PDA

View Full Version : என்னில் நீ பாதி



kavitha
30-05-2005, 08:18 AM
என்னில் நீ பாதி

எனக்கு 32
உனக்கு 16

karikaalan
30-05-2005, 08:58 AM
32, 16-ஆ..... ஒண்ணும் புரியலையே.

ஒருத்தருக்கு 32-ம் இருக்கு; அடுத்தவருக்கு 16தான் இருக்குன்னா அவரு பல்லெல்லாம் போனவரா!!

===கரிகாலன்

மன்மதன்
30-05-2005, 09:03 AM
வயச சொல்றீங்களோ.. 32 வயது ஆளு 16 வயது பொண்ணை திருமணம் பண்றாருன்னு .. காதலுக்கு ஏதம்மா வயது..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
30-05-2005, 09:24 AM
தாயும் சேயும் என்று நினைக்கிறேன் ...

பால்ய விவாகத்தை குறிப்பிட பயன்படுத்திய வரிகளா? மண்டை காயுதே ....

mania
30-05-2005, 09:51 AM
சுருங்க சொல்லி விளங்க முயன்றிருக்கிறார். கவி. இதில் அவர் கூற முற்பட்ட விஷயங்கள் ஆயிரம்.....
1 ) காதலன் தன் காதலியை நோக்கி அவர்களின் இடை அளவை பற்றி பேசிக்கொள்வது.....:rolleyes:
2 ) இருவரும் சேர்ந்து வாங்கிய பட்டாணி சுண்டலை எண்ணி பங்கு போட்டுக்கொள்வது.....:D
3 ) வயதான காதலன் (கிழவன் ) இளமையான காதலியை பார்த்து அவர்கள் தம் பல் எண்ணிக்கை பற்றி சொல்வது......:confused:
4 ) பாதி எழுதிக்கொண்டிருந்தபோது இன்க் காலியா போனது......:D
5 ) மற்ற மக்களுக்கெல்லாம் தான் வேற வேலை இல்லையே ...கொஞ்சம் மண்டை காயட்டுமே என்று.....:rolleyes:
( தொடரும் )
அன்புடன்
மணியா....:D

அறிஞர்
30-05-2005, 10:06 AM
வாழ்த்துக்கள் கவி.......

(கவிதை விரிவுரையாளர் என்ற புதுப்பட்டம் நம் நண்பர் மணியாவுக்கு வழங்கப்படுகிறது)

பரஞ்சோதி
30-05-2005, 10:10 AM
சுருங்க சொல்லி விளங்க முயன்றிருக்கிறார். கவி. இதில் அவர் கூற முற்பட்ட விஷயங்கள் ஆயிரம்.....
1 ) காதலன் தன் காதலியை நோக்கி அவர்களின் இடை அளவை பற்றி பேசிக்கொள்வது.....:rolleyes:
2 ) இருவரும் சேர்ந்து வாங்கிய பட்டாணி சுண்டலை எண்ணி பங்கு போட்டுக்கொள்வது.....:D
3 ) வயதான காதலன் (கிழவன் ) இளமையான காதலியை பார்த்து அவர்கள் தம் பல் எண்ணிக்கை பற்றி சொல்வது......:confused:
4 ) பாதி எழுதிக்கொண்டிருந்தபோது இன்க் காலியா போனது......:D
5 ) மற்ற மக்களுக்கெல்லாம் தான் வேற வேலை இல்லையே ...கொஞ்சம் மண்டை காயட்டுமே என்று.....:rolleyes:
( தொடரும் )
அன்புடன்
மணியா....:D

கலக்கீட்டீங்க தலை,

இன்னும் நிறைய சொல்லலாமே.

கங்குலிக்கு 32 மேட்ச் தடை
ஸ்மீத்க்கு 16 மேட்ச் தடை.

திமுக 32
காங்கிரஸ் 16

இப்படி சொல்லிகிட்டே போகலாமே.

மன்மதன்
30-05-2005, 10:13 AM
அடடே.. சும்மா 2 வரிகள் எழுதினதுக்கு இத்தனை அர்த்தங்களா..
அன்புடன்
மன்மதன்

mania
30-05-2005, 10:15 AM
கலக்கீட்டீங்க தலை,

இன்னும் நிறைய சொல்லலாமே.

கங்குலிக்கு 32 மேட்ச் தடை
ஸ்மீத்க்கு 16 மேட்ச் தடை.

திமுக 32
காங்கிரஸ் 16

இப்படி சொல்லிகிட்டே போகலாமே.

:D நான் குறிப்பிட்டுள்ள ஐந்தாவது பாயிண்ட் அமுலுக்கு வருகிறது.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

kavitha
30-05-2005, 10:37 AM
ஐவர் அணியை அங்கே தேடினா.. இங்கே இருக்கீங்க..??

முதல்முதலாய்... முதல் முதலாய்... ஹோ ஹோ.. (பாட்டு பாடிக்கிட்டு இருக்கேன்)
மணியா அண்ணாவின் விமர்சனம் கிடைத்த சந்தோசத்தில் பாட்டு வருகிறது.. :) :) :)

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். ஹைக்கூவின் வலிமையே இது தான்.. இன்னும் வரட்டும். விளக்கம் பிறகு...
( நான் நாலாவது பாயிண்டைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் :D )

மன்மதன்
30-05-2005, 10:41 AM
தலைப்பை 'எண்ணில் பாதி'ன்னு வைத்திருக்கலாமோ.. 32ல் பாதி 16 ஹிஹி
அன்புடன்
மன்மதன்

சுவேதா
30-05-2005, 11:44 AM
மிகவும் நன்றாக உள்ளது அத்துடன் தாத்தா நிறைய விளக்கங்கள் வேறு குடுத்திருக்கிறார் அதுகும் நன்றாக உள்ளது.

Nanban
02-06-2005, 03:56 PM
ஒருவருள்
ஒருவர்
பாதிப்பாதியாகப்
போகும் பொழுது
யார் முப்பத்திரண்டாலென்ன?

அடுத்தவர்
என்றும் பதினாறு தான்....

இந்த மார்க்கண்டேயே
இளமைக்கு
என்றும் பாதி நீ
மீதி நான்.....

(என்ன ஏதாவது புரிந்ததா? சத்தியமாக இல்லை... இனிமே கவிதா தான் சொல்லணும்.....)

பரஞ்சோதி
02-06-2005, 08:56 PM
(என்ன ஏதாவது புரிந்ததா? சத்தியமாக இல்லை... இனிமே கவிதா தான் சொல்லணும்.....)

இதை நான் கேட்கலாம் என்றிருந்தேன், நீங்களே கேட்டுட்டீங்களா?

பிரியன்
20-06-2005, 06:59 AM
சரி பதிலைச் சொல்லுங்க.......

மண்டை காய்ந்தவர்கள் சார்பாக

kavitha
20-06-2005, 07:09 AM
மன்மதன் சொன்னது போல் கவிதையின் விளக்கம் "32 வயதுக்காரர்
16 வயது பெண்ணை மணம் முடிப்பதைப்பற்றியது தான்"
சமீபத்தில் இப்படியொன்றைக்காண நேர்ந்தது.
எனக்கு உள்ளூற கற்பனை. அவர் அந்தப்பெண்ணைப்பார்த்து
கவிதை சொன்னால் எப்படி இருந்திருக்கும் என்று..
(மக்கா அடிக்க வராதீங்க )

பிறகு பார்த்தால் ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்திற்கும் இது பொருந்தியே உள்ளது

மன்மதன் சொன்னபடி...

பெண்ணே, என்னில் நீ பாதி!
எனக்கு 32, உனக்கு 16!

எண்ணே, என்னில் நீ பாதி!
எனக்கு 32, உனக்கு 16!


கரிகாலன் அண்ணா சொன்னபடி...

பல்லே... என்னில் நீ பாதி!
எனக்கு 32, உனக்கு 16!

பிரியன் சொன்னபடி...

சேயே... என்னில் நீ பாதி!
எனக்கு 32, உனக்கு 16!


கங்குலி, ஸ்மீத், திமுக என்று பரம்ஸ் அண்ணாவோ
பாலிடிக்ஸ் பேசுகிறார். ( நான் வரலை இந்த உருட்டுக்கட்டை விளையாட்டுக்கு... )

நண்பன்,
யார் முப்பத்திரண்டென்று என்றாலும்
மார்க்கண்டேய இளமை முன்
பதினாறு தான் என்கிறார்.

காதல் மன்னர்களும், மன்னிகளும் இதை மெய்ப்பித்திருக்கிறார்கள்.

நிற்க!

எனது கேள்வி, இது சரி தானா? நமது இலக்கியங்கள் அழகாய் இலக்கணம் வகுத்துள்ளன. ஒத்த வயதும், மனதும் உடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று அழகிய அகத்திணைகளை கொடுத்துள்ளது. கைக்கிளையும், பொருந்தா திணையும்
இவற்றிற்கு எதிரானது.
இந்த பொருத்தா திணையை ஆர்ப்பரிப்பதுவும், ஆதரிப்பதும் சரியா?

gragavan
20-06-2005, 08:48 AM
கவிதா பொருந்தும் திணை சரிதான். ஆனால் பொருந்தாத் தினை தவறில்லை. கொட்டில் பசுவிற்கு பச்சைப் புல் என்பது பொருந்தும் திணை. காய்ந்த மாடு கம்பந் தட்டை மேய்வது பொருந்தாக் காமம். எனக்குத் தெரிந்து பொருந்தாக் காமத்தைப் பாடியவர்கள் அதைத் தவறென்று பாடவில்லை. படித்தவர்கள் விளக்கலாம்.

அனைத்திலும் ஒத்த நிலையில் இருந்து காதல் தோன்றினால் பொருந்தும் காதல். ஏழை பணக்காரனைக் காதலிப்பதும் நீங்கள் சொல்லும் பொருந்தாக் காமமே! அது தவறா? டெமி மூரின் காதலனுக்கு இருப்பதியிரண்டு வயதுதான். இருந்துட்டுப் போகட்டுமே....நமக்கென்ன? அதுவும் எண்ணில் பாதிதான்....44-22.

அறிஞர்
20-06-2005, 10:56 AM
கவியின் விளக்கம் அருமை.... வாழ்த்துக்கள்...