PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12

ராஜா
26-07-2012, 03:57 AM
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி

சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரே நேற்று மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் பால்தாக்கரே (84). இவருக்கு நேற்று லேசான மூச்சுதிணறல் ஏற்பட்டது.

இதனால் உடல்சுகவீனம் அடைந்தார். இதைத் தொடர்ந்து மும்பை லீலாவதி மருத்துவம*னையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

பால்தாக்கரே உடல்நிலை கவலைப்படும்படியாக இல் லை, இது வழக்கமாக நடக்கும் உடல் பரிசோதனை தான் எனவும், 2 அல்லது 3 நாட்களுக்கு மேல், பால்தாக்கரே மருத்துவமனையி*லேயே தங்கி சிகிச்சை பெற்று வருவார் என சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சுவேதாபுர்லேகர் கூறினார்.

ராஜா
26-07-2012, 04:00 AM
பிரணாப் முகர்ஜி பயணம் செய்யப்போகும் காரின் உட்புறம்..


http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/bus/car-jana-007.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/bus/car-jana-002.jpg

ராஜா
26-07-2012, 04:19 AM
நகையை மீண்டும் வீட்டில் போட்டுவிட்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய திருடன்


சைதாப்பேட்டை ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் எச்.அசார் உசேன். டாக்டரான இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் அசார் வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த 22-ம் தேதி மர்ம நபர் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகையையும், ரூ. 2 லட்சத்தையும் திருடிக் கொண்டு தப்பியோடினர். வீட்டுக்குத் திரும்பி வந்த அசார், வீட்டில் நகையும், பணமும் திருட்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து அவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை அந்த வீட்டு முன் ஒரு பையைக் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் திருடப்பட்ட நகையும், ஒரு கடிதமும் இருப்பதை பார்த்து அசார் ஆச்சரியமடைந்தார். அந்தக் கடிதத்தில் வீட்டில் திருடியதற்கு மன்னிப்பு கோரப்பட்டிருந்ததாம்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜா
26-07-2012, 04:31 AM
பள்ளி பேருந்தில் வீடு திரும்பிய போது விபரீதம்- ஓட்டை வழியே விழுந்த மாணவி பலி- பேருந்துக்கு தீ வைப்பு.

சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக் கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தவள் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள். தினமும் பள்ளிக் கூட பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு ஸ்ருதி திரும்புவாள். நேற்று மாலை முடிச்சூர் லட்சுமிபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை சராமரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை போலீசில் பொதுமக்களே ஒப்படைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் பேருந்துக்கும் தீ வைத்தனர்.

பள்ளி பேருந்தில் ஓட்டை இருந்தும் அதை கவனிக்காமல் மாணவியின் உயிரை பறித்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ராஜா
26-07-2012, 04:41 AM
ஒகேனக்கல் யாருக்கு சொந்தம்?: சர்வே நடத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகம்!

http://tamil.oneindia.in/img/2012/07/26-hoggenakal-2-300.jpg

ஒகேனக்கல் எந்த மாநிலத்துக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய மறு சர்வே நடத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ராஜா
26-07-2012, 07:03 AM
ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

http://tamil.oneindia.in/img/2012/07/26-high-court-chennai-300.jpg

ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ராஜா
26-07-2012, 07:08 AM
சென்னை வந்த பேருந்தில் பயங்கரம்... 'சைக்கோ' மனிதன் கத்தியால் குத்தி 3 பேர் பலி!

ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பயணித்த சைக்கோ மனிதன் சரமாரியாக சக பயணிகளைக் கத்தியால் குத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதில் 24 பேர் பயணித்தனர். பேருந்து சூளூர்ப்பேட்டையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ஒரு நபர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதை எதிர்பார்க்காமல் நிலை குலைந்தனர் குத்துப்பட்டவர்கள்.

சைக்கோ மனிதன் நடத்திய இந்த வெறியாட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்காவது நபரை கத்தியால் அந்த நபர் குத்தியபோது அவர் போட்ட அலறலால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விளக்கைப் போட்டார். மேலும் மற்ற பயணிகளும் விழித்தெழுந்தனர். இதைப் பார்த்த அந்த மர்ம நபர் வேகமாக பேருந்தை விட்டுக் கீழே குதித்து ஓடி விட்டார். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் சூளூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நபரையும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெயர் ரமேஷ், சென்னையைச் சேர்ந்தவர், என்ஜினியர் என்று தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மூன்று பேரில் 2 பேர் ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர். ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர். இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் சைக்கோ மனிதர் நடத்திய இந்த வெறியாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
26-07-2012, 07:11 AM
குஜராத் கலவரத்தில் தப்பு செய்திருந்தா தூக்கில் போடுங்க...: மோடி,

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முதல் முறையாக உருது மொழியில் வெளியாகும் வார ஏட்டுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், குஜராத் வன்முறைகளில் தமக்கு தொடர்பில்லை.. தாம் தவறு செய்திருந்தால் தம்மை தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார்.

ராஜா
26-07-2012, 07:13 AM
மறுவாழ்வு தருவதாக ஏமாற்றி 8 ஊனமுற்ற, விதவைகளை மணந்து மோசடி செய்த என்ஜினியர்

ஊனமுற்ற மற்றும் விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாகக் கூறி 8 பேரை திருமணம் செய்து மோடி செய்த என்ஜினியர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன் ரத்தீஷ். என்ஜினியரிங் படித்துள்ள இவன் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும் விதவைகள் மற்றும் ஊனமுற்ற பெண்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் இணையதளத்தில் விளம்பரப்படுத்தினான்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து இவனை தொடர்பு கொண்ட பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு நகைகளையும் பறித்துக் கொண்டு ஏமாற்றியிருக்கிறான். ஏமாற்றமடைந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வரதட்சணை ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி ரத்தீஷை கைது செய்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

M.Jagadeesan
26-07-2012, 07:18 AM
ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

http://tamil.oneindia.in/img/2012/07/26-high-court-chennai-300.jpg

ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.


இதுபோல எல்லா பொதுநல வழக்குகளில் நீதிமன்றம் அக்கறை காட்டினால் நாட்டுக்கு நல்லது.

ராஜா
26-07-2012, 07:23 AM
ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்த ஆர்டிஓ அதிகாரி மீ்து இதுவரை நடவடிக்கை இல்லை-மக்கள் கொதிப்பு

http://tamil.oneindia.in/img/2012/07/26-zion-school-bus.jpg

சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு ஓட்ட தகுதியானது என்று எப்சி அளித்த வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசின் செயல் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில்தான் சமீபத்தில் ஜியோன் பள்ளியின் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எப்சி வாங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் நான்கு பள்ளிகளை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அத்தனை பேருந்துகளுக்கும், வேன்களுக்கும் சமீபத்தில்தான் எப்சி வாங்கியுள்ளனர்.

அப்படி வாங்கப்பட்ட பேருந்தில் இருந்த பெரிய ஓட்டை வழியாகத்தான் ஸ்ருதி கீழே விழுந்து உயிரை விட்டுள்ளாள். இப்படிப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு எப்படி ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்தார்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.

ராஜா
26-07-2012, 07:24 AM
இதுபோல எல்லா பொதுநல வழக்குகளில் நீதிமன்றம் அக்கறை காட்டினால் நாட்டுக்கு நல்லது.

கண்ணுற்று மறுமொழிந்தமைக்கு நன்றி அய்யா..!

ராஜா
26-07-2012, 04:44 PM
அறிவிப்பு வெளியிட்டு மாயாவதி சிலையின் தலை, கைகள் துண்டிப்பு

உத்தர பிரதேச நவநிர்மன் சேனா அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சிலையை சேதப்படுத்தப்போவதாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில் லக்னோவில் உள்ள அம்பேத்கார் பூங்கா அருகே உள்ள மாயாவதியின் சிலை அருகே நவநிர்மன் சேனாவைச் சேர்ந்த 4 பேர் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புகைப்படம் எடுத்தனர்.

அப்போது அங்கிருந்த காவலாளி அவர்களை சிலைக்கு அருகே செல்லவிடமால் தடுத்துள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் புகைப்படம் தானே எடுக்கிறோம். சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறோமே என்று கூறியுள்ளனர். பிறகு சிலைக்கு அருகே சென்றதும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து சிலையின் தலையை துண்டித்தனர்.

கைப்பையுடன் இருந்த கையையும், இன்னொரு கையையும் துண்டித்தனர். முன்பு கம்பீராக நின்ற சிலை தற்போது தலையின்றி, கைகள் இன்றி அலங்கோலமாக உள்ளது. அந்த 4 பேரும் அங்கிருந்து செல்லும் முன்பு ஒரு துண்டு பிரசுரத்தையும் போட்டுச் சென்றுள்னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
26-07-2012, 04:46 PM
திருச்சியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள், மருமகன்கள் கைது: பதட்டம்

திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்*ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விஸ்வநாதன் கைது செய்யப்பட்டதால் திருச்சியில் பதட்டமாக உள்ளது. இதையடுத்து திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜா
27-07-2012, 03:44 AM
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை

http://tamil.oneindia.in/img/2012/07/27-dayanidhi-maran-300.jpg

மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததன் மூலம் 547 கோடி ரூபாய் அளவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும், சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோர் பலனடைந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தயாநிதிமாறன், அவரது சதோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் மேக்சிஸ் ரால்ப் மார்ஷல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி, சன் டைரடக்ட் டிவி, ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து இந்த மாத துவக்கத்தில் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்தியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜா
27-07-2012, 03:48 AM
இன்னொரு அவலம் ; பள்ளிப் பேருந்தின் ஜன்னலில் தலை சிக்கி மின்கம்பத்தில் மோதி மாணவன் பலி!

டெல்லி, பஞ்சாபி பாக் ஹன்ஸ்ராஜ் மாடல் ஸ்கூலில் 10வது வகுப்பு படித்து வந்தவர் ஜஸ்கிரண் சாவ்லா. 16 வயதான இவர் பள்ளிப் பேருந்தில் நேற்று பயணித்துள்ளார். பேருந்து ஒரு இடத்தில் மாணவர்களை இறக்கி விடுவதற்காக நின்றுள்ளது. அப்போது சாலையோரத்தில் விற்ற ஐஸ் கிரீ்மை வாங்குவதற்காக, சாவ்லா ஜன்னல் வழியாக தலையை நீட்டி வாங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென கிளம்பி விட்டது. இதனால் தலையை உள்ளே எடுக்க முயன்றார் சாவ்லா. ஆனால் தலை சிக்கிக் கொண்டு வரவில்லை. இதை அறியாத டிரைவர் பேருந்தை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் சாவ்லாவின் தலை பலமாக மோதியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

ராஜா
27-07-2012, 03:50 AM
இடமாற்ற விவகாரம்: தென்காசி அருகே எஸ்.ஐ.யை குத்திக் கொன்ற ஏட்டு

http://tamil.oneindia.in/img/2012/07/27-si-essaki-muthu-300.jpg

தென்காசி அருகே உள்ள சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் இசக்கி முத்து(56). அதே காவல் நிலையத்தில் ரைட்டராக பணி புரிந்தவர் சண்முகராஜா(46). அவர்கள் இருவரும் காவல் நிலையம் அருகே வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் சண்முகராஜா சுத்தமல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தான் சுத்தமல்லிக்கு மாற்றல் ஆனதற்கு இசக்கி முத்து தான் காரணம் என்று நினைத்த சண்முகராஜா அவரிடம் சுரண்டை காவல் நிலையத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரும் கட்டிப் புரண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சண்முகராஜாவை பாதுகாப்பு பணிக்காக பத்தமடைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மது அருந்திவிட்டு சுரண்டை காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது இசக்கி முத்து அங்கில்லாததால் காவல் நிலையம் அருகே உள்ள வீட்டுக்கு சென்றார்.

அங்கு இசக்கு முத்துவை பார்த்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்தினார். இசக்கி முத்துவின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வரவே சண்முகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அங்கு வந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவி்ட்டார்.

இச்சம்பவம் நெல்லை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சரக காவல் துறை தலைவர் வரதராஜு, நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோர் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ராஜா
27-07-2012, 03:53 AM
ஏன் உங்கள் பள்ளியை மூட உத்தரவிடக் கூடாது?... ஜியோன் பள்ளிக்கு அரசு நோட்டீஸ்

http://tamil.oneindia.in/img/2012/07/27-zion-school-selayur.jpg

அரசு விதிமுறைகளைப் பின்பற்றாத உங்களது பள்ளியை மூட ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேட்டு சென்னை சேலையூர் ஜியோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்படுமா என்ற அச்சம் மாணவ, மாணவியர், பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

ராஜா
27-07-2012, 03:55 AM
புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க திடீர் மறுப்பு

திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றும் அதிமுக அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை அறிவிக்க மறுத்து விட்டனர். மேலும், இந்த வழக்கை வேறு நீதிபதிகளுக்கு மாற்றுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
27-07-2012, 03:57 AM
குடியரசுத் தலைவர் தேர்தலில் 52 செல்லாத வாக்குகள்: வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது: கலைஞர்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/dmk/kalaigar/kalaigar/kalaigar-11111.jpg

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி :- குடியரசுத் தலைவர் தேர்தலில் விழுந்துள்ள செல்லாத வாக்குகள் பற்றி?

பதில் :- வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும்தான் அப்படி வாக்களித்தவர்களில் 52 பேர் செல்லாத வாக்கு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு பேர் செல்லாத வாக்கு அளித்துள்ளார்கள். இது வருத்தத்திற்குரிய செய்திதானே?

ராஜா
27-07-2012, 04:00 AM
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் சத்தீஸ்கர் வீட்டுவசதி துறை செயலாளராக நியமனம்

http://tamil.oneindia.in/img/2012/07/26-alex-paul-menon99.jpg

சத்தீஸ்கர் மாநிலத்தி்ல் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக நெல்லையைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நக்சலைட்டுகளால் கட்டத்திச் செல்லப்பட்டார். நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கடத்தப்பட்டு 2 வாரம் கழி்த்து மே மாதம் 3ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அலெக்ஸ் பால் மேனன் உள்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது. அலெக்ஸ் பால் மேனனை வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை செயலாளராக நியமித்துள்ளனர். மேலும் அவர் ராய்ப்பூர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நக்சலைட்டுகளால் விடுவிக்கப்பட்டபோது அம்மாநில முதல்வர் ராமன்சி்ங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சுக்மா மாவட்ட கலெக்டர் விரும்பும் வரையில் அவர் அந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்ற உதவி செய்யப்படும் என்றார். இந்நிலையில் அலெக்ஸ் பால் மேனன் திடீ*ரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jayanth
27-07-2012, 04:34 AM
சுடச் சுட செய்திகள் கொடுக்கும் ராஜாவிற்கு நன்றிகள்...

ராஜா
27-07-2012, 04:40 AM
கண்ணுற்று மறுமொழிந்தமைக்கு, நன்றி ஜயந்த்..!

ராஜா
27-07-2012, 04:44 AM
குழாய் எரிவாயு திட்டம்- தமிழ்நாட்டில் ஒரு நந்திகிராமம் அனுபவம் வேண்டாம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கொச்சி- பெங்களூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கெயில் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு அளித்த தீர்ப்பு

தங்களின் விவசாய நிலத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் ஜனநாயக வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது என்பது இயல்பானதுதான். அத்தகைய ஜனநாயக வழியிலான போராட்டங்களை உத்தரவுகள் என்ற பெயரில் இந்த நீதிமன்றத்தால் நசுக்க இயலாது. இது ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்ற வகையில் அணுக முடியாது. விவசாயிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான தீர்வினை ஏற்படுத்தும் கடமை அரசுக்கு உள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற பிரச்னைகளில் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் ஏற்பட்ட சம்பவங்கள் நமக்கு அனுபவங்களாக உள்ளன. அதுபோன்ற அனுபவங்கள் தமிழகத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே எந்தத் தொழில் திட்டத்தையும் செயல்படுத்திட முடியும். இந்தப் பிரச்னையில் விவசாயிகளை சமாதானப்படுத்தி, சுமுகத் தீர்வினை ஏற்படுத்திடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இதற்காக அரசு ஒரு உயர் நிலைக் குழுவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் திட்டத்தை செயல்படுத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ராஜா
27-07-2012, 04:46 AM
அமர்நாத் யாத்ரீகர்களின் வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து: 16 பேர் பலி

யாத்ரீகர்கள் 34 பேரை ஏற்றிக் கொண்டு டிரக் ஒன்று அமர்நாத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. அந்த டிரக் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் ஜமூரா மோர்ஹ் அருகே நேற்று இரவு 11.30 மணிக்கு சென்று கொண்டிருக்கையில் நிலை தடுமாறி ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 16 யாத்ரீகர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் 7 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

லேசான காயமடைந்த 2 யாத்ரீகர்கள் முதலுதவி அளித்த பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 14ம் தேதி அமர்நாத்தில் இருந்து யாத்ரீகர்களுடன் புறப்பட்ட எஸ்.ஆர்.டி.சி. பேருந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்பன் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததில் 15 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
27-07-2012, 06:04 AM
ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராஜபக்ச: வரிந்து கட்டிஎதிர்ப்புக்கு தயாராகும் தமிழர்கள்

http://tamil.oneindia.in/img/2012/07/26-rajapakse3-300.jpg

ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்லும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க தமிழர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.

ராஜா
27-07-2012, 06:06 AM
சிபிஐ விசாரணை எதிரொலி: பங்குச் சந்தையில் 40% சரிவை எட்டிப் பார்த்த சன் டிவி பங்குகள்

http://tamil.goodreturns.in/img/2012/07/27-sun-network1-300.jpeg

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ரூ549 கோடி லஞ்சமாகப் பெற்றது என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாநிதி, கலாநிதி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பும் தயாநிதியிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக நேற்று தகவல் வெளியானது.

இதையடுத்து இன்று பங்குச் சந்தையின் தொடக்கத்தில் சன் டிவியின் பங்குகள் 40 விழுக்காடு சரிவைத் தொட்டது. இன்றைய பங்குவர்த்தகத்தின்போது சன் டிவியின் பங்குகள் மதிப்பு ரூ295 ஆக இருந்தது. அதன் பின்னர் சட்டென ரூ176.75க்கு குறைந்தது. இருப்பினும் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை . பின்னர் இதன் மதிப்பு ரூ262.55 ஆக இருந்தது. இருப்பினும் இது 11 விழுக்காடு சரிவாகும்.

ராஜா
27-07-2012, 06:13 AM
நியூயார்க், சாங்காயைவிட மும்பை, டெல்லியில் தான் வாடகை அதிகம்!

http://tamil.goodreturns.in/img/2012/07/26-mumbai-300.jpg

உலகிலேயே அலுவலக வாடகை அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பையும் டெல்லியும் இடம்பிடித்திருக்கிறது. அதுவும் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்களைவிட சீனாவின் சாங்காய் நகரத்தை விட மும்பை டெல்லியில்தான் வாடகை அதிகமாம் நியூயார்க்கில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மாதத்துக்கான வாடகை 63 டாலர். வாஷிங்டனில் 48 டாலர். சாங்காயில் 41 டாலர்.. சரி மும்பை, டெல்லியில் நிலைமை எப்படி?

மும்பையில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மாதத்துக்கான வாடகை 65 டாலர். டெல்லியில் 73 டாலர் என்று இருக்கிறது. அதுவும் கடந்த ஓராண்டாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்ததால் ஏராளமான பன்னாடு நிறுவனங்கள் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துப் போட்டுள்ளன. பார்ச்சூன் ஏடு பட்டியலிட்டிருக்கும் 500 முன்னணி நிறுவனங்களில் 300 நிறுவனங்கள் டெல்லி புறநகரான குர்கானில் இடம்பிடித்திருக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
27-07-2012, 06:19 AM
புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள்!

http://tamil.goodreturns.in/img/2012/07/26-burj-khalifa-2-300.jpg

உலகிலேயே மிகவும் ஆடம்பரமான குடியிருப்பு என்ற பெயரும் புர்ஜ் கலீபாவுக்கு உண்டு. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த குடியிருப்பில் வசிப்போரில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம்.மொத்தம் உள்ள 900 குடியிருப்புகளில் 100க்கும் மேலான வீடுகளை இந்தியர்கள்தான் வாங்கியுள்ளனராம். மொத்தம் 828 மீட்டர் உயரம் கொண்ட கட்டடம் இது. உலகிலேயே இதுதான் மிகவும் உயரமான கட்டட வளாகமாகும்.

இதுகுறித்து எம்மார் பிராப்பர்டீஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த 2010ம் ஆண்டு இங்குள்ள குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன. அது முதல் இதுவரை 100 முதல் 150 வீடுகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர். துபாயில் பெருமளவில் முதலீடு செய்வதில் இந்தியர்கள் காட்டி வரும் ஆர்வத்தையே இது காட்டுகிறது. துபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் இங்கு பெருமளவில் சொத்துக்களை வாங்குகின்றனர், விற்கின்றனர். அவர்களே கட்டடம், வீடு வாங்குவது தொடர்பாக அதிக அளவிலான தகவல் கோரி அணுகுகின்றனர் என்றார்.

புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கியுள்ளோரில் முக்கியமானவர்கள் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர். 206 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலீபாவில் கடந்த 2008ம் ஆண்டு ஒரு சதுர அடி ரூ. 1,06,000 என்று விற்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து போனதால் தற்போது ஒரு சதுர அடிக்கு 38,000 முதல் 45,000 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
27-07-2012, 12:05 PM
ரோஹித் ஷேகரின் தந்தை என்.டி.திவாரிதான்: டிஎன்ஏ அறிக்கை

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/congress/ND-Tiwari.jpg

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரிதான் தனது தந்தை எனக் கூறி ரோகித் சேகர் என்ற இளைஞர் வழக்கு தொடர்ந்தார். திவாரி இதை மறுத்து வந்தார்.

பல்வேறு முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைக்குப் பின்னர், திவாரிக்கு மரபணு சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மே மாதம் திவாரியிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் அவருடைய மகன் எனக் கூறி வரும் ரோகித் சேகர் மற்றும் அவரது தாயாரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கை ஜூலை 27 திறக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் மரபணு சோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் திறந்து படிக்கக் கூடாது என்று திவாரி டெல்லி ஐகோர்ட்டில நேற்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ரேவா கேத்ரபால், சோதனை அறிக்கையை கோர்ட்டில் திறந்து படிக்க முடிவு செய்தார்.

மரபணு சோதனையின்படி, ரோஹித் ஷேகரின் மரபணுவும், என்.டி. திவாரியின் மரபணுவும் ஒத்துப் போவதாகவும், எனவே, ரோஹித் ஷேகர் திவாரியின் மகன்தான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா சர்மா - என்.டி.திவாரிக்கு பிறந்தவர் ரோஹித் என்றும் டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.

ராஜா
27-07-2012, 12:07 PM
உலகின் மிகப்பெரிய மற்றும் திறந்தவெளி கழிவறையாக இந்திய ரயில்வே உள்ளது: ஜெய்ராம் ரமேஷ்


உலகின் மிகப்*பெரிய மற்றும் திறந்த கழிவறையாக இந்திய ரயில்வே விளங்குவதாக, மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

தலைநகர் டில்லியில், தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,


சர்வதேச அளவில், திறந்தவெளி மலம் கழித்தலின் தலைமையகமாக இந்தியா விளங்கி வருகிறது. இது நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடு மற்றும் அவமானம். நாளொன்றுக்கு 11 மில்லியன் மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அங்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிலேயே உள்ளது.


உலகின் மிகப்பெரிய மற்றும் திறந்தவெளி கழிவறையாக இந்திய ரயில்வே உள்ளது. ரயில் பெட்டிகளில் பயோ-டாய்லெட்கள் அமைக்க வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் தற்போதைய அளவில், 9 ரயில்களில் 436 பெட்டிகளில் மட்டுமே பயோ-டாய்லெட்கள் உள்ளது என்று கூறியுள்ளார்.

ராஜா
27-07-2012, 12:15 PM
சிவலிங்கத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட வாலிபர்

திருப்பதியைச் சேர்ந்த லக்ஷ்மண் ஜான்சன் தற்போது தனது குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். அவர் அண்மையில் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார். இந்நிலையில் அவர் இந்து கடவுளான சிவலிங்கத்தின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்தவர்கள் கொதித்தெழுந்துவிட்டனர்.

இதையடுத்து அவர் மீது பல்வேறு மாநிலங்களில் 12க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே மும்பையில் உள்ள அவரது வீட்டை சிவசேனா கட்சியினர் எரித்துவிட்டதாகவும், அவர் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் தனது பேஸ்புக் புரொபைலில் தான் மத்திய ரயில்வே பார்சல் குத்தகைக்காரராக உள்ளதாகவும், மேற்கத்திய நாடுகளில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேஸ்புக் புரொபைலே பொய்யானது என்று கருதப்படுகிறது.

ராஜா
27-07-2012, 12:48 PM
ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!

http://tamil.oneindia.in/img/2012/07/27-kousalya-2-300.jpg

கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம்.

வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த ட்ரீட்மென்டில் முக்கியத் திருப்பமாக அமைந்தது, சிகிச்சைக்கு வந்த கவுசல்யா சிஷ்யையாக மாறிப் போனதுதான்! வலிக்கு சிகிச்சை வேணும் சாமி என வந்து, நிரந்தர பக்தையானவர்தான் ரஞ்சிதாவும். இவரைத் தவிர, மாளவிகா, ராகசுதா, யுவராணி, அண்ணி சீரியல் மாளவிகா என நடிகைகள் பலரும் இந்த குரூப்பில் உள்ளனர்.

ராஜா
28-07-2012, 03:24 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_791534.jpeg

ராஜா
28-07-2012, 03:39 AM
"தயாநிதி, கலாநிதி ரூ.550 கோடி லஞ்சம் பெற்றது உண்மையே': சி.பி.ஐ., அறிக்கை

"மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி தவறாக பயன்படுத்தி, ஏர்செல் நிறுனத்தை மேக்சிஸ் நிறுவனம் வசம் செல்ல வைத்தது உண்மையே. இந்த விஷயத்தில், அண்ணன், தம்பி இருவருமே தீவிரமாக செயல்பட்டு, முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளனர்.

சிவசங்கரனின் தொழில்களை ஒன்றுமில்லாமல் செய்து, நாசமாக்கியுள்ளனர். குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அடிப்படை முகாந்திரம் இருப்பதென்பதும் உண்மையே' என, பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அளித்துள்ள அறிக்கையில், சி.பி.ஐ., சுட்டிக்காட்டியிருக்கிறது.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான சிவசங்கரன், தனக்கு "ஸ்பெக்ட்ரம்' வேண்டி விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்திய தயாநிதி, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விடும்படி மறைமுகமாக நிர்பந்தப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றி, ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் கைகளுக்கு மாறியது. இதன்பின், மள மளவென "ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு பிரதி உபகாரமாக "சன் டைரக்ட்' நிறுவனத்திற்கு, மேக்சிஸ் நிறுவனம் சார்பில், 550 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.

அறிக்கை சமர்ப்பிப்பு:

இதையடுத்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. இந்த சர்ச்சை, கடந்த ஓராண்டாக நீடித்து வரும் நிலையில், தன் விசாரணை அறிக்கையை, கடந்த 12ம் தேதி பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:கடந்த 2004 முதல் 2007 வரை, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, தன் பதவியை முற்றிலும், சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தியுள்ளார். ஏர்செல் நிறுவனம் கேட்டிருந்த, "ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்களை தாமதப்படுத்தியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. தாமதப்படுத்துவதற்கான உறுதியான காரணங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், வேண்டுமென்றே அந்நிறுவனத்திற்கு "ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்கள் வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டுள்ளன. ஏர்செல் நிறுவனத்தை, தொலைத் தொடர்பு தொழிலில் இருந்தே விரட்டியடிக்கும் நோக்கில், இவ்வாறு செயல்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

நிர்பந்தம்:

ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நாட்டின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விடும்படி அந்நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவசங்கரனோ தன் நிறுவனத்தை விற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்போது அமைச்சராக இருந்த தயாநிதியும், அவரது சகோதரர் கலாநிதியும், இப்பிரச்னையில் தாங்களே நேரடியாக களம் இறங்கி, தீவிரமாக நெருக்கடி அளித்துள்ளனர். இவர்களின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது.அமைச்சரும், அவரது சகோதரரும் ஏர்செல் நிறுவனத்தை, மேக்சிஸ் நிறுவனத்திற்கு செல்ல வைப்பதில், தனி ஆர்வமும், தீவிரமும் காட்டினர் என்பதற்கு அடிப்படை முகாந்திரங்கள் நிறையவே உள்ளன.

விரைவாக லைசென்ஸ்கள்:

இவர்களின் தீவிரமான நெருக்கடி காரணமாக, வேறு வழியின்றி மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் நிறுவனம் போயுள்ளது. அவ்வாறு போன பிறகு, வேக, வேகமாக லைசென்ஸ்கள் மேக்சிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவரை இழுத்தடிக்கப்பட்டு காலதாமதம் செய்யப்பட்ட லைசென்ஸ்கள், நிறுவனம் கைமாறியவுடன் விரைவாக அளிக்கப்பட்டிருப்பதும் உண்மையே.

இவ்வாறு ஒருபுறம், லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னொரு புறம் பிரதி உபகாரமாக, லஞ்சப் பணப் பரிவர்த்தனை நடந்து முடிந்துள்ளது. அதாவது, ஆஸ்ட்ரோ என்ற நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். இந்த ஆஸ்ட்ரோ நிறுவனமானது, அமைச்சராக இருந்த தயாநிதியின் சகோதரருக்கு சொந்தமான, சன் குழுமத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. சாதாரணமாக வெறுமனே வாங்கவில்லை. சன்குழுமத்தின் ஒவ்வொரு பங்குக்கும், பிரீமியமாக 69 ரூபாய் 75 பைசா வரை கூடுதலாக கொடுத்து, வாங்கியுள்ளது.

பங்களிப்பு அதிகம்:

இதே காலகட்டத்தில், மேக்சிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரால்ப் மார்ஷல் என்பவர், மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இருவருடனுடம் தீவிர தொடர்பில் இருந்துள்ளார். இதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியதிலும், இழுத்தடிக்கப்பட்ட லைசென்ஸ்கள் வேக, வேகமாக பிறகு வழங்கப்பட்டதிலும், சன் குழுமத்தின் பங்குகளை, கூடுதல் விலை கொடுத்து ஆஸ்ட்ரோ வாங்கியதிலும், தயாநிதி, கலாநிதி ஆகிய இரண்டு பேரின் தலையீடுகள், தீவிரமாகவும் அதிகமாகவும் இருந்துள்ளன. தவிர, ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனது தொழில் வர்த்தக தொடர்புகளை நாசப்படுத்தி, அவற்றை ஒன்றுமே இல்லாமல் செய்திருப்பதிலும், இந்த இருவரது பங்களிப்புகளும் அதிகமாகவே உள்ளன.

லஞ்சப் பணம்:

ஒட்டு மொத்த முறைகேட்டின் மூலம், பிரதி உபகாரமாக வந்த லஞ்சப் பணம் என்பது 550 கோடி ரூபாய். மிகவும் துல்லியமாக கூற வேண்டுமெனில், 549.96 கோடி ரூபாய். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதும், வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் தர மறுத்ததும், காலம் தாழ்த்தி இழுத்தடித்ததும் உண்மையே. இதே காலகட்டத்தில், முழு தகுதி படைத்த டிஷ்நெட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, அதற்கு மாறாக மேக்சிஸ் நிறுவனத்திற்கு லைசென்ஸ்கள் தரப்பட்டுள்ளதும் உண்மையே.கலாநிதிக்கு அமைச்சர் தயாநிதி வெறும் சகோதரர் மட்டுமல்ல. கலாநிதியுடன் தொழில் வர்த்தக தொடர்புகளுடையவராக, நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கடந்த 9.10.2011ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன், சன் டைரக்ட், ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் மற்றும் பெயர் தெரியாத சில நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு சி.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாகுமா குற்றப்பத்திரிகை?

தயாநிதியிடம் கடந்த வாரம், ரகசியமான இடத்தில் வைத்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக நேற்று செய்திகள் வெளியாகின. விசாரணை அனைத்தும் முடிந்து விட்டதால், விரைவில் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்யப் போகிறது என, அந்தச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சி.பி.ஐ., வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியது உண்மையே' என்று தெரிவித்தன. விசாரணை முடிந்து விட்டாலும், இவ்விஷயத்தில் இந்தியா - மலேசிய அரசுகளுக்கு இடையில், ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டுவதற்கு விசேஷ நடைமுறைகளைப் பின்பற்றி பெற, அதிகாரப் பூர்வமான கடிதப் போக்குவரத்துகள் தொடர்கின்றன. எனவே, குற்றப் பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும் கூறின.

ராஜா
28-07-2012, 03:44 AM
மதுரையில் ஸ்கூல் பெஞ்சை தூக்கிச் சென்று விற்று 'தண்ணி' அடித்த மாணவர்கள்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு நாள் அவர்களுக்கு மது அருந்த பணம் இல்லை. வீட்டிலும் கேட்க முடியாது. அதனால் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர். உடனே அவர்களின் நினைவுக்கு வந்தது பள்ளிக்கூட பெஞ்ச் தான். அன்றைய தினம் பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு அந்த 5 பேரும் சேர்ந்து ஒரு பெஞ்சை பல துண்டுகளாக்கினர்.
அந்த துண்டுகளை எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து பணம் பெற்றனர். பணம் கிடைத்தவுடன் நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து தெரிய வந்த தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் நொந்து கொண்டனர்.

ராஜா
28-07-2012, 05:55 AM
சீமான் மணக்கவிருக்கும் யாழ்மதி இவர்தான்..

http://news.lankasri.com/photos/full/2012/07/yazmathi.jpg

சீமான் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் யாரென தெரிவிக்கவில்லை. என்றாலும், அவர் திருமணம் செய்ய இருப்பது ஈழத்தைச் சேர்ந்த போராளி விதவைப் பெண்ணான யாழ்மதி என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.

யாழ்மதி என்பவர், லெப் கேணல் அன்புமணி அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. லெப் கேணல் அன்புமணி, பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடு இலங்கை விமானத்தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார்.

யாழ்மதி விடுதலைப் புலிகள் இயக்க கலைபண்பாட்டுக் கழகத்திலும், வானொலி, தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பில் இருந்தவேளை, அவருக்கு உதவிகள் செய்து வெளியில் எடுத்து இந்தியாவில் குடியேற வைத்தவர் வேறு யாருமல்ல...! நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தான்.

விடுதலைப்புலிகளுக்கு ஊடகவியல் தொடர்பான வகுப்பு எடுக்க சீமான் யாழ் போயிருந்தபோதே, யாழ்மதியின் அழகில் மயங்கி விருப்பம் தெரிவித்தார். எனினும், லெப்.கேணல் அன்புமணியை மணப்பதற்காக காத்திருக்கும் பெண் இவர்; இவரை மணப்பது குறித்த பேச்சு வேண்டாம் என்று பிரபாகரன் கண்டிப்பாக சொன்னதாகக் கூறப்படுகிறது.

ராஜா
28-07-2012, 08:01 AM
பெரியார் திராவிடர் கழகத்தில் பிளவு- கொளத்தூர் மணி தலைமையில் தனி அமைப்பு உருவாக்க முடிவு

தமிழர் நலன் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வந்த பெரியார் திராவிடர் கழகம் தற்போது பிளவை சந்தித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையில் தனியாக ஒரு அமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்றொரு பொதுச்செயலாளரான கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தனியே ஒரு அமைப்பு உருவாக உள்ளது.

ராஜா
28-07-2012, 08:09 AM
பஸ் எரிப்பு வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார் தொல்.திருமாவளவன்

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சரணடைந்தார். அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ராஜா
28-07-2012, 08:25 AM
அசாம் சென்ற பிரதமரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறங்கியதால் பரபரப்பு

http://tamil.oneindia.in/img/2012/07/28-helicopter21-300.jpg

அசாமில் கோக்ராஜர், சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக போடோ இனத்தவருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இம்மோதலில் 58 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்து 232 அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலமான மேற்குவங்க மாநிலத்துக்கு அகதிகளாக தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட அசாம் தலைநகர் குவஹாத்திக்கு பிரதமர் மன்மோகனிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று வந்தடைந்தனர். அங்கிருந்து கோக்ராஜர் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குவஹாத்திக்கு திரும்பிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரின் ஹெலிகாப்டர் அவசரமாகத் திரும்பியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வேறு ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் ஏறிச் சென்றதால் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

ராஜா
28-07-2012, 08:57 AM
ஈரானிலிருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வர இந்தியா தடை

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று கூறி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இத்தடையைப் பின்பற்றுமாறு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இதைத் தொடர்ந்து இந்தியாவும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டு சவூதி அரேபியாபக்கம் தலையைத் திருப்பியிருக்கிறது. இந்நிலையில் ஈரானிலிருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுவர இந்தியா முழுவதும் தடைவிதித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மேலாண்மை இயக்குநர் உபாத்யா, ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபடி கச்சா எண்ணெயை எங்களால் இறக்குமதி செய்ய முடியவில்லை. ஜூலை மாதத்தில் 4 கப்பல்களில் எண்ணெயை இறக்குமதி செய்யவிருந்தோம். ஆனால், இதுவரை ஒரு கப்பலில் மட்டுமே எண்ணெய் வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் கப்பலுக்கான போக்குவரத்துச் செலவு, இன்சூரன்ஸ் ஆகியவற்றை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதே இதற்கு காரணம் என்றார்.இதனால் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முற்றாக நிறுத்திவிட்டதாகவே கூறப்படுகிறது.

ராஜா
28-07-2012, 04:56 PM
தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங்கவும் இல்லை: அன்னா ஹசாரே

http://tamil.oneindia.in/img/2012/07/28-anna-hazare-5-300.jpg

டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் ஊழலுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அவர் பேசியதாவது:
தேர்தலில் எப்பொழுதுமே நான் போட்டியிடப் போவதில்லை. அதேபோல் தனியாக கட்சி தொடங்கப் போவதும் இல்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் நான் உயிர் பிழைத்து இருந்தால் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேர்மையான மனிதர்களை சந்திக்கப் போகிறேன். அப்படி நான் நேர்மையான மனிதர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களது பெயரை இணையதளத்தில் வெளியிடுவேன். அவர்களின் பெயர்களை பரிசீலித்து குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வேன். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வேன்.

பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அந்த கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
நான் உயிரோடு இருக்கும் வரை வலுவான லோக்பால் மசோதாவுக்காகப் போராடுவேன். அனைத்து நேரங்களிலும் உண்ணாவிரதம் இருப்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அரசாங்கத்தின் துரோகத்தால் இந்த முடிவுக்கு நான் தள்ளபப்டுகிறேன் என்றார்.

ஆனால் நேற்று அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், மக்கள் நான் அரசியலுக்கு வர விரும்பினால் அது பற்றி பரிசீலிப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் தேவைப்பட்டால் கட்சியைத் தொடங்குவது ஒன்றும் தவறு இல்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜா
28-07-2012, 05:21 PM
ஒலிம்பிக் போட்டியின் அணிகள் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம பெண் யார்?

http://tamil.oneindia.in/img/2012/07/28-olym-girl-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் கருப்பு நிற கோர்ட் அணிந்து கொண்டு, தலையில் மஞ்சள் நிற தலைபாகை உடன் நடந்து வந்தனர்.

அதேபோல இந்திய வீராங்கனைகள் அனைவரும் மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு நடந்து வந்தனர். அப்போது இந்திய அணியில் சிவப்பு நிற சர்ட், நீல நிற பேண்ட் அணிந்து ஒரு மர்மப்பெண் நடந்து வந்தார். அவர் யார் என்பது குறித்து தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியினருக்கு இவர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியை தலைமை வகித்து நடத்தி சென்ற முரளிதரன் ராஜாவிற்கும் இந்த மர்மப் பெண் யார் என்பது தெரியவில்லை.

ராஜா
28-07-2012, 05:26 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_791534.jpeg

ராஜா
29-07-2012, 03:44 AM
இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாராம் அன்னா ஹசாரே

http://tamil.oneindia.in/img/2012/07/28-anna-300-2.jpg

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

நாங்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படவில்லை. ஜன்லோக்பால் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன், நாடாளுமன்றத்துக்கு நல்லவர்கள் வரவில்லையென்றால் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாது. ஒரு ஓட்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்கள் வெற்றி பெற்றால், பணம் சம்பாதித்து, அதை என்ன செய்வதென்று தெரியாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களை வாக்காளர்கள் விரட்டியடிக்கவேண்டும். ஒரு சட்டமன்றத்தேர்தலுக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வேட்பாளர்கள் செலவிடுகிறார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்கு ரூ.50 கோடி செலவு செய்கிறார்கள். இதனால் எங்களால் கட்சி ஆரம்பிக்க முடியாது என்றார் அவர்.

கூட்டம் வராத நிலையில் இப்படி அன்னா ஹசாரே அறிவித்த பிறகாவது கூட்டம் சேருமா என்று பார்க்கலாம்.

ராஜா
29-07-2012, 03:47 AM
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: முந்துகிறார் ஒபாமா!

http://tamil.oneindia.in/img/2012/07/28-obama21-300.jpg

நவம்பர் 6 ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசு தேர்தலில், ஒபாமா முன்னிலையில் இருப்பதாக சி.என்.என் கணிப்பு தெரிவிக்கிறது.

கலிஃபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், மினசோட்டா, இலனாய், நியூயார்க், மெய்ன், மசசூசட்ஸ், கனெக்டிகட், ரோட் ஐலண்ட், நியூஜெர்சி, மேரிலாண்ட், ஹவாய் ஆகிய மாநிலங்களில் நிச்சயமான ஆதரவும், நியூமெக்சிகோ, விஸ்கான்ஸின், மிஷிகன் மாநிலங்களில் ஆதரவு அலைகளும் வீசுவதால் 247 வாக்குகள் என்ற நிலையில் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார்.

ராஜா
29-07-2012, 03:48 AM
இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள அசாமுக்கு ரூ300 கோடி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

அசாமில் வன்முறை பாதித்த கோக்ராஜர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோரை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். மேலும் மோதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு ரூ300 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று கூறிய மன்மோகன்சிங், இனமோதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலாரூ2 லட்சம் வழங்கப்படும் என்றார். இம்மோதலில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜா
29-07-2012, 03:50 AM
இங்கிலாந்தில் கேட்டதைவிட 2 மடங்கு பணம் தந்த ஏ.டி.எம்: குவிந்த மக்கள்

இங்கிலாந்தி்ன் இப்ஸ்விச் பகுதியின் நேக்டன் ரோட்டில் லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றவர்கள் தாங்கள் எடுக்க வேண்டிய பணத்திற்கு இரண்டு மடங்காக இயந்திரம் பணம் கொடுத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது.

இதையடுத்து அந்த மையத்தின் முன்பு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். சுமார் 30 பேர் வரை இரட்டிப்பு பணத்தை எடுத்துள்ளனர். இதற்கிடையே மக்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. உடனே இது குறித்து அங்கிருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் வங்கி ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
வங்கி ஊழியர்கள் வந்து இயந்திரத்தை ஆஃப் செய்யும் வரை போலீசார் அங்கேயே இருந்தனர்.

ராஜா
29-07-2012, 03:53 AM
'தம்'மடிக்கும் ஹீரோயின் கரீனா - பெண்கள் அமைப்புகள் கண்டனம்!

http://tamil.oneindia.in/img/2012/07/28-kareena-300.jpg

ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் கரீனா. ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட படம் இது.
கதாநாயகிகள் வாழ்க்கைதான் கதை. ரூ. 18 கோடி செலவில் உருவாகியுள்ள இதில் கரீனாகபூர் கவர்ச்சியாகவும் புகை பிடித்தும், மது அருந்துவது போலவும் தத்ரூபமாக நடித்துள்ளாராம்.

செப்டம்பரில் ரிலீஸ் என்றாலும், கரீனா சிகரெட் பிடித்தபடி மது கோப்பையுடன் இருப்பது போல ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மும்பை நகரரெங்கும் ஒட்டப் பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கவர்ச்சியாக நடித்தால், வித்யாபாலனுக்குக் கிடைத்தது போல, தனக்கும் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கரீனாகபூர் ஆடை குறைப்பு செய்து மது, சிகரெட் என துணிச்சலாக நடித்துள்ளார். இந்த போஸ்டர்களுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. போஸ்டர்களும் கிழித்து எறியப்பட்டன.

இதையடுத்து டிரெய்லரில் இருந்து புகை பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ராஜா
29-07-2012, 03:56 AM
மீண்டும் சக்சேனா... சாக்ஸ் பிக்சர்ஸ் ஆரம்பம்... புதுப்படத்தை ரிலீஸ் செய்கிறார்!

http://tamil.oneindia.in/img/2012/07/27-hansraj-saxena2-300.jpg

ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் சினிமா உலகின் நிழல் முதல்வரைப் போல சகல அதிகாரங்களுடனும் வலம் வந்தவர். இவர் சன் டிவிக்காக வாங்கி வெளியிட்ட படங்களைவிட, இவர் மீது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கொடுத்த புகார்கள் அதிகம். ஆட்சி மாறிய கையோடு, அவரைக் கைது செய்தது போலீஸ். சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர் மீது மோசடி, கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின.

ஒரு வழியாக அனைத்து வழ்ககுகளிலும் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்த சக்சேனா, சன் டிவியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இப்போது மீண்டும் திரைப்படத் தொழிலில் இறங்கியுள்ளார். சாக்ஸ் பிக்சர்ஸ் எனும் பெயரில் புதிய பட நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ள சக்சேனா, தனது பேனரின் கீழ் சாருலதா என்ற படத்தை வெளியிடுகிறார். ப்ரியாமணி இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம். சூர்யாவின் மாற்றானுக்கு முன்பே உருவான படம் என தயாரிப்பாளர் தர்பபில் கூறி வருவதால், இந்த பரபரப்பை வசூலாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் படத்தை வாங்கிவிட்டார் போலிருக்கிறது.

ராஜா
29-07-2012, 04:15 AM
வாய்க்காலை கடக்க முயன்ற காட்டு யானை கீழே விழுந்து சாவு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் கல்லடி கொல்லி பகுதியில் வாய்க்காலை கடக்க காட்டு யானை ஒன்று முயற்சி செய்தது. ஆனால் வாய்க்காலை கடக்க முடியாமல் காட்டு யானை பாதி நிலையிலேயே கிழே விழுந்தது.

அப்போது யானையின் 2 தந்தங்களும் நிலத்தில் குத்தி புதைந்தது. இந்த சமயத்தில் யானை எழுந்து நிற்க முயன் றது. ஆனால் நிலத்தில் தந்தங்கள் புதைந்ததால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இதனிடையே நிலத்தில் தந்தங்கள் புதைந்ததாலும், தும்பிக்கை மடங்கி, அதன் மீது யானையின் உடல் இருந்ததால், அதனால் மூச்சு விட முடியவில்லை. இதன் காரணமாக யானைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

பலமுறை போராடியும் காட்டு யானையால் நிலத்தில் குத்திய தந்தங்களை மீட்க முடியவில்லை. மூச்சு விடவும் முடியவில்லை. முடிவில் மூச்சு திணறல் ஏற்பட்டு யானை பரிதாபமாக செத்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பலியான ஆண் காட்டு யானைக்கு சுமார் 10 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ராஜா
29-07-2012, 04:26 AM
பட்டப்பகலில் அத்துமீறல்: உல்லாச ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ஊர்மக்கள்: பெற்றோர்கள் டென்ஷன்..!

குமரி அருகே திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஷைனி (வயது 19). இவருக்கும், தக்கலையைச் சேர்ந்த மதீஷ்குமார் (26) என்பவருக்கும் பழக்கம் இருந்தது. ஷைனியின் தந்தை கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். தாயார் முந்திரி ஆலையில் வேலை பார்க்கிறார். பெரும்பாலான நேரங்களில் ஷைனி வீட்டில் தனியாக இருப்பார். இதை பயன்படுத்திக் கொண்ட மதீஷ்குமார், அடிக்கடி ஷைனியின் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார். பட்டப்பகலிலேயே அவர்கள் இப்படி அத்துமீறி நடந்து கொண்டது அக்கம்பக்கத்தினரை முகம் சுளிக்க வைத்தது.

இதனால் கையும், களவுமாக பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அந்த பகுதியினர் முடிவு செய்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை (27.07.2012) காலை வீட்டுக்குள் தனிமையில் இருந்த மதீஷ்குமாரையும், ஷைனியையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் 2 மாலை வாங்கி வந்து அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர். மதீஷ்குமாரும், ஷைனியும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திருவட்டார் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 2 பேருடைய பெற்றோரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 2 பேருடைய பெற்றோரும் மதிஷ்குமார்-ஷைனி திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

இதையடுத்து ஷைனி குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதீஷ்குமார் திருவட்டார் போலீஸ்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார். இன்று 2-வது நாளாக அவர்களது உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ராஜா
29-07-2012, 04:41 AM
பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் மோகன மீனாள் (வயது 21). இவர் தொலை தூரகல்வி மூலம் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாகவும், மோகன மீனாள் தனது பெற்றோரிடம் இப்போது திருமணம் வேண்டாம். நான் தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியதாகவும், எனினும் பெற்றோர் தனது மகளுக்கு தொடர்ந்து மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன மீனாள் கடந்த 26.07.2012 அன்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர்.

இந்நிலையில் மறுநாள் மாலை மோகன மீனாள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

ராஜா
29-07-2012, 04:43 AM
இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் ஓடி விடுங்கள்: கொ.மு.க. பெஸ்ட் ராமசாமி

திருப்பூர் தெற்கு மண்டல கொ.மு.க ஆலோசனை கூட்டம் ராக்கியாபாளையம் பிரிவில் நடந்தது. இதில் அந்த கட்சியின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

கொ.மு.க கட்சியை ஆரம்பித்தது நான் தான். 12 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். என்னை கட்சியிலிருந்து நீக்க யாராலும் முடியாது. ஈஸ்வரன் என்னால் தான் கட்சிக்கு வந்தார். அவரை பொது செயலாளராக்க நான் தான் பரிந்துரை செய்தேன். வாரம் ஒரு நாள் இங்கு வந்து செல்லும் அவருக்கு கொங்கு நாட்டு பிரச்சினைகள் தெரியாது.

ஈஸ்வரன் நமது அமைப்பை உடைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். நான் இணக்கமாக செயல்பட தயாராக உள்ள போதும் அவர் தயாராக இல்லை. அவர் கட்சியிலிருந்து என்னை நீக்குவதில் குறியாக இருக்கிறார். நான் உருவாக்கிய கட்சி இது. இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் வந்த வழியே ஓடி விடுங்கள். அமைப்பை காப்பாற்ற கொங்கு சொந்தங்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பெஸ்ட் ராமசாமி பேசினார்.

ராஜா
29-07-2012, 04:45 AM
நாங்குனேரி: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வானுமாமலை மனைவிக்கு அரசுப் பணி: தமிழக அரசு

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24.7.2012 அன்று மறுகால்குறிச்சி கிராமத்தில் இரு தரப்பினரிடையே மண் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஏ. விஜயகுமார் அங்கு சென்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த வானுமாமலை என்பவர் காவல் துறை ஆய்வாளரை அரிவாளால் தாக்க முற்பட்டார்.

அப்போது தன்னை தற்காத்துக் கொள்வதற்காக காவல் துறை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் வானுமாமலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த வானுமாமலை குடும்பத்தினரின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது குடும்பத்திற்கு அரசு உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டும், வானுமாமலை குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த வானுமாமலையின் மனைவிக்கு தகுந்த அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ராஜா
29-07-2012, 06:52 AM
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: 2016ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி: அன்புமணி ராமதாஸ்

2016-ல் பா.ம.க. ஆட்சியை பிடித்து தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூட்டேரிப்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திலேயே அதிக மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படும் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். ஆனால் கல்வியில் பின்தங்கிய மாவட்டமும் நமது மாவட்டம்தான். அப்படிபட்ட விழுப்புரம் மாவட்டத்தை நாம் மாற்ற வேண்டும். அதற்கு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கனும். 46 ஆண்டுகள் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி, மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

மற்ற கட்சிகளை விட பா.ம.க. கட்சியின் கொள்ளை மிகவும் வித்தியாசமானது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சாராயம் விற்பனை செய்வதை தடை செய்வதுடன், பூரண மது விலக்கிற்கு முதல் கையெழுத்து போடுவோம். இதை எந்த கட்சியினராவது தைரியமாக சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள். 2-வது அனைவருக்கும் இலவச தரமான கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்கள் ஆகிய 3 இலவசங்களை தவிர மற்ற எந்த இலவசங்களையும் கொடுக்க மாட்டோம். இப்படி பகிரங்கமாக, ஆணித்தரமாக எந்தகட்சியாவது சொல்லுமா?


பா.ம.க. 4 முறை தனித்துப்போட்டியிட்டது. அப்போது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகிடைக்க வில்லை. அதனால்தான் பிற கட்சியுடன் கூட்டணி வைத்தோம். இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்ற நல்ல முடிவை டாக்டர் ராமதாஸ் எடுத்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். 2016-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ராஜா
29-07-2012, 07:05 AM
பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சியா..?

http://tamil.oneindia.in/img/2012/07/29-vijaykanth-sangeetha-300.jpg

பிரேமலதாவின் தந்தை வழி உறவுக்காரப் பெண்தான் இந்த சங்கீதா. இவர் திருவள்ளூரில் வசித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட தேமுதிக மகளிர் அணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். தற்போது இவரை கட்சியை விட்டு தூக்கி விட்டார் விஜயகாந்த்.

சங்கீதா சீனிவாசன் தூக்கப்பட்டது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெரும் குசும்பில் சங்கீதா ஈடுபட்டதால்தான் அவரை கட்சியை விட்டுத் தூக்கியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள். இவர் மூலம் தேமுதிகவை உடைக்க அதிமுக தரப்பில் முயன்றதாகவும், அதை அறிந்துதான் சங்கீதாவை விரட்டியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள்.

ராஜா
29-07-2012, 09:11 AM
ஒலிம்பிக் அணிவகுப்பில் நடை போட்ட மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்த மதுரா ஹனி!

http://l3.yimg.com/bt/api/res/1.2/Wfzls45Qihv5Ug_S0HZrIw--/YXBwaWQ9eW5ld3M7cT04NTt3PTYzMA--/http://l.yimg.com/os/156/2012/07/29/india-olympics-parade-280712-630-01-jpg_064324.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியினர் நடந்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஜீன்ஸ், டாப்ஸில் வந்த மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவர், அவரது பெயர் மதுரா ஹனி என்று தெரிய வந்துள்ளது. ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

இந்த நிலையில் அப்பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் மதுரா ஹனி என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் தனது தோழியுடன் ஊடுருவி உள்ளே புகுந்துள்ளார். முதல் வரிசையில் மதுரா வர தோழி பின்தங்கி அப்படியே நின்றுள்ளார். ஒலிம்பிக் பாஸ் பெற்று அவர் உள்ளே புகுந்துள்ளதாக தெரிகிறது. இந்த பாஸை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் கூட முதலில் பிரசுரித்திருந்தார். ஆனால் தான் அணியினரோடு நடந்து போனது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த பக்கத்தை எடுத்து விட்டார்.

ராஜா
29-07-2012, 09:15 AM
நாங்குநேரி அருகே வாலிபரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் உயிருக்கு பயந்து ஜீப்பில் வலம்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் மணல் அள்ளும் பிரச்சனை தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பகுதியைச் சேர்ந்த வானுமாமலை என்ற இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். மாமூல் வசூலிப்பது தொடர்பாக இந்த படுகொலை அரங்கேறியிருப்பதாக பல தரப்பினரும், அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர். மனித உரிமைக்கு எதிராக நடந்த இந்த சம்பவத்தில் நீதி விசாரணை கோரி அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் போலீசாரால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மக்களிடையே துப்பாக்கிச்சூடு தொடர்பான பதற்றமும் தணியவில்லை. போலீசார் மீது ஆத்திரம் குறையாமல் இருப்பது பொது மக்களின் பேச்சிலேயே தெரிகிறது. அப்பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்களின் நடமாட்டமும் உள்ளது. நாங்குநேரி போலீசாருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தொடர்ந்து அங்குள்ள காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் மூன்றடைப்பு காவல் நிலையம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வானுமாமலையை சுட்டுக்கொன்ற விஜயகுமாரின் குடும்பத்தார் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுவி்ட்டனர். இன்ஸ்பெக்டர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அவரை ஒரே இடத்தில் வைக்காமல் ஜீப்பில் வைத்து கொண்டு போலீசார் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜா
29-07-2012, 09:56 AM
மங்களூர் மது விருந்து: அரை குறை ஆடையில் பெண்கள் கும்மாளம்- துவைத்து எடுத்த இந்து அமைப்பினர்

கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பெண்களையும், வாலிபர்களையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றினர். அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சர் அசோகாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில பெண்கள் நல கமிஷன் தலைவர் மனுலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரில் உள்ள பப் ஒன்றில் ஸ்ரீராம சேனே ஆட்கள் அதிரடியாகப் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
29-07-2012, 06:05 PM
இந்தியா & பாக். இடையே சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு


இந்தியா, பாகிஸ்தான் இடையே 25 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையை எல்லை பாது காப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்திய & பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வயல்வெளிகளில் மழை காரணமாக பள்ளங்கள் உருவானது. ஒரே நேர்க்கோட்டில் இந்த பள்ளங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த விவசாயிகள், எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அந்த பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் தோண்டினர். அப்போது 25 ஆழத்தில் சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்தது.



அது, பாகிஸ்தானில் இருந்து வருவது கண்டுபிடிக் கப்பட்டது. இதனால், எல்லை பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்திய பகுதியில் 400 மீட்டர் நீளத்துக்கு உள்ள சுரங் கப்பாதை, 3க்கு 3 அடி அளவில் அமைக்கப் பட்டுள்ளது. அதில் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய 2 இஞ்ச் அளவுள்ள குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சுரங்கபாதை புதியதுபோல இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இந்த சுரங்கப் பாதையை தீவிரவாதிகள் பயன்படுத் தினார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. அதுகுறித்து விசாரணை நடக்கிறது என்று மாவட்ட எஸ்பி இஸ்ரார்கான் தெரிவித்துள்ளார்.

ராஜா
29-07-2012, 06:09 PM
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


இந்தியாவும், ரஷியாவும் இணைந்து கூட்டாக பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கி உள்ளன. பிரமோஸ் ஏவுகணை சோதனையை ராணுவம் இன்று காலை நடத்தியது.

ஒடிசா மாநிலம், சந்திப்பூர் கடற்கரையில் மொபைல் ஏவுதளம் மூலம் பிரமோஸ் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.

அது உரிய இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது. இது குறித்து சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவு தளத்தின் இயக்குனர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில்,

‘‘பிரமோஸ் ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளை கொண்டது.

முதல் பகுதி திட எரிபொருளையும், இரண்டாவது திரவ எரி பொருளையும் கொண்டதாகும்’’ என்றார்.

ராஜா
30-07-2012, 06:17 AM
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 47 பேர் பலி!



டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.

டெல்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து இன்று (30.07.2012) காலை 4.30 மணிக்கு கிளம்பியதும் எஸ்-11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் வந்தபோது ரயிலில் தீபிடித்தது. ரயிலில் எஸ்-11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீப்பிடித்த படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டியில் 72 பயணிகள் இருந்தனர்.

இந்த விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து குறித்து அறிந்ததும், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.



இந்த விபத்து குறித்து விவரம் அறிய சென்னை சென்ட்ரலில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 044-25357398 மற்றும் 044-25330825 ஆகிய எண்களில் தகவல் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லூரில் உதவிக்கு 0861-2575038 மற்றும் 0861-2576924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் நெல்லூருக்கு இன்று காலை 10.00 மணிக்கு புறப்படும் என்றும், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ரயிலில் இலவசமாக அழைத்துச்செல்லப்படுவார்கள் என்றும், தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்த விபத்தால் இன்று (30.07.2012) காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகும். மேலும் ஐதராபாத்திலிருந்து சென்னை வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாகும்.

ராஜா
30-07-2012, 06:20 AM
டாய்லட்டிலிருந்து பரவிய தீ - 'அப்பர் பெர்த்'தில் இருந்தவர்களே பெருமளவில் பலியான பரிதாபம்

http://tamil.oneindia.in/img/2012/07/30-train-fire-tn-express-2-300.jpg

சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய ரயில் சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது ரயில் பெரும் வேகத்தில் செல்லவில்லை, மிதமான வேகத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென தீ்ப்பிடித்துக் கொண்டதால், எஸ் 11 பெட்டியில் இருந்த பயணிகளில் விழித்துக் கொண்டோர் அவசரம் அவசரமாக அருகில் இருந்த பிற பெட்டிகளுக்கு ஓடியுள்ளனர். சிலர் ரயிலிலிருந்து குதித்துள்ளனர்.ஆனால் அப்பர் பெர்த், சைட் அப்பர் பெர்த் உள்ளிட்டவற்றில் தூங்கிக் கொண்டிருந்தோர்தான் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும் ரயிலின் கதவுகளும் திறக்கவில்லை என்று கூறப்படுறது. அதேசமயம், தீயும் படு வேகமாக மளமளவென பரவியுள்ளது. கரும்புகையும் உள்ளே சூழ்ந்து கொண்டதால் பயணிகள் பலர் அதில் சிக்கி தீயில் கருகியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெட்டியின் டாய்லெட் பகுதியிலிருந்துதான் தீவிபத்து ஏற்பட்டதாகவும், மின்கசிவு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், யாராவது டாய்லெட்டுக்குள் சிகரெட் புகைத்து அதை அணைக்காமல் போட்டு விட்டதால் தீவிபத்து ஏற்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ராஜா
30-07-2012, 06:22 AM
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படு:ம என்றும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் முகுல்ராய் அறிவித்துள்ளார்.

ராஜா
30-07-2012, 06:23 AM
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து காரில் நெல்லூர் செல்கிறார் என்று கூறப்படுகிறது. இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஆந்திர முதல்வர் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார். ஆனால் கொடநாட்டில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நெல்லூர் செல்வாரா அல்லது அங்கிருந்து கொண்டே விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு அறிவிப்பாரா என்று தெரியவில்லை.

ராஜா
30-07-2012, 06:24 AM
அவசர உதவி எண்கள்: செகந்திராபாத் 040-27786723, 27700868; விஜயவாடா 0866-2345863, 2345864;

ராஜா
30-07-2012, 06:45 AM
அவசர உதவி எண்கள்:

சென்னை சென்டிரல்: 044- 25357398

நெல்லூர் 0861-2331477, 2576924; டெல்லி 011-23342954, 23341072, 23341074;

ராஜா
30-07-2012, 07:50 AM
துப்பாக்கிச்சூடு ; நாங்குநேரியில் வைகோ, நல்லகண்ணு உண்ணாவிரதம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் பலியானார். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு ம.தி.மு.க. *பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு உள்ளிட்டோர் உண்ணாவிர*த*ப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜா
30-07-2012, 07:56 AM
அபாய சங்கிலி வேலை செய்யவில்லை, மீட்புக் குழு உடனே வரவில்லை-பயணிகள் குமுறல்

http://tamil.oneindia.in/img/2012/07/30-train-fire-tn-express-300.jpg

பயணிகள் நடந்த சம்பவம் குறித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் காணப்பட்டனர். பலர் பேசவே முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். சம்பந்தப்பட்ட எஸ் 11 பெட்டியில் பயணித்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய 12 பேர் இந்த ரயிலில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ரயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகள்.

முன்னதாக காயமடைந்தோர் விபத்து குறித்துக் கூறுகையில், நாங்கள் பயணித்த பெட்டியில் அதிகாலையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிலர் ஜன்னல் வழியாக கடும் சிரமப்பட்டு கீழே குதித்தனர். ரயில் பெட்டியின் இரு கதவுகளையும் எங்களால் திறக்க முடியவில்லை. அதைத் திறக்க முடிந்திருந்தால் மேலும் பலர் உயிர் தப்பியிருக்க முடியும். கதவு ஏன் மூடிக் கொண்டது என்று தெரியவில்லை.

எங்களது பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலிகளை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றோம். ஆனால் அபாயச் சங்கிலி சரிவர வேலை செய்யவில்லை. இதனால் பக்கத்துப் பெட்டிகளில் இருந்தோர் அபாயச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த உதவினர். மேலும் எங்களது பெட்டியில் இருந்த சிலரை அவர்கள் தங்களது பெட்டிக்குள் இழுத்துக் காப்பாற்றினர்.

உதவி கோரி நாங்கள் நீண்ட நேரம் குரல் எழுப்பியும் கூட யாரும் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே மீட்புக் குழுவினர் வந்தனர். இதனாலும் உயிரிப்பு அதிகரித்து விட்டது.
காயமடைந்தவர்களில் 10 பேரை நெல்லூரில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீக்காயம் கடுமையாக உள்ளதால் அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை என்றனர்.

ராஜா
30-07-2012, 08:00 AM
எஸ் 11 பெட்டியில் பயணித்தவர்கள் மொத்தம் 89 பேர்-சென்னையைச் சேர்ந்தவர்கள் 22 பேர்..

சம்பந்தப்பட்ட பெட்டியில் மொத்தம் 89 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 22 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். விஜயவாடா ரயில் நிலையத்தில் 28 பேர் ஏறியுள்ளனர். 17 பேர் டெல்லியிலிருந்து வந்துள்ளனர். போபால், வாரங்கல்லில் தலா 11 பேர் ஏறியுள்ளனர். இதுவரை உயிரிழந்துள்ள 50 பேரில் ஒருவர் கூட யார் என்ற அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அவர்களில் பலர் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டனர்.

ராஜா
30-07-2012, 08:00 AM
தமிழக அரசு சார்பில் யாரும் போகவில்லை..

இதற்கிடையே, தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட இதுவரை நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மேலும் இதுவரை தமிழக முதல்வரிடமிருந்து இரங்கல் செய்தி எதுவும் வெளியாகவில்லை.

ராஜா
30-07-2012, 08:03 AM
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

ராஜா
30-07-2012, 08:09 AM
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்களுடன் இன்று பத்தரை மணியளவில் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயிலில் உறவினர்கள் அனைவரும் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர ரயில்வே அதிகாரிகள், செய்தியாளர்களும் சென்றுள்ளனர். மேலும் மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ராஜா
30-07-2012, 08:11 AM
மீண்டும் பரிதாபம்-சென்னையில் ஸ்கூல் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர். இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதன் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.

வேனும் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதைப் பார்த்த மீனா கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை நொறுக்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா
30-07-2012, 09:31 AM
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பினர்.. மங்களூர் மாணவிகள் குமுறல்

மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.

மீடியா கேமராமேனும் உடந்தையா...?

இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.

ராஜா
30-07-2012, 11:38 AM
நித்தியானந்தா போட்ட வழக்கு.. சைதை கோர்ட்டில் ஆர்த்தி ராவ் சரண்டராகி ஜாமீன் பெற்றார்!

http://tamil.oneindia.in/img/2012/07/30-arthi-rao-300.jpg

இந்த ஆர்த்தி ராவ்தான், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்தவர் ஆவார். அதை எப்படி தான் பதிவு செய்தேன் என்பதையும் விளக்கமாக கூறியிருந்தார் ஆர்த்தி ராவ். மேலும், இந்த வீடியோவை தான்தான் லெனின் கருப்பனிடம் கொடுத்து வெளியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து லெனின் கருப்பனும், ஆர்த்தி ராவும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஆர்த்தி ராவ் மீது சிபிசிஐடி போலீஸில் புகார் செய்தார் நித்தியானந்தா. இதையடுத்து லெனின் கருப்பன் கைது செய்யப்பட்டார். ஆர்த்தி ராவ் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்து அதையும் பெற்றார். இதையடுத்து சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

ராஜா
30-07-2012, 11:58 AM
ரயில் விபத்து: ஜெயலலிதா இரங்கல்- நெல்லூர் விரைந்த மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள்

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற நெல்லூருக்கு செல்லுமாறு மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் நெல்லூர் விரைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளனார்.

ராஜா
30-07-2012, 12:01 PM
ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை விஞ்சியது இந்தியா!

http://tamil.goodreturns.in/img/2012/07/30-export-300.jpg

2011ம் ஆண்டில் ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை விஞ்சி சாதனை படைத்துள்ளது இந்தியா. இத் தகவலை உலக வர்த்தக அமைப்பான World Trade Organization அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:

2011ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதற்கு முந்தைய ஆண்டைவிட 16.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் ஏற்றுமதி 9.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வழக்கான சந்தைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தெற்காசிய நாடுகள் போன்ற புதிய சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தான் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நாடுகள் இறக்குமதியைக் குறைத்துவிட்டன. ஆனாலும் மற்ற நாடுகளின் சந்தைகளை இந்தியா குறி வைத்து செயல்பட்டதால் அதன் ஏற்றுமதி குறையவில்லை. 2011ம் ஆண்டில் உலகளவில் மொத்த ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளின் ஏற்றுமதி மட்டும் 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆசிய பிராந்தியம்தான் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளதன் பின்னணியில் இந்தியாவும், சீனாவும்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராஜா
30-07-2012, 12:10 PM
பிரான்சில் பதுக்கப்பட்ட ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் அம்பலம்

http://tamil.goodreturns.in/img/2012/07/29-france-efill-tower.jpg

சுவிஸைத் தொடர்ந்து பிரான்சிலும் இந்தியர்கள் கறுப்புப் பணம் பதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியர்களின் ரூ565 கோடி கறுப்புப் பணம் பிரான்சில் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 30, 675 சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றம் குறித்தும் நேரடி வரிகள் விதிப்பு வாரியம் கண்டறிந்திருக்கிறது. தற்போது வாரியத்தின் புலனாய்வு அமைப்பின் மூலம் இந்த பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களின் படி பல்வேறு பணப் பரிமாற்றம் தொடர்பாக தகவல்கள் கோரப்பட்டுள்ளன. வெளிநாடுகளுடன் இரட்டை வரிவதிப்பு தவிர்ப்பு தொடர்பாக 84 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இதனால் இன்னும் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டிஉர்க்கும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கலாம்.

ராஜா
30-07-2012, 12:23 PM
ஆன்லைனில் வருங்கால வைப்பு நிதி பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆர்.சி. மிஸ்ரா கூறியதாவது:
வருங்கால வைப்பு நிதியானது 50 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டது. இவர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தில் (http://www.epfindia.com) சென்று தங்களது கணக்கு பற்றிய விவரங்களை சேகரித்துக் கொள்ள முடியும். ஆன்லைனில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதுடன் வருங்கால வைப்பு நிதி அமைப்பை அதிகம் பயன்படுத்துவோருக்கு இ- பாஸ்புக் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக வருங்கால வைப்பு நிதியைக் கோருவதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதில் 80 விழுக்காடு பணி நிறைவடைந்துவிட்டது. தற்போது தங்களது கணக்குகளில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வோர் வழக்கமான முறையில்தான் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் தொகையை கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

ராஜா
30-07-2012, 12:28 PM
கிடைத்தது இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்குக்கு வெண்கலம்!

http://tamil.oneindia.in/img/2012/07/30-gagan-narang1-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுதான் என்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் களமிறங்கினர்.

இன்று மதியம் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 47 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். அதே சமயம், தகுதி சுற்றில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவின் ககன் நரங் இறுதி சுற்றிற்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா, ருமேனியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக புள்ளிகளை சேர்த்த ருமேனிய வீரர் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகளை சேர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

அவரை தொடர்ந்து இத்தாலிய வீரர் நிக்கோலோ கேம்பிரினி 701.5 புள்ளிகளை பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ககன் நராங் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்தது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்துள்ள ககன் நரங், கடந்த 2006 மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றவர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் ககன் நரங் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்கும் 3வது பதக்கம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2008ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா மூலம் தங்கப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த 2004 மற்றும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய ககன் நரங், இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜா
31-07-2012, 04:43 AM
சவூதியில் புகையி*லைக்கு தடை

வளைகுடா நாடான சவூதி அரேபியாவில், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையினை பொருட்களை விற்க கூடாது, அரசு அலுவலகங்கள் ,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.உலகிலேயே *புகையிலை பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி நான்காவது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் டாலர் புகையிலைக்கு சவூதி செலவிடுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.இந்நிலையில் சவூதி இளவரசர் அகமது பின் அப்துலஜீஸ் கூறுகையில், சவூதி மக்களின் சுகாதார நலன் காக்க, புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. *கடந்த ஆண்டு தான் முதன்முறையாக விமான நிலையங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டது.தற்போது நாடு முழுவதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ராஜா
31-07-2012, 04:48 AM
கொலையாளிகளுக்கு உதவி.. 87 போலீசார் டிரான்ஸ்பருக்கு லஞ்சம்: எஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

http://tamil.oneindia.in/img/2012/07/31-abishak-dixit-300.jpg

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றிய அபிஷேக் தீக்ஷித் (தற்போது சென்னை கமாண்டோ பிரிவு எஸ்பியாக உள்ளாக) வீட்டிலும், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அவரது வீட்டிலும் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரின் வீடுகளிலும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும் அவருக்குக் கீழ் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் 2.5 கிலோ தங்க நகைகள், 392 கிராம் தங்க நாணயங்கள், ரூ. 10 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன. தமிழக கவர்னருக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய அபிஷேக் தீக்ஷித் கடந்த 24.12.2011 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியானார். கடந்த மாதம் சென்னை கமாண்டோ பிரிவுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

தான் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன் அபிஷேக் தீக்ஷித் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 87 போலீசாருக்கு டிரான்ஸ்பர் உத்தரவுகளை அள்ளித் தந்தார். மேலும் துறைரீதியாக நடவடிக்கைக்கு உள்ளான 45 போலீசார் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தார். இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதற்கு போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ராமச்சந்திரன் இடைத்தரகர்போல் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் எஸ்பி செந்தில்வேலன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பங்களாவிற்கு வந்தனர். அந்த பங்களாவில் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் அபிஷேக் தீக்ஷித்துக்கு உதவியாக இடைத் தரகராக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் வீடு, மற்றும் அபிஷேக் தீக்ஷித்தின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது உறவினர்களின் 3 வீடுகள் உள்பட மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கான்பூரில் உள்ள வீட்டில் நடந்த சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்களும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ராமச்சந்திரனின் வீட்டில் மற்றொரு பகுதியில் நகைக்கடை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக வாங்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என கூறப்பட்டாலும், அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ராஜா
31-07-2012, 04:51 AM
நீதிபதி நியமனத்தை எதிர்த்த சசி வழக்கு: கர்நாடக சட்டத்துறை செயலாளருக்கு ஹைகோர்ட் அவசர நோட்டீஸ்

ஜெ - சசி சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தனி நீதிமன்ற நீதிபதியாக மல்லிகார்ஜுனய்யா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த மல்லிகார்ஜுனய்யா மனுவை தள்ளுபடி செய்தார்.இதைத் தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.

மல்லிகார்ஜுனய்யா தனி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கான அரசாணையோ அல்லது அரசு அறிவிக்கையையோ காட்ட வேண்டும் என்றும், அவரது நியமனம் செல்லாது என்று உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தான கவுடா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டத்துறைச் செயலாளர், உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம், உச்ச நீதிமன்ற தலைமை அதிகாரி ஆகியோருக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜா
31-07-2012, 04:55 AM
தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை..இந்திய அரசு அரவணைத்துதான் போகிறது: ராஜபக்ச

http://tamil.oneindia.in/img/2012/07/31-rajapaksa1-300.jpg


கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதாவது:

எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் நட்பு அடிப்படையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் எமக்கு எதிராக பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாம் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை என்றார் மகிந்த ராஜபக்சே.

ராஜா
31-07-2012, 04:59 AM
குஜராத் அமைச்சர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி:முதல்வர் மோடி அரசுக்கு பின்னடைவு

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_519156.jpg

குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், மீன் வளத்துறை அமைச்சராக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. இவர், 2009ல் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்கினார். இந்த ஒப்பந்தம், ஆண்டு ஒன்றுக்கு, 2.4 கோடி ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஒப்பந்தத்தை டெண்டர் மூலம் விட்டால், 44 கோடி ரூபாய் பெறலாம் என, மதிப்பிடப்பட்டது. இதனால், 10 ஆண்டுக்கு குறைவான கட்டணத்திற்கு, மீன்பிடி ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம், மாநில அரசுக்கு இவர், 400 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

கடிதம் தாக்கல்:

இவர் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, மாராடியா என்பவர், குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அமைச்சர் சோலங்கி மீது வழக்குத் தொடர அனுமதி தர முடியாது என, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்து விட்டது. இதனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை கவர்னர் எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், மாராடியா தொடர்ந்த வழக்கு, நேற்று நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் சோனி ஆகியோர் அடங்கிய, உயர் நீதிமன்ற பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் புரு÷ஷாத்தம் சோலங்கி மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ள கவர்னரின் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

மோதல்:

ஏற்கனவே, மாநில அரசின் பரிந்துரையை மீறி, லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியை நியமித்த விவகாரத்தில், குஜராத் கவர்னர் கமலா பெனிவாலுக்கும், முதல்வர் நரேந்திர மோடி அரசுக்கும் இடையே மோதல் உருவாகியிருந்த நிலையில், தற்போது, அமைச்சரவை முடிவை மீறி, அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர, கவர்னர் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசுக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

ராஜா
31-07-2012, 05:22 AM
சென்னையில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த நர்ஸ் கழுத்து அறுத்து கொலை

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (35). அவர் தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிகிறார். அவரது மனைவி சுமதி (33). கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக இருந்தார். அவர்களுக்கு மகாலட்சுமி (16), காமாட்சி (14) என்ற மகள்கள் உள்ளனர். அதில் மகாலெட்சுமி பிளஸ் 2வும், காமாட்சி 10ம் வகுப்பும் படிக்கின்றனர்.

நேற்று காலை மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். முனுசாமி அலுவலகத்திற்கும், சுமதி மருத்துவமனைக்கும் சென்றனர். பிற்பகல் 2 மணிக்கு சுமதி வீடு திரும்பினார். அடுத்த தெருவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் சுமதியிடம் வந்து தினமும் சர்க்கரை நோய்க்காக ஊசி போட்டுக் கொள்வார். நேற்றும் அவர் ஊசி போட்டுக்கொள்ள சுமதி வீட்டுக்கு சென்றார். அப்போது சுமதியின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். அதற்குள் முனுசாமியும் அங்கு வந்து சேர்ந்தார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமதி அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டு பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை திருடு போகவில்லை. அதனால் நகை, பணத்தை திருட இந்த கொலை நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமதி மதியம் வீட்டுக்கு வருவதற்கு முன்பு முனுசாமி வந்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து முனுசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏதும் உள்ளதா என்று மகாலெட்சுமி மற்றும் காமாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராஜா
31-07-2012, 05:27 AM
தண்ணி அடித்து விட்டு வேன் ஓட்டிய டிரைவர்.. ஆதரவாகப் பேசிய பள்ளிக்கூடம்- மக்கள் சரமாரி அடி!

திருப்பூர் போயம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருபவர் மேகநாதன். 47 வயதாகிறது. இவர் செட்டிப்பாளையம், தியாகிகுமரன் காலனி பகுதி மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக நேற்று காலை வேன் ஓட்டிச் சென்றார். அப்போது வேனை மேகநாதன் தாறுமாறாக ஓட்டிச் சென்றதாகவும், ரோட்டில் சென்ற வாகனங்கள் மீது வேன் உரசியபடி சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதை கவனித்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பள்ளி வேனை வழிமறித்து டிரைவரை என்ன ஏது என்று விசாரித்தனர். மேலும் மேகநாதன் குடிபோதையில் இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து வேனை மேலும் போக விடாமல் தடுத்து நிறுத்தினர். இதைப் பார்த்து பொதுமக்கள் கூடி விட்டனர். குடிபோதையில் பள்ளிக்கூட வேனை ஓட்டிய டிரைவர் மீது ஆத்திரமடைந்த அவர்கள், டிரைவரை கீழேஇறக்கி சரமாரியாக அடித்தனர். குறிப்பாக பெண்கள், மேகநாதனை அடித்தனர்.

தகவல் அறிந்ததும் பள்ளித் தாளாளர், முதல்வர் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்த பொதுமக்கள், இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் ஏன் வேலைக்கு வைத்துள்ளீர்கள் என்று கோபத்துடன் கேட்டனர் பொதுமக்கள். ஆனால் பள்ளி நிர்வாகிகளோ டிரைவருக்கு ஆதரவாகப் பேசினர். இதனால் பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்து பள்ளி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து போலீஸாரும் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் மேகநாதனை மீட்டு அவர் ஓட்டி வந்த பள்ளிக்கூட வேனிலேயே அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால் இதற்கு பொதுமக்களும், அவர்களுடன் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீஸார் டிரைவரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர்.

ராஜா
31-07-2012, 05:33 AM
ரூ.50 கோடி நிலத்தை வீரபாண்டி மிரட்டி பறித்துக் கொண்டார்: தொழில் அதிபர் புகார்

http://tamil.oneindia.in/img/2012/07/31-veerapandi-arumugam2300.jpg

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லுபாளையத்தைச் சேர்ந்தவர் மு.ரங்கசாமி (55). தொழில் அதிபர். அவர் சேலம் மாவட்ட கலெக்டர் க.மகரபூஷணத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

2000ம் ஆண்டில் சேலம் உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த கே.பழனியப்பன், வி.கே.ஜெகநாதன், ஜே.பூங்கோதை, தனபாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்துக்கு விலை பேசி சுமார் ரூ.35 லட்சம் கொடுத்திருந்தேன். கிரய ஒப்பந்தம் செய்த நிலையில் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்த நிலையில் 6.10.2000 அன்று வீரபாண்டி ஆறுமுகம், பூலாவரியில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை வரவழைத்து திட்டியதுடன், ஒரு வாரத்துக்குள் கிரய ஒப்பந்தத்தை நான் சொல்லும்படி மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.

அதன்பிறகு அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்த லட்சுமணன் தொலைபேசியில் என்னை மிரட்டினார். 10 நாள்கள் கழித்து காவல் ஆய்வாளர் கருணாநிதி எனது வீட்டுக்கு வந்து என்னை அடித்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து பொய் வழக்குப் பதிவு செய்து என்னை சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்ததும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பயந்து சென்னை சென்று குடியேறிவிட்டேன். இதையடுத்து 2006ல் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் அமைச்சரானதும் 21.6.2006 அன்று மாநகரக் காவல் ஆணையர் கோபாலகிருஷ்ணன் என்னை நேரில் சந்திக்கும்படி கூறினார். அதன்படி ஆணையர் அலுவலகம் சென்றபோது அங்கு துணை ஆணையர் சக்திவேல், தொழிலதிபர்கள் செங்கோட கவுண்டர், கே.பி.நடராஜன், ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் ஆகியோர் இருந்தனர். அப்போது கோபாலகிருஷ்ணனும், சக்திவேலுவும் என்னை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு பயந்து அவர்கள் கூறியபடி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். அதன் பிறகு துணை ஆணையர் சக்திவேல், எனது மகனுடன் சென்று எங்களது வழக்குரைஞர் அலுவலகத்தில் இருந்த கிரய ஒப்பந்தப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார்.

என்னிடம் பறித்த ரூ.50 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை சேலம் சாப்ட்வேர் டெக்னோ பார்க் என்ற போலி டிரஸ்ட் பெயரில் பதிவு செய்து கொண்டு, பிறகு வீரபாண்டி ஆறுமுகத்தின் வி.எஸ்.ஏ. டிரஸ்டுக்கு மாற்றிக் கொண்டனர். இந்த நிலையில் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜூலை மாதத்தில் அப்போதைய சேலம் எஸ்.பி. அறிவுச்செல்வனிடம் இது குறித்து புகார் கொடுத்தேன். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி எனது நிலத்தைப் பறித்த வீரபாண்டி ஆறுமுகம், காவல் துறை முன்னாள் ஆணையர் கோபாலகிருஷ்ணன், துணை ஆணையர் சக்திவேல், ஆய்வாளர்கள் கருணாநிதி, லட்சுமணன் மற்றும் செல்வராஜ், செங்கோட கவுண்டர், கே.பி.நடராஜன், ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ராஜா
31-07-2012, 05:36 AM
விருதுநகரில் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை பணியில் இருந்து நீக்க உத்தரவு

விருதுநகரை அடுத்த வடமலைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் அபிராமி(7). விருதுநகரில் உள்ள செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்ற அபிராமியை, வகுப்பு ஆசிரியை எஸ்தர் ராணி ஆங்கில பாடத்தை வாசிக்கமாறு கூறியுள்ளார். அப்போது வாசித்த சத்தம் கேட்கவில்லை என்று கூறிய ஆசிரியை எஸ்தர் ராணி, குச்சியால் அபிராமியின் கால், தொடை, முதுகு, தலை பகுதிகளில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி அபிராமி வகுப்பில் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற சிறுமியின் உடலை அவரது தாய் மணிமேலை பார்த்துள்ளார். அப்போது சிறுமியின் உடல் முழுவதும் காயமாக இருந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த மணிமேலை, பள்ளிக்கு சென்று முதல்வரிடம் புகார் அளித்தார். மேலும் சம்பவத்தன்று சிறுமியின் அபிராமியின் தந்தை சீனிவாசன், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை அறிந்த ஆசிரியை எஸ்தர் ராணி தலைமறைவானார். இந்த நிலையில் பள்ளி மாணவி அபிராமியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை எஸ்தர் ராணியை பணி நீக்கம் செய்யுமாறு, பள்ளி நிர்வாகத்திற்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

ராஜா
31-07-2012, 05:38 AM
பிரபாகரன் படத்திற்கு தடையா.. அப்ப ராஜிவ், சோனியா படங்களுக்கு...-சீமான் கேள்வி

இது குறித்து அவர் கூறியதாவது,\
ஈழத்தில் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாக துடைக்க, தம்மை தாமே அழித்து கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப்புலிகள். அவர்கள் மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக பலியானவர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன். அவரது படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது. இது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம்.

ராஜா
31-07-2012, 11:04 AM
வட இந்தியாவில் கரண்ட் இல்லை.. பல மாநிலங்களில் ரயில் சேவைகள் கடும் பாதிப்பு

தலைநகர் டெல்லி உள்பட 10 வட மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் மின் வினியோகம் இன்றும் பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று வடக்கு மின் தொகுப்பில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தா ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடந்து 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மின் தொகுப்புகளில் இன்று பிற்பகல் 1.07 மணிக்கு மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய 10 வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 மின்சார ரயில்கள் இயங்கவில்லை. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் அதிலும் குறிப்பாக அரசு மருத்துவமனைகள் அல்லாடி வருகின்றன. இதனால் பாதி இந்தியாவிலேயே மின்வினியோகம் இல்லை. இந்த கோளாறை சரி செய்ய 5 முதல் 6 மணி நேரமாகும் என்று மின் அமைச்சக அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.

ராஜா
31-07-2012, 11:12 AM
கலவரம் பாதித்த அசாமில் ராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்

அசாம் மாநிலத்தில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கலவரப் பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சனிக்கிழமையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றும் பார்வையிட்டனர்.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கோல்பரா மாவட்டத்தில் ராணுவத்தாரை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு ஜவான் உயிர் இழந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த வந்த ராணுவத்தினரை குறி வைத்து நடந்த தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
31-07-2012, 12:31 PM
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம்

ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள், தங்களது வருமான வரி கணக்கு தாக்கலை எலக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த பிரிவினருக்கும் இந்த கால அவகாசம் பொருந்தாது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ராஜா
31-07-2012, 12:33 PM
நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலவச ஃபோன் எண் வசதி உள்ளது. அந்த ஃபோன் மூலம் இதுவரை 400 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், அதிகபட்சமாக கேபிள் டிவி மாத சந்தாக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது குறித்து புகார் செய்யப்பட்டிருந்தது.

அந்த புகார்களை முறையாக பதிவு செய்து, நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய, "ஃபேஸ் புக்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராஜா
31-07-2012, 12:35 PM
நெல்லூர் ரெயில் விபத்து: பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை: முகுல்ராய்

சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லூர் அருகே தீ விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட மத்திய ரெயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் சம்பவத்தன்று மாலை கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.


சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-


நெல்லூர் ரெயில் விபத்து சம்பவம் மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ரெயில்வே துறை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யும்.


நஷ்ட ஈடு வழங்குவதோடு, பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை வழங்கப்படும். இந்த சம்பவம் பற்றி உள்ளூர் போலீசாரும், ரெயில்வே துறை அதிகாரிகளும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சதிவேலை காரணமாக இருக்குமா என்று இப்போது உறுதியாக சொல்ல முடியாது. சதிவேலைக்கான தடயங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனாலும் விசாரணையின் முடிவில் தான் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தெரியவரும். இவ்வாறு முகுல்ராய் கூறினார்.

ராஜா
31-07-2012, 12:38 PM
ஆட்டோக்கள் 2 நாட்கள் ஸ்டிரைக்: போக்குவரத்துத்துறையினர் மீது குற்றச்சாட்டு

போக்குவரத்து துறையினரின் கெடுபிடியால், பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து செல்லமாட்டோம்' என, பொள்ளாச்சியிலுள்ள, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் எட்டு குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கயளிக்கக்கோரி, ஜூலை 31 மற்றும் ஆக. முதல் தேதிகளில் பள்ளிக்கு ஆட்டோவில் குழந்தைகளை அழைத்து செல்லாமல், "ஸ்டிரைக்' செய்ய முடிவு செய்தனர். இது குறித்து, முன்கூட்டியே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

ராஜா
31-07-2012, 12:39 PM
படம் சரியாக போகாததால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்: நடிகர் ராமராஜன்

சேலம் பட்டைகோவில் அருகில் சேலம் அம்மாப்பேட்டை பகுதி அ.தி,மு,க. சார்பில் அ.தி.மு.க.பொது கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகர் ராமராஜன் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடிகர் விஜயகாந்த் 145 படங்களில் நடிக்கும் வரை தமிழக மக்களை நினைக்க வில்லை. இப்போது தான் அவருக்கு தமிழக மக்கள் நினைவுக்கு வருகிறார்கள். இப்போது தான் அவருக்கு தமிழ்மண் தெரிகிறது. படம் சரியாக போகாததால் அவர் அரசியலுக்கு வந்தார்.

அரசியல் உணர்வு திடீரென வரக்கூடாது. ஆரம்பத்தில் இருந்தே வரவேண்டும். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆர். பெயரை அவர் பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம்அவர் மக்களை ஏமாற்றி வருகிறார்.


முதலில் ஒரு எம்.எல்.ஏ, இப்போது 28 எம்.எல்.ஏக்கள் அவருக்கு உள்ளனர். இதற்கு யார் காரணம் அ.தி.மு.க.தான். கொள்கை பிடிப்பு இல்லாமல் விஜயகாந்த் ஏதேதோ பேசி வருகிறார். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜா
31-07-2012, 04:40 PM
மீண்டும் நிதியமைச்சரானார் ப.சிதம்பரம்- உள்துறைக்கு ஷிண்டே, மொய்லிக்கு மின்சாரம்

http://tamil.oneindia.in/img/2012/07/31-shinde-pc21-300.jpg

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருடைய நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நிதியமைச்சர் பொறுப்பு ப. சிதம்பரத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் கவனித்து வந்த உள்துறை அமைச்சர் பொறுப்பு சுசில்குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுசில்குமார் ஷிண்டே கவனித்து வந்த மின்துறை பொறுப்பு வீரப்ப மொய்லியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ராஜா
31-07-2012, 04:47 PM
கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு : சகாயம் ஐ.ஏ.எஸ் அதிர்ச்சி தகவல்

http://tamil.oneindia.in/img/2012/07/31-jaya-sagayam21-300.jpg

மதுரை மாவட்டம் மேலுரை அடுத்துள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துவருவதாக தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அப்போதைய ஆட்சியராக இருந்த சகாயத்திடம் இது தொடர்பான புகார் ஒன்றினை நாளிதழின் நிருபர் அளித்தார்.இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட சகாயம், ஆய்வு தொடர்பான அறிக்கை முடிவினை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்து விதிகளை மீறி கிரானைட் வெட்டி எடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சகாயம் குறிப்பிட்டுள்ளார். அரசு புறம்போக்கு நிலம், கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் ஆகிய நீர் ஆதாரங்கள் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படும் கிரானைட்கள் மூலம் ரூ.16000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை கடந்த மே மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.இது குறித்து கருத்து கூறியுள்ள மதுரை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

ராஜா
31-07-2012, 04:54 PM
அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்

அவர் அளித்த பேட்டி:

கேள்வி: அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எவ்வளவு மார்க் போடுவீர்கள்?

பதில்: எதிர்கட்சி தலைவரே இல்லை என்று கூறுகிறார்கள். பிரதான எதிர்கட்சி என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பிரதான எதிர்க்கட்சி நான் கிடையாது. நாங்கள்தான் பிரதான எதிர்கட்சி என்று முதல்வரே சொல்வது இல்லை. (எல்லாம் சொன்னவர் மார்க் போடவே இல்லை)

கேள்வி: டாக்டர் ராமதாஸ் தேமுதிகவை ரசிகர் மன்ற கட்சி என்று கூறியிருக்கிறாரே?

பதில்: முதலில் பாமகவை வளர்ப்பதற்கு போராடச் சொல்லுங்கள்.

கேள்வி: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அ.தி.மு.கவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?. இதனால் அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் சொல்கிறார்களே..

பதில்: அமைதியாக இருந்தால் என்ன? உங்கள் பாக்கெட்டில் கையை வைத்து காசு எடுக்கவில்லையே.. அதிமுகவில் இருந்து கூட 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியில் பிரணாப் முகர்ஜிக்கு ஓட்டுப் போடாமல் மாற்றி ஓட்டுப் போடப்போவதாக சொன்னார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் போது கூட்டணியில் மாற்றம் வருமா?

பதில்: யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யும் அரசாங்கம் வந்தால் நாங்கள் கூட்டணி சேரக் கூடாதா?

கேள்வி: திமுக நடத்தும் டெசோ மாநாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் செத்த பிறகு டெசோ மாநாடா?.
பிரபாகரன் உயிரோடு இருந்தபோதே இலங்கை தமிழர்களை கருணாநிதி காப்பாற்றவில்லை. இனிமேல் டெசோ மாநாடு நடத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகின்றார்களாம். தனி ஈழம் அடைந்தே தீருவேன் என்று கருணாநிதி கூறினார். 4 நாட்களுக்கு பிறகு தனி ஈழம் குறித்து டெசோ மாநாட்டில் பேச மாட்டேன் என்று கூறுகிறார். நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

ராஜா
01-08-2012, 05:49 AM
துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், தியோரி பகுதியை சேர்ந்தவர் பூப் நாராயணன் பிரஜாபதி,65. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இவர் தன் வீட்டருகே சுற்றித் திரிந்த காளை ஒன்றை கம்பால் அடித்தார். உடன் அந்த காளை, பிரஜாபதியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரம் தன்னைத் தாக்கிய காளை, தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் படுத்திருப்பதைக் கண்ட பிரஜாபதி, அதன் மீது வெந்நீரை ஊற்றினார். மறுநாள் காலை பிரஜாபதி தன் வீட்டின் முன், தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அந்தக் காளை மீண்டும் வந்து, அவரைத் தாக்க முற்பட்டது. பயந்து போன அவர், தப்பித்தால் போதும் என, தன் குடிசை வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும், அவரைத் தொடர்ந்து குடிசைக்குள் சென்ற காளை, குடிசையை துவம்சம் செய்ததோடு, பிரஜாபதியை தன் கொம்புகளால் குத்தியவாறு, தரதரவென வெளியே இழுத்துச் சென்றது. பின், தரையில் இரண்டு முறை அவரை தூக்கி வீசியதுடன், தன் கூரிய கொம்புகளால் அவரை மீண்டும் மீண்டும் குத்தி சின்னாபின்னம் ஆக்கியது.

மரணம்: இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், காளையை அங்கிருந்து விரட்டினர். பின், பிரஜாபதியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர்.

சுடுகாடு வரை...: இதனிடையே, அக்கம் பக்கத்தினர் பிரஜாபதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்களுடன் மருத்துவமனை வரை காளை மாடு தொடர்ந்து சென்றது. இதனை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். அத்துடன், பிரஜாபதியின் உடல் தகனம் செய்யப்படும் வரை, சுடுகாட்டிலேயே காளைமாடு இருந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த தீபக் சவுராசா கூறுகையில், ""மருத்துவமனை மற்றும் சுடுகாட்டிற்கு அருகில் பிரஜாபதியின் வீடு இருந்தாலும், அவரை மாடு பின் தொடர்ந்து வந்தது எங்களுக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது,'' என்றார். "மருத்துவமனைக்கும், சுடுகாட்டிற்கும் காளை வந்ததை நானும் பார்த்தேன்' என, தியோரி காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.பி.சர்மாவும் கூறினார்.

ராஜா
01-08-2012, 05:53 AM
சரமாரியாக மின்சாரத்தை 'ஓவராக' எடுத்ததால் வந்த வினைதான் வட மாநில மின் தடை!

http://tamil.oneindia.in/img/2012/08/01-power-grid1-300.jpg

வட இந்திய மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மின்சாரத்தை கூடுதலாக எடுத்ததால்தான் மின் கிரிடு பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதிக அளவில் மின்சாரம் எடுப்பதில் உ.பி. மாநிலம்தான் முன்னணியில் உள்ளதாம்.

உ.பியில், மாயாவதி முதல்வராக இருந்தவரை இந்த அளவுக்கு மின்சாரத்தை திருடவில்லையாம். காரணம், அவர் தனது மாநிலத்திற்குத் தேவையான மின்சாரத்தை சட்டிஸ்கர், குஜராத், மேற்கு கிரிடிலிருந்து பெற்று விநியோகித்துள்ளார். ஆனால் முலாயம் சிங்கின் கட்சி வெற்றி பெற்று அங்கு அவரது மகன் அகிலேஷ் யாதவ் பதவிக்கு வந்தது முதலே வடக்கு கிரிடில் பெருமளவில் கை வைத்து வருகிறார்களாம். இதை மத்திய அரசோ, மத்திய மின்துறை அமைச்சரோ தட்டிக் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால்தான் தற்போது கிரிடே அடிபட்டுப் போகும் அளவுக்கு கரண்ட்டை உறிஞ்சிக் குடித்துள்ளனர் உ.பி. மாநிலத்தவர்.

உ.பி. மாநில மின்வாரியம் கூடுதலாக எடுத்துள்ள மின்சாரத்தின் அளவு என்ன தெரியுமா... டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு திருடி வந்துள்ளனர்.

ராஜா
01-08-2012, 05:55 AM
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 18 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் பலியான 32 பேரில் 18 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் தெரியவில்லை. அடையாளம் காணப்பட்ட 14 பேரில் 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராஜா
01-08-2012, 05:58 AM
வேலைவாய்ப்பு அலுலககத்தில் அமைச்சர் திடீர் ரெய்ட்: ஊழியர்கள் கூண்டோடு இடமாற்றம்

http://tamil.oneindia.in/img/2012/08/01-ct-chellapandian-300.jpg

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல ஊழியர்களுக்கு கம்ப்யூட்டரில் விவரங்களைப் பதிவு செய்யவே தெரியாது. அவர்களுக்கு கம்ப்யூட்டரை ஆன்-ஆப் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தங்களுக்குகு கம்ப்யூட்டரில் பதிவு செய்யத் தெரியாது என்பதை மறைக்க பதிவு செய்ய வருவோரிடம் எரிந்து விழுவர். விண்ணப்பங்களில் ஏதாவது குறை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்புவர், சரியான பூர்த்தி செய்துவிட்டு வந்தவர்களிடம் எதிரே உள்ள பிரவுசிங் சென்டருக்கு போகச் சொல்வர்.
அந்த சென்டரில் உள்ள நபர் வேலைவாய்ப்பு அலுவலக இணையத்தில் லாக்-இன் செய்து விவரங்களைப் பதிவு செய்துவிட்டு 100 ரூபாய் வாங்குவார். அதில் 50 ரூபாய் இந்த அலுவலக ஊழியர்களுக்கு கட்டிங்காக தரப்படும். இந்த அலுவலகம் குறித்து நெடு நாட்களாகவே புகார்கள் இருந்து வந்தது. அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவை முறையாக செய்வதில்லை, ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மறுக்கின்றனர், வெளியே இன்டர்நெட் மையங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். விண்ணப்பங்களை இலவசமாக தருவதில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் இந்த அலுவலகத்துக்கு அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீரென வந்தார். முதலில் பதிவு செய்ய வந்தவர்களிடம் சென்று அவர்களிடம் பேசினார். அவர்கள், இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக எதுவும் நடைபெறுவதில்லை. அனைத்துக்கும் பணம் கேட்கின்றனர் என புகார் தெரிவித்தனர். மேலும் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை கூட இங்கு இல்லை என்றும் புலம்பினர். பின்னர் பதிவு செய்யும் இடத்துக்குச் சென்றார் அமைச்சர். அங்கு கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாமல் ஊழியர் முழித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கம்ப்யூட்டரை ஆன்-ஆப் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு அட்டையில் ஒரு பெயரும், கணினியில் ஒரு பெயருமாக சிலருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களிடம் அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தியதோடு, அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
எல்லாம் பெரும் குழப்படியாக இருக்கவே, அங்கிருந்தே தொலைபேசி மூலம் வேலைவாய்ப்புத்துறை செயலாளரை அழைத்து இந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு இடமாறுதல் செய்யும் உத்தரவை டைப் அடிக்கச் சொன்னார் அமைச்சர் செல்லபாண்டியன்.

ராஜா
01-08-2012, 06:06 AM
விருத்தாசலத்தில் அதிமுக-திமுகவினர் பயங்கர அடிதடி: கட்சி பேனர்கள் கிழிப்பு, எரிக்கப்பட்ட பைக்

விருத்தாசலத்தில் அதிமுக, திமுக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில், திமுக கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டது. மேலும் திமுக ஆதரவாளர் வீ்டு சூறையாடப்பட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் விருத்தாசலம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

ராஜா
01-08-2012, 06:17 AM
காங்கிரஸ்-திமுக கூட்டணி இப்படியே நீடிக்குமா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில்

http://tamil.oneindia.in/img/2012/08/01-evks-300.jpg

அவர் ஈரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வரும் 11ம் தேதி குன்னத்தூரில் காமராஜர் சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு நான் தலைமை தாங்குகிறேன். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் காமராஜர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து 25,000 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரோவுக்கு மக்கள் அளித்த ஆதரவு குறைந்துவி்ட்டது. நாடாளுமன்றத்தில் தான் சட்டங்கள் கொண்டு வர முடியுமே தவிர இவர் போன்ற செல்லாக்காசுகளால் எதுவும் செய்ய முடியாது.
டெசோ மாநாடு நடத்துவது கருணாநிதியின் விருப்பம். அந்த மாநாட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்ல நான் ஒன்றும் ஜோதிடர் கிடையாது. அட்டப்படாடியில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு அணை கட்டினால் தமிழக காங்கிரஸ் அதை எதிர்த்து போராடும். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தியுடன் சேர்ந்து ராகுல் காந்தியின் தலைமையும் தேவை. அவர்களின் தலைமையை வரவேற்கிறோம். காங்கிரஸ்-திமுக கூட்டணி நீடிக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.

ராஜா
01-08-2012, 07:30 AM
வட இந்தியாவில் ஏற்பட்ட மின் தடை, உலகிலேயே மிகப் பெரியதாம்!

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள், அதாவது பாதி இந்தியா கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்துப் போயுள்ளன. ஒட்டுமொத்த பொருளாதாரமும் இப்பகுதியில் ஸ்தம்பித்துப் போய் விட்டது. ரயில் போக்குவரத்து பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. 60 கோடி மக்கள் என்னநடக்கிறது என்றே தெரியாமல் தவித்துப் போய் விட்டனர். உலகின் மிக மோசமான மின் தடை என்ற பெயரை இந்த வடக்கு, கிழக்கு இந்திய மின் கிரிடு செயலிழந்த சம்பவம் பெற்று விட்டது.

செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்குத்தான் முதல் மின்தடை ஏற்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து 3 முறை மின்வெட்டு ஏற்பட்டு இந்த 19 மாநிலங்களும் செயலிழந்து போய் நின்றன. அன்று இரவுக்குள் 80 சதவீத மாநிலங்களிலும், டெல்லியிலும் மின்சாரம் மீண்டும் வந்தது. தெற்கு மற்றும் மேற்கு மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்று இவர்களுக்கு கொடுத்து நிலைமையை சரி செய்தனர் அதிகாரிகள். டெல்லி மெட்ரோ ரயில் சேவை பல மணி நேரம் பாதிப்பைச் சந்தித்தது. பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.

மேற்கு வங்கத்தில் அசன்சோல் நிலக்கரி சுரங்கத்திற்குள் 200 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மிகவும் கஷ்டப்பட்டு மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதேபோல ஜார்க்கண்ட்டிலும் 65 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மின்தடையானது உலகிலேயே மிகவும் நீளமான, மோசமான மின்தடைகளில் ஒன்று என்ற பெயரைப் பெற்று விட்டது. இந்த மின்தடையால் ஒட்டுமொத்த வட மாநிலங்களிலும் ஸ்தம்பித்துப் போய் விட்டன.
வடக்கு பிராந்திய மின் கட்டமைப்பு செயலிழந்த சில மணி நேரங்களிலேயே கிழக்கு மற்றும் வட கிழக்கு கட்டமைப்புகளும் செயலிழந்து போயின.

வடக்கு பிராந்திய கட்டமைப்பு செயலிழக்க முக்கியக் காரணமே உ.பி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் கூடுதலாக மின்சாரத்தை உறிஞ்சியதே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மூன்று மாநிலங்களுமே இதை திட்டவட்டமாக மறுத்துள்ளன. ஆனால் உ.பி. மட்டும் கிட்டத்தட்ட முக்கால்வாசி மின்சாரத்தை உறிஞ்சியுள்ளதாக அதிகாரிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

இந்த மின் தடை காரணமாக வடக்கில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உ.பி. ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஏழு வட கிழக்கு மாநிலங்கள் ஸ்தம்பித்துப் போயின. மீண்டும் இந்த நிலை ஏற்படாது என்று உத்தரவாதம் த்ர முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த மாநிலம் கூடுதலாக மின்சாரத்தை எடுக்காமல் இருப்பதே இதற்கு சரியான, ஒரே தீர்வு என்றும் கூறப்படுகிறது.

ராஜா
01-08-2012, 08:09 AM
பார்க்க வராத நண்பரை போட்டு உதைத்த 2 அரவாணிகள்...!

குஜராத் மாநிலம் கட்லோடியா காவல் நிலையத்தில் 33 வயதான ஹிமன்ஷு படேல் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், பிரஞ்சால் தே மற்றும் ஜோதி தே என்ற இரு அரவாணிகளும், அவர்களது நண்பர் ஒருவரும் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து விட்டதாகவும், பணத்தைப் பறித்துச் சென்று விட்டதாகவும் படேல் கூறியிருந்தார்.

ஏன் இந்த அடிதடி....?

மணிநகர், ஆனந்த் சொசைட்டி பகுதியைச் சேர்ந்தவர் படேல். இவருக்கும், இந்த இரு அரவாணிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய நட்பு இருந்து வந்ததாம். பட்டதாரியான படேல், காந்தி சாலையில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த இரு அரவாணிகளையும் தினசரி போய் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசி விட்டு வருவாராம். அதேபோல இந்த அரவாணிகளுக்கும், படேலைப் பார்க்காமல் இருக்க முடியாதாம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இரு அரவாணிகளையும் படேல் போய்ப் பார்க்கவில்லையாம். இதனால் அரவாணிகள் இருவரும் வருத்தமடைந்தனர். ஏன் நம்மை படேல் பார்க்கவில்லை என்று குழப்பமடைந்தனர் அவர்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கட்லோடியாவில் நடந்த ஒரு கோவில் விழாவுக்குப் போயிருந்தார் படேல். அங்கு அந்த இரு அரவாணிகளும், அவர்களது இன்னொரு நண்பருடன் வந்திருந்தனர். படேலைப் பார்த்ததும் பாய்ந்து வந்தனர் அரவாணிகள். ஏன் எங்களைப் பார்க்க வருவதே இல்லை என்று கோபத்துடன் கேட்டனர். அதற்கு எதையோ காரணமாக சொன்னார் படேல். இதையடுத்து அருகில் உள்ள ஒரு கோவிலில் நடக்கும் விழாவுக்கு எங்களுடன் வாயேன் என்று அரவாணிகள் அழைத்துள்ளனர். ஆனால் படேல் வர முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் அவரைக் கட்டாயப்படுத்தி தாங்கள் வந்த காரில் கூட்டிப் போயுள்ளனர். வழியிலேயே படேலை மூன்று பேரும் சரமாரியாக அடித்து உதைத்தார்களாம். பின்னர் அவர் வைத்திருந்த ரூ. 5000 பணத்தையும் பறித்துக் கொண்டு கீழே தள்ளி விட்டு விட்டனராம்.

எங்களை ஏன் பிடிக்கவில்லை, ஏன் பார்க்க வருவதில்லை என்று கேட்டு கேட்டு அரவாணிகள் தன்னை அடித்ததாக போலீஸாரிடம் படேல் கூறியுள்ளார்.
புகாரை வாங்கியுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜா
01-08-2012, 08:11 AM
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு

http://tamil.oneindia.in/img/2012/08/01-eunuch673--300.jpg

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக "ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்'' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

ராஜா
01-08-2012, 08:13 AM
திருவண்ணாமலையில் 23 போலி டாக்டர்கள் கைது: போலீஸ் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலர் முறையான படிப்பின்றி அலோபதி முறையில் சிகிச்சை அளி்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேட்டவலம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்த வசந்தகுமார்(35), ஆரணி அருகேயுள்ள முள்ளண்டிரம் கிராமத்தைச் சேர்ந்த தாசன் மகன் வில்லியம்ஸ் (46), மடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் மணிவாசகம் (24),போளூர் அருகேயுள்ள ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கனின் மகன் செல்வராஜ் (35), சேத்துபட்டு அண்ணா தெருவைச் சேர்ந்த நடராஜனின் மகன் உத்தண்டி (38), நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தனபாலின் மகன் தங்கராஜ் (42), காத்தவராயனின் மகன் கணேசன் (59), தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடேசனின் மகன் ராமசாமி (49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கீழ்பென்னாத்தூரில் ஏழுமலை (45), அமலசாமி (66), ஜமுனாமரத்தூரில் சந்திரசேகர் (27), திருநாவுக்கரசு (52), தண்டராம்பட்டு அடுத்த விஜயப்பனூரில் சீனிவாசன்(25), செங்கம் அடுத்த மேல்குழுதியூரில் சங்கர் (38), செங்கம் அடுத்த பரமணந்தல் கிராமத்தில் ரகோரி (38), சாத்தனூரில் ராஜசேகர் (37), கணேசன் (65), புதுப்பாளையத்தில் துரை ஜெயராமன் (66), தூசியை அடுத்த மேனலூரில் அன்பழகன் (32) உள்ளிட்ட 23 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் வில்லியம்ஸ் மற்றும் மணிவாசகம் ஆகியோர் சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். செல்வராஜ் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். உத்தண்டி, ராமசாமி ஆகியோர் பிளஸ் டூவும், தங்கராஜ் பட்டப்படிப்பும் படித்துள்ளனர். கணேசன் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
01-08-2012, 08:36 AM
கெஜ்ரிவாலின் உடல் நிலை மோசம்: உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து அடம்

ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் கடந்த 25ம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இத்தனை நாட்களாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதித்தது வந்தனர். ஆனால் இன்றில் இருந்து தன்னை எந்த அரசு மருத்துவரையும் பரிசோதிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று இன்னொரு உறுப்பினரான கோபால் ராயின் நிலைமை கெஜ்ரிவாலை விட மோசமாக உள்ளது. அவர்களை உடனே உண்ணாவிரத்தத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.

இதற்கிடையே உண்ணாவிரதமே இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியும் அன்னா கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர்கள் என்னதான் உண்ணாவிரதம் இருந்தாலும் அரசு அவர்களின் கோரிக்கையை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.

ராஜா
01-08-2012, 08:39 AM
காலரா, வாந்தி-பேதியை கட்டுப்படுத்தக் கோரி ஸ்டாலின்- குஷ்பு போராட்டம்

http://tamil.oneindia.in/img/2012/08/01-stalin-kushboo-300.jpg

சென்னையில் காலரா, வாந்தி-பேதியை கட்டுப்படுத்தக் கோரியும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தக் கோரியும் மெமோரியல் ஹால் அருகே திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட மேடையில் கழிவு நீர் கலந்த குடிநீர் பாட்டில்களில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பலர் கொசுவலை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நடிகை குஷ்பு உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்தது.

ராஜா
01-08-2012, 08:42 AM
கோடிக்கணக்கான சொத்தில் டிம்பிளுக்கு பைசா கூட எழுதி வைக்காத ராஜேஷ் கன்னா!

http://tamil.oneindia.in/img/2012/07/31-rajesh-khanna-dimple-300.jpg

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். அவர் தான் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது கோடிக்கணக்கான சொத்துகளை மகள் டுவிங்கிள் மற்றும் ரிங்கி கன்னா ஆகியோரின் பெயர்களில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் அவரது மனைவி டிம்பிளுக்கு பைசா கூட எழுதவில்லை.

ராஜேஷ் கன்னாவும், டிம்பிளும் 1973ல் காதல் திருமணம் செய்து இரண்டு மகள்களைப் பெற்ற பிறகு 1984ம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் விவகாரத்து வாங்கவில்லை. ராஜேஷ் கன்னா உடல் நலம் பாதித்திருந்தபோது அவருக்கு அருகில் டிம்பிள் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை கார்ட்டர் ரோட்டில் உள்ள ராஜேஷ் கன்னாவின் பங்களாவான ஆசிர்வாதை அவரது நினைவாக அருங்காட்சியமாக மாற்ற டுவிங்கிளும், ரிங்கியும் தீர்மானி்ததுள்ளனர்.

ராஜா
01-08-2012, 08:50 AM
யானைத் தந்தங்கள் பறிமுதல்: மோகன்லாலை கைது செய்ய கேரள காங்கிரஸ் கோரிக்கை

http://tamil.oneindia.in/img/2012/08/01-mohanlal8-300.jpg

கடந்த ஆண்டு இறுதியில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன் லால் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கேரளா மட்டுமின்றி சென்னையில் உள்ள இருவரின் வீடுகளிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள மோகன்லாலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் 4 யானை தந்தங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். வனத்துறை சட்டப்படி அனுமதியின்றி வீட்டில் தத்தங்களை வைத்திருந்தால் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும். ஆனால் மோகன்லாலை இதுவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில் கேரள அரசு தலைமை கொறடா பி.சி. ஜார்ஜ் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வீட்டில் தத்தங்களை பதுக்கி வைத்திருந்த மோகன்லாலை இதுவரை கைது செய்யாதது தவறு. சட்டத்தில் அனைவரும் சமம். எனவே மோகன்லாலை உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.

அனுராகவன்
01-08-2012, 07:41 PM
நன்றி! நன்றி!! நன்றி !!!

ராஜா
02-08-2012, 05:14 AM
கண்ணுற்று மறுமொழிந்தமைக்கு நன்றி அச்சலா..!

ராஜா
02-08-2012, 05:17 AM
சுஷில் குமார் பதவியேற்ற முதல் நாளிலேயே குண்டு வெடித்து 'வரவேற்ற' தீவிரவாதம்!

http://tamil.oneindia.in/img/2012/08/02-sushil-kumar-shinde-300.jpg

நேற்றுதான் புதிய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்றார். தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது. சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.

உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை ஒடுக்க கடுமையாகப் போராடினார். அப்படி இருந்தும் அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

ராஜா
02-08-2012, 05:19 AM
கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர்

http://tamil.oneindia.in/img/2012/08/02-mataamritanandamayi-300.jpg

பெண் சாமியாரான மாதா அமிர்தானந்தமயியின் ஆசிரமம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வள்ளிகோவிலில் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். பக்தர்களுக்கு அமிர்தானந்தமயி முத்தம் கொடுத்து ஆசிர்வாதம் வழங்குவார்.

வழக்கம் போல் நேற்றும் தன்னை சந்திக்க வந்த பக்தர்களுக்கு அவர் ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அமிர்தானந்தமயியை தாக்க முயன்றார். உடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் பீகாரைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா
02-08-2012, 05:22 AM
கருணாநிதி கவிழ்ந்தது போன்று ஜெயலலிதாவும் ஒரு நாள் கவிழ்வார்: விஜயகாந்த் ஆரூடம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,

மக்கள் பிரச்சனைகள் மலை போல் குவிந்துள்ளது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். தினமும் ஒரு பொய் அறிக்கைகள் மூலம் ஆட்சி நடத்துகின்றார். தமிழகத்தில் விலை வாசி உயர்ந்துவிட்டது. விவசாயம் அழிந்துவிட்டது. ஏன் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விவசாயம் இல்லை. அது தான் உண்மை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்றவை அதிக அளவு நடக்கிறது. கனிம வளங்களும் இந்த (அதிமுக) ஆட்சியில் அதிக அளவு கொள்ளை போகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு போய்வி்ட்டது. இதை சொன்னால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிக தயவால் தான் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த உண்மையும் அவர்கள் ஒத்துக் கொள்ள தயாராக இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்கமாவை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. அப்படி இருந்தும் ஜெயலலிதாவால் சங்மாவை குடியரசுத் தலைவராக்க முடியவில்லை. அப்படி இருக்கும் பேது ஜெயலலிதா மட்டும் எப்படி பிரதமராக முடியும்? ஈழத்தமிழர்களுக்காக டெசோ மாநாடு நடத்துவதாக கருணாநிதி சொல்கிறார். யாரை ஏமாற்றுவதற்கு கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார் என்று தெரியவில்லை.

பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்த கருணாநிதி கவிழ்ந்தது மாதிரி ஒரு நாள் ஜெயலலிதாவும் கவிழ்ந்து போவது உறுதி. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை சீருடை வழங்கவில்லை. பஸ் பாஸ் வழங்கவில்லை. தமிழக மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்க முடியவில்லை என்றார்.

ராஜா
02-08-2012, 05:25 AM
புனேவில் குண்டுவெடிப்பு: சென்னையில் உஷார் நிலை - பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு

புனே நகரில் நேற்று குறைந்த சக்தி கொண்ட நான்கு குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இனால் புனே நகரில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் தலைநகர் சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து வருகின்றனர்.

விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள் அனைத்திலும் வாகனத் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இரவு நேர வாகனத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜா
02-08-2012, 06:32 AM
நித்யானந்தா, ரஞ்சிதா பாஸ்போர்ட் முடக்கம்

பிடதி ஆசிரமத்தின் பீடாதிபதியும், மதுரை இளைய ஆதினமுமான நித்யானந்தா மற்றும் அவரது பக்தை ரஞ்சிதா உள்ளிட்ட 30 பேரின் பாஸ்போர்ட்டுகளை புது தில்லி விமான நிலையம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜா
02-08-2012, 06:40 AM
பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்: காஞ்சி எம்.பி.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

""பழங்கால பெருமை வாய்ந்த அக்கோயிலை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் பகுதியில் குறைந்தபட்சம் 100 மீட்டர் தூரமும் அதிகபட்சம் 300 மீட்டர் தூரம் வரையிலும் பொதுமக்கள் வசிக்கவோ, கடைகளை நடத்தவோ அனுமதி இல்லை. அதே சமயம், மாநில அரசு பரிந்துரைத்தால் விதிகளைத் தளர்த்தி 100 மீட்டருக்கு மேல் பொதுமக்கள் வசிக்கவும் கடைகளை வைக்கவும் அனுமதி வழங்கப்படும்.

இது தொடர்பாக தமிழக அரசிடம் பல முறை பேசியும் மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலை தொடர அனுமதித்தால் சிற்பங்களின் நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தின் அனைத்துப் பகுதிகளையும் தொல்லியல் துறை கையகப்படுத்தி விடும். எனவே, சில இடங்களைத் தளர்த்த தொல்லியல் துறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். சென்னை கூட்டத்தில் தீர்வு ஏற்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்'' என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.

ராஜா
02-08-2012, 06:41 AM
ஆன்லைனில் ராணுவ, கடற்படை அகாடமி தேர்வுக்கு நுழைவுச் சீட்டு

தேசிய ராணுவ அகாடமி மற்றும் தேசிய கடற்படை அகாடமி தேர்வுகள் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 41 மையங்களில் இத்தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது நுழைவுச் சீட்டினை www.upsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ராஜா
02-08-2012, 06:49 AM
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தேமுதிக அமைக்கும்: விஜயகாந்த்

தே.மு.தி.க சார்பில் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி இம்மாதம் முழுவதும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி திண்டுக்கல்லில் புதன்கிழமை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தாலும் தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் கிடைக்காது. ஆட்சியில் இருப்பவர்கள் திட்டங்களை செயல்படுத்தினால் தேமுதிக ஏன் போராட்டங்களை நடத்த வேண்டும். கனிம வளங்கள் கொள்ளை போவதை அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

டெசோ மாநாடு நடத்த திமுக இப்போது முடிவு செய்துள்ளது. இலங்கையில் தமிழர்களும் பிரபாகரனும் கொல்லப்பட்டபோது ஏன் இதுபோன்ற மாநாட்டை நடத்தவில்லை. வரலாறு என்பதை நாம் சிறிதாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற உடன் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இப்பதவிக்கு வரும் முன் அவர்தானே நாட்டின் நிதியமைச்சராக இருந்தார். ஏன் அப்போது வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை?

டாஸ்மாக் கடைகள் செயல்படுவது குறித்து நான் உடனடியாக எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. மக்களில் ஆண், பெண் சரி விகிதத்தில் உள்ளனர். ஒரு தரப்பில் 10 சதவீதம் ஆதரவு கூடினாலும் விளைவு மாறிப் போகும். கள்ளுக்கடையை திறந்தது திமுக. டாஸ்மாக் கடையைத் திறந்தது அதிமுக. மக்களை குடிக்க வைத்த இந்த இரு கட்சியினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியவர்கள்தான்.

தொண்டர்களை நல்வழிப்படுத்தவே தேமுதிக கட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிக ஆட்சிக்கு வரும்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வந்து சேரும்.
படித்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல, படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பை கொடுப்போம். அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறுகின்றனர். 1 லட்சம் பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா என கேள்வி எழுப்பினார் விஜயகாந்த்.

ராஜா
02-08-2012, 06:57 AM
வறண்டது கீழணை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய அணையான கீழணை 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருத்த கவலையடைந்துள்ளனர்.

ராஜா
02-08-2012, 06:59 AM
6-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர்?

சென்னையிலிருந்து ஜூன் 21-ம் தேதி கொடநாட்டிற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஜூலை 18-ம் தேதி சென்னைக்குச் சென்றுவிட்டு, 19-ம் தேதி கொடநாடு திரும்பிவிட்டார்.

ஜூலை 25-ம் தேதி கொடநாடு பகுதியில் நடைபெற்ற பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம். திறப்பு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், புதன்கிழமை (ஆகஸ்ட் 1) நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது, பிற கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து, வரும் 6-ம் தேதி கொடநாட்டிலிருந்து சென்னைக்கு முதல்வர் செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா
02-08-2012, 08:51 AM
18 வயதை அடையாதவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது செல்லாது : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதை எட்டாதவருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜா
02-08-2012, 08:56 AM
வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கானோர் பெயர் நீக்கம்

வாக்காளர் பட்டியலில் பகுதி பகுதியாக நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
கணினி கோளாறு காரணமாக அவை தானாக நீங்கியுள்ளதாக காரணம் கூறினாலும், அதைச் சரிசெய்ய தேர்தல் அலுவலர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக, சென்னையின் பல்வேறு மண்டலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் தொகுதியில் சில பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் எனத் தெரிகிறது.
இதேபோன்று, தமிழகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்தால்தான் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
02-08-2012, 12:31 PM
பரிசுப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு போன பிரதீபா பட்டீல்!: மீண்டும் சர்ச்சையில்

http://tamil.oneindia.in/img/2012/08/02-prathiba-patil.jpg

அவர் தமது பதவிக்காலத்தில் இருந்த போது 150 பரிசுப் பொருட்களை பெற்றிருக்கிறார். அதில் அமிர்தசரஸ் தங்கக் கோயில் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு ஒன்றும் அடக்கம். அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா கொடுத்தது. அம்ராவதியில் இருக்கும் அனைத்து பொருட்களும் பிரதீபா குடும்பத்தினர் நடத்தும் வித்யாபார்தி கல்லூரியில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. அனேகமாக இந்த அருங்காட்சியகம் வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படலாம்.

பிரதீபா பட்டீலின் இந்த நடவடிக்கையானது மரபுகளை மீறிய செயல் என்றுதான் அரசியசட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவருக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் நாட்டுக்குச் சொந்தமானது... அது நாட்டின் சொத்து என்றுதான் கருதப்பட வேண்டும் என்கிறார் அரசியல்சட்ட வல்லுநர் சுஸ்காப் காஷ்யப்.

குடியரசுத் தலைவர் பதவி காலத்துக்கு பின் பிரதீபா குடியேறுவதற்காக ராணுவ நிலத்தை அபகரித்ததாக முன்னர் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வேறுவழியின்றி அதை ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பிரதீபா பட்டீல்,

ராஜா
02-08-2012, 12:34 PM
பதக்கம் கிடைக்காத ஆத்திரத்தில் கடையை சேதப்படுத்திய ஆஸ்திரேலியா துடுப்பு படகு வீரர் கைது!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான குழு துடுப்பு படகு போட்டியின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்கேற்றன. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை.

இதில் அதிருப்தியடைந்த ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ்வா பூத் என்ற வீரர், சுரே டவுன் என்ற இடத்தில் இருந்த கடையின் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தினார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அவமானமடைந்த ஜோஷ்வா, காவல் நிலையத்தில் உள்ள சுவரில் தனது தலையை மோதி கொண்டார்.

இதில் காயமடைந்த அவர், அங்கே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நாளை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

ராஜா
02-08-2012, 12:37 PM
'ஷூ'வில் புத்தர் படம்: அமெரிக்க நிறுவனம் குசும்பு- திபெத்தியர்கள் ஆத்திரம்

http://tamil.oneindia.in/img/2012/08/02-buddhashoe-300.jpg

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ் என்ற நிறுவனம் தான் புதிதாக தயாரித்துள்ள காலணிகளில் புத்த மதத்தை தோற்றுவித்த புத்தரின் படத்தை போட்டுள்ளது. இதற்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கம் கண்டன செய்திகளால் நிரம்பியுள்ளது.

இது குறித்து பூசுங் செரிங் என்ற திபெத்தியர் பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது,
புத்த மத வழக்கப்படி புத்தாவின் உருவத்திற்கு மரியாதை அளிக்கப்படும். அப்படிப்பட்ட புத்தரின் உருவப்படத்தை காலணியில் வரைந்திருப்பது புத்த மதத்தை பின்பற்றுவர்களை அவமதிக்கும் செயலாகும். அதனால் உங்கள் புத்தரின் படம் உள்ள ஷூக்களை தயவு செய்து சந்தையில் இருந்து திரும்பப் பெறுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயரை வைத்ததோடு அந்த பாட்டிலில் காளியின் படத்தையும் போட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
02-08-2012, 12:39 PM
நரிக்குறவ மருத்துவ மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை கல்லூரியில் தடபுடல் வரவேற்பு

நரிக்குறவ சமுதாயத்தில் பிறந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நரிக்குறவ இனத்தை சேர்ந்தவரான ராஜபாண்டி, பிளஸ்-2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். ராஜபாண்டிக்கு மருத்துவம் படித்து ஏழை, எளியோருக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயரிய லட்சியம் இருந்து வந்தது. மருத்துவக்கல்லூரிக்கான கட்-ஆப் மார்க் 197.75 அவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த மருத்துவ கல்லூரி கவுன்சிலிங்கில், மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

நரிக்குறவ இனத்தை சேர்ந்த அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் கட்டணத்தை நினைத்து அவர் பெரும் கவலை அடைந்தார். இதையடுத்து நடிகர் ஜீவா ராஜபாண்டிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவி செய்தார். அதேபோல தூத்துக்குடியை சேர்ந்த ஒரு டாக்டர் ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த சமூக சேவகர், டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் மாணவர் ராஜபாண்டிக்கு பண உதவி அளித்தனர்.

இதையடுத்து நம்பிக்கை பெற்ற ராஜபாண்டி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி முதலாமாண்டுத் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. அப்போது ராஜபாண்டிக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு கொடுத்து அவரை மகிழ்வித்தனர் கைகுலுக்கியும், வாழ்த்துகள் கூறியும் அவர்கள் வரவேற்றது ராஜபாண்டியை நெகிழ வைத்தது. அதேபோல கல்லூரி டீன் உமாதேவியும் ராஜபாண்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராஜா
02-08-2012, 01:08 PM
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு

http://tamil.oneindia.in/img/2012/08/02-team-anna1-300.jpg

ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அமீனுதீன்
05-08-2012, 05:14 AM
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆய்வு

First Published : 05 Aug 2012 12:28:13 AM IST

Last Updated :




நாமக்கல், ஆக.4: நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரமற்ற தொழில்புரிவோர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற்றுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கல்வி உதவித்தொகையை மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டுமன்றி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், சுயநிதி மற்றும் மெட்ரிக். பள்ளிகளிலும் 6 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதன்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக். பள்ளிகளில் இந்தக் கல்வி உதவித்தொகை பெற்றுத் தந்ததில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து அந்தப் பள்ளிகளிலும் இப்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக கல்வி உதவித்தொகை பெற்ற சில அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களை மட்டும் வரவழைத்து நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆவணங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின் கோவை மண்டல கணக்குத் தணிக்கைப் பிரிவு அலுவலர்கள் இருவர் மற்றும் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பொன்னையா ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலிருந்து இந்தக் கல்வி உதவித்தொகை பெற்ற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை பெற்று திங்கள்கிழமை தீவிர விசாரணை நடத்தப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது:உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெறப்பட்டுள்ள கல்வி உதவித்தொகையில் மோசடி நடந்துள்ளதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. இருப்பினும், சுயப் பரிசோதனை நடவடிக்கையாக கோவையிலிருந்து பள்ளிக் கல்வித் துறை தணிக்கைப் பிரிவு அலுவலர்களை வரவழைத்து ஆய்வு செய்யப்படுகிறது. இதில், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.தலைமையாசிரியர்கள் அந்தந்த வட்டாரத்திலேயே இருக்க உத்தரவு: உதவித்தொகையை கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்கள் அந்தந்த வட்டாரத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று மாவட்டத் தொடக்கக் கல்வி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், கல்வி உதவித்தொகை கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் (17பி) அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைமையாசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவில், அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை அந்தந்த வட்டாரத்திலேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியது: கல்வி உதவித்தொகை கையாடல் தொடர்பாக தலைமையாசிரியர்களிடம் பல கட்ட விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அடிக்கடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்து உடனடியாக வந்து செல்ல வேண்டும். அதற்காகவே தலைமையாசிரியர்கள் அந்தந்த வட்டாரத்திலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர்களிடம் இருந்து விளக்கக் கடிதம் பெறப்பட்ட பிறகு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

M.Jagadeesan
05-08-2012, 06:41 AM
6-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர்?

சென்னையிலிருந்து ஜூன் 21-ம் தேதி கொடநாட்டிற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஜூலை 18-ம் தேதி சென்னைக்குச் சென்றுவிட்டு, 19-ம் தேதி கொடநாடு திரும்பிவிட்டார்.

ஜூலை 25-ம் தேதி கொடநாடு பகுதியில் நடைபெற்ற பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம். திறப்பு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், புதன்கிழமை (ஆகஸ்ட் 1) நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது, பிற கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து, வரும் 6-ம் தேதி கொடநாட்டிலிருந்து சென்னைக்கு முதல்வர் செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ் நாட்டின் தலைநகராக கொட நாட்டை மாற்றிவிட்டால் அம்மையாருக்கு வசதியாக இருக்குமே!

mgandhi
06-08-2012, 12:01 PM
http://dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_83180963994.jpg

அரியானா அமைச்சர் கோபால் கண்டாவின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு டெல்லியில் விமான பணிப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா செய்துள்ள அமைச்சரை உடனே கைது செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. விசாரணையில் கோபால் பற்றி பல பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

mgandhi
06-08-2012, 12:12 PM
விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுசம்பந்தமாக தாக்கல் செய்த மனுவில், விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விஜயகாந்த் மீதும் அவரது அறிக்கையை வெளியிட்ட ஆங்கில பத்திரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுராகவன்
11-08-2012, 06:12 PM
நன்றி R.மோகன் காந்தி.

mgandhi
11-08-2012, 06:17 PM
அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும்: கருணாநிதி அறிவிப்பு

டெசோ மாநாட்டுக்கு தடை நீடித்தால் நாளை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு ஆய்வரங்கமும், மாலை 4 மணிக்கு டெசோ மாநாடு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.மேலும் அவர், டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள் என்றும், டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி ஆகஸ்ட் 20 முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

ராஜா
12-08-2012, 01:57 PM
பரபரப்புச் செய்திகளுக்கு நன்றி அண்ணா..!

ராஜா
12-08-2012, 02:29 PM
அரசியல் கட்சி துவங்கும் முடிவு ஹசாரேவுடையது தான்: அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழலுக்கு எதிரான தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முடிவு அன்னா ஹசாரேவுடையது தான் என்றும், அவரையும் தங்களையும் பிரிக்க சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ராஜா
12-08-2012, 02:34 PM
ஐ.நா. மூலம் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துக- டெசோ மாநாட்டில் தீர்மானம்

http://tamil.oneindia.in/img/2012/08/12-karunanidhi12-300.jpg

இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜா
12-08-2012, 02:36 PM
இங்கிலாந்தில் கே.எஃப்.சி. சிக்கன் வாங்காதததால் வயதான தந்தையின் இடுப்பை ஒடித்த குடிகார மகன்..

இங்கிலாந்து கவுன்ட்டி டர்ஹமில் உள்ள ஹார்ட்பூலைச் சேர்ந்தவர் டேவிட்(46). அவரது தந்தை நார்மன் பெல்(76). அவர் தனது மகனுக்காக சூப்பர் மார்க்கெட் சென்று பொறித்த கோழிக்கறி வாங்கிச் சென்றார். பெல் தனது மனைவியுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த பக்கமாக வந்த டேவிட்டிடம் அவரது தாய் பெல் கோழிக்கறி வாங்கியிருப்பதை தெரிவித்தார்.

அதற்கு குடிகாரரான டேவிட் கே.எப்.சி. சிக்கன் வாங்காமல் ஏதோ சிக்கனை எப்படி வாங்கி வரப்போகுது என்று கூறி தந்தையை தனது தலையால் முட்ட வந்தார். அதில் இருந்து தப்பிக்க முயன்ற பெல் கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

இதற்கிடையே டேவிட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் தனது மகனை மன்னித்து விடுதலை செய்யுமாறு பெல் கேட்டுக் கொண்டதன்பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ராஜா
12-08-2012, 02:37 PM
அகமதாபாத்தில் இருந்து விமானத்தைக் கடத்த லஷ்கர் இ தொய்பா சதித் திட்டம்

சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மாநில அரசுகளை உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்திச் செல்ல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
12-08-2012, 02:40 PM
அதெப்படி வருவார்கள் விடுதலைப் புலிகள்... திமுக வக்கீல்களின் கிடுக்கிப்பிடி வாதம்!

அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 11 காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டது நியாயமே என்று வாதாடியது அரசுத் தரப்பு. ஆனால் அதை மிக திறமையாக, மிக நுணுக்கமான வாதங்களை முன்வைத்து வாதாடி தவிடுபொடியாக்கியுள்ளனர் திமுக வக்கீல்கள்.

ராஜா
12-08-2012, 02:52 PM
டெசோ மாநாட்டுக்கு அனுமதி, எங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி -திமுக

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. திடலில் டெசோ மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. பேனர் கட்டுவது, ஒலிபெருக்கிகள் தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பு திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வெற்றிப் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த திமுகவினர் பெரும் உற்சாகக் குரல் எழுப்பினர்.

இந்த தீர்ப்பு குறித்து திமுக வக்கீல்கள் பிரிவு தலைவர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவிக்கையில், இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.

ராஜா
12-08-2012, 02:54 PM
சட்டசபையில் விஜயகாந்த் ஏன் கோபப்பட்டார் தெரியுமா...?

http://tamil.oneindia.in/img/2012/08/12-vijayakanth-5-300.jpg

நான் ஏன் சட்டசபையில் கோபப்பட்டேன். எனது கட்சியைப் பற்றி தவறாகப் பேசியதால்தான் கோபப்பட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தஞ்சையில் நடந்த விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

தஞ்சையில், 12 மணி நேரம் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம், குறைந்த மின் அழுத்தமாக இருப்பதால், மின் மோட்டார்கள் வெடித்து விடுகிறது என, விவசாயிகள் கூறுகின்றனர். அதனால், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடி பாதித்து, சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது. எனவே, ஏக்கருக்கு விவசாயிகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்தில், நதிநீர் பிரச்னை, தண்ணீர் பிரச்னை நிலவுவதற்கு காரணம், முதல்வர் ஜெயலலிதாதான். கவுரவம் பார்க்காமல், அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடக முதல்வர்களை, தமிழக முதல்வர் சென்று சந்தித்திருந்தால், தண்ணீர் பிரச்னை தீர்ந்திருக்கும்.

மின்சார பிரச்னையை தீர்க்க முடியவில்லை. பஸ் பாஸ், மாணவ, மாணவியருக்கு யூனிபார்ம் வழங்க முடியவில்லை. தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க, மத்திய அமைச்சர் அழகிரி பேசவே பயப்படுகிறார். பதவி போய்விடும் என அவர் அஞ்சுகிறார்.

தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுவதை அடியோடு தடை செய்ய வேண்டும்.இந்த கூட்டத்துக்காக வைத்த பேனரில், கோட்டையை தானமாக கொடுத்தேன் என குறிப்பிட்டதால், கலெக்டர் பேனரை அகற்றக்கூறியுள்ளார். வார்த்தைக்கு பவர் இருக்கிறது என்றால், நான் பேசினால் யாரும் தாங்க முடியாது.
மதுரையில், 16 ஆயிரம் கோடி கிரானைட் குவாரி முறைகேடு நடந்துள்ளது என்கின்றனர். இதேபோல, தமிழகம் முழுவதும், 175 குவாரிகள் உள்ளது. இந்த குவாரிகளை அரசே ஏற்று நடத்தினாலும், கொள்ளை தான் நடக்கும். குவாரி முறைகேடு குறித்து, உடனடியாக, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.

ராஜா
12-08-2012, 02:57 PM
போராட்டக்காரர்கள் சதி: கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு- நெல்லை கலெக்டர் அறிவிப்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 2 கி.மீ. பகுதிக்குள் நுழைய தடை விதித்து குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144(1) ன் கீழ் ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இந்த பகுதியில் கலவரக்காரர்களும் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான அமைப்புகளும் கூடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், அணு உலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவித்துள்ளதால் அது குறித்து வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அணு உலை போராட்டக்காரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு கருதியும், அணுமின் நிலைய பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அரசு சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதியை பாதுகாப்பதற்கு ஏதுவாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி அணு மின் நிலையத்திற்கு எதிரான கருத்துடையவர்களும், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவிற்கு உதவி செய்தும், அவர்களை தூண்டிவிடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நபர்களும் 11.08.2012 மாலை 6 மணி முதல் 10.09.2012 மாலை 6 மணி வரை கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 7 கி.மீ. பகுதிக்குள் நுழைய தடை விதித்துக் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144(1)ன் கீழ் இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ராஜா
13-08-2012, 06:10 AM
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது..?

http://tamil.oneindia.in/img/2012/08/13-evks-300.jpg

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்து பேசியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜா
13-08-2012, 06:13 AM
தமிழக அரசு தொழிற்சங்கங்களை மதிப்பதில்லை: சிஐடியூ மாநில தலைவர் குற்றச்சாட்டு

தமிழக அரசு தொழிற்சங்கங்களை மதிப்பதில்லை என்று நெல்லையில் நடந்த மருந்து விற்பனை பிரதிநிதிகள் மாநில மாநாட்டில் சிஐடியூ மாநில தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார். தமிழகத்தில் முறைசாரா தொழிலாளர் வாரியம் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருகிறது. விஏஓ கையெழுத்து, 55 லட்சம் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு திறப்பு என முடியாதவற்றை உடனே செயல்படுத்த அரசு வற்புறுத்துகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும் தொழிற்சங்கங்களையும் அரசு மதிப்பதில்லை என்றார் அவர்..

ராஜா
13-08-2012, 06:16 AM
குரூப் 2 தேர்வு கேள்வித்தாள் அவுட்? வினா-விடை தாளுடன் வந்தவர் கைது-5 பேர் மீது வழக்கு பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குருப்-2 தேர்வு எழுத வினா-விடை தாளுடன் வந்ததாக கூறப்படும் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேள்வித்தாள் நகல் வைத்திருந்ததாக ஈரோட்டை சேர்ந்த கணவன்-மனைவியிடம் விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு பிரப் சாலையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் குரூப்-2 தேர்வு எழுத வந்த பெண் ஒருவரிடம், தேர்வு கேள்வித்தாளின் சில பக்கங்கள் இருப்பதாக தேர்வு எழுதிய சிலர் சந்தேகமடைந்தனர். தேர்வு முடிந்த பிறகு அந்த பெண்ணிடம் இருந்த கேள்வித்தாளை வாங்கி பார்த்த போது, கையால் எழுதப்பட்ட நகல் கேள்வித்தாளின் 131வது கேள்வியில் இருந்து 170 கேள்வி வரை, குரூப்-2 தேர்வு தாள் அப்படியே இருந்தது. நகலில் கேள்வியும், அதன் பதிலும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்வு எழுதியவர்களில் சிலர், சந்தேகத்திற்கு இடமான பெண்ணுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தனர். கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்தார்.

ராஜா
13-08-2012, 06:18 AM
பாப் இசை, வாணவேடிக்கை உடன் கோலாகலமாக முடிந்தது லண்டன் ஒலிம்பிக்

http://tamil.oneindia.in/img/2012/08/13-london-statdium-300.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 27ம் தேதி கோலகலமான துவக்க விழாவுடன் துவங்கியது. அதன்பிறகு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 204 நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற 30வது ஒலிம்பிக் போட்டி, இன்று அதிகாலை நிறைவு விழாவுடன் முடிவு அடைந்தது.

ராஜா
13-08-2012, 06:24 AM
டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு: கொழும்பில் கருணாநிதி, சம்பந்தன் உருவபொம்மைகள் எரிப்பு

http://tamil.oneindia.in/img/2012/08/13-karunanidhi1300.jpg

ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்காக சென்னையில் திமுக ஏற்பாட்டில் டெசோ மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் திமுக தலைவர் கருணாநிதி உருவபொம்மை எரித்து சிங்களவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ராஜா
13-08-2012, 06:25 AM
அடுத்தவர் படைப்பை திருடி கட்டுரை எழுதிய இந்திய பத்திரிகையாளர் ஜக்காரியா சஸ்பெண்ட்!

டைம் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஜக்காரியா, சி.என்.என். தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். டைம் பத்திரிகையில் ஜக்காரியா எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்த சில பத்திகள், அதாவது ஒரு பாராகிராப், அமெரிக்காவின் மற்றொரு பத்திரிகையான நியூயார்க்கெரில் ஏப்ரல் 23-ல் ஜில் லிபோர்ஸ் என்பவரது கட்டுரையில் இடம்பெற்றிருந்தவை என்ற புகார் எழுந்தது.

இதை ஒப்புக் கொண்ட ஜக்காரியா, இதற்காக தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் முழுவதும் தம்முடைய தவறுதான் என்றும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டைம் பத்திரிகையின் செய்தித் தொடர்பாளர் அலி ஜெல்னகோ, ஜக்காரியாவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலை உள்ளது. அவரை ஒரு மாத காலம் சஸ்பெண்ட் செய்கிறோம் என்றார்.

இதனையடுத்து சி.என்.என். நிர்வாகமும் ஜக்காரியாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. ஆனால் எத்தனை மாதத்துக்கு சஸ்பெண்ட் என சி.என்.என். நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் பிறந்தவரான ஜக்காரியா, யேல் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகங்களில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
13-08-2012, 06:27 AM
காவிரி வழக்கு: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க கர்நாடகம், மத்திய அரசுக்கு நோட்டீஸ்

http://tamil.oneindia.in/img/2012/08/13-supreme-court-4300.jpg

காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டக் கோரும் தமிழக அரசின் மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாக மத்திய அரசை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கடந்த 9 ஆண்டுகளாக காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டாமல் இருந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் காட்டம் காட்டியது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜா
13-08-2012, 06:29 AM
வங்கதேசம் போல இலங்கையில் தனித் தமிழீழத்தை உருவாக்க வேண்டும்: இந்து அமைப்புகள் வலியுறுத்தல்

http://tamil.oneindia.in/img/2012/08/13-pramod-muthalik.jpg

இலங்கையில் அமைதிவழியில் தீர்வு ஏற்படாது என்பதால் வங்கதேசத்தை உருவாக்கியது போல ராணுவவழியில் தமிழர்களுக்கென தனித் தமிழீழ நாட்டை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளான இந்து மக்கள் கட்சி, ஸ்ரீராம் சேனா ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

செய்தியாளர்களிடம் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:

காங்கிரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து கருணாநிதி அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். நாங்கள் தெளிவான அறிவிப்போடு இந்த மாநாட்டை நடத்துகிறோம். பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தபோதும் உள்ளரங்க நிகழ்ச்சியாக மாநாட்டை நடத்துகிறோம். எங்களைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரத்தரத் தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் மட்டும்தான். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமையோடு வாழ்வது சாத்தியமில்லை. நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி காலத்தில் பல முயற்சிகளைச் செய்தும் இலங்கையில் அமைதி ஏற்படவில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வுக்கு சாத்தியமில்லை, ராணுவத் தீர்வு மட்டும்தான் சாத்தியம். வங்கதேசம் உருவாக்கப்பட்டதுபோல் தனித் தமிழ் ஈழத்தையும் ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர்.

ராஜா
13-08-2012, 02:20 PM
இப்போ ஏத்துனா ரூ.1.37, அடுத்த வாரம் ஏத்துனா ரூ.3... இது பெட்ரோல் விலை மிரட்டல்!

http://tamil.oneindia.in/img/2012/08/13-petrol-bunk300.jpg

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 22,451 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 9,249 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 8,240 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும். இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு உடனடியாக ரூ. 1.37 உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவாரத்தில் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மத்திய அரசை இந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

ராஜா
13-08-2012, 02:23 PM
நியூயார்க் போலீஸ் உள்ள சீக்கியர்கள் டர்பன் அணிய அனுமதிக்கப்படுவார்களா?

அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல் துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்கான்சினில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தையடுத்து நியூயார்க் நகர காவல் துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நியூயார்க் நகர காம்ப்ட்ரோலர் ஜான் சி. லூ ப்ளூம்பர்க்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

விஸ்கான்சின் படுகொலை தேசத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்தாவது நியூயார்க் நகர காவல்துறையில் உள்ள சீக்கியர்கள் தாடி வளர்க்கவும், டர்பன் அணியவும் அனுமதி அளித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். விஸ்கான்சின்(குருத்வாரா) தாக்குதல் சகிப்புத்தன்மையின்மையையே காட்டுகின்றது. செப்டம்பர் 11ல் (அல் கொய்தா தாக்குதல்) இருந்து சீக்கியர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை யுனைடெட் சீக்ஸ் என்ற குழு வெளியிட்டுள்ளது.

ராஜா
13-08-2012, 02:27 PM
மாவோயிஸ்ட் அமைப்பில் பிளவு: நீக்கப்பட்ட ஒடிசா மாநிலத் தலைவர் பாண்டா சரணடைகிறார்?

மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பு க்கப்பட்ட ஒடிஷா மாநில தலைவர் சபயசாசி பாண்டே சரணடையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா
14-08-2012, 04:31 AM
ராம்தேவ், அன்னா போராட்டங்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை: மார்க்கண்டேய கட்ஜூ

http://tamil.oneindia.in/img/2012/08/14-ramdev-anna.jpg

சண்டிகார்: ஊழலுக்கு எதிரான ராம்தேவ், அன்னா ஹசாரே போராட்டங்களால் ஒரு பலனும் கிடைக்காது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்...

ராஜா
14-08-2012, 04:32 AM
வினாத்தாள் அவுட் விவகாரம் எதிரொலி: டி.என்.பி.சி. குரூப் 2 தேர்வு ரத்து!

http://tamil.oneindia.in/img/2012/08/13-natraj-tnpsc-300.jpg

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த உடனேயே வினாத்தாள் முன்னரே வெளியாகிவிட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து வினாத்தாளை அவுட்டாக்கிய விவரம் அம்பலமானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வினாத்தாள் அவுட் ஆன விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நட்ராஜ் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நட்ராஜ், நேற்று நடத்தப்பட்ட குரூப் -2 தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் புதிய வினாத்தாள் அமைக்க புதிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இக்குழுவில் 4 அல்லது 5 பேர் இடம்பெற்றிருப்பர் என்றும் நட்ராஜ் தெரிவித்துள்ளார். புதியதாக நடத்தப்படும் தேர்வை நேற்று தேர்வு எழுதிய அனைவரும் எழுதலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜா
14-08-2012, 04:34 AM
இதுதான் கடைசி கால அவகாசம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

http://tamil.oneindia.in/img/2012/08/14-jaya-sasi-2-300.jpeg

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையை எப்படி இழுத்தடிக்க முடியுமோ அப்படி ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் பதிலளிக்க 3 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அன்பழகனின் வழக்கறிஞர் அல்லி அர்ஜூனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இனியும் அவகாசம் கேட்கக் கூடாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பினன்ர் இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜா
14-08-2012, 04:37 AM
கொதிக்கும் எண்ணெயில் இருந்து பிரசாதத்தை கையால் எடுத்து வழங்கிய பூசாரி: பக்தர்கள் பரவசம்..
( அந்தாளு கொதிக்கிற எண்ணெய்க்குள்ள கைய விட்டா, இவிங்களுக்கு என்ன அப்படி ஒரு பரவசம்..? )

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள ஜம்புகுடப்பட்டி கிராமத்தில் புகழ் பெற்ற அருள்மிகு சென்னம்மாள் கோயில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் திருவிழா மிகவும் பிரபலம். இந்த வருட திருவிழா கடந்த 2 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் அருள்மிகு சென்னம்மாள் உற்சவ சிலைக்குச் சிறப்புப் பூஜைகளை பூசாரி நடத்தினார்.
முதல் நாள் நிகழ்ச்சியாக ஜம்புகுடப்பட்டியில் இருந்து நடுக்காட்டூர், கோணனூர், நான்குரோடு, போச்சம்பள்ளி பேருந்து நிலையம் வரை சிலம்பாட்டம், நையாண்டி, பம்பை, ஒயிலாட்டத்துடன் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து கோயில் பூசாரி காளியப்பன் பக்தர்கள் முன்பு கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு அதிரசத்தை எடுத்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினார். இந்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பேறு கிடைக்குமாம். கடன் பிரச்சனையில் உள்ளவர்களுக்குக கடன் நிவர்த்தி கிடைக்குமாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்குமாம்.

இதனால் கொதிக்கும் எண்ணெயில் இருந்து பூசாரி வழங்கும் பிரசாதத்தை வாங்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்த பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது.

ராஜா
14-08-2012, 04:40 AM
கொடநாட்டில் தங்கிய விவகாரம்...: ராமதாஸ்-ஆனந்த விகடன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது பற்றி விமர்சனம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதும் ஆனந்த விகடன் மீதும் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டாக்டர் ராமதாஸ் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு கடந்த 13ம் தேதி பேட்டி அளித்து இருந்தார். அதில் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கி இருந்தது பற்றி விமர்சனம் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியிட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ். மாதவன், மற்றும் செய்தியாளர் கே.ராஜா திருவேங்கடம் ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

ராஜா
14-08-2012, 06:19 AM
ஏட்டிக்கு போட்டி: ஜெயந்தி நடராஜன் மீது நடவடிக்கை கோரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

http://tamil.oneindia.in/img/2012/08/14-evks-jayanthi.jpg

கடந்த மாதம் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேசிய இளங்கோவன், மிகப் பெரிய பதவி வகித்தபோதிலும் காங்கிரஸ் தொண்டர்களின் குறைகளைக் கேட்க காமராஜர் தவறியதில்லை. அவர் முதல்வராக இருக்கும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் மிகப் பெரும் செல்வாக்கோடு இருந்தது.

அதே போல இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே. வாசன் பல அலுவல்கள் இருந்தாலும் டெல்லியிலும், சென்னையிலும் தொண்டர்களைச் சந்திக்கத் தவறுவதில்லை. அத்துடன், கட்சி வளர்ச்சிக்காகவும் நேரத்தை செலவிடுகிறார். சில நேரங்களில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட தனது தொகுதியில் மக்களைச் சந்திக்கிறார்.
ஆனால், தமிழகத்தில் இருந்து சென்றுள்ள இன்னொரு மத்திய அமைச்சர் தான் (ஜெயந்தி நடராஜன்) தொண்டர்களைச் சந்திப்பதில்லை, அதே போல தமிழக காங்கிரஸ் வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று பேசினார் இளங்கோவன்.

மேலும் தனது பேச்சில் தனது வழக்கமான ஸ்டைலில் மறைந்த தலைவர்கள், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் ப.சிதம்பரத்தையும் அவர் தாக்கிப் பேசினார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் மேலிடத்தில் ஜெயந்தி நடராஜன் புகார் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி செயலாளர் மோதிலால் வோரா இளங்கோவனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந் நிலையில் இது குறித்து இளங்கோவன் அளித்துள்ள ஒரு பேட்டியில், காமராஜர் பிறந்த நாள் விழாவில் நான் பேசியதைத் திரித்து, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் பற்றி தவறாகப் பேசியதாகவும், அதைப்போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சையாக விமர்சனம் செய்ததாகவும் தவறான, பொய்யான தகவலை சொல்லி ஜெயந்தி நடராஜன் மேலிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதற்காக விளக்கம் கேட்டு மோதிலால் வோரா கடிதம் எழுதியிருந்தார்.
கூட்டத்தில் நான் என்ன பேசினேன் என்பதை விளக்கி உடனடியாக பதில் அனுப்பினேன். பின்னர் டெல்லி சென்று ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ஏ.கே.ஆண்டனி மற்றும் மோதிலால் வோராவை சந்தித்தேன்.

மத்திய அமைச்சராகி பல காலம் ஆகிவிட்டபோதும், தமிழக காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் ஒரு முறை மட்டுமே ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்களையும், எம்.பிக்களையும் அவர் சந்திப்பதில்லை. மாறாக வணிகர்களை மட்டுமே சந்திக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலிட நோட்டீசுக்கு நான் அனுப்பிய விளக்கத்திலும், நேரிலும் வலியுறுத்தினேன்.
1967ல் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது. அண்ணா முதல்வரானார். அதற்கு பக்தவத்சலம்தான் காரணம் என்ற உண்மையையும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். (தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் பேத்தி தான் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது) இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நானும் அவரை சந்திக்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார் இளங்கோவன். ஆனால், சோனியாவை சந்திக்க இவர் டெல்லியில் காத்துக் கிடந்ததாகவும், அவரை சோனியா சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை இதுவரை எந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
14-08-2012, 06:22 AM
காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது: 6-8 மணிநேரம் மின்தடை அமல்- கடுப்பில் மக்கள்

http://tamil.oneindia.in/img/2012/08/14-wind-power-300.jpg

நெல்லை மண்டலத்தில் காற்றாலை மின் உற்பத்தி திடீரென 800 மெகாவாட் குறைந்துள்ளது. இதையடுத்து 6 முதல் 8 மணிநேரம் வரை மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் கணிசமான அளவுக்கு மின்சாரம் உற்பத்தியானது. இதனால் அவ்வப்போது மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. இந்த மண்டலங்களில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் சராசரியாக 1,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஒரு சில தினங்கள் இந்த அளவு குறையும்போது மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக இந்த காற்று சீசனில் ஒரே நாளில் 1,750 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தியானது. இந்த நிலையில் ஆடி மாதம் முடிய உள்ளதால் தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. நெல்லை மண்டலத்தில் நேற்று முன்தினம் 1,211 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்த அளவு நேற்று திடீரென குறைந்தது. நேற்று காலை முதலே காற்று இல்லாததால் காற்றாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மண்டலத்தில் இருந்து 1,050 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக நேற்று மீண்டும் கடுமையான மின்வெட்டு அமலுக்கு வந்தது. நகர் பகுதியில் காலை 3 மணிநேரமும், பகல் 3 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. செங்கோட்டை பகுதியி்ல் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 12 மணி முதல் 2.30 வரையும், பின்னர் மீண்டும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் மின்தடை ஏற்பட்டது.

ராஜா
14-08-2012, 06:42 AM
ரஷ்யா, வடஜப்பானில் கடும் நிலநடுக்கம் -ரிக்டரில் 7.3 அலகுகளாக பதிவு

http://tamil.oneindia.in/img/2012/08/14-quakejapan-russia.jpg

கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 625 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ரஷியா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ராஜா
14-08-2012, 06:43 AM
டெசோ மாநாட்டு தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து: இலங்கையின் சிங்கள அமைப்பு அலறல்

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறியுள்ளதாவது:

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துவிட முடியாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால் மகிந்த ராஜபக்ச அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.

தனி ஈழத்தை உருவாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றும் "டெசோ'வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஐ.நாவில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட ஈழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதைப் பார்க்கவேண்டும்.

இலங்கையின் இறையாண்மையில் தலையிடும் அதிகாரம் இந்தியாவிற்கு கிடையாது, காஷ்மீர் பிரச்சினையில் இலங்கை தலையிடுவதில்லை. இந்தியா அதற்கு அனுமதிப்பதுமில்லை. எனவே இலங்கையின் விவகாரங்களில் குறிப்பாக இந்தியா தலையிடக்கூடாது என்றார் அவர்.

ராஜா
14-08-2012, 06:46 AM
டி.என்.பி.எஸ்.சி ஆபீஸில் இருந்து வினாத்தாள் லீக் ஆனதா? அச்சகத்தில் இருந்து அவுட் ஆனதா?

http://tamil.oneindia.in/img/2012/08/14-tnpsc1300.jpg

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வினாத்தாள் எப்படி வெளியானது? என்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் வினாத்தாள் எப்படி அவுட் ஆனது என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக பணியாளர்கள் யாரேனும் ஸ்கேன் செய்து இந்த வினாத்தாளை அவுட் ஆக்கும் முறைகேட்டில் ஈடுபட்டனரா? அல்லது வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து இந்த வினாத்தாள்கள் அவுட் ஆனதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 7 பேரின் மின்னஞ்சல் முகவரிகளும் பெறப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

ராஜா
14-08-2012, 07:37 AM
விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு கல்லீரல் பொருத்தும் முயற்சி தோல்வி- தானம் தரவிருந்த டிரைவர் மரணம்!

http://tamil.oneindia.in/img/2012/08/14-vilasrao-deshmukh.jpg

கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தேஷ்முக் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. முழு கல்லீரலையும் மாற்ற வேண்டிய நிலையில் அவர் தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. அவரது உடல் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.

இதையடுத்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு கல்லீரலைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 11ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் 31 வயது டிரைவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச் சாவைச் சந்தித்தார். அவரை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அவரது கல்லீரலை தேஷ்முக்குக்குப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டிரைவரின் குடும்பத்தினரும் சம்மதித்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலையில் கல்லீரலைப் பெற்று தேஷ்முக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 12 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிரைவரின் கல்லீரலை எடுத்துச் செல்வதற்காக குளோபல் மருத்துவமனையின் ஆம்புலன்ஸும் பொது மருத்துவமனைக்கு வந்திருந்தது.

ஆனால் திடீரென டிரைவரின் குடும்பத்தினர் பின்வாங்கி விட்டனர். மேலும் அதிகாலை இரண்டே முக்கால் மணியளவில் டிரைவரும் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதனால் அவரது கல்லீரலைப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. உயிருடன் இருப்பவரின் கல்லீரலை மட்டுமே தானமாக பெற முடியும் என்பதால் தற்போது தேஷ்முக்குக்கு இந்த டிரைவரின் கல்லீரலைப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ராஜா
14-08-2012, 07:39 AM
இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பாலஸ்தீன பெண்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மர் அல் ஜப்ன்(37) என்பவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தல்லல் ஜிபென்(32). அவர்களுக்கு பஷாயெர் என்ற மகள் உள்ளார்(16). பஷாயெர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோது அம்மர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 32 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜிபெனுக்கு தன் கணவர் மூலம் மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இதையடுத்து அவர் சிறையில் உள்ள தனது கணவரின் உயிரணுவை கடத்தி வந்து செயற்கை கருத்தரிப்பு முறைப்படி கர்ப்பமானார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிரசவ வலி வந்தது. இதையடுத்து நப்லஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு முஹன்னத் என்று பெயரிட்டுள்ளனர்.

தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர் சலிம் அபு ஹைசரான் தெரிவித்தார்.

ராஜா
14-08-2012, 07:42 AM
ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி மனைவி, மகள் வெளிநாட்டுக்கு தப்பாமல் தடுக்க தீவிர வேட்டை

நில அபகரிப்பு மோசடி புகாருக்குள்ளாகி இருக்கும் கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது மகள் யாமினி இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிடாமல் இருக்க விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை புறநகரில் போலி பட்டாக்கள் தயாரித்து நில அபகரிப்புகளில் ஈடுபட்டனர் என்பது சுப்புலட்சுமி மற்றும் யாமினி மீது புகார். இந்தப் புகாரைத் தொடர்ந்து ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாள் துக்கையாண்டி திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் சென்னையைவிட்டு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துக்கையாண்டியின் மனைவி மற்றும் யாமினி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியபோது அவர்கள் திடீரென தலைமறைவாகிவிட்டனர். இருவரையும் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் இருவரும் சிக்கவில்லை.

இந்தநிலையில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஒரு தகவலை அனுப்பி உள்ளனர். அதில் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி, மகள் யாமினி இருவரும் வெளிநாடு சென்றால் தங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா
14-08-2012, 07:54 AM
மாரியம்மனுக்கு மடிபிச்சை கேடு வந்த பெண் 10 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு போனார்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகில் உள்ள தேவராயன்பாளைத்தை சேர்ந்தவர் சக்திவேல். அரிசி வியாபாரியான இவரது மனைவி பிரேமா (வயது 35). இவர், நேற்று காலை 9.30 மணியளவில் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை மற்றும் காணிக்கை சட்டி சகிதமாக வந்த 30 வயது மதிக்கதக்க பெண், தான் ஆட்டையாம்பட்டி மாரியம்மனுக்கு மடிப்பிச்சை கேட்டு வந்துள்ளதாகவும், அதற்கு காணிக்கை தரும்படி வேண்டியுள்ளார்.


அந்த பெண்ணின் வேண்டுதலையே மாரியம்மனின் வேண்டுதலாக ஏற்று, வீட்டுக்குள் சென்று பணம் எடுத்துவந்து அந்த பெண்ணின் மடியில் காணிக்கை போட்டுள்ளார் பிரேமா.


காணிக்கை போட்ட பிரேமாவின் நெற்றியில், திருநீறு பூசியபடியே அந்த பெண் பிரேமாவின் கண்களை உற்றுப்பார்த்துள்ளார். இதில், பிரேமா, கண் இமைக்கும் நேரத்தில், சுயநினைவு இழந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தாலிசெயின், கையில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க வளையல்களை கழற்றி காணிக்கையாக அந்த பெண்ணின் மடியில் செலுத்திய பின், மயங்கி கீழே விழுந்து விட்டார்.


நகையை வாங்கிக்கொண்ட கையோடு அந்த பெண், அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். சில நிமிடங்களுக்கு பிறகு கண் விழித்த பிரேமா, நகையை பறிக்கொடுத்ததை உணர்ந்து, கூச்சல் போட்டு கத்தினார்.


அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்ததில், நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஊர் முழுவதும் தேடியும் அந்த மாரியம்மனுக்கு மடிபிச்சை கேட்டு வந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.


நடந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் மாரியம்மன் பக்தையை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜா
14-08-2012, 08:32 AM
என் கையில் எதுவும் இல்லை: ரஜினி

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/ACTERSS/acter/rajinikanth-3d-t1.jpg

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் தயாரித்த சிவாஜி' படம், 2007-ம் ஆண்டு திரைக்கு வந்தது. 5 வருடங்களுக்குப்பின், இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு இருக்கிறது. சிவாஜி 3டி' படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் டிரைலர் பத்திரிகை நிருபர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.


சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் 13.08.2012 அன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, சிவாஜி 3டி' படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- சிவாஜி படம் 3டியில் உருவாகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:- ஆண்டவன் எப்போதும் என் கூடவே இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். என் ரசிகர்களுக்கு என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனம் சிவாஜி' படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.


கோச்சடையான்' படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். உங்களுக்கே (நிருபர்களுக்கே) இந்த படம் பிடித்து இருக்கிறது. என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.


கேள்வி:- அடுத்ததாக எந்த படத்தை 3டி படமாக உருவாக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?


பதில்:- எந்திரன், படையப்பா போன்ற பிரமாண்டமான படங்களை 3டியில் கொண்டு வரலாம். இனிமேல் செய்கிற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கதைகளை உருவாக்க வேண்டும். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கி விட்டது.


கேள்வி:- கறுப்பு-வெள்ளை பட காலத்திலும் இருந்தீர்கள். கலர் பட காலத்திலும் இருந்தீர்கள். இப்போது 3டி பட காலத்திலும் இருக்கிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்:- நான் அதிர்ஷ்டசாலி. எதையும் நான் சாஸ்தி பிளான் பண்ணி செய்வதில்லை. எல்லாமே ஆண்டவன் அருளால் நடக்கிறது. கடவுளுக்கு நன்றி.


கேள்வி: இனிமேல் ஏவிஎம் உங்களை வைத்து 3டி படம் தயாரிக்க திட்டம் இருக்கிறதா?


பதில்: அது ஆண்டவன் செயல். என் கையில் எதுவும் இல்லை.

அனுராகவன்
18-08-2012, 01:47 PM
நன்றி ராஜா..
அருமையாக உள்ளது..

பாரதி
18-08-2012, 02:58 PM
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் காலமானார்

சென்னை: பிரபல பத்திரிகை ஆசிரியரும், நாவல் ஆசிரியரும்,
ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, வேடிக்கை கவிதைகள், நாடகம், திரைக்கதை
படைத்தவரும், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.,க்கு
நண்பராக திகழ்ந்த, ரா.கி.ரங்கராஜன், தனது, 85ம் வயதில், இன்று காலமானார். கதை
எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், "எப்படி
கதை எழுதுவது?' என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை
வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது இறுதிச் சடங்கு, நாளை (ஆகஸ்ட் 19) காலை, 9
மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 80154-03491, 94442-69006. இவரது பல கதைகள்,
திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. "சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்)
வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், "படகு வீடு, பட்டாம்பூச்சி' ஆகியவை,
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும். மனைவி கமலா,
இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட குடும்பம் இவருடையது. தன் கண்களை தானமாக
வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக
வழங்கப்பட்டன.

தகவல் : தினமலர் நாளிதழ்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
சிறந்த எழுத்தாளரான ரா.கி. ரங்கராஜனின் மறைவு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் உறவினர், நண்பர்கள், வாசகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கலைவேந்தன்
18-08-2012, 03:16 PM
ரா கி ரங்கராஜனின் இழப்பு எழுத்துலகுக்கு சொல்லவொண்ணா இழப்பு..! :(

M.Jagadeesan
18-08-2012, 03:44 PM
என் இளமைக்காலத்தில், குமுதத்தில் ரா.கி. ரங்கராஜனின் கதைகளை வாசித்ததை மறக்கமுடியாது.

கலைவேந்தன்
19-08-2012, 10:47 AM
http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/549594_267620140020102_608760667_n.jpg

ரா கி ரங்கராஜன்..

jayanth
20-08-2012, 03:38 AM
http://illiweb.com/fa/i/smiles/icon_sad.gif (javascript:emoticonp(':\\\'(')).....எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மரணம் தமிழ் எழுத்துலகுக்கு ஈடு செய்ய முடிய இழப்பு.

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2012, 06:41 PM
சிறந்த கதாசிரியர் ஒருவரின் இழப்பு ஈடு செய்யவியலா வெற்றிடம்..

அனுராகவன்
30-08-2012, 05:21 PM
மாபெரும் இழப்பு..ஈடுசெய்யமுடியாத இழப்பு...

அமீனுதீன்
06-09-2012, 12:28 PM
விடுகதையா இந்த வாழ்க்கை, விடை தருவார் யாரோ, எனது கை என்னை அடிப்பதுவோ, எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ, அழுது அறியாத என் கண்கள், ஆறு குளமாக மாறுவதோ, ஏன் என்று கேட்கவும் நாதியில்லை, ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை, பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும், காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?, உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும், நான் செய்த தீங்கு என்ன எ*ன்ற பாட*ல்தா*ன் த*ற்போது *நினைவு*க்கு வரு*கிறது.

**விருதுந*க*ர் மாவ*ட்ட*த்*தி*ல் உ*ள்ள கு*ட்டி ஜ*ப்பா*ன் எ*ன்று அழை*க்க*ப்ப*டு*ம் *சிவகா*சி*யி*ல் ப*ட்டாசு ஆலை*யி*ல் ஏ*ற்ப*ட்ட வெடி *விப*த்*தி*ல் 38 உ*யி*ர்க*ள் ப*ஷ்பமா*கி*வி*ட்டது. இத*ற்கு காரண*ம் ஆலை*யி*ன் உ*ரிமையாளரா? அ*ல்லது அர*சி*ன் அல*ட்*சியமா? எ*ன்ற ப*ல்லா*யிர**க்கண*க்கான கே*ள்*வி ந*ம் ம*ன*தி*ல் எழு*கிறது.

மிகப் பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த பட்டாசு ஆலையில், கடந்தவாரம்தான் வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். அ*ப்போது, அளவு*க்கு அ*திகமான வெடிபொரு*ட்க*ள் ஆலை*யி*ல் வை*க்க*ப்ப*ட்டு*ள்ளது. இதனை க*ண்டு*பிடி*த்த அ*திகா*ரிக*ள், *வி*தி *மீ*றியதாக*க் கூ*றி, இ*ந்த ஆலை செய*ல்பட த*ற்கா*லிகமா தடை *வி*தி*த்து*ள்ளன*ர். ஆனால், இந்த ஆலையை குத்தகைக்கு எடுத்தவர், உரிமத்துக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளார். அந்த உரிமத்திற்கான காலம் நே*ற்றுடன் முடியவிருந்த காரணத்தால், அவசர, அவசரமாக பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ப*ட்டாசு தயா*ரி*க்கு*ம் போது அறைக*ளி*ல் தரை*ப் பகு*தி*யி*ல் *தீ*ப்*பிடி*க்காத மே*ட் *வி*ரி*க்க*ப்பட வே*ண்டு*ம். ஆனா*ல் இ*ந்த ப*ட்டாசு ஆலை*யி*ல் இது *பி*ன்ப*ற்ற*ப்பட*வி*ல்லை. ப*ட்டாசு தயா**ரி*க்கு*ம் தொ**ழிலாள*ர்க*ள் பரு*த்து ஆடை அ*ணியவே*ண்டு*ம். ஆனா*ல் தொ**ழிலாள*ர்க*ள் பரு*த்து ஆடை அ*ணிய*வி*ல்லை. பாதுகா*ப்ப*ற்ற இ*ந்த அறைக*ளி*ல் ச*க்*தி வா*ய்*ந்த வெடி பொரு*ட்க*ள் வை*த்*திரு*ந்ததா*ல் பெரு*ம் **விப*த்து ஏ*ற்ப*ட்டு*ள்ளது. மேலு*ம், ஏ*ற்றும*தி தர*ம் வா*ய்*ந்த ப*ட்டாசுக*ள் அனை*த்து*ம், பாதுகா*ப்ப*ற்ற அறைக*ளி*ல் வை*க்க*ப்ப*ட்டு இரு*ந்தன. இதுவே பெரு*ம் *விப*த்து*க்கு காரணமாக அமை*ந்து *வி*ட்டது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த பெருமைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களின் அலட்சியத்தால், ஆண்டுதோறும் உயிரிழக்கும் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரம், அதிர்ச்சியை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் பிற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பட்டாசு விபத்துக*ளி*ல் 114 பே*ர் உ*யி*ரிழ*ந்து*ள்ளன*ர்.

கட*ந்த 24.9.2002 அ*ன்று நட*ந்த அ.*தி.*தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் கோவில்பட்டி அருகே முடக்கமிட்டான்பட்டி பட்டாசு ஆலை*யி*ல் ஏ*ற்ப*ட்ட தீ விபத்தில் 16 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

2.7.2005 அதே அ.*தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் *சிவகாசி மீனாம்பட்டி ப*ட்டாசு ஆலை*யி*ல் ஏ*ற்ப*ட்ட *தீ விபத்தில் 20 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

அ.*தி.மு.க. ஆ*ட்**சியான 22.2.2006 அ*ன்று சிவகாசி பர்மா காலனி ஏ*ற்ப*ட்ட ப*ட்டாசு விபத்தில் 12 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

12.6.2007 *அ*ன்று *தி.மு.க. ஆ*ட்*சி*யி**ன்போது சிவகாசி நாராயணபுரம் ப*ட்டாசு விபத்தில் 4 பேர் பலியா*கியு*ள்ளன*ர். 7.7.2009 *தி.மு.க. ஆ*ட்**சி*யி*ல் மதுரை அருகே வடக்கம்பட்டி ப*ட்டாசு விபத்தில் 19 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

20.7.2009 அ*ன்று* *தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி ப*ட்டாசு விபத்தில் 18 பேர் பலியா*கியு*ள்ன*ர். 27.7.2009 அ*ன்று *தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் சிவகாசி ப*ட்டாசு விபத்தில் 3 பேர் பலியா*கியு*ள்ளன*ர். *தி.மு.க. ஆ*ட்**சியான 16.6.2010 அ*ன்று சிவகாசி ப*ட்டாசு விபத்தில் 7 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

24.9.2010 *தி.மு.க. ஆ*ட்*சி*யி*ன்போது சிவகாசி ப*ட்டாசு விபத்தில் ஒருவர் பலியா*கியு*ள்ளன*ர். 21.1.2011 *மீ*ண்டு*ம் *அ.*தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் விருதுநகர் ப*ட்டாசு விபத்தில் 8 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

26.4.2011 அ*ன்று அ.*தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் சிவகாசி ப*ட்டாசு விபத்தில் 2 பேர் பலியா*கியு*ள்ளன*ர். 29.6.2011 அ*ன்று அ.*தி.மு.க. ஆ*ட்*சி*யி*ல் தூத்துக்குடி குரும்பூரில் ப*ட்டாசு *விப*த்*தி*ல் 4 பேர் பலியா*கியு*ள்ளன*ர்.

த*ற்போது அ.த*ி.மு.க. ஆ*ட்**சி*யி*ல் **சிவகா*சி முத*லி*ப்ப*ட்டி*யி*ல் உ*ள்ள ப*ட்டாசு ஆலை*யி*ல் ஏ*ற்ப*ட்ட *தீ *விப*த்*தி*ல் இதுவரை 38 பே*ர் ப*லியா*கியு*ள்ளன*ர்.

ப*ட்டாசு ஆலை*யி*ல் அடி*க்கடி ஏ*ற்ப*டு*ம் இ*ப்படி*ப்ப*ட்ட *விப*த்துகளை தடு*க்க மு**ந்தைய அரசு*ம் ச*ரி, த*ற்போதைய அரசு*ம் ச*ரி எ*ந்த*வித நடவடி*க்கையு*ம் எடு*க்க*ப்பட*வி*ல்லை. கட*ந்த *பி*ப்ர*வ*ரி மாத*ம் தே.மு.*தி.க.வை சே*ர்*ந்த *விருதுநக*ர் ச*ட்டம*ன்ற உறு*ப்*பின*ர் மாஃபா பா*ண்டியராஜ*ன், *சிவகா*சி ப*ட்டாசு ஆலை *விப*த்து*க்கு **தீ*ர்வு காண வே*ண்டு*ம் எ*ன்று கோ**ரி*க்கை வை*த்தா*ர்.

இ*ந்த கோ*ரி*க்கை ஏ*ற்று*க் கொ*ண்ட முத*ல்வ*ர் ஜெய*ல*லிதா, உடனடியாக 10 ரூபா*ய் ஒது*க்*கினா*ர். அதோடு ச*ரி இதுவரை *சிவகா*சி பகு*தி*யி*ல் எ*ந்த ப*ணியு*ம் நடைபெற*வி*ல்லை. காரண*ம், ஊழ*ல் எ*ன்று கூ*று*கிறா*ர் தே.மு.*தி.க. ச*ட்டம*ன்ற உறு*ப்*பின*ர் பா*ண்டியராஜ*ன். கா***ன்*ட்டிரா*க் எடு*க்க வருபவ*ர்க*ளிட*ம் ஆளு*ம் க*ட்*சி*யி*ல் ல*ஞ்ச*ம் கே*ப்பதா*ல் அ*ந்த ப*ணியை செ*ய்ய கா*ன்*ட்ரா*க்ட*ர்க*ள் மு*ன்வருவ*தி*ல்லை எ*ன்*கிறா*ர்.

*சிவகா*சி*யி*ல் 9 ஆ*யிர**த்*திற*்கு*ம் அ*திகமாக ப*ட்டாசு ஆலைக*ள் உ*ள்ளன. இ*ந்*தியா*வி*ல் ப*ட்டாசு உ*ற்ப*த்*தி*யி*ல் 90 சத*வீத*ம் *சிவகா*சி*யி*ல்தா*ன் உ*ற்ப*த்*தி ஆ*கிறது. அதும*ட்டு*மி*ன்*றி, இ*ந்*தியா*வி*ன் *தீ*ப்பெ*ட்டி உ*ற்ப*த்*தி*யி*ல் 80 சத*வீத*ம் **சிவகா*சி*யி*ல்தா*ன் உ*ற்ப*த்*தி ஆ*கிறது.

மேலு*ம் ப*ட்டாசு, *தீ*ப்பெ**ட்டி உ*ற்ப*த்*தி த*விர அ*ச்சு*த்துறை*யிலு*ம் **சிவகா*சி*க்கு இர*ண்டாவது இட**ம். 400*க்கு*ம் மே*ற்ப*ட்ட அ*ச்ச*ங்க*ள் இ*ங்கு உ*ள்ளன. *இ*ங்கு வேலை*யி*ல்லா*த் *தி*ண்டா*ட்ட*ம் எ*ன்பதே *கிடையாது. எ*ல்லோரு*க்கு*ம் ஏதாவது ஒரு வேலை க*ண்டி*ப்பாக *கிடை*க்கு*ம். அ*ந்த அளவு*க்கு அசுர வள*ர்*ச்*சி*யி*ல் இரு*க்கு*ம் *சிவகா*சி*யி*ல் ம***க்க*ளி*ன் உ*யிரு*க்கு பாதுகா*ப்பு எ*ன்பது த*ற்போதுவரை கே*ள்*வி*க்கு*றியாக*த்தாக*த் தா*ன் இரு*க்*கிறது.

ராஜா
16-09-2012, 04:38 AM
ரூ 85 லட்சம் மோசடி... பவர் ஸ்டார் சீனிவாசன் கைது... புழல் சிறையில் அடைப்பு!

http://tamil.oneindia.in/img/2012/09/15-srinivasan-300.jpg

பவர் ஸ்டார் எனும் நடிகர் சீனிவாசன், ரூ 65 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் புழலில் அடைக்கப்பட்டார்.பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 மாதத்திற்கு முன் குரோம்பேட்டை கணபதிபுரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார். இவர் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

ரூ.65 லட்சம் கமிஷன்

பாலசுப்பிரமணியத்திற்கு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக பிரபல அரசு வங்கி ஒன்றில் 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நடிகர் சீனிவாசன் கூறினார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் கமிஷனாக பெற்றார்.

அதன் பிறகு 2 மாதமாகியும் கடனும் வாங்கி கொடுக்க வில்லை, கமிஷன் தொகையும் திருப்பி கொடுக்க வில்லை. பின்னர் 2 தடவையாக ரூ.15 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வில்லை.

இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி விசாரிக்குமாறு கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு ஆணையிடப்பட்டது.

ராஜா
16-09-2012, 04:40 AM
தொடரும் விசனம்.... திமுக முப்பெரும் விழாவையும் புறக்கணித்தார் மு.க.அழகிரி!

http://tamil.oneindia.in/img/2012/09/16-azhagiri300.jpg

விழுப்புரத்தில் நேற்று நடந்த திமுக முப்பெரும் விழாவையும் புறக்கணித்து விட்டார் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி. இதனால் திமுகவினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

சமீப காலமாக திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகள், போராட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் மு.க.அழகிரி. அவருக்கு என்ன பிரச்சினை, என்ன கோபம், என்ன கவலை, என்ன அதிருப்தி என்று தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

ராஜா
16-09-2012, 04:43 AM
அட, ...

ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் அடைந்துவிடுவேன்: சீமான் பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/09/15-seeman5-300.jpg

ஆனந்த விகடன் வார இதழுக்கு சீமான் அளித்திருக்கும் பேட்டியில் கூறியுள்ளதாவது:

கேள்வி: 'சரி... நீங்கள் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள்?''

பதில்: ''பிரதமராவது என் கனவல்ல. ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.''

கேள்வி: ''அடிப்படையில் உங்கள் இயக்கத்தின் இலக்குதான் என்ன?''

பதில்: ''இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை!''

கேள்வி: ''ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் உங்கள் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா?''

பதில் : ''இல்லை. ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்துபோவதற்கான காரணங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று மட்டும் சொல்வேன். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசத்தின் மீது எப்படி வரும் எனக்கு நேசம்?''

கேள்வி: ''தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?''

பதில்: ''அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்! என்று கூறியுள்ளார்.

ராஜா
16-09-2012, 05:05 AM
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பண உதவி செய்கிறது: ஆர்.எஸ்.எஸ்.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பத்திரிக்கையான ஆர்கனைசரில் கூறியிருப்பதாவது,

ஜெய்தாபூரில் பிரான்ஸ் கூட்டணியிலும், கூடங்குளத்தில் ரஷ்யா கூட்டணியிலும் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையங்களை மூட அமெரிக்கா ஒரு பிரிவினரைத் தூண்டி போராட வைத்துள்ளது. அரசியலில் குதிக்கும் எண்ணத்துடன் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கோடிக்கணக்கான பணத்தை உள்ளூர் பிஷப்களால் நடத்தப்படும் என்.ஜி.ஓ.க்களுக்கு அளித்து கூடங்குளத்தில் போராட்டத்தை தூண்டி விடுகிறது. அமெரிக்காவுடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் செய்துள்ளபோதிலும் அதனுடன் சேர்ந்து இன்னும் அணு மின் நிலையம் அமைக்கவில்லை. இந்நிலையில் ஜெய்தாபூர் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூடிவிட்டால் அதற்கு மாற்று வழியை தான் காண்பிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜா
16-09-2012, 12:28 PM
ராஜபக்சேவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு

http://tamil.oneindia.in/img/2012/09/16-rajapakse1300.jpg

இலங்கையில் தமிழினப் படுகொலை தொடர்பாக அதிபர் ராஜபக்சேவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்த வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.

செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தர உள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

ராஜா
17-09-2012, 05:30 AM
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம்: சேலத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு

http://tamil.oneindia.in/img/2012/09/17-self-immolation11.jpg

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் இன்று அதிகாலை தீக்குளித்துள்ளார்.

சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் விஜயராஜ். இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஷேர் ஆட்டோ நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தமது ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்தார்.

அதன் பின்னர் "இந்தியாவுக்கு ராஜபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிய அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடலில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக தீக்காயம் இருப்பதால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாம் தீக்குளித்தது குறித்து விஜயராஜ் கூறுகையில், ராஜபக்சே இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியிறுத்தி தான் நான் தீக்குளித்தேன் என்றார்.

விஜயராஜ் தீக்குளித்தது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், இலங்கை தமிழர்கள் மீது விஜயராஜ் பற்றாக இருப்பார். எப்போதும் இலங்கை பிரச்சினை பற்றித்தான் பேசி கொண்டார். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டார். விஜயராஜை பார்த்து நாங்கள் என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்டதற்கு சிரித்தார். ஆனால் பதில் ஏதும் கூற வில்லை. சுமார் 5மணி அளவில் விஜயராஜ் என்ன நினைத்தாரோ பெட்ரோலை தன்மீது கொட்டி தீவைத்து கொண்டார். ராஜபக்சேவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார் என்றனர் அவர்கள்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வரும் 21-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜா
17-09-2012, 05:38 AM
இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பேன் என்று மிரட்டிய பிரேமதாசா-முன்னாள் தூதர் தகவல்

http://tamil.oneindia.in/img/2012/09/17-premadasa.jpg

இலங்கை முன்னாள் அதிபர் மறைந்த ரணசிங்கே பிரேமதாசா, இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவேன் என மிரட்டியதாக அந் நாட்டுக்கான முன்னாள் இந்தியத் தூதர் லக்கன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மெஹ்ரோத்ரா 'Indian Foreign Affairs Journal' பத்திரிகையில் இப்போது எழுதியுள்ள கட்டுரையில்,

இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அமைதியை ஏற்படுத்தவும் புலிகளை ஒடுக்கவும் 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு அமைதி காக்கும் பணியில் ஈடுபட இந்திய ராணுவத்தினர் சென்றனர். ஆனால், அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசாவுக்கு அந்த ஒப்பந்தத்தில் விருப்பமில்லை.

பின்னர் 1988ம் ஆண்டு பிரேமதாசா அதிபராக பொறுப்பேற்றவுடன், இந்திய ராணுவத்தினரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதே தனது முதல் பணியாகக் கருதினார்.

1989ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ரகசிய பேச்சு நடத்திய அவர், அதே ஆண்டு ஜூலைக்குள் இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில், அவரிடம் பேச்சு நடத்தச் சென்றேன். அப்போது, இந்திய ராணுவத்தினர் வெளியேறாவிட்டால், அவர்களுடன் போரிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

அதற்கு நான், "அமைதி குறித்து பேசவே நான் வந்தேன். நீங்கள் விரும்பினால் போரிடவும் இந்தியா தயார்'' என்றேன்.

இந்த பதிலை எதிர்பார்க்காத பிரேமதாசா கடும் அதிர்ச்சியடைந்து என்னை முறைத்தார். இரண்டு நிமிடங்கள் அவர் எதுவும் பேசவில்லை. அவரது கை, கால்கள் நடுங்குவதைப் பார்த்தேன்.

உடனே, அங்கிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னே, என்னை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நான் உடனடியாக எங்கள் தொலைக் காட்சியில் தோன்றி இது குறித்துப் பேசப் போகிறேன். இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை; இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது இந்தியாவின் ஆக்கிரமிப்புப் படை என்று அறிவிப்பேன். அது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றார் பிரேமதாசா.

அதற்கு நான், "எங்களது நற்பெயரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அது பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்'' என்றேன்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த பிரேமதாசா, இங்கு இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து இருந்தால், அது எனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும். இனி நீங்கள் வரும்போது எனது இறுதிச் சடங்கைத்தான் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டினார்.

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், 1990-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ராணுவத்தினர் திரும்ப அழைக்கப்பட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் எனது பங்கு அதிகம் என்பதால், என்னைக் கட்டிப்பிடித்து பிரேமதாசா பாராட்டினார் என்று லக்கன் லால் மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.

இதில் முக்கியமான விஷயம், இந்தியாவில் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி வந்தவுடன் திமுகவின் நெருக்கதலையடுத்தே அமைதி காக்கும் படையை இந்தியா வாபஸ் பெற்றது. இது குறித்து மெஹ்ரோத்ரா தனது கட்டுரையில் எதையும் தெரிவிக்கவில்லை.

அமைதி காக்கும் படை திரும்பி சில காலத்திலேயே பிரேமதாசாவும் ரஞ்சன் விஜேரத்னேவும் புலிகளால் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ராஜா
17-09-2012, 12:11 PM
சவூதியில் பயங்கர விபத்து - 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

http://tamil.oneindia.in/img/2012/09/17-saudi-arabia1-map-300.jpg

சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்நதவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவன ஊழியர்களுக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 50 பேருடன் ஒரு பேருந்து நிறுவனத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது வழியில், ஒரு டேங்கர் லாரியுடன் பஸ் மோதிக் கொண்டது. இதில் டேங்கர் லாரியும், பஸ்ஸும் தீப்பிடித்து எரிந்தன. இதில் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்து அலறித் துடித்தனர்.

மீட்புப் படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இந்தக் கோர விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பலியான இந்தியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

ராஜா
19-09-2012, 06:42 AM
உதயகுமாரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டம்: மூப்பனார் பேரவை

சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூடங்குளம் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு,

கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிபுணர் குழுவும், நீதிமன்றமும் ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்று தெரிவித்ததுடன் அணு உலையில் எரிபொருள் நிரப்பி மின் உற்பத்தியைத் துவங்கலாம் என்றும் கூறியது. முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் உள்பட பல விஞ்ஞானிகள் கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.

இந்நிலையில் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவ்வாறு உதயகுமாரை கைது செய்யாவிட்டால் சிதம்பரம் காந்தி சிலை அருகே மூப்பனார் பேரவை நிர்வாகிகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜா
19-09-2012, 06:50 AM
பாரத் பந்த்துக்கு திமுக திடீர் ஆதரவு- பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ரத்து செய்த தமிழக அரசு!

நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக 20ம் தேதி பாரத் பந்த் நடைபெற உள்ள நாளில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த பந்துக்கு திமுக ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது.

மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து 20ம் தேதியன்று நாடு தழுவிய அளவிலான பாரத் பந்த் நடைபெறுகிறது.

aren
19-09-2012, 06:50 AM
கூடங்குளம் அனுமின் நிலையத்தால் தென் மாவட்டங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அதை எப்படியாவது அரசாங்கம் திறக்கவேண்டும் என்பதே என் விருப்பம். திறப்பார்களா?

ராஜா
19-09-2012, 06:54 AM
இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி.. கமிஷனர் திரிபாதி பதவி காலி -புதிய கமிஷனர் ஜார்ஜ்

http://tamil.oneindia.in/img/2012/09/18-tripathy-jk-adgp-jeorge-300.jpg

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து இன்று இரவு திடீரென திரிபாதி மாற்றம் செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியான ஜார்ஜ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட திரிபாதி, சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன?

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டவர் திரிபாதி. சென்னையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்துக்கு போதுமாக போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் பூத்களையும் உடைத்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.

இந்நிலையில் இன்றும் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான பேரணியை இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின.இதனால் சென்னை நகரின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் பெரும் பரபரப்பையும், சென்னை நகரின் போக்குவரத்தையும் இந்தப் போராட்டம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

சென்னை அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி தங்களது உணர்வை வெளிப்படுத்தியிருந்தன்.

மேலும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இதுவரை இப்படி ஒரு போராட்டத்தையும், தாக்குதலையும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய ஜார்ஜ்

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜார்ஜின் கை எப்பொழுதுமே ஓங்கித்தான் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போதும் சரி, தமிழக மக்கள் உணர்வுப் பூர்வமாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராடிய போது அவர்களை கண்மூடித்தனமாக ஒடுக்கியதிலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதிலும் சரி ஜார்ஜின் பங்கு "அளப்பரியது". இப்பொழுது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜா
19-09-2012, 06:58 AM
கூடங்குளம் அனுமின் நிலையத்தால் தென் மாவட்டங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அதை எப்படியாவது அரசாங்கம் திறக்கவேண்டும் என்பதே என் விருப்பம். திறப்பார்களா?

திறக்காம எங்க போவாங்க.. உதயகுமாருக்கு ஏற்கனவே பைசா கொடுத்தாச்சு.. அவர் பின்னால இருக்கற செம்மறி ஆட்டுக்கூட்டத்தை ஏய்க்க இப்படி கொஞ்சம் பீலா விடறார்.. சீக்கிரம் ஆஃப் ஆகிடுவார்..

ராஜா
19-09-2012, 07:30 AM
கலைஞர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை

கலைஞர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தது பற்றி முரசொலி பத்திரிகையில் கருத்து கூறியதால் திமுக தலைவர் கலைஞர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கலைஞர் கருத்தை வெளியிட்டதால் முரசொலி செல்வம் மீதும் வழக்கு போடப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான கட்டுரை தொடபான வழக்கு விசாரணைக்கு தடைவிதிக் கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10ல் கோர்ட்டில் ஆஜராகவேண்டுமென்ற உத்தரவுக்கும் தடை விதித்தது ஐகோர்ட்.

A Thainis
20-09-2012, 06:33 PM
அணுமின் நிலையங்கள் பாதுகாப்பு இல்லாதவை என நமக்கு ஜப்பான் சுனாமி நிருபித்து உள்ளது. நமது தேவைக்கு இருக்க வேண்டிய இது நமக்கு எமனாக மாறும் போது எவ்வாறு பயன் படுத்த துணிவது. கண்களை விற்று சித்திரம் வாங்குவதா? உயிர் அணுக்களையே கொல்லுகின்ற இந்த அணுமின் நிலையங்கள் வேண்டாம். குறுக்கு வழியில் மின்சாரம் தயாரிப்பதுதான் இந்த அணுமின் நிலையங்கள், குறுக்கு வழியில் சம்பாதிப்பவன் ஒரு நாள் மாட்டிக் கொள்வதுபோல, இதுவும் ஒருநாள் நமக்கு எமனாக அமையும். தென்னகத்தின் வளர்ச்சிக்கு தேவை சேது சமுத்திர திட்டமே, நிச்சயம் கூடங்குளம் அணுமின் நிலையும் அல்ல.

ராஜா
21-09-2012, 12:24 PM
6 திரிணமூல் அமைச்சர்களும் ராஜினாமா: மத்திய அரசுக்கும் மம்தா ஆதரவு வாபஸ்!

http://tamil.oneindia.in/img/2012/09/21-mamata-300.jpg

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று முறைப்படி விலகியது. பிரதமர் மன்மோகன்சிங்கிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மத்திய அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை நேரில் அளித்தனர். மேலும் மத்திய அரசுக்கு அளித்த வந்த ஆதரவையும் திருமப்பெறுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அதிகாரப்பூர்வமாக திரிணாமுல் காங்கிரசார் கடிதம் கொடுத்துள்ளனர்.

ராஜா
21-09-2012, 12:26 PM
சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்தது மத்திய அரசு!

சந்தை விலை சமையம் எரிவாயு சிலிண்டர் மீதான வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மானிய விலை மற்றும் சந்தை விலை சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இடையேயான வேறுபாட்டை குறைக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தை விலையில் விற்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான கலால் வரி மற்றும் இறக்குமதி வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ராஜா
21-09-2012, 12:28 PM
'தி இந்து' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரி மரணம்!

http://tamil.oneindia.in/img/2012/09/21-kasturi-hindu-300.jpg

தி இந்து நாளிதழின் நீண்ட கால ஆசிரியர், கஸ்தூரி அண்ட் சன்ஸின் நிர்வாக இயக்குநர் என்ற பெருமை கொண்ட ஜி கஸ்தூரி இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

A Thainis
21-09-2012, 12:37 PM
மக்களை சுரண்டும் மன்மோகன் அரசு வீட்டுக்கு போக வேண்டும், பாசக இல்லாத மூன்றாவது அணி ஆட்சிக்கு வர வேண்டும்.

aren
24-09-2012, 01:52 AM
சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்தது மத்திய அரசு!

மேலும் சமையல் எரிவாயு துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.


வரி விலக்கினால் விலை குறைந்தால் அனைவருக்கும் நன்மையே. இந்த கியாஸ் சிலிண்டர்கள்ஐ உபயோகிப்பவர்கள் நடுத்தர மக்களே. அவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மை கிடைத்தால் சந்தோஷமே.

தனியார் உள்ளே வந்தாலும் அரசு நிறுவனங்களுக்கு கொடுக்கும் சப்ஸிடியை இவர்களுக்கும் மத்திய அரசு கொடுக்கவேண்டும், அப்படி இல்லையெனில் இவர்களால் அரசு நிறுவனங்கள் கொடுக்கும் விலைக்கு விற்க முடியாது, தானாகவே கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். மத்திய அரசு செய்யுமா?

aren
24-09-2012, 01:53 AM
[QUOTE=ராஜா;562793]'தி இந்து' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரி மரணம்!

நல்ல திறமையான நிர்வாகி. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ராஜா
14-11-2012, 01:54 PM
2ஜி Vs சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: கருணாநிதியை சமாதானப்படுத்த வந்த ப.சிதம்பரம்!

http://tamil.oneindia.in/img/2012/11/14-chidambaram-karunanidhi-300.jpg

2ஜி விவகாரத்தில் மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை சமாதானப்படுத்தி சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவுக்கு ஆதரவு கோரும் முயற்சிகளில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.

நேற்று முன்தினம் மாலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

ராஜா
14-11-2012, 01:57 PM
சென்னைக்கு பதிலா விழுப்புரத்தில் இறக்குங்க: எமிரேட்ஸ் விமானத்தில் பயணி ரகளை..

http://tamil.oneindia.in/img/2012/11/14-fly-emirates-300.jpg

துபாயில் இருந்து எமிரேட்ஸ் பயணிகள் விமானம் ஒன்று நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில் ஒருவர் மட்டும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவரை எழுப்பினர்.

அசந்து தூங்கிய தன்னை எழுப்பியதால் எரிச்சலடைந்த அவர் சென்னையில் ஏன் விமானத்தை தரையிறக்கினீர்கள், விழுப்புரத்தில் இறக்குங்கள் என்று கூறினார். இதையடுத்து பணிப்பெண்கள் இது குறித்து விமானியிடம் தெரிவித்தனர். விமானி வந்து விசாரித்தபோது முரண்பாடாக பேசினார். இதனால் அவர் விமான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்குமோ என்று சந்தேகமடைந்த விமானி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அந்த ரகளை ஆசாமியை விமானத்தில் இருந்து இறக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் வேலு(28) என்றும், அவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அச்சகத்தில் வேலை பார்க்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்ற அவர் அமாவாசை தினத்தன்று மனநிலை பாதிக்கப்பட்டு ரகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து அந்நிறுவனம் அவரை ஊருக்கு திருப்பியனுப்பியது.

நேற்று அமாவாசை என்பதால் அவர் வழக்கம் போல் ரகளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்ததையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரை வரவேற்க வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

ராஜா
14-11-2012, 02:00 PM
கட்காரி குறித்து டிவிட்டரில் எழுதி, சிறிது நேரத்தில் நீக்கிய குருமூர்த்தி!

http://tamil.oneindia.in/img/2012/11/14-gurumurthi-2-300.jpg

பாஜக தலைவர் நிதின் கட்காரி குற்றமற்றவர் என்று நான் கூறவில்லை என்று டிவிட்டரில் தகவல் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரும் பிரபலமான ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி, சிறிது நேரத்தில் அந்தத் தகவலை டிவிட்டரில் இருந்து திடீரென நீக்கிவிட்டார். அதற்குப் பதிலாக அவர் வெளியிட்ட இன்னொரு டிவிட்டர் செய்தியில், ''எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டன. கட்காரிக்கு எதிரான ஊடக செய்திகள் தவறானவை என்று தான் நான் கூறியிருந்தேன். இது நான் கட்காரிக்கு ஆதரவாக தந்த 'clean chit' என்றால், அதை நான் தந்ததை ஒப்புக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ராஜா
14-11-2012, 02:03 PM
மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஜோடி பிரிந்தது

http://tamil.oneindia.in/img/2012/11/14-rohan-bopanna-and-mahesh-bh.jpg

பூபதியும், ரோஹனும் இணைந்து இந்த ஆண்டு இரண்டு பட்டங்களை வென்றுள்ளனர். லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தனர். இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி 8வது ரேங்க்கில் இருக்கிறார். ரோஹன் போபண்ணா 33வது இடத்தில் இருக்கிறார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இந்திய டென்னிஸ் அரங்கில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது மகேஷ் பூபதியும், போபண்ணாவும்தான். லியாண்டர் பயஸை குறி வைத்து இருவரும் 'விளையாடியதாக' குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக பூபதியையும், போபண்ணாவையும் இந்தியடென்னிஸ் சம்மேளனம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.

ராஜா
14-11-2012, 02:06 PM
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்த மத்திய தொல்லியல் துறை திட்டம்-வைகோ எதிர்ப்பு

காஞ்சிபுரம், மாமல்லபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், பல்லவபுரம், திருநீர்மலை, சதுரங்கப்பட்டினம், தாம்பரம், திரிசூலம், திருவிடந்தை, திருமுக்கூடல், மணிமங்கலம், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை போன்ற சிறிய, பெரிய நகரங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டன. இப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் பூர்வீக மண்ணில் புதிய வீடு கட்டவோ, பழைய வீட்டைப் புதுப்பிக்கவோ புதிய மின் இணைப்புப் பெறவோ, விடுபட்ட பகுதிகளுக்கு பட்டா பெறவோ முடியாத அளவிற்கு மத்திய தொல்லியல் துறை ஆட்சேபணை செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கு மாநில சுயாட்சிக்குக் கேடு மக்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் பறிக்கின்ற மத்திய தொல்லியல் துறை, நவம்பர் 19 தொடங்கி 25 வரை தொல்லியல் துறை வாரம் என கொண்டாடுவது வெட்கக்கேடு. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய தொல்லியல் துறைக்குக் கொண்டாட்டம் ஒரு கேடா?

இப்போக்கைக் கண்டித்து 21.11.2012 அன்று எனது தலைமையில் மாமல்லபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ராஜா
14-11-2012, 05:55 PM
போனில் பேசிய காதலரைத் தேடி வந்த பெண்.. 60 வயது 'பெருசு' என்று அறிந்து அதிர்ச்சி!

கண்ணூர்: தொலைபேசி மூலம் காதலித்து வந்த பெண் அந்தக் காதலரைத் தேடி வீட்டை விட்டு ஓடி வந்தார். ஆனால் வந்து பார்த்தால், தான் இத்தனை நாட்களாக போனில் கொஞ்சிப் பேசிய நபர் 60 வயது முதியவர் என்று அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார். அப்பெண்ணை போலீஸார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஒரு வருடமாக இந்த போன் காதல் தொடர்ந்துள்ளது. இந்தக் காதலில் ஈடுபட்டு வந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயது பொறியியல் கல்லூரி மாணவி. இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொலைபேசித் தொடர்பு ஏற்பட்டது. இது நட்பாக மாறியது. அந்த நபரின் பேச்சால் கவரப்பட்ட மாணவி அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்ட அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி கண்ணூர் வந்தார். கண்ணூ்ர் பஸ் நிலையம் வந்த அப்பெண் தனது பாய் பிரண்டுக்குப் போன் செய்தார். தான் பஸ் நிலையத்தில் இருப்பதாகவும், உடனே வருமாறும் கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாய் பிரண்ட் வரவில்லை.

இதனால் தவிப்புடன் அவர் பஸ் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வந்து அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்று விசாரித்தனர். அவரும் விவரத்தைச் சொன்னார்.

இதையடுத்து அவர் கொடுத்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போலீஸார் உடனே காவல் நிலையம் வருமாறு கூறினார். அவரும் வந்தார். தனது பாய் பிரண்டைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த அந்த மாணவி, பெரும் எதிர்பார்ப்புடன் காதலரைப் பார்க்க ஓடினார். ஆனால் பார்த்த வேகத்தில் பேரதிர்ச்சி அடைந்தார்.

காரணம், வந்த நபருக்கு வயது 67. தலையெல்லாம் நரைத்துப் போன முதியவர். அவரைப் பார்த்த அதிர்ச்சியிலும், கடும் ஏமாற்றத்திலும் அப்பெண்ணுக்கு மயக்கமே வந்து விட்டது. உடனே போலீஸார் முகத்தில் தண்ணீர் ஊற்றி அந்தப் பெண்ணை சகஜநிலைக்குக் கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தினார். ஆனால் ஏமாற்றம் தாங்க முடியாமல் அப்பெண் அழத் தொடங்கினார். அவரை போலீஸார் அமைதிப்படுத்தினர்.

வந்தவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது தான் நட்பாக மட்டுமே பழகியதாகவும், காதலிக்கவில்லை என்றும், அப்படிப் பேசியதில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் அந்தப் பெண்ணின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்து பெண்ணுக்கு அறிவுரைகளைக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜா
15-11-2012, 05:22 AM
பால் தாக்கரே உடல் நிலை கவலைக்கிடம்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/central/BalThackeray----7766.jpg

சிவசேனா கட்சி தலைவர், பால் தாக்கரே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சிவசேனா தலைவர், பால் தாக்கரே, 86, கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்; அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தாக்கரே உடல் நிலை குறித்து, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், "பால் தாக்கரேக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை; அதேநேரத்தில், ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. அவரின் உடல் நிலை நன்றாக இல்லை; அவருக்கு உணவு எதுவும் ஏற்கவில்லை' என்றன.

ராஜா
15-11-2012, 05:23 AM
224 வேட்பாளர்களை நிறுத்துவோம்: எடியூரப்பா

கர்நாடக ஜனதா கட்சி சார்பில் 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், மந்த்ராலயத்தில் புதன்கிழமை ராகவேந்திர கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

இந்த மாத இறுதியில் பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர், எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வேன். பின்னர், கர்நாடக ஜனதா கட்சியை மேம்படுத்த உழைப்பேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சி சார்பில் 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த. ஆகிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. விவசாய சங்கங்கள், இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம்.

முதல்வர் பதவியில் அமர்வதற்காக புதிய கட்சியை நான் தொடங்கவில்லை. கர்நாடகம் வளர்ச்சி பெற வேண்டுமென்ற என் கனவை நனவாக்கவே புதிய கட்சி தொடங்குகிறேன் என்றார்.

ராஜா
15-11-2012, 05:26 AM
பிறர் குட்டை உடைக்கும் கெஜ்ரிவால் குட்டை உடைக்கப் போகும் டெல்லிக்காரர்

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தும் என்.ஜி.ஓ. ஒன்றுக்கு கிடைத்த நன்கொடைப் பணத்திற்கு கணக்கு காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பிரனவ் அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கூறிய குற்றச்சாட்டு வருமாறு,

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் மனிஷ் சிசோடியா நடத்தும் என்.ஜி.ஓ. கபிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு உள்ளது. அந்த என்.ஜி.ஓ.வுக்கு போர்டு பவுன்டேஷன் அளித்த நன்கொடை பணத்திற்குரிய கணக்கு காட்டப்படவில்லை. மேலும் கெஜ்ரிவால் நடத்தும் பப்ளிக் காஸ் ரிசர்ச் பவுன்டேஷன் என்னும் என்.ஜி.ஓ.வுக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை அவர் வெளியிட வேண்டும்.

கெஜ்ரிவால் பிறர் செய்த ஊழல்களை வெளிப்படுத்துவதற்கு முன்பு அவர் தனது என்.ஜி.ஓ.வுக்கு கிடைத்துள்ள நன்கொடை குறித்த சந்தேகங்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும். நான் கெஜ்ரிவால் ஸ்டைலில் அவர் குற்றத்தை ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துவேன். அதன் பிறகு அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

ராஜா
15-11-2012, 05:27 AM
மு.க. ஸ்டாலின் 'சிக்னலுக்கு' காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்

மதிமுகவுக்கு அதிகம் பாடுபட்டவன் நான்.. இந்த இயக்கத்தை விட்டு விலகவே மாட்டேன் என்று வைகோவுக்கு எதிராக சரவெடி வெடித்து வரும் நாஞ்சில் சம்பத் போட்டி மதிமுகவை உருவாக்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மற்றவர்களைப் போல அவர் திமுகவுக்கு தாவத்தான் போகிறார் என்றே கூறப்படுகிறது.

'தம்பி' நாஞ்சில் சம்பத்தை வரவேற்க திமுக தலைவர் கருணாநிதி தயாராகத்தான் இருக்கிறாராம். இதற்கான பேச்சுவார்த்தையின் போது, சம்பத் வரட்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போய்விட்டு திரும்பியிருக்கும் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த சிக்னலும் கொடுக்கவில்லையாம்! நாஞ்சில் சம்பத்தும் கூட அவரை மகிழ்விக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் முதல்வராவதை வைகோ விரும்பவில்லை.. அதனாலேயே அதிமுக கூட்டணிக்குப் போவார் என்றெல்லாம் கூறி வருகிறார்.

ஆனாலும் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு சிக்னலும் கொடுக்கவில்லை. ஸ்டாலின் தரப்பிலிருந்து சிக்னல் வந்த உடனேயே நாஞ்சில் சம்பத்தின் வண்டி அறிவாலயத்தில் நிற்கும் என்கின்றனர் திமுக வட்டாரங்கள்.

ராஜா
15-11-2012, 05:35 AM
அயர்லாந்தில் இறந்த கருவை அகற்ற மறுத்த மருத்துவர்கள்: இந்திய பெண் பரிதாப சாவு

http://tamil.oneindia.in/img/2012/11/15-savita-300.jpg

அயர்லாந்தில் பணியாற்றுபவர் இந்தியரான பிரவீன் ஹாலப்பானாவர். அவரது மனைவி சவிதா (31). பல் மருத்துவர். 17 வார கர்ப்பமாக இருந்த சவிதாவுக்கு கடந்த மாதம் திடீர் என்று குறுக்கு வலி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவரது கரு இறந்துவிட்டது. உடனே அவர்கள் மேற்கு அயர்லாந்தில் உள்ள யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் கால்வேவுக்கு சென்று கருவை அகற்றுமாறு மருத்துவர்களை கேட்டுள்ளனர்.

அதற்கு அங்குள்ள மருத்துவர்கள் கரு இறக்கவில்லை என்றும், தங்களுக்கு அதன் இதயத்துடிப்பு கேட்பதாகவும் தெரிவித்து கருவை அகற்ற மறுத்துவிட்டனர். மேலும் அயர்லாந்து கத்தோலிக்க நாடு என்பதால் கருக்கலைப்பு செய்யமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சவிதா எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கருவை அகற்றவில்லை.

இதையடுத்து இறந்த கருவால் அவருக்கு செப்டிக் ஆகி கடந்த மாதம் 28ம் தேதி இறந்தார். தாயின் உயரைக் காக்க வேண்டும் என்றால் மட்டுமே அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வார்கள். இல்லையென்றால் அங்கு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகும்.

சவிதாவின் மரணம் குறித்து அயர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே நேற்று பேரணி நடத்தினர்.

ராஜா
15-11-2012, 05:37 AM
ரவுடிகளிடம் தொடர்பு... போலீஸாருக்கு டி.எஸ்.பி வெள்ளைத்துரை கடும் எச்சரிக்கை

http://tamil.oneindia.in/img/2012/11/15-dsp-velladurai-300.jpg

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ரவுடிக்கும்பலின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பாச்சேத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிக் கும்பலால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் மானாமதுரை டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பொறுப்பேற்றுக்கொண்டார் இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், குற்றவாளிகளிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

மானாமதுரை துணைக் கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் பெரும்பாலோர் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களில் பலர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பதும் டி.எஸ்.பிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு நாள்களுக்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சியினரை அழைத்து டி.எஸ்.பி வெள்ளைத்துரை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், ரவுடிக்கும்பலால் போலீஸ் எஸ்.ஐ கொலை செய்யப்படும் அளவுக்கு இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இனிமேல் சட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குற்றவாளிகள், ரவுடிகள், சமூகவிரோதிகளிடம் தொடர்பு வைத்திருக்கும் காவல் துறையினர் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ராஜா
15-11-2012, 05:40 AM
இறுதிப் போரில் ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டோம்: ஐ.நா. செயலர் பான் கி மூன் ஒப்புதல்

http://tamil.oneindia.in/img/2012/11/15-ban-ki-moon-300.jpg

இலங்கை இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக சாலர்ஸ் பெட்ரியை அறிக்கை தாக்கல் செய்ய ஐ.நா. உத்தரவிட்டிருந்தது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி இருந்த நிலையில் முழு அறிக்கையும் நேற்று பான் கி மூனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை வெளியிட்ட பிறகு கருத்து தெரிவித்துள்ள பான் கி மூன். தமது உள்ளக குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்கிறோம். இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயல்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை இழக்காமல் இருக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராஜா
15-11-2012, 06:40 AM
ஐஸ்வர்யா ராயின் அழகின் இரகசியம் என்ன தெரியுமா?

http://tamil.boldsky.com/img/2012/11/15-1352960963-water.jpg

அனைவருக்குமே அழகில் அதிக ஆர்வம் இருக்கும். அதிலும் உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராயின் அழகின் இரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலோடு இருப்போம். ஏனெனில் அவர் என்ன தான் வயதானாலும், இன்னும் அவரது அழகில் மட்டும் எந்த ஒரு குறைச்சலும் இல்லை. சொல்லப்போனால் நிறைய பேரின் மனதில் அழியா இடம் பெற்றுள்ளார். மேலும் அவருக்குப் பின்னர் எவ்வளவு தான் உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஐஸ்வர்ராய் போன்று யாரும் இல்லை. அத்தகைய ஐஸ்வர்யா தனது அழகால் அனைவரையும் மயக்கிவிட்டார்.

மேலும் அவர் அபிஷேக் பச்சனை மணந்து, குழந்தையை பெற்றப் பின்னரும் அவர் அழகில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதிலும் தற்போது தான் அவரது பிறந்த நாள் வந்தது. சொன்னால் நம்ப மாட்டீங்க, அவருக்கு இது 39-வது பிறந்தநாள். இதைச் சொன்னால் நம்பமுடியாத அளவில் இருப்பதற்கு அவர் என்ன தான் செய்கிறார் என்று நிறைய பேர் அதை தெரிந்து கொள்ள எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தண்ணீர்

உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் உடலில் உள்ள அனைத்து டாக்ஸின்களும் வெளியேறி, வயதானாலும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.

ராஜா
16-11-2012, 06:27 AM
'துப்பாக்கி தவறுக்கு பிராயச் சித்தம்... ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் விஜய்' - எஸ்ஏசி அறிவிப்பு!!

http://tamil.oneindia.in/img/2012/11/16-chandrasekar-12-300.jpg

Vijay Will Appear As Muslim Next Movie
Vijay to fight with Vijay

SHARE THIS STORY
38

துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அவர் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

ராஜா
16-11-2012, 06:30 AM
கூடங்குளம் போராட்டக்காரர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா?: அரசுக்கு வைகோ கண்டனம்

http://tamil.oneindia.in/img/2012/11/16-vaiko33-300.jpg

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை தமிழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்வது பாசிச நடவடிக்கை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இடிந்தகரையைச் சேர்ந்த 68 வயதான லூர்துசாமி என்பவரும், 40 வயதான நசரேன் என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நவம்பர் 15 அன்று வைராவிக்குளத்தைச் சேர்ந்த தவசிகுமார் மீதும் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்துபாரத் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

அடக்குமுறையாலோ அச்சுறுத்தலாலோ எதேச்சதிகார மிரட்டலாலோ, எந்த உரிமைக் கிளர்ச்சியையும் நசுக்க முடியாது. காவல்துறையினர் மேற்கொண்டுவரும் அராஜக அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, பொய் வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜா
16-11-2012, 06:33 AM
பாலஸ்தீனம் மீது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்துகிறது இஸ்ரேல்

http://tamil.oneindia.in/img/2012/11/16-israel-attack-2-300.jpg

காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்திருக்கிறார். நேற்று இரவு மட்டும் சின்னஞ்சிறிய ஹமாஸ் பிரதேசத்தில் 150 இடங்கள் மீது வான்வழியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பாலஸ்தீனியர்கள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினரும் ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்திருக்கின்றனர். நேற்று இரவு மட்டும் காசா பகுதியில் இருந்து 350 ராக்கெட்டுகளை இஸ்ரேல் பகுதிகளை நோக்கி வீசியிருக்கின்றனர். இவற்றில் 130 ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இதனிடையே காசா பகுதிக்கு எகிப்து பிரதமர் ஹிசாம் நேரில் சென்று பாலஸ்தீனத்துக்கான ஆதரவைத் தெரிவிக்க இருக்கிறார். இதேபோல் தரைவழியிலான தாக்குதலைத் தீவிரப்படுத்து நோக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை உஷார்படுத்தியிருக்கிறத் இஸ்ரேல்.

ராஜா
16-11-2012, 06:36 AM
பெட்ரோல் விலை ரூ.1.20 குறைப்பு: சென்னையில் 1 லிட்டர் ரூ.70.57

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 95 பைசா குறைப்பதாக மத்திய பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது. அதன்படி புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை 95 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 67.24க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.1.20 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.53க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.71.77க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.1.20 குறைக்கப்பட்டு லிட்டர் ரூ.70.57க்கு விற்கப்படுகிறது. இது தவிர கொல்கத்தாவில் ரூ.1.19 குறைக்கப்பட்டு பெட்ரோலின் விலை ரூ.74.55 ஆகக் குறைந்துள்ளது.

விலை குறைப்புக்கு பிறகு ஹைதராபாத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ..73.73 ஆகவும், பெங்களூரில் ரூ.74.22 ஆகவும் குறைந்துள்ளது.

ராஜா
16-11-2012, 06:38 AM
அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5,000 தமிழர்கள் ஊர் திரும்புகின்றனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதியில் இருந்து 2 மாத காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறாவிட்டால் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5,000 பேர் உள்பட ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்.

ராஜா
16-11-2012, 06:41 AM
அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5,000 தமிழர்கள் ஊர் திரும்புகின்றனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதியில் இருந்து 2 மாத காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறாவிட்டால் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5,000 பேர் உள்பட ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்.

ராஜா
16-11-2012, 06:42 AM
இந்தியாவுக்கேற்ற சரியான தலைவர் நரேந்திர மோடிதான்... சர்வே

இந்தியாவை வழி நடத்தவும், இந்தியாவுக்குப் பொருத்தமான தலைவரும் நரேந்திர மோடிதான் என்று சிஎன்என்-ஐபிஎன் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா
17-11-2012, 02:54 AM
பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த தொலைத் தொடர்புத்துறையை கொன்று விட்டது சிஏஜி: கபில் சிபல்

http://tamil.oneindia.in/img/2012/11/16-kapil-sibal2-300.jpg

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வியடைந்ததன் மூலம் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த தொலைத் தொடர்புத்துறையை கொன்று விட்டார்கள் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், சிஏஜி வினோத் ராய் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

jayanth
17-11-2012, 02:57 AM
செய்திப் பகிர்விற்கு நன்றி ராஜா...

ராஜா
17-11-2012, 02:57 AM
செக்ஸ் லீலையில் சிக்கிய சி.ஐ.ஏ. முன்னாள் தலைவரை கல்லால் அடிச்சு கொல்லனும்...: தலிபான்கள் கருத்து

http://tamil.oneindia.in/img/2012/11/16-david-petraeus3-300.jpg

செக்ஸ் புகாரில் சிக்கி அதிகாரமிக்க பதவியை பறிகொடுத்திருக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் தலைவர் பெட்ராய்ஸை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்று தலிபான்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

பெட்ராய்ஸ்தான் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் நேட்டோ படைகளின் கமாண்டராகவும் இருந்தவர். அவர் பதவியை பறிகொடுத்திருக்கும் நிலையில் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தலிபான்கள் தரப்பில் கருத்து கேட்டிருக்கின்றன. பெயர் வெளியிட விரும்பாத தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'எல்லா அமெரிக்கர்களும் இப்படித்தான் இது ஒன்றும் புதிதல்ல' என்று கூறியிருக்கிறார்.

இதேபோல் ' பஸ்துன் இனக் குழுவின் பார்வையில் இந்த மாதிரி தப்பு செய்கிறவர்களை அவரது உறவினர்களே சுட்டுக் கொல்லனும் என்றும் ஷரியா சட்டத்தின் பார்வையில் இத்தகைய செயலுக்கு கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் அமெரிக்கர்களும் மேற்கத்திய நாடுகளும் கட்டுபாடுகளற்ற பாலுறவு சமூகத்தினராக வாழ்கின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் தலிபான் தளபதி ஒருவர்.

ராஜா
17-11-2012, 02:59 AM
பால் தாக்கரே இறந்துவிட்டதாக 'டுவீட்' செய்து மன்னிப்பு கேட்ட திக்விஜய் சிங்

http://tamil.oneindia.in/img/2012/11/16-digvijay-singh.jpg

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் உடல் நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது. அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை நேற்று முழுவதும் கவலைக்கிடமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிவ சேனா தொண்டர்கள் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு குவிந்துவிட்டனர். இதனால் தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டதுடன் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் பால் தாக்கரே இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது டுவீட்

பாலா சாஹிப் மரணச் செய்தி கேட்டு கவலையடைந்தேன். அவரது அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நான் அவரது அறிவு, துணிச்சலை பார்த்து வியக்கிறேன். உத்தவ் மற்றும் தாக்கரே குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதைப் பார்த்த சிவ சேனா தொண்டர்கள் கொதித்துவிட்டனர். அதன் பிறகு தாக்கரே இறந்துவிட்டதாக தான் டுவீட் செய்ததற்காக அவர் தாக்கரே குடும்பத்தாரிடம் டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார்.

ராஜா
17-11-2012, 10:56 AM
சிவசேனா தலைவர் பால் தாக்கரே இன்று மதியம் 3.33 மணியளவில் மரணம்..

ராஜா
17-11-2012, 11:03 AM
பால் தாக்கரே மரணம்... அதிர்ச்சியில் சிவசேனா தொண்டர்கள்.. பதட்டத்தில் மராட்டிய மாநிலம்!

http://tamil.oneindia.in/img/2012/11/17-bal-thackeray6-600.jpg

மும்பை: சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இன்று மும்பையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.

மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

இன்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மாலை 3.30 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டு வாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இந்த செய்தி வெளியில் இருந்த சிவசேனா கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பரிமாறப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.

பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் மாராட்டிய மாநிலமெங்கும் பதட்ட நிலை தொடர்கிறது.

ராஜா
18-11-2012, 03:41 AM
பால்தாக்கரே உடலுக்கு இன்று பொதுமக்கள் அஞ்சலி- மாலையில் தகனம்

http://tamil.oneindia.in/img/2012/11/18-bal-thackare-300.jpg

: மும்பையில் நேற்று காலமான சிவசேனா தலைவர் பால் தாக்கரே உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்துக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதி உரை

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே நேற்று மாலை காலமானார். ஒவ்வொரு ஆண்டும் தசாரா பண்டிகையின்போது சிவாஜி பூங்காவில் சிவசேனை பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் பால் தாக்கரே உரையாற்றுவார். உடல்நலக் குறைவு காரணமாக இந்த ஆண்டு கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பதிவு செய்யப்பட்ட அவரது விடியோ உரை ஒளிபரப்பானது. அதில் தாக்கரே உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்டார். உடல்ரீதியாக தான் மிகவும் தளர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தனது மகன் உத்தவ் தாக்கரே, பேரன் ஆதித்யா தாக்கரே ஆகியோருக்கு தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதுவே அவரது இறுதி உரையாகவும் அமைந்துவிட்டது.

காலம் முழுவதும் காங்கிரஸ கட்சிக்கு எதிராக அரசியல் நடத்திய அவர் 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா பாட்டீலை ஆதரித்தார். பிரதிபா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தாக்கரேவின் முடிவுக்கு முக்கியக் காரணம். அதேபோல இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாபை தாக்கரே ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: தாக்கரேவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிவாஜிபூங்காவில் பால்தாக்கரேயின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு தாக்கரே உடல் மாலையில் தகனம் செய்யப்படுகிறது.

ராஜா
18-11-2012, 03:43 AM
மீண்டும் ஒரு வலுவான புயல் உருவாகிறது

http://tamil.oneindia.in/img/2012/11/18-cyclone-33-300.jpg

நிலம் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம் தீவிர காற்றழுத்தமாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னைக்கு கிழக்கே ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 650 கிலோ மீட்டர் தொலைவிலும் இப்புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

ராஜா
18-11-2012, 03:52 AM
உடல்நலக்குறைவு: முன்னாள் அமைச்சர் வீரபாண்டியார் மருத்துவமனையில் அனுமதி

http://tamil.oneindia.in/img/2012/11/18-veerapandi-arumugam300.jpg

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் அங்கம்மாள் காலனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு அவர் சேலம் அருகே பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

மேலும் கட்சி கூட்டங்களில் பங்கேற்றும், தொண்டர்களை சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியும் வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ற அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சளித் தொல்லையால் அவதிப்பட்ட அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது குணமாகி வருகிறார்.

ராஜா
18-11-2012, 04:04 AM
நான் பிச்சைதான் எடுக்க வேண்டும்! - சொல்கிறார் கவர்ச்சி நடிகை!


ஆண்களை என் தேவைக்கு பயன்படுத்திவிட்டு, பிறகு டிஷ்யூ பேப்பர் போல் தூக்கி வீசி விடுவேன் என்று நடிகை சோனா கூறியதாக செய்தி வெளியானது.

சோனாவுக்கு எதிராக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போராட்டத்தில் குதித்தது. இதையட்டி சோனாவின் வீட்டுக்கும், அவருடைய கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் சோனா, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவள், நான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினேன். சினிமாவில் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதால், பெண்களுக்கான செயற்கை நகை கடையை தொடங்கினேன்.

வியாபாரத்தில் ஈடுபட்டாலும், சினிமாவை நான் விட்டுவிடவில்லை. சினிமாவில் சமீபகாலமாக எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்து வந்தன. தமிழில் 8 படங்களிலும், மலையாளத்தில் 4 படங்களிலும் நடித்து வருகிறேன்.

இனிமேல் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி, என் மன நிம்மதியை குலைத்து விட்டார்கள். எனக்கு எதிரிகள் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்.

என் வளர்ச்சியை கண்டு பொறாமைப்பட்டு, சிலர் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நானும், என் குடும்பத்தினரும் வாடகைக்கு புது வீடு பார்த்து குடிபோக இருந்தோம். இப்போது வீடு கொடுக்க மறுத்து, அட்வான்சை திருப்பிக்கொடுத்து விட்டார்கள். என் கடையையும் காலி செய்ய சொல்கிறார்கள்.

ஒரு வாரமாக கடையை திறக்காததால், வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது. கடையில் வேலை பார்த்த மூன்று ஊழியர்கள் நின்று விட்டார்கள். என் உதவியாளர் அலுவலகத்துக்கு வருவதை நிறுத்தி விட்டார்.

சினிமாவிலும் வாய்ப்பு குறைந்து, கடையையும் நடத்த முடியாமல் போனால், நான் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான், யாருக்கும் எதிரி இல்லை. என்னை யாரும் எதிரியாக நினைக்க வேண்டாம்.

இனிமேலும் என்னை தொந்தரவு செய்தால், கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடருவேன். இவ்வாறு சோனா கூறினார்.

மஞ்சுபாஷிணி
18-11-2012, 04:44 AM
செய்தி பகிர்வுக்கு அன்புநன்றிகள் ஐயா....

ராஜா
19-11-2012, 01:06 PM
நன்றிங் மேடம்..!

ராஜா
19-11-2012, 01:08 PM
சென்னைக்கு அருகே புயல் சின்னம்- தமிழகம், புதுவை துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்!

http://tamil.oneindia.in/img/2012/11/19-satellitte-nov-19-300.jpg

சென்னைக்கு வடகிழக்கில் 1000 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தற்போது சென்னைக்கு அருகே 800 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆந்திரத்தின் தென்கடலோரம் மற்றும் வடதமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் நாளை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ராஜா
19-11-2012, 01:21 PM
தாக்கரேவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், லைக் கொடுத்த பெண் கைது

சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது,

தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார். இந்த தகவலைப் பார்த்த சிவ சேனா தொண்டர்கள் கொதிப்படைந்தனர். இதற்கிடையே ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், அதை லைக் கொடுத்த பெண் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் கிளினிக்கை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கினர்.

ராஜா
19-11-2012, 01:24 PM
நித்தியானந்தா சீடர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்- மடத்தை அரசு எடுக்கிறது: மதுரை ஆதீனம்

http://tamil.oneindia.in/img/2012/11/19-madurai-aadheenam-mutt.jpg

ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை இல்லை. ஆனால் அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது.

மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார். போதுமான மின் உற்பத்தி இல்லாததால்தான் அவரால் மின்சாரத்தை கொடுக்க முடியவில்லை.

பால்தாக்கரேயின் இழப்பு இந்து சமுதாயத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றார் அவர்.

ராஜா
19-11-2012, 01:26 PM
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா ஆதரவு!

http://tamil.oneindia.in/img/2012/11/19-mamata-jaya3-300.jpg

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தருவார் என்று தெரிகிறது.

இதன்மூலம் இந்த விவகாரத்தில் திமுகவும் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்கும் நிலைமைக்கு கருணாநிதியை ஜெயலலிதா நெருக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

ராஜா
03-03-2013, 07:50 AM
வளர்ச்சிக்குத் தேவையான மேலும் பல அறிவிப்புகள் விரைவில்-ப.சிதம்பரம்

http://tamil.oneindia.in/img/2013/03/03-pc-79-300.jpg

பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவைதான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மேலும் பல அறிவிப்புகள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ராஜா
03-03-2013, 07:52 AM
நான் செய்ததே மூன்றே மூன்று தப்புதான்... ராசா

http://tamil.oneindia.in/img/2013/03/03-raja-3-300.jpg

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராசா பேசுகையில், 2ஜி வழக்கில் நான் செய்தது 3 தவறு தான் என்று நீதிபதியிடம் வாதிட்டேன். செல்போன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது, செல்போன் கட்டணத்தை குறைத்தது, சராசரி தொலைபேசி கட்டணத்தை குறைத்தது. இதைத்தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என்று நீதிபதியிடம் கூறினேன் என்றார்.

ராஜா
03-03-2013, 07:53 AM
தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! 16 தமிழக மீனவர்கள் கைது!

ராமேஸ்வரம் கடற்பரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுற்றி வளைத்த இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது. இதனால் மீன்பிடிக்காமலேயே அவர்கள் கரைக்குத் திரும்பினர்
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 3 தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 பேரும் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை.

ராஜா
05-03-2013, 05:36 AM
ராமநாதபுர தனி வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி

நில கையப்படுத்தலில், உரியவர்களுக்கு நிதி வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று ராமநாதபுர ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.

ராஜா
05-03-2013, 05:37 AM
எய்ட்ஸ் நோயாளியை விட்டு கடிக்க விடுவோம் என போலீஸார் மிரட்டினர்.. சசி பெருமாள் வேதனை

http://tamil.oneindia.in/img/2013/03/05-sasiperumal-300.jpg

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள் நேற்று மாலை தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இருப்பினும் போலீஸார் தன்னை மிரட்டியதாலும், வற்புறுத்தியதாலுமே உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக கூறிய அவர் போலீஸார் மீது பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினார். சேலத்தைச் சேர்ந்த சசி பெருமாள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 34 நாட்களாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரை போலீஸார் கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னை மெரீனா கடற்கரை காந்திசிலை அருகே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் சசி பெருமாள்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எனது உண்ணாவிரத்தை முடிக்கவில்லை. கட்டாயப்படுத்தி உண்ணாவிரதம் முடிக்கப்பட்டுள்ளது. என்னுடைய இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தாலும், அனைத்து மாவட்டங்களுக்கும் நடந்து சென்று, மதுவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஒருங்கிணைத்து 2014 ஜனவரி 30ல் மீண்டும் இதே சென்னை மெரீனா கடற்கரையில உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் தொடருவேன். எனக்கு மிரட்டல் வந்தது. நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, என்னை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாகவும், எய்ட்ஸ் நோயாளியை கடிக்க வைத்து கொலை செய்து விடுவதாகவும் போலீசார் மிரட்டினர் என்றார் சசி பெருமாள்.

ராஜா
05-03-2013, 05:38 AM
காங்கோவில் விமான விபத்து: 36 பேர் பலி

http://media.dinamani.com/article1489076.ece/ALTERNATES/w460/congo_plane_crash.jpg

காங்கோ நாட்டில் கிழக்கு நகரமான கோமா அருகே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்ததாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் விமானமான ஃபோக்கர் சிறிய ரக விமானம் 40 பயணிகளுடன் கிழக்கு கசாய் பகுதியில் உள்ள லோட்ஜா நகரில் இருந்து பறந்து கொண்டிருந்தது. கோமா நகர் மத்தியில் தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே விபத்து ஏற்பட்டது இந்த விமானம் கீழே விழுந்தது. இதில் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். வீடுகளின் மீது விமானம் விழுந்துவிடாமல் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜா
05-03-2013, 05:39 AM
நடிகை ராஜசுலோச்சனா காலமானார்

http://media.dinamani.com/article1489036.ece/ALTERNATES/w460/rajasulochana.jpg

திரைப்பட நடிகை ராஜசுலோச்சனா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78

தமிழ், கன்னடம், தெலுங்குப் படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட அவர், 4 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.