PDA

View Full Version : பிற இதழ்களில் வெளியான சிறந்த கவிதைகள்



பிரியன்
29-05-2005, 05:39 AM
நண்பர்களே பிற இதழ்களில் வெளியான சிறந்த கவிதைகளை மன்ற நண்பர்களுக்காக இப்பகுதியில் தருகிறேன்.

முதல் கவிதையாக திரு.அறிவுமதி எழுதிய கழுகே வருக என்ற கவிதையை தருகிறேன்

பிரியன்
29-05-2005, 08:17 AM
கழுகே வருக...


பிணங்களைத் தூக்க
வருவது போல
தமிழரைத்
தாக்கத் தாவி வருகிற
கழுகே!கழுகே!
வருக! வருக!
இனத்துயர் நீக்க
இறங்கிடும் நேரம்
பணத்திமிர்
காட்டப் பதுங்கி வருகிற
கழுகே! கழுகே!
வருக!வருக!
செருக்குடன் இருக்கும்
சிங்கம் சிரிக்க
நெருக்கடி கொடுக்க
நெருங்கி வருகிற
கழுகே! கழுகே!
வருக! வருக!
உரிமையில் பிளந்து
உறவுடன்
இணைந்து
இருவரும்
வாழ
இருக்கும்
வாய்ப்பை
இழக்கத் துணிந்து
இழவு வீட்டில்
களவு செய்ய
அனுமதி கொடுக்கும்
அவரையும் விழுங்க வருகிற
கழுகே! கழுகே!
வருக! வருக!
பல்லின வாழிவினுள்
பல்கிக் கிடக்கும்
பண்பியல் விழுமியப்
பன்முகத்தன்மையை
ஒழித்து முடித்து
ஒற்றை ஆட்சியில்
உலகை ஒடுக்கத் துடித்து
ஓடி வருகிற
கழுகே! கழுகே!
வருக! வருக!
வியத்நாம் உதைத்ததில்
ஒடிந்ததுன்
இடுப்பு!
அதற்கும் மேலே
கொடுப்பதெம்
பொறுப்பு!
அண்டை நாடே!
உனக்கிது
இழுக்கு!
அட
அறிவுடன் வருடிப் பார்
உன் கழுத்தினிலும்
சுருக்கு!!
---------------
நன்றி - தென்செய்தி

பரஞ்சோதி
29-05-2005, 09:59 AM
சமீபத்தில் வருகை தந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி முன்பு இதை வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அறிஞர்
16-06-2005, 03:46 AM
அருமையான கவிதை..... மற்ற கவிதைகளையும் கொடுங்கள்

பிரியன்
16-06-2005, 04:41 AM
கண்டிப்பாக பிற இதழ்களில் வெளியாகும் நல்ல கவிதைகள் மன்ற கவிஞர்களுக்கு பயனுள்ளதாய் அமையும். அப்படியே நான் படித்து ரசித்த கவிதைகளையும் கொடுக்கிறேன்.

Iniyan
20-06-2005, 11:56 PM
ஆனந்த விகடனில் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்'ல் இருந்து

எபிக
பகலின் திசைகள் இருள
கல்வாரிக் குன்றுகள் பிளக்க
இயேசு
சிலுவையில் அறையப்பட்டு
மரித்த மறுநாளும் உதித்தான்
மஞ்சள் சூரியன் தன் வசீகரத்தோடு!

இளையபாரதி


(தொகுதி பட்டினப்பாலை)

அறிஞர்
21-06-2005, 08:40 AM
அழகான வரிகள் இனியன்.....

இயற்கையாய் நிகழ்ந்தவற்றை
அழகிய கவியாய்
மாற்றிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்...

மன்மதன்
04-07-2005, 06:00 AM
அசன்பசர் எழுதின முத்தான கவிதை :

மேலே பார்த்துக்கொண்டே
சரியா சரியா
சரியா என்று
கேட்டு வருகையில்
உனது நெற்றியில்
பொட்டு வைத்து
அழகு பார்த்தது
மழைத்துளி..

மழைமழையாய் என்ற கவிதை புத்தகத்திலிருந்து....

-
மன்மதன்

kavitha
04-07-2005, 09:04 AM
அர்த்தமுள்ள, அருமையான, அழகான கவிதைகள்

thempavani
04-07-2005, 09:34 AM
அசன்பசர் எழுதின முத்தான கவிதை :

மேலே பார்த்துக்கொண்டே
சரியா சரியா
சரியா என்று
கேட்டு வருகையில்
உனது நெற்றியில்
பொட்டு வைத்து
அழகு பார்த்தது
மழைத்துளி..

மழைமழையாய் என்ற கவிதை புத்தகத்திலிருந்து....

-
மன்மதன்

அப்பா ஆடம்பரம் இல்லாத அருமையான அழகான கவிதை..இங்கே கொடுத்ததற்கு நன்றி மன்மதா..

மன்மதன்
20-08-2005, 07:01 AM
மனித வாழ்க்கையின்
மிகக்கஷ்டமான ஒரு
தருணத்தில் ஒரு காதல்
நுழையுமேயாயின்
அதற்குத் தோற்றுப்
போகும் நிகழ்வுகள்
அதிகமாகவேயிருப்பினும் கூட
அதை விட உறுதியான
உண்மையான ஆழமான காதல்
ஏதும் இவ்வுலகம் அனைத்திலும்
இருக்க முடியாது..

- யாரோ

-
மன்மதன்

மன்மதன்
20-08-2005, 07:02 AM
நீண்ட நாளைக்குப் பின்
சந்தித்து இருக்கிறோம்.
இன்னும் தீர்மானம் பெறவில்லை
நம் உறவின் பெயர்ச்சொல்.

உன்னால் சொல்ல முடியும்
இருந்தும்
ஒன்றில் ஆரம்பித்து
வேறொன்றாய் முடிக்கிறாய்..

'எனக்குச் சொல்ல
தெரியவில்லை
உனக்கு விளங்குகிறதா?'
என்கிறாய்.

நீ
சொல்லாது விட்டதையும்
விளங்கிக்கொள்ள
முடியும் என்னால்..

ஆனால்
சொல்லியது கூட புரியாத
பாவனையில் முழிக்கிறேன்..

இன்னும் சொல்ல என்ன
இருக்கிறது என்பது
வரை நீ
வந்து விட்டாய்..

ஒன்றுமே சொல்லவில்லை
என்பது மாதிரியே
நானும் இருக்கிறேன்.

- யாரோ..

ஜீவா
20-08-2005, 07:38 AM
அருமையான கவிதை மன்மதன்.. என் மனதினில் கூட இது மாதிரி ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்..

pradeepkt
21-08-2005, 05:32 AM
அருமையான கவிதை மன்மதன்.. என் மனதினில் கூட இது மாதிரி ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்..
ஏன் நினைச்சிட்டே இருக்கீங்க...
இன்னும் நிறைய எழுதுங்க ஜீவா

மன்மதன்
21-08-2005, 05:45 AM
ஜீவா ஏற்கனவே இது மாதிரி நிறைய எழுதியிருக்கிறார்... இன்னும் எழுத வேண்டும்..
அன்புடன்
மன்மதன்