PDA

View Full Version : உடனடிச்செய்திகள்Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12

mgandhi
26-10-2008, 05:30 PM
27-10-2008

1-மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி


2-தீபாவளி பட்டாசு விலை உயர்வால் கடைகள் குறைப்ப

3-இலங்கை தமிழர்களுக்கு 800 டன் நிவாரண பொருட்கள் அனுப்ப இந்தியா முடிவு


4-இலங்கை தமிழர் விவகாரம் : முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி


5-இலங்கை பிரச்னை: ராஜபக்சே தூதர் இந்தியா வந்தார்


6-தேவர் குருபூஜைக்காக பசும்பொன்னில் பாதுகாப்புக்கள் தீவிரம்


7-பார்லி., குளிர்கால கூட்டத் தொடரை முழுமையாக நடத்த இடதுசாரிகள் வலியுறுத்தல்


8-குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பில்லை : பிரதமர்


9-கங்கை நதியில் கார் மூழ்கி 2 பேர் பல


10-இலங்கை பிரச்னையால் கூட்டணியில் பாதிப்பு இல்லை: தங்கபாலு


11-தீபாவளி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து


12-சந்திரனை நெருங்கி கொண்டிருக்கிறது சந்திராயன்: இஸ்ரோ


13-தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை தொடரும


14-தீபாவளியை முன்னிட்டு டில்லியில் தீவிர பாதுகாப்பு


15-தமிழகத்தில் வணிகர் சங்கம் 31ல் கடையடைப்ப

ராஜா
28-10-2008, 02:34 PM
பாரதிராஜா மீது ஜெ.வுக்கு திடீர் கரிசனை!

ராமேஸ்வரம் பேரணியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியவர்களை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுப் பேச்சு என அதிமுக பொதுச்செயலளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மட்டும் கைது செய்தது ஏன், சீமான், அமீர், பரதிராஜா, பேரணியை ஏற்பாடு செய்த பாரதிராஜா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, சீமான், அமீர் இருவரையும் தமிழக அரசு கைதுசெய்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவதாகவும் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் கருணாநிதி, திருமாவளவன் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், நேற்றுவரையில் இயக்குநர் பாரதிராஜவையும் கைதுசெய்யச் சொன்னவர் இன்று ஏனோ அவரை விட்டுவிட்டார்.

இதற்கிடையில், வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தின் ஜெயந்திவிழாவில் ஜெயலலிதா கலந்துகொள்கிறார் என அதிமுக தலைமைக்கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

poornima
28-10-2008, 03:39 PM
காமெடியும் செய்கிறார் ஜெயலலிதா..

mgandhi
01-11-2008, 05:40 PM
2-11-2008

1-அழகப்பா பல்கலை.,தொலைதூர கல்வியில் சேர அவகாசம் நீட்டிப்ப

2-உத்தப்புரத்தில் மனித உரிமை குழு ஆய்வ

3-சிட்டா நகல் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ. ஓ., கைது

4-கோவில் மாநகரமானது தூத்துக்குடி: அரசு அறிவிப்பு


5-போர் நிறுத்தம் ஏற்பட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : உண்ணாவிரதத்தில் தீர்மானம்


6-நாகர்கோவில் அருகே மீண்டும் மாதா சிலை உடைப்பு


7-இந்தியா-ஆஸி., 3 வது டெஸ்ட் 4 ம் நாள்: 2 வது இன்னிங்ஸ் : இந்தியா 43/ 2


8-சென்னையில் நடிகர் - நடிகைகள் உண்ணாவிரதம் நடைபெற்றது


9-உடுமலையை திருப்பூர் மாவட்டத்துடன் இணைப்பதை கண்டித்து அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம்


10-பிரதமர் அசாம் வருகை : பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல்


11-கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்


12-வேதாரண்யத்தில் வை.கோ.,கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க., வினர் 150 பேர் கைது


13-அசாம் குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது


14-சோனியாவிற்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


15-பொடாவை மீண்டும் கொண்டுவர அத்வானி வலியுறுத்தல்

mgandhi
02-11-2008, 04:16 PM
3-11-2008

1-மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு


2-தொண்டு நிறுவனங்கள் மூலமே நிவாரண உதவி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கருணாநிதி பதில்


3-இலங்கைத் தமிழர்களுக்காகத் திரட்டப்படும் நிதி உரியவர்களுக்குப் போகாது: ஜெயலலிதா


4-போர் நிறுத்தம் செய்யாமல் நிவாரணம் வழங்குவோம் என்பது ஏமாற்று வேலை: வைகோ


5-டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அனில் கும்ப்ளே


6-மேற்குவங்க முதல்வரை குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல்: 6 போலீசார் காயம்


7-இலங்கை அரசுக்கு ரஜினி அறிவுரை: தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்


8-புலிகளின் பயிற்சி முகாம்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுவீச்சு


9-'மண்ணின் மைந்தர்கள் கோஷம்': ராஜ் தாக்கரேக்கு சரத்பவார் கட்சி ஆதரவு


10-இந்தியா ஆஸி. தொடர்: மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது


11-வங்கதேசத்தவர் ஊடுருவலால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


12-அசாம் குண்டுவெடிப்பு: இந்தியாவின் புகாருக்கு வங்கதேசம் மறுப்பு


13சந்திராயன்-1 விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியது-பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு


14-மோட்டாரோலா நிறுவன ஊழியர்கள் 3 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்15-தமிழக ரியல் எஸ்டேட் துறையில் அமெரிக்க நிறுவனம்

mgandhi
04-11-2008, 04:37 PM
5-11-2008


1-சிறைக்குள் கஞ்சா செருப்பு கடத்தல் : நெல்லையில் 2 கைதிகள் சிக்கினர்


2-துணை தூதர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை


3-தி.மு.க., மாவட்ட செயலராக பன்னீர்செல்வம் மீண்டும் தேர்வ


4-கன்னியாகுமரி உட்பட 6 மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்


5-சந்திரயான்-1 சந்திரனின் மாற்று வளை பாதையில் நுழைந்தது


6-சிம்லாவில் பஸ் பள்ளத்தில் கவிழந்து விபத்து : 43 பேர் பலி


7-சரிந்து மீண்டது இந்திய பங்குச்சந்தை


8-ஜெர்மன் சிறுமி கற்பழிப்பு வழக்கு : கோவா அமைச்சர் மகன் போலீசில் சரண


9-எல்லையில் துப்பாக்கி சூடு : இந்திய வீரர்கள் காயம்


10-மின்வெட்டை கண்டித்து கோபியில் அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம


11-பெண் துறவி பிரயாக் சிங்குக்கு உண்மை கண்டறியும் சோதனை


12-உசிலம்பட்டியில் போலீஸ் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி


13-மலைவாழ் மக்களுக்கு அடிப்டை வசதிகள் வேண்டி நெல்லையில் ஆர்ப்பாட்டம்


14-ரூபாய். 55 லட்சம் நி*தி முதல்வரிடம் ஒப்படைத்தார் சரத்குமார்15-மதுரையில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : 3 பேர் கைது

mgandhi
05-11-2008, 05:25 PM
-11-2008

1-தமிழகத்தில் புதிதாக 29 சமத்துவபுரங்கள்2-மருத்துவமனையில் எம்.எல்.ஏ., அனுமதி3-கோயில் வழிபாட்டில் மனித உரிமை மீறல் : தமிழக டி.ஜி.பி., கலெக்டருக்கு நோட்டீஸ்4-லஞ்சம் வாங்கிய மீன் வள அதிகாரி கைது5-கப்பலூர் இரட்டை கொலையில் 2 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது6-அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒபாமா வெற்றி
.


7-பங்குச்சந்தை*யில் சரிவு8-ஒபாமாவுக்கு ஆப்கன் அதிபர் வாழ்த்து9-அஸ்ஸாம் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மவுனஅஞ்சலி


10-கேரள சட்டசபை நவம்பர் 24ம் தேதி கூடுகிறது11-சிங்கப்பூரில் கந்த சஷ்டி - முருகன் திருக்கல்யாண உற்சவம்12-சீமானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு13-ஒபாமாவுக்கு பிரதமர் வாழ்த்து14-மின்வெட்டை கண்டித்து திருமங்கலத்தில் அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்15-சென்னையில் திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

mgandhi
06-11-2008, 04:58 PM
7-11-2008

1-பெரும் நிதியை புழக்கத்தில் விட்டும் பங்குச் சந்தையில் சரிவு தொடர்வது ஏன்: ஜெயலலிதா


2-உத்தபுரத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையத் தடை


3-விருதுநகர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்4-பங்குச் சந்தையில் இன்றும் சரிவு


5-தென் மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த காவலர் தேர்வு ஒத்திவைப்பு


6-ஒபாமா அமோக வெற்றி


7-ஒபாமாவுக்கு புஷ், மெக்கைன் வாழ்த்து


8-ஒபாமா வென்ற 10 மாகாணங்கள்


9-தூத்துக்குடி அருகே சாலை விபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி


10-இந்தியா-ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட்: தெண்டுல்கர் சதம்


11-வங்கதேசம் திரும்பினார் ஷேக் ஹசீனா


12-"பாஜகவுக்கு ஆதரவாக ஏபிவிபி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாது'


13-போர் நிறுத்தம்: ஒபாமாவுக்கு தலிபான்கள் வலியுறுத்தல்


14-பூடானில் முடிசூடினார் 28 வயது அரசர்


15-ஊழியரை உமா பாரதி அறைந்த விவகாரம்: 350 பேர் ராஜிநாமா

mgandhi
07-11-2008, 04:06 PM
8-11-2008

.சமரசப் பேச்சு மூலம் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம்: கருணாநிதி கருத்து


.இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம்: வைகோ


.வடஇந்தியர்கள் மீதான தாக்குதல்: 5 எம்.பி.,க்கள் ராஜிநாமா


.தேனியில் தமிழகப் பகுதியை கேரளா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு


.பாடலாசிரியர் யுகபாரதிக்குத் திருமணம்


.4-வது கிரிக்கெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 189}2


.உத்தபுரம் எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை


.பங்குச்சந்தை தடுமாற்றம் தொடர்கிறது


.மலேகாவ்ன் குண்டுவெடிப்பு: மேலும் சில ராணுவ அதிகாரிகளிடம் விசாரிக்க முடிவு?


.இலங்கை பட்ஜெட்டில் ராணுவ ஒதுக்கீடு அதிகரிப்பு: புலிகள் ஆதரவு கட்சி எதிர்ப்பு


.மதுரை துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணை தேவை - விடுதலைச் சிறுத்தைகள்


.இலங்கைப் பிரச்னையில் இந்தியா வெறும் பார்வையாளராக உள்ளது: டி. ராஜா குற்றச்சாட்டு


.தங்கபாலுடன் டி.கே. ரெங்கராஜன் சந்திப்பு: உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு கோரினார்


.வங்கதேசத்தவர் 19 பேர் திரிபுராவில் கைது.சட்டத்தை மீறியிருந்தால் ராஜிநாமா செய்யத் தயார்: ஆ.ராசா


.விஜயகாந்த் படம் மீது தார்பூச்சு: மறியல் செய்த தேமுதிகவினர் கைது


.சோம்நாத் உடல்நிலை முன்னேற்றம்


.தேனி அருகே திமுக உள்கட்சித் தேர்தலில் வன்முறை: போலீஸ் தடி

mgandhi
09-11-2008, 04:46 PM
10-11-2008

1-சாதனை! : நிலவைச் சுற்றுகிறது சந்திரயான் செயற்கைக்கோள் : இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி மீண்டும் வெற்றி

2-தமிழகத்தில் 'இன்வெர்ட்டர்'கள் விற்பனை அதிகரிப்பு! : தொடரும் பல மணி நேர மின்வெட்டு காரணம

3-தூது விடுகிறது தி.மு.க.,; 'பந்தா' பண்ணுகிறது பா.ம.க.,

4-மேலும் கீழுமாக போய்க் கொண்டிருக்கிறது பங்குச் சந்தை

5-இந்திய பவுலர்கள் அபாரம்! : ஹர்பஜன், மிஸ்ரா கலக்கல் * ஆஸி., மந்தமான ஆட்டம்

6-கோவா அமைச்சர் மகன் மீதான கற்பழிப்பு வழக்கு : திரும்ப பெற்றார் பாதிக்கப்பட்டவரின் தாயார்

7-ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம்

8-விலைவாசி உயர்வைக் கண்டித்து வரும் 16ம் தேதி தே.மு.தி.க., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

9-இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரதம்

10-உத்திரபிரதேசத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

11-எம்.எல்.ஏ., வீரஇளவரசனின் உடல் தகனம

12-பள்ளி நிர்வாகத்தை பழிவாங்க சிறுமியை கடத்தி கொலை செய்தவருக்கு வலைவீச்சு

13-நிதி நெருக்கடியை சரிசெய்ய டில்லியில் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம்

14-"சரவணபவன்' சிவகுமார் கைது


15ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: தங்கபாலு

mgandhi
10-11-2008, 04:37 PM
11-11-2008

1-போர் நிறுத்தத்துக்கு தயார்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு |

2- இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது: மன்மோகன் சிங்

3- பொது இடங்களில் புகையிலை பயன்படுத்த தடை விரைவில் அமல்: அன்புமணி |

4-100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதல்

5-ராஜீவ் கொலைக்கு அமெரிக்காவே காரணம்: திருமாவளவன்

6-இலங்கைத் தமிழர் நிவாரணநிதியாக தமிழக காங்கிரஸ் ரூ.5லட்சம்- கருணாநிதியிடம் தங்கபாலு வழங்கினார்

7- சென்னையில் பரவும் டெங்கு காய்ச்சல்- 10வயது சிறுமி பலி

8- இந்தியாவுக்கு வழங்கப்பட இருந்த ரஷிய அணுமின் நீர்மூழ்கிக்கப்பலில் வாயுக்கசிவு- 20பேர் பலி

9-இந்தியா- கத்தார் இடையே ராணுவ ஒப்பந்தம் நாளை கையெழுத்து

10- அருணாச்சல பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்: பிரணாப் முகர்ஜி

11- இந்தோனேஷியா அருகே பாலித்தீவில் 3தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை- துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றம் |

12-தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு |

13- மத்திய அரசு நினைத்தால், ஒரே நாளில் போர் நிறுத்தம்-முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தல்

14- நாக்பூர், 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடர்-172 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

15-அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டத்துக்கு அழைப்பு இல்லை-எஸ்.வி.சேகர் புகார்

mgandhi
11-11-2008, 05:22 PM
12-11-2008

1-
மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி

2-
தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை: டி.ஆர்.பாலுவிடம் பிரதமர் உறுதி

3-
சென்னையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

4-
இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்

5-
இலங்கை நடிகர்-நடிகைகள் போராட்டம்

6-
ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்-பிரகாஷ் ஜாவேத்கர்

கோவையில் கிரண்பேடியை விரட்டி அடித்த வக்கீல்கள்

7-
தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 8 மசோதாக்கள் தாக்கல்

8-
அரக்கோணத்தில் 1,000 ரூபாய் கள்ளநோட்டு கண்டுபிடிப்பு

9-
கடலூரில் கடல் கொந்தளிப்பு: படகு கவிழ்ந்து மீனவர் பலி, 7 பேர் காயம்

10-
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

11-
தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்: சிங்கள கடற்படை மீண்டும் அட்டூழியம்

12-
`இலங்கையில் போர் நீடிக்க மத்திய அரசுதான் காரணம்: வைகோ

13-
செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா: பகுஜன்சமாஜ் கட்சியில் சேர்ந்தார்

14-
பாராளுமன்ற தேர்தல்: ராஜ்நாத்சிங், காஜியாபாத் தொகுதியில் போட்டி

15-
இந்தியா அடுத்த சாதனை சந்திரனை தொடர்ந்து சூரியன் குறித்து ஆராய `ஆதித்யா' செயற்கைகோள்

mgandhi
15-11-2008, 04:47 PM
16-11-2008

1-.பூநகரிக்குள் நுழைந்தது இலங்கை ராணுவம்


2-."இஸ்ரோ' சாதனை: கருணாநிதி வாழ்த்து


3-.புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து 21-ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்


4-.பிரபாகரன் சரணடைய வேண்டும்: ராஜபக்ஷே மீண்டும் அழைப்பு


5-.இலங்கையிலிருந்து மேலும் 29 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர்


6-.தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு


7-.சிதம்பரத்தில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு


8-.நெசவாளர் கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு


9-.நடிகர் சிரஞ்சீவி கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள்


10-.கேரளத்தில் வெடிகுண்டுகள் சிக்கின


11-.இலங்கையிலிருந்து அகதிகளை அழைத்துவந்த தமிழக மீனவர்கள் 3 பேர் கைது


12-.புயல் சின்னம் வலுவடைந்தது


13-.லக்னோவில் குண்டு வெடிப்பு


14-.சுதந்திர போராட்ட தியாகி காலமானார்


15-.ஐ.நா.வின் ஆயுதபரவல் தடுப்பு இயக்குநராக அமெரிக்கப் பெண் நியமனம்


.

mgandhi
16-11-2008, 04:54 PM
17-11-2008

1-நாகையில் எஸ்எம்எஸ்-ல் சுனாமி பீதி!


2-சேலத்தில் ரவுடி சுட்டுக் கொலை!


3-இலங்கையில் போர்நிறுத்தமே திருப்தி தரும்: கருணாநிதி!


4-`கைமுக்' புயல் ஆபத்து நீங்கியது!


5-எ*ஸ்.எ*ஸ்.எ*ல்.*சி. ம*தி*ப்பெ*ண் சா*ன்*றித*ழ் பெற இறு*தி வா*ய்*ப்பு!


6-மதுரை: வ*ன்முறை*யி*ல் ஈடுபடுவோரை*க் க*ண்டவுட*ன் சுட உ*த்தரவு!


7-இல*ங்கை *பிர*ச்சனை: 17இ*ல் அனை*த்து*க் க*ட்*சி கூ*ட்ட*ம் - இ*ந்*திய க*ம்யூ. அ*றி**வி*ப்பு!


8-இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தானி ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்!


9-புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து 21இ*ல் ஆர்ப்பாட்டம்!


10-*நியாய*விலை கடைக*ளி*ல் தரமா*ன அ*ரி*சி : *விஜயகா*ந்*து*க்கு எ.வ. வேலு ப*தி*ல்!


11-நிலவில் இந்திய கொடி : பிரதமருக்கு முத**ல்வ*ர் வாழ்த்து!


12-ஜெயலலிதா கார் தா*க்க*ப்ப*ட்ட *விவகார*ம் : சென்னையில் அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!


13-3 குழ*ந்தைகளை எ*ரி*த்து தா*ய் த*ற்கொலை!


14-சிறுசேமிப்பை ஊக்குவிக்க மீண்டும் பரிசு திட்டம் : ரகுமான்கான் தகவல்!


15-ஈரோடு அருகே சமையல் வாயு கசிந்து **தீவிபத்து : 2 பே*ர் ப*லி!

mgandhi
17-11-2008, 04:40 PM
18-11-2008

1-லஞ்சம் வாங்கிய கல்வித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு சிறை


2-மகன் வெட்டிக் கொலை: தாய்க்கு ஆயுள்தண்டனை


3-சென்னையில் காணாமல் போன 5 மாணவிகள் மதுரையில் மீட்பு


4-சட்டக் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி


5-ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பத்ரிநாத், தினேஷ் கார்த்திக் சதத்தில் வலுவான நிலையில் தமிழகம்


6-பஸ்களை சேதப்படுத்துவோரை கண்டதும் சுட உத்தரவு: கமிஷனர்


7-காஷ்மீர் சட்டபேரவை தேர்தல்: 55 சதவீத ஓட்டுகள் பதிவு


8-டென்னிஸ் ரேங்கிங்: மகேஷ் பூபதி தொடர்ந்து 6வது இடம்


9-இந்தியா-இங்கிலாந்து 2 வது ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா வெற்றி

10-கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை


11-நவம்பர் 25ல் பந்த் : அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு


12-வன்முறையை தவிர்க்க கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் : இந்திய மாணவர் சங்கம்


13-கடலூரில் அ.தி.மு.க., உண்ணாவிரதம்


14-ராஜஸ்தான் முதல்வர் வேட்புமனு தாக்கல்


15-ரூபாயின் மதிப்பு குறைந்தது

mgandhi
18-11-2008, 04:34 PM
19-11-2008

1-கார்கில் அருகே பனிப்பாறை சரிவு: 7பேர் மாயம்


2-பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரஜினி


3-போரை நிறுத்த முடியாது: ரனில் விக்ரமசிங்கே


4-சட்டக் கல்லூரி மோதல் சம்பவம்: கோவையில் மேலும் இரு மாணவர்கள் சரண்


5-ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம் அணி அபார வெற்றி


6-தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏ.டி.எஸ்.,) அரசியல் உள்நோக்குடன் செயல்படுகிறது : அத்வானி குற்றச்சாட்டு


7-சட்டக் கல்லூரி மோதல் சம்பவம்: திருக்கோவிலூர் மாணவர் சரண்


8-புரோகித் காவல் நவ., 29 வரை நீட்டிப்பு


9-மின் வெட்டை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் : ஜெ., அறிக்கை


10-அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கு : நெல்லை கலெக்டர் கோர்ட்டில் ஆஜர்


11-நெல்லையில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல்


12-கோல்கட்டா சணல் ஆலையில் தீ


13-வரி உயர்வை கண்டித்து திருமங்கலத்தில் வியாபாரிகள் போராட்டம்


14-தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்


15-டில்லி தேர்தலில், பார்வையற்றவர்கள் ஓட்டு போட புது வசதி

mgandhi
19-11-2008, 04:34 PM
20-11-2008

1-பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு


.2-பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் காலமானார்


.3-முதல்வருக்கு வக்கீல் நோட்டீஸ்: மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி இழப்பீடு


.4-சோமாலிய கொள்ளையர்களின் மற்றொரு தாக்குதலை முறியடித்தது இந்திய கடற்படை


.5-கர்நாடகாவில் 3 நக்ஸலைட்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை


.6--விளையாட்டுக்கு சொன்னேன்! ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்


.7-பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்


.8-சத்தீஸ்கரில் நாளை 2-ம் கட்டத் தேர்தல்


.9-காஷ்மீர்: பனிப் பொழிவில் சிக்கிய இரு ராணுவ வீரர்கள் சடலம் மீட்பு


.10-பாகிஸ்தானில் யு.எஸ். ஏவுகணை தாக்குதல்? 4 தீவிரவாதிகள் பலி


.11-இந்து மதத்தவரே என்னைக் காப்பாற்றினார் : மானபங்கப்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரி வாக்குமூலம்


.12-இந்திய நிவாரணப் பொருள் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்: செஞ்சிலுவைச் சங்கதலைவர் பேட்டி


.13-வெற்றி நிர்பந்தத்தில் இங்கிலாந்து: இந்தியாவுடன் நாளை 3-வது ஒரு தின ஆட்டம்


14.இலங்கை அரசுக்கு உதவினால் காங்கிரஸ் தோற்கும்: கி. வீரமணி


.15-ஈழத் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது: வைகோ

mgandhi
21-11-2008, 04:27 PM
22-11-2008

1-பம்பையில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் துவக்கம்


2-முதலில் நந்திகிராம்; பின் சட்டக்கல்லூரி : மார்க்சிஸ்ட் கம்யூ.,விற்கு முதல்வர் கருணாநிதி சூடான பதில்


3-மணலில் புதைத்திருந்த இலங்கை படகு மீட்பு


4-சென்னையில் போலி மருத்துவ சாமியார் கைது


5-பிரிட்டிஷ் வர்த்தக குழு இந்தியா வருகை


6-போல்பூரில் கோஷ்டி மோதல் : ஒருவர் பலி; 8 பேர் காயம்

7-அக்வாஃபினா பாட்டிலில் பனிபடர்ந்த மலை படத்தை போடத் தடை


8-சீமான், அமீர் ஜாமீனுக்கு எதிரான மனு:மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி


9-உடல் சவால் கொண்டவர்களுக்கு இலவச பயண அட்டை


10-புதுக்கோட்டை மீனவர்கள் ஓரிரு நாளில் விடுதலை


11-இந்தியா 8 சதவீத வளர்ச்சியை தக்கவைத்து கொள்ளும்: பிரதமர் நம்பிக்கை


12-உத்ரகான்டில் சாலை விபத்து: 2 ராணுவ வீரர்கள் பலி, 8 பேர் படுகாயம்


13-கச்சா எண்ணெய் விலை குறைந்தது


14-ஏற்றத்துடன் இந்திய பங்குசந்தை


15-ரூபாயின் மதிப்பு குறைந்தது

mgandhi
24-11-2008, 03:46 PM
25-11-2008

1-டிசம்பர் 2ம் தேதி நாடு தழுவிய போராட்டம்

2-குண்டு வெடிப்பில் தொடர்பா? பிரவீன் தொகாடியா மறுப்பு

3-அனைத்து கட்சி கூட்டம் : அ.தி.மு.க., புறக்கணிக்க முடிவு

4-இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும்

5-என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி பாதிப்பு

6-திருமலை பக்தர்களுக்கு இலவச மினரல் வாட்டர்

7-தஞ்சை, நாகை பள்ளிகளுக்கு விடுமுறை

8-பணவீக்கம் சீராகும் : சிதம்பரம் நம்பிக்கை

9-சந்திரயான் சாதனையாளர்களுக்கு கேரள சட்டசபையில் பாராட்டு

10-லஞ்சம் கொடுத்து ஓட்டுகளை திரட்டுகிறார் உமாபாரதி : காங்., குற்றச்சாட்டு

11-பொருளாதார சரிவு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: ஜெ., கோரிக்கை

12-பிரணாப் முகர்ஜி நேபாள் பயணம்


13-லஞ்சம் கொடுத்து ஓட்டுகளை திரட்டுகிறார் உமாபாரதி : காங்., குற்றச்சாட்டு


14-டென்னிஸ் ரேங்கிங்: சானியா பின்னடைவு

15-திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது

mgandhi
25-11-2008, 04:30 PM
26-11-2008

1-அண்ணாமலை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

2-சென்னை, காஞ்சி திருவள்ளூரில் பள்ளிகள் விடுமுறை


3-மோடி பொதுக்கூட்டத்திற்கு டில்லி போலீசார் தடை


4-தூத்துக்குடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


5-சோத்துப்பாறை அணை 4வது முறையாக நிரம்பியது


6-இலங்கை பிரச்னையை வலியுறுத்தி ஈரோட்டில் இ.கம்யூ., பேரணி : 300 பேர் கைது

7-நாகப்பட்டினத்தில் புயல் *எச்சரிக்கை


8-அமீர், சீமான் ஜாமீன் நிபந்தனைகள் ரத்து : ராமநாதபுரம் கோர்ட் உத்தரவு

9-கனமழை தொடர்வதால் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

10-இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டார் அமைச்சர் ராமசந்திரன்

11-டிச., 4ம் தேதி பிரதமருடன் சந்திப்பு : அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு


12-தேர்தலுக்கு பிறகு *பெட்ரோல் விலை குறையும் : முரளி தியோரா


13-பிரச்சந்தா - பிரணாப் சந்திப்பு


14-மத்திய அமைச்சர் ராஜா பதவி விலக வேண்டும் : ஜெ., வலியுறுத்தல்


15-இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

mgandhi
27-11-2008, 05:08 PM
28-11-2008

.1-ஓபராய் ஹோட்டலிலிருந்து 31 பேர் மீட்பு


.2-வெளிநாட்டு பிணைக் கைதிகள் குறித்து தகவல் பெற கட்டுப்பாட்டு அறை


.3-முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவு


.4-மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஊரடங்கு உத்தரவு


.5-கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


.6-புயல் இன்று காலை கரையை கடந்தது


.7-டிசம்பர் 2-ல் தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்கிறார்கள்: தமிழக அரசு


.8-தாய்லாந்தில் நெருக்கடி முற்றுகிறது மற்றொரு விமான நிலையம் மூடல்


.9-இலங்கையில் மறுவாழ்வுக்கு நடவடிக்கை இல்லையெனில் போர் விதவைகள் தற்கொலைப் படையினராக மாறக் கூடும் : ஐ.நா. எச்சரிக்கை

mgandhi
28-11-2008, 05:35 PM
29-11-2008

1-.5 பிணையாளிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்


2-.மும்பை தாக்குதல் சம்பவம் எதிரொலி: சபரிமலையில் தீவிர சோதனை


3-.பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடும் கட்சிக்கு வாக்களியுங்கள்: வாஜ்பாய்


4-.சிதம்பரம் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார் அமைச்சர் ஸ்டாலின்


5-.மத்திய அரசிடம் நிதி உதவியை எதிர்பார்க்கிறேன்: கருணாநிதி


.மும்பை தாக்குதலில் மயிலாடுதுறையை சேர்ந்த வங்கி அதிகாரி சாவு


6-.பாகிஸ்தானியர் உட்பட 3 தீவிரவாதிகள் கைது


7-.மும்பை தாக்குதல்: ஐஎஸ்ஐ தலைவர் இந்தியா வருகிறார்


8-.மும்பையை தாக்கிய தீவிரவாதிகளுக்கு அல் காய்தா முகாமில் பயிற்சி: நிபுணர்கள் கருத்து


9-.மழை வெள்ளம்: மாநில அரசு செயலிழப்பு - ஜெயலலிதா


.வாய்ப்பூட்டால் மின்வெட்டு பிரச்னை தீர்ந்துவிடாது: ஜெயலலிதா


10-.மும்பையில் மன்மோகன்


11-.குஜராத் கடலோரம் மர்ம கப்பல்கள்!


12-.புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: பிரபாகரன் வேண்டுகோள்


13-.பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு - பிரணாப் தகவல்


14-.மும்பை தாக்குதல்: ஐஎம்எப் கண்டனம்


15-.பயங்கரவாதி மோரீஷûஸச் சேர்ந்தவரா? தாஜ் ஹோட்டலிலிருந்து அடையாள அட்டை மீட்பு

mgandhi
29-11-2008, 05:16 PM
30-11-2008

1-சாம்பியன்ஸ் லீக் குறித்து 8-ந்தேதி முடிவு


2-பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி 4-ந் தேதி முடிவு
மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது


3-தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் உடல்கள் மீட்பு


5-பிரதமர் கூட்டத்தில் சிவராஜ் பட்டீலுக்கு அழைப்பு


6-மும்பை தாக்குதல் பற்றி காங்கிரஸ் காரிய கமிட்டி அவசர ஆலோசனை


7-மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வாக்கி டாக்கி'யுடன் திரிந்த 2 பேர் சிக்கினர்


8-மரணம் அடைந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்-மந்திரி


9-கருணாநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் டிசம்பர் 4-ல் சந்திப்பு உறுதி: மன்மோகன் சிங்


10-டெல்லி சட்டசபை தேர்தலில் 60 சதவீத ஓட்டுப்பதிவு


11-இந்தோனேசியா சென்ற ஜனாதிபதி பயணம் பாதியில் ரத்து


12-பெங்களூருக்கு உளவுத்துறை எச்சரிக்கை


13-`தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்`: அத்வானி


14-மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 10 கிலோ அரிசியும் வழங்கப்படும்: தமிழக அரசு


15-பிரதமர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

mgandhi
30-11-2008, 04:47 PM
1-12-2008

1-மழை நிவாரணம் வழங்காததைக் கண்டித்து
முத்துப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அலுவலகம் சூறை : போலீஸ் துப்பாக்கிச்சூடு


2-தேசிய பாதுகாப்பு படையின் மையங்களை நான்கு இடத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு


3-ஜெ.,உருவபொம்மை எரிப்பு : நெல்லையில் 11 பேர் கைது


4-சிவராஜ் பாட்டீல் ராஜினாமா : தாமதமான முடிவு என லாலு கருத்து


5-ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் : 60 சதவீத ஓட்டுப்பதிவு


6-சிவராஜ் பாட்டீல் ராஜினாமாவைத் தொடர்ந்து விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு நெருக்கடி கூடுகிறது


7-அருந்ததியினர் ஒதுக்கீடு குறித்த ஜெ.,யின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் மறுப்பு8-தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ராஜினாமா

9-உள்துறை அமைச்சரானார் சிதம்பரம்

10-கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸி.,


11-கடலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(1-12-2008) விடுமுறை


12-காடுவெட்டி குரு விடுதலை


13-காஷ்மீரில் 3வது கட்டத் தேர்தல்: பனிபொழிவு காரணமாக மந்தம்


14-பயங்கரவாதிகளில் தாக்குதல் முன்னரே தெரியும்: ரத்தன் டாடா15-சென்னையில் மழை நின்றும் வெள்ளத்தில் சிக்கி மக்கள் அவதி

mgandhi
01-12-2008, 04:43 PM
2-12-2008

1-ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் 3 வது இடத்தில் இந்தியா


2-நளினி அப்பீல் மனு பிப்., 9ம் தேதிக்கு தள்ளிவைப்பு


3-சபரிமலை காட்டில் மர்ம வெளிச்சம்: நள்ளிரவில் அதிரடிப்படை ஆபரஷேன்


4-மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோருக்கு ஜனாதிபதி ஆறுதல்


5-சோனியா பிறந்த நாள் கொண்டாட்டம் தவிர்ப்பு


6-சபரிமலை வருமானம் ரூ. 23 கோடி7-தாக்குதல் விசாரிக்க ஆமெரிக்க எப்.பி.ஐ., குழுவினர் மும்பை வந்தனர்


8-பாகிஸ்தான் ஹை கமிஷனருக்கு இந்தியா அவசர அழைப்பு : கண்டனம் தெரிவிப்பு


9-மும்பை தாக்குதல் இனி என்ன? : உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி


10-அன்னியர் ஊடுருவலை தடுக்க ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து


11-இந்திய பங்குச்சந்தையில் சரிவு


12-பாட்டீல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் மகாராஷ்டிரா கவர்னர்


13-மகாராஷ்டிரா தேசியவாத காங்., சட்டசபை கட்சி தலைவர் நாளை தேர்வு


14-பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் கருணாநிதி15-மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார் : சோனியா தலைமையில் ஆலோசனை

mgandhi
02-12-2008, 04:32 PM
3-12-2008

1-5 டாக்சிகள் பயன்படுத்திய பயங்கரவாதிகள்: மும்பை போலீஸ் அதிகாரி

2-பாக்., சவுதி நாடுகளுடன் தொடர்பு: கோவையில் கேரள இளைஞர்கள் கைது

3-குஜராத்தில் படகு மூலம் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் 7 பேர் கைது

4-கேரளாவில் முதல்வர் அச்சுதானந்திற்கு எதிராக போராட்டம்


5-தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய படகு : புலனாய்வு துறை விசாரணை


6-பிரதமரை சந்தித்தனர் தமிழக எம்.பி.,க்கள்


7-மிசோரம் சட்டசபை தேர்தல் அமைதியான ஓட்டுப்பதிவு


8-பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை : பிரணாப்

9-இந்திய பங்குச்சந்தையில் தொடர் சரிவு

10-சேரன்மாதேவி காங்., எம்.எல்.ஏ., வெற்றி செல்லும் : ஐகோர்ட் தீர்ப்பு11-ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டகாசம்


12-மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி

13-ஹேமந்த் கர்கரே குடும்பத்துக்கு ஜனாதிபதி நேரில் ஆறுதல்


14-பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

15அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரா வெற்றி பெற்றது செல்லாது : ஐகோர்ட் தீர்ப்பு

mgandhi
04-12-2008, 04:56 PM
5-12-2008


1-பிரபல நடிகர் பிரபுதேவாவின் மகன் மரணம்


2-சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை


3-டில்லியில் திருவள்ளுவர் சிலை: திறந்து வைத்தார் கருணாநிதி


4-திருப்புமுனை ஏற்படுத்தும் லோக்சபா தேர்தல்: ஜெ., நம்பிக்கை


5-மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ?


6-ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் 60 சதம் ஓட்டுப்பதிவு


7-இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு:தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு


8-விமான கடத்தலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் : கமிஷன் உத்தரவு


9-வெள்ள சேதம் சமாளிக்க 1000 கோடி ரூபாய் முதல்வர் கருணாநிதி *மத்திய அரசிடம் கேட்டார்


10-லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது அதிமுக


11-லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

.
12-வங்கக் கடலில் மீண்டும் புயல்


13-ஈரோட்டில் பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார்

14-பண வீக்கம் 8.4 சதவீதமாக குறைவு15-அடையாள அட்டை இருந்தால் தான் ஓட்டலில் அறை கிடைக்கும் : கோவை போலீஸ் கமிஷனர்

mgandhi
05-12-2008, 04:26 PM
6-12-2008

1-பாராளுமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளுடன் அ.தி.மு.க.வினர் பணியாற்ற வேண்டும்: ஜெயலலிதா உணர்ச்சிகர உரை.

2-2009 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம்: ஜெயலலிதா அறிவிப்பு.

3-ஸ்பெக்ட்ராம் ஊழல் பிரச்சினை எல்லாமே முடிந்து போன விவகாரமாம்: கருணாநிதி.

4-இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்.

5-அமெரிக்காவில் நடத்தியது மாதிரி இந்தியாவிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

6-ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: பா.ஜ.காங்கிரஸ் இடையே மோதல்_துப்பாக்கிச்சூடு

7-விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத் துறை எச்சரிக்கை.

7-அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் கருணாநிதி பிரதமருடன் சந்திப்பு:

8- மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கை அனுப்ப முடிவு

9- சென்னையில் ரூபாய் 838 கோடி ரூபாய் செலவில் வடிகால் வசதி திட்டம்

10- வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் 1000 கோடி தர வலியுறுத்தல்

11- தீவிரவாதிகள் அச்சுறுத்தலையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

12- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத ஓட்டுப்பதிவு

13- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்: ஜெயலலிதா

mgandhi
09-12-2008, 04:57 PM
10-12-2008

1-மூன்றாவது அணி ஆட்சி: இடதுசாரிகள் நம்பிக்கை


2-ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர்3-உ.பி., பஸ் விபத்து: 30பேர் பலி4-பாபநாசம் அணை நிரம்பியது: மழை நீர் முழுமையாக திறப்பு5-விருதுநகரில் பயங்கரவாதியா?: உளவுபிரிவினர் விசாரணை6-கோவையில் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் 25 பேர் கைது7-சென்னை ஜி.என்.செட்டி *மேம்பாலம் டிசம்பர் 29ம் தேதி திறப்பு8-பண்ருட்டியில் கைதி தற்கொலை முயற்சி9-ராமேஸ்வரத்துக்கு இலங்கை அகதிகள் வருகை10-சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெல்வது நிச்சயம்11-சென்னையில் கனமழை : கிரிக்கெட் பயிற்ச்சி ஒத்திவைப்பு12-கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு13-மகாராஷ்டிரா முதல்வர் சவான் ஜெ.ஜெ.மருத்துவம*னைக்கு சென்றார்14-சோனியாவுக்கு 62வது பிறந்தநாள்15-தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் : மும்பை போலீஸ்

mgandhi
11-12-2008, 04:42 PM
12-12-2008

1-அரசு பஸ்களை சிறைபிடித்து மீனவர்கள் போராட்டம்


2-கேரளா எல்லையில் துப்பாக்கி பறிமுதல்


3-ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு


4-அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு


5-மும்பை தாக்குதல் : லோக்சபாவில் மன்னிப்பு கோரினார் பிரதமர்


6-மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு புதிய முதல்வர் நியமனம்


7-திருவண்ணாமலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்து


8-இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் முதல் இன்னிங்க்ஸ் : இங்கிலாந்து 229/5


9-திருமங்கலம் தொகுதிக்கு ஜனவரி 9ம் தேதி இடை தேர்தல்


10-பங்குச்சந்தையில் சரிவு


11-சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


12-ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய துணை தளபதி பார்வை


13பணவீக்கம் 8 சதவீதமாக குறைந்தது14-அஜ்மல் போலீஸ் காவல் டிசம்பர் 24ம் தேதி வரை நீட்டிப்பு15பார்லிமென்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து அறிக்கை தாக்கல்

mgandhi
14-12-2008, 04:32 PM
15-12-2008

1-நடராஜர் கோவில் கோபுர வாயில்கள் திறப்பு


2-விபத்தில் கன்னியாகுமரி அருகே நான்கு பேர் பலி3-பொதிகை டிவியில் மார்கழி சிறப்பு நிகழ்ச்சி


4-வரும் 27 ம் தேதி தி.மு.க., பொதுக்குழு


5-பரங்கிப்பேட்டை அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி


6-எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்ற விவகாரம்: லோக்சபாவில் நாளை அறிக்கை தாக்கல்


7-இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: 2 வது இன்னிங்ஸ்:இந்தியா- 131/ 18-அசாம் பறவைக் காய்ச்சல் மேலும் 2 மாவட்டங்களில் பரவியது


9-மன்மோகன்சிங்கை சந்தித்தார் இங்கிலாந்து பிரதமர்10-பொள்ளாச்சியில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல்

11-சங்கரன்கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு


12-ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் போலி மதுபானம் கடத்திய 3 பேர் கைது13-வெள்ள நிவராண தொகையை அதிகரிக்க கோரி புதுவையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்14-திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல்: இரு இடங்களில் வேட்புமனு தாக்கல்15-வைகை அணைக்கு பாதிப்பு: பா.ம.க., எம்.பி., எச்சரிக்கை

mgandhi
17-12-2008, 04:33 PM
18-12-2008

1-மருத்துவமனையிலிருந்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் "டிஸ்சார்ஜ்'


2-தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம்: மக்களவையில் நிறைவேற்றம்


3-நாடு திரும்பினார் பார்வதி ஓமனகுட்டன்


4-ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தஞ்சையில் மூன்று பேரிடம் விசாரனை


5-எம்.எல்.ஏ.,கோரிக்கையை ஏற்று சிறையில் அடைத்த போலீசார்


6-அசாம், மே. வங்கத்தில் இருந்து கோழி தீவனத்திற்கு தடை


7-திருமங்கலம் இடைதேர்தல் தே.மு.தி.க., வேட்பாளர் மதுரையில் அறிமுகம்


8-ராமேஸ்வரத்தில் டிச.20 ம்தேதி கோயில்நடை திறப்பில் மாற்றம்


9-திருமங்கலம் இடைதேர்தலை புறக்கணிப்பதாக திருமங்கலம் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு


10-பயங்கரவாதத்தை ஒழிக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் : சிதம்பரம்


11-பயங்கரவாதத்தை ஒடுக்க சிறப்பு படை : மகாராஷ்டிரா அரசு முடிவு


12-ஊட்டியில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் பரபரப்பு


13-மின்வெட்டை கண்டித்து தூத்துக்குடியில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


14-திருமங்கலம் இடைதேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் இன்று அறிவிப்பு


15-மங்களூர் தொகுதிக்கு இடைதேர்தல் : மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

mgandhi
18-12-2008, 05:00 PM
19-12-2008

1-திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம்


2-இலங்கை போர்முனையில் இந்திய ராணுவ ஆலோசகர்


3-தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் சேதம்


4-இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது: பிசிசிஐ


5-தேர்தலை மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள் : உறுப்பினர்களிடம் சோம்நாத் ஆவேசம்


6-பணவீக்கம் 6.84%


7-ஆப்கானிஸ்தான் செல்கிறார் ஜர்தாரி


8-நடுவானில் விமானங்கள் மோதல்: 2 பேர் சாவு


9-அந்துலே விவகாரம் பற்றி அரசு விளக்கம் தரும் : பிரணாப் முகர்ஜி


10-அமைச்சரவைக் கூட்டம் ரத்து


11-பங்குச் சந்தையில் ஏற்றம்


12-இராக்கில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு?


13-தாஜ் மகாலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


14-உலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்: சல்மான் ருஷ்டி புகார்


15-இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல்: சோனியா

பாரதி
20-12-2008, 12:33 AM
நேற்று வளைகுடா நாடுகளில் இணையச்சேவையும், தொலைபேசிச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அவை மீண்டும் இயங்கும் எனவும் கலீஜ் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த சேவை கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கம்பிவடத்தில் ஏற்பட்டுள்ள பழுதால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

mgandhi
21-12-2008, 05:04 PM
22-12-2008• தேர்தல் பணிக்குழுவில் இருந்து மு.க.அழ*கி**ரி விலக*ல்


• *திருமாவளவனு*க்கு அருகதை*யி*ல்லை: த*ங்கபாலு


• *விடுதலை *சிறு*த்தைக*ள், பெ*ரியா*ர் *தி.க.*வின*ர் 73 பே*ர் கைது


• காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: த**மிழக ராணுவ வீரர் பலி


• த*மிழக*த்*தி*ல் 70 ல*ட்ச*ம் குழ*ந்தைகளு*க்கு போலியோ சொட்டு மருந்து வழ*ங்க*ப்ப*ட்டது


• ஈழ*த் தமிழர் *பிரச்சனை*யி*ல் நமக்குள் சண்டை வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்


• *தி.மு.க. கூ*ட்ட*ணி*யி*ல் குழ*ப்ப*த்தை ஏ*ற்ப*டு*த்த முய*ற்*சி: *திருமாவளவ*ன் கு*ற்ற*ச்சா*ற்று


• த*மிழக கா*ங்*கிர*ஸ் தலைவ*ர் த*ங்கபாலு கைது


• சென்னை சட்டக்கல்லூரி ஜன.19இ*ல் திறப்பு : துரைமுருகன்


• திருமங்கலம் இடை*த்தே*ர்த*லி*ல் புதிய தமிழகம் போட்டி*யில்லை : கிருஷ்ணசாமி


• ச*த்*திய மூ*ர்*த்*தி பவ*னி*ல் பெ**ரியா*ர் திரா*விட*ர் கழக*த்*தின*ர்- கா*ங்*கிரசா*ர் மோத*ல்


• *திரும*ங்கல*ம் : அ.இ.அ.*தி.மு.க. வே*ட்பாளரை ஆத*ரி*த்து க*ம்யூ. பொதுக்கூட்டம் அறிவிப்பு


• *சிறுதாவூ*ர் *விவகார*ம் : கருணாந*ி*தி தூ*ண்டி*விடு*கிறா*ர் - ஜெயலலிதா


• நீரிழிவால் உறுப்பு இழந்தோருக்கும் ஊனமுற்றோருக்கான சலுகை?


• **திரும*ங்கல*ம் தொகு*தி*யி*ல் இதுவரை 12 ப*ே*ர் மனு*த்தா*க்க*ல்


• த*மி*ழீழ ஆதரவு*க்குரலை நசு*க்க முனைவது ஜனநாய*த்து*க்கு எ*திரானது: *திருமாவளவ*ன்


• இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி கோவை *சிறை*யி*ல் அடை*ப்பு


• தி.மு.க வேட்பாளர் 22ஆ*ம் தேதி மனு*த்தாக்கல்

mgandhi
22-12-2008, 04:24 PM
23-12-2008


1-கர்காரே மரணம் குறித்து மும்பை போலீஸ் அறிக்கை தாக்கல்

2-ராஜ் தாக்கரே மனு: ஐகோர்ட் நிராகரிப்பு

3-கோவாவிற்கு 300 மத்திய ரிசர்வ் போலீசார் விரைவு

4-கசாப் கடிதம் பாகிஸ்தான் ஹைகமிஷனரிடம் ஒப்படைப்பு

5-வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய நான்கு பேருக்கு ஓராண்டு சிறை

6-டிச., 29 முதல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

7-பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு: வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி

8-தேர்தலில் வெற்றி தோல்வி முக்கியம் அல்ல: சரத்குமார்

9-இந்தியா-இங்கிலாந்து 2 வது டெஸ்ட்:2 வது இன்னிங்ஸ்:இந்தியா 134/4

10-அந்துலே கருத்துக்கு நாள*ை விளக்கமளிக்கிறது மத்திய அரசு

11-சீமான் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பங்குச்சந்தையில் சரிவு

12-கோவா பீச்சில் இளம் பெண் மர்மசாவு : போலீசார் தீவிர விசாரணை

13-கோவை விமான நிலையத்தில் போதை மருந்து பறிமுதல்

14-தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு

15-புதுவையில் வக்கீல்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

பாலகன்
22-12-2008, 04:26 PM
வரதட்சணை கொடுமைக்கு தண்டனை குறைவு என்று நினைக்கிறேன்....

தகவல் தந்தமைக்கு நன்றி காந்தி

mgandhi
25-12-2008, 04:35 PM
26-12-2008

1-வாஜ்பாய்க்கு வயது 85 : தலைவர்கள் வாழ்த்து

2-திருமலையில் ஜனவரி 7ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

3-புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை : கருணாநிதி எச்சரிக்கை

4-கேரள மாணவன் ரியாத்தில் பலி

5-திருமங்கலத்தில் தி.மு.க., வேட்பாளர் பிரச்சாரம்

6-பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி ரத்து: சச்சின் வரவேற்பு

7-மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதி

8-ராஜாஜிக்*கு டில்லியில் மலரஞ்சலி

9-தூத்துக்குடி பஞ்சு குடோனில் பயங்கர தீ: கோடிக்கணக்கில் சேதம்

10-முடிகிறது பாகிஸ்தானுக்கு விதித்த கெடு : எல்லையில் ஆயுதங்கள் குவிப்பு

11-கச்சா எண்ணெய் விலை மேலும் குறைவு

12-தென்ஆப்ரிக்க கேஸ் வெடி விபத்தில் இறந்த இந்தியரின் உடல் நாளை(டிச.28) சென்னை வருகை

13-மலேசியாவில் ஏமாற்றப் பட்டு தமிழகம் திரும்பியவர்களுக்கு முதல்வர் நிதியுதவி

14-கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களை தாக்க பாக்., திட்டம்: உளவுத்துறை திடுக் தகவல்

15-தாராபுரத்தில் காங்கிரஸ் எம்.பி., வீட்டில் புகுந்து கொடிகள் எரிப்பு

பாலகன்
25-12-2008, 04:38 PM
பாக்கிஸ்தான் இலக்கு நிர்ணயம் செய்து தாக்கவும் தயாராகிவிட்டது... இந்தியா இன்னும் யோசித்துக்கொன்டிருக்கிறது...

தகவலுக்கு நன்றி காந்தி

mgandhi
26-12-2008, 04:20 PM
27-12-2008

1. சுனாமி நாளில் கீழக்கரை கடல் உள்வாங்கியது


2. மகரவிளக்குக்காக சபரிமலையில் வரும் 30ம் தேதி நடை திறப்பு


3. கரூர் டி.ஆர்.ஓ.,வுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன்


4. திருமங்கலம் இடைத்தேர்தல் களத்தில் 26 பேர்
27-12-2008

5. கோவை குண்டு வெடிப்பு : முக்கிய குற்றவாளி கைது

6. டாக்டர்கள் வி.ஆர்.எஸ்., பெற அரசு தடை


7. இந்தியா ஹை கமிஷனர் : பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அவசர பேச்சு

8. விமான நிலையங்களுக்கு அதிக பாதுகாப்பு : சிதம்பரம்


9. பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

10. ஜனவரி 5ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் : அகில இந்திய மோட்டார் வாகன சங்கம் அறிவிப்பு


11. இந்திய பங்குச்சந்தையில் சரிவு


12. திருமங்கலம் இடைதேர்தல் : வேட்புமனு வாபஸ் முடிவு


13. எம்.எல்.ஏ., சேகர் திவாரி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு


14. கோல்கட்டாவில் ரயில் தடம் புரண்டது


15. பிரதமருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

ஓவியன்
26-12-2008, 04:33 PM
பிரதமருடன் தளபதிகளின் சந்திப்பானது போர் முனைப்பின் முன்னெடுப்போ...??

செய்திப் பகிர்வுகளுக்கு நன்றி காந்தி அண்ணா...

arun
26-12-2008, 04:52 PM
செய்திகளின் பகிர்வுக்கு நன்றி காந்தி

mgandhi
29-12-2008, 04:26 PM
30-12-2008

(1) கரூர் புரோக்கர்களிடம் ரூ.1.25 லட்சம் பறிமுதல்


(2) குமாரசாமிக்கு எதிராக எடியூரப்பா வழக்கு


(3) திருமாவளவன் சுருதி இறங்கி போச்சு: இளங்கோவன் கிண்டல்


(4) அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னையில் அனுமதி


(5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தேவகவுடா


(6) அரசு வழங்கிய தொகையை திரும்ப கொடுத்ததால் பரபரப்பு(7) இடைத்தேர்தல் வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார்


(8) சோனியாவை சந்திக்கிறார் உமர் அப்துல்லா


(9) ரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு *போலீசார் சோதனை


(10) மதுரையில் பஸ்கள் மீது கல்வீச்சு : 45 பேர் கைது


(11) மின்வெட்டை ரத்து செய்ய தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு நிபந்தனை


(12) சென்னையில் சுப்ரிம் கோர்ட் கிளை : வக்கீல்கள் வேலை நிறுத்தம்


(13) திருமங்கலம் வன்முறை குறித்து விசாரணை : நரேஷ்குப்தா மதுரை வருகிறார்(14) இடைத்தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த அ.தி.மு.க., வுக்கு அவசியம் இல்லை : தா.பாண்டியன்


(15) திருமங்கலத்தில் 33 கிராமங்கள் பதட்டமான பகுதியாக அறிவிப்பு
நன்றி arun, ஓவியன்

mgandhi
31-12-2008, 01:04 AM
31-12-2008

1-இன்று நள்ளிரவு முதல் சமையல் காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்


2-விஜயகாந்த் பிரசாரம்: ஜன.,1 முதல் துவக்கம்

3-அடுத்த மாதம் குறைகிறது பெட்ரோல் விலை


4-ரூ.5 லட்சம் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது


5-சொத்து குவிப்பு : சுங்க அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை


6-சோழர் கால பஞ்சலோக சிலை கோவில் கிணற்றில் கண்டெடுப்பு


7-மேலும் ஒரு விடுதலைப்புலி அதிரடி கைது


8-ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பு

9-ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பு

10-பாம்பன் ரயில் பாலத்தின் தண்டவாளத்தில் பெயின்ட் அடிக்கும் பணி


மின்வாரிய செயல் இயக்குனர் திடீர் மாற்றம்


11-போலீசாரை காப்பாற்றிய எங்கள் மீதே வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்


12-ஓட்டளிக்க பணம் கொடுக்கப்படுவதாக புகார் துரதிருஷ்டவசமானது : நரேஷ் குப்தா


13-விமான கட்டணங்களை குறைத்தது ஏர்இந்தியா


14-திருமங்கலத்தில் 3, 4, 5 தேதிகளில் ஜெ., பிரசாரம்


வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது தி.மு.க.,: நரேஷ்குப்தாவிடம் வைகோ புகார்


15-ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை

இளசு
31-12-2008, 06:55 AM
தொடரும் செய்திப்பகிர்வுக்கு நன்றி காந்தி அவர்களே..

வரும் ஆண்டிலாவது நல்லவை அதிகம் நடக்குமா ?
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தோன்றும் ஏக்கம்..!

நம்பிக்கைதானே வாழ்க்கை!

mgandhi
01-01-2009, 04:32 PM
தொடரும் செய்திப்பகிர்வுக்கு நன்றி காந்தி அவர்களே..

வரும் ஆண்டிலாவது நல்லவை அதிகம் நடக்குமா ?
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தோன்றும் ஏக்கம்..!

நம்பிக்கைதானே வாழ்க்கை!
நானும் அதே நம்பிக்கையில் தொடர்கிரேன்

mgandhi
01-01-2009, 04:33 PM
2-1-2009

1) தேவகவுடா மீது வழக்கு இல்லை : முடிவை மாற்றினார் எடியூரப்பா


2) மத்திய அமைச்சர் ராஜாவை பதவி நீக்க வைகோ வலியுறுத்தல்


3) அசாம் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி : 31 பேர் படுகாயம்

4) அலுமினிய கட்டி கடத்திய 3 பேர் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்றம்


5) ஒரிசா-ஜார்கண்ட் எல்லைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு

6) மதுரையின் புதிய டி.ஐ.ஜி., யாக அம்ரேஷ் பூஜாரி நியமனம்


7) சென்னையில் சொத்துக்*காக கணவன்-மனைவி படுகொலை


8) இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்கும் விதமாக தகவல்கள் பரிமாற்றம்


9) அஜமல்கான் மீது மேலும் 3 வழக்குபதிவு

10) பணவீக்கம் விகிதம் 6.38 சதவீதமாக குறைவு

11) லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் காஸ் விலை உயரும் அபாயம்


12) தமிழர் என்ற உணர்வோடு பொங்கலை கொண்டாடுங்கள்: கருணாநிதி

13) திருமங்கலத்தில் பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த்


14) இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்


15) டில்லியில் கடும் குளிர்: விமானம், ரயில் போக்குவரத்து தாமதம்

பாலகன்
01-01-2009, 04:43 PM
செய்தி வள்ளல் காந்திக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி

தமிழ்தாசன்
01-01-2009, 05:50 PM
உடனடிச் செய்திகளை தரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
தொடர்ந்து படிக்கும் பக்கமாகிவிட்டது.

mgandhi
04-01-2009, 04:34 PM
5-1-2009

1) .வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற திமுகவினர் திட்டம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு


2) .மும்பை தாக்குதல்: பாக. தொடர்பு ஆதாரங்களை சீனாவிடம் வழங்குகிறது இந்தியா
3) .மீண்டும் தாக்குதல் நிகழ்ந்தால் பாகிஸ்தான் தக்க விலையை கொடுக்க வேண்டியதிருக்கும்: ப.சிதம்பரம்


4) .உ.பி: என்கவுன்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை
5) .கிளிநொச்சி வீழ்ந்தாலும் புலிகள் தோற்றதாக கருத முடியாது: இல. கணேசன்


6) .தில்லியில் இன்றும் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் தாமதம்


7) .காஸô பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தரைவழித் தாக்குதல்: 12 பேர் பலி


8) .அசாம் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு; சரக்கு ரயில் சேதம்


9) .மும்பை தாக்குதலில் தொடர்புடையோரை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி: பாகிஸ்தான்


10) .பாக்தாத்: பெண் மனிதவெடிகுண்டு தாக்கி 35 பேர் பலி


11) .மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளித்தது அமெரிக்க புலனாய்வுக் குழு


12) .தவிர்க்க முடியாத காரணங்களால் திருமங்கலத்தில் பிரசாரம் செய்யவில்லை: திருமாவளவன்


13) .இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியா எதுவரை அமைதி காக்கப் போகிறது?: ராமதாஸ் கேள்வி


14) .திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள்?


15) .வன்முறைச் சம்பவம் தொடர்பாக 7 திமுகவினர் கைது

mgandhi
05-01-2009, 06:05 PM
6-1-2009
1-லாரிகளுக்கு அளிக்கப்படும் சேவைக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

2-காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவி ஏற்றார்

3-கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

4-டைரக்டர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

5-பாளையங்கோட்டையில் 6 பேர் தற்கொலை: வக்கீல் உள்பட 2பேர் கைது

6-சாயல்குடி அருகே கடல் திடீரென உள்வாங்கியது

7-கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.16 3/4 லட்சம் மோசடி

8-ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது: தலைமை தேர்தல் கமிஷன் கருத்து

9-கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

10-வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மத்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

11-தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

12-தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

13-பிரதமர் தலைமையில் டெல்லியில் நாளை, முதல்-மந்திரிகள் மாநாடு

14-சட்டக்கல்லூரி மோதல்: நீதிபதி சண்முகம் கமிஷன் விசாரணை 7-ந்தேதி தொடங்குகிறது

15-ஜெயலலிதா,வைகோ மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பார்வையாளரிடம் தி.மு.க.

mgandhi
06-01-2009, 04:22 PM
1) திருமங்கலம் பிரசாரத்தில் விஜயகாந்த் மனைவி கார் மீது தாக்குதல்


2) ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
3) தாராபுரம் தாலுகா பொன்னாபுரம் அருகே4) குழந்தைக்கு பெயர் சூட்டி பணம் கொடுப்பது பண்பாடு ஸ்டாலின் பதில்


5) திருமங்கலம் தொகுதியில் அடையாள அட்டை இல்லாதோர் வெளியேற உத்தரவு

6) திருமலையில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள்


7) அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி ஜாமீன் மனு தள்ளுபடி

8) சென்னை மாநிலக் கல்லூரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


9) தமிழக சட்டசபை வருகிற 21ம் தேதி கூடுகிறது


10) பூஞ்ச் பகுதியில் சண்டை தொடர்கிறது


11) அஜ்மல்கசாப் காவல் ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிப்பு


12) பயங்கரவாதிகளை ஒடுக்க உளவுத்துறை பலப்படுத்தப்பட வேண்டும் : சிதம்பரம்


13) கச்சா எண்ணெய்யின் விலையில் சரிவு

14) பாக்., அச்சுறுத்தல் இந்திய ஒற்றுமையை குலைக்க முடியாது : பிரதமர்


15) டில்லியில் முதல்வர்கள் மாநாடு துவங்கியது


16) இந்திய சைபர் நெட்ஒர்க்குகளுக்கு ஆபத்து : உளவுத்துறை எச்சரிக்கை

mgandhi
09-01-2009, 04:49 PM
10-1-2009


1-சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன நிர்வாகி ராமலிங்க ராஜூ கைது


2-திருமங்கலம் இடைத்தேர்தலில் 88.89 சதவீத ஓட்டுப்பதிவு3-நிர்வாகிகளை விடுவிக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம்4-கவுகாத்தியில் மீண்டும் குண்டுவெடிப்பு : இருவர் பலி5-பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஸ்டிரைக் வாபஸ்6-இயக்குநர் சீமார் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி


7-திருமங்கலம் இடைத்தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்தது : நரேஷ் குப்தா8-ஒரு வாரத்துக்கு மீன்பிடிக்கப் போவதில்லை : மீனவர்கள் அறிவிப்பு
9-முத்தரப்பு ஒரு நாள் தொடர்: வங்கதேசம், ஜிம்பாப்வே நாளை மோதல்


10-திங்கள் கிழமைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ்: ஐ.ஓ.சி., எச்சரிக்கை11-பங்குச்சந்தையில் சரிவு12-ராமலிங்கம் வீட்டில் செபி குழு சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கின


13-சங்கர்ராமன் கொலை வழக்கு : பிப்., 26ம் தேதி விசாரணை14-சிதம்பரம் அமெரிக்க பயணம் ரத்து
15-குற்றவாளிகளை பிடிக்கும் வரை அமெரிக்கா ஓயாது : முல்போர்டு

mgandhi
10-01-2009, 05:47 PM
11-1-2009

1) பைக்கில் குண்டு வெடித்த சத்தம்: உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு


2) விஜயகாந்த் புதுப்படம் வெளியாவதில் சிக்கல்

3) சோம்நாத்துக்கு தேசிய விருது4) பிளாட்டினம் நகை விலை 50 சதவீதம் சரிவு!5) முன்னாள் கேப்டன் கங்குலிக்கு பாராட்டு


6) லாரி உரிமையாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


7) காஞ்சிபுரத்தில் வாந்தி பேதி பரவல்: மாணவன் உட்பட 6 பேர் பலி


8) சத்யம் கம்ப்யூட்ர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ சிறையிலடைப்பு


9) சென்னை ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி


10) ஓடும் பஸ்சில் இருந்து நகையுடன் ஓட முயன்ற திருடன் பிடிபட்டான்

11) இஸ்ரேல் போல் இந்தியா நடந்து கொள்ளாது : பிரணாப்


12) பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது : பாலு


13) லக்னோ தொகுதிக்கு மான்யத்தா தத் : அமர்சிங் பரிசீலனை

14) பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் : முரளி தியோரா

15) சென்னையில் போகிப் பண்டிகையன்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை

கா.ரமேஷ்
12-01-2009, 07:35 AM
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க., 39,266 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் திமுக 79,422 ஓட்டுகள் பெற்றது. திமுக வேட்பாளர், லதா அதியமான், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தைவிட 39,266 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். அதிமுக : 40,156. தேமுதிக: 13,136; சமக: 831;

அய்யா
12-01-2009, 01:48 PM
இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறுவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் சுமார் 89 விழுக்காடு வாக்குப்பதிவானதாகச் சொல்லப்பட்டபோதே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது.

ஆனால் கேப்டன் கட்சி வாங்கியிருக்கும் குறைந்த வாக்குகள் அதிர்ச்சியளிக்கின்றன.

mgandhi
12-01-2009, 05:39 PM
(1) முதல்வர் கருணாநிதிக்கு தோள் வலி

(2) சென்னையில் அழகிரிக்கு உற்சாக வரவேற்பு

(3) கவர்னர் பர்னாலாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்


(4) சபரிமலையில் யானைகள் படையெடுப்பு


(5) ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் 21 கிராமங்கள்

(6) இசையமைப்பாளர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருது


(7) லாரி ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு


(8) ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு மார்க்: ஜன., 17ல் வெளியீடு


(9) சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் : 3 பேருக்கு ஜாமீன்


(10) மும்பை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


(11) மேலூர் எம்.எல்.ஏ., சாமி உட்பட 53 பேருக்கு ஜாமீன்(12) ஜனவரி 15 ல் மாயாவதி பிறந்தநாளை கொண்டாட பகுஜன் சமாஜ்வாடி தீர்மானம்

(13) உலக வங்கியுடன் வர்த்தகம் செய்ய விப்ரோவுக்கு தடை


(14) ராமலிங்க ராஜூ ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

அய்யா
17-01-2009, 12:44 PM
90 விழுக்காடு வாக்குகளா? விசாரணை நடத்துக!

தேர்தல் ஆணையத்துக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!!

mgandhi
19-01-2009, 05:52 PM
20-1-2009


1-தஞ்சாவூர்: மாதாகோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் மாடுகள் முட்டி இருவர் பரிதாப பலி


2-கரும்பு அறுவடை கிடையாது : விவசாயிகள் திடீர் அறிவிப்பு


3-மேலப்பாளையம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


4-டில்லி பாங்கில் கொள்ளைமுயற்சி: கடும் துப்பாக்கிச்சண்டை


5-ஐ.சி.சி.,ரேங்கிங்: சச்சின், சேவக் முன்னேற்றம்


6-சேலம் நீதிமன்றத்தில் கதவுக்கு தீ வைப்பு


7-சீமானுக்கு நிபந்தனை ஜாமீன் : சென்னை ஐகோர்ட்


8-ராமலிங்க ராஜூ ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு


9-இந்திய பங்கு*ச்சந்தையில் ஏற்றம்


10-முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை


11-முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் கவலைக்கிடம்

12-பயங்கரவாதத்தை ஆதரித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் : பிரணாப் எச்சரிக்கை


13-கோவில்பட்டி கோர்ட்டில் வக்கீல்கள் மோதல்


14-பரமக்குடியில் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்15-கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது பாகிஸ்தான் : மத்திய அமைச்சர் புகார்

mgandhi
20-01-2009, 04:53 PM
21-1-2009*1- ஜன-23-க்கு ராமலிங்க ராஜூ ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு


*2- புதுச்சேரியில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மோதல்


* 3-மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் மறைவு


*4- முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் கவலைக்கிடம்


*5- டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க நேரில் ஆர்டிஓ ஆபீஸ் சென்ற பிரதமர்


*6- இந்தியாயில் தாக்குதல்கள் தொடரும் - விஞ்ஞானி எச்சரிக்கை


*7- புதுச்சேரி: ராஜீவ் சிலை அவமதிப்பு - மறியல்


*8- ஜார்கண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி?


*9- பாகிஸ்தானிடம் 2-ம் கட்ட ஆதாரங்கள் வழங்க மத்திய அரசு முடிவு


*10- கொழும்பிலிருந்து, தில்லி திரும்பினார் சிவசங்கர்மேனன்


*11- ஜார்கண்ட்: ஜனாதிபதி ஆட்சி - மாநில ஆளுநர் பரிந்துரை


* 12-விமான என்ஜினில் தீ: பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்


*13- சதுர்வேதி நீக்கம் - காங்கிரஸ்


*14- பிப்-12 நாடாளுமன்ற கூட்டம்


*15- சிதம்பரம் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

mgandhi
23-01-2009, 05:41 PM
24-1-2009


1-பிரதமரை சந்தித்தார் சோனியா


2-சினிமாவில் "தம்" காட்சிக்கு தடை இல்லை : டில்லி ஐ கோர்ட்


3-பிரதமருக்கு இன்று பை-பாஸ் ஆபரேஷன்


4-இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் : தி.மு.க., கோரிக்கை


5-சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., வெளிநடப்பு


6-கருணாநிதி இந்திய அரசுக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்: பா.ம.க.


7-தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறி: உளவுத்துறை எச்சரிக்கை


8-எதிர்காலப் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: அத்வானி


9-இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும்: ஜெயலலிதா


10-ஒபாமாவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து


11-2வது நாளாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


12-அனைத்து தொழிற்சங்கத்தினர் சென்னையில் சாலை மறியல்13-தீவிரவாத தாக்குதல் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை


14-பாகிஸ்தான் உதவியின்றி மும்பை தாக்குதலை நடத்தியிருக்க முடியாது: சுரேஷ் மேத்தா


15-ஏரி, குளங்களை புதுப்பிக்க தமிழகத்துக்கு ரூ. 2182 கோடி உலக வங்கி கடன்

mgandhi
26-01-2009, 04:15 PM
27-1-2009

1-முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி முதல்வர் பூரண நலம்


2-.குடியரசு தின விழா கோலாகலக் கொண்டாட்டம்


3-.இலங்கை வருமாறு தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்ஷ அழைப்பு4-.குடியரசு தினவிழா: தமிழகம் முழுவதும் கோலாகலம்


5-..சத்யம் இயக்குனர்கள் கூட்டம் நாளைக்கு தள்ளிவைப்பு6-.பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அரசுக்கு பாஜக துணை நிற்கும்: அத்வானி7-.பிரதமர் பங்கேற்காத முதல் குடியரசுதினம்8-.திரவ உணவு உண்டார் பிரதமர் மன்மோகன் சிங்9-.சத்யம் நிறுவன மோசடி அளவுக்கு அரசு நிறுவனங்களில் நடைபெற வாய்ப்பில்லை: ஐஓசி தலைவர் நம்பிக்கை


10-.சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன கணக்கில் ரூ. 5000 கோடி மாயம்11-.தாமதமாக வந்ததால் கொடியேற்றும் வாய்ப்பை இழந்த பஞ்சாப் ஆளுநர்12-.29-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்


13-லோக்சபா தேர்தல் அழகிரி ஆலோசனை


14-சேலத்தில் குடியரசு தினத்தை புறக்கணித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


15-விருத்தாசலம் அருகே தண்டவாள விரிசல்: பொதுமக்கள் பார்த்ததால் விபத்து தவிர்ப்பு

அறிஞர்
26-01-2009, 04:19 PM
முதல்வர் கருணாநிதிக்கு என்ன ஆனது... ஏன் ஆஸ்பத்திரி....
-----
பிரதம அமைச்சர் இல்லாத.. முதல் குடியரசு தினம்... மன்மோகன் சிங்க் உடல்நிலை விரைவில் முன்னேறட்டும்.
---------
தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் இருந்தது குறித்து மகிழ்ச்சி..

mgandhi
29-01-2009, 05:23 PM
1-கர்நாடகாவில் பப் கேளிக்கை கலாச்சாரத்தை அனுமதிக்க முடியாது-முதலமைச்சர் எடியூரப்பா

2- காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் கூடியது-பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதம்

3- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

4- நாட்டின் பணவீக்கம் 5.6ல் இருந்து 5.64 சதவீதமாக உயர்வு

5- இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து, சென்னையில் பத்திரிகையாளர் தீக்குளித்து மரணம்

6- சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

7- பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.2, சமையல் எரிவாயு ரூ.25 குறைப்பு-நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

8- பிரதமர் மன்மோகன்சிங் நாளை வீடு திரும்புகிறார்

9- காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது-பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

10- சென்னை உயர்நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு-புதிய பாதுகாப்பு திட்டம் அமலுக்கு வந்தது

11- சென்னையில் உருதுமொழி மாநாடு 31 ஆம் தேதி நடைபெறுகிறது

12- அந்தமானில் நிலநடுக்கம்-5.1 ரிக்டர் அளவு கோலில் பதிவானது.

13 விடுதலைப்புலிகள் பீரங்கிதளம் இலங்கை ராணுவம் கைப்பற்றியதாக அறிவிப்பு

14- முதலமைச்சர் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்

15- ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்-பூபதி ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது

mgandhi
31-01-2009, 04:18 PM
1-2-2009
1-தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவு

2-மங்களூரு "பப்" தாக்குதல் சம்பவம் : 27 பேருக்கு ஜாமீன்

3-ஜெட் விமான எரிபொருள் விலை குறைந்தது

4-மும்பை நட்சத்திர ஓட்டலில் தீவிபத்து


5-தியாகச்செயலை அரசியலாக்குவது பண்பாட்டுக்கு விரோதமானது முதல்வர் கருணாநிதி

6-நடிகர் நாகேஷ் காலமானார்

7-பூந்தமல்லி அருகே அரசு பஸ் தீவைத்து எரிப்பு

8-பிப்., 4ம் தேதி தமிழகம் முழுவதும் *பொது வேலைநிறுத்தம் : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்


9-மன்மோகன்சிங் டிஸ்சார்ஜ் ஆவதில் தாமதம்

10-தேர்தல் ஆணைய பரிந்துரை மீது நடவடிக்கை : பா.ஜ., வலியுறுத்தல்


11-டில்லியில் பனிமூட்டம் : விமான சேவை பாதிப்பு


12-நவீன்சாவ்லாவை பதவிநீக்கம் செய்ய கோபால்சாமி பரிந்துரை


13-இன்குபேட்டரில் தீ : 5 பச்சிளம் குழந்தைகள் பரிதாப சாவு


14-தமிழகத்தில் பிப்., 13ம் தேதி வரை ஜல்லிக்கட்டுக்கு தடை : சுப்ரீம் கோர்ட்


15-வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை வசம் வருகிறது

mgandhi
03-02-2009, 05:17 PM
4-2-2009

1-முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துமனையில் அனுமதி

2-முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி


3-ஒருநாள் தொடரை வென்றது இந்தியா : சொந்த மண்ணில் வீழ்ந்தது இலங்கை


4-நதிநீர் இணைப்பு விழாவில் ரஜினி பங்கேற்க அழைப்பு
5-பெரியகுளம் இலங்கை போர் நிறுத்தம் வலியுறுத்தி விஷம் குடித்த 3 மாணவர்கள்


6-மத்தியஅமைச்சர் மணிசங்கர் கார் மீது கல்வீச்சு


7-தேர்தலுக்கு தயார் : சோரன் பேட்டி


8-இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம்


9-ராஜூவை விசாரிக்க செபிக்கு சுப்ரிம் கோர்ட் அனுமதி

10-ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்கை வாங்கினார் ஷில்பா ஷெட்டி


11-ஆந்திர சட்டசபையில் வெங்கட்ராமனுக்கு இரங்கல் தீர்மானம் : ஒத்திவைப்பு


12-பாகிஸ்தானிடம் இருந்து இதுவரை பதிலில்லை : பிரணாப்


13-பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்:அந்தோணி


14-இலங்கை பிரச்னையை வலியுறுத்தி நெல்லையில் மாணவர் தற்கொலை முயற்சி15-நாளை வழக்கம் போல் பஸ்கள் ஓடும் : டி.ஜி.பி., ஜெயின்

mgandhi
04-02-2009, 05:22 PM
5-2-2009


1- லஞ்சம் வாங்கிய ரா அதிகாரி கைது


2-கவாஸ்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம்


3-லோக்சபா தேர்தலை புறக்கணியுங்கள் : விஜயகாந்த்4-கேரளாவுக்கு மணல் கடத்திய 21 லாரிகள் பறிமுதல்5-தமிழகத்தில் பந்த்தினால் பாதிப்பு இல்லை: டி.ஜி.பி., தகவல்


6-இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம்7-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்கள் ஸ்டிரைக்


8-ஜனாதிபதி உரைக்கு அமைச்சரவை ஒப்புதல்


9-மும்பையில் பொதுமக்கள் திடீர் ரயில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு10-முதல்வர் கருணாநிதிக்கு தசைபிடிப்பை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது


11-திருமங்கலத்தில் ராஜபக்ஷே உருவபொம்மை எரிப்பு : 7 பேர் கைது


12-லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்: போலீஸ் வலை வீச்சு


13-ராமலிங்க ராஜூவை விசாரிக்கிறது செபி

அறிஞர்
04-02-2009, 06:20 PM
4-2-200

4-நதிநீர் இணைப்பு விழாவில் ரஜினி பங்கேற்க அழைப்பு

இது என்ன புது கதையா இருக்கு...
நதி நீர் இணைப்பு பற்றி இப்பொழுது யாரும் பேசுவதில்லை.

mgandhi
05-02-2009, 05:16 PM
6-22009

1-.தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேட முயற்சி: கருணாநிதி


2-இலங்கைப் பிரச்சனை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: தா.பாண்டியன்


3-மும்பை தாக்குதலில் வங்கதேசத்துக்கு தொடர்பு: பாகிஸ்தான் விசாரணையில் தகவல்


4-சத்யம் மோசடி: மேலும் பலர் கைதாகலாம்


5-பணவீக்கம் 5.07 சதவீதமாகக் குறைவு6-மகாராஷ்டிர டிஜிபி ஏ.என்.ராய் நியமனத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்7-சென்செக்ஸ், நிஃப்டி சரிவு


8-சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவராக ஏ.எஸ். மூர்த்தி நியமனம்


9-மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் வரும் 9ம் தேதி திறக்கப்படும்: தமிழக அரசு


10-மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடமிருந்து இதுவரை பதில் ஏதுமில்லை: சிதம்பரம்


.உ.பி.யில் சிறுமி தாக்கப்பட்டது வெட்கக் கேடான விஷயம்: சோனியா


11-ஸ்ரீராம் நிறுவனங்களின் சார்பில் 7-ம் தேதி பாரதி விழா: நடிகை தேவயானி உள்ளிட்ட 3 பேருக்கு "பொற்கிழி'


12-அரசியலில் நுழைகிறார் வினோத் காம்பிளி


13-நயன்தாரா தமிழில் நடிக்க தடை


14-புலிகளை ஆதரித்துப் பேசுவதா? வக்கீல்களுக்கு காங்கிரஸ் கண்டனம்
15-சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு ஏற்றதற்கு ராமகோபாலன் எதிர்ப்பு

mgandhi
06-02-2009, 04:43 PM
7-2-2009

1- தா.பாண்டியன் காருக்கு தீவைப்பு சம்பவம்: ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம்


2-கிரிக்கெட்: சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது


3- சர்வதேச ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: பிளிண்டாப்பை 7.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது


4- வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ் மருத்துவமனை # '


5-வங்கி லாபம் அதிகரிப்பு


6-ராமேஸ்வரம் பகுதியில் கரை ஒதுங்கும் இலங்கை படகுகள்


7-பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி: ஜெர்மனியிடம் வீழ்ந்தது இந்தியா


8-வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்


9-வரும் 27 ம் தேதி காலியான உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல்


10-இலங்கை தமிழர் பிரச்னை: பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் கவலை


11-காதலர் தினத்தன்று கல்யாணம் செய்ய லக்னோவில் போட்டாபோட்டி12-மொகல் கார்டனில் 125 வகை ரோஜா கண்காட்சி : நாளை துவங்குகிறது


13-டாடா நானோ கார் மார்ச் 3ம் தேதி விற்பனைக்கு வருகிறது


14-உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி : பிப்-11ம் தேதி காங்., முடிவு

15-திட்டமிட்டபடி போராட்டம் : இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்

mgandhi
08-02-2009, 04:53 PM
9-2-2009

1-புலிகளுக்கு அனுதாபம் காட்ட முடியாது என்கிறார் பிரணாப் முகர்ஜி

2-செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கத்தை லாலு பிரசாத் துவங்கி வைத்தார்

3-இலங்கையில் போர் நிறுத்த கோரி மலேசியாவில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு

4-இலங்கைத் தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: ஜெயலலிதா


.5-தமிழர்கள் பாதுகாப்பில் கவனம்: இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தல்


6-5வது ஒருநாள் கிரிக்கெட்: 68 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி


7-பாதுகாப்பான பகுதிக்கு பொதுமக்களில் 10 ஆயிரம் பேர் வந்ததாக இலங்கை அரசு தகவல்


8-உள்ளாட்சி இடைத்தேர்தல்; மதிமுக புறக்கணிப்பு: வைகோ


9-நில வரியை ரத்து செய்ய பரிசீலினை: முதல்வர் கருணாநிதி


10-இலங்கை அகதிகளுக்கு பொருள்கள் வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்


11-போர் நிறுத்தம் வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் தீக்குளிப்பு


12-மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைவதற்கு ஆதரவு: பிரகாஷ் காரத் பேட்டி


13-மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: டாக்டர்கள் சங்கம் கண்டனம்


14-இலங்கைத் தமிழர்களுக்காக சீர்காழி ரவிச்சந்திரன் மரணம்: கருணாநிதி இரங்கல்


15-பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு: ராஜ்நாத் சிங்

mgandhi
12-02-2009, 06:09 PM
13-2-2009

1-காங்., கொடிகள் எரிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : தங்கபாலு கோரிக்கை

2-ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடிவு

3-பாக்., அளித்துள்ள விசாரணை அறிக்கை பார்லி.,யில் சமர்பிக்கப்படும் : பிரணாப்

4-உலகின் முதல் குளோனிங் கன்றுக்குட்டி மரணம் : இந்திய விஞ்ஞானிகளின் சாதனை சோகத்தில் முடிந்தது


5-நியூசிலாந்துக்கு எதிரான இந்திய வீரர்கள் தேர்வு சென்னையில் நாளை நடக்கிறது


6-இரண்டாவது நாளாக பங்குச்சந்தையில் சரிவு


7-பாதுகாப்பை பலப்படுத்த எடியூரப்பாவுக்கு சிதம்பரம் வலியுறுத்தல்


8-நொய்டா கொலை வழக்கு : மொனிந்தர்சிங் குற்றவாளி என தீர்ப்பு


9-சென்னை தி.நகரில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றம்

10-பாக்., அறிக்கையை படித்துவிட்டு நடவடிக்கை: வெளியுறவு துறை அமைச்சகம்


11-சத்யம் ஊழலில் நீதி விசாரணை : அத்வானி


வாஜ்பாய் உடல்நலனில் முன்னேற்றம் : எய்ம்ஸ் மருத்துவர்கள்


12-முல்லைப்பெரியாறு விவகாரம் , புதிய நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு


13-இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி திருச்சி ராணுவ அலுவலகம் முற்றுகை

14-நாட்டின் பணவீக்கம் 4.39 சதவீதமாக குறைவு


15-இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் தர்ணா

mgandhi
13-02-2009, 06:03 PM
14-2-2009

1-இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: அத்வானி


2-.சென்செக்ஸ, நிஃப்டி உயர்வு


3-தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள்


4-ராஜபக்ஷவை வழிமொழிந்து இருக்கிறார் குடியரசுத் தலைவர்: பழ.நெடுமாறன்


5-மும்பையில் ஷாருக்கான் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்


6-நியுஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு

.
7-புஷ்ஷுக்கு பாரத ரத்னா: காங்கிரஸ் கோரிக்கை


8-நிதாரி படுகொலைகள்: இருவருக்குத் தூக்கு


9-வோட்டு பட்ஜெட்: பாஜக புகார்


10-வர்த்தக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ஜூட் கிரெக்


11-17-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


12-இலங்கைப் பிரச்னை: மாநிலங்களவையில் எதிரொலிப்பு


13-மும்பை தாக்குதல்: பயங்கரவாதிக்கு காவல் நீட்டிப்பு14-விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் பெரிய மோசடி: மாநிலங்களவையில் பாஜக எம்பி புகார்15-43 புதிய ரயில்கள் அறிமுகம்

mgandhi
14-02-2009, 06:18 PM
15-2-2009
ரயில் தடம் புரண்டதால் விபத்து: 9 சடலங்கள் மீட்பு


.காங்கிரûஸ ஆதரிப்போம்: அடிபணிய மாட்டோம்: அமர்சிங்


."குற்றச்சாட்டுகள் தவறானவை': ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


.ஒரிசாவில் விபத்து: தென் மாநிலங்களுக்கான 6 ரயில்கள் ரத்து


.தொடரும் ரயில் விபத்து: புல்லட் ரயில் சாத்தியமா?


.போலீஸ் பாதுகாப்புடன் காதலர் தின கொண்டாட்டம்: எதிர்ப்புத் தெரிவித்த 600 பேர் கைது


.கர்நாடகத்தில் அமைதியான காதலர் தினம்


.வாஜ்பாய்க்கு சுவாசக் கருவி அகற்றம்


.என்ஜின் மீது ரயில் மோதி 15 பயணிகள் காயம்


.சாலைகளில் பொதுக்கூட்டம்: சிரஞ்சீவி மீது வழக்கு


.நடிகை ஜெயப்பிரதா கார் மீது தாக்குதல்.பிரதமர் அலுவலகம் எதிரே ஒருவர் தீக்குளிப்பு


.இலங்கைத் தமிழர்களுக்கு அத்வானி ஆதரவு

mgandhi
16-02-2009, 05:32 PM
17-2-2009

1-குஜராத்தில் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம்: நரேந்திர மோடி பெருமிதம்


2-தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்


3-209 எஸ்.ஐ.,களுக்கு வரும் 22ம் தேதி எழுத்து தேர்வு


4-ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீண்டும் ஸ்டிரைக்5-பெங்களூரில் பேராசிரியர் குடும்பத்தினர் 3 பேர் மர்ம கொலை


6-சத்யம் நிறுவன தணிக்கை அறிக்கை போன்று உள்ளது மத்திய பட்ஜெட் : பா.ஜ., கருத்து


7-பந்த் நடத்துவது அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை : சுப்ரீம் கோர்ட்தீர்ப்பு

8-சட்டக்கல்லூரியை திறக்கும் விவகாரம்: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


9-டென்னிஸ் ரேங்கிங்: சானியா மிர்சா, ரோகன் போபண்ணா முன்னேற்றம்


10-இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்கு: விரைவில் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


11-கோவில் விழாவிற்கு வந்த யானைக்கு மதம் பிடித்ததால் கேரளாவில் பரபரப்பு

12-தி.மு.க., இளைஞர் அணி சார்பில் 21ம் தேதி இளைஞர் சங்கிலி போராட்டம்


13-மத்திய பட்ஜெட் : பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி


14-இயக்குனர் சீமானை கைது செய்ய, சென்னை விரைந்தது புதுச்சேரி தனிப்படை


15-தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(18-2-2009) தொடங்குகிறது

அமரன்
16-02-2009, 05:34 PM
இணையத்தில் புதினங்களை படிக்க நேரமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் சேவை மிகவும் இன்றியமையாதது. தொடருங்கள் காந்தி அவர்களே.

mgandhi
17-02-2009, 05:34 PM
18-2-2009


1-மைசூரில் நடந்த ஊர்வலத்தில் திடீர் கலவரம்-கண்ணீர் புகை வீச்சு


2-நெல்லையில் டைரக்டர் சீமானை கைது செய்யக்கோரி இளைஞர் காங். மறியல்


3-பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தவர் மரணம்


4-லாலு பிரசாத் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு


5-வாஜ்பாய்க்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை:டாக்டர் ராமதாஸ் உடல்நலம் விசாரித்தார்


6-பாராளுமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை


7-இலங்கை பிரச்சினை: சோனியாவுடன் டாக்டர் ராமதாஸ் சந்திப்பு


8-இலங்கைபிரச்சினை:விஜயகாந்த் தலைமையில் சென்னையில் 20-ந்தேதி பேரணி


9-இலங்கைதமிழர் நல உரிமை பேரவை அமைப்பினர்,ஜனாதிபதியை சந்தித்து மனு


10-இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மனித சங்கிலி


11-ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் 3 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்


12-1,195விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்க விதிக்கப்பட்ட தடைநீக்கம்:ஐகோர்ட்டு


13-தமிழக பட்ஜெட்டால் ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லை: ஜெயலலிதா


14-ராஜபாளையத்தில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: 4பெண்கள் உடல் கருகினர்


15-இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் 8-வது நாளாக ஸ்டிரைக்

இளசு
17-02-2009, 06:38 PM
தொடரும் அரும் சேவைக்கு நன்றியும் பாராட்டும் - காந்தி அவர்களே!

mgandhi
18-02-2009, 05:09 PM
19-2-2009

1-கடல் வழியே அணு ஆயுதம்கடத்தி வர வாய்ப்பு உள்ளது: சுரேஷ் மேத்தா


2-மருத்துவமனையில் புகுந்து நகராட்சி கவுன்சிலர் மீது தாக்குதல்


3-ரூ 1000 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியர் கைது


4-கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் வாலிபர் தீக்குளிப்பு


5-ஆறு மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்


6-சரிவில் இருந்து சற்றே மீண்டது பங்குச்சந்தை


7-சிங்கப்பூர் - மலேசிய தமிழ் நூல்களுக்கு தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கரிகாற்சோழன் விருது


8-ராஜூ சகோதரர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி


9-சிவகங்கையில் பிப்., 21ம் தேதி மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல்10-போரை நிறுத்தும் படி இலங்கைக்கு கட்டளையிட முடியாது : பிரணாப்

11-லோக்சபாவிலிருந்து பா.ம.க., ம.தி.மு.க., வெளிநடப்பு


12-கட்சியில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீக்கம் ...


13-பிரபல ஜவுளிக்கடைகளில் வருமான வரி சோதனை


14-சத்யம் விவகாரம் குறித்து லோக்சபாவில் நாளை விவாதம்


15-விடுதலைப் புலிகள் பற்றிய பிரணாப் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் அமளி

mgandhi
19-02-2009, 05:01 PM
20-2-2009
Ø 1-மதுரை கோர்ட் வளாகத்தில் ஜப்தி செய்யப்பட்ட பஸ்சுக்கு தீ வைப்பு

Ø 2-நீதிபதி, வக்கீல்கள், போலீசார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதி


Ø 3-ஆம்புலன்சில் வந்து சந்திக்கத் தயார்: நீதிபதிக்கு கருணாநிதி கடிதம்


Ø 4-மோதல் எதிரொலி: சென்னை ஐகோர்ட்டுக்கு நாளை விடுமுறை


Ø 5-மதுரை கோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல்


Ø 6-சென்னை வக்கீல்கள் மோதல் : சி. பி.ஐ., விசாரிக்க உத்தரவு


Ø 7-சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் - போலீசார் மோதல்: தடியடி


Ø 8-சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு


Ø 9-கோவையில் வக்கீல்கள் போராட்டம் : போலீஸ் வேன் உடைப்பு


Ø 10-மதுரையில் வக்கீல்கள் கோர்ட் கேட்டை பூட்டினர்


Ø 11-காங்கிரசில் இணைந்தார் அசாருதீன்


Ø 12-மகாராஷ்டிர அமைச்சரவையில் ரானேவுக்கு மீண்டும் வாய்ப்பு ?

Ø 13-பிரணாப் பேச்சு இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதற்கு ஆதாரம்


Ø 14-சொத்துவரி உயர்யை கண்டித்து கடையநல்லூரில் கடையடைப்பு


Ø 15-பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும் : பிரணாப்

mgandhi
21-02-2009, 05:50 PM
22-2-2009

1) சென்னை மனித சங்கிலியில் திடீர் தீக்குளிப்பு

2) திருப்பூர் மாவட்டம் 22 ம் தேதி உதயம் துவக்கவிழா


3) மேலும் 2 நாட்கள் கோர்ட்டுகளை மூட உத்தரவு

4) போர் மூலம் இலங்கையில் அமைதி கிடைக்காது: பிரணாப் முகர்ஜி


5) மருத்துவமனையில் இருந்து நெல்லை கால்வாய் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார்


6) தி.மு.க., மனிதசங்கிலி போராட்டம் : கண்துடைப்பு என பா.ஜ., குற்றச்சாட்டு


7) பெங்களூருவில் இரண்டரை கிலோ ஹெராயின் பறிமுதல்

8) அலிகார் கோர்ட் வளாகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை


9) அத்வானியுடன் முல்போர்டு சந்திப்பு

10) குஜராத்தில் ஹெபாடிடிஸ்-பி நோயால் பலியானோர் எண்ணிக்கை உயர்வு


11) சென்னை ஐகோர்ட் மோதல் துரதிர்ஷ்டவசமானது : கே.ஜி.பாலகிருஷ்ணன்


12) விஜயவாடா காங்கிரஸ் பிரமுகர் மகளுடன் தற்கொலை13) சினிமா இயக்குனர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைப்பு


14) பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு

mgandhi
22-02-2009, 04:24 PM
23-2-2009

1-வக்கீல்கள்-போலீசார் மோதல் போக்கை கைவிடாவிட்டால்
ஆஸ்பத்திரியில் உண்ணாவிரதம் இருப்பேன்: கருணாநிதி அறிவிப்பு

2-சேலம் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

3-சங்கரன்கோவிலில் அரசு விழா பந்தல்-மேடை அடித்து நொறுக்கப்பட்டது

4-பாராளுமன்ற தேர்தல் எப்போது?: தேர்தல் கமிஷன் இறுதி கட்ட ஆலோசனை

5-ஆஸ்கார் விருதுகள் நாளை அறிவிப்பு: ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது கிடைக்க இந்தியர்கள் ஆர்வம்


6-செல்போனில் முகம் பார்த்து பேச உதவும் `3ஜி' சேவை திட்டம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்

7-ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்


8-இந்திய மருத்துவ குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்


9-கோவை ஜெயிலில் கைதிகள்-வார்டன்கள் மோதல்: 5பேர் படுகாயம்10-மனித சங்கிலியில் தீக்குளித்த தி.மு.க. பிரமுகர் உடலுக்கு அமைச்சர் அன்பழகன் அஞ்சலி


11-தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு: வைகோ இரங்கல்


ஜுன் 15-ந் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் 2 ஆக பிரிக்கப்படும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி


12-சி.பி.ஐ. விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அனுப்பி விட்டோம்: போலீஸ் கமிஷனர் தகவல்


13-கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு நீர்ப்பாசன பகுதி ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: மந்திரி தகவ


14-கன்னியாகுமரி மினி மராத்தான் போட்டியில் ஊட்டி வீரர் முதலிடம்


15-ரூ. 14,084 கோடி கல்விக் கடன்- ப. சிதம்பரம்

mgandhi
24-02-2009, 04:49 PM
25-2-2009

.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு


..புதியதாக 4 நகரங்களில் ஐஏஎஸ் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்


.பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்


.இலங்கையில் 48 மணி நேர போர்நிறுத்தம் காங்கிரஸ் அரசின் முயற்சியால் சாத்தியமானது: பீட்டர் அல்போன்ஸ்


.தமிழகத்தில் ராஜபட்சேவின் ஏஜெண்டுகள்: பாமக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு


.சென்செக்ஸ், நிஃப்டி சரிவு


.கன்னியாகுமரி அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200 லிட்டர் டீசல் பறிமுதல்


.வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்ப அன்பழகன் வேண்டுகோள்


.மும்பை தாக்குதல் சம்பவம்: நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்


.தீவிரவாத கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்


.சென்னை உயர்நீதிமன்றம் நாளை முதல் செயல்படும்


.வேட்பாளர் தேர்வுக் குழுவினருடன் சோனியா இன்று ஆலோசனை


.கீழ் நீதிமன்றங்கள் நாளை முதல் செயல்படும்


.வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல்: சேதத்தை மதிப்பிட குழு


.சென்னை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை


.மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

mgandhi
26-02-2009, 04:47 PM
27-2-2009

(1) .வெளிநாடுகளில் வேலை இழந்த 20,000 இந்தியர்கள் நாடு திரும்பினர்(2) .ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு(3) .மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு(4) .சரிந்து மீண்டது சென்செக்ஸ்(5) .டாடாவின் நானோ கார்: மார்ச் 23}ல் தொடக்கம்(6) .பாகிஸ்தானுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்: மோடி
(7) .பால் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி(8) .வங்கதேச கிளர்ச்சியால் நமது எல்லைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: சிதம்பரம்(9) .உயர் நீதிமன்ற வன்முறை குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்(10) .புதிய தலைமை நீதிபதி கோகலே மார்ச் 9-ல் பதவியேற்பு(11) .அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் எங்களது நிலை குறித்து பரிசீலிப்போம்: தா. பாண்டியன்
(12) .மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் திடீர் ராஜிநாமா(13) .கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட், தொப்பிகளை பிரசாரத்தில் பயன்படுத்த தடை(14) .திருவாரூர் - நாகூர் அகலப் பாதையில் நாளை முதல் ரயில் சேவை(15) .இலங்கை மீது பொருளாதாரத் தடை: கி. வீரமணி வலியுறுத்தல்

அறிஞர்
26-02-2009, 04:50 PM
27-2-2009
(1) .வெளிநாடுகளில் வேலை இழந்த 20,000 இந்தியர்கள் நாடு திரும்பினர் பொருளாதாரம் எல்லா இடங்களிலும் சீரடையவேண்டும்.


(6) .பாகிஸ்தானுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்: மோடி
எப்படி பாடம் புகட்ட போகிறார்.. வகுப்பறையில் வைத்தா.

(11) .அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் எங்களது நிலை குறித்து பரிசீலிப்போம்: தா. பாண்டியன் கிடைக்க போகிற சில சீட்டுகளுக்காக அவர் பாடு திண்டாட்டம் தான்.

mgandhi
27-02-2009, 04:08 PM
பொருளாதாரம் எல்லா இடங்களிலும் சீரடையவேண்டும்.
எப்படி பாடம் புகட்ட போகிறார்.. வகுப்பறையில் வைத்தா.
கிடைக்க போகிற சில சீட்டுகளுக்காக அவர் பாடு திண்டாட்டம் தான்.

நன்றி அறிஞர்

mgandhi
27-02-2009, 04:09 PM
28-2-2009

1) ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் சிறிலங்கா : தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கண்டனம்


2) அ.*தி.மு.க.*வி*ல் சே**ர்*ந்தா*ர் ராஜ க*ண்ண*ப்ப*ன்


3) ப*ணி*க்கு *திரு*ம்பு*ங்க*ள் : வழ*க்க*றிஞ*ர்களு*க்கு *தி.மு.க. வேண்டுகோள்


4) கட்சியினர் மீது பொய் வழக்கு போட முயற்சி: டி.*ஜி.*பி.*க்கு சரத்குமார் கடித*ம்


5) உ*ச்ச *நீ*திம**ன்ற**த்*தி*ல் கு*ட்டு*ப்ப*ட்ட அ.தி.மு.க : கருணாநிதி


6) காவ*ல்துறையை க*ண்டி**த்து வைகோ, நெடுமாறன் ஆர்ப்பாட்டம்


7) ஈழ*த் த*மிழர்களு*க்காக வேலூ*ரி*ல் தே.மு.*தி.க. *நி*ர்வா*கி ஒருவ*ர் தீ*க்கு**ளி*ப்பு


8) தி.மு.க.வில் இரு*ந்து உய*ர் *நீ*திம*ன்ற வழ*க்க*றிஞ*ர்க*ள் சங்க தலைவர் *விலக*ல்


9) தகவல் தொடர்பு*த்துறை அமைச்சராக பதவி ஏற்றார் பூ*ங்கோதை


10) வழ*க்க*றிஞ*ர்க*ள் கரு*ப்பு பே*ட்*ஜ் அ*ணி*ந்து உ*ண்ணா*விரத*ம்


11) செ*ன்னையை கல*க்*கிய கொ*ள்ளைய*ர்க*ள் 4 பே*ர் கைது


12) சென்னை-மதுரை இடையே சிறப்பு இரயில்கள்


13) காவ*ல*ர்களை பழிவாங்குவேன் என்று பேசியதாக வழக்கு: ஜெயலலிதாவுக்கு *நீ*திம*ன்ற*ம் தா*க்*கீது14) தமிழினப் படுகொலையை கண்டித்து மாவ*ட்ட*ந்தோறு*ம் உண்ணாவிரதம்: விஜயகாந்த்

15) தலைமை தேர்தல் ஆணையரு*க்கு ஜெயலலிதா கடிதம்: தே*ர்த*ல் தவறுக*ள் ச*ரி செ*ய்ய வ*லியுறு*த்த*ல்

16) அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு : கருணாநிதி

அய்யா
27-02-2009, 04:14 PM
செய்திகளுக்கு நன்றி அண்ணா..!

_________ நேற்று வந்தவன்!

அறிஞர்
27-02-2009, 04:19 PM
28-2-2009
2) அ.*தி.மு.க.*வி*ல் சே**ர்*ந்தா*ர் ராஜ க*ண்ண*ப்ப*ன்
இப்படி கட்சி மாறுவார் என்றறிந்தே... பதவியேதும் திமுக தரவில்லையோ..


4) கட்சியினர் மீது பொய் வழக்கு போட முயற்சி: டி.*ஜி.*பி.*க்கு சரத்குமார் கடித*ம்
கட்சியினரா...14) தமிழினப் படுகொலையை கண்டித்து மாவ*ட்ட*ந்தோறு*ம் உண்ணாவிரதம்: விஜயகாந்த்
கட்சியை மக்களுக்கு காட்ட போராட்டங்கள்


16) அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு : கருணாநிதி
தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது.

mgandhi
27-02-2009, 04:24 PM
கிய்திக்கு நன்றி அறிஞர்

mgandhi
28-02-2009, 04:36 PM
1-3-2009

(1) போர்முனையில் தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

(2) மு. க., ஸ்டாலின் - ஏ. ஆர்., ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

(3) இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு


(4) தூத்துக்குடியில் வை.கோ., உள்ளிட்ட 2 ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் கைது


(5) காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்: வக்கீல்கள் சங்கம்


(6) முதல்வர் நாளை காலை வீடு திரும்புகிறார்

(7) போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு வக்கீல்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா வேண்டுகோள்

(8) சென்னை ஐகோர்ட் தாக்குதல்: அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது காவல்துறை


(9) ஒரிசாவில் 2 ரயில் நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு(10) பொருளாதார வளர்ச்சி பின்னடைவு குறித்து பிரணாப்-ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு


(11) ஆந்திர முதல்வர் உட்பட 9 பேர் மீது ஊழல் வழக்கு

(12) லோக்சபா தேர்தல் : காங்., வேட்பாளர் பட்டியல் மார்ச் 15ல் வெளியிடப்படும்


(13) ஆந்திர முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு


(14) திமுக கூட்டணியில் பாமக: காங்கிரஸ் தீவிர முயற்சி

mgandhi
01-03-2009, 04:43 PM
1- அ. தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைப்பு2- சோனியாகாந்தியுடன் முலாயம்சிங் சந்திப்பு3- பாராளுமன்ற தொகுதி பங்கீடு கூட்டணி கட்சியினருடன் பேச தி.மு.க. குழு4- போர் நிறுத்தம் செய்யும்படி, இலங்கை அரசுக்கு பிரணாப் முகர்ஜி மீண்டும் வற்புறுத்தல்5- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் எச்சரிக்கை6- சுப்ரீம் கோர்ட்டு சொல்லும் பாதையில்சேதுசமுத்திரதிட்டத்தை நிறைவேற்றுவோம்: டி.ஆர்.பாலு7- பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் 15-ந் தேதி வெளியிடப்படும்: வெங்கையநாயுடு8- சிகிச்சை முடிந்து வாஜ்பாய் வீடு திரும்பினார்
9- தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.12 1/2 கோடி போதை பொருள் சிக்கியது10- எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம்: வைகோ வேண்டுகோள்11- அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தொகுதி பங்கீட்டுக்குழு: ஜெயலலிதா அறிவிப்பு12- தலைமை தேர்தல் ஆணையர் கோரிக்கை நிராகரிப்பு: பா.ஜனதா கண்டனம்


13- ஐகோர்ட்டு மோதல் சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தொடங்கியது14- ஐகோர்ட்டில் நடந்த மோதல்: ஜெயலலிதா அறிக்கை15- சென்னை ஐகோர்ட்டு மோதல் சம்பவம்: விசாரணை முடிந்தது

mgandhi
02-03-2009, 04:37 PM
3-3-2009


(1) .மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 16 முதல் மே 13 வரை


(2) வாக்கு எண்ணிக்கை மே 16; தமிழகத்தில் மே 13ம் தேதி வாக்குப்பதிவு


(3) தமிழகத்துக்கு ஒரு கட்டமாக தேர்தல்(4) .தேர்தல் கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரம்(5) .வைகோ ஜாமீனில் விடுதலை


(6) திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி(7) ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
(8) .சீன பொம்மைகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம்(9) நாடாளுமன்ற தொகுதி பங்கீடு: கூட்டணி கட்சியினருடன் பேச தி.மு.க. குழு அமைப்பு
(10) .சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு
(11) .மார்ச் 12ல் மூன்றாவது அணி தொடக்கம்: தேவகௌட
(12) .இலங்கையுடன் இனி கிரிக்கெட் விளையாடக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை
(13) .பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கின
(14) .விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதல்
(15) .தமிழின துரோகங்களுக்கு கருணாநிதியும் உடந்தை: வைகோ குற்றச்சாட்டு(16) ."தலைவர்களின் உருவப்பட எரிப்பு கூடாது': கருணாநிதி

mgandhi
04-03-2009, 05:25 PM
5-3-2009

(1) உள்நாட்டு பாதுகாப்பு பற்றி மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம் ஆலோசனை(2) இலங்கை பிரச்சினையில் இந்தியா வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்(3) மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு(4) தேர்தல் முடிவு வந்த பிறகுதான் 3-வது அணி உருவாகும்: தேவேகவுடா பேட்டி(5) விசேஷ ரெயில்களை ஓட்டலாமா? தேர்தல் கமிஷனுக்கு ரெயில்வே துறை கடிதம்(6) ஓட்டு போட விரும்பாதவர்கள் எழுத்து மூலம் தெரிவிக்கலாம்: நரேஷ்குப்தா(7) அத்வானியின் பிரதமர் கனவு பலிக்காது: லாலு சொல்கிறார்(8) ரேடியோவில் அரசின் விளம்பரத்துக்கு தடை(9) 20 ஆயிரம் போலீசாரை வேலையில் சேர்க்க உத்தரவு: உத்தரபிரதேச ஐகோர்ட்டு பிறப்பித்தது


(10) "பாராளுமன்ற தேர்தலில் யாரும் பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது'': வைகோ பேட்டி(11) அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்குமா? டாக்டர் ராமதாஸ் பதில்(12) தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


(13) தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


(14) உ.பி.யில் காங்கிரஸ் தனித்து போட்டி:24 தொகுதி வேட்பாளர்களை அறிவித்ததுஇலங்கையில் போரை நிறுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் நடை பயணம்

mgandhi
06-03-2009, 05:18 PM
7-3-2009


1- தங்கபாலு - தே.மு.தி.க., இளைஞரணி செயலருடன் சந்திப்பு2- லஞ்சம் வாங்கிய துணைதாசில்தார் உட்பட 2 பேர் கைது

3- ஆப்கானில் கொல்லப்பட்ட சைமன் சொந்த ஊரில் உடல் அடக்கம்
4- காங்கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணி முறிந்தது
5- இலவச டிவி அறைகளுக்கு சீல் வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
6- சென்னையில் நடிகர்கள் கிரிக்கெட்
7- சென்னை ஐகோர்ட் மோதலுக்கு வக்கீல்களே காரணம்; போலீசாரும் அத்து மீறியுள்ளனர்: நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை
8- பெங்களூருவில் விமான விபத்து
9- அணுமின் நிலைய மின்உற்பத்தியில் 50 சதவீதம் தமிழகத்துக்கு:ரஷ்ய அதிகாரிகள்
10- நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் பால்தாக்கரே
11- ஜெயலலிதா உண்ணாவிரதம் மார்ச் 9ம் தேதிக்கு மாற்றம்
12- ஓட்டு எண்ணிக்கை அன்று கிரிக்கெட் *போட்டி கிடையாது : மோடி
13- சீமானுக்கு 20ம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு
14- ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை : சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை15- ஐ.பி.எல்., போட்டிகள் தேதிகளை மாற்ற வேண்டியது அவசியம் : சிதம்பரம்

mgandhi
11-03-2009, 06:01 PM
12-3-2009
1-கொளத்தூர் மணி மீது தேசிய பாதுபாப்புச் சட்டம் பாய்ந்தது

2-கிரிமினல் குற்றவியல் சட்ட திருத்தம் அமலுக்கு வராது: மத்திய அரசு

3-ராஜபக்சேவுக்கு வட்டியும் முதலுமாக கொடுப்போம்: வைகோ

4-ஒரிசாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நவீன் பட்நாயக் வெற்றி

5-இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: விஜயகாந்த்

6-மத சுதந்திரத்தின் பெயரால் பிற மதங்களை அவமதிக்க கூடாது: பிரதமர்

7-தி.மு.க.-காங்கிரஸ் வக்கீல்கள் இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?: கி.வீரமணி

8-பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்துக்கு இந்திய கமான்டோ பாதுகாப்பு

9-வக்கீல்கள்-போலீசார் மோதல்: 3 நீதிபதிகள் ஐகோர்ட்டில் இன்று விசாரணை

10-ஐ.பி.எல். கிரிக்கெட் பாதுகாப்புக்கு மாநில அரசுகளே முழு பொறுப்பு

11-கதாநாயகி நடிகை காமெடி நடிகையாக ஆகிவிட்டார் : ஜெயலலிதா மீது கருணாநிதி கடும் தாக்கு

12-ம.தி.மு.க.வில் இருந்து மு.கண்ணப்பன் விலகல்

13-திரட்டப்பட்ட நிதியை செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்குகிறது அ.இ.அ.தி.மு.க

14-தி.மு.க.வில் எம்.பி. சீட் கேட்டு 530 பேர் விண்ணப்பம்

15-நடுக்கடலில் படகு மூழ்கியது: புதுச்சேரி மீனவர்கள் தப்பினர்

mgandhi
14-03-2009, 05:14 PM
15-3-2009

15-3-2009

1) தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற சசிகலா ராமேஸ்வரத்தில் பூஜை2) கூ*ட்டண*ி பே*ச்சு : பா.ஜ.க.*வி*ல் குழு அமை*ப்பு3) ஆட்சிக்கு வந்தால் 10,000 ரூபாய்க்கு லேப்-டாப் : அத்வானி அதிரடி
4) அரசு *நி*ர்வாக*த்தை கவ*னி*க்க கருணா*நி*தி*க்கு நேரமே இ*ல்லை: ஜெயல*லிதா கு*ற்ற*ச்சா*ற்று5) பி.காம், எம்.ஏ தொடர்பு வகுப்புகள் த*ள்*ளிவைப்பு6) *அனை*த்து நீ*திம*ன்ற*ங்களுக்கு செ*ன்னை உய*ர் *நீ*திம*ன்ற*ம் உத்தரவு7) தி.மு.க. எ*ங்களுட*ன் தொடர்பு கொள்ளவில்லை: ராமதாஸ் ப*தி*ல்8) உய*ர் **நீ*திம*ன்ற மோ*த*ல்: 20ஆ*ம் தே*தி*க்கு*ள் ப*தி*ல் அ*ளி*க்க த*மிழக அரசு*க்கு உ*த்தரவு


9) கூட்டணி: திருமாவளவன் முடிவு செய்வார்


*
10) கொளத்தூர் மணி, சீமான் மீதான வழக்கை *திரு*ம்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்11) கூடுத*ல் த*மிழக தலைமை அ*திகா*ரியாக ச**த்*தியகோபா*ல் *நியமன*ம்12) செ*ன்னை*யி*ல் வழ*க்க**றிஞ*ர்*க*ள் த*ர்ணா போரா*ட்ட*ம்13) ம.தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலர் கட்சியிலிருந்து விலகல்14) வேலூ*ரி*ல் **நீ*திம*ன்ற**த்*தி*ல் *தி.மு.க. - வழ*க்*க*றிஞ**ர்க*ள் மோத*ல்15) வ*ன்முறையை க*ட்ட*வி*ழ்*த்து *விடுவது கருணா*நி*தி*க்கு கைவ*ந்தகலை: ஜெய*ல*லிதா


16) ம.*தி.மு.க.வை *பி*ரி*க்க கருணா*நி*தி ச*தி: வைகோ கு*ற்ற*ச்சா*ற்று17) *தி.மு.க. கூ*ட்ட*ணி**க்கு தே.மு.*தி.க. வ*ந்தா*ல் வரவே*ற்போ*ம்: கருணா*நி*தி

mgandhi
18-03-2009, 05:46 PM
19-4-2009


1-.ஜார்கண்டில் லாலுவுக்கு 2 தொகுதிகள்: காங்கிரஸ் பதிலடி


2-.பாஜகவுடன் சேருவதுதான் விஜயகாந்த்துக்கு நல்லது: இல. கணேசன்


3-.ஜூன் 4ல் நடிகர் ஜெயம் ரவி திருமணம்


4-.கிரிக்கெட் டெஸ்ட்: 279 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து


.லாலு கட்சியுடன் சமரசம் இல்லை: காங்கிரஸ்


5-.வருண் காந்திக்கு சிவசேனா ஆதரவு


6-.மேகாலய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி


7-விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: 3 நாட்களில் ராணுவத்தினர் 600 பேர் பலி


8-.சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு


9-.இலங்கை ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 84 பேர் பலி


10-.கேரளாவில் போலி தபால் தலைகள் கண்டுபிடிப்பு


11-.வழக்கறிஞர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்


12-.இலங்கை போரில் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்க ஐ.நா. வலியுறுத்தல்


13-.தாக்குதலில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு


14-.சமையல் எண்ணெய் ஏற்றுமதி தடை: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு


15-.காந்தி பயன்படுத்திய பொருள்களை மீட்பதில் சிக்கல்

அறிஞர்
18-03-2009, 06:06 PM
லல்லூ-பஸ்வான்.. கூட்டணி.. காங்கிரஸுக்கு தலைவலி போல...

mgandhi
18-03-2009, 06:44 PM
http://www.tamilmantram.com/vb/customavatars/avatar93_2.gif
நன்றி

mgandhi
20-03-2009, 05:51 PM
மின்சாரப் பற்றாக்குறையால் தமிழகத்திற்கு பின்னடைவு: ஓ. பன்னீர்செல்வம்


2- .வருண் காந்திக்கு ஜாமீன் வழங்கியது தில்லி உயர்நீதிமன்றம்


3- .ஹாமில்டன் டெஸ்ட்: சச்சின் அபாரம்


4- .சரிவில் முடிந்தது சென்செக்ஸ்


5- .சத்யம் ராஜுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு


6- .இலங்கை ராணுவத் தாக்குதலில் பொதுமக்களில் 38 பேர் பலி


7- .இலங்கையில் தொண்டு நிறுவன ஊழியர் பலி: ஐ.நா. கண்டனம்


8- .ஈழப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு: ஆஸ்திரேலியா வலியுறுத்தல்


9- .வெற்றியை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்: காங்கிரஸýக்கு ஆர்ஜேடி, எல்ஜேபி கோரிக்கை


10- .உ.பி.யில் 80 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் மாயாவதி


11- .கடைசி தேர்தல்: பிரணாப் முகர்ஜி


12- .செ.கு.தமிழரசன், சேதுராமன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு


13- .திமுக வேட்பாளர் தேர்வு: நேர்காணல் ஏப்.2-க்கு தள்ளிவைப்பு


14- .சாலை விபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி காயம்


15- .அரிசி, சர்க்கரை விலை குறைந்தது


16- .ஓய்ந்தது வழக்கறிஞர்கள் போராட்டம்

பாரதி
06-04-2009, 06:20 AM
இத்தாலியில் பூமி அதிர்ச்சி!

இன்று காலை இத்தாலி நாட்டின் ரோம், அபுர்ஜோ மற்றும் மத்திய இத்தாலி பகுதிகளில் ரிச்டர் அளவுகோலில் 5.8 அளவுள்ள பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்ததாகவும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

பாரதி
01-06-2009, 02:15 PM
சுமார் 228 பயணிகளுடன் (216 பயணிகள் + 12 விமான ஊழியர்கள்) பிரேசிலின் ரியோ டீ ஜெனீரோ நகரிலிருந்து பாரீஸிற்கு வந்து கொண்டிருந்த ஏர் பிரான்ஸின் ஏர்பஸ் A330-220 ரக ஜெட் விமானமான AF 447 பிரேசில் கடல்பரப்புக்கு மேலே மாயமாகியுள்ளது. சிவில் மற்றும் இராணுவ ரேடார்களில் இருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. விமானத்தில் இருக்கும் எரிபொருள் இந்த சமயத்தில் தீர்ந்திருக்கும் என்றும் மோசமான செய்தியை எதிர்நோக்குவதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக இணையதள செய்திகள் கூறுகின்றன..

விமானத்திலிருந்து முதலில் மிக மோசமான வானிலையை கடந்ததாகவும், அதன் பின்னர் மின்சார இணப்பில் கோளாறு ஏற்பட்டதாகவும் செய்திகள் பெறப்பட்டனவாம். விமானத்தில் ஏழு குழந்தைகளும் பயணம் செய்திருக்கிறார்கள்.

மதி
02-06-2009, 09:14 AM
இந்த செய்தியை திரியாய் போடலாம் என்று நினைத்திருக்கையில் "காணவில்லையை" இப்போது தான் பார்த்தேன். நேற்றிரவு ரேடாரில் இருந்து காணாமல் போன விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானத்தில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 228 நபர்கள் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ப்ரேசில் மற்றும் ப்ரான்ஸ் நாட்டின் கடற் படை அட்லாண்டிக் கடலில் தீவிரமாக தேடுதல் வேட்டையில். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய விபத்து இது.

http://edition.cnn.com/2009/WORLD/americas/06/02/brazil.france.plane.missing/

பாரதி
02-06-2009, 09:22 AM
நேற்று பிரேசிலின் விமானம் ஒன்றை குறிப்பிட்ட விமானப்பாதையில் இயக்கிய விமானி ஒருவர், கடலில் ஆரஞ்சு நிறத்தில் ஏதோ தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்ததாக தகவல் தந்திருக்கிறார். அவர் குறிப்பிடும் நேரமும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போன நேரமும் ஒன்று என்பதால் மின்னல் தாக்கி விமானம் எரிந்து கடலில் விழுந்திருக்கும் என்று கருதுகிறார்கள்.

பாரதி
04-06-2009, 12:49 PM
விபத்திற்குள்ளான ஏர் ஃபிரான்ஸ் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கக்கூடுமென ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் ஐயம் தெரிவித்துள்ளார்.

விபத்து நடப்பதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாக அர்ஜெண்டினாவில் இருந்து பிரான்ஸ் செல்லும் விமானம் குறித்து மிரட்டல் தொலைபேசியில் வந்திருக்கிறது. குண்டு வெடிப்பின் காரணமாகவே, அவசர அழைப்பு ஏதும் தந்திருக்க இயலாது என்றும் கடலில் பல மைல்கள் தூரத்திற்கு விமான பாகங்கள் தென்படுவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

விமானத்தின் கருப்புப்பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி
10-07-2009, 05:13 PM
அன்பு நண்பர்களே,

2 AQ மற்றும் 8 AC வரிசைகளில் வெளியிடப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டாம். இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்த சிலரிடமிருந்து இந்த வரிசையில் போலியான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாம். ஆகவே கவனமாக இருங்கள்.

பாரதி
03-09-2009, 03:50 AM
நேற்று ஆந்திர முதல்வர் இராஜ சேகர ரெட்டி பயணம் செய்த உலங்கு வானூர்தி என்ன ஆனது என்று தெரியாமல் நேற்றிலிருந்து பலரும் கலக்கத்திருந்தார்கள்.

இப்போது அவர் பயணம் செய்த ஊர்தி கர்நூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தொலைவில் மலை உச்சியில் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்னும் சற்று நேரத்தில் அந்த இடத்தை அடைந்து விட முடியுமென்றும் கூறுகிறார்கள்.

தமிழநம்பி
03-09-2009, 04:17 AM
நன்றி பாரதி!

இளசு
03-09-2009, 07:05 AM
திரு ராஜசேகர ரெட்டியும் உடன் பயணித்த நால்வரும் மரணம் அடைந்துவிட்டதாகச் செய்தி.

வானூர்தியின் தரக்குறைவு - காரணமாய் இருக்கலாம்.

அனைவருக்கும் அஞ்சலிகள்.

மஞ்சுபாஷிணி
03-09-2009, 07:08 AM
திரு ராஜசேகர ரெட்டியும் உடன் பயணித்த நால்வரும் மரணம் அடைந்துவிட்டதாகச் செய்தி.

வானூர்தியின் தரக்குறைவு - காரணமாய் இருக்கலாம்.

அனைவருக்கும் அஞ்சலிகள்.

இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்...

சிவா.ஜி
03-09-2009, 07:27 AM
எதிர்பாரா விபத்தில் மரணமடைந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

aren
03-09-2009, 07:39 AM
ராஜசேகர ரெட்டி மற்ற இறந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வானிலை சரியில்லாமல் இருந்தது காரணம் என்கிறார்கள்.

கலைவேந்தன்
03-09-2009, 08:27 AM
வருந்தத்தக்க செய்தி. அன்னாருக்கு எனது அஞ்சலிகள்...!

பாரதி
03-09-2009, 04:22 PM
தற்காலிக ஆந்திர முதலமைச்சராக, நிதியமைச்சராக இருந்து வந்த ரோசையா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பாரதி
04-09-2009, 01:53 PM
இராஜ சேகர ரெட்டியின் அகால மரணச்செய்தி அறிந்து, ஆந்திர பிரதேசத்தில் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை - இதுவரை 60க்கும் மேலே!:frown:

பாரதி
17-01-2010, 07:25 AM
முதுபெரும் தலைவர் ஜோதிபாசு இன்று நண்பகல் காலமானார். அவருக்கு வயது 96. கடந்த ஒன்றாம் தேதி முதல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலை நேற்றிலிருந்து மோசமடைந்து உடல் உறுப்புகள் செயலிழக்கத்துவங்கின.

23 வருடங்கள் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வராக பணிபுரிந்து, தாமாகவே பதவியில் இருந்து விலகியவர் ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கட்சி ஆரம்பித்தது முதல் அரசியல் தலைமைக்குழுவில் அங்கம் வகித்தவர்.

முதல்வராக இருந்தாலும் வீட்டில் அன்றாடப்பணிகளை தாமே செய்து வந்தவர்! எந்த நேரத்திலும் எளிமையை கைவிடாதவர். மக்கள் பணியை விரும்பி செய்து வந்தவர். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் தாராளமாக ஜோதிபாசுவை கைகாட்டலாம்.

அவரது மறைவு மேற்குவங்க மக்களுக்கு மட்டுமல்ல், இந்திய மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

அவருக்கு எனது வணக்கம்.

சிவா.ஜி
17-01-2010, 07:37 AM
சிவப்புச் சிந்தனையில் சிம்பிளான கிரேட் மேன்....நல்ல ஆன்மா அமைதியாய் உறங்க பிரார்த்தனைகள்.

பாரதி
17-01-2010, 04:20 PM
ஜோதிபாசு அவர்களின் விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன! அவர் மறைந்த சற்று நேரத்தில் அவரது கண்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. மற்ற அரசியல் தலைவர்கள் போலன்றி அவர் தனது உடலையும் தானம் செய்துள்ளார்!!

”இந்த வயதான காலத்தில் எனது உடல் உறுப்புகள் யாருக்கேனும் மாற்று அறுவைசிகிச்சை மூலம் மாற்ற பயன்படுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் மருத்துவசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் இது உதவக்கூடும்” என ஜோதிபாசு குறிப்பிட்டிருக்கிறார்.

இறக்கும் முன்பும், பின்பும் - மண்ணிற்கு, பொன்னிற்கு, குடும்பத்திற்கு என அலைந்த, அலையும் அரசியல்வாதிகள் மத்தியில்... ஜோதிபாசு அவர்கள் தன்னிகரற்றவர், தன்னலமற்றவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஜனகன்
17-01-2010, 09:59 PM
இது பற்றி நானும் நியூஸ் பார்த்தேன். உண்மையில் அவர் ஒரு உத்தமர். அவரது ஆத்மா சாந்திக்கு வேண்டுகின்றேன்.

muthuvel
18-01-2010, 06:36 AM
இது பற்றி நானும் நியூஸ் பார்த்தேன். உண்மையில் அவர் ஒரு உத்தமர். அவரது ஆத்மா சாந்திக்கு வேண்டுகின்றேன்.

சென்னை: தொழில்போட்டி காரணமாக பிஜூ தீவில் 2 தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இவரது கொலைக்கு காரணமான தமிழர் உள்பட இந்தியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36 ) . இவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் வசித்து வந்தார். இவரும் முகப்பேரில் வசித்து வந்த ராஜமாணிக்கமும் இணைந்து பிஜூ தீவில் ஏற்றுமதி தொழில் செய்து வந்தனர். அங்குள்ள நபூவா என்னும் பகுதியில் புளு வேவ்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்தினர். இங்கு தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டு பிஜீ தீவில் நிரந்தர குடியுரிமை பெற்ற ரவி என்பவர் மானேஜராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கமாக சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொள்ளும் இருவரும் திடீரென அதாவது கடந்த டிசம்பர் மாதம் 14 ம் தேதி முதல் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்கள் ஜி.கே., வாசன், மு.க., அழகிரி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரிக்குமாறு உத்தரவிட்டனர்.
சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட பிணங்கள் : ராமகிருஷ்ணன் தம்பி லட்சுமி நாராயணன் பிஜூ தீவுக்கு சென்று அங்குள்ள தூதரக அதிகாரிகளின் உதவியுடன் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரித்த போலீசார் காணாமல் போன இருவரையும் தேடினர். இருவரும் இவரது வீட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்கள் வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரித்த போலீசார் மானேஜர் ரவி மற்றும் கூட்டாளிகள் இணைந்து கொலை செயதிருக்கலாம் என்ற கோணத்தில் இவருடன் நசீம், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மாத்யூஸ், முனா, அஜய் ஆகிய 3 பேரை தேடிவருகின்றனர். பணம் கேட்டு மிரட்டி தராத பட்சத்தில் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து சென்னைக்கு சாம்பல் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் இவரது குடும்பத்தினர்.

ஜனகன்
18-01-2010, 07:21 AM
கலைஞர் டிவி நியூஸில் நானும் இந்த செய்தி பார்த்தேன்.ஆனால் இப்படி விளக்கமாக தரவில்லை.பகிர்வுக்கு நன்றி முத்துவேல் அவர்களே.

muthuvel
18-01-2010, 11:06 AM
கலைஞர் டிவி நியூஸில் நானும் இந்த செய்தி பார்த்தேன்.ஆனால் இப்படி விளக்கமாக தரவில்லை.பகிர்வுக்கு நன்றி முத்துவேல் அவர்களே.

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். 4 மணிநேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் கூறியுள்ளார். காபூல் நகரங்களில் அதிபர் மாளிகை கட்டடம், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சகம் புகழ்பெற்ற செரீனா ஓட்டல் , சென்ட்ரல் பாங்க், உள்ளிட்ட பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் பல்வேறு கட்டடங்கள் தீப்பற்றி எரிகிறது. பல இடங்களில் பயங்கரவாதிகளுடன் , பாதுகாப்பு படையினர் பயங்கர துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் விவரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆப்கனில் அமெரிக்க மற்றும் ஐ.நா., படையினர் சுமார் 37 ஆயிரம் பேர் அங்குமுகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கனில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு துறை அதிகாரிகள் 7 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். அமெரிக்க தூதரகம், ஐ.நா., அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவதே தலிபான்களின் இலக்காக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து அமெரிக்க படையினரை திரும்ப அழைக்கவும், ஒரளவு படையினரை குறைப்பதையும் அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டாலும் இது வரை இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காபூல் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். செரீனா ஓட்டல் அருகே முதலில் ஒரு கார் குண்டு வெடித்தது. தொடர்ந்து வணிக வளாகம் மற்றும் பாங்க் , அமைச்சரவை அலுவலகங்களில் பயங்கரவாதிகள் அதிரடி துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், , பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சப்தம் : அதிபர் கர்சாய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கவிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்ற பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் , பலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பல கட்டடங்கள் எரிவதாகவும் நேட்டோ படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை போல தாக்குதல் : எத்தனை கட்டடங்கள் எரிகிறது , எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற முழு விவரம் இன்னும் வரவில்லை. பல கட்டடங்களில் பயங்கரவாதிகள் நுழைந்து கைப்பற்றியுள்ளதாகவும் ஏறக்குறைய மும்பையில் நடந்த தாக்குதல் போல இந்த அணுகுமுறையை பயங்கரவாதிகள் செயல்படுத்தியுள்ளதாக அங்கு முகாமிட்டுள்ள பிரபல இணையதள நிருபர் கூறியுள்ளார்.
அதிபர் கர்சாய் பேட்டி : அங்கு நடந்துள்ள சம்பவம் குறித்து அதிபர் கர்சாய் கூறியிருப்பதாவது: பயங்கரவாதிகள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இந்த சதி முறியடிக்கப்பட்டு விட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு நுழைந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். முன்னதாக பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்து விட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.

பாரதி
27-02-2010, 05:16 PM
சிலி நாட்டில் இன்று 8.8 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழப்பார்கள் என அஞ்சப்படுகிறது. நில நடுக்கத்தை அடுத்து, சுனாமி ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.

விளக்கமான ஆங்கில அறிக்கை கீழே:
(ஆங்கில உரையை பொறுத்தருள்க.)

Pacific Tsunami Warning Center - Latest News

Saturday, February 27, 2010

This is the latest Pacific Tsunami Warning Center from the National Oceanic and Atmospheric Administration (NOAA). Please read the complete statement below.

TSUNAMI BULLETIN NUMBER 009
PACIFIC TSUNAMI WARNING CENTER/NOAA/NWS
ISSUED AT 1446Z 27 FEB 2010

THIS BULLETIN APPLIES TO AREAS WITHIN AND BORDERING THE PACIFIC OCEAN AND ADJACENT SEAS...EXCEPT ALASKA...BRITISH COLUMBIA...WASHINGTON...OREGON AND CALIFORNIA.

... A WIDESPREAD TSUNAMI WARNING IS IN EFFECT ...

A TSUNAMI WARNING IS IN EFFECT FOR

CHILE / PERU / ECUADOR / COLOMBIA / ANTARCTICA / PANAMA /
COSTA RICA / NICARAGUA / PITCAIRN / HONDURAS / EL SALVADOR /
GUATEMALA / FR. POLYNESIA / MEXICO / COOK ISLANDS / KIRIBATI /
KERMADEC IS / NIUE / NEW ZEALAND / TONGA / AMERICAN SAMOA /
SAMOA / JARVIS IS. / WALLIS-FUTUNA / TOKELAU / FIJI /
AUSTRALIA / HAWAII / PALMYRA IS. / TUVALU / VANUATU /
HOWLAND-BAKER / NEW CALEDONIA / JOHNSTON IS. / SOLOMON IS. /
NAURU / MARSHALL IS. / MIDWAY IS. / KOSRAE / PAPUA NEW GUINEA /
POHNPEI / WAKE IS. / CHUUK / RUSSIA / MARCUS IS. / INDONESIA /
N. MARIANAS / GUAM / YAP / BELAU / JAPAN / PHILIPPINES /
CHINESE TAIPEI

THIS BULLETIN IS ISSUED AS ADVICE TO GOVERNMENT AGENCIES. ONLY NATIONAL AND LOCAL GOVERNMENT AGENCIES HAVE THE AUTHORITY TO MAKE DECISIONS REGARDING THE OFFICIAL STATE OF ALERT IN THEIR AREA AND ANY ACTIONS TO BE TAKEN IN RESPONSE.

AN EARTHQUAKE HAS OCCURRED WITH THESE PRELIMINARY PARAMETERS

ORIGIN TIME - 0634Z 27 FEB 2010
COORDINATES - 36.1 SOUTH 72.6 WEST
DEPTH - 55 KM
LOCATION - NEAR COAST OF CENTRAL CHILE
MAGNITUDE - 8.8

MEASUREMENTS OR REPORTS OF TSUNAMI WAVE ACTIVITY

GAUGE LOCATION LAT LON TIME AMPL PER
------------------- ----- ------ ----- --------------- -----
QUEPOS CR 0.0N 9.4E 1418Z 0.24M / 0.8FT 44MIN
BALTRA GALAPAGS EC 0.4S 90.3W 1313Z 0.25M / 0.8FT 36MIN
EASTER CL 27.2S 109.5W 1205Z 0.35M / 1.1FT 52MIN
ANCUD CL 41.9S 73.8W 0838Z 0.62M / 2.0FT 84MIN
CALLAO LA-PUNTA PE 12.1S 77.2W 1029Z 0.36M / 1.2FT 30MIN
ARICA CL 18.5S 70.3W 1008Z 0.94M / 3.1FT 42MIN
IQUIQUE CL 20.2S 70.1W 0907Z 0.28M / 0.9FT 68MIN
ANTOFAGASTA CL 23.2S 70.4W 0941Z 0.49M / 1.6FT 52MIN
DART LIMA 32412 18.0S 86.4W 0941Z 0.24M / 0.8FT 36MIN
CALDERA CL 27.1S 70.8W 0843Z 0.45M / 1.5FT 20MIN
TALCAHUANO CL 36.7S 73.4W 0653Z 2.34M / 7.7FT 88MIN
COQUIMBO CL 30.0S 71.3W 0852Z 1.32M / 4.3FT 30MIN
CORRAL CL 39.9S 73.4W 0739Z 0.90M / 2.9FT 16MIN
SAN FELIX CL 26.3S 80.1W 0815Z 0.53M / 1.7FT 08MIN
VALPARAISO CL 33.0S 71.6W 0708Z 1.29M / 4.2FT 20MIN

LAT - LATITUDE (N-NORTH, S-SOUTH)
LON - LONGITUDE (E-EAST, W-WEST)
TIME - TIME OF THE MEASUREMENT (Z IS UTC IS GREENWICH TIME)
AMPL - TSUNAMI AMPLITUDE MEASURED RELATIVE TO NORMAL SEA LEVEL.
IT IS ...NOT... CREST-TO-TROUGH WAVE HEIGHT.
VALUES ARE GIVEN IN BOTH METERS(M) AND FEET(FT).
PER - PERIOD OF TIME IN MINUTES(MIN) FROM ONE WAVE TO THE NEXT.

EVALUATION

SEA LEVEL READINGS CONFIRM THAT A TSUNAMI HAS BEEN GENERATED WHICH COULD CAUSE WIDESPREAD DAMAGE. AUTHORITIES SHOULD TAKE APPROPRIATE ACTION IN RESPONSE TO THIS THREAT. THIS CENTER WILL CONTINUE TO MONITOR SEA LEVEL DATA TO DETERMINE THE EXTENT AND SEVERITY OF THE THREAT.

A TSUNAMI IS A SERIES OF WAVES AND THE FIRST WAVE MAY NOT BE THE LARGEST. TSUNAMI WAVE HEIGHTS CANNOT BE PREDICTED AND CAN VARY SIGNIFICANTLY ALONG A COAST DUE TO LOCAL EFFECTS. THE TIME FROM
ONE TSUNAMI WAVE TO THE NEXT CAN BE FIVE MINUTES TO AN HOUR, AND THE THREAT CAN CONTINUE FOR MANY HOURS AS MULTIPLE WAVES ARRIVE.

FOR ALL AREAS - WHEN NO MAJOR WAVES ARE OBSERVED FOR TWO HOURS AFTER THE ESTIMATED TIME OF ARRIVAL OR DAMAGING WAVES HAVE NOT OCCURRED FOR AT LEAST TWO HOURS THEN LOCAL AUTHORITIES CAN ASSUME THE THREAT IS PASSED. DANGER TO BOATS AND COASTAL STRUCTURES CAN CONTINUE FOR SEVERAL HOURS DUE TO RAPID CURRENTS. AS LOCAL CONDITIONS CAN CAUSE A WIDE VARIATION IN TSUNAMI WAVE ACTION THE ALL CLEAR DETERMINATION MUST BE MADE BY LOCAL AUTHORITIES.

BULLETINS WILL BE ISSUED HOURLY OR SOONER IF CONDITIONS WARRANT. THE TSUNAMI WARNING WILL REMAIN IN EFFECT UNTIL FURTHER NOTICE.

THE WEST COAST/ALASKA TSUNAMI WARNING CENTER WILL ISSUE PRODUCTS FOR ALASKA...BRITISH COLUMBIA...WASHINGTON...OREGON...CALIFORNIA.

muthuvel
12-03-2010, 01:44 PM
போரில் கால்களை இழந்த 1000 தமிழர்களுக்கு செயற்கை கால் பொருத்த இந்தியா உதவி !

ஜனகன்
12-03-2010, 01:48 PM
அப்படி நந்தால் சந்தோசம். நடக்குமா????????

அக்னி
12-03-2010, 02:54 PM
முத்துவேல் அவர்களே...
இந்த ஒரு வரிச் செய்தியின் மூலம் எது என்பதை அறியத்தர முடியுமா?

இனி இதுபோன்ற செய்திகளை ஏற்கனவே உள்ள
உடனடிச்செய்திகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5017)
திரியிற் தாருங்கள்.

இதனையும் அதனுடன் இணைக்க, நிர்வாகக்குழுவிடம் கவனயீர்ப்புச் செய்கின்றேன்.

நன்றி.

அமரன்
13-03-2010, 09:15 PM
அப்படி நந்தால் சந்தோசம். நடக்குமா????????

நடக்கத்தானே காலுதவி செய்யுறாங்க ஜனகன். பிறகென்ன நடக்குமா என்ற சந்தேகம். சந்தேகம் சந்தோசத்தின் சத்துரு.

பா.ராஜேஷ்
16-03-2010, 09:25 AM
வாஷிங்டன்:ஒரு இளைஞன் அதிகமாக "ரிஸ்க்' எடுக்கிறான் என்றால் அவனை யாரோ, அழகிய பெண் ஒருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம்; இது என்ன புது ஜோதிடம் என்கிறீர்களா..? சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றுதான் இப்படித் தெரிவித்துள்ளது.பொதுவாக, பெண்களைக் கவரும் விதத்தில் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது ஆணின் வழக்கம்தான். ஆனால், அந்தப் பெண்ணைக் கவர்வதற்காக அதிகளவு சவால்களைச் சந்திக்கிறான் என்று சமீபத்தைய ஆய்வு ஒன்று கூறுகிறது.காலில் சறுக்குக் கட்டைக் கட்டிய இளைஞர்கள் சிலரை "ஸ்கேட்டிங்' செய்யும் படி சொல்லப்பட்டது.


சில முறை அவர்களை அழகிய இளம்பெண்களும், அடுத்த முறை ஆண்களும் நடுவராக இருந்து கணித்தனர்.ஸ்கேட்டிங் செய்த இளைஞர்கள், ஆண்கள் நடுவராக இருந்து தங்களைக் கணித்தபோது இயல்பாக இருந்து தங்கள் திறமைகளை நிரூபித்தனர். ஆனால், அழகிய இளம்பெண்கள் நடுவராக இருந்து தங்களைக் கணிக்கின்றனர் என்று தெரியவந்தபோது, ஸ்கேட்டிங்கை மிகவேகமாக ரிஸ்க் எடுத்து செய்து காண்பித்தனர். அதனால் சிலர் கீழே விழுந்து அடியும் பட்டுக் கொண்டனர்.இந்த ஆய்விலிருந்து, அழகிய இளம் பெண்களைக் கண்டால் இளைஞர்களின் உடலில் உள்ள "டெஸ்டோஸ்டெரோன்' எனும் சுரப்பி நீர் அதிகமாக சுரக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். அந்த அதிகச் சுரப்பே இதுபோன்று பெண்களைக் கவரும் விதத்தில் சவாலாக காரியத்தில் இறங்கும்படி இளைஞர்களைத் தூண்டிவிடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: தினமலர் (http://www.dinamalar.com/world_detail.asp?news_id=5077)

govindh
16-03-2010, 09:41 AM
கன்னியர் கண் பட்டால்...
காளையருக்கு மாமலையும் சிறு கடுகு..!
காரணம்..."டெஸ்டோஸ்டெரோன்' ..சுரப்பி தானா..?!

சிவா.ஜி
16-03-2010, 09:57 AM
சப்பை ஃபிகருக்கே...நம்ம மக்கள் சைக்கிள்ல சாகசம் செய்யுறாங்க....அத்தனை இளம் பெண்களை நடுவர்களாக உட்காரவைத்தால்...ஏன் செய்ய மாட்டாங்க.

ஆனா இந்த ஆராய்ச்சிக்காரங்களுக்கு இப்பதான் இந்த விஷ்யம் தெரியுது....நம்ம மக்களுக்கு ஆதிகாலந்தொட்டு அத்துப்படியான ஃபார்முலா இது. அதத்தான் கோவிந்த் சொல்லியிருக்காரு....மாமலையும் கடுகுன்னு...

trifriends
06-04-2010, 12:30 PM
http://mmimages.mmnews.in/Articles/2010/Apr/74618437-47fc-4442-85ef-a7dc6651c2a3_S_secvpf.gifசென்னை, ஏப். 6-

காலாவதி மருந்துகள் விற்பனை செய்வதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு மீனாட்சி சுந்தரம் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்திருப்பது தெரிய வந்துள்ளது. காலாவதி மற்றும் போலி மருந்துகளை விற்பனை செய்து பொதுமக்களின் உயிரோடு விளையாடிய மோசடிக்கும்பல் குறித்து தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

காலாவதி மருந்துகளை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதித்த மீனாட்சி சுந்தரத்தை 6 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது மோசடி தொடர்பாக அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 6 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு போலீசார் மீனாட்சி சுந்தரத்தை துளைத்தெடுத்து விட்டனர்.

வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோரது மேற்பார்வையில் உதவி கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் மீனாட்சி சுந்தரத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.

காலாவதி மருந்துகளை விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றியும் மீனாட்சி சுந்தரம் பரபரப்பான தகவல்களை கூறியுள்ளார்.

காலாவதி மருந்துகளை விற்பனை செய்ய மீனாட்சி சுந்தரத்துக்கு அதிகாரிகள் பலர் தூண்டு கோலாக இருந்துள்ளனர். இவர்களை மீனாட்சிசுந்தரம் ஒவ்வொரு மாதமும் கவனித்து வந்துள்ளார். அதிகாரிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மது விருந்து அளித்துள்ளார்.

தன்னோடு நெருக்கமாக உறவாடிய அதிகாரிகளுக்கு தான் செய்த அத்தனை உதவிகளையும் மீனாட்சி சுந்தரம் போலீசாரிடம் வாக்கு மூலமாக தெரிவித்துள்ளார்.

தன்னிடம் யார்-யார்? லஞ்சம் வாங்கினர். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுத்தேன் என்பது போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் மீனாட்சி சுந்தரம் கசியவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய ஊழல் அதிகாரிகளின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்துள்ளனர். இதனால் மீனாட்சி சுந்தரத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

காலாவதி மற்றும் போலி மருந்து மோசடி விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. காலாவதி மருந்துகளை விற்பனை செய்து வந்த நெட்வொர்க் முழுவதையும் கண்டு பிடித்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதனால் காலாவதி மருந்து மோசடியில் எவ்வளவு பெரிய ஆட்கள் தொடர்பு வைத்திருந்தாலும் தப்ப முடியாது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த வழக்கை பொறுத்த வரை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளதால் மீனாட்சி சுந்தரத்தின் வலையில் விழுந்த அதிகாரிகள் யாரும் அவ்வளவு எளிதாக இதில் இருந்து நழுவிச் சென்று விட முடியாது.

போலி மருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீனிவாசன், கண்ணன், ஹேமந்த்குமார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மீனாட்சி சுந்தரத்திடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.

இந்த விசாரணை சூடு பிடிக்கும் பட்சத்தில் மோசடி அதிகாரிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : மாலைமலர்

ஜனகன்
06-04-2010, 12:58 PM
தகவலை உடனடியாக தந்தமைக்கு நன்றி நண்பா.

muthuvel
08-04-2010, 02:03 PM
சென்னை : ''சகோதரர், சகோதரிகள் 11 பேரில் ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவரது உயிர் தியாகம், எங்களை தலை நிமிரச் செய்துள்ளது,'' என, நக்சலைட் தாக்குதலில் பலியான சென்னை, கொளத்தூர் வீரரின் சகோதரர் கூறினார்.சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது, நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணிவெடி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 75 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மூன்று தமிழக வீரர்களில் ஒருவர் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மோகனரங்கன்(44). கொளத்தூர் பூம்புகார் நகர், 18வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - வேதவள்ளி தம்பதி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள். இதில் 8வது மகன் தான் மோகனரங்கன். இவரது மனைவி சுஜாதா(35). இவர்களது மகள் அனுஷா (14) வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 1984ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலூரில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துள்ளார். கருப்பு பூனை படையில் சிறிது காலம் பணியாற்றிய இவர், அத்வானி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி சுக்வீந்தர் சிங் தாக்குதலின் போதும், அந்த பிரிவில் பணியாற்றினார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச குற்றவாளி சோப்ராஜை கொலை செய்ய வந்தவனை தடுத்து, கைது செய்துள்ளார். மேலும், அதிரடிப் படையில் விஜயகுமார் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து பணியாற்றுள்ளார் மோகனரங்கன்.நக்சல்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தகவல் தெரிந்ததும், அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

nandri : dinamalar

muthuvel
18-05-2010, 03:16 AM
இன்றைய செய்தி ஒரு ஒப்பிடு

1) வறுமையில் தாய் ,இரு குழந்தையுடன் தற்கொலை !

2) திருப்பதி கோவிலுக்கு பக்தர் ஒருவர் அஞ்சு லட்சம் காணிக்கை !
1)வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை !

2) சென்னையில் பிரபல நிறுவனத்தின் ,கணிபொறி பொறியாளர் குடிபோதையில் நடு ரோட்டில் ஆடை இல்லாமல் சென்றார் ..
1) உளவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் ,வறுமையால் ,
பீடி சுற்றும் தொழிலுக்கு செல்லும் மாணவி !

2) பத்து லட்சத்திற்கு பொறியல் படிப்பு ஏலம் , தகுதி குறைந்த மாணவர்களுக்கு அரசு சலுகை !1)சென்னையில் ,குடும்பத்தின் வறுமை காரணமாக ,வேலைக்கு சென்ற, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு !
2) பிரபல ஆங்கில தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க ,பெற்றோர் காலை ஆறு மணிமுதல் காத்து கிடப்பு ..1)ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு : மாத ஊதியம் 7500 rs மத்திய அரசு நிர்ணயம்
2)பொய் வழக்கு போடுவதற்கு ருபாய் 15000-rs லஞ்சம் கேட்ட காவலர் கைது !
1) மூளை செயலிழந்த மாணவியின் இதயம் தானம் !

2)சாகும் வரை,மூளையை எடுத்து , கோர்ட் வாசலில் ,வக்கிலை கொன்றனர் ,முன் விரோதம் காரணமாக !1) தினக்கூலி உயர்த்த கோரி நெசவாளர்கள் போராட்டம் !
2) 2011 உலக கோப்பை கிரிகெட்டில் வென்றால் , வீரர்களுக்கு வரி விலக்கு ,அளிக்கப்படும் ,அரசு அறிவிப்பு ..
1) நாமக்கல்லில் வறுமை காரணமாக எலி கறி தின்றனர் ..

2)வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தலைமை மருத்துவ கவுன்சிலர் வீடுகளில் சோதனை , ஒன்றை டன் தங்கம் மற்றும் 220 கோடி பணம் மீட்பு ...........
கடவுள் இல்லைன்னு எங்கங்க சொன்னேன் , இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன் ...........

sarcharan
18-05-2010, 06:56 AM
கடவுள் இல்லைன்னு எங்கங்க சொன்னேன் , இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன் ...........

முத்துவேல்,

கடைசி நையாண்டி கலக்கல்...:D:D:redface:

muthuvel
18-05-2010, 07:01 AM
கடவுள் இருகிறாரா , இல்லையா ?

muthuvel
19-05-2010, 05:49 AM
பெரம்பலூர் : போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைத்து வாழும் சிறுவன் ஒருவன் தான் போலீஸ் எஸ்.பி.,யாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளான். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(50); இவரது மகன் மணிகண்டன்(14).ராஜு, 2008ம் ஆண்டு, மணிகண்டனை, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் தங்கி, கூலியாட்கள் வைத்து ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமர்(55) என்பவரிடம் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ராமர், சிறுவன் மணிகண்டனுக்கு கஞ்சி மட்டும் உணவாக தந்து, ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினார். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி கொளக்காநத்தம் கிராமத்திலிருந்து தப்பி வந்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தான். சிறுவன் மணிகண்டனின் சோகக்கதையை கேட்ட பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், அவன் படித்த பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டி.சி., வாங்கி வந்து, பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை உதவியுடன், அவன் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முடித்து தேர்வு எழுதி விட்டு, கோடை விடைமுறையை, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் கழித்து வரும் சிறுவன் மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் தங்கள் வீட்டிலும், ஓட்டலிலும் உணவு வாங்கி கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.சிறுவன் மணிகண்டன் கூறியதாவது: என் அப்பா, அம்மா இருவரும் கேரளாவில் இருக்கின்றனர். என் அப்பா, என்னை 6,000ம் ரூபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு விற்று விட்டார். என் முதலாளி அடித்து துன்புறுத்தினார். நான் அங்கிருந்து தப்பி வந்து பெரம்பலூர் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தேன். என்னை இன்ஸ்பெக்டர் சார் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் உள்ள அறையில் தங்கி உள்ளேன். என்னை விற்பனை செய்த என் பெற்றோரை பார்க்க நான் விரும்பவில்லை. நன்றாக படித்து, போலீஸ் எஸ்.பி.,யாக வர வேண்டும் என்பதே என் ஆசை. என் பெற்றோர் வீடாக நினைத்து ஸ்டேஷனுக்கு வந்துள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினான்.nandri:dinamalar

muthuvel
31-05-2010, 07:38 AM
கொழும்பு: இலங்கையில் உள்ள பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது. இலங்கையின் பிரபல தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் "த்ரீ ஸ்டார்' பி.லிட்., கொழும்பில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. புலிகள் அமைப்பில் இருந்த ஏராளமான பெண்கள்,இறுதிக்கட்ட போர் முடிந்த பின், கைது செய்யப்பட்டனர். இவர்கள், சிறப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலான பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியை முடித்த 1,200 பேருக்கு தான், தற்போது வேலை அளிக்க இந்த தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. முதல்கட்டமாக, 150 பெண்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

nandri : dinamalar

muthuvel
31-05-2010, 07:40 AM
முத்துவேல்...
இது செய்திப்பகுதி. செய்திகளை மட்டும் தாருங்கள். 2009 இல் நிகழ்ந்தவற்றை இப்பொது நடந்தவற்றுடன் ஒப்பிட்டு யாரையோ நக்கலடிப்பதாக பதிவுறுவதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. இந்த பதிவுக்கான தகுந்த விளக்கம் தராதவிடத்து 2 நாட்க்களில் இந்த பதிவு அகற்றப்படும்.

இந்த பகுதியை நீக்கிவிடுங்கள்

nambi
03-06-2010, 04:32 AM
முதல்-அமைச்சர் கருணாநிதி தனது 87-வது பிறந்த நாள் விழாவை வியாழக்கிழமை (ஜூன் 3) கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்துள்ளார். இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன், தொழிலதிபர் கெவின்கேர் சி.கே.ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான பத்திரப் பதிவு கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. தானப் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் கோபாலபுரம் வீடு அதிகாரப்பூர்வமாக அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

nambi
03-06-2010, 04:37 AM
சென்னை: முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார். இக்கூட்டத்தில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.


அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடங்களில் முதல்வர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்தைப் பெறுகிறார்.

முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் திருவான்மியூர், வடக்கு மாட வீதியில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம் வழுதி, எஸ்.பி.சற்குண பாண்டியன், கவிஞர் கனிமொழி எம்.பி. நடிகை குஷ்பு மற்றும் கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார்.

நடிகை குஷ்பு திமுகவில் இணைந்த பின்னர் அவர் பங்கேற்கும் முதல் திமுக பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
....தட்ஸ் தமிழ் 03.06.2010

nambi
03-06-2010, 04:42 AM
சென்னை: சட்டசபையில் அறிவித்தபடி, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக, தூத்துக்குடியில் மண்டல ஆரம்ப நிலைபரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி, குழந்தை பிறந்ததும் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதனைகளையும், பின்னர் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு தொடர் செவித்திறன் பரிசோதனைகளையும் மேற்கொள்ள, தூத்துக்குடியில் ஆரம்ப நிலை செவித்திறன் பரிசோதனை மையத்தை நிறுவ முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு பஸ்களிலும், மாற்றுத்திறனாளிகள் மாநிலத்திற்குள் 75 சதவீத பயணக் கட்டணச் சலுகையுடன் ஆண்டுக்கு நான்கு முறை பயணம் செய்ய 2007ம் ஆண்டில் சலுகை வழங்கப்பட்டது. இதில், பயண எண்ணிக்கை உச்சவரம்பை நீக்கி, எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என, 2008ல் முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில், சிலவகை மாற்றுத் திறனாளிகள் உடல் குறைபாட்டின் தன்மை காரணமாக, துணையாளர் உதவியின்றி தனியே பயணம் செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளனர். அத்தகைய மாற்றுத் திறனாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, அவர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கு உதவியாக வரும் ஒரு துணையாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளியும், அவரது துணையாளரும் உள்ளூர் பஸ் மற்றும் "ஏசி' பஸ் ஆகியவை தவிர்த்து, பிற அரசு பஸ்களில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி 25 சதவீத கட்டணத்தில் மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம்.

.....தினமலர் 03.06.2010

nambi
03-06-2010, 05:00 AM
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளில் மனநிறைவு இல்லை என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளதை பாராட்டியதுடன், ஈழத்தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை உருவாக்க, கலைஞர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென த.தே.கூட்டமைப்பு உரிமையுடன் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான விஜயம் இடம்பெறவுள்ள இத்தருணத்தில் முதல்வர் கருணாநிதியின் இக்கூற்று வரவேற்கத்தக்கதாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளில் மனநிறைவு இல்லை என்ற அடிப்படையில் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி தலைமையில் கூடிய தி.மு.க அதி உயர் பீடம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

யுத்தத்திற்கு பின்னாலான ஒரு வருடப் பகுதியில் தமிழ் மக்களை சரியான முறையில் மீளக் குடியேற்ற, அவர்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அரசு தவறிவிட்டதென்பதையும் இந்திய மத்திய அரசு இது தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் போதாதென்றும், இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகளும் அவர்களை சரியான முறையில் சென்றடையவில்லை என்பதையும் அத் தீர்மானத்தில் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

உண்மை நிலை அதை விடக் கொடியதென்பதை வன்னியின் மீள் குடியேற்றங்களை சென்று பார்வையிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அறியக் கூடியதாக உள்ளது.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யும் சமயத்தில் தமிழ் மக்கள் படும் வேதனைகளை டில்லியின் கவனத்திற்கு கலைஞர் கொண்டு வந்துள்ளமை பாராட்டத்தக்கது

விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென இலங்கை அரசு கூறுகின்றது. ஆனால் வடக்கு கிழக்கு இன்னும் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்தான் உள்ளது.

இராணுவத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தமிழ் பிரதேசங்களில் சுவீகரிக்கப்படுகின்றது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீளக்குடியேற முடியவில்லை. யுத்தம் முடிந்து ஒரு வருடமாகியும் சாதாரண சூழல் இன்னும் தோற்றுவிக்கப்படவில்லை.

இதேபோன்று இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களும் பிரிக்கப்பட்டுவிட்டன.

அதிகாரங்களை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் அரசாங்கம் எவ்வித நாட்டம் அற்றே செயற்பட்டு வருகின்றது. யுத்தம் முடிந்துவிட்டாலும், இனப்பிரச்சினை என்பது இன்னும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் கௌரவத்துடனும், சுதந்திரத்துடனும், வாழக்கூடிய வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளவும் தமது மண்ணை பாதுகாத்து மொழியை பாதுகாத்து, தமிழர் தலைநிமிர்ந்து வாழும் நிலையை உருவாக்கவும், கலைஞர் தனது ழுமையான பட்டறிவை பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது.

...........தமிழ்வின் 03.06.2010

nambi
03-06-2010, 05:17 AM
நாமக்கல்: முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உணவகங்களில் முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், முட்டை பிரியர்களும், நுகர்வோரும் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, முட்டை விலை ஏறுமுகமாகவே உள்ளது. தூத்துக்குடி போன்ற கடலோர பகுதியில் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், முட்டை நுகர்வு அதிகரித்திருந்தது. அதனால் விலையும் ஏற்றம் கண்டது. முட்டையின் தேவை அதிகமாக இருப்பதால், விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. முட்டை விலை உயர்வு கோழிப்பண்ணையாளர் கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணையில் 2.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் முட்டை, கடைகளில் மூன்று ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலை உயர்வு காரணமாக, உணவகங்களில் ஆம்லெட், "ஆப் பாயில்' முட்டை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இது முட்டை பிரியர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

........தினமலர் 03.06.2010

அமரன்
03-06-2010, 05:27 AM
உடனடிச் செய்திகளுக்கு நன்றி நம்பி.

விலையேற்றம் நடக்குதே தவிர தேர், தீர்த்தம், பூங்காவனம், சாந்தி எல்லாம் நடந்து முடிந்து விலையிறக்கம் நடக்குதே இல்ல. பாவம் மக்களாகிய கடவுளரும் அவர் வீடாகிய கோவில்களும்.. சும்மா சொல்லக் கூடாது பூசாரிகளுக்கும் பக்தர்களுக்கும் செமக் கொண்டாட்டம்.

nambi
03-06-2010, 06:44 AM
புதுடெல்லி, ஜுன்.3-

ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் போன்ற ஆட்டம் தேவைதானா? என்று மத்திய மந்திரி கில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு

16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்ஷூ நகரில் வருகிற நவம்பர் மாதம் 12-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டில் முதல்முறையாக இந்த தடவை கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. குவைத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் ஆசிய விளையாட்டில் இடம் பெறுகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிïசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டி இருப்பதால் அணியை அனுப்ப முடியாது என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தன.

மத்திய மந்திரி கருத்து

இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி எம்.எஸ்.கில்லிடம், ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பமாட்டோம் என்ற கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து கருத்து கேட்ட போது கூறியதாவது:-

எனது பதில் எளிதானது. இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை குறித்து அவர்கள் தான் முடிவு செய்து வருகிறார்கள். அவர்கள் இது குறித்தும் முடிவு செய்து இருக்கிறார்கள். நான் மத்திய மந்திரி என்ற முறையில் இல்லாமல் சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் எனது கருத்து என்னவென்றால் கிரிக்கெட் போன்ற ஆட்டம் ஆசிய விளையாட்டு போட்டியில் தேவைதானா?

கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் அவர்கள் அதிக சோர்வு அடையக்கூடும். பந்தய குதிரைகளுக்கு கூட ஓய்வு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.....தினத்தந்தி 03.06.2010

nambi
03-06-2010, 07:06 AM
சதானந்த் (குஜராத்) : , புதன், 2 ஜூன் 2010( 13:43 IST )

குஜராத் மாநிலத்தில் சனந்த்தில் அமைத்துள்ள டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலையில் நானோ கார் உற்பத்தி 02.06.2010 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இங்கு நடைபெற்ற விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா ஆகியோர் தொழிற்சாலையின் உற்பத்தியை தொடங்கி வைத்தனர்.

இந்த கார் தொழிற்சாலை 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்காக டாடா மோட்டார் நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால், டாடா மோட்டார் நிறுவனம் கார் தொழிற்சாலையை சனந்திற்கு மாற்றியது. இங்கு வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும்.

இதை வருடத்திற்கு 5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில், விரிவாக்கம் செய்து கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

நானோ கார் தொழிற்சாலையை ஒட்டி, 60 க்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அமைக்கப்படும் என தெரிகிறது.

தற்போது நானோ கார்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் பந்த் நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் வரை இங்கிருந்து 33 ஆயிரம் நானோ கார்கள் தயாரித்து, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

.......வெப்துனியா 02.06.2010

nambi
03-06-2010, 07:23 AM
கலைஞர் குழுமத்தால் புதிதாக களம் இற்க்கப்பட் குழந்தைகளுக்கான சித்திரம் தொலைக்காட்சி இன்று முறைப்படி காலை 6 மணிக்கு தன் ஒளிபரப்பைத் துவங்கியது. இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான இந்த தொலைக்காட்சியில் உலகப் புகழ் பெற்ற சித்திரப் (கார்ட்டூன்) படங்களை இறக்கப் போகிறார்களாம். இதைத் தொடர்ந்து ஜெயா குழுமமும் ஒரு சித்திரம் (கார்ட்டூன்) சேனலுக்கான திட்டத்தை வைத்திருக்கிறதாம். வரும் ஆண்டில் அதன் தொடக்கம் இருக்குமாம்.

.....கூடுதல் ஆதாரம் தினமணி

aren
03-06-2010, 08:10 AM
பணம் எங்கெல்லாம் கிடைக்கும் அங்கெல்லாம் சன் குழுமம் இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

nambi
03-06-2010, 10:42 AM
சென்னை: தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் மேலும் ஒரு பள்ளியை இன்று மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலும் செய்தனர்.

சென்னை பெரவள்ளூரில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக்குலேசன் பள்ளியைத்தான் மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

அப்போது, கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்யும் முடிவுக்கு பிறகு வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திருப்பி தரப்படும் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த பெற்றோர்கள், கூடுதலாக வாங்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தருவதாக எழுதி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் சாலைகளின் இருபுறம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேக்கம் அடைந்தன.

விரைந்து வந்த காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
....வெப்துனியா 03.06.2010
.......................................

பெற்றோர்கள் சாலை மறியலின் போது சந்தித்த சன் செய்தி நிறுபர்களிடம் பள்ளிகள் கூடுதலாக வாங்கிய கட்டணத்தின் ரசீதைக் காட்டினர். அதிகபட்சமாக 11000 வாங்க வேண்டிய பள்ளிகள் 15000 வாங்கியுள்ளனர். மறியல் செய்த பெற்றோர்களிடம் ''உங்கள் குழந்தையின் கல்வி எங்களால் பாதிப்புள்ளாக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு'' பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் மிரட்டியதாக தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டபொழுது...(மிரட்டலுக்கு பதிலேதும் தெரிவிக்கவில்லை) மேலும் கோவிந்த ராஜன் குழுவிடம் போடப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு தீர்ப்பு வந்தவுடன் கூடுதல் பணம் திருப்பித் தரப்படும் என்று கூறியுள்ளனர்.
(கூடுதல் கட்டணமே வாங்க கூடாது என்பது தான் கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த்து, அதே போன்று அரசும் கூடுதல் கட்டணம் வாங்க கூடாது என்றே உத்தரவிட்டுள்ளது. மீறி வாங்கினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது )
அனைத்தையும் பள்ளி நிர்வாகத்தினர் மீறியுள்ளனர்.
......நன்றி சன் செய்தி 03.06.2010

nambi
03-06-2010, 12:43 PM
கொல்கத்தா, ஜுன்.3-

மேற்கு வங்காள மாநில நகராட்சி தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. கொல்கத்தா மாநகராட்சியை, தனி மெஜாரிட்டியுடன் அந்த கட்சி கைப்பற்றியது.


நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவர தொடங்கியதுமே, பெரும்பான்மை இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்தது. தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் மொத்தம் உள்ள 81 நகராட்சிகளில், பெரும்பான்மையான நகராட்சிகளை கைப்பற்றியது.

36 நகராட்சிகளை திரிணாமுல் காங்கிரசும், 18 நகராட்சிகளை இடதுசாரி கட்சிகளும், 6 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றி இருந்தன. அத்துடன் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளூர் மட்டத்தில் செய்து கொண்ட தொகுதி உடன்பாட்டின்படி அந்த இரு கட்சிகளும் 17 நகராட்சிகளையும் கைப்பற்றி இருந்தன. 4 நகராட்சிகளில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் 24 பர்கானா மாவட்டத்தில், இடதுசாரிகளுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள 12 நகராட்சிகளில், சந்திரநாகூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி தோல்வியை தழுவின.

கொல்கத்தாவில் தனி மெஜாரிட்டி

கவுரவ பிரச்சினையாக கருதப்பட்ட தலைநகர் கொல்கத்தா மாநகராட்சியை பொறுத்தவரை, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு தனி மெஜாரிட்டி பலத்துடன் கைப்பற்றி சாதனை படைத்தது.

141 வார்டுகளை கொண்ட கொல்கத்தா மாநகராட்சியில், திரிணாமுல் காங்கிரஸ் 95 வார்டுகளில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு 33 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும், பா.ஜனதா 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் ஆதரவு இல்லாமல்....

இதனால், கொல்கத்தா மாநகராட்சியில் காங்கிரசின் ஆதரவு இல்லாமலேயே மம்தா கட்சியால் நிர்வகிக்க முடியும். கடந்த தேர்தலில் இங்கு 75 வார்டுகளில் இடதுசாரி முன்னணி வெற்றி பெற்று இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் 42 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும், பா.ஜனதா 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா தவிர அதன் பக்கத்து நகராட்சியான பிதன் நகர் (சால்ட் லேக்) உள்ளிட்ட மேலும் பல நகராட்சிகளையும் மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் தட்டிப்பறித்து உள்ளது.

வீழ்ச்சி

5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 81 நகராட்சிகளில் 55 நகராட்சிகளை இடதுசாரி முன்னணி கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் சரியத்தொடங்கிய இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கு இந்த தேர்தலில் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

........தினத்தந்தி 03.06.2010

nambi
03-06-2010, 03:40 PM
அரும்பாக்கம், முகமது சதக் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலித்ததினால் எழுந்த பொதுமக்கள் புகாரை அடுத்து பள்ளிக்கல்வித்துறை தணிக்கை அதிகாரிகள் பள்ளியை சோதனையிட்டு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். புகார் நிருபிக்கப்பட்டால் பள்ளியின் அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர்.
.....சன் செய்தி 06.03.2010

சிவா.ஜி
03-06-2010, 04:07 PM
அதிகாரிகள் 'கவனிக்கப்பட்டு' பள்ளி மீண்டும் கோலாகலமாய் நடைபெறும்.

nambi
05-06-2010, 03:56 AM
திருச்சி : குடும்ப பொருளாதார சூழல், பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக பால்ய திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த திருச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்பு மேல் ஏற்பட்ட காதலால், "ஹெல்ப் லைன்-1098' எண்ணுக்கு போன் செய்து, கட்டாயத் திருமணத்திலிருந்து தன்னை தற் காத்துக் கொண்டு மற்ற சிறுமிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

திருச்சி, உறையூர், காவிரிநகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாஸ்கர் (42); இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு மணிமொழி(16) சக்திவேல் (15) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நிர்மலா சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். சரஸ்வதி (31) என்பவரை, பாஸ்கர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு லோகேஸ்வரி (6) என்ற மகள் உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடித்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மணிமொழிக்கு, திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்து, வரன் பார்த்தனர். குளித்தலை, வையாபுரி நகரைச் சேர்ந்த மாதையன் - சரசு மகன் சிவகுமார் என்பவருக்கு நிச்சயம் செய்தனர். மணிமொழிக்கு திருமணத்தில் இஷ்டமில்லை. குடும்ப பொருளாதார சூழல் மற்றும் பெற்றோர் வற் புறுத்தல் காரணமாக, திருமணத் துக்கு சம்மதித்தார். வரும் 7ம் தேதி, குளித்தலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், தேவாங்கர் சமுதாய கூடத்தில் திருமணம் நடக்க இருந்தது.

எஸ்.எஸ்.எல்.சி., முடிவு வெளியானதில், மணிமொழி, 417 மதிப் பெண் பெற்றிருந்தார். மதிப்பெண்ணை பார்த்ததும் எப்படியாவது உயர் படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிய மணிமொழி, திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். மணிமொழி படித்த உறையூர் எஸ்.எம்., மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்புக்காக துவங்கப்பட்ட, "ஹெல்ப் லைன் எண்-1098' பற்றி, அக் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பெண் குழந்தை பாதுகாப்புச் சட்டம், பாலியல் திருமணம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மீறி யாராவது பால்ய திருமணத் துக்குக் கட்டாயப்படுத்தினால், 1098க்கு போன் செய்யலாம் என்றும் கூறினர். சமயோசிதமாக சிந்தித்த மணிமொழி, குழந்தைகள், "ஹெல்ப் லைன் எண்-1098' எண்ணுக்கு போன் செய்து, "18 வயது பூர்த்தியடையாத எனக்கு, கட்டாயத் திருமணம் செய்து வைக்க, என் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு திருமணத் தில் இஷ்டமில்லை' எனக் கூறினார். இதையடுத்து, "ஹெல்ப் லைன்' திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆல்பர்ட், மாவட்ட சமூகநல அலுவலர் ஸ்ரீலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். திருமணம் குறித்து விசாரித்து, ஊர்ஜிதம் செய்தனர்.

ஸ்ரீலட்சுமி, ஆல்பர்ட், குழந்தைகள் நல குழு உறுப்பினர் வக்கீல் ஜெயந்திராணி ஆகியோர், நேற்று காலை 10 மணியளவில் குளித்தலை சென்று, மாப்பிள்ளை பெரியப்பா ஜெயபாலிடம் முழு விவரங்களையும் தெரிவித்து, திருமணத்தை நிறுத்தும்படி கூறினர். இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்த சம்மதித்தனர். அதன்பின், மாணவி மணிமொழியை மீட்டு, திருச்சி சேவா சங்கம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். மணிமொழி பெற்றோரை சமூகநல அலுவலர் ஸ்ரீலட்சுமி எச்சரித்தார். ""என் மகன் கஷ்டப்பட்டு, இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தான். குடும்ப கஷ்டம் காரணமாகத் தான் பேத்திக்கு திருமணம் ஏற்பாடு செய்தோம். முதலில் சம்மதம் தெரிவித்தாள்; கடைசியில் இப்படி செய்துவிட் டாள்,'' என, மணிமொழி பாட்டி சொர்ணம், அழுதபடியே சென்றார். தனக்கு நடக்க இருந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய துணிச்சல் கொண்ட சிறுமி மணிமொழியை அனைவரும் பாராட் டினர்.

.....தினமலர் 04.03.2010...கலைஞர் செய்திகள்.03.06.2010

nambi
05-06-2010, 05:02 PM
கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் நிரம்பி வழிவதால் அங்கிருந்து 150 ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 700 படகு அகதிகள் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 600 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும், 150 ஈழத்தமிழரையும் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு.... (http://www.nerudal.com/nerudal.16850.html)

.....நெருடல் இணையம்..05.06.2010

nambi
06-06-2010, 05:10 AM
ஜெருசலேம், ஜூன் 5: பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதிக்கு உதவிப் பொருள்கள் ஏற்றி வந்த கம்போடிய நாட்டு கப்பலை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கப்பலை கைப்பற்றி ஆஷ்டோட் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் இந்தத் தடவை கப்பலில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியை நோக்கி கம்போடிய நாட்டு கப்பல் வருகிறது என்ற தகவலை அறிந்ததுமே இஸ்ரேல் கடற்படை வீரர்கள் படகில் சென்று கப்பலை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்தக் கப்பலை ஆஷ்டோட் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். இஸ்ரேல் கடற்படையினருக்கு அந்தக் கப்பலில் வந்த மனிதாபிமான உதவிக் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் அமைதியாக இருந்தனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவரும் வெளிநாட்டுக் குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து வருகின்றனர். கடந்த வாரம் துருக்கி கப்பலில் வந்த சர்வதேசக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 15 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

....தினமணி..06.06.2010

nambi
06-06-2010, 05:16 AM
http://www.dinamani.com/Images/article/2010/6/4/World.jpg


ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 11ம் தேதி தென்ஆப்ரிக்காவில் தொடங்குகிறது.இந்த போட்டி யின் தொடக்க விழாவில் முன் னாள் அதிபர் நெல்சன் மண் டேலா கலந்து கொள்கிறார். 91 வயதான மண்டேலா உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற தீவிர முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் மண்டேலா கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக அவர் 4 டிக்கெட்டுகள் கேட்டு இருப்பதாகவும் தென் ஆப்ரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.தென்னாப்பிரிக்காவில் வரும் 11-ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளது. ""உலகின் மிகச் சிறந்த மனிதராகப் போற்றப்படும் மண்டேலா, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்பது சிறப்பான விஷயம்'' என்று தென்னாப்பிரிக்க ஆளும் கட்சி கூறியுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை, தென்னாப்பிரிக்க கால்பந்து அணி வீரர்களை மண்டேலா சந்தித்து உற்சாகப்படுத்தினார். நெல்சன் மண்டேலாவுக்கு தற்போது 91-வயதாகிறது. இதன் காரணமாக அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. 2004-ம் ஆண்டில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
.....தினகரன், தினமணி 05.06.2010

nambi
06-06-2010, 06:13 AM
http://dinamani.com/Images/article/2010/6/3/spt4.jpg

சூரிச்: உலககோப்பை கால்பந்து போட்டியில் அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலுக்கு தரவரிசை பட்டியலில் முதலிடம் கிடைத்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் வரும் ஜூன்11ம் தேதி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில் கால்பந்து தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதில் பிரேசில் அணிமுதலிடம் பிடித்தது. ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் 2ம் இடத்திலும், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, நடப்பு சாம்பியன் இத்தாலி, ஜெர்மனி,அர்ஜெண்டைனா,இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளது. இந்தியா 132வது இடத்திலும் உள்ளன.

.....நன்றி தினகரன்..04.06.2010

சிவா.ஜி
06-06-2010, 06:22 AM
என்னது....இந்தியாவும் கால்பந்துக் குழுவின் தரவரிசைப் பட்டியலில் இருக்கிறதா.....

இந்தியாவுக்கும் கால்பந்துக்கும் என்னங்க சம்பந்தம்.....

பகிர்வுக்கு நன்றிங்க நம்பி.

nambi
06-06-2010, 06:35 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியன்களான இத்தாலி அணி 1- 2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியிடம் தோல்வி தழுவியது.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் மெக்சிகோ வீரர்கள் கார்லோஸ் வெலா, அல்பர்ட்டோ மெதினா கோல்களின் மூலம் 2- 0 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு இத்தாலி வீரர் பொனுச்சி ஆறுதல் கோலை அடித்தார்.

ஆஸ்ட்ரியாவில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி தென் கொரியா அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


........லங்காஸ்ரீ ஸ்போர்ட்ஸ் 05.06.2010

nambi
06-06-2010, 06:53 AM
உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணிக்கு தனி இடம் உண்டு. இதுவரை அந்த அணி 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இது யாரும் இதுவரை படைத்திராத ஒரு சாதனையாகும். பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலி 4 முறை கோப்பையை வென்றுள்ளது.
.............................................
உலகத் தர வரிசையில் முதலிடத்தில் இருப்பதும் பிரேசில்தான். அடுத்த இடத்தில் ஸ்பெயினும், 3வது இடத்தில் போர்ச்சுகலும் உள்ளன.

நெதர்லாந்து 4, இத்தாலி 5, ஜெர்மனி 6, அர்ஜென்டினா 7, இங்கிலாந்து 8, பிரான்ஸ் 9, குரோஷியா 10வது இடத்திலும் உள்ளன.
....................................
உலக அளவில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட அணிகள் - பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகியவை. மற்ற அணிகளிலும் பல ஸ்டார் வீரர்கள் உள்ளன. ஆனால் இந்த அணிகளே ஸ்டார் அணிகளாக உள்ளதுதான் விசேஷமானது.
..................................
இன்னும் சில.....
அர்ஜென்டீனா அணிக்கு சற்றே கடினமான பிரிவாக இம்முறை அமைந்துள்ளது. நைஜீரியா, தென் கொரியா, கிரீஸ் அணிகளை அர்ஜென்டீனா எதிர்கொள்ளவேண்டி வரும்.

பயிற்சி ஆட்டத்தில் மோதிய நைஜிரியா மற்றும் சவுதிஅரேபிய அணிகள் கோல் எதுவும் போடாமல் டிராவில் முடித்து கொண்டன.

உலக கோப்பை முதல் சுற்றில் அர்ஜென்டைனா.. நைஜிரியாவுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...தட்ஸ்தமிழ்...தினமணி...04.06.2010

nambi
06-06-2010, 07:59 AM
கோவை: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு 1000 சிறப்பு பேருந்துகள் விடப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், ஊர்வலக்குழு தலைவருமான கே.என்.நேரு கூஙறியுள்ளார்.

கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், ஊர்வலத்தை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் கண்டு களிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் வழக்கமான கட்டணத்தில் இயங்கும்.

இது தவிர கோவையை சுற்றி 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். வெளிïர்களில் இருந்து வரும் பஸ்கள் அந்த பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும். பின்னர் அவைகள் அங்கிருந்து புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து கொடிசியாவில் நடைபெறும் மாநாட்டு திடலுக்கு சென்று, வருவதற்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இந்த பஸ்களுக்கு இலவச கட்டணம், சலுகை கட்டணம் கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரத்து 275 பஸ்கள் உள்ளன. அதில் சுமார் ரூ. 2500 கோடி செலவில் 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தேவைக்கு ஏற்ப புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டு வருகிறது. ஆகவே மேலும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடுவதற்கோ, இருக்கிற வழித்தடத்தை நீடிப்பதற்கோ எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

....நன்றி தட்ஸ் தமிழ்

nambi
06-06-2010, 08:14 AM
http://www.dinamani.com/Images/article/2010/6/5/wanni.jpg
கொழும்பு, ஜூன் 5- இலங்கையில் வன்னி பகுதியில் நடைபெற்ற இறுதிப் போரின் போது சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று 'தி ஜப்பான் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதிக்காததால், கொல்லப்பட்ட மக்கள் குறித்து துல்லியமான எண்ணிக்கை தெரியாது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் அந்த தகவலை மேற்கொள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அரசு தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்படாமல் இருப்பதால், அதனால் போர்முனை வெற்றியை தக்க வைக்க இயலாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
....தினமணி 05.06.2010

nambi
06-06-2010, 08:33 AM
ஈழ தமிழ் மக்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய கொடுமையான தாக்குதலில் 3 லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 லட்சம் தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு ஓராண்டாகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லி வரும் ராஜபக்சேவை இந்தியா வரவேற்பது உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் நெஞ்சில் வெந்த புண்ணில் வேல் பாய்சுவதாகும். ராஜபக்சே டெல்லிக்கு வரும் 8-ந் தேதி அன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு குடி அமர்த்தப்படவில்லை என்றால் அக்டோபர் 6-ந் தேதி இலங்கை நோக்கி பயணம் செய்ய இருக்கிறோம்.

....தினத்தந்தி 06.06.2010

nambi
06-06-2010, 12:27 PM
குழந்தை கடத்தல் விவகாரத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழக பெண்கள் பிரிவுத் தலைவி லலிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

இது குறித்து கிருஷ்ணகிரி காவல்துறை சூப்பிரண்ட் ஏ.ஜி. பாபு உள்ளூர் பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவிக்கையில்:

"குழந்தை கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். கடத்தப்பட்ட குழந்தைகள் இன்னும் பல இடங்களில் விற்கப்பட்டதாகவும், தெரிய வந்துள்ளது. யார், யாரிடம் குழந்தைகள் விற்கப்பட்டது என்றும் விசாரித்து வருகிறோம். குழந்தை கடத்தலுக்கு சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கடத்தல் கும்பல் பிடிபட்டதும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் சிலர் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் பெயர், விபரம் பற்றி விசாரித்து வருகிறோம்.

லலிதாவை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் குழந்தை கடத்தல் சம்பவத்தில் மேலும் யார், யாருக்கு தொடர்பு இருக்கும் என்று தெரியவரும்." என்றார்.

கிரிஜா கடத்தி வந்த குழந்தைகளை லலிதாவிடம் விற்று விடுவார். குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவி போல் செயல்பட்டவர் லலிதா. இவருக்கு குழந்தைகளை கடத்தி தந்தவர் தான் கிரிஜா, தனலட்சுமி, ஆகியோர் குழந்தைகளை கடத்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்றுள்ளனர். இதன் மூலம் லலிதாவிற்கு பணம் குவிந்துள்ளது.

8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது புதுச்சேரி பகுதியில் புதிதாக கல்யாண மண்டபம் ஒன்றையும் கட்டி வருகிறார். இவருக்கு கிரிஜா தவிர தமிழகத்தில் மற்ற குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இவர் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் லலிதாவை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

.....வெப்துனியா 06.06.2010

nambi
06-06-2010, 12:44 PM
ஹைதராபாத், ஜூன் 4: அநாகரிகமான ஆடைகளை பக்தர்கள் அணிந்து வரத் தடை விதிப்பது தொடர்பாக திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் திருப்பதி-திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ் கூறியதாவது: திருமலை-திருப்பதி கோயிலுக்குள் நுழையும்போது சிலர் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து வருவதாக புகார் வந்துள்ளது.

பெர்முடாஸ், டி-ஷர்ட்-ஷார்ட்ஸ் அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப் போவதில்லை. இதுதொடர்பாக கோயில் ஊழியர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளோம். அநாகரிகமான ஆடைகளை அணிந்து கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும். விரைவில் இதை அமலுக்கு கொண்டு வருவோம். அதே நேரத்தில் முழுக்கால் சட்டை (பேன்ட்), டி-ஷர்ட் அணிந்து கோயிலுக்குள் வருபவர்கள் தடை செய்யப்பட மாட்டார்கள் என்றார் அவர்.

திருப்பதி கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவை பாஜக, ஹிந்து அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

....தினமணி..06.06.2010

nambi
07-06-2010, 01:46 AM
சென்னை, ஜூன் 6: இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு திங்கள்கிழமை தில்லி செல்கிறது.
..............
இதற்காக தமிழக எம்.பி.க்கள் குழுவினர் திங்கள்கிழமை சென்னையிலிருந்து தில்லி புறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக எம்.பி.க்கள் - ராஜபட்ச சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை, முதல்வர் கருணாநிதி ஏற்கெனவே தில்லிக்கு அனுப்பியுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

........தினமணி 06.06.2010

nambi
07-06-2010, 01:49 AM
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில்இடியுடன்கூடிய மழைபெய்யக்கூடும். நேற்று அதிகபட்சமாக கோவில்பட்டியில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. வெப்ப சலனத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிஒருவர் கூறும்போது, ""தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் மற்றும் இரவில் தூறல் மழை பெய்யலாம். வெப்ப அளவு படிப்படியாக குறையும்,'' என்றார்.

.....தினமலர் 06.06.2010

nambi
07-06-2010, 01:57 AM
சென்னை:தடையை மீறி இலங்கைப் பட விழாவில் பங்கேற்ற நடிகை ஜெனிலியாவை விஜய் படத்திலிருந்து நீக்கியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். விழாவுக்குப் போகவில்லையென்று அவர் பொய் சொல்வதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, இதனால் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் தரப்படாது என்றும் கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

இலங்கையில்,சர்வதேச இந்திய படத் திரைப்படவிழா நடைபெற்றது. இந்தப் படவிழாவுக்கு நடிகர்நடிகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் செல்லக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய நடிகர் சங்கம்,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டு கூட்டத்தின் வேண்டுகோளை மீறி கலந்துகொள்பவர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனையேற்று கொழும்பில் தொடங்கிய சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் பல நடிகர்கள் புறக்கணித்துவிட்டார்கள். ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,அமிதாப்பச்சன்,ஷாருக்கான்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் உட்பட பலர் அந்தப் பட விழாவுக்குப் போகவில்லை. தமிழ் நடிகர்நடிகைகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததால் இலங்கைப் படவிழா படுதோல்வியடைந்துள்ளது. அதேநேரம்,தடையை மீறி சல்மான்கான்,ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய்,சஞ்சய்தத் உள்ளிட்ட சில இந்தி நடிகர்கள் இலங்கைப் படவிழாவில் கலந்துகொண்டார்கள். நடிகை ஜெனிலியா,காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் விழாவில் பங்கேற்றார். இதுபற்றி சிங்கள ஊடகங்களிலும் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

.....தட்ஸ்தமிழ்...தினக்குரல்

nambi
07-06-2010, 02:03 AM
இலங்கை முகாம்களில் உள்ள 80 ஆயிரம் தமிழர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி இருக்கிறார். டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் அதுபற்றி வலியுறுத்தும்படி, அந்த கடிதத்தில் கருணாநிதி கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
ராஜபக்சே டெல்லி வருகையை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

80 ஆயிரம் தமிழர்கள்

இலங்கையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளாக, திரும்பவும் அவர்கள் வசித்த இடத்திலேயே குடியமர்வு செய்ய அந்த நாட்டு அரசு உறுதி அளித்திருந்தது தாங்கள் அறிந்ததே.

இலங்கையில் உள்ள முகாம்களில் 80 ஆயிரம் தமிழர்கள் புனர்வாழ்வுக்காக காத்திருக்கிறார்கள் என்ற செய்தி எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அரசியல் தீர்வு

மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்து தற்போது வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்களின், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உதவிகளையும், சமநீதியையும் அளித்து, அவர்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட வழிவகுக்க வேண்டும்.

எனவே, இலங்கை அதிபருடனான உங்களது சந்திப்பின்போது, மேற்கண்ட 2 பிரச்சினைகளையும், முக்கிய அம்சங்களாக குறிப்பிட்டு, அவருடன் அது பற்றி விவாதிக்க வேண்டும்.

விரைவாக மேற்கொள்ள

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப, மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்தம் செய்வதற்கான பணிகளையும், அவர்களது மறுவாழ்வுக்கான பணிகளையும் இலங்கை அரசு விரைவாக மேற்கொள்ள இலங்கை அதிபரை தாங்கள் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

....தினத்தந்தி 07.06.2010

nambi
07-06-2010, 02:08 AM
செஞ்சி, ஜுன்.7-

செஞ்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அரசு வழங்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு யாரோ மர்ம ஆசாமிகள் தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் 62 டி.வி.க்கள் எரிந்து நாசமானது.

இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள்.

விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது செவலபுரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 1,359 இலவச வண்ணத்தொலைக்காட்சிகள் வரவழைக்கப்பட்டன. இதில் 1,226 தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டு விட்டன.

மீதம் இருந்த 133 இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் செவலபுரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஒரு அறை யில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தீ வைப்பு

நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம மனிதர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த இலவச வண்ணத்தொலைக்காட்சிகள் வெடித்து சிதறின. இதை பற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

62 தொலைக்காட்சிகள் நாசம்

இந்த தீ விபத்தில் 62 டி.வி.க்கள், அலுவலக கணிணி, மற்றும் 9 பாலிதீன் நாற்காலிகள் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ வைப்பு சம்பவம் பற்றி காவலர்கள் வழக்கு பதிவு செய்து, தீ வைத்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

........தினத்தந்தி 07.06.2010

nambi
07-06-2010, 02:12 AM
ஜெருசலேம், ஜுன்.7-

இஸ்ரேலின் பொருளாதார முற்றுகை காரணமாக பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவிபொருள்களை உலகநாடுகள் அனுப்பி வைத்தன. இந்த பொருள்களை ஏற்றிக்கொண்டு காசாவுக்கு ஐரீஷ் நாட்டு கப்பல் ஒன்று காசாவை நோக்கி சென்றது. இந்த கப்பலையும் இஸ்ரேல் கைப்பற்றியது. கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதில் இருந்த 19 பேரும் (பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் கப்பல் சிப்பந்திகள்) அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

கப்பலில் இருந்த மலேசியர்கள் ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருந்து அவர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.

ஏற்கனவே இப்படி உதவி பொருள்களை ஏற்றிச்சென்ற கப்பலில் ஏறிய இஸ்ரேலிய கடற்படையினர் கப்பலில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 15 பேர் பலியானார்கள்.

.....தினத்தந்தி 07.06.2010

nambi
07-06-2010, 02:31 AM
வேலூர், ஜுன்.7-

வேலூரில் கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் சூரியா பயன்படுத்திய `செல்போன்` மூலம் துப்பு துலங்கி வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

வேலூரில் கொலை

வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் சூரியா (வயது 35). நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் நடத்தி வந்தார். ஆற்காடு சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் சூரியா இருந்தபோது 4 மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க வேலூர் டவுன் துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாலசுப்பிரணியன் தலைமையில் 5 காவல் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சூரியாவின் நண்பர்கள் யார், தொழில் ரீதியாக அவருக்கு வேண்டியவர்கள் யார், விரோதிகள் யார் என்று கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

3 இடங்களில் வெட்டு

சூரியா கொலை வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட சூரியா நல்ல பலசாலி. அவரை தாக்கிவிட்டு எளிதாக யாரும் தப்பிச்செல்ல முடியாது. ஏனென்றால் அவரும் திருப்பி தாக்கும் வலிமை கொண்டவர். அதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் சூரியாவின் அலுவலகத்துக்கு சென்ற உடனேயே கையில் வைத்திருநëத மிளகாய் பொடியை சூரியாவின் முகத்தில்ë வீசியுள்ளனர். அதனால் நிலைகுலைந்த சூரியா குனிந்து தனது கண்களை கசக்கியபோது மர்ம ஆசாமிகள் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். மொத்தம் 3 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளது. அதனால் அவர் மயங்கி கீழே விழுந்த நேரத்தில் அந்த ஆசாமிகள் தப்பி ஓடி விட்டனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்து எந்த பொருட்களும் திருட்டு போனதாக தெரியவில்லை. எனவே மர்ம ஆசாமிகள் கொலை செய்ய வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் அங்கு சென்றுள்ளனர். அவர்களுடைய திட்டம் நிறைவேறியதும் தப்பி விட்டனர்.

துப்பு துலங்குகிறது

கொலை நடந்த இடத்தில் பதிந்திருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் அங்கு கிடந்த ஒரு அரிவாள், சூரியா பயன்படுத்திய `செல்போன்' ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். கொலை சுமார் 12.30 மணிக்கு நடந்திருக்கும் என கருதப்படுகிறது. அந்த செல்போனில் 12.15 மணிக்கு சூரியா கடைசியாக பேசியுள்ளார். அதுபோல 11.15 மணிக்கு சூரியாவுக்கு கடைசியாக ஒரு அழைப்பு வந்துள்ளது.

கொலை நடந்த அன்று சூரியா எந்தெந்த எண்ணுக்கு பேசியுள்ளார். எந்த எண்ணில் இருந்து போன் வந்துள்ளது என்கிற பட்டியலை காவலர்கள் சேகரித்து வருகிறார்கள். அந்த பட்டியல் தயாராகி, சூரியாவுடன் பேசியவர்களை கண்டுபிடித்து விட்டால் கொலை கும்பலை எளிதாக பிடித்து விடலாம்.

இவ்வாறு அந்த காவல் அதிகாரி கூறினார்.

இதற்கிடையே சந்தேகப்பட்ட சிலரை போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

.....தினத்தந்தி 07.06.2010

nambi
07-06-2010, 02:37 AM
செங்குன்றம், ஜுன்.7-

தனியார் மருத்துவமனையில் குழந்தையை கடத்திய மர்ம பெண்ணின் வரைபடத்தை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கடத்தல்

சென்னை திருவொற்றிïர் சார்லஸ் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு சுபாஷி என்ற 2 வயது மகள் உள்ளார். கவிதாவுக்கு கடந்த 2-ந் தேதி மாதவரம் அஞ்சல்பெட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான பெண்குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கவிதாவின் தாயார் அமுதா குழந்தையை மாடிக்கு எடுத்து சென்றார்.

அமுதாவுக்கு வலது கால் சற்று ஊனமாக இருந்தது என்பதால் குழந்தையை எடுத்து வர சிரமப்பட்டார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண், நான் குழந்தையை எடுத்து வருகிறேன் என்று குழந்தையை வாங்கிக் கொண்டார். பின்னர் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.

வரைபடம் வெளியீடு

குழந்தையையும், மர்ம பெண்ணையும் தேடிய போது மர்மபெண் ஆட்டோவில் குழந்தையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து குழந்தையின் தாயார் கவிதா மாதவரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் மாதவரம் உதவி ஆணையர் ஆனிவிஜயா மேற்பார்வையில் 8 உதவி ஆய்வாளர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தமிழக காவலர்கள் (போலிசார்) மருத்துவமனையில் இருந்த பொதுமக்களிடமும் அமுதாவிடமும் அந்த பெண்ணின் அங்க அடையாளங்களை சேகரித்தனர்.

இதை வைத்து அந்த பெண்ணின் வரைபடத்தை கணிப்பொறியின் மூலம் வரைந்தனர். கணிணியில் வரையப்பட்ட படத்தை அமுதாவிடம் காண்பித்தனர். மர்ம பெண்ணின் உருவமும் வரைபடமும் ஒத்திருப்பதாக அமுதா தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

இந்த நிலையில் குழந்தையை மர்ம பெண் கடத்திச் சென்றதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுடன் மேலும் ஒரு பெண் இருந்தார். மர்ம பெண் வெள்ளை நிற பூ போட்ட கறுப்பு சேலை கட்டியிருந்தார். அந்த 2 பெண்களும் மூலக்கடை சந்திப்பில் இறங்கி சென்று விட்டனர் என்பது போன்ற விவரங்களை கூறினார். வரையப்பட்ட அந்த பெண்ணின் வரைபடத்தை ஆட்டோ ஓட்டுநரும் உறுதி செய்தார்.

இதையடுத்து குழந்தையை கடத்திச் சென்ற 2 பெண்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் குழந்தைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தனலட்சுமி, சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா, ராணி ஆகியோருக்கு இந்த மர்ம பெண்ணுடன் தொடர்பு உள்ளதா? என்றும் புறநகர காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

.....தினத்தந்தி 07.06.2010

nambi
07-06-2010, 07:51 AM
http://img.dinamalar.com/data/large/large_13981.jpg

தப்பித்த அமெரிக்க முக்கிய குற்றவாளி ஆண்டர்சன்


போபால் : சுமார் 15 ஆயிரம் கொன்ற போபால் விஷ வாயு வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்*ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையொட்டி கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் தண்டனை பின்னர் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் . அதிகம் பட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற பேச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் உள்ள நிறுவன தலைவர் வழக்கில் இருந்து தப்பித்து விட்டார் . போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவில், அதன் பாதிப்பில் 15 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது; 2 ஆயிரத்து 259 பேர் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின; 5 லட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மிக்' எனப்படும் "மீதைல் ஐசோ சைனைடு ' என்ற நச்சு வாயு கசிவு, பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. கடந்த 26 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.

ஆண்டர்சன் அமெரிக்காவில் பதுங்கல் : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரில், இந்நிறுவனத்தின் துணை மேலாளர் ஆர்.பி.ராய் சவுத்ரி காலமாகிவிட்டார்.விஷவாயு சம்பவம் நடந்த பின், மத்தியக் குழுவினர் சென்று ஆலையை பார்வையிட்டனர். போதிய பராமரிப்பின்மை தான் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இந்த ஆலையின் தலைவரும், அமெரிக்கருமான வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட மூன்று பேர், இவ்வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக போபால் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.

இன்று வழங்கப்பட்ட தீர்பை கேட்க கோர்ட்டில் ஏராளமனவர்கள் கடியிருந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இவர்கள் ஏன் வழக்கில் சேர்க்கப்பட்டு தண்டனை வாங்கி கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். முன்னதாக பூட்டிய அறைக்குள் நீதிபதி தீர்ப்பை அறிவித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குற்றவாளிகள் யார் ? முழு விவரம் : இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் ( ஆர்.பி ராய்சவுத்ரி ) இறந்து விட்டார். ஏனையோர் விவரம் வருமாறு: பொறுப்புகள் அடைகுறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. கேசூப் மகிந்திரா ( யு.சி.எல்., சேர்மன்) , விஜய்கோகலே ( மானேஜிங் டைரக்டர்) , கி÷ஷார்கம்தார்( உதவி தலைவர்) , முகுந்த் ( வொர்க்ஸ் மானேஜர்) , எஸ்பி., சவுத்ரி( புரடக்ஷன் மானேஜர் ) , கே.வி., ஷெட்டி ( பிளான்ட் சூப்பிரண்டு ) எஸ்.ஐ., குரேஷி ( புரடக்ஷன் அசிஸ்டன்ட் ) .

......தினமலர் 02.06.2010

nambi
07-06-2010, 07:55 AM
வேலூர் : திருப்பத்தூர் அருகே நண்பர்கள் கேலி செய்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மகன் சிவலிங்கம்(21); கட்டட மேஸ்திரி. குரிசிலாப்பட்டு கல்லுக்குட்டை புதூரை சேர்ந்த பழனி மகள் திவ்யா(14). அவர், வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிவலிங்கமும், திவ்யாவும் காதல் வசப்பட்டு, பெற்றோருக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்தனர்.அவர்களின் காதல் விவகாரம் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டாரும் கண்டித்து எச்சரித்துள்ளனர். சிவலிங்கத்தின் நண்பர்களும் சிறுவயது பெண்ணை ஏமாற்றி காதலிப்பதாக கேலி செய்தனர்.மனமுடைந்த காதல் ஜோடி நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யாவும், சிவலிங்கமும் பரிதாபமாக இறந்தனர். கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.

.....தினமலர் 06.06.2010

nambi
07-06-2010, 08:03 AM
புதுடெல்லி, ஜுன்.7-

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்று முடிவு செய்கிறது. பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகள் வரையிலும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.25 முதல் ரூ.50 வரையிலும் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது.

ரூ.72 ஆயிரத்து 300 கோடி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை விலையை விட, விற்பனை செய்யும் எரிபொருளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு பாரிக்கார் கமிட்டியும் பரிந்துரை செய்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், `பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் மண்ணெண்ணை போன்றவற்றின் விற்பனை மூலமாக ரூ.72 ஆயிரத்து 300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு விலை உயர்வு?

தற்போது, பெட்ரோல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.3.35ம் டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.3.49ம் சமையல் கியாஸ் விற்பனையால் சிலிண்டருக்கு ரூ.262ம் மண்ணெண்ணை விற்பனையால் ரூ.18.82ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகள் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுபோல, சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்த்த தீர்மானித்துள்ளது. மேலும், மண்ணெண்ணெய் விலையிலும் சிறிய அளவு உயர்த்தலாம் என கருதுகிறது.

மந்திரிகள் கூட்டம்

இந்த விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில், இன்று பிற்பகலில் கூடும் அந்த கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா, விவசாய மந்திரி சரத் பவார், ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி, ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி, சாலை போக்குவரத்து துறை மந்திரி கமல்நாத் ஆகியோர் பங்கேற்கின்றனர். மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. டீசல் விலையை உயர்த்துவதற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே, அவர் சம்மதம் தெரிவித்தால் டீசல் விலையிலும் மாற்றம் இருக்கும் என பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

இதுபோல, சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.50 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கும் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மம்தா தவிர, வேறு சில கூட்டணி கட்சிகளும் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனவே, கூட்டணி கட்சிகளின் முடிவைப் பொறுத்து சமையல் கியாஸ் விலை உயர்வு அமையும்.

இது தவிர, ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் மண்ணெண்ணை விலையையும் சிறிதளவாவது உயர்த்த மத்திய அரசு விரும்புகிறது. சமையல் மற்றும் விளக்குகளுக்கு மண்ணெண்ணையை அதிக அளவிலான ஏழைகள் பயன்படுத்துவதால் அதில் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.


.....தினத்தந்தி 07.06.2010

பாலகன்
07-06-2010, 05:31 PM
நல்ல செய்திகளை சுடச்சுட எங்களுக்கு தநதுகொன்டிருக்கும் நம்பிதம்பிக்கு எனது பாராட்டுகள்.

nambi
08-06-2010, 03:46 AM
நியூயார்க்: அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை இன்னும் பெற முடியாமல் தவிப்பதால், வேலைவாய்ப்பு மிகமிகக் குறைந்துவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 218000 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டன. ஆனால் மே மாதம் வெறும் 41000 பணியாளர்களை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நியமித்துள்ளன.

அரசுத் தரப்பில் 431,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் 411000 வேலைகள் தற்காலிகமானவைதான். எனவே இவர்கள் குறித்த காலத்துக்குப் பின் வேலையற்றவர்களாகவே இருப்பார்கள். ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 9.9 சதவிகிதமாக இருந்தது. மே மாதம் 9.7 சதவிகிதமாக குறைந்திருந்தாலும், இந்த ஜூன் மாதம் 10 சதவிகிதமாகிவிடும் என்று முன்கணித்துள்ளனர் பொருளாதார அறிஞர்கள்.

வரும் மாதங்களில் தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிகுறியே இல்லை என்பதால் திகைப்பில் உள்ளது ஒபாமாவின் அரசு. பொருளாதார அறிஞர்கள் கணித்த இரண்டாவது வீழ்ச்சி இப்போதே தொடங்கிவிட்டதோ என்று பேசத் துவங்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் ஐரோப்பிய யூனியனின் கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. இது ஐரோப்பிய யூரோ வலயத்தையே சிதறடித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. அப்படியொரு சூழல் உருவாகும்பட்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக முதலீட்டாளர்கள் ரிஸ்க்கான தொழில்களிலிருந்து தங்கள் பங்குகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நியூயார்க் மெர்க்ன்டைல் எக்ஸ்சேஞ்சில் 1 பேரல் 73.05 டாலராகக் குறைந்துவிட்டது. ஒரே நாளில் 1.56 டாலர்கள் குறைந்துள்ளன (ஆனால் இந்தியாவில் இதுபற்றி அரசு மூச்சுக் காட்டுவதில்லை!)

இந்த வீழ்ச்சிப் போக்கில் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள சின்ன ஆறுதல், யூரோவின் வீழ்ச்சி. ஒரு வாரத்தில் மேலும் 10 சதவிகிதம் குறைந்து 1.20 டாலராகிவிட்டது யூரோ.

பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அமெரிக்க வேலைச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, அமெரிக்க பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. டவ் ஜோன்ஸ் எனப்படும் தொழில்துறை குறியீட்டெண்ணில் 160 புள்ளிகள் வீழ்ந்தன.

சிறிய பங்குகளுக்கான ரஸ்ஸல் 2000 சந்தையில் 1.9 சதவிகித வீழ்ச்சி காணப்பட்டது. நாஸ்டாக்கில் 1.2 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டது.

.....தட்ஸ் தமிழ், தினகரன். 07.06.2010

nambi
08-06-2010, 03:51 AM
புதுதில்லி, ஜுன்.8 (டிஎன்எஸ்) தில்லியில் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று (ஜுன்.7) நடைபெற்றது. கூட்டத்தில், குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் போதிய அமைச்சர்கள் பங்கேற்காததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தும் முடிவு தள்ளிவைக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்; அமைச்சர்கள் குழு கூட்டத்தை மீண்டும் விரைவில் கூட்டி ஆலோசனை நடத்த இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

.....ஆறாம் திணை, தினகரன், தினத்தந்தி, தினமலர் 08.06.2010

nambi
08-06-2010, 04:06 AM
சென்னை, ஜுன் 8-

சட்டப் படிப்பில் சேர மாணவ-மாணவிகளிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. 5 ஆண்டு பி.எல். படிப்புக்கான விண்ணப்ப விற்பனை மந்த நிலையில் உள்ளது.

பி.எல். படிப்பு

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு பி.எல். படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் செயல்படும் சிறப்பு சட்டக் கல்லூரியில் பி.எல். ஆனர்ஸ் என்ற சிறப்பு சட்டப் படிப்பு உள்ளது.

ஐந்து ஆண்டு சட்டப் படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது.

மாணவர்களிடம் ஆர்வம் இல்லை

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.பி.எல். படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேசி கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த மாதம் 11-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பி.எல். படிப்புக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. விண்ணப்பம் வழங்க தொடங்கிய நாளில் இருந்தே விற்பனை குறைவாகவே இருந்தது. சட்டப் படிப்பில் சேர மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

நேற்றை நிலவரப்படி அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.கோபால் தெரிவித்தார். 5 ஆண்டு பி.எல். ஆனர்ஸ் சிறப்பு சட்டப் படிப்புக்கு 490 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
....தினத்தந்தி 08.06.2010

இன்னும் சில கல்வி செய்திகள்....

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிப் பட்டப்படிப்புகளுக்கும் கட்டாய டிப்ளோமா (தொழிற்பயிற்சி கல்வி) கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

முதுகலைப்பட்டப்படிப்பில் (தொலைதூரக்கல்வி, அஞ்சல் வழிக்கல்வி) சேர்க்கையின் போதே பாடபுத்தகங்கள் வழங்கப்படும். தேவையற்ற காத்திருப்பு தவிர்க்கப்படும். சான்றதழ் சரிபார்த்த அனைறைக்கே சேர்க்கையும் நடைபெறும்.

பட்டபடிப்பு படித்து வரும் மாணவர்களில் 15 சதவீதத்தனரே அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் சேருகின்றனர். இதை பயன்படுத்தி மாணவர்களிடம் தனியார் பயிற்சி கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வீயை, வேலைவாய்ப்பு பயிற்சியை பயிற்றுவிப்பதாக கூறி பெருந்தொகையினை பரிக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு இந்த தொழில் கல்வி இலவசமாக பட்டப்படிப்புடன் சேர்த்தே வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

....தினகரன் 08.06.2010

nambi
08-06-2010, 09:37 AM
சென்னை: திமுக கூட்டணியில், மீண்டும் பாமக சேருவதை காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாமகவின் பதிலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

திமுக, பாமக கூட்டணி அமைவதற்கு எது தடையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, நீங்கள்தான் என்று தமாஷாக கூறினார் கருணாநிதி. ஆனால் உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் தடையாக மாறுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம்,கூட்டணிக்கு பாமக மீண்டும் வருவதை காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் விரும்பவில்லையாம்.

முடிந்தவரை கடுமையாக விமர்சித்து விட்டு, தடாலடியாக கூட்டணியை விட்டு விலகிச் சென்ற பாமக, இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணிக்கு முயல்வதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் பாமக கூட்டணிக்கு திரும்பினால், வருகிற சட்டசபைத் தேர்தலில் தங்கள் விருப்பப்படியான சீட்கள் கிடைக்காது என்ற அச்சமும் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒன்றின் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், பாமக இன்னும் தனது முடிவைச் சொல்லவில்லை. அது கூட்டணியில் மீண்டும் சேர்ந்தாலும் சரி, சேராவிட்டாலும் சரி, கூட்டணியில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கூட்டணிக்குப் பலமும் கிடைக்கப் போவதில்லை. பலவீனமாகப் போவதும் இல்லை.

கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள முக்கியத்துவம் அப்படியேதான் உள்ளது. பாமக சேர்ந்தாலும் கூட அது தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் 80 சீட் வரை கேட்க காங்கிரஸ் தயாராகி வருகிறதாம். ஆனால் பாமக கூட்டணிக்கு வந்தால் இதில் பாதிப்பு ஏற்படும். பாமக 40 சீட் வரை கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் நேற்று முதல்வர் கருணாநிதியை பாமக தூதுக்குழு சந்தித்தபோது பேசியதாக கூறப்படுகிறது. பாமக 40 சீட் கேட்டால் காங்கிரஸுக்கான சீட் குறையும் என காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.

இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முடிவை அறிவுக்கவுள்ளார். அதுவரை காத்திருக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

......தட்ஸ் தமிழ் 08.06.2010

nambi
08-06-2010, 09:40 AM
சென்னை: தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்திருக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வரும் ஜூன் 9ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படவிருக்கிறது.

மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரியல்-வேதியல்- இயற்பியல் பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

www.tnhealth.org என்கிற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வரும் ஜூன் 9ம் தேதி அன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

ரேண்டம் எண், ஒரே கூட்டு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிட உதவுகிறது. இந்த ஆண்டு 18,230 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கின்றனர்.

தரவரிசைப்பட்டியல் (ரேங்க் பட்டியல்), சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் ஜூன் 11ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினமே, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் தரவரிசைப்பட்டியல் (ரேங்க் பட்டியல்) ஒட்டப்படும். ஜூன் 21ம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் தொடங்குகிறது.

.....தட்ஸ் தமிழ் 08.06.2010

nambi
08-06-2010, 09:43 AM
சென்னை, ஜுன்.8-

இந்தியாவுக்கு வரும் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இன்று வருகிறார்

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர், மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.

கொலை மற்றும் கடத்தல்

சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் போலீசாரால் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு 1988-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, ரூ.7 லட்சத்தை பிணையத் தொகையாக கேட்டார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

ஐகோர்ட்டில் வழக்கு

1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் நிலையில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வர இருப்பதால் அவரை கைது செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

........தினத்தந்தி 08.06.2010

nambi
08-06-2010, 09:47 AM
சென்னை தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றோடு மனுத் தாக்கல் முடிந்ததால் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.

ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து 6 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 31ம் தேதி தொடங்கியது.

இதில் திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, செல்வகணபதி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பனும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கம், மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் மனு தாக்கல் செய்தார்.

இன்று பிற்பகலுடன் மனுத் தாக்கல் முடிவடைந்தது. இந்த 6 பேர் தவிர 3 சுயேச்சைகளும் மனுத் தாக்கல்செய்துள்ளனர். மனுக்களை திரும்ப பெற 10-ந்தேதி கடைசி நாள். சுயேச்சைகளின் மனுவை முன்மொழிந்து எந்த எம்.எல்.ஏவும் சான்றளிக்கவில்லை. இதனால், அவர்களது மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடியாகி விடும். இதையடுத்து கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

வருகிற 10ம் தேதி 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

.....தட்ஸ் தமிழ் 08.06.2010

nambi
08-06-2010, 09:53 AM
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், 61 வயது இந்தியர் கத்தியால் குத்தப்பட்டு, பாலத்துக்கு அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் 61வயது நபர், மெல்போர்ன் நகரம் அருகே உள்ள டோன்கேஸ்டர் என்ற பகுதியில், பாலத்துக்கு அடியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். பாலத்தின் மீது, ரத்தகறை இருப்பதை பார்த்த போலீசார் மேற்கொண்டு ஆராய்ந்த போது, பாலத்துக்கு அடியில் இந்த முதியவர் இறந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான, அவரது மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்த நபரின், விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

....தினமலர் 08.06.2010

nambi
08-06-2010, 09:56 AM
சென்னை, ஜுன்.8-

நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஏற்கனவே 2 1/2 வயதில், `தியா' என்ற பெண் குழந்தை உள்ளது. ஜோதிகா, இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார்.

நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக அவரை, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தார்கள். நேற்று அதிகாலை 4 மணிக்கு, ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

ஆண் குழந்தை பிறந்ததையொட்டி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சூர்யா இனிப்பு வழங்கினார். அவருடைய ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள்.
....தினத்தந்தி 08.06.2010

சிவா.ஜி
08-06-2010, 09:59 AM
அன்றாட செய்திகள் மட்டுமில்லாது, பயனுள்ளத் தகவல்களையும் தொகுத்தளிப்பதற்கு நன்றிங்க நம்பி.

nambi
08-06-2010, 10:49 AM
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க விரும்பும் தொண்டர்கள், நாளை பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் அவரைச் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போதே அனைத்து கட்சிகளும் கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டன. அ.தி.மு.க.,வில் இருந்து சில பழைய பிரமுகர்கள் தி.மு.க.,வுக்குத் தாவியது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தலைமையைச் சந்தித்து தங்கள் மனக்குமுறலைத் தெரிவிக்க முடியவில்லை; உள்ளூர் பிரச்னைகள், கட்சிக்குள் ஏற்படும் கோஷ்டி மோதல் பற்றிய புகார்களை தெரிவிக்க முடியவில்லை எனவும் சில புகார்கள், அக்கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சென்றடைந்தன. இக்குறையைப் போக்கும் விதமாக நாளை அவர், தொண்டர்களைச் சந்திக்க உள்ளார்.


இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பொதுச் செயலர் ஜெயலலிதா, நாளை (புதன் கிழமை) பகல் 2 மணியளவில், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை நிலையத்துக்கு வர உள்ளார். அப்போது, அவரிடம் மனு கொடுக்க விரும்பும் தொண்டர்கள், தலைமை நிலையத்துக்கு வந்து, நேரடியாக மனுக்களை கொடுக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொண்டர்களை ஜெயலலிதா பெரிய அளவில் சந்திக்க உள்ளதால், கட்சித் தலைமையகத்தில் நாளை பெருங்கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.....தினமலர் 08.06.2010

nambi
08-06-2010, 11:21 AM
சென்னை, ஜுன்.8 (டிஎன்எஸ்) வெளிநாட்டிற்கு போலி ஆவணங்கள் மூலம் செல்ல முயன்ற எட்டு பேரை சென்னை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் இன்று (ஜுன்.8) கைது செய்தனர்.

பஞ்சாப்பை சேர்ந்த 8 பேர் மலேசியா செல்வதற்காக இன்று காலை சென்னை வந்தனர். அ;பபோது அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த கிளியரன்ஸ் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களது பாஸ்போர்ட்கள் உண்மையானதுதான் என்றும் ஆனால் கிளியரன்ஸ் ஆவணங்கள் மட்டுமே போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சென்னை வழியாக மலேசியா செல்ல முயன்றது ஏன் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (டிஎன்எஸ்)

....சென்னை ஆன்லைன் 08.06.2010

nambi
08-06-2010, 11:22 AM
இங்கிலாந்து: இங்கிலாந்தின் எட்பாஸ்டன் நகரில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகளில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றும் திருமண வாழ்க்கையும் முக்கியமானது என்பதால் இன்னும் 2 ஆண்டுகளில் நான் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன் என்றும் டென்னிஸ் விளையாட்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் சானியா தெரிவித்துள்ளார்.

.....தினமலர் 08.06.2010

nambi
08-06-2010, 11:34 AM
http://nt3.ggpht.com/news/tbn/K6a8ZLGOkGq2pM/0.jpg

சென்னை, ஜூன் 8: ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தொலைக்காட்சி (டிவி) நடிகை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த டான்ஸ்மாஸ்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
.
நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்சரை சாலையில் ஒரு கிளப் உள்ளது. அதன் சார்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்குவதற்கான வசதி கொண்ட பண்ணை வீடும் உள்ளது. இந்த பண்ணை வீட்டில் நேற்று இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வந்து அறை எடுத்து தங்கினார்கள்.

மாலையில் அந்த இளைஞர் மட்டும் தான் கொண்டு வந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பி சென்று விட்டார். அதன் பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவர் வராததாலும், அவர்கள் தங்கியிருந்த அறை பூட்டியே கிடந்ததாலும் கிளப் நிர்வாகத்துக்கு சந்தேகம் வந்தது.

ரூம்பாய் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது உள்ளே அந்த இளம்பெண் துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தார். உடனடியாக இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சங்கர லிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை திறந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் பெயர் சசிரேகா (வயது 20) என்பதும் அவர் வளசரவாக்கத்தில் உள்ள காமாட்சி நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் என்பதும் அவருடன் வந்து தங்கிய இளைஞர் கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ஷாம் என்கிற குமார்
(வயது 26) என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் சசிரேகாவுக்கும், டான்ஸ்மாஸ்டரான குமாருக்கும், பழக்கம் ஏற்பட்டு இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்தது விசாரணையில் அம்பலமானது.

பண்ணை வீட்டில் அறை எடுத்து தங்கிய போது கொடுத்த முகவரிக்கு சென்று டான்ஸ்மாஸ்டர் குமாரை போலீசார் தேடினர். ஆனால் அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

எனவே நடிகையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா? என்பது டான்ஸ்மாஸ்டரை பிடித்து விசாரித்தால் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இறந்த சசிரேகாவின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள குண்டூராகும். இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறியுள்ளனர். சசிரேகாவின் மரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

....மாலைச்சுடர் 08.06.2010

nambi
08-06-2010, 11:40 AM
http://www.bbc.co.uk/worldservice/images/2008/02/20080201172503gotabhaya.jpg

கோட்டபய ராஜபக்சே

இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ''அவர் தூக்கிலிடப்படுவார்'' என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ''தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக'' தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ''ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்'' என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.

அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ''அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.'' என்று கூறீனார்.

ஜெனரல் பொன்சேகா அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்று கூறப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகா இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் என்பதுடன், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் 40 வீத வாக்கையும் அவர் பெற்றிருக்கிறார். அத்துடன் கடந்த 35 வருடமாக இலங்கையில் எவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

முன்னதாக, இலங்கையில் இறுதிப்போர் நடவடிக்கைகள் குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதையும் தான் நிராகரிப்பதாகவும் கோட்டாபாய அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூறுகின்ற போதிலும், இலங்கை இராணுவத்தினர் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
.........பிபிசி தமிழோசை, தட்ஸ் தமிழ் 08.06.2010

nambi
08-06-2010, 12:02 PM
http://www.dinamani.com/Images/article/2010/6/8/thiruma.jpg


சென்னை, ஜூன் 8- இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள நினைவு அரங்கம் அருகே இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திருமாவளவன் உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
....தினமணி 08.06.2010

nambi
08-06-2010, 12:15 PM
சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, ,இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.

ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும் அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இன்று போராட்டத்தில் குதித்தன.

வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர். இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே ஒழிக என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.

பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது

இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது செய்யப்பட்டனர்.


திருச்சியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13 தொண்டர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.

திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

நாமக்கல்லில் போலீஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ரயில் மறியல்

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர். இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.

தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடந்தது.
இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.


புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின் சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

.....தட்ஸ் தமிழ், வெப்துனியா 08.06.2010

nambi
09-06-2010, 03:51 AM
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனுக்கு எதிரான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி கூறினார்.

போபால் விஷவாயு கசிவு வழக்கின் தீர்ப்பில் வாரன் ஆன்டர்சன் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் நிருபர்கள் செவ்வாய்க்கிழமை கேட்டபோது அவர் அளித்த பதில்:

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது வாரன் ஆன்டர்சனின் பெயரையும் அதில் சேர்த்திருந்தது.

சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை நீதிமன்றம்தான் தயாரித்தது.

வழக்கு நடந்தபோது நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை.

மேலும் அதற்கு அவர் பதிலும் அளிக்கவில்லை. அவர்தான் வாரன் ஆன்டர்சன். இதையடுத்து அவர் தலைமறைவானவர் மற்றும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் அவர் மீதான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றார் அவர்.

.....தினமணி 09.06.2010

nambi
09-06-2010, 04:13 AM
சென்னை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்படும் பொது அரங்கில், ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய, நிகழ்ச்சி நிரல் புத்தகத்தை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.நிகழ்ச்சி நிரல் வருமாறு:மாநாடு, வரும் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்க, சிறப்பு மலரை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிடுகிறார்.

நிதியமைச்சர் அன்பழகன் தகுதியுரை வழங்குகிறார்.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்குகிறார். விருது பெறும், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, ஜார்ஜ் ஹார்ட், வா.செ.குழந்தைசாமி, சிவதம்பி வாழ்த்திப் பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமை உரையும், கவர்னர் பர்னாலா சிறப்புரையும், ஜனாதிபதி பிரதிபா துவக்க உரையும் ஆற்றுகின்றனர். தலைமைச் செயலர் நன்றி கூறுகிறார்.மாலை 4 மணிக்கு, வ.உ.சி., மைதானத்தில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில், இலக்கியம், கலை, வரலாறு நினைவூட்டும் வகையில் பேரணி துவங்கி, அவினாசி சாலை வழியாக மாநாடு வளாகத்தை அடையும்.வரும் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு, லாரன்ஸ் குழுவின் மாற்றுத் திறனாளிகள் கலை நிகழ்ச்சி உட்பட, சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பகல் 12 மணிக்கு, பொதுக் கண்காட்சியை மத்திய அமைச்சர் அழகிரி திறந்து வைக்கிறார். புத்தகக் கண்காட்சியை, மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைக்கிறார். விருந்தினராக மாலத்தீவு அரசின் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அகமது நசீர் கலந்து கொள்கிறார்.பிற்பகல் 2.30 மணிக்கு, அப்துல் ரகுமான் தலைமையில், "புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கவியரங்கம் நடக்கிறது.வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு, "கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்' கவியரங்கம் நடக்கிறது.மாலை 4 மணிக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையில், "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது.

மறுநாள், 26ம் தேதி, காலை 10 மணிக்கு, கவிஞர் வாலி தலைமையில், கவிஞர் மேத்தா துவக்கி வைக்க, "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்கம் நடக்கிறது.மாலை 4.30 மணிக்கு, சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்டு, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் துவக்கி வைக்கும், "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே! சின்னத் திரைக்கே! அச்சுத் துறைக்கே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.மாநாட்டின் இறுதிநாளான 27ம் தேதி, நடிகர் சிவகுமார் தலைமையில், சுப.வீரபாண்டியன் துவக்கி வைக்க, "வித்தாக விளங்கும் மொழி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.இதில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி வரவேற்க, சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா வெளியிடுகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் முன்னிலை வகிக்க, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகிக்க, மாநாட்டு நிறைவு உரையை முதல்வர் கருணாநிதி ஆற்றுகிறார். தனி அலுவலர் அலாவுதீன் நன்றி கூறுகிறார்.வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆய்வரங்கமும், தமிழ் இணைய மாநாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. தினமும் மாலையில், மாநாட்டு வளாகத்திலும், கொடிசியா அரங்கத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

.....தினமலர் 09.06.2010

nambi
09-06-2010, 04:20 AM
வேலூரில் இருந்து, பாகிஸ்தான் உளவாளி அனுப்பிய `இ-மெயில்' தகவல் எதிரொலி.....


சித்தூர், ஜுன்.9-

வேலூர் மற்றும் சித்தூரில் இருந்து, பாகிஸ்தான் உளவாளி ஒருவர் அனுப்பிய `இ-மெயில்' தகவலைத் தொடர்ந்து, திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

`இ-மெயில்' தகவல்

பாகிஸ்தானின் `லஸ்கர் இ தொய்பா' அமைப்புடன் தொடர்புடைய புதிய தீவிரவாத அமைப்பான `இந்தியன் முஜாகிதீன்' இயக்கத்தினர், தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று, மத்திய உளவு அமைப்பு (ஐ.பி.) சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் நகரில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட `இ-மெயில்' தகவல், கர்நாடக மாநிலம் பெங்களூர் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

வேலூரில் இருந்து

சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்ïட்டர் மையத்தில் இருந்து பாகிஸ்தானின் `ஐ.எஸ்.ஐ.' உளவாளி என்று கருதப்படும் அகமதி என்பவர், பெங்களூர் முகவரி ஒன்றின் மூலம் இந்த தகவலை அனுப்பி இருக்கிறான்.

இதேபோல், சித்தூருக்கு அருகில் உள்ள தமிழக நகரமான வேலூரில் இருந்தும் பாகிஸ்தானுக்கு `இ-மெயில்' தகவல் அனுப்பி இருந்ததை பெங்களூர் போலீசார் உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தை உஷார் படுத்திய கர்நாடக போலீசார் சித்தூர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு

பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்ïட்டர் மைய உரிமையாளரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வேலூரில் இருந்து தகவல் அனுப்பப்பட்ட கம்ப்ïட்டர் மைய உரிமையாளரையும் அவர்கள் கைது செய்தனர். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை மற்றும் சித்தூர், வேலூர் இ-மெயில் தகவல்களை தொடர்ந்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுலையான் கோவில் மலைப்பாதையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. கர்நாடக போலீசார் சித்தூர் வந்து விசாரணை மேற்கொள்ள சித்தூர் போலீசார் உதவி செய்தனர் என்றாலும், அதுபற்றிய மேல் விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில், வேலூரில் இருந்து அகமதி அனுப்பிய `இ-மெயில்' தகவலில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் 30 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டல் விடுத்து இருந்ததாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

.....தினத்தந்தி 09.06.2010

nambi
09-06-2010, 04:27 AM
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் ரெட்பானா பகுதியில் இரவு வேளை வீடொன்றினுள்ளே புகுந்தவர்கள் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்பப் பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து, வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் இருவரும் இன்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்ற அமர்வின்போது இந்தச் சம்பவம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள்.

....பிபிசி தமிழோசை 08.06.2010

nambi
09-06-2010, 04:36 AM
http://www.bbc.co.uk/worldservice/images/2010/05/20100521140302srilankawarcrime203.jpg

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்

அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

......பிபிசி தமிழோசை 08.06.2010

nambi
09-06-2010, 05:09 AM
http://www.dailythanthi.com/images/news/20100609/sri.jpg


தமிழக எம்.பி.க்கள் குழு இன்று சந்திப்பு
முகாம்களில் உள்ள 80 ஆயிரம் தமிழர்களை மறுகுடியமர்த்த வலியுறுத்துகிறார்கள்


இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார். அவரை தமிழக எம்.பிக்கள் குழு இன்று சந்தித்து பேசுகிறது. முகாம்களில் உள்ள 80 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களில் மறுகுடியமர்த்த அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

புதுடெல்லி, ஜுன்.9-

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

டெல்லி வந்தார்

அவர் தனி விமானம் மூலம் கொழும்பில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்தார். அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பிறகு அவர் இந்தியா வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அவருடன் இலங்கை அரசின் உயர் மட்ட குழு ஒன்றும் வந்துள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கினார்.

இன்று காலை ராஜபக்சேவுக்கு ஜனாதிபதி மாளிகையில் மத்திய அரசு சார்பில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

ஒப்பந்தம் கையெழுத்து

வரவேற்பு முடிந்ததும் அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது ஒருங்கிணைந்த கூட்டு பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

மேலும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகள், உலக மற்றும் மண்டல விவகாரங்கள் உள்பட இரு நாட்டு நல்லுறவு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு

டெல்லியில் அதிபர் ராஜபக்சே ஜனாதிபதி பிரதீபா பட்டீல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.

நாளை அவர் தனது குடும்பத்துடன் சிம்லா செல்ல இருப்பதாகவும் அங்கிருந்து கொழும்பு திரும்புவார் என்றும் தெரிகிறது.

தமிழக எம்.பி.க்கள்

டெல்லியில் இன்று (புதன்கிழமை) மதியம் அதிபர் ராஜபக்சேயை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றும், இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சரியான நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அதிபர் ராஜபக்சே மீது எழுந்துள்ளது.

வலியுறுத்தல்

தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அதனை வலியுறுத்த உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு, நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை கேட்டு கடந்த 6-ந் தேதியன்று டெல்லிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரை டி.ஆர்.பாலு சந்தித்து, இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசுவதற்காக நேரத்தினை பெற்றிட வலியுறுத்தினார். இதற்கான அனுமதி பெறப்பட்டு ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்து பேசுகின்றனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை சொந்த ஊர்களில் குடியமர்த்தி மறுவாழ்வு பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

ராஜபக்சேவை சந்திப்போர் யார்?

ராஜபக்சேவை சந்தித்து பேசும் தமிழக எம்.பி.க்கள் பெயர் மற்றும் கட்சியின் விவரம் வருமாறு:-

தி.மு.க:- டி.ஆர்.பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.தாமரைச்செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.

காங்கிரஸ்:- மணிசங்கர் ஐயர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணிக் தாகூர், ஜெயந்தி நடராஜன், ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன், பி.எஸ்.ஞானதேசிகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.....தினத்தந்தி 09.06.2010

nambi
10-06-2010, 03:45 AM
துடில்லி: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரஜா ராஜ்ய கட்சி தலைவர் சிரஞ்சீவி தமது கட்சியின் 14 எம்.எல்.ஏ.,க்களுடன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேசிய விவசாய திட்டத்தின் கீழ் ஆந்திராவின் போலாவரம், பிரணகிதா நீர்பாசன திட்டங்களை சேர்க்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். மேலும் ஆந்திராவில் மதுக்கடைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
.....தினமலர் 10.06.2010

nambi
10-06-2010, 03:50 AM
நகரி, ஜுன்.10-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏழுமலையானுக்கு அபிஷேக நீர் எடுக்கும் தங்க கிணறு அருகே ஒரு மொபைல் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் பிரதான உண்டியல் நிரம்பிவிட்டால் அதை காலி செய்வதற்குள், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இந்த மொபைல் உண்டியலை வைத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இந்த மொபைல் உண்டியலில் காசு போடுவது போல, ஒருவர் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்ததை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது. இதுபற்றி கேமரா ஆப்பரேட்டர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கேமராவில் உள்ள படத்தை வைத்து, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காரு பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது கோவில் உண்டியலில் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.5,137-ஐ பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி உள்ளவர்களை வலை வீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

.....தினத்தந்தி 10.06.2010

nambi
10-06-2010, 03:53 AM
போபால், ஜுன்.10-

போபால் விஷவாயு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் அறிவித்து உள்ளார்.

20 ஆயிரம் பேர் பலிக்கு 2 ஆண்டு ஜெயில்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இயங்கி வந்த ïனியன் கார்பைடு தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேசுப் மகிந்திரா உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் ஒருவர் வழக்கு நடந்து வந்த போது மரணம் அடைந்து விட்டார். 26 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தலைமை ஜ×டீசியல் மாஜிஸ்திரேட்டு மோகன் பி.திவாரி தீர்ப்பளித்தார்.

அதிருப்தி

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாக காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது. அதிக தண்டனை வழங்க வேண்டும். ïனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த வழக்கை சி.பி.ஐ. சரியாக நடத்தவில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லியே இது குறித்து சி.பி.ஐ. மீது குற்றம் சாட்டி இருப்பது அனைவரின் புருவத்தையும் உயரச் செய்து உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமைக்கப்பட்ட குழுவினர், சி.பி.ஐ.க்கு பிரதமர் மன்மோகன்சிங்தான் பொறுப்பு. ஆகவே அவர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு நடத்தவும், குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஐகோர்ட்டில் அப்பீல்

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் அரசு சார்பில் அப்பீல் செய்யப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து போபால் ஐகோர்ட்டில் மாநில அரசே அப்பீல் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

5 பேர் குழு

அப்பீல் செய்வதற்கு முன்னதாக சட்ட நடைமுறைகள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளோம். மாநில அட்வகேட் ஜெனரல் ஆர்.டி.ஜெயின், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் விவேக் தன்கா, ஆனந்த் மோகன் மாத்தூர், மாநில சட்டத்துறை முதன்மைச் செயலாளர் ஏ.கே.மிஸ்ரா, பிரபல சட்ட மேதை சாந்திலால் லோதா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

இவர்கள் விஷ வாயு வழக்கின் தீர்ப்பை படித்து 10 நாட்களுக்குள் முதல் கட்ட அறிக்கை ஒன்றை அரசுக்கு அளிப்பார்கள். இறுதி அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் கொடுப்பார்கள். குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க மாநில அரசு வாதாடும்.

சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு

சி.பி.ஐ. இந்த வழக்கை சரியாக நடத்த வில்லை. இ.பி.கோ. 304-2-வது பிரிவில் (கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கம் இல்லாமல் நடந்த மரணம்) பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து, 304-ஏ பிரிவின் கீழ் (கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்) என்று மாற்றிய போது அதை எதிர்த்து ஏன் சி.பி.ஐ. மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வில்லை?

அதே போல, இந்த வழக்கில் இன்னும் தலைமறைவாக உள்ள, வழக்கில் சம்பந்தம் இல்லாமல் சுதந்திரமாக அமெரிக்காவில் இருக்கும் வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு நடத்த ஏன் சி.பி.ஐ. முயற்சி எடுக்க வில்லை? சி.பி.ஐ.யை பொறுத்தவரை இந்த விஷயத்தில் வெறும் காகித அளவிலான வேலைகள் மட்டுமே நடந்துள்ளன.

இவ்வாறு முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பயனில்லை

இதற்கிடையே மத்திய அரசின் இந்த அப்பீல் பயனற்றது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதலில் 304-2-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்து இருக்கும். ஆனால் 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எம்.அகமது தலைமையிலான பெஞ்ச் 304-2-வது பிரிவை நீக்கி விட்டது. தற்போது 304-ஏ பிரிவின் கீழ் வழக்கு நடந்து இருப்பதால் தண்டனை அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

தலைமறைவு குற்றவாளியான, ïனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. ஆகவே அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

.....தினத்தந்தி 10.06.2010

nambi
10-06-2010, 03:58 AM
சென்னை, ஜுன்.10-

ஹூண்டாய் கார் தயாரிப்பு கம்பெனி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அதன் தொழிலாளர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலைக்கு திரும்புகிறார்கள்.

இதுதொடர்பாக ஹூண்டாய் நìறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.டபிள்ï.பார்க், மூத்த துணைத் தலைவர் ஆர்.சேதுராமன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ரூ.65 கோடி நஷ்டம்

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு கம்பெனியில் 29.4.2008 அன்று நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து 87 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 20 பேரை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வது பற்றி 28.7.2009 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மீதமுள்ள 67 பேரை வேலைக்கு சேர்த்துக் கொள்ளக் கோரி அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3800 கார்களின் உற்பத்தி பாதித்து ரூ.65 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முக்கிய கோரிக்கை

எனவே, இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டோம். அதன்படி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அவரது இல்லத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டி.பிரபாகரராவ், தொழிலாளர் ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் உடனிருந்தனர்.

சமாதான பேச்சுவார்த்தையின்போது, 67 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் 35 பேரை வேலைக்கு சேர்த்துக் கொள்வது பற்றி கூட்டுக் குழு ஒருமாதத்தில் முடிவு செய்யும் என்று தீர்மானிக்கப்பட்டது. மீதமுள்ள 32 பேர் மீது கோர்ட்டில் வழக்கு இருப்பதால் சட்டப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படும்.

28.7.2009 அன்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 20 தொழிலாளர்களின் பணி கடந்த 9 மாதங்கள் கண்காணிப்பு செய்யப்பட்டது. வரும் ஜுலை 1-ந் தேதி முதல் அவர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுகின்றனர்.

கருணாநிதிக்கு, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

ஹூண்டாய் கார் தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து சமாதானக் கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் 100 சதவீத கார் உற்பத்தி நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


......தினத்தந்தி 10.06.2010

nambi
10-06-2010, 04:00 AM
வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ராணுவ உதவி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்கும் வல்லமை பெறுவதற்காக அந்நாட்டுக்கு ராணுவ உதவி அளித்து வருகிறோம். இந்த ராணுவ உதவி எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது, என்ற உறுதி மொழியை பாகிஸ்தானிடம் பெற்றுள்ளோம்.சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, வாஷிங்டன் வந்த போது, அவரிடமும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். பாதுகாப்பு ரீதியாக பாகிஸ்தான் வலுவுள்ளதாகவும், ஜனநாயக ரீதியாக மேம்படவும் தான் இந்த உதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ராணுவ உதவி, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என, தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக தெளிவுபடுத்தியுள்ளது.

.........தினமலர் 09.06.2010

nambi
10-06-2010, 04:03 AM
பழனி, ஜுன்.10-

பழனி முருகன் கோவிலில் கடந்த 31 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1 கோடியே 81 லட்சம் வருவாய் கிடைத்தது.

உண்டியல் எண்ணிக்கை

பழனி முருகன் கோவிலில் கடந்த 31 நாட்களில் உண்டியல்கள் மூலம் கிடைத்த காணிக்கை மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக எண்ணப்பட்டது.

பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் நடராஜன், மதுரை துணை ஆணையர் செல்வராஜ், முதுநிலை கணக்கு அதிகாரி கார்த்திகேயன், அறங்காவலர் குழுத்தலைவரின் பிரதிநிதி பொன்னுச்சாமி மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர். பழனி கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கார்த்திக் பள்ளி மாணவ-மாணவிகள் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள் எண்ணிக்கை முடிவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 81 லட்சத்து 37 ஆயிரத்து 900 கிடைத்தது. இது தவிர 13 ஆயிரத்து 145 கிரா ம் வெள்ளியும், 1,381 கிராம் தங்கமும் கிடைத்தது. வெளி நாட்டு கரன்சி நோட்டுகள் 418 எண்ணம் கிடைத்தன.

இதுதவிர பக்தர்கள் செலுத் திய தங்கம் மற்றும் வெள்ளியா ல் ஆன வேல்கள், கட்டிகள், பாதங்கள், மாங்கல்யம், காவடி கள், அம்புகள், ஆபரணங் கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் கிடைத்தன. பட்டம், பரிவட்டம், நவதா னியங்கள், ஏலக்காய் மாலை, புடவை, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் அதிகம் கிடைத்தன. கடந்த மே மாதம் கோடை விடுமுறை என்பதால் உண்டியல் வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது.

ரூ.30 லட்சம் அதிகம்

கடந்த ஆண்டு இதே காலத் தில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் கிடைத்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.31 லட் சம் கிடைத்துள்ளது.


.....தினத்தந்தி 10.06.2010

nambi
10-06-2010, 04:06 AM
ஹராரே, ஜூன் 9: ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரை இலங்கை அணி வென்றது.

÷இறுதி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை அணி கேப்டன் தில்ஷன் சதமடித்தார்.

÷முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 49 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 203 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

÷இந்த இருநாடுகளைத் தவிர இந்தியாவும் இந்த போட்டியில் பங்கேற்றது; ஆனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

÷ஹராரேயில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஜிம்பாப்வே வீரர்கள் மசாகட்சா, டெய்லர் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

÷மிகவும் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி 5-வது ஓவரில் பிரிந்தது. 23 பந்துகûளை சந்தித்த மசாகட்சா 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தைபு களம் இறங்கினார். அவர் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். 10-வது ஓவரில் டெய்லர் (19 ரன்கள்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த இர்வின் 24 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

÷லம்ப் 37 ரன்கள் (65 பந்துகள்) சேர்த்து வெளியேறினார். ஜிம்பாப்வே அணியில் தைபு மட்டும் நிலைத்து நின்று ஆடி அதிகபட்சமாக 93 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் ஜிம்பாப்வே 49 ஓவர்களில் 199 ரன்களுக்குச் சுருண்டது.

÷இலங்கை அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும், அஜந்தா மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குலசேகரா 7 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

÷200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. உபுல் தரங்காவும், தில்ஷனும் ஆட்டத்தைத் தொடங்கினர். சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த ஜோடியை பிரிக்க ஜிம்பாப்வே வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. 10 ஓவர்களில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 63 ரன்களைக் கடந்தது. 16-வது ஓவரில் தில்ஷன் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் தரங்கா 50 ரன்களைக் கடந்தார்.

÷இந்த ஜோடி 26-வது ஓவரில் பிரிந்தது. 79 பந்துகளில் 72 ரன்கள் சேர்ந்திருந்த தரங்கா ரன் அவுட் ஆகி வெளியேறினார். 33-வது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தில்ஷன் சதமடித்தார். இது ஒருநாள்போட்டிகளில் அவர் அடிக்கும் 7-வது சதம்.

÷அடுத்த ஓவரில் அவரே மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 34.4 ஓவரில் இலங்கை 203 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் முத்தரப்புத் தொடரையும் இந்த அணி கைப்பற்றியது.

÷தில்ஷன் ஆட்டநாயகனாகவும், ஜிம்பாப்வே வீரர் டெய்லர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

.....தினமணி 09.06.2010

nambi
10-06-2010, 04:09 AM
சென்னை : "பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, "கின்னஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம். இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறியுள்ளார்.

....தினமலர் 09.06.2010

nambi
10-06-2010, 04:16 AM
உசிலம்பட்டி, ஜுன்.10-


உசிலம்பட்டி மற்றும் பேரைïர் பகுதியில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் தாங்கள் பயிரிடும் கரும்புகளை ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை கூலி ஆட்களை வைத்து தான் கரும்பு வெட்டப்பட்டு வந்தது. இதில் காலதாமதமும், செலவும், ஆட்கள் பற்றாக்குறையும் இருந்து வந்தது.இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள இடையபட்டியில் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையின் சார்பில் புதிய கரும்பு வெட்டும் எந்திரம் அறிமுக விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரூ.2.28 கோடி மதிப்பிலான இந்த கரும்பு வெட்டும் அறிமுக விழா நடைபெற்றது.

40 டன்

இந்த எந்திரத்தை பார்ப்பதற்காகவும், அதன் சிறப்புகளை அறிந்து கொள்ளவும் உசிலம்பட்டி மற்றும் பேரைïர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சர்க்கரை ஆலையின் உதவி பொதுமேலாளர் (கரும்பு) பாஸ்கரதாஸ் இந்த எந்திரத்தின் நன்மைகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த எந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 40 டன் கரும்பு வெட்டலாம். ஒரு டன்னுக்கு ரூ.275 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆட்களை வைத்து கரும்பு வெட்டினால் ஒரு டன்னிற்கு ரூ.340 வரை செலவிட வேண்டியிருக்கும். இந்த எந்திரத்தால் பணம் மிச்சமாவதுடன், காலதாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும்.

மேலும் ஆட்களை வைத்து வேலை செய்வதால் கரும்பு பல நாட்கள் வெயிலில் காய்ந்து, ஈரத்தன்மை இழந்து எடையும் குறைந்து விடுகிறது. எந்திரத்தின் மூலம் வேகமாக வெட்டப்படுவதால் எடையும் குறையாது. மேலும் ஆட்கள் கரும்பு வெட்டும் போது அரையடி உயர கரும்பை விட்டுதான் வெட்டுவார்கள். ஆனால் எந்திரத்தின் மூலம் வெட்டும்போது தரையை ஒட்டி கரும்பு வெட்டப்படுவதால் ஒரு ஏக்கருக்கு கூடுதலாக 2 டன் கரும்பு கிடைக்கும். அத்துடன் அடிக்கரும்பில் தான் சாறு அதிகமாக இருக்கும். இதனால் ஆலைக்கும், விவசாயிகளுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கும்.

எரிக்க கூடாது

எந்திரத்தின் மூலம் கரும்பு வெட்டப்படுவதால் அடுத்து முளைக்கும் கரும்பு நல்ல தடிமனாகவும், அதிக சிம்புகளும் வெடிக்கும். கரும்பு வெட்டியபின்பு கழிவுகளை தீ வைத்து எரிக்க கூடாது. அப்படி எரித்தால் கரும்பு தடிமனாக வராது. கரும்பு கழிவுகளை காட்டிலே போட்டு நுண்ணுயிர் கிருமிகளை செலுத்தி அவற்றை மக்க செய்ய வேண்டும். இது கரும்புக்கு சிறந்த உரமாகும். மேலும் மனிதர்களை வைத்து வெட்டும்போது, தட்டையை சீவுவதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.1,500 வரை விவசாயிகள் செலவழிக்க வேண்டியுள்ளது. இதுவும் இந்த முறையில் தவிர்க்கப்படுகிறது. மேலும் 2,3 ஏக்கர் வைத்துள்ள சிறிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் மற்றொரு சிறிய எந்திரமும் வாங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

.....தினத்தந்தி 10.06.2010

nambi
10-06-2010, 04:21 AM
இலங்கையின் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளவும் தமது இடங்களில் குடியேறியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

இன்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடபகுதிக்கான இரயில் பாதைகளை மீள அமைப்பதற்கும் இந்தியா உதவி வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.

கடந்த ஆண்டில் நிவாரண முகாம்களுக்காக இந்தியா 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

......வீரகேசரி 09.06.2010

nambi
10-06-2010, 04:27 AM
இந்தியா இலங்கை இடையே ஏழு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்த உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

....பிபிசி தமிழோசை 10.06.2010

nambi
10-06-2010, 04:30 AM
சென்னை, ஜூன் 9: "தமிழால் எல்லாம் முடியும். ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்கவோ, பயிற்சி மொழியாக்கவோ தமிழக அரசால் முடியுமா?' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது:

ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாமும் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா? இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.

தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் உயர்வுக்காக பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை.

உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.

எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ் என பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்.

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் இதுவரை 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசாணை வந்து 27 ஆண்டுகளாகியும், அவை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த அரசாணைகளை அமல்படுத்த முடியும்.

தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில், தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

....தினமணி 09.06.2010

nambi
11-06-2010, 04:29 AM
காந்தகார், ஜுன்.11-

ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியானார்கள். 77 பேர் காயம் அடைந்தனர்.

முதன்முறையாக

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் ராணுவ மற்றும் போலீஸ் கேந்திரங்களையும், அரசாங்க கட்டிடங்களையும் தான் தாக்குதல் நடத்துவதற்கான இலக்காக கொண்டு இருப்பார்கள். முதன்முறையாக அவர்கள் ஒரு திருமண வீட்டில் தாக்குதல் நடத்தி பெரிய அளவிலான உயிர் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் காந்தகார் மாநிலத்தில் ஆர்கான்டாப் மாவட்டத்தில் நங்காகான் என்ற இடத்தில் நடந்தது.

.....தினத்தந்தி 11.06.2010

nambi
11-06-2010, 04:50 AM
சென்னை, ஜுன்.11-

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஒய்.இக்பால் இன்று (வெள்ளிக்கிழமை) ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

புதிய தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல்.கோகலே கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பணி இடம் காலியாக இருந்தது. தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த எம்.ஒய்.இக்பாலை சென்னை உயர்நீதமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


எம்.ஒய்.இக்பால் 13.2.1951-ல் பிறந்தார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று தங்க மெடல் வென்றுள்ளார். 1975-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்ட இவர், சிவில் வழக்குகளில் அதிக கவனம் செலுத்தினார். 1990-ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றத்தின் ராஞ்சி கிளையில் அரசு வழுக்குரைஞராக (பிளீடர்) ஆனார்.

அதைத்தொடர்ந்து உரிமையியல் (சிவில்), குற்றவியல் (கிரிமினல்), அரசியல் அமைப்பு சட்டங்கள், வரி விவகாரங்கள் ஆகிய வழக்குகளில் ஆஜரானார். வங்கிகள், காப்பீடு, மின்வாரியம் நிறுவனங்கள் உள்பட பல்வேறு அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 9.5.1996 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனார். அதன்பின்னர் 14.11.2000 அன்று ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

.....தினத்தந்தி 11.06.2010

nambi
11-06-2010, 04:53 AM
சென்னை : இரு கால்கள் பாதிக்கப்பட்ட, நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், பார்வையற்ற மாணவர்களுக்கு, "சிடி பிளேயர்'களையும் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். மேலும், உண்ணாவிரதம் இருந்த பார்வையற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும் முதல்வர் வழங்கினார். மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் கோரி விண்ணப்பித்த, மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், கடந்த ஆண்டுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில், பேட்டரியில் இயங்கும் 761 மூன்று சக்கர வாகனங்களை வழங்க, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதில் முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

இதேபோல, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு, "டேப் ரிக்கார்டர்' மற்றும் கேசட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, முதல் முறையாக, பார்வையற்ற 124 மாணவ, மாணவியருக்கு 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில், "சிடி பிளேயர்' மற்றும் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட "சிடி'க்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக, அரசு சிறப்பு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வரும், பார்வையற்ற 50 மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு, "சிடி பிளேயர்' மற்றும் "சிடி'க்களை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

பூந்தமல்லியில் உள்ள, அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த, 72 பேருக்கு வேலை வழங்க கோரி, உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகளை, மருத்துவமனையில் சென்று முதல்வர் பார்வையிட்டார். பணி நியமனங்கள் வழங்கப்படுமென அப்போது முதல்வர் உறுதியளித்தார். அதன்படி, இடைநிலை பயிற்சி முடித்த அந்த 72 மாற்றுத் திறனாளிகளில், ஆசிரியர் பணிக்குத் தகுதி வாய்ந்த 60 பேருக்கு, தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை, முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் குற்றாலிங்கம், நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஜவகர், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் விஜயராஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

....தினமலர் 10.06.2010

nambi
11-06-2010, 05:00 AM
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ மோதல்

http://www.dailythanthi.com/images/news/20100611/sp01.jpg
ஜோகனஸ்பர்க், ஜுன்.11-

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த உலக கோப்பை கால்பந்துபோட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக கோப்பை கால்பந்து

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 19-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தென்ஆப்பிரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.

போட்டியை நடத்தும் நாட்டை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்றுகள் மூலம் உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்திருக்கின்றன. இந்த உலக கோப்பையில் விளையாட மொத்தம் 204 நாடுகள் தகுதி சுற்று ஆட்டங்களில் கலந்து கொண்டன. அவற்றில் இருந்து 32 அணிகள் உலக கோப்பையின் பிரதான சுற்றில் விளையாட வந்திருக்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டி ஆப்பிரிக்க நாட்டில் நடப்பது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நாடு ஒன்று உலக கோப்பையை நடத்துவது இது தான் முதல்தடவையாகும். தென்ஆப்பிரிக்க அணி தரவரிசையில் 83-வது இடம் வகிக்கிறது.

மண்டேலா வருகிறார்

உலக கோப்பை கொண்டாட்டம், தென்ஆப்பிரிக்காவில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் தென்ஆப்பிரிக்க நகரங்களில் குவிந்து இருக்கிறார்கள். போட்டி நடக்கும் 9 நகரங்களிலும் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் இசைவெள்ளத்தில் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஜோகனஸ்பர்க் நகரின் சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் முதலாவது ஆட்டம் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக 40 நிமிடங்கள் கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொடக்க விழாவில் பிரமிக்க வைக்க காத்திருக்கிறார்கள். இதில் முதல் 7 நிமிடங்கள் மேலும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமானதாக இருக்கும் என்று போட்டி அமைப்பாளர் டேரெக் கார்ஸ்டென்ஸ் கூறினார். ஆனால் அந்த ரகசியத்தை வெளியிட மறுத்து விட்டார்.

தொடக்க விழாவில் தென்ஆப்பிரிக்காவின் பெருந்தலைவர் 91 வயதான நெல்சன் மண்டேலா கலந்து கொள்ள இருக்கிறார். இது விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ

இதை தொடர்ந்து ஆட்டங்கள் தொடங்க உள்ளன. பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து ஆட்டம் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதுவும் சமனில் முடிந்தால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முதல் நாளான இன்று `ஏ' பிரிவில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. தொடக்க ஆட்டத்தில் (இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது) பாரோன் மோகோனா தலைமையிலான தென்ஆப்பிரிக்காவும், ரபெல் மார்கிïஸ் தலைமையிலான மெக்சிகோ அணியும் ஜோகனஸ்பர்க் சாக்கர் சிட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதிபர் வாழ்த்து

உள்ளூர் அணியான தென்ஆப்பிரிக்கா தரவரிசையில் மிகவும் பின்தங்கிய (83-வது இடம்) அணியாகும். அதனால் அந்த அணி முதலாவது சுற்றை கடக்குமா? என்பதே கேள்விக்குறி தான். உலக கோப்பையை நடத்தும் நாடுகளில் இதுவரை எந்த அணியும் முதல் சுற்றுடன் வெளியேறியது கிடையாது. அந்த வரலாற்றை தென்ஆப்பிரிக்காவும் தொடர வேண்டும் என்று உள்ளூர் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா இதற்கு முன்பு முதல் சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் ஆடுவது தென்ஆப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சம் என்றாலும், அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த அணி வீரர்களை தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தி, அணி வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார். அது அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்தி உள்ளது. ஸ்டீவ் பின்னியர், ஷபல்லாலா ஆகியோர் தென்ஆப்பிரிக்க அணியின் முக்கியமான வீரர்கள் ஆவர் என்றாலும் தென்ஆப்பிக்காவின் தடுப்பாட்டம் கொஞ்சம் பலவீனமானதாகும்.

தென்ஆப்பிரிக்கா உலக கோப்பையில் பங்கேற்பது இது 3-வது முறையாகும். அதே சமயம் மெக்சிகோ அணிக்கு 13 உலக கோப்பைகளில் விளையாடி அனுபவம் இருக்கிறது. இளம் ரத்தத்தை பாய்ச்சியதால் உலக கோப்பைக்கு தகுதி பெற்ற மெக்சிகோ, அதே வேகத்தை காட்ட ஆர்வமாக உள்ளது. தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள மெக்சிகோ அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு கடுமையான சவாலாக விளங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த ஆட்டத்தை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசிக்க உள்ளனர்.

உருகுவே-பிரான்ஸ்

இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு கேப்டவுனில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் உருகுவேயும், பிரான்சும் மோதுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் முதலாவது ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதால், இரு அணியும் கடுமையாக களத்தில் மல்லுக்கட்டும்.

போட்டிகளை ஈ.எஸ்.பி.என்.-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடக்க ஆட்டத்தையும், கால்இறுதியில் இருந்து அனைத்து ஆட்டங்களையும் தூர்தர்ஷனும் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.


.....தினத்தந்தி 11.06.2010

nambi
11-06-2010, 05:44 AM
நெல்லையில் 5 பெண் போலி மருத்துவர்கள் உட்பட மொத்தம் 34 போலி மருத்துவர்கள் (டாகடர்கள்) காவல்துறையினரால் கைது செய்துபட்டுள்ளனர். உரிய சான்றிதழ் இல்லாமல், தகுதியில்லாமல் மருத்துவம் செய்ததும் தெரியவந்தது. நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் போலி மருத்துவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 3 மருத்துவர்கள் திருவொற்றியூர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தொடரப்பட்டு வருவதாகவும், மேலும் தொடரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

......கலைஞர் செய்திகள் 11.06.2010 11.06

nambi
12-06-2010, 05:43 AM
சென்னை: எம்பிபிஎஸ் படிக்காமலேயே ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்த 171 போலி டாக்டர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சித்த வைத்தியம் உள்ளிட்ட சில பாரம்பரிய மருத்துவப் படிப்புகளை படித்துவிட்டு பலர் அலோபதி மருத்துவ முறையி்ல் ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகன்றனர்.

இந் நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். ஊர், ஊராக பல மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.

சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை, நெல்லை, குமரி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வேட்டையில் ஒரே நாளில் 171 பேர் பிடிபட்டனர்.
நெல்லையில் 34 பேர் கைது:

அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் தான் 34 பேர் பிடிபட்டனர். இவர்களில் பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருபவர்கள் ஆவர்.

திசையன்விளை, களக்காடு, கோவில்பத்தை, கீழப்பத்தை கிராமங்கள் மற்றும் நாங்குநேரி, வள்ளியூர், ஏர்வாடி ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், புளியங்குடி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 பெண்களும் அடங்குவர்.

'எஸ்.எஸ்.எல்.சி. டாக்டர்':

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்தி வரும் எஸ்.எஸ். ராயன் (70) என்பவர் ஆர்.எம்.பி. படித்து இருப்பதாக போர்டு வைத்துள்ளார்.

ஆனால், இவர் ஊசி எல்லாம் போட்டு அலோபதி சிகிச்சை அளிப்பது வந்தார். விசாரணையில் அவர் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது. 1969ம் ஆண்டு முதல் இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மட்டுமே படித்துவிட்டு, டாக்டர் தொழில் செய்து வந்த மாதம்மாள் (38), தர்மபுரிதொட்டம்பட்டியில் 2 பேர், சேலத்தில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மருத்துவமனை நடத்தி வந்த தபரே ஆலம் (42) ஆகியோரும் கைதாயினர்.

மதுரை மாவட்டம் மேலூரில்..

மதுரை மாவட்டம் மேலூரில் மூலம், பெளத்திரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரஞ்சித் மோண்டல் (35) என்பவர் கைதானார்.

அதேபோல இங்கு கிளீனி்க் நடத்தி வந்த நடத்தி வந்த மதார் (65), ராஜகோபால் (65) ஆகியோரும் கைதாயினர். அலங்காநல்லூரிலும் 3 பேர் கைதாயினர்.

திருச்சி-கோவையில்...

அதே போல திருச்சியில் 5 பேரும், மன்னார்குடியில் கிளினிக் நடத்தி வந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஈச்சனாரியை சேர்ந்த ரமா பூபதி (45) என்ற ஹோமியோபதி படித்த பெண் டாக்டர் அலோபதி சிகிச்சை அளிப்பது வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காளியம்மாள் (28) என்ற பெண் மருத்துவம் படிக்காமலேயே ஊசியெல்லாம் போட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.

அதே போல பண்ருட்டியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து இந்த சோதனைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இன்று பல மோசடி கிளீனிக்குகள் திறக்கப்படவே இல்லை. அங்கு சிகி்ச்சை அளித்த 'டாக்டர்களையும்' காணவில்லை. அவர்கள் எல்லாம் தலைமறைவாகியுள்ளனர்.

இது குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி ராதாகிஷ்ணன் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 153 பேர் கிராமப்புறங்களில்தான் பிடிபட்டுள்ளனர். கைதானவர்களில் 101 பேரிடம் எந்தவித சான்றிதழ்களும் இல்லை. 70 பேர் டிப்ளமோ சான்றிதழ்கள் வைத்திருந்தனர்.

கிராமப்புற மக்களை ஏமாற்றி இவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடக்கும் என்றார்.

.....தட்ஸ் தமிழ் 12.06.2010

nambi
12-06-2010, 05:58 AM
ஜோகனஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது . முதலாவது ஆட்டத்தில் ஏ பிரிவில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் மோதின. 55-வது நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா முதலாவது கோலினை போட்டது. அடுத்து 79-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் கேப்டன் ரபெல் மார்கிஹீஸ் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர் மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் விறுவிறுப்பான தொடக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதே போல் உருகுவே -பிரான்ஸ் அணிகள் மோதிய 2 வது ஆட்டத்திலும் , இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.

....தினமலர் 12.06.2010

nambi
12-06-2010, 06:03 AM
ஜுன்.12 (டிஎன்எஸ்) உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க ஒரு நாளுக்கு முன்னதாக ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த கார் விபத்தில் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஷெனானி உயிரிழந்தார். 13 வயதே நிரம்பிய ஷொனனி மண்டேலாவின் கடைசி பேத்தி ஆவார்.

நேற்று (ஜுன்.11) நடைபெற்ற உலக கோப்பை துவக்க விழா நிகழ்ச்சியில் மண்டேலா கலந்து கொள்வதாக இருந்தது. பேத்தி இறந்ததையடுத்து அவர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் உலக கோப்பை கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

மண்டேலாவின் பேத்தி இறந்ததையடுத்து 'பிபா'தலைவர் செப் பிளேட்டர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், ''இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. சரியான வார்த்தைகளை கண்டுபிடித்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் நான் இருக்கிறேன். கால்பந்து உலகமே உங்களுடன், உங்கள் குடும்பத்துடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.

உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற நெல்சன் மண்டேலா கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.அவரால் உலக கோப்பை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது தென்ஆப்பிரிக்க மக்களையும் சோகத்திற்குள்ளாக்கி உள்ளது.

....(நன்றி தமிழ் ஸ்போட்ஸ் நியூஸ்)...சென்னை ஆன்லைன் 12.06.2010

nambi
12-06-2010, 06:16 AM
தென் ஆப்பிரிக்கா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இலக்கு (கோல்) அடித்த விவரங்களும்..போட்டியில் பங்கேற்கும் நாடுகள் அடங்கிய குழுக்களின் (குழு A, B, C, D, E, F, G, H) பட்டியல்கள்....

உலக கோப்பை கால்பந்து குழு '' பி பா'' இணையதளம் (http://www.fifa.com/worldcup/standings/index.html?cid=google_onebox)

nambi
12-06-2010, 06:31 AM
உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் காலம் மற்றும் பங்கும் பெறும் நாடுகள் ஆடங்கிய பட்டியல்....(சாதாரணமாக சுட்டும் பொழுது தெ.ஆ நாட்டின் நேரப்படி குறிக்கப்பட்டிருக்கலாம் இதை சுட்டி மாற்றி வசிப்பிடத்திற்கேற்ப இருக்கும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்...)

(//Match times are currently set to your time zone, please click here to revert to local time.//) சுட்டியபின் இப்படி மாறும்...


தெ.ஆ. உலக கோப்பை கால்பந்து ஆட்டங்களின் நேர விவரங்களின் பட்டியல்... (http://www.fifa.com/worldcup/matches/index.html) (இந்திய நேரப்படி மாற்றியமைக்கப்பட்டது....வசிப்பிடத்திற்கேற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளவும்)

nambi
12-06-2010, 06:54 AM
இன்றை ஆட்டம் (இந்திய நேரப்படி)

குழு B

முதலா வது ..... கொரிய குடியரசு.... (எதிர்)....கிரீஸ்...மாலை 5.00 மணிக்கு (இடம் நெல்சன் மண்டேலா வளவு, எலிசபத் துறைமுகம்)2 வது.... ......அர்ஜன்டைனா.....(எதிர்)......நைஜிரியா...இரவு 7.30 மணிக்கு (இடம் ஜோகன்ஸ்பர்க்)

....பிபா இணையத்தளம்.

nambi
13-06-2010, 07:42 AM
சென்னை, ஜுன்.13-

நள்ளிரவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் சென்னை நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

நிலநடுக்கம்

சென்னையில் நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஒரு சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் லேசாக குலுங்கின. வீடுகளில் நிலநடுக்கம் உணரபட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து, தங்கள் குழந்தைகளுடன் வீட்டை விட்டு விட்டு சாலைக்கு ஒடி வந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே சரிந்து விழுந்தன. மேஜை, நாற்காலிகள் அதிர்ந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் தேனம்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, மைலாப்பூர், தியாகராயநகர், திருவான்மிïர், கோபாலபுரம், மதுரவாயல், மின்ட், ராயப்பேட்டை, சாந்தோம், பல்லாவரம், கொடுங்கைïர், கே.கே.நகர். கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 10 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் இரவு பணி பார்த்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

சாலையில் மக்கள் வெள்ளம்

இந்த திடீர் நிலநடுக்கத்தால் சென்னை நகர் முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. மெரினா கடற்கரையையொட்டிய பகுதிகளில் வசித்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டு விட்டு கடற்கரை சாலைக்கு வந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி வரக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கடற்கரை பகுதியில் பொது மக்கள் யாரும் செல்லாதப்படி போலீசார் பார்த்துக்கொண்டனர். முன்னதாக அவர்கள் கடற்கரை மணலில் படுத்திருந்த பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விட்டு சாலைகளில் குவிந்தனர். இதனால் சாலைகளில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

7.7 ரிக்டர் அளவு

இதற்கிடையில் அந்தமான் நிக்கோர்பார் தீவில் இருந்து 164 கிலோமீட்டர் தூரத்தில் நள்ளிரவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இது பதிவாகி இருந்தது. இதன் எதிரொளியாக சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.....தினத்தந்தி 13.06.2010

nambi
13-06-2010, 07:48 AM
இது உண்மை. சென்னையில் தங்கியிருந்ததால் நானும் இன்று அதிகாலையில் (1 மணியளவில்) உணர்ந்தேன். உறக்கத்தில் இருந்த உறவுகள் அனைவரையும் எழுப்பினேன். யாரும் நம்பவில்லை, ஆனால் பயந்தனர்....அப்பொழுது நின்று விட்டது. இங்கிலாந்து எதிர் அமெரிக்கா உலக கால்பந்து போட்டி முடிந்த அரை மணி நேரத்திற்குள் நிகழ்ந்தது. கணிணி திரை...மேசை... சுழல் நாற்காலி அனைத்தும் 10 வினாடிகள் வரை ஆடியது. துடித்து எழுந்து விட்டேன். கட்ட்டம் விழுந்து விடும் என்றே நம்பினேன். அந்தளவுக்கு ஆடியதை முழுதும் உணர்ந்தேன்......இன்று செய்தி வரும் என்றும் கூறினேன் சரியாக வந்து விட்டது.

nambi
16-06-2010, 04:09 AM
ஜோகனஸ்பர்க், ஜுன்.15 சோமாலியாவில் அர்ஜென்டினா- நைஜீரிய அணிகளுக்கிடையே நடந்த கால்பந்து போட்டியை டி.வி.யில் ரசித்த இரு ரசிகர்களை அல்குவைதா ஆதரவு தீவிரவாதக்கும்பல் சுட்டுக் கொன்றது.

ஆப்பிரிக்க நாடானா சோமாலியாவின் பெரும் பகுதிகள்,அல்குவைதாவுடன் தொடர்புடைய அல்ஷகாப், ஹிஸ்புல் இஸ்லாம் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தலைநகர் மாகதிசு நகரமும் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.உலக கோப்பை கால்பந்து போட்டியை காண சோமாலிய மக்களுக்கு இந்த இயக்கங்கள் தடை விதித்ததிருந்தன.

இந்த நிலையில் கடந்த 12ந் தேதி நடந்த அர்ஜென்டினா-நைஜீரிய அணிகள் மோதிய ஆட்டத்தை மாகதிசு நகரத்தில், இளைஞர்கள் சிலர் ரகசியமாக பார்ப்பதாக தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து 10 பேர் கொண்ட கும்பல் அந்த வீடு மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. இந்த தாக்குதலில் இரண்டு கால்பந்து ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் ரகசியமாக கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த மேலும் 12 பேரை கைது செய்து இழுத்து சென்றது.அவர்கள் என்னவானார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இது குறித்து ஹிஸ்புல் இஸ்லாம் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது அப்தி கூறும் போது, ''கால்பந்தால் நேரமும் பணமும்தான் விரையம் ஆகிறது.மனிதர்கள் மேலேயும் கீழேயும் துள்ளிக் கொண்டு இருக்கும் இந்த ஆட்டத்தால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை.சிறுவர்களும் இளைஞர்களும் கால்பந்து பார்த்து கெட்டுப் போகிறார்கள்.அதனால்தான் கால்பந்துக்கு தடை விதித்துள்ளோம்'' என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தீவரவாத பகுதிகளில் கால்பந்துக்கு பார்க்க தடை விதிக்கப்பட்டதையடுத்து சோமாலிய இளைஞர்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று போட்டியை ரசிப்பதாக கூறப்படுகிறது. யார் யாரெல்லாம் கால்பந்து போட்டியை பார்க்கின்றனர் என்பது குறித்தும் தீவிரவாத கும்பல் கணக்கெடுத்து வருகின்றனவாம்.
.....மக்கள் முரசு 15.06.2010

nambi
16-06-2010, 04:15 AM
('டியுசன்' கட்டணத்தை அரசே செலுத்தும்)


சென்னை, ஜுன்.16-

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரில் 78 ஆயிரம் மாணவர்கள் முதல்தலைமுறையாக பட்டப் படிப்புக்கு செல்ல உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் டிïசன் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

ரேண்டம் நம்பர்

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு கம்ப்ïட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி, முதன்மைச் செயலாளர் கே.கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் குமார் ஜெயந்த், துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் முன்னிலையில் கம்ப்ïட்டர் மூலம் ஒரே நொடியில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது.

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் சென்று தங்கள் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிட்டு தங்களுக்கான ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்ட பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1.67 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களில் மாணவர்கள் ஒரு லட்சத்து ஆயிரத்து 234 பேர். மாணவிகள் 66 ஆயிரத்து 172 பேர். விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெறும் பட்சத்தில் அவர்களை தரவரிசை செய்வதற்காக ரேண்டம் நம்பர் வழங்கப்படுகிறது.

கட் ஆப் மார்க் சமமாக இருக்கும்போது முதலில் கணித மதிப்பெண், அதன்பின், இயற்பியல் இதைத்தொடர்ந்து பிறந்த தினம் அதுவும் ஒருவேளை சமமாக இருந்தால் ரேண்டம் எண்ணை வைத்து தரவரிசை நிர்ணயிக்கப்படும். ரேண்டம் நம்பர் பயன்படுத்துவது மிக மிக அரிதுதான். கடந்த ஆண்டு 12 மாணவர்களுக்காக ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது.

18-ந்தேதி ரேங்க் பட்டியல்

என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களின் ரேங்க் பட்டியல் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். விளையாட்டுப் பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு (மொத்தம் 100 இடங்கள்) 21, 22-ந் தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 28-ந் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். என்ஜினீயரிங் படிப்பில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கான கவுன்சிலிங் 29-ந் தேதி தொடங்கி ஜுலை 3-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு (உடல் ஊனமுற்றவர்கள்) 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறோம். அவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 4-ந் தேதி நடத்தப்படும். பொது கவுன்சிலிங் ஜுலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கவுன்சிலிங் முடிவடைந்து வகுப்புகள் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் தொடங்கப்படும்.

கல்விக்கட்டண சலுகை

குடும்பத்தில் யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில் முதல்தலைமுறையாக கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசே கல்விக்கட்டணத்தை செலுத்தும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். இந்த ஆண்டு என்ஜினீயரிங் விண்ணப்பித்த ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரில் 78 ஆயிரத்து 86 பேர் (50 சதவீதம்பேர்) முதல்தலைமுறை மாணவர்-மாணவிகள்.

என்ஜினீயரிங் படிப்பில் போதிய இடங்கள் உள்ளன. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்த ஆண்டு தமிழ்வழியில் என்ஜினீயரிங் படிப்பு தொடங்கப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக தயாராகிவிடும். பொதுவாக என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் ஐ.டி. இ.சி.இ. என்றுதான் தேர்வு செய்கிறார்கள்.

கண்காணிப்புக்குழு

ஒட்டுமொத்தமாக எல்லாருமே ஒரே படிப்பில் சேரும்போது அதற்கு முக்கியத்துவம் குறைந்துவிடும். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பது பற்றி ஆராயப்படும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

.....தினத்தந்தி 16.06.2010

nambi
16-06-2010, 05:01 AM
இது குறித்து ஹிஸ்புல் இஸ்லாம் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது அப்தி கூறும் போது, ''கால்பந்தால் நேரமும் பணமும்தான் விரையம் ஆகிறது.மனிதர்கள் மேலேயும் கீழேயும் துள்ளிக் கொண்டு இருக்கும் இந்த ஆட்டத்தால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை.சிறுவர்களும் இளைஞர்களும் கால்பந்து பார்த்து கெட்டுப் போகிறார்கள்.அதனால்தான் கால்பந்துக்கு தடை விதித்துள்ளோம்'' என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


.....மக்கள் முரசு 15.06.2010

(மனிதர்களை துப்பாக்கியால்) ''சுட்டு சுட்டு விளையாடுவதால் மட்டும் பலன் உள்ளதா''?......''இவர்களாவது காலால் பந்தை உதைத்து உதைத்து தான் விளையாடுகிறார்கள்''

(இந்த செய்தியை பார்த்தால்.....திரை நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது ''செத்து செத்து விளையாடுவோமா? (வடிவேல் நகைச்சுவை))

nambi
17-06-2010, 10:58 AM
ஜோகனஸ்பர்க், ஜுன்.17 (டிஎன்எஸ்) பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர் என்று அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோ னா மீண்டும் தாக்கியுள்ளார்.

கால்பந்து மன்னர்கள் பீலேவும் மரடோ னாவும் அடிக்கடி ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வார்கள்.அதுவும் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக மரடோ னா பொறுப்பேற்ற பின்னர் சண்டை இன்னமும் அதிமாகிவிட்டது.ஒருவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தும் இன்னொருவர் பிரேசிலில் இருந்து கொண்டும் வார்த்தைகளால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரஸ்மீட்டில் தென்ஆப்பிரிக்காவில் உலக கோப்பை நடைபெறுவதை பீலே விரும்பவில்லை என்று மரடோ னா குறை கூற, பணத் தேவைக்காகவே மரடோ னா அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று பதிலடி கொடுத்தார் பீலே.

பீலேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மரடோ னா, ''பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர் அவரது விமர்சனங்களை பற்றி தான் கவலைப்படப்போவது இல்லை. என்னை பற்றி பேசுவதை முதலில் பீலே நிறுத்த வேண்டும். அப்போதுதான் நானும் நிறுத்துவேன்'' என்று கூறியுள்ளார்.

இந்த முறை 'யூபா' தலைவர் மைக்கேல் பிளாட்டினியையும் மரடடீனா விட்டு வைக்கவில்லை. மரடோ னாவுக்கும் பிளாட்டினிக்கும் ஜபுலானியால் சண்டை வந்துள்ளது. பிளாட்டினி ஜபுலானி ஓ.கே என்று கூற மரடோ னாவுக்கு கோபம் வந்து விட்டது. ''பிரெஞ்சுக்காரர்களுக்கு தாங்கள்தான் உலகத்திலேயே சிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. பிளாட்டினியும் பிரெஞ்சுக்காரர்தான். அவர் சொல்வதுதான் சரி என்று சொல்வார். வேண்டுமென்றால் ஜபுலானியை வைத்து அவர் விளையாடி பார்க்கட்டும்'' என்று அவரையும் போட்டு வறுத்து எடுத்தார்.

.....சென்னை ஆன்லைன் 17.06.2010

nambi
17-06-2010, 01:54 PM
ஐரோப்பிய கால்பந்தை ஆட்டிப்படைத்து வரும் நிறவெறி இந்த முறை, தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக உலகக்கோப்பை கால்பந்தை நடத்தி முடிக்கும் போது, அமைதியாகும் என்று ஆப்பிரிக்க அணியான கேமரூன் அணித் தலைவர் சாமியேல் ஈட்டோ தெரிவித்துள்ளார்.

"என்னுடைய கால்பந்து வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட கடினமான தருணங்கள் ஏராளம். ஆனால் இம்முறை தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் ரசிகர்களின் அணுகுமுறை மாறும் என்று நம்புகிறேன். நான் இம்முறை இத்தாலியில் கடும் நிறவெறி வசைக்கு ஆளானேன், ஆனால் அந்த ஒரு நாடு மட்டும் நிறவெறித் தக்கமுடையதல்ல. ஆனால் இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்." என்றார் ஈட்டோ.

தென் ஆப்பிரிக்காவில் அதுவும் என்னுடைய ஆதர்சமான தலைவர் நெல்சன் மண்டேலா இருக்கும் நாட்டில் உலகக் கோப்பை போட்டியில் நான் விளையாடுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நான் அவரை இரண்டு முறை சந்திக்கும் அதிர்ஷ்டம் பெற்றேன், அந்தத் தருணம் என் வாழ்வில் ஒரு முக்கியமான பொக்கிஷம். இதனால்தான் ஒரு ஆபிரிக்கனாக இந்த உலகக் கோப்பையில் பங்கேற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

உலகம் ஆப்பிரிக்க நாடுகளை பசி, போர், பிணி, பஞ்சம், வறுமை என்று பார்த்துவருகிறது. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகள் உலகிற்கு ஆப்பிரிக்கா பற்றிய வேறு பார்வையை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். வரலாற்றில் இது சிறந்த உலகக் கோப்பையாக அமைவது குறித்து உலகம் ஆச்சரியமடையப் போகிறது." என்று கூறினார் ஈட்டோ.

தனது கால்பந்து நாட்கள் முழுதும் நிறவெறித் தன்னை துரத்தியதாகக் கூறினார் சாமியேல் ஈட்டோ.

"ஆப்பிரிக்க கால்பந்து வீரர்களுக்கு கால்பந்து ஒரு கடினமான பயணமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் அப்படித்தான். நான் இதனை அனுபவித்திருக்கிறேன். நான் ரியல் ஜர்கோசா அணியை எதிர்த்து விளையாடும்போது மைதானத்தில் ரசிகர்கள் குரங்கு போல் என்னைக் கேலி செய்து சேஷ்டை செய்வர். மைதானத்தில் நான் செல்லும் இடத்தில் பொட்டுக் கடலைகளை விட்டெறிவர். ஆனால் நான் கோல் அடித்து விட்டு குரங்கு போல் அவர்களிடம் ஆடிக் காண்பிப்பேன்." என்றார் ஈட்டோ.

2004ஆம் ஆண்டு பார்சிலோனா அணியில் நுழைந்தபோது ஈட்டோ ஒரு முக்கியமான வாசகம் ஒன்றை வெளியிட்டார்: "வெள்ளையர் போல் வாழ, கறுப்பர் போல் ஓடினேன்" என்றார். அப்போது ஈட்டோ மீது பலர் "நிறவெறி" என்று பாய்ந்தனர்.

"நான் கூறிய அந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்கள் மக்களுக்கு புரியவில்லை. நான் கூற வந்தது என்னவென்றால் மற்றவர்களைப் போல் வாழ்வில் உயர அவ்ர்கள் செய்வதை விட பல மடங்கு கடின உழைப்பை ஒரு ஆப்பிரிக்கன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது." என்ற பொருளில்தான் நான் அதனைக் கூறினேன்.

மேலும் ஈட்டோ, கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்பிரிக்க அணிகள் முன்னேற முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டினார்.

1990ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன் முதலாக காலிறுதியில் நுழைந்த ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை கேமரூன் பெற்றது.

ஆனால் இரண்டு பெனால்டிகள் கேமரூனுக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு சார்பாக வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இங்கிலாந்திடம் கேமரூன் தோல்வி தழுவி வெளியேறியது.


......வெப்துனியா 08.06.2010

nambi
19-06-2010, 09:37 AM
ஐதராபாத்: நாட்டில் அவ்வப்போது உயர்பொறுப்பில் இருப்பவர்கள் அற்ப காசுக்கு ஆசைப்பட்டு தங்களுடைய பதவியின் பெருமையையும், பொறுப்பையும் குப்பைத்தொட்டியில் தள்ளும் அளவுக்கு போய்விடுகின்றனர். சமீபகாலமாக இந்தியாவில் சி.பி.ஐ.போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவகவுன்சில் தலைவர் கேதான்தேசாய் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து இந்த கவுன்சிலை மத்திய அரசு கலைத்துள்ளது.தமிழகத்தில் அரசு அலுவலக சுவர் செங்கல்கள் கூட உள்ளே வருவோரிடம் கை நீட்டும் அளவிற்கு லஞ்சம் கொழிக்கத்துவங்கி விட்டது. லஞ்சப்பணத்துடன் அதிகாரிகளிடம் சிக்கிய தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி ஒருவர் பணத்தை முதலைபோல சவைத்து விழுங்க நினைத்தார், ஆனால் போலீசார் வாயில் கையை போட்டு வெளியே ரத்தக்கறையுடன் எடுத்தது நினைவு இருக்கலாம். இதில் ஒரு இளைப்பாறுதல் தரும் விஷயம் என்னவெனில் உலக லஞ்சம் பெறும் நாடுகளில் 84 வது இடத்தில் இருக்கிறது என்பது . இதில் தான் நாம் சற்று யோசிக்க வேண்டும் 84 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் வெளிவரும் லஞ்ச விவகாரம் நமது நெஞ்சை சுடு, சுடுவென எரித்து தள்ளுகிறது. டாப் 10 ல் வந்தால் என்னாவது அதற்குத்தான் லஞ்ச வழக்கில் சிக்குவோரை கண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்தியாவில் அதிகம் ஊழியர்களை கொண்ட ரயில்வே துறையில் தற்போதைய ஊழல் சற்று வித்தியாசமானது. கடந்த 6 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 50 ஆயிரம் பதவிகளுக்கான ( அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர், அசிஸ்டண்ட் லோகோ பைலட் ) தேர்வில் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் பணியாளர் நியமனத்தில் ஊழல் செய்தால் தானே சிரமம் என யோசித்த ரயில்வே தேர்வானைய ஊழியர்கள் தேர்வு எழுதும் கேள்வித்தாளை விற்று காசாக்கியுள்ளனர். ஒரு விடைத்தாள் விலை 3. 5 லட்சம் வரை போயிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் புரண்டிருக்கிறது. இது தொடர்பான விஷயம் லீக் ஆகவே சி.பி.ஐ., அதிகாரிகள் டிஐ.ஜி., லஷ்மி நாராயணா தலைமையில் யார் , யார் இதில் ஈடுபட்டுள்ளனர் என மோப்பம் பிடித்து 8 பேரை கைது செய்திருக்கிறது. ஐதராபாத், மும்பை, பெங்களூரு, ராய்ப்பூர், கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ளவர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கூறிய நகரங்களில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரயில்வே தேர்வானைய வாரிய சேர்மன் மகன் விவேக்பரத்வாஜ், மற்றும் ரயில்வே ஏ.டி.ஆர்.எம்., மற்றும் ஏஜன்டாக செயல்பட்ட 8 பேர் கைது செயய்யப்பட்டு ஜெயிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம் இருந்தது லீக் செய்யப்பட்ட கேள்வித்தாள், மற்றும் லேப்டாப், கோடிக்கணக்கில் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 400 பேருக்கு வினாத்தாள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் இருந்து தவணை முறையிலும் பணம் பெறப்பட்டு இதற்கு சூரிட்டியாக அவர்களது ஒரிஜினல் சான்றுகள் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள். முழுப்பணம் செட்டில் செய்யப்பட்ட பின்னர் சான்றுகள் திருப்பி வழங்கப்படும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் விவகாரம் வெளியானதும் தேர்வானைய தலைவர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் இந்த ஊழலில் தனது அப்பாவுக்கும் தொடர்பு உண்டு என கைதான தேர்வானைய தலைவர் சர்மாவின் மகன் விவேக் பரத்வாஜ் கூறியுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் இவரும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பலர் சிக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ரயில்வே தேர்வு ரத்தாகுமா? : இந்த ஊழல் விவகாரத்தை அடுத்து வரும் 27 ம்தேதி நடக்கவிருக்கும் ஏனைய பதவிகளுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தேர்வானைய தலைவர் சர்மாவை கைது செய்ய ரயில்வே துறை அமைச்சகம் கிரீன் சிக்னல் தந்தால்தான் முடியும். ரயில்வே துறை அமைச்சர் மம்தா இதில் என்ன பதில் சொல்லபோகிறார்?

...தினமலர்..19.06.2010

nambi
19-06-2010, 10:41 AM
ராவணன் தமிழ்ப் படத்தை ரிலையன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ 5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜ் டிவி.

சிவாஜி, தசாவதாரம் மற்றும் குசேலன் படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு டிவி உரிமை விற்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே.

இந்தப் படத்தை வாங்க தமிழ் சேனல்கள் சில போட்டியிட்டன. ஆனால் அதிக விலை கூறப்பட்டதால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டது சன் டிவி. கலைஞர் டிவியும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.

இதற்கிடையில் ரூ 5 கோடியைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தது ராஜ் டிவி.

இதைவிட நல்ல விலை இந்தப் படத்துக்குக் கிடைக்காது என்ற நிலையில் கப்பென்று ராஜ்டிவியை பிடித்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள்.

இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜ் டிவி இந்தப் படத்தை வாங்கியிருப்பதை பெரும் ஆச்சர்யத்தோடு பேசுகின்றனர் திரையுலகில்.

மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை சன் டிவி வாங்கியதில்லை. இருவர்,உயிரே, ஆயுத எழுத்து மற்றும் கடைசியாக வெளியான குரு போன்ற படங்களின் உரிமையை ஜெயா, விஜய் மற்றும் ராஜ் டிவிதான் வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

.....தட்ஸ் தமிழ் 17.06.2010

nambi
21-06-2010, 10:45 AM
ஜோகனஸ்பர்க், ஜுன்.21 (டிஎன்எஸ்) சாக்கர்சிட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்ட் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பிரேசிலின் பேபியானோ இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஐவரிகோஸ்ட் வீரரின் மார்பில் முழங்கையால் தாக்கிய காகா சிவப்பு அட்டைக் காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'ஜி' பிரிவில் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் நிறைந்த ஐவரிகோஸ்ட் அணி 5 முறை உலக சாம்பியன் பிரேசிலை எதிர்கொண்டது. பிரேசிலுக்கு எல்லாவிதத்திலும் ஐவரிகோஸ்ட் ஈடுசெய்யக் கூடிய அணி என்பதால் போட்டி நடந்த சாக்கர்சிட்டி மைதானம் நிரம்பி வழிந்தது. துவக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் பிரேசிலின் காகா,ரொபின்கோ ஆகியோர் ஐவரிகோஸ்டின் கோலி ஏரியாவுக்குள் பந்தை கடத்தி வந்து பேபியோனோவுக்கு பாஸ் செய்தனர். பேபியானோ அதனை எளிதாக கோலாக மாற்றினார். சுமார் 9 மாதங்கள் கழித்து பிரேசில் அணிக்காக பேபியானோ அடித்த கோல் இது. பயிற்சியாளர் துங்கா இவர் மீது வைத்த நம்பிக்கையை இந்த கோலால் காப்பாற்றி விட்டார்.

இந்த கோலையடுத்து, பிரேசில் 1-0 என்று முன்னிலை பெற்றது.தொடர்ந்து ஐவரிகோஸ்ட் கடும் போராட்டம் நடத்தியது. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் டின்டேன் அடித்த பந்து பிரேசில் தடுப்பாட்டக்காரர் பிலிப் மெலோவின் கையில் பட்டு சென்றது.டின்டேன் பெனால்டி கேட்க நடுவர் அதனை ஏற்கவில்லை.இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்று பிரேசில் முன்னிலை பெற்றது.

பிற்பாதி ஆட்டம் துவங்கியதும் 51வது நிமிடத்தில் பேபியானோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஐவரி கோஸ்டின் 3 தடுப்பாட்டக்காரர்களுக்கு அவர் தண்ணி காட்டியது சம்பா சாக்கர் அழகு. இதனால் பிரேசில் 2-0 என்று முன்னிலை பெற்றது. ஆனால் இந்த கோலுக்காக பேபியோனோ பந்தை கடத்தும் போது, அவரது கையில் பந்து பட்டது இதனை நடுவர் கவனிக்கவில்லை.தொடர்ந்து 61வது நிமிடத்தில் காகா கோலை நோக்கி அடித்த பந்தை ஐவரிகோஸ்ட் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில் எலானோ பிரேசிலுக்கான 3வது கோலை அடித்தார்.காகா கொடுத்த பாஸ் எலானோ கோல் அடிக்க உதவியது.ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் ஐவரிகோஸ்ட் கேப்டன் திடையர் டிரோக்பா தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார்.இந்த கட்டத்தில் ஆட்டம் பரபரப்படைந்தது.இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டம் ஆடினர். 85வது நிமிடத்தில் காகா ஒரு மஞ்சள் அட்டை பெற்றார்.இதற்குஅடுத்த 3வது நிமிடத்தில் ஐவரிகோஸ்ட் வீரர் கீய்டாவின் மார்பில் காகா முழங்கையால் தாக்க,ஐவரிகோஸ்ட் வீரர்கள் காகாவை அடிக்க பாய்ந்தனர்.மைதானத்தில் இரு அணி வீரர்களுக்கும் அடிதடி உருவாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பிரான்ஸ் நடுவர் ஸ்டீபானே லேனி காகாவுக்கு சிவப்பு அட்டைக்காட்டி களத்தை விட்டு வெளியேற்றினார். மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது.இறுதியில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தற்போது 'ஜி' பிரிவில் பிரேசில் இரு வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐவரிகோஸ்ட் இரு ஆட்டங்களில் ஒரு புள்ளி மட்டும் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் பிரேசில் போர்ச்சுகல் அணியுடன் மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் ஐவரிகோஸ்ட் வட கொரியாவை சந்திக்கிறது.
(நன்றி தமிழ் ஸ்போர்ட்ஸ் நியுஸ்.காம்)....சென்னை ஆன்லைன் 21.06.2010

nambi
22-06-2010, 05:06 AM
புதுடெல்லி, ஜுன்.22-

கலப்பு காதல் திருமண விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே, தங்கள் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதாக கருதி அந்த காதலர்களை கொல்லும் சம்பவம் வட மாநிலங்களில் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இத்தகைய கவுரவ கொலைகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் பதிலை கேட்டு உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி, கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையிலும், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையிலும் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரஇருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பான மசோதா ஏற்கனவே தயாராகி விட்டதாகவும், அந்த மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

......தினத்தந்தி 22.06.2010

nambi
22-06-2010, 05:10 AM
திருச்சி, ஜூன்.21: திருச்சி அருகே அந்தநல்லூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி கொள்ளை போயிருப்பதாகப் போலீசார் தெரிவித்தனர்.

அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சுவரில் ஞாயிற்றுக்கிழமை இரவு துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்து நகைகள், ரொக்கம் உள்பட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளை அடித்துச் சென்றதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
....தினமணி 21.06.2010

nambi
22-06-2010, 05:13 AM
புது தில்லி, ஜூன் 19: பங்குச் சந்தையுடன் இணைந்த முதலீட்டுத் திட்டங்கள் (யு-லிப்ஸ்) கட்டுப்பாடுகளை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) நிர்வகிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

÷இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) மற்றும் ஐஆர்டிஏ இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

÷காப்பீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை முதலீட்டுடன் இணைந்த திட்டங்களை (யு-லிப்ஸ்)அறிமுகப்படுத்துகின்றன. இத்தகைய காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தும் வழக்கமான காப்பீட்டுத் திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டி மற்றும் போனஸ் தொகையை விட அதிகம் கிடைக்கும் என்பதால் இத்திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றன. கடந்த ஏப்ரல் மாதம் 14 நிறுவனங்களின் யு-லிப்ஸ் திட்டங்களுக்கு செபி தடை விதித்தது. இதனால் யு-லிப்ஸ் திட்டங்கள் தொடருமா? அல்லது அவை திரும்பப் பெறப்படுமா என்ற குழப்பமான நிலை ஏற்பட்டது. ÷ஆனால் செபி-யின் உத்தரவை பின்பற்ற வேண்டாம் என்று ஐஆர்டிஏ கூறியது. இந்த பிரச்னை நிதி அமைச்சகம் வரை சென்றது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு விவாதித்தது. இதன் முடிவில் யு-லிப் திட்டங்களை இறுதி செய்யும் பொறுப்பு ஐஆர்டிஏ-விடம் அளிப்பது எனவும் இதற்கான வழிகாட்டுதலையும், சட்ட திருத்தங்களையும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் யு-லிப்ஸ் சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஐஆர்டிஏ நிர்வகிக்கும்.

÷ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிடும் புதிய திட்டங்களில் 50 சதவீதம் வரை பங்குச் சந்தை முதலீட்டு அடிப்படையிலான திட்டங்களாகும். இதில் திரட்டப்படும் முதலீட்டில் பெருளவு தொகை கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

÷இதற்கான அவசர உத்தரவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் காப்பீட்டுத் திட்டங்களுக்கான சட்ட திருத்தம் மற்றும் செபி சட்டதிருத்தம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

....தினமணி 20.06.2010

nambi
22-06-2010, 05:16 AM
சென்னை, ஜுன்.22-

சென்னை மாநகராட்சி பகுதியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளில் பெயர் பலகைகள் அகற்றும் பணி தொடங்கியது என்று மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10 மண்டலங்களிலும் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளில் பெயர்ப்பலகைகள் அகற்றும் பணி அண்ணாசாலையில், புதிய தலைமைச்செயலகம் எதிரில் நேற்று தொடங்கியது. அண்ணாசாலையில் இப்பணிகளை பார்வையிட்ட மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இறுதிக்கெடு முடிந்தது

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பல்வேறு வணிக சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுறுத்தப்பட்டது. தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கு 21/2 மாத கால அவகாசமும் அளிக்கப்பட்டது. 20-ந் தேதியுடன் மாநகராட்சி விதித்த இறுதிக் கெடு முடிந்தது.

வணிக நிறுவனங்கள் 85 சதவீதம் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் வைத்துவிட்டன. மீதமுள்ள 10 முதல் 15 சதவீத கடைகளின் பெயர்ப்பலகைகள் அகற்றும் பணியினை சென்னை மாநகராட்சி படிப்படியாக மேற்கொள்ளும். இது உணர்வுரீதியான பிரச்சினை ஆகும்.

வணிக நிறுவனங்களுக்கு நன்றி

சென்னை மாநகராட்சியின் கோரிக்கையினை ஏற்று, பெயர் பலகைகளை தமிழில் மாற்றியுள்ள வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மீதமுள்ளவர்களும் உடனடியாக மாற்றிட வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி சார்பில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளின் பெயர்ப்பலகைகள் நிச்சயம் அகற்றப்படும்.

மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் மண்டல அலுவலர்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுவார்கள்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பேட்டியின்போது, மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி உடனிருந்தார்.

.....தினத்தந்தி 22.06.2010

nambi
22-06-2010, 05:21 AM
புது தில்லி, ஜூன் 21: போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 1,300 கோடி நிவாரணமாக வழங்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாகக் கிடைக்கும். நிரந்தரமாக ஊனமடைந்தவர்கள், பல்வேறு வகைகளில் கடுமையான உடல் நிலை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் அமைச்சர்கள் குழு கூறியுள்ளது.

÷1984-ம் ஆண்டில் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே, 5,295 பேர் பலியாயினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்த ஒருமாதத்தில் பல்வேறு கொடுமையான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிரிழந்தனர். 37 ஆயிரம் பேர் நிரந்தரமான உடல் பாதிப்புக்கு உள்ளாயினர். மேலும் 5 லட்சம் பேருக்கு பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டன. விஷவாயுவின் பாதிப்பு இன்று வரை அப்பகுதியில் உள்ளது.

....தினமணி 21.06.2010

nambi
22-06-2010, 05:24 AM
சென்னை, ஜுன்.22-

சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் தமிழில் வாதிடலாம் என்றும் இதை நீதிபதிகள் யாரும் எதிர்க்கவில்லை என்றும் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அறிவித்துள்ளார்.

வக்கீல்கள் கைது

ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக ஐகோர்ட்டு வளாகத்துக்குள் போராட்டம் நடத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் 7 பேர் 18-ந் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் ஐகோர்ட்டு வளாகம் பூட்டப்பட்டதை அடுத்து, கடந்த 19-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்துக்கு வெளியே உண்ணாவிரதம் இருந்த 4 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
.....தினத்தந்தி 22.06.2010

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடினார்கள் வழக்குரைஞர்கள்.

...கலைஞர் செய்திகள் 22.06.2010 11.59

nambi
23-06-2010, 04:42 AM
கோவை: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு துவங்குவதையொட்டி மாநாடு நடக்கும் மைதானத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் ( திங்கட்கிழமை ) 2 உணவுக்கூடத்தை துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்கம் முன்பாக அமைந்துள்ள இந்த உணவுக்கூடத்தில் 20 நிறுவனங்கள் பல்வேறு சுவையான உணவுவகைளை தயாரித்து மக்களுக்கு வழங்கும். பொதுமக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள இங்கு சைவம், மற்றும் அசைவ உணவு வகைகள் கிடைக்கும். குறைந்த விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 434 வகையான உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. மக்கள் வாங்கி செல்வதற்கு 52 முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

.....தினமலர் 20.06.2010

muthuvel
23-06-2010, 06:44 AM
தேனி : தேனி பஸ் ஸ்டாண்டில் கிடந்த 15 சவரன் தங்க நகையை தவற விட்ட முதியோர் நேற்று போலீஸ் ஸ்டேஷன் வந்து பெற்றுக்கொண்டனர். தேனி பஸ் ஸ்டாண்டில் நேற்று 15 சவரன் தங்க நகை கிடந்தது. அரசு பஸ் டைம்கீப்பர் ஆனந்தன் அந்த நகையை எடுத்து, போலீசிடம் ஒப்படைத்தார். நேற்று காலை மதுரை தெற்கு வெளிவீதி, முத்துப்பள்ளி தெருவில் வசிக்கும் மணி (82), ஜாய்சரோஜினி (72) தம்பதி அந்த நகையை கேட்டு, தேனி ஸ்டேஷனுக்கு வந்தனர்.மதுரையில் இருந்து லட்சுமிபுரம் திருமண விழாவிற்கு தனியே சென்றபோது, நகையை கழுத்தில் அணிந்து வர தயங்கி, மூதாட்டி சரோஜினி இடுப்பில் மறைத்து வைத்து வந்தபோது, தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார்.தேனி எஸ்.ஐ., மீனாட்சி வேறு நகைகளை கொண்டு வந்து "இது உங்கள் நகைகளா', என மூதாட்டியிடம் கேட்டனர். தம்பதியினர்," இது இல்லை' எனக்கூறி விட்டனர். பின்னர் எஸ்.ஐ., மீனாட்சி, நகைக்கடையில் இருந்து வாங்கிய சில நகைகளுடன் பஸ் ஸ்டாண்டில், எடுத்த நகையை வைத்து காட்டினார். தம்பதியினர் அவ்வளவு நகைகளுக்கு நடுவில், பஸ் ஸ்டாண்டில் கிடந்த தங்களது நகைகளை அடையாளம் காட்டினர்.அதன் பின், உண்மையிலேயே தம்பதிகள் தான் நகையை தவற விட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார், அவர்களிடம் ஒப்படைத்தனர். நகைகளை வாங்கிய மூதாட்டி சரோஜினி, அவற்றை கண்டெடுத்த ஆனந்தன் காலில் விழுந்து "இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு நேர்மையான மனிதரை பார்த்ததில்லை' எனக்கூறி கண்ணீர் விட்டார். பின், ஆனந்தனுக்கு பரிசு ஒன்றை கொடுத்து விட்டு, தம்பதியினர் மதுரை புறப்பட்டனர்.

nambi
23-06-2010, 07:20 AM
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடங்குவதையொட்டி கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறவுள்ள இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பையொட்டி இந்த மாற்றம் செய்யப்படட்டுள்ளது.

வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கும் ஊர்வலம், அவினாசி ரோடு, அண்ணா சிலை, லட்சுமி மில் சிக்னல், பீளமேடு, ஹோப் காலேஜ், வழியாக கொடிசியா வளாகத்தை அடைகிறது.

இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை, பேரணி நடைபெறும் அவினாசி ரோட்டில் போக்குவரத்து [^]க்கு தடை செய்யப்படுகிறது.

6 வழிகளைக் கொண்ட அவினாசி சாலையில், ஒரு பாதையை மூடி அதில் பேரணி நடைபெறவுள்ளது. மறு பாதையில் மக்கள் நின்று பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, பால் வண்டி போன்றவை செல்ல தடை விதிக்கப்படவில்லை.

அவினாசி சாலையில் போக்குவரத்து தடுக்கப்பட்டிருப்பதால் அதற்குப் பதில் திருச்சி [^] சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

அதேபோல விமான நிலையம் [^] செல்ல விரும்புவோர், திருச்சி ரோடு வழியாக சிந்தாமணிபுதூர் சென்று அங்கிருந்து எஸ்.ஐ.எஸ்.எச். காலனி வந்து விமான நிலையம் போகலாம்.

ஈரோடு மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை காந்திபுரத்திற்கு வழக்கம் போல் வரலாம். மேட்டுப்பாளையம் ரோட்டிலும் போக்குவரத்து மாற்றம் இல்லை. பாலக்காடு ரோட்டில் இந்து காந்திபுரம் வரும் பாதையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பேரூர் ரோடு, தடாகம் ரோடு, மருதலை ரோடு, மில் ரோடு, பெரியகடை வீதி, புரூக் பாண்ட் ரோடு ஆகியவற்றிலும் மாற்றம் இல்லை.

....தட்ஸ் தமிழ் 23.06.2010

nambi
25-06-2010, 02:13 AM
கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது `தமிழ் மொழிகளில் உள்ள இலக்கியச் செல்வங்களை உலக மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும்' என்று கூறினார்.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஆய்வரங்கம் தொடக்கம்

மாநாட்டின் 2-வது நாளான நேற்று உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கம் தொடக்க விழா காலை 9.30 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில் தொடங்கியது.

முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்தார். ஆய்வரங்க மலரை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி விழா மலரை பெற்றுக் கொண்டும், ஆய்வரங்கின் பொருண்மைகளின் தொகுப்பினை வெளியிட்டும் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய தெம்பும், நம்பிக்கையும்...

இங்கு நடைபெறவுள்ள ஆய்வரங்கிலும், இணையத் தமிழ் மாநாட்டிலும் பங்கு கொள்ள வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்பையும், நன்றியையும், முதற்கண் தெரிவித்துக்கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் நம்மாலே காண முடிகிறது. ஏறத்தாழ 50-க்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது நமக்குப் புதியதெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

புதிய கோணத்தில் சிந்தனை

ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச் சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின் பணியாகும். இத்தகைய ஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன், ஆய்வறிஞர்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை வழங்கிட வேண்டும்.

ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துகளும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.பண்பாட்டு வளம்

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786-ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ, ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816-ல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856-ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர். இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி தமிழ் என்னும் உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.

1927-ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது. அதன்பின், உலக நாடுகளின் அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள்.

திராவிட இனத் தொன்மை

திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

ரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார். சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர் தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார்.

காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிடமொழிப் பிரிவின் கிளைமொழியைப் பேசுகின்றனர். பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்'' என்போர் திராவிட மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்.கே.சட்டர்ஜி, "இந்தோ - ஆரியன் - இந்து'' என்ற நூலில் எழுதியுள்ளார். ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு திராவிட வழிபாடே ஆகும்.

திராவிடரின் கடவுள்

அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரில் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன. சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து உரைக்கின்றார். எழுத்து முறையை எகிப்தியருக்குத் திராவிடர் கொடையாகக் கொடுத்தனர்.

மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத் தமிழரிடமிருந்து சென்றவை. பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த "ஒனசு'' என்பார், தமது குழுவினருடன் வந்தார். நாகரிகம் கற்பித்தார். ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார். அறிவியல்கலை, கட்டடக்கலை, ஆண்டவன் வழிபாடு ஆகியவற்றைக் கற்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் இருந்து...

சங்ககாலம் கி.மு. 4-ம் நூற்றாண்டின் தொடக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது. "மத்திய தரைக்கடல், குமரிக்கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கணும் பரவியது தமிழர் நாகரிகமே'' என்று ராமச்சந்திர தீட்சிதர் "தமிழர் தோற்றமும் பரவியதும்'' என்ற நூலில் கூறியுள்ளார்.

தமிழ்மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும்; திணை, துறை வகுப்பும்; சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாதவாறும்; கூற்று நிலையில் அமைந்திடுமாறும் உள்ள அகப்பாடல்களும், பொய்யும் வழுவும் விரவா மெய்யான தூய காதலைப் போற்றும் மரபும், மகேசனை மையப்படுத்தாது மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை.

பண்பாட்டு பங்களிப்பு

திருக்குறள்போல உலகப் பொதுமையான அறிவு இலக்கியமும் எந்த மொழியிலும் இல்லை. கடவுளை விடுத்துக் குடிமக்களைத் தலைமக்களாகக் கொண்ட சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்திற்கு மணிமேகலை போல ஒரு காப்பியம் பாலிமொழியிலும் இல்லை.

எல்லாச் சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும் இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி. அது மட்டுமல்ல, எல்லா மெய்ப்பொருள் தத்துவங்களையும் விளக்கும் மொழி அது. தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல, கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று, திரைகடலோடித் திரவியம் தேடியது மட்டுமன்றி திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழ் இனம்.ஆய்வாளர்களின் கருவூலம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையினரால் முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி. 1053-ம் ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும்.

தஞ்சையை விசயாலயச் சோழன் பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது. இச்செப்பேடு இந்த மாநாட்டை ஒட்டிய கண்காட்சியில் உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இன்னும் ஆற்ற வேண்டியவை...

இப்படி காலந்தோறும் தமிழ், தமிழர்கள் கொண்டுள்ள எண்ணற்ற சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்; அவற்றையெல்லாம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள்தான் வெளிநாட்டவர்க்கு எடுத்துரைத்திடவேண்டும். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர் அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தமிழன் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை முதலில் தமிழன் உணர வேண்டும்; பிறருக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல், தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதித்துள்ள சாதனைகள், இவையெல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தக் கூடியவை என்றாலும், அந்தப் பூரிப்போடும் பெருமிதத்தோடும் நிறைவு அடைந்து விடக் கூடாது; தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் ஆற்ற வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை உணர வேண்டும்.இந்திய, உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு

இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்க மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும், ஜெர்மன் மொழியிலும், பிற மொழிகளிலும் தமிழியல் குறித்தும் தமிழினம் குறித்தும் எழுதப் பெற்றுள்ளவை அனைத்தும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப்பெற்று உலகில் எந்த ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகைவகையாய் அகராதிகளும், தொகைதொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வரவேண்டும். இன்னும் என்னென்ன வேண்டும் தமிழுக்கு என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஊக்கமும், உறுதியும்

"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'' என்ற பாவேந்தர் கருத்துப்படி, பாட்டை அமைத்துக் கொண்டு, உயிர் உள்ளவரை தமிழுக்காகப் பாடுபட, நம்மைத் தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட, நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட, உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.

இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆய்வரங்கின் பல்வேறு அமர்வுகளில் வழங்கப்பெறும் கட்டுரைகளிலும், முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம் ஆகியவற்றிலும் முன் வைக்கப்படும் கருத்துகளும், அவை மீதான ஆரோக்கியமான விவாதங்களும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்கவிஞர் கனிமொழி

முன்னதாக, ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆய்வரங்க அமைப்பு குழு செயலாளர் கவிஞர் கனிமொழி எமë.பி., பொன்னாடை அணிவித்தும், புத்தகம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கியும் கவுரவித்தார். மாநாட்டிற்கு யாழ்ப்பாண தமிழர் கா.சிவத்தம்பி தலைமை தாங்கினார்.

வெளிநாட்டு அறிஞர்கள் ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, வில் ஸ்வீட்மேன், கிறிஸ்டினா முரு மற்றும் ஆ.கந்தையா, தா.மாரிமுத்து, சுப.திண்ணப்பன், நா.திருமலைச்செட்டி, அலெக்சாண்டர் துபியான்ஸ்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன், வெளிநாட்டு அறிஞர்கள் கிரிகோரி ஜேம்ஸ், உல்ரிக் நிக்லாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக, முன்னாள் துணைவேந்தர் பொற்கோ வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர் அவ்வை து.நடராஜன் நன்றி கூறினார்.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த விழாவில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆ.ராசா, ஜி.கே.வாசன், ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, பொங்கலூர் பழனிசாமி, தா.மோ.அன்பரசன் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழ்ச் சான்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மொரீசியஸ் தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் என்.வரதராஜன், கோவை எம்.பி. நடராஜன், கட்சியின் சட்டமன்ற தலைவர் பாலபாரதி எம்.எல்.ஏ. ஆகியோரும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

....தின்த்தந்தி 25.06.2010

nambi
25-06-2010, 02:17 AM
கோவை : ""கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் சிவத்தம்பி தலைமை வகித்தார். விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

கிரிகோரி ஜேம்ஸ்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: சில காலத்துக்கு முன், பல்கலைக்கழகத்திற்குச் சென்று தமிழ் நூல்களைத் தேடிச் சென்றேன். அங்கிருந்த பணியாளர், அதற்கு முன்பு அங்கு வந்தது உண்டா என்று கேட்டார். நான் மாணவனாக இருந்தபோது, வந்ததாகக் கூறினேன். அப்போது அவர், அந்நூலகத்தில் எனது 20 வயதில் கொடுத்த விண்ணப்பத்தைத் தேடிக் கொடுத்தார். நான் வியந்து போய், "நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததை எப்படி பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர், பழமையான தமிழ் மொழிக்கு 40 ஆண்டுகள் என்பது ஒரு காலமா என்று கேட்டார். அந்த அளவுக்கு தொன்மை வாய்ந்த மொழி, தமிழ் மொழி. மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்: ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். அவரது பேச்சு: இந்த மாநாட்டில் பேச வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 17வது நூற்றாண்டிலேயே ஜெர்மனியைச்சேர்ந்த அறிஞர், தரங்கம்பாடிக்கு வந்து தமிழ் மொழி பயின்று, தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அதிலிருந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி அங்கு மதிக்கப்பட்டு வருகிறது. கலோன் பல்கலைக்கழகத்தின் 1943லிருந்து தமிழ்த்துறை செம்மையாக செயல் படுகிறது. தமிழில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பு வரை அங்கே படிக்கும் வசதியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழ் நூலகங்களில் பெரிய நூலகம் அங்குள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அங்குள்ளன. ஜெர்மனியில் தமிழ்த் தாய்க்கு கோயில் கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். எட்டாவது தமிழ் இணைய தள மாநாட்டை நாங்கள் நடத்தினோம். தற்போது செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9வது இணைய தள மாநாடு நடத்துவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. தமிழ்மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி என்பதோடு, நவீன கணினி யுகத்துக்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது. எனது தாய் வீடு ஜெர்மனி என்றாலும், புகுந்த வீடு இந்த தமிழ்நாடுதான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மருமகள் நான். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாகவே நான் வாழ்கிறேன்.

ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி.,கான்பூர்: தமிழ்மொழி வரலாற்றில் இலக்கியமும், இணையமும் சேரும் முதல் நிகழ்வு இங்கு நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சீரிய முயற்சியாக இந்த இணைய தள மாநாடு நடத்தப்படுகிறது. 1997ல் கணினித்தமிழ் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முதன் முதலாக அங்கு இணைய தள மாநாட்டை நிகழ்த்தினார். தமிழ் இணையதளம், பல மைல்களைத் தாண்டி, சில மைல்களை தவற விட்டுள்ளது. இதை உணர்ந்த இளைஞர்கள், புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர். தமிழ் இணைய மாநாட்டில் 15 தலைப்புகளில் கணினித் தமிழ் பற்றி ஆய்வு நடக்கிறது. இதில் தரப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீது விவாதம் நடந்து, அவை செயல்பாடுகளாக மாற வேண்டும். மாநாட்டுக்குப்பின், இந்த தீவிரம் மங்கி விடக்கூடாது. கணினி மொழியியல் மையத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும், வடிவமைப்பு, எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும். 7 விதமான ஆராய்ச்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 70 கோடி ரூபாய் நிதியை கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, பல்கலைக்கழகங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்.

வா.செ.குழந்தைசாமி, துணைத்தலைவர், உலகத் தமிழாய்வு நிறுவனம்: சிந்து வெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் உள்ளிட்ட உலகின் பழமையான 6 நாகரிகங்களில், 4 நாகரிகங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இந்த நாகரிகத்தை அடித்தளமாகக்கொண்ட மொழிகளில், சீன மொழியும், இந்திய மொழிகளில் வடமொழியும், தமிழ் மொழியும்தான் அழியாமல் உள்ளன. அந்த மொழி, நம் தாய் மொழி என்பதால் நாம் ஓர் அங்குலம் உயர்ந்திருக்கிறோம். இந்த பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டியது முக்கியம். ஆரிய நாகரிகத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம்; திராவிட நாகரிகத்தின் அடையாளம் தமிழ் மொழி. ஆனால், இந்திய நாகரிகம், தத்துவத்துக்கு அடிப்படையாக தமிழ் மட்டுமே விளங்குகிறது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் தொன்மை வாய்ந்த இரு மொழிகளுக்குள் 2000 ஆண்டுகளாக போட்டி இருந்து வருகிறது. அது இப்போது பகைமையாக மாறும் சூழல் உள்ளது. உண்மையில், இந்த இரு மொழிகளும், இந்திய நாகரிகத்தின் தூண்கள். அதற்கு மாறாக, தமிழின் தொன்மை குறித்து, சில கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

தமிழ் இலக்கிய நூல்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தில், 9வது நூற்றாண்டில் கற்பனையாக எழுதியவை என்று ஹெர்மன் டிக்கன் எழுதியுள்ளார். ஷெரிலேக் என்ற அறிஞர், இந்திய மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் என்று கூறுகிறார். ஆனால், தமிழ் பற்றி தனியாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. வடமொழி ஆதரவாளர்கள் இயக்கம், வெளிநாடுகளில் புதிய கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழின் தொன்மைக்கு ஆதரவாக வாதிடும் மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகிறார். சங்க கால இலக்கியங்களின் தொன்மையை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

அன்பழகன், நிதியமைச்சர், தமிழக அரசு: முதல்வர் பணி, அரசியல் பணி என பல்வேறு பணிப்பளுவுக்கு இடையில் முதல்வர் கருணாநிதி இலக்கியப் பணி ஆற்றுவதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டியுள்ளார். தமிழால் கருணாநிதி பெருமை பெற்றிருக்கிறார்; அவரால் தமிழ் செம்மொழியாக பெருமை பெற்றுள்ளது. இந்திய மொழிகளில் உள்ள ஒரு வட்டார மொழிகளில் தமிழும் ஒன்று என்று எல்லோரும் கருதுகிற நிலை இருந்தது. பரிதிமாற்கலைஞர் துவங்கி, இன்றைய கலைஞர் வரை நடத்திய போராட்டத்துக்கு, வெற்றி கிடைத்து செம்மொழியாக தமிழுக்கு தகுதி கிடைத்திருக்கிறது. உயர்ந்த கருத்துக்களின் உறைவிடமாக, ஞானத்தின் மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. நாலடியார், திருக்குறள் போன்ற இலக்கியங்கள், வேறு எந்த மொழியிலும் இல்லை. இயல், இசை என எல்லாவற்றிலும் செறிவு பெற்ற மொழியாக இருப்பதோடு, இன்னும் வாழுகிற மொழியாகவும் உள்ளது. என்றைக்கோ அழிந்த மொழிகளுக்குதான் செவ்வியல் மொழித் தகுதியை வழங்க முடியும் என்ற ஒரு கருத்து இருந்ததால்தான், தமிழ் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மக்களால் பேசப்படுகிற, நேசிக்கப்படுகிற மொழிக்கு செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது என்றால், அது தமிழுக்கு மட்டுமே. இவ்வாறு தமிழறிஞர்கள் பேசினர்.

விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்களுக்கு ஆய்வரங்க அமைப்புக்குழு செயலர் கனிமொழி பொன்னாடை மற்றும் நூல்களை வழங்கினர். ஆய்வரங்க சிறப்பு மலரை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஆய்வரங்க பொருண்மைகளை முதல்வர் வெளியிட, சிவத்தம்பி பெற்றுக் கொண்டார். விழாவில் பொன் கோதண்டராமன் (பொற்கோ) வரவேற்றார்; அவ்வை நடராசன் நன்றி கூறினார். மொரிஷியஸ், மலேசியா வாழ் தமிழர்களின் சார்பில், முதல்வருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

.....தினமலர் 24.06.2010

nambi
25-06-2010, 02:22 AM
சென்னை, ஜுன்.25-

மொழியியல் ஆய்வுகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ் சமுதாயத்தின் இயல்புகளை விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்று தமிழறிஞர்களை யாழ்ப்பாண தமிழறிஞர் கா.சிவத்தம்பி கேட்டுக்கொண்டார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று ஆய்வரங்கம் தொடக்க விழா நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ஆய்வரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆய்வரங்கத்திற்கு தலைமை தாங்கிய யாழ்ப்பாண தமிழறிஞர் கா.சிவத்தம்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவியல்பூர்வமான அணுகுமுÛ
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்த முதல்-அமைச்சர் கருணாநிதியை பாராட்டுகிறேன். அவர் உலகத்தமிழ் மக்களின் குரலாக இருந்து தமிழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். செம்மொழியில், தொன்மை, சீர்மை, செம்மை ஆகிய 3-ம் இருக்க வேண்டும். தமிழர்கள் இல்லாமல் தமிழ் இல்லை.

எனவே, தமிழ் சமூகத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு நடத்த வேண்டும். தமிழனின் நடைமுறை, உணவு முறை, மத நம்பிக்கை ஆகியவை பற்றி உலகில் உள்ள முக்கிய மதங்கள் அனைத்தும் தங்களது புத்தகத்தில் எழுத வேண்டும்.

ஆராய வேண்டும்

தமிழுக்கும், மற்ற திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழ் செம்மொழி எனும்போது அது தோற்றுவித்த நாகரிகம் மிக முக்கியமானது. இந்த பண்பாட்டுக்குள் இருந்துதான் திருக்குறள், சீறாப்புராணம், சிலப்பதிகாரம் போன்றவை வந்தன. மானுடவியலில் பண்பாட்டு அம்சத்தை மிக துல்லியமாக ஆராய வேண்டும்.

மொழியியல் பற்றிய ஆய்வுகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ் சமுதாயத்தின் இயல்புகள் யாவை என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அனைவரும் ஏற்கும் வகையில் தமிழில் அறிவியல்பூர்வமான அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவில் நடக்கும் ஆய்வுகள் அந்த ஆண்டே வெளியிடப்படும். அதுபோல தமிழ் பற்றிய ஆய்வுகளையும் அந்த ஆண்டே வெளியிடுவதற்கு தமிழக கல்வி அமைச்சகமும், பல்கலை ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கா.சிவத்தம்பி கூறினார்.

.....தினத்தந்தி 25.06.2010

nambi
25-06-2010, 02:26 AM
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இந்திய பண்பாட்டிற்கு தமிழ் அடிப்படை என்பது வரலாற்றில் இடம்பெறும் என்று வ.செ.குழந்தைசாமி தெரிவித்துள்ளார். தமிழின் உயர்வை நிரூபித்து தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுந்தந்த முதல்வருக்கு நன்றி என்று பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மொழியை நவீனமாக்க அரசுக்கு ஆணையிடுங்கள் என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீரிலும், பீகாரிலும் பேசப்படுவது தமிழின் கிளை மொழி தான் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

.....அலைகள் 25.06.2010

nambi
25-06-2010, 02:30 AM
கோவை, ஜுன் 25-

ஜெர்மன் நாட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்ப்பற்றும், கலாசாரமும் குறையவில்லை என்று ஆய்வரங்கத்தில் பெண் அறிஞர் பேசினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், தற்போது ஹாங்காங்கில் வசிப்பவருமான கிரிகோரி ஜேம்ஸ் பேசியதாவது:-

தமிழின் தொன்மை

தமிழ் சுவடிகளை பார்ப்பதற்காக 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த நூலகர், இதற்கு முன்பு இந்த நூலகத்திற்கு எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்டப்படிப்பு படித்தபோது வந்தேன் என்று சொன்னேன்.

உடனே அவர் பழைய அலமாரி ஒன்றைத் திறந்து, எனது 23-வது வயதில் நான் கொடுத்த விண்ணப்பபடிவம் ஒன்றை எடுத்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த விண்ணப்ப படிவத்தை இன்னமும் வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சரியமாக கேட்டேன். அதற்கு அந்த நூலகர் கூறும்போது, ``பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த தொன்மையான தமிழ் தொடர்பானவற்றை பத்திரமாக வைத்திருக்கும்போது உங்கள் விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது பெரிய வேலை அல்ல'' என்று தமிழின் பெருமையை கூறினார்.

இவ்வாறு கிரிகோரி ஜேம்ஸ் பேசினார்.

தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அறிஞர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது:-

நீண்டகாலத்திற்கு பிறகு தொன்மையான, பழமையான தமிழ் மொழிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் அன்னைக்கு மேலும் ஒரு ஆபரணம் அணிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மன் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.

ஜெர்மன் நாட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்ப்பற்று, கலாசாரம் குறையவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே ஜெர்மனியில்தான் மிகப்பெரிய தமிழ் நூலகம் உள்ளது. அங்கு 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு தமிழ்தாய்க்கு ஒரு வசிப்பிடம் கட்ட முயற்சித்து வருகிறோம்.

இங்கு நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன், 9-வது தமிழ் இணைய மாநாடும் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால், நவீன கணினி உலகில் தமிழ் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெர்மனி எனக்கு பிறந்த வீடு என்றால், தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு. சங்கம் வளர்த்த மதுரையில் மருமகளாக இருக்கிறேன். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாக கருதி வாழ்ந்து வருகிறேன். எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் வழிகாட்டியாக இருந்த டி.வி.கோபால அய்யர், டி.எஸ்.கங்காதரன், டி.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு உல்ரிக் நிக்லாஸ் பேசினார்.

கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வாழ்த்தி பேசும்போது கூறியதாவது:-

கணினி மொழியியல் மையம்

தமிழ் இலக்கியமும், இணையமும் இணைந்து செயல்படும் இந்த மாநாடு ஒரு பெரும் திருப்புமுனையாகும். தமிழ் இணைய மாநாடு நடத்தும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உத்தமம் அமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் இணையத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பல மைல் கண்டு முன்னேறியுள்ளோம். சில மைல்களை கடக்க தவறிவிட்டோம். தமிழ் இணைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மூலம் இணையதள தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், எதிர்நோக்கும் சவால்களுக்கும் நாம் ஈடுகொடுக்க முடியும். பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் இணையம் பிரபலமாகியுள்ளது. மேலும் பல சாதனைகளை படைப்பதற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி மொழியியல் மையம் தொடங்க வேண்டும்.

அதுபோல கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுயமொழிபெயர்ப்பு மற்றும் தேடு பொறிக்கான மையம் தொடங்க வேண்டும். மற்ற கல்வி நிறுவனங்களில் கணினி தொழில்நுட்பத்தை கற்கும் முறைகள், தகவல் சேகரிப்பு தொகுப்பு மையம், எழுத்தறிவு கருவிகள் உள்பட 7 விதமான துறைகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.10 கோடி தேவைப்படும். கணினி தமிழ் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் சாதனை

உலகத்தமிழ் ஆய்வு கழகத்தின் துணைத்தலைவர் வா.செ.குழந்தைசாமி பேசியதாவது:-

மனித சமூகம் தொடங்கிய காலத்தில் இருந்து 6 நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் 4 அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டன. இப்போது அந்த மொழிகளும், மக்களும் இல்லை. சீன நாகரிகம், இந்திய நாகரிகம் மட்டுமே உள்ளன. இந்திய நாகரிகம் என்றால் அது, வடமொழி, தமிழ் ஆகியவற்றை குறிக்கும். இவை இரண்டும் வழக்கு மொழிகளாக இருந்து வருகின்றன. இந்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இந்திய நாகரிகத்தின் அடிப்படை சமஸ்கிருதமும், திராவிடமும் என்று சி.பி.ராமசாமி அய்யர் கூறியுள்ளார். அந்த அடிப்படையை வரலாறு, சமுதாயவியல், உலகளவில் இடம்பெறச் செய்ய வேண்டும். இது நமது முக்கிய கடமை ஆகும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததும் நான் எழுதிய கட்டுரையில், தமிழும், வடமொழியும் இந்திய பண்பாட்டுத் தூண்கள் என்று எழுதினேன். தமிழின் சாதனை மிகப்பெரியது. அதனை புதிய யுகத்தில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் இன்னமும் நிறைய வெற்றிகளைப் பெற வேண்டியுள்ளது.

இவ்வாறு வா.செ.குழந்தைசாமி பேசினார்.

.....தினத்தந்தி 25.06.2010

nambi
25-06-2010, 02:49 AM
* மாநாடு முறைப்படி துவங்குவதற்கு முந்தைய நிமிடம் வரை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மைய நோக்குப் பாடல் தொடர்ச்சியாச ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.

* அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, சுரேஷ்ராஜன் உட்பட அனைத்து அமைச்சர்கள், வி.ஐ.பி.,களும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்தனர். அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த இன்னொரு முக்கிய வி.வி.ஐ.பி., ஸ்டாலின்.

* அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.

* வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது.

* காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது. சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முனையவில்லை. குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20 நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை மோசமாகி இருக்கும்.

* சரியாக காலை 10.26 மணிக்கு மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதுவரை ஒலிபரப்பப்பட்ட மைய நோக்குப்பாடல் நிறுத்தப்பட்டு, நாதஸ்வர இன்னிசை துவங்கியது.

* முதுமுனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாதஸ்வர இன்னிசையில் வாசிக்கப்பட்ட "மகா கணபதி' பாடலை தாளமிட்டு ரசித்தார்.

* காலை 10.29 அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர வைக்கப்பட்டிருக்க நிதியமைச்சர் அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி வரவேற்றார்.

* சரியாக 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மேடைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்; கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் அதேசமயம் மேடைக்கு வந்தார். முதல்வர் வந்ததும் "தமிழ் மொழி வாழ்க, செம்மொழி வாழ்க' என முதல்வரை வாழ்த்தும் வகையிலான பாடல் இசைக்கப்பட்டது.

* ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 10.32 மணிக்கு வழக்கமான பாரம்பரிய உடையில் மேடைக்கு வந்தார்.

* ஜனாதிபதிக்கு பொன்மஞ்சள் நிறத்திலான பொன்னாடையை முதல்வர் வழங்கினார்.

* முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். முதுமையின் காரணமாக சிவத்தம்பி மட்டும் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார்.

* அதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை, சீர்காழி சிவசிதம்பரம் பாடினார். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க அறிவுறுத்திய அறிவிப்பாளர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதுபோன்று சொல்லாததால், பொதுமக்கள் அமர்ந்து கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.

* தேசிய கீதத்தை நின்றபடி பாடிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது, அமர்ந்து விட்டார்; சிவத்தம்பியும் அமர்ந்தே இருந்தார்.

* காலை 10.42 மணிக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

* துணைமுதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும், மாநாட்டுப் பந்தலில் உற்சாகச் சலசலப்பு.

* ஜனாதிபதியை தமிழக மக்கள் சார்பிலும்; கவர்னரை, விழா தலைமைக்குழு சார்பிலும்; முதல்வரை தமிழக மக்கள் சார்பிலும் வரவேற்றார். வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிகள், மொழி வல்லுனர்கள், பொதுமக்களை வரவேற்றார். அவரின் வரவேற்பு பட்டியலில் பத்திரிகையாளர்கள் மட்டும் ஏனோ "மிஸ்ஸிங்'

* ஸ்டாலின் பேசும் போது, தேவநேயப்பாவாணரின் தமிழ் இனிமை, புதுமை என "மை' விகுதி அமையும்படி பேச, அரங்க முழுவதும் கரகோஷம். ஒண்டமிழ், தண்டமிழ், தேன்தமிழ், தீந்தமிழ் என அடுத்தடுத்து தமிழை எப்படி எல்லாம் சிறப்பிக்கின்றனர் என அடுக்கு மொழியில் பேச, அரங்கத்தினரோடு, முதல்வரும் ரசித்துக் கேட்டார்.

* ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு துணைமுதல்வர் நினைவுப்பரிசு வழங்க, மற்றவர்கள் அமர்ந்தபடி பெற்றுக் கொண்டனர். அன்பழகன், ஜார்ஜ்ஹார்ட் மட்டும் எழுந்து நின்று பெற்றுக் கொண்டனர்.

* ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, சிவத்தம்பி, குழந்தைசாமி என சிறப்பு விருந்தினர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களின் வாழ்த்துரையை முடித்துக் கொண்டனர்.

* வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் வணக்கம் சொன்னபோது, அரங்கத்தில் மீண்டும் கரவொலி; குழந்தைசாமி தவிர, மற்ற மொழி அறிஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினர்.

* குழந்தைசாமியின், "விருந்துக்கு பெயர் பெற்றது தமிழர் பண்பாடு; கொங்கு மண்டலம் அதில் தலைமைப்பீடம்; கோவை அதற்குத் தலைமையகம்' என்ற பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது

.....தினமலர் 23.06.2010