PDA

View Full Version : மணல் வீட்டுப்பாடம்



மன்மதன்
23-05-2005, 06:27 AM
தூரத்து
காக்கை கூட்டம்..
நண்பர்கள்
உல்லாசம்..

சுண்டல் பையன்
சென்னை தமிழ்..
பூக்காரியின்
அணுகுமுறை..

தேவையில்லாத
காட்சிகளை ஒதுக்கி..
வெகு தொலைவில்
தெரிந்த சிறுமி..

http://img.photobucket.com/albums/v372/manmathan/-LiveOneDayAtATime-.jpg

அழகாய் கட்டிய
மண்வீடு..
கலைத்து சென்றன
அலைகள்..
மகிழ்ச்சியில்
திளைத்த சிறுமி..
கட்டத்துவங்கினாள்
மறுவீடு..

சிறிது சாயம்
போனால் என்ன...
நம் வீடு
நம் குழந்தைக்குதானே..

மறைத்து வைத்த
கிரிக்கெட் பந்துகளை
பசங்களிடம் இன்றே
கொடுத்திருக்க வேண்டும்..


-
மன்மதன்
(இது திஸ்கியிலிருந்து மாற்றப்பட்டது
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=88295&postcount=1)

majara
23-05-2005, 07:12 AM
படித்த பிறகு
சிறிது நேரம் அப்படியே
நிலைத்து விட்டேன்
சிந்திக்கின்றேன் ....
இது ஒரு வாழ்க்கைப் பாடம்

சொல்லித்தான் ஆக வேண்டும்
வேறு வார்த்தை இல்லை
மிகவும் அழகாக இருக்கின்றது

amudha
24-05-2005, 08:52 PM
மன்மதன்,

வாவ்!!..கவிதை சிந்திக்க வைக்கிறது.., அந்த குழந்தையின் படம் கவிதைக்கு ஏற்ப அமைந்து இருக்கிறது...வாழ்த்துக்கள்!!

அமுதா.

ravidreams
27-05-2005, 04:05 PM
நல்ல முயற்சி. கவிதை முடிவு அருமை

Iniyan
27-05-2005, 04:37 PM
படம் பார்த்து கவிதை சொன்ன மன்மதனுக்கு ஒரு ஓ போடுவோம்

Mano.G.
28-05-2005, 06:52 AM
படித்து மறந்து போன கவிதைகளை மறுபடியும்
படிக்கும் பொழுது மீண்டும் பாராட்ட தூண்டுகிறது,
எழுதுங்கள் நிறைய எழுதுங்கள்
படிக்க நாங்கள் இருக்கிரோம்

மனோ.ஜி

பிரசன்னா
10-09-2005, 05:54 PM
வாவ்!!..கவிதை சிந்திக்க வைக்கிறது..,
நல்ல முயற்சி. கவிதை முடிவு அருமை