PDA

View Full Version : உடனடிச்செய்திகள்

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12

ராஜா
05-03-2013, 05:42 AM
டாஸ்மாக்கில் வேலை பார்த்ததை பாவமாக கருதுகிறேன்..அரசு அதிகாரி பரபரப்பு பேச்சு

http://tamil.oneindia.in/img/2013/03/04-1362401480-tasmac6-600.jpg

சினிமா நமது கலாச்சாரத்தை, குழந்தைகளை சீரழித்து விட்டது. டாஸ்மாக்கில் நான் வேலை பார்த்தேன். அதை பெரு்ம் பாவமாக கருதுகிறேன் என்று தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், அரசு அருங்காட்சியகங்களின் ஆணையாளருமான எஸ்.எஸ்.ஜவஹர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

M.Jagadeesan
05-03-2013, 09:48 AM
ராஜசுலோச்சனா நடித்த தை பிறந்தால் வழிபிறக்கும், கைதி கண்ணாயிரம், குலேபகாவலி போன்ற படங்கள் மறக்கமுடியாதவை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

M.Jagadeesan
05-03-2013, 09:54 AM
சினிமாவும் , சின்னத்திரையும் நம் குழந்தைகளை நாசப்படுத்தி வருகிறது; மறுபக்கம் டாஸ்மாக் இளைஞர்களை நாசப்படுத்தி வருகிறது. சினிமா, சின்னத்திரை, டாஸ்மாக், கிரிக்கெட் இவை நான்கும் ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்.

ராஜா
05-03-2013, 10:59 AM
சரியான வார்த்தைகள்தாம் ஜெகதீசன்.. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான போதைகள்..

எனினும் இவை முற்றிலும் ஒழிக்கப்பட முடியாதவை..

ராஜா
05-03-2013, 11:14 AM
நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த இள.மணி என்ற நாம் தமிழர் இயக்க செயல்வீரர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளார்.சிங்கள பேரினவாத அதிபர் ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், தமிழீழத்தை சர்வதேச நாடுகள் ஆதரிக்ககோரியும், கடலூர் சுனாமி குடியிருப்புக் கட்டடத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிக்கு மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் இள.மணி தன் இன்னுயிரை ஈந்துள்ளார். இவரது மரணத்துக்கு பதில் அளிக்க மத்தியில் ஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசும், மாநில அரசும் கடமைப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சி

இராஜிசங்கர்
05-03-2013, 11:57 AM
நான் செய்ததே மூன்றே மூன்று தப்புதான்... ராசா

http://tamil.oneindia.in/img/2013/03/03-raja-3-300.jpg

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராசா பேசுகையில், 2ஜி வழக்கில் நான் செய்தது 3 தவறு தான் என்று நீதிபதியிடம் வாதிட்டேன். செல்போன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது, செல்போன் கட்டணத்தை குறைத்தது, சராசரி தொலைபேசி கட்டணத்தை குறைத்தது. இதைத்தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என்று நீதிபதியிடம் கூறினேன் என்றார்.

நாங்க பண்ணுனதும் மூன்றே மூன்று தவறு தான். உங்களுக்கு ஓட்டுப் போட்டது, இவ்ளோ ஊழல் பண்ணினப் பிறகும் அடிச்சு விரட்டாதது, இந்த மாதிரி செய்தியைப் படிச்சுட்டும் என்னைக்காவது அரசியல்வாதிகள் திருந்துவாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்தத் தப்பையும் நாங்களும் பண்ணல.

ராஜா
05-03-2013, 11:59 AM
அம்மன் கோவிலில் தானாக சுழன்று ஆடிய சரவிளக்கு

சுசீந்திரத்தை அடுத்த தேரூர், பாலகிருஷ்ணபுதூரில் உள்ள குளக்கரையில் அரச மரத்தின் கீழ் ஒரு இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செண்பகராமன்புதூரை சேர்ந்த தாணம்மாள் என்ற பெண் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கட்டிடம் கட்டப்பட்டது. ஒரு அறையுடன் கூடிய இதன் 4 பக்கமும் இரும்பு கிரில்கள் அமைக்கப்பட்டு அறையில் இருக்கும் அம்மன் வெளியில் இருந்து பார்த்தால் தெரியும் அளவுக்கு கட்டப்பட்டிருந்தது.

மேலும் அங்கு 3 அடி உயரத்தில் கல்லால் ஆன சிறிய இசக்கியம்மன் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இதன் இருபுறமும் இரண்டு சரவிளக்குகள் போடப்பட்டிருந்தன.

இந்த விளக்குகளில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தாணம்மாள் வந்து விளக்கேற்றி செல்வார். நேற்று திங்கள் கிழமை என்றாலும் சில பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே நின்றபடி சாமி கும்பிட்டனர். அப்போது திடீரென சிலையின் ஒருபுறம் போடப்பட்டு இருந்த சர விளக்கு அங்குமிங்கும் ஆடியது.

அது காற்றால் ஆடியது என்றால் இரண்டு சரவிளக்குகளுமே ஆடி இருக்க வேண்டும். ஆனால் ஒரு விளக்கு மட்டும் ஆடியது பக்தர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனை அவர்கள் ஊருக்குள் சென்று மற்றவர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் மீண்டும் ஊர் மக்களுடன் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போதும் ஒரு விளக்கு மட்டும் அங்குமிங்கும் ஆடிக்கொண்டு இருந்தது. சில நேரங்களில் அது அம்மன் சிலையை உரசியபடி ஆடியது. இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் கோவிலுக்கு விளக்கிடும் பெண் தாணம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் விரைந்து வந்து அந்த விளக்கை கையால் பிடித்து நிறுத்தினார். அவர் கையை எடுத்ததும் மீண்டும் விளக்கு ஆடியது. இந்த அதிசயம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

உடனே அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தகவல் அறிந்து அக்கம்பக்கத்து கிராம மக்களும் கோவிலுக்கு வந்தனர். இன்று காலையிலும் கோவில் விளக்கு ஆடிக்கொண்டு இருந்ததால் ஏராளமானோர் திரண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

இராஜிசங்கர்
05-03-2013, 11:59 AM
வளர்ச்சிக்குத் தேவையான மேலும் பல அறிவிப்புகள் விரைவில்-ப.சிதம்பரம்

http://tamil.oneindia.in/img/2013/03/03-pc-79-300.jpg

பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவைதான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மேலும் பல அறிவிப்புகள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஒரு சின்னப் பிழைத்திருத்தம் மிஸ்டர்.சிதம்பரம்.. இதேபோன்ற மேலும் பல அறிவிப்புகள் தேர்தல் வரும் வரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்

இராஜிசங்கர்
05-03-2013, 12:01 PM
அம்மன் கோவிலில் தானாக சுழன்று ஆடிய சரவிளக்கு

சுசீந்திரத்தை அடுத்த தேரூர், பாலகிருஷ்ணபுதூரில் உள்ள குளக்கரையில் அரச மரத்தின் கீழ் ஒரு இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செண்பகராமன்புதூரை சேர்ந்த தாணம்மாள் என்ற பெண் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கட்டிடம் கட்டப்பட்டது. ஒரு அறையுடன் கூடிய இதன் 4 பக்கமும் இரும்பு கிரில்கள் அமைக்கப்பட்டு அறையில் இருக்கும் அம்மன் வெளியில் இருந்து பார்த்தால் தெரியும் அளவுக்கு கட்டப்பட்டிருந்தது.

மேலும் அங்கு 3 அடி உயரத்தில் கல்லால் ஆன சிறிய இசக்கியம்மன் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இதன் இருபுறமும் இரண்டு சரவிளக்குகள் போடப்பட்டிருந்தன.

இந்த விளக்குகளில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தாணம்மாள் வந்து விளக்கேற்றி செல்வார். நேற்று திங்கள் கிழமை என்றாலும் சில பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே நின்றபடி சாமி கும்பிட்டனர். அப்போது திடீரென சிலையின் ஒருபுறம் போடப்பட்டு இருந்த சர விளக்கு அங்குமிங்கும் ஆடியது.

அது காற்றால் ஆடியது என்றால் இரண்டு சரவிளக்குகளுமே ஆடி இருக்க வேண்டும். ஆனால் ஒரு விளக்கு மட்டும் ஆடியது பக்தர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனை அவர்கள் ஊருக்குள் சென்று மற்றவர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் மீண்டும் ஊர் மக்களுடன் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போதும் ஒரு விளக்கு மட்டும் அங்குமிங்கும் ஆடிக்கொண்டு இருந்தது. சில நேரங்களில் அது அம்மன் சிலையை உரசியபடி ஆடியது. இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் கோவிலுக்கு விளக்கிடும் பெண் தாணம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் விரைந்து வந்து அந்த விளக்கை கையால் பிடித்து நிறுத்தினார். அவர் கையை எடுத்ததும் மீண்டும் விளக்கு ஆடியது. இந்த அதிசயம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

உடனே அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தகவல் அறிந்து அக்கம்பக்கத்து கிராம மக்களும் கோவிலுக்கு வந்தனர். இன்று காலையிலும் கோவில் விளக்கு ஆடிக்கொண்டு இருந்ததால் ஏராளமானோர் திரண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

சம்பவாமி யுகே யுகே????????!!!!!!!!!

ராஜா
05-03-2013, 12:10 PM
பீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/vandi.jpg

சென்னையிலிருந்து பீர் பாட்டில் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று பொள்ளாச்சி டாஸ்மாக் குடோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஊட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் ஓட்டினார். ஆம்பூர் அருகே ஜமீன் கிராமத்தில் வரும்போது பின்னால் வந்த வாகனத்திற்கு டிரைவர் வழிவிட முயன்றுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த சுமார் 8.50 லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சேதமடைந்து பீர் தரையில் கொட்டியது. விபத்து குறித்து ஆம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

ராஜா
05-03-2013, 12:11 PM
நாங்க பண்ணுனதும் மூன்றே மூன்று தவறு தான். உங்களுக்கு ஓட்டுப் போட்டது, இவ்ளோ ஊழல் பண்ணினப் பிறகும் அடிச்சு விரட்டாதது, இந்த மாதிரி செய்தியைப் படிச்சுட்டும் என்னைக்காவது அரசியல்வாதிகள் திருந்துவாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்தத் தப்பையும் நாங்களும் பண்ணல.

நச்..!

இராஜிசங்கர்
05-03-2013, 12:17 PM
நச்..!

நன்றிங்க :)

இராஜிசங்கர்
05-03-2013, 12:20 PM
பீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/vandi.jpg

சென்னையிலிருந்து பீர் பாட்டில் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று பொள்ளாச்சி டாஸ்மாக் குடோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஊட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் ஓட்டினார். ஆம்பூர் அருகே ஜமீன் கிராமத்தில் வரும்போது பின்னால் வந்த வாகனத்திற்கு டிரைவர் வழிவிட முயன்றுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த சுமார் 8.50 லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சேதமடைந்து பீர் தரையில் கொட்டியது. விபத்து குறித்து ஆம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இதைச் சுற்று வட்டார மக்கள் எல்லாம் குடத்தில் பிடித்துச் சென்றார்களாமே! இணையத்தில் புகைப்படம் பார்த்தேன். 'ப்ரீயா குடுத்தா பினாயிலைக் கூட குடிப்பாய்ங்க போல' என்ற டையலாக் தான் நினைவுக்கு வந்தது.

ராஜா
06-03-2013, 03:20 AM
ஓசின்னா உயிரையும் கொடுப்போமுல்ல..

ஒருமுறை பெட்ரோல் டாங்கர் கவிழ்ந்தப்போ, இதுபோல பிடிக்கப்போய் 3 பேர் தீப்பிடிச்சு செத்துட்டாங்க..

ராஜா
06-03-2013, 03:23 AM
'குடிமக்களுக்கோர் நற்செய்தி'...இனிமேல் 100 ரூபாய்க்கு டாஸ்மாக்கில் 'வெள்ளக்காரன்' பீர் அடிக்கலாம்!

http://tamil.oneindia.in/img/2013/03/05-1362480233-alcohol-1-600.jpg

நாடு போற்றும் நல்ல நாடாக, டாஸ்மாக் மூலம் சிறந்த போதை மாநிலமாக பாஸ்மார்க் வாங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் புத்தம் புதிய அறிமுகமாக, நூறு ரூபாய்க்கு பீர் என்ற புதிய திட்டத்தை டாஸ்மாக் கடைகளில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விதம் விதமான சரக்குகள்...டார்கெட் போட்டு வேலை செய்யும் ஊழியர்கள் என டாஸ்மாக் கடைகள் கோலாலமாக கல்லாக் கட்டிக் கொண்டுள்ளன. எத்தனையோ விதமான சரக்குகளை இங்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது புதிய ரக பீர் ஒன்றை குடிகாரர்களின் 'நலன்' கருதி அரசு களம் இறக்கியுள்ளதாம். அதுதான் 100 ரூபாய் பீர்.!

ஐஸ்பெர்க் 9000 மகா ஸ்டிராங் பீர் என்ற புதிய வகை பீர் அறிமுகமாகியுள்ளது. இது பார்லியில் செய்ததாகவும். 45 நாள் வரை இதை பாதுகாப்பாக வைத்திருக்கலாமாம். கெடாதாம். இது வெளிநாட்டு பீர் என்றாலும் கூட 100 ரூபாய்க்கே இதை விற்கிறார்களாம். இதில் ஆல்கஹாலின் அளவானது 8 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகும். இந்த பீர் நேற்று முதல் குடிகாரர்கள் வாயில் புழங்க ஆரம்பித்துள்ளது. சில மாவட்டங்களில் இன்று விற்பனைக்கு கொடுக்கிறார்களாம்.

ராஜா
06-03-2013, 03:57 AM
ரூ. 52,000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தில் மாபெரும் ஊழல்: சிஏஜி பரபரப்பு அறிக்கை

மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடியைப் பெற தகுதியுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பலன் போய் சேரவில்லை. பெரும்பாலும் விவசாயக் கடன் பெறுவதற்கே தகுதியற்றவர்கள்தான் கடன் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர் என்று சிஏஜி கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு கூறியது. இந்த இழப்பின் உண்மையான அளவு குறித்து சந்தேகங்கள் இருந்தாலும், அதில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளது. அதே போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஊழல் நடந்ததை சிஏஜி சுட்டிக் காட்டியது.

2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் ரத்து மற்றும் கடன் நிவாரண திட்டத்தின்படி, நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 3.69 லட்சம் சிறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் பிற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.52,516 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாய கடன் திட்டத்தின் கீழ் பலருக்கு விவசாயம் அல்லாத பிற உபயோகத்துக்கு கடன் வழங்கப்பட்டு, பின்னர் அவர்கள் கடன் தள்ளுபடி சலுகை பெற்றுள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.20.50 கோடியாகும்.
தகுதி இல்லாத பலர் இந்த திட்டத்தின்கீழ் கடன் வாங்கி கடன் தள்ளுபடி பெற்று பலன் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் கடன் வழங்கிய வங்கிகள் கடன் தள்ளுபடி பெறும் தகுதியுடைய பலரது கடனை தள்ளுபடி செய்யவில்லை.
3,262 விவசாயிகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அடைந்த கூடுதல் பலன் தொகை ரூ.13.35 கோடியாகும்.
தகுதியுடைய 1,564 விவசாயிகளுக்கு குறைவாக கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9 மாநிலங்களில் வழங்கப்பட்ட விவசாய கடன் கணக்குகளில் 9,334 கணக்குகளை தணிக்கை செய்ததில், 1,257 கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது தகுதியுடைய 13.46 சதவீத விவசாயிகளுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை.
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 80,299 கணக்குகளை தணிக்கை செய்ததில் 8.5 சதவீத கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக ரூ.164.60 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அதற்காக ஆய்வு கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம் உள்ளிட்ட வகைகளுக்காக அரசிடம் இருந்து ரூ.5.33 கோடியை பெற்றுள்ளன. ஆனால், இந்த கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே தான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
விவசாய கடன் வழங்கியது மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்ததில் மொத்தத்தில் 22.32 சதவீத கணக்குகளில் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் நடந்த இந்த தவறுகள், முறைகேடுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை இந்த திட்டத்தை கண்காணித்து தவறுகள் நடப்பதை தடுத்து நிறுத்த தவறிவிட்டது.
சில இடங்களில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதும் தணிக்கையின் போது தெரிய வந்தது. அந்த தவறை செய்த வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தணிக்கையாளர்கள் மீது நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று சிஏஜி அறிக்கையில் புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜா
06-03-2013, 04:01 AM
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி 12ம் தேதி தமிழகத்தில் பந்த்: டெசோ அழைப்பு

: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 12ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு டெசோ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

ராஜா
06-03-2013, 04:10 AM
ஜெயலலிதாவிற்காக தஞ்சையில் தயாராகும் ‘பொன்னியின் செல்வி’ சிலை

http://tamil.oneindia.in/img/2013/03/06-jaya-statue-300.jpg

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட உதவிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையில் நடைபெற உள்ள பாராட்டுவிழாவின்போது பொன்னியின் செல்வி சிலை வழங்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விழாவில் காவிரி நதிநீர் உரிமையை மீட்டு தந்ததை நினைவுபடுத்தும் வகையில் காவிரியின் மகளை குறிப்பிடும், பொன்னியின் செல்வி சிலையை முதல்வருக்கு பரிசாக வழங்கவுள்ளார்கள்.

ராஜா
06-03-2013, 04:15 AM
சரக்கு ஏற்றிக்கொண்டு, பேத்தியை உயிருடன் கொளுத்திய கொடூரப் பாட்டி

குமுளியைச் சேர்ந்தவர் செல்வன். இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்று வருகிறார். இவர் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வசித்து வருகிறார். இவருக்கு முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் மனைவிக்குப் பிறந்த 13 வயதான தேவி என்ற செல்வனின் மகள், தனது பாட்டி பவானி வீட்டுக்குப் போய் படித்து வந்தார்.

62 வயதாகும் பவானி, குடிக்கு அடிமையானவர். தினசரி குடிப்பாராம். குடித்து விட்டால் கண் மண் தெரியாமல் பேத்தியை அடித்து விடுவாராம். 2 நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் போதையில் பேத்தியைப் போட்டு அடித்துள்ளார். பின்னர் தேவி தூங்கப் போய் விட்டார். அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பேத்தி மீது ஊற்றி தீவைத்து விட்டார்.

தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தேவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாட்டி பவானியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜா
06-03-2013, 04:19 AM
கனவில் வந்து மிரட்டுகிறார் கசாப்: பயங்கரவாதி அபு ஜிண்டால் அச்சம்

மும்பை தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி அஜ்மல் கசாப் புணே எரவாடா சிறையில் கடந்த நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். இதே வழக்கில் பயங்கரவாதி அபு ஜிண்டாலும் விசாரணை எதிர்கொண்டுள்ளார். இது தவிர வேறு பல வழக்குகளும் அவர் மீது உள்ளன.

இந்நிலையில் தனக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்ற அச்சம் அபு ஜிண்டாலை ஆட்டிப்படைத்து வருகிறது. இது தொடர்பாக தனது வழக்குரைஞர் இஜாஸிடம் அவர் பேசும் போது, "அஜ்மல் கசாப் எனது கனவில் அடிக்கடி வந்து பீதியை ஏற்படுத்துகிறார். செüதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டபின் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு முதுகு வலி இருப்பதாகவும் இஜாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அபு ஜிண்டால் சார்பில் மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அபு ஜிண்டாலுக்கு முழுமையாக மருத்துவப் பரிசோதனை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அவர் அடைக்கப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சாலை சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜிசங்கர்
06-03-2013, 04:48 AM

நானே வருவேன் இங்கும் அங்கும்..நானே வருவேன்...வருவேன்.....வருவேன்....

ராஜா
06-03-2013, 04:50 AM
தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்! - போட்டுத் தாக்கும் அமீர்

தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்! விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம்.
எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.

இப்போதுதான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.

ராஜா
06-03-2013, 05:00 AM
சேனல்-4 ஊடகத்துக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவலை வழங்கவில்லை! - கெல்லம் மேக்ரே

சேனல்-4 தொலைக்காட்சி ஊடகம், தாங்கள் தயாரித்துள்ள “மோதல் தவிர்ப்பு வலயம் - இலங்கையின் கொலைக்களம்” என்ற குறும்படத் தயரிப்பின்போது இலங்கையில் வசித்துவரும் எவரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் கெல்லம் மேக்ரே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தயாரிப்புக்கு ஆதாரங்களை வழங்கியுள்ள இலங்கையில் வசிக்கும் நபர்களை கைது செய்யப் போவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்ததாகத் தெரிகிறது. திவயின பத்திரிகை செய்தியில் இது வெளிப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சேனல்-4ன் மெக்ரே வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வசிக்கும் எவரும் சேனல்- 4க்கு ஆதாரங்களை வழங்கவில்லை. மேலும் இந்த ஆதாரங்களைத் திரட்டுவதற்காக சேனல்-4 தொலைக்காட்சி யாருக்கும் நிதியுதவி செய்யவும் இல்லை. இந்தத் தகவல்கள் கிடைத்த விதம் குறித்து இலங்கை அரசு மக்களிடம் அச்சுறுத்தலை மேற்கொள்வது முறையற்ற செயல் என்று கூறியுள்ளார் மெக்ரே.

சேனல்-4ன் இந்த வீடியோக்களால், உலக நாடுகளின் கவனம் இலங்கையின்மீது திரும்பியுள்ளது. நடுநிலை வகிக்கும் பல நாடுகளும் இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக யோசித்து வருகின்றன என்றும் கூறினார் மெக்ரே.

அதேநேரம், இந்த வீடியோக் காட்சிகள் குறித்து தனது கருத்தினைக் கூறிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, “நிரூபிக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் ஏதாவது செய்து மறைக்க முற்படுவது, பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது” என்று கூறியுள்ளதையும் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார் கெல்லம் மெக்ரே.

ராஜா
06-03-2013, 05:03 AM
தேர்வில் மார்க் குறைந்ததால் தஞ்சை கல்லூரி மாணவர் விஷம் குடித்து பலி

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (61). இவரது மகன் பிரடரிக் (வயது 20). இவர் கரந்தை கல்லூரியில் பி.ஏ. 3-வது ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் தேர்வில் மார்க் குறைவாக எடுத்திருந்ததால் பிரடரிக் வேதனையில் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று கல்லூரி முடிந்து தஞ்சை வந்தார். பின்னர் கொடி மரத்து மூலை அருகே அவர் விஷம் குடித்தார்.

உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பிரடரிக் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இராஜிசங்கர்
06-03-2013, 05:10 AM
'குடிமக்களுக்கோர் நற்செய்தி'...இனிமேல் 100 ரூபாய்க்கு டாஸ்மாக்கில் 'வெள்ளக்காரன்' பீர் அடிக்கலாம்!

http://tamil.oneindia.in/img/2013/03/05-1362480233-alcohol-1-600.jpg

நாடு போற்றும் நல்ல நாடாக, டாஸ்மாக் மூலம் சிறந்த போதை மாநிலமாக பாஸ்மார்க் வாங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் புத்தம் புதிய அறிமுகமாக, நூறு ரூபாய்க்கு பீர் என்ற புதிய திட்டத்தை டாஸ்மாக் கடைகளில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விதம் விதமான சரக்குகள்...டார்கெட் போட்டு வேலை செய்யும் ஊழியர்கள் என டாஸ்மாக் கடைகள் கோலாலமாக கல்லாக் கட்டிக் கொண்டுள்ளன. எத்தனையோ விதமான சரக்குகளை இங்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது புதிய ரக பீர் ஒன்றை குடிகாரர்களின் 'நலன்' கருதி அரசு களம் இறக்கியுள்ளதாம். அதுதான் 100 ரூபாய் பீர்.!

ஐஸ்பெர்க் 9000 மகா ஸ்டிராங் பீர் என்ற புதிய வகை பீர் அறிமுகமாகியுள்ளது. இது பார்லியில் செய்ததாகவும். 45 நாள் வரை இதை பாதுகாப்பாக வைத்திருக்கலாமாம். கெடாதாம். இது வெளிநாட்டு பீர் என்றாலும் கூட 100 ரூபாய்க்கே இதை விற்கிறார்களாம். இதில் ஆல்கஹாலின் அளவானது 8 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகும். இந்த பீர் நேற்று முதல் குடிகாரர்கள் வாயில் புழங்க ஆரம்பித்துள்ளது. சில மாவட்டங்களில் இன்று விற்பனைக்கு கொடுக்கிறார்களாம்.

ஒரு பக்கம் பூரண மதுவிலக்கு குறித்து சிந்தனைகளும் போராட்டங்களும் துவங்கியிருக்கிறது. இன்னொரு புறம் 'விலையில்லா பீர்' கொடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் போல?! நம் மக்கள் அனைவரையும் அந்தக் கடவுள் தான் காக்க வேண்டும்...

இராஜிசங்கர்
06-03-2013, 05:16 AM
தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்! - போட்டுத் தாக்கும் அமீர்

தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்! விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம்.
எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.

இப்போதுதான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.

சனி நர்த்தனமாடுகிறது அமீர் நாவில்...........

ராஜா
06-03-2013, 05:45 AM
:)

:)

:)

ராஜா
06-03-2013, 05:47 AM
பதவி ஆசையில்லா ராகுலுக்கு திருமண ஆசையும் இல்லையாமே

http://tamil.oneindia.in/img/2013/03/06-rahul2-300.jpg

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அவரது பிறந்தநாள் தோறும் திருமணம் குறித்து கட்சியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

ராஜா
06-03-2013, 05:48 AM
கடலூர் மணியின் மரணத்திற்குப் பிறகாவது தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளவேண்டும்.. கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
கடலூர் வாலிபர் மணி, கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிங்கள அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே தீக்குளித்து; சிகிச்சை பலனின்றி மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைகிறேன், வேதனையடைகிறேன்.
பாலச்சந்திரனின் கொடுமையான கொலைக்குப் பிறகும், கடலூர் மணியின் பரிதாபகரமான இந்தத் தீக்குளிப்பு மரணத்திற்குப் பிறகுமாவது இந்திய அரசு தமிழர்களின் உணர்வினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் முன்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முன் வர வேண்டும்.
மணியை இழந்து வாடும் அவருடைய அன்னையாருக்கும், மனைவி மக்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராஜா
06-03-2013, 05:50 AM
பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் இருவர் கைது

கடந்தாண்டு நீலம் புயல் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்பகுதியில் பிரதீபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதில் உயிர் தப்பிக்க முயன்ற 6 பேர் கடலில் குதித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பிரதீபா காவேரியின் உரிமையாளர் சுனில் பவார் மற்றும் மதன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் புனேயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜா
06-03-2013, 06:07 AM
குடிபோதையில் அதிகாரி: சேலம் தாலுகா அலுவலகம் முற்றுகை

சேலத்தில் இன்று குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் ஒட்டும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக காலைமுதலே தாலுகா வழங்கல் அலுவகத்தில் மக்கள் கூடினர்.

இந்நிலையில், வட்டாரவளர்ச்சி அலுவலகத்துடன் இணைந்த உள்தாள் ஒட்டக்கூடிய வருவாய் அதிகாரி ஒருவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மயங்கிய நிலையில் இருக்கையில் அமர்ந்து இருந்ததால், பணி எதுவும் நடைபெறவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இராஜிசங்கர்
07-03-2013, 03:46 AM
பதவி ஆசையில்லா ராகுலுக்கு திருமண ஆசையும் இல்லையாமே

http://tamil.oneindia.in/img/2013/03/06-rahul2-300.jpg

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அவரது பிறந்தநாள் தோறும் திருமணம் குறித்து கட்சியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

அப்போ அவர் கேர்ள் ப்ரெண்ட் Veronique-ன் வாழ்க்கை????!!!!!!!!!!!!

ராஜா
07-03-2013, 05:31 AM
அவளோட எப்படா நான் வாழ்ந்தேன்..?னு கேட்பாரோ என்னவோ..?

ராஜா
07-03-2013, 05:32 AM
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம் விதிப்பு

http://tamil.goodreturns.in/img/2013/03/07-microsoft-logo.jpg

வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,020 கோடி அபராதம் விதித்துள்ளது.

விண்டோஸ் பெயரில் சாப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.இதன்படி, இன்டர்நெட் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில், பல்வேறு பிரவுசர் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று.

ஆனால் 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ் 7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் விசாரணை செய்தது. இந்த புகார் உண்மை என நிரூபணமானதால் ரூ.4,020 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது.தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து மொத்த அபராதத் தொகை ரூ.15,840 கோடியாக அதிகரித்திருக்கிறது.

ராஜா
07-03-2013, 05:33 AM
நிலமோசடி வழக்கு: இசையமைப்பாளரின் மேலாளர் கைது

சென்னையில் நிலமோசடி செய்ததாக இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மேலாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கரூரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கடந்த 2010ல் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கானாத்தூரில் 75 சென்ட் நிலம் வாங்கினார்.

இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நிலத்தை இசையமைப்பாளர் வி.சுப்பிரமணியம் என்ற மணிஷர்மா, அவர் மேலாளர் ரகுராமன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த கருப்பண்ணன், கானாத்தூர் காவல் நிலையில் அவர்கள் இருவர் மீதும் புகார் கொடுத்தார்.

அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் மணிஷர்மா, ரகுராமன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக இருந்த ரகுராமனை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ரகுராமன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராஜா
07-03-2013, 05:34 AM
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

2001-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆண்டிபட்டி, புவனகிரி, புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அந்த 4 மனுக்களையும் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில், 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததற்காக ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தி.மு.க.வின் அப்போதைய எம்.பி.யான செ.குப்புசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீது குற்ற வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு சில நாள்களாக இந்த வழக்கில் விசாரணை நடத்தியது. அனைத்து தரப்பு வாதங்களும் புதன்கிழமை முடிவுற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ராஜா
07-03-2013, 05:35 AM
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்ய ஆனந்தன் நுழையத் தடை..!

http://media.dinamani.com/article1491211.ece/ALTERNATES/w460/nithya.jpg

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தன் நுழைய மாவட்ட நீதிமன்றம் தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டது.

நித்யானந்தனை மதுரை ஆதீனமாக தற்போதைய ஆதீனகர்த்தர் கடந்த ஆண்டு நியமித்தார். இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. நியமனத்துக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை சார்பிலும் நித்யானந்தன் நியமனம் குறித்து மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, நித்யானந்தன் நியமனத்தை ரத்து செய்த மதுரை ஆதீனகர்த்தர், அது தொடர்பாக மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அதாவது நித்யானந்தன் நியமன ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அந்த வழக்குத் தொடரப்பட்டது. அத்துடன் பிரதான வழக்கு முடியும்வரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தன் நுழையவும் தடை கோரி ஆதீனம் சார்பில் இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து நித்யானந்தன் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆதீனம் மனு மீதான விசாரணை முடிவில் ஆதீன மடத்துக்குள் பிரதான வழக்கு முடியும் வரை நித்யானந்தன் நுழையக்கூடாது என்றும், ஆதீன மடத்தின் செயல்பாடுகள் வழக்கம்போல தொடரலாம் என்றும் நீதிபதி குருவையா உத்தரவிட்டார்.

ராஜா
07-03-2013, 05:36 AM
ஸ்டாலின் மீது வீடு அபகரிப்பு வழக்கு தொடர்ந்த போலீஸ் உதவி ஆணையர் மீது வழக்கு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது வீடு அபகரிப்பு வழக்குத் தொடர்ந்த உதவி ஆணையர் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரி சாலையைச் சேர்ந்த என்.எஸ். குமார் என்ற சேஷாத்ரி குமாருக்கு (64) தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் வீடு இருந்தது.

இவரது வீட்டை மிரட்டி வாங்கியதாக தி.மு.க. பொருளாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, சீப்ராஸ் கட்டுமான நிறுவனம், ரெயின் ட்ரி ஹோட்டல் ஆகியவற்றின் உரிமையாளர் சுப்பா ரெட்டி, ஸ்டாலின் உதவியாளர் ராஜாசங்கர், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னைப் பெருநகர காவல்துறையின் குற்றப்பிரிவின் நிலமோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் ஜேசுராஜன் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த வழக்கில் 6-வது எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த சீனிவாசன், போலீஸார் பழிவாங்கும் நோக்கத்துடன், தன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கில் தன்னை சேர்த்துவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீதும், வழக்கின் புகார்தாரர் சேஷாத்ரிகுமார் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சேஷாத்ரிகுமார், உதவி ஆணையர் ஜேசுராஜன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் கீழ் எழும்பூர் போலீஸார் 7 பிரிவுகளில் சேஷாத்ரிகுமார், ஜேசுராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

ஜேசுராஜன் தற்போது கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

ராஜா
07-03-2013, 05:37 AM
உ.பி. டிஎஸ்பி அடித்து, இழுத்துச் சென்று சுட்டுக் கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை

உத்தர பிரதேச டிஎஸ்பி ஜியா உல் ஹக் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் குந்தா அருகே உள்ள கிராமத்தில் நிலப் பிரச்சனையில் அக்கிராமத்தின் தலைவர் மற்றும் அவரது சதோரர் கொலை செய்யப்பட்டது பற்றி விசாரிக்க டிஎஸ்பி ஜியா உல் ஹக் கடந்த சனிக்கிழமை இரவு அங்கு சென்றார். அப்போது அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து குந்தா தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ராஜா பையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே ஜியா உல் ஹக்கை சுட பயன்படுத்தப்பட்ட புல்லட் மாயமாகியுள்ளது. மேலும் அவரது துப்பாக்கியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

அதில், ஜியா உல் ஹக் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு அதன் பிறகு மார்பின் வலப்புறத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் தப்பிக்க முடியாது என்றும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராஜா
07-03-2013, 05:39 AM
ஸ்கோடா ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்: டீலரின் அதிரடி ஆஃபர்

http://tamil.drivespark.com/img/2013/03/06-1362559991-01-1362118377-skoda-offer-wm.jpg

கார் மார்க்கெட்டில் போட்டியை சமாளிக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. ஸ்பெஷல் எடிசன், விலை குறைப்பு, லட்ச ரூபாய்க்கு சலுகைகள் என ஒருபக்கம் சரவெடியாய் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்றுவிட்டது குஜராத்தை சேர்ந்த ஸ்கோடா கார் நிறுவனத்தின் டீலரான டார்க் ஆட்டோ. ஆம், ரேபிட் கார் வாங்கினால் ஃபேபியா காரை இலவசமாக வழங்கும் அதிரடி திட்டத்தை டார்க் ஆட்டோ அறிவித்துள்ளது.

ரேபிட் வாங்கினால் ஃபேபியா இலவசம்

ரேபிட் கார் மீது தற்போது ஒரு லட்ச ரூபாய்க்கு தள்ளுபடி வழங்குகிறது ஸ்கோடா. இந்த தள்ளுபடியை வேண்டாம் என்று சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2018ம் ஆண்டு புதிய ஃபேபியா காரை இலவசமாக வழங்குவதாக வாடிக்கையாளர்களிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளார் சம்பந்தப்பட்ட டீலர்.

இதனால், ரேபிட் விற்பனை சூடுபிடித்துள்ளதாக அந்த டீலர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் 600 கார்கள் விற்பனையாகி இருக்கிறதாம்.

இராஜிசங்கர்
07-03-2013, 06:06 AM
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம் விதிப்பு

http://tamil.goodreturns.in/img/2013/03/07-microsoft-logo.jpg

வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,020 கோடி அபராதம் விதித்துள்ளது.

விண்டோஸ் பெயரில் சாப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.இதன்படி, இன்டர்நெட் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில், பல்வேறு பிரவுசர் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று.

ஆனால் 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ் 7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் விசாரணை செய்தது. இந்த புகார் உண்மை என நிரூபணமானதால் ரூ.4,020 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது.தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து மொத்த அபராதத் தொகை ரூ.15,840 கோடியாக அதிகரித்திருக்கிறது.

புடிங்க சார்..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..

இராஜிசங்கர்
07-03-2013, 06:09 AM
நிலமோசடி வழக்கு: இசையமைப்பாளரின் மேலாளர் கைது

சென்னையில் நிலமோசடி செய்ததாக இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மேலாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கரூரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கடந்த 2010ல் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கானாத்தூரில் 75 சென்ட் நிலம் வாங்கினார்.

இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நிலத்தை இசையமைப்பாளர் வி.சுப்பிரமணியம் என்ற மணிஷர்மா, அவர் மேலாளர் ரகுராமன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த கருப்பண்ணன், கானாத்தூர் காவல் நிலையில் அவர்கள் இருவர் மீதும் புகார் கொடுத்தார்.

அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் மணிஷர்மா, ரகுராமன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக இருந்த ரகுராமனை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ரகுராமன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

இவரே பெரிய 'போக்கிரி'யா?

ராஜா
07-03-2013, 06:33 AM
:icon_b::icon_b::icon_b:

ராஜா
07-03-2013, 10:19 AM
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு

இலங்கை தமிழர்கள் குறித்த சிறப்பு விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உரிய பதில் கூறவில்லை என்று கூறி பாஜக,திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராஜா
07-03-2013, 10:20 AM
சிரியாவில் 21 ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் சிறைப்பிடிப்பு

சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர், கோலன் ஹைட்ஸ் பகுதியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 21 ஐ.நா. படை வீரர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.கோலன் பகுதியில் உள்ள கிராமத்திலிருந்து பஷார் அல்-அஸாதின் படைகள் வாபஸ் பெற்றால்தான், 21 பேரையும் விடுவிப்போம் என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறுகையில், ""பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளவர்களை கிளர்ச்சியாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்பகுதியில் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் சுதந்திரமாக நடமாடும் உரிமையை பாதிக்கும் வகையில் சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் செயல்படக்கூடாது'' என்றார்.

ராஜா
07-03-2013, 10:21 AM
பிரதமராக முடியாது என்பதை ராகுல் உணர்ந்து விட்டார்: பாஜக

தன்னால் பிரதமராக முடியாது என்பதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உணர்ந்து விட்டார் என்று பாஜக புதன்கிழமை தெரிவித்துள்ளது.

"பிரதமர் ஆவது எனது விருப்பம் இல்லை. கட்சியை வலுப்படுத்துவே விரும்புகிறேன்' என்று ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இதையே பாஜக மேற்கண்டவாறு கேலி செய்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைக்கும். இதை அறிந்தே, பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார் என்றார்.

திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று ராகுல் தெரிவித்ததற்கு பதில் கூறிய ஹுசைன், நாட்டுக்காக சேவை செய்ய திருமணம் செய்யக் கூடாது என்பதில்லை. திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர் எல்லையில் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.

ராஜா
07-03-2013, 10:22 AM
"இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் வஞ்சித்து விட்டது' .. டி ஆர் பாலு..

இது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில், ""கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு இவ்விஷயத்தில் அமைதி காக்கிறது. அரசு இதில் அக்கறை காட்டவேயில்லை. இது நல்லதல்ல'' என்றார்.

டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ""குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றிக் குறிப்பிடப்படவேயில்லை. தமிழர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைத் தமிழர் விஷயத்தில், தி.மு.க.வை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது. நாம் ஏன் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது? அங்குள்ள தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ராஜா
07-03-2013, 10:23 AM
இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் .. ஆரூண்.

டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ""குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றிக் குறிப்பிடப்படவேயில்லை. தமிழர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைத் தமிழர் விஷயத்தில், தி.மு.க.வை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது. நாம் ஏன் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது? அங்குள்ள தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இளங்கோவன் பேசும் போது காங்கிரஸ் எம்.பி.க்கள் குறுக்கிட்டனர். தமிழக காங்கிரஸ் எம்.பி. ஆரூண் பேசுகையில், ""ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்'' என்றார்.

இளங்கோவன் அதற்கு பதிலடியாக, "முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறீர்களா? இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் 13ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று இலங்கை கூறிவிட்டது. ராஜீவ் காந்தியும், இலங்கையின் அப்போதைய அதிபர் ஜெயவர்தனேவும் 1987ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்ததுக்கு என்ன நேர்ந்தது'' என்றார்.

ராஜா
07-03-2013, 10:24 AM
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

காஞ்சிபுரம் பெருமாள் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜெயேந்திரன் உட்பட 19 பேர் ஆஜராகவில்லை. 5 பேர் மட்டுமே ஆஜரானார்கள். இதனால் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

ராஜா
07-03-2013, 10:25 AM
வெனிசுலாவின் அடுத்த அதிபர் நிக்கோலஸ் ஒரு சாய்பாபா பக்தர், மாஜி பஸ் டிரைவர்

காரகாஸ்: வெனிசுலா துணை அதிபரும், ஹ்யூகோ சவேஸுக்கு அடுத்தபடியாக அதிபராகவிருப்பவருமான நிக்கோலஸ் மதுரோ ஒரு காலத்தில் பஸ் டிரைவராக இருந்துள்ளார். அவர் ஒரு சாய்பாபா பக்தர் ஆவார்.

வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சவேஸ் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதையடுத்து துணை அதிபரான நிக்கோலஸ் மதுரோ அடுத்த அதிபராக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுரோ ஒரு காலத்தில் பஸ் டிரைவராக இருந்தவர். அவர் புட்டப்பர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 2005ம் ஆண்டு மதுரோ தனது மனைவி சீலியா ப்ளோரஸுடன் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு வந்துள்ளார்.

அவர் சத்ய சாய்பாபாவை சந்தித்தும் பேசியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி சாய்பாபா இறந்தபோது மதுரோ கோரிக்கையின்படி வெனிசுலா நாடாளுமன்றத்தில் சாய்பாபாவின் மரணம் குறித்து பேசப்பட்டுள்ளது. மதுரோ இந்தியா வந்தபோது அவருக்கு சாய்பாபா தன்னுடைய பெரிய போட்டோ ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த போட்டோ மதுரோவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரோ வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு வந்ததாக சத்ய சாய் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

ராஜா
07-03-2013, 10:31 AM
மதுரையில் காங். தலைவர்கள் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு

மதுரையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், தலைவர்களின் வீடுகளைத் தாக்கலாம் என்று வெளியான ரகசியத் தகவல்களின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ராஜா
07-03-2013, 10:33 AM
பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது இந்தியாவின் கொள்கையில் இல்லை: சல்மான் குர்ஷித்

மக்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து சிறப்பு விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அனைத்து கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளித்து பேசியதாவது:- இலங்கையில் பிரச்னையை தீர்க்க இந்தியா கடந்த 27 ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது. இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்பட்ட கொடுமைகளை ஏற்று கொள்ள முடியாது. இன்று நான் செய்வது, நாளை நமக்கு பிரச்சனையாக திரும்பி விடக் கூடாது, மேலும் பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது இந்தியாவின் கொள்கையில் இல்லை, தமிழர்களின் சம உரிமைக்கு இந்தியா வலியுறுத்தும் என்று கூறியுள்ளார்.

ராஜா
07-03-2013, 11:04 AM
பிரிட்டனில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகரில் இந்திய இளைஞர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

28 வயதான அந்த இளைஞர் இரவு சாலையில் நடந்து சென்ற போது, வெள்ளை இனத்தவர் ஒருவர் இனவெறியைத் தூண்டும் விதத்தில் பேசியதுடன், முகத்தில் குத்தி, அடித்துள்ளார். கீழே விழுந்த அவர் மீது மேலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகத்தில் பலத்த காயமடைந்த இந்திய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இது யாருடைய தூண்டுதலின் பேரிலும் நடைபெறவில்லை. குற்றமிழைத்த அந்நபர் குறித்த அடையாளங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய அவரைப் பார்த்தால் காவல்துறையிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்' என்றார்.

ராஜா
07-03-2013, 11:05 AM
அமெரிக்காவைப் பற்றி மேலும் முக்கிய ஆவணங்கள் - விக்கி லீக்ஸ்

இது குறித்து அசாஞ்ஜே கூறியுள்ளதாவது: அமெரிக்க வங்கிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் விக்கலீக் வசம் உள்ளன.

ஆனால் எங்களுக்குத் தகவல்களைத் திரட்டிக்கொடுத்த அமெரிக்க உளவு அதிகாரி பிராட்லி மேனிங் அமரிக்க ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றை இப்போது வெளியிட மாட்டோம்.

ஆனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்; அரசு தொடர்பான உண்மைகளை மக்களுக்குத் தெரிவிப்பதே முக்கியம். 2009-ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க விமானப் படையினர் ஆப்கானிஸ்தானில் குண்டு வீசி தாக்கியதில் 150 அப்பாவிகளும் குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இது குறித்த விடியோ காட்சிகளும் முக்கிய ஆவணங்களையும் மிகவும் சிரமப்பட்டு நாங்கள் கைப்பற்றினோம். அவற்றை வெளியிடத் திட்டமிட்டிருந்தபோது எங்கள் நிறுவனத்திலிருந்து விலகிய டேனியல் பெர்க் அவற்றை எடுத்துச்சென்றதும் பிறகு அவற்றை அவர் எரித்துவிட்டதும் தெரிய வந்தது.

இருப்பினும் ஆன்லைனில் ஒளிபரப்பக்கூடிய அளவுக்கு எங்களிடம் அமெரிக்கா குறித்த பல முக்கிய ஆவணங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அசாஞ்ஜே மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தினர். இந்த வழக்கில் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சிறிது காலம் சிறையிலிருந்த அவர் ஜாமீன் பெற்றார். இதையடுத்து லண்டனில் உள்ள ஈகுவாடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012 ஜூன் 19 முதல் தஞ்சம் புகுந்துள்ளார் அசாஞ்ஜே.

ராஜா
07-03-2013, 11:06 AM
இந்தியாவை தவறாகப் பயன்படுத்துகிறது ஈரான்: அமெரிக்கா

இந்தியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகளை ஈரான் தீய செயல்களுக்கு பயன்படுத்துகிறது என்று அமெரிக்காவின் உயர் ராணுவ அதிகாரி ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியா, இராக், லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஏமன் மற்றும் காஸô உள்ளிட்ட பிராந்திய நாடுகளையும், சர்வதேச அளவில் இந்தியா, சூடான், துருக்கி, தாய்லாந்து, பல்கேரியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளையும் ஈரான் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வாஷிங்டனில் உள்ள சவூதி அரேபிய தூதரக அதிகாரியை கொலை செய்யவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் தவறான கணிப்பு பெரும் அழிவை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

ஈரானிடம் அணு ஆயுதம் கிடைத்தால், அந்நாட்டின் ஏதேச்சதிகாரப் போக்கு மேலும் அதிகரிக்கும். அது சர்வதேச அளவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜா
07-03-2013, 11:07 AM
சுவிஸ் வங்கிக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.316 கோடி அபராதம்

http://media.dinamani.com/article1489555.ece/ALTERNATES/w460/ubs.jpg

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிகவும் பழமையான தனியார் வங்கியான வெகேலின் அண்ட் கோ, அமெரிக்கர்களை வரி ஏய்ப்புகளைச் செய்ய ஊக்குவித்தது. இதன் மூலம் அவர்களிடம் உபரியாக இருக்கும் பணத்தைத் தன்னிடம் ரகசியக் கணக்கைத் தொடங்கி அதில் மறைத்து வைக்கவும் இந்த வங்கி ஏற்பாடு செய்தது. எனினும், இதற்காக அமெரிக்காவில் தன் நேரடிக் கிளையைத் தொடங்குவதற்குப் பதிலாக யூ.பி.எஸ். ஏஜி என்ற நிதிச் சேவை நிறுவனத்தைத் தன் ஏஜெண்ட் போல் செயல்பட வைத்தது. இதன் மூலம் அமெரிக்கர்கள் பலரும் அரசை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து, யூ.பி.எஸ். ஏஜி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அந்தப் பணம் வெகேலின் அண்ட் கோ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

இதனிடையே, அமெரிக்கர்கள் யூ.பி.எஸ். நிறுவனத்தில் பதுக்கி வைத்துள்ள பணத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் தொடங்கினர். அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் வரை 74 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.404 கோடி) அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த வரி ஏய்ப்பு மற்றும் ரகசியக் கணக்குகளை அமெரிக்க அரசிடம் மறைத்தது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெட் எஸ்.ராகோஃப், அமெரிக்கர்களின் ரகசியக் கணக்குகளில் ரூ.8,195 கோடி பணம் இருந்ததை அரசிடமிருந்து மறைத்த வெகேலின் வங்கி ரூ.316 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ராஜா
07-03-2013, 11:08 AM
ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், பென்ஷன், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 லிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாஸ்போர்ட்,பென்ஷன், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை வழங்குவதில் காலம் தாமதம் ஏற்படுத்தும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இராஜிசங்கர்
07-03-2013, 04:10 PM
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு

இலங்கை தமிழர்கள் குறித்த சிறப்பு விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உரிய பதில் கூறவில்லை என்று கூறி பாஜக,திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பள்ளிக்கூடத்துல டீச்சர் கேள்வி கேட்டுப் பதில் சொல்லாதவங்க தான் வெளிய போவாங்க. இங்க உல்டாவா இருக்கே!!!

இராஜிசங்கர்
07-03-2013, 04:14 PM
[B]
இலங்கையில் பிரச்னையை தீர்க்க இந்தியா கடந்த 27 ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது. இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்பட்ட கொடுமைகளை ஏற்று கொள்ள முடியாது. இன்று நான் செய்வது, நாளை நமக்கு பிரச்சனையாக திரும்பி விடக் கூடாது, மேலும் பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது இந்தியாவின் கொள்கையில் இல்லை, தமிழர்களின் சம உரிமைக்கு இந்தியா வலியுறுத்தும் என்று கூறியுள்ளார்.

யோவ்....யோவ்..குர்ஷித்..ஏன்ய்யா 2 பக்கமும் கோல் போடுற? காலைலயே சரக்கா?

ராஜா
08-03-2013, 04:49 AM
யோவ்....யோவ்..குர்ஷித்..ஏன்ய்யா 2 பக்கமும் கோல் போடுற? காலைலயே சரக்கா?

என்னா பேச்சு பேசுதுப்பா இந்தப் பொண்ணு.. :fragend005:

எப்படித்தான் வீட்டுல வச்சு சமாளிக்கிறாங்களோ..

:)

ராஜா
08-03-2013, 04:51 AM
இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!!

http://tamil.oneindia.in/img/2013/03/08-sonia-jaya22-300.jpg

இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண் சோனியா காந்திதான் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அசோசெம் மற்றும் ஜீ பிஸினஸ் ஆகியவை இணைந்து இந்தியாவில் 2012-ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தின.
இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள் பட்டியலை வெளியிட்டது.

சோனியாவுக்கு முதலிடம்..

இதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அவரைத்தொடர்ந்து ஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2-வது இடத்தையும், பெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3-வது இடத்தையும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 4-வது இடத்தையும் பெற்றனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு 5வது இடம்

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5-வது இடத்தையும், இந்தி நடிகை வித்யா பாலன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6-வது இடத்தை ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.

ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8-வது இடமும், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9-வது இடமும் கிடைத்தது. இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10-வது இடம் கிடைத்தது.

எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர் நைனா லால் கித்வாய்க்கு 11-வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர் பிரமால்க்கு 12-வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13-வது இடமும், இந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14-வது இடமும், இந்திப்பட இயக்குநர் சோயா அக்தருக்கு 15-வது இடமும் கிடைத்தது.

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு 17வது இடம்

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவரைத்தொடர்ந்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18-வது இடமும், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு 19-வது இடமும், உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20-வது இடமும் கிடைத்துள்ளது.

ராஜா
08-03-2013, 04:52 AM
தங்கநகைக்கு பதிலாக கவரிங் நகை: முத்தூட் கோல்டு பைனான்ஸ் மீது மோசடி புகார்!

அடகுவைத்த தங்கநகைக்கு பதிலாக கவரிங் நகையை கொடுத்து வாடிக்கையாளரை மோசடி செய்ததாக முத்தூட் மினி கோடு லோன் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பேடரல்லி என்ற ஊரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மோகன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று, முத்தூட் மினி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 47.8 கிராம் எடையுள்ள தங்க நகையை அடமானம் வைத்து 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று, அந்த நகைக்கான தொகையையும், வட்டியையும் செலுத்தி தனது நகையை மீட்டுள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று நகையை சோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், அப்போதே, முத்தூட் நிறுவனத்திற்கு சென்று, இது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அங்கிருந்தவர்கள்,"தவறு நடந்துவிட்டது.உங்களது நகையை கூடிய விரைவில் திருப்பி தந்துவிடுகிறோம்" என்று கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதை நம்பிய மோகன், திரும்ப வந்து விட்டார். பின்னர் நகை கிடைத்த பாடில்லை. தனது நகையை கேட்டு முத்தூட் நிறுவனத்திற்கு பலமுறை சென்றும் அவர்கள் உரிய பதிலை கூறவில்லை.

முதலில் நகையை மாற்றி தருவதாக சொன்னவர்கள், பின்னர் "நகையை தர முடியாது...உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்..!" என்று மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மோகன் நேற்று மாலை தர்மபுரி நகர காவல்நிலையத்தில் முத்தூட் மினி கோல்டு நிறுவனம் மீது மோச்டி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜா
08-03-2013, 05:37 AM
விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜெயந்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 2011 ஏப்ரலில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை தள்ளுபடி செய்ததால், தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் விஜயகாந்த் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

ராஜா
08-03-2013, 05:38 AM
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம்!

இலங்கைக்கு எதிராக தான் முன்வைத்துள்ள தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது அமெரிக்கா. இந்தத் தீர்மானத்துக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் இழுபறியாகவே உள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், இலங்கையில் கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்; மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும், மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

ராஜா
08-03-2013, 05:39 AM
தந்தைக்கு ஜீவனாம்சம் தராத 6 பிள்ளைகள்... வீட்டு சாமான்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

வேலூர்: தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத 6 மகன்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த வேலூர் மாவட்டம் வாலாஜா கோர்ட், அவர்களது வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய அதிரடி உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம் திருப்பாற்கடல் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் வி.ராமகிருஷ்ணன். இவரது 6 மகன்களான அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் ஆகியோர் இப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், இவர்களுக்கு ராமகிருஷ்ணன் தனது சொத்துகளை பாகப் பிரிவினை செய்துகொடுத்துள்ளார்.

சொத்து கைக்கு வரும் வரை தந்தையை பத்திரமாக காத்து வந்த 6 பிள்ளைகளும், சொத்துக்கள் கைக்கு வந்ததும், தந்தையை நட்டாற்றில் விட்டு விட்டனர். சரியாக சாப்பாடு கூட போடுவதில்லையாம். இதைத் தொடர்ந்து, மகன்களிடம் ஜீவனாம்சம் கோரி வாலாஜா குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ராமகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், மாதம்தோறும் 6 மகன்களும் தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என 2012ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி உத்தரவிட்டார் ஆனால் அவர்கள் சொன்னபடி வழங்கவில்லை. இதையடுத்து ராமகிருஷ்ணன் அப்பீல் செய்தார்.

இதை விசாரித்த மாஜிஸ்திரேட் காயத்ரி, 6 பேரின் வீடுகளில் உள்ள மின்விசிறி, கட்டில், பீரோ, பித்தளை சாமான்கள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து மார்ச் 22ஆம் தேதிக்குள் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என காவேரிப்பாக்கம் போலீஸாருக்கு அதிரடி உத்தரவிட்டார்.

ராஜா
08-03-2013, 05:40 AM
அணு உலை எதிர்ப்பாளர் மனைவி கணக்கில் ரூ.30 லட்சம் டெபாசிட்: வந்தது எப்படி?-மத்திய அரசு விசாரணை!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு உறுப்பினரது மனைவியின் வங்கி கணக்கிற்கு ரூ.30 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடந்தி வருகின்றது.

கூடங்குளம் பஞ்சாயத்து 14வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் குமார். இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த இவர் தற்போது கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.

குமார் மனைவி அம்பிகா. இவர் கடந்த 3ம் தேதி கூடங்குளத்தில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினார். கடந்த 5ம் தேதி லண்டனிலிருந்து ஆன் லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரத்து 830 ரூபாய் இவரது கணக்கிற்கு அனுப்பப்பட்டது. லண்டனை சேர்ந்த ஆனந்த் என்பவர் இந்த பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்தது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து ரூ.30 லட்சம் அனுப்பப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
மேலும் அம்பிகா, குமாரிடம் பணம் அனுப்பிய ஆனந்த் யார், எதற்காக இவ்வளவு தொகை அனுப்பினார் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜா
08-03-2013, 05:41 AM
பின்லேடனின் மருமகன் கைது: அமெரிக்கா கொண்டு செல்ல திட்டம்

அல் கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் பின் லேடனின் மருமகனான சுலைமான் அபு கெய்த் மற்றும் அவனது செய்தித் தொடர்பாளர் ஒருவனும் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படுகின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், சுலைமான் அபு கெய்த்தின் கைது ஒரு மிகப்பெரிய மைல் கல் என்றும், நியூயார்க் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்களை கொலை செய்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுலைமான் அபு கெய்த் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜா
08-03-2013, 05:42 AM
டிஎஸ்பி படுகொலை : 8 உறவினருக்கு அரசு வேலை கோரும் மனைவி

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசின் இழப்பீடாக தங்களது குடும்பத்தில் 8 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று டிஎஸ்பியின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸியா உல் ஹக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவரது இறப்புக்கு இழப்பீடாக, நிதியுதவி, பாதுகாப்பு, ஸியா உல் ஹக்கின் பிரேத பரிசோதனை அறிக்கை, சிபிஐ விசாரணை மற்றும் மனைவி மற்றும் 2 உறவினர்களுக்கு அரசு வேலை என அவரது குடும்பத்தார் கேட்பதை தருவதாக உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், டிஎஸ்பியின் மனைவி பர்வீன் ஆசாத் (24), தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்து 8 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இராஜிசங்கர்
08-03-2013, 09:04 AM
[B][FONT=Verdana][COLOR="#FF0000"]

இந்தத் தீர்மானத்துக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் இழுபறியாகவே உள்ளது.

ஆப்ரஹாம் லிங்கனின் புகழ் பெற்ற மேற்கோள் ஒன்று: 'ஒரு மரத்தை வெட்டுவதற்கு 8 மணி நேரம் எனக்குக் கொடுக்கப்பட்டால் 7 மணி நேரங்களை என் கோடாரியைக் கூர்மைப்படுத்தச் செலவிடுவேன்'

மத்திய அரசுக்கு எவனோ இந்த வாசகத்தை நினைவு படுத்திட்டான் போல! (அவனைத் தான் தேடிக்கிட்டு இருக்கோம்..மவனே அவன் கையில கிடச்சா கைமா தான்).

ஹலோ, மேதகு மத்திய அரசே! 7 மணி நேரம் கோடாரியைக் கூர்மையாக்குனதெல்லாம் சரி தான்.ஆனா அந்தக் கடைசி ஒரு மணி நேரத்துல வெட்டனும் தம்பி..இப்படித் தூங்கிறக் கூடாது...

இராஜிசங்கர்
08-03-2013, 09:05 AM
விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜெயந்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 2011 ஏப்ரலில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை தள்ளுபடி செய்ததால், தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் விஜயகாந்த் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

ஐயோ பாவம் அந்த மனுஷன். ஏதோ ஒன்று ரெண்டு எடத்துல தான் ஜெயிச்சார்..அதுவும் செல்லாதுன்னா எப்டி? பொழச்சுப் போறாரு ஜெயந்தி விட்டுடுங்க..

இராஜிசங்கர்
08-03-2013, 09:14 AM
தங்கநகைக்கு பதிலாக கவரிங் நகை: முத்தூட் கோல்டு பைனான்ஸ் மீது மோசடி புகார்!

அடகுவைத்த தங்கநகைக்கு பதிலாக கவரிங் நகையை கொடுத்து வாடிக்கையாளரை மோசடி செய்ததாக முத்தூட் மினி கோடு லோன் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பேடரல்லி என்ற ஊரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மோகன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று, முத்தூட் மினி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 47.8 கிராம் எடையுள்ள தங்க நகையை அடமானம் வைத்து 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று, அந்த நகைக்கான தொகையையும், வட்டியையும் செலுத்தி தனது நகையை மீட்டுள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று நகையை சோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், அப்போதே, முத்தூட் நிறுவனத்திற்கு சென்று, இது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அங்கிருந்தவர்கள்,"தவறு நடந்துவிட்டது.உங்களது நகையை கூடிய விரைவில் திருப்பி தந்துவிடுகிறோம்" என்று கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதை நம்பிய மோகன், திரும்ப வந்து விட்டார். பின்னர் நகை கிடைத்த பாடில்லை. தனது நகையை கேட்டு முத்தூட் நிறுவனத்திற்கு பலமுறை சென்றும் அவர்கள் உரிய பதிலை கூறவில்லை.

முதலில் நகையை மாற்றி தருவதாக சொன்னவர்கள், பின்னர் "நகையை தர முடியாது...உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்..!" என்று மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மோகன் நேற்று மாலை தர்மபுரி நகர காவல்நிலையத்தில் முத்தூட் மினி கோல்டு நிறுவனம் மீது மோச்டி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'முத்தூட் மினி கோல்டு' ன்னு பேர் இருக்கும் போதே சுதாரிச்சுருக்க வேண்டாமா! மினி தான் கோல்டு..மேக்சிமம் கவரிங் ன்னு

இராஜிசங்கர்
08-03-2013, 09:20 AM
என்னா பேச்சு பேசுதுப்பா இந்தப் பொண்ணு.. :fragend005:

எப்படித்தான் வீட்டுல வச்சு சமாளிக்கிறாங்களோ..

:)

ச்சே சே நான் ரொம்ப அமைதியான பொண்ணுங்க...வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாது..வேணும்னா ஜெயந்த் அண்ணாட்ட கேளுங்க..:aetsch013:

ராஜா
08-03-2013, 10:55 AM
:)

:traurig001:

ராஜா
08-03-2013, 10:56 AM
சிரஞ்சீவி அழைப்பு…. காங்கிரசிஸ் சேர குஷ்பு திட்டம்…

சென்னை: கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்டரில் அடிதடி ஆகும் அளவிற்கு எழுதிக்குவித்தார் நக்கீரனில் பேட்டியும் கொடுத்தார். இப்போது குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.

ராஜா
08-03-2013, 10:58 AM
பாக். பிரதமர் வருகைக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகம் கடும் எதிர்ப்பு- நிபந்தனை விதிப்பு!

அஜ்மீர்: நபிகளின் போதனைகளையும் குரானையும் பின்பற்றாத பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இந்தியாவின் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தரக் கூடாது என்று அதன் தலைமை நிர்வாகியான ஜைனுல் அபிதீன் அலி கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அஜ்மீர் தர்காவில் நாளை வழிபாடு நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கு தர்கா நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தர்காவின் தலைமை நிர்வாகியான ஜைனுல் அபிதீன் அலி கான் கூறுகையில், மனிதாபிமானமற்ற வகையில் இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்திருக்கின்றனர். அத்துடன் இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையையும் எடுத்து சென்றிருக்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீருக்கு வருவதற்கு முன்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்திய வீரரின் தலையை ஒப்படைக்க வேண்டும். இந்த கொடுஞ்செயலுக்காக பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்திய வருகையை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரத்தில் அவர் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தந்தால் அவரை முன்னின்று நான் வரவேற்க மாட்டேன் என்றார் அவர்.

ராஜா
08-03-2013, 10:59 AM
சசி தரூர் கார் மீது பாஜக பெண் தொண்டர்கள் தாக்குதல்

டெல்லியில் இன்று மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மத்திய இணையமைச்சர் சசி தரூரின் காரை பாஜக பெண் தொண்டர்கள் தாக்கினர்.
டெல்லி தால்கோத்ரா மைதானத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்டத்தில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு கூடிய பாஜக தொண்டர்கள், டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிக் கொண்டு, ஷீலா தீட்சித்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து, எறிந்தனர்.

அப்போது விழாவில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் சசி தரூரை நோக்கி வந்த பாஜக பெண் தொண்டர்கள் காரை தாக்கினர்.
இந்தத் தாக்குதலுக்கு தரூரின் மனைவி சுனந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சசி என்ன செய்தார் என்று இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்றார்.

ராஜா
08-03-2013, 11:22 AM
மகளிர் தினம்: முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டு 8 விமானங்களை இயக்கிய ஸ்பைஸ்ஜெட்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று காலை முக்கிய நகரங்களில் இருந்து முதல் விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய 8 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்கியது.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து 5 போயிங் 737 விமானங்களும், 3 பம்பார்டியர் க்யூ 400 ரக விமானங்களையும் முழுக்க முழுக்க பெண் பைலட்டுகளே இயக்கினர்.

காலை 5 மணி முதல் இந்த விமானங்கள் பறக்கத் தொடங்கின. இந்த விமானங்களில் இருந்த பைலட், கோ பைலட், பணிப் பெண்கள் அனைவரும் பெண்களே. அதே போல ஸ்பைஸ்ஜெட்டின் கவுண்டர்களிலும் இன்று காலை பெண்களே முதலில் பணியை ஆரம்பித்தனர்.

செக் இன் கவுன்டர்கள், விமான என்ஜினியர்கள், பாதுகாப்புப் பிரிவு என அனைத்துப் பிரிவுகளையும் பெண்களே கையாண்டனர்.
போயிங் விமானங்களை 8 பெண் பைலட்கள், 27 பெண் கோ பைலட்களும், பம்பார்டியர் ரக விமானங்கள் 3 பெண் பைலட்கள், 10 கோ பைலட்களும் இயக்கினர்.

அதே போல இன்று விமானத்தில் பயணித்த பெண் பயணிகள் அனைவருக்கும் ரோஜாக்களை வழங்கியது ஸ்பைஸ்ஜெட்.

ராஜா
08-03-2013, 11:24 AM
தெனாலிராமனைத் தொடர்ந்து 'ஆப்ரிக்காவில் வடிவேலு' - இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்

http://tamil.oneindia.in/img/2013/03/08-vadivelu44-600.jpg

முழு வீச்சில் மீண்டும் களமிறங்கிவிட்டார் வடிவேலு. அதுவும் காமெடியனாக அல்ல.. முழுமையான கதாநாயகனாக.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் 'அரசியல்' அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு, இப்போது தெனாலிராமன் என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார். இதற்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முழுமையான காமெடிப் படம் ஒன்றில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்துக்கு ஆப்ரிக்காவில் வடிவேலு என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதனை வடிவேலு சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது.

கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே'னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன். இது பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்," என்றார்.

இராஜிசங்கர்
08-03-2013, 11:31 AM
சிரஞ்சீவி அழைப்பு…. காங்கிரசிஸ் சேர குஷ்பு திட்டம்…

சென்னை: கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்டரில் அடிதடி ஆகும் அளவிற்கு எழுதிக்குவித்தார் நக்கீரனில் பேட்டியும் கொடுத்தார். இப்போது குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.

இங்க ஒன்னும் பிரச்சனை வராது..ராகுல் தான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்காரே!

இராஜிசங்கர்
08-03-2013, 11:35 AM
சசி தரூர் கார் மீது பாஜக பெண் தொண்டர்கள் தாக்குதல்

டெல்லியில் இன்று மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மத்திய இணையமைச்சர் சசி தரூரின் காரை பாஜக பெண் தொண்டர்கள் தாக்கினர்.
டெல்லி தால்கோத்ரா மைதானத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்டத்தில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு கூடிய பாஜக தொண்டர்கள், டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிக் கொண்டு, ஷீலா தீட்சித்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து, எறிந்தனர்.

அப்போது விழாவில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் சசி தரூரை நோக்கி வந்த பாஜக பெண் தொண்டர்கள் காரை தாக்கினர்.
இந்தத் தாக்குதலுக்கு தரூரின் மனைவி சுனந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சசி என்ன செய்தார் என்று இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்றார்.

கட்ட தொரைக்கு கட்டம் சரியில்ல!!

ஆதி
08-03-2013, 12:13 PM
ஆப்ரஹாம் லிங்கனின் புகழ் பெற்ற மேற்கோள் ஒன்று: 'ஒரு மரத்தை வெட்டுவதற்கு 8 மணி நேரம் எனக்குக் கொடுக்கப்பட்டால் 7 மணி நேரங்களை என் கோடாரியைக் கூர்மைப்படுத்தச் செலவிடுவேன்'

மத்திய அரசுக்கு எவனோ இந்த வாசகத்தை நினைவு படுத்திட்டான் போல! (அவனைத் தான் தேடிக்கிட்டு இருக்கோம்..மவனே அவன் கையில கிடச்சா கைமா தான்).

ஹலோ, மேதகு மத்திய அரசே! 7 மணி நேரம் கோடாரியைக் கூர்மையாக்குனதெல்லாம் சரி தான்.ஆனா அந்தக் கடைசி ஒரு மணி நேரத்துல வெட்டனும் தம்பி..இப்படித் தூங்கிறக் கூடாது...

போன முறை மாதிரி தீர்மானத்தை நீர்த்து போக செய்துவிடாமல் இருந்தால் நல்லது

சர்வதேச விசாரனை என்பதை இலங்கை அரச விசாரனை செய்யட்டும்னு இந்தியாத்தா தீர்மானத்தை மாற்றியது, அத்தோடு நின்றிருந்தா கூட பரவாயில்லை, அடுத்தநாள் நம் மாண்பு மிகு பிரதமர் மன்மோகன் சிங், மகிந்தவிடம் முழுமனதுடன் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை, பல கட்சிகள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே ஆதரிக்க வேண்டியதாகிவிட்டது, ஆனாலும் உங்களுக்கு நாங்கள் நல்லதே செய்திருக்கிறோம், நீங்களே மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும்னு சொன்னார்

அனதால இவங்க வெட்டவும் வேணாம், தீட்டவும் வேண்டாம் அமைதியா வேடிக்க பார்த்த போதும்

ராஜா
08-03-2013, 01:31 PM
தஞ்சை வருகிறார் ஜெ... நாளை விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்பு

தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாளை விவசாயிகள் தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்துகின்றனர். இதில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா நாளை தஞ்சை வருகிறார். தஞ்சையில் நாளை மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வருகிறார்.

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்குகிறார். தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசுகிறார். விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் அமைச்சர்கள், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சார்பில் பொன்னியின் செல்வி வெண்கல சிலை நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. தஞ்சை பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றே முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.

ராஜா
08-03-2013, 01:34 PM
மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த 2 ஆசிரியர்களுக்கு அடி-உதை

மதுரை குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8, 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர்கள் இருவருக்கு அடி உதை விழுந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வெளியே அழைத்துவந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர் ஆவேசத்துடன் அவர்கள் மீது பாய்ந்து, திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் பலரும் ஓடி வந்து ஆசிரியர்களைத் தாக்கினர். இருவரும் தப்பி ஓட, அவர்களை ரோட்டிலேயே விரட்டி விரட்டி அடித்தனர். போலீசார் சுதாரிப்பதற்குள் இது நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

ராஜா
08-03-2013, 01:46 PM
அமெரிக்கர்களுக்குப் பிடித்த நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா

அமெரிக்க மக்களுக்குப் பிடித்தமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. பிடிக்காத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து இந்தியா இடம்பெற்றுள்ளது.

பிடிக்காத நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஈரானும், கொரியாவும், பாகிஸ்தானும் பிடித்துள்ளன.

ராஜா
09-03-2013, 05:05 AM
ஜெனிவா தீர்மானம்: இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்காவுடன் சு.சுவாமி பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஜெனிவாவில் அமெரிக்கா தமது தீர்மானத்தில் வலியுறுத்தக் கூடாது என்பதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அண்மையில் இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திடீரென அமெரிக்கா சென்ற அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினாலும் இலங்கைக்காகவே அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு தமக்கு திருப்தி அளித்ததாகத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, போர்க் குற்றம் தொடர்பாக இலங்கையே விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அமைப்புகளை விசாரணைக்கு அழைப்பது என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை மகிழ்விக்கச் செய்யும் என்று பிளேக்கிடம் கூறியதாக தெரிவித்தார்

ராஜா
09-03-2013, 05:06 AM
இரயில் மோதி 100க்கும் அதிமான ஆடுகள் பலி

சாத்தூர் அருகே இரயிலில் அடிபட்டு 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின.

சாத்தூர் அருகே நல்லிக்கும் குமாரபுரத்துக்கும் இடையே கஞ்சம்பட்டி இரயில்வே கேட் உள்ளது. நேற்றிரவு மூக்கையா உள்ளிட்ட ஆறு பேர் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேச்சலுக்கு விட்டு திரும்பியுள்ளனர். அவர்கள் வழக்கம் போல் தங்களது ஆடுகளை கஞ்சம்பட்டி இரயில்வே கேட் வழியாக அழைத்து வந்துள்ளனர்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த வாராந்திர சிறப்பு இரயில் ஆடுகள் மீது மோதியது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின. பலியான ஆடுகளின் மதிப்பு ரு.6 லட்சம் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜா
09-03-2013, 05:08 AM
அஜித் செய்த துரோகம் : புலம்பும் தயாரிப்பாளர்!

http://cinema.vikatan.com/uploaded/24thalaajith.jpg

அஜித் - விஷ்ணுவர்தன் இணைந்துள்ள வலை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அஜித்தின் செயலை பார்த்து வாயடைத்து போய் இருக்கிறாராம்.

கில்லி, சிவகாசி போன்ற விஜய்யின் வெற்றி படங்களை தயாரித்தவர் ஏ. எம்.ரத்னம். பாய்ஸ், எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட படங்களின் தோல்வி இவரை மிகவும் பணக்கஷ்டத்திற்குள்ளாக்கியது.

விஜய்யின் கால்ஷிட் தேதிகள் கேட்டு நடையாய் நடந்தவரை அழைத்து, தனது தேதிகளை ஒதுக்கினார் அஜித். இதனால் அஜித்தின் புகழ் மழை பாடினார் ஏ.எம். ரத்னம். " எனது சம்பளத்தினை படம் முடிவடைந்தவுடன் வியாபாரம் ஆனவுடன் வாங்கி கொள்கிறேன்" என்று கூறினாராம் அஜித்.

இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தேதிகள் ஒதுக்கி படப்பிடிப்பு துவங்கியவுடன் அஜித், எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று கூறி ஒரு கோடி வாங்கினாராம். சில நாட்கள் மீண்டும் பணம் வேண்டும் என்று கூறி வாங்கி கொண்டே இருந்தாராம்.

மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்த ஏ.எம்.ரத்னம், படப்பிடிப்பிற்கு வைத்திருந்த பணத்தையும் கொடுத்தாராம். இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதற்குள் தனது மொத்த சம்பளத்தையும் வாங்கி விட்டாராம் அஜித்.

பட வியாபாரம் ஆனவுடன் வாங்கி கொள்கிறேன் என்று கூறியவர், இப்படி செய்து விட்டாரே என்று புலம்பி தள்ளுகிறாராம் ஏ.எம்.ரத்னம்.

ராஜா
09-03-2013, 05:10 AM
ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கு : ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி சாட்சியம்

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. அதன்படி, சுதாகரன் திருமணத்துக்காக மேடை, அலங்கார வளைவுகளுக்கு டிசைன் வடிவமைத்து கொடுத்த சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, சிறப்பு கோர்ட் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்பு இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது, ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் கேட்ட கேள்விகளுக்கு தோட்டா தரணி பதில் அளித்தார். அவர் கூறுகையில், ‘‘சுதாகரன் திருமணத்துக்கு மேடை அமைக்கும்படி அதிமுக பிரமுகர் காஞ்சி பன்னீர்செல்வம் என்னை அணுகினார். மேடை, வளைவுகளுக்கு டிசைன் வடிவமைத்து கொடுத்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், எனது உதவியாளர் ரமேஷ்தான் அந்த பணிகளை செய்தார்.

சிவாஜி பேத்தி திருமணம் என்பதாலும், சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலும் கட்டணம் எதுவும் வாங்கவில்லை. சிவாஜி குடும்பத்தினரோ, ஜெயலலிதாவோ என்னை அணுகி டிசைன் வடிவமைக்கும்படி கேட்கவில்லை. வருமான வரித்துறையினர் மட்டுமே என்னிடம் விசாரித்தனர்’’ என்றார். பின்னர் தோட்டா தரணியிடம் குறுக்கு விசாரணை நடத்திய அரசு வக்கீல் பவானி சிங், ‘குற்றவாளியை காப்பாற்ற நீங்கள் பொய் சாட்சி சொல்கிறீர்கள்’ என்றார். அதற்கு தரணி, ‘பொய் சாட்சி சொல்லுவதற்கான அவசியமில்லை’ என்று கூறினார்.

ராஜா
09-03-2013, 09:37 AM
இலங்கை கொலைகள்: அமெரிக்க தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா எதிர்ப்பு!!

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளது பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

ஆனால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற வேண்டும்.. மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். கியூபா வழக்கமாக மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நாடு தான். ஆனால், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதை கியூபா எதிர்ப்பது, மாபெரும் துரோகமாகும்.

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் நட்பு நாடுகள் என்ற வகையில் இந்தத் தீர்மானத்தை அவர்கள் எதிர்ப்பது எதிர்பார்த்தது தான். ரஷ்யாவைப் பொறுத்தவரை அமெரிக்க எதிர்ப்பும் மற்றும் இந்தியாவுக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற கவலையும் தான் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும்.

ராஜா
09-03-2013, 09:41 AM
நீதிபதி சந்துரு ஓய்வு பெற்றார்.. காரை ஒப்படைத்துவிட்டு மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்!

http://tamil.oneindia.in/img/2013/03/09-justice-chandru-2-600.jpg

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கே.சந்துரு நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். உயர்நீதிமன்றம் வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்.

சொத்துப் பட்டியல் வெளியீடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கே.சந்துரு நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை நேற்று காலையில் ஒப்படைத்தார்.பின்னர் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். மாலை 3 மணியளவில் வழக்கை விசாரித்து முடித்து தலைமை நீதிபதி சேம்பருக்கு சென்று தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக கொடுத்தார். அப்போது, பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.
அப்போது, நீங்கள் என்னுடைய காரில் வரலாம். உங்கள் வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் கூறினார். அதற்கு, தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு செல்வதாகவும், இதற்காக சீசன் டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன் என்றும் சந்துரு கூறினார்.

முக்கிய தீர்ப்புகள்..

இதன்பின்னர் நீதிபதி கே.சந்துருவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற பணியாளர்களிடம் விடை பெற்ற அவர், வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் எப்போதும் அமரும் பத்திரிகையாளர்கள் அறைக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் அளித்த தீர்ப்புகளில், எல்லாமே மன திருப்தி அளித்தது. குறிப்பாக அங்கன்வாடி, சத்துணவு சமையல்காரர்கள் பணியிடத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தேன். இதை அரசும் ஏற்றுக்கொண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது. இதனால் தலித்துக்கள் சமைக்கும் சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடும்போது, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மறையும்.அதேபோல தேனி மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பெண் பூஜை செய்வதை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்து, இந்து மதத்தில் பெண் தெய்வம் இருக்கும்போது, அந்த தெய்வத்துக்கு பெண் பூஜை வைப்பதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தேன்.

மதுரை மாவட்டத்தில் பொது சுடுகாடு சம்பந்தமாக பிறப்பித்த தீர்ப்பில், சமரசம் உலாவும் இடமே என்ற பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். பிரிவு உபசார விழாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை புகழ்ந்து பேசுவார்கள். அதில் உண்மை இருக்காது. அதனால் பிரிவு உபசார விழா வேண்டாம் என்றேன்.ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன். ஒரு மூத்த வழக்கறிஞரால் எந்த அளவுக்கு சமுதாயப்பணி செய்ய முடியுமோ அதை செய்வேன் என்றார். பின்னர் தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றார்.

முன் உதாரணம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் தாம் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று கூறி பிரிவு உபாசார விழாவை மறுத்தார். நாடு விடுதலை அடைந்த பிறகு சென்னை இப்படி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முன்னுதாரண நீதிபதியாக கே. சந்துரு திகழ்கிறார்.

ராஜா
09-03-2013, 09:42 AM
ஜெனிவா தீர்மானம்: இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்காவுடன் சு.சுவாமி பேச்சுவார்த்தை

http://tamil.oneindia.in/img/2013/03/09-subramanian-swamy2-300.jpg

வாஷிங்டன்: இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஜெனிவாவில் அமெரிக்கா தமது தீர்மானத்தில் வலியுறுத்தக் கூடாது என்பதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அண்மையில் இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திடீரென அமெரிக்கா சென்ற அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினாலும் இலங்கைக்காகவே அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு தமக்கு திருப்தி அளித்ததாகத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, போர்க் குற்றம் தொடர்பாக இலங்கையே விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அமைப்புகளை விசாரணைக்கு அழைப்பது என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை மகிழ்விக்கச் செய்யும் என்று பிளேக்கிடம் கூறியதாக தெரிவித்தார்

இராஜிசங்கர்
09-03-2013, 10:20 AM
ஜெனிவா தீர்மானம்: இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்காவுடன் சு.சுவாமி பேச்சுவார்த்தை

http://tamil.oneindia.in/img/2013/03/09-subramanian-swamy2-300.jpg

அண்மையில் இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திடீரென அமெரிக்கா சென்ற அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினாலும் இலங்கைக்காகவே அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சுவாமி சார்...சுவாமி சார்..நீங்க புடுங்குறது பூராம் தேவையில்லாத ஆணி தான்!

இராஜிசங்கர்
09-03-2013, 10:26 AM
நீதிபதி சந்துரு ஓய்வு பெற்றார்.. காரை ஒப்படைத்துவிட்டு மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்!

http://tamil.oneindia.in/img/2013/03/09-justice-chandru-2-600.jpg

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கே.சந்துரு நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். உயர்நீதிமன்றம் வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்.

சொத்துப் பட்டியல் வெளியீடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கே.சந்துரு நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை நேற்று காலையில் ஒப்படைத்தார்.பின்னர் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். மாலை 3 மணியளவில் வழக்கை விசாரித்து முடித்து தலைமை நீதிபதி சேம்பருக்கு சென்று தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக கொடுத்தார். அப்போது, பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.
அப்போது, நீங்கள் என்னுடைய காரில் வரலாம். உங்கள் வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் கூறினார். அதற்கு, தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு செல்வதாகவும், இதற்காக சீசன் டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன் என்றும் சந்துரு கூறினார்.

முக்கிய தீர்ப்புகள்..

இதன்பின்னர் நீதிபதி கே.சந்துருவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற பணியாளர்களிடம் விடை பெற்ற அவர், வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் எப்போதும் அமரும் பத்திரிகையாளர்கள் அறைக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் அளித்த தீர்ப்புகளில், எல்லாமே மன திருப்தி அளித்தது. குறிப்பாக அங்கன்வாடி, சத்துணவு சமையல்காரர்கள் பணியிடத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தேன். இதை அரசும் ஏற்றுக்கொண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது. இதனால் தலித்துக்கள் சமைக்கும் சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடும்போது, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மறையும்.அதேபோல தேனி மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பெண் பூஜை செய்வதை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்து, இந்து மதத்தில் பெண் தெய்வம் இருக்கும்போது, அந்த தெய்வத்துக்கு பெண் பூஜை வைப்பதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தேன்.

மதுரை மாவட்டத்தில் பொது சுடுகாடு சம்பந்தமாக பிறப்பித்த தீர்ப்பில், சமரசம் உலாவும் இடமே என்ற பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். பிரிவு உபசார விழாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை புகழ்ந்து பேசுவார்கள். அதில் உண்மை இருக்காது. அதனால் பிரிவு உபசார விழா வேண்டாம் என்றேன்.ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன். ஒரு மூத்த வழக்கறிஞரால் எந்த அளவுக்கு சமுதாயப்பணி செய்ய முடியுமோ அதை செய்வேன் என்றார். பின்னர் தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றார்.

முன் உதாரணம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் தாம் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று கூறி பிரிவு உபாசார விழாவை மறுத்தார். நாடு விடுதலை அடைந்த பிறகு சென்னை இப்படி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முன்னுதாரண நீதிபதியாக கே. சந்துரு திகழ்கிறார்.

நல்லவர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை..

ராஜா
10-03-2013, 07:26 AM
அமெரிக்கத் தீர்மானத்தை ஓரளவு வரவேற்கிறோம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (10/03/2013)

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் வரைவை ஓரளவு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளது

ராஜா
10-03-2013, 07:27 AM
இந்திய அணு உலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு (10/03/2013)

ராஜா
10-03-2013, 07:28 AM
நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி (10/03/2013)

ராஜா
10-03-2013, 07:28 AM
ஈழத் தமிழர் பிரச்னை: மாணவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு பெருகிறது (10/03/2013)

ராஜா
10-03-2013, 07:29 AM
அமெரிக்கத் தீர்மானத்தை ஓரளவு வரவேற்கிறோம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (10/03/2013)

ராஜா
10-03-2013, 07:31 AM
வடகொரியா மீது மேலும் பல புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ராஜா
10-03-2013, 07:32 AM
செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான அறிகுறி: நாசா (09/03/2013)

ராஜா
10-03-2013, 07:33 AM
அரசியல் வழக்குகள் அதிகரிப்பால் வழக்கமான பணிகளுக்கு பாதிப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதி (10/03/2013)

ராஜா
10-03-2013, 01:19 PM
அணு உலையை மூடக்கோரி 4 இடங்களில் நாளை முற்றுகை - 4000 போலீஸ் குவிப்பு

அணு உலையை மூடக்கோரி கூடங்குளம் போராட்ட குழுவினர் நாளை 4 இடங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜா
11-03-2013, 02:46 PM
எல்லைக்கு அப்பால் 3,974 பயங்கரவாதிகள்: ஒமர் அப்துல்லா தகவல்

காஷ்மீர் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் பயங்கரவாதிகள் குறித்த உளவுத் துறையின் அறிக்கை குறித்து எம்.எல்.ஏ. சமன் லால் குப்தா கேள்வி கேட்டார்.அதற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 3,974 பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ராஜா
11-03-2013, 02:48 PM
பிரதமர் குறித்து விமர்சனம்: நரேந்திரமோடிக்கு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.பென்சன், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கை சோனியாகாந்தி குடும்பத்தின் இரவுகாவலர் என்று நரேந்திரமோடி விமர்சித்துள்ளதை கடுமையாக ஆட்சேபித்துள்ள பென்சன், நோட்டீஸ் கிடைத்த 3 நாள்களுக்குள் இந்த விமர்சனத்தை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். இதை செய்ய தவறும்பட்சத்தில் பெங்களூர் தலைமை மாநகர மேஜெஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனியார் புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை பொது இடத்தில் நரேந்திரமோடி அவமானப்படுத்தி, தரம்தாழ்த்தி, களங்கப்படுத்திவிட்டதாக பென்சன், நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜா
11-03-2013, 02:49 PM
கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் 30 தமிழர்கள் அமோக வெற்றி

கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் 30 தமிழர்கள் அமோக வெற்றிபெற்றுள்ளனர். 32 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக படுதோல்வி அடைந்தது.கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் பாஜக 6, மஜத 6, காங்கிரஸ் 5, இந்திய குடியரசு கட்சி 3, கர்நாடக ஜனதா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா ஒரு வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளன.

ராஜா
11-03-2013, 02:50 PM
சென்னை லயோலா மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் திடீர் வாபஸ்!

ஈழத் தமிழருக்காக 4-நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரியின் 8 மாணவர்களின் போராட்டம் மட்டும் திடீரென வாபஸ் பெறப்பட்டது.

போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்*கவும் வலியுறுத்தி கோயம்பேட்டில் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4- வது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்துவந்த 8 மாணவர்களை அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திரண்டிருந்த 126 பேரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் 8 மாணவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்படுகிறது. அவர்கள் வேறு எதையும் சாப்பிட மறுத்து அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். இந்த மாணவர்களை லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் இன்று சந்தித்துப் பேசினார். அவர் செய்தியாளர்களிட பேசுகையில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராடத்தைக் கைவிட்டுவிட்டு வேறுவழிகளில் போராட வேண்டும் என்றார்.

இந்த நிலையில் இன்று மாலை திடீரென அவர்களது போராட்டம் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு லயோலா கல்லூரி முதல்வர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இருப்பினும் தங்களது போராட்டம் வாபஸ் பற்றி கருத்து தெரிவித்த மாணவர்கள், தாங்கள் தொடங்கி வைத்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இதைத் தொடர்ந்து எங்களது இந்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டு அடுத்த கட்ட போராட்டங்களை பின்னர் அறிவிப்போம் என்றனர்.

ராஜா
11-03-2013, 02:51 PM
டெசோ பந்த்துக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

டெசோ அமைப்பு நாளை நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது. பிற்பகலில் தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்ச் முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரரை விசாரிக்காமல் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும் மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக அரை அணுகி முறையிடலாம். அவ்வாறு மனுதாரர் அணுகினால், அந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் நாளைய டெசோ ஸ்டிரைக்குக்கு தடை ஏதும் இல்லை.

ராஜா
11-03-2013, 02:52 PM
டெசோ பந்திற்கு ஆதரவு கிடையாது : வெள்ளையன் அறிவிப்பு

டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட உள்ள பந்திற்கு ஆதரவில்லை என, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’மத்திய அரசில், தி.மு.க., கட்சி அமைச்சர்கள் இருந்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழ்நாட்டில், போராட்டம் நடத்துவது வணிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை தேவை, இன படுகொலைக்காக ராஜபக்ஷேயை கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை தான், பேரவை வலியுறுத்துகிறது.வணிகர்கள் எடை போட தெரிந்தவர்கள். கடையடைப்பு செய்ய வேண்டும் என்று, வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்’’ என்று தெரிவித் துள்ளார்

ராஜா
11-03-2013, 02:54 PM
டெல்லி கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை

டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு தெருவோரம் வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் டெல்லி மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி உயிர் இழந்தார். இந்த வழக்கில் மைனர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் பஸ் டிரைவரான ராம் சிங் தான் முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். இந்த வழக்கில் அவரது தம்பி முகேஷும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதில் மைனர் தவிர மீதமுள்ள 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பிற கைதிகளிடமும், தங்களுக்குள்ளும் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டனர். இதையடுத்து அவர்கள் எங்கே தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறை எண் 3ல் அடைக்கப்பட்டிருந்த ராம் சிங் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தீன் தயாள் உபத்யாய மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இராஜிசங்கர்
12-03-2013, 05:27 AM
சென்னை லயோலா மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் திடீர் வாபஸ்!

ஈழத் தமிழருக்காக 4-நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரியின் 8 மாணவர்களின் போராட்டம் மட்டும் திடீரென வாபஸ் பெறப்பட்டது.

போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்*கவும் வலியுறுத்தி கோயம்பேட்டில் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4- வது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்துவந்த 8 மாணவர்களை அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திரண்டிருந்த 126 பேரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் 8 மாணவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்படுகிறது. அவர்கள் வேறு எதையும் சாப்பிட மறுத்து அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். இந்த மாணவர்களை லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் இன்று சந்தித்துப் பேசினார். அவர் செய்தியாளர்களிட பேசுகையில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராடத்தைக் கைவிட்டுவிட்டு வேறுவழிகளில் போராட வேண்டும் என்றார்.

இந்த நிலையில் இன்று மாலை திடீரென அவர்களது போராட்டம் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு லயோலா கல்லூரி முதல்வர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இருப்பினும் தங்களது போராட்டம் வாபஸ் பற்றி கருத்து தெரிவித்த மாணவர்கள், தாங்கள் தொடங்கி வைத்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இதைத் தொடர்ந்து எங்களது இந்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டு அடுத்த கட்ட போராட்டங்களை பின்னர் அறிவிப்போம் என்றனர்.

சசி பெருமாளை அட்மிட் பண்ணின அதே பெட்டில் இவங்களையும் அட்மிட் பண்ணிட்டாங்களோ?

ராஜா
15-03-2013, 05:08 AM
ஃப்ரீ ஹேரில் வந்ததால் ராஜஸ்தானில் 35 மாணவிகளின் தலைமுடியை நறுக்கிய தலைமை ஆசிரியை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி விதிகளை மீறி தலை முடியை கட்டாமல் வந்த 35 மாணவிகளின் முடியை தலைமை ஆசிரியை நறுக்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் போர்டா சுஹாதா கிராமத்தில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் 35 மாணவிகள் தலைமுடியை விரித்துபோட்டபடி வந்து நின்றனர். இது பள்ளி விதிகளுக்கு எதிரானதாகும். இதையடுத்து அந்த இடத்தில் வைத்தே அவர்களின் தலைமுடியை தலைமை ஆசிரியை அனுராதா லொஹேலா நறுக்கினார்.

தங்கள் முடியை வெட்ட வேண்டாம் என்று சில மாணவிகள் கெஞ்சினர், சிலர் அழுதனர். ஆனால் அனுராதா விடவில்லை. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியையை சந்திக்க பள்ளிக்கு வந்தனர். ஆனால் அவர் பள்ளியிலும் இல்லை, செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். உடனே கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 3 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தண்டனை பெற்ற மாணவிகளில் பெரும்பாலானோர் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.

ராஜா
15-03-2013, 05:11 AM
லாட்ஜுக்கு வந்து பொருட்களை எடுத்துக் கொண்டு பில்லையும் கட்டி விட்டு வெளியேறிய போப்பாண்டவர்!

http://tamil.oneindia.in/img/2013/03/15-pope-francis-44-300.jpg

புதிய போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ், தனது ஹோட்டல் பில் பாக்கியை கட்டுவதற்காக ரோம் நகருக்கு வந்தார். இந்த ஹோட்டலில்தான் இதுவரை அவர் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை அவர் தனது டிரைவரை அழைத்து ஹோட்டலுக்குப் போக வேண்டும் என்று கூறி காரை எடுக்கப் பணித்தார். பின்னர் அங்கு சென்ற அவர் தனது அறையில் இருந்த தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து எடுத்துக் கொண்டு கீழே வந்தார்.

பிறகு கீழே ரிசப்ஷனுக்கு வந்த அவர் அனைவரிடமும் நலம் விசாரித்தார். ஆசி வழங்கினார். பின்னர் ஹோட்டலில் இத்தனை நாட்கள் தங்கியிருந்ததற்கான வாடகைக் கட்டணம் எவ்வளவு என்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்டார்.

அதைக் கேட்டு அங்கிருந்தோர் வியப்படைந்தனர். தொகையை வலியுறுத்திக் கேட்ட அவர் பின்னர் அதை செலுத்தி விட்டே வெளியேறினார்.
அனைவருக்கும் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி விட்டுப் போனாராம் புதிய போப்.
போப்பாண்டவரின் இந்த செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

ராஜா
15-03-2013, 05:12 AM
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைகிறது, டீசல் விலை உயர்கிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசு உயர்த்தப்படுகிறது. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.11 நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டம் மாறும் வரை மாதாமாதம் டீசல் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசு உயர்த்தப்படுகிறது.

இந்த விலை குறைப்பு மற்றும் உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50ம், மார்ச் 2ம் தேதி ரூ.1.40ம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு 131 அமெரிக்க டாலரில் இருந்து 120 டாலராக குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படுகிறது. தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.74க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராஜா
15-03-2013, 05:15 AM
நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு பேச்சு

http://tamil.oneindia.in/img/2013/03/15-simbu-protest-600.jpg

இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேற்று நடிகர் சிலம்பரசன் வந்தார்.
அவர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இராஜிசங்கர்
15-03-2013, 08:58 AM
ஃப்ரீ ஹேரில் வந்ததால் ராஜஸ்தானில் 35 மாணவிகளின் தலைமுடியை நறுக்கிய தலைமை ஆசிரியை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி விதிகளை மீறி தலை முடியை கட்டாமல் வந்த 35 மாணவிகளின் முடியை தலைமை ஆசிரியை நறுக்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் போர்டா சுஹாதா கிராமத்தில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் 35 மாணவிகள் தலைமுடியை விரித்துபோட்டபடி வந்து நின்றனர். இது பள்ளி விதிகளுக்கு எதிரானதாகும். இதையடுத்து அந்த இடத்தில் வைத்தே அவர்களின் தலைமுடியை தலைமை ஆசிரியை அனுராதா லொஹேலா நறுக்கினார்.

தங்கள் முடியை வெட்ட வேண்டாம் என்று சில மாணவிகள் கெஞ்சினர், சிலர் அழுதனர். ஆனால் அனுராதா விடவில்லை. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியையை சந்திக்க பள்ளிக்கு வந்தனர். ஆனால் அவர் பள்ளியிலும் இல்லை, செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். உடனே கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 3 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தண்டனை பெற்ற மாணவிகளில் பெரும்பாலானோர் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.

ஆசிரியர் உலகத்தின் 'முடி'சூடா மன்னி இந்த டீச்சர் தான்

இராஜிசங்கர்
15-03-2013, 09:00 AM
நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு பேச்சு

http://tamil.oneindia.in/img/2013/03/15-simbu-protest-600.jpg

இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேற்று நடிகர் சிலம்பரசன் வந்தார்.
அவர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சிம்பு: நானும் ரவுடி...நானும் ரவுடி..என்னையும் ஜீப்ல ஏத்திக்கோங்க

ராஜா
15-03-2013, 09:44 AM
சிம்புவ வச்சு காமெடி கீமெடி பண்ணலியே..?

:)

ராஜா
15-03-2013, 05:10 PM
மதிகெட்டவர் தலையில் 'முடியாக' இல்லாமல் உதிர்வதே நல்லதுதான்: பிரேமலதாவுக்கு மைக்கேல் ராயப்பன் சூடு

http://tamil.oneindia.in/img/2013/03/15-michael-rayappan-300.jpg

மதிகெட்டவர் தலையில் முடியாக இல்லாமல் உதிர்ந்து போவது நல்லதுதான் என்று தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.
தேமுதிக எம்.எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் தேமுதிகவில் ஜெயலலிதா சார்பு அணி உருவானது. இந்த அணிக்காக சட்டசபையில் தனி இருக்கையும் போடப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் தேமுதிகவின் விஜயகாந்த் அணிக்கும் ஜெயலலிதா அணிக்கும் சட்டசபையில் ஜெயலலிதா முன்னிலையே பெரும் தகராறு நடந்து வன்முறையில் முடிந்தது. பின்னர் இந்த ஜோதியில் செங்கம் தொகுதி தேமுதிக எம்.ல்.ஏவும் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதைத் தொடர்ந்து இன்னமும் எத்தனை எம்.எல்.ஏக்கள் தேமுகதிவை விட்டு ஓடுவார்களோ என்ற நிலைமை இருந்தது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் மனைவி பிரேமலதா மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, அணி மாறிய எம்.எல்.ஏக்களை உதிர்ந்த ரோமங்கள் என்று பிரேமலதா வர்ணித்தார்.

இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் மீது பிரேமலதா, உதிர்ந்த ரோமங்கள் என்று பண்பாடற்ற வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார். மதிகெட்டவர் தலையில் முடியாக இருப்பதை விட உதிர்ந்து போவதை உயர்வாக கருதுகிறோம். நன்றி உணர்ச்சியில்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்துகிற பிரேமலதாவை பார்த்து நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் ஒரு சீட்டு கட்சியான தே.மு.தி.க.வை 29 உறுப்பினர்கள் உள்ள கட்சியாக்கி, எதிர்க் கட்சித் தலைவர் இருக்கையையும் யாசகம் தந்தது ஜெயலலிதா.

மதுவுக்கு எதிராக போராட்டம் ஒரு நகைச்சுவை

அதற்காக ஊரெல்லாம் உழைத்து தமிழக மக்களிடம் உத்தரவாதம் கொடுத்து ஓட்டு வாங்கி தந்தது அ.தி. மு.க. தொண்டர்களின் அயராத உழைப்பு. சட்ட மன்றத்தில் அதிலும் மாபெரும் தலைவர்கள் எல்லாம் அமர்ந்து அலங்கரித்த எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் இருந்து கொண்டு நாக்கை துறுத்தி நன்றி மறந்ததும், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்ததும் அவர்கள் தானே தவிர நாங்களல்ல. நாங்கள் எங்களுக்கு இப்பதவி கிடைப்பதற்கு யார் காரணமானவர்களோ அவர்களுக்கும், அவர்களின் உத்தரவாதத்தை ஏற்று வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி உடையவர்களாகவே இருக்கிறோம். தாய்ப்பாலை விற்பதற்கு சமம் கற்பை விற்பதற்கு சமம் என்றெல்லாம் பிரேமலதா பேசியிருக்கிறார். கூடவே மதுவுக்கு எதிராக போராட்டமும் நடத்தி இருக்கிறார். இவர் குடிக்கு எதிராக போராட்டம் நடத்துவது நகைச்சுவையின் உச்ச கட்டம்.

தாய்பாலை விற்பது யார்?

தன் கட்சித் தொண்டர்களையும், வேட்பாளர்களையும் தாறுமாறாக அடித்தார் என்பதை தமிழ்நாடே அறியும். தாய் பாலை விற்பதற்கு சமமென்று எங்கள் மீது பாய்ந்திருக்கிற திருமதி பிரேமலதா ஒன்றை தெளிவாக்க வேண்டும், இன்றைக்கு கணவர் கட்சிக்கு தலைவர், மனைவி மகளிர் அணிக்கு தலைவி, மச்சான் இளைஞர் அணிக்கு செயலாளர். இப்படி தே.மு.தி.க. கட்சியை குடும்ப கட்சியாக மாற்றிவிட்ட இவர்கள் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்த 2006 சட்ட மன்ற தேர்தல் வேட்பாளர்களின் இன்றைய நிலை என்ன? சொத்து சுகங்களை விற்று வீடு வாசலை அடகு வைத்து போட்டியிட்ட வேட்பாளர்களில் எத்தனையோ பேர் இன்று கடனாளியாக தத்தளித்து வாழ்க்கையை தொலைத்து கொண்டு அலைகின்றனர் என்பதை இவர்கள் அறிவார்களா?

விலை பட்டியல் போட்டு வைத்து கொண்டு வியாபாரம் செய்தது என்பது எதை விற்றதுக்கு சமம்? கிளை செயலாளர் பதவி முதற் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வரை விலைபேசி வியாபாரம் செய்தது யார்? பதவிகளுக்கு பணம் வசூலிப்பதற்கு தானே பார்த்தசாரதிகளும் சந்திரகுமாரர்களும். வியாபாரம் தான் குறிக்கோள் என்பதை குறிப்பாக உணர்த்த தானே கட்சி அலுவலகத்தை கோயம்பேட்டில் வைத்திருக்கிறீர்கள். நம்பி வருபவரின் உதிரத்தை உறிஞ்சிக் கொண்டு அவனை கடனாளியாக்கி நடுத்தெருவில் விட்டு விடுவது தானே உங்கள் வழக்கம்..?

ராவுத்தர் இப்ராஹிமை மறந்தது யாரு?

அடுத்து புதிதாக சிக்குபவனையும் முடிந்த வரை உறிஞ்சுவது தானே உங்களின் பாணி. உதாரணத்திற்கு எனது தொகுதியை எடுத்து கொள்ளுங்கள், தே.மு.தி. க.வின் முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரிடம் இப்போது பசை இல்லையென்று தானே என்னிடம் பெறுவதை பெற்றுக் கொண்டு சீட்டு தந்தீர்கள். இது எனக்கு மட்டுமல்ல அத்தனை பேர்களிடமும் ஆதாயம் பெற்று கொண்டு தானே சீட்டு தந்தீர்கள். இது யாருடைய தாய்ப்பாலை விற்பதற்கு சமம் அல்லது கற்பை விற்பதற்கு சமம்? நன்றியை பத்தி பேசுகின்ற நீங்கள் ராவுத்தர் இப்ராஹிமை மறந்து விட்டீர்களா?

2 தூணுக்காக ஒரு கட்சி?

ஒவ்வொரு அரசியல் இயக்கத்தின் தோற்றத்திற்கும் ஒரு பிரத்தியேக கொள்கை பின்னணி உண்டு. ஆனால் தனது கல்யாண மண்டபத்தின் இரண்டு தூண்களுக்காக கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந் தான். முன்பெல்லாம் தே.மு.தி. க.வில் இவர் இணைந்தார். அவர் இணைந்தார் என்று பத்திரிகைகளில் வரும். ஆனால் இன்றோ அந்த கட்சியிலிருந்து அனுதினமும் விலகுபவர்களின் எண்ணிக்கை தான் வெகுவாக இருக்கிறது. விரைவில் விஜயகாந்தின் குடும்பத்தினர்கள் தவிர ஒருவரும் கட்சியில் இருக்கமாட்டார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் மக்களின் விரோத இயக்கம் என்று போகிற இடங்களிலெல்லாம் புலம்புகிறார்கள். மக்களோடு தெய்வத்தோடும் மட்டும் தான் கூட்டணி என்று பிரகடனம் செய்து கொண்டே, கூட்டணிக்கு அலைவதே இவர்களின் பிழைப்பு. மக்களை குழப்புவதையே தொழிலாக கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இராஜிசங்கர்
15-03-2013, 06:00 PM
மதிகெட்டவர் தலையில் 'முடியாக' இல்லாமல் உதிர்வதே நல்லதுதான்: பிரேமலதாவுக்கு மைக்கேல் ராயப்பன் சூடு

அடாடாடா...என்னமா வார்த்தையிலயே வெளயாடுறாரு அண்ணன். இப்டிப் பதில் சொல்றதுல காட்டுற திறமையை தொகுதி மேம்பாட்டில் காட்டியிருந்தால் நாமெல்லாம் எங்கேயோ இருந்திருப்போம். கவுண்டர் சொல்ற மாதிரி 'இப்டி அழகப்பன் சைக்கிளுக்கா பெண்ட் எடுத்துட்டு' இருப்போம்??

ராஜா
15-03-2013, 06:13 PM
:lachen001::lachen001::lachen001:

ராஜா
16-03-2013, 04:34 AM
யு.எஸ். தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் அமைச்சரவையில் நீடிப்பது அர்த்தமற்றது: கருணாநிதி

சென்னை: ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பது அர்த்தமற்றது என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜா
16-03-2013, 04:50 AM
டாக்டர். அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் ஆவார்: குரு எம்.எல்.ஏ. பேட்டி

திண்டுக்கல்லில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜெ.குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

மாமல்லபுரத்தில் கோடி வன்னியர்கள் கூடும் மாநாடு ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். இதில் 10 தொகுதிகளில் வெற்றிபெறும். பாராளுமன்ற, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவில் பா.ம.க. ஆளும்கட்சியாக இருக்கும்.

டாக்டர். அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் ஆவார். வன்கொடுமை சட்டம், நாடக காதல் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். அனைத்து சமுதாய தலைவர்களும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1989-ல் இருந்தே பா.ம.க. மதுஒழிப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. அப்போது கேலி, கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இப்போது, தேர்தலில் பெண்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக மதுஒழிப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இவ்வாறு கூறினார்.

ராஜா
16-03-2013, 05:45 AM
தஞ்சையில் இலங்கை புத்த பிட்சுகள் மீது தாக்குதல்

இலங்கையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த புத்த பிட்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்த புத்த பிட்சுகள் மீது, அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். புத்த புட்சுகள் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

ராஜா
16-03-2013, 05:47 AM
அடிவாங்குனவய்ங்க அங்க போய் என்ன வில்லங்கம் பண்ணப்போறாய்ங்களோ..!

M.Jagadeesan
16-03-2013, 07:44 AM
தஞ்சையில் இலங்கை புத்த பிட்சுகள் மீது தாக்குதல்

இலங்கையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த புத்த பிட்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்த புத்த பிட்சுகள் மீது, அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். புத்த புட்சுகள் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

புத்த பிட்சுகளை ஓட ஓட விரட்டி என்ன பயன் ? ராஜபக்சே இந்தியா வந்தபோது அவரை ஓட ஓட விரட்ட முடியவில்லையே !

ராஜா
16-03-2013, 08:17 AM
இவிங்கள வெரட்டினா ஈழம் கெடைச்சுரும்ன்னுல்ல நெனச்சோம்..

:lachen001:

இராஜிசங்கர்
16-03-2013, 08:19 AM
டாக்டர். அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் ஆவார்: குரு எம்.எல்.ஏ. பேட்டி

திண்டுக்கல்லில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜெ.குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

மாமல்லபுரத்தில் கோடி வன்னியர்கள் கூடும் மாநாடு ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். இதில் 10 தொகுதிகளில் வெற்றிபெறும். பாராளுமன்ற, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவில் பா.ம.க. ஆளும்கட்சியாக இருக்கும்.

டாக்டர். அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் ஆவார். வன்கொடுமை சட்டம், நாடக காதல் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். அனைத்து சமுதாய தலைவர்களும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1989-ல் இருந்தே பா.ம.க. மதுஒழிப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. அப்போது கேலி, கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இப்போது, தேர்தலில் பெண்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக மதுஒழிப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இவ்வாறு கூறினார்.

எல்லாரும் வானத்தைப் பாருங்க.........வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குது..

இராஜிசங்கர்
16-03-2013, 08:20 AM
புத்த பிட்சுகளை ஓட ஓட விரட்டி என்ன பயன் ? ராஜபக்சே இந்தியா வந்தபோது அவரை ஓட ஓட விரட்ட முடியவில்லையே !

அதச் சொல்லுங்க ஜெகதீசன் சார்.. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி கதை தான்!

ராஜா
16-03-2013, 03:30 PM
வைரமுத்து தந்தை மறைவு: கருணாநிதி - ரஜினிகாந்த் ஆறுதல்

ராஜா
16-03-2013, 03:31 PM
ஆளுநர் ரோசய்யா மனைவி மருத்துவமனையில் அனுமதி

ராஜா
16-03-2013, 03:32 PM
4ஆவது நாளாக உண்ணாவிரதமிருந்த மதுரை சட்டக் கல்லூரி மாணவர் 3 பேருக்கு சிகிச்சை

ராஜா
16-03-2013, 03:33 PM
கேரளாவில் உள்ள இத்தாலியர்கள் பாதுகாப்பாக இருக்கவும்: அந்நாடு எச்சரிக்கை

ராஜா
16-03-2013, 03:34 PM
இந்திய அளவிலான விருதுக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கம் தேர்வு

ராஜா
16-03-2013, 03:34 PM
பீடி தராததால் சிறுவன் கல்லால் அடித்துக் கொலை: 2 சிறார்கள் கைது

ராஜா
16-03-2013, 03:35 PM
உதவி ஆட்சியர் பேச்சு : அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்

ராஜா
16-03-2013, 03:37 PM
2ஜி: கனிமொழிக்கு சாதகமாக கலைஞர் டி.வி. நிர்வாகி சாட்சியம்

ராஜா
16-03-2013, 03:37 PM
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது.

ராஜா
16-03-2013, 03:39 PM
சி.ஆர்.பி.எப். வீரர் சடலத்தை பாதுகாக்க தனியார் மருத்துவமனை மறுப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரரின் சடலத்தை பாதுகாக்க தனியார் மருத்துவமனை மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரர் என்.சதீஷின் சடலம் அவரது சொந்த ஊரான மாண்டியாவுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தின் போது சதீஷின் படத்துக்கு பதிலாக அவரது சகோதரரின் படம் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக்கூறி சதீஷின் உறவினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் பின்னர் இறந்தவரின் படம் வைக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து மாண்டியாவுக்கு கொண்டு வரப்பட்ட சதீஷின் சடலத்தை 3 மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க தனியார் மருத்துவமனை மறுத்தது இறுதிச்சடங்குக்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அம்மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமதாஸ் கூறியுள்ளார். பின்னர் ஆயிரக்கணக்கானோர் சதீஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ராஜா
17-03-2013, 11:40 AM
ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வாழ்த்து: மனித உரிமை ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையை இந்தியா வாழ்த்தி பேசியுள்ளது மனித உரிமை ஆர்வலர்களையும், உலக தமிழர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இலங்கை அரசு செய்த இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும், போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், தனித் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் உலகளாவிய காலமுறை அறிக்கை (யு.பி.ஆர்) குறித்து இந்தியா இலங்கை அரசைப் பாராட்டியும், வாழ்த்தியும் பேசியுள்ளது.

இந்தியாவின் இந்த செயல் உலகத் தமிழர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜா
17-03-2013, 11:41 AM
பெண்களிடம் ஆபாசமாக பேசிய பாதிரி கைது

கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாக பணியாற்றி வருபவர் ஜான் மார்க்(63). இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து, கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரி ஜான்மார்க் வற்புறுத்துகிறார் என்றும்,

பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார் என்றும்,மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார் என்றும் புகார் மனு அளித்தனர்.அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரி ஜான் மார்க்கை கைது செய்தார்.

ராஜா
17-03-2013, 11:42 AM
பாலுறவு வயதைக் குறைப்பது பிற்போக்குத் தனமானது: ராமதாஸ் தாக்கு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெண்கள் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதை தற்போதுள்ள 18-லிருந்து 16க குறைப்பது என்று மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் ஒரு காலத்தில் 10க இருந்த பாலுறவு சம்மத வயது பல்வேறு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் படிப்படியாக 18க உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பாலுறவு சம்மத வயதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலைநாடுகளில் பாலுறவு சம்மத வயது திருமண வயதை விட குறைவாக இருப்பது சாதாரணமான ஒன்றாகும். அது அவர்களின் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.ஆனால், இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18க நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலுறவு சம்மத வயதை அதைவிட குறைவாக நிர்ணயிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அது நமது கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத ஒன்றாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்புகளைக் கண்டு வியந்து, அதை பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில், மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மயங்கி, பாலுறவு வயதைக் குறைப்பது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமானதாகும்.

எனவே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவில் பாலுறவு சம்மத வயது தொடர்பான பிரிவை நீக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அறிவுரையை ஆய்வு செய்து பெண்களின் திருமண வயதை 21க உயர்த்துவதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ராஜா
17-03-2013, 11:43 AM
இலங்கை விவகாரம்: மத்திய அரசு , காங். கூட்டணியில் திமுக நீடிக்காது என்பது உறுதி: கருணாநிதி

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டி வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை அமெரிக்காவின் தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும், இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும். குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார்.

மேலும் எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று கூறிய அவர், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றார்.

ராஜா
17-03-2013, 11:44 AM
மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது

சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்துவந்த சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தனி தமிழீழம் அமையும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் போலீசார் கைதுசெய்தனர்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திரண்டு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்து மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் சமூகநல கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராஜா
17-03-2013, 11:45 AM
கூல்டிரிங்கில் மயக்க மருந்து கொடுத்து கார் டிரைவர் என் மகளை கடத்திவிட்டான்: நடிகை கவிதா

http://tamil.oneindia.in/img/2013/03/17-kavitha-33-300.jpg

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கார் டிரைவர் ராஜ்குமார் தனது மகள் மாதுரியை கடத்திவிட்டதாக நடிகை கவிதா தெரிவித்துள்ளார்.

பிஸ்தா, அவள் வருவாளா, சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளவர் கவிதா. அவர் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் மாதுரி(21) எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சங்கரப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரை ஹைதராபாத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த திருமணம் குறித்து கவிதா கூறுகையில்,

என் மகளுக்கும், கார் டிரைவர் ராஜ்குமாருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை. கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது. ராஜ்குமார் என்னுடைய கார் டிரைவர் கிடையாது. நாங்கல் செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியருப்பு ஒன்றில் 3வது மாடியில் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள அலுவலகம் ஒன்றில் ராஜ்குமார் கார் டிரைவராக இருந்தான். அப்படி தான் எங்களுக்கு அறிமுகம் ஆனான். கார் பார்க்கிங்கில் ஒரு ஹலோ சொல்வதோடு சரி. அவனுக்கும் எங்களுக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது. அவனை என் மகள் காதலிக்கவும் இல்லை.

சம்பவம் நடந்த அன்று என் மகள் அருகில் உள்ள கடைக்கு சென்றாள். அப்போது ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து என் மகளுக்கு கொடுத்துள்ளான். அதை குடித்த என் மகள் மயங்கிவிடவே அவளை ராஜ்குமார் ஆட்டோவில் கடத்திவிட்டான். கோவிலில் வைத்து அவன் என் மகள் கழுத்தில் மாலை போட்டபோது போலீசார் அவனைப் பிடித்துவிட்டனர். கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து என் கணவர் தசரதராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ராஜ்குமாரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். போலீசார் அவனிடம் இருந்து எங்கள் மகளை மீட்டு எங்ளிடம் ஒப்படைத்துவிட்டனர். ராஜ்குமார் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்தவன் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவன் பெண்களை கடத்தி விற்பவன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனிடம் குஜராத் செல்லும் ரயில் டிக்கெட்டுகள் இருந்துள்ளன என்றார்.

M.Jagadeesan
17-03-2013, 12:27 PM
இலங்கை விவகாரம்: மத்திய அரசு , காங். கூட்டணியில் திமுக நீடிக்காது என்பது உறுதி: கருணாநிதி

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டி வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை அமெரிக்காவின் தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும், இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும். குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார்.

மேலும் எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று கூறிய அவர், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றார்.

தமிழருக்கு எதிராக நடந்த இறுதிப்போரின் போதே இந்த முடிவை எடுத்திருந்தால் , தி.மு.க. தேர்தலில் தோற்று இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

இராஜிசங்கர்
17-03-2013, 01:54 PM
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..மத்திய அரசுக்கு கடிதம் எழுதுறோம்..கடிதம் எழுதுறோம்ன்னு சொல்றாங்களே?அத இங்கிலீஷ் ல எழுதுனேங்களா?(வட போச்சே கதை ஆயிறாம)

ராஜா
17-03-2013, 02:09 PM
தமிழருக்கு எதிராக நடந்த இறுதிப்போரின் போதே இந்த முடிவை எடுத்திருந்தால் , தி.மு.க. தேர்தலில் தோற்று இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

அப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அப்படி ஒன்றும் தோல்வியை திமுக சந்திக்கவில்லையே..?

இராஜிசங்கர்
18-03-2013, 04:37 AM
அப்போது தி.மு.க தோற்க முக்கியக் காரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயம் தான் என்பது என் அபிப்ராயம்!

ராஜா
18-03-2013, 07:56 AM
யாழில் வெள்ளை தேள்: இந்திய அமைதிப் படை 'உயிரி ஆயுதமாக' கொண்டு சென்றதாக புது சர்ச்சை

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.

ராஜா
18-03-2013, 07:58 AM
சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.

"அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது

ராஜா
18-03-2013, 08:08 AM
எஸ்.எம்.எஸ் பரிசு மோசடி: 8 கோடிக்கு ஆசைப்பட்டு 4 லட்சம் இழந்த வாலிபர்

சுரண்டை அருகே உள்ள ராமனூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேதிகா டேனியல். இவரது மகன் தேவசகாய செல்வம். இவர் பிளஸ்டூ முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. பரிசு விழுந்திருப்பதாக அந்த எஸ்.எம்.எஸ் தெரிவிக்கவே அந்த நம்பருக்கு ,தேவசகாயம் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண் இங்கிலாந்தில் உள்ள பிரபல கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், வருடம் தோறும் ஒரு நபரை தேர்வு செய்து பரிசு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு உங்களுக்கு ரூ.8 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும், நீங்கள் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் உங்களுக்கு ரூ.8 கோடிய 35 லட்சம் வழங்குவதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.

இதை நம்பிய தேவசகாயம் முதலில் சுங்கம் மற்றும் கலால் டெல்லி அலுவலகம் மூலம் ரூ.25 ஆயிரம் அனுப்பினார். பின்னர் பல தவணையாக ரூ.4 லட்சத்து 31 ஆயிரம் அனுப்பினார். ஆனால் தேவசகாயத்திற்கு 8 கோடி ரூபாய் வந்தபாடில்லை. இதுகுறித்து தேவசகாயம் அந்த பெண்ணிடம் கேட்டபோது பணம் கொடுக்கும் ஏஜென்ட் வருவதற்கு விமான கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவசகாயம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தேவசகாயத்தின் தாய் கூறும்போது ரூ.8 கோடி கிடைக்கும் என்ற ஆசையில் கடன் வாங்கி ரூ.4 லட்சம் கட்டினோம். இதற்காக வீட்டை அடமானம் வைத்துள்ளோம். கடனை எப்படி திரும்ப போகிறோமோ தெரியவில்லை என்று கண்ணீர் விட்டார்.

ராஜா
18-03-2013, 08:44 AM
தடையை மீறி மீன்பிடித்த குமரி மீனவர்கள் தூத்துக்குடியில் சிறைப்பிடிப்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை உள்ளது. இந்தத் தடையை மீறி, 4 விசைப்படகுகளில் 47 பேர் மீன்பிடித்துள்ளனர். அவர்களைச் சிறைப்பிடித்து அழைத்து வந்த தூத்துக்குடி மீனவர்கள், அவர்களை தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.

ராஜா
18-03-2013, 08:47 AM
தொண்டி வந்தார் ஆஸ்திரேலிய பெண்: சிறிய படகில் உலகைச் சுற்றுகிறார்

http://media.dinamani.com/article1505538.ece/ALTERNATES/w460/tvdastra.jpg

கின்னஸ் சாதனை படைப்பதற்காக சிறிய படகில் உலகத்தைச் சுற்றும் ஆஸ்திரேலியப் பெண் தொண்டி வந்தடைந்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் சேண்டி (35). இவர் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில், 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து சிறிய படகில் கடல் வழியாக உலகத்தைச் சுற்றி வருகிறார். பல்வேறு நாடுகளுக்குச் சென்ற சேண்டி சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டிக்கு வந்தார். இதுவரை 7 ஆயிரம் கடல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 2016-ல் மீண்டும் ஜெர்மனி திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் தனது சிறிய படகில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

ராஜா
18-03-2013, 08:48 AM
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: "இந்தியா தயங்குவதற்கு காஷ்மீர் பிரச்னையே காரணம்'

காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவருவதற்குக் காரணமாக அமைந்துவிடுமோ என்கிற அச்சமே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா தயக்கம் காட்டுவதற்கு காரணம் என அந்நாட்டு அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஆனால் இந்த ஆண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதை ஆதரிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் மனித உரிமை மீறப்படுவதாக அங்குள்ள பிரிவினைவாதிகள் தீர்மானம் கொண்டுவந்து விடுவார்களோ என்ற அச்சமே இதற்குக் காரணம் என இலங்கையிலிருந்து வெளிவரும் நாளிதழில் அரசியல் விமர்சகர் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.

ராஜா
18-03-2013, 09:05 AM
சென்னை சென்ட்ரல் ; புத்த பிக்கு தாக்கப்படும் காட்சி..

http://www.youtube.com/watch?v=S_RLo9HjDB8&feature=player_embedded

இராஜிசங்கர்
18-03-2013, 12:08 PM
யாழில் வெள்ளை தேள்: இந்திய அமைதிப் படை 'உயிரி ஆயுதமாக' கொண்டு சென்றதாக புது சர்ச்சை

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.

அமைதிப் படையா? சமாதிப் படையா? என்று குழப்பமாக இருக்கிறது.

இராஜிசங்கர்
18-03-2013, 12:43 PM
தொண்டி வந்தார் ஆஸ்திரேலிய பெண்: சிறிய படகில் உலகைச் சுற்றுகிறார்

http://media.dinamani.com/article1505538.ece/ALTERNATES/w460/tvdastra.jpg

கின்னஸ் சாதனை படைப்பதற்காக சிறிய படகில் உலகத்தைச் சுற்றும் ஆஸ்திரேலியப் பெண் தொண்டி வந்தடைந்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் சேண்டி (35). இவர் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில், 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து சிறிய படகில் கடல் வழியாக உலகத்தைச் சுற்றி வருகிறார். பல்வேறு நாடுகளுக்குச் சென்ற சேண்டி சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டிக்கு வந்தார். இதுவரை 7 ஆயிரம் கடல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 2016-ல் மீண்டும் ஜெர்மனி திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் தனது சிறிய படகில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

தொண்டி வந்த சேண்டி..நீ சாதிக்க வேண்டும் தடைகளைத் தாண்டி.(அடடே ஆச்சர்யக்குறி)

இராஜிசங்கர்
18-03-2013, 12:45 PM
எஸ்.எம்.எஸ் பரிசு மோசடி: 8 கோடிக்கு ஆசைப்பட்டு 4 லட்சம் இழந்த வாலிபர்

சுரண்டை அருகே உள்ள ராமனூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேதிகா டேனியல். இவரது மகன் தேவசகாய செல்வம். இவர் பிளஸ்டூ முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. பரிசு விழுந்திருப்பதாக அந்த எஸ்.எம்.எஸ் தெரிவிக்கவே அந்த நம்பருக்கு ,தேவசகாயம் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண் இங்கிலாந்தில் உள்ள பிரபல கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், வருடம் தோறும் ஒரு நபரை தேர்வு செய்து பரிசு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு உங்களுக்கு ரூ.8 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும், நீங்கள் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் உங்களுக்கு ரூ.8 கோடிய 35 லட்சம் வழங்குவதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.

இதை நம்பிய தேவசகாயம் முதலில் சுங்கம் மற்றும் கலால் டெல்லி அலுவலகம் மூலம் ரூ.25 ஆயிரம் அனுப்பினார். பின்னர் பல தவணையாக ரூ.4 லட்சத்து 31 ஆயிரம் அனுப்பினார். ஆனால் தேவசகாயத்திற்கு 8 கோடி ரூபாய் வந்தபாடில்லை. இதுகுறித்து தேவசகாயம் அந்த பெண்ணிடம் கேட்டபோது பணம் கொடுக்கும் ஏஜென்ட் வருவதற்கு விமான கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவசகாயம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தேவசகாயத்தின் தாய் கூறும்போது ரூ.8 கோடி கிடைக்கும் என்ற ஆசையில் கடன் வாங்கி ரூ.4 லட்சம் கட்டினோம். இதற்காக வீட்டை அடமானம் வைத்துள்ளோம். கடனை எப்படி திரும்ப போகிறோமோ தெரியவில்லை என்று கண்ணீர் விட்டார்.

இங்கிலீஸ் ல பேசி கவுத்திப்புடா மச்சான்!

இராஜிசங்கர்
18-03-2013, 12:51 PM
சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.

"அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது

யாரோ செய்த தவறுக்கு யாரையோ அடிப்பது என்ன நியாயம்? விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையின் போது சிங்கள ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதுக்கும், இன்று நாம் பிட்சுக்களை வதைப்பதற்கும் அப்படி என்ன பெரிய வித்யாசம்- செயலளவில்? நீதி நியாமென்றால் நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் ஒன்று தான்!

ராஜா
18-03-2013, 06:09 PM
வழிமொழிகிறேன் ராஜி..!

ராஜா
19-03-2013, 04:13 AM
கோவாவில் இருந்து மும்பை சென்ற பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: 37 பேர் பலி

ராஜா
19-03-2013, 04:23 AM
2ஜி ஊழலில் திருப்பம்: ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் தான் ஒப்புதல் அளித்தார்-புதிய ஆதாரங்கள்!!

திமுகவைச் சேர்ந்த ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழியும் கைதானார். மேலும் தயாநிதி மாறனும் பதவி விலக நேர்ந்தது. பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை (first-come-first-served policy) அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத் ராய் குண்டைப் போட்டார். ஆனால், இந்தக் கணக்கு தவறானது, இந்த விவகாரத்தில் ரூ. 2,500 கோடி வரையே நஷ்டம் ஏற்பட்டது என்றும், இந்த விஷயத்தில் வினோத் ராய் மனதுக்குத் தோன்றியதை நஷ்டமாகச் சொல்விட்டார் என்று அதே கணக்கு தணிக்கை அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி வினோத் ராய் மீதே குற்றம் சாட்டியதும் நடந்தது.

மேலும் நஷ்டத்தை முடிந்த அளவுக்கு உயர்த்திக் காட்டச் செய்ததில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மறைமுக உள்ளடி வேலைகளும் வெளியில் தெரிய வந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ராசா தான் எல்லா முடிவுகளையும் எடுத்தார், பிரதமர் சொல்லியும் கேட்கவில்லை, இதில் சில விஷயங்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கே தெரியாது என்று மத்திய அரசும் சிபிஐயும் நீதிமன்றத்தில் கூறி வருகின்றன. இதேரீதியில் தான் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரான வாகனாவதியும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) வாக்குமூலம் தந்துள்ளார்.

அதாவது ராசா மட்டுமே இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்று அவர் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டது மத்திய அரசு.

இதையடுத்து என்னையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று ராசா விடுத்த கோரிக்கையை அந்தக் குழுவின் தலைவரான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான பி.சி.சாக்கோ மறுத்து வருகிறார். எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் போதும் என்று சாக்கோ கூறுவதை ராசா ஏற்க மறுத்துவிட்டார். ராசா நேரில் வந்து நின்று, குழுவில் உள்ள எதிர்க் கட்சி எம்பிக்களும் திமுக எம்பிக்களும் கேள்விகளை வைக்க, இந்த விவகாரத்தில் பிரதமருக்கு இதெல்லாம் தெரியும் என்று ராசா பதில் தந்துவிட்டால் நிலைமை சிக்கலாகுமே என்ற பயம் மத்திய அரசிடம் உள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில், 2ஜி விவகாரத்தில் முறைகேடு நடப்பதற்கு முன் ராசாவின் சில தவறான முடிவுகளுக்கு பிரதமரும் பிரதமர் அலுவலகமும் அனுமதி தந்துள்ள விவரம் இப்போது வெளியாகி வருகிறது. இது தொடர்பாக இந்து நாளிதழ் பரபரப்பான விவரங்களை, பிரதமர் அலுவலக பைல்களின் காப்பிகளையே ஆதாரமாக வைத்து வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக ராசா எழுதிய கடிதத்தை பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் மற்றும் செயலாளர் புலோக் சட்டர்ஜி ஆகியோர் டிசம்பர் 29, 2009 அன்று ஆய்வு செய்து, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய ராசா எடுத்த முடிவுக்கு பிரதமரின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் ராசாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து இருப்பது தெரிய வருகிறது.
இந்த புதிய ஆவணங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.தங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டு இந்து நாளிதழ் அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதிலும் வரவில்லையாம்.

இந்த புதிய ஆவணங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பிரதமருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஆனால், எனக்கு எதுவும் தெரியாது, எல்லாமே ராசா எடுத்த முடிவு தான் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே எஸ்கேப் ஆனது மாதிரி, இப்போதும் கூட இது எனது அலுவலக அதிகாரிகள் எடுத்த முடிவு, இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவாரோ என்னவோ...

இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் பைல்களின் (PMO File No 180/31/C/26/OS.ESI, Vol. IV) நகல்கள் இந்து நாளிதழுக்குக் கிடைத்துள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னிரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்கப் போகிறேன் என்று சொல்லி அனுமதி கேட்டு 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ராசா அனுப்பிய கடிதத்தைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங், இது குறித்து அவசரமாக பரிசீலிக்குமாறு 27ம் தேதி தனது அலுவலகத்தின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் மற்றும் செயலாளர் புலோக் சட்டர்ஜி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ராசாவின் கடிதத்தைப் படித்த இரு அதிகாரிகளும் ராசாவின் 4 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதோடு, இது தொடர்பாக பிரதமருக்கு சில யோசனைகளையும் முன் வைத்துள்ளனர். மேலும் ராசாவின் முடிவுகள் குறித்து புலோக் சாட்டர்ஜியும் தொலைத் தொடர்புத்துறையின் புதிய செயலாளராக பதவியேற்ற சித்தார்த் பெகுராவும் (இவரும் 2ஜி வழக்கில் கைதானார்) ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஒரு விரிவான விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டதன் பேரில், அப்போது ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கான அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்த வெளியுறவு அமைச்சர் (இப்போதைய ஜனாதிபதி) பிரணாப் முகர்ஜி ஒரு விளக்கத்தை "Top Secret" என்ற நோட்டுடன் பிரதமர் அலுவலகத்திடம் தந்துள்ளார். இந்த விளக்கம் பிரதமரிடம் தரப்பட்டதும் டிசம்பர் 26ம் தேதி தான். இந்த விளக்கம் அடங்கிய பைலுடன் ராசாவின் 6 பக்க கடிதமும் பிரதமர் அலுவலகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஆய்வு செய்த புலோக் சாட்டர்ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்பது தொடர்பாக தனது பரிந்துரைகள் அடங்கிய comparative chart-ஐ உருவாக்கி அதை டி.கே.ஏ. நாயருக்கு டிசம்பர் 31ம் தேதி அனுப்பியுள்ளார். இந்த 4 பக்க சார்ட், புதிய 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் விற்பனை தொடர்பானது. இதில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத் தான் ராசா பின்னர் அமலாக்கியுள்ளார். ஆனால், இதைத் தான் ராசா (மட்டும்) செய்த ஊழல் என்று 2011ம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்ய குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தைத் தான் சிபிஐ குற்றமாக பதிவு செய்துள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கையில் அடிப்படையில் தான் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையையே ராசா திருத்தியுள்ளார். விண்ணப்பம் செய்ததை அடிப்படையாக வைத்து முதலில் வந்தவர்கள் என்பதைத் தீ்ர்மானிப்பதற்கு பதிலாக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை ராசா சேர்த்துள்ளார். இதையும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திருத்தம் தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜா
19-03-2013, 04:24 AM
இன்னொரு அறிவாளி.. ஈழப்போர் தியாகி..?

மதுரையில் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கோரிப்பாளையம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு தேவர் சிலை உள்ளதால் அதிகமான போலீஸôர் எப்போதும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருப்பர். இந்த சந்திப்பில் இருந்து செல்லூர் செல்லும் சாலையோரம் பெட்ரோல் பங்க் உள்ளது.

திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் செல்லூர் பகுதியில் இருந்து வந்த இளைஞர் ஒருவர், பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்துசென்றை அந்த இளைஞரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால், அதற்குள் அந்த இளைஞர் உடல் கருகி அதே இடத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அவரைக் காப்பாற்ற முயற்சித்த ஆரோக்கியராஜ் என்ற ஊழியருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த செல்லூர் போலீஸôர் விரைந்து சென்று இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இளைஞர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எதற்காக தீக்குளிததார்? என போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தீக்குளித்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இராஜிசங்கர்
19-03-2013, 04:41 AM
வாகனாவதி இல்லை. வாஹன்வாதி (என்று இன்னொரு நாளிதழில் படித்தேன்)

இராஜிசங்கர்
19-03-2013, 04:43 AM

மீன் குழம்புக்குப் பூனை காவல்??????

ராஜா
19-03-2013, 04:56 AM
2ஜி: ராசாவின் நடவடிக்கைகளுக்கு மன்மோகன் சிங் ஒப்புதல் தரவில்லை- பிரதமர் அலுவலகம் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது அப்போதைய மத்திய அமைச்சர் ராஜாவின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் அலுவலகமோ அல்லது பிரதமரோ ஒப்புதல் அளித்ததாக வெளியாகும் செய்திகள் சரியானதல்ல என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் தந்துள்ளது.

2ஜி விவகாரத்தில் முறைகேடு நடப்பதற்கு முன் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் சில தவறான முடிவுகளுக்கு பிரதமரும் பிரதமர் அலுவலகமும் அனுமதி தந்துள்ள விவரம் இப்போது வெளியாகி வருகிறது. இது தொடர்பாக இந்து நாளிதழ் பரபரப்பான விவரங்களை பிரதமர் அலுவலக பைல்களின் காப்பிகளையே ஆதாரமாக வைத்து வெளியிட்டு வருகிறது.

இந் நிலையில் இதை மறுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது ராசாவின் நடவடிக்கைகளுக்கு பிரதமரும் அல்லது அவரின் அலுவலகமும் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது முற்றிலும் தவறானது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் புதிதாக நுழைந்த நிறுவனங்களுக்கும் இடையே மோதல்கள் இருந்தன. அதனால் இந்த விவகாரம் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் விரும்பினார்.

அந்த ஆலோசனைகள் முடியும்வரை தன் தரப்பில் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும் பிரதமர் நினைத்தார். அதனால் ராசாஎடுத்த முடிவுகளை அவர் மீண்டும் தொலைத் தொடர்புத்துறையின் பரீசிலனைக்கு அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பும்போது பிரதமர் எழுதிய குறிப்புகளை ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் மற்றும் கட்டணங்களுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விளக்கத்துக்குப் பிறகும் பிரதமர் அலுவலகம் மீதும் பிரதமர் மீதும் குறை கூறுவது சரியல்ல என்று கூறப்பட்டுள்ளது.

ராஜா
19-03-2013, 04:58 AM
பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு நற்செய்தி.. இட ஒதுக்கீடு வருமான வரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு

பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் மத்திய அரசின் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிக்க மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கும் இதற்கு விரைவிலேயே ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

ராஜா
19-03-2013, 05:01 AM
இந்தியா செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளே பத்திரம்.. இங்கிலாந்து எச்சரிக்கை

லண்டன்: கடந்த வாரம் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கணவர் கண் முன்னேயே கற்பழிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, ' இந்தியாவிற்குச் செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு' இங்கிலாந்து அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுலாப்பயணிகள் தனி நபராலோ அல்லது குழுவாகவோ உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, அந்த நாட்டு வெளியுறவு மற்றும் நலவாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனியாக இந்தியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பெண் பயணிகளுக்கு எங்களது அறிவுரையாவது, பெண் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கும், தனியாக வேறு எங்கும் வெளியில் செல்லவேண்டாம்.

உள்ளூர்வாசிகளைப் போன்ற நடை, உடை, பாவனைகளை மேற்கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு உங்கள் மீது தேவை இல்லாத சலனத்தை ஏற்படுத்தாது. பெண் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜிசங்கர்
19-03-2013, 05:11 AM
இன்னொரு அறிவாளி.. ஈழப்போர் தியாகி..?

மதுரையில் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கோரிப்பாளையம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு தேவர் சிலை உள்ளதால் அதிகமான போலீஸôர் எப்போதும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருப்பர். இந்த சந்திப்பில் இருந்து செல்லூர் செல்லும் சாலையோரம் பெட்ரோல் பங்க் உள்ளது.

திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் செல்லூர் பகுதியில் இருந்து வந்த இளைஞர் ஒருவர், பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்துசென்றை அந்த இளைஞரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால், அதற்குள் அந்த இளைஞர் உடல் கருகி அதே இடத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அவரைக் காப்பாற்ற முயற்சித்த ஆரோக்கியராஜ் என்ற ஊழியருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த செல்லூர் போலீஸôர் விரைந்து சென்று இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இளைஞர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எதற்காக தீக்குளிததார்? என போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தீக்குளித்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எப்படித் தியாகமாகும்? என்னைக் கேட்டால் இது ஒரு விதத் துரோகம். நம் கோழைத்தனங்களுக்கும் முட்டாள்தனங்களுக்கும் நாம் சூட்டும் அழகுப் பெயர்.

உடம்பில் உயிர் இருக்கும் வரை தான் மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து உயர்வாய் நிற்கிறான். அது போய் விட்டால் அவன் எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் வெறும் 'உடல்' என்று தான் அழைக்கப்படுவான். மனித சக்திக்கு மாற்று இந்த உலகில் எதுவுமில்லை.இந்த விஷயம் என்றில்லை,எந்த விஷயத்திலும்/பிரச்சனையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்த விழைந்தால் நின்று போராடியிருக்க வேண்டாமா? தடைகளைத் தகர்த்து வெல்லும் மன வலிமை வேண்டாமா? சரித்திரம் பேசும் அளவுக்கு உழைத்திருக்க வேண்டாமா? அதெயெல்லாம் விட்டு விட்டு இப்படித் தீக்குளித்தால் என்ன கிடைத்து விடும்? 2 நாள் உலகம் பேசும். மூன்றாம் நாள் முழுவதுமாய் மறந்து போகும். இது நம் போராட்டங்களுக்கு எதிரானவர்களின் வெற்றி அல்லவா? நாமே போராடுகிறோம். நாமே எதிரணிக்கு வெற்றி கிடைக்க வகை செய்வோம் என்றால் அதன் பெயர் துரோகமில்லாமல் வேறென்ன?

ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்: 'சமுதாயத்தில் நிகழும் அநீதிகளை சகித்துக் கொள். உன்னால் சகிக்க முடியவில்லையா, அதைச் சரி செய்யும் பதவியில்/இடத்தில் வருவதற்கு உழை'.

இராஜிசங்கர்
19-03-2013, 05:14 AM
[B]
உள்ளூர்வாசிகளைப் போன்ற நடை, உடை, பாவனைகளை மேற்கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு உங்கள் மீது தேவை இல்லாத சலனத்தை ஏற்படுத்தாது. பெண் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவனுகளுக்கு டெல்லி சம்பவம் தெரியாது போல? தெரிஞ்சுமா இப்டி சொல்றாய்ங்க?

ராஜா
19-03-2013, 05:22 AM
தெரிஞ்சதாலதான் அப்படிச் சொல்றாய்ங்க..!

ராஜா
19-03-2013, 05:38 AM
மத்திய அரசுக்கான ஆதரவு விவகாரம்: சிறிது நேரத்தில் முடிவை அறிவிக்கிறார் கருணாநிதி

ராஜா
19-03-2013, 05:53 AM
இலங்கை விவகாரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ராஜா
19-03-2013, 05:55 AM
இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா-கருணாநிதி

இராஜிசங்கர்
19-03-2013, 05:55 AM
மத்திய அரசுக்கான ஆதரவு விவகாரம்: சிறிது நேரத்தில் முடிவை அறிவிக்கிறார் கருணாநிதி

நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் இன்று தானா! இதில் மட்டும் ஏதாவது சொதப்பட்டும், ராஜாவை மனித வெடுகுண்டாக மாற்றி கோபாலபுரம் அனுப்பி விடுவோம். ஜாக்கிரதை!

இராஜிசங்கர்
19-03-2013, 05:57 AM
இலங்கை விவகாரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஒரு உருப்படியான முடிவு!

ராஜா
19-03-2013, 05:59 AM
மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது-கருணாநிதி

ராஜா
19-03-2013, 06:01 AM
மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா

http://tamil.oneindia.in/img/2013/03/19-karunanidhi-speech-300.jpg

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை-. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது.
இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார்.

ராஜா
19-03-2013, 06:07 AM
திமுக ஆதரவு வாபஸ்-பங்குச் சந்தைகள் சரிந்தன

ராஜா
19-03-2013, 06:10 AM
இந்த அமெரிக்கத் தீர்மானமும் ஈழத் தமிழர்களுக்கு விடியல் தராது...?

இலங்கைக்கு எதிரான தீர்மானமாக பேசப்பட்டாலும் கூட ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய வரைவுத் தீர்மானமும் கூட ஈழத் தமிழர்களுக்கு பெரிய அளவில் விடியலையோ அல்லது விமோச்சனத்தையோ கொண்டு வந்து விடாது என்றே கூறப்படுகிறது.

காரணம், இந்த தீர்மானத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் முக்கியக் கோரிக்கையான இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

ராஜா
19-03-2013, 06:18 AM
மத்திய அரசில் இருந்து விலகல் முடிவு: திமுக வெளியிட்ட முழுமையான அறிக்கை

மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தனது முடிவினை அறிவித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம்:

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் - தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும் - தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் - குரலெழுப்பி வந்துள்ளது.

அண்ணா காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல் பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.

தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்ஷே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.

எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

M.Jagadeesan
19-03-2013, 06:36 AM
[QUOTE=ராஜா;573278]மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா

http://tamil.oneindia.in/img/2013/03/19-karunanidhi-speech-300.jpg

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை-. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது.
இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார்.[/கியோட்

//தாமதமாக எடுத்தாலும் , பாராட்டப்பட வேண்டிய முடிவு. ஆனால் மத்திய அரசு கவிழுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். முலாயமும், மாயாவதியும் மத்திய அரசைக் காப்பாற்றிவிடுவார்கள் என்றே எண்ணுகிறேன்.//

ராஜா
19-03-2013, 07:45 AM
திமுகவின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்; மத்திய அரசு கவிழாது: ப.சிதம்பரம்

திமுக மத்திய அரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள போதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக இன்று காலை அவர் அறிவித்தார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,

திமுக தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரது அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். லோக்சபாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. அதனால் திமுக வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் மத்திய அரசு கவிழாது, தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றார்.

ராஜா
19-03-2013, 07:49 AM
திமுகவின் ஆதரவு வாபஸ் முடிவு மறுபரிசீலனைக்கு உட்பட்டதா?: கருணாநிதி பதில்

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இலங்கை விவகாரத்தை முன் வைத்து மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதை இன்று நிருபர்களிடம் அறிவித்த கருணாநிதி நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்,

கேள்வி: இனிமேல் மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில்ஆதரவு தரப்படுமா?

பதில்: பொதுவாக பிரச்சனை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே.

கேள்வி: அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

பதில்: எதுவும் கிடையாது

கேள்வி: மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?

பதில்: அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல

கேள்வி: நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிலிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?

பதில்: பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல். எங்களிடம் யாரும் இதுவரை பேசவில்லை.

கேள்வி: இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: 2009ம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லையே.

கேள்வி: பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?

பதில்: 'பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.

கேள்வி: டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

பதில்: டெசோ சார்பில் ஏற்கனவே நடந்து வரும் செயல்பாடுகள் மேலும் தொடரும்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்: தற்போது ஐ.நா. மன்றமே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன். இந்திய அரசும் கூடத்தான்.

கேள்வி: 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்: அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.

கேள்வி: அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?

பதில்: அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?

பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.

கேள்வி: உங்களுடைய மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?

பதில்: இன்று அல்லது நாளை.

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

ராஜா
19-03-2013, 11:10 AM
கப்பலேறிப் போயாச்சு.. ; அசுத்தமான ஊராச்சு.. இந்தியா..!

ஆக்ராவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் தனக்கு ஏற்படவிருந்த பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப்பதற்காக, ஹோட்டல் அறையின் பால்கனி வழியே வெளியே குதித்துத் தப்பினார். இதனை போலீஸார் தெரிவித்தனர்.

ஆக்ராவின் ரகாப்கஞ்ச் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் முதல் மாடியில் தங்கியிருந்தார் 30 வயதான பெண் ஒருவர். அவர் போலீஸாரிடம் தெரிவித்தபோது, அந்த ஹோட்டலின் உரிமையாளர் ராகுல் அனுமதியின்றி தனது அறையில் நுழைந்ததாகவும் அவரிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும் கூறினார். பின்னர் அந்த ஹோட்டலின் உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண்மணி இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

ராஜா
20-03-2013, 05:43 AM
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த இளைஞர் காங்கிரஸார்

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை இளைஞர் காங்கிரஸார் எரித்தனர்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பல முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டபோதிலும் கூட்டணியில் இருந்து திமுக விலகாமலேயே நீடித்து வந்தது. இந்த நிலையில் இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ்-திமுக இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக நேற்று திமுக தலைவர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், இளைஞர் காங்கிரஸார் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். பின்பு, ராஜபக்சேவின் உருவபொம்மையையும் எரித்தனர்.

இந்த சம்பவங்கனால் சத்தியமூர்த்தி பவனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ராஜா
20-03-2013, 05:45 AM
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா தலைமையில் போராட்டம்: இது தா.பாண்டியனின் கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் போராட்டம் நடைபெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

ராஜா
20-03-2013, 05:46 AM
டி.ஆர். பாலு தலைமையில் பிரணாப்பிடம் ஆதரவு வாபஸ் கடிதம் அளித்த திமுக எம்.பி.க்கள்

: மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து டி.ஆர். பாலு தலைமையில் 5 பேர் கொண்ட திமுக எம்.பி.க்கள் குழு ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்து ஆதரவு வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை அளித்தனர்.

ராஜா
20-03-2013, 05:48 AM
ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ சேவையாற்ற டாக்டர்கள் தயார்- இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் அறிவிப்பு

இந்திய அரசும், இலங்கை அரசும் அனுமதித்தால், ஈழம் சென்று அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு சேவையாற்ற தயாராக இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தெரிவித்துள்ளார்.

ராஜா
20-03-2013, 06:12 AM
பதவியேற்றார் போப் பிரான்சிஸ்:இயற்கையை பாதுகாக்க வேண்டுகோள்

போப் பிரான்சிஸ் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சுற்றுச்சூழல் மற்றும் ஏழைகளைப் பாதுகாக்க உலகத் தலைவர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆக இருந்த 16ஆம் பெனடிக்ட் பதவி விலகியதை அடுத்து, புதிய போப்பாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த ஜார்ஜ் மோரியோ பெர்காக்லியோ தேர்வு செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை வாடிகன் நகரம் புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 266ஆவது போப்பாக பிரான்சிஸ் என்ற பெயருடன் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

ராஜா
20-03-2013, 07:28 AM
திமுக நாடகம் ; கொதிக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்..

http://tamil.oneindia.in/img/2013/03/20-sri-sri-ravi-shankar4-300.jpg

தி.மு.க. தனது வசதி போல் நடத்தும் நாடகத்தை (தேவையானபோது வெளிவந்து விடுதல்) இந்திய நாட்டில் உள்ள தமிழர்களும், இலங்கைவாழ் மக்களும் புரிந்துகொள்ளக்கூடியவர்களே. ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தி.மு.க. தனது வசதி போல் நடத்தும் நாடகத்தை (தேவையானபோது வெளிவந்து விடுதல்) இந்திய நாட்டில் உள்ள தமிழர்களும், இலங்கைவாழ் மக்களும் புரிந்துகொள்ளக்கூடியவர்களே. ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் உண்மையானவர்களாக இருந்திருப்பின் தமிழர்களுக்காக எவ்வளவோ செய்திருக்க முடியும். ஆனால் அதிகாரத்தில் இருக்கும்போது தம் குடும்ப சண்டைகளிலும், சொத்து சேகரிப்பதிலுமே குறியாக இருந்தார்கள். இப்போது கை கழுவி விடுவதும், முதலை கண்ணீர் வடிப்பதும் சரியல்ல என்று கூறியுள்ளார் ரவிசங்கர்.

இலங்கை விவகாரத்தில் தொடர்ந்து அக்கறை காட்டி வருபவர் ரவிசங்கர். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சியை குறிப்பாக முக்கியக் கட்சியான திமுகவை பகிரங்கமாக அவரா சாடிப் பேசியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
20-03-2013, 07:31 AM
ஹலோ லெனினானந்தா..

உடனே ரெண்டு கேமராவோடு ஸ்ரீஸ்ரீ ( ஒரு ஸ்ரீ பத்தாதாடா..? ) ஆசிரமத்துக்கு யாரையாவது அனுப்பி வைப்பா..!

:lachen001:

ராஜா
20-03-2013, 08:04 AM
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கூட திமுகவுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டதில்லை-ப.சிதம்பரத்திடம் சீறிய கருணாநிதி!

சென்னை:காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிதன் பின்னணியில் கடந்த இரு நாட்களில் நடந்த விறுவிறு விவகாரங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன.

திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது கருணாநிதி-சோனியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, பரஸ்பர நம்பிக்கையோடு நீடித்த கூட்டணி. முதல் 6 ஆண்டுகள் மிக மிக நெருக்கமான கூட்டணியாக இது இருந்தது. எப்போது 2ஜி விவகாரம் வெளியே வந்ததோ அப்போது தான் இந்தக் கட்சிகளிடையே முதலில் விரிசல் விழுந்தது.
அடுத்து ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளரார் ஆனாரோ, அன்று முதல் இந்தக் கூட்டணியின் விரிசல் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. கருணாநிதியை ராகுல் காந்தி ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலை ஏற்பட்டது.

அதிலும் ராகுல் காங்கிரஸ் துணைத் தலைவரான பிறகு, இந்தக் கூட்டணியே வேண்டாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்தார். சோனியாவைப் போல கூட்டணிக் கட்சிகளை மதிக்கவோ, அவர்களுடன் ஆலோசிக்கவோ தெரியாத பிள்ளை ராகுல்.

தன்னைச் சுற்றியுள்ள அதிமேதாவிக் கூட்டத்தை நம்பி அரசியல் நடத்தும் அவருக்கு அடுத்ததடுத்து பல மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், ராகுல் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகளையும் வேட்பாளர்களையும் முடிவு செய்யப் போகிறார்.

ராகுல்-கருணாநிதி கெமிஸ்ட்ரி ஆரம்பத்தில் இருந்தே சரியில்லாத நிலையில், அவருடன் இணைந்து அரசியலைத் தொடர கருணாநிதி விரும்பவில்லை.
மேலும் கருணாநிதியின் கழுகு மூளைக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தேசிய அளவில் மரண அடி வாங்கப் போவதும் தெரிந்துவிட்டது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவே ஒளிர்கிறது என்ற போலியான பிரமையை பாஜக ஏற்படுத்தி வைத்திருந்த நேரத்தில், காங்கிரசுக்கே ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிக் காட்டியவர் கருணாநிதி.

காரணம், அடுத்தத் தேர்தலில் பாஜக மூழ்கப் போகிறது என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்தது தான். அவர் நினைத்த மாதிரியே பாஜக அந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது, இன்று வரை அந்தக் கட்சியால் தேசிய அளவில் வியாபிக்க முடியவில்லை.

இப்போதும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் மீது நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி பரவியுள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 120 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம் தான்.

இதனால் காங்கிரசோடு கூட்டணியைத் தொடர்வது தற்கொலைக்கு சமம் என்பதை கருணாநிதி உணர்ந்து கொண்டுவிட்டார். இதற்கு இலங்கை விவகாரத்தை சமயம் பார்த்து கையில் எடுத்தார். உலக அளவில் இலங்கை விவகாரம் பெரிதான நிலையில், தமிழகத்திலும் இந்தப் பிரச்சனைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளதையும் மனதில் வைத்து, இதுவே சரியான சமயம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்தார்.

டெல்லிக்கு ஒரு போனைப் போட்ட அவர், அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் செய்ய வேண்டும், தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் கூட்டணியில் இருக்க மாட்டேன் என்று கறாராகக் கூற, பதறிப் போன காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் ஆகியோரை அனுப்பியது.

அவர்களிடம் இலங்கை அரசு இனப் படுகொலையில் ஈடுபட்டது, இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை போன்ற வாசங்களுடன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி புதிய குண்டைப் போடவே, மத்திய அமைச்சர்களின் முகம் வெளிறிப் போயுள்ளது.

என்னாது, நாடாளுமன்றத்திலும் தீர்மானமா, நீங்க திடீர் திடீர்னு நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள்.. என்று குலாம் நபி ஆசாத்தும் ப.சிதம்பரமும் கூற, கடுப்பாகிவிட்டார் கருணாநிதி என்கிறார்கள்.

நான் நிலை மாறுகிறேனா.. 9 வருடமா உங்களை தூக்கிட்டு சுமக்குறேன், இந்த 9 வருடத்தில் திமுக சந்தித்த இழப்பு போல் என் வாழ்க்கையில் எப்போதுமே சந்தித்ததில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலத்தில்கூட திமுகவுக்கு இவ்வளவு செல்வாக்கு இழப்பு ஏற்பட்டதில்லை, நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன், எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துறீங்க என்று பொங்கிய கருணாநிதி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதா இருந்தா மேலே பேசுவோம். போயிட்டு வாங்க என்று கூறிவிட்டார்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்திகிட்டே ஆலோசித்துவிட்டு பதில் சொல்றோம், அதே நேரத்தில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டாலும், இலங்கை அரசு இனப்ப டுகொலையில் ஈடுபட்டது போன்ற வாசகங்கள் இல்லாவிட்டாலும், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்த உறுதியை நம்பி கருணாநிதி காத்திருக்க, செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை என்ற தகவல் ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் மூலம் கருணாநிதிக்குக் கிடைத்துள்ளது.

அதில், இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்ற வாசகத்துக்குப் பதிலாக இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறுகிறோம் என்ற வகையிலே வாசகங்கள் இருக்கவே, நம்ப வச்ச கழுத்தை அறுத்துட்டாங்க என்று கூறியபடி, மூத்த திமுக தலைவர்களையும் டெசோ தலைவர்களையும் அழைத்து உடனடியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இனியும் இந்தக் கூட்டணியிலே நீடிக்கனுமா என்ற கருணாநிதியின் கேள்விக்கு, வேண்டாம் என்பதே அனைவரின் பதிலாகவும் இருந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் இந்த விஷயத்தில், மிகத் தீவிரமாக இருந்துள்ளார். இதனையடுத்தே கருணாநிதி தனது விலகல் முடிவை அறிவித்தார் என்கிறது திமுக-டெசோ வட்டாரம்.

Source ; That's Tamil

ராஜா
21-03-2013, 04:03 AM
காங். வேலை ஆரம்பம்¬ ஸ்டாலின் வீடு ரெய்டு..

http://tamil.oneindia.in/img/2013/03/21-stalin31-300.jpg

வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது

வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ20 கோடி மதிப்பிலான வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக தெரியவந்துள்ளது. மு.க. ஸ்டாலின் வீடு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வெளிநாட்டு காரை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மு. க ஸ்டாலின் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு காரை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்ததாக ஒரு சர்ச்சை வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ராஜா
21-03-2013, 04:06 AM
ஆதரவு வாபஸ் முடிவை எடுத்தவர் ஸ்டாலின்? - அதனால்தான் அழகிரிக்கு கோபமா??

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவது மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது, ஆதரவை வாபஸ் பெறுவது ஆகிய முக்கிய முடிவுகளை திமுக தலைவர் கருணாநிதி எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் இந்த அதிரடியான முடிவை பரிந்துரைத்தார் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாகவே மு.க.அழகிரி அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ராஜா
21-03-2013, 04:07 AM
சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கதிரவன் வெட்டிக்கொலை

சென்னையில் சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கதிரவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை எம்.ஜிஆர் நகரைச் சேர்ந்த கதிரவனை சத்யா கார்டன் அருகில் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

ராஜா
21-03-2013, 04:08 AM
மத்திய அரசின் உள்நோக்கம்: பொன்முடி

வெளிநாட்டு கார் வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. அது குறித்து சோதனை நடத்த வேண்டுமென்றாலோ, விசாரணை செய்ய வேண்டும் என்றாலோ அப்போதே செய்திருக்கலாம். ஆனால், மத்திய அரசில் இருந்து திமுக விலகி இரு நாட்களுக்குள் சோதனை மேற்கொள்ளப்படுவதில் உள்நோக்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி.

ராஜா
21-03-2013, 04:10 AM
சிபிஐ அரசின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டு உண்மை: டி.கே.எஸ்.இளங்கோவன்

சிபிஐ மத்திய அரசின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டு உண்மையாகி இருக்கிறது என்றார் திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன்.

இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய அரசில் இருந்து விலகி இரு தினங்களுக்குள் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சிபிஐ அமைப்பு என்பது எதிர்க்கட்சிகளை பழிவாங்க, மிரட்ட மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு உத்தி என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என்பது இப்போது தெளிவாகி விட்டது என்றார்.

ராஜா
21-03-2013, 04:12 AM
பழிவாங்கும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டுக் கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார். ஆட்சியில் இருந்து விலகிய 48 மணி நேரத்துக்குள் இத்தகைய மிரட்டலை அரசு மேற்கொண்டுள்ளது; இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறினார் ஸ்டாலின்.

ராஜா
21-03-2013, 04:18 AM
சட்டப் பேரவை இன்று கூடுகிறது: நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை கூடுகிறது. அப்போது 2013-2014 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதன்பின், கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மற்றும் அதற்கான பதிலுரை அளிக்கப்படும். இதன்பின், துறை வாரியாக நிதியை ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.

மானியக் கோரிக்கைகள் அதன் மீதான விவாதம் என பேரவை கூட்டத் தொடர் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜா
21-03-2013, 04:22 AM
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு சரியல்ல: ப. சிதம்பரம் எதிர்ப்பு

ராஜா
21-03-2013, 04:52 AM
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு தவறாக புரிந்துகொள்ளப்படும்: ப.சிதம்பரம்

டெல்லி: திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக நேற்று முன்தினம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து திமுக அமைச்சர்கள் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு பின்னால் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை ஸ்டாலினின் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுிகையில், ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது பற்றி சற்று நேரத்திற்கு முன்பு தான் எனக்கு தகவல் கிடைத்தது. நான் வழக்கமாக பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். இந்த சோதனையை நான் எதிர்க்கிறேன். சிபிஐயின் இந்த செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்றார்.

M.Jagadeesan
21-03-2013, 05:04 AM

பதவி இழந்த நிலையில் தி.மு.க. இன்னும் பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஜெயலலிதாவும் தன் பங்குக்கு பல நெருக்கடிகளைத் தர முற்படுவார். இந்த நெருக்கடிகளையும், சோதனைகளையும் தி.மு.க. தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

இராஜிசங்கர்
21-03-2013, 05:06 AM
இந்த ரெய்டு முலாயம் சிங் கிற்கு காங்கிரஸ் மறைமுகமாக விடுக்கும் எச்சரிக்கையாகக் கூட இருக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது.

இராஜிசங்கர்
21-03-2013, 05:07 AM
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு தவறாக புரிந்துகொள்ளப்படும்: ப.சிதம்பரம்

டெல்லி: திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக நேற்று முன்தினம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து திமுக அமைச்சர்கள் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு பின்னால் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை ஸ்டாலினின் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுிகையில், ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது பற்றி சற்று நேரத்திற்கு முன்பு தான் எனக்கு தகவல் கிடைத்தது. நான் வழக்கமாக பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். இந்த சோதனையை நான் எதிர்க்கிறேன். சிபிஐயின் இந்த செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்றார்.

பிள்ளையையும் கிள்ளுவோம்..தொட்டிலையும் ஆட்டுவோம்.!!

ராஜா
21-03-2013, 05:19 AM
அனல் மின் நிலையங்களில் பாதிப்பு: மாவட்டங்களில் மீண்டும் 9 மணி நேர மின்வெட்டு

புதிய மற்றும் பழைய அனல் மின்நிலைய யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இதன் காரணமாக மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் 8 மணி நேரத்தைத் தாண்டியுள்ளது.

இராஜிசங்கர்
21-03-2013, 05:23 AM

அப்டியே பாதிப்பு இல்லாட்டினாலும் கிளுகிளுன்னு கரெண்ட் இருக்குற மாதிரி தான் அறிக்கை வுடுவாய்ங்க...

ராஜா
21-03-2013, 06:10 AM
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டுக்கு உத்தரவிட்டது நாராயணசாமி: சோனியா 'காய்ச்சி' எடுத்தார்!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட் நடத்த உத்தரவிட்டது மத்திய பர்சனல் மற்றும் பயிற்சித்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நாராயணசாமி தான் என்று தெரியவந்துள்ளது.

பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் என்றே அதிகமாக வெளியில் தெரியப்பட்ட நாராயணசாமியிடம் தான் Department of Personnel and Training துறை உள்ளது. இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை தான் சிபிஐயின் செயல்பாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றன. ஆனாலும் சிபிஐயின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் நாராயணசாமியின் கையில் தான் உள்ளது.

இந் நிலையில் தான், காங்கிரஸ் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதாகக் கருதி, இன்று காலை டெல்லியில் இருந்து 7 அதிகாரிகளை அனுப்பி ஸ்டாலினின் வீட்டில் ரெய்ட் நடத்த வைத்துள்ளார் நாராயணசாமி. இந்த விவரம் தெரியவந்தவுடன் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு நேரடியாகவே நாராயணசாமியைக் கூப்பிட்டுப் பேசியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிபிஐ ரெய்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நாராயணசாமியை தொலைபேசியில் பிடித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரை வாட்டி எடுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் பேசாமல், பிரதமருக்குத் தெரியாமல் நாராயணசாமி இந்த வேலையை செய்திருப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஸ்டாலின் மீதான ரெய்டுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிதம்பரம், பாஜக, இடதுசாரிகள் என அனைத்துத் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பவே, நாராயணசாமி மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறதா காங்கிரஸ் தலைமையா என்பதும் தெரியவில்லை.

ராஜா
21-03-2013, 06:12 AM
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

அவசர காலத் தேவைக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

சுற்றுச்சூழலுக்கு ரூ.880.69 கோடி ஒதுக்கீடு நதி இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.156.44 கோடி ஒதுக்கீடு

அணை புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.399 கோடி ஒதுக்கீடு

கோழி வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.105 கோடி ஒதுக்கீடு

குறைந்த விலைக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

உணவு மானியத்திற்காக ரூ.4.900 கோடி ஒதுக்கீடு காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் திறக்க முடிவு

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

7 அரிசி ஆலைகளை நவீனமயமாக்க ரூ32 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்

ராஜா
21-03-2013, 06:14 AM
கால்நடை வளர்ப்புத்துறைக்கு ரூ. 1082 கோடி ஒதுக்கீடு

ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழில் நிலையம் ரூ.14 கோடியில் புனரமைப்பு

மீனவர் நலனுக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு

ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க படகுகளுக்கான மானியம் 50 சதவீதமாக உயர்வு

விவசாயிகளுக்கு 2270 சேமிப்பு கிட்டங்கிகள் கட்ட ரூ.237.20 கோடி ஒதுக்கீடு

இலவசமாக 24 ஆயிரம் கறவை பசு, 10 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன நடப்பாண்டில் 12 ஆயிரம் பசு மாடுகள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்

நுண்ணுயிர் பாசனத்திற்கு திரவ உரங்களை வாங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

காய்கறி கழிவு சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.34 கோடி பயிர்காப்பீடு திட்டங்களுக்கு ரூ. 42.95 கோடி ஒதுக்கீடு

மாநிலம் முழுவதும் வேளாண் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படும்.

பயிரக் கடனாக 39,135 கோடி வழங்க முடிவு கூட்டுறவு சங்கங்களுக்கு சுழல்நிதியாக ரூ150 கோடி ஒதுக்கீடு

ராஜா
21-03-2013, 06:15 AM
தரமான விதை உற்பத்திக்கு ரூ161.62 கோடி ஒதுக்கீடு

மாநிலத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4.61%

உழவர் பெருவிழா நடத்த ரூ46 கோடி ஒதுக்கீடு

மாநிலத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4.61 சதவிகிதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

தோட்டக்கலை வளர்ச்சிக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு

காய்கறி சாகுபடி பரப்பளவு 8.2 லட்சம் ஏக்கராக உயர்வு

இளைஞர்களுக்கு உலகத்தரத்திலான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க முடிவு

வேளாண் துறைக்கு ரூ5189.15 கோடி ஒதுக்கீடு

குடிநீர் திட்டங்களுக்கு ரூ37.25 கோடி ஒதுகீஇடு

கால்நடை வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.15.85 கோடி ஒதுக்கீடு

புது வாழ்வுத்திட்டம் 110 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் ரூ. 350 கோடியில், ரூ. 100 கோடி மாநில அரசின் பங்காக இருக்கும்

இளைஞர்களின் திறன் வளர்ப்பு பயிற்சிக்காக ரூ.100 கோடி அதிகரிப்பு

10 ஆண்டுகளில் ரூ15 லட்சம் கோடி தொழில் முதலீடு பெற இலக்கு

ராஜா
21-03-2013, 06:16 AM
நடப்பாண்டில் 2 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்

நகர்ப்புற வறுமை குறைப்புக்கு ரூ. 99.73 கோடி ஒதுக்கீடு

கிராமப் புற வறுமையை ஒழிக்க 110 வட்டாரங்களில் புதுவாழ்வு திட்டம்

ஆதர் அட்டை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்க முடிவு

2லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்க முடிவு

தீயணைப்பு மீட்பு பணித்துறைக்கு ரூ. 208.4 கோடி ஒதுக்கீடு

காவல்துறையில் சிறப்பு காவல்துறைக்கு நிதி ஒதுக்கீடு

4,706 கோடியாக உயர்வு கூடுதல் போலீஸ் தேர்வு.

169 காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம், 27.07 கோடி ஒதுக்கீடு.

நடப்பாண்டு மாநிலத்தின் திட்ட ஒதுக்கீடு 2.11 லட்சம் கோடி கடந்த ஆண்ட விட திட்ட ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடியாக உயர்வு

மின்சாரம், கட்டமைப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர முடிவு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி ஊக்குவிப்பு

மாநிலத்தின் சேவை, வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வறட்சி நிலவ காவிரியில் தண்ணீர் திறக்காததே காரணம்... பன்னீர் செல்வம்

இராஜிசங்கர்
21-03-2013, 06:17 AM
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டுக்கு உத்தரவிட்டது நாராயணசாமி: சோனியா 'காய்ச்சி' எடுத்தார்!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட் நடத்த உத்தரவிட்டது மத்திய பர்சனல் மற்றும் பயிற்சித்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நாராயணசாமி தான் என்று தெரியவந்துள்ளது.

பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் என்றே அதிகமாக வெளியில் தெரியப்பட்ட நாராயணசாமியிடம் தான் Department of Personnel and Training துறை உள்ளது. இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை தான் சிபிஐயின் செயல்பாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றன. ஆனாலும் சிபிஐயின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் நாராயணசாமியின் கையில் தான் உள்ளது.

இந் நிலையில் தான், காங்கிரஸ் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதாகக் கருதி, இன்று காலை டெல்லியில் இருந்து 7 அதிகாரிகளை அனுப்பி ஸ்டாலினின் வீட்டில் ரெய்ட் நடத்த வைத்துள்ளார் நாராயணசாமி. இந்த விவரம் தெரியவந்தவுடன் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு நேரடியாகவே நாராயணசாமியைக் கூப்பிட்டுப் பேசியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிபிஐ ரெய்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நாராயணசாமியை தொலைபேசியில் பிடித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரை வாட்டி எடுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் பேசாமல், பிரதமருக்குத் தெரியாமல் நாராயணசாமி இந்த வேலையை செய்திருப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஸ்டாலின் மீதான ரெய்டுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிதம்பரம், பாஜக, இடதுசாரிகள் என அனைத்துத் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பவே, நாராயணசாமி மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறதா காங்கிரஸ் தலைமையா என்பதும் தெரியவில்லை.

நாராயணசாமி குடுத்த காசுக்கு அதிகமா கூவிட்டாரோ??!!

ராஜா
21-03-2013, 07:26 AM
http://1-ps.googleusercontent.com/x/www.oneindia.in/news.oneindia.in/img/300x95/2013/03/x21-sanjay-dutt.jpg.pagespeed.ic.z30uk-CQaX.webp

மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு.. சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை..!

ராஜா
21-03-2013, 07:33 AM
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மீண்டும் சிறைக்கு செல்கிறார் சஞ்சய் தத்- தண்டனையை கேட்டு அழுகை!

http://tamil.oneindia.in/img/2013/03/21-sanjay-dutt-300.jpg

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்.

1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாகினர், 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் விதித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்துள்ளனர்.

முன்னதாக சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும். அவர்கள் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். இந்த தீர்ப்பை நீதிபதிகள் கூறியபோது சஞ்சய் தத்தின் கண்கள் கலங்கின. தற்போது அவர் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜா
21-03-2013, 07:53 AM
சிதம்பரத்தின் கடும் எதிர்ப்பால் பாதியில் நின்ற சிபிஐ ரெய்ட்!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்புத் தெரிவித்த அடுத்த அரை மணி நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

இன்று காலை ரெய்ட் தொடங்கியதுமே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஸ்டாலின் வீட்டை நோக்கி திமுக தலைவர்களும் தொண்டர்களும் குவிய ஆரம்பித்தனர். இதனால் பெரும் டிராபிக் ஜாம் ஆகிவிட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்த ரெய்ட் நடக்க ஆரம்பித்து தீவிரம் அடைந்த நிலையில், டெல்லியில் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்த ப.சிதம்பரம், இந்த ரெய்ட் சரியல்ல. இதை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவே நான் அஞ்சுகிறேன். இது குறித்து அந்தத் துறையின் அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார்.

வழக்கமாக எந்த சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்ளாத அளவுக்கு வார்த்தைகளை மிக மிக அளந்து, நிதானமாகப் பேசும் சிதம்பரம், இன்னொரு துறையின் விவகாரத்தை தலையிட்டதை ஒப்புக் கொண்டாரோ, அப்போதே அவர் இந்த ரெய்டுக்கு காங்கிரஸ் தலைமையிடம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது உறுதியாகிவிட்டது. அவர் பேசி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில் ரெய்ட் முடிந்துவிட்டதாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.

ரெய்ட் நடத்தவில்லை-சிபிஐ பல்டி:

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய காரைத் தேடியே வந்ததாகவும், ரெய்ட் நடத்த வரவில்லை என்றும் சிபிஐ திடீர் பல்டி அடித்துள்ளது. காரை ஸ்டாலின் என்ன பெட்ரூமுக்குள்ளா நிறுத்தி வைத்திருப்பார் சிபிஐ அங்கு போய் தேட.?

எப்ஐஆரில் ஸ்டாலின்-உதயநிதி பெயர் இல்லை:

மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்), ஸ்டாலின் மற்றும் சிபிஐ குறிப்பிடும் ஹம்மர் காரைப் பயன்படுத்திவரும் அவரது மகன் உதயநிதி ஆகியோரின் பெயரே இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் மூன்று அதிகாரிகள் பெயர் மட்டுமே புகார்தாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

ராஜா
21-03-2013, 08:13 AM
இந்திய ராணுவ உடையணிந்த விடுதலைப் புலிகள்தான் பாலச்சந்திரன் மரணத்திற்குக் காரணம்- பொன்சேகா

http://tamil.oneindia.in/img/2013/03/21-balachandran1-300.jpg

கொழும்பு: பாலச்சந்திரன் உடல்என்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இலங்கை வீரர் என்று சொல்லப்படும் நபர், இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் உள்ளார். இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள்தான், இந்திய ராணுவ சீருடையை அணிந்திருந்தனர் என்று கூறியுள்ளார் அந் நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.

பொன்சேகாவின் இந்தப் பேச்சு, இந்திய ராணுவத்தினரும் 'பிசிக்கலாக' இலங்கையுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டனரா என்ற புதிய கேள்வியைக் கிளப்பியுள்ளது.
பாலச்சந்திரன் மரணம் குறித்து இறுதிக் கட்டப் போரின்போது தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா புதிய தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில் ராணு வீரர் ஒருவர் சீருடையில் இருப்பதுபோன்று காட்டப்பட்டுள்ளது. அது இலங்கை ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சீருடை அல்ல. இந்திய ராணுவத்தினர் அணிவது போன்று உள்ளது. விடுதலைப் புலிகள்தான் இறுதிக் கட்ட போரின்போது இந்திய ராணுவ வீரர்கள் போல் உடையணிந்திருந்தனர்.

மேலும், பதுங்கு குழி ஒன்றில் பாலசந்திரன் அமர்ந்து இருப்பதுபோல புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தினரிடம் அதுபோன்ற சுத்தமான பதுங்கு குழிகள் கிடையாது. அது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியாகத்தான் இருக்க வேண்டும். எனவே பாலசந்திரன் கடைசி கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன்தான் இருந்துள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காட்டப்படும் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டதாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கு தலைமை வகித்த கமாண்டர் என்ற முறையில் எந்தவிதமான சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். போரில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள். பலர் தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ள விரும்புகின்றனர். போர் நிகழ்வுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிடவில்லை என்றால் மேலும் பல சர்வதேச குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார் பொன்சேகா.

ராஜா
21-03-2013, 08:19 AM
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை...வரி விகிதங்களில் மாற்றமும் இல்லை

மத்திய அரசின் புதிய நிதி மசோதாவால் மாநிலத்திற்கு பாதிப்பு

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் அவரி வருவாய் 500 கோடி குறைந்தது

திருமண நிதி உதவி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.750 கோடியாக உயர்வு

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்க முடிவு

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு ரூ.263 கோடி

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்கு ரூ.110 கோடி

இலங்கை தமிழ் அகதிகளுக்கும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

2023 தொலைநோக்குத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நடைமுறைப் படுத்தப்படும்.

ராஜா
21-03-2013, 08:20 AM
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.470 கோடி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற உள்ளாட்சிக்கு ரூ.4887.86 கோடி நிதி ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.3539.36 கோடி நிதி ஒதுக்கீடு

திடக் கழிவு மேலாண்மை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படும்.

கழிவுகளை சேகரித்துக் கையாளுவதற்கு ரூ.150 கோடி ஒதுகீடு

தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் ரூ.97.85 கோடி திடக் கழிவு மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

தனியார் கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு

ராஜா
21-03-2013, 08:21 AM
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் பழங்குடியின மக்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ. 56 கோடி நிதி

வீடுகள் தோறும் கழிவறை கட்டும் திட்டத்திற்கு ரூ.72.6 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

நடப்பு நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட முடிவு

தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.132ல் இருந்து ரூ.148 ஆக உயர்வு

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.1500 கோடி

மாணவர்கள் இடைநிலைக்கற்றலை தடுக்க ரூ. 381 கோடி ஊக்கத் தொகை

அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு

ராஜா
21-03-2013, 08:23 AM
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.381 கோடி ஒதுக்கீடு

தேசிய இடைநிலைக்கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி

மாணவர்களுக்கு இலவச புத்தகம் வாங்க ரூ.217.22 கோடி

இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 110.கோடி வழங்க முடிவு

புதிதாக 8 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க முடிவு

பள்ளிக்கல்விக்கு ரூ. 16,965.30 கோடி ஒதுக்கீடு

பெண்கள் மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு

இலவச மருத்துவ ஊர்தி திட்டத்திற்கு ரூ.77.57 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்த ரூ. 169.13 கோடி ஒதுக்கீடு

மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.20 கோடி

சுற்றுலா மையங்களை மேம்படுத்த ரூ.67.91 கோடி ஒதுக்கீடு

தமிழ் வளர்ச்சிப்பணிகளுக்கு ரூ.39.29 கோடி

ராஜா
21-03-2013, 10:39 AM
ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி

ராஜா
21-03-2013, 10:40 AM
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு- 13 நாடுகள் எதிர்ப்பு

ராஜா
21-03-2013, 10:42 AM
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பக விசாரணை தேவை: இந்தியா

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூடத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா, போர் முடிவுற்றிருக்கும் தற்போதைய நிலைதான் நல்ல சந்தர்ப்பம். அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான 13-வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நில உரிமை மதிக்கப்பட வேண்டும்.தமிழர்கள் வாழும் வடமாகாணத்தில் செப்டம்பரில் தேர்தல் நடத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் சென்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஆராய வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து நாடுகளும் ஏற்கக் கூடிய நம்பகமான சுதந்திரமான விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ராஜா
22-03-2013, 04:32 AM
மம்தாவின் இலங்கை ஆதரவு பேச்சு: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்-சூறை

http://tamil.oneindia.in/img/2013/03/22-sriaurobindoashram-300.jpg

புதுச்சேரி: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை தமிழ் அமைப்புகள் தாக்கி சூறையாடின.

இலங்கை நட்பு நாடு என்பதால், அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி திருவாய் மலர்ந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூத் தொட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மம்தாவை கண்டிக்க பல வழிகள் இருக்கும் நிலையில், ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்க செயலே.

ராஜா
22-03-2013, 04:34 AM
மீனவர் கொலை வழக்கு: 2 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது இத்தாலி

கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 கடற்படைவீரர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இத்தாலி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விசாரணையை எதிர்கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் ஆகியோர், மார்ச் 22ஆம் தேதி இந்தியா திரும்பி விடுவார்கள் என்று இத்தாலி தூதரகம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியாது என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. இதையடுத்து இத்தாலி தூதர் இந்தியாவில் இருந்து வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இத்தாலியின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக இரு கடற்படை வீரர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இத்தாலி அரசு வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரு கடற்படை வீரர்கள் மீது இத்தாலியில் விசாரணை நடத்துவதா அல்லது இந்தியாவில் நடக்கும் விசாரணையை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதா என்பதை முடிவு செய்ய, இத்தாலி ராணுவ வழக்குரைஞர் மார்கோ டி பௌலிஸ் 2 வீரர்களிடமும் புதன்கிழமை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ராஜா
22-03-2013, 04:36 AM
இலங்கை விவகாரம்: வைகோ சொந்த ஊரில் இன்று உண்ணாவிரதம்

சங்கரன்கோவில்: இலங்கை தமிழர் பிரச்சனையை வலியுறுத்தி மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளார் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இலங்கை பிரச்சனையில் மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வலியறுத்தி வைகோவின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இதில் பொதுமக்கள் மற்றும் மதிமுகவினர் கலந்து கொள்கின்றனர். மதிமுக மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகிக்கிறார். கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார். ஏற்பாடுகளை மதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ராஜா
22-03-2013, 04:43 AM
தில்லி போலீஸார் சோதனை: ஜும்மா மசூதி பகுதியில் ஏகே47 துப்பாக்கிகள் பறிமுதல்

தில்லி போலீஸாரின் சிறப்பு செல்- பிரிவு நேற்று இரவு தில்லியில் ஜூம்மா மசூதி பகுதிகளில் திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது, ஜூம்மா மசூதியை அடுத்த ஹோட்டல் ஒன்றில் இருந்து ஏராளமான ஏகே47 ரக துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜா
22-03-2013, 04:47 AM
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைத் தாக்குவோம்: வடகொரியா

ஜப்பான் மற்றும் குவாம் தீவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்குவோம் என்று வடகொரிய வியாழக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளது.

""குவாமில் உள்ள ஆண்டர்சன் மற்றும் ஜப்பானின் ஒகினவா ராணுவ நிலைகள் எங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்பதை அமெரிக்கா மறந்து விடக்கூடாது'' என்று வட கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் கோரிக்கையை மீறி, வடகொரிய கடந்த மாதம் அணு ஆயுதச் சோதனை நடத்தியது. இதனால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் இந்த மிரட்டலானது, மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஜப்பானில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்கும் அளவுக்கு பாய்ந்து செல்லும் ராக்கெட்டுகள் வடகொரியா வசம் உள்ளன. ஆனால், குவாம் தீவில் உள்ள நிலைகளைக் தாக்கும் (சுமார் 3, 200 கிலோ மீட்டர்) ராக்கெட்டுகள் அந்நாட்டிடம் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் மிரட்டலை எதிர்கொள்ளும் விதத்தில் அமெரிக்க கடற்பகுதியில் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹெகல் கடந்த வாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

ராஜா
22-03-2013, 04:49 AM
தென் கொரிய வங்கிகள் செயலிழப்பு

தென் கொரியாவின் வங்கிகள், ஊடகங்கள் ஆகியன சைபர் தாக்குதலில் (இணையதளங்களை முடக்குதல், கணினியிலிருந்து தகவல்களைத் திருடுதல்) செயலிழக்கச் செய்யப்பட்டன.

புதன்கிழமை நடைபெற்ற இத் தாக்குதலை சீனா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

வங்கிகள் மற்றும் ஊடகங்கள் முடக்கப்பட்டதில் சீன ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அதை நிரூபிக்க சில வாரங்கள் ஆகும் என்று தென் கொரிய நிபுணர்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தைவான் குற்றச்சாட்டு: மற்ற நாடுகளின் ராணுவம் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை கணினியிலிருந்து திருடும் செயல்களில் (ஹேக்கர்ஸ்) சீனா ஈடுபடுவதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

இராஜிசங்கர்
22-03-2013, 05:04 AM
மீனவர் கொலை வழக்கு: 2 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது இத்தாலி

கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 கடற்படைவீரர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இத்தாலி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விசாரணையை எதிர்கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் ஆகியோர், மார்ச் 22ஆம் தேதி இந்தியா திரும்பி விடுவார்கள் என்று இத்தாலி தூதரகம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியாது என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. இதையடுத்து இத்தாலி தூதர் இந்தியாவில் இருந்து வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இத்தாலியின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக இரு கடற்படை வீரர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இத்தாலி அரசு வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரு கடற்படை வீரர்கள் மீது இத்தாலியில் விசாரணை நடத்துவதா அல்லது இந்தியாவில் நடக்கும் விசாரணையை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதா என்பதை முடிவு செய்ய, இத்தாலி ராணுவ வழக்குரைஞர் மார்கோ டி பௌலிஸ் 2 வீரர்களிடமும் புதன்கிழமை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அப்டி வாங்கடா வழிக்கு!

இராஜிசங்கர்
22-03-2013, 05:08 AM
மம்தாவின் இலங்கை ஆதரவு பேச்சு: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்-சூறை

http://tamil.oneindia.in/img/2013/03/22-sriaurobindoashram-300.jpg

புதுச்சேரி: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை தமிழ் அமைப்புகள் தாக்கி சூறையாடின.

இலங்கை நட்பு நாடு என்பதால், அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி திருவாய் மலர்ந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூத் தொட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மம்தாவை கண்டிக்க பல வழிகள் இருக்கும் நிலையில், ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்க செயலே.

கத்திக்கு கத்தி. ரத்தத்துக்கு ரத்தம் என்று இருக்கும் மனோநிலை என்றைக்குத் தான் மாறுமோ?

இந்த வாரம் (இன்று மாலை வெளியாக இருக்கும்) புதிய தலைமுறை நாளிதழின், மாலன் சாரின் 'என் ஜன்னலுக்கு வெளியே' தொடரில் (கிட்டத்தட்ட) இதைப்(புத்த பிட்சு தாக்குதல்) பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. சிறந்த அலசல். விரும்பியவர்கள் வாங்கிப் படியுங்கள். மாலன் சார் ஒப்புதலின் பேரில் மன்றத்தில் அந்தக் கட்டுரையை பதிய முயற்சி செய்கிறேன்.

ராஜா
22-03-2013, 05:15 AM
இலங்கையை கண்டித்து தீக்குளித்த இன்னொரு `அறிவாளி` உயிரிழப்பு!

சென்னை நெற்குன்றத்தில் இலங்கையை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழந்தார்.

சென்னை நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த விக்ரம் என்பவர் தீக்குளித்தார். இலங்கையை கண்டித்து தீக்குளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இராஜிசங்கர்
22-03-2013, 05:24 AM

இவன் நிஜமாவே புத்திசாலியா இருந்தா தீக்குளிச்சுருக்கக் கூடாது. ராஜபக்சேவை தீக்குளிக்க வச்சுருக்கணும்.

அன்புரசிகன்
22-03-2013, 05:46 AM
ராஜபக்சேவை தீக்குளிக்க வச்சுருக்கணும் .
இந்த வருசத்துக்கான நகைச்சுவையாக இதை சொல்லலாம்... :D

ராஜா
22-03-2013, 06:03 AM
இவன் நிஜமாவே புத்திசாலியா இருந்தா தீக்குளிச்சுருக்கக் கூடாது. ராஜபக்சேவை தீக்குளிக்க வச்சுருக்கணும்.

அந்தாளை எதுவும் பண்ணமுடியாது ; அவரா செத்தாத்தான் உண்டு..!

ராஜா
22-03-2013, 06:18 AM
தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம்

http://tamil.oneindia.in/img/2013/03/22-vaikomother-7-600.jpg

நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன், இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ராஜா
22-03-2013, 06:29 AM
உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

அப்ப புடிச்ச போட்டோ இல்லியா..?

:lachen001:

ராஜா
22-03-2013, 07:19 AM
பாலச்சந்திரன் அண்ணனை கொன்னுட்டாங்க, நாங்க ஏதாச்சும் செய்யனும்.. ஆவேசத்துடன் உறுமிய சேலம் சிறார்கள்

http://tamil.oneindia.in/img/2013/03/22-idinthakarai-student-protest5-600.jpg

சேலம்: சின்னப் பைன் என்றுகூட பாராமல், எங்க பாலச்சந்திரன் அண்ணனை கொன்று விட்டார்கள். எங்க அண்ணன் சாகும்போது வீரமாகத்தான் இறந்திருக்காரு. நாங்க ஏதாச்சும் செய்யனும் என்று ஆவேசத்துடன் கூறியபடி ராஜபக்சேவுக்கு எதிராக பாலச்சந்திரன் படம் பிடித்து போராட்டம் நடத்திய சிறார்களைப் பார்த்து சேலமே சிலிர்த்துப் போனது.

சலூன் கடை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழகமே கொந்தளித்துப் போய் நிற்கிறது. ஐடி நிறுவனம் முதல் ஐடிஐ மாணவர்கள் வரை அத்தனை பேரும் தங்களது உணர்வுகளை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் சின்னஞ் சிறார்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட் சிறார்கள் திரண்டு நின்று தங்களது பிஞ்சுக் குரலில் வீராவேசமாக போட்ட கோஷத்தைப் பார்த்து சாலையில் சென்றோர் ஆச்சரியமடைந்து நின்று விட்டனர்.

அனைவரும் பாலச்சந்திரன் படத்திற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு 'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் என முழக்கமிட்டனர். இந்தக் குழந்தைகளை ஒருங்கிணைத்தவர் தமிழமுதன். இவரும் ஒரு சிறுவன்தான். அந்த உணர்ச்சிச் சிறுவன் கூறுகையில் எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தக்காரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம் என்றார்.

ராஜா
22-03-2013, 12:30 PM
முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி...

தமிழ் ஈழம் அமைய வேண்டும், ஈழத்துத் தமிழர்களின் இன்னல்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக இதுவரை 22 தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்துள்ளனர்.இது தொடர் கதையாகி வருவது தமிழ் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் ஈழத்துக்கான போராட்டம் முன்பு ஈழத்தில் மட்டுமே நடந்து வந்தது. இன்று ஈழத்தை சுடுகாடாக்கி விட்டது சிங்களம். இதனால் ஈழத்துக்கான போராட்டத்தை உலகத் தமிழர்கள் கையில் எடுத்துள்ளனர்.

உலகின் பல பாகங்களிலும் ஈழத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன. இதை அடக்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்கிறது இலங்கை.
மறுபக்கம் தீக்குளிப்பு,உயிர்த் தியாகங்களும் உலகத் தமிழர்களை உறைய வைத்து வருகிறது. இதுவரை 22 பேர் ஈழத்துக்காக உயிரை ஈந்துள்ளனர்.

ராஜா
22-03-2013, 12:32 PM
முதல் அறிவாளி & தியாகி முத்துக்குமார்

http://tamil.oneindia.in/img/2013/03/22-1363946026-muthukumar-600.jpg

சென்னை சாஸ்திரி பவன் முன் முத்துக்குமார் என்ற இளைஞன் முதன் முதலாக தீக்குளித்து உயிர் நீத்தபோது உலகம் முழுவதும் தமிழர்கள் அதிர்ந்து போனார்கள். முத்துக்குமாரின் உயிர்த் தியாகம் பல தமிழர்களை தீக்குளிப்புப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது.

ராஜா
22-03-2013, 12:36 PM
என்னை வைத்து இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்: ராஜபக்சே தகவல்

கொழும்பு: தன்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் செயற்திட்ட கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது,

பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடுகள் கட்டுவதில்லை. நமக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. என்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து நாம் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான நட்புறவு ஒருபோதும் குறையாது. இலங்கை சுதந்திரக் கட்சி பயங்கரவாதத்தை ஒழித்தது. பிளவடைந்த நாட்டை ஒரே தேசமாக ஆக்கியுள்ளோம். பொய் மற்றும் வதந்திகளுக்கு பெரிய அளவில் சக்தி இருப்பது தெரிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் வெல்ல கட்சி என்ற முறையில் எங்களால் முடியும்.

கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கட்சியின் செயலாளர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக வதந்திகள் பரவியுள்ளன. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றனர் என்றார்.

ராஜா
22-03-2013, 12:38 PM
கோவையில் இருந்து சென்னைக்கு ஸ்கூட்டியில் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

சென்னை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் கோவையிலிருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக சென்னைக்கு வந்தார். ரவுடிகளிடம் மாட்டவிருந்த அவர் போலீஸாரால் காப்பாற்றப்பட்டு பத்திரமாக அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வாழ்க்கை ரொம்ப சின்னது. பெரிது போலத் தோன்றினாலும் எல்லாமே விரல் சுட்டும் நேரத்தில் முடிந்து போய் விடும். இந்த குறுகிய கால வாழ்க்கையில்தான் எத்தனை துயரங்கள், எத்தனை சோகங்கள், எத்தனை சவால்கள்.. எல்லாவற்றையும் சமாளித்து வெல்வதுதானே வாழ்க்கையின் மகா தத்துவம்.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் பெண் சூரியாவின் வாழ்க்கை மிகப் பெரிய சோகமயமானது. சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்து விட்டார். தாயார் சாந்தி மற்றும் 3 சகோதரிகளுடன் வாழ்க்கை. சாந்தி கடுமையாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

சூர்யா நன்றாகப் படிக்கக் கூடியவர். இதனால் அவரை ஒரு ஹோமில் சேர்த்து படிக்க வைத்தார். சூரியாவும் சூட்டிகையாக படித்தார். பட்டதாரியும் ஆனார். ஆனால் காலத்தின்கோலம் பாருங்கள்.. படித்தும் கூட அவரால் மேலே வர முடியவில்லை. மேலும் தாயாரின் நிலையும் மனதை வருத்தவே அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மகளை கோவைக்கு அழைத்து வந்த சாந்தி, அங்கு அவரது பாட்டி வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு விடுவிடுவென தனது வீட்டை விட்டு வெளியேறிய சூர்யா, ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

நேராக பெட்ரோல் பங்குக்குப் போன அவர் அங்கு புல்லாக வண்டியை நிரப்பிக் கொண்டு நேராக சென்னையை நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை எந்தவித பயமும் இல்லாமல் ஓட்டியே கடந்த அவர் திருவான்மியூர் வந்து சேர்ந்தார்.

நள்ளிரவு வாக்கில் திருவான்மியூர் வந்த அவரை சிலர் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அப்போது பார்த்து அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் சூர்யாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றார். அங்கு விசாரித்தபோதுதான் சூர்யாவின் நிலை தெரிய வந்தது.

அழகான தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாகப் பேசியுள்ளார் சூர்யா. ஆனால் அவரை பாதித்த மன அழுத்தம்தான் அவரது நிலையைப் பரிதாபமாக்கியுள்ளது. சாந்திக்குத் தகவல் கொடுத்து அவரை வரவழைத்த போலீஸார் பின்னர் அவரிடம் சூர்யாவை ஒப்படைத்தனர். கண்ணீர் மல்கமகளைக் கட்டி அணைத்து அழுத சாந்தி மகளுடன் கோவை கிளம்பிச் சென்றார்.

ராஜா
22-03-2013, 12:56 PM
புனித வியாழனன்று சிறை கைதிகளின் கால்களை கழுவும் போப் பிரான்சிஸ்

வாடிகன்: புனித வியாழனை முன்னிட்டு வரும் 28ம் தேதி போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள சிறையில் இருக்கும் 12 கைதிகளின் கால்களை கழுவவிருக்கிறார்.

அன்பு, கருணை ஆகியவற்றை இந்த உலகிற்கு போதித்த இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடர்களின் கால்களை கழுவினார். இயேசு பிரானை பின்பற்றும் விதமாக போப் ஆண்டவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வழக்கமாக போப் ஆண்டவர்கள் புனித வியாழன் அன்று வாடிகன் தேவாலயத்தில் வைத்து தான் கால் கழுவும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் போப் 16ம் பெனடிக்ட் இந்த வழக்கத்தை மாற்றி ரோம் நகரில் உள்ள கஸல் டெல் மார்மோ சிறைக்கு சென்று அங்கு இருந்த 12 கைதிகளின் கால்களை கழுவினார். இந்நிலையில் அவரது பாணியில் போப் பிரான்சிஸும் அதே கஸல் டெல் மார்மோ சிறைக்கு வரும் 28ம் தேதி அதாவது புனித வியாழன் அன்று மதியம் சென்று அங்குள்ள கைதிகளில் 12 பேரின் கால்களை கழுவவிருக்கிறார்.

ராஜா
22-03-2013, 01:42 PM
பாலியல் பலாத்காரம்: ஆதரவற்றோர் காப்பக நிறுவனருக்கு மரண தண்டனை

மூளை வளர்ச்சி குன்றிய ஐந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆதரவற்றோர் காப்பக நிறுவனர் ஒருவருக்கு மும்பை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் கலம்போலி எனுமிடத்தில் ராமசந்திர கரஞ்ஜுலே (54) என்பவர் பெண்களுக்காக ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வந்தார். அங்கு வசித்து வந்த மூளை வளர்ச்சி குன்றிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கரஞ்ஜுலே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என புதன்கிழமை தீர்ப்பாகியது. வியாழக்கிழமை இவர்களின் தண்டனை அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். அதில் இருவர் ஊமை மற்றும் காது கேளாதோர். இவர்கள் இருவரும் சைகை மூலம் சாட்சியம் அளித்தனர்.

பெண்களில் ஒருவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பிறகு அவர் உயிரிழந்தார். அதன் காரணமாக முக்கிய குற்றவாளியான ராமசந்திர கரஞ்ஜுலேவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஆதரவற்றோர் காப்பகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சோனாலி படாடே, பொறுப்பாளர் பார்வதி மாவ்லே ஆகிய இரு பெண்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற மற்றொருவரான காண்டூ கஸ்பே, பிரகாஷ் கட்கே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கஸ்பே தனியாக ஓர் ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்திவருகிறார். கட்கே அதில் ஆசிரியராக உள்ளார்.

பாலியல் தாக்குதல் நடத்தியதாக நானாபாவ் கரஞ்ஜுலே என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ராமசந்திராவுக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி தெரிவித்தது: இவர் சமூகத்துக்கு ஒரு அச்சுறுத்தல். இவருக்கு ஆயுள் சிறை வழங்குவதென்பது குறைவான தண்டனை. இவர் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்.

தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. சமூக தேவைகளுக்கேற்ப சட்டங்களும் மாற வேண்டும். குற்றங்களை தடுக்க வேண்டுமானால் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

ராஜா
22-03-2013, 01:45 PM
கேஜரிவால் போராட்டத்தில் பங்கேற்க ஹசாரே மறுப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க சமூக சேவகர் அண்ணா ஹசாரே மறுத்துவிட்டார்.

கட்சி ரீதியான அரசியலில் பங்கேற்கத் தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக ஹசாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:÷""அரவிந்த் கேஜரிவால் என்னைச் சந்தித்து, அவர் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். நாங்கள் எந்தவொரு கட்சியையும் சார்ந்து செயல்பட மாட்டோம் என்பதையும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். எனவே, மார்ச் 23-ஆம் தேதி கேஜரிவால் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன்'' என்றார்.

ராஜா
22-03-2013, 01:48 PM
சிபிஐ சோதனை ஏற்கத்தக்கதல்ல: நாராயணசாமி

மத்திய பணியாளர்நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமியிடம், "அரசியல் காரணங்களுக்காக, ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதா?' என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "சோதனை நடவடிக்கை மிகவும் துரதிருஷ்டவசமானது. ஸ்டாலின் மீது சிபிஐ எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது சிபிஐ அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரது வீட்டுக்குச் சோதனைக்காகச் சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.

ராஜா
22-03-2013, 02:10 PM
கடற்படை வீரர்கள் தூக்கிலிட மாட்டோம்: இத்தாலிக்கு மத்திய அரசு உறுதி

கடற்படை வீரர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கமாட்டோம் என்று மத்திய அரசு அளித்த உறுதிமொழியின் பேரில்தான், அவர்களைத் திரும்ப அனுப்ப இத்தாலி ஒப்புக் கொண்டுள்ளது.இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இத்தாலிய கடற்படை வீரர்களை திரும்ப கொண்டு வர எந்த பேரமும் நடக்கவில்லை. கடற்படை வீரர்கள் திரும்ப வருவதற்கு இத்தாலியுடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனக் கூறினார்

ராஜா
22-03-2013, 02:53 PM
டீசல் விலை 45 பைசா உயர்வு

டீசல் விலை 45 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

ராஜா
22-03-2013, 03:34 PM
லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

லட்சத்தீவு கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமையன்று (மார்ச் 23) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.