PDA

View Full Version : கையெழுத்து



ப்ரியன்
23-05-2005, 09:17 AM
உந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
எந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
கலந்து எழுதும்
எதுவுமே
கவிதை!

பரஞ்சோதி
23-05-2005, 09:19 AM
என்னாச்சு பிரியன் இதுவரை மூன்று முறை பெயர் மாற்றி விட்டீங்களே.

பிரியன்
23-05-2005, 10:36 AM
அய்யா இவர் புதியவர் நானல்ல

அவர் - ப்ரியன்
நான் - பிரியன்

குழம்ப வேண்டாம்

மன்மதன்
23-05-2005, 10:39 AM
என்னாச்சு பிரியன் இதுவரை மூன்று முறை பெயர் மாற்றி விட்டீங்களே.

நானும் அதேதான் நினைச்சேன்.. ப்ரியன் என்றாலே கவிதைதான் போலிருக்கு பாருங்க.. முதல் பதிவே கவிதையாக.
அன்புடன்
மன்மதன்

பிரியன்
23-05-2005, 10:39 AM
வாருங்கள் இவன்பிரியன்...

தொடர்ந்து கவிதை தாருங்கள்

சில இனைய தளங்களில் ப்ரியன் என்ற பெயரில் கவிதைகள் படைத்தவர் என்று எண்ணுகிறேன்

வருக வருக

pradeepkt
23-05-2005, 10:45 AM
வாங்க புது ப்ரியன்,
அறிமுகமே அசத்தலான கவிதையைக் கொடுத்திருக்கீங்க.

அவளில் கொஞ்சம், அவனில் கொஞ்சம்
எடுத்துச் செய்யும் எதுவுமே சிற்பம்தான்!
அவள் பேச்சும், அவன் பேச்சும்
கலந்தால் இழைவது இன்னிசைதான்!
அவள் கனவும் அவன் கனவும்
கலந்தால் வருவது சொர்க்கம்தான்!
அவள் வாழ்வும் அவன் வாழ்வும்
இணைக்கப் பிறந்தது காதல்தான்!

சரி, உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொஞ்சம் அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.
அண்ணா, மன்மதன், புதுக் கவிஞரை எப்படி கூப்பிடலாம்? அதை ரெண்டு ப்ரியன்களுமே முடிவு செய்யட்டுமா? :)

amudha
23-05-2005, 10:22 PM
ப்ரியன் -2,

வாங்க, வாங்க...எப்படி இருக்கீங்க?..வீட்ல எல்லாரும் செளக்கியமா?? :D

உங்க கவிதை கலக்கலா இருக்கு.. :)

amudha
23-05-2005, 10:24 PM
ப்ரதீப்,

''அவளில் கொஞ்சம், அவனில் கொஞ்சம் ''--நீங்க எழுதியதா??..நல்ல்ல்லா இருக்கு... :)

அறிஞர்
24-05-2005, 03:10 AM
வாருங்கள்.. அன்பரே...

புதிய துவக்கம்... இன்னும் பல படைப்புக்களை படைத்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள்

Iniyan
24-05-2005, 03:34 AM
வாழ்த்துக்கள் ப்ரியன். தொடர்ந்து எழுதுங்கள்.

பரஞ்சோதி
24-05-2005, 04:06 AM
அய்யா இவர் புதியவர் நானல்ல

அவர் - ப்ரியன்
நான் - பிரியன்

குழம்ப வேண்டாம்

நன்றி பிரியன்.

நான் கொஞ்சம் குழம்பி தான் போய்விட்டேன்.

புதிய ப்ரியன் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

இணையத்தில் வேறு ஒருவர் கூட இனியன் என்று நிறைய கவிதைகள் எழுதி வருகிறார். அது நம்ம இனியன் இல்லை தானே.

pradeepkt
24-05-2005, 05:04 AM
ப்ரதீப்,

''அவளில் கொஞ்சம், அவனில் கொஞ்சம் ''--நீங்க எழுதியதா??..நல்ல்ல்லா இருக்கு... :)

ஹை! அது நாந்தான். நன்றி அமுதா.

சுவேதா
26-05-2005, 05:27 PM
வாருங்கள் ப்ரியன் 2 உங்களது கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள். உங்கள் வரவு நல் வரவாகட்டும்

ப்ரியன்
24-11-2005, 08:02 AM
நன்றி மக்களே கொஞ்ச காலம் பணிச்சுமை காரணமாக தள்ளி இருந்தேன் மீண்டும் ப்ரியனின் கவிதைகள் என்று ஒரு புது இழை ஆரம்பித்திருக்கிறேன்,உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள் :)

இளசு
25-11-2005, 05:26 AM
ப்ரியன்.

நீங்கள் கவிதையில் முடிக்க

ப்ரதீப் -

சிற்பம், இசை எனக்
கூட்டுக்கலைகளைத் தொடர

காதலின் அழகிய வெளிப்பாடுகள் இங்கே..


இருவருக்கும் பாராட்டுகள்..


தொடருங்கள் நண்பர்களே.....

கவிதை தருமே...
ஆதலினால் காதல் செய்யுங்கள்..