PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12

nambi
25-06-2010, 02:54 AM
உலகத் தமிழ்ச் செம்மொழி மநாட்டின் இரண்டாம் நாளான இன்று தமிழ் இணைய கண்காட்சி தொடங்கப்பட்டது. இதில் தமிழ் இணைய மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட கணினி அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

கணினி அரங்குகளுக்கு மட்டும் 1 கோடிசெலவில் இணைய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. தமிழ்க் கணிமைக்காக சேவை செய்த முரசொலி மாறன், சுஜாதா, நா.கோவிந்தசாமி, உமர்தம்பி, யாழன் சண்முகலிங்கம் ஆகியோரது பெயர்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இணைய மாநாட்டை 1999ஆம் ஆண்டு நடத்த பெரும் முயற்சி எடுத்தவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முக்கியமானவர். மின்வழி தமிழ் வளர மென்பொருள் தயார் செய்து தமிழர்களுக்கு வழங்கிட வழிவகை செய்தவர்.

தமிழ் இலக்கியம் மட்டும் இன்றி, இணையம் மூலமாகவும் தமிழ் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் அமரர் சுஜாதா. சிங்கப்பூரில் தமிழாசிரியராக பணி புரிந்தவர் நா.கோவிந்தசாமி.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர்தம்பி. எலக்ட்ரானிக்ஸ் துறை நிபுணர். தமிழ் இணைய தளங்களை வாசிக்க ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு எழுத்துரு தேவை என்ற நிலையைப் போக்கி ஒருங்குறி முறையிலான "தேனீ" என்ற எழுத்துருவை அறிமுகம் செய்தவர்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அமரர் யாழன் சண்முகலிங்கம். மென்பொருள் பொறியாளர். 1995ம் ஆண்டிலேயே ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி" என்ற தமிழ் மென்பொருளை பயன்படுத்தி பிரபலப்படுத்தியவர்.

தமிழ் இணைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர்களை கவுரவிக்கும் வகையில் இவர்களது பெயர்கள் அரங்கங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.

....இந்நேரம்.காம் 25.06.2010

nambi
25-06-2010, 02:57 AM
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி பழங்கால பொருட்களின் கண்காட்சி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழ் இணைய தள கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.

இணைய தளத்தில் தமிழை எந்த அளவு மேம்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று (வியாழக்கிழமை) காலை நடந்நது. இணைய தள கண்காட்சியை யுனெஸ்கோவின் இயக்குனர் ஆறுமுகம் பரசுராமென் திறந்துவைக்கிறார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார்.

இது தவிர இன்றைய மாநாட்டில் தமிழ் ஆய்வரங்க தொடக்க நிகழ்ச்சியும் கொடிசியா வளாகத்தில் உள்ள இ ஹாலில் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதை சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கிவைக்கிறார். மத்திய அமைச்சர் ராசா முன்னிலை வகித்தனர். தமிழ் இணைய தள மாநாட்டு குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் இணைய தள கண்காட்சி அரங்கில் மொத்தம் 124 நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 40க்கும் மேற்பட்ட நிலையங்களில் அரசுத் துறை நிறுவனங்களின் கணினிப் பயன்பாடு, மின்னணு பயன்பாடு போன்றவற்றின் செயல் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை மாநகராட்சி சார்பில் மின் ஆளுமையை விளக்கும் 2 நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் வரி செலுத்துதல், குடிநீர் கட்டணம் செலுத்துதல், கட்டிட வரைபட அனுமதி பெறுதல் உள்பட தேவையானவற்றை இணைய தளம் மூலமாக பூர்த்தி செய்து கொள்வது எப்படி என்ற விளக்கம் இந்த நிலையங்களில் அளிக்கப்படும்.

இதுபோல் காவல் துறை மூலமாக குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து கைது செய்வது, போக்குவரத்தை சீரமைப்பது ஆகியவற்றை இணைய தளம் மூலம் மின்ஆளுமை மூலம் செயல்படுத்துவது குறித்த விளக்கமும் இடம் பெறுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் யு.பி.எஸ். சிஸ்டம் முறையில் பஸ் போக்குவரத்தை கண்காணிப்பது குறித்து இணைய தளம் மூலம் விளக்கப்படுகிறது.

இது தவிர கிராமங்களில் கணினிப்பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் எல்காட் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கண்காட்சியும் இந்த அரங்கில் இடம் பெறுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் தமிழகத்தில் நிலத்தடி நீர் எந்த ஊரில் உள்ளது, நிலத்தடி நீர் மட்டத்தை இணைய தளம் மூலம் கண்டறிவது, அணைக்கட்டுகளில் உள்ள நீர் மட்டத்தை இணைய தளம் மூலம் கண்டறிவது பற்றிய செயல் விளக்கமும் இடம் பெறுகிறது.

இதுபோல் பொது சுகாதாரத்துறை, விவசாய துறை, தொழில் துறை, வணிக வரித்துறை உள்பட பல்வேறு துறைகள் பற்றி இணைய தளம் மூலம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது குறித்த நடவடிக்கை எடுப்பது பற்றி கண்காட்சியில் விளக்கப்படுகிறது. பத்திரப்பதிவு துறை சார்பில் 2 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய தளம் மூலம் இதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்வது எப்படி என்று விளக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் 6 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் நடக்கும் உயர்மட்டக்குழு ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது பற்றியும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி.க்கள் இலவசமாக வினியோகிக்கப்பட உள்ளன.

பார்வையற்றவர்களுக்கு புத்தகம் படிப்பதன் மூலம் ஆகும் நேர விரயத்தை தவிர்க்கவும், புத்தக செலவுகளை குறைக்கவும் கணினி மூலம் படிக்கும் புதிய முறை குறித்து கண்காட்சியில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 200 பக்கம் உள்ள சாதாரண புத்தகம் என்றால் பார்வையற்றவர்களுக்கான புத்தகமாக பிரைலி புத்தகத்தில் 18 ஆயிரம் பக்கம் தேவைப்படும். இதை தவிர்க்க கணினி மூலம் படிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்போனில் தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்புவது, இ.மெயில் அனுப்புவது, ஆங்கில கலைச் சொற்களை தமிழில் மக்கள் தெரிந்து கொள்ள தனியாக அட்டவணை தயாரித்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

....இந்நேரம்.காம் 25.06.2010

nambi
25-06-2010, 03:32 AM
மெல்போர்ன், ஜுன்.25-

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஜுலியா கில்லார்டு என்ற பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் இதுவரை துணைப்பிரதமராக இருந்தார்.

வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் பிரதமராக இதுவரை கெவின் ரூத் இருந்து வந்தார். 53 வயதான அவர் 2007-ம் ஆண்டு முதல் இந்த பதவியில் இருந்து வந்தார். அவர் கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் ஜான் ஹோவர்டுவை பெருத்த வித்தியாசத்தில் தோற்கடித்து பதவிக்கு வந்தார்.

அவரது சில கொள்கைகள் காரணமாக அவருக்கு மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் அவரது ஆதரவு வீழ்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பாராளுமன்ற கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தும்படி துணைப்பிரதமர் ஜுலியா கில்லார்டு கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் பலரும் திரண்டனர்.

போட்டியின்றி தேர்வு

கட்சியின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 112 பேரும் ஜுலியாவுக்கு ஆதரவு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஜுலியா போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பில் தனக்கு தோல்வி ஏற்படும் என்பதால் ரூத் கலந்து கொள்ளவில்லை. அவர் கண்ணீர் வழிய தன் பதவியை ராஜினாமா செய்தார்..

புதிய பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜுலியாவுக்கு கவர்னர் ஜெனரல் குயென்டின் பிரைஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 49 வயதான ஜுலியாவுக்கு சக்தி வாய்ந்த தொழிற்சங்கமும் ஆதரவாக இருந்தது.

ஆஸ்திரேலியா நாட்டில் இப்போது தான் முதல் முறையாக ஒரு பெண் பிரதமர் ஆகிறார்.

....தினத்தந்தி 25.06.2010

nambi
25-06-2010, 03:36 AM
25.06.2010 தமிழ் மாநாட்டின் இன்றைய கூட்டம்...கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம்....தலைப்பு கிளம்பிற்று காண் தமிழர்ச் சிங்க கூட்டம்..............காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு......

மாலை 4 மணிக்கு சிறப்பு கருத்தரங்கம் ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' கலைஞர் மு கருணாநிதி தலைமையில்....நேரடி ஒளிபரப்பு கலைஞர் தொலைக்காட்சியில்........

சிறப்பு பட்டிமன்றம்.....ஒளிபரப்புகளை சன்தொலைக்காட்சி...மற்றும் சென்னை தொலைக்காட்சி நிலையமும் வழங்குகிறது....

ஆதி
25-06-2010, 07:52 AM
கவியரங்கம் கொஞ்ச நேரம் பார்த்தேன், கொஞ்சம் தான் ரசிக்க முடிந்தது.. தமிழன்பன் தமிழ் என்ன ஆனது என்று தெரியவில்லை.. கவியரங்கை துவக்கி வைக்க சொன்ன உற்சாகத்தை சுயத்தை இழந்துவிட்டார் போலும்.. வைரமுத்து வழக்கம் போல வாழ்த்து பாடினார், கொஞ்சம் ரசிக்கும் படியாகவும் இருந்தது அவரின் கவி..

விவேகா விலக்கப்பட்டிருக்க வேண்டியவர், தமிழ் நாட்டில் புலவர்களுக்கு பஞ்சம் இருப்பது விவேகாவை பார்த்த போதுதான் புரிந்தது..

நா.முத்துக்குமாரும் வாழ்த்துபாடும் பட்டியலில் சேர்ந்துட்டார், என்றாலும் பல இடங்களில் ரசிக்க வைத்தார்..

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மறைந்து, எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்றாக்கி கொண்டிருக்கிறாரோ கலைஞர் என்று எண்ண வைத்தது..

கயல்விழி வெங்கடேஷைத்தான் சொல்றேன், அழகிரியின் மகள், இவர் கவிதை வாசித்ததை பார்த்தப்போ சின்ன பிள்ளைங்க பேச்சு போட்டியில் பேசுவாங்களே அது மாதிரி இருந்துச்சு, தலைப்பை விட்டுடு தாத்தாவை பற்றியே பாடிக் கொண்டிருந்தார்.. ஒரு வேளை தா தா எனக்கும் பதவி தா தா னு மறை முகமாய் கேட்டாரோ என்னவோ..

புலவர் முத்தைய்யா வந்தப்பின் கவியரங்கில் தமிழ் நடமாடக் கண்டேன், நடனமும் ஆடக் கண்டேன்.. முத்தைய்யா அவர்களின் கவியை முழுமையாய் சுவைக்க நேரமில்லை, அலுவலகம் கிளம்பிட்டேன்..

nambi
25-06-2010, 09:08 AM
பட்டிமன்றம் பரவாயில்லை...புலவர் அறிவொளி, புலவர் இலங்கை ஜெயராஜ் பேச்சுக்கள், நடுவர் சத்தியசீலன் பேச்சு மற்றும் பேரசிரியர் அரங்க மல்லிகை.... அவர்களின் பேச்சுக்களும் அருமை...

தமிழர் பண்பாட்டுக்கு, வளர்ச்சிக்கு துணை புரிவது.....

சங்க இலக்கியமா? இடைக்கால இலக்கியமா? தற்கால இலக்கியமா?

தீர்ப்பு சங்க்கால இலக்கியமே....

இத்தலைப்புக்கு பங்கு பெற்றவர்கள் இலங்கை ஜெயராஜ், ஆவுடையப்பன்

இடக்கால இலக்கியம்....அறிவொளி, கேசமங்கையர்கரசி

தற்கால இலக்கியம்......பேராசிரியர் அரங்க மல்லிகை, தென்னவன்

nambi
25-06-2010, 09:10 AM
சென்னை: வயதான தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை [^] இதுவே ஆகும்.

சென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.

இவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.

இத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.

இது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் [^] கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.

ஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.

ஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

வயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.


............தட்ஸ் தமிழ் 25.06.2010

nambi
25-06-2010, 09:17 AM
பெட்ரோல் விலை உயர்வு......
பெட்ரோல் லிட்டருக்கு 3.73
டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும்...
சமையல் எரிவாயு உருளைக்கு (சிலிண்டருக்கு) 35 ரூபாய் விலையும்....

மண்ணெண்ணெய் லிட்டருக்கு 3 ரூபாய் விலை உயர்த்த அமைச்சரவை முடுவு செய்துள்ளது.

டீசல் விலை கிரித் பரித் குழு பரிந்துரைத்ததின் படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

....சன்செய்திகள்...25.06.2010 14.05

nambi
25-06-2010, 09:40 AM
சமையல் எரிவாயு உயர்வு அதன் சில்லறை விநியோகத்திற்கு கூடுதலாக டிப்ஸ் 25 லிருந்து 50 ரூபாய் வரை....அடுக்க்கம் மற்றும் தேநீர் கடை என்றால் 100 லிருந்து 150, 200......(விரைவான விநியோகத்திற்கு, கள்ள விநியோகத்திற்கு) ஆக மொத்தம் சாதாரண மக்களுக்கு தற்போதைய விலையோடு 315 + 35 + 25 (டிப்ஸ் குறைந்த பட்சம்) = 375 ஆகா பேஷ் பேஷ்....ஒவ்வொரு (இருப்பவர்) வீட்டிலும் பாத்திரத்தை வைத்து விட்டு செல்லவேண்டியது தான்...பண்டைய காலத்திற்கு, பழைய பண்பாட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம்....பிச்சை இடுவார்களா? இலவசங்கள் வேறு வேண்டாம் என்ற குரல்....

nambi
25-06-2010, 10:40 AM
உலகத்தமிழ் மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் கருத்தரங்கில், டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு.........

மாநாட்டில் பங்கேற்றவர்களில் அதிக கவனத்தை ஈர்த்தவர்...ஜெர்மன் அறிஞர் உல்கிரிஸ் நிக்கோலஸ் (ஜெர்மன் பெண் தமிழறிஞர்)...தமிழிலேயே பேசி அசத்தியவர்....

ஜெர்மன் மெழியை தாய் மொழியாக கொண்ட இவர் 1973 இல் தமிழ் பயில ஆரம்பித்தவர் 1980 இல் முதுகலை பட்டம் (எம.ஏ) தமிழில் பெற்றார்....அதன் பின் ஆரய்ச்சி படிப்பு படித்து முனைவர் பட்டமும் பெற்றார் (பி.எச் டி).....

1980 இல் மூர்மார்க்கெட் எரிந்த பொழுது பல புத்தகங்கள் எரிந்து விட்டதாகவும். அங்கிருந்தே பல புத்தகங்களை வாங்கி சென்று ஜெர்மனியில் தமிழ் நூல்கள் கொண்ட தூலகத்தை நிறுவியுள்ளார். அதில் சுமார் தற்பொழுது 50000 அரிய தமிழ் நூல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மூர்மார்கெட் எரியாமல் இருந்தால் இன்னும் பல நூல்கள் கிடைத்திருக்கும் என்று கூறினார். தமிழ் ஒரு அருமையான மொழி அதற்கு செம்மொழி அந்தஸ்து மிகத்தாமதமாக கிடைத்துள்ளது. என்று கூறினார். தற்பொழுது ஜெர்மன் குளோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராகபணியாற்றிக்கொண்டு வருகிறார். அங்குள்ளவர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு அவர் எடுத்துவரும் முயிற்சிகள் பாராட்டுக்குரியது என இதர அறிஞர் கள் பாராட்டியுள்ளனர். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரை திருமணம் புரிந்து கெண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

(குறிப்பு மூர்மார்க்கெட் வியாபாரிகளை அப்புற படுத்துவதற்காக,.... (அரசு எடுத்த மறைமுக செயல் எம்.ஜி.ஆர் காலத்தில் 1980).... அந்த பழம்பெரும் பாரம்பரிய மார்கெட்டை எரித்ததாக அதிகாரபூர்வமற்றத் தகவல் உண்டு)



மணிப்பூர் மாநில பெண் தமிழறிஞர் சொயப் ரெபிகாதேவி திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். திருக்குற்ளை பிழையின்றி தமிழில் எழுதுகிறார். தமிழ் ஒரு அழகான, மிகவும் தொன்மையான மொழி எனபது முற்றிலும் உண்மை என ஆணித்தரமாக தெரிவிக்கிறார். அதற்கு செம்மொழி தகுதி மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இந்த அறிவிப்பு மிகவும் தாமதமான ஒன்று எனவும் அனைவரும் ஒருசேர தெரிவிக்கின்றனர்.

...ஆதாரம் சன் செய்திகள்...25.06.2010

nambi
26-06-2010, 09:48 AM
திருச்சி: ஒரு மாத கால பரோலில் விடுதலைப் பெற்றுள்ளார் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தண்டனை பெற்ற பிரேமானந்தா.

திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். இவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

இதையடுத்து கடலூர் சிறையில் சாமியார் பிரேமானந்தா அடைத்தப்பட்டுள்ளார்.

இந் நிலையில், சாமியார் பிரேமானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சிறுநீரக கோளாறு, கண்புரை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளது. முன்பு எனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த நோய்களுக்காக கடலூர் சிறையில் உள்ள மருத்துவமனையிலும், கடலூர் அரசு மருத்துவமனையிலும் நான் சிகிச்சை பெற உரிய வசதிகள் இல்லை.

எனவே நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: "இந்த வழக்கில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும் போது, பிரேமானந்தா நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும் 08.05.08, 03.04.09 ஆகிய தேதிகளில் அவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டு உள்ளது.

கடலூர் சிறை மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை வழங்கவும், அவசர மருத்துவ உதவிகள் வழங்கவும் வசதிகள் இல்லை. கடலூர் அரசு மருத்துவமனையிலும் அந்த வசதிகள் இல்லை. ஆனால் பிரேமானந்தாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஆயுள் தண்டனை கைதியாக இருந்தால்கூட முறையான மருத்துவ வசதி பெறுவதற்கு தகுதி உள்ளது. ஆனால் அதை உரிமையாக அவர் கோர முடியாது. சிறை விதிகள் 20ன் படி சிகிச்சைக்காக பரோலில் கைதிகளை அனுமதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அவரது நோயின் தன்மையை கருத்தில் கொண்டால், அவற்றுக்கான சிகிச்சைகள், தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கின்றன. எனவே தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி கேட்டு பிரேமானந்தா கொடுத்த மனுவை இன்னும் ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.

அனுமதிப்பதாக முடிவு செய்தால், 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட வேண்டும். இதை மேலும் நீட்டிக்க வேண்டுமென்றால், மருத்துவ சான்றுகள், அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நீட்டிக்கலாம். எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை பிரேமானந்தா முதலிலேயே குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருத்துவமனை என்று கேட்கக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லக் கூடாது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்புக்காக அனுப்பப்படும் போலீஸ் பாதுகாப்புக்கான செலவை பிரேமானந்தாவே ஏற்க வேண்டும். சிகிச்சை செலவும் அவருடையதே என்று தீர்ப்பளி்த்தார்.

நிபந்தனைகளை பிரேமானந்தா தரப்பு ஏற்றுக் கொண்டது.

.........தட்ஸ் தமிழ் 26.06.2010

nambi
26-06-2010, 09:51 AM
கோவை : செம்மொழி மாநாட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

செம்மொழி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று மாலை, முதல்வர் கருணாநிதி தலைமையில் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற பொருளமைந்த கருத்தரங்கு நடந்தது. பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், தமிழ் பல்வேறு துறைகளில் கோலோச்சி நிற்பது பற்றிப் பேசினர். கருத்தரங்கில் முதலில் பேச உடுமலை லியாகத் அலிகான் அழைக்கப்பட்டார். அவர் தொடங்கியது முதலே முதல்வரை அடுக்குமொழியில் புகழத் துவங்கினார். ஐந்து நிமிடங்கள் வரை புகழாரம் ஓயாததால், உதவியாளரை சைகையில் அழைத்த முதல்வர், மைக்கை வாங்கி, ""லியாகத் அலிகானுக்கு ஒரு கோரிக்கை. கருத்தரங்கில் நான் பேசுவதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆயினும் பலரும் பேச இருப்பதால் இறுதியாக என் கருத்துரையை தொகுத்து வழங்கலாம் என்ற உள்ளேன். தேவைப்படும் போது, இடையில் சில வார்த்தைகளும் சொல்வேன். இங்கு என்னைப் பற்றி புகழ வேண்டாம். கருத்தரங்க தலைவரே என்று மட்டும் அழைத்தால் போதும். யார் அதிகமாக புகழ்வது என்று மனதில் நினைத்துக் கொண்டு போட்டி போட வேண்டாம். வாழ்த்த வேண்டியது தமிழின் பெருமை பற்றித்தான். இடையில் குறுக்கிட்டதற்காக லியாகத் அலிகான் என்னை மன்னிக்க வேண்டும்,'' என வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்துப் பேசிய லியாகத் அலிகான் ""உங்களைப் பாராட்டாமல் பூமியில் யாரும் இருக்க முடியாது. காயிதே மில்லத்தை தேசத்துரோகி என்று சிலர் சொன்னபோது, "அரசியல் நிர்ணய சபைக்கூட்டத்தில் தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என வாதாடியவர் காயிதே மில்லத், அவரை தேசத்துரோகி என சொல்லாதீர்கள்' என, அவருக்காக பரிந்து பேசியவர் நீங்கள். அதனால் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது நன்றி வணக்கம்,'' என்று கூறி அமர்ந்து விட்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தலைப்பு பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

வலசை ராஜேந்திரன், அருந்ததியர் மக்கள் கட்சி: கோவில்களில் சமஸ்கிருதம், இசையில் தெலுங்கு, எல்லையில் இந்தி என பிறமொழி ஆதிக்கம் இருந்த போது, அவற்றை மாற்றி, தமிழில் அர்ச்சனை, தமிழில் கீர்த்தனை, தமிழுக்கு முன்னுரிமை எனக் கொண்டு வந்தது தி.மு.க., அரசு. தற்போது தமிழ் எல்லாத்துறையிலும் வளர்ந்து வருகிறது, என்றார்.
பொன்குமார்: தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பரிதிமாற்கலைஞர் துவக்கி வைக்க, கருணாநிதி முடித்து வைத்தார். எந்த இனம் ஒன்று கூடி கலாச்சாரம், பண்பாட்டை பகிர்ந்து கொள்கிறதோ அந்த இனத்தில் ஒற்றுமை ஓங்கி நிற்கும். மனவளம் சிறப்பாக இருக்க வேண்டும் எனில், கலை வளமும், கலாச்சார வளமும், பண்பாட்டு வளமும் சிறப்பாக இருக்க வேண்டும். இனத்தை அழிக்க வேண்டும் எனில், மொழியை அழித்தால் போதும் என்பர். தமிழ் வளர நாம் ஒன்று கூடி விழா எடுப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று, என்றார்.

திருப்பூர் அல்டாப்: மொழி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., தமிழுக்கு தனி இடம் பெற்றுத்தந்தது. சட்டம், மருத்துவம், கல்லூரியில் தமிழ் வழியில் உயர்படிப்புகள் என அனைத்து நிலைகளிலும் தமிழ் வளர்ந்து வருகிறது. ஆட்சிமொழியாகவும் விரைவில் அறிவிக்கப் படும் என நம்புகிறோம், என்றார்.

தாவூத் மியாகான்: தமிழின் இருண்டகாலத்தின் போது, இஸ்லாமியர்களின் தமிழ்ப்பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று. 20ம் நூற்றாண்டில் மணிப்பிரவாள நடையால் பாதிப்பு ஏற்படும் நிலையில், ஈ.வெ.ரா.,வின் சுயமரியாதை இயக்கம், அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் தமிழுக்கு புதுரத்தம் பாய்ச்சினர். கருணாநிதியும் அவ்வழியே நின்றார். இந்திய அரசியல் நிர்ணயசபை 1949ல் ஆட்சிமொழி குறித்துக் கூடிய போது, தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என வாதிட்டவர் காயிதே மில்லத் தான். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது என்றும் தமிழ் என்று மாற வேண்டும்.

பூவை ஜெகன், புரட்சி பாரதம்: மொழிப்போராட்டத்தின் போது, உயிர் நீத்த தியாகிகளை இங்கு நினைவு கூர வேண்டும். கம்ப்யூட்டரில் தமிழ், கோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ், வர்த்தகத்தில் தமிழ், அலுவல் மொழியாக தமிழ், திரைத்துறையில் தமிழ்ப்பெயர்களுக்கு வரிவிலக்கு, கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் என தமிழ் பல்வேறு துறைகளிலும் வியாபித்து வருகிறது, என்றார்.

காதர்மொய்தீன், இ.யூ.முஸ் லீம் லீக்: இஸ்லாமிய நெறியும், தமிழ் நெறியும் வேறல்ல; இரண்டும் ஒன்றுதான். இஸ் லாமியர்கள் எதைச் செய்தாலும், குரானையும், நபிகளின் மொழியையும் அடிப்படையாகக் கொண்டு செய்வதைப் போல; எல்லாத் தமிழர்களும் எண்ணம், செயல் எல்லாவற்றுக்கும் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் மனதில் இருத்திச் செயல்பட வேண்டும், என்றார்.

ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னேற்றக்கழகம்: திருமண நிகழ்வுகளில் தமிழ், தமிழ் ஆண்டாக தைமாதம் முதல் தேதியை அறிவித்தது, அரசுத்துறைகளில் தமிழுக்கு முன்னுரிமை, இசை, நாடகம்,கலை, அறிவியல், இலக்கியம், சட்டம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் தனக்கான இடத்தைப் பெற்று வருகிறது. அதற்காக பணியாற்றி வரும் முதல்வருக்கு நன்றி, என்றார்.

.....தினமலர் 25.06.2010

nambi
26-06-2010, 09:58 AM
கோவை,ஜுன்.26-

கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கொடிசியா வளாகத்தில் பிரமாண்டமான பந்தலில் கடந்த 23-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது.

`எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'

மாநாட்டின் 3-வது நாளான நேற்று மாலை, ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்து "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள். கே.வி.தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி, கி.வீரமணி, ஜி.கே.மணி, இல.கணேசன், டி.ராஜா, ஆர்.எம்.வீரப்பன், தொல்.திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், கே.எம்.காதர் மொய்தீன், பூவை ஜெகன் மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், பொன்.குமார், எல்.சந்தானம், எம்.பஷிர் அகமது, வலசை ரவிச்சந்திரன், உடுமலை லியாகத் அலிகான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

சீத்தாராம் யெச்சூரி

மாநாட்டு கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் `செம்மொழி' என்று அறிவிக்கப்பட்டது குறித்து நாங்கள் தனிப்பட்ட முறையில் பெருமை கொள்கிறோம்.

மொழி, சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குகிறது. அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளிலும் அவர்களுக்கிடையே எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் கருவியாகவும் மொழி திகழ்கிறது.

அரசுகள் மிக முக்கியமான பணியை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளன. மும்மொழியைத் திணிக்கும் `நேரு மாடல்' என்ற வலைக்குள் சிக்கிவிடாமல், அந்தந்த மண்ணில் பேசப்படும் மொழிகளின் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். குறுகிய மொழி வெறி மனப்பான்மையால் இதை சாதிக்க முடியாது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுவதோடு அந்த மொழிகள் தழைத்தோங்கி வளர சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இன்றைய உலகில் எந்தவொரு மனிதனும் தன்னை தனித்த அடையாளத்துடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய சூழலில் பன்முக அடையாளத்தை பேண வேண்டியுள்ளது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

டி.ராஜா

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மற்ற செம்மொழிகளுக்கு இல்லாத தனித்துவம் தமிழுக்கு உண்டு. செம்மொழி தகுதிக்கான 11 இலக்கணங்களை தமிழ் நìறைவு செய்துள்ளது. அப்படி இருந்தும் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு ஏன் போராட வேண்டியுள்ளது என்று சிந்திக்க வேண்டும். இணையதள வளர்ச்சி மூலம், சீன மொழியும், கீப்ரு மொழியும் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழியை மீட்டெடுப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

பல்கலைக் கழகத்தில் மற்ற செம்மொழிகளை பயிலும் நிலை வர வேண்டும். அதுபோல மற்ற நாடுகளில் தமிழைக் கற்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை உலகத்தோடும், உலகத்தோடு தமிழையும் இணைக்க வேண்டும். தமிழின் புதிய படைப்புகளை வெளிஉலகிற்கு பரவச் செய்ய வேண்டும்.

நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை வளர்த்தாக வேண்டும். `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பதைப் போல, `இங்கு தமிழ் இதில் தமிழ்' என இலக்கு நிர்ணயித்து, அதை ஒரு காலவரம்புக்குள் அடைய முயற்சிக்க வேண்டும். அதற்கு அரசியல் குறுக்கே இருந்தால் அதை மாற்றவோ அல்லது கருத்து ஒற்றுமை ஏற்படுத்தவோ முயற்சிப்பது பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும். தாய் மொழி என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, அதனை வளர்க்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.

இவ்வாறு டி.ராஜா கூறினார்.

கே.வி.தங்கபாலு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது கூறியதாவது:-

தமிழுக்காக உங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம். இருப்பினும் நான் தமிழ் வளர்ச்சிக்காக சில கோரிக்கைகளை இங்கே வைக்கிறேன்.

ஆரம்ப பள்ளி முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் முதல்பாடமாக இருக்கவேண்டும். அனைத்து தமிழ் ஆசிரியர்கள் பொறுப்புக்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ் பாட நிலைகள் சீர்படுத்தப்படவேண்டும். தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டு துறை தற்போது அரசில் உள்ளது. அது தொடரவேண்டும். தமிழ் மொழிக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும். பிறமொழி சிறப்புகள் தமிழுக்கும், தமிழின் சிறப்புகள் பிறமொழிக்கும் செல்ல வேண்டும்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள வேறுமாநில தமிழர்களுக்கு போதிய தமிழ் கல்வியறிவு புகுத்தப்படவேண்டும். அதேபோல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கல்வி பயில ஏற்பாடு செய்யவேண்டும்.

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்ச் சங்கம் சென்னையில் நிறுவப்படவேண்டும். அதற்கு கலைஞர் தலைவராக வரவேண்டும். உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படுவதை நாம்தான் முடிவு செய்யும் நிலைக்கு வரவேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்ச் சங்க கிளை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சார்பற்ற தலைவர்கள் அதில் பங்கேற்க வேண்டும்.

இனிமேல் கணினி தமிழ்தான் உலகை ஆளும் நிலைக்கு வர இருக்கிறது. அதனால் அறிவியல் தமிழ், கணினி தமிழ் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். மற்ற மொழிகளை விட செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழிக்கு அதிக உரிமைகள் கிடைக்க செய்யவேண்டும்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார்.

ஜி.கே.மணி

கருத்தரங்கில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எல்லா கட்சியினரையும் அழைத்து `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று அறிவிப்பதற்காகவே இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதற்கு பா.ம.க. துணை நிற்கும்.

வெளிநாட்டு தமிழர்கள் தூய தமிழில் பேசுகிறார்கள். தமிழக தமிழன் ஆங்கிலம் கலந்து பேசுகிறான். கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும். இல்லையென்றால் ஆங்கிலத்திலேயே பேசலாம். அரசின் ஆணைகள், கடிதங்கள், சுற்றறிக்கை அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வரவேண்டும். தமிழும், உலக தமிழர்களும் பாதுகாக்கப்பட இந்த மாநாடு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திருமணங்கள் தமிழிலேயே நடத்தப்படவேண்டும். ஆலயங்களில் ''தமிழிலும்'' அர்ச்சனை என்று இருந்ததை ''தமிழில்'' என்று கலைஞரால் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஊடகங்களில் முழுவதும் தமிழில் பயன்படுத்த ஊக்கமளிக்கவேண்டும். அப்படி பயன்படுத்தும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி விளங்குகிறது. அதற்கு மகத்தான ஆதரவு உள்ளது. அதே போன்று அனைத்து தமிழ் ஊடகங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

அண்ணா கண்ட கனவை நனவாக்கும் வகையில் உங்களின் வரலாற்று சாதனையாய் தமிழை ஆட்சி மொழியாக்க முயற்சி மேற்கொண்டுள்ளீர்கள். அதற்கு நாங்கள் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் உற்ற துணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

தாயுள்ளம் கொண்ட தலைவரே தமிழை ஆட்சி மொழியாக்கும் ஆற்றல் உங்களுக்கு மட்டும்தான் உள்ளது. உங்களது தலைமையில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம்.

ஒட்டுமொத்த தேசத்தை ஆண்ட பெருமை ராவணனுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இலங்கையும் இன்று தமிழருக்கு சொந்தமாக இல்லை. தமிழனுக்கு நாதி இல்லையா? தமிழ் இனத்திற்கு வீழ்ச்சி. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனித் தாயகம் அமைத்துத் தாருங்கள். `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற நிலையை அடைவதற்கு உங்கள் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அணிவகுக்கும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இல.கணேசன்

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் பேசியதாவது:-

`எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று இன்னும் அறிவுரையாக சொல்ல வாய்ப்பு என்றில்லாமல், இன்று முதல் இதை அமலாக்கும் செயல்களை தொடங்க வேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு வேண்டுகோளாக சொல்ல விரும்புகிறேன், தமிழில் படிக்கும் மாணவர்கள் உரக்க படிக்க வேண்டும். அப்போதுதான் சரியான உச்சரிப்பு முதல்-அமைச்சரைப் போலவும், கவிஞர் வைரமுத்துவைப் போலவும் வரும்.

மொழியை மட்டும் காப்பாற்றினால் போதாது. உலக தமிழர்களையும் காப்பாற்ற வேண்டும். பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசை வற்புறுத்த ஒரு அமைச்சரை நியமியுங்கள்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

ஆர்.எம்.வீரப்பன்

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசில் ஆட்சி மொழியாக தமிழையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் போராடி, வாதாடி வருகிறார். இப்படி போராடி பல வெற்றிகளை பெற்றவர் அவர். எனவே இதிலும் அவர் பொறுத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நோக்கியே நம் உணர்வுகள், உள்ளம், நோக்கம் அனைத்தும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.

இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் பேசினார்.

கலை நிகழ்ச்சிகள்

தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொல்காப்பியர் அரங்கத்தில் `பிறப்பொக்கும்' என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கூத்துப்பட்டறை முத்துசாமி வழங்கிய `ஆற்றாமை' என்ற நாடகம் நடந்தது. பூவாடி முத்து சாமி குழுவினரின் அண்ணன்மார் கதை என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்காகவும், கண்காட்சிகளை பார்ப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் நாள்தோறும் சாரை சாரையாக வந்துகொண்டிருக்கிறார்கள்.

..........தினத்தந்தி 26.06.2010

nambi
27-06-2010, 03:49 AM
கோவை, ஜுன்.27-

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் கோவை ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உள்பட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

சுதர்சனம் எம்.எல்.ஏ.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.சுதர்சனம் கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். முதல் 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் 24-ந் தேதி நள்ளிரவு அவருக்கு `திடீரென்று' உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அவர், அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக சிறிய ஆபரேசனும் செய்யப்பட்டது.

தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆ.ராசா, ஜி.கே.வாசன், உள்பட பலர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அவரை பார்த்தனர்.

துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு சென்று, சுதர்சனம் எம்.எல்.ஏ.வுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணிக்குமாறு இருதய நிபுணர் டாக்டர் நரசிம்மனுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து டாக்டர் நரசிம்மன் தனது ஐதராபாத் பயணத்தை ரத்து செய்து விட்டு, கோவை மருத்துவமனையில் தங்கி சுதர்சனம் எம்.எல்.ஏ. உடல்நிலையை கண்காணித்து வந்தார்.

மரணம்

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதர்சனம் எம்எல்.ஏ. நேற்று மாலையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென்று சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அதை அறிந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

முதல்-அமைச்சர் அஞ்சலி

சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி விரைந்து சென்று சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி ஆகியோரும் சுதர்சனம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, காந்தி செல்வம், மற்றும் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன்,பொன்முடி,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ஏ.வா.வேலு., தங்கம் தென்னரசு பெரியகருப்பன், சாமிநாதன், மதிவாணன், பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி, முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், எம்.எல்.ஏ.க்கள் காயத்திரி தேவி, பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், ராஜசேகர், விடியல் சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடைய உடல் இன்று சென்னை கொண்டு வரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வாழ்க்கை குறிப்பு

மரணம் அடைந்த டி.சுதர்சனம், 1943-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிறந்தவர். அவருடைய சொந்த ஊர், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, தென்னேரி அருகில் உள்ள பண்ருட்டி கிராமம். ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த சுதர்சனம், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் என கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து படிப்படியாக உயர்ந்தவர்.

கடந்த சட்டசபை தேர்தலில், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதர்சனம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஏற்கனவே 1991, 1996, மற்றும் 2001-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு இவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

67 வயதான சுதர்சனம், பொது சேவை மற்றும் சமூக சேவைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். தமிழ்நாடு செங்கல் ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், தர்மா நாயுடு கல்வி அறக்கட்டளை மற்றும் பூந்தமல்லி நிலவள வங்கியின் தலைவராக பணிபுரிந்தவர்.

திருமணம் ஆன அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

.........தினத்தந்தி 27.06.2010

nambi
27-06-2010, 03:55 AM
வாஷிங்டன்: அணு ஆயுதத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் மீது பொருளாதாரத் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது அமெரிக்க செனட்.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணுஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவை சமீபத்தில் பொருளாதார தடை விதித்தன.

இந்நிலையில், அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, ஈரானுக்கு கேசோலின் வினியோகிக்கும் கம்பெனிகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உதவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்கா எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று இந்த மசோதா கூறுகிறது.

இதனால் ஈரானுடன் தொடர்புடைய மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரானின் நட்பு நாடுகளும் மறைமுக பொருளாதாரத் தடைக்குள்ளாகியுள்ளன.
...தட்ஸ் தமிழ் 27.06.2010

nambi
27-06-2010, 04:00 AM
மணிரத்னம் இந்தி, தமிழ், தெலுங்கில் இயக்கிய ராவணன்-ராவண் படம் இரு வேறான வசூலைக் கொடுத்து வருகிறதாம். முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் (தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து) ரூ.53 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வட அமெரிக்கா வில் ராவண் திரையிடப்பட்ட திரையரங்குகளில் திருப்திகரமான அளவு கூட்டம் இல்லாததால், வசூலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படம் குறித்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் வெளியாகியும், தியேட்டர்களில் பாதியளவு கூட நிரம்பாததால் இந்த வாரத்துடன் படத்தைத் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் குரு படம் வெளியானபோது, வட அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கு மேல் வசூலானது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட ராவண் வசூலிக்கவில்லை.

இதே நிலை நீடித்தால் இரண்டாவது வாரம் இந்தப் படம் தூக்கப்பட்டு விடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ரசிகர்களில் பலர், இந்தப் படம் 'நவீன ராமாயணமாக' இருக்கும் என நினைத்தே வந்ததாகவும், ஆனால் சொதப்பலான க்ளைமாக்ஸ் மற்றும் விக்ரமின் பாத்திரப் படைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வசூல் எவ்வளவு?:

முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் தமிழ் ராவணன் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு உலகமெங்கும் ரூ.4 கோடியை ஈட்டியுள்ளது. ராவண் இந்திப் பதிப்பு ரூ.38 கோடியை வசூலித்துள்ளது.

இந்திப் படமான ராவணுக்கு வட இந்தியாவில் வரவேற்பில்லை. துவக்க நாளில் 40 சதவீத பார்வையாளர்களே வந்ததாகவும், பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் பாலிவுட் விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.

அவெர்ஸ் ஃபன் சினிமா மல்டிப்ளெக்ஸின் சிஇஓ விஷால் கபூர் கூறுகையில், "எங்கள் திரையரங்குக்கு 25 சதவீத பார்வையாளர்கள்தான் வந்தார்கள். இப்போது இன்னும் மோசம்..." என்றார்.

தமிழகத்தில் ராவணனுக்கு ஓரளவு நல்ல துவக்கம் இருந்தது. ஆனால் படம் குறித்த செய்தி பரவியதும் திங்களன்றே பல திரையரங்குகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளனவாம்.

தெலுங்கில் நிலைமை படுமோசம் என ரிலையன்ஸே ஒப்புக் கொண்டுள்ளது.

....தட்ஸ் தமிழ் 22.06.2010

nambi
27-06-2010, 04:51 AM
செம்மொழி மாநாடு கருத்தரங்கு,,,,சுப வீரபாண்டியன்ர தெடங்கி வைக்க,,,,,,நடிகர் சிவக்குமார் தலைமையில் ,,,,10.30,,
சன் செய்திகள்

nambi
28-06-2010, 02:18 PM
கோவை: கணினிகளில் பயன்படுத்த தமிழ் `யூனிகோட்' எழுத்துருதான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு என்று அரசு அறிவித்துள்ளது.

கணினிகளில் தமிழில் டைப் செய்ய பல்வேறு எழுத்துக் குறியீடுகள் (பான்ட்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் எழுதுவோருக்கும் அதை கணினியில் படிப்போருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைக் களைய உலகின் அனைத்து கணினி மொழிகளையும் ஒன்றிணைக்க யூனிகோட் என்ற எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதற்காக, ஒருங்குறி கூட்டமைப்பு (யூனிகோடு கன்சார்டியம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதில், தமிழுக்கும் குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு அதற்குள் இடம்பெறும் வகையில் அனைத்து தமி்ழ் எழுத்துக்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகெங்கிலும் கணினிகள் ஒரே விதமான தமிழ் எழுத்துருவை டைப் செய்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த `யூனிகோட்' எழுத்துருவை தமிழக அரசு பயன்படுத்துவது பற்றி ஆராய தமிழக அரசு மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்தது.

அதன் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதன் அடிப்படையில் கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார்.

அதில், இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக `8-பிட்' குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யூனிகோடுக்கு (ஒருங்குறி) மாற வேண்டும்.

16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.

எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யூனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யூனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் இணைய கண்காட்சி:

மாநாட்டில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் பேசுகையில்,

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட தமிழ் இணைய கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை எவ்வாறெல்லாம் இணையத்தில் பயன்படுத்த முடியும் என்பதை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி பெரிதும் உதவியுள்ளது. எனவே இது போன்ற தமிழ் இணைய கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

..........தட்ஸ் தமிழ் 28.06.2010

nambi
28-06-2010, 02:21 PM
கோவை, ஜூன் 27: குழந்தைகளிடமாவது பெற்றோர் தமிழில் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அவர் பேசியது:

தமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும். ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான். தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.

வழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன. லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் வாழும் மொழி. ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும். அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல. தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.

குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும். வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது. ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒருமொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.

அசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.

தமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும். அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும். கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

புதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல. மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும். லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இலக்கியத் தமிழ் போன்று, மருத்துவத் தமிழ், சட்டத் தமிழ், பொருளாதாரத் தமிழ், மேலாண்மைத் தமிழ், அறிவியல் தமிழ், தொல்லியல் தமிழ், கணினித் தமிழ் என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.

நான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை. தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.

நூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள். பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள். பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.

நூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம். முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும். நூலாசிரியருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தர வேண்டும். பதிப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு லாபமாகவும் தர வேண்டும்.

ஒரு நூலுக்கு ரு.10 லட்சம் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். தமிழக அரசுக்கும் தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும். இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.

....தினமணி 27.06.2010

nambi
28-06-2010, 02:27 PM
ஜோகனஸ்பர்க்,ஜூன் 28:ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கோல் மறுக்கப்பட்டது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் கருத்துக்கூற மறுத்துவிட்டது.
.
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி மோதிய நாக்அவுட் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜெர்மனி 41 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் இந்த போட்டியின்போது 38வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லம்பார்ட் கோல் அடித்தார். அவர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு கோட்டை தாண்டி உள்ளே சென்றது. அப்போது ஜெர்மனி கோல் கீப்பர் பாய்ந்து அந்த பந்தை பிடித்தõர்.

எனினும் கோட்டை தாண்டிய பிறகே அந்த பந்தை பிடித்தார். இருப்பினும் உருகுவே நடுவர் லாரியோண்டா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இங்கிலாந்துக்கு கோல் கிடைக்கவில்லை. இது இங்கிலாந்து வீரர்களை மிகுந்த ஆவேசத்தில் ஆழ்த்தியது.

இந்த கோல் கொடுக்கப்பட்டிருந்தால் இரண்டு அணிகளும் 22 என சமநிலை பெற்றிருக்கும். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா கருத்துக்கூற மறுத்து விட்டது.

ஆட்டத்தின் போது நடுவர்கள் எடுக்கும் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்பது சம்மேளனத்தின் கொள்கை என்று பிஃ பா தெரிவித்துள்ளது. மேலும் நடுவர் முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை என கால்பந்து விதிகள் குழு முடிவு செய்திருப்பதையும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

.....மாலைச்சுடர்

nambi
28-06-2010, 02:36 PM
புதுடெல்லி, ஜுன்.28-

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாடு தழுவிய முழு அடைப்பு (பந்த்) நடத்த முடிவு செய்துள்ளன.

போராட்டம்

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

`பாரத் பந்த்'

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வற்புறுத்தியும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி நாடு தழுவிய முழு அடைப்பு (`பாரத் பந்த்') போராட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அது குறித்து பிரகாஷ்கரத் (மார்க்சிஸ்ட்கம்ïனிஸ்டு), ஏ.பி.பரதன் (இந்தியகம்ïனிஸ்டு), முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி), நிதின்கட்காரி (பா.ஜனதா), சந்திரபாபு நாயுடு (தெலுங்குதேசம்) உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் சரத்யாதவ் பேச்சு நடத்தி வருகிறார்.

கோஷம்

அகில இந்திய கட்சிகளுடன் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க கட்சிகளையும் இந்த போராட்டத்தில் ஒருங்கிணைத்துக் கொள்ளவும், முலாயம்சிங் யாதவ் மூலம் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து அல்லது ஆட்சியை விட்டு வெளியேறு'' என்ற கோஷத்தை முன்வைத்து நடைபெற இருக்கும் இந்த `பாரத் பந்த்', பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து பங்குபெறும் வகையில் வெகுஜன போராட்டமாக அமையும் என்று, மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒருமித்த கருத்து

நாடு தழுவிய `பாரத் பந்த்' நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இடையே ஒரு மித்த கருத்து உருவாகி வருவதாகவும், எந்த தேதியில் `பந்த்' நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் சரத் யாதவ் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து `பாரத் பந்த்' நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இடதுசாரி கட்சிகள் 2 நாட்களுக்கு முன்னதாகவே பந்த் அறிவித்துவிட்டதால், பாரத் பந்த் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.....தினத்தந்தி 28.06.2010

nambi
29-06-2010, 11:09 AM
சென்னை: தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் வரவேற்கப்படக் கூடியதுதான். ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படாது. ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^] கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

தற்பொழுது அரசாங்கத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லை. ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்.

ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? அரசுத் தொழிற்சாலைகளின் பங்கு தனியாருக்கு விற்கப்படுகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று தனியார் துறை வளர்க்கப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம், தற்பொழுது கொண்டு வரப்படவுள்ள சட்டம் தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்மொழி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. ஆரம்பம் முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று வற்புறுத்தி வந்தவர் முதல்வர் கருணாநிதி.

தமிழ் ஈழம்-ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?:

தமிழின வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இனப்படுகொலை இலங்கையில் நடந்த பிறகு இந்த கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இன்று இனப் படுகொலைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் [^], தங்களுக்கென ஒரு தாயகத்தை ஏற்கனவே பெற்றுள்ளனர். அதை தக்க வைக்கும் வகையில் எதிர்காலத்தில் தமிழினப் பாதுகாப்பிற்கு அவர்கள் கோரும் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர வேண்டும் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?

பழ.கருப்பையா வீடு புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டையும், காரையும் சேதப்படுத்தி கொலை வெறி மிரட்டல் விடுத்துள்ளனர். இது என்ன நியாயம்? பழ. கருப்பையாவின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
....தட்ஸ் தமிழ் 29.06.2010

nambi
29-06-2010, 11:12 AM
திரையுலகில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனைப் போற்றும் வகையில், கமல்ஹாசன் நினைவுகள் என்ற பெயரில் பிரமாண்ட விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் எடுக்கிறது. ஜூலை 2ம் தேதி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் மாலை 6.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.

விழாவின் தொடக்கமாக ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், சாகர சங்கமம், தசாவதாரம் மற்றும் நாயகன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

இதுதொடர்பாக தகவல் ஒலிபரப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 வயதில் நடிக்க வந்து தற்போது 55 வயதாகியும் தொடர்ந்து பிரகாசமான முறையில் நடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு என்பது மிகவும் அரிய ஒன்ராகும். உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படம் மூலமாக தனது 4வது வயதில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நடிக்க வந்தார்.

அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை முழுவதும், நல்ல திரை ரசிகராகவும் இருந்து வருகிறார்.

அவர் இந்தியத்திரைப்படத்துறைக்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவித்து பாராட்டும் வகையில், 1990ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கமல்ஹாசன் இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள், 3 நந்தி விருதுகள் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அவர் நடித்த மூன்றாம் பிறை, நாயகன், சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், சாகர சங்கமம், சாகர், சத்மா, விருமாண்டி உள்ளிட்ட திரைத் துறைக்கு கமல்ஹாசன் அளித்த சிறந்த படைப்புகளில் சில.

1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் அவரது நடிப்பை டைம் பத்திரிக்கை வெகுவாக பாராட்டியிருந்தது.

கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பணியாற்றி வரும் கமல்ஹாசனின் சேவைகளைப் பாராட்டி மத்திய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் 3 நாள் கமல்ஹாசன் திரைப்படங்களின் நினைவுகள் என்ற பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவை அமைச்சர் [^] அம்பிகா சோனி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த விழாவுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.....தட்ஸ் தமிழ் 29.06.2010

nambi
29-06-2010, 11:18 AM
அடுத்த மாதம்
ஆஸ்திரேலியாவில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் கலை நிகழ்ச்சி
ஆங்கிலம் கலவாத தமிழ் செம்மொழி பாடல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன


சென்னை, ஜுன்.29-

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கவிஞர் வைரமுத்துவின் செம்மொழி தமிழ் பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வைரத்தில் முத்துகள்

சுமார் 7 ஆயிரம் திரைப்படப் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அவற்றில் ஆங்கிலச் சொல் கலவாத, செம்மொழிப் பாடல்கள் மட்டும் இடம் பெறும் மாபெரும் கலை நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `வைரத்தில் முத்துகள்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கலை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.

மேலும், நடிகர் விவேக், பின்னணி பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, சுவேதா மேனன் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். செம்மொழிப் பாடல்கள் பிறந்த பின்னணியை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதைத் தொடர்ந்து பாடல் பாடப்படும். அவருடைய முதல் பாடலான `பொன்மாலைப் பொழுது' பாடல் முதல் `உசுரே போகுதே' பாடல் வரை 40 பாடல்கள் பாடப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஜுலை 3-ந் தேதி மாலை 7 மணிக்கும், மெல்போர்ன் நகரில் ஜுலை 4-ந் தேதி மாலை 6 மணிக்கும் இந்த கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

நடிகர் விவேக் நாடகம்

இந்த கலை நிகழ்ச்சியில், `வைரமுத்துவின் ரசிகை' என்ற குறு நாடகத்தை நடிகர் விவேக் குழுவினர் நடித்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் உள்ள சரிந்தா அறக்கட்டளை சார்பாக ஏ.வி.மோகன் ஏற்பாடு செய்து வருகிறார். சென்னையை சேர்ந்த சாய் சக்தி மகாராஜன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

இலங்கையில் வாழும் தமிழ் குழந்தைகளின் நல நிதிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, 30-ந் தேதி அன்று தனது குழுவினரோடு ஆஸ்திரேலியாவுக்கு வைரமுத்து புறப்படுகிறார். அடுத்த மாதம் 8-ம் தேதி அன்று சென்னை திரும்புகிறார்.

....தினத்தந்தி..29.06.2010

nambi
30-06-2010, 04:41 AM
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாயினர்.

நேற்று மாலை நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தில் மலைபபாங்கான பஸ்தர் வனப் பகுதியில் தவுரை ரோடு என்ற இடத்தில் சாலைகளில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையில் 70 மத்திய ரிசர்வ் போலீசார் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்கள் சோதனையை முடித்துவிட்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள தங்களது முகாமுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மலை உச்சியில் பதுங்கியிருந்த சுமார் 200 நக்ஸல்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் மத்தியப் படையினர் மீது சரமாரியாக சுட்டனர்.

படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. தகவல் அறிந்து, வேறு பகுதிகளில் இருந்து போலீசாரும் மத்தியப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

மலை உச்சியில் இருந்தபடி சுட்டதால் நக்ஸல்கள் கை ஓங்கியது. இந்த மோதலில் 26 ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து நக்ஸல்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டனர்.

மேலும் சட்டீஸ்கர் போலீஸ் படையின் 4 போலீஸ் அதிகாரிகள், 3 ரிசர்வ் படை போலீசார் படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஜக்தல்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்ன. பலியான படையினரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த மாநிலத்தில் சமீப காலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள 3வது பெரிய தாக்குதல் இதுவாகும்.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி, தண்டேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 மத்திய ரிசர்வ் படை போலீசாரும், ஒரு மாநில போலீஸ்காரரும் பலியாயினர்.

மே 8ம் தேதி, நாராயண்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்துச் சிதறி 8 ரிசர்வ் படை போலீசார் பலியாயினர்.

இந் நிலையில் நேற்று 26 ரிசர்வ் போலீசார் பலியாகியுள்ளனர்.

....தட்ஸ் தமிழ் 30.06.2010

nambi
30-06-2010, 04:46 AM
தமிழ்நாட்டில் 21 பேர் பாதிப்பு
பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி


சென்னை, ஜுன். 30-

"தமிழ்நாட்டில் 21 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மீண்டும் பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல் எனும் உயிர்கொல்லி நோய் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் திடீரென பரவி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டது. இடையில் இந்த நோயின் தாக்கம் கட்டுப்பட்டு இருந்தது. மீண்டும் இப்போது பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உள்ளது.


தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில்...

கேரளா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற செய்தி கிடைத்ததும் தமிழக அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. சென்னை கோட்டையில் இன்று காலையிலும் தொடர்ந்து மாலையிலும் என் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

கேரளா எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களில், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தனிவார்டுகளில் சிகிச்சை

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேருக்கும், சென்னையில் 3 பேருக்கும், திருவள்ளூரில் 2 பேருக்கும், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவரும் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவுக்கு `டாமி புளு` மாத்திரையும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருந்தால், உடனுக்குடன் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் ரத்தம், சளி போன்றவற்றை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக காய்ச்சல், இருமல், தொண்டை சளி, உடம்பு வலி, தொடர்ச்சியாக கண்களில் எரிச்சல் இருப்பவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பீதியை கிளப்பவேண்டாம்

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து உள்ளது. யாரும் பீதியைக் கிளப்பவேண்டாம். நோயின் தன்மை கடந்த ஆண்டைக்காட்டிலும் வீரியம் குறைந்து உள்ளது. இருந்தபோதிலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடிக்கவேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சோதனை மேற்கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கலாம். மக்கள் பீதி அடையவேண்டாம். நோய் பரவிவிடுமோ என்று மற்றவர்களை குழப்பவும் வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

.......தினத்தந்தி 30.06.2010

nambi
30-06-2010, 05:00 AM
சென்னை, ஜூன் 29: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ. படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரூ.32,500 கட்டணமும் ரத்து செய்யப்படாமல், அதில் 20,000 மட்டுமே ரத்து செய்யப்படவுள்ளது.

அதே போல் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.2,000 மட்டுமே ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்விக் கட்டணம் என்றால் அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.7,550 என்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.32,500 என்றும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் நினைக்கின்றனர்.

இந்தக் கட்டணங்களில் நுழைவுக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம், சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களும் அடங்கும் என்பதை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

அதனால், பி.இ. படிப்புகளில் சேரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் ரூ.2,000-மும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ரூ.20,000-மும் கல்விக் கட்டணமாகக் கணக்கிடப்பட்டு, அந்தத் தொகை மட்டுமே ரத்து செய்யப்படவுள்ளன.

எனவே, முதல் தலைமுறை மாணவர்கள் இந்தக் கட்டணம் போக மீதி கட்டணத்தை செலுத்த வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பி.இ. இடங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ.32,500 கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி குழு நிர்ணயித்துள்ளது. சுயநிதி கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை அதிகப்படுத்தி கேட்டு கோரிக்கை வைக்கக் கூடாது; இந்தக் கல்விக் கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

தவிர, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ.32,500-ஐ மட்டுமே வசூலிக்க வேண்டும்; அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு வலியுறுத்தியது.

அதனால், முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று அரசு அறிவித்தவுடன், கல்விக் கட்டணம் என்றால் ரூ.32,500 தான். எனவே அதைச் செலுத்தத் தேவையில்லை என்று முதல் தலைமுறை மாணவர்கள் நினைத்தனர்.

இந்த நிலையில், கட்டணத்தில் ரூ.20,000 மட்டுமே ரத்து செய்யப்படும்; மீதியுள்ள கட்டணம் ரூ.12,500-ஐ மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிந்தவுடன் முதல் தலைமுறை மாணவர், அவர்களது பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

பி.இ. படிப்புகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 5,000 பேர்தான் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்; பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் சேரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது; இதைத் தொடர்ந்தே 2010-11-ம் ஆண்டில் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு பெருமையுடன் கூறியது.

இதனால் சுயநிதி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.20,000-ம் தான் கட்டணச் சலுகையாக கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மாணவர்கள் உள்ளனர்.

இது தவிர, முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க ரூ.5,000 கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறுகிறது.

முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பி.இ. கலந்தாய்வுக் கட்டணம் ரூ.5,000 வசூலிப்பது, ரூ.32,500 கட்டணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக ரூ.20,000-ஐ மட்டுமே கல்விக் கட்டணமாகக் கணக்கிட்டு, ரத்து செய்வது போன்றவை முதல் தலைமுறை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
...தட்ஸ் தமிழ் 30.06.2010

nambi
30-06-2010, 01:10 PM
வேலூர்: வேலூரில் அடிப்படை வசதிகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 70 பள்ளிகளை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கணக்கெடுத்த கல்வித்துறை அதிகாரிகள் 70 பள்ளிகள் இதுபோல செயல்பட்டு வருவதை அறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். நேற்று வரை அவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. அதற்குள் உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்தப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் நேற்றுடன் காலக் கெடு முடிவடைந்த நிலையில் இதுவரை எந்தப் பள்ளியும் இவற்றைச்செய்யவில்லை. இதையடுத்து இன்று அந்தப் பள்ளிகளை மூடி சீல் வைக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் படித்து வரும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

....தட்ஸ் தமிழ் 30.06.2010

nambi
30-06-2010, 04:36 PM
வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவ்யேந்து சின்கா (49) அமெரிக்கா வில் சீமென்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிட்ஜ் பெலா டிரைவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது 2 மகன்களுடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 வாலிபர்கள் திவ்யேந்து சின்காவையும், அவரது மகன்களையும் அடித்து உதைத்தனர்.

படுகாயடைந்த மூவரும் நியூ பர்ன்ஸ்விக்கில் உள்ள ராபர்ட் உட் ஜான்சன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், திவ்யந்து சின்கா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மூவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களது விவரத்தையும் தாக்குதலுக்கான காரணத்தையும் போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

அவர்கள் மிடிலசெக்ஸ் கவுன்டி சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது இனவெறித் தாக்குதலா என்று தெரியவில்லை. முழு விசாரணை முடிந்த பிறகே எந்த தகவலும் சொல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐஐடி காரக்பூரில் படித்த திவ்யேந்து அமெரிக்காவின் ஸ்டேடென் ஐலென்ட் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். ஹோபோகேனில் உள்ள ஸ்டீவன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி பட்டம் பெற்ற இவர் கம்ப்யூட்டர் இமேஜிங் தொடர்பாக பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.

....தட்ஸ் தமிழ், தினகரன்...30.06.2010

nambi
01-07-2010, 05:23 AM
கோகிமா, ஜுலை.1-

நாகலாந்து மாநில உள்துறை மந்திரி இம்கோங் எல் இம்சென். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனிப்பட்ட பயணமாக பக்கத்து நாடான நேபாளம் நாட்டுக்கு சென்று இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தார்.

அவர் அந்நாட்டின் தலைநகரான காட்மாண்டு விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இந்திய நாட்டின் பணமான ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுகள் வைத்திருந்ததாக அவரை நேபாள நாட்டு விமானநிலைய அதிகாரிகள் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி நாகலாந்து தலைமைச்செயலாளர் லால்தாரா கூறுகையில், "மந்திரி கைதானது பற்றி மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. காலையில் கைது செய்யப்பட்ட மந்திரி பிற்பகல் 3.30 மணிக்கு விடுவிக்கப்பட்டு டெல்லி திரும்பினார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கனவே திரும்பிவிட்டார்கள்'' என்றார்.

......தினத்தந்தி 01.07.2010

nambi
01-07-2010, 05:59 AM
காஞ்சிபுரம், ஜூன் 30: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

÷இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சு.சிவராசு வெளியிட்ட அறிக்கை:

÷தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மேற்கண்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி சிறப்புக் கட்டணம், திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை அரசு நிர்ணயித்த அளவிலும் மற்றும் தேர்வு கட்டணங்கள் முழுமையாகவும் அளிக்கப்படும்.

÷மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

÷அவரது குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இலவச கல்வி திட்டத்தின் கீழ் படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர திரும்ப பெற இயலாத கட்டணங்கள் வழங்கப்படும்.

÷மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இதே நிபந்தனைக்கு உள்பட்டு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

÷அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்களிலும் இதே நிபந்தனைக்கு உள்பட்டு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

÷மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து இலவசமாகப் பெற்று உரிய சான்றுகளுடன் அந்தந்த கல்வி நிலையங்களில் அளிக்க வேண்டும். புதுப்பித்தல் உதவித் தொகைகளை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், புதி உதவித் தொகைகளை வரும் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள்ளும் அளிக்கலாம்.

÷மேலும் விவரங்கள் அறிய தத்தமது மாவட்டங்களிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

....தினமணி 01.07.2010

nambi
01-07-2010, 12:52 PM
ஜோஹன்னஸ்பர்க் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் காலிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

தென் ஆப்பிரி்ககாவில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் சுற்றுப் போட்டிகள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் முடிந்து விட்டன.

இதையடுத்து பிரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, உருகுவே, ஜெர்மனி , பராகுவே, கானா ஆகிய எட்டு அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன.

இவற்றுக்கிடையிலான காலிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பிரேசிலும், நெதர்லாந்தும் மோதுகின்றன.

2வது போட்டியில் உருகுவேயும், கானாவும் மோதுகின்றன.

நாளை மறு நாள் சனிக்கிழமை நடைபெறும் போட்டிகளில் முதலில் அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் மோதும் போட்டி நடைபெறுகிறது.

2வது போட்டியில், பராகுவேயும், ஸ்பெயினும் மோதவுள்ளன.

இந்தப் போட்டித் தொடரில் விறுவிறுப்பான ஆட்டத்தை ஏற்படுத்திய அணி நெதர்லாந்து. எனவே நாளை பிரேசிலுடனான அதன் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரேசில்தான் வெல்லும் என கணித்துள்ளனர். ஆனால் நெதர்லாந்து ஆச்சரியப்படுத்தினாலும் சொல்வதற்கில்லை.

நெதர்லாந்தைப் போலவே சத்தமில்லாமல் கலக்கிய இன்னொரு அணி கானா. இந்த அணி, முன்னாள் சாம்பியன் உருகுவேயுடன் நாளை மோதுகிறது. இந்தப் போட்டியிலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி என்றால் அது அர்ஜென்டினா - ஜெர்மனி இடையிலான போட்டிதான். இரு ஜாம்பவான் அணிகள் மோதவுள்ளதால் இந்தப் போட்டியில் பட்டாசு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்து போட்டிகளை விட நாளை முதல் நடைபெறப் போகும் போட்டிகள்தான் பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இப்போதே துடிப்புடன் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

.....தட்ஸ் தமிழ் 01.07.2010

nambi
01-07-2010, 03:05 PM
புதுதில்லி, ஜூலை.1: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் யாரிடம் இருப்பது என்பது குறித்து முடிவு செய்ய ஜூலை 5}ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவிக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ள 80 வயதான பெர்ணான்டûஸ அவரது மனைவி சரிவர கவனிக்கவில்லை எனக் குறிப்பிட்டு அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பெர்ணான்டஸின் சகோதரர்கள் ரிச்சர்ட் மற்றும் மைக்கேல் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பெர்ணான்டஸின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய அவரை ஜூலை 5}ம் தேதி மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவரது மனைவி லீலா கபீருக்கு உத்தரவிட்டது.

இவ்விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்காமல் பெர்ணான்டஸின் உடல்நிலை குறித்து மட்டுமே தான் கவனத்தில்கொண்டுள்ளதாக நீதிபதி வி.கே.ஷாலி விசாரணையின்போது தெரிவித்தார்.

....தினமணி 01.07.2010

nambi
02-07-2010, 04:55 AM
சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார்.

இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவர் தன் குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வருகிறார். ஆட்டோ டிரைவர்களான 2-வது மகன் மணியும், 3-வது மகன் ஜெகனும் புரசைவாக்கம் பெருமாள்பேட்டையில் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள்.

ஆதிலட்சுமி இவர்களோடு தங்கி 2 மகன்கள் வீட்டிலும் முறைவைத்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் 2 மகன்களும் சேர்ந்து வீட்டை விட்டே துரத்திவிட்டனர்.

இதையடுத்து போக்கிடம் இல்லாமல் பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் வயதான பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அறிவித்திருந்ததை கேள்விபட்டார்.

இதையடுத்து தனது மகன்கள் மீது நேற்று வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த இரு மகன்களும், இனிமேல் தனது தாயாருக்கு ஒழுங்காக சாப்பாடு கொடுத்து அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக போலீசாரிடம் உறுதி கொடுத்துள்ளனராம்.
....தட்ஸ் தமிழ் 01.07.2010

nambi
02-07-2010, 05:09 AM
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும், சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாலும், அப்பாவி பொது ஜனங்கள் எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாத 'எவர்கிரீன் சூப்பர் ஸ்டார்' சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.


அந்தக் காலத்தில் வீட்டுக்கு நாலு சைக்கிள்கள் நிற்பதைப் பார்க்கலாம். காலையில் எழுந்ததும் கை வலிக்க சைக்கிளைத் துடைத்து, ஆயில் விட்டு, பெடலை விர்ரென வேகமாக சுற்றி டிரையல் பார்த்து, பிரேக் பிடித்துப் பார்த்து, பெல் அடித்துப் பார்த்து எல்லாவற்றையும் பக்காவாக பார்த்து விட்டு, ரோட்டில் இறங்கி, பெடலை அழுத்தி ஜம்ப் செய்து ஏறி அமர்ந்து ஓட்டும் சுகமே தனிதான்.

கிராமப் புறங்களில், சைக்கிள்களின் ஹேன்ட் பார்களில், குஞ்சம் கட்டி விட்டு, குஜாலாக ஓட்டுவதைப் பார்க்கலாம்.

சைக்கிள் ஒரு வாகனமாக மட்டும் இல்லாமல், சிறந்த உடற்பயிற்சி சாதனமாகவும் உள்ளது. கலகலவென ஓடிக் கொண்டிருந்த சைக்கிள்களின் மவுசு நாளாக ஆக குறைந்து போயின.

மொபட்டுகளும், மோட்டார் சைக்கிள்களும், பின்னர் கார்களும், சைக்கிள்களை ஓவர்டேக் செய்து விட்டன. இருந்தாலும் நம் வீட்டு 'பெருசுகள்' ஓட்டி ஓய்ந்த சைக்கிள்கள் இன்றும் பழைய நினைவுகளை நமக்கு நினைவூட்டியபடி இருப்பதை பல வீடுகளில் காணலாம்.

இப்படிப்பட்ட சூப்பர் வாகனமான சைக்கிள்களுக்கு இன்று மீண்டும் மவுசு பெருகியுள்ளது. ஓடி விலகிப் போனவர்கள் கூட இன்று சைக்கிள்களை நாடி போக ஆரம்பித்துள்ளனர். காரணம் - பெட்ரோல்!.

தாறுமாறாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக வண்டியை ஓட்டுவதா, உருட்டுவதா என்ற குழப்பமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் பிரீமியர்தான், பவர்தான் என்று பெட்ரோல் பங்குகள் கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்துள்ளதால், நடுத்தர வர்க்க மக்களின் அடிப்படை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து மீண்டும் சைக்கிள்களுக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். மாணவ, மாணவியர், குறைந்த தூரத்தில் அலுவலகங்களைக் கொண்டிருப்போர், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்போது சைக்கிள்களுக்கு மாறி வருகின்றனர்.

இரண்டாம் நிலை நகர்ப் பகுதிகளில் தான் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது.



சைக்கிள்களின் விலையும் பொருளாதாரத்திற்கு உகந்ததாக உள்ளதாலும், பராமரிப்பு செலவு சுத்தமாக குறைவு என்பதாலும் சைக்கிள்கை மக்கள் நாட ஆரம்பித்துள்ளனர்.

பெரிய சைக்கிள்களின் விலை ரூ.2500 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது. பேன்சி சைக்கிள்களைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். ஸ்டான்டர்ட் ரக சைக்கிள்களும் கூட நன்றாகவே விற்கின்றன.
..................


சென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பெல்லாம் சைக்கிள்களை அதிகம் காண முடியாது. அதற்கென பெரிதாக இடமும் ஒதுக்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் பைக்குகளுக்கு நிகராக சைக்கிள்களும் அதிக அளவில் வருவதாக கூறுகின்றனர்.


சென்னை: இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறம் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய கறுப்பு, பச்சை நிறம் வழக்கத்திலிருந்து முழுமையாக அகற்றப்படுகிறது.

ஏழைகளின் வாகனமான சைக்கிள்தான் இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சைக்கிள்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து பெருமளவு உதவுகிறது.


இன்றைக்கு நகர்ப் புறங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் டூ வீலர்கள், கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இந்த வாகனங்கள் ஒளிவெள்ளத்தை பாய்ச்சியபடி பறந்து செல்கின்றன. அந்த நேரத்தில், சிலர் மட்டும் சைக்கிளில் செல்கின்றனர். அப்போது, சைக்கிளின் பின்பக்கம் உள்ள சிறிய டேஞ்சர் லைட் சைக்கிள் செல்வதை பளிச்சென்று காட்டுவதில்லை. இதனால், சைக்கிள்கள் விபத்தில் சிக்குவது சாதாரணமாகிவிட்டது. சிலசமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

பொதுவாக, சைக்கிள்கள் கறுப்பு, கரும்பச்சை, புளூ, சில்வர் ஒயிட் போன்ற நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன. கறுப்பு நிற சைக்கிள்களைத்தான் எல்லோரும் விரும்பி வாங்குகிறார்கள். சைக்கிள்கள் கறுப்பு, பச்சை நிறத்தில் இருப்பதால் இரவு வெளிச்சத்தில் அவை ஒளிர்வதில்லை. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இந்த நிலையில், இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறத்தை மாற்றி பளிச்சிடும் ஆரஞ்சு நிறத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைக்கிள்களின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய தொழில் அமைச்சகத்திடம் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதலும் வாங்கிவிட்டது.

சைக்கிள்கள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் இரவில் பளிச்சென்று தெரியும். இதனால், விபத்துகள் பெருமளவு தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை மத்திய தொழில் அமைச்சகம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. இதேபோல், மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பின்புறம் உள்ள மட்கார்டின் நிறத்தையும் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விதிமுறைகள் உருவாக்குவது மற்றும் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சைக்கிள் தயாரிப்பாளர்களோடு தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தொழில்கள் அமைச்சக அதிகாரிகளும், சர்வதேச சாலை போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகளும் ஜுலை 5-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சைக்கிள்களின் நிறம் மாற்றம் தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய தொழில் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.....தட்ஸ் தமிழ்

nambi
02-07-2010, 04:32 PM
சென்னை : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் பயங்ரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலின் போது உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டம் சிறியூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஆகிய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கக்கோரி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கார்கில் நிவாரண நிதியிலிருந்து இந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

....தினமலர் 02.07.2010

nambi
02-07-2010, 04:56 PM
சென்னை : சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல் தமிழ் மொழியில் கையெழுத்து போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கவும், காப் பாற்றவும் பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை பல்கலைக் கழகம் முதற்கட்டமாக சில முயற்சிகளை மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.இன்று முதல் சென்னை பல்கலை வளாகங்களின் பெயர் தமிழில் மாற்றப்படும். சேப்பாக் கம் வளாகம் தொல்காப்பியர் வளாகம் எனவும், மெரீனா வளாகம் பரிதிமாற் கலைஞர் எனவும், தரமணி வளாகம் மறைமலையடிகள் எனவும், சேத்துப் பட்டு வளாகம் சேக்கிழார் எனவும், மதுரவாயல் வளாகம் கம்பர் எனவும், கிண்டி வளாகம் பாரதியார் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும். பிஎச்.டி., ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்துடன், தமிழிலும் மொழி பெயர்த்து சமர்ப் பித்தால், மொழி பெயர்ப்பிற்காக 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். துணைவேந்தர் தலைமையில் ஐந்து பேர் குழு, தமிழ் மொழிபெயர்ப்பை பரிசீலித்து இந்த உதவித் தொகையை வழங்கும்.

செம்மொழித் தமிழ் வழி ஆராய்ச்சி உதவித் தொகை புதிதாக உருவாக்கப்படுகிறது. இதில் பிஎச்.டி., ஆராய்ச்சியை தமிழில் மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுதோறும் அறிவியல் பாடத் தில் 15 பேருக்கும், கலைப் பாடத் தில் 10 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பை இந்த ஆண்டு துவங்க விரும்பினாலும், அக்கல்லூரிகளுக்கு உடனடியாக ஆய்வு நடத்தி அனுமதி வழங்கப்படும். கல்லூரிகளில் வழங்கப்படும் படிப் பிற்கு பல்கலைக் கழக இணைப்பு பெற, இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். தமிழ் வழி படிப்புகளுக்கு இணைப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சென்னை பல்கலைக் கழக ஆட்சி மொழியான தமிழை, நிர் வாகத்திலும் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 5ம் தேதி முதல் சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தமிழில் கையெழுத்திட வேண் டும். தமிழ் மொழியில் கையெழுத்திடாத கோப்புகளை, துணைவேந்தர் பரிசீலிக்க மாட்டார். தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்களும், தமிழில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப் படுவர். செப்., 15ம் தேதிக்குள், அனைத்து துறைகளுக்கும் தமிழ் மொழி மென்பொருள் வழங்கப்படும். அதற்கு முன், தேவையான பயிற்சி கொடுக்கப்படும். ஆவணங்களும், கோப்புகளும் முழுமையாக தமிழ் மொழியில் உருவாக்கப்படும். "தமிழ் லெக்சிகன்' முதல் தொகுதி வரும் டிசம்பருக்கும் வெளியிடப்படும். தமிழ் டிக்ஷனரியில் இடம் பெறாத புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ் ஆர்வலர்கள் புதிய தமிழ் வார்த்தைகளை, ("tamilwordcorpus.unom@gmail.com') என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சென்னை பல்கலை இணையதளத்தை தமிழ் மொழியிலும் உருவாக்க முயற்சி மேற்கொள் ளப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார். முன்னதாக, சென்னை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணனை, துணைவேந்தர் திருவாசகம் பாராட்டினார்.

....தினமலர் 01.07.2010

nambi
02-07-2010, 05:12 PM
சென்னை& மேல்மருவத்தூர்: தமிழகம் முழுவதும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் இன்று ரெய்ட் நடத்தினர்.

மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் கோவிலில் வைத்து பங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்பழகன் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.

...தட்ஸ் தமிழ் 02.07.2010

அமரன்
02-07-2010, 10:34 PM
வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்


இதைப் படிச்சதும் இதைப் பகிரனும் என்று தோணிச்சு,


பெற்றோர் கஷ்டப்பட்டால் பிள்ளைகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப் போவதாக பிரான்சில் பேச்சு அடிபடுது. அதே நேரம் வயசானவங்களுக்குக் கொடுக்கும் இலவசப் பிரயாணம் போன்ற சில சலுகைகளும் நிறுத்தப்படப் போவதகாவும் கதை அடிபடுது.

nambi
03-07-2010, 05:28 AM
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.


இந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.

நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.
பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.

அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
....தட்ஸ் தமிழ் 03.07.2010

nambi
03-07-2010, 10:46 AM
உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்ற கானா அணி, நேற்றைய முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் உருகுவே அணியில்ன ஃபோர்லன் கோலடிக்க சமநிலையானது.

90 நிமிடங்களில் வேறு கோல் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர்கள் உருகுவே கோலை ஆக்கிரமித்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் பந்து உருகுவேயின் கோலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனால் கோலுக்கு அருகே உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ் நின்று கொண்டார். கோலுக்குள் பந்து வந்த போது தனது புறங் கையால் அவர் பந்தைத் தடுத்தார். இதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார். அடுத்த முறை பந்து கோலுக்குள் சென்றபோது பந்தைக் இரு கைகளாலும் தடுத்துவிட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் அந்த நிமிடமே கானா வெற்றி பெற்றிருக்கும்.

கையால் பந்தைத் தடுத்தால், சுவாரேஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியதால், அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

அந்த வாய்ப்பிலும் கானா வீரர்கள் இருமுறை கோலுக்குள் பந்தை அடிக்கத் தவறினர். இதனால், 4-2 என்கிற முறையில் உருகுவே வெற்றி பெற்றது.

.....தினமணி 03.07.2010

nambi
03-07-2010, 12:11 PM
உதகை, ஜூலை 2: நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள ஜூலை 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளதாவது:

சட்டப்பேரவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) தொகுதிகளின் புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல்கள் குன்னூர் மற்றும் கூடலூர் பகுதி கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், உதகை மற்றும் குன்னூர் நகராட்சி அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விவரங்களையும், புகைப்படத்தையும் வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

புகைப்பட வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெ யர் சேர்க்கவும், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், பதிவை நீக்கவும் விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குறிப்பிட்ட படிவங்களில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இதில், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அஞ்சல் நிலையங்களிலும் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

1.1.2010 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, சாதாரணமாக வசிக்குமிடத்தில் தங்களது பெயர் புகைப்பட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களும், தொகுதியை விட்டு இடம்பெயர்ந்தவர்களும் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும். இருப்பிடம் மாறியிருந்தால் வீடு, வீடாக முகவரி சரிபார்ப்பின்போது வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்.

மேலும், புகைப்பட வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்து புகைப்படம் எடுக்க வீடு, வீடாக வந்தபோது புகைப்படம் எடுத்துக் கொள்ளாதவர்கள் அல்லது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கேட்டு காலஅவகாசம் வழங்கியும் கொடுக்காதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய நேர்வுகளில் படிவம் 6ல் முந்தைய முகவரி மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே முகவரி மாறியிருந்தால் தங்கள் முகவரி மாற்றம் குறித்து படிவம் 8 "ஏ’வில் முந்தைய முகவரி மற்றும் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட படிவங்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள இடங்களிலேயே இலவசமாக கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் மட்டுமே சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வரும் 16-ம் தேதி வரை கொடுக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது கள விசாரணை மேற்கொண்டு முடிவு செய்து இறுதிப் புகைப்பட வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

....தினமணி 03.07.2010

nambi
03-07-2010, 12:24 PM
குடியாத்தம், ஜூலை 1: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கோயில் கட்டிய திமுக தொண்டரே வியாழக்கிழமை அவரது சிலையை அங்கிருந்து அகற்றினார்.

கட்சித் தலைமையில் இருந்து வந்த உத்தரவையொட்டி, அவர் சிலையை அகற்றியதாகக் கூறப்பட்டது.

குடியாத்தம் அருகே உள்ள பரதராமி அடுத்த சாமிரெட்டிபல்லி கிராமத்தில், ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் கருணாநிதிக்கு கோயில் அமைத்தார்.

தன் சொந்த நிலத்தில், சொந்த பணம் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டி, அதில் கருணாநிதியின் இரண்டரை அடி உயர மார்பளவு சிலை வைக்கப்பட்டு, அறையின் முகப்பு சுவரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மாவட்டச் செயலர் ஆர். காந்தி ஆகியோரின் படங்களும் பதிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பான செய்தி தினமணியில் புதன்கிழமை (ஜூன் 30) வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தனக்கு கட்டிய கோயிலை அகற்றுமாறு மாவட்டச் செயலர் ஆர்.காந்தியிடம் முதல்வர் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அனுமதியின்றி கட்டிய கோயிலை அகற்றுவதற்காக, குடியாத்தம் வட்டாட்சியர் எம்.வசந்தா, காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.

போலீஸôரும், வருவாய்த் துறையினரும் வருவதையறிந்த ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தான் கட்டிய கோயிலில் இருந்த கருணாநிதி சிலையை துணியால் சுற்றி, வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார். மேலும், அங்கிருந்த கல்வெட்டை உடைத்து, அகற்றினார்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர், ஏதும் செய்யாமல் அங்கிருந்து திரும்பினர். தற்போது கோயில் காலியாகக் காட்சியளிக்கிறது.

.....தினமணி 02.07.2010

nambi
03-07-2010, 12:35 PM
டெல்லியில் ரூ. 9,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உலகின் ஆறாவது மிகப்பெரிய விமான நிலையமாக கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு பரந்துவிரிந்துள்ள இந்த புதிய விமான நிலையம், உலோக தடுப்புகளின் பிடிமானத்துடன் முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள டெல்லி விமானநிலையத்தையொட்டி கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் புதிய டெர்மினல் அல்லது டெர்மினல் 3 என்று அழைக்கப்படும்.

இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் படேல், டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
...வெப்துனியா 03.07.2010

nambi
04-07-2010, 10:13 AM
சென்னை : பத்து நாட்களுக்குள், தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. அக்கூட்டம்தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அடுத்து, செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, அதன் மீது எடுக்கப்பட்ட- எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

- முதல் பொருளாக தமிழக அரசு சார்பில், ஐந்திணை நிலவகைகளில் "பாரம்பரிய மரபணு பூங்காக்கள் (ஜெனிட்டிக் கார்டன்ஸ்) அமைக்கப்படும்'' என்ற அறிவிப்பு பற்றி பேசப்பட்டது.

வேளாண்மைத்துறை செயலாளர் அந்த பொருள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யோடு கலந்து பேசியிருப்பதாகவும், அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்த பூங்காக்களை தொடங்குவதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அதுபற்றிய அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

இலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்திட வேண்டுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அடுத்து பேசப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாமென்று முடிவெடுக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விரிவாக பேசப்பட்டது. இது குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு-மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

- தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானிய தொகையினை வழங்கிட மத்திய அரசை கேட்டு கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து பேசப்பட்டது.

பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எந்த அளவுக்கு செலவு செய்கிறது என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு தேவையான திட்ட குறிப்புகளுடன் தமிழ்மொழிக்கும் கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசை அணுகுவதென்று முடிவெடுக்கப்பட்டது.

- "இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து அடுத்து விவாதிக்கப்பட்டது. இதைப் பற்றியும் மத்திய அரசுக்கு ஏற்கனவே முதல்வர் எழுதிய கடிதத்தை வலியுறுத்தி மீண்டும் நினைவுபடுத்துவதென்றும், இதற்காக முனைவர் ஐராவதம் மகாதேவனின் முயற்சிகளை கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

- கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திட தேவையான திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டுமென்ற தீர்மானம் பற்றியும் பேசப்பட்டது. இது குறித்து இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடமிருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது.

- தமிழகத்தின் ஆட்சி மொழியாக- நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றிட தமிழக அரசுக்கு, அலுவலர்களும், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டுமென்ற தீர்மானம் பற்றி பேசப்பட்டு, அது குறித்து தலைமை செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

- தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து விரிவாக பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை (சட்ட மசோதா) தயாரிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

- தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்'' பெயரில் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

- தமிழகத்தின் பள்ளி- கல்லூரி- பல்கலைக்கழக பாட திட்டங்களில்; "தமிழ் செம்மொழி'' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும் இது குறித்து கேட்டுப்பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

- பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்று மதுரை மாநகரில் தொடங்கப்பெறவுள்ள "தொல்காப்பியர் உலகத்தமிழ் செம்மொழி சங்கம்'' நிறைவேற்றவுள்ள பொறுப்புகள் குறித்த தீர்மானம் பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அடுத்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை தொகுத்து நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளை போல சிதறுண்டு கிடக்கும் தமிழாராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த உரிய திட்டத்தினை தயாரித்து அதற்கான செலவினம் குறித்தும் அறிக்கை அளித்திட தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தரை கேட்டுக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.

- கோவையில் நடைபெற்ற மாநாட்டின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்க செய்யக்கூடிய "செம்மொழிப் பூங்கா'' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை களைய ஒரு மேம்பாலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்ற முடிவு குறித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

- தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும்; பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்திடவும்; அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல் , மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்கு தேவையான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்திடவும், தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டு, இதற்கென ஒரு வல்லுநர் குழுவினை அமைப்பதென்றும், மொழி பெயர்ப்பு பயிற்சி அளித்திட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

- கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக; தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டு உரிய முறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் என்ற முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் இந்த நிதியத்தை உருவாக்கி அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக, அயல்நாடுகளில் வாழும் இந்திய தமிழர்கள் நலன் காக்கவும், அந்நாடுகளில் தேவைப்படும் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் முதல்வரின் நேரடிப்பார்வையில் தனித்துறை ஒன்றை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.....தட்ஸ் தமிழ் 04.07.2010

nambi
04-07-2010, 04:37 PM
அர்ஜென்டினாவை 4 கோல்கள் அடித்து படு தோல்வி அடையச் செய்த ஜெர்மனி அணிக்கு அங்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அங்குள்ள பத்திரிகைகள், டிவிகள் என எதைப் பார்த்தாலும் பாராட்டு மழையாக உள்ளது.

காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில்அபாரமாக வென்று அசத்தி விட்டது ஜெர்மனி. 'பயங்கரமாக' பேசி வந்த மாரடோனாவை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி இந்த முறை வெற்றி பெற்று நான்காவது கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதையே அந்த நாட்டு மீடியாக்களும் பிரதிபலித்துள்ளன.

ஜெர்மனி நாளிதழ் ஒன்று 1954, 1974, 1990... என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மனி கோப்பையை வென்ற ஆண்டுகள் இவை.

தேங்க் யூ ஹீரோஸ் என்ற தலைப்பில் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது பில்ட் ஆம் சோன்டாக் என்ற நாளிதழ். மேலும் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் இருந்தபடி கை அசைத்து ஜெர்மனி வீரர்களை உற்சாகப்படுத்திய படத்தையும் அது பெரிதாக வெளியிட்டுள்ளது.

மேலும், 1-0 முல்லர், 2-0 குளோஸ், 3-0 பிரெட்ரிச், 4-0 குளோஸ், நாம்தான் ஹீரோஸ். உங்களை நாங்கள் மறக்க மாட்டோம். அரை இறுதிக்கு வந்து விட்டோம் என்றும் அந்த செய்தியில் ஜெர்மனி வீரர்களை புகழ்ந்துள்ளனர்.

பெர்லினர் குரியர் என்ற நாளிதழ் அதற்கும் ஒருபடி மேலே போய் வாசகர்களே உங்களது குழந்தைகளுக்கு ஜோகி என பெயரிடுங்கள் என்று கூறியுள்ளது. ஜோகி என்பது ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லோவின் செல்லப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக அர்ஜென்டினாவுக்கு ஆப்படித்து விட்ட ஜெர்மனி அடுத்த இன்னொரு பழிவாங்கலுக்காக காத்துள்ளது. அது ஸ்பெயின். 2008 ஐரோப்பியக் கோப்பை இறுதிப் போட்டியில், ஜெர்மனியை வீழந்த்தி சாம்பியனானது ஸ்பெயின். இதற்கு இப்போது பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்துள்ளதாக ஜெர்மனி கருதுகிறது.

மேலும் பராகுவேக்கு எதிரான போட்டியில், கடுமையாக போராடித்தான் ஸ்பெயின் வென்றது என்பதையும் ஜெர்மனி மீடியாக்கள் குறிப்பிட்டு, இவர்களை வெல்வது நமக்கு கஷ்டமல்ல என்றும் ஜெர்மனி வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

....தட்ஸ் தமிழ் 04.07.2010

பாலகன்
04-07-2010, 05:35 PM
- கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திட தேவையான திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டுமென்ற தீர்மானம் பற்றியும் பேசப்பட்டது. இது குறித்து இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடமிருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது.


இது தான் நான் ரொம்ப நாளாய் மன்றத்தில் கேட்டுகொன்டிருக்கும் விசயம். எனக்கு இந்த தலைப்பின் மீது வெறி என்றே சொல்லலாம்.

செய்திக்கு நன்றி நம்பி

nambi
05-07-2010, 05:05 AM
சென்னை: தமிழகத்தில் பாரத் பந்த்துக்கு 50 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அரசு பஸ்கள், ரயில்கள் ஓடுகின்றன. தனியார் பேருந்துகள் பெருமளவில் ஓடவில்லை. கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளன. பலஇடங்களில் கல்வீச்சு நடந்துள்ளது. சாலை மறியல் போராட்டங்களும் நடந்துள்ளன.

பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடவில்லை. லாரிகள் முழுமையாக ஓடவில்லை. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு டன் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு முக்கிய கட்சிகள் சில ஆதரவு தெரிவிக்கவில்லை. குறிப்பாக பாமக,தேமுதிக பங்கேற்கவில்லை.

தொழிற்கூடங்கள் இயங்கவில்லை

மேலும் வணிகர் சங்கப் பேரவை பந்த்தில் கலந்துகொள்ளாது என அறிவித்திருப்பதால் சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தின் இதர பகுதிகளில், சில பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திருப்பூர், நீலகிரி, கரூர் ஸ்தம்பிப்பு

திருப்பூரில் பந்த் முழு அளவில் உள்ளது. அங்குபெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன.


சென்னையில்..

சென்னையில் அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் பங்கேற்றிருப்பதால் முழு அளவில் பஸ்கள் ஓடவில்லை.

முக்கியச் சாலைகளில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. பெருமளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

புறநகர்ப் பகுதிகளில் பெருமளவிலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

40,000 லாரிகள் நிறுத்தம்

பந்த்தையொட்டி நேற்று முதலே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவை ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.


மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடைகளை மூடச் சொல்லி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

........தட்ஸ் தமிழ் 05.07.2010

nambi
06-07-2010, 05:13 AM
சென்னை: சென்னை நகரில் உள்ள 10 மேம்பாலங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்தப் பாலங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முக்கியப் பிரமுகர்கள், முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை சிலர் பொழுது போக்க போல செய்ய ஆரம்பித்துள்ளனர். தங்களது கோபத்தை காட்ட இதை ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் தேவையில்லாத பதட்டம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.

சமீபத்தில் கூட முதல்வர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11.45 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கும், முக்கியமான சுரங்கப்பாதைகளுக்கும் டைம் பாம் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்து பாலங்களும், சுரங்கப் பாதைகளும் சிதறப்போகிறது என்று கூறி விட்டு போனை வைத்துள்ளார்.

நேற்று பந்த் வேறு நடந்து வந்ததால் இந்த மிரட்டலால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைத்து பாலங்களிலும் கண்காணிப்பும், ரோந்தும், சோதனையும் முடுக்கி விடப்பட்டது.

சோதனையில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி எனத் தெரிய வந்தது.

இதையடுத்து தங்களுக்கு வந்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது அது செல்போன் எண் என்றும், சூளைமேட்டிலிருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்போனுக்குரியவரின் முகவரியைக் கண்டுபிடித்து அங்கு சென்று பார்த்தபோது அது போலியான முகவரி எனத் தெரிய வந்தது. மேலும் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அந்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.

....தட்ஸ் தமிழ் 06.07.2010

nambi
06-07-2010, 05:31 AM
ஆலந்தூர், ஜுலை.6-

கமிஷன் தொகை பெறுவதில் ஏற்பட்ட மோதலில், நீலாங்கரை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாணவர்கள் 2 பேர் கைது செய்ய்பபட்டனர்.

என்ஜினீயரிங் மாணவர்

சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் நிர்பே குமார்சிங் (வயது 23) என்பவர் பி.டெக் ஐ.டி. பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகும். இவர் மதுரவாயல் பகுதியில் உள்ள நொளம்பூர் பகுதியில் தங்கி இருந்தார். இவருடைய தந்தை நீர்ஜித்சிங் ராஞ்சியில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தன்னுடன் படிக்கும் பங்கஜ்குமாருடன் நீலாங்கரையில் உள்ள தனது நண்பர் அனிஸ் குமார் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை நிர்பே குமார்சிங் தனது நண்பர் பங்கஜ்குமாருடன் மதுரவாயலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

தாக்குதல்

அப்போது பாலவாக்கத்தில் ஒரு கும்பல் அவரை காரில் விரட்டி சென்றது. ஈஞ்சம்பாக்கம் அக்கரை செக்போஸ்ட் அருகே மோட்டார் சைக்கிளின் குறுக்கே காரை நிறுத்தினார்கள். பின்னர் காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து நிர்பே குமார்சிங்கை உருட்டு கட்டை மற்றும் கம்பியால் தாக்கினார்கள். இதில் நிர்பே குமார்சிங் பலத்த காயம் அடைந்தார்.

இதை தடுக்க முயன்ற பங்கஜ்குமாருக்கும் சராமாரியாக அடி விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர்கள் விழுந்ததை கண்டதும் அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது. இதை கண்ட பொதுமக்கள் நீலாங்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துரைப்பாக்கம் போலீஸ் உதவிக்கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் சங்கரலிங்கம், கவுதமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கமிஷன்

ரத்த வெள்ளத்தில் கிடந்த நிர்பேகுமார், பங்கஜ்குமார் ஆகியோரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நிர்பேகுமார் சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பங்கஜ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மதுரவாயல், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக கல்லூரிகளில் பொறியியல் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிகளில் படிக்கும் சீனியர் மாணவர்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை இந்த கல்லூரியில் சேர்த்து விட்டு அவர்களது பெற்றோரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை கமிஷன்பெற்றுக் கொள்கின்றனர்.

ஒரிசா மாநில மாணவர்கள் தங்கள் மாநில மாணவர்களை தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்த்து விடுவதில் போட்டா போட்டியில் இறங்குவதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உருவானதாக தெரிகிறது.

தகராறு

இதையடுத்து இரு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நிர்பே குமார் சிங்கிற்கும், பாலவாக்கத்தில் உள்ள செம்மஞ்சேரி கல்லூரி மாணவர்கள் சுமன், சரத் உள்ளிட்ட மாணவர்களுக்கும் இடையே, என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களை சேர்த்து விடுவதிலும், கமிஷன் பெறுவதிலும் தகராறு இருந்து வந்தது.

இதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக சுமன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நிர்பேகுமார் சிங்கை கொலை செய்தது விசாரணையில் வெளியானது. இதற்கிடையே சுமன் மற்றும் அவருடைய நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பீகாரை சேர்ந்த சவுரப் சந்திரா, சஞ்சய்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


...தினத்தந்தி 06.07.2010

nambi
07-07-2010, 05:21 AM
சென்னை: கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த என்ஜீனியரிங் மாணவர் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், 8 வட மாநில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது கல்லூரிகளில், தங்களது மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்த்து விடுவதன் மூலம் பெருமளவில் கமிஷன் பெற்று வரும் கேவலமான நிலைமை நிலவி வருகிறது.

படிக்க வந்ததை விட்டு விட்டு இப்படி புரோக்கர் வேலையில் ஈடுபடுவதால் வட மாநில் மாணவர்களுக்குள் பெரும் மோதல்கள் மூண்டு வருகின்றன. இதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கண்டு கொள்வதில்லை. காரணம், அவர்களுக்கு பெரும் தொகையுடன் மாணவர்கள் இலகுவாக கிடைப்பதால்.

இந்த நிலையில் இந்த அவலமான செயல் ஒரு கொலையில் முடிந்துள்ளது. மதுரவாயலில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வந்த நிர்பேஷ் சிங் குமார் என்ற ஜார்க்கண்ட் மாணவருக்கும், ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கமிஷன் தொகை தொடர்பாக மோதல் மூண்டது.

இதில் நிர்பேஷ் சிங் குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கை விசாரித்து வரும் போலீஸார் தற்போது சத்யபாமாவில் படித்து வரும் பொறியியல் மாணவர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரா (23), சஞ்சய்குமார் (22), விவேக் குமார் சிங் (23), ரஞ்சித்குமார் (22), ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ரோகன் சின்கா (22), சாம்ராஜித் (22), பிரபாஷ்குமார் (23), ஆந்திராவை சேர்ந்த நிஷாந்த் சவுத்திரி (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

பீகாரைச் சேர்ந்த சுமன் என்ற மாணவர் தப்பி ஓடி விட்டார். அவருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில்,

தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு வீடு எடுத்துக்கொண்டு அதில் 20 பேருக்கு மேல் தங்குகிறார்கள். வீடுகளில் தங்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் இருந்து கடிதம் வாங்கி வீட்டின் சொந்தக்காரரிடம் கொடுக்க வேண்டும். அந்த கடிதம் இல்லை என்றால், குறிப்பிட்ட மாணவர்களுக்கு வீடுகளை, உரிமையாளர்கள் கொடுக்க கூடாது.

வெளி மாநில மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். எனவே வீடுகளில் தங்கும் மாணவர்களுக்கு வீட்டின் சொந்தக்காரர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.

வட மாநில மாணவர்களை, சென்னை புறநகர் பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்த்து விட்டால் கமிஷன் பணம் கிடைக்கிறது என்பதற்காக, மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம் என்றார்.
......தட்ஸ் தமிழ் 07.07.2010

nambi
07-07-2010, 05:33 AM
கோவை, ஜுலை.7-

கோவையில் பார் உரிமத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட, கலால்துறை துணை கமிஷனர் மூர்த்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி

கோவை மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி, டாஸ்மாக் மண்டல மேலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் மூர்த்தி (வயது 40). இவர் தற்போது மாவட்ட கலால்துறை துணை கமிஷனராக இருந்து வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள மதுபான `பார்' களுக்கு உரிமத்தை புதுப்பிப்பது, `பார்' ஓட்டல் அனுமதி உள்பட பல்வேறு பொறுப்புகள் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் `பார்' உரிமத்தை புதுப்பிப்பதற்காக துணை கமிஷனர் மூர்த்தி ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரி மூர்த்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூர்த்தி, முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் கூறுகையில், "சிறை விதிமுறைகளின்படியே மூர்த்திக்கு, "ஏ' வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

வீட்டில் சோதனை

இதையடுத்து கலால்துறை கமிஷனர் மூர்த்தியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் நகை, ரொக்கம், பத்திர பாண்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள 240 பார்களிலும் மாதம் ஒன்றுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் வசூல் செய்து வந்ததாகவும், இதனால் இவரது சொத்து மதிப்பு பலகோடி இருக்கலாம் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினார்கள்.

இவர் இதற்கு முன்பு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், மாவட்ட வழங்கல் அதிகாரியாவும், டாஸ்மாக் மண்டல மேலாளராகவும் இருந்துள்ளார். அப்போதும் அவர் கைவரியை காட்டினாரா? என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கமிஷனர் அந்தஸ்தில் உள்ளவர் துணிச்சலாக ரூ.20ஆயிரம் லஞ்சம் வாங்கி இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

....தினத்தந்தி தினமலர்..07.07.2010

nambi
07-07-2010, 05:36 AM
ஒப்பந்தம் கையெழுத்தாகி வெளியில் வந்த உலக வங்கியின் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா நிருபர்களிடம் கூறும்போது, ``உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது'' என்றார்.

அதேபோல மத்திய அரசின் நிதித்துறை இணை செயலாளர் அனூப் பூஜாரி கூறும்போது, ``தமிழக அரசு உலக வங்கியின் நிதியுதவியினை முழுமையாக பயன்படுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் இப்போது தமிழகத்தில் நடைபெற்றிருப்பதால், இந்த திட்டங்களின் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

....தினத்தந்தி 0707.2010

nambi
07-07-2010, 06:00 AM
சென்னை: பெற்றோர்களைக் கைவிடும், புறக்கணிக்கும், ஒதுக்கித் தள்ளும் பிள்ளைகளை பிடிக்கும் வேட்டையை போலீஸார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர். இதில் லேட்டஸ்டாக 104 வயது தந்தையைக் கைவிட்ட 54 வயது மகன் சிக்கியுள்ளார்.

பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் வந்ததைத் தொடர்நது பிள்ளைகளால் கைவிடப்படும் வயதானோர் போலீஸில் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சமீபகாலமாக சென்னையில் பலரும் இது போல சிக்கி கைதாகியுள்ளனர். இந்தநிலையில் 104 வயதான தந்தையை கைவிட்ட 54 வயது பிள்ளையை போலீஸார் பிடித்துள்ளனர்.

புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். 104 வயது நிரம்பிய இந்தப் பெரியவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் முதியோர்கள் உதவி மையத்திற்கு போன் மூலம் ஒரு புகாரை தெரிவித்தார்.

அதில், தனது மகன் தங்கராஜ் தன்னைக் கவனிக்காமல் புறக்கணித்து வருவதாகவும், சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் அழுதபடி கூறினார்.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று கன்னியப்பனிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.

அதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

சட்டப்படி அவரை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

....தட்ஸ் தமிழ் 07.07.2010

nambi
07-07-2010, 06:21 AM
அதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.


....தட்ஸ் தமிழ் 07.07.2010

என்ன தங்கரஜ்...? 1 கிலோ 1 ருபாய் அரிசி வாங்கி கூடவா! கஞ்சி ஊத்தமுடியாது? அதை வைத்து ரெடிமேட் இட்லி மாவு, தோசை மாவு தயாரித்து பொட்டலம் கட்டி காசுபார்க்கிறார்கள். (சரி வேலையில்லாத பட்டதாரிகள் பார்த்துவிட்டு போகட்டும்)....கையேந்தி பவனில் இட்லி, பிரியாணி எல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி தான். உணவு விடுதிகளில் இந்த அரிசியை கலந்து தான் வியாபாரத்தை சரிகட்டுகிறார்கள். யாருக்கும் தெரியாது என்ற நினைப்பு? தெரிந்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பும் இருக்கலாம்.

ஏதோ ஒரு வேகத்தில் கார் வாங்கியவர் கூட அதற்கான வட்டியை கட்ட முடியாமல் காரை எங்கோ ஒரு ஓரத்தில் மறைத்து நிறுத்திவிட்டு (இப்போது பயன்படுத்திய கார் மேலா படு ஜோராக நடக்கிறது)...... இந்த ஒரு ரூபாய் அரிசியைத்தான் சாப்பிடுகிறார். இதில் என்ன தவறு தங்கராஜ்? இப்படி உங்கள் தந்தை நினைத்திருந்தால் நீங்கள் பிஸ்கட் கம்பெனியில்...?

உங்கள் தந்தை என்ன பிரியாணியும், ஆட்டுக்கறி பாயாவுமா? கேட்டார்? அதை வாங்கிக்கொடுத்தாலும் சாப்பிட முடியாது? அப்புறம் வேறு வழக்காக மாறிவிடும்? ...குடிக்கும் கூழின் மிச்சத்தை கொடுத்தாலே அவரின் மீதி வாழ்நாளுக்கு போதுமானது.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு தங்கராஜ்!.... இதை ஒரு சாக்காக சொல்கிறீர்களே! அதுவும் நம்ம ஊர் காவலர்கள் கிட்டே!....அவர்கள்....?

இதையெல்லாம் சத்தம் போட்டு சொன்னாலே கேவலம்...சட்டம் போட்டு தடுக்க வைத்துவிட்டார்களே....?

nambi
07-07-2010, 08:03 AM
சென்னை 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

எனது மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நர்சரி வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை பெயிலாகாமல் படித்து வந்தான். 2009-10-ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு படித்தான். தேர்வு முடிவில் அவனை பள்ளி நிர்வாகம் பெயிலாக்கிவிட்டது.

சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தொடக்கக் கல்வி வரைகூட படிக்காமல் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பை பாதியிலே விட்டுவிடுகின்றனர். இதனால்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்தை துரதிருஷ்டவசமாக இங்குள்ள மெட்ரிக் பள்ளிகள் முனைப்போடு அமல்படுத்தவில்லை. மார்க் குறைவு, வருகைப் பதிவு குறைவு, படிப்பில் மந்தநிலை ஆகிய காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பெயிலாக்கிவிடுகின்றன.

இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ம் பிரிவின் படி, 8-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டத்தை மீறும் வகையில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி எனது மகனை பெயிலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனது மகனை 7-ம் வகுப்பிற்கு பாஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து டான் பாஸ்கோ பள்ளிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டான்பாஸ்கோ பள்ளி சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிடுகையில்,

மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரின் அறிவுரையின் அடிப்படையில்தான் இறுதித் தேர்வுக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட்டோம்.

5-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்த உத்தரவும் மெட்ரிக் இயக்குனரிடம் இருந்து வரவில்லை.

கல்வித்துறையால் நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வர்கள் குழுவால் மாணவர்களின் தேர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற்று அதன் பின்னரே 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்ச்சி முடிவுகளை வெளியிடுகிறோம் என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி பால்சம்பத்குமார்,

8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் (இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது. அதற்குப் பிறகுதான், 6-ம் வகுப்பு மாணவனை பெயிலாக்குவதற்கு இணக்கமான சுற்றறிக்கையை இங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அனுப்பி இருக்கிறார். மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ள இதுபோன்ற சுற்றறிக்கை, சட்ட விரோதமானது என்பது தெளிவு. அது செல்லத்தக்கதல்ல.

இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் பள்ளி நிர்வாகம் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் தமிழ் பிரபாகர உதயமை பெயில் ஆக்கி இருக்கிறது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தன்னை பெயிலாக்கியது தவறு என்றும் மத்திய அரசின் சட்டப் பிரிவுகள் 4, 16, 30 ஆகியவற்றின் படி தன்னை 7-ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும் என்றும் அந்த மாணவன் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.

16-ம் பிரிவின்படி, 8-ம் வகுப்பு வரை எந்த ஒரு மாணவனையும் பெயிலாக்கி அதே வகுப்பில் போடுவதும், பள்ளியை விட்டு வெளியே அனுப்புவதும் கூடாது. சட்டவிரோதமான சுற்றறிக்கையை பின்பற்றி இந்த மாணவனை பள்ளி நிர்வாகம் தேர்ச்சி செய்யாமல், அதே வகுப்பில் இருக்கச் செய்துள்ளதால், அதுவும் சட்ட விரோதமாகும்.

எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-ஏ பிரிவு மற்றும் கட்டாயக் கல்விக்கான மத்திய அரசின் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மாணவனை பெயிலாக்குவதற்கான உத்தரவு செல்லத் தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

மேலும், இந்த மாணவனை தேர்ச்சி செய்து 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் விவாதத்தின்போது, மாணவனை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச் சான்றிதழுக்கு (டி.சி.) விண்ணப்பிக்க இருப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. பள்ளி நிர்வாகமும் டி.சி. வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

எனவே வேறு பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக டி.சி. வாங்குவதற்கு மாணவன் தரப்பில் டான்பாஸ்கோ பள்ளியிடம் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் மத்திய அரசுச் சட்டத்தின் 16-ம் பிரிவின் அடிப்படையில் மாணவனை கட்டாயம் வெளியேற்றும் நோக்கத்தில் டி.சி.யை கொடுக்க முடியாது.

ஆகவே மாணவன் தரப்பில் தானாக முன்வந்து கேட்கப்பட்டால் மட்டுமே அவனுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி.யை கொடுக்க வேண்டும். அவனுக்கு 7-ம் வகுப்புக்கு செல்வதற்கான தேர்ச்சியையும் பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

கல்வி பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று 1993-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புதான் இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. கல்வி பெறுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று 2002-ம் ஆண்டிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புகளை கண்டிப்பாக அமல்படுத்தும் விதத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி அளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 2009-ம் ஆண்டு இந்த சட்டத்தை இயற்றியது. அது 1.4.2010 அன்று அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முன்பு பின்பற்றப்பட்ட மாநில அரசின் சட்டங்கள் செல்லாததாகிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என்றார்.

....தட்ஸ் தமிழ்

nambi
07-07-2010, 02:55 PM
பிளஸ் 2 வகுப்பில் சேரும்போதே என்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவோடுதான் வகுப்பில் காலடி எடுத்து வைக்கின்றனர் பெரும்பாலான மாணவர்கள்.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் நல்லதோ, கெட்டதோ; நெட்டையோ குட்டையோ ஏதாவது ஒரு என்ஜினியரிங் கல்லூரியை நோக்கி ஓடுகின்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து முட்டி, மோதி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் பொறியாளர்களுக்கு அவ்வளவு எளிதில் வேலை கிடைத்துவிடுவதில்லை என்பது அதன் பிறகுதான் தெரிகிறது.

பி.இ. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் தொடர் கதையாகி வருகின்றன.

பிளஸ் 2 தேர்வில் 900-க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களிடம் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்து, பன்னாட்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே நிலை கொண்டுள்ளது.

இதனால் தரமில்லா கல்லூரிகளிலும் லட்சம் லட்சமாய் பணத்தைக் கொட்டி பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருகின்றனர்.

பி.எஸ்சி., பி.காம். போன்ற பட்டப் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு ஏற்ற வகையில் காளான்களைப் போல் ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துவிட்டன. ஆண்டுக்கு 50 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டு வருகிறது.

இப்போது ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், படிப்பு முடித்து வெளிவந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்களில் 40 சதவீதத்தினருக்கு மேல் வேலை இல்லை என்பதை, அறிவுறுத்த ஒருவரும் முன்வருவதில்லை.

இதை மறைத்து விட்டு பொறியியல் படிப்புதான் எல்லாமே என்பது போன்ற மாயையை தனியார் கல்லூரிகள் உருவாக்கி வருகின்றன என்கிறார் "மா ஃபா' மனிதவள மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் கே. பாண்டியராஜன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. தனியார் வங்கிகள், பி.பி.ஓ. சென்டர்கள்,

மார்க்கெட்டிங், விஷுவல் மீடியா என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆரம்ப

சம்பளமே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இவர்களுக்கு கிடைக்கிறது.

ஆனால், பி.இ. பட்டதாரிகள் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருவதால், அவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. இவர்களில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளம் கூட கிடைக்காமல் தவிப்பவர்களும் உண்டு. பி.இ., படித்துவிட்டாலே பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும், வெளிநாடுகளில் வேலை வாங்கி லட்சம் லட்சமாக சம்பாதித்துவிடலாம் என்று சொல்லிவிட முடியாது.

நீங்கள் படிப்பது பி.இ. பட்டமா அல்லது பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை அறிவியல் பட்டமா என்பது முக்கியமல்ல. தரமான கல்வி தரும் கல்லூரியில் படித்தீர்களா என்பதுதான் முக்கியம்.

வேலைத் திறன் பயிற்சி தீவிரப்படுத்தப்படுமா?:

தரமான கல்லூரிகளில் கல்வி அறிவை மட்டும் அல்லாமல், வேலைத் திறன் பயிற்சியையும் கூடுதலாக மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.

இந்தியாவில் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவரும் மாணவர்களில் 30 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று "மெக்கன்ஸி' என்ற பிரபல ஆலோசனை நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

.....தினமணி

nambi
08-07-2010, 11:22 AM
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படை வெறியர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மாவட்ட மீனவர் பலியானார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகியோர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.

மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய 4 பேர் சென்றனர்.

இரவு 9 மணியளவில் அவர்கள் ஆறுகாட்டுத்துறை அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர்.

படகுகளில் இருந்த மீன்கள், வலைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த செல்லப்பன் படகிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

தாக்குதலில் காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் சிங்கள கடற்படையினர் சிறிது தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த முருகேசனின் படகை வழிமறித்து அதில் ஏறினர்.

படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகளை கடலில் கொட்டிவிட்டு மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர்.

மீனவர்கள் அணிந்திருந்த உடைகளை கழற்றச் செய்து அதை கடலில் வீசினர். முழு நிர்வாணத்துடன் 4 மீனவர்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் இலங்கை கடற்படையினர் திரும்பிச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 7 பேரும் செல்லப்பனின் உடலோடு நள்ளிரவில் கரை திரும்பினர்.

மீனவர்களிடம் மீன்வளத்துறை இணை இயக்குனர் உமாகாந்தன் இன்று விசாரணை நடத்தினார்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் செல்லப்பன் பலியானதால் வெள்ளம்பள்ளம், ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.

இலங்கை மீனவர்களை தாக்குவதில்லை-இந்திய கடற்படை:

இந் நிலையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போது, நாங்கள் அத்துமீறி நடப்பதில்லை என்று இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்கு வர வாய்ப்பே இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்கப்படுகிறார்கள்.

நாகப்பட்டினம் இந்திய கடல் எல்லையில் இருந்து 60 மைலுக்கு உள்ளே உள்ளது. இந்திய மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்வதாகத் தான் எங்களுக்கு தகவல் வருகிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நாங்கள் மறுக்கவில்லை. இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்களை பார்த்தால் தகவல் தருமாறும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் பலமுறை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போது, நாங்கள் அத்துமீறி நடப்பதில்லை என்றார்.

....தட்ஸ் தமிழ் 08.07.2010

nambi
08-07-2010, 11:26 AM
ஸ்ரீநகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகிறது.

கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பல பகுதிகளில் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காஷ்மீரும் ஊரடங்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தலைநகர் ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சோபோர் நகரம், பாரமுல்லாவின் பழைய பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரிலும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம், சோபியான், ஹந்த்வாரா, கந்தர்பால், பட்காம், பாரமுல்லா நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.

ஸ்ரீநகரின் பட்மலூ பகுதியில் ஒரு கும்பல் போராட்டத்தில் குதிக்க முயன்றது. இருப்பினும் பாதுகாப்புப் படையினர் அவர்களை அமைதியானமுறையில் கலைந்து போகச் செய்தனர்.

...தட்ஸ் தமிழ் 08.07.2010

nambi
08-07-2010, 11:30 AM
புது தில்லி, ஜூலை 7: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகன விற்பனையாளர்கள், வண்டியுடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வண்டியைப் பதிவு செய்யமுடியாது என்றும் 2009 ஜூலை 30-ல் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் முறையிட்டது.

இந்த உத்தரவின் மூலம், தான் விரும்பிய ஹெல்மெட்டை வாங்கும் சுதந்திரம் இரு சக்கர வாகனம் வாங்குபவருக்கு மறுக்கப்படுகிறது என்று உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெல்மெட்டை இரு சக்கர வாகனத்துடன் சேர்த்து விற்க வேண்டும் என்று புதன்கிழமை உத்தரவிட்டது.
...தினமணி 08.07.2010

nambi
08-07-2010, 11:35 AM
சென்னை, ஜூலை 7: இந்திய சில்லறை வணிகச் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு கிடைப்பதுடன், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்று அரசின் சார்பில் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இந்திய உள்நாட்டு பெரும் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் அனுமதிக்கப்பட்டபோது இதே ஆசை வார்த்தைகள்தான் கூறப்பட்டன. ஆனால், நடைமுறையில் அப்படி நடக்கவில்லை. லாபம் ஈட்டியவர்கள்தான் மேலும் கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் மேலும் நஷ்டமடைந்து, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், உர்ஸ்வொர்த் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு வணிக நிறுவனங்களை இந்திய சில்லறை வணிகச் சந்தையில் அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கலாம். ஆனால், சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதால் விலைவாசி குறையும் என்பதும் மாயையே. ஆன்லைன் வர்த்தகம் எனப்படும் முன்பேர ஊக வணிகம் இருக்கும் வரை விலைவாசி குறையாது.

பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், இந்த ஊக வணிகம் மேலும் அதிகரிக்கும். இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது.

பன்னாட்டு நிறுவனங்கள் வருகையால், உள்ளூர் வணிகர்கள் சுய வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்படும். உள்ளூர் வணிகம் நசிந்து போகும். எனவே, இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

....தினமணி 08.07.2010

nambi
08-07-2010, 11:40 AM
சென்னை, ஜூலை 7: தனியாருக்கு சொந்தமான சில வணிக வளாகங்களுக்கு சாதகமாக போக்குவரத்து போலீஸôர் செயல்படுவதால் சென்னை அமைந்தகரை பகுதி கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் உள்ள பிரதான பகுதிகளை இணைக்கும் சாலைகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்று அமைந்தகரை. பல தொழில் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்தப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன. எனவே, இந்தப் பகுதியில் எப்போதும் ஓரளவு போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

இந்த நிலையில், அமைந்தகரை சிக்னல் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பல அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்பட்டது. இதில் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, பிரபல உணவகங்கள், திரையரங்குகள், துணிக்கடை என அனைத்து வகையான கடைகளும் அமைந்துள்ளன.

மக்களை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கவர்ந்துள்ள இந்த வணிக வளாகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களை அழைத்து வருவதற்கும், அழைத்துச் செல்வதற்கும் தினமும் ஏராளமான ஆட்டோக்கள் வணிக வளாகத்துக்கு வெளியே காத்து நிற்கின்றன.

மேலும் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 மணி நேரம் ஆனால் கட்டணம் ரூ. 20. மூன்று சக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ. 30.

அதிக கட்டணம் காரணமாக, வணிக வளாகத்துக்கு வரும் இளைஞர்கள் பலர், வணிக வளாகத்துக்கு வெளியில் உள்ள காலி இடங்களில் வாகனத்தை நிறுத்திச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

போக்குவரத்தை சீர்செய்வதாக கூறி, இதுபோன்று காலி இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை, இரும்புப் பட்டைகளைக் கொண்டு பூட்டு போட்டு நடவடிக்கை எடுத்துவந்த போக்குவரத்து போலீஸôர், ஒரு கட்டத்தில் அமைந்தகரை சிக்னலில் போக்குவரத்தையே மாற்றிவிட்டனர்.

வணிக வளாகத்துக்காக இதுபோன்ற நடவடிக்கையை போலீஸôர் எடுத்திருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோதாதென்று சாலையைக் கடக்க முடியாத வகையில், சாலை மையத் தடுப்பில் தட்டிகளைக் கட்டி கூடுதல் தடுப்பை போலீஸôர் ஏற்படுத்தியுள்ளனர்.

நெல்சன்மாணிக்கம் சாலையிலிருந்து இந்த சிக்னல் நோக்கி வரும் வாகனங்கள், வலதுபுறம் (அமைந்தகரை மார்கெட்) திரும்ப முடியாது. அமைந்தகரை மார்கெட் செல்ல விரும்புபவர்கள், அண்ணா வளைவு சிக்னலுக்கு சென்று திரும்பிவர வேண்டும்.

இந்த மாற்றத்தினால் அமைந்தகரை சிக்னலில் மட்டும் அல்லாமல், அண்ணா வளைவு சிகனலிலும் போக்குவரத்து நெரிசல் இரு மடங்காக உயர்ந்துள்ளது. வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதால், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமைந்தகரை சிக்னலில் பெரும்பாலும் போக்குவரத்து போலீஸôர் இருப்பதில்லை. மேலும் வணிக வளாகத்துக்கு செல்லும் சில இளைஞர்கள், போலீஸôர் ஏற்படுத்தியுள்ள கூடுதல் மையத் தடுப்பில் புகுந்து செல்வதை இப்போது வாடிக்கையாக்கியுள்ளனர். எனவே, இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

நெரிசல் அதிகரித்துள்ளதன் காரணமாக, நெல்சன்மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர் சாலை ஆகிய சாலைகளில் வாகன ஓட்டிகள் முன்பைவிட கூடுதல் நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனுமதி எப்படி? சாலை வசதிகளையும் கணக்கில் கொண்டுதான், இவ்வளவு பெரிய வணிக வளாகத்துக்கு சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் அனுமதி அளித்திருக்க வேண்டும்.

ஆனால், அனுமதி அளித்துவிட்டு, அந்த வணிக வளாக நிறுவனத்துக்கு ஏதுவாக போக்குவரத்தையும், சாலை வசதிகளையும் மாற்றி பொதுமக்களை சிக்கலில் ஆழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம் என அப்பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

தீர்வு என்ன? வளாகத்துக்கு வெளியே இளைஞர்கள் சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும். வணிக வளாகத்துக்கு முன்பு (நெல்சன் மாணிக்கம் சாலையில்) ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைந்தகரை சிக்னலில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தானாக சீராகிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பெரிய வணிக வளாகங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்பு உள்ளாட்சி நிர்வாகமும், காவல்துறையும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து முடிவுகள் எடுத்தால் இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்

.....தினமணி 08.07.2010

nambi
08-07-2010, 05:17 PM
பீஜிங், ஜுலை.8-

சீனாவில் உள்ள சோங்கிங் நகரின் முன்னாள் தலைமை நீதிபதி வென் கியாங் தூக்கிலிடப்பட்டார். இவர் நகர போலீஸ் துணை தலைவராகவும் இருந்ததால், குற்றவாளிகளை பாதுகாத்து வந்தார். குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்தார் என்றும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

போலீஸ்காரர்களாக இருந்து கொள்ளைக்காரர்களாக மாறியவர்களுக்கு இவர் பக்க பலமாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

வென் கியாங்கை பதவி நீக்கம் செய்து அவர் மீது வழக்கு தொடர காரணமாக இருந்த சோங்கிங் நகர கம்யூனிஸ்டு தலைவர் போ ஜிலாய் செல்வாக்கு இதனால் உயர்ந்தது.
....தினத்திந்தி 08.07.2010

nambi
09-07-2010, 05:15 AM
சென்னை, ஜூலை 8: தமிழகத்தில் 2010-11-ம் கல்வி ஆண்டில் இதுவரை 42 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 431 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கல்லூரிகளில் மொத்தம் 10,080 இடங்கள் உள்ளன.

சிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும். அதன்படி, புதிய கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டில் 5,500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதையடுத்து 2010-11-ம் ஆண்டு பி.இ. படிப்புகளில் ஏற்கெனவே உள்ள இடங்களையும் சேர்த்து அவற்றின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயருகிறது.

இந்த இடங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது நடைபெறும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி அளிப்பது தொடர்பான கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஏ.ஐ.சி.டி.இ.-ன் தென் மண்டலத் தலைவரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பி. மன்னர் ஜவஹர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய கல்லூரிகள் குறித்து துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியது:

புதிய கல்லூரிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அமையவுள்ளன. எல்லா கல்லூரிகளும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (இ.சி.இ.), கணினி அறிவியல் (சி.எஸ்.இ.) பாடப் பிரிவுகளைக் கேட்டுள்ளன. அதற்கடுத்து சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இரு பிரிவுகள் இடம் பெறுகின்றன.

புதிய கல்லூரிகளில் மொத்தம் 10,080 இடங்கள் உள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அவற்றுக்கு சம்பந்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களின் இணைப்பு தகுதி வழங்குவது அவசியம். அது தொடர்பான பணிகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன் பின்னர், அந்தக் கல்லூரிகள் பி.இ. கலந்தாய்வில் உள்ள கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெறும்.

வியாழக்கிழமை கூட்டத்தில் 6 எம்.பி.ஏ. கல்லூரிகள், 1 கட்டடக் கலை கல்லூரி ஆகியவற்றுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.

அடுத்த கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, புதிய பாடப் பிரிவுகள் கொண்டுவருவது பற்றி விவாதிக்கப்படவுள்ளன என்றார்.
......தினமணி 09.07.2010

nambi
09-07-2010, 05:19 AM
இலங்கை கடற்படையினரால் நாகப்பட்டினம் மீனவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்னால் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொட*ர்பாக தி.முக. மீனவர் அணி செயலர் இரா.பெர்னார்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், 7.7.2010 அன்று இரவு கடலில் மீன்பிடிக்கச்சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் நடைபெறுவது தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு பல முறை கடிதங்கள் மூலமாகவும், முதலமைச்சர் கருணாநிதி மூலமாகவும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும், இந்தக் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தகையை நடவடிக்கையை தி.மு.க. மீனவர் அணியின் சார்பில் கண்டிப்பதோடு, மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கையை கடுமையாக எடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

இந்த கோரிக்கையை முன்வைத்து நாளை காலை 10 மணி அளவில் இலங்கை தூதரகத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறப்போரில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எ*ன்று பெர்னார்டு கூறியுள்ளார்.

.....வெப்துனியா 09.07.2010

nambi
09-07-2010, 05:46 AM
புதுதில்லி : உலகளாவிய அளவில் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் குறித்து சர்வதேச ஆலோசனை நிறுவனம் மெர்சர் எடுத்த சமீபத்திய சர்வேயில் இந்தியாவின் தலைநகர் தில்லியே செலவு பிடிக்கும் நகரங்களில் இந்தியாவிலேயே முதலாவதாகவும் உலகளவில் 85வது இடத்தையும் பிடித்துள்ளது.

5 கண்டங்களில் உள்ள 214 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி அமெரிக்காவோ அல்லது சீனாவோ அல்ல மாறாக அங்கோலாவின் லுவாண்டா உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் முதலாவதாக வந்துள்ளது. வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் , கல்வி, சுற்றுலா என சுமார் 200 பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு இச்சர்வே எடுக்கப்படுவதால் சில நிறுனங்கள் இதை அடிப்படையாக கொண்டு தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி தருவது வழக்கம்.

லுவாண்டாவுக்கு அடுத்த படியாக் ஜப்பானின் டோக்கியோ, சாடின் நிடின் ஜமனா, ரஷ்யாவின் மாஸ்கோ, சுவிட்சார்லாந்தின் ஜெனிவா முறையே 2 முதல் 5வது இடத்தை பிடித்துள்ளன. 6 முதல் 10 வரையிலான இடங்களை ஜப்பானின் ஓஸாகா, கபோனின் உள்ள லிபிரிவில்லி, சுவிஸின் ஜூரிச், ஹாங்காங் மற்றும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் ஆகியவை பிடித்துள்ளன.

இந்தியாவில் புதுதில்லி 85வது இடத்தையும் அதை தொடர்ந்து மும்பை 89வது இடத்தையும் பிடித்துள்ளன. பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்றவை முறையே 190, 195, 207 வது இடத்தை பிடித்துள்ளன. மொத்தமே 214 நகரங்களில் எடுக்கப்பட்டுள்ள சர்வேயில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், நிகரகுவாவின் மனாகுவே மற்றும் கராச்சி முறையே 212, 213, 214 என கடைசி இடங்களை பெற்றுள்ளது.

...இந்நேரம்.காம்

nambi
09-07-2010, 01:20 PM
சென்னை, ஜூலை 9- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி முதல் நியமனமாக பொ. பேதுரு என்பவருக்கு நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான நியமன உத்தரவை அவரிடம் இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

....தினமணி 09.07.2010

ஓவியன்
09-07-2010, 01:23 PM
’நகல் பெருக்கியாளர்’ என்பது நல்லதொரு தமிழ் வழக்குச் சொல்லாக மாறுமா..??, உச்சரித்துப் பார்க்கையில் அவ்வளவு நன்றாக இல்லை, ’நகலெடுப்பாளர்’ என்பது நன்றாக இருக்குமோ...??

nambi
11-07-2010, 05:36 AM
சென்னை, ஜுலை.11-

வழக்கு தொடராமல் இருப்பதற்காக செங்கல்சூளை மேலாளரிடம் லஞ்சம் வாங்கிய தொழிற்சாலை ஆய்வாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல் சூளை

சென்னை அண்ணாநகர் மேற்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 51). இவர் சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள தொழிற்சாலைகள் ஆய்வாளர் அலுவலகத்தில் துணை தலைமை ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவரிடம் இசைமணி (50) ஆய்வாளராக பணியாற்றுகிறார். அண்ணாநகர் மேற்கு வசந்தம் காலனியில் இசைமணி வசிக்கிறார்.

கும்மிடிப்பூண்டி புதுவயல் கிராமத்தில் உள்ள அனுமந்த் செங்கல் சூளையில் 14.4.10 அன்று இசைமணி ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது செங்கல் சூளையின் மேலாளர் மார்கண்டேயன் உடனிருந்தார். செங்கல் சூளையில் உள்ள குறைகளை குறித்துக் கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மேலாளருக்கு உத்தரவிட்டார். இந்த குறைகளுக்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வழக்கு எச்சரிக்கை

மேலும் இதுதொடர்பாக செங்கல் சூளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட மார்கண்டேயன் பதில் அனுப்பினார். பதில் கிடைத்ததும் மார்கண்டேயனை ஆய்வாளர் இசைமணி செல்போனில் தொடர்பு கொண்டு உடனே வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் வரும்போது பணத்துடன் வரவேண்டும் என்றும் பணம் கொடுக்காவிட்டால் செங்கல் சூளையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் இசைமணியின் அலுவலகத்திற்கு வந்து அவரை சந்தித்தார்.

சூப்பிரண்டிடம் புகார்

செங்கல் சூளை மீதான அபராதத்தை நீக்குவதற்கு ரூ.40 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று இசைமணி கூறினார். அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என்று மார்க்கண்டேயன் கூறினார். அதைத் தொடர்ந்து மார்கண்டேயனை தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் கணேசனிடம் இசைமணி அனுப்பி வைத்தார். அங்கு நடந்த பேரத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு லட்சுமியிடம் மார்க்கண்டேயன் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமி காந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, 2 பேரையும் பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது.

ஆய்வாளர் கைது

தனது வீடு அமைந்துள்ள ஒரு பேக்கரியின் அருகே பணத்துடன் வருமாறு மார்க்கண்டேயனிடம் இசைமணி கூறினார். இதை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மார்க்கண்டேயன் தெரிவித்தார். எனவே அங்கு நடராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் சாதாரண நபர்கள் போல வந்திருந்தனர். அந்த பேக்கரி அருகே இசைமணி வந்து மார்கண்டேயனுக்காக காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் லஞ்சப் பணம் ரூ.15 ஆயிரத்துடன் வந்த மார்கண்டேயன், அதை இசைமணியிடம் கொடுத்தார். இசைமணி அதை வாங்கிய போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.

கணேசனுக்கும் இதில் தொடர்பு உண்டு என்று வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து கணேசன் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் சிக்கியது. அதைத் தொடர்ந்து கணேசனும் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு

பின்னர் 2 பேரையும் கீழ்ப்பாக்கம் டவர் பிளாக்கில் குடியிருக்கும் முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 23-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

.....தினத்தந்தி 11.07.2010

nambi
11-07-2010, 05:54 AM
மும்பை, ஜூலை 10: கிரெடிட் கார்டுகளுக்கு (கடனட்டை) வட்டி கணக்கிடுவதில் வெளிப்படையான தன்மையைப் பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய பொருள் மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்த ரொக்கத் தொகைக்கான வட்டி கணக்கீடு குழப்பமாக உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கிரெடிட் கார்டு தொகையை வசூலிக்க சில தனியார் வங்கிகள் குண்டர்களை ஏவிவிட்டு வசூலித்ததான குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியது.

தற்போது வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் பெரும் கடனுக்கான வட்டி விகிதத்தை கணக்கிடுவதில் ஆர்பிஐ வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இலவச கிரெடிட் கார்டு என்று கூறி ஆண்டுக் கட்டணம் வசூலிப்பது, தொலைபேசி மூலமே கடன் வழங்குவது, தவறான கணக்கீடு, கிரெடிட் கார்டு தொடர்பான புகார்களை கண்டு கொள்ளாதது, அழைப்பு மையங்கள் சரிவர செயல்படாதது உள்ளிட்ட புகார்கள் எழுந்தால், அத்தகைய வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு மூலமான பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை வட்டி எவ்விதம் கணக்கிடப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் உதாரணங்களுடன் இது விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் அதிகபட்ச வட்டி தொகையை குறிப்பிட வேண்டும். அத்துடன் பரிசீலனைக் கட்டணம் மற்றும் பிற சேவைக் கட்டண உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும். தவறான பில்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பக் கூடாது.

வாடிக்கையாளர்கள் வங்கி அனுப்பிய மாதாந்திர விவரப்பட்டியலில் (ஸ்டேட்மென்ட்) குறைகள் இருப்பதாகக் கூறினால், அதை தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் இதை ஆவண பூர்வமாக வாடிக்கையாளருக்கு உணர்த்த வேண்டும்.

வாடிக்கையாளர்களின் குறைகள் 60 நாள்களுக்குள் களையப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
....தினமணி 11.07.2010

nambi
11-07-2010, 06:01 AM
மும்பை :கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : சமீபகாலமாக, கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதாகவும், அந்த புகார்கள் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், அதற்கு உரிய விளக்கம் வழங்கப்படுவதில்லை என்று உள்ளதாகவும் அது தெரிவி்த்துள்ளது. கிரெடிட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதை தெரிவித்து, பின் ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புதிய லோன்கள் குறித்த அழைப்புகள் அடிக்கடி போன் மூலம் வருவதாகவும், பில் தவறாக அனுப்பப்படுவதாகவும், உரிய நிறுவனத்திடம் சென்று விசாரித்தால், அதற்குரிய விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அதில் *தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி 2007ம் ஆண்டே, கிரெடிட் கார்டுகளுக்கான வழிமுறைகளை வகுத்து வெளியிட்டதாகவும் , ஆனால் அதனை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளது. தற்போது, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வெளி்யிடப்பட்டள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வழிமுறைகளாவன : உபயோகிப்பாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படுவதற்கு முன்னரே, வட்டி விகிதங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனம் வசூலிக்கப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், வட்டி , பணம் வசூலிக்கப்படும் முறைகள் ஒளிவுமறைவில்லாததாக இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்த விபரங்களை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், வட்டி விகித மாற்றத்தை, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம், கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் ஏதாவது புகாரைத் தெரிவித்தால், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், உபயோகிப்பாளர்களுக்கு உரிய விளக்கத்தை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1.9 கோடி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி, *ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, *ஹெச்எஸ்பிசி வங்கி, சிட்டிபாங்க் உள்ளிட்ட வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுகளை வழங்கி வருவதில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

....தினமலர் 11.07.2010

nambi
11-07-2010, 06:36 AM
புதுடெல்லி: மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும் இனி மருத்துவமனைகளில் பணம் செலுத்திதான் சிகிச்சை பெற முடியும். மருத்துவக் காப்பீடு பெற்றவர்களின் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேரடியாக செலுத்தி வந் தன. அதிநவீன மருத்துவமனை களிலும் வாடிக்கையாளர்கள் பணம் தராமலே சிகிச்சை பெற ஏதுவாக இருந்தது. இந்நிலையில், காப்பீட்டுத் தொகை வாடிக்கையாளர்கள் பெயரில் வழங்கப்படும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பாலிசிதாரர்கள் சிகிச்சை செலவை மருத் துவமனைக்கு செலுத்திவிட்டு அதை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
........தினகரன் 11.07.2010

nambi
11-07-2010, 06:46 AM
புதுடெல்லி: மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும் இனி மருத்துவமனைகளில் பணம் செலுத்திதான் சிகிச்சை பெற முடியும். ........தினகரன் 11.07.2010

இது மிகப்பெரிய அநியாயம்!.....மோசடி!.... நோய் வரும் என்று தெரிந்து பணம் வைத்திருக்க இயலுமா? வைத்திருக்கும் பணத்திற்கேற்றமாதிரி நோய் தான் வருமா? இதை சமாளிக்கத்தான் மருத்துவக் காப்பீடு! ......அதிக பணம் செலவு செய்ய வழியில்லாதவர்கள் எங்கே, யாரிடம்? கடன் வாங்குவார்கள்....அப்புறம் அதற்கான செலவுகளை வாங்குவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பின்னாடி அலைந்து கொண்டிருக்கவேண்டும்..அதுவும் முழுத்தொகை கிடைக்காது.

nambi
11-07-2010, 07:03 AM
பெங்களூர்: பெங்களூர் கோர்ட் தனக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால் மீண்டும் ஆன்மீக சொற்பொழிவாற்றப் போகிறார் நித்தியானந்தா. நாளை தனது பிடுதி ஆசிரமத்தில் பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவாற்றவுள்ளாராம்.

ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் அந்தரங்கமாக இருந்து வீடியோவில் பிடிபட்டார் நித்தியானந்தா. இந்த சம்பவத்திற்குப் பின்னர் நித்தியானந்தா தலைமறைவானார். ஒரு மாத ஓட்டத்திற்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து அவரை கர்நாடக போலீஸார் கைதுசெய்தனர். ஆனால் ரஞ்சிதா மட்டும் இன்னும் அகப்படவே இல்லை. எங்கிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.

கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ராம்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

அவருக்கு ஜாமீன் கொடுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் , நிரபராதி என நிரூபிக்கும் வரை ஆன்மீக சொற்பொழிவாற்றக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிலையில் இவற்றை தளர்த்தக் கோரி நித்தியானந்தா தரப்பில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நேற்று நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அவர் ஆன்மீக சொற்பொழில் மீண்டும் இறங்கவுள்ளார். நாளை தனது ஆசிரமத்தில் சிஷ்யர்களிடையே அவர் உரையாற்றவுள்ளாராம். 5 மணிக்கு நடைபெறும் இந்த சொற்பொழிவைக் கேட்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆசிரமம் கூறியுள்ளது

....தட்ஸ்தமிழ் 11.07.2010

nambi
11-07-2010, 07:24 AM
கொடைக்கானல்,ஜூலை 10: சென்னை தொழிலதிபரிடம் கார் டிரைவராக வேலை பார்த்துவந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்டதாகக் கொலையாளிகள் கொடுத்த தகவலின்பேரில், டிரைவரின் சடலத்தை பள்ளத்தாக்கில் இருந்து போலீஸôர் சனிக்கிழமை மீட்டனர்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி. இவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்தவர் பாபு (23). இவருக்கும், கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தீபா திருமணமானவர். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தியும், அவரது மகன் பிரதீப்பும் டிரைவரைக் கண்டித்தனராம். ஆனாலும், பாபுவும், தீபாவும் தொடர்ந்து பழகி வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி தீபாவின் சகோதரர் பிரதீப், தனது நண்பர்கள் சிலருடன் சென்று டிரைவர் பாபுவைக் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரதீப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து பாபுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1-ம் தேதி பாபுவின் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு, மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி கொடைக்கானல் வந்துள்ளார். டம்டம் பாறை, நண்டாங்கரை பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் சடலத்தை வீசிவிட்டு அவர்கள் சென்னை திரும்பிவிட்டனர். இந்நிலையில், தனது மகன் சில நாள்களாக வீட்டுக்கு வரவில்லை என, தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று பாபுவின் தாயார் கூறியுள்ளார். ஆனால், அவரது அலுவலகத்தில் இருந்தவர்கள் சரியான பதிலைக் கூறவில்லையாம்.

இதையடுத்து, தனது மகனைக் காணவில்லை என சென்னை போலீஸôரிடம் பாபுவின் தாயார் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸôர் விசாரணை நடத்தியதில், தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீப் மற்றும் நண்பர்கள் சேர்ந்து டிரைவர் பாபுவைக் கொலை செய்து கொடைக்கானல் மலைப்பகுதியில் சடலத்தை வீசியதை ஒப்புக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸôர், கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை கொடைக்கானல் வந்தனர். மலைப் பகுதியான வாழைகிரி, டம்டம் பாறை ஆகிய இடங்களில் தேடினர். தேடுதல் பணியில் கொடைக்கானல் போலீஸôர், வனத்துறையினர், ஆதிவாசிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், நண்டாங்கரை அருகே மலைப்பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தாக்கில் பாபுவின் சடலம் கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு, தேவதானப்பட்டி போலீஸôரால் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

.....தினமணி 11.07.2010

nambi
11-07-2010, 07:29 AM
ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 11) மாலை ஜோஹன்னர்ஸ் பர்க் நகரின் சாக்கர் சிட்டி அரங்கத்தில் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியோடு கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த கோலாகல கால்பந்து திருவிழா முடிவுக்கு வருகிறது.

நடப்பு ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இதற்குமுன் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்ததே இல்லை.

நெதர்லாந்து அணியோ ஏற்கனவே 1974 மற்றும் 1978 என்று இரண்டு தடவை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வந்திருந்தாலும், அது ஒரு தடவைக்கூட பட்டம் வென்றதில்லை. 1974ல் ஜெர்மனியிடமும் 1978ல் அர்ஜெண்டினாவிடமும் அந்த அணி தோற்க நேர்ந்திருந்தது.

ஆகவே இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணி கால்பந்தாட்டத்தின் புதிய உலக சாம்பியனாக வலம் வரும்.

....பிபிசி தமிழோசை

nambi
11-07-2010, 07:37 AM
சென்னை : இன்று சூரியனைச் சுற்றி திடீ*ரென இருள்வட்டம் ஒன்று ஏற்பட்டது. சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரிவிந்த இந்த வித்யாசமான சூரிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்தனர். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக இந்த இருள் வட்டம் ஏற்பட்டள்ளதாக பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. வெறும் கண்ணால் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றிலே ஈரப்பதம் இருக்கும் போது இந்த மாதிரி வட்டம் வழக்கமாக தெரியும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆரய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெறும் கண்ணால் பார்க்கவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்...11.07.2010

ஓவியன்
11-07-2010, 07:53 AM
அப்புறம் அதற்கான செலவுகளை வாங்குவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பின்னாடி அலைந்து கொண்டிருக்கவேண்டும்..அதுவும் முழுத்தொகை கிடைக்காது.

உண்மைதான், அப்பாவி நோயாளிகள் அல்லாடப் போகிறார்கள். அது சரி, கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் இந்த புதிய நடைமுறைக்குள் உள்ளடங்குமா..??

nambi
12-07-2010, 12:12 PM
பெங்களூர், ஜூலை 12- பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தா நேற்று மாலை "சுதந்திரம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று மாலை 5 மணியளவில் பெங்களூர் பிதாதியில் உள்ள நித்யானந்தா தியானபீட ஆசிரமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த பல்வேறு நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து 80 நாட்களுக்குப் பிறகு நேற்று முதன்முறையாக சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவின்போது, நித்யானந்தா தனது சிறை அனுபவங்களை நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினார். இதனால் பக்தர்களிடையே அவ்வப்போது பலத்த சிரிப்பொலி எழுந்தது.

நித்யானந்தா ஆங்கிலத்தில் உரையாற்றினார். சுதந்திரம் என்ற தலைப்பிலான அவரது நேற்றைய உரையிலிருந்து...

"சுயமாகவே சாமியார் என்று அறிவித்துக்கொண்டவர், சர்ச்சைக்குரிய சாமியார், நித்தி என்பது உட்பட பல அடைமொழிகளை எனக்கு ஊடகங்கள் வழங்கின. விஷ்ணுவுக்கு ஆயிரம் பெயர்கள் உள்ளது போலவே இந்த அடைமொழிகளையும் நான் கருதுகிறேன்.

உலகளவில் ஏராளமானோர் பார்வையிட்டதால் இணையதளத்தில் இருமுறை பெரும் நெருக்கடி ஏற்பட்டது. மைக்கேல் ஜாக்சன் மரணத்தின்போது மற்றும் எனது பரபரப்பான விடியோ காட்சி வெளியான போதும்... ஆனால், இந்த அந்தஸ்தை பெற மைக்கேல் ஜாக்ஸன் பாடினார், ஆடினார், மரணத்தையும் சந்தித்தார். ஆனால், நான் இவற்றில் எதையும் செய்யாமலேயே அந்த தகுதியை எட்டியுள்ளேன்.

ஆசிரமம் நெருக்கடியை சந்தித்தபோது, எனது சீடர்கள் மீதான சமூக மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல் வருத்தமளிப்பதாக இருந்தது. ஆனாலும், அவர்கள் அமைதியையும் அகிம்சையையும் கடைபிடித்து தடைகளை எதிர்கொண்டனர். அவர்களது தியாகம் எனக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

நீங்கள் எதை சுதந்திரம் என்று நம்புகிறீர்களோ அதை பின்பற்றுகிறீர்கள். பணம், அரசியல் ஆகியவை சுதந்திரத்தை தருவதாக நம்பினால் அதையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.

சுதந்திரத்தை விரும்பும் சமூகம் அரசியல் தலைமையை நோக்கி முன்னேற வேண்டும். அகத்தின் சுதந்திரத்தை தேடுவோர் ஆன்மிகத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

உண்மையான சுதந்திரம் என்பது புறச்சூழல்களில் இருந்து கிடைப்பதல்ல. உள்ளுக்குள்ளேயே உள்ளது."

இவ்வாறு நித்யானந்தா தனது சொற்பொழிவின்போது குறிப்பிட்டார்.

.....தினமணி 12.07.2010

nambi
12-07-2010, 12:18 PM
நேற்று நடந்த இந்த ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்தவர்களில் நடிகை மாளவிகாவும் ஒருவர். நித்யானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா.

....தினகரன் 12.07.2010

nambi
12-07-2010, 12:22 PM
சென்னை: சென்னையில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானமும் ஏர் இந்தியா விமானமும் வானில் மோதிக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்ச சம்பவம் இன்று தான் வெளியி்ல் வந்துள்ளது.

142 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் (9W 2119) மும்பைக்கு சென்றது. அதே போல ஏர் இந்தியா விமானமும் (IC 174) 70 பயணிகளுடன் மும்பை சென்றது.

இரு விமானங்களும் ஒரே சமயத்தில் மும்பையை நெருங்கிய நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தை 11,000 அடி உயரத்துக்கு குறைக்குமாறு தரைக் கட்டுப்பாட்டு நிலையம் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த விமானம் உயரத்தைக் குறைத்தது. அப்போது அந்த விமானத்தின் எச்சரிக்கை மணி (Collision Avoidance System) ஒலித்தது. இதையடுத்து மிக அருகில் இன்னொரு விமானம் இருப்பதை உறுதி செய்து கொண்ட விமானிகள் உஷாராயினர்.

அதே போல ஏர் இந்தியா விமானத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்கவே, அந்த விமானிகளும் உஷாராகினர்.

இதையடுத்து இரு விமானங்களின் விமானிகளும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இந்தத் தகவலை தந்ததையடுத்து அவர்களுக்கு வெவ்வேறு உயரங்களில் புதிய பாதைகள் தரப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த விமானங்கள் திசை திருப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து இரு விமானங்களும் அபாயகரமாக மிக அருகருகே ஒன்றை ஒன்று கடந்து சென்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இரு விமானங்களும் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கின. இதனால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

....தட்ஸ்தமிழ் 12.07.2010

nambi
12-07-2010, 12:26 PM
சென்னை : சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், இன்று காலை 9.22 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

கார்ட்டோசாட் - 2 பி செயற்கைக்கோள் மற்றும் அல்சாட் - 2ஏ, ஐசாட் - 1, டிசாட் - 1, ஸ்டட்சாட் ஆகிய துணை செயற்கைக் கோள்களுடன், பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத் தின் முதல்தளத்திலிருந்து ஏவப்பட்டது.

இதற்கான, "கவுன்ட்டவுண்' நேற்று முன்தினம் காலை 6.52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், 44.4 மீட்டர் நீளமும், 230 டன் எடையும் கொண்டது. பூமியிலிருந்து 630 கி.மீ., தொலைவில், கார்ட்டோசாட் - 2பி செயற்கைக்கோளை, அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்ட்டோசாட் - 2பி செயற்கைக் கோள் 694 கிலோ எடை கொண்டது. இதில் 0.8 மீட்டர் அள விற்கு பகுப்பு திறன் கொண்டகேமரா பொருத்த பட்டுள்ளது. இதன்மூலம் 9.6 கி.மீ., நிலப்பரப்பை ஒரே நேரத்தில் படம் பிடிக்க முடியும். 64 "ஜிகா பைட்ஸ்' கொள்ளளவு கொண்ட திடநிலை பதிவுகளையும் இதில் எடுக்க இயலும். விண்வெளி கட்டுப் பாட்டு மையத்திற்கு, கார்ட்டோசாட் - 2 செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங் கள், கிராம,நகர்ப்புற கட்டமைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடுதிட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும். புதிய நீர் வளங்கள், மாங்குரோவ் காடுகள், சுரங்கங் கள் பற்றிய தகவல்களை பெறவும் பயன்படும்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி, ஜிசாட் - 4 செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி - டி.எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அந்த முயற்சி தோல்வியடைந்ததற்கு பின் முதல் முறையாக, பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

.....தினமலர் 12.07.2010

nambi
12-07-2010, 12:31 PM
ஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று இரண்டு விருது கள் கிடைத்தன. சிறந்த இளம் வீரருக்கான விருது மற்றும் கோல்டன் பூட் விருது ஆகியவற்றை அவர் தட்டிச் சென்றார்.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் இந்த விருதுகளுக்குக் கடும் போட்டி நிலவி வந்தது. ஜெர்மனியின் குளோஸ், ஸ்பெயினின் வில்லா உள்ளிட்ட சிலர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சிறந்த வீரர் டியகோ போர்லான்

சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை உருகுவே வீரர் டியகோ போர்லான் தட்டி்ச் சென்றார். உருகுவேயின் சிறப்பான ஆட்டத்திற்கு போர்லானின் பங்கு மிகப் பெரியது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார்.

2வது இடம் நெதர்லாந்தின் ஸ்னீடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கும் கிடைத்தது.

அதிக கோல்கள் அடித்தவர் தாமஸ் முல்லர்

அதிக கோல்கள் அடித்த வீரராக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் ஐந்து கோல்கள் அடித்திருந்தார். இதுதவிர 3 கோல்கள் கிடைக்கவும் இவர் காரணமாக இருந்தார்.

இதன் காரணமாக டேவிட் வில்லா, ஸ்னீடரை முந்திக் கொண்டு விருதை தட்டிச் சென்றார். இந்த இருவரும் கூட தலா ஐந்து கோல்களைப் போட்டிருந்தனர். இருப்பினும் தத்தமது அணிகளுக்கு தலா ஒரு கோல் கிடைக்க மட்டுமே இவர்கள் உதவியாக இருந்ததால், முல்லருக்கு விருது கிடைத்தது.

சிறந்த கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ்

சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை தட்டிச்சென்றார் ஸ்பெயின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. இந்த சிறப்புக்கு இகர் கேசில்லாஸின் சிறப்பான செயல்பாடே காரணம்.

சுவிட்சர்லாந்திடம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஸ்பெயின். இதனால் கேசில்லாஸ் விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அடுத்து வந்த அத்தனை போட்டிகளிலும் ஸ்பெயின் பிரமாதமாக ஜெயித்தது. ஒரு கோல் கூட ஸ்பெயினுக்கு எதிராக விழாமல் அட்டகாசமாக கீப்பிங்கை செய்தார் இகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இளம் வீரர் தாமஸ் முல்லர்

சிறந்த இளம் வீரருக்கான விருதும் ஜெர்மனியின் முல்லருக்கே கிடைத்தது. ஜெர்மனி அணி 3வது இடம் வரை வந்ததற்கு முல்லரின் ஆட்டமே முக்கிய காரணம். இந்தத் தொடர் முழுவதும் முல்லர் படு விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டி அசத்தியிருந்தார்.

நேர்மையான ஆட்டம் தந்த அணி ஸ்பெயின்

சிறந்த ஃபேர்பிளே விருது ஸ்பெயின் அணிககே கிடைத்தது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் இனியஸ்டா

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் ஆன்டிரஸ் இனியஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்ட கோல்தான் ஸ்பெயினுக்கு கோப்பையை வாங்கித் தந்தது என்பதால் இந்தப் பரிசு.

.....தட்ஸ் தமிழ் 12.07.2010

nambi
12-07-2010, 12:37 PM
கொழும்பு, ஜூலை 11: இலங்கையில் பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பாக அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிபருக்கு உள்ள அதிகாரங்களிலிருந்து எவற்றையெல்லாம் பிரதமருக்கு அளிப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதுகுறித்து பேசித் தீர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் தற்போது பிரதமரைவிட அதிபருக்குதான் கூடுதல் அதிகாரம் உள்ளது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியை வகிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக அதிபருக்கு உள்ள அதிகாரத்தை மாற்றி பிரதமருக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச முடிவு செய்தார். தற்போது அதிபருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பிரதமருக்கு அளிக்க ராஜபட்ச விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் மாகாணங்கள் அனைத்தும் பிரதமரின் அதிகாரத்துக்குள்பட்டதாக இருக்க அவர் விரும்புகிறார். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜபட்ச அவருடன் பேச்சு நடத்தி உள்ளார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதன் ஷரத்துகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், மீண்டும் திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருவரும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மூத்த அமைச்சர்களுக்கும் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பெறவேண்டியுள்ளதால் கருத்தொற்றுமை காண அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமர் பதவியைப் பிடிக்க ராஜபட்ச திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

.....தினமணி 12.07.2010

nambi
12-07-2010, 12:40 PM
புதுடெல்லி, ஜுலை.12-

இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்காக அதிகரித்துள்ளது. 2009-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 119 கோடியே 80 லட்சம் மக்களும், சீனாவில் 134 கோடியே 50 லட்சம் மக்களும் இருந்தனர். இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை அதிகரித்தது.

எனவே, இதே வீதத்தில் சென்றால் 2050-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை விட 2026-ம் ஆண்டில் கூடுதலாக 37 கோடியே 10 லட்சம் மக்கள் அதிகரித்து விடுவார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருப்பார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 13 சதவீதம் பேர் இருப்பார்கள்.

அதே நேரத்தில், பாகிஸ்தானை பொறுத்தவரை 2009-ம் ஆண்டில் 18 கோடி மக்கள் தொகை இருந்தது. அங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி...12.07.2010

nambi
13-07-2010, 01:30 PM
ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.

பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் நாட்டில் வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.

இவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் கால்வாசிபேர் வாழ்கின்றனர்.
....பிபிசி தமிழோசை 13.07.2010

nambi
13-07-2010, 01:37 PM
டெல்லி: ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான மக்கள் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.

2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.

படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.

இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.

உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.

5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்.

.....தட்ஸ் தமிழ் 13.07.2010

nambi
14-07-2010, 11:53 AM
புது தில்லி, ஜூலை 13: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படும்.

மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து விலை நிர்ணயம் செய்யும்.

பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயர்ந்தது. தற்போது சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறைச் செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்ட போதிலும் அது இன்னமும் அரசின் விலைக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதன் விலையில் மாற்றம் இருக்காது.

இந்த மாதம் மட்டும் ஒரு முறை விலை மாற்றம் மேற்கொள்ளப்படும். இனி ஆகஸ்ட் மாதம் முதல் இருமுறை விலை மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி விலை உயர்வு மாதத்தில் 2-ம் தேதியும் 17-ம் தேதியும் மாற்றியமைக்கப்படும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றியமைக்கும் விலை நிலவரத்தை தனியார் துறை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸôர், ஷெல் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி விலை நிர்ணயம் குறித்து தெரிவிக்க முடிவு செய்துள்ளன.

தொடக்கத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைப்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முறை அமல்படுத்தப்பட்டது.

விமான எரிபொருள் விலை 2002-ம் ஆண்டிலிருந்தே சந்தை நிலவரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் 15 நாள்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. இந்த நடைமுறை ஏறக்குறைய 21 மாதங்களுக்கு அமலில் இருந்தது. பின்னர் பொதுத்தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இதையே தொடர்ந்தது. தற்போது கடந்த மாதம் 25-ம் தேதி பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 மட்டுமே உயர்த்தப்பட்டது. சர்வதேச விலை நிலவர விலையைக் காட்டிலும் தற்போது லிட்டருக்கு ரூ. 1.80 குறைவாக டீசல் விற்கப்படுகிறது.

....தினமணி 14.07.2010

nambi
14-07-2010, 11:59 AM
புதுதில்லி, ஜூலை 13: வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் உணவுக்கு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு தானியம் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. இந்த தகவலை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.

உணவு அமைச்சகம் சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப்பேசிய ரங்கராஜன் இந்த தகவலை தெரிவித்தார்.

உத்தேச உணவுக்கு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் வசதிபடைத்தவர்கள் என்ற பிரிவில் வரும் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் பெறுவதை சட்ட உரிமையாக கோரலாம் என்றார் ரங்கராஜன்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 30 கிலோ, வறுமைக் கோட்டுக்கு மேல் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 15 கிலோ உணவு தானியம் மாதந்தோறும் வழங்கலாம் என்ற மாற்று யோசனையும் தெரிவிக்கப்படுகிறது. இப்படி செய்யும்போது அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச உணவு தானியம் கிடைக்க உத்தரவாதம் கிடைத்துவிடும் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு கிலோ ரூ. 3 விலையில் அரிசி அல்லது கோதுமை கிடைப்பதை உறுதி செய்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உத்தேசித்துள்ள உணவு உத்தரவாத சட்டம். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் இதை சட்ட உரிமையாக கோரலாம். எனினும் இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எவ்வளவு உணவு தானியம் வழங்குவது என்பது இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் 25 கிலோ உணவு தானியம் வழங்கலாம் என்பது முன்பே தெரிவிக்கப்பட்ட யோசனை.

இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பேதம் பார்க்காமல் அனைவருக்குமே மானிய விலை உணவு தானியங்களை வழங்கலாம் என இடதுசாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன.

இப்படி அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கினால் அது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு வேறு விலை, வசதி படைத்தவர்களுக்கு வேறு விலை என நிர்ணயம் செய்வதே உகந்ததாக இருக்கும் என்று இந்த மாநாட்டில் ரங்கராஜன் கூறியுள்ளார்.

இப்போதைய நிலையில் 6.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழும் 11.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலும் வசிக்கின்றன.

உத்தேச உணவுக்கு உத்தரவாத சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதற்கு தகுதியான குடும்பங்கள் எவ்வளவு உள்ளன, மாதத்துக்கு இந்த குடும்பங்களுக்கு எவ்வளவு உணவு தானியம் வழங்குவது என்பதைப் பற்றியெல்லாம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழு ஆராய்ந்து வருகிறது.

உணவுக்கு உத்தரவாத சட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களையும் சேர்த்தால் உணவு தானிய தேவை 5 கோடி டன்னாக இருக்கும் என்று ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிப்பதை வைத்தே உணவுக்கு உத்தரவாத திட்டம் வெற்றிகரமாக அமையும் என்றும் ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.

...தினமணி 14.07.2010

nambi
14-07-2010, 12:12 PM
திருவனந்தபுரம், ஜூலை 14- கேரளா மாநிலத்தின் பெயரை "கேரளம்" என்று மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

இன்று காலை சட்டப்பேரவையில் அவர் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.

எனினும், நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆலோசனைகள், விவாதங்கள் ஆகியவற்றை நடத்தி அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

மலையாளத்தில் "கேரளம்" என்று தான் உச்சரிக்கப்படுகிறது. அம்மொழியில் எழுதும்போதும் அவ்வாறு தான் குறிப்பிடப்படுகிறது.

எனவே, மாநிலத்தின் பெயரை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

....தினமணி 14.07.2010

nambi
14-07-2010, 12:16 PM
சென்னை: வருமான வரித்துறையி்ல் தனியார்மயமாக்கலை எதிர்த்து நாளை அந்தத் துறையின் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு பொறுப்பாளர்கள் விவேகானந்தன், சேஷாத்திரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வருமான வரித்துறை சார்ந்த பணிகளை தனியாரிடம் விட மாட்டோம் என்று ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களுடன் மத்திய நேரடிவரி வாரியத்துடன் 2007ம்ஆண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இன்போஸிஸ் வசம் பணி:

ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி வருமான வரிப் படிவங்கள் பரிசீலிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகள் இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, பான் கார்டு வழங்கும் வரி பிடித்தம் செய்யும் படிவங்களை சமர்ப்பிக்கும் பணியும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது.

2010-2011ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட வேண்டிய நேரடி வரி ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடியாகும். வேலைப் பளு அதிகரித்து வரும் நிலையில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேவை. ஏற்கனவே 15,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன.

வருமான வரித்துறையில் பல்வேறு கேடர் பதவிகள் 6வது ஊதியக் குழுவில் ஒன்றாக்கப்பட்டுவிட்டன. இந்த துறையில் இருக்க வேண்டிய கேடர்களையும், பதவி எண்ணிக்கைகளையும் அவற்றுக்கான சம்பள விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், வருமான வரித்துறையில் தனியார்மயமாக்கலை கண்டித்தும் நாடு தழுவிய அளவில் நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
...தட்ஸ் தமிழ் 14.07.2010

nambi
14-07-2010, 12:19 PM
லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.

'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது.

எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகளை வீசலாம், குண்டுகளை வீசித் தாக்கலாம்.

விமானத்தில் உள்ள கேமராக்கள் உதவியோடு தரைக் கட்டுப்பாட்டு அறையின் திரையில் விமானத்தின் பாதையை தீர்மானிக்கலாம், மாற்றலாம். விமானம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை உடனுக்குடன் அறியலாம். தாக்க வரும் விமானத்தை, ஏவுகணையை எதிர்த்து எவுகணையை செலுத்தலாம்.

விமானியின் துணை இல்லாமலேயே, மிக நீண்ட தூரம், கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் திறன் வாய்ந்த இந்த விமானம் போர் விமானங்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இதுவரை ஆளில்லா உளவு விமானங்கள் தான் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சமீப காலமாக ஏவுகணைகளையும் பொறுத்தி அவ்வப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் குண்டுவீ்ச்சையும் நடத்தி வருகிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் ராணுவத் தளங்களில் இருந்து கிளம்பும் இந்த விமானங்களை அமெரிக்காவில் இருந்தபடி பாதுகாப்புத்துறையினர் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் முழுக்க முழுக்க ஆளில்லாமல் இயங்கும் இந்த 'தரானிஸ்' போர் விமானத்தையே இங்கிலாந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'தரானிஸ்' என்றால் இடியைக் குறிக்கும் கடவுளின் பெயராம்!
.....தட்ஸ் தமிழ் 14.07.2010

nambi
15-07-2010, 07:16 AM
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கின்போது, போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

என்ஜீனியரிங் கவன்சிலிங்கின்போது 41 மாணவ,மாணவியர் போலியான மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவர்களில் 3 பேருக்கு கல்லூரிகளில் சீட்டும் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளனர். ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் கொடுத்து இந்த போலி மதிப்பெண் சான்றிதழை இவர்கள் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று சென்னை போலீஸார் வழக்குப்ப பதிவு செய்துள்ளனர். மோசடி, போலி ஆவணம் தயாரித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி மதிப்பெண் பட்டியலை தயாரித்துக் கொடுத்த கும்பலைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிபிஐ வளாகத்தில் போலி சான்றிதழ் விநியோகம்-மாணவர்கள்:

போலி மதிப்பெண் சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ள மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில்தான் தான் கிடைத்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள சிலருக்கும், இந்த மோசடிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து மதிப்பெண் பட்டியல் பணிகள் தொடர்பான அதிகாரிகள் சிலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

குறைந்த மதிப்பெண்களை திருத்தி கூடுதலாக்கிக் கொடுத்து அவர்கள் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

அமைச்சர் பேட்டி:

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் 41 மாணவர்கள் போலியான பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது வருத்தத்துக்குரியதாகும். அவர்களில் முதல் கட்டமாக 5 மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்.

விடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்கள் சமர்ப்பித்த மதிப்பெண்களுக்கும், அரசுத் தேர்வுத்துறை வழங்கிய மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சான்றிதழ்களில் கையொப்பம் இட்ட அதிகாரியின் பெயரும் மாறி இருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர், மாணவர்களுக்கு போலியான இருப்பிடச் சான்றிதழ் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் மீது, அவர்கள் எந்த பகுதியில் இருந்து விண்ணப்பம் அனுப்பி இருந்தார்களோ அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை போலீஸ் விசாரணை மூலம் கண்டறியப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைக்கும். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் பதற்றத்துடன் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 4-ந் தேதி தொடங்கிய என்ஜினீயரிங் கவுன்சிலிங் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 14-ந்தேதி 9 மணி நிலவரப்படி கவுன்சிலிங்குக்கு 25 ஆயிரத்து 64 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 20 ஆயிரத்து 843 பேர் சேர்ந்துள்ளனர். `கட் ஆப்' மார்க்கில் 90 சதவீதம் மார்க்கு எடுத்த மாணவர்களில் இதுவரை 100 பேர் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவில் சேர்ந்துள்ளனர்.

தமிழ் வழியில் உள்ள 1380 இடங்களும் நிரம்பிவிடும் என்று நினைக்கிறேன். தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழ் வழியில் தொடங்கவேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். அவ்வாறு தொடங்க விரும்புபவர்கள் ஏ.ஐ.சி.டி.இ.யில் அனுமதி பெறவேண்டும்.

தமிழ் வழியில் நடத்தப்பட உள்ள கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் பாடங்களுக்கு வரவேற்பு இருந்தால் மற்ற பாடங்களையும் தமிழ் வழியில் தொடங்கப்படும். என்ஜினீயரிங் தேர்வை ஆங்கிலத்திலும் எழுதலாம். தமிழிலும் எழுதலாம். ஆங்கிலமும் தமிழும் கலந்தும் எழுதலாம். இதற்கான அனுமதியை முதல்வர் கருணாநிதி வழங்கி உள்ளார் என்றார்.

தங்கம் தென்னரசு ஆலோசனை:

முன்னதாக போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கல்வித்துறை அதிகாரிகள் அனைவரையும் அழைத்து பேசினார்.



தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,

போலி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க ஏற்கனவே மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், சட்டக்கல்வி, வேளாண்மை படிப்பு ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தும் அதிகாரிகளுக்கு ஒரிஜினல் பிளஸ்-2 மார்க் அடங்கிய சி.டி. அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மறு மதிப்பீடு மறு கூட்டலுக்கு பிறகு ஏற்பட்ட வித்தியாசமான மார்க் அடங்கிய சி.டி.க்களும் அதே அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த சி.டி.க்களை கொண்டுதான் போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும். போலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் தயாரித்தவர்கள் யார், யார்? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பதை போலீசார் கண்டறிவார்கள்.

இந்த சி.டி.க்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும், அனைத்து பாலிடெக்னிக்களுக்கும், சட்டக்கல்லூரிகளுக்கும் மற்றும்பல கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. இந்த சி.டி.யில் உள்ள மார்க்கையும் மாணவர்கள் கொண்டுவரும் மார்க்கையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். மாற்றம் இருந்தால் தேர்வுத் துறைக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில்,

தேர்வு அறையில் காப்பி அடித்தால், அவர்களுக்கு அதிக பட்சம் 2 வருடம் தேர்வு எழுத முடியாது. ஆள்மாறாட்டம் செய்தால் 5 வருடம் தேர்வு எழுத முடியாது. ஆனால் போலி மார்க் பட்டியல் தயாரிப்பது பெரிய குற்றம்.

போலி மார்க் பட்டியல் கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். அவை செல்லுபடியாகாது. எந்த கல்வி நிறுவனத்திலும் சேரமுடியாது. அவர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களின் நம்பரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மோசடி குறித்து போலீசார் முழுமையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைப்பார்கள் என்றார்.

தற்போது சிக்கியுள்ள 41 பேரில் 2 பேர் மாணவிகளாவர். இவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர். இன்னொருவர் விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்தவர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்களது பிள்ளைகள் என்ஜீனயரிங்கில் சேர வேண்டும் என்பதற்காக இவர்களின் பெற்றோர்கள்தான் மதிப்பெண்ணைத் திருத்தி மோசடி செய்ததாக தெரிகிறது.

அடுத்தடுத்து 4 சான்றிதழ் கொடுத்த கர்நாடக மாணவர்:

இந்த நிலையில் கர்நாடகத்தில் பிளஸ்டூ படித்த தமிழகத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற மாணவர் அடுத்தடுத்து நான்கு சான்றிதழ்களைக் கொடுத்ததால் அவை அனைத்தும் உண்மையானவையா என்பதை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அருண்குமார் பொறியியல் கவுன்சிலிங்குக்கு 423 மார்க் கொண்ட சான்றிதழை சமர்ப்பித்தார். கையினால் எழுதப்பட்ட அந்த சான்றிதழ் ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சிடப்பட்ட சான்றிதழை அனுப்பி வைத்தார்.

பின்னர் மீண்டும் கையால் எழுதப்பட்ட 523 மார்க் கொண்ட மற்றொரு சான்றிதழை அனுப்பினார். இதை ஏற்க முடியாது என கூறப்பட்டதைத் தொடர்ந்து அதன் அச்சிடப்பட்ட சான்றிதழை அனுப்பினார்.

இப்படி நான்கு சான்றிதழ்களை அவர் சமர்ப்பித்ததால், அவை உண்மையானவையா என்பதை அறிய அவற்றை கர்நாடக கல்வி வாரியத்தின் விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

.....தட்ஸ் தமிழ் 15.07.2010

nambi
15-07-2010, 07:18 AM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு சொந்தமான 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது.

இந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர்.

இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது:

நேற்று அதிகாலையில் நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு சுமார் 15 ஆஸ்திரேலிய இளைஞர்கள் பைக்குகளில் வந்தனர். அவர்கள் எங்கள் 3 கார்களை அடையாளம் கண்டுகொண்டு அடித்து நொறுக்கிவிட்டு, கார்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்து விட்டுச் சென்றனர்.

எங்களின் தங்குமிடம் மற்றும் வாகனங்களை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே தான் தீ வைத்துள்ளனர்.

இது மட்டுமின்றி எங்களுக்கு வரும் கடிதங்களை திருடுவதும், இனவெறி வாசகங்கள் மற்றும் படங்களை வீட்டு வெளிச்சுவரில் வரைவதும் என எங்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

கடந்த 3 மாதங்களில் இந்திய மாணவர்களின் 12 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

....தட்ஸ் தமிழ் 15.07.2010

nambi
15-07-2010, 07:21 AM
இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழும் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கொலராடோ பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் ஆய்வுக்கான தேசிய நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்து சமுத்திரத்தில் கடல் மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

பசுமைக்குடில்வாயு வெளியேற்றமும் கடல் மட்டம் மேலெழுந்து வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

வங்காள விரிகுடா, அரபுக்கடல், இலங்கை, சுமத்ரா, ஜாவா பிராந்தியங்களின் கடல் மட்டம் மேலெழுவதை காலநிலை மாற்றம் வெளிப்படுத்துகிறது.

ஆபிரிக்காவின் கிழக்கு கரை தொடக்கம் பசுபிக்கின் சர்வதேச எல்லைக்கோடுவரையிலான பரந்த சமுத்திரப் பகுதியானது 1 பரனைட்டாக அல்லது 0.5 சதமபாகை வெப்பமடைந்துள்ளது. இது கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட மாற்றமாகும் என்று இந்த ஆய்வுக்கு தலைமைதாங்கிய சியூபோஸ்டரின் இணைப் பேராசிரியர் வெய்கிங்ஹான் தெரிவித்ததாக ஏ.என்.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.

இதேவேளை, சீ செல்ஸ்தீவுகள் மற்றும் தான்சானியாவின் சன்சிபார் கரைப்பகுதிகளில் கடல்மட்டம் குறைவடைந்திருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றாடல் மாற்றங்களுக்கு காரணமான மனிதர்களின் செயற்பாடுகள் மற்றும் கடல் சுற்றோட்டம் என்பன இந்து சமுத்திரத்தில் காணப்படுவதை எமது புதிய பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன. இது பிராந்தியத்தில் கடல் மட்ட மாற்றத்துக்கு பிரதான காரணமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையை தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.

இந்து சமுத்திர கிழக்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்றும் மேற்குப் பிராந்தியம் கடும் வரட்சியை எதிர்நோக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடல்மட்டத்தின் பிராந்திய ரீதியிலான மாற்றத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.கரையோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் இவை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
....தினக்குரல் 15.07.2010

nambi
15-07-2010, 07:24 AM
சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

வைகோ மீது ஜாமீனில் வர முடியாத வழக்கு

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது.

....தட்ஸ் தமிழ் 15.07.2010

nambi
15-07-2010, 07:28 AM
வாஷிங்டன், ஜூலை 14: அமெரிக்காவில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ஹைதராபாதைச் சேர்ந்த அருண் குமார் (26) என்ற மாணவர் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விர்ஜீனியாவில் உள்ள ஸ்ட்ராட்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பு படித்துவந்தார் அருண் குமார் நரோத். கல்வி செலவுக்காக அவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் காசாளராகப் பகுதிநேரமாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மளிகை கடையில் பணியில் இருக்கும் போது அக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த இரு நபர்கள் அருண் குமாரை சுட்டுவிட்டு, கடையில் அவர் வசம் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனர்.

தலையில் குண்டுதுளைத்த நிலையில் அருண் குமார் துடிதுடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் சக ஊழியர்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர்.

உடனே போலீஸôர் விரைந்து வந்து அருண் குமாரின் உடலை மீட்டனர்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

துப்பாக்கியுடன் வந்தவர்கள் அருண் குமாரை கொன்றுவிட்டு கடையில் இருந்த பணத்தை அள்ளிச் சென்றதால் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.

எனினும், இந்தக் கொலை சம்பவத்தை பல்வேறு கோணத்தில் போலீஸôர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை சம்பவத்துக்கு வடஅமெரிக்க வாழ் தெலுங்கு மக்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள இந்திரா ரெட்டி நினைவு பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து முடித்த பின்னர் எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் அருண் குமார். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர் படிப்பை முடிக்க இருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அருண் குமாரின் குடும்பத்தார் ஹைதராபாதில் உள்ள கர்வான் பகுதியில் வசித்து வருகின்றனர். அவரது தந்தை தோந்திபா ராவ் ஓய்வு பெற்ற ஆசிரியர். தாயார் சகுந்தலா.

தனது மகன் கொலை செய்யப்பட்டது அறிந்து அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

....தினமணி 15.07.2010

nambi
15-07-2010, 07:34 AM
விஜய் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உ*ரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விஜய்யின் கடந்த ஐந்துப் படங்கள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ*ரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே குற்றம் சாற்றியிருந்தது. இதற்கு நஷ்டஈடாக 35 சதவீத பணத்தை விஜய் திருப்பித்தர வேண்டும் எனவும் அவர்கள் கோ*ரியிருந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உ*ரிமையாளர்கள் சங்கத்தின் அவசர*க் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று விஜய் 35 சதவீத நஷ்டஈடு தரும்வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எ*ன்பது.

அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் தங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ*ரிமையாளர்கள் தெ*ரிவித்தனர். இந்த திடீர் முடிவால் விஜய் நடிப்பில் வெளிவரயிருக்கும் காவல் காதல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
....வெப்துனியா 14.07.2010

nambi
15-07-2010, 07:57 AM
சென்னை : மின்வாரிய தலைமை இன்ஜினியர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில், படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள் சிக்கியுள்ளன.

வீட்டில் நடத்திய சோதனையில் 22 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது. இது தவிர பல கோடி ரூபாய் மதிப்புள்ள 34 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீனிவாசகன் அவர் பெயரிலும் அவரது உறவினர்கள் பெயரிலும் 20 வங்கி கணக்குகள் துவக்கியிருந்தார். அந்த விவரங்களை போலீசார் சேகரித்துக் கொண்டனர்.


அதே போல் கைது செய்யப்பட்ட செயற்பொறியாளர் மதுசூதனன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நேற்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் வீட்டில் சீனிவாசகன், மதுசூதனனை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

"மெப்ஸ்'சில் லஞ்சம் : தாம்பரம் அருகே, "மெப்ஸ்' வளாகத்தில் பல தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில், சி.டி.எஸ்., என்ற நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் உயர் மின்னழுத்த மின் இணைப்பு கொடுத்ததற்கு(எச்.டி.,) ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்.அத்தொகையை தாம்பரம் செயற்பொறியாளர் மதுசூதனன் பெற்று, தலைமை இன்ஜினியர் சீனிவாசகனிடம் கொடுத்துள்ளார். தலைமை இன்ஜினியரின் அறையில் இருந்த அந்த பணம் மற்றும் வேறொருவரிடம் வாங்கிய லஞ்சம் 22 ஆயிரம் சேர்த்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்பே சிக்கினார் : கைதான சீனிவாசகம், தென் மாவட்டத்தில் உதவி இன்ஜினியராக பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போது, லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கினார். பல ஆண்டுகள் போராடி அவ்வழக்கில் இருந்து வெளியே வந்தார். தற்போது இரண்டாவது முறையாக லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார்.

கைதான மின்வாரிய அதிகாரி, பெண்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் பலரிடம் அதிக உரிமை எடுத்து பழகியுள்ளார். அலுவலகம் தவிர, சினிமா வட்டாரத்தில் நடிகைகள், துணை நடிகைகளிடம் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதற்கு, மின்வாரியத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் உடந்தையாக இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

மாதம் 30 லட்சம் : கைது செய்யப்பட்ட மின்வாரிய தலைமை இன்ஜினியர் சீனிவாசகன் அறையில் இருந்து, ஒரு நாள் வசூல் பணம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் சிக்கியது. தலைமை இன்ஜினியருக்கு கீழ், கண்காணிப்பு பொறியாளர்கள்(எஸ்.சி.,), செயற்பொறியாளர்கள்(டி.இ.,), உதவி பொறியாளர்கள்(ஏ.இ.,) என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், தலைமை இன்ஜினியருக்கு வார, மாத "கட்டிங்' கொடுத்தது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்து வந்துள்ளது. கைதான தலைமை இன்ஜினியர், மாதம் 30 லட்சத்திற்கும் குறையாமல் "கட்டிங்' பெற்று வந்ததாக தெரிகிறது.

தலைமை இன்ஜினியர் கைதால், மின்வாரிய தெற்கு பிரிவில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் சந்தோஷமடைந்துள்ளனர். கைதான அதிகாரிக்கு, "கட்டிங்' வசூலித்து கொடுத்த அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

....தினமலர் 15.07.2010

nambi
15-07-2010, 01:47 PM
http://dinamani.com/Images/article/2010/7/15/15rupee.jpg

புதுதில்லி, ஜூலை.15: இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாளக் குறியீடு வழங்கப்பட உள்ளது.

இதற்காக தேவனகிரி ரா(Ra) மற்றும் ரோமன் ஆர்(R) ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரி உதயகுமார் வடிவமைத்த இந்த புதிய குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

ரூபாய் குறியீட்டுக்காக வந்த 3000 வடிவங்களிலிருந்து குமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
....தினமணி 15.07.2010

nambi
15-07-2010, 02:01 PM
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாட்டினம் கனிப் படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.

மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை என்றார்.

இதன் மூலம் உலகளவில் அதிகளவில் பிளாட்டினம் கிடைக்கும் நாடுகளில் இந்தியாவின் தமிழ்நாடு பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிளாட்டினம் தங்கத்தை விட விலையுயர்ந்த கனிமமாக கருதப்படுகிறது. இதனால் அந்த பகுதி வாழ் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

....தட்ஸ் தமிழ்

nambi
15-07-2010, 02:10 PM
''சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் உடனடியாக அணையா விளக்கு அமைக்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற காமராஜரின் 108 வது பிறந்த தினம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தொடக்க விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சுமார் 189 கோடி ரூபாய் செலவில் 200 புதிய உயர்நிலைப் பள்ளிகள், 18 மாதிரி பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகள் கட்டுவதற்குரிய கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

....வெப்துனியா...15.07.2010

nambi
16-07-2010, 06:59 AM
http://img.dinamalar.com/data/large/large_40183.jpg


காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் எஸ்.கே.பி., பிரதர்ஸ் ஜவுளி நிறுவனம் பட்டுப் புழுக்களை கொல்லாமல் தயார் செய்யப்படும் அகிம்சா பட்டு நூலை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பட்டு சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஒரு பட்டுச்சேலை உற்பத்தி செய்ய, சராசரியாக 600 கிராம் பட்டு நூல் தேவைப்படுகிறது. ஒரு கிராம் பட்டு நூல் எடுக்க 15 பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஒரு பட்டு சேலை தயாராக 10 ஆயிரம் பட்டுப் புழுக்கள் வரை கொல்லப்படுகின்றன. இதனால் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டுச்சேலைகள் உடுப்பதில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குசுமாராஜையா என்பவர் பட்டுப்புழுக்களை கொல்லாமலே, பட்டு நூல் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். பட்டுப்புழுக்கள் வளர்ந்து வண்ணத்து பூச்சிகளாக பறக்கும் வரை காத்திருந்து, பின்னர் வண்ணத்து பூச்சி விட்டுச்சென்ற கூட்டிலிருந்து பட்டு நூல் தயாரித்தார். பட்டுப்புழுக்களை கொல்லாமல் தயாரித்த பட்டு நூலுக்கு அகிம்சா பட்டு நூல் எனப் பெயரிட்டார். அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். அவருடன் காஞ்சிபுரம் எஸ்.கே.பி., பிரதர்ஸ் ஜவுளி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் பாலவெங்கடேசன், கோபிநாத் ஆகியோர் அகிம்சா பட்டு நூலை பெற்று, அதனுடன் ஜரிகை சேர்த்து அழகிய பட்டுச் சேலைகளை உருவாக்கியுள்ளனர். முதன் முதலாக இரண்டு பட்டுச் சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இவற்றின் விலை முறையே 10 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் ரூபாய்.

இது குறித்து கோபிநாத் கூறியதாவது: பட்டுச்சேலையில் ஏதேனும் புதுமையை புகுத்த வேண்டுமென எண்ணினேன். அப்போது அகிம்சா பட்டு குறித்த தகவல் கிடைத்தது. அதற்கு காப்புரிமை பெற்றுள்ள ராஜையாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டேன். தற்போது அவரிடமிருந்து பட்டு நூல் வாங்கி சேலைகளை உருவாக்கியுள்ளேன். இச்சேலைகள் ஆரணியில் உருவாக்கப்பட்டது. சாதாரண பட்டு சேலைகளை விட, அகிம்சா பட்டு பயன்படுத்தி சேலை உருவாக்க கூடுதலாக 15 நாட்களாகிறது. செலவும் 2 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாகிறது. எனினும் அகிம்சையை விரும்பும் மக்களிடம் இப்பட்டுச் சேலைகளுக்கு வரவேற்பு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் இச்சேலைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்
.....தினமலர் 16.07.2010

nambi
16-07-2010, 07:07 AM
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தந்தை ச.ராமசாமி என்ற தொல்காப்பியன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.

கடந்த 6 மாதமாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 5ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை, ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் செயலிழந்தது. செயற்கை சுவாச சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.

மறைந்த தொல்காப்பியனின் உடல் சென்னை, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 2வது நிழற்சாலை, எண் ஆர்-62ல் உள்ள தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிற்பகலில் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலையில் அடக்கம் செய்யப்படுகிறது.
...தட்ஸ் தமிழ் 16.07.2010

nambi
16-07-2010, 08:46 AM
புதுடில்லி : இந்திய ரூபாய்க்கு தனிச் சின்னம் கொடுத்த உதயகுமார் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் தஞ்சாவூர். அக்டோபர் 10, 1978ம் ஆண்டு பிறந்த இவர் சென்னை அண்ணா பல்க*லைக் கழகத்தில் பி டெக் படித்தார். பின்னர் மும்பை ஐ.ஐ.டி.,யில் பட்ட மேற்படிப்பு முடித்தார். இன்று முதல் உதயகுமார் கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் துணை விரிவுரையாளராக பணியாற்றவிருக்கிறார்.
....தினமலர் 16.07.2010

nambi
16-07-2010, 02:59 PM
புதுடெல்லி: குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க புதுச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம்நாட்டிலும் கொண்டு வரப்படவுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவம் நம்நாட்டில் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன்(என்சிபிசிஆர்) சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர், ஆசிரியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.5000 அபராதம், இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள், வேலைக்கு வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும். இந்த சட்ட மசோதா, பார்லிமென்ட்டில் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
....தினகரன் 16.07.2010

nambi
17-07-2010, 07:52 AM
சென்னை : போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர், அரசு ஊழியர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மருத்துவக் கல்லூரிக்கான கவுன்சலிங் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. அதில் 10 மாணவ, மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதேபோல பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதிலும் 41 மாணவர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு கவுன்சலிங்கிலும் மறுமதிப்பீடு செய்து வழங்கப்பட்ட சான்றிதழ்களில்தான் இந்த முறைகேடு நடந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில் இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலி சான்றிதழ் கொடுத்தது குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதரிடம் அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புகார் செய்தார். இந்தப் புகார் குறித்த விசாரிக்க கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


விசாரணையில், மருத்துவ கவுன்சலிங்கின்போது, பள்ளிப்பட்டைச் சேர்ந்த அபிராமி என்ற மாணவி 1066 மதிப்பெண் எடுத்திருந்தார். அவரது போலி சான்றிதழில் 32 மதிப்பெண்கள் அதிகமாக இருந்தது. விசாரணையில் அந்த மாணவி, ‘‘டிபிஐ வளாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் ஏகாம்பரம் (57 என்பவர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், புதிய மதிப்பெண் பட்டியல் தருவதாக தெரிவித்தார்’’ என்றார். ஏகாம்பரத்தை பிடித்தபோலீசார் அவரிடமிருந்து 18 போலி மதிப்பெண் பட்டியலை பறிமுதல் செய்தனர்.

அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம என்னுடைய சொந்த ஊர் சென்னை வண்ணாரப்பேட்டை. டிபிஐ வளாகத்தில் உள்ள கல்லூரி இயக்ககத்தில் பியூனாக வேலைக்குச் சேர்ந்தேன். பின் ரெக்கார்டு கிளார்க்காகவும், ஓராண்டுக்கு முன் உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றேன். திருவண்ணாமாலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (60). இவர், தனியார் டியூட்டோரியல் நடத்தி வருகிறார். மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கட்டுவதற்காக அடிக்கடி டிபிஐ வளாகத்துக்கு வருவார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், போலியான சான்றிதழ் தயாரித்து தருகிறேன். நீ ஆள் ஏற்பாடு செய்து கொடுத்தால்போதும். உனக்கும் கமிஷன் தருகிறேன் என்றார். நானும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் வாங்குவேன். அதில் ஆயிரம் ரூபாய் எனக்கு கமிஷன் தருவார். பணத்தை திருவேங்கடத்திடம் கொடுத்தவுடன், ஓரிரு நாளில் மதிப்பெண் சான்றிதழைக் கொடுப்பார். இந்த ஆண்டு இதுவரை 18 பேருக்கு மேல் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள் மருத்துவக் கல்லூரிக்காக வாங்கினார்களா, பொறியியல் கல்லூரிக்காக வாங்கனார்களா என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு ஏகாம்பரம் கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவல்படி டிபிஐ வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த திருவேங்கடம் (60) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


அவர் அளித்துள்ள வாக்குமூலம்: நான் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் மனைவி ஆசிரியையாக உள்ளார். ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் போலி சான்றிதழ் தயாரிப்பதில் கில்லாடியான ஓட்டேரியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் போலி சான்றிதழ் தயாரிக்கும் வித்தையை கற்றுக் கொண்டேன். அவர் இறந்து விட்டார். அதன்பின்னர் நான் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து வந்தேன். டிபிஐ வளாகத்துக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்வந்தபோது, ஏகாம்பரத்தின் பழக்கம் கிடைத்தது. மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்களை அனுகி, ஒவ்வொருவரிடமும் ரூ.5 ஆயிரம் வாங்குவார். அதில் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு ரூ.4 ஆயிரம் கொடுப்பார். நான் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்துக் கொடுப்பேன். கடந்த 8 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆண்டுதான் கண்டுபிடித்து விட்டனர். நானும் மாட்டிக் கொண்டேன்.

இதுவரை 20 பேருக்கு மேல் சான்றிதழ் கொடுத்திருப்பேன். ஆனால் யாருக்கெல்லாம் கொடுத்தேன் என்பது தெரியவில்லை. இவ்வாறு திருவேங்கடம் கூறியுள்ளார். அவரிடம் இருந்து 48 போலி மதிப்பெண் பட்டியலை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு கொடுக்க வைத்திருந்தார். பிடிபட்ட 10 மருத்துவ மாணவர்களில் 2 மாணவி, ஒரு மாணவருக்கு மட்டுமே இவர்கள் இருவரும் சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள 7 மாணவ, மாணவிகளுக்கு கொடுத்த வேறு புரோக்கர்கள் யார்? டிபிஐ அதிகாரிகளுக்கு அல்லது ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஒரிஜினல் போலவே...மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவேன். வீட்டில் மனைவி, மகன் உள்ளனர். அவர்களுக்குத் தெரியாமல் ஸ்கேனரில், மதிப்பெண் பட்டியலை ஸ்கேன் செய்வேன். அப்போது, தேவையான மதிப்பெண்ணை கம்ப்யூட்டரில் திருத்துவேன். பின் திக்கான பேப்பரில் அப்படியே பிரிண்ட் எடுப்பேன். புதிய மதிப்பெண் பட்டியலில் ஒரு பக்கம் ஓட்டை தேவைப்படும். அதற்காக பழைய மதிப்பெண் பட்டியலை வைத்து பஞ்சிங் மிஷின் மூலம் பஞ்ச் செய்து கொடுப்பேன். பார்ப்பதற்கு ஒரிஜினல் போலவே இருக்கும்.


.....தினகரன் 17.07.2010

nambi
18-07-2010, 06:49 AM
சென்னை: கஞ்சாவை கொண்டு சாக்லெட் தயாரித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புழக்கத்தில் விட்ட வேலூரை சேர்ந்தவர், "குண்டர்' சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் 26ம் தேதி உலக போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில், சி.பி.சி.ஐ.டி.,யின் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐ.ஜி., ஆபாஷ்குமார் உத்தரவின்படி, டி.எஸ்.பி.,க்களை தலைமையாக கொண்டு ஏழு தனிப்படை போலீசார் இந்த சோதனையில் கலந்துகொண்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் பீடி, சிகரெட் மற்றும் பீடாவில் கஞ்சாவை கலந்து விற்பனை செய்ததாக மூவர் பிடிபட்டனர். அதில், வேலூரை சேர்ந்த ஆனந்தன் (32) என்பவர் முக்கியமானவர். இவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் இந்த கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா சாக்லெட்டை தயாரித்து வினியோகிப்பது ஆனந்தன் என்பது தெரியவந்தது. கஞ்சாவை நன்றாக அரைத்து அதில், அதிகளவு சர்க்கரை கலந்து சாக்லெட் போன்று தயாரித்து அவற்றை பழைய சாக்லெட் கவர்களில் அடைத்து வினியோகித்துள்ளார். இவற்றை புரோக்கர்கள் மூலம், கடைகளில் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, தனிப்படையினர் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரியின் முன்புள்ள கடைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

சோதனையில் எழும்பூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்ததுடன், 10 ஆயிரம் கஞ்சா சாக்லெட்டையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதால் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருள் சோதனை குறித்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது: இவர்கள் விற்பனை செய்த போதை சாக்லெட்டை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். சிறிய அளவு சேர்த்தால் கூட அதிக போதை தரும் வகையில் சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற போதை சாக்லெட் விற்பனை செய்யப்பட்டால், 2234 1513 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிந்தவுடன் சோதனைக்கு செல்வதற்காக தனிப்படை போலீசார் தயாராக உள்ளனர். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு ஆறுமுகம் தெரிவித்தார்.

....தினமலர் 18.07.2010

nambi
18-07-2010, 02:07 PM
சென்னை : சென்னை ஆதம்பாக்கத்தில் போலி காவல் நிலையம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை புறநகர் போலீசார் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். இதில், புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி காவல் நிலையம் தொடர்பாக போலீசார், செந்தமிழ்க்கிழார், லூர்துசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
....தினமலர் 18.07.2010

nambi
18-07-2010, 02:42 PM
சென்னை, ஜுலை.17-

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன்கார்க்கி மற்றும் ஆசிரியர்கள் கீதா, ரஞ்சனி, ஷோபா ஆகியோர் சேர்ந்து இணையதளத்தில் தமிழ் அகராதியை உருவாக்கி உள்ளனர். இதை http://www.agaraadhi.com/d/DH.jsp என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

உலகமொழிகளில் வேறு எந்த அகராதியிலும் இல்லாத 20 சேவைகளை வழங்குகிறது. இது ஓர் இலவச இணைய அகராதி ஆகும். தமிழ்ச் சொல்லை உருவாக்குதல், பிழைத்திருத்தம், மாற்றுச்சொற்கள், சொற்களின் இனிமை, சொற்கள் பயன்பாடு, திருக்குறள் பயன்பாடு, பாரதியார் மற்றும் அவ்வை பாடல்களில் உள்ள தமிழ்ச்சொற்களின் பயன்பாடு உள்பட பல்வேறு தமிழ்ச்சொல் பயன்பாடுகளை இந்த இணையதளத்தில் காணலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் இந்த அகராதி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எம்.ஐ.டி. கல்லூரியில் உள்ள ஏ.யு.கே.பி.சி. ஆராய்ச்சி மையம் சர்ச்கோ என்ற தமிழ் இணையதளத்தை (தமிழ் அகராதி (http://www.agaraadhi.com/d/DH.jsp)) உருவாக்கி உள்ளது. இது விரிவான ஒரு தமிழ் இணையதளம் ஆகும். இதில் அரசியல், செய்திகள், திரைப்படங்கள், விளையாட்டு, சங்க காலம் மற்றும் தற்கால இலக்கியம், சித்தமருத்துவம், ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம் தொடர்பான தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், மார்கழி இசைவிழாக்கள் உள்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
....தினத்தந்தி 18.07.2010

nambi
19-07-2010, 06:09 AM
மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிய விபத்தில் 50 பேர் பலியாகினர்; 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1.54 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

கோச்பெகாரிலிருந்து சியல்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சிவப்பு சிக்னலை தவறாகக் கடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாகல்பூலிருந்து ராஞ்சி நோக்கிச் செல்வதற்காக வனாஞ்சல் எக்பிரஸ் பிளாட்பாரம் 4-ல் இருந்து கிளம்பியது. இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வனாஞ்சல் எக்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பலமாக மோதியது.

இதில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட 5 பெட்டிகள் உருக்குலைந்தன. ரயில் நிலைத்தின் நடை மேம்பாலத்துக்கு மேல் பெட்டிகள் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 பேர் பலியாகியிருக்கலாம், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர், உதவி டிரைவர், வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் கார்டு ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர்.

ஹெல்ப் லைன் தொலைபேசி எண்கள்:

கிழக்கு ரயில்வே சிறப்பு கட்டுப்பாட்டு அறை

சியல்டா- 033-23503535, 033-23503537

மால்டா 06436-222061

பாகல்பூர் 06412-4222433

ஜமால்பூர் 063444-3101
....தினமணி 19.07.2010

nambi
19-07-2010, 06:11 AM
ஐதராபாத் : தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாப்லி அணையை ஆய்வு செய்ய சென்ற போது கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் இன்று பந்த் நடைபெறுகிறது. கடப்பா, வாரங்கல், ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
...தினமலர் 19.07.2010

nambi
19-07-2010, 06:16 AM
சென்னை: கோர்ட் போல ஒன்றை செட்டப் செய்து, அதில் தீர்ப்பு கூறி கட்டப் பஞ்சாயத்து செய்த நீதிபதி மற்றும் போலீஸ்காரர்கள் போல நடந்து கொண்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கட்டப் பஞ்சாயத்துக்காரர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த சட்டவிரோத செயல்பாடுகளால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பலர் தற்கொலை முடிவுக்கு போகின்றனர். இதைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் சினிமாவில் வருவது போல ஒரு சட்டவிரோத கோர்ட்டை ஏற்படுத்தி அதில் தீர்ப்பு கூறி கட்டப் பஞ்சாயத்து செய்துவந்த கோஷ்டியை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் போஸ்கோ. ஆதம்பாக்கம் புனித மாற்கு கிறிஸ்தவ ஆலய பங்குப்பேரவையில் உதவி தலைவராக உள்ளார். இவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில்,

நான் புனித மாற்கு ஆலய பங்குப்பேரவையில் உதவி தலைவராக உள்ளேன். எங்கள் பங்கு பேரவையில் வேளச்சேரியை சேர்ந்த லூர்துசாமி, ஆதம்பாக்கத்தை சேர்ந்த செபாஸ்டின் என்ற செழியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். பங்கு பேரவைக்கு சட்டவிரோதமாக நடந்ததால் 2 பேரையும் பங்கு பேரவையில் இருந்து நீக்கிவிட்டோம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லூர்துசாமி, செபாஸ்டின் ஆகிய இருவரும் என்னையும், பங்கு தந்தையையும் `தொலைத்து கட்டுவோம், கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்கள்.

நாங்கள் மக்கள் காவல் நிலையம் நடத்துகிறோம் என்றும், செந்தமிழ்க்கிழார்தான் அதற்கு அகில இந்திய நீதிபதி என்றும், செந்தமிழ்க்கிழார் கடிதம் மூலம் அனைத்து பத்திரிகைகளிலும் உங்களை பற்றி செய்தி வெளியிட வைப்பேன் என்றும், பத்திரிக்கையில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த செந்தமிழ்க்கிழார் என்பவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மோசடி ஆசாமி. இந்த நபர், போலியாக நீதிமன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பெயரிலும் ஒரு அமைப்பை வைத்துள்ளார். இதேபோல மேலும் பல சட்டவிரோதமான அமைப்புகளை நடத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த செந்தமிழ்க்கிழாரின் லெட்டர்ஹெட் தாளில், சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார், தற்காலிக தலைவர், பாதிக்கப்பட்டோர் கழகம், தற்காலிக ஆசிரியர், நீதியைத் தேடி பத்திரிகை மற்றும் சிறப்பு மக்கள் நீதிமன்ற தலைவர், அரும்பாக்கம் என உள்ளது.

இந்த பலே ஆசாமி தன்னை அகில இந்திய நீதிபதியாக கூறி ஆட்டம் போட்டு வந்துள்ளார். மேலும், தனது அமைப்பில் சேருபவர்களுக்கு இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.பி என சகட்டுமேனிக்கு பதவிகளையும் வாரிக் கொடுத்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், காவல்துறை சட்டத்தையும் காலில் போட்டு மிதித்துள்ளார்.

அதேபோல இன்னொரு ஆசாமியான லூர்துசாமி தனது விசிட்டிங் கார்டில் நீதியைத்தேடி ரிப்போர்டர், வேளச்சேரி, மக்கள் காவல் நிலைய ஆய்வாளர் என்று குறிப்பிட்டு இருந்தார். இவருக்கு செபாஸ்டின் கூட்டு.

இந்தக் கும்பலின் வேலை என்னவென்றால் தினசரி காலையில் நாளிதழ்களைப் படிப்பார்கள். அதில் ஏதாவது தங்களுக்கு வசதியானசெய்திகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட நபர்களை அணுகி, தாங்கள் தனி தண்டனை சட்டம் வைத்து தனி நீதிமன்றம் மற்றும் தனி அரசாங்கம் நடத்துவதாகவும், இந்தியாவின் சிறப்பு நீதிபதியாக செந்தமிழ்க்கிழார் இருப்பதாகவும் கூறுவார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொல்வார்கள்.

அதன் பின்னர் அந்த நபர்களுக்கு எதிரானவர்களை அணுகி பணம் கேட்டு மிரட்டுவார்கள். பணம் தராவிட்டால் பேப்பரில் செய்தி போடுவோம், தண்டனை வாங்கித் தருவோம் என்று மிரட்டுவார்கள்.

இப்படி பகிரங்கமாக மிகப் பெரிய அளவில் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்துள்ளனர் செந்தமிழ்க்கிழார் தலைமையிலான இந்த சட்டவிரோதக் கும்பல்.

இதையடுத்து 65 வயதாகும் கிழார், லூர்துசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பலில் இன்ஸ்பெக்டர்கள் போல செயல்பட்டுக் கொண்டிருந்த பலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கும் போலீஸார் வலை வீசியுள்ளனர்.

இந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த அனைவைரயும் ஒருவர் விடாமல் பிடிப்போம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
....தட்ஸ் தமிழ் 19.07.2010

nambi
19-07-2010, 06:20 AM
சென்னை:சென்னையில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், போலீசார் விடிய விடிய திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள், சந்தேக நபர்கள் என 572 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன், போத்தீஸ் துணிக்கடை வசூல் பணம் 81 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்த, ஊழியர்கள் காரில் கொண்டு சென்றபோது, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.நீலாங்கரை பகுதியில் "பேக் டோர்' கொள்ளையர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கைவரிசை காட்டி, பல லட்ச ரூபாய் பணம், நகைகளை கொள்ளையடித்தனர்.

விருகம்பாக்கத்தில் கிரானைட் கற்கள் விற்பனையாளர் வீட்டை உடைத்து ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான 45 சவரன் நகைகள் கொள்ளை போயின. நூதன முறையில் நகை, பணம் கொள்ளை, வழிப்பறி என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இதைக்கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் இரவு, சென்னையில் போலீசார் விடிய விடிய அதிரடி சோதனையிலும், தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்.

கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் கண்காணிப்பில், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 226 சிறு சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனை நடந்தது.இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய சோதனை நடந்தது. சென்னை முழுவதும் 381 ரவுடிகள், சந்தேக நபர்களும், 40 பழைய குற்றவாளிகள், கோர்ட்டில் ஆஜராகாமல் வாரண்ட் பிறப்பிக்கப்பட 24 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 127 பேர் என மொத்தம் 572 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், "ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டிய 1,139 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 97 பேர் என 1,236 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "ரவுடிகள், போக்கிரிகளை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி வேட்டையை போலீசார், அடுத்தடுத்து நடத்த வேண்டும்' என சென்னைவாசிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
...தினமலர் 19.07.2010

nambi
20-07-2010, 11:09 AM
சென்னை : முதல்வர் கருணாநிதியை இன்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர்.

இன்று காலை சென்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியது.

இக்குழுவில் சம்பந்தன், சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,

முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
........தட்ஸ் தமிழ் 20.07.2010

nambi
21-07-2010, 03:13 AM
புதுடெல்லி : ரயில்வேயில் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்ட 7 ஆயிரம் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பேர் வேலை பார்ப்பது, ரயில்வே துறையில்தான்.

அங்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 8 லட்சத்து 13 ஆயிரம் பேர் அதிகாரிகள். மற்றவர்கள் ஊழியர்கள். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர்கள் பணியாற்றுகின்றனர். வேலை செய்பவர்கள் அதிகம் என்பதால், ரயில்வே ஊழியர்கள் மீது ஊழல், முறைகேடு புகார்களும் மூட்டை மூட்டையாக குவியும். அது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே விஜிலன்ஸ் பிரிவு தனியாக உள்ளது. கடந்த ஆண்டு (2009) குவிந்த புகார்கள் அடிப்படையில், நாடு முழுவதும் 25 ஆயிரத்து 283 ரெய்டுகளை ரயில்வே விஜிலன்ஸ் பிரிவு நடத்தி உள்ளது. இந்த சோதனையில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 6 ஆயிரத்து 865 அதிகாரிகள் ஊழல் செய்துள்ளது நிரூபணம் ஆனது. அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க விஜிலன்ஸ் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில்வேயில் உள்ள 16 மண்டலங்களில், ஊழல் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வடக்கு ரயில்வேதான். அந்த ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த 1,203 அதிகாரிகள் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தென் மத்திய ரயில்வேயில் 736 ஊழல் அதிகாரிகள் சிக்கி உள்ளனர். தெற்கு ரயில்வேயை சேர்ந்த 537 அதிகாரிகளும் ஊழல் புகாரில் தண்டிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

......தினகரன் 21.07.2010

nambi
21-07-2010, 03:19 AM
சென்னை : பாரிமுனையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலக லாக்கரில் இருந்த ரூ.2.5 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் தங்கம், வைரம் மற்றும் பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். சென்னையில் இதுபோல் பறிமுதல் செய்யப்படும் நகைகளை பாரிமுனையில் உள்ள ‘கஸ்டம்ஸ் ஹவுஸ்’ தலைமை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருப்பார்கள். இதை நிர்வகிக்க கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் இருப்பார்.

கடந்த மாதம் நகைகளை சரிபார்த்தபோது, பெட்டகத்தில் வைத்திருந்த 10 காரட் வைர நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.2.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைர நகைகள் கடந்த 1996ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டவை.

கடைசியாக 2003ம் ஆண்டு நகைகளை கணக்கெடுத்துள்ளனர். நகைகள் மாயமானது குறித்து முதலில் கஸ்டம்ஸ் அதிகாரிகளே ஊழியர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது. எப்படி மாயமானது என்று தெரியாததால், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கஸ்டம்ஸ் ஊழியர்களுக்கு அதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில், எதையும் உடைக்காமல் நகை மட்டும் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


..........தினகரன் 21.07.2010

nambi
21-07-2010, 03:21 AM
சென்னை : பாரிமுனையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலக லாக்கரில் இருந்த ரூ.2.5 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

..........தினகரன் 21.07.2010

யார்? அந்த ''ஜென்டில்மேன்'' ''அர்ஜூன்'' ?:D

nambi
21-07-2010, 03:39 AM
சென்னை, ஜுலை.21-

லஞ்ச வழக்கில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா `சஸ்பெண்டு' செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் அவர் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

லஞ்ச வழக்கில் கைது

சென்னை யானைகவுனி போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ரேகா (வயது 26). இவர், லாரி அதிபர் லட்சுமியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவர் லஞ்சம் வாங்கி லட்சக்கணக்கில் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. ஈ.சி.ஆர். ரோட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பங்களா வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது சொத்துகள் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். பி.ஏ. பட்டதாரியான ரேகா கடந்த 2000-ம் ஆண்டில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார்.

திருமணம்

ரேகா தனது சொந்த தாய்மாமனையே திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரது கணவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஒருவரின் ஆதரவும், அரசியல் புள்ளி ஒருவரின் ஆதரவும் இருந்ததால் ரேகா துணிச்சலாக லஞ்சத்தில் புகுந்து விளையாடி உள்ளார். அவர்மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளது.

ஏற்கனவே லஞ்ச வழக்கில் மைலாப்பூரில் அமுதா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும், எம்.கே.பி. நகரில் குணவதி என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும் கைதானார்கள். அப்போதே உயர் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் ரேகாவை எச்சரித்துள்ளனர். உயர் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி லஞ்ச விளையாட்டில் ஈடுபட்டு, இப்போது ஜெயிலுக்கு போய் உள்ளார்.

சஸ்பெண்டு

லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள ரேகா மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்காக அனுப்பப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுத்ததற்காகத்தான் ரேகா ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

இதுபோல் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பணம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

...தினத்தந்தி 21.07.2010

nambi
21-07-2010, 04:45 AM
சென்னை: கள்ளக்காதலர் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால், அவரது மகனை கொலை செய்து சூட்கேஸுக்குள் அடைத்து நாகப்பட்டனத்தில் போட்ட கொடூரச் சம்பவம் குறித்து கைதான இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. சிறிதுநேரத்தில் இதில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் சூட்கேஸை கிழித்துப் பார்த்தபோது அதில் ஒரு சிறுவனின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முகத்தை பாலிதீன் பையால் இறுகக் கட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.

யார் இந்த சிறுவன் என்பது தெரியாததால் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற தொழிலதிபரின் மனைவி ஆனந்தி என்கிற ஆனந்தலட்சுமி நாகை விரைந்து வந்து சிறுவனின் உடலைப் பார்த்தார். பிறகு அது தனது மகன்தான் என்பதை அடையாளம் காட்டி கதறி அழுதபடி மயக்கமடைந்தார்.

பின்னர் அவரை தேற்றி போலீஸார் விசாரித்தபோது,

எனது கணவரின் தோழி பூவரசி. அவர் வேப்பேரியில் இருக்கும் ஒய்.டபுள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கி பஜாஜ் இன்சூரன்சில் வேலை பார்க்கிறார். தனது விடுதியில் ஏதோ விழா என்று கூறி என் மகன் ஆதித்யாவை அழைத்து சென்றார். மாலை ஆகியும் என் மகனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவில்லை.

அதனால், பூவரசியின் செல்லுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள்.

மருத்துவமனைக்கு சென்றால், பூவரசி சென்னை ஐகோர்ட் அருகில் உள்ள கோவில் வழியாக வருகையில் தான் மயங்கி விட்டதாகவும், ஆதித்யா பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினார்.

இது குறித்து போலீசில் புகார் கொடுக்க சென்ற போது தான் நாகையில் ஒரு சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது என்றார்கள். அதை கேட்டு இங்கு ஓடி வந்தேன் என்றார்.

இதையடுத்து போலீஸார் பூவரசியைப் பிடித்து விசாரித்தனர். ஆரம்பத்தில் மறுத்த பூவரசி பின்னர் தான்தான் ஆதித்யாவைக் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார். ஜெயக்குமாரை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக பூவரசி கொடுத்துள்ள வாக்குமூலம்:


ஜெயக்குமாரின் கீழ் வேலை பார்த்த போது, என்னிடம் வந்து ஐ லவ் யூ சொன்னார். இதேபோல் தான் அவரிடம் முதலில் வேலைபார்த்த ஆனந்தலட்சுமியையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெயக்குமார் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். ஆனந்தலட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் ஒரே சாதி என்பதால் ஆனந்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நான் வேறு சாதி என்பதால் என்னை காதலித்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். அவரது பேச்சை நம்பி 2 முறை கருவை கலைத்து என்னை நாசப்படுத்திக் கொண்டேன்.

என்னை சமாதானப்படுத்துவதற்காக வேலையை இழந்திருந்த எனக்கு, அவர் வேலைபார்த்த கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தார். என்னையும் திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே அந்த வேலையை கொடுக்கும்படி ஜெயக்குமாரிடம் மன்றாடினேன். ஆனால் வேண்டுமென்றே மதுரையில் எனக்கு பணி கொடுத்துவிட்டார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் என்று ஜெயக்குமார் கூறினார். மதுரையில் வேலைக்கு சேருவதற்கு முன்பு பழி வாங்க நினைத்தேன்.

அதன்படி கொலை திட்டம் வகுத்தேன். வயிற்றில் வளர்ந்த எனது வாரிசை அழித்த ஜெயக்குமாரின் வாரிசையும் வாழவிடக்கூடாது என்ற வெறி எனக்குள் ஏற்பட்டதால்தான் ஆதித்யாவை தீர்த்துக் கட்டினேன்.

கொலை செய்வதற்கு முன்பு அவன் விரும்பி சாப்பிடும் சாம்பார் வடையும், தர்பூசணி ஜுசும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வாங்கி கொடுத்தேன். அதன்பிறகுதான் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஆதித்யாவை சத்தம் போடாமல் இருப்பதற்காக முதலில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடினேன். மேலும் பாசத்தோடு பழகிய அவனது முகத்தை பார்த்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். எனது மனதில் இரக்கம் வராமல் இருப்பதற்காகவும் அவ்வாறு செய்தேன். முகத்தை மூடியவுடன் முதலில் பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கினேன். உயிர் போகவில்லை. அதன்பிறகு ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றேன். ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்தியை வைத்து கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் பிணத்தை திணித்து பஸ்சில் அனுப்ப முடிவு செய்தேன்.

எவ்வளவுதான் மனதை கல்லாக்கினாலும் மனது தாங்கவில்லை. கொலை செய்த பிறகு அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். அதன்பிறகு பாவமன்னிப்பு கேட்பதற்காக கிறிஸ்தவ கோவிலுக்கு சென்று ஜெபம் செய்தேன். பிணத்தை பஸ்சில் அனுப்பாமல் புதுச்சேரியில் கடலில் வீசிவிடலாம் என்று நினைத்தேன். புதுச்சேரியில் பஸ்சை விட்டு இறங்கியபோது காலை 8 மணியாகும். அப்போது போலீஸ் பாதுகாப்பு இருந்ததால், பிணம் இருந்த சூட்கேசை நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதுபோல் இனி நடக்கக் கூடாது என்றார் பூவரசி.

கொலை நடந்த பூவரசி தங்கியிருந்த விடுதியில் எந்த சப்தமும் கேட்கவில்லை என்று வாட்ச்மேன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். சத்தம் வராத அளவுக்கு சிறுவனின் முகத்தை மூடிகொலை செய்துளளார் பூவரசி. பின்னர் உடலை சூட்கேஸுக்குள் வைத்து வெளியே கொண்டு வந்தபோது வாட்ச்மேன் என்ன என்று கேட்டுள்ளார். உறவினர் இறந்து விட்டதால் அவசரமாக ஊருக்குப் போவதாக கூறியுள்ளார் பூவரசி.

மிகத் துணிச்சலாக செயல்பட்டு இந்த படு பாதக செயலை செய்துள்ள பூவரசியை போலீஸார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.
....தட்ஸ் தமிழ் 21.07.2010

nambi
22-07-2010, 06:44 AM
சென்னை: தமிழகத்தில், கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத்தில் செம்மொழி தமிழ்ப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்தப்படி, கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் பருவத்தில், உரைநடைப் பாடத்தில் செம்மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பாடத்திட்டத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பில் தமிழ் பேராசிரியர்கள் உருவாக்குவார்கள்.

கலை அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தில், தமிழ்ச் செய்யுள், உரைநடை, இலக்கிய பாடங்களும், இரண்டாம் பருவத்தில் இலக்கிய வரலாறு, செம்மொழி வரலாறு பாடங்களும் இடம்பெறும்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்காக அடுத்த கல்வி ஆண்டு முதல் செம்மொழி வரலாறு மற்றும் பண்புகள் குறித்த பாடத்திட்டத்தை உருவாக்குவது பற்றி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான பேராசிரியர் குழு முடிவு செய்யும்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செம்மொழி பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும்.

அதேபோல பிசிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் செம்மொழிப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.

....தட்ஸ் தமிழ் 22.07.2010

nambi
22-07-2010, 06:48 AM
கொழும்பு, ஜூலை 21- கொழும்பில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக்க தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கொழும்பு பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டு அரசு இவ்வாறு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்திருக்கலாம் என்றும் ரவிகருணாநாயக்க கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.....தினமணி 22.07.2010

nambi
22-07-2010, 06:58 AM
பொறியியல் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த 41 மாணவர்களில் 15 பேருக்கு மட்டுமே காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வின்போது 41 மாணவ- மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் 15 மாணவர்கள் மீது மட்டுமே காவல்துறையில் தேர்வுத்துறை புகார் செய்தது.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இதற்கு மூலக்காரணமாக இருந்த முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடம், ஏகாம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தேர்வுத்துறை புகார் அளித்த 15 பேரும் நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

...வெப்துனியா 22.07.2010

nambi
23-07-2010, 07:49 AM
சென்னை, ஜுலை.23-

எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலவச கட்டாய கல்வி

6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,

அரசு உத்தரவு

தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது. எந்த மாணவரையும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

....தினத்தந்தி 23.07.2010

nambi
23-07-2010, 08:28 AM
போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக இதுவரை 25 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புள்ள அதிகாரிகள் குறித்த விவரங்கள் அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வரும் என மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா வியாழக்கிழமை தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு சுமார் 500 பேருக்கு இந்த கும்பல் போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்துள்ளதாகவும், அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலருடைய ஒத்துழைப்புடனேயே போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ள ராமச்சந்திரன், பிரிவு அதிகாரியாக உள்ள அருண்குமார் ஆகியோர் குறித்து திருவேங்கடத்திடம் தனிப்படை போலீஸôர் விசாரித்து வருகின்றனர். இதில் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில், தேர்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். தேவை ஏற்பட்டால் அவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

....தினமணி 23.07.2010

nambi
23-07-2010, 08:34 AM
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலும் கடந்த 5 ஆண்டுகளாக போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியது..

நாகப்பட்டிணம் மாவட்டம் ஆண்டிபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(25), இவரது தந்தை சிங்கப்பூர் கோயிலில் தலைமை குருக்களாக இருக்கிறார். அதே கோயிலில் தனது மகன் சாமிநாதனை சேர்த்துவிட விரும்பினார். அந்த கோயிலில் குருக்களாக பணி புரிய வேண்டும் என்றால் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பிளஸ்2 படித்திருக்க வேண்டும். ஆனால் பத்தாம் வகுப்பு படித்திருந்த சாமிநாதனுக்கு பிளஸ்2 போலி சான்றிதழ் வாங்க முடிவு செய்தார். இதற்காக குடவாசல் அருகே உள்ள திருப்பண்ணையூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் 5 ஆயிரம் கொடுத்து போலி மதிப்பெண் பட்டியல் வாங்கினார். அதை அட்டெஸ்டேசன் செய்ய கொடுத்தபோது அதை மதிப்பெண் பட்டியலை பார்த்த திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகனுக்கு, சாமிநாதன் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறையில் புகார் செய்தார்.


காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கும்பகோணத்தை மையமாக வைத்து போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. எஸ்.பி. செந்தில்வேலன் உத்தரவின்பேரில் கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில். பஷீர் அகமது, நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்த காஜாமைதீன், திருவாரூர் லாரி அதிபர் பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பகோணம் மேலக்காவேரியில் உள்ள அக்தர் அலி என்பவரின் வீட்டு மாடியில் தங்கி போலி சான்றிதழ், பட்டங்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சாமிநாதன், பஷீர் அகமது, காஜாமைதீன், பாண்டியன், அக்தர் அலி ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
...இய்நேரம்.23.07.2010

nambi
23-07-2010, 05:06 PM
டெல்லி: டி.டி.எச். மூலம் தொலைக்காட்சி சேவைகளைப் பெறுவோர், வரும் ஜனவரி மாதம் முதல் தாங்கள் விரும்பிய எந்த சேனல்களையும் பார்க்கலாம்.

இதன்மூலம் டிடிஎச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தரும் சேனல்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற கொடுமைக்கும், அவர்கள் தரும் சேனல்களை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் எல்லாவற்றுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலைமைக்கும், கூடுதலாக சேனல்களைத் தர அவர்கள் நிர்ணயிக்கும் மிக அதிகமான கட்டண முறைக்கும் முடிவு வரப் போகிறது.

மேலும் சேவைக்கான குறைந்தபட்ச மாதக் கட்டணம் ரூ. 150க்கு மேல் இருக்கக் கூடாது என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.

மேலும் டிஷ், செட்டாப் பாக்ஸ்களில் கோளாறு ஏற்பட்டால் அதை நிறுவனத்தினர் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்கு ரிப்பேர் கட்டணத்தை நுகர்வோரிடம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

....தட்ஸ் தமிழ் 23.07.2010

nambi
24-07-2010, 11:10 AM
புது தில்லி, ஜூலை 22: ரூ. 1,500 விலையுள்ள கம்ப்யூட்டரை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. மாணவர்களுக்கென பிரத்யேகமாக இந்தக் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கம்ப்யூட்டரை வெளியிட்டு கபில் சிபல் கூறியதாவது: நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் இந்தக் கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பல்வேறு நிபுணர்கள், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய மனித ஆற்றல் துறை உதவியுடன் இந்தக் குறைந்த விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது இப்போது ரூ. 1,500 என இந்தக் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர், நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க முன்வரும் வேளையில் இதன் விலை ரூ. 500 ஆகக் குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தார். வழக்கமான கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளும் அடிப்படைப் பணிகளை இதிலும் செய்யலாம். மேலும், விடியோ, வெப் கான்ஃபரன்சிங், மல்டிமீடியா, இன்டர்நெட் வசதிகளும் இந்தக் கம்ப்யூட்டரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

....தினமணி 24.07.2010

nambi
24-07-2010, 11:15 AM
சென்னை, ஜூலை 23: அறிவியலில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகப் பள்ளி மாணவர்கள் 10,256 பேருக்கு ரூ.6.5 கோடி நிதி ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை மத்திய அரசு அளித்துள்ளது.

இத்தகவலை அறிவியல் நகர துணைத் தலைவர் பி. ஐயம்பெருமாள் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த மத்திய அரசு "இன்ஸ்பயர்' என்ற திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றில் 6 முதல் 8-வது வகுப்பு வரை ஒரு மாணவருக்கும், 9, 10-ம் வகுப்புகளில் ஒரு மாணவருக்கும் என ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களின் அறிவியல் ஆர்வம், அவர்களின் திறன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களைத் தேர்வு செய்வார்.

ஒரு மாணவருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த பணத்தை வைத்து மாணவர்கள் அறிவியல் மாதிரி ஒன்றை செய்ய வேண்டும்.

பின்னர் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் மாணவர்களின் அறிவியல் மாதிரி வைக்கப்படும். அவற்றில் இருந்து 40 சதவீத மாணவர்களின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பின்னர், அவர்களில் இருந்து 20 சதவீத மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை வைத்து மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். அதில் இருந்து 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க வைக்கப்படுவார்கள்.

அந்த மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் பி. ஐயம்பெருமாள்.

...தினமணி 24.07.2010

nambi
24-07-2010, 11:23 AM
புது தில்லி, ஜூலை 13: வேலைக்குச் செல்லும் தம்பதியர்கள் இனி கேஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். இப்புதிய முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய வசதியை தில்லியில் செவ்வாய்க்கிழமை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா தொடங்கி வைத்தார். இப்புதிய வசதி வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது.

வாடிக்கையாளர்கள் இந்த முறையைத் தேர்வு செய்யவில்லையெனில், ஏஜென்டுகள் வழக்கம்போல விநியோகிக்கும் நேரத்தில் டெலிவரி செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் சப்ளை செய்ய கோருபவர்கள் சிலிண்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 50 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 6 மணிக்குப் பின்னரோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து அறிவித்தால் அந்த நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

பெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 40-ம் நகரங்களில் இருப்போர் ரூ. 20-ம் கூடுதலாக செலுத்த வேண்டும். வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 25 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

தற்போது இப்புதிய வசதி தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள குர்காவ்ன், நொய்டா, ஃபைசாபாத், பரீதாபாத், காஸியாபாத், சோனாபத், பூனா ஆகிய நகரங்களில் மட்டும் கிடைக்கும். இந்த மாத இறுதியில் இத்திட்டம் கொல்கத்தா, மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தினத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யத் தவறினால் வாடிக்கையாளருக்கு ரூ. 20 அபராத கட்டணத்தை அந்த ஏஜென்சி அளிக்க வேண்டும்.

குறித்த தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர் வாங்கத் தவறினால் அடுத்த நாள் அதே நேரத்தில் அவர்களுக்கு டெலிவரி செய்யப்படும். இவ்விதம் கூடுதல் கட்டணம் செலுத்துவதால், காத்திருப்போர் வரிசையில் எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்படாது. வாடிக்கையாளரின் வசதிக்காக இப்புதிய சேவை அளிக்கப்படுகிறது.

இத்தகைய வசதியைப் பெற விரும்புவோர், இதற்கென தனி படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அல்லது இணையதளத்தில் இதுகுறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 200 மானியம் அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி இப்புதிய சேவையை ஐஓசி, பிபிசிஎல் நிறுவனங்கள் அளிக்கும் என்றார் தேவ்ரா.

....தினமணி 24.07.2010

nambi
24-07-2010, 11:36 AM
புது தில்லி, ஜூலை 13: வேலைக்குச் செல்லும் தம்பதியர்கள் இனி கேஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். இப்புதிய முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த முறையைத் தேர்வு செய்யவில்லையெனில், ஏஜென்டுகள் வழக்கம்போல விநியோகிக்கும் நேரத்தில் டெலிவரி செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் சப்ளை செய்ய கோருபவர்கள் சிலிண்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 50 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 6 மணிக்குப் பின்னரோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து அறிவித்தால் அந்த நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

பெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 40-ம் நகரங்களில் இருப்போர் ரூ. 20-ம் கூடுதலாக செலுத்த வேண்டும். வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 25 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

....தினமணி 24.07.2010

இதிலும்....தட்கால் முறையா? இப்படியே எல்லாவற்றிற்கும் மறைமுகமாக விலைவாசியை ஏற்றி காசு பார்க்கலாம்....இது ஒரு சிறந்த யுக்தி....

விரும்பும் நேரத்தில் குடிமைப்பொருள்....அரிசி...

உணவு விடுதிகளிலும்...விரும்பும் நேரத்தில் தோசை...என்று தனிக்கட்டணம் பணியாளரிடம் உணவு சொல்லிவிட்டு காத்திருக்கத்தேவையில்லை..

தோசைக்கு ஒரு விலை...தோசையை சுட்டு துரிதமாக எடுத்து வருபவருக்கு ஒரு தனி காசு ....

இதற்கு நாமே மாவு எடுத்துக்கொண்டு போய் சுட்டுகொடுக்க சொல்லி அதற்கு மட்டும் காசு கொடுப்பதற்கான ஏற்பாடு ஏதாவது செய்யலாம்...தேவைப்பட்டால் வாயில் ஊட்டி விடுவதற்கு கூட தனிக்காசு நிர்ணயிக்கலாம்...அரசு இதை யோசிக்குமா?

உண்வுவிடுதியில் உணவு இருக்கின்றதோ இல்லையோ? இரண்டு மேசை..இரண்டு நாற்காலி வைத்திருக்கும் சிறு உணவு விடுதியாயிருந்தாலும்...ஒரு டிப்ஸ் தட்டு மட்டும் எப்போதும் தயாராக இருக்கும்...ஊழியர்களுக்கு சாப்பிடறவங்கிட்டேயை காசு வாங்கி அவர்களுடைய சம்பள பட்டுவாடா!....படு ஜோர்!...எப்படியெல்லாம் சோசிக்கறாங்கப்பா....

இன்னும் எத்தனை நாளைக்கு கையூட்டு!...கையூட்டு! என்று புலம்பிக்கொண்டிருப்பது...நவீனத்தில் எல்லாவற்றையும் அங்கிகரிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

nambi
25-07-2010, 01:56 PM
காந்திநகர், ஜூலை.25: சோரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் விசாரணைக்காக ஆஜரான குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவை மத்திய குற்றப்புலனாய்வுத் துறை(சிபிஐ) இன்று கைது செய்தது.

சிபிஐயின் சம்மன்களுக்கு ஆஜராகாமல் இருந்த அமீத் ஷா, திடீரென காந்திநகரில் பாஜக தலைமையகத்தில் ஊடகங்களின் முன் தோன்றினார். பின்னர் பாஜக பிரமுகர்களுடன் சிபிஐ அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு அமீத் ஷாவுக்காக காத்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை, நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனர் என பாஜக பிரமுகர் விஜய் ரூபானி கூறினார்.

இதைத்தொடர்ந்து ஐஜி கந்தசாமி உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் அவரை ஜூடிசியல் நீதிபதி ஏ.ஒய்.தேவின் இல்லத்துக்கு அழைத்துச்சென்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதியின் வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

குஜராத்தில் முதல்வர் மோடிக்கு அடுத்த தலைவராகவும், அவருக்கு நெருக்கமாகவும் இருந்த அமைச்சர் அமீத் ஷாவுக்கு சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு மூலம் சோதனை ஏற்பட்டது. அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் சோராபுதீன் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது முக்கிய குற்றச்சாட்டு.இது தொடர்பாக சிபிஐ இருமுறை சம்மன் அனுப்பியும், அமீத் ஷா ஆஜராகவில்லை. மாறாக முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் கொலை,ஆள் கடத்தல், மிரட்டல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் அமீத் ஷா மீது வழக்குத் தொடரப்பட்டது.

....தினமணி 25.07.2010

nambi
25-07-2010, 02:04 PM
சென்னை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நைஜீரிய நாட்டுக்கு சென்று அங்குள்ள தேரத்ல் ஆணையத்திற்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்க அனுமதிக்க முடியாது என்று கூறிய தமிழக அரசு, பயணத்துக்கான செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்கும் என்று தெரிவித்ததால், அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து வரும் தேர்தல் முறைகளைப் பின்பற்ற விரும்பிய அந்த நாட்டு அரசு, இதற்காக ஒரு அதிகாரியை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது.

இதையடுத்து நேர்மையானவரும், நியாயமானவரும், நடுநிலை வழுவாதவரும், தேர்தல் நடைமுறைகளில் நிரம்பிய அனுபவம் வாய்ந்தவருமான நரேஷ் குப்தாவை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

ஆனால் தமிழக அரசு இதற்கான அனுமதியைத் தரவில்லை (நரேஷ் குப்தாத தமிழக அரசு கேடரில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி என்பதால் தமிழக அரசின் அனுமதி அவசியம்). செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றால் அனுமதி தருவோம் என்று தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி கூறியிருந்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. நரேஷ் குப்தாவின் பயணத்துக்கான செலவை தமிழக அரசு தரத் தேவையில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது நரேஷ்குப்தாவின் நைஜீரிய பயணத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து நைஜீரியா செல்கிறார் நரேஷ்குப்தா. 28ம் தேதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார்.
...தட்ஸ் தமிழ் 25.07.2010

nambi
25-07-2010, 02:06 PM
திருநெல்வேலி, ஜூலை 24: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 18 இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிகமான இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.
...தினமணி 25.07.2010

nambi
25-07-2010, 02:09 PM
சியோல்: தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து இன்று முதல் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் தென் கொரியா வந்துள்ளது. இந்த போர் பயிற்சிக்கு வடகொரியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. போர் பயிற்சி என்ற பெயரில் எங்களின் மீது தாக்குதல்நடத்தினால் பதிலுக்கு அணுஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைதொடர்ந்து வடகொரியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இருநாடுகளிடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
...தினமலர் 25.07.2010

nambi
25-07-2010, 02:11 PM
கொழும்பு, ஜூலை 24- கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீது சிறைக்காவலர்களும் சிங்கள கைதிகளும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தமிழ் கைதி மீது தாக்குதல் நடத்தியபோது, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழர்கள் மீது சிங்கள கைதிகள் கும்பலாக தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது சிறைக்காவலர்கள் அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, சிறை சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் டியு குணசேகரவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக சிறைச்சாலை ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 25.07.2010

nambi
25-07-2010, 02:17 PM
http://thatstamil.oneindia.in/img/2010/07/25-foxconn200.jpg

சென்னை: விஷ வாயுக் கசிவு ஏற்பட்டு 200 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய பாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு விஷவாயுக் கசிவு ஏற்பட்டு 200 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு, தொண்டைக் கரகரப்பு, வாந்தி ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து நிறுவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். என்ன காரணம் இந்த சம்பவத்திற்கு என்பது தெரியும் வரை வேலை பார்க்க மாட்டோம் எனக் கூறி விட்டனர்.
.

இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜேசகரனும் வந்து ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது முறையான சுகாதார வசதிகள் அங்கு இல்லாததும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையின் தகுதிச் சான்றிதழ் பெறாததும் தெரிய வந்தது. இதையடுத்து நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனம் மூடப்பட்டு விட்டது.

..தட்ஸ் தமிழ் 25.07.2010

nambi
26-07-2010, 06:56 AM
ராமநாதபுரம், ஜூலை 25: மதுரையிலிருந்து கடத்தி நரபலி கொடுக்கப்பட்ட ஒன்றரை வயதுச் சிறுவனின் உடலை ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் புதைத்த இடத்தை குற்றவாளி அடையாளம் காட்டிதைத் தொடர்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கௌர் பாஷா. இவரது மனைவி ஷிரின் பாத்திமா. இவர்களது ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப். கௌர் பாஷா 3 மாதங்களுக்கு முன் டிராக்டர் மோதிய விபத்தில் உயிரிழந்ததால், மனைவி மனநிலை சரியில்லாமல் தன் மகனுடன் மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சிகிச்சை பெறுவதற்காக தங்கியிருந்துள்ளார். இந் நிலையில், இவரது மகன் காதர் யூசுப் காணாமல் போனதால், அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ஷிரின் பாத்திமா தங்கியிருந்த அதே கோரிப்பாளையம் தர்காவில் இருந்த தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீரான் ஷாகிப் மகன் அப்துல் கபூர் (30), இவரது மனைவி ரமீலா பீவி (28) ஆகிய இருவரையும் காணவில்லை என்றும், அவர்கள்தான் குழந்தையைக்

கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் காவல் துறையினருக்கு சந்தேகம் வந்தது.

இருவரையும் போலீஸôர் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கைதுசெய்து விசாரித்ததில் குழந்தையை இவர்கள் நரபலி கொடுத்திருப்பது தெரியவந்தது.
....தினமணி 26.07.2010

nambi
26-07-2010, 06:59 AM
நியூயார்க்: அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலில் எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் பலியாயினர்.

அப்போது ஒரு பெரிய எந்திரம் உடைந்து கடலுக்குள் விழுந்ததில் மாபெரும் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா பெட்ரோலிய எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது.

இதையடுத்து அதை அடைக்கும் பணிகள் 3 மாதமாக நடந்தன. ஆனால், இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் எண்ணெய் சகிந்து வந்தது. இப்போதும் சிறிதளவு எண்ணெய்க் கசிந்து கொண்டு தான் உள்ளது.

இதனால் கடல் பகுதியில் பல நூறு கி.மீ. பரப்பளவில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் மீன் பிடிப்பு மற்றும் கடல் சார்ந்த பணிகளும் சுற்றுலாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 17,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
....தட்ஸ் தமிழ் 26.07.2010

nambi
26-07-2010, 07:02 AM
ஈரோடு, ஜூலை 25: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டு, 744 தங்க நாணயங்கள் மீட்கப்பட்டன.

சத்தி வட்டம், திங்களூர் அருகிலுள்ள வனப்பகுதியில் மஜ்ரா கோட்டமாளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன்; இவரது மனைவி மாதி; கூலித் தொழிலாளிகள். இவர்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், மண்ணைத் தோண்டிய போது வட்ட வடிவிலான மண் சட்டி புதைந்திருந்தது தெரியவந்தது.அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, சிறிய தங்கக்காசுகள் இருந்துள்ளன. தகவலறிந்து திரண்ட அக்கம்பக்கத்தினர், ஆளுக்கு சில நாணயங்களை எடுத்துச் சென்று விட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸôர் அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்பகுதியைச் சேர்ந்த மாதி, நாகம்மாள், மாதேவி, தேவி, மாதன், பையன், சீனிவாசன், கருப்புசாமி, சுரேஷ் உள்ளிட்டோரிடமிருந்து 744 தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 400 மில்லிகிராம் எடை கொண்டவையாக இருந்தன.
....தினமணி 26.07.2010

nambi
26-07-2010, 07:07 AM
சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய இந்தியன் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சுஜாரிதா, நடரஜானின் உறவினர் பாஸ்கரன் மற்றும் லண்டனில் வசிக்கும் யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994ம் ஆண்டில் லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன். ஆனால், புதிய காருக்கு சுங்க வரி அதிகம் என்பதால், அதை பழைய கார் போல காட்டி இறக்குமதி செய்தார் நடராஜன். இதனால் ரூ. 1.6 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தார்.

கார் தொடர்பாக ஆவணங்கள் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது அது புத்தம் புதிய கார் என்று தெரியவந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக அதை பழைய கார் போல காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பதும் உறுதியானது.

இது குறித்து சுங்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நடராஜன், அவரது மருமகன் பாஸ்கரன், வங்கி மேலாளர் சுஜாரிதா, லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ்வரன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் பாலகிருஷ்ணனும், யோகேஸ்வரனும்ம் வழக்கு பதிவுச் செய்யப்பட்ட 1997ம் ஆண்டு முதலே தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில் நடராஜன், பாஸ்கரன், மோசடிக்கு உதவிய சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் சுஜாரிதா, லண்டனைச் சேர்ந்த யோகேஷ்வரன் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

..தட்ஸ் தமிழ் 26.07.2010

nambi
27-07-2010, 11:16 AM
சென்னை, ஜூலை 26: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞர் அணி சார்பில் ஆகஸ்ட் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதை துணை முதல்வரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்தார்.

"அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 13 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் தொடர்ந்து வாய்தா வாங்கப்பட்டு வருகிறது. மக்களைத் தொடர்ந்து அவமதித்து வரும் அவருடைய போக்கினை திமுக இளைஞர் அணி சுட்டிக் காட்ட விழைகிறது. இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
....தினமணி 26.07.2010

nambi
27-07-2010, 11:20 AM
இணையதளத்தில் வெளியிடவும் ஏற்பாடு:

சென்னை, ஜுலை 27-

"தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட புதிய கல்விக்கட்டணம் விரைவில் வெளியிடப்படும்'' என்று நீதிபதி கோவிந்தராஜன் கூறினார்.

கல்விக்கட்டணம் நிர்ணயம்

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்றும் அதை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் ஏராளமான பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.

அவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிபதி கோவிந்தராஜன், முதல்-அமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்தார். புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் வெளியிடப்படும்

கல்விக்கட்டண நிர்ணயம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எந்தெந்த முறையில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அவரிடம் எடுத்துச்சொன்னோம். தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளன.

அத்தனை பள்ளிகளுக்கும் கட்டணத்தை திருத்தி அமைப்பது என்பது எளிதான வேலையல்ல. அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருத்தப்பட்ட புதிய கல்விக்கட்டணம் விரைவில் வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கட்டண விவரம் அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன கல்விக்கட்டணம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். இதுதொடர்பாக கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்.

இந்த ஆண்டே அமல்

ஏற்கனவே, அதிக கல்விக்கட்டணம் தொடர்பாக வந்த புகார்கள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டது. 23 புகார்களில் 8 புகார்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளோம். நாங்கள் நேரடியாக அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எங்களுக்கு கிடையாது. நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்ய மட்டுமே எங்களால் முடியும்.

புதிய கல்விக்கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும். இது இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தப்படும். அரசு அறிவிக்கும் கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்த கட்டணம் மாணவர்களிடம் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். குறைவான கட்டணத்தை வசூலித்திருந்தால் எஞ்சிய கட்டணத்தை மாணவர்களிடம் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி கோவிந்தராஜன் கூறினார்.

பேட்டியின்போது கமிட்டியின் உறுப்பினர்-செயலாளர் தர்ம.ராஜேந்திரன் உடனிருந்தார்.
...தினத்தந்தி 27.07.2010

nambi
28-07-2010, 11:17 AM
இஸ்லாமாபாத், ஜூலை 28:பாகிஸ்தானில் அந்நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானம், இஸ்லாமாபாத்துக்கு அருகே விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 159 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
.
துருக்கியிலிருந்து ஏர் புளூ என்னும் பயணிகள் விமானம் கராச்சி வழியாக இஸ்லாமாபாத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 159 பேர் பயணம் செய்தனர்.இஸ்லாமாபாத் அருகே மார்கல்லா என்னும் அடர்ந்த காடு மற்றும் மலைகள் உள்ள பகுதியில் விமானம் வந்தபோது விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் வந்து கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்ததன் காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் விமான கட்டுப்பாட்டு அறையின் கட்டுப்பாட்டிலிருந்து விமானம் தொடர்பு இழந்ததாக கூறப்படுகிறது. கடுமையான மழையால் எதிரில் உள்ளது கண்ணுக்கு தெரியாத நிலையில் மலையில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

....மாலைச்சுடர் 28.07.2010

nambi
28-07-2010, 11:20 AM
http://thatstamil.oneindia.in/img/2010/07/28-qureshi2-200.jpg

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.

1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
....தட்ஸ் தமிழ் 28.07.2010

nambi
28-07-2010, 11:28 AM
டெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (repo rate) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (reverse repo rate) 0.50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வங்கிகளிடம் நிதிப் புழக்கம் குறையும். இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், மகிழுந்து (கார்), இரண்டு சக்கர வாகனங்கள், தனிநபர் கடன் (பர்சனல் லோன்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயரவுள்ளது.

சந்தையில் (வங்கிகளிடம் உள்ள பணம்) பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தான் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியில் வங்கியில் கட்டாயம் முதலீடு செய்திருக்க வேண்டிய தொகையில் (cash reserve ratio-CRR) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளிடம் நிதிப் புழக்கம் குறைந்துவிடும். இதனால் இருக்கும் பணத்தை அதிக வட்டிக்கு கடன் தரும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் கார், வீடு, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகள் தரும் கடன் தொகைக்கான வட்டி உயரவுள்ளது.

....தட்ஸ் தமிழ், தினமணி, தினகரன்...28.07.2010

nambi
28-07-2010, 11:31 AM
புது தில்லி ஜூலை 27: விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதனால் செவ்வாய்க்கிழமை அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த பல முறை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும், இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கியது. முதல் நாளன்று சமீபத்தில் உயிரிழந்த குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் பிற மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

...தினமணி 27.06.2010

nambi
28-07-2010, 11:34 AM
சென்னை: தமிழக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் தர லஞ்சம் கேட்டதாக கூறி தணிக்கை வாரிய மண்டல அதிகாரி ராஜேசகரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள 5-வது மாடியில் திரைப்பட தணிக்கைக்கான மண்டல அலுவலகம் உள்ளது. அதில் மண்டல அதிகாரியாக இருந்து வருபவர் ராஜசேகர்.

ஜூன் மாதம் 17ம் தேதி இவர் இப்பொறுப்புக்கு வந்தார். வந்தது முதல் லஞ்சக் கடலில் குதித்துள்ளார். தணிக்கைச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்க ஆரம்பித்தார். இதுகுறித்து திரைத்துறையினர் புலம்பி வந்தனர். ஆனால் நேற்று திடீரென இவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

.....தட்ஸ் தமிழ் 28.07.2010

nambi
29-07-2010, 08:05 AM
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்.

பிரிட்டன் சரித்திரத்தில் முதல் முறை என்று வர்ணிக்கப்படும் வகையில், 6 அமைச்சர்கள், அதிகாரிகள், விளையாட்டுத்துறையினர், கல்வியாளர்கள், முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் என மிகப்பெரிய குழுவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கிறார் டேவிட் கேமரன். இதன் மூலம், இந்தியாவை மிக முக்கிய பங்காளியாக பிரிட்டன் கருதுகிறது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்.

பெங்களூர் நகரில் இன்போஃசிஸ் தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டேவிட் கேமரன், இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில் தனது முக்கிய நோக்கம், செழிப்பான இந்தியப் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புக்களை பிரிட்டனின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.

இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில், பிரிட்டனில், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். அதேபோல், இந்தியாவிலும் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என விரும்புகிறேன் என பிரி்ட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டார்.

போர் விமானங்கள் வாங்க உடன்பாடு


ஹாக் ரக போர் விமானம்
ஹாக் ரக போர் விமானம்
கேமரனின் விஜயத்தின் போது பிரிட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 57 ஹாக் நவீன ரக பயிற்சி ஜெட் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்குப் பயன்படுத்தப்படும் அந்த விமானங்களை, பிரிட்டன் நிறுவன உரிமத்துடன், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும்.

அந்த உடன்பாடு, இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக முக்கியப் பலன்களை வழங்கும் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.

டேவிட் கேமரன் தனது பயணத்தின்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் தொடர்பான உறவுகளை வலுப்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்களை விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத, பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்புக்களு்ககாக வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, பெருமளவில் இந்தியர்களைத்தான் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, டேவிட் கேமரனிடம் இந்தியா இதுதொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் டேவிட் கேமரன் பேச்சு நடத்தும்போது, இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...பிபிசி தமிழோசை 29.07.2010

nambi
29-07-2010, 08:32 AM
டெல்லி: தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டு 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டதில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

....தட்ஸ் தமிழ் 29.07.2010

nambi
29-07-2010, 08:35 AM
பியூனஸ் அயர்ஸ், ஜூலை 28: ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மாரடோனா நீக்கப்பட்டுள்ளார்.

ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார் மாரடோனா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படு மோசமாகத் தோற்றது. இதை அடுத்து மாரடோனா தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரே முன் வந்து அறிவித்தார். அதை அப்போது ஆர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் ஏற்கவில்லை.

இந்நிலையில் தான் பயிற்சியாளராக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அறிவித்தார் மாரடோனா. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை அவர் விதித்தார். தன் விருப்பப்படிதான் தனது உதவியாளர்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அவர் விதித்து இருந்தார். அவரது நிபந்தனைகளை ஏற்க முடியாது என அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம். இதற்கான தீர்மானம் சம்மேளனத்தின் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் ஜூலியா கிரோன்டோனா கூறினார்.

ஆர்ஜெண்டினா அணிக்கு 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் மாரடோனா. அவர் நீக்கப்பட்டிருப்பதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

...தினமணி 29.07.2010

nambi
29-07-2010, 08:53 AM
கள்ளக்காதல் தகராறில் மின் வாரிய அதிகாரியை எரித்துக்கொன்ற பெண்போலீசின் கள்ளக்காதலன் கூட்டாளிகளிடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). இவர் பெருங்குடி மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் இவரை திடீர் என்று காணவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மன்சூர்அலி இதுபற்றி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வடபழனி பெண் போலீஸ் சாஸ்திரக்கனியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது மின் வாரிய அதிகாரி ராஜேந்திரன் எரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.இவரின் தூண்டுதலின் பேரில் உடன் பணிபுரிந்த காவலர் வீரராஜனின் துணையுடன் ராஜேந்திரனை சுடுகாட்டில் வைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது. இதனால் அதிகாரி சாஸ்திரகனி, வீரராஜன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

....நியுஸ் இந்தியா..சன் தொலைக்காட்சி 29.07.2010

nambi
30-07-2010, 07:02 AM
ஆந்திரப் பிரதேசத்தின் தெலங்கானா பகுதியிலுள்ள 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

முதற்கட்ட தகவல்களின்படி, 11 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றிருக்கிறார். பாப்லி அணை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
.....தினமணி 30.07.2010

nambi
30-07-2010, 07:21 AM
சென்னையில் உள்ள 1485 ரேஷன் கடைகளில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 16 தனிப்படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று காலை கீழ்ப்பாக்கம் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

‘‘சென்னையில் 1485 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இன்று முழுவதும் அதிரடி சோதனை நடத்த 16 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இருப்பார்கள். அவர்கள், பொதுமக்களிடம் குறைகளை கேட்பதுடன், கடைகளில் இருப்பு மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பார்கள்.

குழுவினர் தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து தனிப்படையினர் ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு குழுவினருடன் அமைச்சரும் சென்னார். பல இடங்களில் பொதுமக்கள் அமைச்சரிடமும், குழுவினரிடமும் புகார்கள் தெரிவித்தனர். அளவு குறைவு, ரேஷன் கடை ஊழியர்கள் மக்களை உதாசீனப்படுத்துவது போன்ற புகார்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் குடிமைப் பொருள் விநியோகம், தரம் குறைவு....ஏனைய நுகர்வோர் குறைகள் குறித்து புகார்கள் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 28592828 .

....தினத்தந்தி, தினகரன் 30.07.2010

nambi
30-07-2010, 07:26 AM
ஐ.நா., : தனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது.

இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன. இந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது.



பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் . எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 20 இலட்சம் (2 மில்லியன்) மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.

.....தினமலர் 30.07.2010

nambi
30-07-2010, 10:03 AM
புதுடெல்லி, ஜூலை 30,2010 : ஆலடி அருணா கொலை வழக்கில் இருந்து எஸ்.ஏ.ராஜாவை விடுவித்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எஸ்.ஏ.ராஜாவுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும், அவரது நண்பர் பொன்ராஜூம் நடைபயிற்சி சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்தும், பாலா, அழகர் ஆகிய 2 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியும் திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, எஸ்.ஏ.ராஜா விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அத்துடன் பாலா, அழகர் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் வழக்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில், கீழ் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட பரமசிவம், கண்ணன், அர்ஜூன் விடுதலையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஏ.ராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்தத் தீர்ப்பில், ஆலடி அருணா கொலை வழக்கில் இருந்து எஸ்.ஏ.ராஜாவை விடுவித்து உத்தரவிட்டது.

மேலும், ஆலடி அருணாவை கொலை செய்வதற்கு எஸ்.ஏ.ராஜா சதிதிட்டம் தீட்டியதாகவும், தூண்டியதாவும் மாநில அரசு அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

.....விகடன் 30.07.2010

nambi
30-07-2010, 11:34 AM
உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு*ள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 3ஆம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.

...வெப்துனியா

nambi
31-07-2010, 04:21 PM
சென்னை, ஜூலை 31: தமிழகத்தில் 600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டு தலங்கள் மற்றும் வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை. ஆனால், இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், தொழில் மின் நுகர்வோரில், உயர் அழுத்த மின் வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளுக்கு மற்றும் தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த புதிய மின்கட்டணம் நாளை முதல் (ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது.

இத்தகவலை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் தெரிவித்தார்.
...தினமணி 31.07.2010

nambi
31-07-2010, 04:23 PM
சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை சென்னையை அடுத்த மீஞ்சூர் கிராமத்தில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். சென்னையில் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டதால் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. "மெட்ரோ' குடிநீரைத்தான் மக்கள் நம்பியுள்ளனர். இது, மூன்றில் ஒரு பகுதியினருக்கும் போதுமானதாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் 600 கோடி ரூபாய் செலவில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு, ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் உருவாக்கிய, "சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிமிடெட்,' ஸ்பெயின் நாட்டின் பெபீசா அக்வா நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த 2005ல் துவங்கிய கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்பதால், சென்னையில் மக்கள் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தியாகும் என கருதப்படுகிறது.

....தினமலர் 31.07.2010

nambi
31-07-2010, 04:27 PM
டெல்லி: வங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

நாட்டில் அரிசி, கோதுமை உபரியாக உள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு இந்த தானியங்களின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறினார்.

உள்நாட்டில் உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்ததால், அரிசி-கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது. இந் நிலையில் பருவ மழை சிறப்பாக இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக நேபாளத்துக்கு 1 லட்சம் டன் அரிசி, கோதுமையும் வங்கதேசத்துக்கு 2 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்படடுள்ளது.

உணவுப் பணவீக்கம் 9.67% ஆக குறைவு:
...தட்ஸ்தமிழ் 31.07.2010

nambi
01-08-2010, 02:47 PM
சென்னை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரவீன் குமார், இன்று மாலை புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிவந்த நரேஷ் குப்தா, இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, நிதித்துறை செயலராக (செலவினங்கள்) பணியாற்றி வந்த பிரவீன் குமார், புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில், இன்று மாலை தனது பொறுப்புகளை பிரவீன் குமாரிடம், நரேஷ் குப்தா ஒப்படைத்தார். ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த இவர், 1987ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.,ஆக தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசுப் பணிக்கு அனுப்பப்பட்டார். எம்.டெக்., - எம்.பில்., மற்றும் பல்வேறு படிப்புகளை படித்துள்ளார். தமிழ், இந்தி, வங்க மொழிகள் தெரியும்.

....தினமலர் 31.07.2010

nambi
01-08-2010, 02:53 PM
மின்கட்டண உயர்வு குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என்றும் 3 சதவீதம் பேருக்கே மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


ஒருசிலர், அனைத்துத் தரப்பினரையும் இந்த மின்கட்டண உயர்வு பாதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதவறான தகவல் ஆகும். இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டு களுக்குக்குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொதுவழி பாட்டுத்தலங்கள், வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவித மான மின் கட்டண உயர்வும் இல்லை என்று தெளிவாக அனைத்து ஏடுகளிலும் இன்று செய்திவந்துள்ளது. அதற்குப் பிறகும் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பைப்பார்த்தால், மொத்தம் 149.86 லட்சம் பேரில்- இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன் படுத்துவோரின் எண்ணிக்கை 118.05 லட்சம் பேர்களாகும். இவர் களுக்கு எந்தவிதமான மின் உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 52 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கும் மின் கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு 401 யூனிட் முதல் 600 யூனிட் வரை மின்சாரம் பயன் படுத்துவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கும் தற்போது எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கு மட்டும் தற்போது கட்டண உயர்வில் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 137 லட்சத்து 88 ஆயிரம் பேர்களில், 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அதாவது மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு மின் கட்டணம் ஏழு ஆண்டு களுக்குப் பிறகு உயர்த் தப்பட்டுள்ளது.
...வெப்துனியா 01.08.2010

nambi
01-08-2010, 02:56 PM
ஆந்திர சட்டமன்ற இடங்களுக்கான இடைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி 12 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.

ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடை பெற்ற போது 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து இந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்தது.

5 தொகுதிகளில் 64-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டதால் அந்த தொகுதி களில் வாக்குச் சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 7 தொகுதிகளில் எந்திர ஓட்டுப்பதிவு நடந்தது.

இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 11 தொகுதிகளை கைப்பற்றியது. ஒரு தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. இதில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிட்ட 12 தொகுதியிலும் டெபாசிட் இழந்தது.

அக்கட்சியின் வரலாற்றில் தான் போட்டி யிட்ட 12 தொகுதியிலும் டெபாசிட் இழப்பது இதுவே முதல் முறையாகும்.'

...வெப்துனியா 01.08.2010

nambi
01-08-2010, 03:00 PM
சென்னை:முதலீட்டு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக மோசடி செய்த, இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னையில் கிரியேட்டிவ் டிரேடிங் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, முதலீட்டு தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக, சேம (ரிசர்வ்) வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி சிவ செல்வம் (65) என்பவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தனிப்படை போலீசார், சிவசெல்வத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், வீட்டு சுப செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கிரியேட்டிவ் டிரேடிங் நிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
...தினமலர் 01.08.2010

nambi
02-08-2010, 01:51 PM
பழனி, ஆக. 1: பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம். இங்குள்ள கரடிக்கூட்டம் மலையில், கிழக்கு முகமாக உள்ள வழுக்குப் பாறையின் மேலே மூன்று குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தண்டபாணி என்பவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்த தகவல்கள்:

இவற்றை பாறை ஓவியம் என்பதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே சரியானது. இரண்டு குறியீடுகளும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுரமாக 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரத்தில் உள்ளது. வலதுபுறக் குறியீடு சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ளது. இதன் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை எதற்காக வரையப்பட்டது என்பது தெரியவில்லை. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளது.

சிந்து சமவெளி அகழாய்வில் 417 குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விவரம் முழுமையாகத் தெரியவில்லை. தற்போதுள்ள குறியீட்டில் வலதுபுறம் உள்ளது சிந்து சமவெளி குறியீட்டின் 240-வது வடிவத்தையும், இடதுபுறம் உள்ளது 247-வது குறியீட்டையும் ஒத்துள்ளது. இதேபோல குறியீடுகள் தர்மபுரி மாவட்டம் ஓதிக்குப்பம், பாபநத்தம் மற்றும் ஆண்டிமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல மதுரை அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழந்தமிழ் பிராமி கல்வெட்டிலும் இறுதியில் இக்குறியீடு உள்ளது. சங்க கால தமிழ் மக்கள் இவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது புரியவில்லை. இவற்றில் வலதுபுறம் உள்ளதை இடம் அல்லது மனை என்றும், காலம் அல்லது பொழுது என்றும் படித்துள்ளனர். இடதுபுறம் உள்ளதை வீடாக குறித்துள்ளனர் பலர்.

இவற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும் என்பது தெரியவருகிறது.

2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள் இந்த மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை உள்ளது. பெருவழிப்பாதை என்பது பழங்காலத்தில் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தப்பட்ட பாதையாகும்.

பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பாறைப் பல்லாங்குழிகள் உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரியும் நிலையில், மற்ற இரண்டு பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த பெருவழிப்பாதை வணிகர்கள் குகையில் தங்கும் போது பொழுது போக்க பயன்படுத்தியிருக்கலாம்.

பல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, ஜிம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

....தினமணி 02.08.2010

nambi
02-08-2010, 01:54 PM
கோவை : கோவை பீளமேட்டில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' கை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைத்தார். முதல்வர் தனி விமானம் மூலம் கோவைக்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் மேள, தாளம் முழங்கிட உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் அமைச்சர்கள் பொன்முடி, பூங்கோதை ஆகியோர் வந்தனர். மாலை 4 மணி அளவில் டைடல் பார்க்கை திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாலை 6.00 மணிக்கு கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடக்கும் தி.மு.க., வின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கோவை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று இரவு தொண்டர்கள் கோவைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

....தினமலர் 02.08.2010

பாலகன்
02-08-2010, 02:44 PM
தொடர்ந்து செய்திகளை அள்ளித்தரும் நண்பர் நம்பிக்கு எனது பாராட்டுகள்.

தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை...

nambi
03-08-2010, 01:29 PM
சென்னை, ஆக.3-

கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சென்னை மற்றும் காஞ்சி மாவட்டங்களில் 11 புதிய மருந்துக்கடைகளை கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி நேற்று திறந்து வைத்தார்.


பெசன்ட் நகர், தேனாம்பேட்டை.....

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்துக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி நேற்று, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) சார்பாக 6 மருந்து கடைகளும், காஞ்சீபுரம் நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலமாக 5 மருந்துக் கடைகளும், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் மூலமாக 3 மருந்துக்கடைகளும் திறக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவுச் சிறப்பங்காடி பெயரில் பெசன்ட் நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய 6 இடங்களில் குளிர்பதன வசதியுடன் கணினி மூலம் பட்டியல் இடும் வசதியுடன் கடைகள் செயல்படத் தொடங்கும்.

தாம்பரம், போரூர், மடிப்பாக்கம்....

காஞ்சீபுரம் நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய 5 இடங்களிலும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம் மற்றும் பாடி ஆகிய மூன்று இடங்களிலும் மருந்துக் கடைகள் குளிர்பதன வசதியுடன் திறக்கப்பட்டுள்ளன.

இதில், தேனாம்பேட்டை மருந்தகம், 24 மணி நேரமும் செயல்படும்.

மற்ற கடைகள், காலை 9 மணி முதல் 10 மணி வரை செயல்படும். பிற மருந்துக் கடைகளை விட குறைவான விலையில் (அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் 15 சதவீதம் தள்ளுபடியுடன்) மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

6 ஆயிரம் வகையான அலோபதி மருந்துகளோடு, சித்த, ஆயுர்வேத, யுனானி ஆகிய இந்திய மருந்துகளும் இவற்றில் விற்பனை செய்யப்படும்.

அறிவிக்கப்பட்ட 50 இந்த மருந்துக் கடைகள் போக மற்றவை வருகின்ற

செப்டம்பர் மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இவற்றின் நடைமுறையைப் பார்த்து தேவைப்படின் அதிகமான கடைகள் திறக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


....தினத்தந்தி 03.08.2010

nambi
03-08-2010, 01:41 PM
http://dinamani.com/Images/article/2010/8/3/cwg.jpg

புதுதில்லி, ஆக.3- காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஜர்னெயில் சிங், ஜி.சி சதுர்வேதி, குர்ஜ்யோத் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இத்தகவலை ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச்செயலர் லலித் பனோத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

.....தினமணி 03.08.2010

nambi
03-08-2010, 01:45 PM
கோபிச்செட்டிப்பாளையம்: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.

ஆசிரியர் பணி புனிதமானது என்பார்கள். அப்படித்தான் அந்தக் காலத்து ஆசிரியர்கள் கருதினார்கள், பணியாற்றினார்கள். ஆனால் இன்று ஆசிரியர்களைப் பார்த்து பொதுமக்கள் நக்கலாக சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகள்தான்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இப்படித்தான் ஒரு உதவித் தலைமை ஆசிரியர் தனது வேலையை தான் செய்யாமல், இன்னொரு ஆளைப் போட்டு செய்து பெரும் மோசடி செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 490 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு வணிகவியல் ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் வேலுச்சாமி. இவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆசிரியர் வேலுச்சாமி தினமும் பள்ளிக்கூடத்துக்கு வந்து வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்குப் போய் விடுவாராம். அதை விடக் கொடுமையாக, லதா என்ற ஆசிரியை ஒருவரை நியமித்து தனக்கு பதிலாக அவர் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.

இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன், அந்தப் பள்ளிக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிரிய-ஆசிரியைகளின் வருகை பதிவேட்டை அவர் ஆய்வு செய்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் பள்ளிக்கூட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மாணவர்களின் நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.

நோட்டுப் புத்தகத்தில், ஆசிரியர் வேலுச்சாமிக்கு பதிலாக பெண் ஆசிரியை லதா கையெழுத்து போட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த நோட்டுக்களை முதன்மை கல்வி அதிகாரி கைப்பற்றினார்.

தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகளிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொண்டார்.

இதுகுறித்து பொன் குமார் கூறுகையில், கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வணிகவியல் ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியருமான வேலுச்சாமி என்பவர் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியையை நியமித்து பாடம் நடத்துவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டது.

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்கு வணிகவியல் பாடத்தை நடத்துவது லதா என்ற ஆசிரியைதான் என்று மாணவர்கள் கூறினார்கள்.

நான் பள்ளிக்கூடத்துக்கு விசாரணை நடத்த சென்ற போது, ஆசிரியர் வேலுச்சாமிக்கு வகுப்பு இருந்தது. ஆனால், அவர் வகுப்பில் பாடம் நடத்தாமல் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்தார். அவருக்கு பதிலாக ஆசிரியை லதா என்பவர் பாடம் நடத்தி உள்ளார். நான் சென்றதும், அவர் வகுப்பை விட்டு வெளியே தப்பி ஓடி விட்டார்.

எனவே, ஆசிரியர் வேலுச்சாமி தானாகவே ஆசிரியையை நியமித்து கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். எனவே, இந்த சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

கோபி கல்வி மாவட்ட அதிகாரியின் விசாரணை அறிக்கை வந்தவுடன் ஆசிரியர் வேலுச்சாமியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

அவுட்சோர்சிங் ரேஞ்சுக்கு ஆசிரியர்கள் போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

.....தட்ஸ் தமிழ் 03.08.2010

nambi
03-08-2010, 01:52 PM
ஜம்மு: அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கம் முழுமையாக உருகியது. காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள அமர்நாத் குகையில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர். அதேபோல் இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைகோவி<லுக்கு யாத்திரையாக சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். இவ்வாண்டு இரண்டு மாத காலமாக நீடித்திருந்த பனிலிங்கம் கடந்த 29ம் தேதியுடன் முழுமையாக உருகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4லட்சம் பேர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

....தினமலர் 03.08.2010

nambi
03-08-2010, 01:58 PM
கோவை, ஆக.2: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசவும், கருத்துகளை மக்களுக்கு தமிழில் தெரிவிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டார்.


÷தமிழில் பேச வேண்டும் என்ற ஊக்கத்தை அரசு அதிகாரிகளுக்கு செம்மொழி மாநாடு கொடுத்துள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழில் பேச வேண்டும் என எண்ணித் தவித்தார். நான்தான், ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றேன்.

÷தொழில் துறைச் செயலருக்கு ஆக்கத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இது இருக்க வேண்டுமெனில், அவர் துவண்டு விடாமல் நல்ல தமிழில் பேசப் பழகிக் கொள்வதை முயற்சி செய்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

÷இன்று நடந்த நிகழ்வு ஓரிரு நிகழ்ச்சிகளில் நடைபெற்றால் தவறில்லை; எல்லா நிகழ்ச்சிகளிலும் நடைபெற்றால் அங்கெல்லாம் மாற்றி, மாற்றி உரையாற்ற முடியாது. இவர் மட்டுமல்ல அனைத்து அதிகாரிகளும் நல்ல தமிழில் பேசவும், மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தமிழில் கூறவும் பழகிக் கொள்ள வேண்டும்.

÷பல்வேறு துறைகளிடம் இருந்து வரக்கூடிய கோப்புகளில் சில ஆங்கிலத்தில் இருக்கின்றன. இது அதிகாரிகளின் குற்றமோ, தலைமைச் செயலரின் குற்றமோ அல்ல. செம்மொழி மாநாடு நடத்திய பிறகாவது நமது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து கோப்புகளையும் தமிழில் தயாரிக்க வேண்டும்.

÷எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது என்பதற்காக இதைக் கூறவில்லை; என்னைப் போல பலரும் இருப்பார்கள் அல்லவா, அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எண்ணத்தை வெளிப்படுத்தும் மொழியாக தமிழ் இல்லாமல் போனால் எத்தனை மாநாடுகள் நடத்தியும் பயன் இல்லை.

÷அகில இந்திய ஆட்சிப் பணியில் தமிழகத்துக்கு வருவோர் ஆங்கிலத்தில் பேசுவார்களேயானால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. மொழிக்கு மதிப்பும், வளமும் சேர்க்க முடியாது. எதிர்காலத்தில் நல்ல தமிழில் பேச தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

.....தினமணி 03.08.2010

nambi
03-08-2010, 02:02 PM
சென்னை: ஏழு வருடங்களுக்குப் பிறகு ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ. 3.10 உயர்த்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ. 8.40க்கு விற்கப்பட்டு வந்தது. இந் நிலையில் தற்போது சென்னை ரேஷன் கடைகளில் இதன் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்த்தப்பட்டு ரூ.11.50க்கு விற்கப்படுகிறது.



மத்திய அரசு நிர்ணயித்தபடியே விலை உயர்த்தப்பட்டு்ள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
....தட்ஸ் தமிழ், தினமணி 03.08.2010

nambi
03-08-2010, 02:08 PM
http://thatstamil.oneindia.in/img/2010/08/03-enthiran-cd200.jpg


ஆன்லைன் பாடல் விற்பனையில், ரஜினிகாந்த்தின் எந்திரன் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

முன்னணி ஆன்லைன் விற்பனையகமான ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் சர்வதேச இசைப் பிரிவில், எந்திரன் முதலிடத்தைப் பிடித்தது. இருப்பினும் தற்போது அது 2வது இடத்திற்கு வந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடந்த விற்பனையில்தான் எந்திரனுக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது. 2வது இடத்திற்கு வந்தாலும் கூட முதலிடத்தை பிடித்த முதல் தமிழ் இசைத் தொகுப்பு இது என்ற பெருமை எந்திரனுக்குக் கிடைத்து விட்டது.

ஒரு தமிழ்ப் படத்தின் ஆடியோ விற்பனை முதலிடத்தைப் பிடித்தது ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் வரலாற்றில் இதுதான் முதல் முறையாம்.

எந்திரன் ஆடியோ மலேசியாவில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் இந்த சாதனையை அது படைத்துள்ளது.

ஆப்பிள் ஐட்யூன் இணையதள விற்பனையகம் மூலம் கடந்த 2 நாட்களில் விற்பனையான ஆடியோக்களிலேயே எந்திரனின் பங்கு 70 சதவீதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் படம் என்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பதும் கூடுதல் போனஸாக அமைந்துள்ளதால், எந்திரன் பட பாடல்களுக்கு ஆன்லைன் விற்பனையில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
............................

ஆனால் இந்த விழா நடந்த சில நிமிடங்களிலேயே அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படு துல்லியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணையதளங்களில் வெளியாகி விட்டது. ஏகப்பட்ட இணையதளங்களில் எந்திரன் படப் பாடல்கள் கிடைக்கின்றன. சில தளங்களில் டவுன்லோட் செய்ய பணத்தையும் கறக்க ஆரம்பித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் தனியாக இசை வெளியீடு நடத்தத் தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இப்படத்தின் பாடல்களை இணையதளங்களில் இலவசமாக கேட்க முடிகிறது.


....தட்ஸ் தமிழ்..சன்செய்திகள் 03.08.2010

nambi
04-08-2010, 04:32 PM
திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கைது செய்யப்பட்டார்.

...தினமலர் 04.08.2010

nambi
04-08-2010, 04:35 PM
அம்பாசமுத்திரம், ஆக. 3: வீரவநல்லூரில் தொழிலாளி மனைவியிடம் திங்கள்கிழமை ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

வீரவநல்லூர் 3}ம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் நவநீதகிருஷ்ணன் (48). தச்சநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார்.

இதேஊர் 2}ம் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். மதுரையில் ஹோட்டல் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (38).

இந்நிலையில், திங்கள்கிழமை வீரவநல்லூர் வந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் தனித்திருந்த பேச்சியம்மாளிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் நவநீதகிருஷ்ணனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் வீரவநல்லூர் போலீஸôர் வழக்குப் பதிந்து நவநீதகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சேரன்மகாதேவி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

...தினமணி 04.08.2010

வியாசன்
04-08-2010, 09:20 PM
வீரத்திருமகனுக்கு பொலிசார் தங்கள் கை வரிசையை காண்பித்திருப்பார்கள்

nambi
05-08-2010, 01:41 PM
சென்னை, ஆக. 5: தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 5-ம் தேதி வருகிறது. இதனால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் 3-ம் தேதி புறப்படுவார்கள். இந்தத் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

ரயில்வே முன்பதிவு மையங்களில் காலை 5 மணிக்கு அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும், சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர், பல்லவன் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 300-க்கும் மேல் சென்றதலா சில நிமிடங்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

...தினமணி 05.08.2010

nambi
05-08-2010, 01:44 PM
சென்னை : தமிழகம் முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக, "ஆபரேஷன் ஹம்லா' என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று துவங்கியது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நடந்த சோதனையில், பயங்கரவாதிகள் போர்வையில் வந்த 10க்கும் மேற்பட்ட கமாண்டோக்களை போலீசார் பிடித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, தமிழக போலீஸ் தலைமையிடத்திற்கு, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த ரகசிய தகவல் வந்தது. சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் கூடுமிடங்கள், கோவில்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டன. டி.ஜி.பி., லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி., (பொறுப்பு) அனூப் ஜெய்ஸ்வால், உளவுப்பிரிவு ஐ.ஜி., ஜாபர்சேட், சங்கர் ஜுவால், சென்னை மாநகர கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா மற்றும் கூடுதல் கமிஷனர்கள் மற்றும் சென்னை கலெக்டர் உள்ளிட்டோர், நேற்று இரவு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, நேற்று முன்தினம் இரவு 12 மணிமுதல், "ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் பயங்கரவாதிகள் தடுப்பு நடவடிக்கை துவங்கியது.

....தினமலர் 04.08.2010

nambi
05-08-2010, 01:50 PM
புது தில்லி, ஆக. 4: சில நேரம், நாம் ஏதாவது முக்கியமான பணியில் இருக்கும்போது தொலைபேசி அழைப்பு வரும். ஏதோ முக்கியமான அழைப்பு எனக் கருதி எடுத்தால் இந்த பாட்டை "காலர் டியூனாக' வைத்துக் கொள்கிறீர்களா, வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டு வெறுப்பேற்றுவார்கள்.

இது நமக்கு மட்டுமல்ல. நாட்டின் நிதியமைச்சருக்கே இது போன்று தினசரி நிகழ்கிறதாம்.

விலைவாசி உயர்வுப் பிரச்னை தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை காலை ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

ஆலோசனையின்போது, திடீரென முகர்ஜியின் செல்போன் சிணுங்கியது. ஏதோ முக்கியமான அழைப்பு எனக் கருதி முகர்ஜி பேசியுள்ளார்.

ஆனால், எதிர்முனையில் பேசியவர் கூறிய விஷயத்தைக் கேட்டு கடுப்பான முகர்ஜி, "இல்லை, இல்லை. நான் இப்போது முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன்' எனக் கூறிவிட்டு செல்போனை நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமியிடம் கொடுத்து விட்டார்.

இது குறித்து கூட்டத்தில் இருந்தவர்கள் கேட்டபோது, "வீடு கட்ட கடன் தருகிறோம் என ஏதோ ஒரு நிதி நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகிறார்' என முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க முகர்ஜி கூறினார்.

இதுபோல தினசரி 4-5 தேவையற்ற அழைப்புகள் வருகின்றன என குறிப்பிட்டார் முகர்ஜி.

இந்திய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு வீடு கட்ட கடன் வேண்டுமா என கேட்டு சில மாதங்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 04.08.2010
.......................
இது குறித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

இனி தேவையற்ற வங்கி கடன் வேண்டுமா? தனிநபர் கடன் வேண்டுமா? போன்ற தேவையற்ற அழைப்புகள் வாடிக்கையாளர் அனுமதியில்லாமல் தொடர்வதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவுகள் தொலைத்தொடர்புத்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
..கலைஞர் செய்திகள் 05.08.2010

nambi
05-08-2010, 01:58 PM
வாஷிங்டன், ஆக.5-

50 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அவர்களிடையே அதிபர் ஒபாமா உரையாற்றினார். பிறகு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஒபாமா, ஆப்பிரிக்க கண்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மகாத்மா காந்தியை பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதுபற்றி ஒபாமா கூறுகையில், `என்ன மாற்றத்தை விரும்புகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் ஆக வேண்டும் என்று ஒருமுறை காந்தி சொன்னார். அந்த எண்ணத்தை அனைவரும் உள்வாங்கி கொள்ள வேண்டும்' என்றார்.
....தினத்தந்தி 05.08.2010

nambi
05-08-2010, 02:01 PM
வாஷிங்டன்: இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.
...தட்ஸ் தமிழ் 05.08.2010

nambi
05-08-2010, 02:05 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று 7வது நாளாக கலவரம் நீடித்தது. போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.

காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கலவரம் பரவி வருகிறது. நேற்று ஓரளவு அமைதி நிலவியது. இந்நிலையில் இன்று மீண்டும் பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. சோப்பூர் மற்றும் ஹபாகட்டல் பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பாரமுல்லாவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். ஸ்ரீநகர் புறநகரில் வன்முறை கும்பல் ஒன்று போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறையை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் குலாம் நபி பிதாரி (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்தார். வேறு சில இடங்களிலும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கனியகடால் என்ற இடத்தில் ஒருவருக்கும், பெமினா பகுதியில் இருவருக்கும் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. ஹைதர்போரா என்ற இடத்தில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

கடந்த 7 நாட்களில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பதற்றம் நீடிப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

....தினகரன் 05.08.2010

nambi
06-08-2010, 02:11 PM
லே, ஆக.6: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள லடாக் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 85 பேர் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக லே பகுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லே நகரின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் மூழ்கிவிட்டன. மழைக்கு 85 பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
....தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:15 PM
திருச்சி, ஆக. 5: காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால், தொலைபேசி மூலம் புகார் செய்யலாம் என்றார் மாநகரக் காவல் ஆணையர் கே. வன்னியபெருமாள்.

குற்ற வழக்குகள் தொடர்பாக மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தப் பிறகு வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் 9788810000 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம். அல்லது 100 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
....தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:17 PM
புதுதில்லி, அக. 5: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி முதல்முறையாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் அழகிரி அனுமதி கோரினார்.

ஆனால் நாடாளுமன்ற செயலகம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. விதிகளின்படி ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் அமைச்சர்கள் பேச முடியும் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்வது குறித்து அவைத் தலைவர் மீராகுமாரிடம் ஆலோசனை செய்தார் அழகிரி. எழுத்து மூலம் கேட்கப்படும் பிரதான கேள்விகளுக்கு அமைச்சர் அழகிரி ஏற்கெனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பதிலை அவையில் படிக்குமாறு யோசனை தெரிவிக்கப்பட்டது.

அந்த யோசனையை ஏற்று முதன்முதலாக மக்களவையில் அமைச்சர் அழகிரி வியாழக்கிழமை பேசினார்.

.....தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:20 PM
சென்னை: சைபர் குற்றங்களை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகளுடன், நீதிபதி ராஜேஷ் டாண்டன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், சைபர் நிர்வாக தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ராஜேஷ் டாண்டன், தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தார். சைபர் குற்றங்களை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகளுடன், தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் டேவிதரும் உடனிருந்தார். தமிழகத்தில் சைபர் குற்றங்களின் நிலைமை குறித்து போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். தமிழகத்தில் நடந்துள்ள சைபர் கிரைம் குற்றங்களின் தன்மைகள் பற்றியும், அவற்றை போலீசார் கண்டுபிடித்து தீர்த்த விதம் பற்றியும் குற்றப்பிரிவு ஐ.ஜி., விளக்கினார். சைபர் குற்ற வழக்குகளை தமிழக போலீசார் கையாண்ட விதத்தை நீதிபதி பாராட்டினார். சைபர் குற்றங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்கான வழிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடம், மோசடியை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு தேவை என்றும் நீதிபதி வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், ஐ.ஜி., மஞ்சுநாதா, சென்னை குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், குற்றப்பிரிவு எஸ்.பி., சந்திரபாசு, சென்னை குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர், எல்காட் பொது மேலாளர் அன்பு செழியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.....தினமலர் 06.08.2010

nambi
06-08-2010, 02:24 PM
அஜீத்தின் 50வது படமான மங்காத்தா குறித்து முதல் முறையாக அதிகார்ப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் - படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா மற்றும் விகே சுந்தர் வெளியிட்டுள்ள செய்தி:

அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு 'மங்காத்தா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப் படம்,வாரணம்ஆயிரம், பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் 'நான் மகான் அல்ல' படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அஜித் குமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாளான ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான மங்கத்தா படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கின் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் தொடங்கியது. தியேட்டர்களில் திரையிடப்படும் முன்னோட்டக் காட்சிக்கான காட்சிகள் அன்று படமாக்கப்பட்டன.

.....தட்ஸ் தமிழ் 05.08.2010

nambi
06-08-2010, 02:28 PM
http://www.dinamani.com/Images/article/2010/8/6/alto.jpg

சென்னை, ஆக. 5: மாருதி சுஸூகி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "ஆல்டோ கே 10' மகிழுந்து , சென்னையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் ஆல்டோ வகை மகிழுந்துகளை விற்பனை செய்து வருகிறது. இப்போது "ஆல்டோ கே 10' என்ற புதிய வகை மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

லிட்டருக்கு 20.2 கிலோ மீட்டர் எரிபொருள் திறன், 13.3 விநாடிகளில் மணிக்கு 0 -100 கிலே மீட்டர் வேகத்துக்கு மாறக்கூடிய செயல் திறன், எளிதான கியர் ஆகியவை இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் சி.வி. ராமன் தெரிவித்தார். "ஆல்டோ கே10 எல்எஸ்ஐ' விலை ரூ. 3 லட்சம். "ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ' விலை ரூ. 3.13 லட்சமாகும்.
....தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:32 PM
உளுந்தூர்பேட்டை, ஆக. 5: உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதையூர் கிராம விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வெள்ளைப் பொன்னி ரக நெல் விதை செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

÷மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அரங்கநாதன் விவசாயிகளுக்கு நெல்விதை, நுண்ணுயிர் நுண்ணுரம் வழங்கி பேசியது: விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானிய விலையில் நெல் விதை தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதையைப் பயன்படுத்தி விதைப்பண்ணை அமைத்து, கலவன் எடுத்து அடுத்த பருவத்திற்கு அந்தந்த கிராமத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விதைக்காக தனியாரிடமோ, அரசிடமோ வராமல் தங்களுக்குள்ளேயே விதை உற்பத்தி செய்து விதை சேகரிப்பு செய்து பயன்பெற வேண்டும். விதைகளை சேகரம் செய்வதற்கு பயன்படும் விதை சேமிப்பு கொள்கலன் 50 சதவிகித மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என்றார்.

÷இந் நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன், துணை வேளாண்மை அலுவலர் தமிழரசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அந்தோணிசாமி, சுதர்சன், ராஜக்கண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
....தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:34 PM
கொழும்பு, ஆக.6- ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், ஐ.நா. அமைப்பில் அமெரி்க்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அணியை உருவாக்குவதற்கான ராஜதந்திர நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியின் எம்.பி. அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.....தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:37 PM
திருவனந்தபுரம், ஆக.6- நடிகர் கமல் ஹாசனின் 50 ஆண்டுகால திரையுலக சேவையை கெளரவிக்கும் வகையில் அவருக்கு கேரள மாநில சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

ஆகஸ்ட் 22-ல் ஓணம் திருவிழா கொண்டாட்டத்தின் போது இந்த பாராட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கேரள சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவுக்கு கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரையுலக ஊழியர் கூட்டமைப்பு, கேரள திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
...தினமணி 06.08.2010

nambi
06-08-2010, 02:40 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. 3 கட்டமாக நடந்து வரும் இந்த கவுன்சிலிங் 8ம் தேதி நிறைவடைகிறது.

இன்று வரை நடந்த கவுன்சிலிங் மூலம் 1,07,700 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நேற்று வரை 96,913 பேர் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கட்-ஆப் மார்க் 92க்கு கீழ் எடுத்த மேலும் 8,000 ஆயிரம் பேரையும் கவுன்சிலிங்குக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த வாரம் கவுன்சிலிங் நடக்கிறது.

இதில்தான் புதிய கல்லூரிகளின் இடங்கள் இடம் பெறும். இந்த கவுன்சிலிங்கிற்கு பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்து பின்னர் உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
....தட்ஸ் தமிழ் 06.08.2010

nambi
07-08-2010, 03:00 PM
ஆமதாபாத், ஆக.7- குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிபிஐ இன்று தமது காவலில் எடுத்தது.

ஷோராபுதீன் போலி என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக அவரிடம் இரு நாட்கள் விசாரணை நடைபெறும்.

சபர்மதி சிறைக்கு இன்று காலை மருத்துவர் குழுவுடன் சென்ற சிபிஐ போலீஸார் அமித் ஷாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்திய பின்னர் தங்கள் காவலில் அழைத்துச் சென்றனர்.
...தினமணி 07.08.2010

nambi
07-08-2010, 03:03 PM
சென்னை, ஆக. 7: ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அனைவரும் அறியும் வகையில் வெளிப்படையான முறையில் வெளியிடப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
....தினமணி 07.08.2010

nambi
07-08-2010, 03:07 PM
சேலம்: பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.

20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

காவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண்டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே?

வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி.

...தட்ஸ் தமிழ் 07.08.2010

nambi
07-08-2010, 03:10 PM
ஸ்ரீபெரும்புதூர், ஆக. 6: பதிவு செய்த அன்றே வீட்டுமனைப் பத்திரத்தை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகக் கூறி ஸ்ரீபெரும்புதூர் துணை சார்பதிவாளர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்குட்பட்ட கடுவஞ்சேரி கிராமத்தில் ரூ.2 லட்சத்தில் ஒரு வீட்டுமனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அந்த இடத்தை பத்திரபதிவு செய்ய ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

÷அங்கு துணை சார்பதிவாளர் சுரேஷ் வீட்டுமனையின் மதிப்பை குறைத்து, பத்திரப்பதிவு செய்யவும், பதிவு செய்த அன்றே பத்திரத்தை வழங்கவும் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டாராம்.

÷இதையடுத்து அன்பழகன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸôருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நடவடிக்கையில் இறங்கிய போலீஸôர் ரசாயனம் தடவிய பணத்தை அன்பழகனிடம் கொடுத்து சுரேஷிடம் கொடுக்கச் செய்துள்ளனர். ÷அதன்படி, அன்பழகனிடமிருந்து சுரேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கெங்காதரன், சரவணன், வெங்கசேஷ் உள்ளிட்ட போலீஸôர் சுரேஷை கைது செய்தனர்.
...தினமணி 07.08.2010

nambi
07-08-2010, 03:17 PM
புது தில்லி, ஆக. 6: ஹிரோஷிமா மீது அணு குண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்களவைக் கூடியதும் அவைத் தலைவர் மீரா குமார், இது தொடர்பான அறிக்கையை வாசித்தார். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது 1945 ஆகஸ்ட் 6, 9-ம் தேதிகளில் வீசப்பட்ட அணு குண்டுகளின் கதிர் வீச்சால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்க பேரழிவு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அணு குண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மக்களவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

....தினமணி 07.08.2010

nambi
07-08-2010, 03:19 PM
நெல்லை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்டமான மேம்பாலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். நேற்று அவர் தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம், தருவைகுளத்தில் புதிய சமத்துவபுரம், சுனாமி குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
....தடிஸ் தமிழ் 07.08.2010

nambi
07-08-2010, 03:22 PM
http://img.dinamalar.com/data/large/large_56320.jpg

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

....தினமலர் 07.08.2010

nambi
07-08-2010, 03:24 PM
ஈழப் போருக்குப்பின் விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய ராணுவ முக்கியத்துவம் கொண்ட வன்னிபகுதியில் சீன ராணுவ அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு சீனா ரகசிய ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டிருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வன்னியில் சீனா ராணுவதளம் அமைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். மத்திய அரசு இலங்கையுடன் பேசி, சீன ராணுவ தளம் அமைக்க முயற்சிப்பதை தடுக்காவிட்டால் தமிழகம்தான் கடுமையாக பாதிக்கப்படும். கடலில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையும் ஏற்படும்.

மேலும், கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்கள் இந்திய கடற்கரைப்பகுதியில் உள்ளதால் எதிர்காலத்தில் இவற்றின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

...இந்நேரம்.காம் 07.08.2010

nambi
07-08-2010, 03:27 PM
புது தில்லி, ஆக.6: வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் புதிதாக சேர்ந்துள்ள 1.5 கோடி குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை ஆகியன மானிய விலையில் அளிக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை துணைக் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.

ஏற்கெனவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 6.57 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் திட்டக்குழு நடத்திய ஆய்வின்படி இந்த எண்ணிக்கை 1.50 கோடி கூடுதலாக இருந்தது. இவர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படும் என்று பவார் கூறினார். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 8.07 கோடியாக உயர்ந்துள்ளது.ஏழைகளைக் கண்டறிவது தொடர்பாக டெண்டுல்கர் குழு வகுத்தளித்த விதியின்படி ஏழைக் குடும்பங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது. மத்திய அரசு விரைவிலேயே உணவு பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. அரிசி ஒரு கிலோ ரூ. 5.65-க்கும், கோதுமை கிலோ ரூ. 4.15-க்கும் வழங்கப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையை ரூ. 3 விலையில் வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது. மாதத்திற்கு 20 கிலோ அல்லது 25 கிலோ அளிப்பதா அல்லது 35 கிலோ அளிப்பதா என்பது தீர்மானிக்கப்படாததால், இது செயல்படுத்தப்படவில்லை. தேசிய உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியபிறகு எத்தனை கிலோ அளிப்பது என்பது உறுதி செய்யப்படும் என்றார் பவார்.

விலைக்கட்டுப்பாடு: சர்க்கரை மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று பவார் மேலும் கூறினார். இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய சர்க்கரை ஆலை கூட்டுறவு சம்மேளனம் ஆகியன விலைக்கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
....தினமணி 07.08.2010

மயூ
08-08-2010, 03:26 PM
ஈழப் போருக்குப்பின் விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய ராணுவ முக்கியத்துவம் கொண்ட வன்னிபகுதியில் சீன ராணுவ அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு சீனா ரகசிய ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டிருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வன்னியில் சீனா ராணுவதளம் அமைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். மத்திய அரசு இலங்கையுடன் பேசி, சீன ராணுவ தளம் அமைக்க முயற்சிப்பதை தடுக்காவிட்டால் தமிழகம்தான் கடுமையாக பாதிக்கப்படும். கடலில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையும் ஏற்படும்.

மேலும், கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்கள் இந்திய கடற்கரைப்பகுதியில் உள்ளதால் எதிர்காலத்தில் இவற்றின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

...இந்நேரம்.காம் 07.08.2010

அதே அதே சபாபதி... கடிதம் எழுதினவர்களும் ஒரு மணிநேரம் பீலா உண்ணா நோண்பு இருந்தோருக்கும் சீனன் விரைவில் சவுக்கடி கொடுப்பான்.

அமரன்
08-08-2010, 03:49 PM
சும்மா இருங்க மயூ..

உந்தப் புடலங்காய் எல்லாம் விற்பனைக்காக பேப்பர்காரங்க விடுற புருடா.

nambi
08-08-2010, 04:17 PM
அதே அதே சபாபதி... கடிதம் எழுதினவர்களும் ஒரு மணிநேரம் பீலா உண்ணா நோண்பு இருந்தோருக்கும் சீனன் விரைவில் சவுக்கடி கொடுப்பான்.

அதனால் யாருக்கு என்ன நட்டம்? என்ன பாதிப்பு? என்ன தீர்ந்து விடப்போகிறது....?

nambi
08-08-2010, 04:20 PM
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே காதலருடன் ஓட முயன்ற மகளை வெட்டிக் கொலை செய்தார் தந்தை. இதைத் தடுக்க முயன்ற தனது 2வது மனைவியையும் வெட்டிக் கொன்றார்.

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வினைதீர்த்தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். 2வது மனைவி கனகமணி. இவரது மகள் அருணா தேவி (21).

அருணா தேவி இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜன் வேறு ஜாதியைச் சேர்ந்தவராம். காதலுக்கு தாய் கனகமணி ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்தார் வினைதீர்த்தான்.

ஆத்திரத்துடன் இருந்து வந்த வினைதீர்த்தான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அருணாதேவி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் காதலருடன் ஓட அவர் திட்டமிட்டுள்ளதாக கருதிய வினைதீர்த்தான் மகளை தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து அவருக்கும், அருணா தேவி, கனகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் அரிவாளால் அருணாதேவியை வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த மனைவி கனகமணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கொலை செய்த வினைதீர்த்தான் வெறிய அடங்காத நிலையில், அப்படியே பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை கூறி சரணடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு நெல்லை ஏடிஎஸ்பி ராஜன், ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கணவனே மனைவியையும், மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
....தட்ஸ் தமிழ் 08.08.2010

nambi
09-08-2010, 11:09 AM
புதுதில்லி, ஆக.9: மும்பை கடல்பகுதியில் இரு சரக்குக் கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கப்பல்துறை அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல்மைல் தொலைவில் காலிஜியா 3, எம்எஸ்சி சித்ரா ஆகிய இரு சரக்குக் கப்பல்கள் சனிக்கிழமை மோதின. இதில், எம்எஸ்சி சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது.

இதனால், அப் பகுதி கடல்சார் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவை அகற்ற நீர்உறிஞ்சும் திறன் கொண்ட 6 கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமைமுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநிலங்களவையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. மோதிக்கொண்ட கப்பல்களின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அப்போது தெரிவித்தார்.

....தினமணி 09.08.2010

nambi
09-08-2010, 11:17 AM
தம்மம்பட்டி : சேலம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் நடந்த மோதலில் பெண் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.


இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்த ஜேசுதாஸ்(38), இவரது மனைவி மேரிஜெனீதா(28), இவரது மகள் தர்ஷிகா(2), மைத்துனர் சுவாம்பிள்ளை(34) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தனர். அப்போது, 15 பேர் கொண்ட கும்பல் திடீரென இவர்களது வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் ஜேசுதாஸ், மேரிஜெனீதா, சுவாம்பிள்ளை ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.மேலும், 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். ஜேசுதாசின் வீட்டையும், அவர்கள் சூறையாடினர். ஜேசுதாஸ் கொடுத்த புகாரின் பேரில், செல்வகுமார், நந்தகுமார், சசிதரன், டெனி, ஜபநேசன், கிறிஸ்துராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜேசுதாஸ், சுவாம்பிள்ளை ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அகதிகள் முகாமை சேர்ந்த 15 பேர், அதிகாரிகளுக்கு தெரியாமல் கேரளா சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக 15 பேரும் கேரளா மாநிலம் கொச்சி பகுதிக்கு சென்றனர். இதையறிந்த உளவுத் துறை அதிகாரிகள், அவர்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர், 15 பேரையும் எச்சரித்த அதிகாரிகள், மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். தாங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது பற்றி ஜேசுதாஸ் குடும்பத்தினர் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று நினைத்த அந்த கும்பல் இவர்களை தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

........தினகரன் 09.08.2010

nambi
09-08-2010, 11:20 AM
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் வாகன தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்து மருத்துவ பணியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள், இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஜெர்மன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த இருவர்.

பதக்க்ஷான் பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு கொள்ளை அடிப்பதே நோக்கமாக தெரிகிறது என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர்கள் பைபிள்களை கொண்டு சென்றதாலும், அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாலும் அவர்களை கொன்றதாக தாலிபான் மற்றும் ஹெஸ்பி இஸ்லாமி ஆகிய இரு குழுக்கள் உரிமை கோரியிருக்கின்றன.

ஆனால் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வந்த சர்வதேச உதவி அமைப்பு என்ற கிறிஸ்துவ அறக்கட்டளை இதனை மறுத்துள்ளது.

....பி பி சி தமிழோசை 07.08.2010

nambi
09-08-2010, 11:24 AM
பாட்னா : பீகாரில் மீண்டும் ரயில் கொள்ளை நடந்துள்ளது. கோல்கட்டாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது 25க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு தூங்கும் வசதி பெட்டிக்குள் புகுந்து பயணிகளின் நகை, பணத்தை கொள்ளையடித்தனர். பயணிகள் சிலரையும் தாக்கினார்கள். பீகாரில் ஒ*ரு வாரத்துக்குள் அடுத்தடுத்து நடந்த ரயில் கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
....தினமலர் 09.08.2010

nambi
11-08-2010, 02:40 PM
கொல்லம், ஆக.11: 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்ய கர்நாடக போலீசார் நேற்று இரவு முதல் கேரளாவில் காத்திருக்கின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக மதானி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்ய பெங்களூர் போலீஸ் குழுவினர் நேற்று கொல்லம் வந்தனர்.

மதானியைக் கைது செய்வது தொடர்பான ஆவணங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மதானி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

....தினமணி 11.08.2010

nambi
11-08-2010, 02:45 PM
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தமிழகம் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து காவிரி நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம் தேதி டெல்லியில் இது நடைபெறுகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 70 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகமோ கடந்த ஜூன் மாதம் வெறும் 20 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளது.

இதையடுத்து காவிரி நிலைக்குழுவில் தமிழக அரசு புகார் கூறியது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம்தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், புதுச்சேரி, கேரளா உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
....தட்ஸ்தமிழ் 11.08.2010

nambi
11-08-2010, 02:51 PM
புதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முதல்கட்ட சோதனையாக 10 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ரூ.20 மற்றும் ரூ.50 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மலேசிய உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
....தினமலர் 11.08.2010

nambi
12-08-2010, 03:00 PM
சென்னை: சென்னையில் 12 ஆண்டுகளுக்குப் பின் 3,000 புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிற மாவட்டங்களில் 4,900 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 10 பேருக்கு முதல்வர் கருணாநிதி அனுமதி ஆணைகளை வழங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதேபோல மாநிலம் முழுவதும் பெர்மிட் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் போக்குவரத்து துறை மூலம் அனுமதி ஆணை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆட்டோக்கள் அனைத்தும் கேஸ் மூலம் இயங்கக் கூடியவை என்பதால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாது.

அதே போல தற்போது பெட்ரோல் மூலம் இயங்கும் ஆட்டோக்களையும் படிப்படியாக எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களாக மற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் பெருகிவரும் போக்குவரத்துத் தேவைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி ஆணைகள் வழங்கிட 12 ஆண்டுகளாக இருந்த தடை 13.5.2010 அன்று ரத்து செய்யப்பட்டது.

இதன்மூலம் ஏழை-எளிய மற்றும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற வழி பிறந்துள்ளது.

புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி ஆணை வழங்குவதில் இருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகரில் 55,000 பேரும் பிற மாவட்டங்களில் 23,000 பேரும் என மொத்தம் 78,000 பேர் புதிய ஆட்டோகளுக்கு அனுமதி ஆணைகள் வழங்கிடக் கோரி விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்த அனைவருக்கும் போக்குவரத்துத்துறை மூலம் அனுமதி ஆணை அளிப்பதற்கான செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

.....தட்ஸ்தமிழ் 12.08.2010

nambi
12-08-2010, 03:14 PM
புது தில்லி, ஆக. 11: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

டிசம்பரில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சரவைக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸம், பாரதிய ஜனதா கட்சியும் சம்மதம் தெரிவித்தன. பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்த நிலையில், புதன்கிழமை கூடிய அமைச்சர்கள் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.

சுதந்திரம்பெற்று முதல் முறையாக தற்பொழுது தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு முன் ஜாதி வாரி கணக்கெடுப்பு 1931 இல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

....தினமணி 12.08.2010

nambi
12-08-2010, 03:24 PM
"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உருப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்' என, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் தமிழக எம்.பி.,க்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சித்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினர்.
....தினமலர் 12.08.2010

nambi
12-08-2010, 03:28 PM
ஸ்ரீநகர்/புது தில்லி, ஆக.11: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

÷இதேபோல் காஷ்மீர் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) பிரதமரின் கருத்தை நிராகரித்துள்ளது. பிரதமரின் இந்த யோசனை காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு அரசியல் தீர்வாக அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

÷தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக அரசியல் சாசனத்துக்கு உள்பட்ட வகையில் காஷ்மீருக்கு சுயாட்சி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

இக்கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவுடன் இணைந்த பகுதியாக காஷ்மீர் உள்ள நிலையில் சுயாட்சி அதிகாரம் என்ற யோசனை ஏற்புடையதல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

.....தினமணி 12.08.2010

nambi
12-08-2010, 03:49 PM
சென்னை, ஆக. 11: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட கட்டணத்தையே இந்தக் கல்வி ஆண்டில் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் குழு விளக்கம் அளித்துள்ளது.

÷தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு மே மாதம் நிர்ணயம் செய்தது. கட்டண நிர்ணயத்தை எதிர்த்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் அந்தக் குழுவிடம் மேல்முறையீடு செய்தன.

÷மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கான கட்டணம் குறித்து நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு சில பத்திரிகைகளில் ("தினமணி'யில் அல்ல) தவறாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் உறுப்பினர்-செயலர் புதன்கிழமை வெளியிட்டுள்ள விளக்கம்:

÷மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்வியாண்டில் (2011-12) இருந்து நடைமுறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் குழு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

÷ஆனால், தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் முடிவை பள்ளிக் கல்வித் துறை இந்த ஆண்டு திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

÷தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மிகவும் குறைவு என்று கூறி, அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி 6,400 மனுக்கள் வந்துள்ளன. அதேநேரத்தில், மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அரசு அக்கறை கொண்டுள்ளது. எனவே, நீதிபதி குழு மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளையெல்லாம் நேரடியாக ஆய்வு செய்து, பள்ளிகளின் தரத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய எண்ணியுள்ளது. அதற்குச் சற்று காலதாமதம் ஆகும் என்பதால், மீண்டும் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கல்வி ஆண்டைப் பொருத்தவரையில், நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கல்விக் கட்டணமே பொருந்தும். மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் என்ன கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதோ, அதையே அந்தப் பள்ளிகள் இந்த ஆண்டு வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 12.08.2010

nambi
12-08-2010, 03:51 PM
சென்னை : சென்னையில் மோசடி சாமியார்களை பழிவாங்க முயன்ற இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் சாமியார் ஒருவரின் மோசடியால் தாய், தந்தையர் உயிரிழந்ததால் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் சாமியார்களுக்கு குறைந்த விலையில் கார்கள் தருவதாக இ-மெயில் அனுப்பி உள்ளார். அவ்வாறு சாமியார்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார். கார் வழங்காததால் மந்தைவெளி கேந்திர மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரின் சாவிற்கு பலி வாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

....தினமலர் 12.08.2010

nambi
13-08-2010, 03:17 PM
சாகர்: 600 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட 61 லாரிகளைக் காணவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நக்சலைட்கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியிலிருந்து இந்த வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.

மொத்தம் 61 லாரிகளில் 600 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லையாம்.

இதுகுறித்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத்யாய் கூறுகையில், உரிய உரிமங்ககளுடன் வந்த லாரிகளில்தான் இந்த வெடிபொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.

இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டவையாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அடக்கம்.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடிபொருட்களை அந்த நிறுவனத்திற்கு அனுப்பினர் என்பது தெரியவில்லை.

கணேஷ் வெடிபொருள் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலிருந்துதான் டெலிவரி செய்யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.....தட்ஸ் தமிழ் 13.08.2010

nambi
13-08-2010, 03:19 PM
ஸ்ரீநகர். ஆக.13: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

டிரீகம் என்ற இடத்தில் போலீசாரை நோக்கி வன்முறைக் கும்பலைச் சேர்ந்தோர் கற்களை வீசினர். இதையடுத்து அவர்களைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதாகப் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முத்ஸர் அகமது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
....தினமணி 13.08.2010

nambi
13-08-2010, 03:22 PM
பாஸ்டன் : பிளாக்பெர்ரி மொபைல் போன் தகவல்களை இடைமறிக்கும் வசதி தர மறுப்பு தெரிவித்த "ரிம்' நிறுவனத்திற்கு, இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.

பிளாக்பெர்ரி மொபைல் போனை தயாரிக்கும் நிறுவனமான "ரிம்'மின் நடவடிக்கை குறித்து, உள்துறை செயலர் பாதுகாப்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று கூடி விவாதித்தனர். கூட்டம் முடிந்த பின், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தொலைத்தொடர்புத் துறை செயலர் தாமசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "ரிம்' நிறுவன தயாரிப்புகளின் மூலம் பரிமாறப்படும் பேச்சுக்களையும், குறுந்தகவல்களையும் இடைமறிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் கேட்டறியும் வகையில், வரும் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குங்கள்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில்நுட்பத் தீர்வை, வரும் 31ம் தேதிக்குள் உருவாக்கவில்லை எனில், அதன் மேல் அரசின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து, இந்த இரு சேவைகளை தடை செய்ய ஆவன செய்வோம். தற்போதைய நிலையில், பிளாக்பெர்ரி மூலமான வாய்ஸ் மெய்ல், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் சேவை ஆகியவை, சட்ட அமலாக்க நிறுவனங்களால் பார்க்க மட்டுமே முடியும். அவற்றை இடைமறித்துக் கேட்க முடியாது. எனவே, "ரிம்' நிறுவனம் குறித்த அரசின் நிலைப்பாடு எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்தே இன்றைய கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கூட்டம் முடிந்த பிறகு, "ரிம்' நிறுவன உயர் அதிகாரி ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினார். பிளாக்பெர்ரி தகவல்கள் அனைத்தும் "பிளாக்பெர்ரி என்டர்பிரைஸ் சர்வர்' மூலம் பரிமாறப்படுகின்றன. இந்தத் தகவல்கள் விசேஷக் குறியீடுகள் மூலமே பரிமாறப்படுவதால், சாதா எழுத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட குறியீட்டிலேயே சர்வரில் பதியப்படுகிறது. மீண்டும் இன்னொரு போனுக்கு தகவல் செல்லும்போது மட்டுமே, சாதா எழுத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விசேஷக் குறியீட்டைப் படிக்கும் உரிமை வேண்டும் என்பது தான், இந்தியாவின் கோரிக்கை.

ஐக்கிய அரபு மற்றும் சவுதி அரசுகள் ஆகியவையும் "ரிம்' கூறுவதை ஏற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் இந்த மொபைல் போனில் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கண்டறிய முடியாது என்பதே இப்போது பேசப்படும் பெரிய விஷயம். ஆனால், இதே "ரிம்' நிறுவனம் இந்த வசதியை அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது. அது எப்படி என்று கேட்டால், "கோர்ட் உத்தரவு மூலம் பிளாக்பெர்ரி தகவல்களை இடைமறித்து பெறமுடியும். அம்மாதிரி அனுமதி தர மறுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நிபந்தனைகளுக்கு உட்பட வில்லை என்றால், பிளாக்பெர்ரி சர்வீஸ் முடக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

.....தினமலர் 13.08.2010

nambi
13-08-2010, 03:24 PM
தில்லி, ஆக.13: மக்களவை நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால் எழுந்த பிரச்னை காரணமாக அவை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

கேள்விநேரத்தின்போது மின்துறை இணை அமைச்சர் பாரத்சிங் சோலங்கி இந்தியில் பதிலளிக்கும்போது திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு இவ்விவகாரத்தை எழுப்பினார்.

இப்பிரச்னை சரிசெய்யப்படாவிட்டால் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்து எழுந்து நடக்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட சோலங்கி, ஆங்கிலத்தில் பதிலளிப்பதாகக் கூறினார். எனினும் இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேள்வியை பாஜக உறுப்பினர் இந்தியில்தான் கேட்டுள்ளார். எனவே இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் மீராகுமார் அறிவித்தார். பின்னர் அவை கூடியதும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்காக மீராகுமார் வருத்தம் தெரிவித்தார். சில தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டது. தற்போது அது சரிசெய்யப்பட்டுவிட்டது என மீராகுமார் தெரிவித்தார்.
....தினமணி 13.08.2010

nambi
13-08-2010, 03:29 PM
வாஷிங்டன்: இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குழுவும் கலந்து கொண்டது. அப்போது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், இந்திய குழுவுக்கும் கடும் வாதம் மூண்டது.

இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.

அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு.

எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம் திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பி.வி.இந்திரேசன் ஆகியோர் கூறுகையில், இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாக பாதுகாப்பு வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த குழுவில், பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஸ் பெனலா (மைக்ரோசாப்ட்), மாட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி-டி ஷானான் லேப்ஸ்), ருஸ்ஸல் பிங்க் (மேரிலான்ட் பல்கலைக்கழகம்), இயான் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (கிளியல் பேலட் குரூப்), நீல் மெக்பிரன்னட் (எலக்ஷன் ஆடிட்ஸ்) ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.
...தட்ஸ் தமிழ் 13.08.2010

nambi
13-08-2010, 03:33 PM
சென்னை: தஞ்சைப் பெரியகோயில் 1000 வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் 25.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் தஞ்சைப் பெரியகோயில் 1000 வது ஆண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு போன்ற அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

....தினகரன் 13.08.2010

சுகந்தப்ரீதன்
13-08-2010, 06:34 PM
மன்றத்திற்க்கு தொடர்ந்து செய்திகளை தந்துக் கொண்டிருக்கும் நம்பிக்கு என் நன்றியும் பாராட்டும்..!!

nambi
14-08-2010, 01:50 PM
நன்றி! தோழரே!

nambi
14-08-2010, 01:53 PM
புதுடில்லி :"ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி மற்றும் பிப்ரவரி என, இரண்டு மாதங்கள் மட்டுமே நடத்த வேண்டும். இதுபற்றி பரிசீலித்து ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதனால், திருவிழா காலங்களில் மட்டும் நடத்தப்படும் போட்டி என்ற அதன் தன்மை மாறி விடுகிறது. எனவே, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், கோகலே ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டி தற்போது ஐந்து மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. அதை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே நடத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுதொடர்பான முடிவை தமிழக அரசு ஆறு வாரங்களுக்குள் எடுக்க வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான உரிமைக் கட்டண பிணைத்தொகையை இரண்டு லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்தும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.ஜல்லிக்கட்டு என்பது ஒரு தொழிற்சாலை போல உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் போது, விலங்குகளுக்கு மது கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக் கட்டு போட்டி மற்றும் அதற்கான விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்தச் சட்டமானது, ஜல்லிக்கட்டு போட்டியை முறைப்படுத்த மட்டுமின்றி, அதை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. எனவே, இந்தப் போட்டிகள் நடக்கும் கால அளவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

.....தினமலர் 14.08.2010

nambi
14-08-2010, 01:58 PM
புதுதில்லி, ஆக.12: செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதி, அக்டோபர் 31 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

எந்தவித தாமதமும் இன்றி முன்பு அறிவித்தவாறு அக்டோபர் 31-ம் தேதி முதல் இந்த வசதி அமல்படுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.சர்மா தெரிவித்தார்.

இதுதொடர்பான பரிசோதனைகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
...தினமணி 14.08.2010

nambi
14-08-2010, 02:02 PM
1986 ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை நீதிமன்றமொன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் சில வழக்கறிஞர்கள், கொலைக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பி்ல் டக்ளஸ் தேவானந்தா ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்றும் அவரை போலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசையும் தமிழக அரசையும் கேட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் எதிர்மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் வஜிரவேலு தமிழோசையிடம் தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தின் படி, தமிழ் ஆயுதக்குழுவினருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தமிழோசையிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
....பிபிசி தமிழோசை 14.08.2010

nambi
14-08-2010, 02:08 PM
சேலம், ஆக.13: சேலம் அருகே சொத்துப் பிரச்னையில் தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்தவர், சென்னை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:

சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி செüடாம்பிகா நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் (78). இவரது மனைவி சந்திராம்மாள் (72). இவர்களுக்கு விஜயலட்சுமி (54), ராமலிங்கம் (50), சிவகுரு (48), ரத்தினம் (45) ஆகிய நான்கு வாரிசுகள்.

÷சிவகுரு, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். இப்போது அப்பகுதி திமுக கிளைச் செயலராக பதவி வகித்து வருகிறார்.

÷இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த சிவகுரு, தனக்கு சொத்து தர மறுத்த தனது தாய், தந்தை உள்ளிட்ட 6 பேரையும் வெட்டி கொலை செய்துவிட்டதாகக் கூறினார்.

இது குறித்து டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சேலம் சரக டி.ஐ.ஜி. வெங்கட்ராமனுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டி.ஐ.ஜி. வெங்கட்ராமன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் நிக்கல்சன் மற்றும் போலீஸôர் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் குப்புராஜ் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றனர். அங்கு கழுத்தை அறுத்தும், சரமாரியாக வெட்டப்பட்ட நிலையிலும் 6 உடல்கள் கிடந்தன. அவற்றைக் கைப்பற்றி பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், தந்தை, தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரை சிவகுருவே கொடூரமாக கொலை செய்துள்ளார்.

காரணம் என்ன? ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜுக்கு சொந்தமாக அதே பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதை ராமலிங்கத்துக்கும், ரத்தினத்துக்கும் தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

÷சிவகுருவுக்கு சிறுநீரக கோளாறு இருந்தது, இதனால் ஏராளமாக செலவு செய்ததால் அவருக்கு நிலத்தை கொடுக்கவில்லை.

அதற்கு பதிலாக தாதகாப்பட்டி பகுதியில் உள்ள வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தனக்கும் நிலம் வேண்டும் என்று சிவகுரு தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குப்புராஜின் வீட்டிலேயே மகன் ரத்தினம், அவரது மனைவி சந்தானகுமாரி (40), கல்லூரியில் படிக்கும் மகன் கெüதமன் (20), 7-ம் வகுப்பு படிக்கும் விக்னேஸ்வரி (13) ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.

சிவகுருவுக்கு திருமணமாகி மாலா என்ற மனைவியும் பிரியா, நதியா, கோகுல் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

தந்தையுடன் சொத்துத் தகராறு செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி குழந்தைகளை தனியாக ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனக்கு நிலம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் வியாழக்கிழமை இரவு தனது தந்தை குப்புராஜ், தாயார் சந்திராம்மாள், தம்பி ரத்தினம், அவரது மனைவி சந்தானகுமாரி, அவரது குழந்தைகள் கெüதமன், விக்னேஸ்வரி ஆகிய 6 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

சம்பவம் நடந்தது தோட்டத்து வீடு என்பதால் போலீஸôர் வரும் வரை கொலை நடைபெற்றுள்ளது அருகில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.

....தினமணி 14.08.2010

nambi
15-08-2010, 04:10 PM
சுதந்திர தின விழா: காஷ்மீர் முதல்வர் மீது ஷூ வீச்சு

ஸ்ரீநகர், ஆக.15: ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது போலீஸ் அதிகாரி ஒருவர் காலணி (ஷூ) வீசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஒமர் அப்துல்லா வணக்கம் வைக்கும்போது அந்த போலீஸ் அதிகாரி, அவர் மீது காலணியை (ஷூவை) வீசினார். எனினும் அது ஒமர் அப்துல்லா மீது படவில்லை.

ஷூ வீசியவரை ஒமர் அப்துல்லாவின் பாதுகாவலர்கள் உடனடியாகச் சுற்றிவளைத்து சுதந்திர தின விழா நடைபெற்ற பக்ஷி ஸ்டேடியத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

அவர் பெயர் அப்துல் அஹாத் ஜான் என்பதும், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக குல்காமில் பணியாற்றி வருவதும் பின்னர் தெரியவந்தது.

கற்களை வீசுவதைவிட கோஷங்களை எழுப்பி, காலணிகளை (ஷூக்களை) வீசுவது சிறந்த போராட்டம் என அச்சம்பவம் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.
....தினமணி 15.08.2010

nambi
15-08-2010, 04:20 PM
சென்னை, ஆக.15- சிறு, குழு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றுக்கு பதிலாக புதிய மின்மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாக பொருத்தித் தரப்படும் என முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் என அவர் தெரிவித்தார்.

சுதந்திரதினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து பேசியதாவது....

ஒருசில புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து, இந்தச் சுதந்திர தின விழாவில் குறிப்பிட விரும்புகிறேன்.

குடிசை வீடுகளே தமிழகத்தில் இல்லை எனும் புதிய வரலாற்றைப் படைப்பதற்காகத் தமிழகத்தின் ஊராட்சிப் பகுதிகளிலுள்ள 21 இலட்சம் குடிசை வீடுகளையும், தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியுடன், 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” எனும் புதிய - புரட்சிகரமான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக நடப்பாண்டில் 3 இலட்சம் குடிசைகளுக்குப் பதில், புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக, வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம், 1800 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்டுள்ள 3 இலட்சம் பயனாளிகளுக்கும் இன்று முதல் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான “பணி ஆணைகள்”(றுடிசம டீசனநசள) வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு கான்கிரீட் வீட்டிற்காகவும் அரசின் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்; திருச்சி மாநகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவின்போது என்னிடம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினையேற்று, மேலும் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் 75 ஆயிரம் ரூபாய் வீதம் மானியமாக வழங்கிட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓட்டைக் குடிசையிலே - ஒன்றரைச் சாண் பாயிலே - கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் - வாடிக்கிடந்த மக்களுக்கு வாழ்வில் விடிவளிக்கும் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைப்பதில் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளம் நிறைந்தது போன்ற உணர்வைப் பெறுகிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் வீதம், இங்கு வந்துள்ள 31 பேருக்கு, இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டு; இந்த மகத்தான வீடு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என்ற செய்தியை தெரிவிப்பதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.

எந்த மாநில அரசும் இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய திட்டமாக - அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரத்து 104 கிராம ஊராட்சிகளில், 2 ஆயிரத்து 41 கோடி ரூபாய்ச் செலவில், அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டினை “உலக இளைஞர்கள் ஆண்டு”என அறிவித்திருப்பதையொட்டி; வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன், புதிய திட்டம் ஒன்றும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள்- பொறியியல், இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்புக்கான திறன்வளர்ப்புப் பயிற்சி இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்புகளைப் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.

நடப்பு ஆண்டில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கும் இத்திட்டத்தைச் செயல் படுத்த முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசு ஆணை இந் நன்னாளில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், கடந்த நான்காண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 465 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சாலைகளை நேர்த்தியான முறையில் சீரமைத்திட, இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக 1000 கோடி ரூபாய்

ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுவரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதுவும் மின் பற்றாக்குறைக்கு ஓரளவு காரணமாகும். இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன்மூலம், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தைச் சேமித்திட முடியும். சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும்.

இவ்வாறு பேசினார்....

...தினமணி 15.08.2010

nambi
15-08-2010, 04:23 PM
பாட்னா, ஆக.15: பிகார் மாநிலம் முழுவதும் வறட்சிப் பகுதி என அறிவித்த அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

பிகார் மாநிலம் நான்காவது ஆண்டாக இயற்கைப் பேரிடரை சந்தித்து வருகிறது. 2007, 2008 -ம் ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலம், தற்போது இரண்டாவது ஆண்டாக வறட்சியை சந்தித்து வருகிறது. இயற்கைப் பேரிடர்கள் இருந்தபோதிலும் பிகார் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது என சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில் நிதீஷ்குமார் குறிப்பிட்டார்.
....தினமணி 15.08.2010

nambi
15-08-2010, 04:25 PM
புது தில்லி, ஆக.14: வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், கடன் பெற்றவர்கள் அதைத் திரும்பச் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இதை அவர்கள் சரியாக நிறைவேற்றத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கடனை செலுத்தத் தவறிய நிறுவனம் மீது உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி வழக்கு தொடர்ந்திருந்தது. சென்னையைச் சேர்ந்த என்எஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் 1989-91-ம்ஆண்டுகளில் இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளது.

கடனை திரும்ப செலுத்தத் தவறியதால் இந்த கணக்கு வாராக் கடனில் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனத்தின் சொத்துகளை புளூஜாகர்ஸ் நிறுவனம் வாங்கியது.

ஆனால் என்எஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் செலுத்த வேண்டிய கடன் தொகையை இந்நிறுவனம் செலுத்தவில்லை. இது தொடர்பாக கடன் தீர்ப்பு ஆணையம் | 2.15 கோடியை வட்டியுடன் செலுத்துமாறு தீர்ப்பளித்தது. இறுதியாக செலுத்த வேண்டிய கடன் தொகையில் | 6.16 கோடியில் | 1.53 கோடி செலுத்தினால் போதும் என்பதற்கும் வங்கி ஒப்புக் கொண்டது.

ஆனால் அதையும் அந்நிறுவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் வங்கி இந்நிறுவனத்துக்கு | 6.47 கோடி மற்றும் | 9.86 கோடி நிலுவைக்கான தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு விடுமுறைக் கால மனுவாக இதை தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் கூறிய தீர்ப்பு விவரம்:

பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெற்று அதை நிர்வகிக்கும் அமைப்பாக வங்கிகள் செயல்படுகின்றன. தங்களது தேவைக்காகவும், வியாபார நிமித்தமாகவும் வங்கிகளில் கடன் பெறுவோர் அதைத் திரும்பச் செலுத்த வேண்டியது கட்டாயம். திரும்பச் செலுத்துவேன் என்ற ஒப்பந்தத்தின்பேரிலேயே அவர் கடனைப் பெறுகிறார். ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருதரப்பினருக்கும் உள்ளது. கடன் அளித்த வங்கிக்கும் அதைத் திரும்பப் பெற வேண்டிய பொறுப்பு உள்ளது. இதற்கு சட்ட ரீதியாக அனுமதியும் உண்டு.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர். மேலும் தீர்ப்பாணையம் விதித்த தீர்ப்பையும் நிறுவனம் மதிக்கவில்லை. இந்நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி அதை ஏலம் விட்ட பிறகே 3 மனுக்களை நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும் தீர்ப்பாணையத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத நிலையில் நீதிமன்றம் மூலம் வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது என்று கூறி நிறுவன மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

.....தினமணி 15.08.2010

nambi
15-08-2010, 04:27 PM
திருச்சி, ஆக. 13: திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்திருப்பது:

"தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழ் நிதியாண்டில் 21 வகையான வேளாண்மை இயந்திரங்கள் ரூ. 2.42 கோடி மானியத்தில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறிய நெல் நடவு செய்யும் இயந்திரம், 20 குதிரைத் திறனுக்குக் குறைவான சக்தியுள்ள களை எடுக்கும் இயந்திரங்கள், தோட்டக்கலைப் பணிகளுக்கான இயந்திரங்கள், மனித சக்தியால் இயங்கக்கூடிய வேளாண் கருவிகள் முதலியன 50 சத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இதுதவிர, நவீன, விலை அதிகமான நெல் நடவு செய்யும் இயந்திரங்கள் 33 சதம், அதிகபட்சமாக ரூ. 4 லட்ச மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

எனவே, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் திருச்சி கொட்டப்பட்டு ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும்,, முசிறி, தொட்டியம் பகுதி விவசாயிகள் முசிறி பார்வதிபுரம் ஏழாவது குறுக்குத் தெருவில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும், லால்குடி, மண்ணச்சநல்லூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் லால்குடி பரமசிவபுரம் ஐந்தாவது குறுக்குத் தெருவில் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்' .

.....தினமணி 15.08.2010

nambi
15-08-2010, 04:50 PM
சென்னை, ஆக. 14: சென்னையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய, பிரேசில் அணி வீரர்கள் மோதுகின்றனர்.

இந்தியாவின் பயஸ்-பூபதி ஜோடி, பிரேசில் இரட்டையர்களை எதிர்த்துக் களம் காணுகிறது. ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், ரோகன் போபன்னா ஆகியோர் விளையாடுகின்றனர்.

பிரேசில் அணியில் தோமஸ் பில்லச்சி, ரிக்கார்டோ மெல்லோ, புரூனோ சோர்ஸ் மற்றும் மார்கலோ மெலோ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

செப்டம்பர் 17-ம் தேதி 2 ஒற்றையர் போட்டிகளும், செப்டம்பர் 18-ம் தேதி ஒரு இரட்டையர் போட்டியும், செப்டம்பர் 19-ம் தேதி 2 மாற்று ஒற்றையர் போட்டிகள் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இரு அணி வீரர்களும் யார், யாருடன் மோதுவார்கள் என்பதை ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்.

இந்த போட்டிகள் தூர்தர்ஷன் விளையாட்டு சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் எம்.ஏ. அழகப்பன், துணைத் தலைவர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

போட்டியை நேரில் கண்டு ரசிக்க 3 நாள் கொண்ட போட்டிகளுக்கு ரூ. 500, ரூ. 1,000, ரூ. 2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு ரூ. 200, ரூ. 500, ரூ. 1,000 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் விற்பனை செப்டம்பர் 10-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் துவங்குகிறது' என்றனர் அவர்கள்.
...தினமணி 15.08.2010

nambi
18-08-2010, 12:53 PM
புதுதில்லி, ஆக.18- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது நடவடிக்கை கோரும் மனு மீது முடிவு எடுக்கும்படி பிரதமருக்கு உத்தரவிட முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனு பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதன் மீது பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விவகாரத்தில் சிபிஐ புலனாய்வு செய்து வரும் நிலையில், அவ்வாறு உத்தரவிட இயலாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான குழு தெரிவித்தது.

....தினமணி 18.08.2010

nambi
18-08-2010, 12:55 PM
ஹைதராபாத், ஆக.18- சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சில காலத்திற்கு பிறகு அவர் மனு செய்யலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அவரது மனுவை ஏற்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சத்யம் மோசடி வழக்கில் ராஜுவைத் தவிர, குற்றம்சாட்டப்பட்ட அவரது சகோதரர் உள்ளிட்ட மற்ற 9 பேருக்கும் ஏற்கெனவே நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியுள்ளன.
....தினமணி 18.08.2010

nambi
18-08-2010, 12:58 PM
வீட்டுக் கடன்களின் மீதான வட்டி விகிதங்களை அனைத்து வங்கிகளும் உயர்த்திவரும் நிலையில், மூன்று ஆண்டு வீட்டுக் கடனை 8.5 விழுக்காட்டிற்கு வழங்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

பண்டிகைக்கால சிறப்புத் தள்ளுபடி என்று கூறி, ரூ.50 இலட்சம் வரையிலான வீட்டுக் கடன், மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க 8.5 விழுக்காட்டில் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுவரை ரூ.30 இலட்சம் வரை 5 ஆண்டுக்கால தவணையில் 9.5 விழுக்காடு வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கி வந்தது பஞ்சாப் வங்கி.

இதுமட்டுமின்றி, புதிதாக கார் வாங்குவோருக்கு அளிக்கப்படும் கடன்களின் மீதான வட்டி விகிதத்தில் 0.5 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அறவித்துள்ளது.
....வெப்துனியா 18.08.2010

nambi
18-08-2010, 01:01 PM
சென்னை: எஸ்.எஸ்.சந்திரனுக்கு முன் ஜாமீன் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2007 ல் நெய்வேலியில் கருணாநிதியை அவதூறாக பேசியதாக சந்திரன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகததால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நெய்வேலி நீதிமன்றம்.
மேலும் பிடிவாரண்டை அடுத்து முன் ஜாமீன் கோரி எஸ்.எஸ்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து முன் ஜாமீன் தர மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
....தினகரன் 18.08.2010

nambi
18-08-2010, 01:08 PM
புதுடெல்லி : கிராம மக்கள் நலனுக்காக இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் என்ன தவறு? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை எதிர்த்து கடந்த 2008ம் ஆண்டு சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் குமார், ‘‘தமிழக அரசு இலவச கலர் டி.வி. திட்டத்தை அறிமுகப்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் கிராம மக்களை எளிதாக சென்றடைகிறது. மேலும் இத்திட்டம் முடியும் நிலையில் உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான அரவிந்த் தத்தார், ‘‘மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சட்டப் பிரச்னைகள் உள்ளன. எனவே, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘கிராமப்புறத்துக்கு நீங்கள் சென்று பார்த்திருக்கிறீர்களா? அங்குள்ள மக்களின் நிலையை ஆய்வு செய்திருக்கிறீர்களா? என்று கேட்டனர். மேலும் கிராம மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினர்.

அரவிந்த் தத்தார் கூறுகையில், ‘‘விரைவில் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வருகிறது. அப்போது, கம்ப்யூட்டர் வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதையும் வழங்குவார்கள். இது மக்களின் வரிப்பணம்’’ என்றார். இதற்கு, ‘‘கம்ப்யூட்டர் வழங்கினால் என்ன தவறு? மக்களின் மேம்பாட்டுக்குத்தானே வழங்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தனர்.

...தினகரன் 18.08.2010

nambi
18-08-2010, 01:13 PM
ஆணோ, பெண்ணோ திருமண வயதை எட்டாதவர்களாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த திருமணம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது திருமண வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் சட்டம் உள்ளது. இதை மீறி இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது குழந்தை திருமணம் என்று கருதப்பட்டு அது சட்டப்படி குற்றமாகும். இப்போது மணமக்கள் சம்மதித்தால் இளம் வயது திருமணம் செல்லும் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

ªல்லியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஜிதேந்திர குமார் சர்மா. இவர் பூனம் என்ற 16 வயது இளம் பெண்ணை திருமணம் செய்தார். இது தொடர்பாக பூனத்தின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில் திருமண வயது நிரம்பாத பூனத்தை ஜிதேந்திரா கடத்தி போய் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கோர்ட்டில் தனக்கு பாதுகாப்பு கேட்டு ஜிதேந்திரா வழக்கு தொடர்ந்தார். பிடி.அகமது, வி.கே.ஜெயின் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ஜிதேந்திரா சார்பில் தாக்கல் செய்த மனுவில், நானும் பூனமும் மனம் ஒத்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமண வயது நிரம்பா விட்டாலும் நாங்கள் இருவரும் பூரண சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஜிதேந்திரா -பூனம் திருமணம் சட்டப்படி செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

ஆணோ, பெண்ணோ திருமண வயதை எட்டாதவர்களாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த திருமணம் சட்டப்படி செல்லும். சிறு வயதில் விருப்பம் இல்லாமல் செய்து வைக்கும் திருமணம் தான் குழந்தை திருமணமாக கருதப்படும். திருமணம் செய்து கொள்ளும் 2 பேர் மைனர்களாக இருந்தால் அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணத்துக்கு சம்மதித்தால் அந்த திருமணம் செல்லும்.

இந்து திருமண சட்டத்தின் 5-வது பிரிவின் படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும், நிரம்ப வேண்டும் என்று கூறினாலும் இந்த வழக்குக்கு அது பொருந்தாது.

ஜிதேந்திரா மீது கடத்தல் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்கிறோம். பூனம் தனது வாக்குமூலத்தில் தனது விருப் பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார்.

...நியுஸ் இந்தியா 12.08.2010

nambi
18-08-2010, 01:18 PM
டெல்லி: தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே பதை பதைக்க வைத்த மாணவர் நாவரசு படுகொலை வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பின்னர் பணியாற்றினார்.

இவரது ஒரே மகன்தான் நாவரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு நாவரசு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, தலை, கை,கால் என தனியாக பிரித்து சென்னையிலிருந்து பல இடங்களில் போட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3வது ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகிங்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தான் சொன்னதை நாவரசு கேட்காததால், அவரை கொடூரமாக கொலை செய்திருந்தார் ஜான் டேவிட்.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உடனடியாக இதை எதிர்த்து ஜான் டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் , குற்றச்ச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை, சாட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குதான் இதுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. இன்று இந்தமனு விசாரணைக்கு வந்தபோது, வாதாடுவதற்கு 2 நாள் அவகாசம் கேட்டார் ஜான் டேவிட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.

இதையடுத்து விஜயதசமி விடுமுறைக்குப் பின்னர் வழக்கை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.

....தட்ஸ் தமிழ் 10.08.2010

nambi
18-08-2010, 01:24 PM
டெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்,

அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளை கீழ் கோர்ட்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சில வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவரது உறவினர்கள் மீதும், வீட்டுக்கு எப்போதாவது வரும் உறவினர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை கள் சம்பந்தப்பட்ட அனைவர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. நிரபராதிகள் என தீர்ப்பு வந்தாலும் வடுக்கள் மறைய வாய்ப்பில்லை.

கூறப்படும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதை கோர்ட்கள் ஆராய வேண்டும். பல வழக்குகளில் கணவன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சுமத்தப்படும் புகார்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. உண்மை எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரும், உண்மை இதுதான் என தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. மக்களின் கருத்தைக் கேட்டு இந்த சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த தீர்ப்பின் நகலை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்கள் அமைப்புகளை எதிர்த்து போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த சட்டத்தைக் கண்டித்து ஏற்காட்டில் நடந்த ஆண்கள் அமைப்பின் கூட்டத்தில் பேசப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

....தட்ஸ் தமிழ் 18.08.2010

nambi
19-08-2010, 03:37 PM
புதுதில்லி, ஆக.19: காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் புரிந்தவர்கள் அந்த போட்டிகள் முடிந்தவுடன் தண்டிக்கப்படுவர் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் எனக் குறிப்பிட்ட சோனியா, இந்த போட்டிகள் எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது தனிப்பட்ட நபருடனோ தொடர்புடையவை அல்ல என்றார். போட்டிகளை வெற்றிகரமாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேசமயம், போட்டி தொடர்பான பணிகளில் ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் நியமித்த அமைச்சர்கள் குழு போட்டி ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
.....தினமணி 19.08.2010

nambi
19-08-2010, 03:39 PM
டேராடூன், ஆக.18: உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 சிறுவர்கள் பலியாயினர்.

÷உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் காப்கோட் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. காப்கோட் பகுதி அருகே சும்கத் கிராமத்தில் சரஸ்வதி சிறார் துவக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் புதன்கிழமை காலை வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பள்ளியின் மேற்கூரை பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு குழந்தைகள் கதறினர். ஆசிரியர்களுடன் சேர்ந்து கிராம மக்கள் இடிபாடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டனர். ஆனாலும் 18 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாயினர். சில குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

÷இடிபாடுகளுக்குள் மேலும் குழந்தைகள் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 18 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றார் அவர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
.....தினமணி 19.08.2010

nambi
19-08-2010, 03:48 PM
ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி தாக்குதல் படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது.சதாம் உசேன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள்.

இந்நிலையில்,நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிலிருந்து முற்றிலும் வெளியேறிவிடுவர் என்றும், பாதுகாப்பு பணிகளில் ஈராக் இராணுவத்தினரே ஈடுபடுவர்கள் என்றும் அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார்.

அதன்படி ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தினரின் கடைசி தாக்குதல் படையணியும் இன்று வெளியேறி, குவைத் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது.

அதே சமயம் தார்மீக மனபலத்திற்காக சில நிர்வாகப் படைகள் தொடர்ந்து ஈராக்கிலேயே உள்ளன. இவர்கள் தேவைப்பாட்டால் தாக்குதலிலும் ஈடுபடுவர். இந்த நிர்வாகப் படைகளில் 50,000 வீரர்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளபோதிலும், அவ்வளவு எண்ணிக்கைக் கொண்ட படையினர் இல்லை என்று கூறப்படுகிறது.

தேவைபடும்பட்சத்தில், ஈராக் இராணுவமே அழைத்தால் மட்டுமே, இவர்கள் தாக்குதலில் உதவுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

...வெப்துனியா 19.08.2010

Nivas.T
19-08-2010, 03:55 PM
இதனிடையே அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

...வெப்துனியா 19.08.2010

அங்கு பெட்ரோலை உறிஞ்ச பத்து வருடம் போதும்

nambi
19-08-2010, 04:00 PM
புதுதில்லி, ஆக.19: உச்சநீதிமன்றம் கூறியபடி ஏழைகளுக்கு உணவுதானியங்களை இலவசமாக வழங்க முடியாது என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.

சேமித்துவைக்க போதிய வசதி இல்லாததன் காரணமாக உணவுதானியங்கள் வீணாவதற்கு பதில் அவற்றை ஏழைகளுக்கு விநியோகிக்கலாம் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை என சரத்பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏழையினும் ஏழைக்கு உணவுதானியங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விநியோகிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், இலவசமாக விநியோகிக்க முடியாது என்றார் அவர். ஏற்கனவே கோதுமையை அரசு கிலோ 16 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு விநியோகிக்கிறது எனத் தெரிவித்தார்.
.....தினமணி 19.08.2010