PDA

View Full Version : ??????????



நிலா
16-04-2003, 10:19 PM
தொலைந்துவிடக்கூடியதை பத்திரப்படுத்துதல்
மானிடப்பண்பு!
நீ தொலைந்த பிறகும் உன் நினைவுகளை
பத்திரப்படுத்தினால்??????????????

இளசு
16-04-2003, 10:29 PM
பத்துக் கேள்விக்குறி போட்டும்
பத்தவில்லயே கவிஞருக்கு....
காதல் படுத்தும் பாடு இது....
விடை தெரியா விளையாட்டிது!!!

unwiseman
17-04-2003, 03:12 AM
??????
புரியலியேங்க இந்த ஞான சூனியத்துக்கு.

இளசு தொலைந்து போவது காதல் நிமித்தம் என்கிறார். நான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.

உரை நடையில் தெளிவுரை ஒன்று தேவை அம்மணி.

poo
17-04-2003, 01:18 PM
எல்லா மாதிரியும் சிந்திப்பதால்தான் நீர் அஞ்ஞானி!!?

maduraiveera
23-11-2003, 07:16 AM
??????
நான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.


அப்பாடியோவ். என்ன ஒரு வரிகள் !
நச்சென்று சொன்னாலும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் தாட்சாயிணி
23-11-2003, 02:35 PM
நிலையில்லா அற்பபொருள்களை
நினைத்து உருகுவது
மனித பண்பு
அவள் நினைவுகளை
சுமப்பது தெய்வப்பண்பு

இளசு
23-11-2003, 09:09 PM
அஞ்ஞானி என்னும் கருத்துச் சுரங்கப்பாதை வழியாக
பல சுவையான பழைய பதிவுகளைத் தோண்டி வெளிச்சத்துக்குக்
கொண்டுவந்த அன்பு நண்பர் மதுரைவீராவுக்கு சிறப்பு பாராட்டுகள்.

maduraiveera
23-11-2003, 10:06 PM
தலைமையின் பாராட்டுக்கு நன்றி.

இளசு
23-11-2003, 10:13 PM
நண்பர் மதுரைவீரா மற்றும் மன்ற நண்பர்கள்
எப்போதும் போல் "இளசு" என்றே என்னை
அழைக்க ஆசைப்படுகிறேன்.

Nanban
24-11-2003, 04:16 AM
பத்திரப்படுத்துதல் என்பது உரிமை கொண்டாடுவது ஆகும். உறவில் உரிமை கொண்ட்டாடுவதே அத்தனை இன்னல்களுக்கும் காரணம். All ills start with the desire to own. பத்திரப்படுத்துதலை விட்டு விடுங்கள்.........

நிம்மதி வரும்.........

சேரன்கயல்
24-11-2003, 04:23 AM
பத்திரப்படுத்துவதாக நாமே நினைத்துக்கொள்கிறோம்...சில நினைவுகள்...சிலரது நினைவுகள் வலிந்து திணிக்காமலே எழுவது பத்திரப்படுத்துவதால் அல்ல...அவை பட்டுணர்த்திய வலிகளால், இதமான உணர்வுகளால்...எங்கோ எப்போது எதற்கோ உயிர்பெறும் அந்த நினைவுகள் தெய்வீகம் என்ற சாயம் எல்லாம் பூசத்தேவையில்லை...மனித உணர்வுகளின் விந்தையான போக்கு...

(நண்பன் எதை சொன்னாலும் அதை நச்சென அழகாய் சொல்கிறார்)

விகடன்
09-06-2008, 05:47 PM
நிலாவின் பாட்டும், இளசண்ணாவின் பதில்ப்பாட்டும் அசத்தல்..

கவிதைக்கு கேள்விக்குறியாலேயே ஒரு தலைப்பு..
இந்த சிந்தனை எல்லோரிற்கும் உருவாகுமா என்ன?

Narathar
09-06-2008, 06:52 PM
காதல் கேள்விக்குறியானதில்
கவிதையும் கேள்விக்குறியானதோ...
கலக்கலான கவிதைக்கு
கவித்துவமாக பின்னூட்டமிட்டுள்ள இளசுவை இத்திரியில் மீண்டும் கண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

தங்கத்தை தோண்டியெடுத்த விராடனுக்கும் ஒரு நன்றி

அறிஞர்
10-06-2008, 02:13 AM
கேள்விக்குறியில் தான் எத்தனை அர்த்தங்கள்....
காதலில் வீழ்ந்தோர் பலரின் நிலை இதுவோ...

தாமரை
10-06-2008, 02:18 AM
உன்னில் என்னைத் தொலைத்தேன்
நீயும் தொலைந்தாய்
எங்கிருந்துதான் வருகின்றன
இந்த நினைவுகள்
???????

ஓவியன்
10-06-2008, 06:44 AM
உன்னில் என்னைத் தொலைத்தேன்
நீயும் தொலைந்தாய்
எங்கிருந்துதான் வருகின்றன
இந்த நினைவுகள்
???????

உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
இடம் மாற்றித்
தொலைத்ததால் தானே
உன் நினைவுகள்
என்னிடமும்,
என் நினைவுகள்
உன்னிடமும்...!!

தாமரை
10-06-2008, 06:56 AM
புரிந்து கொண்டேன்
காதலுக்கு முன்
நீயும் நானும்
சுயநலவாதிகள்..!!!
காதலுக்குப் பின்னும்தான்!!!:lachen001::lachen001::lachen001:

ஓவியன்
10-06-2008, 07:08 AM
இங்கு சுயநலத்திடம் காதல் தோற்றுப் போகிறது...

ஓ, அப்படியானால் அது உண்மைக் காதல் இல்லையோ...!! :rolleyes:

தாமரை
10-06-2008, 07:09 AM
இங்கு சுயநலத்திடம் காதல் தோற்றுப் போகிறது...

ஓ, அப்படியானால் அது உண்மைக் காதல் இல்லையோ...!! :rolleyes:

உங்களுக்கு 0 மார்க்..

காதலே சுயநலம்தானே!!!:eek::eek::eek:

ஓவியன்
10-06-2008, 07:15 AM
உங்களுக்கு 0 மார்க்..
ஹீ, ஹீ ..!!

அடிக்கடி பள்ளியில் வாங்கி அதுவே வாடிக்கையாகிப் போச்சு...!! :D:D:D

காதலே சுயநலம்தானே!!!:eek::eek::eek:இல்லை தனக்காக வாழ்ந்தவன் நமக்காக வாழ முற்படுவது
எப்படி சுய நலமாகும்...??

வேண்டுமானால் பொது நலத்தின் முதல் படியென எடுத்துக் கொளலாம்..!!

தாமரை
10-06-2008, 07:22 AM
ஹீ, ஹீ ..!!

அடிக்கடி பள்ளியில் வாங்கி அதுவே வாடிக்கையாகிப் போச்சு...!! :D:D:D
இல்லை தனக்காக வாழ்ந்தவன் நமக்காக வாழ முற்படுவது
எப்படி சுய நலமாகும்...??

வேண்டுமானால் பொது நலத்தின் முதல் படியென எடுத்துக் கொளலாம்..!!

அன்று என் மனம் என்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

உன்னைக் கண்டேன்,,
என்னைத் தந்தேன்
உன்னைப் பெற்றேன்..

என் மனம் உன்னிடம்
உன் மனம் என்னிடம்

என்னுள் இருக்கும் உன் மனம் இன்னும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறது

உன்னுள் இருக்கும் என் மனம் இன்னும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறது..

என்னுள் உள்ள உன் மனதிற்கு உன்னையும்
உன்னுள் உள்ள என் மனதிற்கு என்னையும்
தவிர மற்றவையெல்லாம் அற்பம்..
எனன்க்கு என்னையும் உனக்கு உன்னையும் சேர்த்து

ஆக மொத்தத்தில்
காதல் ஒரு சுயநலம்தான்..:icon_rollout::icon_rollout::icon_rollout


நமக்காக வாழ்கிறோமா? இல்லை நாம் மக்காக வாழ்கிறோமா ஓவியா?

ஓவியன்
10-06-2008, 07:33 AM
ஓ அப்படி வாறீங்களா..!! :eek:

அது மட்டும் தான் காதல்னா, காதல் நிச்சயமாக சுய நலம்தான்...

ஆனால் என்னைப் பொறுத்த அவரை என்று ஒருவன் இன்னொரு உயிரை காதலிக்க முற்படுகிறானோ அவன் உலகத்தில் எல்லா உயிரையும் அன்போடு நோக்கத் தொடங்குகிறான் என்பேன்...

இது முதலில் தன் நாய்குட்டி, சகோதரர்கள் நண்பர்கள் என்ற வட்டத்திலிருந்து ஆரம்பிக்கும்...!!

ஒரு உயிரைக் காதலிக்கத் தெரிந்தவனால் தான் இன்னும் ஒரு உயிரின் கஸ்ரங்கள் புரியும், காதல் அதனைக் கற்பிக்கின்றது...

அப்படிப் பார்த்தால் காதல் தான் பொது நலத்தின் முதல் படி..!! :icon_p:

தாமரை
10-06-2008, 07:39 AM
ஓ அப்படி வாறீங்களா..!! :eek:

அது மட்டும் தான் காதல்னா, காதல் நிச்சயமாக சுய நலம்தான்...

ஆனால் என்னைப் பொறுத்த அவரை என்று ஒருவன் இன்னொரு உயிரை காதலிக்க முற்படுகிறானோ அவன் உலகத்தில் எல்லா உயிரையும் அன்போடு நோக்கத் தொடங்குகிறான் என்பேன்...

இது முதலில் தன் நாய்குட்டி, சகோதரர்கள் நண்பர்கள் என்ற வட்டத்திலிருந்து ஆரம்பிக்கும்...!!

ஒரு உயிரைக் காதலிக்கத் தெரிந்தவனால் தான் இன்னும் ஒரு உயிரின் கஸ்ரங்கள் புரியும், காதல் அதனைக் கற்பிக்கின்றது...

அப்படிப் பார்த்தால் காதல் தான் பொது நலத்தின் முதல் படி..!! :icon_p:


அப்படி வாறீங்களா?

அப்போ ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கும் வாழ்க்கையைக் காதலிப்பதற்கும் உயிர்களைக் காதலிப்பதற்கும் நூல்கட்டி கனெக்ஷன் குடுக்கப்பாக்கறீங்க..

ஆனால் காதலில் இருக்கும் பொழுதும் சரி இழக்கும் போதும் சரி... சுற்றி உள்ளவர்களின் உணர்வுகளைக் காதலர்கள் மதிப்பதில்லையே ஓவியா!!!

பூவைப் பார்த்ததும் புன்னகை பூப்பது நீங்க சொல்ற காதல்
அதைச் சட்டுன்னு கழுத்தறுத்து காதலி கூந்தலில் தூக்கு போட்டு விடுவது நான் பார்க்கிற காதல்..

புரியுமென்று நினைக்கிறேன்..

என்ன நீங்க சொல்ற காதலர்கள் குறைவு
நான் சொல்றக் காதலர்கள் அதிகம்..

அதனாலதான் சொல்றேன்

காதலி நினைவில் மட்டுமே தொலைந்து போனவன் சுயநலக்காரன்
கண்ட இடத்திலெல்லாம் காதலியைக் காண்பவன் நீங்க சொல்றவர்..

ஆனால் அப்படி இருப்பவரைக் காதலன் என்று உலகம் ஒத்துக்க மாட்டேங்குதப்பா...
(என்னைப் பத்திதான் சொல்றேன்)
:traurig001::traurig001::traurig001:

ஓவியன்
10-06-2008, 08:39 AM
அதனாலதான் சொல்றேன்

காதலி நினைவில் மட்டுமே தொலைந்து போனவன் சுயநலக்காரன்
கண்ட இடத்திலெல்லாம் காதலியைக் காண்பவன் நீங்க சொல்றவர்..

ஆனால் அப்படி இருப்பவரைக் காதலன் என்று உலகம் ஒத்துக்க மாட்டேங்குதப்பா...
(என்னைப் பத்திதான் சொல்றேன்)
:traurig001::traurig001::traurig001:

ஐயையோ இது என்ன அபச்சாரம், நான் எங்கேயாவது அப்படிச் சொன்னேனா..??? :traurig001: :traurig001: :traurig001:

காதலியைக் காதலிக்கத் தெரிந்தவன் தான் சமூகத்தையும் காதலிப்பான் என்றேன், அதற்கு இப்படியா...!!!???

ஆனால், நீங்கள் கூறுவது உண்மைதான் செல்வண்ணா நான் குறிப்பிடும் காதலிலும் நீங்கள் குறிப்பிடும் காதல் இந்த புவியில் கொஞ்சம் அதிகம் தான்...!!

ஆனால், உண்மை எதுவாறாக இருப்பினும் நான் குறிப்பிடும் பொதுநலத்தை விதைக்கும் காதலே காலத்தால் ஜெயிக்கிறது, தொடரவிருக்கும் காதல்களுக்கெல்லாம் முன்னோடியாக அமைகிறது.

தாமரை
10-06-2008, 08:56 AM
அதுசரி ஓவியன்.. நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்க. ;)

தங்கை பாரதிக்குப் பூப்பறித்துத் தருவீங்களா இல்லையா? ;)

நாராயண நாரயண

ஓவியன்
10-06-2008, 01:50 PM
அதுசரி ஓவியன்.. நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்க. ;)[/COLOR]

அதுக்கென்ன செல்வண்ணா, முதலில் நீங்க ஓமானுக்கு வாங்க...

உங்க நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுறன்...!!! :):):)

தாமரை
10-06-2008, 04:10 PM
இன்னும், "அண்ணா! குடும்பத்தோடு ஓமான் வாருங்கள்" என்றுக் கூப்பிட எண்ணம் வரலையே ஓவியா!!!"

ஓவியன்
11-06-2008, 04:27 AM
என்ன செல்வண்ணா இப்படிச் சொல்லிட்டீங்க...! :frown:

நீங்க வேறு, உங்க குடும்பம் வேறா...??
உங்களை அழைத்தால் உங்க குடும்பத்தை அழைத்தது போலாகாதா...??? :icon_rollout:

தாமரை
11-06-2008, 04:32 AM
(குட்டிக்கரணம் எல்லாம் சாதாரணம் ஓவியன்.. நான் அந்தர் பல்டியே அடிப்பேன்)

அந்தர் பல்டி : 1

நீயும் என் குடும்பம் தானே?
என் குடும்பம் வேறு நான் வேறா?
அப்ப உன் நெஞ்சைத் தொட்டேச் சொல்லலாமே!!!:icon_b:


அந்தர் பல்டி : 2

இப்படிச் சொல்லி என் நெஞ்சைத் தொட்டுட்டியே ஓவியா!, சரி சரி இப்ப சொல்லு தங்கைக்குப் பூப்பறித்துத் தருவியா மாட்டியா?:icon_b:

ஓவியன்
11-06-2008, 06:13 AM
உங்க குடும்பத்திலுள்ளவங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாமல் பூப்பறித்துக் கொடுப்பியா, மாட்டாயா என கேள்வி கேட்கலாமா செல்வண்ணா...???

(நாமளும் பல்டி அடிப்போமிலே...!! :spudnikbackflip: )

தாமரை
11-06-2008, 06:26 AM
குடும்பத்திலுள்ளவங்களைப் பத்தி முழுசாத் தெரிஞ்சாத்தான் குழப்பமே இல்லையே ஓவியா!!!

இப்ப உன்னைப் பத்தி முழுசா உனக்குத் தெரியும்னு சொல்ல முடியுமா?

நம்மளைப் பத்தியே நமக்கேத் தெரியமாட்டேங்குது.. தேடித் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு...