PDA

View Full Version : ஒரு போட்டி ....!!!

mania
31-05-2005, 07:05 AM
கொஞ்ச நாளாக வராமல் இருந்த இந்த பகுதியை மீண்டும் ஆரம்பிக்கின்றேன்......
ஷாரோன் என்பவளுக்கு ராணியிடமிருந்து ஒரு வாழ்த்து தந்தி (அவள் 100 வயது அடைந்ததை ஒட்டி ).
ஷாரோனின் தங்கைகள் மார்ஜோரியும் ,நோராவும் அன்றைய செய்தித்தாளில் முதல் பக்கத்தில் அந்த தந்தியை படிப்பது போல ஒரு படம் வந்திருந்தது.
மறு நாள் அந்த செய்தியை பார்த்த ஷாரொனுக்கு ஒரு விசித்திரமான உண்மை அந்த ஹெட்லைன்ஸ் பார்த்தவுடன் தெரியவந்தது அது என்ன என்று கண்டு பிடிக்கிறீர்களா. உங்கள் வசதிக்காக அந்த ஹெட்லைன்ஸை கீழே கொடுத்திருக்கிறேன் :rolleyes:

"MARGE LETS NORAH SEE SHARON'S TELEGRAM"
அன்புடன்
மணியா

மன்மதன்
31-05-2005, 07:15 AM
This is Palindrom. அதாவது இடது வலமாகவும் , வலது இடமாகவும் படித்தால் ஒரே மாதிரிதான் இருக்கும் ..உ.தா malayalam , madam..

நீங்க கொடுத்தது ஒரு முழு வாக்கியம்.. அற்புதம் தலைஜி..
அன்புடன்
மன்மதன்

mania
31-05-2005, 07:18 AM
This is Palindrom. அதாவது இடது வலமாகவும் , வலது இடமாகவும் படித்தால் ஒரே மாதிரிதான் இருக்கும் ..உ.தா malayalam , madam..

நீங்க கொடுத்தது ஒரு முழு வாக்கியம்.. அற்புதம் தலைஜி..
அன்புடன்
மன்மதன்

;) கலக்கல்ஸ் மன்மதன்ஜி.......பாராட்டுக்கள்.....
அன்புடன்
மணியா....;)

மன்மதன்
31-05-2005, 07:23 AM
நன்றி தலைஜி.. அடுத்த புதிர் கொடுங்க... உங்க புதிர்ன்னாவே ஒரு வித்தியாசமாத்தான் இருக்கும்..
அன்புடன்
மன்மதன்ஜி

mania
31-05-2005, 08:30 AM
என்னிடம் சில போஸ்ட்கள் இருக்கின்றன. அவை ஜோடி ஜோடியாக ஊள்ளன . அவைகளின் உயரம் 4 அடி. ஒவ்வொரு ஜோடி போஸ்ட்களை இணைத்து 6 அடி நீளம் உள்ள சங்கிலிகள் உள்ளன. கேள்வி ........நான் இந்த போஸ்ட்களை எவ்வளவு இடைவெளி விட்டு வைத்தால் சங்கிலி தரையிலிருந்து (குறைந்த பட்சம் ) ஒரு அடி தூரத்தில் இருக்கும்.....?:rolleyes:
அன்புடன்
மணியா......;)

மன்மதன்
31-05-2005, 08:45 AM
அதே 6 அடி நீளத்திலே வைக்கலாம்.. என்ன போஸ்ட்களின் உயரத்தை மட்டும் 3 அடி கம்மி பண்ணி, 1 அடியாக வைத்து விட வேண்டியதுதான்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
31-05-2005, 08:52 AM
என்ன தலையின் தனிமடல் மன்மதன் பக்கமாக போகுது.

mania
31-05-2005, 08:54 AM
அதே 6 அடி நீளத்திலே வைக்கலாம்.. என்ன போஸ்ட்களின் உயரத்தை மட்டும் 3 அடி கம்மி பண்ணி, 1 அடியாக வைத்து விட வேண்டியதுதான்..
அன்புடன்
மன்மதன்

;) இல்லை ஜி.....போஸ்ட்களின் உயரத்தை குறைக்க கூடாது...:rolleyes:
அன்புடன்
மணியா...;)

mania
31-05-2005, 08:58 AM
என்ன தலையின் தனிமடல் மன்மதன் பக்கமாக போகுது.

:rolleyes: யார் அது மன்மதன்.....??? :confused: எனக்கு இளம் உதவியாளர் மன்மதன்ஜி தான் தெரியும்.....!!!;)
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
31-05-2005, 09:00 AM
அப்படின்னா , குறைந்த பட்சம் 3 அடி நீளம் விட்டு வைக்கணும்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
31-05-2005, 09:02 AM
:rolleyes: யார் அது மன்மதன்.....??? :confused: எனக்கு இளம் உதவியாளர் மன்மதன்ஜி தான் தெரியும்.....!!!;)
அன்புடன்
மணியா...:D

என்ன லொள்ளா...ஊய்ய்ய்ய்.. கீசிடுவேன்.. கீசி..;) ;) கரிகாலன்ஜி எஃபெக்ட்ல ஜி போட்டு கூப்பிட்டா மன்மதனை மறந்துடுமா?? ;) ;)
அன்புடன்
மன்மதன்

mania
31-05-2005, 09:05 AM
அப்படின்னா , குறைந்த பட்சம் 3 அடி நீளம் விட்டு வைக்கணும்..
அன்புடன்
மன்மதன்

;) இல்லை மன்மதன்......மைதிலிக்கு அழைப்பு விடவா......:rolleyes:

அன்புடன்
மணியா.....:D

mania
31-05-2005, 09:12 AM
என்ன லொள்ளா...ஊய்ய்ய்ய்.. கீசிடுவேன்.. கீசி..;) ;) கரிகாலன்ஜி எஃபெக்ட்ல ஜி போட்டு கூப்பிட்டா மன்மதனை மறந்துடுமா?? ;) ;)
அன்புடன்
மன்மதன்

:D :D :D
அன்புடன்
மணியா....:D

karikaalan
31-05-2005, 10:25 AM
ஜோடியாக உள்ள கம்பங்களை அவற்றின் தலை மீது (கம்பங்களின் தலை மீது, கவனிக்கவும்) சங்கிலி இருக்கிறாற்போல் வைத்து, பூமியில் ஆறடி இடைவெளி விட்டு நட்டு வைத்தால், சங்கிலி தரையைவிட்டு நிச்சயமாக ஓரடியாவது உயரத்தில் இருக்கும். சரியாஜி, மணியாஜி!!

===கரிகாலன்

pradeepkt
31-05-2005, 10:28 AM
தலை விஷயத்துக்கு வருவோம்.

விடை: 2 * ரூட்( 15 ) + 6 = 13.75 அடி
சரியான்னு சொல்லுங்க. அது எப்படின்னு பார்ப்போம்.
ரூட்டை எப்படிப் போடணுமின்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்?

Iniyan
31-05-2005, 10:39 AM
ஆகா திரும்ப ஐவர் அணியின் அட்டகாசங்கள் மாதிரி போகுதே???

மன்மதன்
31-05-2005, 11:13 AM
ஆகா திரும்ப ஐவர் அணியின் அட்டகாசங்கள் மாதிரி போகுதே???

இது சிரிப்புகள் பகுதியில் இருப்பதால், நமக்குள்ளே ரசிக்கிற மாதிரி எப்படி வேணும்னாலும் பேசிக்கலாம்.. சரிதானே இனியன்.
அன்புடன்
மன்மதன்

mania
31-05-2005, 11:44 AM
ஒருவருமே சரியாக சொல்லவில்லையே.......?
அன்புடன்
மணியா...

pradeepkt
31-05-2005, 11:46 AM
அப்ப நீங்கதான் பதில் சொல்லணும் தலை.

mania
31-05-2005, 11:47 AM
இது சிரிப்புகள் பகுதியில் இருப்பதால், நமக்குள்ளே ரசிக்கிற மாதிரி எப்படி வேணும்னாலும் பேசிக்கலாம்.. சரிதானே இனியன்.
அன்புடன்
மன்மதன்

:rolleyes: சில பேர் எங்கு பேசினாலும் சிரிக்கற மாதிரி தானே இருக்கு.....?:confused:
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
31-05-2005, 11:50 AM
அப்ப சில பேர் சிரிச்சா பேசுற மாதிரி இருக்கா.
தலை, என் தலை (அதான் நீங்க ) வெடிக்கிறதுக்கு முன்னாடி விடையச் சொல்லுங்க.

mania
31-05-2005, 11:53 AM
அப்ப நீங்கதான் பதில் சொல்லணும் தலை.

அந்த ஜோடி போஸ்ட்களை இடைவெளியே இல்லாமல் பக்கத்தில் வைத்துவிட்டால் சங்கிலி ( 6 அடி ) இரண்டாக மடிந்து 3 அடி ஆகிவிடும். அப்போது தரையிலிருந்து ஒரு அடியில் சங்கிலி இருக்கும் இல்லையா.....(4 - 3 = 1 )
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
31-05-2005, 11:55 AM
நான் அப்பவே சொல்லை உங்க புதிர் வித்தியாசமா இருக்கும்னு.. :D :D
அன்புடன்
மீசை மாதவன்

பிரியன்
31-05-2005, 12:07 PM
நான் அப்பவே சொல்லை உங்க புதிர் வித்தியாசமா இருக்கும்னு.. :D :D
அன்புடன்
மீசை மாதவன்

மாதவனா? மன்மதனா???? :p :p :p

pradeepkt
31-05-2005, 12:09 PM
எப்படி ஆனாலும் என் மீசையில மண் ஒட்டலை. நான் சொன்ன மாதிரி வச்சாலும் வருமில்லையா?
படமெல்லாம் போட்டேனே... :)

mania
31-05-2005, 12:12 PM
ஒரு எளிதான கணக்கு. உடனே பதில் தேவை. (சும்மா கம்ப்யூடரில் ஃபார்முலா எல்லாம் போட்டு கண்டுபிடிக்க கூடாது )
22 X 18 அங்குலங்கள் (பரப்பளவு 396 சதுர அங்குலங்கள் ) கொண்ட செவ்வக பலகையிலிருந்து ,
3 X 3 ( 9 சதுர அங்குலங்கள் பரப்பளவு ) கொண்ட சதுர பலகைகள் எவ்வளவு தயாரிக்கலாம்.....??
உடனே....உடனே....சொல்லுங்கள்...:rolleyes:
அன்புடன்
மணியா....

Iniyan
31-05-2005, 12:15 PM
சரி தான். ஆனாலும் இன்னும் நம்ம ஐயா மணியாவின் புதிருக்கு பதில்....

மணியா என்னாங்க இது இப்படி சிந்திக்கிற மாதிரி எல்லாம் புதிர் போட்டா மூளை சூடாயிடும் எனக்கு. ஏதோ சின்னதா பாத்து செய்யுங்க...

pradeepkt
31-05-2005, 12:16 PM
42 சரியா
இதையாவது சரின்னு சொல்லுங்க தலை. :)

mania
31-05-2005, 12:18 PM
எப்படி ஆனாலும் என் மீசையில மண் ஒட்டலை. நான் சொன்ன மாதிரி வச்சாலும் வருமில்லையா?
படமெல்லாம் போட்டேனே... :)

படம் இப்போத்தானே வருது.....நல்ல முயற்சி. இருந்தாலும் கணக்கு என்று வரும்போது...அந்த 6 அடி சங்கிலி கொஞ்சம் தொங்கும் இல்லையா....ஹி...ஹி...ஹி...:rolleyes:
அன்புடன்
மணியா....

Iniyan
31-05-2005, 12:20 PM
அடங் கொக்க மக்கா. தொடர்ந்து இப்படி கணக்கா கேட்டா எப்படி? அதும் இந்த கணினி வந்தப்பறம் மூளை எல்லாம் துரு பிடிச்சில்ல போயிருச்சி.

mania
31-05-2005, 12:22 PM
42 சரியா
இதையாவது சரின்னு சொல்லுங்க தலை. :)

:D சூப்பர் ஷாட் ப்ரதீப்...... டபிள் ஓகே:D
அன்புடன்
மணியா.....:D

pradeepkt
31-05-2005, 12:34 PM
:D சூப்பர் ஷாட் ப்ரதீப்...... டபிள் ஓகே:D
அன்புடன்
மணியா.....:D

டாங்க்ஸு! ஹி ஹி.

mania
01-06-2005, 04:58 AM
ஒரு நாள் மன்மதன் தன் நண்பர் ஒருவரை பார்க்க சென்றிருந்தார்.அப்போது அந்த நண்பர் வீட்டில் இன்னொருவரும் இருந்தார்.நண்பர் கொஞ்சம் என்னை மாதிரி....:rolleyes: ( கொஞ்சம் க்ராக் ) அந்த இன்னொருவரை அறிமுகம் செய்யும்போது அவர் தம்மை விட 30 வயது குறைந்தவர் என்றார்.இன்னொருவரோ "எங்கள் இருவர் வயதை பெருக்கினால் வரும் தொகை 1624" என்றார்.:confused: மன்மதன் விட்டால் போதும் என்று (து.கா. து. கா ) ஓடி வந்தது ஒரு விஷயம்.:D இப்போது அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன என்று கண்டுபிடித்து மன்மதனுக்கு உதவி செய்வீர்களா....:rolleyes:
அன்புடன்
மணியா.......:D

மன்மதன்
01-06-2005, 05:06 AM
நண்பருக்கு 58
நண்பருடைய நண்பருக்கு 28..

அன்புடன்
மன்மதன்

mania
01-06-2005, 05:16 AM
நண்பருக்கு 58
நண்பருடைய நண்பருக்கு 28..

அன்புடன்
மன்மதன்

:D :D விடைதான் தெரிந்திருக்கிறதே.....பின் ஏன் து.கா.து.கான்னு ஓடி வந்தே.....வடையும் காபியும் குடிச்சிட்டே வந்திருக்கலாமே....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
01-06-2005, 05:18 AM
42 சரியா
இதையாவது சரின்னு சொல்லுங்க தலை. :)இல்லை 44 என்பது சரியான விடை.

mania
01-06-2005, 05:22 AM
உங்களிடம் ஐந்து பில்லியன் ரூபாய்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.:rolleyes: நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 500 ரூபாய்கள் வீதம் தானம் செய்து வந்தால்....உங்களிடம் உள்ள பணம் எப்போது காலியாகும் (சுமாராக ):rolleyes:
அன்புடன்
மணியா.... :D

mania
01-06-2005, 05:25 AM
இல்லை 44 என்பது சரியான விடை.

:D வாய்யா க்ராகவா ......கொஞ்சம் எப்பிடி என்று இந்த உலகுக்கு பறை சாற்றுகிறீர்களா.....
அன்புடன்
மணியா...:rolleyes:

பரஞ்சோதி
01-06-2005, 05:26 AM
புதிர் என்ன அருணாச்சலம் பட ஸ்டைலில் போகுது.

gragavan
01-06-2005, 05:28 AM
இல்லை 44 என்பது சரியான விடை.இல்லை 42 என்பதே சரியான விடை.

பரஞ்சோதி
01-06-2005, 05:29 AM
உங்களிடம் ஐந்து பில்லியன் ரூபாய்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.:rolleyes: நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 500 ரூபாய்கள் வீதம் தானம் செய்து வந்தால்....உங்களிடம் உள்ள பணம் எப்போது காலியாகும் (சுமாராக ):rolleyes:
அன்புடன்
மணியா.... :D

தலை முதலில் 5 பில்லியனுக்கு எத்தனை 0 உண்டு என்று கேள்வி கேளுங்க, அப்புறம் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்.

(ஆமாம் தலை, எத்தனை 0 வரும்).

mania
01-06-2005, 05:29 AM
புதிர் என்ன அருணாச்சலம் பட ஸ்டைலில் போகுது.

:D விஜி தான் ஊரில இல்லை போலிருக்கு....சும்மா தள்ளி நின்னு வேடிக்கை பாக்க வேண்டியதுதானே:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:D

gragavan
01-06-2005, 05:30 AM
:D வாய்யா க்ராகவா ......கொஞ்சம் எப்பிடி என்று இந்த உலகுக்கு பறை சாற்றுகிறீர்களா.....
அன்புடன்
மணியா...:rolleyes:நீங்கள்ளாம் சேந்து முதுகுல சாத்துறதுக்கு முன்னாலயே நாப்பத்துநாலு தப்புன்னு பறைய சாத்தீட்டேனே ஹி ஹி

பரஞ்சோதி
01-06-2005, 05:31 AM
இல்லை 42 என்பதே சரியான விடை.

என்ன அண்ணா இப்படி அ(ப )ந்தர் பல்டி அடிச்சிட்டீங்க.

உங்களுக்கு சப்போர்ட் செய்ய ஒரு பெரிய கூட்டத்தை அழைத்து வர இருந்தேனே.

பரஞ்சோதி
01-06-2005, 05:34 AM
:D விஜி தான் ஊரில இல்லை போலிருக்கு....சும்மா தள்ளி நின்னு வேடிக்கை பாக்க வேண்டியதுதானே:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:D

தலை, தூங்கிட்டு இருந்த சிங்கத்தை எழுப்பி, அசிங்கப்படுத்த வேண்டாம்.

அப்புறம் அழுதுபுடுவேன் அழுது.

-வடிவேல பரம்ஸ்

gragavan
01-06-2005, 05:34 AM
உங்களிடம் ஐந்து பில்லியன் ரூபாய்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.:rolleyes: நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 500 ரூபாய்கள் வீதம் தானம் செய்து வந்தால்....உங்களிடம் உள்ள பணம் எப்போது காலியாகும் (சுமாராக ):rolleyes:
அன்புடன்
மணியா.... :Dபில்லியன் பல்லியன்னு........ஏதோ கைல ஆயிரம் ரூவாயக் கொடுத்து செலவு செய்யச் சொன்னா நல்லாயிருக்கும்.

gragavan
01-06-2005, 05:42 AM
என்ன அண்ணா இப்படி அ(ப )ந்தர் பல்டி அடிச்சிட்டீங்க.

உங்களுக்கு சப்போர்ட் செய்ய ஒரு பெரிய கூட்டத்தை அழைத்து வர இருந்தேனே.நாம சொல்றது தப்புன்னு தெரிஞ்சா ஒத்துக்கிற வேண்டியதுதான. இதுலென்ன இருக்கு.

ஆனாலும் தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு காமிச்சிட்ட. எனக்கு ஒரே பெருமைதான் போ.

மன்மதன்
01-06-2005, 05:58 AM
உங்களிடம் ஐந்து பில்லியன் ரூபாய்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.:rolleyes: நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 500 ரூபாய்கள் வீதம் தானம் செய்து வந்தால்....உங்களிடம் உள்ள பணம் எப்போது காலியாகும் (சுமாராக ):rolleyes:
அன்புடன்
மணியா.... :D

100000 நிமிடங்கள் ??

thempavani
01-06-2005, 06:30 AM
ஆமா. மன்மதா உனக்கு யாராவது சப்பாத்தி சுட்டுத் தர்றாங்களா..
விடை சரமாரி வருதே..

பரஞ்சோதி
01-06-2005, 06:42 AM
100000 நிமிடங்கள் ??

நண்பா, நீ வேலை வெட்டி இல்லாமல் இருப்பது இதன் மூலமாக தெரிகிறது.

தலை இந்த புதிரை போட்டு, யார் யார் என்று கண்டுபிடிக்க நினைத்தார், நீ வம்புக்கு போய் மாட்டிக் கொண்டாயே.

மன்மதன்
01-06-2005, 06:48 AM
ஆமா. மன்மதா உனக்கு யாராவது சப்பாத்தி சுட்டுத் தர்றாங்களா..
விடை சரமாரி வருதே..

:rolleyes: :rolleyes: பிஜ்ஜா சுட்டுத்தர்ராங்க. :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
01-06-2005, 06:52 AM
நண்பா, நீ வேலை வெட்டி இல்லாமல் இருப்பது இதன் மூலமாக தெரிகிறது.
தலை இந்த புதிரை போட்டு, யார் யார் என்று கண்டுபிடிக்க நினைத்தார், நீ வம்புக்கு போய் மாட்டிக் கொண்டாயே.

அதுதான் இல்லை. தலை எப்பவும் வித்தியாசமாக புதிர் போடுவார்.. :rolleyes: :rolleyes: நீ வேணா பாரேன்.. இதற்கும் 'வித்யா'சமாத்தான் பதில் சொல்வாரு ..:rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன் :rolleyes:

pradeepkt
01-06-2005, 07:18 AM
10000000 நிமிடங்கள். மன்மதா என்ன 2 சைபரை விட்டுட்டீங்களா?
அல்லது 166666.66666666666666666666666667 மணி நேரம்
அல்லது 6944.4444444444444444444444444444 நாட்கள்
அல்லது 19.025875190258751902587519025875 வருடங்கள் - 365 நாள் என்று கொண்டால்.

சரி தலை எங்களுக்கு எல்லாம் தலை சுத்தற மாதிரியே கேள்வி கேக்கணுமின்னு எங்கயாச்சும் வரம் வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

mania
01-06-2005, 07:24 AM
தலை முதலில் 5 பில்லியனுக்கு எத்தனை 0 உண்டு என்று கேள்வி கேளுங்க, அப்புறம் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்.

(ஆமாம் தலை, எத்தனை 0 வரும்).

:D 5,000,000,000.....;)

பில்லியனுக்கு 9 ... 0 வரும்.....பில்லி சூன்யத்துக்கு ஒரே ஒரு 0 (முட்டை ) போறும்
அன்புடன்
மணியா...:D

pradeepkt
01-06-2005, 07:26 AM
தலை என் பதிலுக்கென்ன பதில்????

mania
01-06-2005, 07:37 AM
10000000 நிமிடங்கள். மன்மதா என்ன 2 சைபரை விட்டுட்டீங்களா?
அல்லது 166666.66666666666666666666666667 மணி நேரம்
அல்லது 6944.4444444444444444444444444444 நாட்கள்
அல்லது 19.025875190258751902587519025875 வருடங்கள் - 365 நாள் என்று கொண்டால்.

சரி தலை எங்களுக்கு எல்லாம் தலை சுத்தற மாதிரியே கேள்வி கேக்கணுமின்னு எங்கயாச்சும் வரம் வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

;) பாராட்டுக்கள் ப்ரதீப்....மிக சரியான விடையும் விளக்கமும்.....
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
01-06-2005, 07:40 AM
10000000 நிமிடங்கள். மன்மதா என்ன 2 சைபரை விட்டுட்டீங்களா?
அல்லது 166666.66666666666666666666666667 மணி நேரம்
அல்லது 6944.4444444444444444444444444444 நாட்கள்
அல்லது 19.025875190258751902587519025875 வருடங்கள் - 365 நாள் என்று கொண்டால்.

சரி தலை எங்களுக்கு எல்லாம் தலை சுத்தற மாதிரியே கேள்வி கேக்கணுமின்னு எங்கயாச்சும் வரம் வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

2 சைபர்தானே.. அதை கணக்கிலே வராத படி செலவு பண்ணிட்டேன்..;) ;)
அன்புடன்
மன்மதன்

pradeepkt
01-06-2005, 07:43 AM
நன்றி தலை. அடுத்த கேள்வியக் கேளுங்க.

பரஞ்சோதி
01-06-2005, 08:04 AM
ஆமாம் தலை, அடுத்த கேள்வி, சப்பாத்தி சாப்பிட்டாச்சு, இனிமேல் விடுவதாக இல்லை.

mania
01-06-2005, 08:53 AM
ஒரு நாள் நான் கடையிலே 12 ரூபாய்களுக்கு கொஞ்சம் கொய்யா பழங்கள் வாங்கினேன். பழங்கள் சிறிய அளவாக இருந்ததால் அதிகமாக இன்னும் இரண்டு பழங்கள் எடுத்துக்கொண்டேன். நான் கிளம்பியபோது கடைக்கரன் இதனால் அவனுக்கு ஏற்கனவே பேசிய விலையில் ஒரு டஸனுக்கு ஒரு ரூபாய் கம்மியாகிவிட்டது என்று கத்த ஆரம்பித்துவிட்டான்.:rolleyes: அப்பிடியென்றால் நான் முதலில் வாங்கிய பழங்கள் எவ்வளவு....??:confused: (போடாங்கொய்யா என்று கத்தாதீர்கள் ):D
அன்புடன்
மணியா....;)

மன்மதன்
01-06-2005, 09:00 AM
கொய்யாலங்கொய்யா.. புர்லேப்பா... ;) ;)
குழப்பத்துடன்
மன்மதன்

mania
01-06-2005, 09:08 AM
கொய்யாலங்கொய்யா.. புர்லேப்பா... ;) ;)
குழப்பத்துடன்
மன்மதன்

:D :D இந்த மாதிரி கத்துவீங்கன்னு தெரிஞ்சுதான் முன்னாடியே சொல்லியிருக்கேன்.....என்னுடைய கேள்வி "SELF EXPLANATORY"
அன்புடன்
மணியா....;)

பரஞ்சோதி
01-06-2005, 09:18 AM
முதலில் 24 கொய்யா பழங்கள் வாங்கினீர்கள்.

mania
01-06-2005, 09:29 AM
முதலில் 24 கொய்யா பழங்கள் வாங்கினீர்கள்.

:confused: கணக்கு உதைக்குதே......
அன்புடன்
மணியா....;)

பரஞ்சோதி
01-06-2005, 09:34 AM
தலை, அதில் இரண்டை மன்மதன் சுட்டுட்டான்.

mania
01-06-2005, 09:46 AM
தலை, அதில் இரண்டை மன்மதன் சுட்டுட்டான்.

:D :D :D

pradeepkt
01-06-2005, 10:16 AM
தலை,
16 பழங்கள்.
சரியான்னு சொல்லுங்க. அப்போதான் நான் எப்படின்னு சொல்லுவேன்.

mania
01-06-2005, 10:25 AM
தலை,
16 பழங்கள்.
சரியான்னு சொல்லுங்க. அப்போதான் நான் எப்படின்னு சொல்லுவேன்.

:D சரி மார்க்கண்டேயா......:D உனக்கு மார்க் உண்டேய்யா....:D

பரஞ்சோதி
01-06-2005, 10:29 AM
சபாஷ் தம்பி, அண்ணன் சப்பாத்தி சாப்பிட்டால் தம்பிக்கு லைட் எரியுது.

எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

pradeepkt
01-06-2005, 10:30 AM
சரின்னு சொல்லிட்டதினால சொல்லறேன்.

உங்கள் கணக்கைச் சமன்பாடாக்கினால் வருவது இதுதான்

12*12/(x+2) = 12*12/x - 1
x^2 + 2x - 288 = 0
இதை விடை கண்டால் வருவதுதான் 16.

அதாவது தலை முதலில் 12 ரூபாய்க்கு 16 பழங்கள் எடுத்தார். அது டஜன் 9 ரூபாய் வந்தது. அப்புறம் அதே 12 ரூபாய்க்கு 18 பழங்களை லவட்டினார். அது டஜன் 8 ரூபாய் ஆகிவிட்டது.
அண்ணா, ஓகேவா? இனிமேல் இப்படி செய்யாதீங்க தலை.

mania
01-06-2005, 10:37 AM

:rolleyes: செய்யா யாவது....கொய்யா யாவது.....சும்மா தம்மாத்தூண்டு பயங்க அது.....:D

பரஞ்சோதி
01-06-2005, 10:40 AM
தலை சத்தியமாக இத்தனை பெரிய பார்மூலா போட்டு கணக்கு போடலை, தம்பி பிரதீப் இப்படி கணக்கு காட்டி, எல்லோரையும் பயம் காட்டி, இந்த பக்கம் வரவிடாமல் செய்கிறார்.

mania
01-06-2005, 10:44 AM
இது ஏற்கனவே கேட்டதுதான்....இருந்தாலும் புதிய (இளம்...??? ) :rolleyes: நண்பர்களுக்காக....
ஒரு கடிகரம் 7 மணி அடிக்க 7 செகண்டுகள் எடுத்துக்கொள்கிறது. அப்பிடியானால் அந்த கடிகாரம் 10 மணி அடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்.....? உடனே பதில் தேவை....:rolleyes:

பரஞ்சோதி
01-06-2005, 10:46 AM
நான் பழைய ஆள் என்பதால் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

என் மெமரி பவர் பற்றி அறிய ஒரு சின்ன பாயிண்ட் - இந்த புதிருக்கு சரியான விடை சொன்னவர் நம்ம மது.

pradeepkt
01-06-2005, 10:47 AM
பத்தரை (10.5) செகண்டா தலை.
என்னமோ இன்னைக்கு எனக்கு ஆச்சு.

mania
01-06-2005, 10:47 AM
தலை சத்தியமாக இத்தனை பெரிய பார்மூலா போட்டு கணக்கு போடலை, தம்பி பிரதீப் இப்படி கணக்கு காட்டி, எல்லோரையும் பயம் காட்டி, இந்த பக்கம் வரவிடாமல் செய்கிறார்.

:D :D உண்மைதான் பரம்ஸ்....நானே பயந்து விட்டேன்....கடைக்காரனிடமும் அந்த மாதிரி கால்குலேடர் இருக்கவில்லை.....:confused: :rolleyes: :D

pradeepkt
01-06-2005, 10:49 AM
:D :D உண்மைதான் பரம்ஸ்....நானே பயந்து விட்டேன்....கடைக்காரனிடமும் அந்த மாதிரி கால்குலேடர் இருக்கவில்லை.....:confused: :rolleyes: :D

இந்த நக்கலுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை.
தலையப் பிச்சுக்கிற மாதிரி கணக்கு கேக்குறது, அப்புறம் பயம் என்ன? :)
அடுத்த கணக்குக்கு விடை சரியா?
7 மணி அடிக்க 6 மணி இடைவெளிகள்.
எனவே ஒரு மணி இடைவெளி 7/6 வினாடி.
10 மணி அடிக்க 9 மணி இடைவெளிகள்.
எனவே இதற்கு 9*7/6 = 10.5 வினாடிகள்.

மாதமோ சித்திரை
நேரமோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை
மறக்காமல் உதயசூரியனுக்குக் குத்திடுவீர் முத்திரை!
- அண்ணா (பரம்ஸ் அண்ணா இல்லை )

mania
01-06-2005, 10:59 AM
நான் பழைய ஆள் என்பதால் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

என் மெமரி பவர் பற்றி அறிய ஒரு சின்ன பாயிண்ட் - இந்த புதிருக்கு சரியான விடை சொன்னவர் நம்ம மது.

:D உன் மெமரில எமரியை போட்டு தேய்க்க....:D

mania
01-06-2005, 11:04 AM
இந்த நக்கலுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை.
தலையப் பிச்சுக்கிற மாதிரி கணக்கு கேக்குறது, அப்புறம் பயம் என்ன? :)
அடுத்த கணக்குக்கு விடை சரியா?
7 மணி அடிக்க 6 மணி இடைவெளிகள்.
எனவே ஒரு மணி இடைவெளி 7/6 வினாடி.
10 மணி அடிக்க 9 மணி இடைவெளிகள்.
எனவே இதற்கு 9*7/6 = 10.5 வினாடிகள்.

மாதமோ சித்திரை
நேரமோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை
மறக்காமல் உதயசூரியனுக்குக் குத்திடுவீர் முத்திரை!
- அண்ணா (பரம்ஸ் அண்ணா இல்லை )

சபாஷ் ப்ரதீப்......;)

mania
01-06-2005, 11:11 AM
சுவேதா ஒரு நாள் மன்மதன் வேலை செய்துவந்த போஸ்ட் ஆஃபீஸுக்கு போனாள். வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க எண்ணி 75 பைசாவை அவனிடம் கொடுத்தாள். " :rolleyes: எனக்கு கொஞ்சம் 2 பைசா ஸ்டாம்ப்களும்...அதை போன்று 6 மடங்கு 1 பைசா ஸ்டாம்ப்களும் மீதியுள்ள காசுக்கு ஐந்து பைசா ஸ்டாம்ப்களும் கொடு " என்றாள். :confused:
நம்ம ஆள் கொஞ்சம் மனக்கணக்கு போட்டு அவள் கேட்டபடியே கொடுத்துவிட்டான்....:D மன்மதன் எவ்வளவு ஸ்டாம்ப்கள் ஒவ்வொரு வகையிலும் கொடுத்தான்.....???:rolleyes:

pradeepkt
01-06-2005, 11:17 AM
2 பைசா ஸ்டாம்ப்புகள் - 5
1 பைசா ஸ்டாம்ப்புகள் - 30
5 பைசா ஸ்டாம்ப்புகள் - 7

மன்மதன் கணக்கு சரியா தலை?

mania
01-06-2005, 11:24 AM
2 பைசா ஸ்டாம்ப்புகள் - 5
1 பைசா ஸ்டாம்ப்புகள் - 30
5 பைசா ஸ்டாம்ப்புகள் - 7

மன்மதன் கணக்கு சரியா தலை?

:D இரு இரு சுவேதாவே சொல்லட்டும்.....
"இன்று போய் நாளை வாராய் "......:D :D
( கேள்விகள் கேட்டே களைத்துப்போன);)

பரஞ்சோதி
01-06-2005, 11:45 AM
இன்றைய தினம் பிரதீப்பின் தினமாகி விட்டது.

மன்மதன்
01-06-2005, 12:05 PM
2 பைசா ஸ்டாம்ப்புகள் - 5
1 பைசா ஸ்டாம்ப்புகள் - 30
5 பைசா ஸ்டாம்ப்புகள் - 7

மன்மதன் கணக்கு சரியா தலை?

மன்மதன் கணக்கு பண்ணி பார்த்திருக்கிறீர்களா. ;) ;) ;)
அடக்கத்துடன்
மன்மதன்

pradeepkt
01-06-2005, 12:06 PM
மன்மதன் கணக்கு பண்ணி பார்த்திருக்கிறீர்களா. ;) ;) ;)
அடக்கத்துடன்
மன்மதன்
ஏனய்யா... இன்னும் மோசமா இருக்குமா?
துபாயில இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமின்னு சொன்னாகளே :)

சுவேதா
01-06-2005, 08:06 PM
:D இரு இரு சுவேதாவே சொல்லட்டும்.....
"இன்று போய் நாளை வாராய் "......:D :D
( கேள்விகள் கேட்டே களைத்துப்போன);)

இல்லை இல்லை நான் சிறு பிள்ளை என்று வேறு முத்திரைகளும் குறைவான முத்திரைகளளயும் தந்து ஏமாற்றிவிட்டார் தாத்தா.:mad::)

Mathu
01-06-2005, 09:07 PM
நான் பழைய ஆள் என்பதால் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

என் மெமரி பவர் பற்றி அறிய ஒரு சின்ன பாயிண்ட் - இந்த புதிருக்கு சரியான விடை சொன்னவர் நம்ம மது.

பறவாயில்லையே...!;) பரம்ஸ் இவளவு பவரா.....!:D

பரஞ்சோதி
01-06-2005, 09:11 PM
வாங்க மதன்,

மன்றத்தில் புதியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீங்க மீண்டும் கணக்கு பண்ணுவோமா ஆரம்பிங்க, பிரதீப் தம்பிக்கு வேலை அதிகம் இல்லையாம்.

Mathu
01-06-2005, 09:16 PM
வாங்க மதன்,

மன்றத்தில் புதியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீங்க மீண்டும் கணக்கு பண்ணுவோமா ஆரம்பிங்க, பிரதீப் தம்பிக்கு வேலை அதிகம் இல்லையாம்.

ஆரம்பிக்கலாம் ஆனா நமக்கு கொஞ்சம் வேலை அதிகம் ஆகிவிட்டதே......
இருந்தாலும் விரைவில் ஆரம்பிக்கிறேன்.

mania
02-06-2005, 04:06 AM
இன்றைய தினம் பிரதீப்பின் தினமாகி விட்டது.

;) எனக்கென்னமோ இனி ப்ரதி தினமாகி விடும் என தோன்றுகிறது....:D

பரஞ்சோதி
02-06-2005, 04:13 AM
மைதிலி வந்தால் தினமும் மைதினமாகி விடும்.

mania
02-06-2005, 04:17 AM
மைதிலி வந்தால் தினமும் மைதினமாகி விடும்.

:confused: ஷீ இஸ் மை கிலி.........:rolleyes: :D

pradeepkt
02-06-2005, 04:45 AM
சரி சகோதரி வரும் வரைக்கும் நான் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறேன்.
தலை, அடுத்த கேள்வியக் கேளுங்களேன்.

mania
02-06-2005, 05:22 AM
சரி சகோதரி வரும் வரைக்கும் நான் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறேன்.
தலை, அடுத்த கேள்வியக் கேளுங்களேன்.

;) இன்று நான் உன்னை ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்....
அன்புடன்
மணியா.... ( எப்பிடி என்று சொல் பார்க்கலாம்....???? ):rolleyes:

pradeepkt
02-06-2005, 05:24 AM
;) இன்று நான் உன்னை ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்....
அன்புடன்
மணியா.... ( எப்பிடி என்று சொல் பார்க்கலாம்....???? ):rolleyes:

கங்கணத்தைக் கஷ்டப்பட்டுக் கையால எடுத்து இன்னொரு கையில கட்டியிருக்கீங்க. அவ்வளவுதானே?:rolleyes:
கேள்வியே கேக்காம இருக்கப் போறீங்க.... இதுதான் மேட்டரு.

தலை, நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லுவேன். அது சரியா தப்பாங்கறது வேற விஷயம் :)

பரஞ்சோதி
02-06-2005, 05:30 AM
தலை, நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லுவேன். அது சரியா தப்பாங்கறது வேற விஷயம் :)

தம்பி, புல்லரிக்குது, என்னமா பேசுற.

gragavan
02-06-2005, 05:49 AM
தம்பி, புல்லரிக்குது, என்னமா பேசுற.கம்பளியப் போத்திக்க தம்பி...இல்லைன்னா ஆடு மேஞ்சிரப் போகுது...

பரஞ்சோதி
02-06-2005, 05:56 AM
கம்பளியப் போத்திக்க தம்பி...இல்லைன்னா ஆடு மேஞ்சிரப் போகுது...

இங்கே ஆடு கிடையாது, ஒட்டகம் தான். :)

mania
02-06-2005, 06:00 AM
இங்கே ஆடு கிடையாது, ஒட்டகம் தான். :)

:rolleyes: சரி......கம் ஒட்ட போகுது.....:D
அன்புடன்
மணியா...:rolleyes:

gragavan
02-06-2005, 06:13 AM
:rolleyes: சரி......கம் ஒட்ட போகுது.....:D
அன்புடன்
மணியா...:rolleyes: அடாடா! என்ன அறிவு! என்ன அறிவு! எல்லாருக்கும் தலையிருந்தாலும் நம்ம தல போல வருமா?

mania
02-06-2005, 09:04 AM
இரு ஜோடிகள்....(.மன்மதன், பரம்ஸ் ஒரு அணி. மகளிர் அணி மறு அணி ) ஒரு நாள் ப்ரிட்ஜ் ஆடிக்கொண்டிருந்தார்கள். (உங்களுக்கு அந்த ஆட்டம் பற்றி ஒன்று தெரிய வேண்டாம்.;) .இந்த கணக்குக்கு. 4 பேர்கள் ஆடும் ஆட்டம் அது. ஒவ்வொரு கைக்கும் 13 கார்ட்கள் உண்டு ...அவ்வளவே ) ஒரு ஆட்டத்தில் மன்மதன், பரம்ஸ் இரு கைகளும் சேர்ந்து மொத்தம் 9 டைமண்ட்கள் இருந்தன.இப்போது நீங்கள் பண் ணவேண்டியது.....மகளிர் அணியிடம் மற்ற மூன்று ஜாதிகளில் ( க்ளாவர் , ஸ்பேட் , ஆட்டின் ) ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 8 கார்டாவது இருக்குமா....எப்பிடி என்று விளக்க வேண்டும்....செய்வீர்களா.....:rolleyes:
அன்புடன்
மணியா...;)

pradeepkt
02-06-2005, 09:17 AM
கார்டுகள்
டைமண்டு - 13
ஹார்ட் - 13
க்ளாவர் - 13
ஸ்பேட் - 13
மன்மதன் மற்றும் அண்ணாவிடம் 9 டைமண்டுகள் உள்ளன. அது தவிர அவர்களிடம் 17 கார்டுகள் உள்ளன.

எனவே, மிச்சம் உள்ளவை
டைமண்டு - 4
ஹார்ட் - 13
க்ளாவர் - 13
ஸ்பேட் - 13

பெண்களணியில் எந்த கார்டிலும் 8 கூட இருக்கக் கூடாதென்றால் இதில் ஆண்களணியிடம் இருக்க வேண்டியவை மற்றவை அனைத்திலிருந்தும் தலா 6 கார்டுகள். அதாவது மொத்தம் 18 கார்டுகள். ஆனால் அவர்களிடம் இருந்ததோ 17 கார்டுகள்தான். எனவே ஏதேனும் ஒரு வகையிலாவது ஒரு கார்டையாவது அவர்கள் விட்டு வைத்திருக்க வேண்டும்.
எனவே எதிரணியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கார்டிலாவது 8 இருக்கும்.

சரியா தலை?

Mathu
02-06-2005, 09:30 AM
தலை அசத்துறீங்க....!

பரம்ஸ் மன்மதன் மொத்த கார்ட் = 26
இதில் டைமன் 9
மிகுதி கையிருப்பு 17

மற்றய இனங்களின் மொத்த எண்ணிக்கை 39
ஒரு இனத்தில் 13

இதில் 8 மகளீரணியிடம் போக கூடது என்றான் ஒவ்வொன்றிலும் 6 கார்ட் பரம்ஸ், மன்மதனிடம் இருக்க வேண்டும்
3 * 6 = 18

ஆனால் மன்மதன், பரம்ஸ் கையிருப்பு 17
எனவே நிச்சயம் ஒரு இனத்தில் 8 மகளீரணியிடம் சிக்கி இருக்கும்

:p :D

Mathu
02-06-2005, 09:32 AM
ஆ நான் பார்த்து வருவதுக்குள் பிரதீப் முந்திக்கொண்டாரா...!

mania
02-06-2005, 09:39 AM
ஆ நான் பார்த்து வருவதுக்குள் பிரதீப் முந்திக்கொண்டாரா...!

:D அவர் எப்போவும் சீட்டும் கையுமா தானே இருப்பார் போலிருக்கு....:rolleyes: .(அவர் சீட்டிலே கை வேலையா இருப்பார்ன்னு சொல்றேன்....)பாராட்டுக்கள் ப்ரதீப்....இன்னும் கொஞ்சம் சுருக்கமா சொல்லியிருக்கலாம்....;)
அன்புடன்
மணியா...:D

pradeepkt
02-06-2005, 09:51 AM
நன்றி நன்றி...
நான் இப்ப வர வர ஒரு போட்டி அடிமையா மாறிட்டு வரேன்.
எதையுமே சுருக்கமா சொல்ற புத்தி இல்லையே?

mania
02-06-2005, 10:03 AM
நன்றி நன்றி...
நான் இப்ப வர வர ஒரு போட்டி அடிமையா மாறிட்டு வரேன்.
எதையுமே சுருக்கமா சொல்ற புத்தி இல்லையே?

எதிர் அணியிடம் மொத்தம் 26- 4 = 22 கார்ட்கள் இருக்கும் (மீதி 3 ஜாதியில் ) 22/7 என்று வைத்தாலும் மீதி ஒரு கார்ட் 8 ஆவது கார்ட் ஆகிவிடும் இல்லையா....
அன்புடன்
மணியா...;)

pradeepkt
02-06-2005, 10:22 AM
ஓ... இதை இப்படியும் சொல்லலாமோ? சரி எல்லாருமே உங்களை மாதிரி சிந்திச்சா, அப்புறம் தலைக்கென்ன மரியாதை? :)
நல்லவேளை இப்பவும் மீசையில மண் ஒட்டலை.

mania
02-06-2005, 10:26 AM
ஒரு மிருக காட்சி சாலையில் ஒரு பெரிய (ஆனால் சுற்றிலும் அடைக்கப்பட்ட )மைதானத்தில் 16 ( பசியுடன்கூடிய )சிங்கங்கள் விடப்பட்டிருந்தன.நடுவே ஒரு ஆடும் விடப்பட்டிருந்தது. இப்போது நீங்கள் அந்த ஆட்டின் உயிருக்காக கவலைப்பட்டால் உங்களின் பயம் நியாயமானதே. எல்லா சூழ்நிலைகளும் சாதாரணமாக இருக்க ...ஏதாவது ஒரு சிங்கம் ஆட்டை தின்றுதான் விடும்.
இதிலே ஒரே ஒரு பிரட்சினைதான் ......சிக்கல் என்றும் சொல்லலாம்.
எந்த ஒரு சிங்கமும் ஆட்டை தின்றவுடன் கொஞ்சம் மயக்கமாகிவிடும். அப்போது அடுத்த சிங்கம் அந்த சிங்கத்தை கொன்று தின்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது. :rolleyes: ஆட்டின் நிலை இப்படி இருக்க ...சிங்கத்தின் நிலையை கொஞ்சம் பாருங்கள்...
1) தன் பசியை போக்க ஆட்டை தின்று விடுவது.
2 ) ஆனது ஆகட்டும் என்று பசியுடனே உயிரோடு இருப்பது....
3 )மோசமான நிலை....ஆட்டை தின்று விட்டு மயங்கி போய் அடுத்த சிங்கத்திற்கு இரையாவது.
நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்... இந்த சூழ் நிலையில் எல்லா சிங்கங்களுமே ரொம்ப லாஜிகலாகத்தான் யோசனை செய்தன...... (என்னைப் போல....):D

இந்த சூழ்நிலையில் அந்த ஆடு என்ன ஆகும் என்று யோசனை செய்து சொல்கிறீர்களா....:confused:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
02-06-2005, 10:35 AM
சிங்கங்கள் எல்லாம் லாஜிக்காக திங்க் பண்ணும்போது, எல்லா சிங்கங்களும் சேர்ந்து அந்த ஆட்டை சாப்பிட வேண்டியதுதான். பசியும் கொஞ்சம் அடங்கும் , மப்பும் ஏற்படாது..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
02-06-2005, 10:38 AM
ஆடு என்ன ஆகும்?
என் நிலைமையிலதான் ஆடு இப்ப இருக்கு.

Iniyan
02-06-2005, 10:42 AM
இதை தவிர்க்க வழி, ஆட்டை பிரியாணி ஆக்கி அனைத்து சிங்கங்களும் பகிர்ந்து வெங்காய பச்சடியுடன் உண்பது தான்

மன்மதன்
02-06-2005, 10:51 AM
இதை தவிர்க்க வழி, ஆட்டை பிரியாணி ஆக்கி அனைத்து சிங்கங்களும் பகிர்ந்து வெங்காய பச்சடியுடன் உண்பது தான்

ஹ்ஹ்ஹ்ஹ்ம்.. வீட்டிலே விருந்து போலிருக்கு.. ஜமாய்ங்க.. :D :D
அன்புடன்
வெங்காயபச்சடி ப்ரியன்.

mania
02-06-2005, 10:58 AM
ஹ்ஹ்ஹ்ஹ்ம்.. வீட்டிலே விருந்து போலிருக்கு.. ஜமாய்ங்க.. :D :D
அன்புடன்
வெங்காயபச்சடி ப்ரியன்.

:mad: எல்லோருமே ரொம்ப "ஜாலிகலா " தின்க் பண்னற மாதிரி இருக்கே.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
02-06-2005, 11:11 AM
லாஜிக் இல்லாமல் போனால் ஜாலிக் தானே தலை :D :D
ஜாலிக் பாட்ஷா
மன்மதன்

karikaalan
02-06-2005, 01:04 PM
பிரியாணிதான் சரியான விடை போலருக்கு; லாஜிக்கோ இல்ல ஜாலிக்கோ!

pradeepkt
03-06-2005, 09:36 AM
இப்ப நானே சிங்கமா மாறிச் சிங்காரச் சென்னைக்கு வரப்போறேன். :)
தலை, இதுக்குச் சரியான விடையச் சொல்லுங்களேன்.

mania
03-06-2005, 10:02 AM
இப்ப நானே சிங்கமா மாறிச் சிங்காரச் சென்னைக்கு வரப்போறேன். :)
தலை, இதுக்குச் சரியான விடையச் சொல்லுங்களேன்.

:D அப்பிடியாவது நீ சென்னை வருவாயா என்ற நப்பாசையால் ஆட்டையும் சிங்கத்தையும் திங்கள் வரை தள்ளிபோடுகிறேன்... கவலை படாதே.....ஆட்டுக்கு ஒன்றும் ஆகிவிடாது..... (லாஜிகலி )......:rolleyes:
அன்புடன்
மணியா...:D

pradeepkt
06-06-2005, 11:04 AM
தலை நான் சொல்லறேன்.
லாஜிகலி, இல்லாஜிகலி எப்படிப் பாத்தாலும் இன்னேரம் ஆடு பயத்திலயும் சிங்கங்கள் பசியிலயும் செத்துப் போயிருக்கும்.
இதுக்குப் பதிலச் சொல்லி எங்களையாச்சும் காப்பாத்துங்க! :)

mania
06-06-2005, 11:49 AM
தலை நான் சொல்லறேன்.
லாஜிகலி, இல்லாஜிகலி எப்படிப் பாத்தாலும் இன்னேரம் ஆடு பயத்திலயும் சிங்கங்கள் பசியிலயும் செத்துப் போயிருக்கும்.
இதுக்குப் பதிலச் சொல்லி எங்களையாச்சும் காப்பாத்துங்க! :)

;) "லாஜி கிலி " பார்ப்போமா..... ;) முதலில் ஒரே ஒரு சிங்கம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் கண்டிப்பாக ஆடு காலி தான்....சந்தேகமே இல்லை.. ஏனெனில் ஆட்டை தின்று விட்டு மயக்கமானால் கூட அடுத்த சிங்கம் எதுவும் இல்லையே...அதனால்தான்......;)
இப்போது இரண்டு சிங்கங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்....இப்போ கதையே வேறு . ஏனெனில் எந்த சிங்கமும் ஆட்டை தின்க முன் வராது.... ( சாப்பிட்டுவிட்டு அசந்து தூங்கும் போது அடுத்த சிங்கம் அதனை அடித்து தின்று விடுமே....அதனால் அடுத்த சிங்கத்து இரையாவதற்கு பதிலாக பசியுடனேயே இருந்து விடலாம் என்று.... ):rolleyes:
இப்போது மூன்று சிங்கங்கள் இருப்பதாக கொள்வோம்.... கதை கொஞ்சம் வித்தியாசப்படும்...... ஆடு கண்டிப்பாக காலி. எந்த சிங்கம் முதலில் ஆட்டை பிடிக்கிறதோ அது ஆட்டை சாப்பிட்டு விடும். பிறகு அது மயங்கி தூங்கினாலும் அடுத்த சிங்கம் அதை ஒன்றும் செய்யாது... ( ஏனென்றால் இரண்டாவது சிங்கம் முதல் சிங்கத்தை சாப்பிட்டால்.....மூன்றாவது சிங்கம் இரண்டாவது சிங்கத்தை சாப்பிட்டுவிடும்... (எல்லா சிங்கங்களும் என்னை மாதிரியே லாஜிக்காக தின்க் செய்தன என்பதை மறந்துவிடாதீர்கள்.....) சிங்கங்களின் உறுமல் சத்தம் இப்போது பலமாக கேட்கிறது....:D
இப்படியே லாஜிக்காக பார்த்துக்கொண்டு போனால்....எப்போது சிங்கங்களின் எண்ணிக்கை ஒற்றைபடையாக இருக்கிறதோ அப்போது ஆடு காலி... (ஆட் நம்பரில் இருந்தால் ஆடு காலி ). :D சிங்கங்களின் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருந்தால் ஆடு பிழைத்துக்கொள்ளும். இந்த கேஸில் எண்ணிக்கை 16 ஆக இருந்ததால் கட்டாயமாக ஆடு பிழைத்துக்கொள்ளும்.....சரியா நன்பர்களே.....
அன்புடன்
ஆட்டைக்காத்த
மணியா....:D :D

pradeepkt
06-06-2005, 11:56 AM
அன்புடன்
ஆட்டைக்காத்த
மணியா....:D :D

இந்த ஆட்டைக்கே பிரதீப்பு வரலை. சிங்கத்தைச் சிங்கம் தின்னாலும் மயக்கம் வருமின்னு இந்தச் சிங்கத்துக்கே தெரியலையே.

mania
06-06-2005, 12:11 PM
இந்த ஆட்டைக்கே பிரதீப்பு வரலை. சிங்கத்தைச் சிங்கம் தின்னாலும் மயக்கம் வருமின்னு இந்தச் சிங்கத்துக்கே தெரியலையே.

;) உன் பேரை ப்ரதீப்சிங்ன்னு கம்னு மாத்திக்கோ....அப்போ புரியும்......
அன்புடன்
மணியா சிங்....:D

( எப்படிடா மணியா....இப்படியெல்லாம்.......சிங்கம் மாதிரி....லாஜிக்கா.....!!! )

மன்மதன்
06-06-2005, 12:29 PM
;) உன் பேரை ப்ரதீப்சிங்ன்னு கம்னு மாத்திக்கோ....அப்போ புரியும்......
அன்புடன்
மணியா சிங்....:D

( எப்படிடா மணியா....இப்படியெல்லாம்.......சிங்கம் மாதிரி....லாஜிக்கா.....!!! )

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..:D :D :D :D :D :D :D :D
அன்புடன்
புல்லரித்து போன மன்மதன்

pradeepkt
06-06-2005, 01:12 PM
;) உன் பேரை ப்ரதீப்சிங்ன்னு கம்னு மாத்திக்கோ....அப்போ புரியும்......
அன்புடன்
மணியா சிங்....:D

( எப்படிடா மணியா....இப்படியெல்லாம்.......சிங்கம் மாதிரி....லாஜிக்கா.....!!! )
:) :) :)

mythili
07-06-2005, 04:37 AM
தலை...அடுத்த கேள்வியை கொடுங்க...:)

அன்புடன்,
மைத்து

mania
07-06-2005, 04:45 AM
தலை...அடுத்த கேள்வியை கொடுங்க...:)

அன்புடன்,
மைத்து

:D இங்கே பாருங்கைய்யா கூத்தை......:D
அன்புடன்
மணியா...:D

gragavan
07-06-2005, 05:02 AM
சரி. ஆனாது ஆய்ப்போச்சு......அடுத்த கேள்வி கொடுங்க....

தாய் தந்தையர் கொடுத்த வீடு!
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=105318#post105318

mania
07-06-2005, 05:21 AM
.............O.............O...............O...............O..............O................O

.............O.............O...............O...............O..............O................O

............O..............O...............O...............O..............O................O

,............O..............O...............O...............O..............O................O

.............O..............O...............O................O..............O...............O

.............O..............O................O...............O..............O..............O

மேலே மொத்தம் 6 வரிசையில் வரிசக்கு 6 வீதம் மொத்தம் 36 ஆப்பிள் பழங்கள் இருக்கின்றன. இப்போது நீங்கள் 6 பழங்களை எடுத்துவிடவேண்டும். மீதியுள்ள பழங்கள் எந்த வரிசையிலும் ஒற்றைபடையில் இருக்கக்கூடாது... (மேலிருந்து கீழும்...இடமிருந்து வலமும் )....எங்கே பார்க்கலாம்....??:rolleyes:
அன்புடன்
மணியா....;)

gragavan
07-06-2005, 05:25 AM
இன்னைக்கு வயித்து வலி. ஒன்னும் சரியாச் சாப்பிட முடியாது. அதுலயும் ஆறு பழம். நாளைக்கு வந்து சாப்புடுறேன். ஹி ஹி

pradeepkt
07-06-2005, 05:45 AM
....O....O....O....O....O....O
....O....X....O....O....O....X
....O....O....O....O....O....O
....O....O....O....X....O....X
....O....O....O....O....O....O
....O....X....O....X....O....O
தலை சரியான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க! X போட்ட எடத்துல இருந்து ஆப்பிளை எடுத்து நைஸாத் தின்னுட்டேன்.

mania
07-06-2005, 05:49 AM

என்னப்பா இது மைத்துக்குன்னு கணக்கு போட்டா நீங்க வந்து ஆப்பிளை தின்னுட்டு போனா எப்பிடி.....:D
அன்புடன்
மணியா:D

pradeepkt
07-06-2005, 05:50 AM
மீதி முப்பது ஆப்பிளை வச்சிட்டுப் போயிருக்கேன். என்னைப் போயித் திட்டுறீங்களே... இதான் நாஞ்செஞ்ச தப்பு :)

mythili
07-06-2005, 05:58 AM
0.....X......0......X......0......0
0.....0......0......0......0......0
0.....0......0......X......0......X
0.....0......0......0......0......0
0.....X......0......0......0......X
0.....0......0......0......0......0

நான் பதில் சொல்லற முன்னால ப்ரதீப் சொல்லிட்டாரு :(
அன்புடன்,
மைத்து

mania
07-06-2005, 05:59 AM
மீதி முப்பது ஆப்பிளை வச்சிட்டுப் போயிருக்கேன். என்னைப் போயித் திட்டுறீங்களே... இதான் நாஞ்செஞ்ச தப்பு :)

:mad: பாத்தியா மறுபடியும் அவசர குடுக்கையாட்டம்......??? நான் மைத்துவை மீதி எவ்வளவு பழம் இருக்குன்னு எண்ணி சொல்ல யிருந்தேன்....:rolleyes: .அதுக்குள்ள....:D
கோபத்துடன்
மணியா.....:mad:

mythili
07-06-2005, 06:00 AM
இந்த புதிருக்கு நிறைய விடைகள் உள்ளது :)

அன்புடன்,
மைத்து

mythili
07-06-2005, 06:02 AM
:mad: பாத்தியா மறுபடியும் அவசர குடுக்கையாட்டம்......??? நான் மைத்துவை மீதி எவ்வளவு பழம் இருக்குன்னு எண்ணி சொல்ல யிருந்தேன்....:rolleyes: .அதுக்குள்ள....:D
கோபத்துடன்
மணியா.....:mad:

நான் தப்பா சொல்லிவேனோன்னு எனக்கு உதவி செஞ்சு இருக்கார்..அவரைப் போய் திட்டறீங்களே !!!!
அன்புடன்,
மைத்து

pradeepkt
07-06-2005, 06:14 AM
ஆமாம் சகோதரி இந்தப் புதிருக்கு நிறைய விடைகள் உள்ளன.
அதில் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் இரண்டிலும் 3 வரிசைகளில் 6-ம் 3 வரிசைகளில் 4-ம் இருக்க வேண்டும். இதுதான் விதி. வரிசைகளை எப்படி வேண்டுமென்றாலும் இந்த விதி மாறாமல் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்.

மன்மதன்
07-06-2005, 06:34 AM
:D இங்கே பாருங்கைய்யா கூத்தை......:D
அன்புடன்
மணியா...:D

கூவத்தை.. ;) ;)
அஞிபுயன்
மங்மஙன்..

mania
07-06-2005, 06:40 AM
A.............B.............C............D

E..............F..............G...........H

I...............J..............K............L

தமிழ் மன்றம் காலனியில் மொத்தம் 12 வீடுகள் உள்ளன.;) ஒவ்வொன்றும் ஒரு கிலோமீட்டர் தள்ளி மொத்தம் 17 கிலோமீட்டர்கள் கொண்ட ரோடுகள் உள்ளன ( Ato B...1 Km , A to E 1 Km ) . மணியா தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருமுறை செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.:rolleyes: அப்பிடி செய்யும்போது அவர் சில இடங்களை மீண்டும் மீண்டும் கடக்கும் படி ஆகிறது. நீங்கள் கொஞ்சம் கணக்கு பண்ணி ...மணியா எந்த ரூட்டில் போனால் கம்மியாக நடந்தால் போதும் என்று சொல்கிறீர்களா.....:confused:
( ரூட்டும் நடக்கவேண்டிய தூரமும் சொல்லவேண்டும் )...
அன்புடன்
டாக்டர் மணியா....:D

மன்மதன்
07-06-2005, 06:45 AM
அதான் நுழைவுத்தேர்வை ரத்து பண்ணிட்டாங்களாமே.. அது மாதிரி கேட்டா எப்படி.. :D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
07-06-2005, 06:49 AM
அதானே... போதாக்குறைக்கு மேலிருந்து கீழ் சாலைகள் A-E, E-I இதெல்லாம் இருக்குதான்னு வேற தெரியலை. அனேகமா தாவிக்குதிச்சிதான் போவீங்களா தலை.

இதைக் கொஞ்சம் விளக்குங்க.

மன்மதன்
07-06-2005, 06:53 AM
தினம் ஒரு வீட்டிற்கு போவது (தாவிகுதிச்சிதான் (நன்றி : ப்ரதீப் ) ) உங்க வீட்டிற்கு தெரியுமா ?? :D :D
அன்புடன்
மன்மதன்

mania
07-06-2005, 07:03 AM
அதானே... போதாக்குறைக்கு மேலிருந்து கீழ் சாலைகள் A-E, E-I இதெல்லாம் இருக்குதான்னு வேற தெரியலை. அனேகமா தாவிக்குதிச்சிதான் போவீங்களா தலை.

இதைக் கொஞ்சம் விளக்குங்க.

A to B , B to C , C to D ,D to H , H to L , L to K , K to J , J to I , I to E , E to A , B to F , F to J , E to F , F to G , G to H , C to G , G to K........
எல்லாமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட ரோடுகள்.....போதுமா விளக்கம்.....
அன்புடன்
மணியா...;)

mania
07-06-2005, 07:05 AM
தினம் ஒரு வீட்டிற்கு போவது (தாவிகுதிச்சிதான் (நன்றி : ப்ரதீப் ) ) உங்க வீட்டிற்கு தெரியுமா ?? :D :D
அன்புடன்
மன்மதன்

:mad: :mad: :mad: நீ சொல்ற மாதிரி தாவி குதிக்க எல்லாம் பெரிய வீடுகள் இல்லை...எல்லாமே சின்ன வீடுதான்......:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

மன்மதன்
07-06-2005, 07:07 AM
:mad: :mad: :mad: நீ சொல்ற மாதிரி தாவி குதிக்க எல்லாம் பெரிய வீடுகள் இல்லை...எல்லாமே சின்ன வீடுதான்......:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

அப்ப சரி.. :rolleyes: :rolleyes:

அன்புடன்
மன்மதன்

(தலையின் வீட்டு ஃபேக்ஸ் நம்பர் யாரிடமாவது இருக்கா ?? :D)

mythili
07-06-2005, 07:17 AM
11 கிலோமீட்டர்: (சும்மா குல்மாஸ் பதில் தான்..;))

ரூட் : A..E..I..J..F.....B...C...G..K...L...H...D

அன்புடன்,
மைத்து

mania
07-06-2005, 07:22 AM
11 கிலோமீட்டர்: (சும்மா குல்மாஸ் பதில் தான்..;))

ரூட் : A..E..I..J..F.....B...C...G..K...L...H...D

அன்புடன்,
மைத்து

:D இதோ மன்மதனும் ப்ரதீப்பும் கேட்ட தாவிக்குதிக்கும் வம்சம்.....:D
அன்புடன்
மணியா....:D

pradeepkt
07-06-2005, 07:24 AM
அப்ப இதான் விடையா?
அடடா.. இதில ஏதோ கொக்கி இருக்குமின்னு நெனச்சி விட்டுட்டனே....

mythili
07-06-2005, 07:26 AM
:D இதோ மன்மதனும் ப்ரதீப்பும் கேட்ட தாவிக்குதிக்கும் வம்சம்.....:D
அன்புடன்
மணியா....:D

அது நீங்க போற ரூட்டாக்கும் :)
அன்புடன்,
மைத்து

mania
07-06-2005, 08:49 AM
அப்ப இதான் விடையா?
அடடா.. இதில ஏதோ கொக்கி இருக்குமின்னு நெனச்சி விட்டுட்டனே....

:D மைதிலி எப்போது சரியான விடை கொடுத்திருக்கிறாள்....????
அன்புடன்
மணியா....:D

mythili
07-06-2005, 08:56 AM
:D மைதிலி எப்போது சரியான விடை கொடுத்திருக்கிறாள்....????
அன்புடன்
மணியா....:D

:(( :(
எல்லாரும் சரியான விடையை கொடுத்தால் போர் அடிக்கும்..அதான்....ஒரு தமாசுக்கு ;-)
அன்புடன்,
மைத்து

mania
07-06-2005, 09:08 AM
;) கணக்கிலே இன்னொரு முக்கியமான தகவலை கொடுக்க விட்டு விட்டேன்....மைதிலிக்கு சாரி சொல்லிக்கிறேன்....ஹி...ஹி...ஹி...
மணியா ஒவ்வொரு வீட்டுக்கு போவது மட்டுமில்ல அவர் வேலை. அந்த 17 கிலோமீட்டர் ரோடும் சரியா இருக்கிறதா என்று பார்க்க அவர் எல்லா ரோடுகளிலும் சென்றாக வேண்டும்....;)
அன்புடன்
மணியா....

mythili
07-06-2005, 09:13 AM

:( :( :(

டிரைப் பண்னறேன் :)
அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
08-06-2005, 04:37 AM

தலை, நீங்க இந்த பாயிண்டை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சகோதரி விடை சொல்லுவார், ஆனால் சரியான விடையா என்பது ???? ஹா ஹா.

mania
08-06-2005, 07:27 AM
டிரைப் பண்னறேன் :)
அன்புடன்,
மைத்து

:rolleyes: :confused: அதான் என்னமோ பண்ணறேன்னு சொல்லியிருக்காளே.....:D
அன்புடன்
மணியா...:p

mania
08-06-2005, 08:54 AM
:rolleyes: என்ன ஆச்சு......??? சாதாரணமா கோடு போட்டாலே ரோடு போடுவீங்களே......இப்போ ரோடே போட்டிருக்கேன் ...அதிலே கோடு போடமுடியலையா.....!!!:D
அன்புடன்
மணியா..:p

pradeepkt
08-06-2005, 09:27 AM
எப்படிப் பார்த்தாலும் நீங்க 17 கிலோமீட்டர் போகணும்.
இப்பக் கேள்வி என்ன ரூட்டு அப்படிங்கறதுதானே?
கொஞ்ச நாளைக்கு முன்னால இதே மாதிரி செஸ் போர்டு வச்சி ஒரு கேள்வி இருந்ததே

mania
08-06-2005, 09:34 AM
எப்படிப் பார்த்தாலும் நீங்க 17 கிலோமீட்டர் போகணும்.
இப்பக் கேள்வி என்ன ரூட்டு அப்படிங்கறதுதானே?
கொஞ்ச நாளைக்கு முன்னால இதே மாதிரி செஸ் போர்டு வச்சி ஒரு கேள்வி இருந்ததே

;) எல்லா ரோடுகளையும் கவர் செய்யனும் என்றால் 17 கிலோமீட்டருக்கும் மேலேயே போகவேண்டும்...அதனால்தான் குறைந்தது எவ்வளவு தூரத்தில் கவர் செய்யலாம் என்று கேட்டிருக்கிறேன்....;) ( ரூட்டும்தான் )
அன்புடன்
மணியா...:p

mythili
13-06-2005, 04:54 AM
எனக்கு தெரியலை :(

அன்புடன்,
மைத்து

pradeepkt
13-06-2005, 05:30 AM
நானும் இப்ப கையத் தூக்கிட்டேன்.
தலை, விடையச் சொல்லிட்டு அப்படியே அடுத்த கேள்விய எங்கள மாதிரி பாமரரும் சொல்லுற மாதிரி போடுங்களேன்.

mania
13-06-2005, 05:52 AM
A.............B.............C............D

E..............F..............G...........H

I...............J..............K............L

தமிழ் மன்றம் காலனியில் மொத்தம் 12 வீடுகள் உள்ளன.;) ஒவ்வொன்றும் ஒரு கிலோமீட்டர் தள்ளி மொத்தம் 17 கிலோமீட்டர்கள் கொண்ட ரோடுகள் உள்ளன ( Ato B...1 Km , A to E 1 Km ) . மணியா தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருமுறை செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.:rolleyes: அப்பிடி செய்யும்போது அவர் சில இடங்களை மீண்டும் மீண்டும் கடக்கும் படி ஆகிறது. நீங்கள் கொஞ்சம் கணக்கு பண்ணி ...மணியா எந்த ரூட்டில் போனால் கம்மியாக நடந்தால் போதும் என்று சொல்கிறீர்களா.....:confused:
( ரூட்டும் நடக்கவேண்டிய தூரமும் சொல்லவேண்டும் )...
அன்புடன்
டாக்டர் மணியா....:Dமணியா போக வேண்டிய ரூட்......E...I...J...K...J...F...B...C...B...A....E....F....G....H....D....C....G....K....L....H....
அவர் இருமுறை போகவேண்டிய ரோடுகள்.....JK......BC.....அவர் தினமும் போகவேண்டிய தூரம் 19 கிலோமீட்டர்கள்...
அன்புடன்
மணியா...

pradeepkt
13-06-2005, 06:00 AM
நல்ல வேளை என் தலை தப்பிச்சுது.
அடுத்த கேள்வியப் போடுங்க தலை.
அதுக்கு முன்னாடி நாங்களும் பதில் சொல்லணுமுங்கறத ஞாபகப் படுத்திக்குங்க :)

mania
13-06-2005, 10:15 AM
மைதிலி வசிக்கும் ஃப்ளாட் பில்டிங்கில் ஒரு பக்கத்தில் முள்வேலி போடுவதாக முடிவெடுக்கப்பட்டு ...அந்த பொறுப்பும் அவளிடமே தரப்பட்டது. நீளத்தை கணக்கிட்டால் மொத்தம் 99 கஜங்கள் இருந்தன. 9 அடிக்கு ஒரு கம்பம் என்று தீர்மானிக்கப்பட்டது. இரு கம்பங்களுக்கு இடையே 3 குறுக்கு முள் கம்பிகள் ( 9 அடி நீளம் கொண்டவை ) போடுவதாகவும் திட்டம்.
மைதிலி கடைக்கு போய் 33 கம்பங்கள் , 99 முள் கம்பிகள் , 99 கஜங்கள் நீளம் கொண்ட முள்வேலி எல்லாம் வாங்கிவந்தாள்.
ஆனால் வழக்கம் போல அவளால் அந்த வேலையை சரியாக முடிக்க முடியவில்லை.எங்கே தப்பு என்று யோசித்து, யோசித்து பார்த்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை..... நீங்கள் கொஞ்சம் அவளுக்காக எங்கே தவறு நடந்திருக்கிறது என்று சொல்கிறீர்களா....
அன்புடன்
மணியா....

mythili
13-06-2005, 10:38 AM
எங்கப் போனாலும் என் தலையை தான் உருட்டறாங்கப்பா :(

அன்புடன்,
மைத்து

அறிஞர்
13-06-2005, 10:43 AM
கஜம் என்றால் என்னன்னு மைதிலிக்கு புரியலையாம்....

mania
13-06-2005, 10:53 AM
முன்னமே மைத்துவுக்கு இது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறேன்.. இப்போ உங்களுக்கு புரியவில்லை என்றால் சொல்லுங்கள்......
அன்புடன்
வாத்தி மணியா...

karikaalan
13-06-2005, 01:01 PM
கம்பங்கள் 34. அதற்கேற்றாற்போல் மற்றவைகளையும் சரி செய்யவும்.

mania
14-06-2005, 04:20 AM
;) ஏன் ஜீ இப்படி மைதிலியை டீல்ல விடறீங்க..... எது எது எவ்வளவு வேணும்னு ஒரே தபா சொல்லிடுங்களேன்....;)
அன்புடன்
மணியா...:D

mania
16-06-2005, 07:08 AM
என்ன மைதிலி இன்னுமா வாய்பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறாய்.....? எப்போ கணக்கு போட்டு....எப்போ சாமான்கள் வாங்கி...எப்போ வேலையை முடிக்க போகிறாய்.....???
அன்புடன்
மணியா...

mania
19-06-2005, 04:07 AM
இன்னும் யாரும் கணக்கை சரியாக சொல்ல வரவில்லையே.....ஈசியான கணக்குதானே இது....???
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
19-06-2005, 05:06 AM
இன்னும் யாரும் கணக்கை சரியாக சொல்ல வரவில்லையே.....ஈசியான கணக்குதானே இது....???
அன்புடன்
மணியா

தலை, அதனால் தான் நான் வரலை.

pradeepkt
20-07-2005, 05:52 PM
அட இன்னும் இந்தக் கணக்குக்கு யாருக்கும் விடை தெரியலையா?
தலை அப்ப நீங்களே சொல்லிருங்க.
அடுத்து நாங்களெல்லாம் பயப்படாத மாதிரி ஒரு கணக்கு கொடுங்க பாப்பம்.

mania
21-07-2005, 04:09 AM
அட இன்னும் இந்தக் கணக்குக்கு யாருக்கும் விடை தெரியலையா?
தலை அப்ப நீங்களே சொல்லிருங்க.
அடுத்து நாங்களெல்லாம் பயப்படாத மாதிரி ஒரு கணக்கு கொடுங்க பாப்பம்.

:eek: இந்த பக்கம் எட்டிப்பார்க்கும் அன்பர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து விட்டது....ஒருவரும் சரி வர ஆர்வம் காட்டுவதில்லை.....அதனால் தான் நானும் கொஞ்சம் சுருங்கிக்கொண்டேன்.....பாருங்களேன் இன்னும் ஒரு சாதாரண கணக்கிற்கே விடை வரவில்லை....:eek:
அன்புடன்
மணியா...

aren
21-07-2005, 05:25 AM
கம்பங்கள் 34
முள் கம்பிகள் 102
முள்வேலி எதற்கு வாங்கினார் என்று தெரியவில்லை

mania
21-07-2005, 07:04 AM
இன்னும் கொஞ்சம் கவனம் ஆரென்.....??
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
21-07-2005, 08:06 AM
இன்னும் கொஞ்சம் கவனம் ஆரென்.....??
அன்புடன்
மணியா....

இனிமேல் ஆரென் அண்ணா, இந்த பக்கம் தலை வச்சு படுக்க மாட்டாங்க. :) ;) :D

mania
22-07-2005, 05:26 AM
மைதிலி வசிக்கும் ஃப்ளாட் பில்டிங்கில் ஒரு பக்கத்தில் முள்வேலி போடுவதாக முடிவெடுக்கப்பட்டு ...அந்த பொறுப்பும் அவளிடமே தரப்பட்டது. நீளத்தை கணக்கிட்டால் மொத்தம் 99 கஜங்கள் இருந்தன. 9 அடிக்கு ஒரு கம்பம் என்று தீர்மானிக்கப்பட்டது. இரு கம்பங்களுக்கு இடையே 3 குறுக்கு முள் கம்பிகள் ( 9 அடி நீளம் கொண்டவை ) போடுவதாகவும் திட்டம்.
மைதிலி கடைக்கு போய் 33 கம்பங்கள் , 99 முள் கம்பிகள் , 99 கஜங்கள் நீளம் கொண்ட முள்வேலி எல்லாம் வாங்கிவந்தாள்.
ஆனால் வழக்கம் போல அவளால் அந்த வேலையை சரியாக முடிக்க முடியவில்லை.எங்கே தப்பு என்று யோசித்து, யோசித்து பார்த்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை..... நீங்கள் கொஞ்சம் அவளுக்காக எங்கே தவறு நடந்திருக்கிறது என்று சொல்கிறீர்களா....
அன்புடன்
மணியா....

:) மொத்த நீளம் 99 கஜங்கள் என்பதால் மூன்று கஜத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 33+1= 34 கம்பங்கள் வேண்டும். மற்ற படி மூன்று அடிக்கு ஒன்று வீதம் 99 முள் கம்பிகள் (ஒவ்வொன்றும் 9 அடி நீளம் கொண்டவை ) போதும்.....அதேபோல் 99 கஜங்கள் நீளம் கொண்ட முள் வேலியே போதும்....
சரியா நண்பர்களே....
அன்புடன்
மணியா...:)

pradeepkt
22-07-2005, 05:28 AM
மிகச்சரி...
தலை அடுத்து நானே பதில் சொல்லுற மாதிரி ஒரு சூப்பர் கேள்வி கேளுங்க பாப்பம்.

gragavan
22-07-2005, 05:56 AM
சூப்பரு கேள்வியா?

அப்ப நானெல்லாம் வெட சொல்ல முடியாதுல்ல. ரொம்ப லேசாக் கேளுங்கய்யா! கேளுங்க!

மன்மதன்
09-08-2005, 06:42 AM
தலை, புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு.. எங்கே தலை??
அன்புடன்
மன்மதன்

mania
09-08-2005, 06:49 AM
தலை, புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு.. எங்கே தலை??
அன்புடன்
மன்மதன்

:D கணக்கு போடும் வரை என்னாச்சு என்னாச்சுன்னு விரட்டறாங்க...:D .கணக்கு போட்டா யாரும் இந்த பக்கமே எட்டிக்கூட பாக்கறதில்லே....:rolleyes: .நான் என்ன செய்வது,.....????
அன்புடன்
மணியா...:D

(ஏற்கனவே போட்ட கணக்குக்கு அறிஞரிடமிருந்து 10 ரூபாய், பிரியனிடமிருந்து 10 ரூபாய்கள் பாக்கி இன்னும்.....!!???)

மன்மதன்
09-08-2005, 06:59 AM
எந்த கணக்கை சொல்றீங்க.. சனிக்கிழமை மீட்டிங்ல போட்ட கணக்கையா.. 500 ரூபாய்ல பாக்கி வருது.. :D :D
அன்புடன்
மன்மதன்