PDA

View Full Version : நேசமுடன்..



rambal
19-05-2005, 04:15 PM
நேசமுடன்..

மன்றம் மட்டில்லா வளர்ச்சியடைந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொள்கிறேன்.
காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு மன்றம் புதுப் பொலிவுடன் இருக்கிறது.
அவ்வப்பொழுது இந்த மாற்றங்களைக் கண்டு ரசித்தாலும் என்னால் மன்றத்தில் பங்கேற்க முடியவில்லை.
இடைப்பட்ட காலத்தில், சில நல்ல புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.
எழுதுவது என்பது ஒரு வகை நிறைவைத் தந்ததென்றால் படிப்பது என்பது வேறு வகையில்
நிறைவைத் தந்தது. முதலில் படித்துக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தேன். பின் படிப்பதற்கு
முழு நேரம் ஒதுக்கியதில் எழுதுவது முடியாததாகிவிட்டது. இப்பொழுதுதான் எழுதுவதற்கும்
நேரம் அமைந்திருக்கிறது. பார்வைகளும் மாறியிருக்கின்றன. முன்பெல்லாம் ஆர்ப்பரிக்கும் அலைகள்
பிடித்ததென்றால் இப்பொழுது உள்வாங்கும் அலைகள் பிடிக்கின்றது. மழையின் வாசம் பிடித்திருந்தது.
இப்பொழுது அடிக்கும் வெய்யலின் சூடும் பிடிக்கிறது. மாறிக்கொண்டே இருத்தல் எனும் தத்துவத்தில்
மன்றமும் மாறிக் கொண்டே இருக்கிறது. இனி மன்றத்தில் என்னால் முடிந்த அளவு
பங்களிக்க முயல்கிறேன்.

என்றும் உங்கள்..

பாரதி
19-05-2005, 04:56 PM
ஆஹா.... வருக.. வருக...!
மன்றத்தில் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைக்கிறேன் நண்பரே..! மன்றத்தின் வளர்ச்சிப்பாதையில் சில நண்பர்கள் அவ்வப்போது வராமலிருப்பதும், சமயம் வாய்க்கும் போது மீண்டு( ம் ) வருவதும் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கிறது. பிரிவால் வருந்தும் இதயம் உங்களைப் போன்றவர்களைக் காணும் போது மகிழவும் செய்கிறது. இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பெற்ற வாசிப்பு அனுபவம் உங்கள் கவிதை, கதைகள் மூலம் எங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். என்றென்றும் எங்களுடன் இருக்க விரும்பி அழைத்து வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி ராம்.

பரஞ்சோதி
19-05-2005, 07:37 PM
வாவ், நம்ம ராம்பாலா, தமிழ் மன்றத்தின் தூணாக விளங்கியவராற்றே.

இனிய நண்பரே! உங்களுடன் அதிக பழக்கம் இல்லை என்றாலும் உங்கள் கவிதைகள், எழுத்துகளில் தனி பிரியமுண்டு.

இனிமேல் அடிக்கடி வந்து எங்களுக்கு உங்கள் பங்களிப்பை கொடுங்கள்.

அறிஞர்
20-05-2005, 03:41 AM
அன்பர் ராம்பாலை மீண்டும் தளத்தில் காண்பது மெத்த மகிழ்ச்சியை தருகிறது...

படிப்பது நமக்கு மட்டுமே இன்பத்தை தரும்....

ஆனால் எழுதுவது பலருக்கு இன்பத்தை தரும்...

மீண்டும் தங்களின் படைப்புக்களை... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

karikaalan
20-05-2005, 08:16 AM
ராம்பால்ஜி

மீண்டும் எழுதவேண்டும் என்கிற தங்களது எண்ணம் ஒன்றே போதும், பழையபடி தூள் கிளப்புவீர்கள் என்ற நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பிரியன்
20-05-2005, 09:11 AM
வாருங்கள் ராம்பால்

தங்கள் படைப்புகளுக்காகவும் பார்வைகளுக்காகவும் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.........

kavitha
20-05-2005, 11:04 AM
இனி மன்றத்தில் என்னால் முடிந்த அளவு
பங்களிக்க முயல்கிறேன்.


மிக்க மகிழ்ச்சி

Mano.G.
21-05-2005, 03:27 AM
á ç 
츨 ġ 츢


ɡ.

அறிஞர்
21-05-2005, 03:35 AM
நண்பர் மனோஜியின் பதிப்பு
------------------------

நண்பர் ராம்பால் அவர்களை மன்றத்தில் மீண்டும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிரேன்
உங்கள் படைப்புக்களை மீண்டும் மன்றத்தில் காண ஆவலாய் காத்திருக்கிரேன்


மனோ.ஜி
__________________
வாழ்க்கை வாழ்வதற்கே,

rambal
22-05-2005, 04:25 PM
என்னை விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் பல...

அறிஞர்
23-05-2005, 02:31 AM
என்னை விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் பல...

நல்லது.. நண்பரே.. தங்களின் படைப்புக்களை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்...

jayasrimahi
08-04-2009, 05:40 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001: vanakkam nan jayasri vaanoli arivippalar....
உங்களை அன்போடும் பண்போடும் பாசத்தோடும் வறவேட்கிறேன்:icon_rollout::icon_rollout::icon_rollout:

:sprachlos020::sprachlos020:என்றும் உங்கள் நட்பை எதிர்பார்கும்

:wuerg019::wuerg019: jayasri.....

விகடன்
08-04-2009, 06:01 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001: vanakkam nan jayasri vaanoli arivippalar....
உங்களை அன்போடும் பண்போடும் பாசத்தோடும் வறவேட்கிறேன்:icon_rollout::icon_rollout::icon_rollout:

:sprachlos020::sprachlos020:என்றும் உங்கள் நட்பை எதிர்பார்கும்

:wuerg019::wuerg019: jayasri.....

ராம்பால் என்பவர் நம் மன்றத்தின் அதி மூத்த உறுப்பினர்களில் ஒருவர். அவரின் மன்ற வருகை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆந்திகதி அன்பரே.
தாங்கள் வந்ததோ 16 மார்ச் 2009. சரியாக ஆறுவருடத்தின் பின்னர் வந்திருக்கிறீர்கள்.
அவரை வரவேற்கின்றீர்களே?!?!?!

அறிமுகப்பகுதியில் வரவேற்கும்போது யாரை வரவேற்கின்றோம் என்பதை நன்கு அறிந்து வரவேற்றுக்கொள்ளுங்கள்.

நேசம்
08-04-2009, 06:34 AM
முத்த உறுப்பினரை மிண்டும் காண்பதில் மகிழ்ச்சி.உங்களது பார்வையும் மாறி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறிர்கள் உங்களது தரப்போகும் பதிவுகளும் புதுமையாக இருக்கும்.வாழ்த்துகள்