PDA

View Full Version : ஜிமெயில்

பாரதி
21-05-2005, 10:40 AM
ஜிமெயில்

நமது நண்பர்களில் பலர் ஜிமெயில் மின்னஞ்சல் வைத்துள்ளனர். மேற்கொண்டு நண்பர்கள் யாரேனும் ஜிமெயில் மின்னஞ்சல் பெற விரும்பினால் தற்போது இருக்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்தால் அழைப்பு அனுப்ப தயாராக இருக்கிறேன்.

பிரியன்
21-05-2005, 10:56 AM
பாரதி பாஸ்வேர்ட் மறந்ததால உள்ளேஎ போக முடியலை..

இன்னொரு முறை அனுப்பி வையுங்க.......

majara
21-05-2005, 12:43 PM
இதென்ன ஜீ மெயில்

கொஃசம் விளக்கம் தர முடியுமா?

thempavani
21-05-2005, 12:45 PM
என்னிடம் சுமார் 50 அழைப்புகள் உள்ளன...
நண்பர்கள் gmail முகவரி வேண்டுமானால் என்னையும் தொடர்பு கொள்ளவும்...

பரஞ்சோதி
21-05-2005, 12:53 PM
இதென்ன ஜீ மெயில்

கொஃசம் விளக்கம் தர முடியுமா?

ஜீ மெயில் என்பது யாகூ மெயில் மாதிரி தான், அதற்கு 2 ஜிபி அளவு சேமிக்கும் வசதி கொடுக்கிறார்கள். வந்த மெயிலை அழிக்க வேண்டியதே இல்லை.

பரஞ்சோதி
21-05-2005, 12:55 PM
யாருக்காவது ஜிமெயில் வேண்டும் என்றால் இங்கே உங்களது இமெயிலை கொடுங்க, கண்டிப்பாக யாராவது ஒருவர் அழைப்பு அனுப்பி வைக்கலாம்.

மேலும் அந்த அழைப்பு சில நேரங்களில் ஜங்க் மெயில் பாக்ஸில் காணப்படும், எனவே அங்கேயும் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாரதி
21-05-2005, 01:30 PM
பாரதி பாஸ்வேர்ட் மறந்ததால உள்ளே போக முடியலை..

இன்னொரு முறை அனுப்பி வையுங்க.......

அன்பு பிரியன், மீண்டும் உங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
உங்கள் கடவுச்சொல் மறந்தாலும் ரகசிய கேள்வி பதில் மூலம் மீண்டும் மடலை பார்க்க இயலுமே..? ரகசிய கேள்வியும் பதிலும் மறந்து விட்டதா..?

பிரியன்
21-05-2005, 07:06 PM
ஆமய்யா.. நானும் எனக்கு தெரிந்த எல்லாத்தையும் முயற்சி பண்ணி பார்த்துட்டேன் முடியல..11.20 PM

அய்யா புதிதாக பதிவு செய்துவிட்டேன்...

மிக்க நன்றி.. 00.00PM

Mathu
22-05-2005, 10:44 AM
யாரோ முன்பொருமுறை ஜிமெயிலை விர்துவல் கார்ட்டிஸ்காக பாவிக்க முடியும் என்று சொன்னதாக ஞாபகம்...! அதை எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?
:) ;) :D

மன்மதன்
22-05-2005, 02:06 PM
யாரோ முன்பொருமுறை ஜிமெயிலை விர்துவல் கார்ட்டிஸ்காக பாவிக்க முடியும் என்று சொன்னதாக ஞாபகம்...! அதை எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?
:) ;) :D

அப்படின்னா என்னங்க.. அவல், துவல், கார்ட்டிஸ்ன்னா ?? புரியலையே..
அன்புடன்
மன்மதன்

பாரதி
22-05-2005, 05:26 PM
யாரோ முன்பொருமுறை ஜிமெயிலை விர்துவல் கார்ட்டிஸ்காக பாவிக்க முடியும் என்று சொன்னதாக ஞாபகம்...! அதை எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?
:) ;) :D

அன்பு நண்பரே... நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை தனிப்பதிவாக தந்திருக்கிறேன். பரணீக்கு நன்றி.

அன்பு மன்மதன் - Virtual Hard disk - என்பதைத்தான் அவர் கேட்டிருக்கிறார் என்பது எனக்கு படித்ததும் விளங்கி விட்டதே..!

mhn
31-05-2005, 01:45 PM
எனக்கும் gmail அழைப்பு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
mhajanajumudeen@yahoo.com

மிக்க நன்றி.

என்னிடம் சுமார் 50 அழைப்புகள் உள்ளன...
நண்பர்கள் gmail முகவரி வேண்டுமானால் என்னையும் தொடர்பு கொள்ளவும்...

பரஞ்சோதி
31-05-2005, 09:25 PM
எனக்கும் gmail அழைப்பு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
mhajanajumudeen@yahoo.com

மிக்க நன்றி.

நண்பரே!

நான் அழைப்பு அனுப்பியிருக்கிறேன். கிடைத்ததா என்று சொல்லுங்கள்.

பிரியன்
01-06-2005, 05:28 AM
நமக்கும் ஒன்று அனுப்பி வையுங்கள் அய்யா, இன்னொரு முகவரி தொடங்கவேண்டும்...

பரஞ்சோதி
01-06-2005, 05:38 AM
நமக்கும் ஒன்று அனுப்பி வையுங்கள் அய்யா, இன்னொரு முகவரி தொடங்கவேண்டும்...

இதோ அனுப்பி வைக்கிறேன், நண்பா.

பரஞ்சோதி
01-06-2005, 05:42 AM
பிரியன் அவசரத்திற்கு உங்கள் இமெயில் கிடைக்க மாட்டேங்குது, கொஞ்சம் கொடுங்களேன்.

பரஞ்சோதி
01-06-2005, 05:56 AM
பிரியன், ஒருவழியாக உங்க யாகூ இமெயிலை தேடி பிடித்து அழைப்பு அனுப்பியிருக்கிறேன்.

பிரியன்
01-06-2005, 06:29 AM
பிரியன் அவசரத்திற்கு உங்கள் இமெயில் கிடைக்க மாட்டேங்குது, கொஞ்சம் கொடுங்களேன்.

இதெல்லாம் நல்லா இல்ல ... ஆமா :confused: :confused: :confused: :confused:
தொடங்கிட்டேன் அய்யா...

mhn
02-06-2005, 10:39 AM
நண்பரே!

நான் அழைப்பு அனுப்பியிருக்கிறேன். கிடைத்ததா என்று சொல்லுங்கள்.

கிடைத்தது. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி.

பரஞ்சோதி
02-06-2005, 09:20 PM
கிடைத்தது. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி.

நன்றி எதற்கு நண்பரே!, ஜிமெயிலுக்கு சொல்லுங்க.

சரி, எங்கே உங்களை அதிக இடங்களில் காணமுடியலை, அறிமுகம் கொடுக்கலை. உங்களுக்கு பிடித்ததை சொல்லுங்க.

mohdfaisel
07-06-2005, 01:54 PM
please give me an gmail invitation..

anpudan
Mohamed Faisel

pradeepkt
07-06-2005, 02:56 PM
அன்புள்ள முகம்மது ஃபைசல்.
உங்களுக்கு நல்வரவு.
உங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் சொல்லுங்களேன்.

அறிஞர்
08-06-2005, 02:24 AM
please give me an gmail invitation..

anpudan
Mohamed Faisel
தமிழில் டைப் பண்ண கற்றுக்கொள்ளுங்கள்..
அறிமுகப்பகுதியில் தங்களை பற்றி அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்...

மேலும் எந்த ஈமெயில் ஐடிக்கு ஜிமெயில் இன்விடேசன் அனுப்பவேண்டும்

பரஞ்சோதி
08-06-2005, 04:40 AM
முகமது பைசல் உடனே வாங்க, உங்களுக்கு அழைப்பு கொடுக்க எல்லோரும் காத்திருக்கிறோம், உங்கள் அறிமுகம் கொடுத்தால் அழைப்பு உடனே வரும்.

சுவேதா
10-06-2005, 08:25 PM
அண்ணா எனக்கும் ஒரு ஜிமெயில் ஐடி தரமுடியுமா???

baranee
10-06-2005, 08:33 PM
சுவேதா, உன்னோட ஹாட்மெயில் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

பரஞ்சோதி
11-06-2005, 04:31 AM
அண்ணா எனக்கும் ஒரு ஜிமெயில் ஐடி தரமுடியுமா???

சகோதரி, நண்பர் பரணீயின் அழைப்பு கிடைத்ததா? இல்லை என்றால் உங்கள் ஐடி கொடுங்க அனுப்பி வைக்கிறேன்.

simsonpeter
04-07-2005, 09:40 PM
எனக்கும் அனுப்புங்களேன்
simson@perso.be

baranee
04-07-2005, 10:08 PM
சிம்சன் உங்கள் முகவரிக்கு அனுப்பிவிட்டேன்.

சுவேதா
04-07-2005, 11:39 PM
நன்றி பரணி அண்ணா, நன்றி பரம்ஸ் அண்ணா எனக்கு கிடைத்துவிட்டது.

simsonpeter
05-07-2005, 03:01 PM
ஜி-மெயில் அழைப்பிதழ் அனுப்பியதற்கு நன்றி

simsonpeter
05-07-2005, 04:57 PM
ஜி-மெயில் அழைப்பை மற்றவருக்கு அனுப்புவது எப்படி?

பரஞ்சோதி
06-07-2005, 04:21 AM
ஜி-மெயில் அழைப்பை மற்றவருக்கு அனுப்புவது எப்படி?

நீங்க உங்க ஜிமெயிலை திறந்தவுடன், அங்கே இடது பக்கம், சிறிய கட்டம் இருக்கும், அதில் அழைப்பு கொடுக்கும் இமெயிலை கொடுத்து அனுப்ப வேண்டியது தான், புதியவர் என்பதால் ஒருவேளை வரவில்லை என்றால் காத்திருக்கவும், வேறு நண்பர்களுக்கு தேவை என்றால் அவர்களின் இமெயில் ஐடி இங்கே கொடுங்க.

poo
06-07-2005, 05:49 AM
எனக்கும் ஒரு முகவரி தேவை!

gkpoovendran@yahoo.co.in

இம்முகவரிக்கு யாரேனும் அழைப்பு அனுப்புங்களேன்..

thempavani
06-07-2005, 05:53 AM
அண்ணா இதோ அனுப்பி வைக்கிறேன்

thempavani
06-07-2005, 05:54 AM
அண்ணா அனுப்பிவிட்டேன் ...பார்த்து விட்டுச் சொல்லுங்கள்..

mania
06-07-2005, 05:58 AM
எனக்கும் ஒரு முகவரி தேவை!

gkpoovendran@yahoo.co.in

இம்முகவரிக்கு யாரேனும் அழைப்பு அனுப்புங்களேன்..

:confused: அழைப்பு அனுப்பியிருக்கிறேன்......ஏற்கனவே உனக்கு உள்ள ஐ.டி என்ன ஆச்சு.....?:rolleyes:

poo.vendran@gmail.com .......?????

அன்புடன்
மணியா....

thempavani
06-07-2005, 05:59 AM
நாந்தான் நாலு நிமிசத்துக்கு முன்னமேயே அனுப்பிட்டேனே...அப்புறம் எதுக்கு நீங்க அனுப்புறீங்க...:rolleyes: :rolleyes:

mania
06-07-2005, 06:21 AM
நாந்தான் நாலு நிமிசத்துக்கு முன்னமேயே அனுப்பிட்டேனே...அப்புறம் எதுக்கு நீங்க அனுப்புறீங்க...:rolleyes: :rolleyes:

:D இப்போ என்ன அதுக்கு .....? வேண்டுமானால் உனக்கு ஒன்னு அனுப்பிவைக்கிறேன்....சரியா...? வருத்தப்படாதேம்மா.....:)
அன்புடன்
மணியா...:D
( அவனே ஏற்கனவே ஒன்று வைத்துக்கொண்டுதானே கேட்கிறான் )...

thempavani
06-07-2005, 06:28 AM
நான் 50 அழைப்பு வைத்திருக்கிறேன்...வேண்டுமானால் உங்க பாட்டி...தாத்தா..எல்லாருக்கும் அனுப்பித்தருகிறேன்..வேண்டுமா என்று சொல்லுங்கள்..

(அந்தப் பதிவை எப்படி புரிந்துகொள்வீர்களோ என்று பயமாக இருந்தது...இலகுவாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி தலை..)

poo
07-07-2005, 11:05 AM
:confused: அழைப்பு அனுப்பியிருக்கிறேன்......ஏற்கனவே உனக்கு உள்ள ஐ.டி என்ன ஆச்சு.....?:rolleyes:

poo.vendran@gmail.com .......?????

அன்புடன்
மணியா....

தலை ரொம்ப நன்றிங்க.,, (அந்த ஐடியை ஞாபகப்படுத்தியதிற்கும்.. புதுசா அனுப்பினதுக்கும்!!)
அந்த ஐடியே எனக்கு மறந்துபோச்சு... அதனாலதான் புதுசா கேட்டேன்.. ஹிஹி!!

தேம்பாவாணி உங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!
ஐடி அனுப்பினாப்போல.. பல மெயில்களும் அனுப்புங்களேன்.. சாமிகளா... (படிக்கிறாப்போல கேட்கிறேன்!)

mania
08-07-2005, 09:40 AM

:D உன்னுடைய பழைய ஐடியில் நீ மட்டும் படிக்கிற மாதிரி எக்கச்சக்கமா செய்திகள் அனுப்பியிருக்கோமே.....?????என்னடா உன்னிடமிருந்து ஒரு ரீஆக்ஷனுமே இல்லையே என்று யோசித்தேன்...:rolleyes: .இப்போல்ல மேட்டர் புரியுது.....
அன்புடன்
மணியா....:D

சுவேதா
08-07-2005, 05:57 PM
ஜிமெயில் இன்விடேசன் தேவையானவர்கள் இங்கும் எடுக்கலாம் 1000 மேல் உண்டு

* www.bytetest.com (http://www.bytetest.com)
* www.abaot.com (http://www.abaot.com)

சுவேதா
08-07-2005, 06:00 PM
என்னிடம் 1000 திற்கு மேற்பட்ட ஜிமெயில்கள் உள்ளன யாருக்கும் தேவைப்பட்டால் என்னையும் கேக்கலாம்.

baranee
08-07-2005, 10:23 PM
சுவேதா.. எனக்கு ஒரு 500 குடுக்க முடியுமா :)

thempavani
08-07-2005, 10:51 PM
பரணி அண்ணா...ஜிமெயில் அக்கவுண்ட்க்கு கடை ஏதேனும் வைக்கும் திட்டம் உள்ளதா????????????

சுவேதா
09-07-2005, 02:35 AM
சுவேதா.. எனக்கு ஒரு 500 குடுக்க முடியுமா :)

ஹி.. ஹி.. நிச்சயமாக உங்களுக்கு இல்லாததா என்ன?

சுவேதா
09-07-2005, 02:36 AM
பரணி அண்ணா...ஜிமெயில் அக்கவுண்ட்க்கு கடை ஏதேனும் வைக்கும் திட்டம் உள்ளதா????????????

இருக்கலாம் அப்படி இருந்தால் நீங்களும் போய் வாங்கலாம் என்ன.

poo
25-08-2005, 10:30 AM
என் இ-மெயில் விலாசம்..

poopriyan@gmail.com

இதை எப்படீங்க நம்ம தமிழ்மன்ற க்ரூப்ல சேர்க்கிறது?!

பரஞ்சோதி
25-08-2005, 10:38 AM
என் இ-மெயில் விலாசம்..

poopriyan@gmail.com

இதை எப்படீங்க நம்ம தமிழ்மன்ற க்ரூப்ல சேர்க்கிறது?!

பூ வாங்க, மருமகள் எப்படி இருக்கிறார்.

மேலே இருக்கும் usercp கிளிக் செய்து, அதில் எடிட் இமெயில் இருக்கும், அதில் புதியதை சேர்த்து விடுங்கள்.

mania
25-08-2005, 10:46 AM
பூ வாங்க, மருமகள் எப்படி இருக்கிறார்.

மேலே இருக்கும் usercp கிளிக் செய்து, அதில் எடிட் இமெயில் இருக்கும், அதில் புதியதை சேர்த்து விடுங்கள்.

:D அய்யோ அவர் அத்தை கேக்கலீங்க.......:confused:
அன்புடன்
மணியா..:D

Mano.G.
25-08-2005, 11:05 AM
G மெயிலை பற்றி கேள்விபட்டேன்,
நமது சகோதர சகோதரிகள் யாரேனும்
எனக்கு G மெயில் அழைப்பு கொடுத்தால்
நலம்.

onam@myjaring.net

மனோ.ஜி

mania
25-08-2005, 11:12 AM
G மெயிலை பற்றி கேள்விபட்டேன்,
நமது சகோதர சகோதரிகள் யாரேனும்
எனக்கு G மெயில் அழைப்பு கொடுத்தால்
நலம்.

onam@myjaring.net

மனோ.ஜி

அனுப்பிவிட்டேன் மனோஜி.....:)
அன்புடன்
மணியா..

poo
26-08-2005, 09:26 AM
:D அய்யோ அவர் அத்தை கேக்கலீங்க.......:confused:
அன்புடன்
மணியா..:D

தலை... கற்பூரம்மாதிரி! :) :) :)

Mano.G.
26-08-2005, 09:37 AM
அனுப்பிவிட்டேன் மனோஜி.....:)
அன்புடன்
மணியா..

மிக்க நன்றி தலை ( எனக்கும் நீங்கள் தலையே)
G மெயிலை பெற்றுக்கொண்டேன்.

எனது G மெயில் விலாசம்

onam5658@gmail.com

மனோ.ஜி

suma
26-08-2005, 11:35 PM
தலை, அத்த :D கேட்கலை அப்ப மாமா வை கேட்டாரா?

mania
27-08-2005, 05:28 AM
தலை, அத்த :D கேட்கலை அப்ப மாமா வை கேட்டாரா?

:D அய்யா பூ.......சுமா கேக்கறாங்க பதிலை சொல்லுப்பா....:rolleyes:
எஸ்கேப்பியா மணியா...:D

mania
27-08-2005, 05:30 AM
மிக்க நன்றி தலை ( எனக்கும் நீங்கள் தலையே)
G மெயிலை பெற்றுக்கொண்டேன்.

எனது G மெயில் விலாசம்

onam5658@gmail.com

மனோ.ஜி

:D மனோ ஜீ க்கு இல்லாத ஜீ மெயிலா....:D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
27-08-2005, 08:09 AM
தலை, அத்த :D கேட்கலை அப்ப மாமா வை கேட்டாரா?

நான் நினைத்தேன், நீங்க கேட்டுவிட்டீங்க சகோதரி. :D

மன்மதன்
27-08-2005, 09:11 AM
:D மனோ ஜீ க்கு இல்லாத ஜீ மெயிலா....:D
அன்புடன்
மணியா....:D

அப்ப.. சேரனுக்கு அனுப்பியது 'ச்சீ' மெயிலா :rolleyes: :rolleyes:
ஹிஹி
மன்மதன்

rethinavelu
30-08-2005, 04:01 PM
எனது இமெயில் முகவரி rethinavelu@sancharnet.in எனக்கு ஜிமெயில் அக்கெளண்ட் செய்து கொடுங்கள்
என்னார்

பரஞ்சோதி
30-08-2005, 04:36 PM
இரத்தினவேலு உங்களுக்கு அனுப்பியாச்சு.

pradeepkt
30-08-2005, 05:19 PM
எனது இமெயில் முகவரி rethinavelu@sancharnet.in எனக்கு ஜிமெயில் அக்கெளண்ட் செய்து கொடுங்கள்
என்னார்
என்னார் அவர்களே,
நீங்கள் இங்கே வந்ததை நான் கவனிக்கவே இல்லையே.
உங்களுக்கு வரவேற்புகள்.

சிவா
31-08-2005, 08:40 PM
please give me an gmail invitation..

anpudan

சிவா.

பாரதி
01-09-2005, 01:39 AM
நண்பரே.. தயவு செய்து தமிழில் தட்டச்சு செய்து பதியுங்கள். ஆரம்பத்தில் பழக அறிமுகம் பகுதியை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஜிமெயில் அழைப்பை அனுப்ப உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தேவை.

சிவா
01-09-2005, 05:23 AM
எனது இமெயில் முகவரி sivach2001@yahoo.com. எனக்கு ஜிமெயில் அழைப்பு செய்து கொடுங்கள்.

அன்புடன்
சிவா.

mania
01-09-2005, 07:04 AM
எனது இமெயில் முகவரி sivach2001@yahoo.com. எனக்கு ஜிமெயில் அழைப்பு செய்து கொடுங்கள்.

அன்புடன்
சிவா.

:) அழைப்பு அனுப்பிவிட்டேன் .சிவா......வாழ்த்துகள்:)
அன்புடன்
மணியா...

சிவா
01-09-2005, 12:58 PM
மிக்க நன்றி !!

ஜிமெயிலை பெற்றுக்கொண்டேன்.

அன்புடன்
சிவா.

mahajp
14-10-2005, 06:06 AM
எனக்கும் அனுப்புங்களேன்.
mahalakshmi@smartwinindia.com

pradeepkt
14-10-2005, 06:10 AM
வணக்கம் மகாலட்சுமி.
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்

பாரதி
14-10-2005, 07:12 AM
எனக்கும் அனுப்புங்களேன்.
mahalakshmi@smartwinindia.com

அன்பு நண்பரே... ஜிமெயில் அழைப்பு அனுப்பி விட்டேன்.

அறிஞர்
19-10-2005, 03:18 AM
இப்ப பார்த்தால் அமெரிக்காவில் பலர் ஜிமெயிலுக்கு மாறுகிறார்கள்

சுபன்
29-01-2006, 01:03 AM
எனக்கும் ஜிமெயில் அழைப்பு அனுப்புங்களேன். subashan_18@yahoo.com

aren
29-01-2006, 02:30 AM
சுபன், உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள்.

சுபன்
29-01-2006, 03:11 AM
சுபன், உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள்.

நன்றி நண்பா

சுபன்
29-01-2006, 03:12 AM
நான் மெயில் ஆரம்பித்துவிட்டேன் நன்றி ஆரென்

subashan18@gmail.com

aren
29-01-2006, 04:34 AM
நல்லது. கலக்குங்கள் சுபன்.

mgandhi
08-08-2006, 06:33 PM
mgandhi05@yahoo.co.in

பரஞ்சோதி
09-08-2006, 09:50 AM
காந்தி உங்களுக்கு அனுப்பியாச்சு

மயூ
09-08-2006, 10:03 AM
ஐயாவிடம் இன்னும் 100 அழைப்பிதழ்கள் இருக்குது....
யோசியாமல் கேளுங்கோ அனுப்பிறன்.....

பரஞ்சோதி
09-08-2006, 10:16 AM
தம்பி மயூரேசன், பத்திரமாக வைத்திருங்க, பிற்காலத்தில உதவும் :)

மயூ
09-08-2006, 10:24 AM
தம்பி மயூரேசன், பத்திரமாக வைத்திருங்க, பிற்காலத்தில உதவும் :)
ஆ.....
நக்கலு.......:D :D :D

mgandhi
09-08-2006, 06:35 PM
ஜிமெயில் பற்றி விரிவான வளக்கம் அனுப்பவும் தமிழில்

pradeepkt
10-08-2006, 03:39 AM
என்னய்யா இது பத்தாவது வகுப்புக் கேள்வித்தாள் மாதிரி விரிவான விளக்கம் தருக, படம் வரைந்து பாகம் குறிக்கன்னு எல்லாம் சொல்றீங்க.

ஜிமெயில் யாஹூ, ஹாட்மெயில் மாதிரி ஒரு மின்னஞ்சல் சேவை. ஆனா, அதுகளையெல்லாம் விடக் கொஞ்சம் முன்னேறியது, அம்புட்டுதேன்.

mgandhi
19-08-2006, 07:08 PM
\\ஜிமெயில் யாஹூ, ஹாட்மெயில் மாதிரி ஒரு மின்னஞ்சல் சேவை. ஆனா, அதுகளையெல்லாம் விடக் கொஞ்சம் முன்னேறியது, அம்புட்டுதேன்.\\
தகவளுக்கு நன்றி
தமிழில் அனுப்ப இமெயில் எதாவது இருந்தால் செல்லுங்களேன்

பரஞ்சோதி
21-08-2006, 05:00 AM
நண்பர் காந்தி அவர்களே!

நீங்க தமிழ்மன்றத்தில் தட்டச்சு செய்வது போலவே ஜிமெயிலிலும் தட்டச்சு செய்து அனுப்பலாம். தமிழிலில் வந்த செய்தியை படிக்கலாம்.

உங்க ஜிமெயில் ஐடி இங்கே கொடுங்க, நான் தமிழிலில் செய்தி அனுப்புகிறேன். படிக்க முடிகிறதா என்று பார்த்து சொல்லுங்க. அல்லது என்னுடைய ஜிமெயில் ஐடிக்கு ஒரு மடல் அனுப்புங்க.

paransothi@gmail.com

dawn
21-08-2006, 05:05 AM
1. யுனித்தமிழ் - Unicode Tamil

எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு
செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனிகோடு தமிழினைத் தட்டச்ச முடியும்.

2. துரித அஞ்சல் தேடல் - Find any message instantly

சொடுக்கும் பொழுதில் ஒரு சொல்லைத் தந்து, எந்த மடலையும் தேடி
எடுத்துவிடலாம். இந்தச் சேவை வேறு எந்த அஞ்சல் சேவையிலும் கிடையாது

3. ஒரு கிகாபைட்டு சேமிப்பு - 1 GB storage

எந்த மடலையும் நாம் நீக்கத் தேவையில்லை. அப்படியே சேமிப்பில்
தள்ளிவிடலாம். அத்தனை பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சேமிப்புக் கிடங்கு. வேறு
எந்த சேவையும் இத்தனை தருவதில்லை. நான் பல காலம், வருடம் 25 டாலர்கள்
கட்டி ஹாட்மெயிலிடம் இதில் ஐந்தில் ஒரு பங்கைப் பெற்றிருக்கிறென்

4. உரையாடல்கள் - conversations

இது மிகவும் அற்புதமான சேவை. வேறு எந்த அஞ்சல் சேவையும் இந்தச் சேவையைத் தருவதில்லை. ஒரு subject-பொருளில் ஒரு மடல் இட்டால், பின் அதனைத் தொடர்ந்து அதற்கு வரும் மறுமொழிகள் எல்லாம் ஒன்றாய் ஒரு கோப்பாய் இணைக்கப்பட்டு நம்முன் நிற்கும். அதாவது இலவசமாய் ஓர் உதவியாளர் நமக்குத்தயார். நாம் மேலாளர் போலவும். நமக்கு ஒரு உதவியாளர் இருப்பதுபோலவும் வசதி. எப்படி?

5. மடல் வந்ததும் அறிவிப்பு - gmail Notifier

இந்தச் சேவையும் வேறு எந்த அஞ்சல் சேவையிலும் இல்லை. இதை நிறுவிவிட்டால், எப்போது மடல் வந்தாலும் விண்டோசின் வலப்பறம் தெரியும் ஜிமெயில் ஐகான் நீல நிறமாய் மாறி நமக்கு மடல் வந்திருக்கிறது என்ற செய்தியைச் சொல்லும்.
ஆகவே, ஜிமெயில் எப்போதும் திறந்திறக்க வேண்டியதும் இல்லை நாம் அடிக்கடி
சென்று பார்க்கவும் தேவையில்லை. இது அவுட்லுக் போன்ற சேவைகளில் மட்டுமே
காணப்படும் ஒன்று. அதாவது ஜிமெயில் அவுட்லுக்கின் பல சேவைகளை
உள்ளடக்கியது

6. வேண்டாத மடல் கழிப்பு - Spam control

இது மிக முக்கியம். இந்தச் சேவையும் இத்தனைத் தரத்தோடு வேறு எந்த அஞ்சல்
சேவையிலும் இல்லை. வேண்டாத மடல்கள் வருவதே இல்லை. அப்படி வருபவை தனியே ஒரு கோப்பில் கிடக்கும். அதை நாம் பார்க்கக்கூடத் தேவையில்லை.

7. கோப்புகளும் வடிகட்டிகளும் - labels and Filters

Inbox தவிர, Folders என்று அவுட்லுக்கில் அழைக்கப்படும் labels இங்கே மிக
எளிதாய் உருவாக்கலாம். நன் தேவைக்கேற்ப மடல்களை வேறு வேறு கோப்புகளில்
சேமிக்கலாம். வரும் மடல்களை நேரடியாய் அங்கு செல்வதற்கான திட்டங்களை
Filters அமைக்கலாம். இந்த லேபல்கள் எல்லாம் தமிழில் வைத்திருக்கிறேன்
நான். தமிழில் பார்க்க எத்தனை அழகாய் இருக்கிறது தெரியுமா?

8. தமிழ்த்திரை - Tamil Interface

கூகுள், தமிலேயை அனைத்தையும் தரவல்லது. இது இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே நான் அதிகம் பேசவிரும்பவில்லை

9. குறுக்குவழி பொத்தான்கள் - keyboard shortcuts

ஒரு பொத்தானை அழுத்தி பல காரியங்களைச் சாதிக்க வழியுண்டு இதில். இதுவும்
வேறு அஞ்சல் சேவைகளில் கிடையாது

10. 'பாப்' எடுத்தல் மற்றும் திசைமாற்றல் - POP access and Forwarding

ஜிமெயிலுக்குள் வரும் மடல்களை, வேறு மின்னஞ்சல்களுக்கு எளிதாக அனுப்பி
வைக்கலாம். இது வேறு அஞ்சல் சேவைகளில் காசு கொடுத்தாத்தான் நடக்கும், பல
அஞ்சல் சேவைகளில் காசு கொடுத்தாலும் நடக்காது. POP Access என்பது
அவுட்லுக் போன்ற அஞ்சல் செயலிகளுக்கு ஜிமெயில் வரும்படியாகச் செய்வது.
இதனால் ஜிமெயிலைத் திறக்கவே வேண்டாம். ஆனால் எனக்கு ஜிமெயில் திறந்து
விளையாடுவதே விருப்பம். அதன் சேவைக்குப் பழகிய எவரும் அதை விடமாடார்கள் என்னைப் போலவே என்பது உறுதி.

11. தொடர்புகள் ஓரிடத்தில் - contacts in one place

அனைத்துத் தொடர்புகளையும் நாம் ஓரிடத்திலேயே அருமையாய் வைத்துக்
கொள்ளலாம். அதுவும் தமிழில் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்துவதும், மிக
எளிமை஡யானது.

பரஞ்சோதி
21-08-2006, 05:08 AM
அட்டகாசம், உண்மையில் அட்டகாசத்தார் அட்டகாசம் பண்ணிவிட்டீங்கய்யா.

அட்டகாசத்தாருக்கு நன்றி.

ஓவியா
21-08-2006, 01:47 PM
குளுகுளு ஜிமெயில் சேவைகள்.....

சுப்பரோ சுப்பர்...

நன்றி டவன்

மயூ
22-08-2006, 04:14 AM
ஒரு சிறிய மாற்றம். தற்போது ஜிமெயில் சேவையின் கொள்ளளவு 2 ஜிபியைத் தாண்டி விட்டது! அதனால் எந்ந ஒரு உள்வரும் மின்னஞ்சலையும் அழிக்கத்தேவையில்லை :) :)

vckannan
22-08-2006, 05:46 AM
DAWN அப்படி போடப்பு அறுவாள :)

(விவகாரமான பார்ட்டி மட்டும் இல்ல விசயகார ஆளும் கூடதான் போல:D :D )

அறிஞர்
24-08-2006, 02:34 PM
3. ஒரு கிகாபைட்டு சேமிப்பு - 1 GB storage

எந்த மடலையும் நாம் நீக்கத் தேவையில்லை. அப்படியே சேமிப்பில்
தள்ளிவிடலாம். அத்தனை பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சேமிப்புக் கிடங்கு. வேறு
எந்த சேவையும் இத்தனை தருவதில்லை. நான் பல காலம், வருடம் 25 டாலர்கள்
கட்டி ஹாட்மெயிலிடம் இதில் ஐந்தில் ஒரு பங்கைப் பெற்றிருக்கிறென்
. 1 GB யா அல்லது 2 GB யா

இனியவன்
24-08-2006, 02:39 PM
நல்ல தகவல்கள்.

soma255
24-08-2006, 06:16 PM
திரு பாரதி அவர்கலே, எனது ID powerpacks@airtelbroadband.in தயவுசெய்து எனக்கு gmail அழப்பு அனுப்புங்கல். நன்ரி.

mukilan
24-08-2006, 07:16 PM
நானே உங்களுக்கு ஒரு அழைப்பு அனுப்பியுள்ளேன்.

leofelix
28-09-2006, 06:22 AM
i want gmail account for me

Shanmuhi
28-09-2006, 09:05 AM
உங்கள் இமெயில் முகவரி தந்தால் அனுப்பி வைக்கின்றேன்...

tamil81
13-01-2007, 07:10 PM
என்னிடம் சுமார் 50 அழைப்புகள் உள்ளன...
நண்பர்கள் gmail முகவரி வேண்டுமானால் என்னையும் தொடர்பு கொள்ளவும்...
தயவு செய்து gmail அழைப்பை அனுப்பி உதவவும்
sritharan_1981@yahoo.com

tamil81
13-01-2007, 07:14 PM
ஐயாவிடம் இன்னும் 100 அழைப்பிதழ்கள் இருக்குது....
யோசியாமல் கேளுங்கோ அனுப்பிறன்.....

நண்பரே gamil அழைப்பை தந்து உதவுங்கள்
sritharan_1981@yahoo.com

ஷீ-நிசி
14-01-2007, 03:15 AM
GMAIL அளவு 2 GB.. மற்ற தளங்களைக் காட்டிலும் மிக அற்புதமான சிறப்பம்சங்கள் பல உள்ளன. gmail அழைப்பு வேண்டுவோர் mail அனுப்பவும். "arpudam79@gmail.com"

nonin
16-01-2007, 08:20 AM
ஐயாவிடம் இன்னும் 100 அழைப்பிதழ்கள் இருக்குது....
யோசியாமல் கேளுங்கோ அனுப்பிறன்.....

நண்பரே, ஜி மெயில் பயன்பாடுகள் படித்து அசந்துவிட்டேன்.எனக்கும் ஒரு அழைப்பு அனுப்பினால் மகிழ்வேன்.
எனது மின் முகவரி:
rajaa93tthee@hotmail.com

சுபன்
16-01-2007, 09:23 PM
நண்பரே, ஜி மெயில் பயன்பாடுகள் படித்து அசந்துவிட்டேன்.எனக்கும் ஒரு அழைப்பு அனுப்பினால் மகிழ்வேன்.
எனது மின் முகவரி:
rajaa93tthee@hotmail.com

உங்களுக்கு ஒரு அழைப்பு அனுப்பி இருக்கின்றேன்!! கிடைத்ததா??

அறிஞர்
16-01-2007, 11:10 PM
நண்பருக்கு உதவிய சுபனுக்கு நன்றி..

nonin
17-01-2007, 05:38 AM
உங்களுக்கு ஒரு அழைப்பு அனுப்பி இருக்கின்றேன்!! கிடைத்ததா??

திசைபார்த்து வேண்டாதபொழுதும் தானாக வந்து தழுவிக்கொள்ளும்
தென்றல்போல், வழியோடு செல்லும்பொழுது தேவையறிந்து வழங்கிய
வள்ளலே, பெற்றுக்கொண்டேன் நண்பரே, சுபன் தங்களுக்கு நன்றிகள் பல.....

nonin
17-01-2007, 05:45 AM
அன்பு மயூரேசன், தங்களின் அழைப்பு மடல் கிடைத்தது.நன்றி. நண்பர் சுபன்
அவர்களும் அனுப்பியிருந்தார்.இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஒன்றை என் நண்பருக்கு வழங்கினேன்.அவர் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மயூ
17-01-2007, 12:27 PM

வாழ்த்துக்ள்!
உங்களுக்கு இரண்டு மாங்காய்கள் கிடைத்துள்ளனவா!!! :)

tamil81
17-01-2007, 04:03 PM
நான் அழைப்பு கேட்டும் இன்னும் யாரும் அனுப்பவில்லையே

ஷீ-நிசி
17-01-2007, 04:08 PM
உங்க mail id சொல்லுங்க

tamil81
19-01-2007, 04:45 PM
உங்க mail id சொல்லுங்க

sritharan1981@yahoo.com

சுபன்
19-01-2007, 10:52 PM
sritharan1981@yahoo.com

நான் உங்களுக்கு அனுப்பிவிட்டேன்!! நாண்பரே!!

மனோஜ்
20-01-2007, 08:01 AM
உன்மையில் ஜு மெயில் நிறுவனம் பார்த்தால்
நமது மன்றத்திற்கு சிறப்பு பரிசு கொடுத்திருப்பார்கள்
நான் இன்னும் ஜுமெயில் தொடங்க வில்லை
இதன் சிறப்பு அறிந்ததில் அனைவருக்கும் நன்றி
எனக்கு ஒரு அழைப்பை அனுப்பவும்

tamil81
20-01-2007, 04:33 PM
நான் உங்களுக்கு அனுப்பிவிட்டேன்!! நாண்பரே!!
நன்றி நண்பரே ஆனால் என்னுடய முகவரிக்கு கிடைக்கவில்லை
தயவு செய்து மறுமுறை அனுப்ப இயலுமா ?

புதிய முகவரி
sritharan_1981@yahoo.co.in
இரண்டாவது முகவரி
sritharan1981@yahoo.co.in

பாரதி
16-02-2007, 04:59 PM
அன்பு நண்பர்களே,

பிப்ரவரி 14 ஆம் தேதியிலிருந்து ஜிமெயில் பயனாளராக மாற யாரிடமிருந்தும் அழைப்பு பெறத்தேவையில்லை.

http://www.gmail.com என்ற சுட்டியில் நேரடியாக புதிய பயனாளர்கள் தங்கள் கணக்கைத் துவக்கலாம்.

மயூ
17-02-2007, 03:26 AM
மற்றுமொரு செய்தி ஜிமெயில் தளத்தில் தமிழ் சொற்பிழை திருத்தி சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இப்போது ஆரம்பம் என்பதால் சரியான சொற்களையம் கொஞ்சம் குளப்பிக்கொள்கின்றது.

தமிழ்பித்தன்
17-02-2007, 05:03 AM
மற்றுமொரு செய்தி ஜிமெயில் தளத்தில் தமிழ் சொற்பிழை திருத்தி சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இப்போது ஆரம்பம் என்பதால் சரியான சொற்களையம் கொஞ்சம் குளப்பிக்கொள்கின்றது.

நல்ல தகவல் நண்பனே
நான் இந்த வசதியை எவ்வாறு எமது கணக்கில் ஏற்படுத்துவது

leomohan
17-02-2007, 06:21 AM
அன்பு நண்பர்களே,

பிப்ரவரி 14 ஆம் தேதியிலிருந்து ஜிமெயில் பயனாளராக மாற யாரிடமிருந்தும் அழைப்பு பெறத்தேவையில்லை.

http://www.gmail.com என்ற சுட்டியில் நேரடியாக புதிய பயனாளர்கள் தங்கள் கணக்கைத் துவக்கலாம்.

நல்ல தகவல் பாரதி. நன்றி.

praveen
20-02-2007, 10:07 AM
நல்ல சேவை, நான் ஒரு வருடத்திற்கு முன்பு ஜிமெயில் கணக்குத் துவங்க அறிமுக அழைப்புக்காக சிரமப்பட்டேன்.

ஜிமெயிலின் மற்றொரு சிறப்பு இலவச pop3 மற்றும் SMTP சர்வீஸ்.

இதன் மூலம் அவுட் லுக் எக்ஸ்பிரஸ் மூலம் மெயில் அனுப்பலாம் / பெறலாம்.

ஒரே ஒரு தொல்லை .exe .com பைல்களை அப்படியே இனைப்பாக அனுப்ப முடியாது. (கம்ப்ரஸ் செய்து அனுப்பினாலும் ரிஜக்ட் தான்).

ஷீ-நிசி
20-02-2007, 10:20 AM

ஆமாம் நண்பரே! EXE FILE அனுப்பிடமுடியாது... நானும் அனுபவித்திருக்கிறேன்...