PDA

View Full Version : மன்றத்தின் முன்னேற்றம்-உங்கள் கருத்துஅறிஞர்
26-05-2005, 07:30 AM
மன்றத்தின் முன்னேற்றம்

வெகு நாட்களாக மனதில் ஓடிய எண்ணங்களை தெரிவிக்கிறேன்...

ஆரம்ப காலங்களில் தமிழில் அநேகர் அன்புடன் உலாவிய இடம்.... திறமைகள் நிறைந்த படைப்பாளிகள், ஊக்குவிப்பவர்கள் மகிழ்ந்த காலம்.

ஆனால் மிகச்சில படைப்பாளிகள், சில ஊக்குவிக்கும் உள்ளங்கள் மட்டுமே உலாவுகிறோம்..... (முழுமையாக தங்களை ஈடுபடுத்தியுள்ளவர்களை எண்ணிவிடலாம் என்ற நிலை )

அதற்கு காரணங்கள் பல சொல்லலாம்...... (இந்த நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது ) குறைகளை விட்டு விட்டு........
இங்கு ஆக்கப்பூர்வமான சில கருத்துக்களை ஒவ்வொருவரும் கொடுத்தால் மன்றத்தின் முன்னேற்றத்திற்கு நன்றாக இருக்கும்....
மன்றத்தில் இன்னும் என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று ஆலோசனையும் தாருங்கள்....
---------------------------------------------------
என்னுடைய எண்ணங்கள்....
(1) திறமையான, எளிதில் அணுகக்கூடிய கண்காணிப்பாளர்கள் (விரைவில் அவர்களை நிர்வாகிகள் நியமிக்க போகிறார்கள் என எண்ணுகிறேன் ).
(2) இப்பொழுது முழுமையாக தங்களை ஈடுபடுத்தியுள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2 அல்லது 3 நல்ல படைப்புக்களை கொடுக்கவேண்டும் என தீர்மானம் செய்து கொள்ளலாம். (என்னையும் சேர்த்துதான் ).
(3) திறமையான, தமிழை நேசிக்கும் உள்ளங்களுக்கு (நம் நண்பர்களுக்கு ) மன்றத்தை அறிமுகம் செய்து வைக்கலாம்.....
(4) வேலை வாய்ப்பு தகவல்களை தனிச்சுட்டியாகவே (பயனுள்ள தகவல்கள் பகுதியில் இல்லாமல் ) கொடுக்கலாம்.... ஒவ்வொரும் அதில் தங்கள் நாடுகளில் வேலை வாய்ப்பு பற்றி தகவல்கள், தளங்களை பற்றி கொடுக்கலாம்........

பரஞ்சோதி
26-05-2005, 07:49 AM
பாராட்டுகள் அறிஞர், மிக முக்கியமான விசயத்தை பேச ஆரம்பித்திருக்கீங்க.

என்னாலான பங்களிப்பு தொடர்ந்து கொடுப்பேன். மற்றவர்களின் கருத்துகளை எதிர்பார்ப்போம்.

அறிஞர்
26-05-2005, 08:06 AM
தங்களின் கருத்துக்களையும் தாருங்கள்... பரம்ஸ்....

மன்மதன்
26-05-2005, 10:20 AM
மன்றத்தின் முன்னேற்றம் பற்றி பேசுவதை விட செயலில் காட்டினால் நலம்..

1. நல்ல தரமான கவிதைகள் வந்த பொழுது அதை பாராட்டி, அல்லது குறைகளை சுட்டி காட்டி , ஊக்கப்படுத்த ஒரு குழு மாதிரி நண்பர்கள் இருந்தனர். இப்பொழுது 3, 4 கருத்துக்களிலே 'நன்றியுரை' போடும் படி ஆகிவிடுகிறது..

2. கவிதை பகுதியை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று மூத்த கவிர்கள், இன்னொன்று என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்காக.

3. முன்பு செய்திகள் பக்கம் இருந்தது. அன்றாட செய்திகளை கொடுத்து, படித்து பயன் பெற்றோம்.. இன்று சினிமாவே மன்றத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது..

4. கண்காணிப்பாளர்கள் அவசியம் தேவை.. யாராவது தப்பாக டைப் பண்ணினாலோ, இல்லை நல்ல பதிவுகளில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டாலோ உடனே அதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது கிண்டலாக மாறி, அந்த பதிவின் போக்கையே மாற்றிவிடும்..

5. புதுசு புதுசாக , கண்ட மேனிக்கு , தேவையில்லாத பதிவுகள் மன்றத்திற்கு தேவையில்லாதது. அது புதிதாக சேருபவர்களுக்கு தவறான எண்ணத்தை உண்டாக்கும். அட, தமிழ் மன்றத்தில் விஷேசமில்லை என்று வந்தவுடனே போய் விடுவார்கள். பல தமிழ் நண்பர்கள் வந்தவுடனே மூட்டை கட்டியது நமக்கு தெரிந்ததே..

6. கிண்டல், கேலி நண்பர்களிடையே சகஜம். அதை பதிவுகளுக்கேற்ப பண்ணிக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் நண்பர்கள் பேசிக்கொள்ளும் போது எந்த டாபிக் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அப்படி பதிவின் போக்கு கிண்டலாக மாறும் போது அதை திசை திருப்ப வேண்டியது கண்காணிப்பாளர்களின் கடமை..

7. Statistics படி பார்த்தால், அதிக பதிவு சினிமா சம்பந்த பட்டு இருக்கிறது. சினிமாவில் ஆர்வம் உள்ளவர்கள் கதை எழுதலாம். சிறு சிறு கதைகளாக எழுதி பழக பழக, திரைக்கதையெல்லாம் வைத்து , பெரிய சினிமாவே மன்றத்தில் ரிலீஸ் பண்ணலாம்.

8. மன்றத்திலிருந்து விலகி போனவர்களை மறு படி வந்து பார்த்து விட்டு செல்லுமாறு E-mail அனுப்பலாம். நேரமின்மையால் வராதவர்கள் அப்பப்ப வந்து மன்றம் பற்றிய கருத்துக்கள் சொன்னால் மட்டுமெ எங்கே தவறு நடக்கிறது என்று தெரியும்..

இளசு , இக்பால், நண்பன், ராம்பால் மற்றும் யாரெல்லாம் மன்றததை வளர்த்தார்களோ , அவர்கள் மாதம் ஒருமுறையாவது மன்றம் வந்து பார்த்துவிட்டு செல்லும் படி E-Mail அனுப்பவேண்டும்..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
26-05-2005, 10:42 AM
அருமையான கருத்துக்கள்.. அன்பரே....

கவிதைப்பகுதியை இரண்டாக பிரிப்பது நல்லது....

செய்திசோலை பிரிவில் அன்றாட செய்திகளுக்கு ஒரு தனி திரெட் ஆரம்பிக்கலாம்...

கிண்டல், கேலி குறைக்கவேண்டியது அவசியம்தான்..... எல்லாவற்றையும் ஐவரணியில் செய்யலாம்....

சினிமா பகுதி பற்றி..... அவ்வளவாக தெரியாது..... ஆர்வமுள்ளவர்கள் கதை எழுதலாம்.... விரைவில் நானும் எழுதுவேன் என நினைக்கிறேன்.. காலம் பதில் சொல்லும்...

மன்றம் இன்னும் கொஞ்சம் செழித்தவுடன்.. அடுத்த மாதம் பழையவர்களை அழைக்கலாம்...

பழையவர்கள் பலர் மற்ற தளங்களில் ஈடுபட்டிருப்பதால்... மாதம் ஒருமுறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை வர வழைத்து... தனி பகுதியில்... மன்றத்தின் போக்கு என தனித்திரெட்டில் பதிய சொல்லலாம்.

மன்மதன்
26-05-2005, 10:44 AM
நல்லது அறிஞரே.. அதன் படியே ஆகட்டும் :)
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
26-05-2005, 10:45 AM
நல்லது அறிஞரே.. அதன் படியே ஆகட்டும் :)
அன்புடன்
மன்மதன்

எதிர்காலத்தில் நாமனைவரும் இணைந்து உயர்த்துவோம்

Nanban
26-05-2005, 04:08 PM
மன்றத்தின் முன்னேற்றம் பற்றி பேசுவதை விட செயலில் காட்டினால் நலம்..

இளசு , இக்பால், நண்பன், ராம்பால் மற்றும் யாரெல்லாம் மன்றததை வளர்த்தார்களோ , அவர்கள் மாதம் ஒருமுறையாவது மன்றம் வந்து பார்த்துவிட்டு செல்லும் படி E-Mail அனுப்பவேண்டும்..

அன்புடன்
மன்மதன்

மன்மதன், இருந்தாலும் நீ இப்படி என் காலை வாரி விட்டிருக்கக் கூடாது. தினம்தினம் வர்ர ஆளைப்பார்த்து, மாதம் ஒருமுறை வந்தால் போதும்னு மின்னஞ்சல் போடச் சொல்றீயபா.... என்ன பிரச்னைன்னாலும் மன்றத்தில பேசித் தீத்துக்கலாம். இப்படி தடை உத்தரவ்லாம் போடச் சொல்லி உபதேசம் பண்றீயே.... அப்படி நான் என்ன செஞ்சிட்டேன்னு பதர்றே....?

Nanban
26-05-2005, 04:12 PM
மன்றத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது - lack of sinceretiy. தீர்க்கமின்மை. தீர்மானமின்மை. வாதத்தில் திறமையில்லாமை. எல்லாவற்றிற்கும் தலையாட்டிவிட்டு போய்விடும் தன்மை.

சோர்வடைய வைக்கிறீர்கள் நண்பர்களே....

Nanban
26-05-2005, 04:23 PM
மன்றத்தின் முன்னேற்றம் பற்றி பேசுவதை விட செயலில் காட்டினால் நலம்..

2. கவிதை பகுதியை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று மூத்த கவிர்கள், இன்னொன்று என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்காக.

அன்புடன்
மன்மதன்

மன்மதன் யார் அந்த மூத்த கவிஞர்? வயசானவங்களா?

கவிதைக்கு வயதெல்லாம் கிடையாதப்பா.....

விவாதத்திற்கு உட்பட்டாலே போதும்... தயை தாட்சண்யமில்லாமல் விவாதங்கள் எழும்பினாலே போதும்... பல கவிதைகள் புரிவதில்லை தான். இன்னமும் பெண்களின் தாவணியைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கணும்னெல்லாம் எதிர்பார்த்தார்கள் என்றால், என்னால் எழுத இயலாது.

என்னுடைய நம்பிக்கைகள் வளர்ந்திருக்கின்றன. கவிதையின் தரம் உயர்ந்திருக்கின்றது. சந்தேகமில்லை. இன்னும் வளர வேண்டிய உத்வேகம் இருக்கிறது. ஆனால், இதே தரம் வாசிப்பவர்களிடத்தில் வளரவில்லையோ என்ற அச்சம் எழுகிறது. கவிதையை இன்னும் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தும் திடமில்லை என்ற எ
ண்ணம் புதிய வழித்தடங்களையும். மேய்ச்சல் நிலங்களையும் தேடச் சொல்லுகிறது. இது தவிர்க்க இயலாதவை. இது ஒரு நிலை என்றால் - மற்றொருபுறம் வாசிப்பிற்குச் சரியான தீனி இல்லாமை. வாசிப்பு அனுபவம் கிட்டாத பொழுது மேலும், மேலும் எழுதி என்ன பயன்?

தீர்வு எல்லாம் - எத்தகைய வாசகன் வேண்டுமென்பது தான். அதைப் பொறுத்தே கவிஞன் கிடைப்பான். இன்று தமிழ் இலக்கியம் கவிதை ஒரு தீவிர நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணைக் கட்டிக் கொண்டு, யானையைத் தடவும் பேதமையை எத்தனை தான் சகிக்க முடியும்?

வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் நண்பர்களே....

Nanban
26-05-2005, 04:33 PM
மன்றத்தின் முன்னேற்றம் பற்றி பேசுவதை விட செயலில் காட்டினால் நலம்..

4. கண்காணிப்பாளர்கள் அவசியம் தேவை.. யாராவது தப்பாக டைப் பண்ணினாலோ, இல்லை நல்ல பதிவுகளில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டாலோ உடனே அதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது கிண்டலாக மாறி, அந்த பதிவின் போக்கையே மாற்றிவிடும்..

7. Statistics படி பார்த்தால், அதிக பதிவு சினிமா சம்பந்த பட்டு இருக்கிறது. சினிமாவில் ஆர்வம் உள்ளவர்கள் கதை எழுதலாம். சிறு சிறு கதைகளாக எழுதி பழக பழக, திரைக்கதையெல்லாம் வைத்து , பெரிய சினிமாவே மன்றத்தில் ரிலீஸ் பண்ணலாம்.

8. மன்றத்திலிருந்து விலகி போனவர்களை மறு படி வந்து பார்த்து விட்டு செல்லுமாறு E-mail அனுப்பலாம். நேரமின்மையால் வராதவர்கள் அப்பப்ப வந்து மன்றம் பற்றிய கருத்துக்கள் சொன்னால் மட்டுமெ எங்கே தவறு நடக்கிறது என்று தெரியும்..

அன்புடன்
மன்மதன்

மன்மதன், பாராட்டுகள்....

குறைகளை மிகச் சரியாக அடையாளம் கண்டுள்ளீர்கள். ஆனால், யார் பதில் சொல்லப் போகிறார்கள்? சிலவற்றிற்கு நான் சொல்லிவிட்டேன்... மீதிக்கு....?

மற்றவர்கள் வரட்டும்...

அன்புடன்

சுவேதா
26-05-2005, 05:14 PM
மிகவும் அருமையான ஜோசனை அறிஞர் அண்ணா கூறியதும் மன்மதன் கூறியதும் மிகவும் சரி அதுவே நல்ல தீர்மானம் உங்களுடன் சேர்ந்து நானும் ஒத்துழைப்பேன் அண்ணா.

அறிஞர்
27-05-2005, 06:45 AM
நல்ல ஆலோசனைகள்.. நண்பன்...

வாசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுகிறோம்....

ஒரு படைப்பு ஆராய்ந்து, நிறுத்து பார்க்கும் போது...... அதற்கு பலர் நாம் தகுதியானவர்களா.. என்று எண்ணி வாழ்த்துக்களுடன் கடந்து செல்கிறோம்...

இனி தாங்கள் நினைக்கிற படி ஆராய்வுகள் தொடரும் என எண்ணுகிறேன்...

மன்மதன்
28-05-2005, 04:23 AM
மன்மதன், பாராட்டுகள்....

குறைகளை மிகச் சரியாக அடையாளம் கண்டுள்ளீர்கள். ஆனால், யார் பதில் சொல்லப் போகிறார்கள்? சிலவற்றிற்கு நான் சொல்லிவிட்டேன்... மீதிக்கு....?

மற்றவர்கள் வரட்டும்...

அன்புடன்

நீங்கள் கூறிய பதில் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.. உங்களிடமிருந்து இப்படி வார்த்தைகளை பிடுங்கத்தான் இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. நான் அப்படி எழுதவில்லையென்றால் , நீங்கள் இந்த அளவுக்கு உங்கள் கருத்துக்களை கொடுத்து இருக்க மாட்டீர்கள். உங்கள் கருத்துக்களை படிப்பவர்கள் அதை மனதில் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையோட..
மன்மதன்

rambal
28-05-2005, 08:27 PM
அன்பான நண்பர்களுக்கு,

மன்றம் வளரவில்லை எனும் வாதம் தவறு..

தேங்கிய நிலை என்றும் சொல்லலாம்..

தொழில் நுட்ப அடிப்படையில் பார்த்தால் மன்றம் இன்றைய நுட்பத்திற்கு மாறி இருக்கிறது..
மன்ற நண்பர்களும் ஏற்றுக் கொண்டு மாறி இருக்கிறார்கள்..

தேங்கிய நிலைக்குக் காரணம் என்னவென்றால்..
நண்பன் சொன்ன சில காரணங்கள் முக்கியமானவை.. மேலும் சில காரணங்களும் உண்டு..

நண்பர்கள் அனுமதித்தால் இதை ஒட்டி எனது கருத்தை முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்..

பரஞ்சோதி
28-05-2005, 08:35 PM
நண்பர் ராம்பால் தன் கருத்துகளை கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

தமிழ் மன்றம் புதிய பாதையை நோக்கி நடை போடுகிறது. புதிய ரத்தம், புதிய சிந்தனை, புதிய இலக்கு.

rambal
29-05-2005, 05:02 PM
1. ஒரு இயக்கம் என்பது அதன் கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
அந்தக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரைதான் அந்தக் கொள்கைகளும் அதைப் பற்றிச் சிந்தித்த
சிந்தனாவாதிக்கும் சொந்தம். அதன் பிறகு அதை எடுத்துச் செல்லும் திறன் எல்லாம்
தலைமை குணம் வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே உரியது. அப்படி தலைமை குணம் உள்ள நபர்கள்
கையில் கொடுக்கப்படும் பொழுது அது பரவுகிறது. தனக்கென தனியான ஒரு கூட்டத்தை
அமைத்துக் கொள்கிறது. பின் தலைமை என்ற மிதப்போடு செயல்படுகையில் கோஷ்டிப் பூசல் உருவாகிறது.
தலைமை குணம் இல்லாத நபர்களிடம் தலைமைப் பதவி போய்ச் சேர்கிறது. அதன் பின் அந்தக் கொள்கை
அழிந்து போய் விடுகிறது. அந்தக் கொள்கையைப் பற்றிக் கனவுகண்டவனின் நிலை?

கார்ல்மார்க்ஸிற்கு நிகழ்ந்தது இதுதான்.. இந்தியாவிற்கு நிகழ்ந்தது இதுதான்.. வரலாறு முழுதும்
இதுதான்...

மன்றமும் ஒரு வகையில் இயக்கம்தான் .. இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் இதுதான்.

ஒரு நபர் மன்றத்தை விட்டு விலகுகையில் ஏன் விலகுகிறார்? யாரும் ஆராய்ந்து பார்க்காத கேள்வி..
இதை ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது அதற்கு உரிய நடவடிக்கைகளை
எடுத்தாலே போதும்..

இளசு என்ன காரணத்திற்காக வரவில்லை?

இது ஒரு வகைக் காரணம்..

தொழில் நுட்பத்திற்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்ளும் நண்பர்கள்
கருத்தியல்ரீதிக்கு ஏன் மாறவில்லை.. நிறைய படிக்கவேண்டும் என்பதாலா?
அல்லது எதைப் படிக்கவேண்டும் என்று தெரியாததாலா?

2. ஒரே வகைக் கவிதைகள்.. ஒரே வகை கதைகள்.. ஏன் மாறவில்லை..

மன்றம் ஆரம்பித்த போது கதைகள் பக்கம் எதுவும் இல்லை.. எம்பரர் சுஜாதாவின் கதைகளை
பதிந்து கொண்டிருந்தார். காப்பிரைட் பிரச்சினைகள் வர வாய்ப்பிருந்த சமயம்.

நம்முடைய கதைகளைப் பதிக்கத்தானே மன்றம்.. பின் வேறொருவருடைய கதை இங்கு எதற்கு?

அதன் விளைவாகத்தான் மன்றத்தின் முதல் கதை எழுதி பதிந்தேன். முதல் தொடர்கதை..
முதல் குறுநாவல். நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கைதான் என்னை எழுத வைத்தது.
மன்றம் அதற்கான நிலமாக இருந்தது.
இந்த நம்பிக்கை இன்று மன்றத்தில் காணக்கிடைப்பது அரிதாகிவிட்டது.

3. எந்த வகை எழுத்தை எங்கு பதிக்கவேண்டும் என்று ஒரு தீர்மானமின்மை நிகழ்கிறது.
இந்தக் காரணம் யாரையும் குறை கூறுவதற்காக எழுதவில்லை.

பாரதி மன்னிக்கவும்..

பாரதியின் அற்புதமான இலக்கியக் கட்டுரையை சிறுகதைகளின் பக்கம் படிக்க நேர்ந்தது.
அதைப் படித்து விட்டு அவருக்கு தயக்கமுடன் எடுத்துச் சொன்னதில் அதை இலக்கியப்பகுதிக்கு
மாற்றி விட்டார்.

இதற்கு அவரைக் காரணம் சொல்லமாட்டேன். மற்ற நண்பர்கள் எடுத்துச் சொல்லியிருந்தால்
அவர் அங்கு பதிந்திருப்பார்.

4. இறுதியாக எல்லாவற்றிற்கும் அடிப்படையான வாசிக்கும் தன்மை,
வரும் விமர்சணங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், சரியான கருத்தை முன் வைத்தல், அதை ஏற்றுக் கொள்ளுதல்...

இந்த காரணங்கள் மட்டுமன்றி இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கக் கூடும்..

இவைகளைப் பற்றிஅலசுவது ஒரு புறம் இருக்கட்டும்..
இன்னொரு புறம் நண்பர்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்..

தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றி விமர்சணம் எழுதுங்கள்.
இது ஒரு வகை வழி. நமது விமர்சணங்கள் பார்வைகள் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்கும் களமாக இது இருக்கும்..

பிரியன்
30-05-2005, 08:55 PM
இந்த விவாதத்தில் மன்றத்தலைவரின் பார்வைகளையும் எதிர்பார்க்கிறேன்..
தன் கருத்துக்களை விரைவில் பதிவார் என்று காத்திருக்கிறேன்...

இராசகுமாரன்
31-05-2005, 08:13 PM
கருத்து கூற அழைத்த உங்கள் பிரியனுக்கு நன்றி..

இந்த மன்றம் அமைய முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் ராம்பால். அதனால், அவருடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை. துவக்க காலத்தில் ஆர்வமாக இருந்த நண்பர்கள் பலர் பலவிதமான சூழ்நிலைகளில் சிக்கி வரமுடியாமல் இருக்கிறார்கள். ஒருவர் வராவிடில் நம் மன்றம் நின்று விடக் கூடாது. மற்றொருவர் தானாக தலைமை ஏற்று கொண்டு செல்ல வேண்டும். அந்த நோக்கத்தில் தான் புதிய உதவிக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இனி நிமிர்ந்த நெஞ்சுடன் மன்றம் பீடு நடை போடும்.

எதுவுமே ஒரே மாதிரி இருந்தால் சிறிது சலிப்பு தட்டும். அதற்காக சில மாறுதல்கள் செய்யும் போது சுவையாக இருக்கும். எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும் என கூறினால் தான் எங்களால் அதற்கு ஏற்றது போல் மாற்றங்கள் செய்ய முடியும்.

முன்பு மன்றத்தில் பங்கு பெற்றவர்கள் ஒரு வெறியுடன் எழுதினார்கள். தமிழ் இணையத்தில் கொடி கட்டி பறக்க வேண்டுமென்ற வெறி. ஆனால், இன்று பொழுது போக்கிற்காக வந்து செல்வது போல் ஆகிவிட்டது முக்கிய காரணம்.

இதை மாற்ற, படிப்பதற்கு என நேரம் ஒதுக்குங்கள். பிறகு சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். பிறகு எழுத்துவதற்கு தானாக கருத்துக்கள் கிடைக்கும்.

எனது நாலுவரி

நிறைய படியுங்கள்,
நிறைய சிந்தியுங்கள்...
தவறாமல் மன்றம் வாருங்கள்.
தானாக எழுதுவீர்கள்...

அறிஞர்
01-06-2005, 01:28 AM
எனது நாலுவரி

நிறைய படியுங்கள்,
நிறைய சிந்தியுங்கள்...
தவறாமல் மன்றம் வாருங்கள்.
தானாக எழுதுவீர்கள்...

நல்லது இராசகுமாரன்.... அனைவரும் படித்து, சிந்திது, மன்றம் வந்து எழுத முயற்சிக்கிறோம்....

பிரியன்
01-06-2005, 05:22 AM
நன்றி ராஜகுமாரன்..
நம் மன்ற அமைப்பு மிகவும் சிறப்பான ஒன்று ..
அதை வெறுமனே பொழுது போக்கிற்காக மட்டும் பயன்படுத்தக்கூடாது. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மன்றத்தை முன்னெடுத்து செல்ல எனது விரிவான பார்வையை நாளை பதிக்கிறேன்....

அறிஞர்
01-06-2005, 06:59 AM
மன்றத்தை முன்னெடுத்து செல்ல எனது விரிவான பார்வையை நாளை பதிக்கிறேன்....

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் பிரியனே.. உங்கள் பார்வையை.....

இக்பால்
01-06-2005, 04:37 PM
அதானே...மன்மதன் தம்பி....நண்பர் நண்பன் சொன்னது போல் அடிக்கடி வந்து

செல்லும் எங்களைப் பார்த்து மாதத்திற்கு ஒரு முறை வரச் சொல்கிறீர்களே!

பதிவுகள் கொடுக்கத்தான் நேரமே இல்லாத... ஒரு நேரத்தில் இருக்கிறோம்.

அறிஞர் தம்பி...எல்லோரும் மறுபடியும் முன்னர்போல் வரும் காலம் வர நானும்

ஆசைப் படுகிறேன். இன்னுமொரு ஏழெட்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.

எது எப்படியோ...மன்றம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருப்பதாக என் மனசுக்கு

படுகிறது. தொடரட்டும்.

-அன்புடன் இக்பால் அண்ணா.

பிரியன்
01-06-2005, 08:11 PM
அவ்வப்போது ஏதேனும் ஓரிரு வார்த்தைகளாவது பதிவு செய்தால்தானே அண்ணா தெரியும். மூத்த உறுப்பினர்களின் பதிவுகள் சோர்வை நீக்கும் ஒரு மனோபலத்தை தரக்கூடியதல்லவா.
தவறிருப்பின் மன்னிக்கவும்

மன்மதன்
02-06-2005, 06:48 AM
அதானே...மன்மதன் தம்பி....நண்பர் நண்பன் சொன்னது போல் அடிக்கடி வந்து

செல்லும் எங்களைப் பார்த்து மாதத்திற்கு ஒரு முறை வரச் சொல்கிறீர்களே!

-அன்புடன் இக்பால் அண்ணா.

நான் அப்படி குறிப்பிட்டது ஒருவகையில் நல்லதாகி போய்விட்டது. நீண்ட நாள் கழித்து உங்களை காண்பதில் மகிழ்ச்சி..
அன்புடன்
மன்மதன்

இக்பால்
02-06-2005, 08:48 AM
நான் அப்படி குறிப்பிட்டது ஒருவகையில் நல்லதாகி போய்விட்டது. நீண்ட நாள் கழித்து உங்களை காண்பதில் மகிழ்ச்சி..
அன்புடன்
மன்மதன்

என் தம்பி காரியத்தில் கண்ணாக இருப்பார் என்பது எனக்குத் தெரியாதா
என்ன? :)

எங்கே உங்களை விட்டு போய் விடப் போகிறேன்? :)

-அன்புடன் அண்ணா.

இக்பால்
02-06-2005, 08:51 AM
அவ்வப்போது ஏதேனும் ஓரிரு வார்த்தைகளாவது பதிவு செய்தால்தானே அண்ணா தெரியும். மூத்த உறுப்பினர்களின் பதிவுகள் சோர்வை நீக்கும் ஒரு மனோபலத்தை தரக்கூடியதல்லவா.
தவறிருப்பின் மன்னிக்கவும்

எங்கள் பிரியத் தம்பி... நீங்கள் சொல்வது சரிதான்.

மன்னிப்பெல்லாம் அண்ணாவிடம் கேட்கக் கூடாது. :)

-அன்புடன் அண்ணா.

பிரியன்
02-06-2005, 09:13 AM
எங்கள் பிரியத் தம்பி... நீங்கள் சொல்வது சரிதான்.

மன்னிப்பெல்லாம் அண்ணாவிடம் கேட்கக் கூடாது. :)

-அன்புடன் அண்ணா.

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா...

அறிஞர்
02-06-2005, 03:04 PM
அறிஞர் தம்பி...எல்லோரும் மறுபடியும் முன்னர்போல் வரும் காலம் வர நானும்

ஆசைப் படுகிறேன். இன்னுமொரு ஏழெட்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.

எது எப்படியோ...மன்றம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருப்பதாக என் மனசுக்கு

படுகிறது. தொடரட்டும்.

-அன்புடன் இக்பால் அண்ணா.

உங்களின் முழு ஈடுபாட்டுக்காக.. ஏழெட்டு மாதங்கள் காத்திருக்கிறோம்....

இடைப்பட்ட காலத்தில் வந்து சில படைப்புக்களை கொடுத்து எங்களை மகிழ்வூட்டுங்கள்.. அண்ணா.......

தங்களின் ஆலோசனைகள்.... மன்றத்திற்கு தேவையானவை.....

இக்பால்
03-06-2005, 06:44 AM
ஊருக்குப் போய் விட்டு வந்து விடுகிறேனே அறிஞர் தம்பி... :)

இந்த மணியா அண்ணா, கவிதா தங்கை, சேரன்கயல் தம்பி எல்லோரையும்
ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுகிறேனே. :)

-அன்புடன் அண்ணா.

அறிஞர்
03-06-2005, 07:01 AM
ஊருக்குப் போய் விட்டு வந்து விடுகிறேனே அறிஞர் தம்பி... :)

இந்த மணியா அண்ணா, கவிதா தங்கை, சேரன்கயல் தம்பி எல்லோரையும்
ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுகிறேனே. :)

-அன்புடன் அண்ணா.
நல்லது போய் வாருங்கள்.. அனைவரின் தொலைபேசி எண்ணையும் மணியா அண்ணாவிடம் வாங்கி கொள்ளுங்கள்....

thempavani
03-06-2005, 09:36 AM
என்னது ஊருக்கா...

அப்போ பாண்டிச்சேரியில் ஒரே கொண்ட்டட்டம் தான் போங்க.. அண்ணா பயணம் நன்முறையில் அமைய வாழ்த்துக்கள்

(தலை இப்போதே தயாராக இருப்பாரே)

praveen
29-09-2007, 02:02 PM
நமது தளத்தில் உள்ள தேடு பொறி இயங்குவதில்லையே, அது இயங்குவதில் பிரச்சினை இருந்தால் பிற தளங்களில் இருப்பது போல கூகிள் தேடு பொறியை இனைக்கலாமே, சோதனை முறையில் இனைத்து பார்த்து, பெரிய அளவில் பிரச்சினை இல்லை என்றால் நிரந்தரமாக சேர்க்கலாமே,

தர்போதைய தேடுதல் வேலை செய்யாததால் ஏற்கெனவே பதிந்த ஒரு விசயத்தை கண்டு அதில் புதுப்பிக்க முடியாமல் தனியே ஒரு திரி துவங்க நேரிடுகிறது.

சூரியன்
29-09-2007, 03:28 PM
மன்றத்தின் முன்னேற்றம்

(4) வேலை வாய்ப்பு தகவல்களை தனிச்சுட்டியாகவே (பயனுள்ள தகவல்கள் பகுதியில் இல்லாமல் ) கொடுக்கலாம்.... ஒவ்வொரும் அதில் தங்கள் நாடுகளில் வேலை வாய்ப்பு பற்றி தகவல்கள், தளங்களை பற்றி கொடுக்கலாம்........

இந்த முயற்சி கண்டிப்பாக பயன் அளிக்கும்.
பலருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது..

சாராகுமார்
16-10-2007, 05:59 AM
கருத்து கூற அழைத்த உங்கள் பிரியனுக்கு நன்றி..

இந்த மன்றம் அமைய முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் ராம்பால். அதனால், அவருடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை. துவக்க காலத்தில் ஆர்வமாக இருந்த நண்பர்கள் பலர் பலவிதமான சூழ்நிலைகளில் சிக்கி வரமுடியாமல் இருக்கிறார்கள். ஒருவர் வராவிடில் நம் மன்றம் நின்று விடக் கூடாது. மற்றொருவர் தானாக தலைமை ஏற்று கொண்டு செல்ல வேண்டும். அந்த நோக்கத்தில் தான் புதிய உதவிக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இனி நிமிர்ந்த நெஞ்சுடன் மன்றம் பீடு நடை போடும்.

எதுவுமே ஒரே மாதிரி இருந்தால் சிறிது சலிப்பு தட்டும். அதற்காக சில மாறுதல்கள் செய்யும் போது சுவையாக இருக்கும். எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும் என கூறினால் தான் எங்களால் அதற்கு ஏற்றது போல் மாற்றங்கள் செய்ய முடியும்.

முன்பு மன்றத்தில் பங்கு பெற்றவர்கள் ஒரு வெறியுடன் எழுதினார்கள். தமிழ் இணையத்தில் கொடி கட்டி பறக்க வேண்டுமென்ற வெறி. ஆனால், இன்று பொழுது போக்கிற்காக வந்து செல்வது போல் ஆகிவிட்டது முக்கிய காரணம்.

இதை மாற்ற, படிப்பதற்கு என நேரம் ஒதுக்குங்கள். பிறகு சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். பிறகு எழுத்துவதற்கு தானாக கருத்துக்கள் கிடைக்கும்.

எனது நாலுவரி

நிறைய படியுங்கள்,
நிறைய சிந்தியுங்கள்...
தவறாமல் மன்றம் வாருங்கள்.
தானாக எழுதுவீர்கள்...

நமது மன்றம் பொலிவுடன் நடக்கிறது.