PDA

View Full Version : ஒரு பிரம்பு வேண்டும்..



rambal
16-04-2003, 05:38 PM
மணிக்கொரு
பேச்சு பேசி
நொடிக்கு ஒரு
நிறம் மாறி
கடந்து போனவளை
திரும்பிப் பார்த்து
கொஞ்சம் அலை
பாய்ந்து விட்டு
எதிர்ப்படுபவளைக் கண்டு
கொஞ்சம் வழிந்து விட்டு
அடுத்த கணம்
ஒதுக்கிவிட்டுப் போன வாகன
ஓட்டுனனை திட்டிவிட்டு
அடுத்து காணும் அவலம்
கண்டு கொஞ்சம்
ஒப்பாரியும் வைத்துவிட்டு
நண்பன் முகம் கண்டதும்
சிரித்துவிட்டு
வெட்டிக் கதை பேசி விட்டு
கன நொடியில்
உலகை சுற்றி விட்டு
ஓய்வொழிச்சலில்லாமல்
சதாய்க் குடைந்து கொண்டே..
ஒரு அவஸ்தையான இம்சையாய்
எப்பொழுதும் என்னுடன்
ஒட்டிக் கொண்டு
என் பிரியத்திற்குரிய எதிரியாய்
எப்பொழுதும் என்னை
சுற்றிவிட்டு வேடிக்கை பார்த்து
நான் படும் அவஸ்தை கண்டு
ரகசிய சிரிப்பு வேறு..
என்னை ஒரு இடத்தில் நிலை
கொள்ளாமல் எதையோ தேட
வைத்து
எந்தத் தேடுதலின் முடிவிலும்
அடுத்த தேடுதலை
தயாராய் வைத்து..
இப்படி என் உடன் பிறந்த
இம்சையான மனதை அடித்து
அடக்குவதற்கு ஒரு பிரம்புதான்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

unwiseman
16-04-2003, 06:00 PM
பிரம்பால், சவுக்கால், குண்டந்தடியால் அடித்தால் அடங்குவதா அது? என்று நம்மை நெருப்பால், நீரால், நிலத்தால் அடக்குகிறார்களா அன்றுதான் அடங்கும் அதுவும். அது வரை நமக்கும் அதற்கும் நடக்கும் போர் நாடகத்தைத்தானே வாழ்க்கை என்கிறோம்.

poo
16-04-2003, 06:29 PM
அப்படியொரு அதிசயப்பிரம்பை கண்டெடுத்தால் எனக்கும் சொல் ராம்!!... (சுகமாய் தூங்கி நாட்கள் பலவாகிறது!!)

இளசு
16-04-2003, 06:32 PM
அருமை ராம், அருமையான படைப்பு
அஞ்ஞானி சொன்னதைத்தான் திருமூலர் உட்பட பல மெய்ஞானிகளும்
சொல்லி இருக்கிறார்கள்.
மனதை அடக்கிவிட்டால்.........
சலனம் அடங்கிவிடும்
சலனம் அடங்கிவிட்டால்
சவம் என்றே ஆகிவிடும்!!!