08.2010

nambi
31-08-2010, 06:00 PM
புதுடில்லி : இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் நேற்று கையெழுத்திட்டன. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை குவித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் மிச்சலின் கால்மி-ரேயும் கையெழுத்திட்டனர். இந்த மாற்றி அமைக்கப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தால், பாரிசைச் சேர்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ஓ.இ.சி.டி.,) விதிமுறைகளின்படி, சுவிஸ் வங்கிகளில் சட்ட விரோத பணத்தை குவித்துள்ள இந்தியர்களின் விவரங்களை மத்திய அரசு பெறலாம். சுவிட்சர்லாந்து அரசு ஏற்கனவே பல நாடுகளுடன் ஓ.இ.சி.டி., விதிமுறைகளின் படி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களைப் பெற முடியும்.
....தினமலர் 31.08.2010

nambi
01-09-2010, 05:45 AM
http://t1.gstatic.com/images?q=tbn:apeFzbTF8X-r4M:http://www.nitharsanam.net/wp-content/uploads/2007/02/ind.bus-burning.jpg

கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தர்மபுரி இலக்கியம்பட்டி அருகில் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதில், கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உடல் கருகி பலியாயினர். இந்த வழக்கு கோவை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. 31 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். கோகிலவாணியின் தந்தை வீராசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றி, புதிதாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கோரினார்.

மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வழக்கை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கில் சேலம் வழக்கறிஞர் சீனிவாசனை அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்க 2003ம் ஆண்டு அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், வக்கீல் சீனிவாசனை அரசு நியமிக்காமல் காலம் தாழ்த்தியது. இதையடுத்து வீராசாமி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதன்பின், 2005ம் ஆண்டு வக்கீல் சீனிவாசனை தமிழக அரசு நியமித்தது.

அதன்பின்பு வழக்கு விசாரணை தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணராஜா, கடந்த 2007 பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேருக்கு து£க்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் வழங்கினார். இதை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதி முருகேசன் விசாரித்து, 2007ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தீர்ப்பு கூறினார். அப்போது, 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தார். 25 பேரின் 7 ஆண்டு சிறை தண்டனை, 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஜூலையில் வழக்கு விசாரணை முடிந்தது. நீதிபதிகள் சிங்வி, சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர்.

நீதி நிலைத்துவிட்டது காயத்ரி தந்தை பேட்டி



தர்மபுரி பஸ் எரிப்பில் கொல்லப்பட்ட மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன், விருத்தாசலம் அரசு கலை கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இப்போது கடலூரில் வசிக்கிறார்.


உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து வெங்கடேசன் கூறியதாவது:


உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.


3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், எங்களிடம் இருந்து அநியாயமாக பறிக்கப்பட்ட எங்கள் மகள் மீண்டும் கிடைக்க போவதில்லை. நாங்கள் சாகும் வரை எங்களுக்கு அந்த வலியும் சோகமும் இருக்கும். ஆனால், இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற ஈவு இரக்கமற்ற கொடூர செயல்கள் நடக்காமல் தடுக்கும். ஒன்றும் அறியாத அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதற்கு அச்சாரமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எதிர்காலத்தில் கொடூர சம்பவங்கள் நடக்காமல் தடுக்க என் மகள் மற்றும் இரு மாணவிகள் தங்களின் விலை மதிப்பில்லாத உயிர்களை தியாகம் செய்திருப்பதாக கருதி ஆறுதல் அடையலாம். தொடக்கத்தில் திசை மாறி சென்ற இந்த வழக்கை சரியான பாதைக்கு திருப்பி நீதியை காப்பாற்றிய நீதித் துறைக்கும் அதற்காக பாடுபட்ட தற்போதைய தமிழக அரசுக்கும் நன்றி. இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.


8 நாள் நடந்தது விசாரணை




தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் 8 நாட்கள் மட்டுமே விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24, 25, 26ம் தேதிகளிலும், டிசம்பர் 8, 9, 10ம் தேதிகளிலும், கடந்த ஜூலை 27, 28ம் ஆகிய தேதிகளிலும் விசாரணை நடந்தது.

http://thatstamil.oneindia.in/img/2010/08/31-hanging-rope-200.jpg

தமிழக சிறைகளில் தூக்கு தண்டனை கைதிகள் 13 பேர்


தமிழக சிறைகளில் மொத்தம் 13 தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி ஏற்கனவே 10 பேர் சிறைகளில் உள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக வேலூர் மத்திய சிறையில் 8 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு தடா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை 2000ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில், அரியலூர் மாவட்டத்தில் குழந்தையை கடத்திக் கொலை செய்த வழக்கில் சுந்தர்ராஜன் என்பவருக்கு உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. வேலூர் சிறையில் 8 பேரும், திருச்சி, மதுரை சிறையில் தலா ஒருவரும் உள்ளனர். இப்போது பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தூக்கு தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.


கோவை மத்திய சிறையில் இருந்த தூக்கு தண்டனை கைதி கோவிந்தசாமிக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


கருணை மனு செய்தால் நிராகரிக்க வேண்டும்



பஸ் எரிப்பில் பலியான மாணவி ஹேமலதாவின் தாய் காசியம்மாள் நேற்று கூறியதாவது:

என்னுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. நீதியும் தாமதமாகவே கிடைத்துள்ளது. எனினும், இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் புரியும் எண்ணத்தை தடுக்கும். தூக்கு தண்டனை பெற்ற 3 பேர் கருணை மனு செய்தால், அதை அரசு பரிசீலிக்கவே கூடாது. பஸ்சில் அத்தனை மாணவிகளை பார்த்த பிறகும், அவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல நினைத்துள்ளனர். குற்றத்தின் பயங்கரத்தை கருத்தில் கொண்டு, கருணை மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு காசியம்மாள் கூறினார்.

தாமதமாக கிடைத்த நீதி கோகிலவாணி தந்தை பேட்டி

தீர்ப்பு குறித்து நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் தனது மகன்களுடன் வசிக்கும் கோகிலவாணியின் தந்தை வீராசாமி (62) கூறியதாவது:<br>எதிர்பார்த்த தீர்ப்பு என்றாலும் மிகவும் தாமதமாக இந்த நீதி கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தைரியமாக வந்து சாட்சி சொன்ன கோவை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், திறம்பட வாதாடிய வக்கீல்கள், நல்ல தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் என அனைவருமே பாரட்டுக்கு உரியவர்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பலர் பார்க்க நடந்த கொடூர சம்பவத்துக்கு தண்டனை 3 ஆண்டிலேயே கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு வீராசாமி தெரிவித்தார். வீராசாமிக்கு விவேக், இளங்கோ என 2 மகன்கள். இதில் கோகிலவாணி இறந்ததால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலை வழங்கியது. கோகிலவாணியின் சகோதரர் இளங்கோ மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

பஸ்சுக்கு தீ வைத்தது எப்படி?

கோவை வேளாண் பல்கலை. மாணவ, மாணவிகள் 12 நாட்கள் கல்வி சுற்றுலாவாக கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி புறப்பட்டனர். 54 மாணவர்கள் ஒரு பஸ்சிலும், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அடங்கிய 50 பேர் இன்னொரு பஸ்சிலும் சென்றனர். பல இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையூர் ஆராய்ச்சி மையத்துக்கு வந்தனர். அங்கு ஆய்வை முடித்து விட்டு, பிப்ரவரி 2ம் தேதி கல்வி சுற்றுலாவை முடித்தனர்.<br>பின்னர் ஒகேனக்கல் செல்ல புறப்பட்டனர். மாணவிகள் இருந்த பஸ் முதலில் சென்றது. மாணவர்கள் பஸ் பின் தொடர்ந்தது. எல்லோரும் தர்மபுரியில் இறங்கி மதிய உணவை சாப்பிட்டனர். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனை வழங்கிய விவரம் வெளியானது.


தகவல் அறிந்த மாணவர்கள் ஒகேனக்கல் செல்லும் திட்டத்தை ரத்து செய்து, அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். பஸ் பாரதிபுரம் அருகில் வந்தபோது, அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள இலக்கியம்பட்டியில் மறியல் நடந்து கொண்டிருந்தது. இதனால் பாரதிபுரத்தில் மாணவிகள் வந்த பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்தினார். பஸ் நின்ற 3வது நிமிடத்தில், பைக்கில் வந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகியோர் பஸ்சின் குறுக்கே வண்டியை நிறுத்தினர். வண்டியை ஸ்டார்ட் செய்த நிலையில் முனியப்பன் வண்டியில் இருக்க, நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகியோர் 2 கேனில் கொண்டு வந்த பெட்ரோலை பஸ்சில் ஊற்றினர். இதை கண்டு பஸ்சில் இருந்த பேராசிரியைகள், டிரைவர் ஆகியோர் கதறினர். அதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது ரவீந்திரன், பஸ்சோடு அனைவரையும் சேர்த்து கொளுத்து என்று கூற, திறந்திருந்த பஸ்சின் கதவை நெடுஞ்செழியன் மூடி, பஸ்சுக்கு தீ வைத்தார். பின்னர் 3 பேரும் பைக்கில் தப்பினர் என்று விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஸ்சில் சிக்கிய மாணவிகளை பின்னால் பஸ்சில் வந்த மாணவர்கள் காப்பாற்றினர். அவர்கள் வராமல் இருந்திருந்தால் மாணவிகள் பலர் இறந்திருப்பார்கள் என்று அரசு சிறப்பு வக்கீல் சீனிவாசன் தெரிவித்தார்.

........தினகரன் 30.08.2010

nambi
01-09-2010, 05:54 PM
சென்னை, ஆக. 31: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். மாலதி ஏற்கெனவே வகித்து வரும் விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையாளர் பதவி அவரிடமே கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, பொறுப்புகளை மாலதியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீபதி.

தஞ்சையைச் சேர்ந்தவர்: 1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்தவர் மாலதி. தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1954-ம் ஆண்டு பிறந்தார். தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்.

எம்.எஸ்ஸி., விலங்கியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாலதி, பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார். திருச்சியில் உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினார்.
....தினமணி 01.09.2010

nambi
01-09-2010, 05:56 PM
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ள நிலையில், யானையை இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

புலிகளைப் பாதுகாக்க தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளதைப் போல, யானைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய யானைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதற்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

யானைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுற்றுச்சூழல் நிபுணர் மகேஷ் ரங்கராஜன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 12 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக் குழு நேற்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

.....பிபிசி தமிழோசை

nambi
01-09-2010, 05:59 PM
வாஷிங்டன், ஆக.31: அன்னை தெரசாவை கெளரவிக்கும் வகையில் அமெரிக்க அஞ்சல் துறை அவருக்கு செப்டம்பர் 5-ம் தேதி அஞ்சல்தலை வெளியிடுகிறது.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 1979-ல் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு அஞ்சல் தலைமூலம் பாராட்டு தெரிவிக்க உள்ளதாக அமெரிக்க அஞ்சல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது.

கொலராடோவில் ஓவியர் தாமஸ் பிளாக்ஷிர் வரைந்த அன்னை தெரசாவின் உருவப்படம் இந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றிருக்கும்.

அமெரிக்க அஞ்சல்துறை ஒவ்வொரு ஆண்டும், பிரபலமான நபர்கள். இடங்கள், நிறுவனங்களை கெளரவிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது.

குறிப்பிட்ட காலம் வரை இத்தகைய அஞ்சல் தலைகள் விற்பனை செய்யப்படும்.

....தினமணி 01.09.2010

nambi
01-09-2010, 06:01 PM
மும்பை: இருசக்கர வாகன விற்பனையில் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனை அளவை எட்டியுள்ளது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி.

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் விற்பனையில் 34 சதவீத உயர்வு கண்டுள்ளது இந்த நிறுவனம். டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆகஸ்டில் 127875 ஆக இருந்த வாகன விற்பனை, இந்த ஆண்டு 170735 ஆக உயர்ந்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனையில் முன்னெப்போதும் காணாத உயர்வு என டிவிஎஸ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் மொத்த வாகன விற்பனை 786256 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 594927 யூனிட்டுகளாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூட்டர் பிரிவில் விற்பனை கடந்த ஆண்டை விட 43 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 28582 யூனிட்டுகளாக இருந்த ஸ்கூட்டியின் விற்பனை இந்த ஆண்டு ஆகஸ்டில் 40913 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

இருசக்கர வாகன ஏற்றுமதியில் 62 சதவீத உயர்வைக் கண்டுள்ளது இந்த நிறுவனம்.

மூன்று சக்கர வாகன விற்பனையில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது டிவிஎஸ். 2009 ஆகஸ்டில் வெறும் 1033 யூனிட்டுகளாக இருந்த ஆட்டோ விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் 3626 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

.....தட்ஸ்தமிழ்

nambi
01-09-2010, 06:04 PM
http://www.dinamani.com/Images/article/2010/8/31/cin5.jpg

ஜெனிலியாவும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலித்து வருகின்றனர். இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தாலும், விழாக்களுக்கு ஒன்றாகவே வந்து மீடியாக்களுக்கு அவ்வப்போது செய்தி தருகின்றனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் இருவருக்கும் நெருங்கியவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து ஜெனிலியாவிடம் கேட்ட போது கோபமானார். ""நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. வதந்தியைக் கிளப்பி விடுவதால் யாருக்கு நன்மை என்று தெரியவில்லை. காதல் என்பது என் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி விவரிக்க விரும்பவில்லை.

நடிகைகளுக்கு கிசு கிசு புதிதல்ல என்றாலும், திருமணம் குறித்த செய்தியால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு விட்டது. என் திருமணத்தில் ரகசியம் காக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தளவுக்கு நான் கோழையும் அல்ல. எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டுத்தான் திருமணம் செய்வேன்'' என்றார்.
........தினமணி 01.09.2010

nambi
01-09-2010, 06:07 PM
அரசாங்கம் முன்வைக்க தீர்மானித்திருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவெடுத்துள்ளது

இன்று கூடிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இதுதொடர்பில் தீர்மானிக்கப்பட்டதமாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்திலும் மக்களுக்கு பாதகமான விடயங்கள் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி காலத்தை இரண்டு தவணைகளுக்கு மேல் நீடித்தல், மற்றும் ஆணைக்குழுக்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு அளிக்கும் ஏற்பாடுகளை இந்த அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை ஆட்சேபித்தே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
....தமிழ்வின் 01.09.2010

nambi
01-09-2010, 06:13 PM
புதுதில்லி, செப்.1 (டிஎன்எஸ்) அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி இந்தயாவில் பயணம் மேற்கொள்ளும்போது அவரது உரை இடம்பெறுவதெற்கென நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஒருவாரம் முன்னதாகவே தொடங்குகிறது.

புதுதில்லியில் இன்று (செப்.1) செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பி கே பன்சால் ஒரு மாத கால குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 8ஆம் தேதி தொடங்கும் என்று அதற்கு அடுத்த நாள் கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபரின் உரை இடம்பெறக்கூடும் என்றும் கூறினார். எனினும் இதுகுறித்து மக்களவை தலைவர் மீராகுமார்தான் இறுதி முடிவு எடுப்பார் என்றார்.

நட்பு நாடுகளின் தலைவர்கள் வரும்போது இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொள்வது உலக வழக்குதான் என்று கூறிய பன்சால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உறவுகள் மேம்பட்டு வருகின்றன என்றார்.

பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்திய நாடாளுன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் 2000மாவது ஆண்டில் உரையாற்றினார்.

அதிபர் புஷ் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும்போது கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதாக உத்தேசிக்கப்பட்ட நிகழ்ச்சி இடதுசாரிகள் வெளிநடப்பு செய்யப்போவதாக அச்சுறுத்தியதன் விளைவாக கைவிடப்பட்டது. (டிஎன்எஸ்)
....சென்னை ஆன்லைன் 01.09.2010

nambi
02-09-2010, 02:59 PM
புதுதில்லி, செப்.2: மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள போலீசாரை மீட்க பிகார் அரசு தீவிர முயற்சி செய்துவருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார். விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிகாரின் லகிசராய் மாவட்டத்தில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை துணை ஆய்வாளர்கள் ருபேஷ்குமார் மற்றும் அபய் பிரசாத் யாதவ் உள்ளிட்ட 4 போலீசாரை கடத்திச் சென்றனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 7 போலீசார் கொல்லப்பட்டனர்.

தற்போது இந்தப் பிரச்னை முழுவதையும் பிகார் மாநில அரசு கவனித்து வருகிறது. மாவோயிஸ்டுகளுடன் தற்போது அம்மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் சாதகமான முடிவு வரும் என எதிர்பார்ப்பதாக ஜி.கே.பிள்ளை குறிப்பிட்டார்.
...தினமணி 02.09.2010

nambi
02-09-2010, 03:01 PM
பாஸ்டன் : வரும் 2015ம் ஆண்டில், இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என, அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. அமெரிக்கா, பாஸ்டனில் உள்ள மேலாண்மை ஆலோசனை நிறுவனம், உலக அளவிலான இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. "இன்டர்நெட்'ஸ் நியூ பில்லியன்' என்ற தலைப்பில், ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, இந்தோனேசியா (பிரிசி) ஆகிய நாடுகளில், 61 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்தினர். அதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும், எட்டு கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில், இது 7 சதவீதம். 2009 முதல் 2015 வரையில், ஒவ்வொரு ஆண்டும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த நாடுகளில் 20 சதவீதம் அதிகரிக்கும். வரும் 2015ல், இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு எண்ணிக்கை, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும். அதாவது, 23 கோடியே 70 லட்சம் பேர் இன்டர்நெட் பயன்படுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

....தினமலர் 02.09.2010

nambi
02-09-2010, 03:06 PM
ஹைதரபாத்: ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் ராஜசேகர ரெட்டியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடப்பா மாவட்டம் இடுப்புலபாயா எஸ்டேட்டில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். ராஜசேகர ரெட்டி சமாதியில் அவரது குடும்பத்தினர் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ராஜசேகர ரெட்டி நினைவாக ஆந்திர மாநிலம் முழுவதும் சுமார் 600 சிலைகளை திறந்து வைத்துள்ளனர்.
....தினகரன் 02.09.2010

nambi
02-09-2010, 03:14 PM
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்தில் நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கலந்துகொண்ட நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கவில்லை.

யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை.

இந்தியா யுத்தத்தின் இறுதித் தருணங்களில் ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் கருதுகின்றனர்.

யுத்தத்திற்குப் பின்னர் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புச் செய்யும், தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஒருவருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. அக்கறை இல்லாமல் இருக்கிறது. உரிய தீர்வுகளை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தத் தவறிவிட்டது.

யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், வடக்கில் இராணுவ குடியிருப்புகள், குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன சமநிலை பாதிப்படைகிறது. மீள்குடியேற்றம், எமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

.....தமிழ்வின், தட்ஸ்தமிழ் 02.09.2010

nambi
02-09-2010, 03:17 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பெண்கள் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் பரவியது. மகாராஷ்டிரத்தில் இந்த நோய்க்கு 767 பேர் பலியாயினர். குஜராத்தில் 346 பேரும், கர்நாடகத்தில் 225 பேரும் உயிரிழந்தனர். டெல்லி, கேரளாவில் தலா 118 பேரும், ஆந்திராவில் 85 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
பின்னர் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட இந்த நோய் இப்போது மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தி்ல் பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆகஸ்டு 11ம் தேதி நந்தனம் அப்பல்லோ மருத்துவமனையில் கடலூரைச் சேர்ந்த ஹேமலதா என்பவரும், 25ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெய்னபுன் சகரியா ஆகியோரும் பன்றிக் காய்ச்சால் இறந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராயபுரம் ரெய்னி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அன்னபூர்ணா (32) என்ற பெண்ணும் 29ம் தேதி இறந்தார்.

இந்த 3 பெண்களின் ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதிக்கப்பட்டதில் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

...தட்ஸ் தமிழ் 02.09.2010

nambi
02-09-2010, 03:20 PM
தமிழனப் படுகொலையை மறைக்க மற்றொரு முயற்சியாக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்புவில் நடத்த சிறிலங்க அரசு முயற்சித்து வருகிறது.

சமீபத்தில், இந்திய சர்வதேச திரைப்பட விருது விழா (ஐஃ*பா) இலங்கையில் நடத்தப்பட்டது. இதற்கு தமிழன அமைப்புகளும், தமிழ்த் திரையுலகமும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அது தோல்வியில் முடிந்தது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா போன்ற முன்னணி நடிகர்களும் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக்கு பெரும் நட்டத்தையும் இந்த விழா ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து 2வது கட்ட முயற்சியாக கொழும்புவில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த சிறிலங்க அரசு முயன்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 முதல் 8 ஆம் தேதி வரை இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்க அரசின் இத்திட்டம் குறித்த தகவல் வெளியானதும், சர்வதேச அளவில் உள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, மூத்த எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர் உட்பட 25 பேர் இன்று மாலை சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, சிறிலங்க அரசு தங்கள் போர்க்குற்றங்களை மறைப்பதற்காக நடத்த திட்டமிட்டுள்ள சர்வதேச தமிழ் எழுத்தளார்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

.....வெப்துனியா 02.09.2010

nambi
02-09-2010, 03:28 PM
சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.

இவர் இயக்கிய முதல் படம் , 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.

இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

...தட்ஸ்தமிழ் 02.09.2010

nambi
02-09-2010, 03:32 PM
குன்னூர் : ஊட்டி மலை ரயில் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது; குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டதால், 40 நிமிடம் குன்னூர் நகரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயில், 150 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. கல்லாறு அருகே வந்த போது ரயிலின் இழுவைத் திறன் குறைந்து, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நின்றது. குன்னூர் லெவல் கிராசிங் அருகே வந்த போது, ரயில் மேற்கொண்டு இயக்க முடியாமல் நின்றது. லெவல் கிராசிங் கேட் மூடப்பட்டதால் நகருக்குள் நுழையும் வாகனங்களும், வெளியே வரும் வாகனங்களும் இருபுறமும் ஸ்தம்பித்து நின்றன. ரயில் இன்ஜின் சிலிண்டர் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கூடியிருந்த மக்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இன்ஜின் டிரைவர்கள், பரவிய தீயை சில நிமிடங்களுக்குள் நீரை ஊற்றி அணைத்தனர். பிறகு, குன்னூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டீசல் இன்ஜின் கொண்டு செல்லப்பட்டு, நீராவி இன்ஜின் இழுத்து வரப்பட்டது. இதனால், குன்னூர் நகரில் 40 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

....தினமலர் 02.09.2010

nambi
02-09-2010, 03:37 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே சமீபகாலமாக மோதல் அதிகரித்து வந்தது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால், மோதல் ஓரளவு குறைந்தது. இந்நிலையில் 1300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ஷியா பிரிவின் மூத்த தலைவர் அலியின் நினைவு தினத்தை முன்னிட்டு லாகூரில் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவினர் நேற்று மாலை ஊர்வலம் நடத்தினர். இதில் 45,000 பேர் பங்கேற்றனர். இமாம்பர்கா என்ற இடத்தில் நேற்று மாலை 6.50 மணியளவில், இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். அடுத்த அரை மணிநேரத்தில் பாத்தி சவுக் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 35 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

.....தினகரன் 02.09.2010

nambi
03-09-2010, 02:08 PM
பீகார்: பீகார் மாநிலம் லகிஷரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் எஸ்ஐ லூகாஸ் டெடே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 8 பேரை விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். ஆக., 29ல் கஜ்ரா மலைப்பகுதியில் கடத்தப்பட்ட போலீசார் 4 பேரில் கெடு முடிந்ததால் அபய் யாதவ் நேற்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எஞசியுள்ள போலீசார் மூவரில் ஒருவரான லூகாஸ் இன்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.....தினகரன் 03.09.2010

nambi
03-09-2010, 02:15 PM
கடலூர்: காவல் நிலையத்தில் கைதி தற்கொலை செய்தது தொடர்பாக உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சக்தி விளாகத்தைச் சேர்ந்தவர் தங்க ராஜ். இவரைக் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அப்போது உதவி ஆய்வாளராக இருந்த சிவஞானம் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றார்.

தங்க ராஜ் காவல் நிலையத்தில் திடீரென்று மரணம் அடைந்தார். அவர் இறப்பில் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. காவலர் (போலிஸ்) அராஜகத்தை எதிர்த்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தங்கராஜ் அப்பாவி என்றும், சப்- இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றே அவரை அழைத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரை விடுவிக்க ரூ. 15,000 பணம் கேட்டு அதில் ரூ. 5,000 வாங்கியதும் வெளிச்சத்திற்கு வந்தது.

தங்க ராஜை காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளரும், காவலர்கள் பொன்னம்பலம், சிவகொழுந்து ஆகியோரும் அடித்துச் சித்ரவதை செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் தான் அவர் விஷம் குடித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பேரில் கடலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சண்முக நாதன் அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை வரும் 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதன்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் 3 பேரும் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
....தட்ஸ் தமிழ் 03.09.2010

nambi
03-09-2010, 02:34 PM
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை வந்தார்.
தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் ' இலங்கைக்கு இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் சுற்றுப்பயணம் பற்றிய கேள்விக்கு ' அவர் இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.

அந்த அறிக்கையை இந்திய பிரதமரிடம் தருவார்.அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பிறகு கருத்து சொல்கிறேன் என்றார். இலங்கையில் தமிழர்களை மீள்குடியமர்த்துவது எந்த நிலையில் உள்ளது என்று கேட்டதற்கு, இலங்கையில் தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணி திருப்தியாக இல்லை. இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள்.

தமிழர்கள் அதிகமாக உள்ள வடகிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமல் செயல்படுவதால் தமிழர்களின் பிரச்சனைகள் தீராமல் உள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மனிதாபிமானத்துடன் நிதிஉதவி அளிப்பது பாரட்டுக்குரியது. மறுவாழ்வு புனரமைப்பு பணிக்காக தாரளமாக உதவி வருகிறது.

இதன் மூலம் தமிழர்களின் உணவு உடை உள்பட பல பணிகள் செய்யப்படுகின்றன. ஆனால் தமிழர்களின் கல்விக்காவும், மருத்துவம் போன்றவற்றுக்கும் இன்னும் கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியதாக அங்கிருந்தது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
....4தமிழ் மீடியா 03.09.2010

nambi
03-09-2010, 02:37 PM
விழுப்புரம், செப்.2: சிறு, குறு, பெரு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்மோட்டார் வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், மின்வாரிய பொறியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

எக்காரணத்தைக் கொண்டும் மின் இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தக் கூடாது, மின் திருட்டை முற்றிலும் ஒழிக்க நவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தும்போது மலைப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தகுதி நிர்ணயம் செய்யப்பட்ட மோட்டார்களை விவசாயிகளே வாங்கிக் கொள்ளவும், அத்தொகையை விவசாயிக்கு அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ஆர். பழனிச்சாமி பேசியது:

மிகவும் செயல்திறன் குறைவாகவுள்ள மோட்டார் பம்ப் செட்டுகளால் மிகவும் குறைவான நீர் இறைக்கும் திறனும், அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சும் தன்மையும் ஏற்படுகிறது.

எனவே உயர்திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட்டுகளை ஸ்டார் ரேட்டிங் மூலம் வழங்க இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் திறனற்ற மோட்டார் உள்பட அனைத்து உபகரணங்களும் புதிதாக மாற்றி இலவசமாக வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் இலவச மின்சாரம் தடைபடாது.

புதிதாக வழங்கப்படும் மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பராமரிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், விழுப்புரம் மின்பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர் எம்.நெüசாத் வரவேற்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ந. வெங்கடாசலம், கடலூர் கண்காணிப்பு பொறியாளர் எஸ். ரவிராம், திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. பழனிசாமி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
....தினமணி 03.09.2010

nambi
03-09-2010, 02:45 PM
புதுதில்லி, செப்.2 (டிஎன்எஸ்) உணவு தானிய விவகாரம் பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு இன்று (செப்.2) டெல்லியில் அவசரமாக கூடுகிறது. இதில் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாமா அல்லது குறைந்த விலைக்கு வினியோகிக்கலாமா என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏராளமான தானிய சேமிப்புக்கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்புக்கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள கோதுமை போன்ற உணவு தானியங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 61 ஆயிரம் டன் தானியங்கள் கெட்டுப்போய் யாராலும் பயன்படுத்த முடியாத அளவு வீணாகப்போய் விட்டன என்றும் மேலும் 1 கோடியே 78 லட்சம் டன் உணவு தானியங்கள் சரியாக பாதுகாக்க முடியாமல் கெட்டுப்போக தொடங்கி விட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு சமூக நல அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். ``சேமிப்புக்கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்'' என்று கடந்த 12-ந் தேதி நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது பற்றி மத்திய விவசாய மந்திரி சரத்பவார் கருத்து தெரிவிக்கையில் ``உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க இயலாது'' என்று தெரிவித்தார். ``சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது ஆலோசனைதானே தவிர உத்தரவோ தீர்ப்போ அல்ல, எனவே அதை அமல் படுத்த வேண்டிய கட்டாயம் கிடையாது'' என்றும் சரத்பவார் கூறினார்.

சரத்பவாரின் இந்த அறிவிப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணையின் போது இரு நீதிபதிகளும் சரத்பவாருக்கு பதில் அளிக்கும் சில கருத்துகளை தெரிவித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனை பார்த்து அவர்கள் கூறுகையில், திறந்த வெளியில் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை வீணாக அழிய விட்டு வேடிக்கை பார்ப்பீர்கள் ஆனால், ஏழைகளுக்கு இலவசமாக வழங்க மாட்டீர்கள் இது என்ன வழக்கம்? உச்சநீதிமன்றம் பிறப்பித்தது உத்தரவுதான் மத்திய அரசுக்கான வெறும் ஆலோசனை அல்ல. இதை உங்கள் மந்திரியிடம் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்குவது பற்றி மத்திய அரசு உடனே உத்தரவாதம் தர வேண்டும் என்று பாரதீய ஜனதாவும் மற்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.

அப்போது விவசாய அமைச்சர் சரத்பவார் பதில் அளிக்கையில் 'உச்சநீதிமன்றத்தின்' முடிவை மதிக்கிறோம், அதை கவனத்தில் கொள்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு இன்று (செப்.2) டெல்லியில் அவசரமாக கூடுகிறது. வீணாகும் உணவு தானியங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கிறார்கள். இந்த தகவலை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மும்பையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாமா அல்லது குறைந்த விலைக்கு வினியோகிக்கலாமா என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் உணவு தானியங்கள் வீணாகாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் கருத்துகளை அமல் படுத்துவது பற்றியும் அமைச்சர்கள் குழு விவாதித்து முடிவு எடுக்க உள்ளது. (டிஎன்எஸ்)
....ஆறாம்திணை 03.09.2010

nambi
03-09-2010, 02:49 PM
பெரேலி: லஞ்சம் வாங்கியதை தட்டி கேட்ட போக்குவரத்து பெண் எஸ்.ஐ.யை, டிராபிக் கான்ஸ்டபிள்கள் 3 பேர் தாக்கியதோடு சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு ரோட்டில் தரதரவென்று இழுத்து சென்ற சம்பவம் போலீஸ் வட்டாரத்தை உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து பெண் எஸ்ஐ கல்பனா சேக்ஸ்னா. நேற்று மாலை ஜாட் ரெகிமென்டல் சென்டர் பகுதியில் டிராபிக் கான்ஸ்டபிள்கள் மிரட்டி லஞ்சம் வாங்குவதாக அவருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த கான்ஸ்டபிள்களை கையும் களவுமாக பிடிக்க துப்பாக்கி ஏந்திய காவலர் மற்றும் டிரைவருடன் ஒரு தனியார் வாகனத்தில் அந்த பகுதிக்கு விரைந்தார்.

லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த 3 கான்ஸ்டபிள்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். அவரிடம் இருந்து தப்பித்து அவர்களது போலீஸ் வாகனத்தில் ஓட முயன்றனர். கல்பனாவும் சினிமாவில் வருவது போல பாய்ந்து டிரைவர் சீட்டில் இருந்தவரின் கழுத்தை பிடித்து கொண்டார். இருந்தும் அவர்கள் காரை ஸ்டார்ட் செய்து பறக்கத் தொடங்கினர். எஸ்ஐ கைகளை பிடித்துக்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டிலேயே இழுத்து சென்றனர். பிறகு ரோட்டில் தள்ளி விட்டனர். இதில் கல்பனாவின் கைகள் முறிந்தது. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
....தினகரன் 03.09.2010

nambi
03-09-2010, 02:56 PM
சென்னை, செப்.2 (டிஎன்எஸ்) இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பதிவு செய்தல், புதுப்பித்தல், வேலைக்காகப் பரிந்துரைத்தல் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுநாள்வரை இப்பணிகள் அனைத்தும் மனுதாரர்கள் நேரில் அணுகி பயன் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரடியாக வருகைபுரிவதைத் தவிர்க்கும்பொருட்டும் இன்றைய தொழில் நுட்ப வசதிக்கேற்ப அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் வழியாக பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் செய்யும் வகையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் கணினி வழியாக ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வலைபின்னல் (நெட்வொர்க்) வாயிலாக இணைப்பதன் மூலம் அலைச்சல், காலவிரயம், உணவு மற்றும் பயணச் செலவு பதிவுதாரர்களுக்குத் தவிர்க்கப் பெறும். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகள் சீர்செய்யப்பட்டு மக்களுக்கான சேவைத்திறன் செம்மைப்படுத்தப்படுகிறது. மேலும், ஆன்லைன் மூலம் பதிவு மற்றும் இதரப்பணிகளை மிகக் குறைந்த செலவில் தங்களின் இருப்பிடத்திலேயோ அல்லது மக்கள் சேவை மையங்களிலேயோ ஆன்லைன் மூலம் பதிவு மற்றும் இதர வேலைவாய்ப்பகச் சேவைகளையும் மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளலாம். இதற்கெனப் பதிவுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுங்தொலைவு பயணம் மேற்கொண்டு வேலைவாய்ப்பகத்திற்கு வருகைபுரியும் அவசியம் இல்லை. எனினும், விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் வந்தும் தமது பணிகளை முன்பிருந்தவாறு செய்து கொள்ளலாம். தங்களின் முதுநிலைப் பற்றிய விவரங்களை பதிவுதாரர்கள் அவ்வப்போது தெளிவாக இணையதளத்தினைப் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வலைப் பின்னல் (Net Working) முறையில் கணினிமயமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 01.09.2010 முதல் 14.09.2010 வரையிலான காலத்தில் துறை சர்வருக்குள் உட்செலுத்தப்படும் விவரப் பதிவுகளைச் சரிப்பார்த்து, சோதனை ஓட்டம் (Testing and trial run) மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மேற்படி பணிக்கென அனைத்து வேலைவாய்ப்பக பணிகளான பதிவு செய்தல் (Registration), பதிவுகளைப் புதுப்பித்தல் (Renewal), இன்றைய நிலைக்கேற்ப விவர மாற்றம் செய்தல் (Updation of data) முகவரி மாற்றம் (Change of Address), நியமனங்கள் (Nominations) போன்றவற்றை 01.09.2010 முதல் 14.09.2010 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்துப் பதிவுதாரர்களின் விவரங்களும் வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் முழுமைப்படுத்தப்படும் பணி முடிவுற்றவுடன் இணையதளத்தில் உட்செலுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அவரவர் அளவில் சரிபார்த்து அதனில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் பதிவுதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை நேரில் அணுகி மூன்று மாத காலஅவகாசத்திற்குள் சரிசெய்து கொள்ளலாம். இத்திட்டம் ரூ.5.02 கோடி செலவில் எல்காட் நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் வாலாயப் பணியான பதிவுசெய்தல் பணியினை 15.09.2010 முதல் இணைதளம் வழியாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்களை நேரில் அணுகியோ மேற்கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பகங்களின் இணையதள முகவரி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் திரு ஆ.சு. ஜீவரத்தினம், இ.ஆ.ப. தெரிவித்தார். (டிஎன்எஸ்)
....ஆறாம்திணை 03.09.2010

nambi
04-09-2010, 04:51 PM
புதுச்சேரி : காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் தமிழர், திராவிட கழகம் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்தனர். பகல் 1.45 மணியளவில் கோயில் வாசலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் நான்கொரு நாளில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார்.
.....தினமலர் 04.09.2010

nambi
04-09-2010, 04:56 PM
கொழும்பு, செப். 1: இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார்.

உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மறு குடியமர்வு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்த இருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை நிருபமா திட்டவட்டமாக மறுத்தார்.

இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் உள்பட அனைத்து நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், தற்போது வடக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களை நேரில் பார்வையிட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முகாமை பார்வையிட்டார். புதன்கிழமை முல்லைத் தீவில் உள்ள அகதி முகாம்களை அவர் பார்வையிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறுதிக்கட்டத்தில் முல்லைத் தீவு மக்கள் பட்ட துயரங்களை, துன்பங்களை நினைவுகூர்ந்த அவர், அப்படிப்பட்ட துயரத்திலும் நெஞ்சுறுதியோடு இருந்த முல்லைத்தீவு மக்களை அவர் பாராட்டினார். உங்கள் உறுதி இரும்பைப் போன்றது என்று அவர் வர்ணித்தார்.

முல்லைத்தீவில்÷போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து மறு குடியமர்வு செய்து அவர்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றார் அவர். அப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முல்லைத் தீவு மாவட்ட அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் திரிகோணமலைக்கு சென்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையனைச் சந்தித்தார். அம் மாகாணத்தில் இந்தியா சார்பில் வீடுகளை கட்டிக் கொடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர் என போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். திரிகோணமலைப் பகுதியில் உள்ள திருகோனேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 வலுவான பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார். அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா, துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.

ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ நிருபமா சந்திக்கிறார்.
....தினமணி 04.09.2010

nambi
04-09-2010, 05:00 PM
புதுதில்லி, செப்.3: இலங்கைக்கு 5 நாள் பயணமாக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் வரும் 5-ம் தேதி செல்கிறார்.

இலங்கை வரும்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை ராணுவத் தலைமை தளபதி ஜகத் ஜயசூர்யா, பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை வி.கே. சிங் சந்தித்துப் பேசுவார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் கடைசி கட்டப் போரில் உதவிய வி.கே. சிங்க்கு யுத்த சேனா பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வருகையின்போது வவுனியா உள்ளிட்ட பகுதிகளையும் வி.கே. சிங் பார்வையிடுவார் என்று தெரிகிறது.
....தினமணி 04.09.2010

nambi
04-09-2010, 05:03 PM
சென்னை: விநாயகர் சிலைகளை 4 இடங்களில்தான் கரைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ஊர்வலம் வருகிற 18, 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில், 80க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கேட்டுள்ளனர். இந்த சிலைகளை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், நீலாங்கரையில் பல்கலைக்கழக நகர் ஆகிய 4 இடங்களிலும் சிலைகளை கரைக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
....தினகரன் 04.09.2010

nambi
04-09-2010, 05:08 PM
ராமேஸ்வரம், செப். 4: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களிடமிருந்து மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் போன்றவற்றை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 100 மீனவர்கள் 20 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை இடைமறித்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் அவர்களிடமிருந்து மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் போன்றவற்றை இலங்கைக் கடற்படையினர் பறித்துச் சென்றதாகவும் மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் வலைகளை உலர்த்திக் கொள்ள மட்டுமே இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை.
...தினமணி 04.09.2010

nambi
05-09-2010, 05:37 PM
பலசூர், செப்.5: ஒரிசா மாநிலத்தில் பிரம்மோஸ்-2 அதிநவீன ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.

ஒரிசா மாநிலம் சாண்டிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஐடிஆர் 3-வது பரிசோதனை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.35 மணிக்கு இந்த அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அமைப்புகளில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டு குறிப்பிட்ட இலக்கைத் தாக்கியது. இது வழக்கமாக செய்து பார்க்கப்படும் சோதனைதான். இந்த வகை ஏவுகணை ஒலியைக் காட்டிலும் 2.8 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும். 300 கிலோ எடையுள்ள பொருளை சுமந்து செல்லும் ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறனுடையது.

இந்த வகை ஏவுகணைகள் இப்போது தரையிலிருந்து ஏவப்படுகின்றன. விண்ணிலிருந்து செலுத்துவதற்கும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்துவதற்கும் வழிவகை செய்யும் வகையில் புதிய ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

ரஷியாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பிரம்மோஸ்-2 வகை ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிப்பதற்காக இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டு வருகிறது

பிரம்மோஸ்-1 வகை ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல பிரம்மோஸ்-1 வகை ஏவுகணை 2005-ம் ஆண்டிலேயே இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டு அனைத்து போர்க் கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 05.09.2010

nambi
05-09-2010, 05:40 PM
ராசிபுரம், & நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் ஜோதி (18). சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவி. விடுதியில் தங்கி படித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாத்தா முத்துசாமியிடம் உடல் நிலை சரியில்லாததால் வீட்டுக்கு வந்ததாக கூறியுள்ளார். நேற்று காலையில் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை தட்டினர். ஆனாலும் கதவு திறக்கவில்லை. இதையடுத்து, வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, துப்பட்டாவால் தூக்கு போட்ட நிலையில் ஜோதி தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சடலமாக கிடந்த ஜோதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. தமிழ்செல்வன் மற்றும் போலீசார் மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். பத்து நாட்களுக்கு முன்பு தனது அண்ணன் தீபக்கை போனில் தொடர்பு கொண்ட ஜோதி, தன்னுடன் படிக்கும் மாணவர்களில் சிலர், ராகிங், ஈவ்&டீசிங்கில் ஈடுபடுவதாகவும், செல்போனுக்கு பல விதமான எஸ்எம்எஸ்களை அனுப்பி தொல்லை செய்வதாகவும், இதனால் கல்லூரி செல்ல பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் வீட்டுக்கு வந்த ஜோதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். மாணவி ஜோதிக்கு போனில் எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை கொடுத்தது யார்? ராகிங், ஈவ்&டீசிங் செய்த மாணவர்கள் யார் யார்? எனவும், ஜோதியின் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆயில்பட்டி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
.....தினகரன் 05.09.2010

nambi
05-09-2010, 05:43 PM
கொழும்பு, செப்.5- புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் தற்போதைய தனது பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதுளையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதைத் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"புதிய சட்டத் திருத்தம் மூலம் அதிபரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறது. 6 வருடங்கள் என்கிற குறுகிய காலத்திற்குள் அதிபர் ஒருவரால் பெரிய சேவைகள் எதையும் செய்துவிட முடியாது" என்றும் ராஜபட்ச கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 05.09.2010

nambi
05-09-2010, 05:46 PM
புதுதில்லி, செப். 5: கமிஷன் தொகையை அதிகரிக்கக் கோரி வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய பெட்ரோல் விற்பனயாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 38 ஆயிரத்து 700 பெட்ரோல் பம்புகள் உள்ளன. பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களில் பராமரிப்பு செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் கமிஷன் தொகை நீண்டகாலமாகவே உயர்த்தப்படாமல் உள்ளது. ஊழியர்களுக்கான ஊதியம், குடிநீர், மின்சாரக் கட்டண உயர்வு போன்றவற்றால் பராமரிப்புச் செலவு அதிகமாகிவிட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை. "இன்வாய்ஸ்' மதிப்பில் 5 சதவீதமாவது கமிஷனாக அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

"எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் 20-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்று கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருள்களுக்கு நாடு முழுதுவம் ஒரே மாதியான விலை நிர்ணயிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே ஒரு பெட்ரோல் நிலையத்தை மட்டுமே திறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அறிவித்தபடி இந்த போராட்டம் நடைபெற்றால் பெட்ரோல், டீசலுக்கு கடும் பற்றாகுறை ஏற்படும் என்று தெரிகிறது.

...தினமணி 05.09.2010

nambi
05-09-2010, 05:49 PM
நியூசிலாந்தில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிறிஸ்ட்சர்ச் நகரின் பெரும்பாலான கட்டடங்களும், சாலைகளும் இந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகரடனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பூமிக்கு அடியில் சுமார் 10கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகளில் 7.1 அளவாக இது பதிவானதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்ட்சர்ச் நகரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள லிட்டல்டன் துறைமுகம் நிலநடுக்கத்தால் கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது. எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3.9 மற்றும் 5.2 ரிக்டர் அளவுகளில் இருமுறை பின்னதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன.

கட்டட இடிபாடுகள் சாலைகளில் கிடப்படதால், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளும் முடங்கியிருக்கின்றன.

சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்

பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படியும், செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
...தினமணி 05.09.2010

nambi
05-09-2010, 05:51 PM
ண்டீகர், செப்.4: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இப்புதிய வளாகம் மொகாலியில் கட்டப்பட உள்ளதாக எல்ஐசியின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

÷மொத்தம் 9.6 ஏக்கரில் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் கட்டப்பட உள்ளது. இந்த வளாகம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வளாகத்தில் 3 லட்சம் சதுர அடி பரப்பில் அலுவலகம் அமையும்.

÷இந்த வளாகம் கட்டுவதற்கான வடிவமைப்பாளர் மற்றும் கட்டுமான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணியில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விவர அறிக்கையை ஐஎல் & எப்எஸ் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது.

÷9.6 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் எல்ஐசி நிறுவனம் ஏலம் மூலம் ரூ.465 கோடிக்கு வாங்கியது.

÷2008-ம் ஆண்டில் இந்த இடம் வாங்கப்பட்டது. அப்போது மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

÷ஏற்கெனவே மும்பை, பெங்களூரில் ரியல் எஸ்டேட் திட்டங்களை எல்ஐசி செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது தவிர மேற்கு வங்கத்தில் 5 ஏக்கரில் வணிக வளாகத்தை செயல்படுத்தி வருகிறது.

÷இது தவிர, லூதியானவில் 3.6 ஏக்கர் நிலத்தை 2008-ம் ஆண்டு எல்ஐசி நிறுவனம் ரூ.228 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
....தினமணி 05.09.2010

nambi
06-09-2010, 03:15 PM
புதுடெல்லி: மத்திய அரசு முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீணாகும் உணவுப் பொருள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு பதில் அளித்துள்ளார். வீணாகும் உணவுப் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவது சாத்தியமல்ல என்று அமைச்சர் சரத்பவார் கூறியிருந்தார். இதனையடுத்து பவாரின் கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
....தினகரன் 06.09.2010

nambi
06-09-2010, 03:23 PM
பாட்னா, செப்.6: மாட்டுத்தீவன ஊழல் வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் முன்னாள் அமைச்சர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.

தனது வழக்கறிஞர் சித்தரஞ்சன் சின்ஹாவுடன் லாலு நீதிமன்றத்துக்கு வந்து தான் நேரில் ஆஜரானதைப் பதிவுசெய்தார்.

முன்னதாக லாலு முதல்வராக இருந்தபோது பங்கா மற்றும் பாகல்பூர் கருவூலங்களில் இருந்து ரூ 46 லட்சம் முறைகேடாக பெறப்பட்டது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு லாலுபிரசாத் உள்ளிட்டோரை சிபிஐ நீதிமன்ற நீதிபதி விமல்குமார் ஜெயின் கேட்டுக்கொண்டிருந்தார்.

லாலுவுடன், ஐக்கிய ஜனதாதள எம்பி ஜகதீஷ் சர்மா, ராஷ்ட்ரீய ஜனதாள முன்னாள் எம்பி ஆர்.கே.ராணா, முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிஷாத் மற்றும் ஓய்வுபெற்ற சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
.........தினமணி 06.09.2010

nambi
06-09-2010, 03:31 PM
கொழும்பு, செப்.6- தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளது.

ஆனால், இதற்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்த இது சரியான நேரம் அல்ல. இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறது. எனவே, மாநாடு பிரச்னைக்குரிய விவகாரமாக மாறிவிடும்." என்று சிவத்தம்பி கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 06.09.2010

nambi
06-09-2010, 03:33 PM
மும்பை: விலைவாசி உயர்வு, வங்கிகள் தனியார் மயம் மற்றும் அரசின் தொழிலாளர் விரோத போக்கு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘‘நாடு முழுவதும் இப்போது அரசு வங்கிக் கிளைகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக உள்ளது. கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் கிளைகள் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கை’’ என ஏஐபிஇஏ செயலாளர் விஸ்வாஸ் உடகி தெரிவித்தார்.
...தினகரன் 06.09.2010

nambi
07-09-2010, 02:31 PM
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ. - ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆகிய கட்சிகள் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இக்கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் ஆதரவு தர சம்மதித்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக அர்ஜூன்முண்டா தேர்வு செய்யப்படவுள்ளார்.
...தினமலர் 07.09.2010

nambi
07-09-2010, 02:33 PM
கொழும்பு, செப்.7- நாடாளுமன்றத்தின் அதிகாரங்களையும் மக்களின் ஜனநாயக செயற்பாடுகளையும் முடக்கும் வகையில் இலங்கையில் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வர அதிபர் ராஜபட்ச முயற்சி செய்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பிரபாகரனை சர்வாதிகாரி என்று கூறியவர்கள் இப்போது அவரது வழியை பின்பற்றுகின்றனர் என்றும் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"அதிபர் பதவியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என நாங்கள் கூறிவந்தோம். ஆனால், பயங்கரமான அம்சங்களை கொண்ட உத்தேச அரசியல் சீர்திருத்தத்தை தற்போது முன்வைத்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம்" என்றும் ரணில் கூறி்யுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 07.09.2010

nambi
07-09-2010, 02:39 PM
திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்த ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவர்கள், 50 பேர் உயிரிழப்புக்குப் பின்னர் தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

ஜோத்பூரில் அரசு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் அண்மையில் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 1,200 மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த சனிக்கிழமை முதல் நடந்த இந்த போராட்டத்தினால், மாநிலத்தின் மொத்தமுள்ள 6 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இதனால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் உடல் நிலை மோசமான நிலையை அடைந்த நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிக்கப்படாததால், கைக்குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் வரை உயிரிழந்ததாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு மற்றும் அரசின் வேண்டுகோள் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று மாலை தங்களது போராட்டத்தை விலக்கிக்கொண்டதாக அரசு மருத்துவர்கள் அறிவித்தனர்.
...வெப்துனியா, தினமணி, தினமலர் 07.09.2010

nambi
07-09-2010, 02:41 PM
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டுவென்டீயத் ஃபாக்ஸ் இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா என்ற பெயரில் ஹிந்தி படங்களைத் தயாரித்தும், ஆங்கில படங்களை விநியோகித்தும் வருகிறது. தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýடன் இணைந்து தமிழ் படங்களைத் தயாரிக்க உள்ளது.

இது குறித்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், ""ஹிந்தி "கஜினி' வெற்றிக்குப் பின் ஹிந்தி படம் ஒன்றை இயக்கச் சொல்லி ஃபாக்ஸ் நிறுவனத்தினர் கேட்டனர். தமிழ் படம் இயக்கும் முடிவில் இருந்ததால் அதனை செய்ய முடியவில்லை. அதன் பின் அந்த நிறுவனம் தமிழ் படங்களை தயாரித்துத் தர முடியுமா? எனக் கேட்டது. உடனே ஒப்புக் கொண்டேன். எனது நிறுவனத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் என பெயர் வைத்துள்ளேன். சிறிய பட்ஜெட்டில் சில படங்களை உருவாக்கி விட்டு, அதன் பின் பெரிய பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை எனது உதவியாளர் சரவணன் இயக்குகிறார். விமல், ஜெய் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதையடுத்து சில கதைகள் கேட்டிருக்கிறேன். பிரமாண்டத்தை விடுத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே முதலில் சில படைப்புகள் உருவாகும். இதன் மூலம் நம்முடைய தமிழ் கலாசாரம், பண்பாடு பல நாடுகள் கடந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவின் எல்லை குறுகி இருக்கிறது. அது இதன் மூலம் சில எல்லைகளைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது. ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் பல நாடுகளை இணைக்கும் நிறுவனமாக இருப்பதால் இது நிச்சயம் சாத்தியப்படும்'' என்றார்.
...தினமணி 07.09.2010

nambi
07-09-2010, 02:46 PM
சென்னை: தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேசமயம்,தமிழகத்தில் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி தொழிற்சங்கம் உள்பட 8 இன்று தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்திற்கு பாஜக சார்ந்த பி.எம்.எஸ். ஆதரவு தெரிவித்தது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வங்கிப் பணிகள் முடக்கம்:

பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், பாதுகாப்புத்துறை, தொலை தொடர்பு துறைகளில் முடக்கம் ஏற்பட்டது. சில தனியார் வங்கிகளிலும் இன்று வேலை நிறுத்தம் முழு அளவில் நடந்தது. வங்கிப் பணிகளில் இன்று 90 சதவீதம் நடைபெறாமல் முடங்கின.

எல்.ஐ.சி., நேசனல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் ஆகியவை நாடெங்கும் முழுமையாக இயங்கவில்லை. இதனால் இன்சூரன்ஸ் பணிகள் முடங்கின.

வட மாநிலங்களில் வேலை நிறுத்தம் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மும்பையில் ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை. பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், கொல்கத்தா நகரங்களிலும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
...தட்ஸ் தமிழ், தினமணி 07.09.2010

nambi
07-09-2010, 02:48 PM
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி தேவஸ்தான முன்னாள் என்ஜினீயர் நவன்குமார் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் பணிபுரிந்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

இதையொட்டி லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மேலும் ரூ.3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை, குண்டூரில் உள்ள அவரது வீடுளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
...நியுஸ்இந்தியா 06.09.2010

nambi
07-09-2010, 02:51 PM
கேரளா மாநிலத்தில் கள் குடித்த 4 தமிழர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் குற்றிப்புரம் பகுதியில் ஏராளமான வெளிமாநில தொழிலாளிகள் தங்கியுள்ளனர். அவர்களில் பலர் அங்குள்ள ரயில் நிலையம் அருகே உள்ள கள்ளுக்கடைக்கு செல்வார்கள்.

இந்நிலையில், இன்று காலை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 6 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதில் 3 பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் இறந்தார். 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளுக்கடையில் கள் குடித்ததும், அவர்கள் குடித்தது விஷம் கலந்த கள் எனவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கள்ளுக்கடை கான்ட்ராக்டர் திரவ்யனை போலீசார் கைது செய்தனர். இறந்த 4 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் ஒருவரது பெயர் நிதின் எனவும் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்த கேரள உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் குற்றிப்புரம் விரைந்தார்.

அவர் கூறுகையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் தெரியும். கள்குடித்து தான் மரணம் ஏற்பட்டது எனத் தெரிந்தால் கள்ளுக் கடைக்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையே குற்றிப்புரம் சுற்றுப் பகுதி கள்ளுக்கடைகளில் கலால்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். குற்றிப்புரம் பகுதி கள்ளுக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
...அலைகள் 06.09.2010

nambi
08-09-2010, 07:25 PM
திருவண்ணாமலை, செப்.8: திருவண்ணாமலை அருகே அரசு பஸ்ஸூம், ரேஷன் அரிசியை கடத்தி ஏற்றி வந்த லாரியும் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களிலும் தீப்பற்றியது. தீயில் கருகி 9 பேர் இறந்தனர். 35 பேர் பலத்த காயமடைந்தனர்.
...தினமணி 09.09.2010

nambi
08-09-2010, 07:31 PM
டெல்லி: பங்க் உரிமையாளர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதற்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசும், டீசல் விலையை 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

இந் நிலையில் பெட்ரோல் பங்க் டீலர்கள் அதிக கமிஷன் கோரியதால் இந்த விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 முதல் 12 காசு வரையும், டீசல் விலை லிட்டருக்கு 9 முதல் 10 காசு வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ரூ. 55.92 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 56.02 காசாக உயர்ந்துள்ளது.

இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 9 காசு உயர்ந்துள்ளது. இதனால், ரூ. 40.07 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, ரூ. 40.16 ஆக உயர்ந்தள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

....தட்ஸ்தமிழ் 08.09.2010

nambi
08-09-2010, 07:38 PM
நாகர்கோவில் : துணைவேந்தர் கொலை வழக்கில் ஒருவருக்கு தூகுத்தண்டனை விதித்து நாகர்கோவில் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் மாலிக்முகம்மது. இவர் மத்திய அரசு மற்றும் கேரள மாநில அரசின் கீழ் உள்ள பல்கலை கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றியுள்ளார். இவரது பணியை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவரது மனைவி கதீஜாபீவி. இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உண்டு. இவர்கள் அனைவரும் வெளியூரில் வசிக்கும் நிலையில் துணைவேந்தரும் மனைவியும், தனியாக பட்டகசாலியன் விளையில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டுக்காவலாளியாக ஞானப்பிரகாசம் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி மாலிக்முகம்மது, வீட்டு காவலாளி ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கதீஜாபீவியை காணவில்லை. பின்னர் விழுப்புரம் அருகே ஓலக்கூரில் அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பரசு, ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த சகாயபுரூனா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மாலிக்முகமது வீட்டில் கார் டிரைவராக இருந்த அன்பரசுவை, அவரது நடத்ததை சரியில்லாததால் வேலையில் இருந்து நீக்கி விட்டார். இந்த கோபத்தில் சகாயபுரூனோவுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த போது போது ஜாமீனில் வெளிவந்த அன்பரசு தலைமறைவாகி விட்டார். இதை தொடர்ந்து சகாயபுரூனோ மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. சகாய புரூனோவுக்கு 103 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அன்பரசுவை வள்ளியூரில் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அன்பரசுவுக்கு தயவு காட்ட அந்த அருகதையும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி சரவணன், அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையொட்டி நாகர்கோவில் கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
....தினமலர் 08.09.2010

nambi
08-09-2010, 07:40 PM
சென்னை : தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்யும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பால் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. கடந்த ஜூன் மாதம் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில், தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பல் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார்.

இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது: அரசுத் துறை, சட்டசபை மற்றும் அரசு சார்ந்த துறைகளில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களில், நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது, 20 சதவீத பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

....தினமலர் 08.09.2010

nambi
08-09-2010, 07:42 PM
கொழும்பு, செப்.8- முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 200 கிலோ தங்கம் எங்கே என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ரூபாயில் 94 கோடி மதிப்புள்ள அந்த தங்கம் தற்போது யாரிடம் உள்ளது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், போரின்போது ராணுவத்துக்கு அனைத்து வழிகளிலும் உதவிய கருணா, பிள்ளையான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, எந்த உதவியும் செய்யாத கே.பி.,யை இலங்கை அரசு முன்னிலைப்படுத்துவது முட்டாள்தனமானது என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

...தினமலர் 08.09.2010

nambi
08-09-2010, 07:48 PM
பிரபல தமி்ழ்த் திரைப்பட நடிகர் முரளி, புதனன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.



1984-ம் ஆண்டு, பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. புதுவசந்தம், இதயம், பொற்காலம் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், தனது கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

அழுத்தமான பாத்திரங்கள் மட்டுமன்றி, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் அவர் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்துக்காக, தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உள்பட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ள முரளி, கடைசியாக, தனது மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமான பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். 100 வது படித்தில் நடிக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த முரளி, இன்று அகால மரணமடைந்துவிட்டார்.

அவரது உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

...பிபிசி தமிழோசை

nambi
10-09-2010, 04:19 PM
டெல்லி: தலைநகர் டெல்லிக்குள் யமுனை ஆற்று வெள்ளம் நுழைந்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் மிதக்க ஆரம்பித்துள்ளன.

அபாய அளவைத் தாண்டி 92 செமீ அளவுக்கு யமுனையில் வெள்ளம் ஓடிக் கொண்டுள்ளது. இதையடுத்து வெள்ள நீர் டெல்லி நகரின் தாழ்வான பகுதிகளில் நுழைந்துள்ளது. யமுனா பஜார், உஸ்மான்பூர் ஆகிய பகுதிகள் நீரில் மிதக்கின்றன.

யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஹரியானா மாநிலம் ஹதினி குந்த் அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

கடந்த புதன்கிழமை முதல் ஹரியானாவிலிருந்து 10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
...தட்ஸ்தமிழ் 10.09.2010

nambi
10-09-2010, 04:25 PM
டெல்லி: தமிழக அரசு கொண்டு வந்துள்ள சமச்சீர் கல்வித் திட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக் கல்வி முறைகளும் ஒரே சீராக, ஒரே பாடத்திட்டத்தில் செயல்படும் வகையில் சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் செயல்படுத் தப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்து இந்த திட்டத்தை கடந்த கல்வியாண்டு முதல் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வற்ற நிலை, அனைவருக்கும் ஒரே சீரான கல்வி வழங்கும் இந்த உயரிய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.

கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்தை பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், சவ்கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

தமிழக அரசின் சமச்சீர் கல்விக்கான குழுவுக்கும், மத்திய அரசு அமைத்துள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்கான குழுவுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதாக வழக்கு விசாரணையின்போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்வி திட்டம் சரியானது தான். உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களை பொறுத்த வரை இரண்டு கல்வி வாரியங்கள் மட்டும் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கல்வி வாரியங்கள் செயல் படுவதால் மாணவர்களிடையே சமச்சீரான கல்வி வழங்கப்பட வில்லையென்றும், இதனை சீர்படுத்தி அனைவருக்கும் சமமான கல்வி வழங்குவதற்காகவே சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெற்றோர்களோ, மாணவர்களோ சமச்சீர் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டும் இதனை எதிர்ப்பது ஏன் என்று கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.....தட்ஸ் தமிழ், தினமலர் 10.09.2010

nambi
10-09-2010, 04:35 PM
வாஷிங்டன், செப்.10: இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டிருந்த ஃபுளோரிடா நகர பாதிரியார், தனது முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் உள்ள சிறிய சர்ச் ஒன்றின் பாதிரியாரான டெர்ரி ஜோன்ஸ், செப்டம்பர் 11 தாக்குதலின் 9-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியுயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடம் இருந்த இடத்துக்கு அருகில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த இஸ்லாமிய மையத்தையும், மசூதியையும் வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதால் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்தார்.

எனினும் மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறுவதை அந்த இஸ்லாமிய மையம் உடனடியாக மறுத்துள்ளது.
....தினமணி 10.09.2010

nambi
10-09-2010, 04:37 PM
வாஷிங்டன், செப்.9: "அவுட்சோர்சிங்' பணிகளைச் செய்து வரும் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

இதுகுறித்து கிளீவ்லாந்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒபாமா பேசியதாவது:

அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச் சலுகைகள் அளிக்கப்படும். அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் வேலைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை, சலுகைகள் வழங்கப்படமாட்டாது. அமெரிக்காவில் அதிக வேலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளைத் துவங்கவேண்டும். இதற்காக அமெரிக்க நகரங்களில் அதிக முதலீடுகளைச் செய்யவேண்டும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளுக்கு வேலைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு அதிக வரிச் சலுகையைக் காட்டி வருகிறோம். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புகள், லாபத்தை அள்ளித் தரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சலுகையாக வழங்கியிருக்கிறோம்.

இதை நான் மாற்ற விரும்புகிறேன். அமெரிக்காவிலேயே உண்மையாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி சலுகை வழங்கப்படும்.

அமெரிக்காவில் ஆய்வு செய்து புதுமைகளைப் படைத்து சாதனை செய்யும் நிறுவனங்களுக்கு தாராள மனத்துடன், நிரந்தர வரிச்சலுகையும் வழங்கப்படும் என்றார் அவர்.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் பெரும்பாலானவை அவுட்சோர்சிங் பணிகளை இந்தியாவிலுள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது கிட்டத்தட்ட இந்தியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை போன்றதுதான் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 60 சதவீத வருவாயை அமெரிக்காவிடமிருந்துதான் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

...தினமணி 10.09.2010

nambi
11-09-2010, 05:11 PM
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார் அர்ஜூன் முண்டா. ஜார்க்கண்ட் முதல்வராக முண்டா பதவியேற்பது இது 3வது முறையாகும்.

ராஞ்சியில் இன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் எம்.ஓ.எச்.பாரூக் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டசபைப் பிரிவு தலைவருமான ஹேமந்த் சோரன், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத் தலைவர் சுதேஷ் மகதோ ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவை மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி தலைமையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

....தட்ஸ்தமிழ் 11.09.2010

nambi
11-09-2010, 05:18 PM
புதுடில்லி : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு (எல்.பி.ஜி.,) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, திட்டத்தை துவக்க திட்டமிட்டிருக்கிறது.



மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பதவியேற்றதும், கடந்த முறை வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ஆகியவை அமல்படுத்தப்பட்டன. 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐ.மு.கூட்டணி, தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.



வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று திட்டத்தை துவக்க யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி ஆண்டுதோறும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 35 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும். சமையல் காஸ் இணைப்பு பெற இப்போது நுகர்வோர், ஒரு சிலிண்டருக்கு 1,250 ரூபாய் டிபாசிட் தொகையும், ரெகுலேட்டருக்கு ரூ.150ம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு செலவாகும் 1,400 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.490 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.



இந்த திட்டம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான பணிகளை எண்ணெய் நிறுவனங்கள் துவக்கும். சமையல் காஸ் பயன்பாட்டை (எல்.பி.ஜி.,) வரும் 2015ம் ஆண்டுக்குள் 16 கோடி எண்ணிக்கையாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மரக்கட்டைகளை எரித்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு எரிசக்திக்கு பதிலாக "கிளீன் ப்யூயல்' என்ற அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த வகையில், இன்னும் ஐந்தாண்டுகளில் மொத்தம் ஐந்தரை கோடி சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் பட உள்ளன.



கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, மண்ணெண்ணெய் மற்றும் விறகுகள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதற்கும் வழி ஏற்படும். இதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், இலவசமாக வழங்கப்படும் 35 லட்சம் காஸ் இணைப்புகளும் அடங்கும். இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசு, இலவச சமையல் காஸ் இணைப்புடன், காஸ் அடுப்பையும் இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
...தினமலர் 11.09.2010

nambi
12-09-2010, 06:05 PM
இலங்கை அரசியலமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட 18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.



இது குறித்து அமெரிக்க பொது விவகார பணியக துணைச் செயலர் பிலிப் ஜே கிரௌலி அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்த, இலங்கை அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டமூலத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் கடந்த வாரத்தில் தனது அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டிய அவசியம் கிடையாது என்று இலங்கை உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த அரசியலமைப்பு திருத்தம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடங்கங்களையும், அது குறித்த நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க துணைச் செயலரின் அறிக்கை, அந்த திருத்தம் ஜனாதிபதியின் ஆட்சிக்காலங்களுக்கான மட்டுப்பாட்டை ஒழிப்பதாகவும், தேர்தல், பொலிஸ், மற்றும் மனித உரிமைகள், நீதித்துறை ஆகியவை உட்பட சுயாதீன நிறுவனங்கள் மீதான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அது விரிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளது.

இந்த அரசியலமைப்பு திருத்தம், ''முறைமைகள் மீதான பரிசோதனைகள் மற்றும் சமநிலைகள்'' ஆகியவற்றை பலவீனப்படுத்துவதாகவும், அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கோட்பாடுகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமெரிக்கா கவலை கொள்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நல்ல ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன அரச நிறுவனங்கள் ஆகியவற்றை இலங்கை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

சுயாதீன நிறுவனங்களுக்கு தகுதிவாய்ந்த நியமனங்களைச் செய்வதன் மூலமும், வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதன் மூலமும், அதிகாரப் பகிர்வையும் பேச்சுவார்த்தைகளையும் விரிவுபடுத்துவதன் மூலமும், மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் ஜனநாயகத்தை பலப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுள்ளது.
...பிபிசி தமிழோசை 12.09.2010

nambi
12-09-2010, 06:08 PM
சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட 20 ஏக்கர் நிலப்பரப்பிலான இடத்தில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா உருவாக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இங்கு அங்கு சென்ற முதல்வர் கருணாநிதி பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி, வேளாண்மைத்துறை செயலர் ராம்மோகன் ராவ், சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா, தோட்டக்கலைத்துறை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் அப்போது உடன் சென்றிருந்தனர்.
...தட்ஸ்தமிழ் 12.09.2010

nambi
14-09-2010, 01:41 PM
சென்னை, செப். 14: நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக நீதிபதி கோவிந்த ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி அண்மையில் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கு இடைக்காலத் தடை விதித்து இன்று தீர்ப்பு வழங்கினர்.
...தினமணி 14.09.2010

nambi
14-09-2010, 01:45 PM
http://www.dinamani.com/Images/article/2010/9/14/governmentemployment_site.jpg

சென்னை, செப். 14: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை

1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
...தினமணி 14.09.2010

nambi
14-09-2010, 01:55 PM
சென்னை : தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் தடுப்பூசி போடும் முகாம், நேற்று சென்னையில் துவங்கியது. ""பன்றிக் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேவையான மருந்துகளும் உள்ளன. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்,'' என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக மக்களை மிரட்டும் வகையில் அடுத்தடுத்து பல்வேறு காய்ச்சல்கள் உருவாகி வருகின்றன. எலி காய்ச்சலில் இருந்து மக்கள் விடுபட்ட நிலையில், அடுத்ததாக வந்தது, "சிக்குன் குனியா' மூட்டு வாதத்தால் மக்களை முடக்கிப் போட்ட இந்த வகை காய்ச்சலால், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இது கட்டுக்குள் வந்த நிலையில், பன்றிக் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் அடுத்தடுத்து பலர் பலியாயினர். ஒன்பது மாதத்தில் பத்துபேர் இறந்தனர்.

இதைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தலைமையில், இரண்டு நாட்களுக்கு முன் அவசர ஆலோசனை நடந்தது. பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வகையில், 150 ரூபாய்க்கு தடுப்பூசி போடும் புதிய திட்டத்தை நடைமுறைபடுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி கிண்டி, "கிங்' இன்ஸ்டிடியூட்டில் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று துவங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தடுப்பூசி முகாமைத் துவக்கி வைத்தார். சுப்புராஜ் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முகாமில், 150 ரூபாய் கட்டணத்தில், "நேசோவாக்' எனும் மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்தும், 250 ரூபாய்க்கு "வாக்சிபுளூ' எனும் தடுப்பூசியும் போடப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் இதை தேர்வு செய்து கொள்ளலாம். காலை 11 மணி முதல், மாலை 4 மணி வரை, ஏழு நாட்களும் இந்த முகாம் நடைபெறும். துவக்க நாளான நேற்று, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக 300க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

முகாமைத் துவக்கி வைத்து, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, கோவை, வேலூர் மாவட்டங்களில் தான் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு, சாதாரண காய்ச்சல் என நினைத்து அதற்கான மருந்து, மாத்திரைகளை வழங்கி, அலட்சியமாக செயல்பட்டதால் தான் உயிரிழப்பு நடந்துள்ளது. தேவையான தடுப்பு மருந்துகள் அரசிடம் உள்ளன. மக்கள் பீதியடைய வேண்டாம்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 50 ஆயிரம் ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் 3,447 பேர் பாதிக்கப்பட்டனர். பத்து பேர் இறந்தனர். இந்த ஆண்டில் 623 பேர் பாதிக்கப்பட்டனர். 600 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு ஒன்பது பேர் இறந்துள்ளனர். சுகாதாரத் துறையின் துரித செயல்பாட்டால் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி, மருந்து கொடுக்கும் எண்ணம் இல்லை. மருத்துவமனைகளில் கட்டணம் வசூலித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும் என்பதோடு, தவறுகளும் நடக்க வாய்ப்புள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் இருப்போர் உடனடியாக மருந்துவமனைகளில் சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
....தினமலர் 13.09.2010

nambi
14-09-2010, 01:58 PM
மாங்காடு அம்பாள்நகர் பாலாஜி அவென்யூ 7-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் பெயிண்டர். இவரது மனைவி காமாட்சி (வயது 33). இவர்களுக்கு ஜெகன்ராஜ், யுவராஜ் என்ற மகன்கள் உள்ளனர். ஜெகன்ராஜ் 7-ம் வகுப்பும், யுவராஜ் 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

நேற்று காலையில் ஆறுமுகம் வேலைக்கு சென்றுவிட்டார். மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். காமாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

வேலை முடிந்து ஆறுமுகம் மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீடு நிசப்தமாக காட்சி அளித்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பூஜை அறையில் காமாட்சி பிணமாக கிடந்தார். அவரது கழுத்து துணியால் நெறிக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மாங்காடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காமாட்சி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அவருக்கு தெரிந்தவர்கள் தான் அவரை கொன்று நகைகளை கொள்ளையடித்துச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்போது, ஆறுமுகத்துடன் ஒன்றாக பணிபுரியும் மோகன் (39) என்ற வாலிபர் தான் காமாட்சியின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

5 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு காமாட்சியை கொலை செய்துவிட்டேன் என அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்த 6 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த தனிப்படையினரை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.
...ஆறாம்திணை 14.09.2010

nambi
14-09-2010, 03:47 PM
தெற்காசியாவிலேயே சிறந்த நூலகமாகத் திகழவிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதலமை*ச்சர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் கருணாநிதியின் அறிவுரைப்படி மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறார்கள், முதியோர், சாதாரண மக்கள் என சமுகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய வகையில்அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம் உள்பட மொத்தம் 9 தளங்களில் மொத்தம் 3.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்த்திசை நூலகத்தில் அரிய ஓலைச்சுவடிகள் முதல் ஆன்லைன் புத்தகங்கள், பத்திரிகைகள் வரை இதில் இடம் பெறுகின்றன. மாற்றுத் திறனாளிகள், சிறுவர்களுக்கான பிரிவுகள் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இதோடு 1200 பேர் அமரும் வகையிலான நவீன வசதிகள் கொண்ட அரங்கமும் 800 பேர் அமரும் வகையில் திறந்தவெளி அரங்கமும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கிய நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்பட நிகழ்ச்சிகளை இவற்றில் நடத்தலாம். அதோடு புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். இது தவிர 150 பேர் அமரும் வகையில் மாநாட்டு அரங்கமும் உருவாக்கப் பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கட்டியுள்ள நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம், தெற்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகமாக இருக்கும். இந்த நூலகத்தை முதலமை*ச்சர் கருணாநிதி நாளை மாலை 5 மணியளவில் திறந்து வைக்கிறார். விழாவுக்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகிக்கிறார். தலைமைச் செயலர் மாலதி நன்றி கூறுகிறார்.

சிறுவர்களை நூலகங்களுக்கு வரவழைக்கும் விதமாக சிறுவர்கள் பிரிவு சிறப்பு கவனத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள் மரத்தின் கீழ் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் செயற்கை மரம் அமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பிரிவில் உள்ள புத்தக அலமாரிகள் மரத்தினால் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய மேடையும் அவர்கள் விளையாடுவதற்காக பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் அவர்களைக் கவரும் வகையில் கார்ட்டூன் ஓவியங்களும் இடம் பெற உள்ளன.

பார்வைத்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்காக பிரெய்லி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் ஆகியவை இடம் பெறும். நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கென கழிப்பறை வசதி, ரேம்ப் மற்றும் லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாநில பாடநூல் கழகம் சார்பில் பாடப் புத்தகங்கள் பிரிவு அமைக்கப் படுகிறது. இதில் எல்லா மாநிலப் புத்தகங்களும், வெளிநாட்டுப் புத்தகங்களும் கிடைக்கும் வகையில் உள்ளன. ஒன்றாம் வகுப்பு மாணவர் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை இந்த நூலகத்தைப் பயன்படுத்தலாம்.

இந்த நூலகத்தில் வெளியிலிருந்து புத்தகங்களைக் கொண்டு வந்து படிக்கவும் வசதிகள் உள்ளன. ஏழை மாணவர்கள், நடுத்தர மாணவர் களுக்கு வீட்டில் படிப்பதற்கு போதிய வசதிகளோ, சூழலோ இருக்காது. அதுபோன்ற மாணவர்கள் இந்த நூலகத்துக்கு தங்களது புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுக்கலாம்.
...வெப்துனியா 14.09.2010

nambi
14-09-2010, 03:52 PM
தூத்துக்குடி : வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவதாகக்கூறி, ஏழு பேரிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அடுத்த புதுபச்சேரியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(40). இவரும், நாரைக்கிணறு ரவிக்குமாரும், கடந்த சில ஆண்டிற்கு முன் துபாயில் வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். அதிக சம்பளத்தில் அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலைவாங்கித்தருவதாக ரவிக்குமார் கூறியதை நம்பிய மாரியப்பன், அந்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்தார். அடுத்த சில மாதத்தில் ரவிக்குமாரும் ஊருக்கு வந்துவிட்டார். வெளிநாட்டு வேலைக்காக மாரியப்பன், கடந்த ஜூலை 19ம் தேதி நெல்லையில் வைத்து ரவிக்குமாரிடம் 1,60,000 ரூபாய் கொடுத்தார்.

ரவிக்குமாருக்கு அறிமுகமான கோவில்பட்டி கருப்பசாமி, தியாகராஜன், பொன்னுச்சாமி,காளிராஜ், அய்யனார், மெய்யர் ஆகிய ஆறு பேரும் வெளிநாட்டு வேலைக்காக ரவிக்குமாரிடம், தலா 40,000 ரூபாய் தந்தனர். மாரியப்பன் உள்ளிட்ட ஏழு பேரிடமும், மொத்தம் 4 லட்சம் ரூபாய் வாங்கிய ரவிக்குமார், பின்னர் தலைமறைவானார். இச்மோசடி குறித்து மாரியப்பன், ஒட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். ரவிக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
..தினமலர் 14.09.2010

nambi
15-09-2010, 03:33 PM
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் திருத்தி வருகிறது. இதன் அடிப்படையில், 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, இந்த ஆண்டு ஜனவரி 1ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதில், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர், பெயரை நீக்க விரும்புவோர், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர், விண்ணப்பங்களை கொடுத்து தங்களது கோரிக்கையை தெரிவித்திருந்தார்கள்.

அந்த மனுக்களைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலை பரிசீலித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் வரைவு பட்டியலை ஜுலை 1 ந் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது. அதில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள, அது தொடர்பான மனுக்களை சமர்ப்பிக்க ஜுலை 16 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது மக்கள் கோரிக்கையை ஏற்று, காலக்கெடு ஜுலை 26 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.



ஜுலை 16 ந் தேதி வரை பெயர் சேர்ப்புக்காக 27 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஜுலை 16 முதல் 26 ந் தேதி வரை மேலும் 4 லட்சம் பேர் பெயர் சேர்ப்புக்காக மனு செய்திருந்தார்கள். இதனை தேர்தல் ஆணையம் கவனமாக பரிசீலித்தது.

இந்த முறை, வாக்காளர் பட்டியல் சேர்க்க தகுதி இல்லாதவர்கள் பெயர்களை நீக்கும்போது, அவ்வாறு நீக்கப்படுவோரின் விவரங்களையும் கம்ப்ழூட்டரில் தேர்தல் ஆணையம் பதிவு செய்தது. பெயர் ஏன் நீக்கப்பட்டது என்று பின்னர் பிரச்சினை செய்தால் அது பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கவே இந்த ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.



மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில், பெயர் சேர்ப்புக்காக மொத்தம் 31 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இதில், சுமார் 27 லட்சம் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 4 லட்சம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



வாக்காளர் பட்டியலை பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பார்க்கலாம். இதுதவிர தேர்தல் ஆணைய இணையதளத்திலும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படவுள்ளது.
.....நக்கீரன் 15.09.2010

nambi
15-09-2010, 03:36 PM
சென்னை கோட்டூர்புரத்தில் சர்வதேச அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, 180 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பணிகளை விரைவுபடுத்தினார்.

இந்த நூலகத்தில் இடம்பெற உள்ள ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் நூலகத்தில், தேசிய நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், பாரம்பரிய நிறுவனங்கள் என 90க்கும் அதிகமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து காஷ்மீரில் உள்ள அல்லமா இக்பால் நூலகம் மட்டுமே இதில் இணைந்துள்ளது. இரண்டாவதாக அண்ணா நூற்றாண்டு நூலகம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகப் புகழ் பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெற முடியும்.

முதலில் நான்கு லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்பட உள்ள இந்த நூலகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து தலைப்புகளிலும் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறும். நூலக திறப்பு விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

முதல்வர் கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

நிதி அமைச்சர் அன்பழகன், அமைச்சர் தங்கம் தென்னரசு,தலைமை செயலாளர் மாலதி, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்ணா நூற்றாண்டு நூலக திறப்பை முன்னிட்டு கோட்டூர்புரம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

...நக்கீரன் 15.09.2010

nambi
15-09-2010, 03:45 PM
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ppppp111.jpg

57வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டின் சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பா’இந்திப்படத்தில் நடித்தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அமிதாப் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’அபோஹோமன்’என்ற பெங்காலி படத்தில் நடித்ததற்காக நடிகை அனன்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது பெறுகிறார்.

மம்மூட்டி நடித்த மலையாள படமான கேரளவர்மன் பழசிராஜா படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைளப்பாருக்கான விருது அளிக்கப்படுகிறது.

‘தேவ்-டி’என்ற இந்திப்படத்திற்கு இசையமைத்ததற்காக அமீத் திரிவேதி சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெறுகிறார்.

2009ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக , மலையாள மொழிப் படமான குட்டி ஸ்ரங் படம் தேர்வாகியுள்ளது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெறுகிறது.

’பசங்க’தமிழ் படம் 4 விருதுகளை தட்டிச்சென்றது. பிராந்திய மொழிப்பிரிவில் தமிழில் சிறந்த படமாக ‘பசங்க’தேர்வு செய்யப்பட்டுள்ளது.


பசங்க படத்தில் நடித்த ஜீவா-அன்புக்கரசுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்படுகிறது. இப்படத்தின் கதை,வசனத்திற்காக பாண்டியராஜ் விருது பெறுகிறார்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது அமீர்கான்,மாதவன் நடித்த த்ரீ இடியட்ஸ் படத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குநர் விருது பெறுகிறார்.

சியாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான வெல் டன் அபா படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

.......நக்கீரன் 15.09.2010

nambi
15-09-2010, 03:50 PM
ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in

...நக்கீரன் 15.09.2010

nambi
16-09-2010, 09:32 AM
http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/1009/16/images/img1100916027_1_1.jpg
நாட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் வணிகமுத்திரையுடன் கூடிய தேனில் கேடு விளைவிக்கும் ஆண்ட்டி-பயாடிக்குகள் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

"உத்தரவாதமாக சுத்தமான" தேன் என்று தங்கள் லேபிளில் போடப்பட்டு விற்பக்கப்படும் தேன்கள் மேலுக்குத்தான் இனிப்பு உள்ளுக்குள் பொதிந்திருப்பதோ கசப்பான ரகசியம்.

சுற்றுசூழல் மற்றும் விஞ்ஞான மையம் (CSE) நடத்திய அதிரடி ஆய்வில் இந்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனை மையத்தில் இந்தியாவில் விற்கப்படும் 12 முன்னணி நிறுவனங்களின் தேன் பாட்டில்களை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டது.

இதில் டாபர், ஹிமாலயா, பதஞ்சலி, வைத்யநாத், காதி ஆகிய நிறுவனங்களின் தேன் மற்றும் சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்ரேலிய நிறுவனம் இரண்டின் தேனும் பரிசோதனை செய்யப்பட்டது.

11 தேன் மாதிரிகளில் 6-இல் கடுமையான ஆண்ட்டி-பயாடிக்குகள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் இந்திய நிறுவனத்தின் ஹிட்காரி என்ற வணிக முத்திரை கொண்ட தேனில் மட்டும் ஆண்ட்டிபயாட்டிக் கலவை இல்லை.

தேனில் ஆண்ட்டி-பயாட்டிக்குகளா? சே! சே! இருக்காது சார்! என்று தானே உடனே சொல்லத் தோன்றுகிறது.? தேனுக்குள் மருந்து எப்படி வந்தது என்பது ஒரு சங்கிலித் தொடர்.

தேனீக்களை நோயிலிருந்து காக்கவும், அதனிடமிருந்து அதிக தேன்களை உறிஞ்சவும் தேனீக்களுக்கு இந்த ஆண்ட்டி பயாட்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன.

நாம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தினமும் தேனை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இந்த ஆண்ட்டி-பயாட்டிக் விளைவால் ரத்தம், கிட்னி, லிவர், எலும்புகள், பல் ஆகியவை கெட்டுக் குட்டிச்சுவராகும் வாய்ப்புகள் ஏராளம்.

மேலும் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் கொடுக்கும் ஆண்ட்டி-பயாட்டிக்குகளை இது வேலை செய்ய விடாமல் தடுத்து விடும் என்று சுறுறுச்சூழல் மற்றும் விஞ்ஞான மையத்தின் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உஷாரான வளர்ந்த நாடுகள் இந்த ஆண்ட்டி-பயாடிக் தேனுக்கு பெரும்பாலும் தடை விதித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்கள் தேனை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பும்போது அந்த விதிமுறைகளின் படி சரிபார்த்து அனுப்புகிறது.

ஆனால் உள்நாட்டில் சரியான கண்காணிப்பு இல்லாததனால் இந்த ஆண்ட்டி-பயாடிக் கலப்பு தேனை விற்பனை செய்து வருகிறது. இதுதான் இந்திய நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற இரட்டைத்தர்க்கம்.

....வெப்துனியா 16.09.2010

nambi
16-09-2010, 09:34 AM
சென்னை: சென்னையில் நள்ளிரவில் பிளாட்பாரத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் சிறுமி உட்பட இருவர் பலியாகினர்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்துக்கு பின்புறம் உள்ளது கங்கை கொண்டபுரம் குடியிருப்பு. இந்தப் பகுதியில் இரவு நேரத்தில்தான் தண்ணீர் வரும் என்பதால் நள்ளிரவில் அப் பகுதியினர் பிளாட்பாரத்தில் துணிகளை துவைப்பது வழக்கம்.

இன்று நள்ளிரவு 2.15 மணியளவில் கஜலட்சுமி (14), அவரது பாட்டி ராமலட்சுமி (62), ரீட்டா (56) ஆகியோர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தியாகராய நகரில் இருந்து ஜி.என். செட்டி ரோடு வழியாக படுவேகத்தில் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் திடீரென நிலை தடுமாறி அங்கிருந்த மூன்று ஆட்டோக்கள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதிவிட்டு, பிளாட்பாரத்தில் ஏறி துணி துவைத்தவர்கள் மீது மோதியது.

இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், கஜலட்சுமி மற்றும் ரீட்டா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த இருவரைப் பிடித்த அப் பகுதியினர் பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணையில், காரை ஓட்டி வந்தது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அபிநந்த ஜெயின் (18) என்றும், உடன் இருந்தது சிராக் (20) என்றும் தெரியவந்தது.

இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு பிபிஏ படித்து வருகின்றனர்.

தி.நகரில் உள்ள தங்கள் கல்லூரி நண்பரின் பிறந்தநாளையொட்டி மது பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

....தட்ஸ்தமிழ் 16.09.2010

nambi
16-09-2010, 09:39 AM
கோவை, செப். 15: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அண்ணா அறிவகம் மேல்நிலைப் பள்ளி தீ வைத்து, சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) பள்ளிகளை மூடுவது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.விசாலாட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டு பள்ளிக்குத் தீ வைத்த சம்பவம் கண்டனத்துக்குரியது.

இப் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு அரசு உரிய நிவாரணமும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு முன்பு பெற்றோர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்.

போச்சம்பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை இயங்காது என தெரிவித்துள்ளார்.

....தினமணி 16.09.2010

nambi
16-09-2010, 09:47 AM
சென்னை : ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை துரைப்பாக்கம் டி.வி.எச் பார்க் வில்லா அருகில் உள்ள எச்டிஎப்சி வங்கி கிளையின் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து அதில் இருந்து கடந்த 11ம் தேதி 20 லட்சத்து 70 ஆயிரத்து 200 கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டது.

முதற்கட்டமாக செக்யூர் டிரான்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் தான் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு தேவையான பணத்தை வங்கியிடம் பெற்று ஏடிஎம் மிஷினில் பணத்தை வைக்கும். இந்த நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே ஏடிஎம் மையத்தின் ரகசிய குறியீட்டு எண் தெரியும்.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஹாஜி முகமது (எ) அசரப் என்பவர் தனது நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ், ஐயப்பன் (எ) கார்த்திக் மற்றும் தனது பெரியம்மா மகனான திருவண்ணாமலையை சேர்ந்த லாரி ஓட்டுனர் பாபு ஆகியோருடன் சேர்ந்து ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடித்துள்ளனர்.

அவர்களை கைது செய்தோம். பணத்தை உத்திரமேரூர் அருகில் உள்ள பாபுவின் தந்தைக்கு சொந்தமான அரிசி மில்லில் பதுக்கி வைத்துள்ளனர். அங்கிருந்து ^20 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் தலைமறைவாக உள்ள £ர். அவரை தேடுகிறோம்.

மேலும், கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் தேதி கேளம்பாக்கத்தில்&nbsp; உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையின் ஏடிஎம் மையத்தை உடைத்து உள்ளே இருந்த ^5 லட்சத்து 6,500 கொள்ளையடித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பொதுவாக வங்கிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. நாங்கள் சொல்லும் சில ஆலோசனைகளை அவர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால், சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து விடுகிறது. வங்கி, ஏடிஎம் மையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆலோசனை வழங்கி உள்ளோம். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் கலந்து பேசவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.


கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினருக்கு கமிஷனர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். பேட்டியின்போது, கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, இணை ஆணையர் சக்திவேலு, துணை கமிஷனர் சாரங்கன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கொள்ளை நடந்தது எப்படி?

ஏடிஎம் மைய செக்யூரிட்டி அருகிலுள்ள அறையில் சிறிது நேரம் தூங்க சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த அறையை பூட்டியுள்ளனர். ராஜேஷ் மட்டும் முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்துக்குள் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் ஸ்டிக்கரை ஒட்டி மறைத்துள்ளார். பின்னர், ஹாஜி முகமது உள்ளே சென்று இயந்திர ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளார். 2 பேர் ஏடிஎம் கதவு அருகே நின்று கொண்டு யாரேனும் வருகிறார்களா என்று நோட்டமிட்டுள்ளனர். ஒருவர் காரில் தயாராக இருந்துள்ளார். 4 நிமிடத்தில் கொள்ளை அடித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
...தினகரன் 16.09.2010

nambi
16-09-2010, 09:53 AM
பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்
.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.180 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் 3.6.1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர் களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 15.7.2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அண்ணா நூற் றாண்டு விழா நினைவாக பள்ளிக்கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.அரசு அலுவலகங்கள், அரசு சார் புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப் படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும்

துப்புரவுத் தொழிலாளர்கள் இப்போது ரூ.1000 முதல் ரூ.1500 வரை ஊதியம் பெறுகின்றனர்.அவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி மாதம் ரூ.1300 ரூ.3000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து தொடக்க நிலையில் மாதம் ரூ.2,320 கிடைக்கும் வகையில் ஊதியம் உயர்த்தப்படும். அவ்வப்போது வழங்கப்படும்

அகவிலைப்படி உயர்வும், 3 சதவீத கூடுதல் ஊதியப்படி யும் பெறும் தகுதியினையும் இவர்கள் பெறுவார்கள். இந்த அறிவிப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.இந்த நூலகத்தை நம்முடைய நூலகமாகக் கருதி தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலகத்துக்கு வருபவர்களுக்கு பஸ் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்கலாமா என்ற கருத்தும் அரசிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

நிதி அமைச்சர் க.அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்
...மாலைச்சுடர் 16.09.2010

nambi
16-09-2010, 09:56 AM
டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 9.5 சதவிகிதம் ஆகியுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணி புரியும் சுமார் 4.4 கோடி ஊழியர்கள் இந்த நிதயாண்டு முதல் தொழிலாளர் வைப்பு நிதிக்கு பெற்று வந்த 8.5 சதவிகித வட்டிக்குப் பதிலாக 9.5 சதவிகிதம் பெறவிருக்கின்றனர்.

நேற்று நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு கூடுதலாக ரூ. 1,700 கோடி செலவாகும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
...தட்ஸ் தமிழ் 16.09.2010

nambi
16-09-2010, 01:56 PM
சென்னை, செப்.16 (டிஎன்எஸ்) சென்னை மாநகரத்தில் விரைவில் 100 மினி பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் ஓட்டுநர்-பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெறுவதற்கு உரிய வசதியினை அமைச்சர் நேரு இன்று (செப்.16) புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுவதாகவும், வாகன பதிவு அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஓட்டுநர்-பழகுநர் உரிமம் பெறுபவர்களின் வசதிக்காக வீட்டிலிருந்தபடியே, அவர்கள் ஆன்லைன் மூலம் வேண்டிய தகவல்களை அளித்து காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து எல்எல்ஆர் பெற்றுக் கொள்ளும் வசதி ஆன்லைன் மூலம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

வாகனங்களுக்கு தேசிய அளவிலான அனுமதி (National Permit) வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகம் அமல்படுத்தியிருப்பதாக கூறிய அமைச்சர், 15,000 ரூபாய் செலுத்தி இந்த உரிமத்தை பெற்றுவிட்டால், அந்த வாகனம் இந்தியா முழுவதும் செல்லலாம் என்று கூறினார்.

சென்னை மாநகரில் மொத்தமான குடியிருப்பு பகுதிகளிலிருந்து பேருந்து நிறுத்தங்களுக்கு பயணிகள் வருவதற்கு வசதியாக முதற்கட்டமாக 100 மினி பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை மாநகரில் தற்போது சுமார் 1,820 பேருந்துகள் சாதாரணக் கட்டணத்தில் இயங்குவதாகவும், புதிதாக வாங்கவுள்ள சுமார் 3,000 பேருந்துகள் சாதாரண பேருந்துகளாகவே வாங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். (டிஎன்எஸ்)
...ஆறாம்திணை 16.09.2010

nambi
16-09-2010, 02:02 PM
மதுரை : மதுரையில் நேற்று நடந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து துப்பு துலங்கியது. ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் நகை அடகு கடை அதிபர் நேற்று மர்மநபர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரிடம் வேலைபார்த்தவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மதுரை டோக்நகரை சேர்ந்தவர் பொன்முருகன்(50). இவர் நகை அடகு கடை நடத்தி வந்தார். நேற்று பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர் இவரை குத்திக்கொலை செய்தனர். இதுதொடர்பாக சரவணன் என்பவரிடம் விசாரிப்பதற்காக போலீசார் அவனியாபுரம் சென்றனர். சரவணன் அவனியாபுரத்தில் கேரம் போர்டு செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். கேரம் போர்டு கம்பெனியில் சரவணன் இல்லை, கடை பூட்டி இருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பொன்முருகனிடம் வேலை பார்த்த மாணிக்கம் என்பவர் கை, கால் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெறித்து பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகை அடகு அதிபர் கொலையில், அவரிடம் வேலை பார்த்தவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாரை மேலும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து போலீசார் விசாரனையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் சரவணனும் அவனது கூட்டாளிகளுமே கொலையை செய்தனர் என்பது தெரிய வந்தது.

பொன்முருகன் அடகு கடைக்கு வந்த சரவணன் என்பவர், நகையை மீட்டு மறு அடகு வைக்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். பொன்முருகன் , சரவணன் கேட்ட ரூ. 2.5 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து கொடு்த்து சரவணனுடன் மாணிக்கம் என்ற ஊழிய*ரை அனுப்பினார். மாணிக்கத்துடன் அவனியாபுரம் சென்ற சரவணன், அவரது நண்பர்கள் தங்கமாயன் மற்றும் பாலாஜியுடன் சேர்ந்து மாணிக்கத்தை கொலை செய்தான். மாணிக்கம் கொலை செய்யப்பட்டது தெரிந்தால் , பொன்முருகன் நிச்சயம் போலீசில் தங்களை அடையாளம் காட்டி விடுவார் என்பதற்காக, மீண்டும் நகைக்கடைக்கு வந்த சரவணன் மற்றும் அவனது கூட்டாளிகள், பொன்முருகனையும் கொலை செய்துள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட தங்கமாயனை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த 14 மணி நேரத்தில் துப்புதுலக்கினர். சரவணன் மற்றும் பாலாஜியை தேடி வருகின்றனர்.பணத்தை கொள்ளையடிக்கும் ஒரே குறிக்கோளில் மட்டுமே கொலை நடந்துள்ளது.

.....தினமலர் 16.09.2010

nambi
16-09-2010, 02:17 PM
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள தன்னிச்சையான விடுமுறை அறிவிப்புக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தன்னிச்சையாக விடுமுறை அறிவிப்பது துறையின் விதிமுறைக்கு முரணானது. துறையின் அனுமதியின்றி விடுமுறை விடுத்தலாகாது.

நாளை வழக்கம் போல் பள்ளிகள் இயங்கவேண்டும் எனவும், விடுமுறை அறிவிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
...கலைஞர் செய்திகள் 16.09.2010

nambi
16-09-2010, 03:54 PM
வாஷிங்டன்: அமெரிக்க பள்ளி மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் போட்டியை சமாளிக்கக் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

உலக நாடுகள் அனைத்தும் முன்பை விட தற்போது அமெரிக்காவுடன் அதிகமாக போட்டி போடுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர்.

இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க மாணவர்களும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து ஏராளமான தொழில் துறை அறிஞர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் உலக அரங்கில் அமெரிக்கா தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

பள்ளிகளில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறீர்களோ, அந்த அளவு வாழ்க்கையிலும் முன்னேறுவீர்கள். பள்ளியில் பெறும் வெற்றி மாணவர்களின் வாழ்க்கையில் பெறப்போகும் வெற்றியை மட்டும் தீர்மானிப்பதன்று. அது தான் அமெரிக்காவின் வெற்றியையும் தீர்மானிக்கும். எனவே, நீங்கள் முன்பை விட நன்றாகப் படித்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
...தட்ஸ்தமிழ் 16.09.2010

nambi
16-09-2010, 03:58 PM
சென்னை: ‘திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று பெங்களூர் வாலிபர் விடுத்த கொலை மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த சினேகா நேற்று நீதிபதிமுன் கண்ணீர் மல்க சாட்சி அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
‘பார்த்திபன் கனவு’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சினேகா.

இவருக்கு கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவர் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி, ‘என்னை திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று மிரட்டினார். அதிர்ச்சி அடைந்த சினேகா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்தார். ராகவேந்திராவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சாட்சி சொல்ல பகல் 2 மணிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கோர்ட் வளாகத்தில் காத்திருந்தார் சினேகா. 3.30 மணிக்கு விசாரணை தொடங்கியது.

நீதிபதி ஸ்ரீராம் விசாரித்தார். அவர் முன்பு ஆஜரான சினேகாவின் தந்தை ராஜாராம், ‘இந்த வழக்கில் என் மகள் சினேகா சாட்சி சொல்ல அனுமதிக்க வேண்டும்’ என்றார். அனுமதி வழங்கப்பட்டது. பிறகு கண்கலங்கியபடி சினேகா சாட்சி அளித்தார். ‘2008ம் ஆண்டில் எனது தந்தையை சந்தித்த ராகவேந்திரா ‘ஆட்டோகிராப் பார்ட் 2’ எடுக்கப் போவதாக கூறினார். அவரை தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து எனது செல்போனுக்கு 50 மிஸ்டுகால், 20 எஸ்.எம்.எஸ் அனுப்பி டார்ச்சர் செய்தார் ராகவேந்திரா.

அவரை யார் என்றே எனக்கு தெரியாது. என் செல்போன் எண்ணை மாற்றினேன். அதையும் தெரிந்துகொண்டு மீண்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ‘உன்னை திருமணம் செய்வேன்.. இல்லாவிட்டால் முத்தமாவது கொடுப்பேன். என்னுடன் செல்போனில் பேசாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்னையால் எனது குடும்பமே இன்று கோர்ட்டில் நிற்கிறது’ என்றபடி கதறினார். அதைக்கண்டு அவரது அம்மா பத்மாவதி, தந்தை ராஜாராம், அக்கா சங்கீதா ஆகியோரும் கதறி அழுதனர்.

வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதத்துக்கு நீதிபதி ஸ்ரீராம் தள்ளிவைத்தார். இதற்கிடையே, நீதிபதி முன்பு சினேகா கதறி அழுத தகவல் நீதிமன்றம் முழுக்க பரவியது. வக்கீல்களும் பொதுமக்களும் சினேகா இருக்கும் இடம் தேடி திரண்டனர். ‘எந்த தவறும் செய்யாத நிலையில், யாரோ ஒருவர் கொடுக்கும் டார்ச்சரால் கேஸ், கோர்ட் என அலைக்கழிக்கப்படுவது பொறுக்க முடியாமல்தான் அனைவரும் கண்கலங்கி விட்டனர்’ என்று சினேகா தரப்பில் கூறினர். இதனால் நேற்று நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
....தினகரன் 16.09.2010

nambi
17-09-2010, 02:50 PM
http://goldsea.com/811/26rajasekar.jpg

சென்னை : அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றிய ராஜசேகர் சாம் எழுதி வைத்திருந்த உயில் படி, சென்னை பல்கலைக்கழகத்துக்கு ^18.60 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி படித்தவர், ராஜசேகர் சாம் (68). இவர், எந்த ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார் என்ற விவரம் தெரியவில்லை. அமெரிக்காவில் 2008ம் ஆண்டு வரை ரேடியாலஜி துறை டாக்டராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவி லூசியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அந்த சோகம் தாங்காமல் ராஜசேகர் சாம் 2008ல் இறந்து விட்டார். அதற்கு முன்பு, தனது சொத்தில் 50 சதவீதத்தை சென்னை பல்கலைக்கழகத்துக்கு சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளார். மீதமுள்ள 50 சதவீதம் சொத்தை அமெரிக்காவில் உள்ள ‘இயற்கை பாதுகாப்பு படை’ என்ற நிறுவனத்துக்கு எழுதி வைத்துவிட்டார். இந்த விவரத்தை அமெரிக்க அரசு, சென்னை பல்கலைக்கழகத்துக்கு தெரிவித்தது.

இதையடுத்து, சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ‘யுனிவர்சல் லீகல்’ என்ற சட்ட அமைப்பின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, ராஜசேகர் சாம் எழுதி வைத்த உயிலின்படி, அவரது 50 சதவீத சொத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை பல்கலைக்கழகத்துக்கு ^18 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 747 வந்துள்ளது. இந்த தொகையின் இறுதிக்கட்ட தவணை இன்று பெறப்படுகிறது. யுனிவர்சல் லீகல் அமைப்பின் மூத்த அதிகாரி சமீனாசத்திரபதி, மேற்கண்ட தொகைக்கான காசோலையை வழங்கினார். இதற்கிடையே, இந்த தொகைக்கு அமெரிக்க அரசு ^9 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 374 வரி விதித்தது. பின்னர், சென்னை பல்கலைக்கழகம் லாப நோக்கில்லாத பல்கலைக்கழகம் என்று சான்றுகளுடன் விளக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க அரசு வரிவிலக்கு அளித்தது. தனிநபர் அளித்துள்ள நன்கொடையில் ராஜசேகர் சாம் மூலம் கிடைத்துள்ள நன்கொடைதான் சென்னை பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நன்கொடை. இந்த தொகை தனிக் கணக்காக வங்கியில் வைக்கப்படும்.

இதைக் கொண்டு தரமணியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் ^14 கோடியில் கட்டப்படும். இதன் மூலம் 1,400 மாணவர்கள் பயன் பெறுவார்கள். மீதமுள்ள ^4 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும். இரண்டு ஆண்டில் இவை கட்டி முடிக்கப்படும் என்றார்.

.....தினகரன் 17.09.2010

nambi
17-09-2010, 03:16 PM
கொழும்பு, செப்.17: கிழக்கு இலங்கை காவல் நிலையம் ஒன்றின் வெடிமருந்து கிடங்கில் நிகழ்ந்த வெடிவிபத்து சம்பவத்தில் இரு சீன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட 60 பேர் பலியானதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

சாலைத் திட்ட பணிகளுக்காக சீன ஒப்பந்ததாரர்களுக்கு போலீசார் வெடிபொருள்களை வழங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபயா மெதவல தெரிவித்தார்.

இது தவறுதலாக நிகழ்ந்த வெடிவிபத்து. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் நிலையத்தில் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அதை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும்போது விபத்து நிகழ்ந்துள்ளது என மெதவல குறிப்பிட்டார்.

இரு சீன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் என நம்பப்படுவதாகவும், ஒப்பந்ததாரர்கள் தவிர உயிரிழந்த மற்ற அனைவரும் போலீசார் என்றும் மெதவல தெரிவித்தார்.
.....தினமணி 17.09.2010

nambi
17-09-2010, 03:24 PM
நாகர்கோவில் : போச்சம்பள்ளி சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 230 பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. போச்சம்பள்ளியில் பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தனியார் பள்ளிசங்கங்களின் கூட்டமைப்பு ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு குமரி மாவட்ட நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. இதன் படி மாவட்டத்தில் பெரும்பாலான மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. தேர்வுகள் வேறு ஒரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக போர்டு வைக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் மூடப்பட்டது தெரியாமல் மாணவ மாணவிகள் வந்து விட்டு திரும்ப சென்றனர்.
...தினமலர் 1709.2010

nambi
17-09-2010, 03:25 PM
மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடனிற்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனங்கள் வாங்க பொது மக்களுக்கு வங்கிகளால் தரப்படும் கடன்களுக்கான வட்டி உயரவுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தனது முதல் காலாண்டு கடன் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடனிற்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் குறுகிய கால முதலீட்டுக்கான வட்டி விகிதத்தையும் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதையடுத்து இந்த விகிதம் 4.50 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இந்த ஆண்டில் இந்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர இந்த வட்டி விகித மாற்றத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது ரிசர்வ் வங்கி.

இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், நிறுவனங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடனிற்கான வட்டி விகிதம் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து உயர வாய்ப்புள்ளது.
....தட்ஸ்தமிழ் 17.09.2010

nambi
17-09-2010, 03:28 PM
துபாய் : வளைகுடாவில் பிச்சை எடுப்பது மிகவும் லாபகரமான தொழிலாக உள்ளதாக துபாய் போலீஸ் கருதுகிறது. பொதுவாக வளைகுடாவில் குறிப்பாக பண்டிகை தினங்களில் ஏராளமான பிச்சைகாரர்கள், சில சமயம் பார்ப்பதற்கு நம்மை விட நன்றாக, நன்றாக உடையணிந்து இருப்பார்கள்.

அடிக்கடி அங்குள்ள காவல்துறை சோதனை நடத்தி பிச்சை எடுப்போரை கைது செய்து நாடு கடத்துவது வழக்கம். அவ்வகையில் ரம்ஜான் பெருநாளை ஒட்டி நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் கைது செய்யப்பட்ட ஆசிய நாட்டை சார்ந்த பிச்சைகாரர் ஒருவர் துபாயின் பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததாக துபாய் அரசின் சுற்றுலா பாதுகாப்பு அணியின் நிர்வாகியான மேஜர் முஹம்மது ரஷீத் அல் முஹைரி நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அம்மனிதர் ஏற்கனவே பிச்சை எடுத்த காரணத்தால் நாட்டை விட்டு துரத்தப்பட்டவர் என்றும் இத்தொழில் தந்த பொருளாதாரத்தால் மீண்டும் வந்துள்ளதாக குறிப்பிட்டவர் ரமலானில் மாத்திரம் 360 நபர்கள் துபாயில் பிச்சையெடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். ஆசிய மக்கள் மாத்திரமல்ல அரபுகளும் விசிட் விசாவில் வந்து பிச்சையெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
..இந்நேரம் 17.09.2010

nambi
17-09-2010, 03:31 PM
இலங்கையில் ஜனநாயக உரிமைகள் மீறப்படும் போது, அது தொடர்பில் மனித உரிமைகள் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் என்ற அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இலங்கையிடம் கேள்வி எழுப்ப அதிகாரம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

18வது சீர்திருத்தம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைத்த ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு உள்நாட்டில் மாத்திரம் இன்றி வெளிநாட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற சபைக்கு எதிர்கட்சித் தலைவரின் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் பரிந்துரைக்கப்பட்டார்.

எனினும் தமிழ் கூட்டமைப்பு இதனை நிராகரிக்கும் என தாம் முன்னதாகவே அறிந்திருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற சபையில் தாம் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்பதுடன், தம்மால் நியமிக்கப்பட்டவரும் அதனை புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற சபை குறித்த தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கத்தினால் மற்றுமொரு சீர்த்திருத்தம் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற சபைக்கு அரசாங்க ஆதரவாளர்களே நியமிக்கப்படும் சாத்தியம் நாடாளுமன்ற சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்க உரிய தரப்பினர் தவறும் பட்சத்தில், அதனை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.

....தமிழ்வின் 17.09.2010

nambi
19-09-2010, 01:45 AM
சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.47 வரை வசூலிப்பதாகவும் பொதுமக்கள் புகார்


சென்னை, செப்.19-

சென்னை புறநகர் பகுதிகளில் பதிவு செய்து 30 நாட்கள் ஆனாலும் கியாஸ் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். சில இடங்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.47 வரை கூடுதலாக வசூல் செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காத்துக்கிடக்கும் நிலை

பொது மக்களின் அன்றாட தேவைக்கு மிகவும் முக்கியமானது கியாஸ் ஆகும். இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவது பரிதாபமாக உள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி மூலமாக மட்டும் 5 ஆயிரம் வீடுகளுக்கு கியாஸ் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் ஆயில் நிறுவனங்களில் இருந்து வரும் கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு வினியோகம் செய்யவேண்டும். ஆனால் மாங்காட்டில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் குறிப்பிட்ட சில வீடுகளுக்கு மட்டுமே கியாஸ் சப்ளை செய்துவருகிறார்களாம். மற்றவர்கள் கியாஸ் வேண்டும் என்றால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் காத்து கிடந்துதான் கியாஸ் வாங்கவேண்டிய நிலை உள்ளது.

30 நாட்கள் ஆனாலும்...

மாங்காட்டில் உள்ள அந்த கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தின் கியாஸ் லாரி எப்போது வரும் என்று திருவேற்காடு பகுதியை சேர்ந்த 350-க்கு மேற்பட்டவர்கள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காத்துக்கிடக்கிறார்கள். மாலை 6 மணி ஆனதும் கியாஸ் நிறுவனத்தில் இருந்து லோடு வரவில்லை என்று திரும்பி சென்று விடுகிறார்கள்.

திருவேற்காடு பகுதியில் உள்ள ஒருவர் பதிவு செய்து 30 நாட்கள் ஆனாலும் கியாஸ் கிடைப்பது இல்லை என்று வேதனையுடன் கூறினார். கியாஸ் தீர்ந்துவிட்டால் பதிவு செய்வதற்காக அந்த ஏஜென்சி அலுவலகத்திற்கு போன் செய்தால் போனை எடுப்பதே இல்லை என்பதும் அந்த பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

இதற்கு முன்பு மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் கியாஸ் பெற்றவர்களை, மாங்காடு கியாஸ் ஏஜென்சிக்கு மாற்றிய பிறகுதான் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே திருவேற்காடு பகுதியில் உள்ளவர்களுக்கு முன்பு போல மதுரவாயல் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வாங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

கூடுதல் விலைக்கு விற்பனை

செங்கல்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனம் கூடுதல் விலைக்கு கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வதாக ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். ஒரு கியாஸ் சிலிண்டர் ரூ.390-க்கு மேல் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஒரு கியாஸ் சிலிண்டரை கூடுதலாக ரூ.47 வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்கள் என்ன விலைக்கு கியாஸ் விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து ரசீது வழங்குவதும் இல்லை என்று ஒருவர் கூறினார்.

இது மத்திய அரசை ஏமாற்றும் செயல் ஆகும். கியாஸ் சிலிண்டர்கள் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் கிடைப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் கியாஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஒருவர் கூறினார். எனவே அதிகாரிகள் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் திடீர் சோதனை நடத்தி தவறுசெய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

.....தினத்தந்தி 19.09.2010

nambi
19-09-2010, 01:48 AM
திருச்சியில் 2 லட்சத்து 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் தகவல்


திருச்சி, செப்.19-

விரும்பிய நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் திட்டத்தில் திருச்சியில் உள்ள 13 இன்டேன் கியாஸ் ஏஜென்சிகள் மூலம் 2 லட்சத்து 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் கூறினார்.

புதிய திட்டம்

திருச்சியில் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை விரும்பிய நேரத்தில் பெறும் புதிய திட்ட தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் குட்டி தலைமை தாங்கினார்.

விழாவில் கலெக்டர் சவுண்டையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக சமையல் கியாஸ் வினியோகம் செய்ய முடியும். இத்திட்டம் மூலம் குடும்ப பெண்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் பயன்பெறுவார்கள். கியாஸ் ஏஜென்சிகள், டீலர்கள் நேரத்திற்கு சமையல் கியாஸ் சிலிண்டரை வாடிக்கையாளர்க்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2 லட்சத்து 16 ஆயிரம் பேர்

இத்திட்டம் குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் குட்டி கூறுகையில், ``சமையல் கியாஸ் சிலிண்டர் விரும்பிய நேரத்தில் பெறும் திட்டம் இந்தியாவில் 13-வது இடமாக திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது இடமாகும். வாடிக்கையாளர்கள் நேரத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் குறிப்பிட்ட நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு மூப்பு அடிப்படையில் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும். குறிப்பிட்ட நாள், நேரத்தில் சிலிண்டர்கள் பெற தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தால் திருச்சியில் 13 இன்டேன் கியாஸ் ஏஜென்சிகள் மூலம் 2 லட்சத்து 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்'' என்றார்.

சமுதாய கூடம்

விழாவில் முதுநிலை ஏரியா மேலாளர் பட்டாபிராமன், ஏரியா மேலாளர் ரங்கசாமி, ஆக்ஸ்போர்டு கல்லூரி சேர்மன் சுப்பிரமணியன் மற்றும் ஏஜென்சி நிறுவனத்தினர், டீலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக துவாக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்டேன் சமுதாய கூடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் 2 சிலிண்டர்கள், 2 கியாஸ் அடுப்புகள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.50 வாடகை ஆகும். இதனை பொதுமக்கள் சுடு தண்ணீர் உள்பட பல்வேறு வகைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்டேன் சார்பில் சமுதாய கூடம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இன்டேன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

.....தினத்தந்தி 19.09.2010

nambi
19-09-2010, 01:51 AM
புதுடெல்லி, செப்.19-

பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டிரைக் அறிவிப்பு

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கான கமிஷன் தொகையை மத்திய அரசே அவ்வப்போது நிர்ணயிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, அவர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்படுவது இல்லை.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 5 சதவீதத்தை தங்களுக்கு கமிஷனாக வழங்க வேண்டும், புதிய பெட்ரோல் பங்க்குகளை திறக்கக்கூடாது, நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரேமாதிரி விலை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (திங்கட்கிழமை) முதல் காலவரையின்றி, நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகளை மூடப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோராவுக்கும், அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், பெட்ரோலியத்துறை ராஜாங்க மந்திரி ஜிதின் பிரசாதா, பெட்ரோலிய அமைச்சக செயலாளர் எஸ்.சுந்தரேசன் மற்றும் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில், அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் அசோக் பத்வார், தமிழ்நாடு பெட்ரோலிய வர்த்தகர்கள் சங்க தலைவர் எம்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவுகள்

இக்கூட்டத்தில், 5 சதவீத கமிஷன் அளிக்க வேண்டும் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று முரளி தியோரா உறுதி அளித்தார். அக்கமிட்டியில், பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளும், அகில இந்திய பெட்ரோலிய வர்த்தக சங்க கூட்டமைப்பு தலைவர் அசோக்பத்வாரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்கமிட்டி, 3 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

மேலும், பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே, எண்ணெய் நிறுவனங்கள் புதிய பெட்ரோல் பங்க்குகளை திறக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரேமாதிரி விலையை நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகத்துடன் பெட்ரோலிய அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒத்திவைப்பு

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அளிக்க வாக்குறுதிகளை ஏற்று, நாளை தொடங்க இருந்த ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்படுவதாக, தமிழ்நாடு பெட்ரோலிய வர்த்தகர்கள் சங்க தலைவர் எம்.கண்ணன் தெரிவித்தார்.
.....தினத்தந்தி 19.09.2010

nambi
19-09-2010, 02:06 AM
சென்னை,செப்.18: பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்புக்கான ஊசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை குடும்ப நலத்துறை பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை.

அனைத்து மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கென ஒரு முதுநிலை டாக்டரின் தலைமையில் ஒரு பிரிவு இயங்கும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க முதல்வர் கருணாநிதி அறிவிப்பு விடுத்தார். தமிழகத்தில் சுமார் 30 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்குவதற்கு, இதுவரை இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்துகளை அளிப்பதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோர வேண்டும்.

அதன்பின்பு மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க முடியும்.

கடந்த சில மாதங்களில் மொத்தம் 774 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 635 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். மருத்துவமனைகளில் 89 பேரும், வீடுகளில் இருந்து 50 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமை மட்டும் 11 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோயால் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து பொது சுகாதாரத் துறை, அந்தப்பகுதி உள்ளாட்சி அல்லது நகராட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய 50 ஆயிரம் தடுப்பு மருந்துகள் அரசு மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

சென்னை கிங் ஆய்வு மையத்தில் இதுவரை 3 ஆயிரத்து 300 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இதன் விலையை இன்னும் குறைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அமைச்சர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

....தினமணி 19.09.2010

nambi
20-09-2010, 05:54 PM
கூடுதல் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும் என்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் நிர்ப்பந்தித்துள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேல்நிலைப்பள்ளி தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பெற்றோர்கள் கூட்டம் என்று அழைத்த பள்ளி நிர்வாகம், கூடுதல் கட்டணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூடுதல் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும் என்று கூறியுள்ள பள்ளி நிர்வாகம், கூடுதல் கட்டணத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளி நிர்வாகிகள் நிபந்தனை வித்துள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற கூறியுள்ள பள்ளி நிர்வாகம், கூட்டத்தில் தங்களை பேசக் கூட நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.
...வெப்துனியா 18.09.2010

nambi
20-09-2010, 06:30 PM
இலங்கையிலிருந்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்தரை வருட சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பத்மேந்திரா புலேந்திரன் என்ற இவர், கசிவு ஏற்பட்ட கப்பல் ஒன்றில் சுமார் 200 அரசியல் தஞ்சம் கோருபவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்றிருந்தார்.

இவர் இந்தோனேசியாவில் முகவராக செயற்பட்டதுடன் இந்தப்படகின் மூலம் இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான்,அகதிகளை சட்டவிரோத அழைத்துச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்

அத்துடன் இவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

பொதுமக்களை சட்டவிரோதமாக அழைத்துச் செல்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கமுடியும் என நீதிபதி, ரொபைன் டுப்மன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றவாளி சட்டவிரோத அகதிகளில் இருந்து பெற்றதாக கருதப்படும் 40 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
...தமிழ்வின் 20.09.2010

nambi
21-09-2010, 07:46 AM
சென்னை, செப்.21-

முதியோர் மற்றும் விதவை பென்சன்தாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தபால்காரர்கள் 11 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சபுகார்

வயதான முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு அரசு மாதம் ரூ.400 பென்சன் உதவி தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பணம் தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதி தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ரூ.400 பணத்துடன் போஸ்டல் கட்டணம் ரூ.20-ஐயும் சேர்த்து காசோலை மூலமாக அனுப்பி விடுவார்கள்.

இந்த பணத்தை தபால்காரர்கள் வீடு தேடி சென்று வழங்க வேண்டும். ஆனால் இந்த பணத்தை முறையாக வழங்காமல் தபால்காரர்கள் பல்வேறு முறைகேடுகள் செய்வதாக சி.பி.ஐ. போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

பணத்தை வீடு தேடி சென்று கொடுப்பதில்லை. முதியோர்களை தபால் நிலையத்திற்கு அலையவிடுவார்களாம். அவ்வாறு அலையவிடுவது மட்டுமல்லாமல் ரூ.400 பென்சன் பணத்தையும் முழுமையாக கொடுக்காமல் அதில் ரூ.20 முதல் ரூ.40 வரை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தான் பணத்தை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தன.

அதிரடி சோதனை

இந்த புகார்களை தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் நேற்று சென்னை மேற்கு மாம்பலம் தபால் நிலையத்திலும், கே.கே.நகர் தபால் நிலையத்திலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். முதியோர் பென்சன் தொகை ஒழுங்காக வழங்கப்பட்டுள்ளதா என்று விசாரணை மேற்கொண்டனர். சோதனை நடத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்திய போது பென்சன் பணத்தை வாங்குவதற்காக ஏராளமான வயதான பெண்கள் தபால் அலுவலகத்தில் காத்திருந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரித்தனர். அப்போது முதியோர் பென்சன் தொகையில் இருந்து ரூ.20 முதல் ரூ.40 வரை தபால்காரர்கள் மாதம் தோறும் லஞ்சமாக வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தபால்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

11 பேர் கைது

சி.பி.ஐ. விசாரணையில் 11 தபால்காரர்கள் லஞ்சம் வாங்கியதாக மாட்டினார்கள். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 945 ரூபாய் கணக்கில் வராத லஞ்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதையொட்டி அவர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவோடு இரவாக அவர்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் அவர் வீட்டிலும் ஆஜார்படுத்தப்பட்டனர்.

கைதான தபால்காரர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1.லட்சுமிபதி 2. சங்கரி, 3.சேகர், 4.ஆனந்தன், 5.சுப்பிரமணியன், 6.சிவசங்கரன், 7.பாண்டியப்பன், 8.இளங்கோவன், 9.தேவநாதன், 10.மனோகரன், 11.முனுசாமி.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 36 ஆயிரம் முதியோர், விதவை மற்றும் மாற்று திறனாளிகள் பென்சன் வாங்குவோர் உள்ளதாகவும், இவர்களிடம் கட்டாயப்படுத்தி தபால்காரர்கள் லஞ்ச பணத்தை கறந்து விடுகிறார்கள் என்றும் சி.பி.ஐ. போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சி.பி.ஐ. போலீசாரின் இந்த நடவடிக்கையால் இனிமேல் தபால்காரர்கள் பென்சன் பணத்தில் லஞ்சம் வாங்குவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

...தினத்தந்தி 21.09.2010

nambi
21-09-2010, 07:53 AM
காலங்கலமா...வருடக்கணக்கில் இப்படித்தான் அப்பாவி ஏழை, பாழைகளிடம் ஆட்டைய போட்டுட்டு வந்தாங்க....இப்ப களி திங்க போறாங்க!....போகட்டும் என்றைக்காவது போய்த்தானே ஆகனும்...காலதமாதமா வந்தாலும் கழுத்தை பிடிக்கற அளவுக்கு வந்திருக்கு..(சிபிஐ) முழுவதும் களையப்படுமா? களை எடுக்கப்படுமா பாரபட்சமின்றி :confused:

nambi
21-09-2010, 07:58 AM
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்தது இந்தியன் ஆயில் நிறுவனம். நாடு முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது.
...தட்ஸ் தமிழ் 21.09.2010

nambi
21-09-2010, 08:01 AM
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் போல பெட்ரோலின் விலையையும் தினமும் ஊடகங்களின் மூலம் காலையில் அவசர செய்தியாக வெளியிடலாம்...இதுவும் திரவத்தங்கம் தானே...காலையிலே பணிக்கு புறப்படும்பொழுதே பர்சில பணம் எடுத்து வைப்பதற்கு சௌகரியமாக இருக்கும்......

nambi
21-09-2010, 08:05 AM
ஜெர்மனி கருத்தரங்கில் பங்கேற்ற பழனி டாக்டர் சந்திரலேகா பேட்டி


பழனி, செப்.21-

உலகம் முழுவதிலும் மன அழுத்தம் காரணமாக தம்பதிகளுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு குழந் தை பிறக்க இயலாத நிலை உண்டாகி வருகிறது என ஜெர்னியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய டாக்டர் சந்திர லேகா கூறினார்.

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம்

சென்னை, கோவை, பழனி ஆகிய இடங்களில் இயங்கி வரும் ஐஸ்வர்யா மகளிர் நலம் மற்றும் கருத்தரித்தல் மையத்தின் இயக்குனர் டாக்டர் எஸ். சந்திரலேகா கடந்த வாரம் ஜெர்மனி நகரில் நடைபெற்ற உலக கருத்தரித்தல் மாநாட்டில் கலந்து கொண்டார். 5 நாட்கள் நடைபெற்ற அம்மாநாட்டில் பங்கேற்ற அவர் நேற்றுகாலை நாடு திரும்பினார்.

பழனி வந்த அவருக்கு பழனி ஐஸ்வர்யா மகளிர் நலம் மற்றும் கருத்தரித்தல் மையம், கே.வி.மருத்துவமனை, பாரத் ஸ்கூல் ஆப் நர்சிங் டாக்டர்கள், நர்சுகள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவிகள் சார்பில் வரவேற்பு கொடுக் கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தஅனை வரையும் மேலாளர் செந்தில் குமார் வரவேற்றார். டாக்டர் சந்திரலேகா ஜெர்மனி கருத்தரங்கு குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

கடந்த வாரம் ஜெர்மனி நாட்டில் முனிச் நகரில் அகில உலக கருத்தரித்தல் மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டில் உல கம் முழுவதிலுமிருந்து 400-க் கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இந்தி யாவிலிருந்து கலந்துகொண்ட 45 டாக்டரிகளில் 6 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். 5 நாட் கள் நடைபெற்ற இம்மாநாட்டில் ஒரு நாள் `ஒர்க்ஷாப்' என்னும் நிகழ்வுக்கான கண் காட்சியும், 4 நாடகள் கருத்தரங்கும் நடைபெற்றது.

லேப்ராஸ்கோப்பி சிகிச்சை

இம்மாநாட்டில் புதிய முறை லேப்ராஸ் கோப்பி சிகிச்சை பற்றியும் அதன் பயன் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது. தற்போது லேப்ராஸ்கோப்பி சிகிச்சைக்காக 3 துளைகள் போடப்படுகிறது. ஆனால் புதிய முறையில் ஒரே துளை மூலம் சிறப்பாக சிகிச்சையளிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் மருத்துவ துறையில் ஏற்படும் மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் குறித்தும், எதிர்கால சிகிச்சை முறை குறித்தும் அங்கு விவா திக்கப்பட்டது.

குறிப்பாக செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை முறையில் இக்சி முறை அனைவராலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக `இன்சி' என்னும் முறையில் சிகிச்சையளிக்கவும் அதன் மூலம் ஏற்படும் பயன் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட்டது. இன்சி முறையில் நல்ல ஆண் விந்தணுக்களை சேகரித்து செயற்கை கருவூட்டம் செயல் படுத்தப்படுகிறது. இன்சி முறையில் ஆண் விந்தணுக் களில் மிகச் சிறந்த ஒன்றினை தேர்வு செய்து அதன் மூலம் கருவூட்டல் செய்யப்படுகிறது. இது ஒரு சிறந்த நிகழ்வாகும்.

மலட்டுத் தன்மை

உலகம் முழுவதிலும் கணவன் -மனைவியான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மலட் டுத் தன்மை ஏற்பட்டு குழந்தை பெற்றுக் கொள் இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. எல்லா வகை பிரச்சினைகளை எதிர் கொள்வதில் ஆண், பெண் இருவரும் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி வரு கிறார்கள். மேலும் `பாஸ்ட் புட்' என்னும் துரித உணவு வகைகள், தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு வரும் எண் ணையில் செய்து சாப்பிடும் பலகாரங்கள், சத்து இல்லாத உணவு வகைள் போன்றவற்றால் உடலுக்கு எந்த நன் மையும் கிடைப்பதில்லை. மாறாக வேறு விளைவுகளை தோற்றுவிக்கிறது.

மேலும் தினசரி உடற்பயிற்சி ஏதும் இன்றி உடல் வளர்வதால் எவ்வித பயனும் இல்லை. உல கம் முழுவதிலும் பெரும் பான்மையான மக்கள் இயற்கை உணவுக்கும் சைவ உணவிற்கும் மாறி வருகின்றார்கள்.

செல்போன் பாதிப்பு

இன்று 100-க்கு 90 பேர் செல்போன் பயன்படுத்துகின்றார்கள். செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைகள் எல்லோருடைய உடல் நிலையையும் பாதிக்கிறது. செல்போனை தேவைக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பரிமாற்றம் செய்யலாம். தொடர்ந்து பேசிக் கொண் டே இருப்பதாலும், சட்டை பாக்கெட் பேண்ட் பாக்கெட் போன்ற இடங்களில் வைப் பதால் அதன் ரேடியோ அலைகள் உடல் நிலையை பாதிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த ரேடியோ அலைகளால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு கர்ப்பம் கலையும் என விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் ஆண்களின் டி.என்.ஏ.வில் அழிவினை ஏற்படுத்துகிறது.

டி.வி., கம்ப்ïட்டர்

கம்ப்ïட்டர் பயன்பாடும், டி.வி.யின் ஆக்கிரமிப்பும் இன்று அதிகமாக உள்ளது. இவைகளை தேவைக்கு ஏற்பவே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து 10 மணி நேரம், 12 மணி நேரம் என பார்த்து கொண்டிருந்தால் கண்கள் பாதிக்கப்படுவதுடன், தீராத மன அழுத்தத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். பொதுவாக 21 வயதிற்கு மேல் திருணம் செய்து கொண்டால் 30 வயதிற்குள் குழந்தை பெறும் வாய்ப்பு உள்ளது. வயது கூட கூட குழந்தை பெறும் வாய்ப்பு குறைந்து கொண்டே போய் விடும். ஆதலால் திருமணமான தம்பதியர்கள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக் கவில்லையெனில் உடனடியாக தகுந்த மருத்துவர்களிடம் இதற்கான சிகிச்சையை உடனடி யாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு டாக்டர் சந்திரலேகா தெரிவித்தார்.


.....தினத்தந்தி 21.09.2010

nambi
21-09-2010, 08:14 AM
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி கட்டணம் நிர்ணயித்தது. இதற்கு தடை கோரி தனியார் பள்ளிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தது. இவற்றை நீதிபதி வாசுகி விசாரித்து, நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த கல்வி கட்டணத்திற்கு இடைக்கால தடை விதித்தார். அதைத்தொடர்ந்து தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற கிறிஸ்தவ பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

சென்னையில் உள்ள டான்போஸ்கோ, குட் ஷெப்பர்ட் உள்பட 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தனியாக தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்குகளை நீதிபதி சுகுணா இன்று விசாரிக்கிறார். இந்த நிலையில் கல்வி கட்டணத்துக்கு நீதிபதி வாசுகி பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து பெற்றோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்பு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வருகிறது.

...தினகரன் 21.09.2010

nambi
21-09-2010, 02:19 PM
வாஷிங்டன், செப்.21- 2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியா 3-வது இடம் வகிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த கணிப்பில், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் (என்ஐசி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் கூட்டாக வெளியிட்டுள்ள "உலக ஆளுகை 2025" என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையின்படி, 2025-ல் கூட்டமைப்பு அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் மூன்றாமிடத்திலும், இந்தியா நான்காம் இடத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

.....தினமணி 21.09.2010

nambi
23-09-2010, 05:06 PM
புதுதில்லி, செப்.23: அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் நாளை வழங்கவிருந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

பின்னர் பிற்பகல் 2 மணியளவில் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. அப்போது அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் பெஞ்ச், எப்போது தீர்ப்பு வழங்குவது என்பது குறித்து செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது முடிவு செய்யப்படும் என அறிவித்தது.

எனவே நாளை வழங்கவிருந்த அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

நாளை அயோத்தி தீர்ப்பு வெளியாகும் என்ற சூழலில், நாடு முழுவதும் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

...தினமணி 23.09.2010

nambi
23-09-2010, 05:10 PM
புதுதில்லி, செப்.23: காமன்வெல்த் போட்டி குளறுபடிகளைத் தொடர்ந்து, அதுகுறித்து விவாதிக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி ஆகியோருடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குளறுபடிகள் குறித்து சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து போட்டி ஏற்பாடுகளைக் கவனித்து வரும் அமைச்சர்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் கில் மற்றும் ரெட்டி ஆகியோருடன் போட்டி ஏற்பாடுகள் குறித்து பிரதமர் இன்று மாலை விவாதிக்க உள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

....தினமணி 23.09.2010

nambi
23-09-2010, 06:11 PM
புதுதில்லி, செப்.23: காமன்வெல்த் போட்டி குளறுபடிகளைத் தொடர்ந்து, அதுகுறித்து விவாதிக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி ஆகியோருடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குளறுபடிகள் குறித்து சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து போட்டி ஏற்பாடுகளைக் கவனித்து வரும் அமைச்சர்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் கில் மற்றும் ரெட்டி ஆகியோருடன் போட்டி ஏற்பாடுகள் குறித்து பிரதமர் இன்று மாலை விவாதிக்க உள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

....தினமணி 23.09.2010
வெட்கக்கேடான விஷயம்....முரண்பாட்டுக்கு பெயர்போன இந்தியா என்று பிபிசி தமிழோசையில் குறிப்பிட்டது போல இந்தியா முரண்பாட்டுக்கு பேர் போன நாடுதான்....அதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் என்ற பதவியே மிகப்பெரிய நேர்மைக்குரிய பதவி. யாரும் பதவியிலிருந்து அவ்வளவு எளிதில் கீழிறக்கமுடியாத பதவி...குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவர் தான் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்..குடியரசுத்தலைவருக்கு இணையான மதிப்புடையது.

ஆனால் அவர்கள் எப்படி? ஒரு கட்சியின் சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்? என்பதே கேள்விக்குரிய விஷயம் மட்டுமல்ல கேலிக்கூத்தான விஷயமும் கூட.

நேர்மையாளர் என்று வர்ணிக்கப்பட்ட டி.என்.சேஷனும் இதே போன்றதொரு நிலையினை மேற்கொண்டார். ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் பங்கு பெற்றார். அப்படி என்றால் அவர் பதவியிலிருக்கும் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பாரபட்சமான நடவடிக்கைகள், ஒரு கட்சி சார்ந்த நடவடிக்கைகளாகவே மக்களால் விமர்சிக்கப்படும், நடுநிலையாளர்களாலும் அப்படித்தான் கருதப்படும். (இதை இந்து நாளிதழ் முன்பே விமர்சித்திருக்கிறது...செய்தி)

இப்போது எம்.எஸ்.கில்...இதற்கு முன்பு மலைச்சாமி..(மலைச்சாமி...இவராவது தமிழக தேர்தல் ஆணையர்-ஆளுநரால் நியமிக்கப்படுபவர்...இதுவும் தவறுதான்...இருந்தாலும் தலையே....வால்)

... இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவி....சட்டத்திற்கு விரோதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறைதண்டணை பெற்ற ஒருவருக்கு...வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவருக்கு விதியை மீறி முதலமைச்சராக அவசர அவசரமாகப் பதவி பிரமாணம் செய்து வைத்ததும்...போலி என்கவுண்டர் (வெங்கடேச பண்ணையார் விவகாரம்...செய்தி) விஷயத்திலும் ஈடுபட்டும் தன்னுடைய மதிப்புமிக்க உயர் பதவியான உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தி கொண்டார். இவர் காலத்தில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் விமர்சனத்திற்குரியவைகளாகவே கருதப்படும்...நியாயமாக தீர்ப்பு வழங்கி இருந்தாலும்..அப்படித்தான் மறுதலித்து விமர்சிக்கப்படும்...?

இதுபோதாது என்று உயர்பதவியில் இருப்பவர்கள் ஊழல் புரிந்து மக்கள் காரி உமிழ்கின்ற, மக்கள் எள்ளி நகையாடுகின்ற அளவுக்கு போனவர்களின் பட்டியல்கள் நீளும், இன்னும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது..(கேதான் தேசாய்...)...அது தனிக்கதை....

இப்படித் தொடர்ந்து உயர் பதவியில் இருப்பவர்களே குற்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டில் ஒரு அசாதாரணமான நிலையை, சூழ்நிலையை மக்களுக்கு உணர்த்துகிறது. (இன்றைய குடியரசுத்தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிருபித்து இருக்கிறார்...தேரதல் சீட்டு விஷயத்தில் தலையிட்டு...(செய்தி))

குடியரசுத்தலைவராக பதவியில் இருந்த அப்துல் கலாம் அவருடைய பதவிகாலத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அவருடைய குடும்பத்தினர் கூட, ஏன் அவருடைய தமையனாரும் கூட தொடர்வண்டியில் சாதாரண வகுப்பிலேயே பிரயாணம் செய்தனர். தனது தம்பியின் (அப்துல் கலாமின்) செல்வாக்கை கூட பயன்படுத்த அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர் . இப்படிபட்ட நல்லவர்களும் இங்குதான் வாழ்கின்றனர். மறுப்பதற்கில்லை. இவர்களை பார்த்தாவது இம்மாமனிதர்கள் பாடம் கற்றுகொள்ளவேண்டும்.

இதையெல்லாம் பின்பற்றாததினால் தான் மேடை சரிந்து விழுகிறது, பாலம் இடிந்து விழுகிறது....வீரர்களின் முன்னாலேயே பயிற்சியாளர் அவமானப்படுத்த படுகிறார். (உலக சாம்பியன் மல்யுத்த வீரர் சுஷில் குமார் முன்னிலையில் அவரது பயிற்சியாளர் சத்மா எம்.எஸ். கில்லால் அவமானப்படுத்தப்பட்டது ...செய்தி) இதெல்லாம் இவர்களின் ஆரம்பத்திலேயே இவர்களின் நேர்மையற்றத்தன்மையை அல்லது போலியான நேர்மையை காட்டுவதற்காக இந்த பதவிகளை பயன்படுத்தி கொண்டனர் என்பதையே காட்டுகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கான உதாரணங்களாக இவைகள் மாறுகின்றன.


தேர்தல் ஆணையராக இருந்த பொழுது இவர்கள் கட்சிகளின் மேல் வைத்த குற்றச் சாட்டுகள் அனைத்தும் போலியானவைகளே! என்று தான் தெரிவிக்கின்றன.

நீதிபதிகளும் இம்மாதிரி பதவி ஆசை பிடித்து வீதிக்கு வந்து விட்டனர். அரசியல் கட்சிகளிலும் குதித்து விட்டனர். இன்னும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தான் வரவில்லை. இதெல்லாம் அரசு பதிவி வகிப்போரின் நடத்தை விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகள் தான்...ஆனால் இவ்விதிகளை இம்மாதிரி உயர்பதவி வகிப்போரே மீறினால் சாதாரண, கீழ்நிலை பதவிகள் வகிப்போர் மட்டும் எப்படி? சட்டவிதிகளை மீறாமல் இருப்பார்கள்? எப்படி? ஊழல் புரியாமல் இருப்பார்கள்? ...அவர்களை சுட்டினால்? இவர்களையும் சுட்டித்தான் ஆகவேண்டும். அரசு உயர்பதவியில் இருந்து கொண்டு விசுவாசத்தை இப்படி வெளிப்படையாக காட்டுவது தான் நேர்மையா?

nambi
23-09-2010, 07:03 PM
வேலூர்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள 3 அதிமுகவினர் சார்பாக அதிமுக சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்படுகிறது.

இதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழு வேலூர் சிறைக்குச் சென்று 3 பேரிடமும் கையெழுத்து வாங்கினர்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நெடுஞ்செழியன் , ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 அதிமுகவினவருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அக்டோபர் 8ம் தேதி தூக்கிலிட சேலம் முதலாவது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, சேலம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன் செவ்வாய்க்கிழமை வேலூர் சிறைக்கு கடிதம் அனுப்பினார்.

இந்தக் கடிதம் புதன்கிழமை காலையில் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தது. இதை சிறைக் கண்காணிப்பாளர் சேகர் பெற்றுக் கொண்டார். இதை தூக்குத் தண்டனை கைதிகள் மூவருக்கும் அவர் அளித்தார்.

அதில், "வரும் அக்டோபர் 8ம் தேதி காலை 6 மணிக்கு மூவரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வேலூர் மத்திய சிறையில் தூக்கு கடைசியாக எப்போது நிறைவேற்றப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தூக்குப்போடும் இயந்திரம் மட்டும் தொடர்ந்து தயார் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். நேற்று வேலூர் மத்திய சிறைக்குச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மூன்று பேரையும் சந்தித்துப் பேசினர்.

பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கருணை மனுவில் மூன்று பேரிடமும் கையெழுத்து பெற்றனர். ஆனால், இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் ஏதும் கூற மறுத்தனர்.

இந்த மனுவுடன் டெல்லி சென்று நேரடியாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் அதிமுக எம்.பிக்கள் கருணை மனுவை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே, சிறைத்துறை மூலமாகவும் 3 அதிமுகவினரும் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கருணை மனு சமர்ப்பிப்பதைத் தொடர்ந்து மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் இந்த மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை அவர்களுடைய தண்டனை நிறைவேற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

...தட்ஸ தமிழ் 23.09.2010

nambi
23-09-2010, 07:27 PM
வாஷிங்டன், செப்.23-

அமெரிக்காவில் வர்ஜினியா மாநிலத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்படுகிறது. 41 வயதான டெரசா லீவிஸ்க்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாயை அடைவதற்காக அவர் தன் கணவரையும், அவருக்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்த மகனையும் கொலை செய்தார். இதற்காக அவர் 2 வாடகைக் கொலையாளிகளை நியமித்தார். அவர்கள் மூலம் அவர் இந்த கொலைகளை செய்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு மரணதண்டனை விதித்தது.

...தினத்தந்தி 23.09.2010

nambi
23-09-2010, 07:58 PM
தஞ்சை: தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, கரந்தை ஆகிய 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

2ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் மதுரை முத்து குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின்னர், டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி, ஜாகீர் உசேனின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று 3ம் நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 9.30 மணிக்கு தமிழ் பல்கலைக்கழகத்தில் ‘இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்கேற்பு’ என்ற ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் சோழர் கால சிறப்பு கண்காட்சியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மாலை 5.30க்கு அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினரின் பறையாட்டம், 6 மணிக்கு அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலின் தவில் இசை, 6.45க்கு அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.25ம் தேதி காலை 9 மணிக்கு பெரியகோயிலில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி, 10.30க்கு சிறப்பு கருத்தரங்கம் நடைபெறகிறது. அமைச்சர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். மாலை பத்மா சுப்பிரமணியன் குழுவினர் 1,000 பேர் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நடைபெறும். 26ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், முதல்வர் உரையாற்றுகிறார்.
....தினகரன் 24.09.2010

nambi
23-09-2010, 08:03 PM
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. கடந்த காலங்களில் வானம் மும்மாரி பெய்ததால் கோயில் பொற்றாமரை குளத்தில் எப்போதும் நீர் நிரம்பி இருந்தது. பருவநிலை மாற்றத்தால் மழை குறைந்து, பொற்றாமரைக்குளம் ஆண்டின் பல மாதங்கள் வறண்டே காணப்பட்டது. பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் குளத்தின் தரைப்பகுதியை சிமெண்ட் தளமாக்கி போர்வெல் அமைத்து நீர் நிரப்பியது. பின்னர் படிப்படியாக போர்வெல்லில் நீர் குறைந்ததால் பொற்றாமரை குளம் நீரின்றி வறண்டு கிடந்தது.

இந்நிலையில் மதுரையில் நேற்று முன் தினம் இரவு 132 மி.மீ அளவிற்கு கனமழை பெய்தது. இதைதொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் பொற்றாமரை குளத்தில் திடீரென 3 இடங்களில் சிமெண்டை பெயர்த்துக்கொண்டு நீரூற்று தோன்றியது. அதிலிருந்து தண்ணீர் வெளிவந்து குளத்தை நிரப்பி வருகிறது. திடீரென தோன்றிய நீரூற்று அம்மனின் அருளால் நடந்ததாக கூறி பக்தர்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து கோயில் இணை ஆணையர் பத்மநாபன் கூறுகையில், ‘‘நேற்று முன் தினம் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவே கனமழை பெய்து பொற்றாமரைக்குளத்தில் நீரூற்று தோன்றியுள்ளது’’ என்றார்.

....தினகரன் 24.09.2010

nambi
28-09-2010, 02:52 PM
http://thatstamil.oneindia.in/img/2010/09/28-hitler-200.jpg

வியன்னா: ஆஸ்திரியாவில் நடந்த ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம் போயின.

ஜெர்மனியை மட்டுமல்லாமல் யூத குலத்தையே நடுநடுங்க வைத்தவர் ஹிட்லர். 2ம் உலகப் போர் மூ்ள காரணகர்த்தா இவர்தான். மிகப் பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்தாலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர் ஹிட்லர்.

கடந்த 1908ம் ஆண்டு ஹிட்லர் பல ஓவியங்களை தீடச்டியிருந்தார். சாதாரண வாட்டர்கலர் மூலம் பண்ணை நிலங்கள், தேவாலயங்கள், தொழிற்கூடங்கள், கிராமங்கள் , இயற்கைக்காட்சிகள் ஆகியவற்றை வரைந்து தள்ளியிருந்தார்.

அவற்றில் இரண்டு ஓவியங்களை வியன்னாவில் ஏலத்திற்கு விட்டனர். அவை இரண்டையும் ரூ.1 கோடிக்கு ஒரு வக்கீல் ஏலம் மூலம் பெற்றுள்ளார். அந்த வக்கீல் யார், எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

....தட்ஸ் தமிழ் 28.09.2010

nambi
28-09-2010, 02:55 PM
ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கான முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இம்மாதம் 30ஆம் தேதி தீர்ப்பை வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

30ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்சநீதிமன்றத்தில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை தள்ளிவைக்குமாறு செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
...வெப்துனியா 28.09.2010

அனுராகவன்
28-09-2010, 04:23 PM
நன்றி நம்பியாரே!!
நாள்தோறுமே நல்ல சுட செய்திகள்..

nambi
29-09-2010, 01:24 AM
நன்றி தோழரே!

nambi
29-09-2010, 01:25 AM
மதுரை, செப். 28: சொத்துக்குவிப்பு புகாரிலிருந்து விடுவிப்பதற்காக அரசு சித்த மருத்துவரிடம் 1.2 லட்சம் லஞ்சம் வாங்க முயன்றதாக, ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், மேலூர் அரசு மருத்துவமûனையில் உள்ள சித்தா பிரிவில் உதவி மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். மதுரை அண்ணாநகர் பகுதியிலும் தனியாக ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருகிறார்.

இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக சுகாதாரத் துறைக்கும், ஊழல் தடுப்புப் பிரிவுக்கும் புகார் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, இவர் மீதான புகாரை விசாரிக்க மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பெருமாள்பாண்டியனின் நண்பரும், மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான நமச்சிவாயம் என்பவர், அசோக்குமாரை அணுகி இந்தப் புகாரில் இருந்து அவரை விடுவிக்கவும், சாதகமாக

முடிவெடுக்கவும் 12 லட்சம் லஞ்சமாக கொடுக்கும்படி பேச்சு நடத்தியுள்ளார்.

இதன் முடிவில் 5 லட்சம் தருவதற்கு அசோக்குமார் ஒப்புக்கொண்டதாகவும், முன்பணம் 1.2 லட்சம் தருவதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஊழல் தடுப்பு இன்ஸ்பெக்டரே தன்னிடம் லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, திருச்சி டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, ராமச்சந்திரன், மணிமாறன், தமிழ்ச்செல்வன்

ஆகியோர் கொண்ட தனிப்படையினர், திங்கள்கிழமை மதுரை வந்தனர். இரவில் அண்ணாநகரில் உள்ள கிளினிக் பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது, அங்கு வந்த நமச்சிவாயத்திடம் 1.2 லட்சம் ரொக்கத்தை மருத்துவர் அசோக்குமார் கொடுத்த போது போலீஸôர் நமச்சிவாயத்தைக் கையும் களவுமாக

பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பணத்தை இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியனிடம் கொடுக்க இருப்பதையும் போலீஸôர் உறுதி செய்தனர்.

இதையடுத்து, மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் உள்ள இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன் வீட்டுக்குச் சென்ற போலீஸôர், அவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்திய போலீஸôர், செவ்வாய்க்கிழமை காலை மதுரை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அலமேலு நடராஜன், இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டது இதுவே முதல்முறை என போஸீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

....தினமணி 29.09.2010

nambi
29-09-2010, 02:43 AM
கான்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே பாலியல் பலவந்தம் செய்யபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சுனிதா (13) என்பவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பள்ளிக்குச் சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

காலையில் நன்றாக சென்ற மாணவிக்கு திடீர் என்று என்னவாயிற்று என்று குழம்பினார்கள். அவர்கள் குழப்பத்திற்கு பதில் பிரேத பரிசோதனையில் கிடைத்தது. மாணவியை யாரோ பாலியல் வன்செயல் புரிந்து கொலை செய்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

ஆனால் சுனிதாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளி மூடப்பட்டு, அங்கு பணி புரியும் ஆசிரியர்களும், ஊழியர்களும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

....தட்ஸ் தமிழ் 28.09.2010

nambi
29-09-2010, 10:08 AM
கோவை, செப். 28: எச்ஐவி, சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் முருங்கைக்கு உள்ளது என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும (ஐசிஏஆர்) இணை இயக்குநர் ஜெனரல் எச்.பி.சிங் தெரிவித்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த முருங்கைப் பயிர் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

இந்திய பயிரான முருங்கை, உலகின் ஆச்சரியப்பட வைக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் அனைத்துப் பாகங்களும் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதுடன் மருத்துவக் குணங்களும் உள்ளன.

முருங்கையின் இலை எச்ஐவி, சர்க்கரை நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. கேன்சரை குணப்படுத்தும் திறன் முருங்கையில் இருப்பதாக

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தட்பவெப்ப நிலை, தரைமட்டத்தில் இருந்து உயரம் குறைவாக உள்ள மலைப் பகுதிகள் வரையும், பல மண் வகைகளில் வளரக்கூடிய திறன் முருங்கைக்கு உள்ளது. முருங்கை உற்பத்தியில் இந்தியா முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

38 ஆயிரம் ஹெக்டேரில் 13 லட்சம் டன்கள் வரை முருங்கை உற்பத்தி

செய்யப்படுகிறது. உற்பத்தியில் ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் முறையே முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. மருத்துவம் மற்றும் சிறப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு முருங்கையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட பிகேஎம் 1, பிகேஎம் 2 என்ற செடி முருங்கைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்றார்.

வேளாண் பல்கலை. துணைவேந்தர் ப.முருகேசபூபதி: உணவுப் பயிர் மட்டும் அல்லாமல் தொழிற்சாலைகளுக்கும் முருங்கைப் பயிர் பயன்படுகிறது. முருங்கை

விதையில் இருந்து எடுக்கப்படும் பென் எண்ணெய் இயந்திரங்களின் தேய்மானத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.

முருங்கையின் பல்வேறு பயன்பாடு காரணமாக பயிர் மேம்பாடு, பயிர் மேலாண்மை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகள்

மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய - ஆஸ்திரேலிய கூட்டமைப்பில் முருங்கையில் அதிக எண்ணெய் உற்பத்தி கொண்ட ரகங்களைத் தேர்வு செய்வதற்கான திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

உணவு மற்றும் தீவனப் பயிர்களுக்கான முருங்கையை வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டத்துக்கு மலேசியாவின் சாபா மாநில வேளாண் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

.....தினமணி 29.09.2010

nambi
29-09-2010, 10:33 AM
ஒக்சாகா: மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். மெக்சிக்கோவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் ஏற்கனவே வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்நிலையில் தெற்கு மெக்சிக்கோ மலைப் பகுதிகளில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் 200 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்களும் மண்ணும் பயங்கர வேகத்தில் நிலத்தில் வந்து விழுந்தன. இதில் மலையடிவாரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
.....தினகரன் 29.09.2010

nambi
30-09-2010, 02:56 AM
தேம்ப்ளி (மகாராஷ்டிரம்), செப்.29: நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன்னோடி திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வெளிநாட்டவர் ஊடுருவலைத் தடுக்க அடையாள அட்டை அவசியம் உணரப்பட்டது. அத்துடன் அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்தகைய அடையாள அட்டை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்தே அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதற்காக இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் அடையாள அட்டை வழங்குவதற்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டதோடு, இத்திட்டத்தைச் செயல்படுத்த பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் 10 பேருக்கு அடையாள அட்டைகளை பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை வழங்கினார்.

"ஆதார்' (ஆதாரம்) எனப்படும் இத்திட்டம் மிகவும் முன்னோடியானது என்றும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

பயோ-மெட்ரிக் அடிப்படையில் அதாவது அடையாள அட்டை வைத்திருப்பவரின் புகைப்படத்தோடு கைவிரல் ரேகையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இத்தகைய முறையில் அடையாள அட்டை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே அடையாள அட்டையாக இது விளங்கும். இதை வழங்கி பிரதமர் மன்மோகன் பேசியது:

தொழில்நுட்பத்தின் பலன் இந்த அளவுக்கு உலகின் வேறெங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. நாட்டிலுள்ள அனைவருக்கும் வெகு விரைவில் இத்தகைய அடையாள அட்டை வழங்கப்படும். நவீன இந்தியாவின் புதிய தோற்றத்தை வெளி உலகுக்குப் பறை சாற்றுவதாக இந்தத் திட்டம் அமையும். தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றத்தை இது உணர்த்தும்.

சாதாரண மக்களுக்கு அரசின் நலத் திட்டப் பயன் சென்று சேர்வதற்கு இந்த அடையாள அட்டைகள் உதவியாக இருக்கும். இத்தகைய அடையாள அட்டை இல்லாததால்தான் ஏழை, எளிய மக்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடிவதில்லை, ரேஷன் அட்டை பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடையாள அட்டையில் உள்ள எண் வழங்கப்படும் நபரின் ஆயுள்காலம் முழுமைக்குமானது. இதை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு புலனாகும் என்றார் மன்மோகன் சிங்.

""மிகச் சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விரைவிலேயே நாட்டிலுள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்பது மிகப் பெரிய விஷயமாகும். வளர்ச்சி மட்டுமே நமது நோக்கமல்ல. ஒருங்கிணைந்த-ஒட்டுமொத்த வளர்ச்சியே நமது இலக்கு,'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்நுட்பத் துறை மிக முக்கிய பங்காற்றும் என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உறுதியாக நம்பினார். அவரது கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயம் மேம்படும். ஏனெனில் நலத் திட்டப் பயன்கள் விரைவாகக் கிடைக்கும். இதன் மூலம் எவ்வித முறைகேடும் நிகழாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
.........தினமணி 30.09.2010

nambi
30-09-2010, 03:04 AM
காரைக்கால் தமிழகத்தில் வழங்கப்படுவது போல் வரும் நவம்பர் முதல் புதுச்சேரி மக்களுக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்தார். குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஒற்றை அவியல் அரிசி வழங்கும் விழா காரைக்காலில் நேற்று நடந்தது.

புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் முன்னிலை வகித்தார். சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:

இந்தியாவிலேயே இதுபோன்ற வெள்ளை அரிசித்திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மாநிலம் முழுவதுமுள்ள 1.45 லட்சம் சிகப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மத்திய அரசின் அந்தியோதயா திட்டத்தில் பதிவு செய்த மிகவும் ஏழ்மையான குடும்பத்துக்கு 25 கிலோ இலவச அரிசியும், 1.75 லட்சம் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிலோ 1க்கு 5 கிலோ அரிசி என மாதம் 4,000 டன் அரிசி புதுச்சேரிக்கு தேவைப்படுகிறது.

இதற்கான அரிசி முன்பெல்லாம் ஆந்திரா, ஒரிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 4,000 டன் வெள்ளை அரிசியை புதுச்சேரியிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகள் மற்றும் அரிசி ஆலைகளும் பயனடையும். வரும் நவம்பர் முதல் தமிழகத்தைப்போல், புதுச்சேரி மக்களுக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும்.

இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.

......தினகரன் 30.09.2010

nambi
30-09-2010, 03:06 AM
மதுரை : மதுரையில் 1.20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன், ஓராண்டாகவே டாக்டரிடம் மறைமுகமாக லஞ்சம் கேட்டு, "டார்ச்சர்' கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலூர் அரசு சித்தா டாக்டர் அசோக்குமார், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் கிளம்பியது. இதுகுறித்து விசாரணை நடத்திய மதுரை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன், உறவினர் நமசிவாயம் மூலம் "பேச்சு' நடத்தி, நேற்று முன்தினம் 1.20 லட்சம் ரூபாய் வாங்கியதாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நடந்தது என்ன? டாக்டர் அசோக்குமாருக்கு சொந்தமான இடம், மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ளது. பாதை தொடர்பாக இவருக்கும், வக்கீல் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில், "அரசு டாக்டரான அசோக்குமார், விதிமுறையை மீறி வீடு கட்டி விற்கும் தொழில் செய்கிறார்' என்று, கடந்தாண்டு செப்., 1ல் போட்டோ ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதுகுறித்து கடந்த ஓராண்டாகவே அசோக்குமாரிடம் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன் விசாரணை நடத்தினார். ஆனால், ஆதாரமாக அனுப்பப்பட்ட போட்டோவில் உள்ள வீடு, அதற்குரிய நிலம் அசோக்குமாருக்கு சொந்தமானதா என இன்ஸ்பெக்டர் விசாரிக்கவில்லை. மறைமுகமாக லஞ்சம் கேட்பதிலேயே குறியாக இருந்தார். இரு மாதங்களுக்கு முன் விசாரணையை தீவிரப்படுத்தினார். டாக்டரிடம் நேரடியாக லஞ்சம் கேட்க தயங்கி, உறவினர் நமசிவாயத்தை அனுப்பி வைத்தார்.

பேரம் ஆரம்பமானது: இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்ததாகக் கூறி, டாக்டரிடம் அறிமுகமானார் நமசிவாயம். பேரம் 12 லட்சத்தில் துவங்கியது. அவ்வப்போது விசாரணை என்ற பெயரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகம் அருகே, இரவு 7 மணிக்கு மேல் டாக்டரை வரவழைத்து, இன்ஸ்பெக்டர் பேரம் பேசினார். மொபைல் போனில், "டீலிங்' பேசி சிக்கலாகி விடும் என்று கருதி, நேரில் பேசி இருக்கிறார். லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்துகொண்டே லஞ்சம் கேட்பதை பொறுக்க முடியாத டாக்டர், இன்ஸ்பெக்டரை சிக்க வைக்க முடிவு செய்தார். பேர முடிவில், ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொள்வது போல் நடித்து, அட்வான்சாக 1.20 லட்சம் ரூபாயை தர முன்வந்தார். இதுகுறித்து, தனது நண்பர் மூலம் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதிக்கு தகவல் கொடுத்தார். மதுரை அல்லது தென்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு தகவல் கொடுத்தால், இன்ஸ்பெக்டருக்கு எப்படியாவது தெரிந்துவிடும் என்பதால் திருச்சியை டாக்டர் தேர்ந்தெடுத்தார்.

தனிப்படை அமைப்பு: லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி., உத்தரவு கிடைத்தவுடன், பெருமாள் பாண்டியன் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் லஞ்சம் வாங்கியுள்ளாரா? வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ளாரா என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்படவுள்ளது.

.....தினமலர் 30.09.2010

nambi
30-09-2010, 03:43 AM
அமெரிக்க செனட் சபையில்
அவுட்சோர்சிங்குக்கு எதிரான சட்டமசோதா நிறைவேறவில்லை
குடியரசுக்கட்சியினர் எதிர்த்து ஓட்டுப்போட்டதால்


வாஷிங்டன், செப்.30-

அமெரிக்காவில் உள்ள கம்பெனிகள் தங்கள் வேலைகளை சம்பளம் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பி அங்கு வைத்து முடித்துக்கொள்வதால் அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு வேலைகளை கொடுக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை போன்றவற்றை ரத்து செய்ய வகை செய்யும் சட்டம் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டமிட்டார்.

இந்த சட்டம் அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது குடியரசு கட்சியினர் இந்தியாவுக்கு ஆதரவாக வாதாடினார்கள். அதன்பிறகு ஓட்டு எடுப்பு நடந்தது. இந்த சட்டம் நிறைவேற வேண்டுமானால், குறைந்தது 60 ஓட்டுகள் தேவை. ஆனால் 6 ஓட்டுகள் குறைவாக கிடைத்ததால், இந்த சட்டமசோதா தோல்வி அடைந்தது.

.....தினத்தந்தி 30.09.2010

nambi
30-09-2010, 06:52 AM
http://thatstamil.oneindia.in/img/2010/09/30-chandrabose-200.jpg

சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் 'கோமா' நிலைக்குச் சென்றார்.

இதையடுத்து சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் அபாய கட்டத்தில் இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.

ஆனால், அவர் கொஞ்சம் உடல் நிலை தேறினார். அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை சந்திரபோஸ் காலமானார்.

மச்சானைப் பார்த்தீங்களா... :

வி.சி.குகநாதன் டைரக்டு செய்த 'மதுரகீதம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். எம்எஸ்விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.

பின்னர் இவர் இசையமைத்த மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற 'மாம்பூவே சிறு மைனாவே' என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது.

தொடர்ந்து மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விடுதலை போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமத்து முன்னணியில் இருந்தார் சந்திரபோஸ். ஏவி எம் தயாரித்த 12 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் சந்திரபோஸ்.

தமிழ் சினிமாவில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் சந்திரபோஸ்.

மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற 'மெதுவா மெதுவா', சங்கர் குருவில் இடம் பெற்ற 'காக்கிச் சட்ட போட்ட மச்சான்', மக்கள் என் பக்கம் படத்தில் வரும் 'ஆண்டவனைப் பாக்கணும்' போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

கடந்த சில ஆண்டுகளாக டிவி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். மலர்கள், வைரநெஞ்சம், ஜனனம் போன்ற தொடர்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார்.

சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்த சந்திரபோஸ், மனைவியுடன் மைலாப்பூரில் வசித்து வந்தார்.

அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள சந்திரபோஸ் உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

....தட்ஸ் தமிழ்...கலைஞர் தொலைக்காட்சி செய்தி 30.09.2010

நூர்
30-09-2010, 12:02 PM
சர்சைக்கு உரிய அயோத்தி நிலத்தை 3 ஆக பிரிக்க வேண்டும்.

ஒரு பங்கு பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்..

இன்னொரு பங்கு,நிர்மோகி அகரா அமைப்புக்கு தரவேண்டும்.

இன்னொரு பங்கு, ராமர் கோவில் கட்டுவதற்கான , அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

பிரிக்கும் வரை தற்போதைய நிலை தொடரவேண்டும்.

-சன் டி.வி

nambi
30-09-2010, 01:39 PM
http://astroprofspage.com/wp-content/uploads/2007/06/gliese581planets.jpg

(Gliese 581)


புளோரிடா, செப்.30 (டிஎன்எஸ்) நமது சூரிய குடும்பத்தை போல ஏராளமான சூரிய குடும்பங்கள் வான வீதியில் உள்ளன. அதில் கிரிசி-581 என்ற சூரிய குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது.

இதில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தனர். நமது சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து பூமி எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அதே போல அந்த கோளும் அங்குள்ள சூரியனில் இருந்து இதே தூரத்தில் அமைந்துள்ளது.

இதனால் பூமியை போலவே சூரியனின் வெப்பம் இந்த கோளிலும் இருக்கிறது. எனவே இதில் தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே இந்த கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது. மனிதன் அங்கு குடியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். (டிஎன்எஸ்)

....ஆறாம்திணை, கலைஞர் தொலைக்காட்சி 30.09.2010
...........................

இது குறித்து இணையத்தில் 10.11.2009 அன்றே ஒரு வலைப்பதிவில் வெளியிடப்பட்ட தகவல்...

பூமி / Earth - சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கிரகம், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கிரகங்களில் ஒன்று.இதனை உலகம் , நீலக் கிரகம் , மற்றும் டெரா என்றும் அழைப்பர். மனிதர்கள் உட்பட, பல்லாயிரக்கணக்கான, உயிரினங்கள் வாழும் இடம்.

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது.

இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப் பெரிதாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது கிளீஸ் 581 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது. இந்தப் புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாக கணித்துள்ளோம். அதேபோல உயிரினங்கள் வசிக்க் கூடிய தட்பவெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த கிரகத்தில் பூஜ்யம் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பம் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், திரவ நிலையில் இங்கு இருக்கலாம். சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே வாயுக்களால் நிரம்பியவை. ஆனால் இந்தப் புதிய கிரகம் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக நினைக்கிறோம்.

இந்த கிரகத்தின் சுற்று வட்டம் பூமியின் சுற்று வட்டத்தை விட 1.5 மடங்கு அதிகம். இந்த கிரகத்தில் பல கடல்களும் இருக்கக் கூடும். பூமியைப் போலவே இது இருப்பதால் இந்தக் கிரகம் குறித்த ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல அரிய தகவல்களும், ஆச்சரிய தகவல்களும் நமக்குக் கிடைக்கக் கூடும். இந்தப் புதிய கிரகம் பூமியிலிருந்து 125 டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றார் உத்ரி. சிலியில் உள்ள லா சில்லா நகரில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
....வலைத்தள வழிமாற்று (http://hiox.org/2248-earth.php)

nambi
30-09-2010, 01:51 PM
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

நீதிபதிகள் தரம்வீர் சர்மா, அகர்வால் மற்றும் எஸ் யூ கான் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. இவர்களில் இரண்டு நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்திருப்பதாகவும் மூன்றாவது நீதிபதி இதற்கு மாறான தீர்ப்பை அளித்திருப்ப தாகவும் லக்னோவிலிருந்து வரும் செய்திகள் தெரிவித்திருக்கின்றன.

பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம் தான் ராமர் பிறந்த இடம் என்றும், அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டியதாகவும் இரண்டு நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கருத்துடன் மூன்றாவது நீதிபதி உடன்படவில்லை.

....பிபிசி தமிழோசை 30.09.2010

nambi
30-09-2010, 02:29 PM
http://t3.gstatic.com/images?q=tbn:Nly7nRJX_PBiZM:http://allahabadhighcourt.in/image/judges/sibghatukhan.jpg&t=1

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:

1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.

2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.

3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.

4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.

6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.

7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.

8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.

9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.

10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.

11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.

12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.

....வெப்துனியா 30.09.2010

nambi
30-09-2010, 02:41 PM
டெல்லி: அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்கவும் அதை இந்து, முஸ்லீம் அமைப்புகளிடம் வழங்க லக்னெள உயர் நீதிமன்றக் கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக இந்து மகா சபாவும், முஸ்லீம் சன்னி வக்பு வாரியமும் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை அறிவித்துள்ளன.

அதே போல தீர்ப்பை எதிர்த்து அவசரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதில்லை என்று பாபர் மசூதி கமிட்டியும் அறிவி்த்துள்ளது.

இந்த நிலத்தின் ஒரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க உத்தரவிட்டுள்ள லக்னெள நீதிமன்றம், அதே நேரத்தில், மசூதி இருந்த மொத்த இடமும் தங்களுக்கே சொந்தம் எனறு கூறிய முஸ்லீம் சன்னி வக்பு வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

அதே போல இந்த இடம் முழுவதையும் தங்களிடமே தர வேண்டும் என்று கோரிய, அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த இடத்தில் 3ல் ஒரு பங்கு இடத்தை மட்டும் இந்த அமைப்பிடம் தர உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் தங்களுக்கு 90 சதவீத வெற்றியே கிடைத்திருப்பதாகவும், பாபர் மசூதி கமிட்டிக்கு 3ல் ஒரு பங்கு இடத்தைத் தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் இந்து மகா சபா அறிவித்துள்ளது.

ஆனால், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது யாருக்கும் வெற்றி-தோல்வி இல்லை என்றும், இதை அனைவருமே மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தீர்ப்பு வழி ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

அதே போல இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள பாஜக செய்தித் தொடர்பாளரும், இந்து மகா சபாவுக்காக வாதாடிய வழக்கறிஞருமான ரவிசங்கர் பிரதாத், இந்தத் தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகாமல், அங்கு இந்துக்கள் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல தீர்ப்பை விஸ்வ இந்து பரிஷத்தும் வரவேற்றுள்ளது.

ராமர் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கை நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இத்தீர்ப்பை வரவேற்கிறோம் என்று அதன் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார்.

இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது என்றார்.

அயோத்தி தீர்ப்பு-பாஜக அவசரக் கூட்டம்:

இந்தத் தீர்ப்பையடுத்து பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் தலைமையில் இன்று இரவு நடைபெறுகிறது.
....தட்ஸ்தமிழ் 30.09.2010

nambi
30-09-2010, 04:10 PM
லக்னோ: அயோத்தி பிரச்னை தொடர்பாக கலவரத்தை தூண்டும் விதமாக தமது நண்பர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கொல்லம் மாவட்டம் ஆச்சிரா என்ற இடத்தை சேர்ந்த 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டு, கருநாகப்பள்ளி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அயோத்தி தீர்ப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வழங்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக எந்த ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை மீறியக் குற்றச்சாற்றுக்காக 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...தினகரன் 30.09.2010

அனுராகவன்
30-09-2010, 06:37 PM
நன்றி நம்பி ஐயா..
நாள்தோறும் அரிய தகவல்கள்...

nambi
01-10-2010, 12:17 AM
http://www.dailythanthi.com/images/news/20101001/ms06.jpg
லக்னோ, அக்.1-

அயோத்தி வழக்கில் 3 நீதிபதிகளும் அளித்த தீர்ப்பு முழு விவரமும் வெளியாகி உள்ளது.

நீதிபதி சுதிர் அகர்வால்

நீதிபதி சுதிர் அகர்வால் அளித்துள்ள தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் மைய கோபுரத்துக்கு கீழ் உள்ள பகுதி, ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அந்த கட்டிடம், ஒரு மசூதி என்று எப்போதும் கருதப்பட்டு, நம்பப்பட்டு வந்தது. அங்கு முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்தனர். ஆனால், 1528-ம் ஆண்டு, பாபர் ஆட்சிக் காலத்தில் அது கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

அந்த கட்டிடம், ஏற்கனவே அங்கிருந்த முஸ்லிம் அல்லாத மத வழிபாட்டுத் தலத்தை (உதாரணம்: இந்து கோவில்) இடித்து விட்டு கட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் வட்டவடிவ கூரைக்கு கீழே, சிலைகள் வைக்கப்பட்டன.

யாருக்கு எந்த நிலம்?

மசூதியின் மைய கோபுரத்துக்கு கீழே உள்ள இடம் தான் ராமர் அவதரித்த இடமாக கருதப்படுவதால் அதை இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும். எந்த வகையிலும், இடைïறோ அல்லது தலையீடோ கூடாது. கட்டிட உள்முற்றப் பகுதியை சில நூற்றாண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்த போதிலும், இதில் இடைïறு செய்யக் கூடாது.

வெளிமுற்றப் பகுதியில் ராமர், சீதா தேவி மற்றும் அனுமன் சிலைகள் அமைந்துள்ள பகுதியை மற்றொரு முக்கிய மனுதாரரான நிர்மோகி அகாரா தரப்புக்கு அளிக்க வேண்டும். ஒட்டு மொத்த நிலப்பரப்பில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால், வெளிமுற்றப் பகுதிக்கு வெளியே உள்ள பகுதியையும் அவர்களுக்கு அளிக்கலாம்.

சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினருமே ஒருவருடைய உரிமையில் மற்றொருவர் இடைïறு செய்யாதபடி, தனித்தனியாக நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்களை அமைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிலத்துக்கு முழுமையாக உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும் (முஸ்லிம்கள் மனு, நிர்மோகி அகாரா மனு) தள்ளுபடி செய்யப்படுகின்றன. பிரச்சினைக்குரிய நிலத்தை மூன்று தரப்பினருக்கும் தலா மூன்றில் ஒரு பங்காக பிரிவினை செய்யும் வரை தற்போது உள்ள நிலைமையே நீடிக்கும்.

இவ்வாறு நீதிபதி சுதிர் அகர்வால் கூறியுள்ளார்.


நீதிபதி எஸ்.யு.கான்

நீதிபதி எஸ்.யு.கான் அளித்த தீர்ப்பின் விபரம் வருமாறு:-

மன்னர் பாபரால் அல்லது அவருடைய உத்தரவின் பேரால், மசூதி கட்டப்பட்டது. மசூதி அமைந்த பகுதி உட்பட அங்குள்ள ஒட்டு மொத்த இடமும் பாபருக்கோ அல்லது மசூதியை கட்டியவருக்கோ சொந்தமானது என்பதை நிரூபிக்க நேரடி ஆவணம் எதுவும் இல்லை.

மசூதியை கட்டுவதற்காக எந்தவொரு கோவிலும் இடிக்கப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, கோவில்கள் அழிந்து விட்டிருந்தன.

ராமர் பிறந்த இடம்

சர்ச்சைக்குரிய பரந்த நிலத்தின் ஒரு சிறிய பகுதியிலேயே ராமர் அவதரித்த இடம் இருப்பதாக நீண்ட காலமாகவே இந்துக்கள் கருதி வருகின்றனர். எனினும், பிரச்சினைக்குரிய பரந்த நிலத்துக்குள் ராமர் பிறந்த இடமாக எந்தவொரு குறிப்பிட்ட சிறிய இடமும் சுட்டிக் காட்டப்படவில்லை.

1855-ம் ஆண்டு வாக்கில் ராமர் மற்றும் சீதா தேவி சிலைகள் நிர்மாணிக்கப்பட்டு இந்துக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர். மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அதே வேளையில், சுற்றுப்புறச் சுவர் அருகிலேயே இந்துக்களும் வழிபாடு நடத்தியுள்ளனர். இது, முன்னெப்போதும் இல்லாத மிக மிக அரிதான ஒன்றாகும்.

மேற்கண்ட சாராம்சத்தின் அடிப்படையில் நோக்கும்போது, பிரச்சினைக்குரிய மொத்த வளாகத்தையும் இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினருமே கூட்டாக அனுபவிக்க பாத்தியதை உள்ளது. அதாவது, பிரச்சினைக்குரிய நிலத்தின் வெவ்வேறு பகுதிகளை முஸ்லிம்களும் இந்துக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது, வழக்கமான பாகப் பிரிவினையாக அல்லாமல் இரு தரப்பினருமே வழக்கம் போல கூட்டாக அனுபவிக்கலாம்.

நிலப் பங்கீடு

பிரச்சினைக்குரிய நிலத்தின் உரிமையாளர்களாக மூன்று தரப்பினரும் அறிவிக்கப்படுகின்றனர். வழக்கு எண்.1-ல் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிஷனர் சிவசங்கர் லால் தயாரித்து அளித்த திட்ட பிளான்-1-ல் சுட்டிக்காட்டியுள்ளவாறு அமைந்துள்ள நிலத்தை, முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய மூன்று கட்சிக்காரர்களுக்கும் வழிபாடு மற்றும் நிர்வாக பயன்பாட்டிற்காக தலா மூன்றில் ஒரு பங்கு நிலம் ஒதுக்கப்படுகிறது.

எனினும், இறுதிகட்ட பாகப்பிரிவினை நடவடிக்கையின்போது, ராமர் சிலை அமைந்துள்ள பகுதியான மசூதியின் மைய கோபுரத்தின் கீழே உள்ள நிலத்தை இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

மேலும், மேற்குறிப்பிட்ட திட்ட பிளானில் ராமர் சபுத்ரா, சீதா தேவி ஆகிய வார்த்தைகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பகுதியை நிர்மோகி அகாரா தரப்புக்கு அளிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்துகிறது. இறுதி பாகப்பிரிவினை முடியும் வரை, தற்போது உள்ள நிலைமையே நீடிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இந்த உத்தரவு ரத்தாகவோ அல்லது மாற்றியமைக்கப்படவோ இல்லாத பட்சத்தில், மேற்கூறிய நிலைமை நீடிக்கும்.

இவ்வாறு நீதிபதி எஸ்.யு.கான் கூறியுள்ளார்.



நீதிபதி டி.வி.சர்மா

நீதிபதி டி.வி.சர்மா தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய கட்டிடம், ராமர் பிறந்த இடம். கடவுளாக வாழ்ந்தவர், ராமர். தெய்வாம்சம் பொருந்தியவராக அவரை மக்கள் வழிபடுகிறார்கள். ராமர் பிறந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்டு வந்ததும், அதை புனித தலமாக கருதி, ஆன்மிக பயணம் சென்று வந்ததும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் வெளிமுற்றப்பகுதி, முற்றிலும் இந்துக்களுக்கே சொந்தமானது. ஆண்டாண்டு காலமாக அவர்கள் அந்த இடத்தில் வழிபட்டு வந்துள்ளனர். உள்முற்றப் பகுதியிலும் அவர்கள் வழிபாடு நடத்தி உள்ளனர்.

கோவில் இடத்தில் மசூதி

ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து விட்டுத்தான், அந்த இடத்தில் மசூதியை பாபர் கட்டினார். அங்கு பிரமாண்ட இந்து கோவில் இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நிரூபித்துள்ளது. மசூதி கட்டப்பட்டது, எந்த வருடம் என்பது நிச்சயமாக தெரியவில்லை.

ஆனால், அந்த மசூதி, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது. அதனால் அதை மசூதி என கருத முடியாது. அந்த கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, 1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதிக்கும், 23-ந் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் ராமர் சிலைகள் அங்கு வைக்கப்பட்டன.

இவ்வாறு நீதிபதி டி.வி.சர்மா கூறியுள்ளார்.

....தினத்தந்தி 01.10.2010

nambi
01-10-2010, 12:39 AM
இன்று ஓய்வு பெறும் நீதிபதி, தானே சமைத்து சாப்பிடுவார்


லக்னோ, அக்.1-

அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்த 3 நீதிபதிகளைப் பற்றிய ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று ஓய்வு பெறும் நீதிபதி சர்மா, தானே சமைத்து சாப்பிட்டு வருகிறார்.

இன்று ஓய்வு

அயோத்தி வழக்கில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்காட் உல்லாகான் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். இவர்களைப் பற்றிய ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்களில் மிகவும் மூத்த நீதிபதியான தரம்வீர் சர்மா, இன்று ஓய்வு பெறுகிறார். தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதை விரும்பாத மனுதாரர்களும், அரசியல் கட்சியினரும் இவர் ஓய்வு பெறுவதை சுட்டிக்காட்டியே, தீர்ப்பை உடனடியாக வழங்க வற்புறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி திரிபாதி தாக்கல் செய்த மனுவை, இவர் அடங்கிய லக்னோ பெஞ்ச் தள்ளுபடி செய்தது. அப்போது, சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வாய்ப்பு அளிக்கும் வகையில், மனுவை ஏற்று இருக்கலாம் என்று தனியாக தீர்ப்பு எழுதி, பரபரப்பை ஏற்படுத்தினார், சர்மா.

திருமணம் ஆகாதவர்

சர்மா, 1948-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்தார். 1967-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். 1970-ம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் சட்டம் படித்தார். 1972-ம் ஆண்டு, மாவட்ட கோர்ட்டு நீதிபதி ஆனார். 2002-ம் ஆண்டு, மாவட்டம் மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனார். 2005-ம் ஆண்டு, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதி ஆனார். 2007-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி, அயோத்தி வழக்கை விசாரிக்கும் பெஞ்சுக்கு நியமிக்கப்பட்டார்.

சர்மா, திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தாவர வகை உணவு மட்டுமே சாப்பிடுபவர். நன்றாக சமைக்கத் தெரிந்த அவர், தனது உணவை, தானே சமைத்து சாப்பிட்டு வருகிறார். சில நேரங்களில், தனது சக நீதிபதிகளுக்கும் சமைத்துப் போடுவார்.

இவர், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர். பெரும்பாலும் இந்தியிலேயே பேசுவார். எளிமையானவர். ஏதாவது சமூக நிகழ்ச்சி என்றால், வெள்ளை வேட்டி மற்றும் குர்தா அணிந்து செல்வார். தர்ம சிந்தனை கொண்ட இவர், ஏழை மனுதாரர்களுக்கு உதவி செய்துள்ளார். சிக்கலான தருணங்களில் பலருக்கு உதவி செய்துள்ளார்.

எப்போதும் ஆங்கிலம்

அடுத்த நீதிபதியான சுதிர் அகர்வால், வயதில் மிகவும் இளையவர். அவருக்கு வயது 52. 1958-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி பிறந்தார். 1977-ம் ஆண்டு, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். 1980-ம் ஆண்டு, மீரட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதே ஆண்டில், அலகாபாத் ஐகோர்ட்டில் வக்கீலாக பணியைத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு நீதிபதி ஆனார்.

சுதிர் அகர்வால், கோர்ட்டுக்கு வெளியில் கூட பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார். இவருடைய தீர்ப்புகள், நறுக்குத்தெரித்தாற் போன்றும், மதிநுட்பத்துடனும் இருப்பது வழக்கம். அதனால், சுப்ரீம் கோர்ட்டு கூட, இவரது தீர்ப்புடன் முரண்படுவது இல்லை. இவர், 2020-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

2 ஆயிரம் வழக்குகளை சமரசமாக தீர்த்தவர்

3-வது நீதிபதியான சிப்காட் உல்லாகான், 1952-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி பிறந்தவர். 1975-ம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதே ஆண்டு, வக்கீல் பணியைத் தொடங்கினார். 2002-ம் ஆண்டு, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். இவர் கூரிய அறிவும், நகைச்சுவை திறனும் கொண்டவர்.

இந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசுவார். சிவில் வழக்குகளில், கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்வு காணுமாறு வற்புறுத்துவார். பேச்சுவார்த்தை மூலமாக, சுமார் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். மிகவும் உறுதியான அணுகுமுறை கொண்டவர். 2014-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.

....தினத்தந்தி 01.10.2010

nambi
01-10-2010, 03:06 AM
மும்பை: இந்தியாவின் மாபெரும் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 4வது முறையாக பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் கோடியாகும்.

அமெரிக்க இதழான போர்ப்ஸ் இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அம்பானிக்கு அடுத்த இடத்தை எஃகு நிறுவனங்களின் அதிபரான லட்சுமி மிட்டல் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 450 கோடி.

விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி ரூ. 78 ஆயிரத்து 900 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்திருந்தாலும் அவருடைய சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பும் 15 சதவீதம் சரிந்துள்ளது.

போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த அண்டு 52 இந்தியர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 69 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து 300 பில்லியன் டாலர்களை விட அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.
...தட்ஸ் தமிழ் 01.10.2010

nambi
01-10-2010, 05:01 AM
ரெயில்கள் மீது கல்வீச்சு; பயணிகள் காயம்


மீஞ்சூர், அக்.1-

மீஞ்சூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மீது மின்சார ரெயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் பலி ஆனார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கினார்கள்.

மின்சார ரெயில் மோதியது

சென்னையை அடுத்த மீஞ்சூரில் ரெயில் நிலையம் அருகே உள்ளது ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ரெயில் நிலையம் அருகே கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து ஒரு மின்சார ரெயில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயில் வருவதையும், ரெயில் ஒலி எழுப்பியதையும் அவர்கள் கவனிக்கவில்லை.

தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர்கள் மீது ரெயில் மோதியது.

3 கல்லூரி மாணவர்கள் பலி

இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வினோத் (வயது 20) என்ற மாணவர் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலி ஆனார். இவர் கணினி பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஆவார்.

மேலும் ராஜி (20), வினோத்குமார் (20), மஜித் (19), பரமேஷ் (20), டேவிட்ராஜ், விஜயகுமார் (20) ஆகிய 6 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீஞ்சூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 5 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மாணவர் விஜயகுமாரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

ரெயிலில் அடிபட்டு இறந்த மாணவர் வினோத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில் மீது கல்வீச்சு

இந்த விபத்து பற்றி அறிந்ததும், அந்த கல்லூரியின் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ரெயில் நிலையத்தை நோக்கி திரண்டு வந்தனர். அப்போது சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் ரெயிலில் உள்ள மின்விசிறிகள், இருக்கைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. மின்சார ரெயிலை ஓட்டி வந்த டிரைவர் தாக்கப்பட்டார். அவர் ரெயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

கல்வீச்சில் பயணிகள் சிலர் காயம் அடைந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர்.

சாலை மறியல்

இதேபோல் சென்னையில் இருந்து சூளூர்பேட்டை சென்ற மின்சார ரெயிலும் மீஞ்சூர் ரெயில் நிலையத்துக்கு வந்த போது தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ரெயில் மீதும் மாணவர்கள் கல்வீசி தாக்கினார்கள். ஜன்னல்கள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மற்றொரு மின்சார ரெயில் மீதும் கல்வீசப்பட்டது.

ரெயில் நிலையத்தில் உள்ள மின்சார விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் இருக்கைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

மீஞ்சூர் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் கல்வீசி தாக்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தீ வைப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு விரைந்து சென்றார். மேலும் பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவர்களில் பலர் கல்லூரி வளாகத்திற்குள் சென்றும் ரகளையில் ஈடுபட்டனர். ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நூலகத்திற்கு தீ வைத்ததில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து நாசமாயின. இதனால் பயந்த மற்ற மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

கல்வீச்சு சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, செல்வராஜ் மற்றும் ஏட்டுகள் 4 பேர் காயம் அடைந்தனர்.

கடைகள் அடைப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து மீஞ்சூர் ரெயில் நிலையம், பஜார் வீதி ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பொன்னேரி கோட்டாட்சியர் குமார், தாசில்தார் வேலம்மாள், பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தி அமைதி ஏற்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

....தினத்தந்தி 01.10.2010

சூறாவளி
01-10-2010, 05:39 AM
ரெயில்கள் மீது கல்வீச்சு; பயணிகள் காயம்




இறந்த மாணவர்கலுக்கு அஞ்சலி...

ஆனால் அதன் பின் கலவரம் செய்த மாணவர்கலுக்கு கடும் கண்டனம்.. இரயில் வருவதை பார்க்காமல் க்ராஸ் செய்தது மாணவர்கள் தவறு... அவர்கள் என்ன சின்ன குழந்தையா.. அல்லது 5 ம் வகுப்பு படுக்கும் சின்ன பசங்களா.. இரயில் வருவது கூட அறியாமல் போகும் இவர்களுக்குகாக அனுதாபப்படதான் முடியும்.. ஆனால் அதன் பின் இரயிலை அடித்து நொறுக்குவது, பயணிகள் மேல் கல் வீசுவது இதெல்லாம் சுத்த மடத்தனம்..

உடனடி தகவல் தரும் நண்பருக்கு நன்றிகள்

nambi
01-10-2010, 06:30 AM
தோழர் சூறாவளிக்கு நன்றி!
...........
என்ன செய்வது? வயது அப்படி? அந்த வயதில் எதையும் முன்னின்று நோக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். எதிர் வரும் பதகங்களை நோக்க முடியா வயது. அந்த வயதில் கவனக்குறைவாக இருப்பதும் வாடிக்கையான ஒன்று தான்.சுதந்திரத்தை மட்டுமே விரும்புகின்ற வயது.

இருப்பினும் தொடர்வண்டி ஒட்டுநர் சற்று தூரத்திலேயே தொடர்வண்டியின் ஒலிப்பானை இயக்கி எச்சரித்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால் மாணவர்கள் சிக்கியிருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் அருகில் வரும்போது தான் ஒலி எழுப்புவார்கள் தொடர்வண்டி ஓட்டுநர்கள். இதுவே இந்த விபத்துக்கு காரணம். அவர் கண்டிப்பாக மாணவர்கள் கடப்பதை தூரத்திலேயே பார்த்திருக்க முடியும். இது மாதிரி ஒட்டுநர் முன்னெச்சரிக்கையாக செயல்படுவதில்லை. இது ஒன்றும் இயலாத காரியம் இல்லை. இங்கு அவருக்கு அறிவுறுத்தப்பட்ட செயல் தான் அது அவரின் கடமையும் கூட.

(பல இடங்களில் தடத்தை கடக்கும் பாலங்கள் கூட இல்லை இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படாமல், மக்கள் பயன்படுத்தா நிலையிலேயே இருக்கின்றன. கல்லூரி வளாகம் இருக்கும் பகுதியில் இந்த தொடர்வண்டி நிலையம் இருப்பதால் கடக்க முடியாமல் வேலி அமைத்து உயிர்களை பாதுகாக்கத்தான் வேண்டும். நடை மேம்பாலம் வழியாக கடக்க அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதையும் நீக்கி நுழைவார்கள் அதையும் அவ்வப்பொழுது சீர் செய்து பாதுகாக்கத்தான் வேண்டும்.)

இவ்வளவு காலம் பார்த்து பாரத்து வளர்த்து...ஆசை ஆசையாய் கல்லூரிக்கு அனுப்பிவைத்த பெற்றோர் ஏக்கம்.... மகன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்புவான் என்று காத்திருக்கும் பெற்றோரின் அழுகுரலும், உறவுகளின் ஒலமும் தான் காதில் கேட்கிறது. பெரும்பாலோனோருக்கு இதுவே கேட்கும். இழந்த பெற்றோரின் புத்திர சோகத்தை எது வந்து தீர்க்கப்போகிறது?

nambi
02-10-2010, 01:48 PM
சென்னை : தமிழ்நாடு மேலவை தேர்தலுக்கு, உள்ளாட்சி, பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளுக்கான தொகுதிப் பட்டியலை, தமிழக தலைமைத் தேர்தல் கமிஷனர் பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 78 இடங்களில், பட்டதாரிகளுக்கு ஏழு தொகுதிகள், ஆசிரியர்களுக்கு ஏழு தொகுதிகள், உள்ளாட்சித் தொகுதிகள் 26 என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கவர்னர் 12 பேரை நியமிப்பதுடன், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 26 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பிரவீண் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மேலவை தொகுதிக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மேலவை தேர்தலுக்காக உள்ளாட்சி அமைப்புத் தொகுதிகள், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.


பட்டதாரிகள், ஆசிரியர்களுக்கான தலா 7 தொகுதிகள்:

தொகுதி, தொகுதிக்குள் வரும் மாவட்டங்கள்

1. சென்னை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்
2. வட தமிழ்நாடு வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை
3. வட மத்திய தமிழகம் விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்
4. மேற்கு தமிழ்நாடு ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர்
5. கிழக்கு, மத்திய தமிழகம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர்
6. தென் மத்திய தமிழகம் திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்
7. தென் தமிழகம் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

உள்ளாட்சித் தொகுதிகள் (26): சென்னை மாவட்டத்திற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் - அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் - கரூர், கோவை - நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் - தேனி, மதுரை, திருச்சி - பெரம்பலூர், நாகை - திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை - ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன் சென்னையும் சேர்த்து 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள், ஆசிரியர்களுக்கு தலா ஏழு தொகுதிகள் வீதம் 14 தொகுதிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 26 தொகுதிகள், கவர்னர் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்கள் என 52 தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். மொத்தம் உள்ள 78 தொகுதிகளில், 52 தொகுதிகள் போக, மீதியுள்ள 26 உறுப்பினர்களை, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்வர். இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.


கல்வி அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர் இன்று ஆலோசனை: தமிழகத்தில் மேலவை தேர்தலுக்காக தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர் பிரவீண் குமார், வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலவை தொகுதிகள் 78ஆக வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் கல்வித்துறை சார்பில் பட்டதாரிகள் தொகுதி 7, பட்டதாரி ஆசிரியர்கள் தொகுதி 7 என தேர்தல் கமிஷனால் வரையறை செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்க உள்ளது. இந்த பட்டியல் தொடர்பாக ஆர்.டி.ஓ., நகராட்சி கமிஷனர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள், தாசில்தார்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருடன் இன்று மாலை 4 மணிக்கு வீடியோ கான்பரசிங் முறையில் தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்படவுள்ளது. மேலும் 2011, ஜன., முதல் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர்களை சேர்ப்பதற்கான சுருக்க திருத்தப்பட்டியல் குறித்தும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
....தினமலர் 01.10.2010

nambi
02-10-2010, 02:01 PM
புது தில்லி, செப்.28: காமன்வெல்த் போட்டிக்காக ரஹ்மான் இசையமைத்துள்ள மையநோக்குப் பாடல் போதிய வரவேற்பை பெறாத நிலையில், ரஹ்மானுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் பாடகி லதா மங்கேஷ்கர்.

பாரத ரத்னா விருது பெற்றுள்ள லதா மங்கேஷ்கர் செவ்வாய்க்கிழமை தனது 82வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், காமன்வெல்த் பாடல் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

ஒரு துறையில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களின் படைப்புகள் சில நேரங்களில் மக்களின் வரவேற்பை பெறாமல் போவது இயற்கை.

சிறப்பான படைப்பாளிகள் மீது மக்கள் அதீத பிரியம் வைத்துவிடுகின்றனர். எனவே, அவர்கள் ஒரு முறை சறுக்கினாலும் மக்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

சில பாடல்களை நான் பாடிய விதம் எனக்கே பிடிக்காமல் போனதுண்டு.

ரஹ்மான் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் இசையமைத்த பல பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை.

அவரது ஒவ்வொரு பாடலிலும் கடுமையான உழைப்பு இருக்கிறது. நாட்டின் மிக முக்கிய நிகழ்ச்சிக்கான பாடலையும் அவர் மிகுந்த சிரத்தையுடனே இயற்றியிருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனினும், சில நேரங்களில் நமக்கு பிடித்த ஒரு சிறப்பான விஷயம், பிறருக்கு பிடிக்காமல் போவதுண்டு. அப்படியொரு நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது என்றார் லதா மங்கேஷ்கர்.

ரஹ்மான் இயற்றிய "ஓ யாரோ, ஏ இந்தியா புலா லியா...' எனத் தொடங்கும் காமன்வெல்த் போட்டிக்கான மையப் பாடல், போதிய வரவேற்பை பெற வில்லை.

ரஹ்மான் முன்னர் இயற்றிய சிறந்த பாடல்களுக்கும், காமன்வெல்த் போட்டி பாடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவசர கதியில் இயற்றியது போன்று உள்ளது என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

....தினமணி 02.10.2010

nambi
02-10-2010, 02:06 PM
சிங்கம் படம் ரிலீஸுக்குத் தயாரான நேரம்... அனுஷ்காவைப் பற்றி சில செய்திகள் இப்படி கசிந்தன.

"அனுஷ்கா மகா உயரமான நடிகையாச்சே...அவரை ஹீரோயினாக்குவதில் எக்கச்சக்க பிரச்சினைகள்", "ஒத்துழைப்பு சரியில்லை" என்றெல்லாம் சிங்கம் படத்தின் முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கடுப்பான அனுஷ்கா, இனி தமிழில், அதுவும் உயரம் குறைந்த ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவோடு தெலுங்குக்கே திரும்பினார்.

தமிழில் பல பெரிய தயாரிப்பாளர்கள் அழைத்தும் நடிக்க மறுத்துவிட்ட அவரை, சமாதானப்படுத்தி அழைத்து வந்தது சிம்புவும் 'வானம்' பட இயக்குநர் கிரிஷ்ஷும்தானாம்.

இப்போது மேலும் நான்கு புதிய தமிழ்ப் படங்களில் நடிக்குமாறு பெரும் தொகையுடன் அனுஷ்காவை அணுகியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

அவர்களிடம், "வேண்டவே வேண்டாம். உங்கள் பட நாயகர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பழியை என்மீது போடுவார்கள். எதற்கு வம்பு... எனக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் உள்ளன" என்று பெரிய கும்பிடு போட்டாராம்.
...தட்ஸ்தமிழ் 02.10.2010

nambi
03-10-2010, 01:48 PM
சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்ததை திரிபுரா மாநில கவர்னர் டி ஓய் பாட்டீல் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது போன்ற உயர்ந்த தொழில்நுட்பம், மற்றும் வசதிகள் நிறைந்த நூலகத்தை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கவில்லை எனவும், நூலகம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். திரிபுரா கவர்னருடன், மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் சென்றார்.

.....தினமலர் 03.10.2010

nambi
04-10-2010, 01:07 PM
சென்னை, அக்.4: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பிரிவு ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை மாநகரத்தின் 11 டெப்போ ஊழியர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

தங்களது சக ஊழியர்களைத் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அகமது தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இவ்வாறு திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
...தினமணி 04.10.2010

nambi
04-10-2010, 01:14 PM
கொல்கத்தா, அக்.4- கொல்கத்தாவில் உள்ள லா மேர்ட்டினியர் பள்ளியில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் அப்பள்ளியின் முதல்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி முதல்வர் அடித்ததால் அவமானமடைந்த எட்டாம் வகுப்பு மாணவர் ரவுஞ்சவித் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மேலும், அந்த மாணவரை ஆசிரியர்களும் முதல்வரும் மோசமாக நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையில் மாணவர் தற்கொலையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்கு உண்டு என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை லா மேர்ட்டினியர் பள்ளியின் முதல்வர் சுனிர்மல் சக்ரவர்த்தி மற்றும் கார்னியன், பர்தோ தத்தா, டேவிட் ரான் ஆகிய 3 ஆசிரியர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இத்தகவலை கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர் (குற்றப்பிரிவு) தமயந்தி சென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
...தினமணி 04.10.2010

nambi
04-10-2010, 01:21 PM
http://www.dinamani.com/Images/article/2010/10/4/robert.jpg

ஸ்டாக்ஹோம், அக்.4- சோதனைக் குழாய் குழந்தைக்கான மருத்துவ வழிமுறையை மேம்படுத்திய பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.

சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை மூலம் உலகெங்கும் லட்சக்கணக்கான கருத்தரிக்க இயலாத தம்பதியர் பயனடைந்துள்ளனர்.

"ராபர்ட் எட்வர்ட்ஸின் பங்களிப்பால் கருத்தரிக்க இயலாத தம்பதியர் குழந்தை பெற வாய்ப்பு உருவானது. இதன் மூலம் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் முறையில் பிறந்துள்ளன." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1978, ஜூலை 25-ம் தேதி, உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன் பிரிட்டனில் பிறந்தது.

இன்றைய நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியர் சோதனைக் குழாய் முறையில் ஒன்று முதல் 5 நாட்களிலேயே கரு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகள் உள்ளன.

1950களில், கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கி பெண்களின் கருப்பைக்குள் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதை பேட்ரிக் ஸ்டீப்டோ என்பவருடன் சேர்ந்து ராபர்ட் எட்வர்ட்ஸ் மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 04.10.2010

nambi
04-10-2010, 01:45 PM
சேலம் : சேலத்தில் காவலர் தேர்வில் உயரத்தை அதிகப்படுத்த தலையில் தேங்காய் நார் வைத்து மோசடி செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் தகுதி சான்று சரிபாக்கும் போது முறைகேடு செய்த முத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் உடல் தகுதி தேர்வில் போது உயரத்தை அதிகப்படுத்த தலையில் தேங்காய் நார் வைத்து, அதன் மீது விக் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் ஆனந்தனிடம் தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.

....தினமலர் 04.10.2010

nambi
04-10-2010, 04:18 PM
இந்துக்களின் கடவுளாகக் கருதப்படும் ராமர், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடியும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்து மறைந்த மன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை அறிய முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அயோத்தியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சட்டப் பிரச்சினையில், கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும், அதில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும், இரு பகுதிகளை இந்து அமைப்பு்ககளுக்கும் வழங்க உத்தரவிட்டது. அவ்வாறு இந்து அமைப்பு்க்களு்ககு வழங்க உத்தரவிட்ட ஒரு பகுதியில்தான் ராமர் பிறந்ததாகவும், தீர்ப்பில் ஒரு நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.


அந்தத் தீர்ப்பைத் தொடர்புபடுத்தி, ராஜராஜ சோழன் வரலாறு குறித்து கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அயோத்தி வழக்கில் நீதிபதி டி.வி. ஷர்மா தனது தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அவர் கடவுள் என்றும் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த இடத்தில் பாபரால் கட்டடம் கட்டப்பட்டது குறித்தும், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்ததாகவும், நினைவு தெரிந்த நாளில் இருந்தே அதைப் புனிதத்தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருவதாகவும்'' நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

''17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தை ஆண்ட மன்னன் ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறையையோ, அவரது நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னும் அறிய முடியவில்லையே என மனம் நொந்து வருந்த வேண்டியுள்ளது'' என்று கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை சமீபத்தில் தமிழக அரசு கொண்டாடியது. அப்போது அந்த நிகழ்வில், பேசிய கருணாநிதி, ராஜராஜன் காலத்தில்தான் நில அளவை முறை, நீட்டல் அளவை முறை, நிறு்ததல் அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுக்களும் அவற்றுக்கு சான்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருருந்தார்.

திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத் தெரிவித்திருப்பதாக கருணாநிதி தனது அறி்க்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை உலகம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தனது அறி்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.
....பிபிசி தமிழோசை..04.10.2010

nambi
04-10-2010, 04:24 PM
புதுதில்லி, அக். 3: பிஜேபி பெயரில் புது முகவரியை ஆரம்பித்து அது காங்கிரஸ் இணைய தளத்துக்கு செல்லும் வகையில் தந்திரம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி மீது வழக்கு தொடுத்துள்ளது பாஜக.

காங்கிரஸின் இந்த செயல் திருட்டுக்குச் சமமானது என்றும், திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள மோசடி செயல் என்றும் அது கடுமையாக சாடியுள்ளது.

இது பற்றி பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

டபிள்யுடபிள்யுடபிள்யு.பிஜேபி.காம் என்ற பெயரில் புதிய இணைய தளம் இருப்பது அண்மையில் தெரியவந்தது.

அதில் நுழைந்தால் அது தானாகவே காங்கிரஸ் இணையதளத்துக்கு செல்கிறது. பாஜக சம்பந்தப்பட்ட இணையதளமாக இருக்கும் என்று கருதி இந்த இணைய தள முகவரிக்குள் நுழைந்தவர்கள் பலர் தாம் விரும்பாமலே காங்கிரஸ் இணைய தளத்துக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 27ம் தேதி கோர்ட் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் இதுவரை அந்த கட்சியிடமிருந்து பதில் வரவில்லை.

பொதுவாக கட்சிகள், இணைய தளத்தை பதிவு செய்யும்போது அது ஆர்க் அமைப்பில் இடம்பெறும். வர்த்தக நிறுவனங்கள் அல்ல என்பதால் கட்சிகள் காம் அமைப்பில் இடம் பெறுவதில்லை.

இத்தகைய நிலையில் யாரோ சிலர் பிஜேபி.காம் என்ற பெயரில் இணைய தளம் தொடங்கியுள்ளனர்.

அதற்குள் நுழைந்தால் தானாகவே காங்கிரஸ் இணைய தளத்துக்கு இணைப்பு கிடைக்கிறது.

இந்த செயலுக்கு யார் காரணம் என்பது தெரியாமல் உள்ளது. எனவே ஆளும் கட்சியான காங்கிரஸýக்கு இது தொடர்பாக கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

பிஜேபி.காம் இணையதள உரிமையாளர் பெயர் பாரத் ஜார்னல்ஸ் அண்டு பப்ளிகேஷன்ஸ் எனவும் அது தொடர்பான சில தொலைபேசி எண்களும் அமெரிக்காவிலிருந்து கிடைத்துள்ளது.

அந்த எண்களில் தொடர்பு கொண்டால் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பிஜேபி என்றால் அது பாரதிய ஜனதா கட்சி என்பது பிரசித்தி பெற்றதாகும்.

பிஜேபி. காம் என பாரத் ஜார்னல் அண்டு பப்ளிகேஷன்ஸ் அமைப்பு இணைய தளம் தொடங்கினால் அது வெளிப்படையாக இருந்திருக்க வேண்டாமா? அந்த இணைய தளத்துக்குள் நுழையும்போது அது காங்கிரஸ் கட்சி இணையதள முகவரிக்குச் செல்வதேன்.

எனவே இது திருட்டுக்குச் சமமானது என கருத வேண்டிவருகிறது என்றார் நிர்மலா சீதாராமன்.
..தினமணி 04.10.2010

nambi
05-10-2010, 01:38 AM
ரியோ டி ஜெனீரோ, அக்.5-

தென் அமெரிக்காவில் உள்ன பிரேசில் நாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் லூயிஸ் இனாசி யோலுலா டாசில்வா இருந்து வருகிறார். கொரில்லா தீவிரவாதியாக இருந்த இவர் ஆட்சியை கைப்பற்றி அதிபராக இருந்து வருகிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிவு அடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடந்தது. இதில் டில்மா ருசேப் என்ற 62 வயது பெண்ணை வேட்பாளராக லுலா நிறுத்தினார்.

அவரை எதிர்த்து சாபாலோ மாநில முன்னாள் கவர்னர் ஜோஸ் செரா, முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரி மரினா சில்வா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ருசேப் 50 சதவீத வாக்குகள் பெற்று மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்த படியாக செரா 2-வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு டில்மா வை விட 20 சதவீத வாக்குகள் குறைவாக கிடைத்தது.

பிரேசிலின் புதிய அதிபராக டில்மா ருசேப் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இதன் மூலம் பிரேசிலின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
....தினத்தந்தி 05.10.2010

nambi
05-10-2010, 01:44 AM
சென்னை, அக். 4: பா.ம.க.வுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்பு தருவதாகக் கூறிய தி.மு.க., பின்னர் ஏமாற்றி விட்டது என்றார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

சென்னை சைதாப்பேட்டையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பா.ம.க. பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசியதாவது:

÷தமிழகத்தில் சட்ட மேலவையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் 25 ஆண்டு கால கனவு. அந்தக் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறியுள்ளது. அதற்கு பா.ம.க.வின் 17 எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவுதான் காரணம்.

பா.ம.க.வின் ஆதரவு கோரி, எனது மகன் அன்புமணியிடம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.

÷அன்புமணிக்கு மாநிலங்களவைத் தேர்தலில் இடம் தருவதாக தி.மு.க.வினர் இரண்டு மாதங்களாக கூறி வந்தனர். நான்தான் தருவதாகக் கூறிவிட்டேனே. தொடர்ந்து தொந்தரவு செய்யாதீர்கள் என்று எங்கள் கட்சித் தலைவர் கோ.க.மணியிடம், ஒரு கட்டத்தில் கருணாநிதியே கூறினார். ஆனால், பின்னர் நிர்வாகக் குழுக் கூட்டம் என்று கூட்டத்தைக் கூட்டி, எங்களை தி.மு.க.வினர் ஏமாற்றி விட்டனர்.

÷நாங்கள் அரசியல் வியாபாரம் நடத்துவதாகவும், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவதாகவும் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார்.

÷2009 மே மாதம் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது, முதல்வர் கருணாநிதி தில்லியில் இரண்டு நாள் முகாமிட்டு, அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று பேரம் பேசினார். உடன்பாடு ஏற்படாததால் கோபத்துடன் சென்னை திரும்பிய கருணாநிதி, வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு என்று அறிவித்தார்.

÷இவையெல்லாம் நாடு முழுவதும் எல்லா ஊடகங்களிலும் பெரிய செய்தியாக வெளிவந்தது. வெளியில் இருந்து ஆதரவு என்பதிலும் அவர்கள் உறுதியாக நிற்கவில்லை. இது அரசியல் ராஜதந்திரம் அல்ல. இதுதான் அரசியல் வியாபாரம்.

÷1949 முதல் 1967-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றுதான் தி.மு.க.வின் அரசியல். ஆனால், அதே காங்கிரஸ் கட்சியுடன் 1971-ல் தி.மு.க. கூட்டணி அமைத்தது. 1977-ல் ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து, மீண்டும் காங்கிரûஸ எதிர்த்தது. 1980-ல் ஜனதா கட்சியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 1984-ல் மீண்டும் காங்கிரûஸ எதிர்த்து போட்டியிட்டது. 2004-ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தது.

÷மேலும், பா.ஜ.க.வை பண்டாரப் பரதேசிகள் என்று வர்ணித்த தி.மு.க. அந்தக் கட்சியோடும் கூட்டணி சேர்ந்தது.

÷இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி அமைக்கும் தி.மு.க.வுக்கு, பா.ம.க.வைப் பற்றி விமர்ச்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்றார் ராமதாஸ்.
....தினமணி 05.10.2010

nambi
05-10-2010, 02:10 AM
பாமக வை ஏமாற்றி விட்டது திமுக...ராமதாஸ்.
....தினமணி 05.10.2010

மீண்டும் இந்த திரிக்கு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=376217&postcount=1) உயிர் கொடுத்த மருத்துவர் ராமதாசுக்கு நன்றி!:D

nambi
05-10-2010, 02:49 AM
டெல்லியில் ஒருவழியாகத் துவங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா முதல் வெற்றியைப் பெற்றார்.

உகாண்டா வீரர் ராபர்ட் புயின்சா என்பவரை போபண்ணா 6- 1, 6- 4 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

இன்று மீண்டும் ரோகன் போபண்ணா கலப்பு இரட்டையரில் நிருபமா சஞ்சீவ் என்பவருடன் இணைந்து ஆஸ்ட்ரேலியா இணையை எதிர்கொள்கிறார்.

ஆனால் போட்டி நடைபெற்ற மத்திய கோர்ட் ஆடுகளத்தில் பார்வையாளர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்த்க்கது.

....வெப்துனியா 04.10.2010

nambi
05-10-2010, 02:57 AM
சோழிங்கநல்லூர், அக்.5-

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் 1 வாரம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.

செல்போன் வைக்க கட்டுப்பாடு

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உள்ள விடுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மாணவர்கள் விடுதிக்குள் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதிக்குள் வரும் போது செல்போனை ஒப்படைத்து விட்டு வார இறுதியில் வெளியில் செல்லும் போது செல்போனை வாங்கி செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் கல்லூரிக்குள் எங்கு சென்றாலும் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்ததாக கூறப்படுகிறது.
....தினத்தந்தி

nambi
05-10-2010, 02:59 AM
மலையாள நடிகையான அசினுக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டவர் மலையாள நடிகை அசின். இந்த இன விரோத நடவடிக்கை தமிழ் உணர்வாளர்களை பெ*ரிதும் காயப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மலையாள நடிகை அசின் கோவையில் காவலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இவர் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எவரும் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்தி*ரி*க்கையாளர் சந்திப்பில் அசினை புறக்கணிக்காமல் ஏறக்குறைய அனைத்துப் பத்தி*ரி*க்கையாளர்களும் கலந்து கொண்டதும் முக்கியமானது.

கோவையில் காவலன் படப்பிடிப்பு நடந்த போது அசினுக்கு மானமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சிலர் கறுப்பு*க் கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெ*ரிவித்தனர். கடமையை காற்றைப் போல் விரைந்து செய்யும் போலீசார் உடனடியாக அந்த உணர்வாளர்களை கைது செய்து தங்கள் கடமையை நிறைவேற்றினர்.
...வெப்துனியா 05.10.2010

nambi
05-10-2010, 11:54 PM
வாஷிங்டன், அக்.5: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பணிய வைக்க பயங்கரவாதிகளை உருவாக்கி அந்நாட்டுக்கு அனுப்பி வைத்து நாசவேலையை அரங்கேற்றியது உண்மைதான் என்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசித்துவரும் முஷாரப், ஜெர்மனி இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதை உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பிருப்பதை பாகிஸ்தான் எப்போதுமே ஒப்புக்கொண்டதில்லை. தாங்கள் நிரபராதி என்றுதான் கூறி வந்தது.

""இந்தியாவில் நடக்கும் தாக்குதலுக்கு எல்லாம் எங்கள் மீது வேண்டுமென்றே இந்தியா பழி சுமத்துகிறது'' என்றும் பாகிஸ்தான் கூறத் தவறியதில்லை.

இப்படிக் கூறி, உண்மையை மறைத்து, உலகை ஏமாற்றி வந்த பாகிஸ்தானின் வேஷத்தை முஷாரப் களைத்துள்ளார். "பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடுதான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதில் உலக நாடுகளுக்கு சந்தேகம் வேண்டாம்' என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

முஷாரபின் இந்தக் கருத்தை எந்த விதத்திலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அலட்சியப்படுத்திவிட முடியாது. பாகிஸ்தானில் ராணுவத் தளபதி, அதிபர் எனும் உயர் பதவிகளை வகித்த அவரது கருத்தை நூறுசதவீதம் உண்மையாகத்தான் கருத முடியும். பாகிஸ்தானின் அதிகாரபூர்வ பிரகடனமாகவே நினைக்க வேண்டும்.

""பாகிஸ்தானை பற்றி நாங்கள் சொல்லும் போதெல்லாம் நீங்கள் நம்பவில்லை. இதோ முஷாரபே சொல்கிறார். இப்போதாவது நம்புங்கள்'' என்று உலக நாடுகளிடம் சொல்லாமல் இருக்க முடியாது.

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதிகளை உருவாக்கியதை தவறு என்று ஒருபோதும் என்னால் சொல்ல முடியாது. அது நூறு சதவீதம் நியாயமான செயல்தான். எங்கள் தேசத்தின் நலன் கருதி நாங்கள் அப்படி செயல்பட்டோம் என்றும் முஷாரப் தங்களது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் மட்டுமல்ல, எந்த ஒரு நாடும் தேச நலன் கருதி தங்களது எதிரிகளை வீழ்த்த, அடிபணிய வைக்க பயங்கரவாதிகளை உருவாக்கும் செயலில் ஈடுபட்டாலும் அதில் தவறில்லை. அதை பாகிஸ்தான் மலர்தூவி வரவேற்கும் என்றும் முஷாரப் கூறியுள்ளார்.

அப்படி என்ன கோபம்? இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதிகளை உருவாக்கும் அளவுக்கு உங்களுக்கு என்ன கோபம், ஆத்திரம் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முஷாரப், இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பயங்கரவாதிகளை உருவாக்கும் அளவுக்கு தள்ளப்பட்டதற்கு காஷ்மீர் விஷயத்தில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு துளியும் அக்கறையில்லாமல் இருந்ததும், காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மூலம் தீர்க்க இந்தியா முன்வராததுமே காரணம் என்றுள்ளார்.

காஷ்மீர் விஷயத்தில் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை. எல்லா நாடுகளுமே கண்களை இறுக்க மூடிக்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளாவது காஷ்மீர் விஷயத்தில் தலையிட வேண்டும் என்று நாங்கள் பெரிதும் விரும்பினோம். ஆனால் அவர்களும் எங்களை கண்டுகொள்ளவில்லை. இப்படி உலக சமுதாயமே காஷ்மீர் பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருந்ததால் கடுமையாக அதிருப்தி அடைந்தோம். காஷ்மீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதிகளை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தோம் என்றும் முஷாரப் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் அனைத்துமே பாகிஸ்தானை ஏதோ குற்றவாளி போலவும், ரெüடித்தனமான நாடு போலவும்தான் பார்க்கின்றன. எந்த ஒரு விஷயத்திலும் பாகிஸ்தானைத்தான் திட்டித் தீர்க்கின்றன. இந்தியாவைத் தட்டிக் கேட்பதில்லை. ஆயுதத்தை ஏன் வாங்கிக் குவிக்கிறீர்கள்? காஷ்மீரில் ஏன் அப்பாவிகளை கொல்கிறீர்கள்? என்று எந்த ஒரு மேற்கத்திய நாடும் இந்திய பிரதமரைப் பார்த்து கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, இந்தியாவுடன் ஒட்டி உறவாடுவதில்தான் முனைப்பு காட்டுகின்றன என்று குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடுருவல் நியாயமானதே... கார்கில் போர் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள முஷாரப், 1999-ல் கார்கில் பகுதியில் அத்துமீறி ஊடுருவியதில் எவ்விதத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றுள்ளார்.

அனைத்து நாடுகளுக்குமே தமது தேசிய நலனை காக்க வேண்டிய தலையாய பொறுப்பு உண்டு. கார்கிலில் ஊடுருவியதன் மூலம் இதைத்தான் பாகிஸ்தான் செய்தது என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள முஷாரப், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் துண்டானதற்கு இந்திய ராணுவம்தான் காரணம். 1971-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு நாடும் கவலைப்படவில்லை. இந்தியாவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்றுள்ளார்.

ஆணித்தரமான நம்பிக்கை: ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாகப் படையை வாபஸ் பெறுவது என்ற அமெரிக்காவின் முடிவு குறித்து பதில் அளித்துள்ள முஷாரப், ஆப்கானிஸ்தானில் இத்தனை ஆண்டுகளாகப் போராடி அமெரிக்காவால் வெற்றி பெற முடியவில்லை. ஆப்கனில் வெற்றி பெறாமல் படையை வாபஸ் பெற்றால் அது மாபெரும் தவறாக அமையும். இப்போது இந்தியா, பாகிஸ்தானை பீடித்துள்ள பயங்கரவாதம் வரும் காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் நிச்சயம் விட்டுவைக்காது. இது எனது ஆணித்தரமான நம்பிக்கை என்றும் முஷாரப் கூறினார்.

பர்வேஸ் முஷாரப், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற தனிக் கட்சியை தொடங்கியுள்ளார். லண்டனில் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய அவர், பாகிஸ்தானில் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்காக விரைவில் தாயகம் திரும்பவுள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 06.10.2010

nambi
05-10-2010, 11:57 PM
ராமேசுவரம், அக். 5: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். இதனால் பலத்த நஷ்டத்துடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

ராமேசுவரத்தில் இருந்து அக்டோபர் 4-ம் தேதி சுமார் 300 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 4 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் திசைமாறி வேறு இடங்களுக்குச் சென்று மீன் பிடித்தாலும், அங்கும் விரைந்து வந்து இலங்கை கடற்படையினர் விரட்டினர். இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் செவ்வாய்க்கிழமை காலை கரைக்குத் திரும்பினர்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் காரணமாக ராமேசுவரம் தீவு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
....தினமணி 06.10.2010

nambi
06-10-2010, 12:07 AM
ஆலந்தூர், அக்.6-

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் ஒசியா டேனியல் (வயது 30). நைஜீரியா நாட்டை சேர்ந்தவர். இவர் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் சென்று தனது விசா காலத்தை நீட்டித்து தரவேண்டும் என்று கோரிகை விடுத்தார்.

அவரது விசா மற்றும் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது டேனியல் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்ட காலத்தை விட சட்டவிரோதமாக கடந்த ஓராண்டாக தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்தனர்.
....தினத்தந்தி 06.10.2010

nambi
06-10-2010, 12:16 AM
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை


சென்னை, அக்.6-

நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த பள்ளிக்கட்டணத்துக்கு இடைக்கால தடைவிதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இடைக்கால தடை

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்து நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல் செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து கோவிந்தராஜன் கமிட்டியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து தனி நீதிபதி கே.பி.கே.வாசுகி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் உடனடியாக முறையீடு செய்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் பிரதான மனு மீதான இறுதி விசாரணை 29.11.10 அன்று நடைபெறும் என்று தனி நீதிபதி கே.பி.கே.வாசுகி தள்ளிவைத்தார்.

பெற்றோர் வழக்கு

இந்த நிலையில் இடைக்கால தடையை எதிர்த்து பெற்றோர் தரப்பிலும், அரசு தரப்பிலும் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பின் விவரம் வருமாறு:-

பொதுமக்கள் நலன்

இடைக்கால தடை உத்தரவு என்பது, ஒரு பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்படும்வரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என்பதற்காக பிறப்பிக்கப்படும் உத்தரவாகும். முகாந்திரம், இருதரப்பிலும் சம உடன்பாடு, பாதிப்பில் இருந்து நிவாரணம் ஆகிய 3 அம்சங்களும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் போது கவனிக்கப்படும்.

ஆனால் இந்த 3 அம்சங்களுடன் மற்றொரு அம்சத்தையும் சேர்த்து கவனிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு வேறொரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அதிக அளவில் பொதுமக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அம்சத்தையும் கூடுதலாக கவனிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

கட்டணம் நிர்ணயிப்பதற்கான முறையை வகுத்து, அதற்கு தேவையான தகவல்களை பெற்று ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணத்தை கமிட்டி நிர்ணயித்து உள்ளது. கட்டிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கவனிக்கப்படுகின்றன.

உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பட்டியில் உள்ள கிறைஸ்ட் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி.க்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.4,850-ல் இருந்து ரூ.4 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதை வைத்து பார்க்கும்போது, பல தகவல்களை பரிசீலித்து பார்த்த பிறகுதான் கட்டணத்தை கமிட்டி நிர்ணயம் செய்துள்ளது என்பது தெரிகிறது.

எனவே கமிட்டி எந்த தகவலையும் பரிசீலிக்கவில்லை என்று பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் வைக்கப்படும் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

சங்கத்துக்கு வேலையில்லை

மேலும் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து கமிட்டியிடம் 6,400 பள்ளிகள் கொடுத்துள்ள மனுக்கள் மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

கட்டணத்தை நிர்ணயித்த பிறகு ஒவ்வொரு பள்ளிக்கும் கமிட்டி தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அதனால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த பள்ளிதான் தனியாக வந்து அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமே தவிர, பள்ளிகளின் சங்கத்துக்கு இங்கு வேலையில்லை.

கவனிக்கவில்லை

இந்த சட்டத்தின் 3 மற்றும் 7-ம் பிரிவுகளை (அமலாக்கும் அதிகாரம்) சரிவர ஆய்வு செய்ய தனிநீதிபதி தவறிவிட்டார். பல்வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் கமிட்டி அனுப்பி தகவல்களை சேகரித்தது.

அதனடிப்படையில் பரிசீலனை செய்த பின்னரே தனித்தனியாக பள்ளிகளுக்கு உத்தரவுகளை கமிட்டி பிறப்பித்தது. இதிலும் சில அம்சங்களை தனிநீதிபதி கவனிக்கவில்லை.

துன்புறுத்தினர்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கான ஆட்சேபனைகளை கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் 6,400 பள்ளிகளும் சமர்ப்பித்தன. ஜுன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது கடந்த கல்வி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டதாக அவற்றின் சார்பில் கூறப்பட்டன.

ஆனால் இடைக்காலத்தடை பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஏற்கனவே பள்ளிகளால் நிர்ணயித்திருந்த கட்டணத்துக்கு நிகரான கட்டணத்தை தர வேண்டும் என்று பாக்கித்தொகையை கேட்டு பெற்றோரை பள்ளிகள் துன்புறுத்தியதாக புகார்கள் கூறப்பட்டன.

ரத்து செய்கிறோம்

எனவே இறுதித்தீர்ப்பு போல் அளிக்கப்பட்ட இந்த இடைக்கால உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது.



கமிட்டியின் உத்தரவை எதிர்க்காமலும், கோர்ட்டுக்கு வராமலும் இருந்த பள்ளிகளுக்கும் சாதகமாக இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கமிட்டியின் உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

வழக்குக்கு வராத பள்ளிகளுக்கும் சாதகமாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு இடைக்கால உத்தரவை தனிநீதிபதி பிறப்பித்திருக்க கூடாது. எனவே அவரது இடைக்கால உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்பதால் அதை ரத்து செய்கிறோம்.

வைப்புநிதியாக

இந்த 6,400 பள்ளிகளும் இந்த ஆண்டின் கல்வி ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜுன் மாதத்தில் வசூலித்த கட்டணத்துக்கு (2009-10-ம் கல்வி ஆண்டுக்காக நிர்ணயித்திருந்த கட்டணம்) அதிகமாக வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.


இந்த கட்டணம், கோவிந்தராஜன் கமிட்டி 7.5.10 தேதியிட்ட உத்தரவின்படி நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை வைப்பு நிதியாக அந்தந்த பள்ளிகள் வைத்துக்கொள்ள வேண்டும். கமிட்டி பிறப்பிக்கும் இறுதி உத்தரவுக்கு இந்த வைப்பு நிதி கட்டுப்பட்டது.

வசூலிக்க கூடாது

ஐகோர்ட்டின் இடைக்கால தடை உத்தரவுக்கு பிறகு இந்த 6,400 பள்ளிகளில் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்து இருந்தால் அந்த கூடுதல் கட்டணத்தையும் வைப்புநிதியாக தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கமிட்டியின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது.

கமிட்டியின் உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ள 4,534 பள்ளிகளும் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது.

ஆட்சேபனைகளை கமிட்டியிடம் தெரிவிக்க 6,400 பள்ளிகளுக்கும் உரிமை உள்ளது. தேவைப்பட்டால் அதற்கான கூடுதல் ஆவணங்களை கமிட்டியிடம் அவர்கள் கொடுக்கலாம். தனித்தனியாக முறையிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவின் நகல் கிடைத்த 4 மாதங்களுக்குள் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியான உத்தரவை கமிட்டி பிறப்பிக்க வேண்டும்.

நடவடிக்கை


எந்தவொரு கல்வி நிறுவனமும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள கட்டணத்துக்கும் கூடுதலாக வசூலிப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

...தினத்தந்தி 06.10.2010

nambi
06-10-2010, 12:21 AM
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை


சென்னை, அக்.6-

நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த பள்ளிக்கட்டணத்துக்கு இடைக்கால தடைவிதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இடைக்கால தடை

...தினத்தந்தி 06.10.2010

''காசு கொடுத்து பிரச்சினையை வாங்குவது என்பார்களே!'' அது இது தானோ...?

nambi
06-10-2010, 06:44 AM
மதுரை, அக்.6-

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அந்த கிணற்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொதுநல வழக்கு

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்று நடித்து இருப்பார்.

சினிமாவுக்காக அந்த காட்சி உருவாக்கப்பட்ட போதிலும், உண்மையிலேயே ஒரு கிராமத்தில் குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தனது வக்கீல் ஏ.காஜாமுகைதீன் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு இருந்து வந்தது. இதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி உள்ளனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்

மேலும் அதே நபர்கள் 49 சென்டு வண்டி பாதையாகிய பொது நடைபாதையை ஆக்கிரமிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களை திருத்த முயன்று வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பொது குடிநீர் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொது பாதையை மக்கள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
......தினத்தந்தி 06.10.2010

nambi
06-10-2010, 06:54 AM
இந்தியாவில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பது தொடர்பான அரசாணை குறித்து சென்னையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நடுவர் மன்ற விசாரணையில், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் ஆஜராகி, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அரசு தடை நீடிப்பு செய்து வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் 14 ஆம் தேதி இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆணை, நடுவர் மன்றத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகே அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

அதற்காக, நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒருநபர் நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த விசாரணையில், தானும் விடுதலைப் புலிகள் சார்பில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வைகோ வாதிட்டார். ஆனால், அவரது வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

அதையடுத்து, செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற நடுவர் மன்றத்தின் விசாரணையில் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சார்பில் மனுவும் தாக்கல் செயய்ப்பட்டது.

'அரசியல் பழிவாங்கல்’


மதிமுக பொதுச் செயலர் வைகோ
மதிமுக பொதுச் செயலர் வைகோ
இந்தியாவில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடையைத் தொடர்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும், அந்தத் தடையைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் வாதிட்டார்கள். அதனால், தங்களையும் இந்த விசாரணையில், ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.

மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஆஜராகலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் உள்ளதாகவும், அதனால், இந்த நடுவர் மன்றத்தில் ஆஜராக தங்களுக்கு உரிமை உண்டு எனவும் வாதிட்டார்.

அரசாணையில் அதுபோன்ற குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் சட்ட விதிகள் தான் செல்லுபடியாகும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்ஜெயன் வாதிட்டார்.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் என்பவர் சார்பிலும் தான் ஆஜராவதாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறினார். அதற்காக, ஜோசப் ராபின்சன் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழக அரசு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கறிஞரின் கோரிக்கை நிராரிக்கப்பட்டது.

தமிழக காவல் துறையின் சார்பில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, நெடுமாறன் உள்ளிட்ட மற்ற அமைப்பினர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையைத் தொடரக் கூடாது என வாதிட முடியுமா என்ற தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். புதன்கிழமை அதுதொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவர் மன்றத்தின் அடுத்த விசாரணை, இந்த மாதம் 20-ஆம் தேதி ஊட்டியில் நடைபெற உள்ளது.
.....பிபிசி தமிழோசை 06.10.2010

nambi
07-10-2010, 12:02 AM
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/VaradarajanMuniswamiMudaliarakaVardhabhai.jpg
வரதராஜன் முதலியார்
http://www.dailythanthi.com/images/news/20101007/ac07.jpg
தீயினால் மரணமடைந்த மகள் மற்றும் மருமகன்
நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது பயங்கரம்
ஏ.சி. மெஷின் தீப்பிடித்து கணவன்-மனைவி கருகி சாவு


சென்னை, அக்.7-

சென்னையில் நள்ளிரவில் ஏ.சி.மெஷின் தீப்பிடித்து வெடித்துச்சிதறியதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன்-மனைவி உடல் கருகி பலியானார்கள். இவர்கள் மும்பை வரதராஜ முதலியாரின் மகளும், மருமகனும் ஆவர்.

மாடியில் வசித்த தம்பதிகள்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கற்பகம் அவென்ï பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் சந்தர் (வயது 60) வேளச்சேரியில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி, மகாலட்சுமி (50). அவர்களுக்கு பவித்ரா (28) என்ற மகளும், உதய் சந்தர் (25) என்ற மகனும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வேலைபார்த்து வருகின்றனர்.

மகன் உதய் சந்தருக்கு கடந்த மாதம் 10-ந் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 10 நாட்களுக்கு முன்னர் தான் புது மணத்தம்பதிகள் இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். கற்பகம் அவென்ïவில் உள்ள சொந்த வீட்டின் மாடி பகுதியில் ஹேமந்த் சந்தர்-மகாலட்சுமி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

அவர்களுக்கு உதவியாக சொக்கம்மாள் (55), ராமகனி (60) என்ற 2 வேலைகார பெண்கள் தங்கியிருந்தனர். அந்த வீட்டின் கீழ்பகுதியை சுபஸ்ரீ (35) என்ற பள்ளி ஆசிரியைக்கு வாடகைக்கு விட்டிருந்தனர்.

தீப்பிடித்து எரிந்தது

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் வீட்டில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்தது. சற்று நேரத்தில் ஹேமந்த் சந்தர் தம்பதிகள் படுத்திருந்த அறையில் தீப்பற்றி எரிந்தது. தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. வீட்டில் இருந்து ஹேமந்த் சந்தர் தம்பதியினர் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்கள்.

ஆனால், பக்கத்து அறையில் படுத்து இருந்த இரு வேலைக்கார பெண்களால் இருட்டாக இருந்ததாலும், புகை மூட்டமாக இருந்ததாலும் அவர்களுடைய அறையை நெருங்க முடியவில்லை. இதனால் அவர்கள் இருவரும் மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். உடனே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கருகிய நிலையில் பிணங்கள்

தகவல் கிடைத்ததும் மைலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

பின்னர், தீயணைப்பு படையினரும், போலீசாரும் பாதி எரிந்த நிலையில் இருந்த வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். வீட்டின் உள்ளே ஹேமந்த்சந்தரும் அவருடைய மனைவியும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

போலீசார் விசாரணை

ஹேமந்த் சந்தரின் உடல் கரிக்கட்டையாக அடையாளம் தெரியாத அளவில் இருந்தது. அவருடைய மனைவி மகாலட்சுமியின் உடல் பாதி கருகிய நிலையில் கிடந்தது. போலீசார் இருவருடைய உடலையும் கைப்பற்றி, பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ஐசக்பால்ராஜ் மேற்பார்வையில், பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏ.சி. மெஷின் தீப்பிடித்தது

``மின்சார கசிவு காரணமாக வீட்டில் இருந்த ஏ.சி. மெஷின் தீப்பிடித்ததால் இந்த இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் அதுகுறித்து தடயவியல் பதிவுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்தை நேரில் பார்த்த வேலைக்கார பெண் ராமக்கனி கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் திருச்செந்தூர். எனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டார். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் வீட்டு வேலை பார்த்து வருகிறேன்.

வீட்டுக்கு வந்த உறவினர்

இந்த வீட்டில் கடந்த 1-ந் தேதி தான் வேலைக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு முன்னரே கடந்த சில வருடங்களாக இங்கு சொக்கம்மாள் என்ற சாந்தி வேலை பார்த்து வருகிறார். வீட்டின் முதலாளி எங்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஹேமந்த் சந்தருக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. அதே போல மகாலட்சுமியும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு `டயாலிசிஸ் செய்து வந்தார்.

நேற்று மதியம் இவர்களின் மகளை திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை சண்முகம் என்பவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் எந்திரன் படம் பார்த்துவிட்டு வந்ததாகவும், அதன் கதையையும் கூறி அனைவரும் சிரித்து பேசியபடி இருந்தனர்.

காப்பாற்றும்படி அலறினார்...

பின்னர், சண்முகம் இரவு 7 மணியளவில் வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு 11 மணிக்கு அவர்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றார்கள். நாங்கள் இருவரும் சமையல் அறைக்கு பக்கத்தில் உள்ள சிறிய அறையில் படுத்து தூங்கிவிட்டோம்.

நள்ளிரவு 12.50 மணிக்கு திடீரென மகாலட்சுமி கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தோம். அப்போது அவர் சாந்தி காப்பாற்று என்று அலறினார். உடனே நாங்கள் இருவரும் உதவி செய்ய முயற்சித்தோம். இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை.

புகையினால் மூச்சுத்திணறல்

நான் என் செல்போனில் இருந்த டார்ச் விளக்கை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் அறை அருகில் சென்றேன். ஆனால் முடியவில்லை, அதிக புகையின் காரணமாக எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் நானும், சாந்தியும் வெளியே மாடிக்கு ஓடிவந்தோம். அங்கிருந்து உதவி செய்யுமாறு கூச்சலிட்டோம். ஆனால் யாருக்கும் எங்கள் கூச்சல் கேட்கவில்லை.

இந்த நிலையில் தீயின் வெப்பம் மாடியில் அதிகமாக பரவியது. இதனால் சாந்தி மாடியில் இருந்து கீழே குதித்தார். நான் அருகில் நின்று கொண்டிருந்த தென்னைமரத்தை பிடித்து கீழே இறங்கினேன். சாந்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. எனக்கு கைகால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.

ஏ.சி. மெஷின் வெடித்தது

நாங்கள் மாடியில் இருந்து குதித்த போது, வீட்டில் இருந்த ஏ.சி.பெட்டி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இந்த சத்தத்தையும், எங்களின் கூச்சலையும் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இருவரும் தீயில் வெந்து இறந்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீ விபத்தில் மர்மம்?

தீ விபத்து நடந்த வீட்டின் உள்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தீவிபத்திற்கு ஏ.சி.பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து பின்னர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. எனினும், ஏ.சி.பெட்டி இருந்த அறையைவிட பக்கத்து அறை கடுமையாக தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி, புத்தகங்கள், சோபாக்கள் என பெரும்பாலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

தீயின் வெப்பம் தாங்காமல் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியுள்ளன. அதேபோல, வீட்டின் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு பிளந்த நிலையில் உள்ளது. ``ஏ.சி. பெட்டியில் ஏற்படும் தீயினால், வீடே பிளக்கும் அளவுக்கு இப்படி ஒரு தீவிபத்து ஏற்படுமா?'' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அனைத்து பொருட்களும் சுத்தமாக தீயில் எரிந்து நாசமானதால் இந்த விபத்தின் பின்னணியில் மர்மம் எதுவும் இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் தீ பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.

மும்பை வரதராஜ முதலியாரின் மகள்

விபத்தில் பலியானவர்களில் ஹேமந்த் சந்தரின் மனைவி மகாலட்சுமி, மும்பையில் தமிழர்களுக்காக போராடி `தாதா'வாக வலம் வந்த வரதராஜ முதலியாரின் மகள் ஆவார்.

`வரதாபாய்' என்று மும்பை தமிழர்களால் அழைக்கப்பட்டு வந்த வரதராஜ முதலியாரை மையமாகக் கொண்டுதான், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த வெற்றிப்படமான `நாயகன்' படம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

....தினத்தந்தி 07.10.2010

nambi
07-10-2010, 01:24 AM
புது தில்லி, அக். 6: மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம்.

தில்லி சட்ட பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சந்தோஷ் சிங். இவர் கடந்த 1996-ல் மூன்றாம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி மட்டுவை, பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

இந்த வழக்கில் 1999-ல் விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இதனையடுத்து வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. 2006-ம் ஆண்டில் தில்லி உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சந்தோஷ் மேல்முறையீடு செய்தார்.

இதனை புதன்கிழமை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் எச்.எஸ். பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும் கூறி தீர்ப்பளித்தது
...தினமணி 07.10.2010

nambi
07-10-2010, 02:21 AM
"பொதுமக்கள் ஏமாற வேண்டாம்''-அதிகாரி எச்சரிக்கை


மதுரை, அக்.7-

ரெயில்வேயில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் குறித்து போலியாக விண்ணப்பங்கள் அச்சடித்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அதிகாரி எச்சரித்துள்ளார்.

ரெயில்வே வாரியம்

இந்திய ரெயில்வேயில் அவசரகாலங்களில் தேவைக்கு ஏற்ப தண்டவாள பராமரிப்பு பணிக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொள்ள அந்தந்த பொது மேலாளர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், அவசர காலத்தில் தேவைக்கு ஏற்ப தற்காலிகமாக குரூப்-டி பணியாளர்களை எடுப்பதற்கு ரெயில்வே வாரியம் தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில், இப்போது தற்காலிக ஊழியர்களை அந்தந்த மண்டல பொது மேலாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. இது பற்றிய செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த செய்தியை பார்த்தவுடன் பலர் ரெயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

பண மோசடி

தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் ரெயில்வே தொழிலாளர்களின் வாரிசுகள் மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் பணம் கொடுத்தால் மட்டுமே மற்ற நபர்களுக்கும் வேலை கிடைக்கும் என சிலர் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் டி.வெங்கடசுப்பிரமணியன் கூறியதாவது:-

ரெயில்வேயில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கக் கூடாது என்ற ரெயில்வே வாரிய உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த உத்தரவை தளர்த்தி மண்டல பொது மேலாளர்களுக்கு கொடுக்கலாம் என ரெயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

அது பற்றி முறையான உத்தரவு ஏதும் வருவதற்கு முன்னரே மதுரை கோட்ட அலுவலகத்துக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தபாலில் வருகின்றன. அவற்றை திருப்பி அனுப்பி வருகிறோம். இது தவிர, தொலைபேசியிலும், நேரிலும் வந்து பலர் விசாரிக்கின்றனர்.

விண்ணப்பங்கள்

இதற்கிடையே அலுவலக வளாகத்தில் சில மோசடி பேர்வழிகள் வேலைவாங்கி தருவதாக பணம் பறித்து வருவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது. எனவே பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

மேலும், ரெயில்வே வாரிய உத்தரவு எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பங்கள் அச்சடித்து வினியோகம் செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் அப்படி எந்த விண்ணப்பமும் ரெயில்வே நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.

தற்காலிக பணியாளர்கள் நியமனம் குறித்து முறையான உத்தரவு எதுவும் வராதவரை எந்த முடிவும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.....தினத்தந்தி 07.10.2010

nambi
08-10-2010, 01:45 AM
ஷீலா தீட்சித்தின் பெயரை
இன வெறியுடன் தவறுதலாக உச்சரித்தது ஏன்?
நிïசிலாந்து தூதரிடம் இந்தியா கண்டனம்


புதுடெல்லி, அக். 8-

நிïசிலாந்து நாட்டில் உள்ள டி.வி. நிறுவனம் ஒன்றின் செய்தி வாசிப்பாளர் பால் ஹென்றி, நிகழ்ச்சி ஒன்றின் போது, டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் பெயரை உச்சரிக்கும் போது, இனவெறியுடன் கூடிய வார்த்தைகளை பயன்படுத்தியதுடன், அவரது பெயரை தவறுதலாகவும் படித்தார்.

இதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. டெல்லியில் உள்ள நிïசிலாந்து தூதரை நேரில் அழைத்து, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிïசிலாந்து தூதர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் நிïசிலாந்து செய்தி வாசிப்பாளரை பணி நீக்கம் செய்து, அந்த டெலிவிஷன் நிறுவனம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த செய்தியாளர், நிïசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கவர்னர் ஜெனரல் ஆனந்த் சத்யானந்தையும் கிண்டல் அடித்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...........தினத்தந்தி 08.10.2010

nambi
08-10-2010, 01:49 AM
உலகிலேயே ஏராளமான கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காகன பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.எந்தவிதமான பிடிவிறாந்தோ அல்லது வெறும் சட்ட ரீதியான பின்னணியோ இன்றி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
...நெருடல் 07.10.2010

nambi
08-10-2010, 02:07 AM
பிரபல சினிமா நடிகை ரோஜா கேரளாவில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு 8.20 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார். அவர் தனது கைப்பையில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வைத்திருந்தாராம். அவர் விமானத்தில் உட்கார்ந்ததும் அந்த கைப்பையை விமானப்பெண் ஊழியரிடம் கொடுத்து இருக்கைக்கு மேல் உள்ள பாக்சில் வைக்க சொன்னாராம். இதனை தொடர்ந்து விமானம் கோவை வந்தடைந்ததும் தனது கைப்பையை பார்த்துள்ளார் அதில் அவர் வைத்திருந்த ரூ.2.60 லட்சம் காணாவில்லை. எனது பணத்தை விமானப்பயணத்தின் போது யாரோ திருடியிருப்பதாக விமான நிலைய அதிகாரிகளிடம் ரோஜா தெரிவித்தார். பணம் காணாமல் போனது விமானத்திலா அல்லது விமான நிலையத்திலா என்று அதிகாரிகள் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
...இந்தேரம் 07.10.2010

nambi
08-10-2010, 02:10 AM
புதுடில்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, கடந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நபர்களுக்கும், சிறந்த தொண்டாற்றும் அமைப்புகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சத்திஸ்கர் மாநிலம், நாராயணன்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கும் கடந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு பத்திரமும், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்ட இந்த விருதை, இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31ம் தேதி, டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா வழங்க உள்ளார்.
...தினமலர் 07.10.2010

nambi
08-10-2010, 02:12 AM
சென்னை, அக்.8-

காளஹஸ்தி கோவிலில், இன்று (வெள்ளிக்கிழமை) பிரபுதேவாவும், நயன்தாராவும் விசேஷ பூஜை நடத்துகிறார்கள்.

கோர்ட்டில் வழக்கு

நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் இருந்து வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபுதேவாவின் மனைவி ரமலத், சென்னை குடும்பநல கோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். ஒரு வழக்கில், ``நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவர் பிரபுதேவாவை மீட்டுக்கொடுங்கள்'' என்றும், இன்னொரு வழக்கில், ``பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்றும் ரமலத் கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் தொடர்பாக பிரபுதேவாவும், நயன்தாராவும் வருகிற 19-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று இரண்டு பேருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது.

விசேஷ பூஜை

ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை பிரபுதேவாவும், நயன்தாராவும் எதிர்பார்க்காததால், இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு பேருக்கும் சில நண்பர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

``ராகு-கேது தோஷத்தால்தான் திருமண தடைகளும், பிரச்சினைகளும் வருகின்றன. காளஹஸ்தி கோவிலுக்கு சென்று விசேஷ பூஜை நடத்தினால், திருமண தடைகள் விலகும்'' என்று கூறியுள்ளனர்.

நண்பர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, பிரபுதேவாவும், நயன்தாராவும் இன்று (வெள்ளிக்கிழமை) காளஹஸ்தி கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு விசேஷ பூஜை நடத்தி சாமி கும்பிடுகிறார்கள்.

....தினத்தந்தி 08.10.2010

nambi
09-10-2010, 11:54 AM
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை, அக்.9-

தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமனம் செய்ததில் உச்சநீதிமன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, அவரை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் அடுத்த டி.ஜி.பி. தேர்வு செய்யப்படும்வரை பொதுமக்கள் நலனுக்காக டிசம்பர் 7-ந் தேதிவரை அவர் டி.ஜி.பி.யாக பணியாற்றுவதில் தடையில்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீர்ப்பாயம்

தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்து உள்துறை செயலாளர் 8.1.10 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக டி.ஜி.பி. நியமனத்தில் பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் 16.10.08 அன்று வழங்கிய விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்றும், 8.1.10 தேதியில் மூத்த டி.ஜி.பி.க்களாக தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலில் உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றும், டி.ஜி.பி. தேர்வுக்கு தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த வழக்கில் நடராஜ் கூறி இருந்தார்.

சாதகமாக தீர்ப்பு

மேலும் தனது பணிமூப்பை கருத்தில் கொள்ளாமல், லத்திகா சரணுக்கு பதவியை வழங்கிவிட்டனர் என்றும் அந்த வழக்கில் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து, உள்துறை செயலாளர் உத்தரவுக்கு சாதகமாக உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராஜ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அடையாளம் இல்லை

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது. டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மற்ற அதிகாரிகளின் சாதக, பாதகங்களை பரிசீலித்தார்களா என்பதற்கான எந்த அடையாளமும் அதற்கான கோப்பில் காணப்படவில்லை.

பெயர் தெரியாத அலுவலர் ஒருவர் தயாரித்துள்ள ஒரு குறிப்பு கோப்பு மட்டுமே அதில் காணப்படுகிறது. முறையான தேர்வு நடந்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் இந்த கோப்புகளில் பார்க்க முடியவில்லை. மேலும், டி.ஜி.பி.யை தேர்வு செய்ததற்காக கூறப்படும் காரணங்களும் அந்த கோப்பில் எங்கும் காணப்படவில்லை.

வேறு வழியில்லை

அதுமட்டுமல்ல, லத்திகா சரணை டி.ஜி.பி.யாக தேர்வு செய்யும்போது, அந்த பதவி வகிக்க தகுதி பெற்றுள்ள அதிகாரிகளின் பணி ஆவணங்களும் முன்வைக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலையை கோர்ட்டு ஏற்க முடியவில்லை.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் மிகவும் உன்னிப்பாக பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தலைமைச் செயலாளர் அவற்றை ஒட்டுமொத்தமாக பின்பற்றவில்லை. இந்த பணிநியமனத்தில் உச்சநீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை.

விஜயகுமார் பரிசீலனை

கே.விஜயகுமாரை பொறுத்தவரை, அவர் தமிழகத்தை விட்டு வேறு பணிகளுக்கு சென்றிருந்தாலும் அவரது உரிமை தொடர்ந்து தாய்ப்பணியிடமான தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் பணியிட மாற்றம், பதவி உயர்வு, பணி மூப்பு போன்றவற்றில் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு அவருக்கு முழு தகுதியும், உரிமையும் உள்ளது. எனவே அவரது பெயரையும் அரசு பரிசீலித்து இருக்க வேண்டும்.

கே.விஜயகுமார், மாநில அரசு பணிக்கு 1975-ம் ஆண்டு வந்தார். 9.9.08 முதல் அவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தற்போதுள்ள அவரது பணி நிலை நடராஜ×க்கு சமமாக உள்ளது. மேலும் லத்திகா சரணின் பணிநிலைக்கு மேலாகவும் உள்ளது. எனவே கே.விஜயகுமார் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ரத்துக்கு உகந்தவை

இந்த வகையிலும் நியமன முறை பின்பற்றப்படவில்லை என்பதால் டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படக் கூடியதுதான்.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தனது மனதை செலுத்தாமல், லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை தீர்ப்பாயம் கவனிக்கவில்லை.

இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாள்வதற்கு தீர்ப்பாயம் தவறிவிட்டது. பிரச்சினை தொடர்புடைய அம்சங்களையும் தீர்ப்பாயம் பரிசீலிக்கவில்லை. எனவே லத்திகா சரணின் நியமனத்தை உறுதி செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவும் உடனடியாக ரத்து செய்யப்படக் கூடிய ஒன்றுதான்.

2 உத்தரவும் ரத்து

எனவே லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமனம் செய்து 8.1.10 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், அதற்கு சாதகமாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற தகவல் இந்த கோர்ட்டுக்கு கிடைத்ததும், தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து அந்த உத்தரவுகளை தடம்புரளாமல் பின்பற்ற செய்ய வேண்டியது எங்களது கடமை மற்றும் பொறுப்பு என்று உணர்ந்தோம்.

ï.பி.எஸ்.சி.க்கு அனுப்புங்கள்

எனவே சில உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். பொதுமக்களின் நன்மைக்காக டி.ஜி.பி. பணியிடத்தை காலியாக வைக்கும்படி உத்தரவிட விரும்பவில்லை. கீழ்க்கண்ட உத்தரவுகளை அரசு தவறாமல் பின்பற்ற வேண்டும்,

*டி.ஜி.பி. ரேங்கில் இருக்கும் அனைத்து தகுதியுள்ள அதிகாரிகளின் பெயர் பட்டியலை தலைமைச் செயலாளர் தயாரிக்க வேண்டும். (இந்த தேதியில் எச்.ஏ.ஜி.+ரூ.75 ஆயிரம்-ரூ80 ஆயிரம் என்ற சம்பள விகிதத்தில் உள்ளவர்கள்). அவர்களது அனைத்து பணி ஆவணங்களையும் ï.பி.எஸ்.சி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பான பெயர்ப்பட்டியலை தயாரிக்கும்படி ï.பி.எஸ்.சி.யை தலைமைச் செயலாளர் கேட்டுக்கொள்ள வேண்டும். அனைத்து தகவல்களும் 26-ந் தேதிக்குள் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.

*ï.பி.எஸ்.சி.க்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அவற்றை தலைமைச்செயலாளர் வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் (12.11.10க்கு முன்பு) சிறப்பு தூதுவர் மூலம் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.

7.12.10-க்குள் புதிய டி.ஜி.பி.

*அதன் பிறகு உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளின்படி ï.பி.எஸ்.சி. ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும். அதை 26.11.10க்குள் தலைமைச்செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

*அதிலிருந்து ஒருவரை டி.ஜி.பி.யாக தலைமைச்செயலாளர் தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் 7.12.10-க்குள் முடிக்கப்பட வேண்டும்.

*அதுவரை லத்திகா சரண் டி.ஜி.பி.யாக பதவி வகிக்க அனுமதிக்கப்படுகிறார்.

கருத்து இல்லை

*இந்த உத்தரவுகள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளனவா என்பதுபற்றி 14.12.10 அன்று உயர்நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

*இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தையும் தெரிவிக்க நீதிமன்றம் முன்வரவில்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நடராஜ் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆஜரானார்.

....தினத்தந்தி 09.10.2010

nambi
09-10-2010, 12:01 PM
டெல்லி: இரண்டு ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் இந்தியர்களை மிகவும் மோசமாக விமர்சித்து பரிமாறிக் கொண்ட இமெயில் தகவல் குறித்து இந்தியா கடும் கண்டனமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய தூதரை நேரில் அழைத்து கண்டனத்தைத் தெரிவித்ததோடு அந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த இரு போலீஸ் உயர் அதிகாரிகள் பரிமாறிக் கொண்ட இமெயில் குறித்த விவரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் இந்திய பயணி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து நகைச்சுவையாக இருவரும் பேசியுள்ளனர். அதாவது மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை குறிப்பிட்டு, இப்படி மின்சாரம் பாய்ச்சினால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அந்த இரு இனவெறி போலீஸாரும் கூறியுள்ளனர்.

இந்த இனவெறிப் பேச்சுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

இந்த இமெயில் விவகாரம் வெளியானதை தொடர்ந்து ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் தொடர்பாக இதுபோன்ற பயங்கரமான கருத்துக்களை, ஆஸ்திரேலியர்கள், குறிப்பாக போலீஸார் பரிமாறிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கவலையான விஷயமாகும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எந்த சமூகத்திலும் இதுபோன்ற விஷமப் போக்குக்கு இடம் கிடையாது. இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடங்கியிருப்பதாக அறிகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதுதொடர்பான நடவடிக்கைளை ஆஸ்திரேலியா எடுக்கும் என நம்புகிறோம்.

மேலும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பாதுகாப்பு குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் கிருஷ்ணா.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸ் கூறுகையில், இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்களில் ஒருவர் போலீஸ் சேவையில் தற்போது இல்லை. இன்னொருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அரசும், விக்டோரிய அரசும், விக்டோரிய காவல்துறையும் இந்த விஷமப் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளன.

இந்த இமெயில் பேச்சு மிகவும் அவதூறானது, கடும் கண்டனத்துக்குரியது. இது ஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது என்றார்.

முன்னதாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வந்த பீட்டர் வர்கீஸிடம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசு உரிய விளக்கத்தை அளிக்குமாறும் அவர் பணிக்கப்பட்டார்.
......தட்ஸ்தமிழ் 09.10.2010

nambi
10-10-2010, 01:32 AM
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயக தலைவரை விடுதலை செய்க
சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை


வாஷிங்டன், அக்.10-

அமைதிக்கான நோபல்பரிசு இந்த ஆண்டு சீனா ஜனநாயக தலைவர் லிï ஜியாபோவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு இருக் கும் அவரை சீன அரசு விடு தலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இலக்கியவாதி

சீனாவை சேர்ந்த ஜனநாயகத்தலைவர் லிï ஜியாபோ. இலக்கியவாதியும் கல்லூரி பேராசிரியருமான இவர் ஜனநாயக ஆட்சி கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இவர் 1955-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி ஜிலின் மாநிலத்தில் உள்ள சாங்சுன் நகரில் பிறந்தார். ஜிலின் பல்கலைக்கழகத்தில் இலக்கிய பட்டப்படிப்பில் சேர்ந்தார். பிறகு கல்லூரி பேராசிரியர் ஆனார்.

பீஜிங் பல்கலைக்கழகத்தில் இலக்கிய படிப்புக்கான முதுகலை வகுப்பை தொடங்கினார். இலக்கியம், படிப்பு எழுத்து என்று இருந்த அவர் சீன ஆட்சியாளர்கள் சர்வாதிகாரமாக நடப்பதை பார்த்து அதை பொறுக்க மாட்டாமல் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராட்டங்களை தொடங்கினார்.

11 ஆண்டு சிறைத் தண்டனை

இவர் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இவருக்கு நார்வே நாட்டை சேர்ந்த நோபல் அறக்கட்டளை அமைதிக்கான நோபல் பரிசை அளித்து உள்ளது. ரூ.6 கோடியே 60 லட்சம் ரொக்கப் பணத்துடன் கூடிய இந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோவில் நடை பெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

விடுதலைக்கு முதல் குரல்

இந்த நிலையில் சிறையில் இருக்கும் லிï ஜியாபோவை விடுதலை செய்ய வேண்டும் என்ற முதல் குரலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுப்பி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

லிïவுக்கு நோபல் பரிசு வழங்கியதன் மூலம், நோபல் பரிசுக்குழு ஒரு துணிச்சல் காரரை தேர்ந்து எடுத்து உள்ளது.

அவர் சட்டப்பூர்வமான ஆட்சி, ஜனநாயக நெறி முறைகள், மனித உரிமை ஆகியவற்றை அடைவதற்காக அமைதியான முறையில் போராடி வருகிறார். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு பெண்ணின் குழந்தையின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை இந்த பரிசு நமக்கு நினைவுபடுத்துகிறது. எனவே லிïவை விடுதலை செய்யும்படி நான் சீன அரசை கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க்கையை தியாகம் செய்தவர்

லிï தான் நம்பிய கொள்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர்

ஆவார். அவரை தேர்ந்து எடுத்த நோபல் குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஏற்கனவே ஆஸ்லோ நகரில் நடந்த விழாவில் கூறியபடி, அனைத்து மனிதர்களின் அபிலாஷை களுக்கும் அமெரிக்கா குரல் எழுப்பும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் லிïவுக்கு நோபல் பரிசு வழங்கியதை வரவேற்பதாக தெரிவித்தார். அவரை தேர்ந்து எடுத்த நோபல் குழுவினரையும் அவர் பாராட்டினார்.

..........தினத்தந்தி 10.10.2010

nambi
10-10-2010, 01:41 AM
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயக தலைவரை விடுதலை செய்க
சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை


வாஷிங்டன், அக்.10-.............

..........தினத்தந்தி 10.10.2010

அப்படியே இவரையும் விடுதலை செய்ய மறுபடியும், மறுபடியும் கோரிக்கையை மிக வலிமையாக வைத்தால் நன்றாக இருக்கும் .....1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.....கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்மணி...பர்மாவின் (மியானமர்) ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடிக்கொண்டிருக்கும் போராளி ஆங் சாங் சூகி

http://tharakai.files.wordpress.com/2009/08/myanmar1.jpg?w=460&h=322

nambi
10-10-2010, 01:50 AM
சென்னை: முகாமில் உள்ள தமிழர்கள் வீடு திரும்ப தனிக் கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதியிடம் உறுதி அளித்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முகாம்களில் அவதிப்படும் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூறிய முதல்வர், அது தொடர்பான மனு ஒன்றையும் சோனியா காந் தியிடம் கொடுத்தார். பாண்டிச்சேரி மற்றும் திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தார். சோனியா காந்தியை தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய ஜவுளித்து றை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மத்திய, மாநில, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, விமான நிலைய ஓய்வு அறையில் சோனியா காந்தியுடன் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சில நிமிடங் கள் தனியாக பேசினர். இந்த சந்திப்பு முடிந்ததும் சோனியா காந்தி தயாராக இருந்த தனி ஹெலிகாப்டர் மூலம் பாண்டிச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

சோனியா காந்தியை சந்தித்து விட்டு, விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியில் வந்த முதல்வர் கருணாநிதியை, பத்திரிகையாளர் சூழ்ந்து கொண்டனர். அவர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
சோனியா காந்தியுடனான சந்திப்பு பற்றி?

இது, மிகக் குறுகியகால சந்திப்பு. அதனால் விரிவாக நாங்கள் எதுவும் பேசவில்லை. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினோம்.

சோனியாவுடன் எது குறித்து பேசினீர்கள்?
இலங்கை தமிழர் பிரச்னை பற்றி பேசினேன். இலங்கையில் முகாம்களில் அவதிப்படும் தமிழர்களின் நிலையை எடுத்துக்கூறி மனு ஒன்றை சோனியா காந்தியிடம் வழங்கினோம்.

மனுவை கனிவுடன் பெற்றுக் கொண்ட சோனியா காந்தி, இந்த பிரச்னையில் நானே நேரடியாக சிறப்பு கவனம் செலுத்தி, இதற்கு விரையில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கி றேன் என்று உறுதியளித்தார். கூட்டணி பற்றி பேசினீர்களா? பேசவில்லை; அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. தற்போதைய கூட்டணி உறுதியாக உள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

........தினகரன் 10.10.2010