PDA

View Full Version : தோல்விMano.G.
28-05-2005, 07:02 AM
தோல்வி இதற்கு விளக்கம் என்ன ?
நான் கூறுகிரேன் " முழுமை அடையாத ஒரு செயலே தோல்வி"

நண்பர்களே விவாதிப்போம்.

உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்


மனோ.ஜி

mhn
02-06-2005, 10:46 AM
முழுமையடையாத செயலுக்கு 'குறை' என்று தானே சொல்ல முடியும்.
வெற்றிக்காக முயற்சித்து அது கிடைக்காமல் போனால் அதை 'தோல்வி' என கூறலாமோ?

pradeepkt
02-06-2005, 10:59 AM
தோல்வி என்பது வெற்றிக்குச் சுற்றுவழி.
வெற்றி என்னும் நெல்லி இனிப்புக்கு முன்வரும் சின்னஞ்சிறு கசப்பு.
அனுபவச் சுரங்கம்.
நிதானத்திற்கு நேர்வழி.

அன்புடன்,
பிரதீப்

satheesh
03-06-2005, 12:46 AM
தோல்வி-
என்னைக்கேட்டால் எவர் ஒருவர் தன்னம்பிக்கை இழக்கின்ராரோ அவரிடம்தான் தோல்வி என்கின்ற எண்ணம் தோண்றுகின்றது ஆகவே தன்னம்பிக்கை இழப்பது (தோல்வி)எண்றும் பொருளடங்கும்!
நன்பரே!!!

நட்புடன் சதீஷ்

Mano.G.
29-11-2006, 08:47 AM
ஆகா,
அருமை
எங்கே மேலும் கருத்துக்களை காணோமே

leomohan
29-11-2006, 11:13 AM
மனோ எங்கே ஆளையே காணோம். நல்ல தலைப்பு தான்.

என்னை பொருத்த வரையில் ஒரு காரியத்தின் வெற்றி தோல்வி

அந்த காரியம் எடுத்துக் கொண்டவரின் திறன்,
அந்த காரியத்தில் இருக்கும் காரணிகளின் திறன்,
அந்த காரியம் வெற்றியா தோல்வியா என்று எதை வைத்து நிர்ணயக்கப்படும் என்பதின் வரையறுப்பு இதை வைத்து சொல்லவேண்டும்.

உப்பு விற்க போனே மழை வந்தது என்று சொல்வார்களே.

1. மழை அவனுடயை உப்பு விற்கும் திறன், உப்புக்கான சந்தையின் தேவை இரண்டுக்கும் அப்பாற்பட்டது.
2. அவனுக்கு எப்போது மழை வரும் வராது என்று தெரிந்திருக்க வேண்டும், ஆனால் மழை வருவதை அவனால் கட்டுப்படுத்த முடியாது.
3. இன்று உப்பு நனைந்து நஷ்டம் ஏற்பட்டாலும், அடுத்த நாள் இருந்த உப்பை லாபத்தோடு விற்று சரிப்படுத்தினால், இன்று ஏற்பட்ட நஷ்டம், தோல்வியா வெற்றியா.

ஓவியா
29-11-2006, 06:07 PM
சான்றோர்களின் கருத்துகள் அருமையே


நல்லதொரு விமர்சனம்
நன்றி மோகன்

அன்பு மோகன்
தங்களின் பதிவுகள் குறைந்து கொண்டே வருகின்றன,
தங்களுக்கும் அதிக பணிப்பளுவோ.....

leomohan
29-11-2006, 06:27 PM
வேலையும் இருக்கிறது. தமிழில் புதிய தளம் ஒன்றை உருவாக்குவதில் நானும் என் நண்பர்களும் இறங்கியிருக்கிறோம். மிகவும் சுவாரஸ்யமாக போகிறது. மன்றத்தினரும் களத்தில் இறங்கினால் வெளுத்து கட்டலாம்.

தமிழில் விக்கி - http://wiki.etheni.com

தமிழ் இணைய வானோலி நிலையம் - http://tamilradio.etheni.com

தமிழ் ஆங்கில விவாதகளம் - http://forum.etheni.com

தமிழ் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஏற்ற காலரி - http://photos.etheni.com

தமிழ் மாத மின்னிதழ் - http://theni.etheni.com

நேரம் கிடைத்தால் பாருங்கள்

இது தான் தாய் தளம் - http://www.etheni.com

M.Jagadeesan
01-02-2013, 02:27 PM
முழுமை அடையாத செயலைத் " தோல்வி " என்று சொல்லமுடியாது. தேர்விலே ஒரு மாணவன் எல்லாக் கேள்விகளுக்கும் பாதி விடை மட்டும் எழுதுவதாக வைத்துக்கொள்வோம். எந்தக் கேள்விக்கும் அந்த மாணவன் முழுமையான விடை அளிக்கவில்லை. ஆனாலும் அந்த மாணவன் சரியான விடை எழுதியிருந்தான். எனவே அந்த மாணவன் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் தேர்விலே வெற்றி பெற்றுவிட்டான்.

எனவே தோல்வி என்பது அனுபவம்; வெற்றிக்குத் தூண்டுகோல் என்று வைத்துக்கொண்டால் , வாழ்க்கையில் ஏமாற்றம் இருக்காது.

arun
01-02-2013, 04:04 PM
தோல்வி என்பதை ஒரு அனுபவமாக எடுத்து கொண்டு அடுத்த முறை அதே செயலில் இறங்கும்போது வெற்றி காண முயல வேண்டும் !

தோல்வி என்பதும் ஒரு விதத்தில் உந்து சக்தி தான் அதனால் சோர்வடையாமல் இருந்தாலே தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்ற மாதிரி தான் ..

vasikaran.g
02-02-2013, 05:07 AM
தோல்வி !
முற்று பெறாத முயற்சி !
வெற்றிக்கான பயிற்சி !
உண்மையான தோல்வி
வெற்றியைவிட வலிமையானது..

அனுராகவன்
10-02-2013, 06:16 PM
தோல்வி காணத உள்ளம்