PDA

View Full Version : வக்கீல் நகைச்சுவை!!



karikaalan
31-05-2005, 10:47 AM
சட்டம் தெரிந்த வக்கீல் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். ஜட்ஜைத் தெரிந்த வக்கீல் போதுமே!

===கரிகாலன்

அறிஞர்
31-05-2005, 10:56 AM
ஆரம்பிச்சுட்டாரு.. நம் கரிகாலன் வக்கீல நகைச்சுவைகளை.. தொடருங்கள்.. அன்பரே.....

இந்த காலத்தில் ஜட்ஜை தெரிஞ்சாவோ மிரட்ட தெரிஞ்சாலோ... கேஸில் ஜெயிச்சுடலாம்.....

பரஞ்சோதி
31-05-2005, 11:00 AM
மீண்டும் கலக்கு கலக்கிய வக்கீல் நகைச்சுவை. நன்றி அண்ணா.

karikaalan
01-06-2005, 06:27 AM
ஒரு ஊசி முனையில் எத்தனை வக்கீல்களை வைக்கலாம்?

பத்து பேர். எல்லோரையும் தலைகீழாக நிற்க வைத்தால்!

pradeepkt
01-06-2005, 07:03 AM
சிந்திக்க வைத்த வக்கீல் நகைச்சுவை!

மன்மதன்
01-06-2005, 07:07 AM
மீண்டும் வக்கீல் நகைச்சுவை.. கலக்குங்க கரிகாலன்ஜி
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
01-06-2005, 07:13 AM
ஒரு ஊசி முனையில் எத்தனை வக்கீல்களை வைக்கலாம்?

பத்து பேர். எல்லோரையும் தலைகீழாக நிற்க வைத்தால்!

அது என்ன பத்து பேர், அதான் தலையில் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டதே, ஆயிரக்கணக்கில் சொல்ல வேண்டியது தானே.

Mano.G.
01-06-2005, 11:35 AM
அட பாவம்பா இந்த வக்கீல்கள்
அவங்கள இப்படி காலைவாரிவிடரீங்களே

ஜோக் நன்று
மேலும் தொடருங்கள்

மனோ.ஜி

karikaalan
02-06-2005, 06:12 AM
இரண்டு நாய்கள் ஒரு எலும்பிற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, மூன்றாவது நாய் அந்த எலும்பைத் தூக்கிக் கொண்டு ஓடினால் என்ன பொருள்? நாய்களிடையேயும் வக்கீல் உண்டு.

பரஞ்சோதி
02-06-2005, 06:31 AM
அது பிழைக்கத் தெரியாத நாயாக இருக்கிறது, புத்திசாலியான நாயாக இருந்தால் சண்டை முடிந்தப் பின்பு நிறைய எலும்பு கிடைக்குமே என்று சண்டைக்கு தூபம் போட்டிருக்கும்.

mania
02-06-2005, 06:39 AM
இரண்டு நாய்கள் ஒரு எலும்பிற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, மூன்றாவது நாய் அந்த எலும்பைத் தூக்கிக் கொண்டு ஓடினால் என்ன பொருள்? நாய்களிடையேயும் வக்கீல் உண்டு.

:D :D :D

Mathu
02-06-2005, 08:49 AM
அது பிழைக்கத் தெரியாத நாயாக இருக்கிறது, புத்திசாலியான நாயாக இருந்தால் சண்டை முடிந்தப் பின்பு நிறைய எலும்பு கிடைக்குமே என்று சண்டைக்கு தூபம் போட்டிருக்கும்.

அப்பாடா தப்பிச்சம் பரம்ஸ் மட்டும் வக்கீலா ஆகி இருந்தா...... :) :rolleyes:

Mathu
02-06-2005, 08:52 AM
"வக்கீல கல்யாணம் பண்ணியது தப்பா போச்சு"

ஏண்டி என்ன ஆச்சு

"எதை கேட்டாலும் வாய்தா வாங்கிற்றாரு"

அறிஞர்
02-06-2005, 03:00 PM
வாய்தா வாங்கி கூட தப்பிக்கலாமா...

இதை தான் பின்பற்றுகிறீர்களா... மது.....

பரஞ்சோதி
02-06-2005, 08:58 PM
அறிஞரே!

என்ன இது எங்க அணி மதுவை போட்டு வாங்குறீங்க, இருங்க இதோ வருகிறேன், வாருகிறேன்.

Mathu
02-06-2005, 10:15 PM
வாய்தா வாங்கி கூட தப்பிக்கலாமா...

இதை தான் பின்பற்றுகிறீர்களா... மது.....

என்ன பண்றது கேட்பது நியாயமனது என்றால் வாங்கிடலாம்....
எத்தன பொண்ணுங்க நியாயமான தேவைய மட்டும் கேட்கிறாங்க.
:p ;) :p

karikaalan
04-06-2005, 08:43 AM
ஒரு வக்கீல் எவ்வளவு எடை இருக்கலாம்?

"இரண்டு கிலோ, சாம்பல் பானையையும் சேர்த்து!"

அறிஞர்
16-06-2005, 03:54 AM
ஒரு வக்கீல் எவ்வளவு எடை இருக்கலாம்?

"இரண்டு கிலோ, சாம்பல் பானையையும் சேர்த்து!"இரண்டு கிலோதான் மொத்தமா தேறுமா..... அதுக்குள்ள என்ன ஆட்டம் ஆடுறாங்கைய.. இந்த பயலுக.....

karikaalan
18-06-2005, 11:50 AM
மைக்ரொவேவ் வக்கீலைப் பற்றித் தெரியுமா?

அது யாரய்யா அது?

அந்த வக்கீல் ஆபீஸ்ல 5 நிமிஷம் இருந்தா போதும், 5 மணி நேரம் செலவழித்ததாக பில் வந்துவிடும்!

karikaalan
18-06-2005, 11:51 AM
வக்கீல்: "கேஸ் நல்ல படியா முடிஞ்சு போச்சு. இப்போ என்னோட பீஸைப் பத்தி சொல்றேன். கவனமா கேட்டுக்குங்க. உடனடியா ரூ. 10000. அப்புறம் 36 மாசத்துக்கு ஒவ்வொரு மாசமும் ரூ.6989/- குடுக்கணும். புரியுதா?"

கட்சிக்காரர்: "இதென்ன ஏதோ கார் பைனான்ஸ் பேமெண்ட் மாதிரி இருக்கே?"

வக்கீல்: "அதே. என்னோட கார்!"

பரஞ்சோதி
18-06-2005, 12:04 PM
நல்ல வேளை அந்த வக்கீல் வீடு வாங்கவில்லை.

கலக்கல் சிரிப்பு அண்ணா. தொடருங்கள்,

மன்மதன்
18-06-2005, 12:16 PM
ஹாஹ்ஹா... டவுன் பேமண்ட் வக்கீல் தொழிலுக்கும் வந்தாச்சா?? கலக்கல்ஸ் கரிகாலன்ஜி..
அன்புடன்
மன்மதன்

karikaalan
23-06-2005, 05:44 AM
கட்சிக்காரர்: வக்கீல் சார், எனக்காக நல்லா வாதாடுவீங்களா?

வக்கீல்: என்ன அப்படி சொல்லிட்டீங்க. என்னமா சண்டை போடுவேன் தெரியுமா கோர்ட்ல.... நிச்சயமா உங்கிட்ட பணம் இருக்குற வரைக்கும் இந்தக் கேஸை ஒரு வழி பண்ணிடமாட்டேன்!

karikaalan
28-06-2005, 11:49 AM
ஏன் வக்கீல் சார், ஜீவனாம்சம் கொடுக்காமல் எப்படி இருப்பது?

வக்கீல்: ஒன்று திருமணம் செய்து கொள்ளாதே; அப்படி இல்லையேல் வேறு வழியில்லாமல் அவளுடனேயே இரு!

பரஞ்சோதி
29-06-2005, 04:26 AM
இதைத்தானே பலரும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

அருமையான நகைச்சுவைகள் அண்ணா.

மன்மதன்
29-06-2005, 04:38 AM
இதைத்தானே பலரும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

அருமையான நகைச்சுவைகள் அண்ணா.

யாரு நண்பா ??? :rolleyes: :rolleyes: :rolleyes:

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
29-06-2005, 07:53 AM
ஏன் வக்கீல் சார், ஜீவனாம்சம் கொடுக்காமல் எப்படி இருப்பது?

வக்கீல்: ஒன்று திருமணம் செய்து கொள்ளாதே; அப்படி இல்லையேல் வேறு வழியில்லாமல் அவளுடனேயே இரு! சூப்பர் ஐடியா.... திருமணம் ஆகாத மன்மதா... உனக்கு ஏத்த அறிவுரை....

பிரியன்
29-06-2005, 08:06 AM
:mad:
சூப்பர் ஐடியா.... திருமணம் ஆகாத மன்மதா... உனக்கு ஏத்த அறிவுரை....

:) :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
29-06-2005, 10:54 AM
பிரியனுக்கு ஏற்றது தான்.

ஹா ஹா

karikaalan
29-06-2005, 11:12 AM
"ஒரு ஆட்டின் பொருட்டு வக்கீலிடம் போனால், ஒரு மாட்டையே கோட்டை விடுவீர்கள்" --- ஜெர்மனி பழமொழி

அறிஞர்
29-06-2005, 11:52 AM
"ஒரு ஆட்டின் பொருட்டு வக்கீலிடம் போனால், ஒரு மாட்டையே கோட்டை விடுவீர்கள்" --- ஜெர்மனி பழமொழி இது எல்லா ஊர் ஆட்களுக்கும் சாலப்பொருந்தும்....

Mathu
29-06-2005, 12:44 PM
ஏன் வக்கீல் சார், ஜீவனாம்சம் கொடுக்காமல் எப்படி இருப்பது?

வக்கீல்: ஒன்று திருமணம் செய்து கொள்ளாதே; அப்படி இல்லையேல் வேறு வழியில்லாமல் அவளுடனேயே இரு!



இதைத்தானே பலரும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

அருமையான நகைச்சுவைகள் அண்ணா.

என்ன பரம்ஸ் அந்த பலரில் நீங்கள் இல்லை தானே.....:confused: ;)

பிரியன்
29-06-2005, 12:47 PM
என்ன பரம்ஸ் அந்த பலரில் நீங்கள் இல்லை தானே.....:confused: ;)


:confused: :confused: :confused: :cool: :cool: :cool:

karikaalan
04-07-2005, 10:16 AM
சண்டா சிங் தனது வக்கீல் பண்டா சிங் ஆபீஸக்கு அவருடன் பேச வேண்டி போன் செய்தார். எதிர் முனையிலிருந்த ரிசப்ஷனிஸ்ட், பண்டா சிங் நான்கு நாட்களுக்கு முன்னர் இறந்துபோய் விட்டதாகத் தெரிவித்தார்.

சண்டாசிங் மறு நாள் போன் செய்தார், வக்கீல் பண்டாசிங்குடன் பேசவேண்டும் என்று. "நேற்றே சொன்னேனே அவர் செத்துப் போய்விட்டதாக", என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.

அடுத்தநாளும் சண்டாசிங், வக்கீல் பண்டாசிங்குடன் பேசவேண்டும் என்று சொல்லவே, சற்று கோபத்துடன் சொன்னாள் ரிசப்ஷனிஸ்ட்: "என்னய்யா பைத்தியம் பிடித்துவிட்டதா.... எத்தனை முறை சொல்வது வக்கீல் பண்டாசிங் இறந்துபோய் விட்டார் என்று.".

அதற்கு சண்டாசிங் சொன்னார்: "நீ சொல்வது கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா!"

அறிஞர்
04-07-2005, 10:18 AM
அதற்கு சண்டாசிங் சொன்னார்: "நீ சொல்வது கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா!" ஜொள்ளு பார்ட்டியா.... தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் பண்ணலாமே..

thempavani
04-07-2005, 10:46 AM
அதற்கு சண்டாசிங் சொன்னார்: "நீ சொல்வது கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா!"

:p:p:p:p:p:p:p:p:p:p:p

karikaalan
05-07-2005, 11:43 AM
யாரு கிரிமினல் வக்கீல்?

மாட்டிக்கொண்டு பிடிபட்டவரே கிரிமினல் வக்கீல்.

மன்மதன்
05-07-2005, 11:48 AM
அப்ப யாரு சிவில் வக்கீல்.. ??
சிவில் இன்ஜினியரிங் முடித்து வக்கீல் ஆனவர்தானே :D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
06-07-2005, 02:04 AM
கிரிமினல் வக்கீல், சிவில் வக்கீல்.. சைபர் வக்கீல்.. அப்புறம் என்ன என்ன வக்கீல் பாடுபடப்போகிறார்களோ......

வாழ்த்துக்கள்.. கரிகாலன்ஜி, மன்மதன்...

karikaalan
06-07-2005, 12:12 PM
ஒரு வக்கீல் இறந்து போனார், மிகவும் வறுமையில் வாடி. ஊர்ல இருந்த மற்ற வக்கீல்கள்லாம் அவருடைய இறுதிச் சடங்குகளுக்காக சந்தா சேர்க்கத் துவங்கினார்கள். மாஜிஸ்ட்ரேட் கிட்ட போய் ரூ. 100 கொடுக்குமாறு சொன்னார்கள்.

அவர் சொன்னார்: "ஒரு வக்கீலை எரிப்பதற்கு ரூ.100-ஆ! இந்தா ரூ.1000. பத்து வக்கீல்களைப் பிடித்து எரித்துவிடுங்கள்!"

===கரிகாலன்

thempavani
07-07-2005, 10:12 AM
ஆஹா..மாஜிஸ்ட்ரேட்டுக்கு வக்கீல்கள் மேல் அவ்வளவு ஆத்திரமா.நல்ல சிரிப்பு அண்ணா...

karikaalan
22-09-2005, 02:24 PM
எந்த ஒரு ஆசாமி தூக்கில தொங்கினாலும், அதுக்குப் பின்னால ஒரு வக்கீல் இருக்காரு தெரியுமா?

ஆமா ஆமா... சுடுகாட்டுக்குப் போற ஒவ்வொரு ஆசாமிக்குப் பின்னாலயும் ஒரு டாக்டர் இருக்கா மாதிரி!

அறிஞர்
22-09-2005, 04:53 PM
யார வாரிவிடுறீங்க..... வக்கீலையா.. இல்லை டாக்டரையா

pradeepkt
23-09-2005, 04:20 AM
அறிஞரே நீங்க டாக்டர் பட்டம் வாங்கியவர்தானே...
என்னமோ என்னால ஆனது... :D
போ.கு.
பிரதீப்

அறிஞர்
23-09-2005, 05:03 AM
அறிஞரே நீங்க டாக்டர் பட்டம் வாங்கியவர்தானே...
என்னமோ என்னால ஆனது... :D
போ.கு.
பிரதீப்அட மக்கா அந்த டாக்டர் வேற..... சந்தடி சாக்குல நம்ம வாருகிறீங்க...

karikaalan
13-04-2006, 01:21 PM
ஊருக்குப் புதிதாக வந்தவர் மற்றவரிடம்:

ஏன் சார், இந்த ஊரில் கிரிமினல் வக்கீல்கள் இருக்கிறார்களா?

ஓ.... நிறைய பேர் இருக்காங்க... ஆனா நிரூபிக்கறது கஷ்டம்...

===கரிகாலன்

aren
13-04-2006, 03:20 PM
வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?

சர்தார்ஜி: ஜூலை 15

வக்கீல்: எந்த வருஷம்?

சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!

வக்கீல்: ...! ...! ...!

நன்றி: கீற்று இணையப்பக்கம்

தாமரை
17-04-2006, 05:04 AM
அப்பாடா தப்பிச்சம் பரம்ஸ் மட்டும் வக்கீலா ஆகி இருந்தா...... :) :rolleyes:
அப்படி இல்லைப்பா... அப்படி செஞ்சா அது அரசியல்வாதி ஆயிடும்...

karikaalan
19-09-2006, 07:06 AM
அவள் மூளையில் கட்டி இருப்பதாக ஒரு பெண்மணியிடம் மருத்துவர் சொன்னார்.

கட்டியை வெட்டி எடுத்துவிடுவதாகவும், அந்த இடத்தை நிரப்ப யாரிடமிருந்தாவது அரைக் கிலோ மூளை வாங்கி transplant செய்துவிடுவதாகவும் கூறினார் மருத்துவர்.

எந்த மாதிரியான மூளை, விலை என்ன என்பதில் விவாதம் நடந்தது.
அறுவை மருத்துவர் என்றால் கிலோ 2.5 லட்சம்; சாதாரண மருத்துவர் என்றால் கிலோ 1.5 லட்சம், என்றெல்லாம் சொன்னார்.

பெண்மணி கேட்டார்: "வக்கீலுடைய மூளை என்ன விலை இருக்கும்? சிறிய வயதில் இருந்தே எனக்கு வக்கீலாக வேண்டும் என்று ஆசை."
மருத்துவர் சொன்னார்: "வக்கீல் மூளை கிலோ 25 லட்சம்."

பெண்மணி: "என்ன அக்கிரமம்... வக்கீல் மூளை மட்டும் ஏன் இவ்வளவு கிராக்கி?"

மருத்துவர்: "புரியாம பேசறீங்களே... ஒரு கிலோ மூளைக்காக நாங்க எத்தனை வக்கீலுங்களை சாவடிக்கணும்?"

crisho
19-09-2006, 08:13 AM
மருத்துவர்: "புரியாம பேசறீங்களே... ஒரு கிலோ மூளைக்காக நாங்க எத்தனை வக்கீலுங்களை சாவடிக்கணும்?"

:D :D :D :D :D
நினைக்கவே இல்லை..... என்ன அடி வக்கீல்களுக்கு. சூப்பர்!

அறிஞர்
21-09-2006, 04:00 PM
அடப்பாவமே.. வக்கீல்கள் நிலை இப்படியா.....

வக்கீல்களை வார கரிகாலன் அண்ணா வந்துவிட்டார்.. தொடர்ந்து வாருங்கள் அண்ணா

ராஜா
04-11-2006, 04:23 PM
அமெரிக்காவில் வக்கீல்கள் என்றாலே வேப்பங்காய். அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு இனம் என்றால், அது வக்கீல்கள்தான்...

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா" வில் ஒரு நேர்காணல்.. செவ்வாய் கிரகத்துக்கு ஆள் அனுப்புவதற்காக...
அங்கு செல்லும் நபர் திரும்ப முடியாது என்பதால் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்கள்.
முதலில் ஒரு பொறியாளர், 1 மில்லியன் டாலர்கள் கேட்டார்.
அடுத்து ஒரு மருத்துவர் 2 மில்லியன் டாலர்கள் கேட்டார்.
மூன்றாவதாக ஒரு வக்கீல். 3 மில்லியன் டாலர்கள் கேட்டார்,
வியப்படைந்த அதிகாரி, கேட்டார் ,"நீ மட்டும் ஏன் அதிகம் கேட்கிறாய்?"
வக்கீல் சொன்னார்" உங்களுக்கு 1 மில்லியன், எனக்கு 1 மில்லியன். மீதி 1 மில்லியனை பொறியாளருக்கு கொடுத்து அவரை ராக்கெட்டில் அனுப்பிருவோம்..என்ன சொல்றீங்க?"

ராஜா
04-11-2006, 04:47 PM
வக்கீல் இறந்த பின் வானுலகம் சென்றார்.. அங்கு எம தர்மன் வருபவர்களின் கணக்குப் பார்த்து சொர்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பிக்கொண்டிருந்தான். நீண்ட வரிசையில் கடைசியில் நின்றிருந்த வக்கீலைப் பார்த்தவுடன் ஓடோடி வந்து மரியாதையாக அழைத்துச் சென்று ஒரு ஆசனத்தில் அமர வைத்தான்.
ஆச்சர்யம் மிகுதியுடன் வக்கீல் கேட்டார்.." எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு மரியாதை?"
எமன் ; இங்கே நாங்க ரொம்ப வயசுக்காரங்களை இப்படித் தான் கவுரவப் படுத்துவோம் !
வக்கீல் ; அப்படி என்ன வயசு ஆயிடுச்சு எனக்கு ?
எமன் ; எங்க கணக்குலே நீங்க 10 வழக்கு நடத்துனதா போட்டிருக்கு..
எப்படியும் ஒரு 200 வயசு இருக்காதா உங்களுக்கு?

ராஜா
04-11-2006, 04:59 PM
ஒரு நாள் இரவு ஒரு திருடனும், அவன் மகனும் தவறுதலாக வக்கீலின் வீட்டுக்கு கொள்ளையடிக்க சென்று விட்டார்கள். வக்கீலும் அவர் மனைவியும் அடித்த அடி தாங்காமல் தப்பித்தோம்..பிழைத்தோம் என்று ஒடி வந்தார்கள்..
வீடு வந்து சேர்ந்த பிறகு தாங்கள் தப்பி வந்த கதையை மனைவியிடம் சொன்னார்கள்.
என்றாலும் மனைவி அவர்களைப் பாராட்டி," இவ்வளவு அபாயத்திலும் வக்கீல் விட்டுலேருந்து 5000 ரூபாய் அடிச்சுட்டு வந்துட்டீங்களே !" என்றாள்.
திருடன் அதிர்ச்சி அடைந்து, " நாசமாப் போச்சு.. வேறே வீட்டுலே 10,000 அடிச்சு வச்சிருந்தோம்..அதிலேயும் பாதி போச்சா?"

karikaalan
09-03-2007, 10:50 AM
ராஜா ஜி

நல்ல ஜோக்குகள். வாழ்த்துக்கள்.

அடுத்ததாக:

வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவரிடம்: நீ இவருடைய பர்ஸைத் திருடினாயா?

குற்றம் சாட்டப்பட்டவர்: இல்லவே இல்லீங்க எசமான். அவராவே குடுத்தார்.

வக்கீல்: எப்படி?

கு சா: என் கையில கத்தி வச்சிருந்தேங்க. பார்த்தவுடனே எடுத்துக் குடுத்துட்டாருங்க...

===கரிகாலன்

வெற்றி
09-03-2007, 10:55 AM
அரசாட்சி என்று ஒரு படம் வந்தது...
ம்ம்ம்ம்ம்ம்ம் அது தான் நினைவுக்கு வந்தது...
படித்து முடித்ததும் ஒரு விரக்தியான சிரிப்பு வந்தது (ஆங்கிலத்தில் சிக் ஜோக் என்பார்களே அதைப்போல்)

அறிஞர்
09-03-2007, 12:53 PM
அமெரிக்காவில் வக்கீல்கள் என்றாலே வேப்பங்காய். அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு இனம் என்றால், அது வக்கீல்கள்தான்...

வக்கீல் சொன்னார்" உங்களுக்கு 1 மில்லியன், எனக்கு 1 மில்லியன். மீதி 1 மில்லியனை பொறியாளருக்கு கொடுத்து அவரை ராக்கெட்டில் அனுப்பிருவோம்..என்ன சொல்றீங்க?" இங்கு வக்கீல் நிலை அப்படிதான்.. எதுக்கு எடுத்தாலும் பீஸ் 2000, 3000 டாலர் தான்...

சிரிப்புக்கு நன்றி.. ராஜா..

அறிஞர்
09-03-2007, 12:55 PM
திருடன் அதிர்ச்சி அடைந்து, " நாசமாப் போச்சு.. வேறே வீட்டுலே 10,000 அடிச்சு வச்சிருந்தோம்..அதிலேயும் பாதி போச்சா?"
வக்கீல் வீட்டுக்கு போயிட்டு சும்மா வந்தா எப்படி... அதான்.. பாதி பணம் அங்கு கப்பமாக கட்டப்பட்டுவிட்டது...

அறிஞர்
09-03-2007, 12:56 PM
ராஜா ஜி
கு சா: என் கையில கத்தி வச்சிருந்தேங்க. பார்த்தவுடனே எடுத்துக் குடுத்துட்டாருங்க...

===கரிகாலன்
அவர்தானே கொடுத்தார்.. கொடுத்துட்டு இப்படி வழக்கு போடுவதில் என்ன நியாயம்.

ராஜா
09-03-2007, 01:55 PM
___________________________________________________________

வக்கீல் ; இந்தக் கொலையைச் செய்தது நீ தானே..?

குற்றவாளி ; இல்லவே இல்லை.

வக்கீல் ; கோர்ட்டில் பொய் சொன்னால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா..?

குற்றவாளி ; தெரியாது.. ஆனால் கொலையை ஒப்புக்கொண்டால் கிடைக்கும் தண்டனையை விட கம்மி என்று தெரியும்.
_____________________________________________________________

நீதிபதி ; உன்னை எதிரி கத்தியால் குத்தும்போது நீ ஏன் தடுக்கவில்லை..?

வழக்கு போட்டவர் ; எப்படி எஜமான் முடியும்..? நான்தான் அப்ப அவன் குரல்வளையை நெறித்துக் கொண்டு இருந்தேனே..!
______________________________________________________________

நீதிபதி ; நீ எதிர்க்கட்சி வக்கில் திரு. புலிகேசியை பன்றி என்று திட்டினாயா.. வழக்குப் போட்டுள்ளார்.. உனக்கு 100 ரூபாய் அபராதம்..! எப்போ கட்டுற..?

குற்றவாளி ; உடனே கட்டிடுறேனுங்கய்யா.. பன்றி வழக்குப்
போடுறதுக்குள்ள..!
_______________________________________________________________

அறிஞர்
09-03-2007, 02:01 PM
குற்றவாளி ; தெரியாது.. ஆனால் கொலையை ஒப்புக்கொண்டால் கிடைக்கும் தண்டனையை விட கம்மி என்று தெரியும்._______________________________________________________________
எப்படியோ கம்மியா தண்டனை கிடைத்தா.. சரிதான்..


குற்றவாளி ; உடனே கட்டிடுறேனுங்கய்யா.. பன்றி வழக்குப்
போடுறதுக்குள்ள..!
_______________________________________________________________ வார்த்தை சிலேடைகள்... ரசிக்க வைக்கிறது..

நன்றி ராஜா..

மனோஜ்
09-03-2007, 02:16 PM
நகைசுவை அனைத்தும்:D :D :D :D :rolleyes: :rolleyes: :D :D

karikaalan
08-08-2007, 03:41 PM
நண்பர்களே... மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர்:

ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி.

புதிதாகச் சேர்ந்த இளம் வக்கீல், தொலைவிலுள்ள ஊரில் வழிப்பறி ஆசாமியைப் பாதுகாக்கவேண்டி அங்குள்ள கோர்ட்டில் ஆஜரானார்.

எதிர்பாராத விதமாக ஜெயித்துவிட்டார். தலைமை வக்கீலுக்கு தந்தி (அப்படி என்றால் கேட்பது கேட்கிறது!) அனுப்பினார் −−− "நீதி நிலை நாட்டப்பட்டது!"


சீனியர் பதில் தந்தி அனுப்பினார்: "உடனே அப்பீல் செய்யவும்."


===கரிகாலன்

ஆதவா
08-08-2007, 03:53 PM
வணக்கம் கரிகாலன் அவர்களே... மன்ற மீள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது..

அமரன்
08-08-2007, 06:30 PM
வக்கீல் நகைச்சுவை ஒவ்வொன்றும் பட்டாசு ரகம்...நன்றி அனைவருக்கும்.

ஓவியன்
08-08-2007, 06:33 PM
வாருங்கள் கரிகாலன் அண்ணா!

உங்களைப் பற்றி நம்ம பரம்ஸ் அண்ணாவின் ஒரு பதிவைப் பார்த்தபின்னர், எனக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கினேன்.

இனியென்ன, உங்களுடன் கலந்து மகிழும் சந்தோசத்துடன்

ஓவியன்!.

இளசு
09-08-2007, 06:52 AM
நண்பர்களே... மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர்:

===கரிகாலன்

வாருங்கள் அண்ணலே!
உடலும் மனமும் நலந்தானா?

உங்கள் சீனியர்−ஜூனியர்களைப் பார்க்கும்போது
முன்னர் படித்த வாசகம் ஒன்று நினைவாடலில்:

உலகில் 99 சதம் வக்கீல்கள் மட்டுமே மோசமானவர்கள்.
அவர்களால்தான் மீதம் உள்ள நல்ல வக்கீல்களுக்குக் கெட்ட பெயர்!!

lolluvathiyar
09-08-2007, 07:10 AM
கரிகாலன் ஆரம்பித்த வக்கீல் ஜோக் காலத்தை தாண்டி சென்று கொன்டிருகிறது. இடையில் ராஜா சார் ரோடு போட்டிருகிறார்.

கரிகாலருக்கு வக்கீல் மீது அப்படி என்ன கோபமோ?
உங்களுக்கு ஒருவரிடமிருந்து 1 லட்சம் வரவேண்டி உள்ளது அதை கேட்டு வழக்கு தொடுத்தால் வக்கீலுக்கு 2 லட்சம் செலவு செய்து 10 வருடம் கழித்து உங்கள் 1 லட்சம் வழங்க தீர்ப்பு மட்டும் வரும் பணம் வராது. இது தான் உன்மை. அதற்காக தான் தொன்று தொட்டு ஒரு பழமொழி இருகிறது.

சாட்சிகாரன் காலில் விழுவதை விட சன்டைகாரன் காலில் விழுவது மேல்"அது எக்காலத்துக்கும் பொருந்தும்

தளபதி
09-08-2007, 07:26 AM
வக்கீல் ஜோக்ஸ் மிகவும் அருமை.
காத்திருக்கிறோம்!! உங்கள் பதிவிற்கு!!

ஓவியா
09-08-2007, 06:46 PM
கரிகாலன் அண்ணாவிற்க்கு கரங்கூப்பி வணக்கங்கள்.

இன்னும் க*டிக*ளை வாரி வ*ள*ங்குங்க*ள். ந*ன்றி.

karikaalan
14-09-2007, 09:24 AM
வக்கீல் ஒரு வழக்கில் செயிப்பதற்கு 'என்ன' வேண்டுமானாலும் செய்யத் தயங்கமாட்டார்.

சில சமயம் உண்மையைக் கூட சொல்லிவிடுவார்.

===கரிகாலன்

அமரன்
14-09-2007, 09:27 AM
ஹஹ்ஹ்ஹா...உண்மையைச்சொல்லும் வக்கீலா....நன்று நன்று. நன்றி.

சாராகுமார்
14-09-2007, 09:43 AM
வக்கீல் நகைச்சுவை அனைத்தும் வாய்தா வாங்கும் சுவை.வாழ்த்துக்கள்.

karikaalan
09-10-2007, 10:51 AM
நம்ம நண்பர் ஒருவருக்கு உயில் எழுதணும்னு தோணிச்சு.

நல்லாத் தெரிஞ்ச வக்கீல்கிட்ட போனாரு.. உயில் எழுத*ணும்னு சொன்ன*வுட*னே, வ*க்கீல் சொன்னாரு....

"ந*ம்ம* கிட்ட* சொல்லிட்டீங்க*ள்ள*... எங்கிட்ட எல்லாத்தையும் விட்ருங்க*... க*வ*லைய* விடுங்க*... நான் க*வ*னிச்சுக்கிறேன்", அப்டீன்னாரு.

ந*ண்ப*ர் சொன்னாரு: "ஐயா... உன*க்கு எக்க*ச்ச*க்க*மா ஃபீஸ் கொடுக்க*ணும்னு தெரியும்தான்.... ஆனா... இந்த* மாதிரியா... எல்லாத்தையும் விட்டுருன்றியே..... என் புள்ளைங்க*ளுக்குக் கொஞ்ச*ம் விட்டு வ*ச்சிருய்யா"...

mania
11-10-2007, 02:01 AM
ஆஹா.... ஆரம்பிச்சிட்டார்யா மறுபடியும்.....!!!!!
அன்புடன்
மணியா

அன்புரசிகன்
11-10-2007, 06:29 AM
"ந*ம்ம* கிட்ட* சொல்லிட்டீங்க*ள்ள*... எங்கிட்ட எல்லாத்தையும் விட்ருங்க*... க*வ*லைய* விடுங்க*... நான் க*வ*னிச்சுக்கிறேன்", அப்டீன்னாரு.


வக்கீல் சொன்னது உயிராக இருக்குமோ...:D

karikaalan
11-05-2009, 08:00 AM
கட்சிக்காரர் ஒருவர் கோர்ட்டிலிருந்து வெளியே வரும்போது, இடுப்பில் வெறும் துண்டு மட்டுமே கட்டியிருந்தார்.

பத்திரிகை நிருபர் கேட்டார்: கேஸ்ல தோத்துட்டீங்களோ?

கட்சிக்காரர்: ஜெயிச்சாச்சு.. எல்லாம் போக, இவ்வளவுதான் பாக்கின்னு வக்கீல் வெளியே அனுப்பிட்டாரு....

===க*ரிகால*ன்

நேசம்
11-05-2009, 08:12 AM
துண்டாவது கிடைச்சுசே... மிண்டும் தொடர்வதற்கு வாழ்த்துகள் அண்ணா