PDA

View Full Version : பழைய திஸ்கி பதிவுகளை புதுப்பிப்பது..



மன்மதன்
23-05-2005, 06:56 AM
எந்த முறையில் பழைய திஸ்கி பதிவுகளை புதுப்பிப்பது .. ?

பழைய நல்ல பதிவுகளை அப்படியே புதிதாக யுனிகோடில் மறு பதிவு செய்ய வேண்டுமா?? இல்லை .. பழைய மன்றத்திலேயே EDIT செய்து யுனிகோடாக மாற்ற வேண்டுமா??

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
23-05-2005, 08:28 AM
எல்லா பதிவுகளையும் யுனிகோடில் மாற்றி... பழைய இடத்திலிருந்து... புது தளத்திற்கு மாற்றவேண்டும்.....

மன்மதன்
23-05-2005, 10:37 AM
எல்லா பதிவையும் யுனிகோடில் மாற்றி.. என்றால் ஒரேயடியாகவா இல்லை ஒவ்வொன்றா?? ஒவ்வொன்றா மாற்றும் போது எங்கே வைப்பது.. ???
அன்புடன்
மன்மதன்

Iniyan
23-05-2005, 11:32 AM
இதற்கு முதலில் அட்மின் அனுமதி வேண்டும்.

1) முதலில் நாம் ஒரு யுனிகோட் மாற்றக் குழு என அமைத்துக் கொள்ளலாம்.

2)பின் இந்த குழு உறுப்பினர்களுக்கு அட்மின் அனுமதி பெற வேண்டும்.

3) அனுமதி பெற்ற பின் பழைய தளத்தின் பதிவுகளை புதிய தளத்திற்கு ஒரு பிரதி எடுக்க வேண்டும்.

4) பிரதி எடுக்கப்பட்ட பதிப்புகள் ஒவ்வொன்றையும் இப்போது திஸ்கியில் இருந்து யுனிகோடுக்கு மாற்ற வேண்டும்.


இத்தளத்தினை நிர்வகிக்கும் வி-புல்லட்டின் செயலியில் பிரதி எடுப்பது எப்படி மற்றும் மாற்றுவது எப்படி போன்ற விளக்கமான தகவல்களை நான் பின்னால் தெரிவிக்கிறேன்.

முதலில் அறிஞர் சொன்னபடி குழு அமைத்து பின் ஒவ்வொருவருக்கும் இப்பகுதி என பிரித்து பின் வேலை ஆரம்பிக்கலாம். சரி தானே???

மன்மதன்
23-05-2005, 02:01 PM
நல்லது இனியன் அவர்களே..

முன்னால் பதித்ததை மறு பதிவு செய்வதற்கு பதிலாக அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால், நன்றாக இருக்கும். சீக்கிரம் குழு அமைங்க..

அன்புடன்
மன்மதன்

baranee
23-05-2005, 02:05 PM
யுனிகோட் மாற்றக் குழு
உறுப்பினர்கள்:
1.இனியன்
2.மன்மதன்
3.பரணீ
4. ?
5.?
?

மன்மதன்
23-05-2005, 02:16 PM
2. மன்மதன் ... எனக்கு ஓ.கே..

அன்புடன்
மன்மதன்

thempavani
23-05-2005, 02:27 PM
இந்த தேம்பா-வை விட்டுட்டீங்களே பரணி அண்ணா..

Iniyan
23-05-2005, 04:10 PM
அறிஞர் பெயரை நான் வழி மொழிகிறேன். மன்மதனுக்கும் தேம்பாவுக்கும் எனது மன்மார்ந்த நன்றிகள்.

அறிஞர்
24-05-2005, 03:46 AM
மாற்றும் குழு

பரணீ, இனியன், மன்மதன், தேம்பா, அறிஞர்,

Iniyan
24-05-2005, 05:37 PM
இப்போதைக்கு அறிஞர் குறிப்பிடுள்ள குழுவிற்கு அட்மின் அனுமதி வேண்டியும் மற்றும், குறிஞ்சி மன்றத்தில் 'யுனிகோடாக்க உதவி மன்றம்" என தனித்தொரு மன்றம் தொடங்கவும் பப்பியை வேண்டி உள்ளேன். இவை தயாரானால் இக்குழு நணபர்களுக்கென இருக்கும் இப்புது 'யுனிகோடாக்க உதவி மன்றத்தில் அனைத்து யுனிகோடாக்க முறைகளை பதிக்கிறேன்,.

நன்றி

அறிஞர்
25-05-2005, 02:37 AM
நல்லது நண்பரே... நடக்கட்டும் எல்லாம்.. நாங்க ரெடி

மன்மதன்
25-05-2005, 02:29 PM
சீக்கிரமே ஆரம்பிக்கப்பா.. நல்ல நல்ல கவிதைகளை எல்லாம் யுனிகோடாக்குவோம்..
அன்புடன்
மன்மதன்

Iniyan
25-05-2005, 02:30 PM
எனக்கும் அதே ஆசை தான். என்ன செய்ய பெருந்தலைகள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டி உள்ளதே???

Iniyan
26-05-2005, 06:06 PM
மேலும் தள மேற்பார்வையார்கள் தமிழ் மன்றத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் கையொப்பங்களையும் அழித்து விட இயலுமா? [இதற்கு இந்த வி-புல்லட்டின் மென்பொருளில் வழி இருந்தால் மட்டும்].

இப்போது உள்ளவர்கள் மட்டும் மீண்டும் தங்கள் கையொப்பத்தை யுனிகோடில் திரும்பப் பதித்துக் கொள்ளலாம்.

ஏனெனில் நிறைய பழைய பதிவுகளை யுனிகோடாக்கிப் பதிகையில் கையொப்பங்கள் இன்னும் திஸ்கியிலேயே இருப்பதால் விகாரமாக இருக்கிறது.

நன்றி