PDA

View Full Version : ஜீவாவின் கிறுக்கல்கள்..ஜீவா
28-05-2005, 05:08 AM
நண்பர்களே!!!
இது கொஞ்சம் தபுசங்கர் நடையில் இருக்கும்.. ஆனால் முழுக்க முழுக்க என் கற்பனையே....

=========================================================================

இல்லை.. இல்லை ஒன்றே போதும் என்று நீ சொன்னாய்..
நானோ, உன்னை போல அழகான ஒரு குட்டி பாப்பாவும்.
என்னைப்போல, ஒரு அறிவான குட்டிப்பையனும் வேண்டும் என்றேன்..
உடனே, கோபப்பட்டு, "அப்போ.. எனக்கு அறிவில்லையா!" என்றாய்..
நானோ, அதிலென்ன சந்தேகம்.. என்றேன் நக்கலாய்..
உடனே.. நீயோ ஓங்கி.................
...
..
சுள்ளென்று மூஞ்சின் மேல் வெயில் அடிக்க..
அட நல்ல ஒரு கனவு முடிவு பெறாமலே..
என் காதலை போல...

ஜீவா
28-05-2005, 05:09 AM
என்னடா அப்படி மறைத்து மறைத்து இரண்டு நாளாக
படிக்கிறாய்.. என்று என்னிடமிருந்து நண்பர்கள் பிடுங்கி அந்த லெட்டரை படித்தார்கள்..
...
அரிசி - 10 கிலோ..
பருப்பு - 3 கிலோ..
...

அடச்சே.. இதுக்காடா இவ்வளவு பில்ட் அப் என்று லெட்டரை எறிந்து விட்டு சென்றார்கள்..
அவர்களுக்கு தெரியாது அல்லவா..
அது நீ கைப்பட எழுதிய உன் வீட்டு மளிகை லிஸ்ட் என்று...

karikaalan
28-05-2005, 05:16 AM
அது யார் தபுசங்கர்?

ஜீவாவின் கிறுக்கல்கள் என்று பெயரிட்டிருந்தாலும், ஜீவனுள்ளவை. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பிரியன்
28-05-2005, 05:27 AM
அது யார் தபுசங்கர்?

ஜீவாவின் கிறுக்கல்கள் என்று பெயரிட்டிருந்தாலும், ஜீவனுள்ளவை. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

ஆனந்த விகடன் படிப்பதில்லையா நண்பரே... காதல் பக்கங்கள் எனும் பகுதியில் இளமை நனைக்க காதலைப் பற்றி கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினார். நல்ல கவிஞர்.. காதல் கவிஞர். திரைப்படத்துறையில் உதவி இயக்குனாராக இருக்கிறார். படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்...
நல்ல கவிதை ஜீவா.... தொடருங்கள்..

மன்மதன்
28-05-2005, 06:27 AM
நல்ல கவிதைகள் ஜீவா.. எளிதாக எல்லோருக்கும் புரியும் படி எழுதப்படும் கவிதைகள் எனக்கு பிடிக்கும்..
கடந்த டிசம்பரில் தபு சங்கரை சந்தித்த போது மார்ச் மாதம் படம் ஆரம்பிக்கிறேன் என்றார். இன்னும் செய்தி வரவில்லை.
அன்புடன்
மன்மதன்

ஜீவா
28-05-2005, 06:38 AM
=====================
அது என்ன!!!
உன் மீது மட்டும் பொடா சட்டம் பாயவில்லையே!!
நீ என்னை உன் காதல் தீவிரவாதியாக உருவாக்கியதற்கு...!!!!
======================

ஜீவா
28-05-2005, 06:38 AM
வாத்தியார் என்னிடம்..
அழகுக்கு அர்த்தம் என்ன கேட்டார்...
நானோ உன்னையே பார்த்தேன்.. நீயோ வெட்கத்தில் தலை குனிந்தாய்.
இது கூட தெரியவில்லையே என்று என்னை அடித்து விட்டு..
சரி, ஆணவத்திற்காகவாது அர்த்த்ம் சொல் என்றார்..
நான் அவரையே பார்த்தேன்..
அதற்கும் என்னை அடித்தார் பதில் தெரியவில்லையென என்னை நினைத்து..
ஆனால் நீ மட்டும் தலை குனிந்து சிரித்து கொண்டிருந்தாய் எல்லாம் அறிந்து...

ஜீவா
28-05-2005, 06:41 AM
பார்த்து பழகியதற்கு அப்புறம்தான் ஒருத்தரை
விரும்ப முடியும் என்று சொன்னால்..
நான் விரும்பும் அப்துல் கலாமிடம் கூட நான் இதுவரை பேசியதில்லையெ..
அதையெல்லாம் தவறென்று சொல்லாத என் நண்பர்கள்
உன் விசயத்தில் மட்டும் அடம் புடிக்கிறார்களே.

இது என் தவறா! இல்லை அவர்களின் தவறா


யாரோ எழுதிய நடிகையின் கிசுகிசுவை படித்து விட்டு
இரவில் அலசும் நண்பர்களின் கூட்டத்தின் மத்தியில்
நான் மட்டும் தனித்திருந்து போர்வை மூடி உன்னை
நினைத்து கொண்டிருப்பதை கிண்டலடிப்பார்களே..

இது என் தவறா! இல்லை அவர்களின் தவறா

===
எப்படியோ வாழ்ந்து கொண்டிருந்த என்னை..
இப்படித்தான் வாழ வேண்டும் என்று உன் மூலம் அறிந்து
மாறியதை "எப்படி இருந்த இவன் இப்படி ஆயிட்டானே.. "
என்று சொல்கிறார்களெ..

இது என் தவறா! இல்லை அவர்களின் தவறா

இது எல்லாம் என் தவறென்றால், அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டுதான் இருப்பேன்.. உன்னிடத்திலிருந்து எதிர்ப்பு வரும் வரை..

ஜீவா
28-05-2005, 06:41 AM
நானும் தோல்வியில் துவண்டேன் தோழி.. ஒரு காலத்தில்..
அப்போதுதான் என் மனதில் தோன்றியது..
யுகம் யுகமாக சுற்றியும் தான் விரும்பும் சூரியனை அடைய முடியவில்லையென
என்றாவது பூமி நினைத்ததுண்டா..
நான் மட்டும் ஏன் அப்படி இருக்க கூடாது என்று..

எட்டு வருடங்களாக முயற்சி பண்ணி.. இப்போதுதான் கிடைத்தது..
மகிழ்ச்சிக்கடலில் பெப்ஸி உமா ரசிகன் தொலைபேசியில்..

நான் வெறும் எட்டு மாதங்களுக்குள்
துவண்டு விடலாமா?
இதோ புறப்பட்டு விட்டேன் பூமியாக..
சூரியனாகிய உன்னை சுற்ற...

Mano.G.
28-05-2005, 06:59 AM
அருமை அருமை
மிக மிக சாதாரணமாக , விளங்கி கொள்ளகூடிய வரிகள்
வாழ்த்துக்கள் தொடருங்கள்


மனோ.ஜி

பரஞ்சோதி
28-05-2005, 08:08 AM
அருமையான, எளிமையான கவிதைகள் நண்பரே!

பாராட்டுகள்.

karikaalan
28-05-2005, 10:22 AM
[QUOTE=ஜீவா]நானும் தோல்வியில் துவண்டேன் தோழி.. ஒரு காலத்தில்..
அப்போதுதான் என் மனதில் தோன்றியது..
யுகம் யுகமாக சுற்றியும் தான் விரும்பும் சூரியனை அடைய முடியவில்லையென
என்றாவது பூமி நினைத்ததுண்டா..
நான் மட்டும் ஏன் அப்படி இருக்க கூடாது என்று..

Quote]

சுற்றி வருவதே குறிக்கோளாக இருக்க முடியுமா என்ன?
அடைவது அல்லவோ?
===கரிகாலன்

ஜீவா
28-05-2005, 11:01 AM
சுற்றி வருவதே குறிக்கோளாக இருக்க முடியுமா என்ன?
அடைவது அல்லவோ?
===கரிகாலன்


என் கவிதைகளில் நிறைவேராத காதலை பற்றி அதிகம் இருக்கும்.. அதில் இதுவும் ஒன்று..

thempavani
28-05-2005, 02:44 PM
ஜீவா..

அருமையாய் எழுதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..

வேறு ஏதேனும் வலைப் பூக்களில் எழுதியுள்ளீர்களோ... இதே கவிதைகளை எங்கோ படித்த ஞாபகம்..
தவறாக எண்ண வேண்டாம்...

ஜீவா
28-05-2005, 03:17 PM
ஆமாம்.. நமது பழைய தமிழ் மன்றத்திலும் இருந்தது...

iniyavan
28-05-2005, 03:40 PM
பாமரனும் விளங்கி கொள்ளும் அளவிற்க்கு அற்புதமாக எழுதப்பட்ட காதல் கவிதைகள்.

ஜீவா
31-05-2005, 07:35 AM
========================
காதல் கொ( ண் ) டேன்...
இது என் காதலுக்கு இன்று நான் சூடிய தலைப்பு..
=======================

==================
தீக்குச்சியாய் இருக்கவும் விரும்புவேன்..
நீ பற்ற வைக்கும் அந்த சில நொடிகள் வாழ்ந்தாலே போதுமென்று!!!
=================

=================
காதல் ஹார்மோன்களின் மாற்றம் என்கிறார்கள்..
நீ இல்லா விடில்.. ஹார்மோனா.. உயிரே வேண்டாம் என்கிறேனே..
=============

==================
கடவுள் உன் முன் திடிரென்று தோன்றினால் என்ன கேட்பாய்!!!

என்னவள் என்னை விரும்பாமல் தவிர்த்தாலும்..
நான் வேறு யாரையும் விரும்பா
மன நிலை மட்டும் கொடு இறைவா என்பேன்..
ஏனென்றால், அப்போது கூட என் காதலை விட
உன்னையும் உன் உணர்வுகளையும் அதிகமாக மதிக்கிறேன்
==================

====================
இன்றோடு உலகம் அழிய போகிறது.. என்ன பண்ணுவாய்..

கண்டிப்பாக என்னவள் கண்ணில் படாமல்
மறைந்திருந்து அவளை பார்த்துக்கொண்டே இருப்பேன்..
ஆம்.. எனக்கு வேண்டாமடி உன் பரிதாப காதல்..

====================

=======================
ஒரு நாள் முழுவதும் உன்னவளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்
என்ன பண்ணுவாய்!!

அன்று முழுவதும் மெனண விரதம் இருப்பேன்!!!
ஆம்!!! அவள்
இதழ் அசைவுகளையும்
இமை நடனங்களையும்
இமைக்காமல் ரசித்து கொண்டே இருப்பேன்..

======================

==========================
நீ உன்னில் விரும்பாத ஒன்று எது!!!

என் இருமல் தான் என்பேன்..
ஆம்!! நான் இருமும் போதொல்லாம்
என் இதயத்தினுள் என்னவள்
தூங்க முடியாமல் அசைகிறாளே..
அதை விட கொடுமை வேணுமா என்ன!!!

==========================

மன்மதன்
31-05-2005, 08:40 AM
அருமை.. அருமை.. அனுபவித்து எழுதியதை போல அருமை..
அன்புடன்
மன்மதன்