PDA

View Full Version : இடைத்தேர்தல் - அதிமுக வெற்றி

அறிஞர்
16-05-2005, 07:20 AM
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி

சென்னை மே 16:& காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மே 14 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் போட்டியிட்டன. இத்தொகுதிகளைக் கைப்பற்ற இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதனால் இத்தொகுதிகளில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. ஆரம்பம் முதலே முன்னணி வகித்து வந்தது அ.தி.மு.க.. காலை 11.45 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் சுமார் 17000 வாக்குகள் வித்தியாசத்திலும், கும்மிடிப்பூண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 27162 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

pradeepkt
16-05-2005, 07:46 AM
இரு தொகுதிகளிலும் முதல்வரே நிற்கிறார் என்றெண்ணி வாக்குக் கேட்டனராம் கழகக் கண்மணிகள்.
எது எப்படியாயினும் தெருவில் நிற்பதென்னவோ மக்கள்தானே?

baranee
16-05-2005, 08:18 AM
இரு தொகுதிகளிலும் முதல்வரே நிற்கிறார் என்றெண்ணி வாக்குக் கேட்டனராம் கழகக் கண்மணிகள்.
எது எப்படியாயினும் தெருவில் நிற்பதென்னவோ மக்கள்தானே?

சரியா சொன்னீங்க !!!

gragavan
16-05-2005, 08:56 AM
இந்த இடைத்தேர்தலில் ஒன்று புரிகின்றது. கூட்டணி ஆட்சிக்குத் தயாராக ஆவதுதான் திமுகவிற்கு நல்லது. வீண்பிடிவாதம் இனிமேல் உதவாது. ஆட்சியில் பங்கு கிடைக்குமென்றால் கூட்டணியிலும் ஒரு வேகமிருக்கும்.

pradeepkt
16-05-2005, 09:11 AM
இந்த இடைத்தேர்தலில் ஒன்று புரிகின்றது. கூட்டணி ஆட்சிக்குத் தயாராக ஆவதுதான் திமுகவிற்கு நல்லது. வீண்பிடிவாதம் இனிமேல் உதவாது. ஆட்சியில் பங்கு கிடைக்குமென்றால் கூட்டணியிலும் ஒரு வேகமிருக்கும்.

உண்மை. அது திமுக விற்கு நல்லது. ஆனால் மக்களுக்கு?
ஞாபகம் இருக்கிறதா? கர்நாடகாவில் கூட்டணிக் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து மாநில அரசு செய்த சில குளறுபடிகளால் தலைமைச் செயலாளரை 30 நாட்கள் சிறையிலடைக்க பெங்களூர் உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.
மாநில அளவில் கூட்டணி ஆட்சியினால் அந்தந்த கட்சியினருக்கும் பங்கு கொடுக்க வேண்டி வரும். இதனால் மக்கள் பங்குதான் குறையும்.
என்ன நடக்குமோ?

gragavan
16-05-2005, 11:56 AM
உண்மை. அது திமுக விற்கு நல்லது. ஆனால் மக்களுக்கு?
ஞாபகம் இருக்கிறதா? கர்நாடகாவில் கூட்டணிக் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து மாநில அரசு செய்த சில குளறுபடிகளால் தலைமைச் செயலாளரை 30 நாட்கள் சிறையிலடைக்க பெங்களூர் உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.
மாநில அளவில் கூட்டணி ஆட்சியினால் அந்தந்த கட்சியினருக்கும் பங்கு கொடுக்க வேண்டி வரும். இதனால் மக்கள் பங்குதான் குறையும்.
என்ன நடக்குமோ?பிரதீப். இது முறையான வாதமில்லை. அரசியல் பக்குவம் என்று ஒன்று கட்சிகளுக்கு வேண்டும். எல்லாரும் கூட்டுக் களவாணிகள்தான் என்ற ஒரு நிலை வந்த பிறகு விட்டத்தில் பாய்ந்தாலென்ன...குறுக்கே பாய்ந்தால் என்ன? ஒருத்தராக உட்கார்ந்து திங்காமல் பங்கு போட்டுத் தின்பார்கள். அது தேவலாம். காக்கை கரவா கரைந்துண்ணும் பண்பாவது வருமே!
எனக்கென்னவோ அடுத்தது தமிழகத்தில் கூட்டணியாட்சிதான் என்று தோன்றுகிறது.

pradeepkt
16-05-2005, 12:04 PM
கரவா கரைந்துண்ணும் பண்பு வந்து மக்கள் தலையில் மிளகாய் அரைக்காமலிருந்தால் நல்லது.
உங்கள் கனவு நனவாகட்டும்

thempavani
16-05-2005, 01:20 PM
பணம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி: காங்கிரஸ்

தமிழகத்தில் காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி பணபலம் மற்றும் அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என புதுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.

thempavani
16-05-2005, 01:23 PM
கும்மிடிப்பூண்டியில் அதிமுக பெற்றுள்ள வெற்றி அதிமுகவின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழ் என முதல்வர் ஜெயலலிதா தெவித்துள்ளார்.

thempavani
16-05-2005, 01:24 PM
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு அளிக்கப்பட்ட தண்டனைதான் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்விகள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

thempavani
16-05-2005, 01:25 PM
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் பணபலத்தின் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

pradeepkt
16-05-2005, 01:29 PM
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு அளிக்கப்பட்ட தண்டனைதான் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்விகள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராதாகிருஷ்ணனின் இது போன்ற நகைச்சுவைகளை நம்ம ஊரில்தான் கேட்க முடியும். நிறுத்த வேட்பாளர் கூட இல்லாத தேசிய கட்சிக்கு இது குறித்துப் பேச என்ன அருகதை உள்ளது?
அதிமுக பணபலத்தால் வெற்றி பெற்றது என்று கூறுபவர்களிடம் பணம் கம்மியா என்ன?
அதே சமயத்தில், ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழின் போன வருடத்துக் காப்பி திமுகவிற்குக் கொடுக்கப் பட்டதோ?

சரி வென்றவர் விம்முவதும் (பெருமிதத்தில் ) தோற்றவர் பம்முவதும் இந்திய அரசியலில் சகஜமப்பா.

mhn
31-05-2005, 02:01 PM
சரியா சொன்னீங்க
[QUOTE]
சரி வென்றவர் விம்முவதும் (பெருமிதத்தில் ) தோற்றவர் பம்முவதும் இந்திய அரசியலில் சகஜமப்பா.

pradeepkt
01-06-2005, 06:52 AM
வாங்க எம்ஹெச்என்! உங்களை இப்படித்தான் அழைக்க வேண்டுமா?
உங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.