PDA

View Full Version : நீ தான் என் வாழ்க்கை



சுவேதா
01-06-2005, 12:45 AM
நீ தான் என் வாழ்க்கை

உயிரே உனை நான்
விரும்புவது
புரியவில்லையா?

உன்னைக் கானும்
போதெல்லாம்
என் மனம்தொலைந்து
போகிறது!

உன்னைக் காணாத
போது என் விழிகள்
அழுகின்றது!

காதல் என்றால்
தெரியாமல் இருந்தேன்!
எனக்கு அதையும்
காற்பித்தவள் நீதான்!

உன்னை அறியாமலே
எனக்கு காதலை
ஊட்டிவிட்டாய்!

காதல் உறவு
மட்டுமன்றி பெரியோரின்
சம்மதத்தோடு
நம் திருமணம் நடக்க
வேண்டும் என்பதுதான்
என் ஆசை!

இவ்வாழ்வில் நீ
எனக்கானால்
இவ்வுலகம் என்
பக்கமே!

பிரியன்
01-06-2005, 05:26 AM
வாழ்த்துக்கள் சுவேதா ....
ஏன் இந்த நீண்ட இடைவெளி, எழுத எழுத கவிதை தானாக மெருகேரும்.

முந்தைய கவிதைகளை விட சிறப்பாக இருக்கிறது. முடிந்தவரை தேவையில்லாத சொற்களை நீக்கி விடவும் ( குறிப்பாக நான், நீ, உன் போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தால் வடிவம் இன்னும் சிறப்பாக இருக்கும். )
தொடர்ந்து எழுதுங்க!!!

வாழ்த்துக்கள்

உங்கள் கவிதையில் ஒரு சில இடங்களில் நான்.நீ, உன்னை போன்றவைற்றை தவிர்த்து அதே கவிதையை பதிவு செய்கிறேன்.
ஏனென்றால் நான், நீ போன்றவற்றை கவித உணர்த்த வேண்டும். நாமல்ல


உயிரே உனை
விரும்புவது
புரியவில்லையா?

காணும்
போதெல்லாம்
என் மனம்தொலைந்து
போகிறது!

உன்னைக் காணாத
போது விழிகள்
அழுகின்றது!

காதல் என்றால்
தெரியாமல் இருந்தேன்!
எனக்கு அதையும்
கற்பித்தவள் நீதான்!

உன்னை அறியாமலே
எனக்கு காதலை
ஊட்டிவிட்டாய்!

காதல் உறவு
மட்டுமன்றி பெரியோரின்
சம்மதத்தோடு
நம் திருமணம் நடக்க
வேண்டும் என்பதுதான்
என் ஆசை!

இவ்வாழ்வில் நீ
எனக்கானால்
இவ்வுலகம் என்
பக்கமே!

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் சகோதரி

சுவேதா
01-06-2005, 11:08 AM
நன்றி அண்ணா!

Mano.G.
01-06-2005, 11:28 AM
வாழ்த்துக்கள்
நல்ல கவிதை மேலும் தொடருங்கள்
மனோ.ஜி

சுவேதா
01-06-2005, 05:51 PM
மிகவும் நன்றி அண்ணா முதல் எனக்கு புரியவில்லை எப்படி என்று இப்பொழுது நன்றாக புரிகின்றது நன்றி அண்ணா.