PDA

View Full Version : ஈரம்.



kavitha
25-05-2005, 08:35 AM
கண்களில் பிசுபிசுப்பு
அவன்
நெஞ்சில் ஈரமில்லை.

பரஞ்சோதி
25-05-2005, 10:22 AM
சின்னஞ்சிறு கவிதையில் மிகப்பெரிய விசயத்தை சொல்லியிருக்கீங்க சகோதரி.

மன்மதன்
25-05-2005, 10:31 AM
நல்ல ஹைக்கூ..
அன்புடன்
மன்மதன்

Iniyan
25-05-2005, 10:34 AM
ஈரம் பாய்ந்த உங்கள் கவிதை ஒரு கண்ணீர் காவியத்தை குறுக்கி சின்னதாய் அடித்து விட்டது. வாழ்த்துக்கள்.

கவிதா அப்படியே நேரம் கிடைக்கும் போது உங்கள் கையெழுத்தை யுனிகோடுக்கு மாற்றலாமே?

karikaalan
25-05-2005, 01:05 PM
ஐந்தே சொற்களில் பெரிய காவியத்தையே கொணர்ந்துவிட்டீர்கள் கவிதாஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

சுவேதா
25-05-2005, 01:58 PM
அருமையான கவிதை.
மிகவும் நன்றாக உள்ளது அக்கா!

அறிஞர்
25-05-2005, 04:21 PM
நல்ல கவி......

அருமையான எளிமையான சிந்திக்க வைக்கும் வரிகள்

Nanban
25-05-2005, 06:08 PM
அவன் கண்களில் ஈரம்
அவள் மனம்
தேடி ஓடியது ஆண் மனதை....

மன்மதன்
26-05-2005, 11:31 AM
போட்டி ஹைக்கூ.. பிரமாதம் நண்பன்.
அன்புடன்
மன்மதன்

Nanban
26-05-2005, 01:45 PM
போட்டி ஹைக்கூ.. பிரமாதம் நண்பன்.
அன்புடன்
மன்மதன்

மன்மதன் எதைப் பிரமாதம் என்கிறீர்கள்? அந்தக் கவிதை எல்லோரும் எதிர்பார்க்கும் தொனியில் இருக்காது. கொஞ்சம் முயற்சித்து, விளங்கிக் கொண்டதை எழுதுங்கள் - பின்னர் நான் எந்த அர்த்தத்தில் எழுதினேன் என்று கூறுகிறேன். வியப்பாக இருக்கும்...

பிரியனுக்கெல்லாம் தொலைபேசி விட்டு, பின்னர் எழுதக்கூடாது..... சரியா......

அன்புடன்

babu4780
26-05-2005, 02:11 PM
அருமை கவிதா. ஹைகூ சூப்பர்



அவன் கண்களில் ஈரம்
அவள் மனம்
தேடி ஓடியது ஆண் மனதை...

நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு புரியவில்லையெ....

Nanban
26-05-2005, 04:03 PM
மன்மதன், பாபுவிற்கு விளக்கி விடுங்கள், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

பரஞ்சோதி
26-05-2005, 08:36 PM
மன்மதன், பாபுவிற்கு விளக்கி விடுங்கள், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

ஹா ஹா!

மன்மதன் என்ன அனுபவசாலியா?

பெரி தான் அனுபவமில்லாதவரா?

சரி சரி, மன்மதா, வழக்கம் போல் உன் பதிலை கவிதையாக கொடு.

kavitha
30-05-2005, 10:05 AM
சகோதரர் பரஞ்சோதி, மன்மதன், இனியன், சகோதரர் கரிகாலன், சகோதரி சுவேதா,
அறிஞர் அனைவருக்கும் நன்றி

அவன் கண்களில் ஈரம்
அவள் மனம்
தேடி ஓடியது ஆண் மனதை...
பதில் கவிதை தந்த நண்பனுக்கும் நன்றி. இதன் விளக்கத்தை (பிரியன், நண்பன்,மன்மதன்--- யார் தந்தாலும் சரி) விரைவில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

"ஈரம் பாய்ந்த உங்கள் கவிதை ஒரு கண்ணீர் காவியத்தை குறுக்கி சின்னதாய் அடித்து விட்டது. வாழ்த்துக்கள்.

கவிதா அப்படியே நேரம் கிடைக்கும் போது உங்கள் கையெழுத்தை யுனிகோடுக்கு மாற்றலாமே?"

மாற்றி விட்டேன் இனியன். நன்றி.

kavitha
30-05-2005, 10:13 AM
" அருமை கவிதா. ஹைகூ சூப்பர் "
நன்றி பாபு

"சரி சரி, மன்மதா, வழக்கம் போல் உன் பதிலை கவிதையாக கொடு."

அடுத்த ( மணல் இல்லை ) வீட்டுப்பாடம் எப்போ மன்மதன்?

Nanban
30-05-2005, 08:13 PM
கண்களில் பிசுபிசுப்பு
அவன்
நெஞ்சில் ஈரமில்லை

முதலில், மேலே கண்ட கவிதையை, எல்லோரும் பொருள் எடுத்துக் கொண்டதைப் போல, காதல் காவியாமாக பொருள் கொள்ளவில்லை. மாறாக, ஆண்களை வன்மையாக சாடும் ஒரு கவிதையாகத் தான் எடுத்துக் கொண்டேன். ஒரு பெண்ணின் கண்களில் கசியும் கண்ணீர், ஒரு ஆணின் மனதில் எந்த ஈரத்தையும் ஊற்றெடுக்க வைக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டே அன்றி, அது ஒரு காதல் காவியம் அல்ல. பெண்களின் கண்களில் ஈரம் எழுவதற்கு, எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் பொதுவானது ஏமாற்றம். ஒரு பெண் தான் ஏமாற்றப்படுகிறோம் என்று நினைக்குந்தோறும், கண்ணீர் உகுப்பாள். பெண்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீர்க்கும் ஆண் தன் நெஞ்சத்தில் ஈரம் ஊற்றெடுக்க வைத்தாக வேண்டுமென்றால், ஆண்களால் இந்த உலகில் வாழவே முடியாது. பிறகு, அவன் இதயம் வழியாக ஓடும், இரத்தம் கூட நீர்த்துப்போகும்.

பெண்கள் கண்ணீர் சிந்தி காரியம் சாதிப்பதை விட கறாராக இருந்து காரியம் சாதிப்பது தான் நல்லது. மேலும், கண்ணீர் விட்டு, காரியம் சாதிக்கும் வகையில் அவன் நெஞ்சில், ஈரமிருக்கிறதா என்று எட்டி எட்டிப் பார்த்து, மேலும், மேலும் கண்ணீர் விடுவது, பெண் தன்னைத்தானே அடிமைப்படுத்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் ஆகும்.

ஆக, காரிகைகள் கண்ணீர் உகுப்பதை நிறுத்திடவும்..... எல்லோர் நன்மைக்காகவும்.

மேலும், அதற்குப் பதிலாக நான் எதுவும் எழுதவில்லை. நான் எழுதியது அவருக்கான பதிலே அல்ல. கவிதா எழுதியது ஒரு கவிதை என்றால், நான் எழுதியது ஒரு கவிதை. ஈரம் என்ற வார்த்தை உசுப்பேற்றி விட்டது என்பதற்காக இரண்டையும் முடிச்சுப் போடுவது சரியல்ல.

அந்தக் கவிதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள்:


அவன் கண்களில் ஈரம்
அவள் மனம்
தேடி ஓடியது ஆண் மனதை...

ஒரு பெண், தன்னுடைய ஆண்மகன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் - நல்லவனாக, கெட்டவனாக.. ஆனால், கண்ணீர் உகுக்கும் கோழையாக மட்டும் இருந்து விடக்கூடாது என்றே விரும்புவாள். ஆதாலால், தான் எழுதினேன் - கண்ணீர் விடும் ஆணைக் கை கழுவி விட்டு, அவள் ஆண்மகனாக நடந்து கொள்ளும் ஒருவனை விரும்பி தன் மனதை திருப்பிக் கொண்டு விடுவாள்....

ஆக, ஆண்களிடமிருந்து கண்ணீரை எதிர்பார்க்காதீர்கள்
பெண்களின் கண்ணீரைக் கண்டு கரைந்தும் போகாதீர்கள்...

சுகந்தப்ரீதன்
20-03-2008, 05:56 AM
ஆஹா.. கவிதா அக்காவின் கவிதையும்... நண்பரின் கவிதையும் எதர்த்தமாகவும் ஈரமாகவும் * இருக்கிறது..!!
அதற்கான நண்பரின் விளக்கங்களும் அருமை..!!
வாழ்த்துக்கள் இருவருக்கும்..!!

இளசு
20-03-2008, 06:57 AM
ஐந்தே சொற்களில் பெரிய காவியத்தையே கொணர்ந்துவிட்டீர்கள் கவிதாஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

அண்ணலை வழிமொழிகிறேன்..பாராட்டுகள் கவீ!

நண்பனின் குறுங்கவிதையும் விளக்கமும் காணும்போது
''அந்த நிலாக்காலங்கள்'' மனதில் நிழலாடுகின்றன..

கவீ..அடிக்கடி என்னிடம் சொல்வது : '' அதெப்படிண்ணா.. இதேபோல் நானும் ஒன்றை எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன்'' என...

கவீக்கு நானும் சொல்கிறேன்: நானும் எழுதியிருக்கிறேன் இதையொட்டிய கருவில்..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=70700&postcount=74

சாம்பவி
20-03-2008, 07:46 AM
கவீக்கு நானும் சொல்கிறேன்: நானும் எழுதியிருக்கிறேன் இதையொட்டிய கருவில்..

http://www.tamilmantram.com/vb/newreply.php?do=newreply&p=70700


உதிரிப் பூக்களைத்
தொடுக்க இயலாது....
தடுக்கும்
லிங்க்...
டி*லிங்க்ஸ்...... !

அமரன்
20-03-2008, 08:02 AM
உதிரிப் பூக்களைத்
தொடுக்க இயலாது....
தடுக்கும்
லிங்க்...
டி*லிங்க்ஸ்...... !
இப்போ தொடுக்கும் பாருங்கள்.
நன்றி கவனயீர்ப்புக்கு.

நம்பிகோபாலன்
20-03-2008, 12:46 PM
அருமையான வரிகள்...

உன் கண்களில் நீர்பார்த்து
விட்டுகொடுத்தேன்
என்னெஞில் ஈரம் காய்ந்துபோனதை
யாரறிவார்...