PDA

View Full Version : ஜீ - மெயில் டிரைவ்



பாரதி
22-05-2005, 12:53 PM
ஜீ - மெயில் டிரைவ் (Gmail - Drive)

பதிவு: பரணீ

[ நண்பர் மதனின் கேள்விக்கு பதிலாக மன்றத்தின் பழைய பகுதியிலிருந்து எடுத்து இதை இங்கே பதிக்கிறேன்.
நன்றி : பரணீ ]


http://www.viksoe.dk/code/gmail.htm
இந்த தளத்தில் கிடைக்கும் கீழ் கண்ட மென்பொருளை இறக்கி கணினியில் நிறுவிக் கொண்டால் ,

http://www.ahuntjens.nl/uploader/uploads/gmailfs.zip

உங்கள் ஜீ - மெயில் கணக்கினை மெய்நிகர் வட்டு சேமிப்பகமாக (Virtual Disk Storage) உங்கள் கணினியில் உருவாக்கி தருகிறது.

இதன் மூலம் உங்களுக்கு தேவையான கோப்புகளை மிக எளிதாக நகலாக்கி (மின்னஞ்சல்களாக அனுப்பத் தேவையில்லை ) இணையத்தில் சேமித்து வைத்துக்கொள்ளலாம், தேவையான போது இறக்கிக் கொள்ளலாம்.

ஜன்னல் 98 லும் வேலை செய்யும் என நினைக்கிறேன், தேடிய வரையில் இதை பற்றி ஒன்றும் தட்டுப் படவில்லை.

இது வேலை செய்ய மைக்ரோசாப்ட் இணைய உலவி 5.0 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்பு வேண்டும் என மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது, எனவே உங்கள் ஜன்னல் 98 ல் இறக்கி நிறுவிப் பாருங்கள்.

நிறுவி இதனை உள்ளமைப்பது (configure) ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. நிறுவியவுடன் உங்கள் கணினியில் "My Computer" ஐ திறந்தால் "Gmail Drive" என்று ஒரு புதிய வட்டினை (Disk) காண்பீர்கள், இது ஒரு மெய்நிகர் வட்டு (Virtual Drive). இதனை ஒரு சொடுக்கு சொடுக்குங்கள் , பயனாளர் பெயரினையும் கடவுச்சொல்லையும் கேட்கும், அதனை அங்கு தட்டுங்கள். அவ்வளவுதான், வட்டு கோப்புகளை ஏற்றவும் இறக்கவும் தயார். எதற்கும் ஒரு புதிய உறையினை உருவாக்கி அதனுள் கோப்புகளை சேமியுங்கள்.

நீங்கள் "C" அல்லது வேறு ஏதேனும் வட்டில் எப்படி கோப்பினை சேமிப்பீர்களோ அதே மாதிரி கோப்பினை இங்கு சேமிக்கலாம், நீங்கள் சேமிக்கும் கோப்பு ஜீ-மெயில் வழங்கியில் சேமிக்கப் படிகிறது.

பிறகு என்ன இதனை நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இறக்கிக் கொள்ளலாம்.

சில குறிப்புகள்:

1.இணைய இணைப்பு இல்லாதபோது உபயோகப் படாது. ( உங்கள் ஜீ-மெயில் கணக்கினை ஒரு வட்டாக கணினியில் காண்பிக்கிறது இந்த மென்பொருள் )

2.வேறு கணினியில் இருந்து அணுக G.Drive நிறுவ வேண்டிய அவசியம் இல்லை, இணைய உலாவியின் மூலமாக மின்னஞ்சல்களாக (webmail) அணுகலாம் (Access).

3. நமது கணினியில் உள்ள கோப்புகளை ஜீ-ட்ரைவிற்கு அப்படியே பதிவேற்றம் (upload) செய்துகொள்ளலாம். கோப்புகளின் அளவு 10 MB - க்கும் குறைவாக இருக்கவேண்டும். ஜீ-மெயிலில் 10 MB வரை உள்ள கோப்புகளையே இணைக்க இயலும்.

Mathu
23-05-2005, 10:39 AM
நண்றி பரணி,பாரதி கேட்டவுடன் தந்தமைக்கு.
இதன் மூலம் நல்ல பயன்.

Aren789
19-06-2005, 01:22 PM
பாரதி அவர்களே,

நல்ல செய்தி. முயற்சி செய்து பார்க்கிறேன்.

இளந்தமிழ்ச்செல்வன்
28-06-2005, 08:02 PM
நல்ல தகவல் பாரதி, பரணி. நன்றி

simsonpeter
05-07-2005, 04:04 PM
தகவலுக்கு நன்றி. மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது

simsonpeter
05-07-2005, 11:22 PM
ஜீ-மெயில் டிரைவின் மூலம் பாடல்களை பதிந்தேன். பின்னர் அதனை பதிவிறக்கம் செய்தபொது அதே Extensionல் பதிவிறக்கியது. ஆனால், மென்பொருட்களை பதிவிறக்கும்போது Extension மாறுகிறது.
இதற்கு நான் Extension Changer என்ற மென்பொருளை பயன்படுத்துகிறேன். இது இலவச மென்பொருள்
பதிவிறக்கம் (http://www.topshareware.com/Extension-Changer-download-17380.htm)