PDA

View Full Version : உடனடிச்செய்திகள்Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12]

ராஜா
23-03-2013, 04:55 AM
ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகினார்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 22.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையத்தின் அருகே நடுரோட்டில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை போட்டு, அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் ஆனந்த் (வயது 23) எரிந்து கொண்டிருந்த ராஜபக்சேவின் உருவ பொம்மையை காலால் உதைத்தார்.

அப்போது திடீரென ஆனந்தின் உடையில் தீப்பற்றியது. சட்டையில் பற்றிய தீ உடலிலும் வேகமாக பரவியது. இதனால் வலி தாங்க முடியாத நிலையிலும், ராஜபக்சே ஒழிக என்றும், மத்திய அரசை கண்டித்தும் சத்தம் போட்டவாறு அப்பகுதி சாலையில் ஆனந்த் ஓடினார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் இதைப்பார்த்து ஆனந்தின் உடல் மீது மண்ணை அள்ளிப்போட்டும், பழைய சாக்கை கொண்டு அடித்தும் தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் ஆனந்தின் உடலில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் ஆனந்திற்கு முதுகு உள்ளிட்ட பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி செய்யப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆனந்த் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜா
23-03-2013, 05:05 AM
சுகுமாரியை சந்தித்து நலம் விசாரித்த ஜெயலலிதா

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/admk/2013/march/sugumari-jayalalitha-.jpg

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகை சுகுமாரியை, முதல் அமைச்சர் ஜெயலலிதா 22.03.2013 வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராஜா
23-03-2013, 05:12 AM
உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/record%20student.jpg

சாதிப்பதற்கு உடலின் ஊனம் தடையில்லை என மன தெம்புடன் தன்னை நிரூபித்து முன்மாதிரியாக திகழ்கிறார் ஒரு ஏழை மாணவர்.

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் - சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (18). மாற்றுத்திறனாளி. அப்பா தங்கவேல் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தாயார் சரோஜா, செங்கல் சூளை வேலைக்குச் சென்று மாரியப்பன், அவரது இரு தம்பிகள், அக்கா ஆகியோரை காப்பாற்றி வருகிறார்.

மாரியப்பன், பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார். வலது கால் பாதிக்கப்பட்ட இவர், 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார். வறுமை வயிற்றுக்கு பிரச்சனை தரலாம் தனது கால்களுக்கு இல்லை என ஆர்வமாக விளையாட தொடங்கியவர் மாரியப்பன்.

சிறப்பு விசயம் என்னவென்றால் மாவட்ட அளவில் பொதுப்பிரிவு(கால்கள் நன்றாக உள்ளவர்கள் உட்பட்ட) மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.

இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார். இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.இது இந்த பிரிவில் உலக சாதனை.

இதையடுத்து, கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது, மாரியப்பன் கூறியது: உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.

லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால், அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில், பங்கேற்க உள்ளேன்.

எனது தாயார், செங்கல் சூளை வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். மிகக் குறைந்த அவரது வருமானத்தைக் கொண்டு எங்களது குடும்பம் பிழைத்து வருகிறது.

விளையாட்டுப் போட்டியில் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக பின்னடைவு ஏற்படுகிறது.

ப்ளஸ் 2 முடிக்க உள்ள நான், மேல்படிப்புச் செலவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளேன். விளையாட்டில் பங்கேற்பதற்கும், மேல்ப்படிப்புக்கும் உதவியை எதிர்பார்த்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாதிக்க வறுமையும்,ஊனமும் தடையில்லை என போராடி நிருபித்துள்ளார்.

ராஜா
23-03-2013, 07:22 AM
தூத்துக்குடியில் விஷவாயு கசிவா? : மக்களுக்கு மூச்சுத்திணறல்; அவதி

தூத்துக்குடியில் இன்று காலை 7 மணி அளவில் அங்கிருந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், ஒவ்வாமை ஆகியன ஏற்பட்டன. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்ட இந்தத் திடீர் தொந்தரவால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டது. ஆலையில் இருந்து விஷவாயு கசிந்துள்ளதாக ஏற்பட்ட தகவலை அடுத்து பொதுமக்கள் பெரிதும் பரபரப்படைந்தனர். இருப்பினும், எவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. ஆனால், அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கள் ஆலையில் இருந்து அப்படி எதுவும் வாயுக் கசிவு இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

ஆனால், அருகில் உள்ள தனியார் ஆலைகளில் இருந்துதான் விஷ வாயுக் கசிவு இருந்திருக்கக் கூடும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட இந்தத் தொல்லைகள் அடுத்த ஒரு மணி நேரத்தில் சரியானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ராஜா
23-03-2013, 07:23 AM
தபால் நிலையத்துக்குள் புகுந்து பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம்தமிழர் கட்சியினர் 16 பேர் கைது

சிதம்பரம் தலைமை தபால் நிலையத்துக்குள் சென்று கதவைத் தாழிட்டு, உள்ளே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜபட்சவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் திருத்தத்தை இந்தியா கொண்டுவராததைக் கண்டித்து, கோஷம் எழுப்பிய மாவட்டச் செயலர் புகழேந்தி தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் 16 பேர் சிதம்பரம் தலைமைத் தபால் நிலையத்துக்குள் புகுந்து கொண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களை முருகானந்தம் தலைமையில் சென்ற போலீஸார் கைது செய்தனர்.

ராஜா
23-03-2013, 07:25 AM
ஈழ எழுச்சியை கேலிக்குரியதாக ஆக்குவது இவனுகதான்.. இதுபோன்ற செயல்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்..

ராஜா
23-03-2013, 08:06 AM
மான் வேட்டை: பிரபல நடிகர், நடிகைகள் மீது வழக்கு பதிவு: 6 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு என தகவல்

ராஜஸ்தானில் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமான மான்கள் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் இந்தி நடிகரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடியின் மகனுமான சயீப் அலி கான், நடிகர் சல்மான் கான், நடிகைகள் தபு, நீலம் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோர் மீது இன்று புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜோத்பூர் நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

சல்மான் கான் மீது ஆயுத சட்டம் தொடர்பான வழக்கு கைவிடப்பட்டது. தற்போது, சல்மான் கானை வேட்டையாடிய தூண்டியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக ஈடுபட்டதாகவும் பிற நடிகர், நடிகைகள் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளி என நிரூபணமானால் 6 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

ராஜா
23-03-2013, 08:53 AM
நியூசிலாந்தில் நிலநடுக்கத்தினால் தண்ணீர் தங்கமாகிறதாம்... ஆய்வில் தகவல்!

http://tamil.oneindia.in/img/2013/03/23-gold-water441-300.jpg

நியூசிலாந்து: நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நியூசிலாந்து நாட்டில் நிலத்தடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வில்,"நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.

இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. என்று கூறியுள்ளனர்.

சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன"என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா
23-03-2013, 08:55 AM
இருபிரிவினர் மோதல்: ராமேஸ்வரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, 60 பேர் கைது! பதற்றம்

ராமேஸ்வரத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 பேர் கைது செய்யப்பட்டனர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 22.03.2013 வெள்ளிக்கிழமை மாலை ரமேஸ்வரம் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக இரண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பில் முடிந்து மோதலாக வெடித்தது.

ஆட்டோ டிரைவர் செந்தில் மற்றும் விக்கி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் இரு பிரிவினரிடையேயான மோதலாக மாறியது. இதில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அருகில் இருந்த கடைகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் எழுந்த பதற்றமான சூழ்நிலையால் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்முறை சம்பவம் நடந்த இடங்களை போலீஸ் டிஐஜி ராமசுப்பிரமணியன் பார்வையிட்டார்.

இதனைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்பட்டது. இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜா
23-03-2013, 12:26 PM
மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு… தமிழக அரசு உத்தரவு

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது. அழகிரி உட்பட 5 மத்திய அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு மட்டும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அழகிரி வீட்டில் வழக்கம் போல் 4 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அழகிரியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன்செல்வர்.
"எதற்காக அழகிரிக்கு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க.வில் அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மறைமுகமான மோதல் இருப்பதால், அழகிரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்" என்று மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இராஜிசங்கர்
24-03-2013, 05:56 AM
ஈழ எழுச்சியை கேலிக்குரியதாக ஆக்குவது இவனுகதான்.. இதுபோன்ற செயல்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்..

கரெக்ட் சார். ஒட்டு மொத்த அரசியல் க்ரூப்பும் இதை ஓட்டுக்காகப் பயன்படுத்துவது வேதனை தரும் விஷயம்.

இராஜிசங்கர்
24-03-2013, 05:59 AM
நியூசிலாந்தில் நிலநடுக்கத்தினால் தண்ணீர் தங்கமாகிறதாம்... ஆய்வில் தகவல்!

http://tamil.oneindia.in/img/2013/03/23-gold-water441-300.jpg

நியூசிலாந்து: நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நியூசிலாந்து நாட்டில் நிலத்தடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வில்,"நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.

இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. என்று கூறியுள்ளனர்.

சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன"என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கிற தெய்வம் கூரையப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க. நியூசிலாந்தில் பூமியப் பொலந்து கிட்டுக் கொடுக்குது போல!

ராஜா
24-03-2013, 06:45 AM
இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு

http://tamil.oneindia.in/img/2013/03/24-rajini-kamal3-fast-300.jpg

சென்னை: இலங்கை அரசை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அது நீர்த்துப் போன ஒன்று என்று பலர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல் 2ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

சென்னை தியாகாரயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.

உண்ணாவிரதத்தையொட்டி வரும் 2ம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராஜா
24-03-2013, 06:52 AM
இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு

http://tamil.oneindia.in/img/2013/03/24-rajini-kamal3-fast-300.jpg

சென்னை: இலங்கை அரசை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அது நீர்த்துப் போன ஒன்று என்று பலர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல் 2ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

சென்னை தியாகாரயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.

உண்ணாவிரதத்தையொட்டி வரும் 2ம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராஜா
24-03-2013, 06:55 AM
அக்டோபரில் பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயர்வு?

http://tamil.oneindia.in/img/2013/03/24-train44-300.jpg

டெல்லி: பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அக்டோபர் மாதம் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ரயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டல் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

எரிபொருள் மற்றும் மின் கட்டணத்திற்கு ஏற்ப சரக்கு கட்டணங்களை மாற்றும்(எஃப்.ஏ.சி.) புதிய முறைப்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சரக்கு கட்டணம் 5.7 சதவீதம் உயர்கிறது. இந்த விலை உயர்வு மூலம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்படும் ரூ.800 கோடி இழப்பு சரிகட்டப்படும். இந்த புதிய முறைப்படி 6 மாதத்திற்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்பட்டு கட்டணம் மாற்றப்படும்.

எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப பயணிகள் கட்டணத்தை மாற்றும் நடைமுறை இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மேலும் பயணிகள் கட்டணம் கடந்த ஜனவரி மாதத்தில் தான் உயர்த்தப்பட்டதால் தற்போதைக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. ஆனால் வரும் அக்டோபர் மாதம் எரிபொருள் விலையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்போது பயணிகள் கட்டணத்தையும் எரிபொருள் விலைக்கேற்ப உயர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.

எரிபொருள் விலைக்கேற்ப பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை அமலுக்கு வந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் கட்டணம் மாற்றப்படும். இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டால் அக்டோபர் மாதத்தில் பயணிகள் கட்டணம் 2 முதல் 3 சதவீதம் உயரும். ரயில்வே மொத்த செலவில் டீசல் மற்றும் மின் கட்டண செலவு மட்டும் 16 முதல் 17 சதவீதம் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் டீசல் விலை 39 சதவீதமும், மின் கட்டணம் 8 சதவீதமும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
24-03-2013, 07:06 AM
பைக், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு மார்ச் 26 முதல் சாலை வரி வசூல்

பொது போக்குவரத்துக்குப் பயன்படுத்தாத வாகனங்களான கார், ஜீப், போர்வெல் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை, சாலை வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை:

போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு வரும் ஆண்டுக்கான சாலை வரி, மார்ச் 26 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வசூலிக்கப்படும். மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் சாலை வரி செலுத்தலாம்.

15 ஆண்டுகள் முடிந்த வாகனங்கள் பதிவுச் சான்று புதுப்பித்தல் விண்ணப்பத்துடன் சாலை வரியைச் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகள் முடிந்த இரு சக்கர வாகனங்கள் 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்கள் ஆயிரம் ரூபாயும் பசுமை வரியாகச் செலுத்த வேண்டும். வாகன வரி செலுத்துவோர், வாகனத்தின் பதிவுச் சான்று, நடப்பில் உள்ள காப்புச் சான்று, புகைச்சான்று ஆகியவற்றுடன் வரவேண்டும்.

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சாலை வரியைச் செலுத்தாத வாகனங்கள் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால், வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராகவன்
16-08-2014, 07:21 AM
நேபாளத்திற்கு 20 ஆம்புலன்சுகள் நன்கொடை

காத்மாண்டு: இந்தாவின் 68-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேபாள நாட்டிற்கு 20 ஆம்புலன் வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் ரஞ்சித் ரே பல்வேறு அமைப்பினரிடம் சாவிகளை வழங்கினார். தொடர்ந்து ஜனாதிபதி உரையை அவர் வாசித்தார். மேலும் 75 நூலகங்கள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு தேவையான நூல்களும் வழங்கப்பட்டது. நேபாளத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளுக்காக கடந்த 1996-ம் ஆண்முதல் இது வரையில் சுமார் 442 ஆம்புலன்ஸ் வண்டிகளும், 86 பஸ்களும் இந்தியா வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

அனுராகவன்
16-08-2014, 04:53 PM
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1046688.jpg

புதுடில்லி:தலைநகர் டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதுவரை இல்லாத வகையில், வி.ஐ.பி.,க்களுக்கு இணையாக, சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், ஏராளமான மக்கள், விழாவில் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல புதுமைகள் அரங்கேறின. வழக்கமாக, சுதந்திர தின விழா நடக்கும்போது, பார்வையாளர் வரிசையில் வி.ஐ.பி.,க்களுக்கு தான், முக்கியத்துவம் அளிக்கப்படும்.வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இருக்கைகள் மட்டுமே சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை, நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் தகர்க்கப்பட்டது.சுதந்திர தின விழா ஏற்பாடுகள் துவங்கியதுமே, 'பார்வையாளர் வரிசையில், பொதுமக்களுக்கென, 10 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்க வேண்டும்' என, பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, பொதுமக்களுக்கென, 10 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த தகவல், ஏற்கனவே மீடியாக்களில் வெளியானதால், நேற்று அதிகாலையில் இருந்தே, டில்லியில் இருந்து மட்டுமல்லாமல், அதன் புறநகர் பகுதி களில் இருந்தும் ஏராளமான மக்கள், செங்கோட்டையில் குவியத் துவங்கினர்.சுதந்திர தின விழாவுக்கு வரும் பொதுமக்களிடம், பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாததால், கூட்டம் அலை மோதியது. பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட, 10 ஆயிரம் இருக்கைகளும், காலை, 7:00 மணிக்கே நிரம்பி விட்டன. அதிலும், பள்ளி குழந்தைகள் அதிகமாக அமர்ந்துஇருந்தனர்.இருக்கைகள் நிரம்பி வழிந்ததால், ஏராளமானோர் நின்றபடியே, விழாவை பார்த்து ரசித்தனர். காலை, 7:27க்கு, பிரதமர் மோடி, விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.


அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்களும், குழந்தைகளும் கைகளைத் தட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குழந்தைகள், தாங்கள் அணிந்திருந்த தொப்பியை எடுத்து, கையில் அசைத்து, மோடியை வரவேற்றனர். பின், 7:30க்கு, பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றியபோது கரவொலி, காதை பிளந்தது. மோடியின் ஒவ்வொரு அறிவிப்புக்கும், அங்கு கூடியிருந்தவர்கள் கைகளை தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஏழைகளுக்கு வங்கி கணக்கு துவங்குவதாக அவர் அறிவித்தபோது, கைதட்டல் ஓசை அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தது.விழா முடிந்து, பிரதமர் மோடி, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த பள்ளி குழந்தைகள், அவரை நோக்கி கையை அசைத்தனர். இதையடுத்து, குழந்தைகளை நெருங்கி, கைகளை குலுக்கி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வழக்கமாக, சுதந்திர தின விழாக்களில் பிரதமர்கள் உரையாற்றும் போது, அவருக்காக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கூண்டு அமைக்கப்படும். அதேபோல், மழை, வெயில் ஆகியவற்றால், பிரதமர் பாதிக்கப்படாமல் இருக்க, பாதுகாவலர்கள் குடைகள் பிடிப்பர்.

ஆனால், நேற்றைய விழாவில், இந்த இரண்டு நடைமுறைகளும் தவிர்க்கப்பட்டன. சுதந்திர தின விழாவில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை தான், மிக நீண்ட உரையாக இருந்தது. இதற்கு அடுத்த, மிக நீண்ட உரையாக, நேற்றைய மோடியின் உரை அமைந்தது.


யதார்த்த உரை:*நேற்றைய விழாவில், 45 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்றனர்.
*பார்வையாளர் வரிசையில், 26 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
*இவற்றில், தலா, 10 ஆயிரம் இருக்கைகள், வி.ஐ.பி.,க்கள், பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
*மீதமுள்ள, 6,000 இருக்கைகள், பள்ளி குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன.
*சுதந்திர தின விழாவுக்கு வந்திருந்த மோடி, குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநில மக்கள் அணியும் தலைப்பாகையை அணிந்திருந்தார்.
*விழா நடக்கும் இடத்துக்கு வருவதற்கு முன், டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று, பிரதமர், அஞ்சலிசெலுத்தினார்.
*பிரதமர் மோடி, தன் சுதந்திர தின உரையை எழுதி வைத்து படிக்கவில்லை. யதார்த்தமாக பேசிய தால், அவரின் உரை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
*அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களும், பிரதமரின் உரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட பலர், சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.


பலத்த பாதுகாப்பு:


சுதந்திர தின விழாவையொட்டி, டில்லியில் நேற்று, ஆயிரக்கணக்கான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிலிருந்து, செங்கோட்டை வரை, 500 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதேபோல், சுதந்திர தின விழா நடந்த செங்கோட்டையில், 200க்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. செங்கோட்டை அருகே, இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதில், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடைய கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன. டில்லி மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.விழா நடக்கும் பகுதியில், விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, உயரமான இடங்களில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.டில்லியின் நுழைவாயில்களில், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதிவிரைவு படையினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுஇருந்தனர். ஹெலிகாப்டர் மூலமாகவும், டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.


நன்றி:தினமலர்

அனுராகவன்
16-08-2014, 04:55 PM
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1047161.jpg

சோலாப்பூர்: 24 மணி நேரமும், தடையற்ற மின்சாரம் தர வேண்டும் என்பது தமது அரசின் இலக்காக உள்ளது என கூறியுள்ள பிரதமர் மோடி, உள்கட்டமைப்பு, மின் தட வழிகள், மின்சாரம் மற்றும்தண்ணீர் தொடர்பான தமது அரசின் கொள்கைகள் பற்றி எடுத்து கூறினார்.

சோலாப்பூரில் நடந்த மின் திட்டங்கள் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி,
மின்சாரத்தை சேமிக்க வேண்டும்:

வாரத்தின் 5 நாட்கள், 365 நாட்கள் 24 மணி நேரம் கிராமங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தமது அரசின் இலக்கு. மின்சாரம் உற்பத்தி செய்வதும், மக்களுக்கு விநியோகம் செய்வது ஒரு புறம் இருப்பினும், அதனை சேமித்து வைப்பது என்பது மிகவும் முக்கியமானது. ராணுவப்படையில் சேர்வதும், எம்.பி., எம்.எல்.ஏ.,வாக தேர்வு பெற்று மக்களுக்கு சேவை செய்வது மட்டும் தேசத்திற்கு ஆற்றும் சேவையல்ல. மின்சாரத்தை சேமிப்பதும் நாட்டிற்கு செய்யும் சேவை.

மக்களுக்கு பயன்:

இளைஞர்களும், மாணவர்களும் தமது வீட்டின் மின் கட்டணம் குறித்து ஆய்வு செய்து, அதனை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி தமது குடும்பத்தினருடன் ஆலோசனை செய்ய வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன். இது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை நாம் தேசத்திற்கு ஆற்றும் முக்கிய கடமையாக கருத வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது செலவு மிக்கது. ஆனால் அதனை சேமிப்பது என்பது மிகவும் எளிது. இதனை நாம் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

கடமை தவற மாட்டேன்:

நிலக்கரி மற்றும் கேஸ் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பிரச்னை உள்ளது என்ற மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவானின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் குஜராத் முதல்வராக இருந்த போது, இதுபோன்ற பிரச்னையை சந்தித்துள்ளேன். அப்போது, இந்த பிரச்னைக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தற்போது பொறுப்பு எங்களிடம் வந்துள்ளது. எனது கடமையிலிருந்து தவறி ஓட மாட்டேன். தொழில்நுட்பம் மற்றும் நிலக்கரி இருப்பை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்பிரச்னையை சரி செய்யப்பட வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் மின்சாரம் கிடைக்க அனைவரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நர்மதா அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலம், ரூ.400 கோடி மதிப்பிலான மின்சாரத்தை பெறும்.

சாலைகள் இணைப்பு:

சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கு தமது அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இது தொடர்பாக முன்னாள்பிரதமர் வாஜபாய் அரம்பித்து வைத்த பிரதான் மந்திரி கிராம் சாதக் யோஜ்னா திட்டம் தம்மை கவர்ந்துள்ளது. சாலைகள் இணைப்பை அனைத்து பகுதிகளையும் இணைக்க வேண்டும். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். இதன் மூலம் ரயில் நெட்வொர்க்கையும் மேம்படுத்த முடியும். சிறந்த சாலைகள் காரணமாக இந்தியாவின் சுற்றுலாத்துறை மேம்படையும். இன்று சிறந்த தேசியநெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் வழிகளை நாடுஎதிர்பார்க்கிறது. ஒவ்வொரு கிராமமும் இணைக்கப்பட வேண்டும். இதுவே இன்று முக்கியமாகஉள்ளது. தென் கொரியா போன்ற நாடுகள் உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு செய்துள்ளதால், அதிக வளர்ச்சியை கண்டுள்ளன.நாம் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், மக்கள் நமது நாட்டை மிளிர செய்வார்கள்.

ஜவுளித்துறைக்கு ஊக்கம்:

நாட்டில் ஏழைகள் உள்ளிட்ட அதிகம் பேருக்கு ஜவுளித்துறை அதிக வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது. நாடு முழுவதும் ஜவுளித்துறைக்கு அதிக ஊக்கம் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு ஆர்வமாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம், அவர்கள் நமது நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


நன்றி:தினமலர்

அனுராகவன்
16-08-2014, 04:57 PM
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1046682.jpg


சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதியைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.


குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பணியாளர்கள் என, பலரது மேம்பாட்டிற்கு என, தனித்தனியாக தொண்டு நிறுவனங்கள், நல அமைப்புகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.இவை, பெரும்பாலும் இங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறி, வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற்று செலவழித்து வருகின்றன.இந்த வகையில், 2012ல், அதிகபட்சமாக, 2,285 கோடி ரூபாய் பெற்று, டில்லி முதலிடத்தையும்; 1,704 கோடி ரூபாய் பெற்று, தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.மாவட்ட அளவில், 889 கோடி ரூபாய் நிதியைப் பெற்று, சென்னை மாவட்ட என்.ஜி.ஓ.,க்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அடுத்த இடத்தை, மும்பை 825.40 கோடி ரூபாய் பிடித்துள்ளது.கடந்த, 2002 03ல், சென்னையைச் சேர்ந்த பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனம், அதிகபட்சமாக, 393 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


பதிவு ரத்து:


இதுதவிர, கடந்த, 2012ல் அதிகளவு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.தமிழகத்தில் மட்டும், 760 நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, ஆந்திராவில் 690; கேரளாவில் 439 நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


நன்றி:தினமலர்

அனுராகவன்
16-08-2014, 05:01 PM
சென்னை : தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழையும் மிதமான மழை பெய்தது. . விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள், கும்பகோணம், பட்டுக்கோட்டை ,அவினாசி , கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் , புதுக்கோட்டை, கீரனூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்துள்ளது.

அனுராகவன்
16-08-2014, 05:02 PM
பனாஜி: கடற்கரையில் பிகினி <உடையில் வருபவர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என கோவா எம்.எல்.ஏ., மாவோ மம்லேதர் கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தனதுகருத்து குறித்துவிளக்கமளித்துள்ள மம்லேதர், கோவாவில் சுற்றுலாவை மேம்படுத்த பிகினி உடையை ஊக்கப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பிகினி உடைக்கு தடை விதிக்க வேண்டும். பெண்களை விலங்குகளுடன்நான் ஒப்பிட்டுபேசவில்லை. எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

அனுராகவன்
16-08-2014, 05:03 PM
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. இதில் மலேஷியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன.இன்று நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

NishaGuna
19-12-2017, 11:17 AM
அமித்ஷா மகன் புரிந்த ஊழல் குறித்து ஏன் பேச மறுக்கிறார் மோடி.! (https://news.ibctamil.com/ta/politics/rahul-ganthi-critizise-pm-modi-on-amitsha-son-brib)

குஜராத் மற்றும் இமாச்சல்பிரதேசம் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,

"இரண்டு மாநில வெற்றி வளர்ச்சி மற்றும் ஜி.எஸ்.டி.க்கு மக்கள் வழங்கியிருக்கும் அங்கீகாரத்தைப் பிரதிலபலித்திருப்பதாக சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால், பிரச்சார சமயங்களில் ஜி.எஸ்.டி. பற்றியோ, பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியோ அவர் பேசவேயில்லை என்பது அவருக்கே தெரிந்த உண்மை. இங்குதான் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

மோடியின் ஆதரவாளர்களும், அவர்சார்ந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர் என்ன சொல்கிறாரே அதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாடு அதைக் காது கொடுத்து கேட்கப் போவதில்லை. குஜராத் தேர்தல் முடிவும் அதைத்தான் உணர்த்தியிருக்கிறது. ஊழல் ஒழிப்பு பற்றி இடைவிடாமல் பேசும் மோடி ரஃபேல் போர் விமான ஊழல் மற்றும் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் ரூ.80 கோடி ஊழல் குறித்து மட்டும் ஏன் பேசுவதேயில்லை?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

pripankaj
04-04-2019, 09:57 AM
thanx for sharing....