PDA

View Full Version : மீட்டருக்கு ஒரு முத்தம்



Iniyan
18-05-2005, 01:37 PM
ஒரு அழகான பெண் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குப் போனாள். அங்கிருக்கும் விலை உயர்ந்த பட்டுத் துணியை பார்த்து "இந்த துணி மீட்டர் என்ன விலை?" என்றாள்.

ஜவுளிக்கடை முதலாளி இளம் வாலிபன். குறும்பாக "உங்களுக்குன்னா ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் கொடுத்தா போதும்" என்றான்.

"அப்படியா? சரி. எனக்கு 20 மீட்டர் துணி கிழிச்சி மடிங்க."

பயலுக்கு வாயெல்லாம் பல்லு. "அட. இவ்வளவு ஈசியா மடிஞ்சிருச்சே?" என நினைத்துக் கொண்டு துணியை கிழித்து மடித்து பெண்ணிடம் கொடுத்து விட்டு ஆர்வமாய் நின்றான்.

"இப்ப உங்க பில்ல என் பாட்டி கொடுத்துருவாங்க" என்றபடி கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த குடுகுடு கிழவியை காட்டி விட்டு கிளம்பினாள் அந்தப் பெண்.

மன்மதன்
18-05-2005, 01:57 PM
இப்ப பயலுக்கு வாயெல்லாம் புண்ணு.. ஹிஹி
அன்புடன்
மன்மதன்

சுவேதா
18-05-2005, 02:10 PM
:D :D :D super அப்படித்தான் செய்யனும் அவனுக்கு.

பரஞ்சோதி
18-05-2005, 02:20 PM
ஹா ஹா, நல்ல வேளை 100 மீட்டர் எல்லாம் கேட்கவில்லை.

babu4780
18-05-2005, 02:56 PM
அடடா புதுத்துணினு பார்த்தா கடைசில கிளிஞ்ச பழய துணில நம்மாளுக்கு கிடச்சிருக்கு..

pradeepkt
19-05-2005, 04:36 AM
சரி ஏதோ துணி கெடைச்சிருச்சேன்னு நெனைச்சிருப்பான்.

babu4780
19-05-2005, 04:59 AM
சரி ஏதோ துணி கெடைச்சிருச்சேன்னு நெனைச்சிருப்பான்.
A BIRD IN HAND IS ...

gragavan
19-05-2005, 05:27 AM
கோழி எளசோ பழசோ....கொழம்பு ருசியாயிருந்தா சரிதான்னு நெனச்சிருப்பாம் போல.......

babu4780
19-05-2005, 05:30 AM
கோழி எளசோ பழசோ....கொழம்பு ருசியாயிருந்தா சரிதான்னு நெனச்சிருப்பாம் போல.......
ஐயா..ஆயிரத்துல ஒருத்தரே...இது ஒவரா தெரியலயா..
இதத்தான்..."மீச நரச்சாலும்...." னு சொல்லுவாங்கலோ...

gragavan
19-05-2005, 07:11 AM
ஐயா..ஆயிரத்துல ஒருத்தரே...இது ஒவரா தெரியலயா..
இதத்தான்..."மீச நரச்சாலும்...." னு சொல்லுவாங்கலோ...நாங்கள்ளாம் பிசிராந்தையார் வழியில வந்தவக....நரையுந் திரையும் எங்களுக்கேது

அறிஞர்
19-05-2005, 07:20 AM
கோழி எளசோ பழசோ....கொழம்பு ருசியாயிருந்தா சரிதான்னு நெனச்சிருப்பாம் போல.......

ஏதோ கிடைச்சா சரி என்ற நிலையில் இருப்பீர் போல....

விகடன்
29-07-2007, 04:06 AM
பாட்டி முத்தம் என்றால் இன்னும் அதிகமாக கேட்டிருக்கலாம்.

நாட்டின் நாணயத்தைப் போல முதலே சொல்லியிருக்க வேண்டும்.

இதயம்
29-07-2007, 04:22 AM
ஹா ஹா, நல்ல வேளை 100 மீட்டர் எல்லாம் கேட்கவில்லை.

கேட்டிருந்தால் துணி கந்தலாகி .. இல்லை.. இல்லை.. அவன் கதை கந்தலாகியிருக்கும்..!