PDA

View Full Version : யூனிக்கோட்



Mano.G.
27-05-2005, 09:09 AM
நமது தமிழ் மன்றம் பழைய தளத்தில் இருந்து
புது தளத்திற்கு மாறியதில் மிக்க மகிழ்ச்சி,
அதோடு நான் முன்பு இ-கலப்பை எனும் தமிழ் மென்பொருளை
உபயோகித்து மன்றத்தில் எழுதி வந்துள்ளேன்.
புதிய தளத்தில் நன் டைப் செய்த எழுத்துக்கள்
வேறு வடிவில் வந்துள்ளதை கண்ணுனுற்றேன்,
இப்பொழுது தமிழா தளத்தில் இருந்து யுனிக்கோட்
தமிழ் மென்பொருளை பதிவுஇறக்கம் செய்து டைப் செய்துள்ளேன்
இதை உங்களால் படிக்க முடிகிறதா
என்று சகோதரர்கள் தெரிய படுத்தும்படி வேண்டுகிரேன்.

தமிழா இணையத்தளம் : www.thamizha.com (http://www.thamizha.com)


மனோ.ஜி

Iniyan
27-05-2005, 10:07 AM
மனோ!
நன்கு படிக்க முடிகிறது. வாழ்த்துக்கள். முதலில் உங்கள் ப்ரபைல் சென்று உங்கல் கையெழுத்தை திஸ்கியில் இருந்து யுனிகோடாக்குங்கள். நன்றி.

pradeepkt
27-05-2005, 10:13 AM
மனோ நீங்கள் பதிவிறக்கம் செய்த யூனிகோடு தமிழ் மென்பொருள் எது?
நான் இப்போது இகலப்பை வைத்துதான் தட்டச்சு செய்கிறேன். தமிழா வலைத்தளத்தில் இகலப்பையும் இருக்கிறது.
நீங்கள் உபயோகப் படுத்தும் மென்பொருள் என்ன?

Mano.G.
27-05-2005, 12:11 PM
வெற்றி மாபெரும் வெற்றி,
சுசி லீனக்ஸ் இயங்கு தளத்தில்
தமிழில் டைப் செய்வதை கண்டு கொண்டேன்
கடந்த ஆறு மாத முயற்சிக்கு
வெற்றி

"ப்ரதீப்
தமிழா இணைய தளத்தில் யுனிக்கோட்
என்று எழுதபட்டு இருக்கும் சுட்டியை
தட்டுங்கள் உங்களுக்கு வேண்டிய
மென்பொருல் கிடைக்கும் "

நான் இப்பொழுது லீனக்ஸ் ஆப்ரேடிங்
சிஸ்தமில் இருந்து இதை டைப் செய்கிரேன்





மனோ.ஜி

pradeepkt
27-05-2005, 12:29 PM
ஐயையோ மனோ...
இப்ப ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது.

பாரதி
27-05-2005, 05:25 PM
அன்பு மனோ, உங்களின் முதல் பதிவு தெளிவாகவும், அடுத்த பதிவு குழம்பிய எழுத்துருவாகவும் காட்சியளிக்கிறது. நீங்கள் இ-கலப்பையைப் பயன்படுத்தி, தமிழ்மன்றத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கீழே உள்ள 'ஒருங்குறி எழுத்துரு மாற்றி'யைப் பயன்படுத்தி உங்கள் பதிவைச் செய்யலாம். உங்களை மன்றத்தில் கண்டதில் மகிழ்ச்சி.

Mano.G.
28-05-2005, 06:48 AM
சகோதரர்களே

நான் கடந்த ஆறு மாதங்களாக சூசி லீனஸ் ஆப்பரேட்டிங் சிஸ்தத்தை உபயோகித்து வருகிரே , நேரம் கிடைக்கும் பொழுது மைக்ரோ சாப்ட் கணனியிலிருந்து நமது மன்றதிற்கு வந்து போவேன், நேற்று சூசி லீனக்சின் மூலம் தமிழ் மன்றத்தை தமிழில் பார்த்ததும் தாங்கவொண்ணா மகிழ்வு கொண்டு டைப் செய்ய பட்ட பதிப்பே அது.

மேலேயுள்ள பதிப்பை சூசிலீனக்ஸ் 9.2

ஆப்ரேட்டிங் சிஸ்தமில் இ-கலப்பையை கொண்டு

பதிக்க பட்டது, அதோடு நமது மன்றத்தில் யுனிக்கோட்டிற்கு

மாற்றும் பகுதியையும் உபயோகித்து TSC டைப் செய்து மாற்ற பெற்றது

நான் பதிவேற்றும் பொழுது நல்ல முறையில் படிக்க முடிந்தது,

இன்று காலையில் பார்க்கும் பொழுது எழுத்துக்கள் உறுமாறியுள்ளதை

கண்டேன். சூசிலீனஸில் தமிழில் டைப் செய்ய யாரேனும் உதவ முடியுமானால் தயவு செய்து தொடர்புகொள்ளவும்.



நன்றி



மனோ.ஜி

(இது விண்டோசினால் இ கலப்பை கொண்டு பதிவேற்ற பட்டத&#3009





நண்பர் பிரதீப்,

தமிழா. காமில் யுனிக்கோட் எழுத்துரு உள்ளது அதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். (alt 2) யுனிக்கோட் எழுதுக்களுக்கும் (alt 3) TSCII எழுத்துக்களுக்கும் செட் செய்ய பட்டுள்ளது.

முத்து
29-05-2005, 12:48 AM
மனோஜி,
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யும்போது என்கோடிங் யுனிகோடாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன். இங்கு நீங்கள் எழுதியதைப் படிக்க என்கோடிங்கை யுனிக்கோடுக்கு மாற்றிப்பார்த்தால் தெரியும்.
( in internet explorer view ---> encoding--->unicode(UTF-8)


நீங்கள் எழுதியது ...
--------------------------------------
வெற்றி மாபெரும் வெற்றி,
சுசி லீனக்ஸ் இயங்கு தளத்தில்
தமிழில் டைப் செய்வதை கண்டு கொண்டேன்
கடந்த ஆறு மாத முயற்சிக்கு
வெற்றி

"ப்ரதீப்
தமிழா இணைய தளத்தில் யுனிக்கோட்
என்று எழுதபட்டு இருக்கும் சுட்டியை
தட்டுங்கள் உங்களுக்கு வேண்டிய
மென்பொருல் கிடைக்கும் "

நான் இப்பொழுது லீனக்ஸ் ஆப்ரேடிங்
சிஸ்தமில் இருந்து இதை டைப் செய்கிரேன்





மனோ.ஜி
__________________
விதை :

முளைத்தால் மரம்,
இல்லையேல் உரம்.
Last edited by Mano.G. : Yesterday at 07:42 AM.
Reply With Quote
----------------------------

பாரதி
29-05-2005, 05:52 AM
ஆமாம் முத்து. நீங்கள் கூறியது மிகச்சரி. நீங்கள் கூறிபடி மாற்றிப்பார்த்தால் எல்லாம் சரியாகவே தெரிகின்றன. வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.

rethinavelu
05-06-2005, 01:03 PM
என்னுடைய கணினியில் Mozilla Firefox ல் வரும் எழுத்துக்கள் நன்றாக இல்லை எனக்கு தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்

உங்கள்
இரத்தினவேலு