PDA

View Full Version : மன்ற நிர்வாகிகளே உதவுங்கள்



அறிஞர்
16-05-2005, 02:02 AM
அன்புடைய மன்ற நிர்வாகிகளே...

என் பெயரை (யுனிக்கோடிற்கு ) மாற்ற வேண்டும்.....

இரண்டு வாரத்திற்கு முன் நண்பர் இராசகுமாரனுக்கு தனி செய்தி அனுப்பினேன். இன்று வரை பதில் இல்லை...

சிலர் நண்பர்கள் (மன்மதன், சுவேதா ) அவதாரை இணைக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்குரிய வழி இல்லை...

( ) பிராக்கெட் போடும்போது.. சிலசமயம்..... தானாகவே பொம்மை உருவாகி எழுத்தை மாற்றிவிடுகிறது... அதை மாற்ற வழி என்ன?

தள நிர்வாகிகள் விரைவில் உதவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்....

பரஞ்சோதி
16-05-2005, 04:21 AM
நான் முன்பே கூறியப்படி படங்கள் இணைக்கும் போது அதன் அளவு அதிகப்படுத்த கேட்டிருந்தேன், அதையும் கவனியுங்கள்.

மேலும் தலை சொன்ன மாதிரி சிரிப்பு பொம்மைகள் அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

புதிய பதிவுகள் தலைப்பை கிளிக் செய்தால் சில நேரங்களில் ஒன்றுமே வருவதில்லை, அதனால் கடைசி 20 பதிவுகள் எப்பொழுதும் தெரிவது போல் செய்தால் நன்றாக இருக்கும்.

கண்காணிப்பாளர்களை அடிக்கடி வந்து பங்கேற்க சொல்லுங்கள். முன்னோரு காலத்தில் புதிய உறுப்பினர்களை வரவேற்று ஊக்கப்படுத்த தலைமை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள், அருமையான பதிவுகளையும் கொடுத்தார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

puppy
16-05-2005, 09:21 AM
வந்தாச்சு வந்தாச்சு ஒன்னு ஒன்னா சரி செய்துடலாம்......எல்லோருக்கும் இது முழு நேர வேலை இல்லை.....ஒய்வு கிடைக்கும் போதே இங்கே வரமுடியும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க....

அறிஞர்
17-05-2005, 05:59 AM
வந்ததுக்கு நன்றி பப்பி......

என் பெயரை யூனிகோடிற்கு மாற்ற இயலுமா....

mania
17-05-2005, 06:50 AM
வந்ததுக்கு நன்றி பப்பி......

என் பெயரை யூனிகோடிற்கு மாற்ற இயலுமா....

ஏன் இப்போவே நல்லாத்தானே இருக்கு.... (ஏதோ ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்த மாதிரி.... )....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
17-05-2005, 07:52 AM
ஏன் இப்போவே நல்லாத்தானே இருக்கு.... (ஏதோ ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்த மாதிரி.... )....:rolleyes:
அன்புடன்
மணியா....

அப்ப ..பண்ணலையா.. :D :D
அன்புடன்
மன்மதன்

mania
17-05-2005, 10:29 AM
அப்ப ..பண்ணலையா.. :D :D
அன்புடன்
மன்மதன்

ஃபார்முலா ஏதோ விக்ஸ் ஃபார்முலா 44 மாதிரித்தானே இருக்கு.....இன்னும் முடிவுற்றதாக தெரியவில்லையே....??......:rolleyes:
அன்புடன்
மணியா......:D

அறிஞர்
18-05-2005, 03:02 AM
ஃபார்முலா ஏதோ விக்ஸ் ஃபார்முலா 44 மாதிரித்தானே இருக்கு.....இன்னும் முடிவுற்றதாக தெரியவில்லையே....??......:rolleyes:
அன்புடன்
மணியா......:D

லொள்ளு..... :p

mania
19-05-2005, 04:58 AM
ஆஹா.....ஆஹா.....வெற்றி வெற்றி அறிஞரின் ஆராய்ச்சியில் வெற்றி.....அழகு தமிழில் அறிஞரின் பெயர்.....விடாமுயற்சிக்கு பாராட்டுகள்...
அன்புடன்
மணியா...

thempavani
19-05-2005, 05:00 AM
அண்ணா..

இது பாராட்டா.. நக்கலா...

pradeepkt
19-05-2005, 05:03 AM
பாராட்டு பாதி நக்கல் பாதி.
கலந்து செய்த பதிவு அது.

mania
19-05-2005, 05:05 AM
அண்ணா..

இது பாராட்டா.. நக்கலா...

காலம் அப்பிடி இருக்கு தேம்பா.....நான் வாயை திறந்தாலே நக்கலுக்குத்தானா......உண்மையிலே பாராட்டுகள் தான்.....
அன்புடன்
மணியா

thempavani
19-05-2005, 05:06 AM
சரி..சரி..நம்புறோம்.,.........

அறிஞர்
19-05-2005, 07:13 AM
ஆஹா.....ஆஹா.....வெற்றி வெற்றி அறிஞரின் ஆராய்ச்சியில் வெற்றி.....அழகு தமிழில் அறிஞரின் பெயர்.....விடாமுயற்சிக்கு பாராட்டுகள்...
அன்புடன்
மணியா...

ஹி ஹி... இப்பதான் பார்த்தேன்...

நன்றி...... மன்ற நிர்வாகிகளே......

விரைவில் ஒவ்வொரு பிரச்சனையாக தீரும் என எண்ணுகிறேன்...

thempavani
19-05-2005, 08:44 AM
அப்போ .... இந்த மாற்றம் உங்க ஆராய்ச்சியின் பயன் இல்லையா..

அறிஞர்
19-05-2005, 10:14 AM
அப்போ .... இந்த மாற்றம் உங்க ஆராய்ச்சியின் பயன் இல்லையா..

இதுல எதுவும் நம்ம ஆராய்ச்சி.... இல்லை

எடுத்து சொன்னவுடன் அன்பான நிர்வாகிகள் செய்கின்றனர்...

puppy
19-05-2005, 11:24 AM
அன்பான நிர்வாகிகள்ன்னு சொல்லிட்டாரு நம்ம அறிஞர்,....நன்றி......

அறிஞர்
20-05-2005, 03:45 AM
அன்பான நிர்வாகிகள்ன்னு சொல்லிட்டாரு நம்ம அறிஞர்,....நன்றி......

என்றுமே அனைவரையும் அன்புடன் அழைப்பது நம் மரபல்லவா பப்பி.....

தளத்தில் அனைவரும் ஒரு குடும்பம்.... அன்பாய் இருக்கும்போது.. இன்பம் பெருகும்...... (இது கொஞ்சம் ஓவர் என்கிறீர்களா.. )

பாரதி
20-05-2005, 04:16 AM
மன்றத்தின் முதல் பக்கத்தில், பதிவுகளின் பெயருடன் அந்தப் பதிவை பதித்தவர் பெயர் வருவதில்லை. மாறாக கடைசியாக கருத்து எழுதியவர் பெயர் மட்டுமே வருகிறது. பதிவுடன் பதித்தவர் பெயரும் வந்தால் சிறப்பாக இருக்குமே...!

puppy
20-05-2005, 04:29 AM
அது அபப்டி தான் வரும் பாரதி..ஆனால் உள்ளே போனால் பதிந்தவரின் பெயரும்,.கடைசியாக பதிந்தவரின் பெயரும் வரும்....இருப்பினும் நீங்கள் கேட்ட மாதிரி செய்ய முடியுமா என பார்க்கலாம்...சரியா......

பாரதி
20-05-2005, 06:16 AM
உடன் பதிலுக்கு நன்றி பப்பி. நான் கேட்பது என்னவென்றால் சிலருடைய பதிவு என்றால் உடனே அங்கே போகத்தோன்றும். அதற்கு அது வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் பதிப்பாளர் பெயர் முதலிலும் , கடைசியாக கருத்தளித்தவர் பெயர் இறுதியிலும் வருமாறு செய்ய முடியுமா...?

அறிஞர்
20-05-2005, 06:33 AM
உடன் பதிலுக்கு நன்றி பப்பி. நான் கேட்பது என்னவென்றால் சிலருடைய பதிவு என்றால் உடனே அங்கே போகத்தோன்றும். அதற்கு அது வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் பதிப்பாளர் பெயர் முதலிலும் , கடைசியாக கருத்தளித்தவர் பெயர் இறுதியிலும் வருமாறு செய்ய முடியுமா...?

நண்பர் பாரதியின் கூற்று சரியாக தெரிகிறது... எனக்கும் அது போன்று எண்ணம் இருந்தது.......

இருவரின் பெயர்கள் வருவது சிறப்பாக இருக்கும்

puppy
20-05-2005, 07:56 AM
இந்த மாதிரி பெயரை வைச்சு படிக்காமல் , எல்லோருடைய பதிவுகளையும் படிக்க Vஏண்டும் என்பதற்க்காக இப்படியே வச்சுக்கலாம்......எனினும் உங்களின் தேவையை எப்படி செய்வது என்று பார்க்கிறேன்

பாரதி
20-05-2005, 12:07 PM
பரஞ்சோதியின் பெயர் எப்போதும் பரஞ்சோத& என்று காட்சியளிக்கிறது. மாற்றினால் நன்றாக இருக்கும்.

இராசகுமாரன்
21-05-2005, 01:25 PM
பரஞ்சோதியின் பெயர் எப்போதும் பரஞ்சோத& என்று காட்சியளிக்கிறது. மாற்றினால் நன்றாக இருக்கும்.

ஆம், சில இடங்களில் சில எழுத்து சேர்வையில் இப்படி வருகிறது. இதை தவிர்க்க பயனாளர் பெயரை சிறிது மாற்ற வேண்டும். பரஞ்சோதியின் அனுமதியுடன் விரைவில் மாற்றம் செய்யப் படும்.

[ என் பெயரும் தமிழில் அப்படித் தான் தெரிகிறது ]

பாரதி
21-05-2005, 01:33 PM
பதிலுக்கு நன்றி இராசகுமாரன். எழுத்துச்சேர்க்கைதான் பிரச்சினை என்றால் "தி" என் பெயரிலும்தானே இருக்கிறது..! ஒரு வேளை சற்று பெரிய பெயர் என்றால் இவ்விதமான பிரச்சினைகள் வருகிறதோ..?

இராசகுமாரன்
21-05-2005, 01:37 PM
நிச்சயம் நீளம் காரணமல்ல. ஏனென்றல் அதிக பட்ச நீளம் கொடுக்கப் பட்டுள்ளது.

பாரதி
21-05-2005, 01:39 PM
உடன் பதிலுக்கு நன்றி பப்பி. நான் கேட்பது என்னவென்றால் சிலருடைய பதிவு என்றால் உடனே அங்கே போகத்தோன்றும். அதற்கு அது வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் பதிப்பாளர் பெயர் முதலிலும் , கடைசியாக கருத்தளித்தவர் பெயர் இறுதியிலும் வருமாறு செய்ய முடியுமா...?

அத்துடன் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் இராசகுமாரன்.

இராசகுமாரன்
21-05-2005, 01:46 PM
நல்ல யுக்தி தான். ஆனால், அதன் தலைப்பு Last Post என்றல்லவா கூறுகிறது?
மேலும் ஒரு வரியை அங்கே கூட்ட வேண்டி இருக்கும். அல்லது இடப் பிரச்சனை உண்டாகும்.

சோதனை செய்து பார்ப்போம் அனைவருக்கும் பிடித்திருந்தால் தொடருவோம்.

அறிஞர்
23-05-2005, 02:29 AM
நல்லது...சோதனை செய்து பார்த்து........ தொடரலாம்...

பரஞ்சோதி
09-07-2005, 07:09 AM
எனக்கு ஒரு உதவி தேவை.

பழைய மன்றத்தில் தான் தொடங்கிய தலைப்பின் பெயரை, மாற்றும் வசதி இருந்தது.

நான் இங்கே அதிரடி சவால் - பிரியனுடன் என்று தொடங்கினேன், அதை இப்போ அதிரடி சவால் - மணியா அண்ணாவுடன் என்று மாற்ற நினைத்தால் மாற்ற முடியவில்லை, ஏன்? மாற்ற முடியாத காரணத்தால் புதிய தலைப்பு தொடங்கியிருக்கிறேன், ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு தலைப்பில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும், இருந்தாலும் தலைப்பு தொடங்கியவர் மாற்றும் உரிமை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அறிஞர்
09-07-2005, 07:39 AM
பரம்ஸ் இந்த வசதி எல்லாருக்கும் இல்லை. இராசகுமாரனிடம் மாற்ற சொல்லலாம்.

மேற்பார்வையாளர்கள் அனைவரும் மன்றம் வருகிறோம். மாற்றவேண்டியது என்ன என்று தெரிவித்தால் நாங்கள் உடனே மாற்றித்தருகிறோம். அதிரடி சவால் -மணியாவுடன் என மாற்றிவிடுகிறேன்.

பரஞ்சோதி
09-07-2005, 08:05 AM
நன்றி அறிஞரே!

மணியா அண்ணா என்பதை அறிஞரோடு என்று மாற்றுங்கள், நீங்க வாங்க விளையாடலாம்.

இராசகுமாரன்
09-07-2005, 08:24 AM
பரஞ்சோதி,

இந்த வசதியை அனைவருக்கும் கொடுக்க முயற்சித்தேன், ஆனால் இந்த vB மென்பொருளில் அது மாடரேட்டர் அனுமதியாக உள்ளது. அதனால் அனைவருக்கும் கொடுக்க இயலாது. நமது உதவியாளர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

பரஞ்சோதி
09-07-2005, 08:42 AM
நன்றி நண்பரே!

தலைப்பு மாற்ற விரும்பும் போது உதவியாளர்களை தொடர்பு கொள்கிறேன்.

அடிக்கடி வாங்க, கலகலப்பான பகுதியில் கலந்துக் கொள்ளுங்கள்.

வேலைப்பளு, மற்றும் காரணங்களால் மன அழுத்தம் வந்தால் சிரித்து மகிழ்வது நல்லது.

இராசகுமாரன்
09-07-2005, 01:22 PM
நிச்சயமாக வருகிறேன்...
அவ்வப்போது சோர்வாக இருக்கும்போது தெம்பு கொடுப்பது நம் தமிழ் மன்றத்து பதிப்புகள் தான்.

அறிஞர்
11-07-2005, 06:11 AM
எனக்கு ஒரு உதவி தேவை.

பழைய மன்றத்தில் தான் தொடங்கிய தலைப்பின் பெயரை, மாற்றும் வசதி இருந்தது.

நான் இங்கே அதிரடி சவால் - பிரியனுடன் என்று தொடங்கினேன், அதை இப்போ அதிரடி சவால் - மணியா அண்ணாவுடன் என்று மாற்ற நினைத்தால் மாற்ற முடியவில்லை, ஏன்? மாற்ற முடியாத காரணத்தால் புதிய தலைப்பு தொடங்கியிருக்கிறேன், ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு தலைப்பில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும், இருந்தாலும் தலைப்பு தொடங்கியவர் மாற்றும் உரிமை கொடுத்தால் நன்றாக இருக்கும்.பரம்ஸ் இப்போது சென்று எடிட் செய்து.. அட்வான்ஸ்டு டூல்ஸ் சென்று மாற்றி பாருங்கள்.. தங்களால் மாற்ற் இயலும் என எண்ணுகிறேன். முயன்றுவிட்டு தெரிவியுங்கள்

உதயா
16-08-2005, 04:59 AM
அன்புடைய மன்ற நிர்வாகிகளே...

( ) பிராக்கெட் போடும்போது.. சிலசமயம்..... தானாகவே பொம்மை உருவாகி எழுத்தை மாற்றிவிடுகிறது... அதை மாற்ற வழி என்ன?


நண்பரே.. ( ) போடும் போது ஒரு ஸ்பேஸ் விட்டு பிராக்கெட் குலோஸ் செய்து பாருங்கள் வராது.

Exp : ( manmadan )

பரஞ்சோதி
16-08-2005, 05:32 AM
எந்த பக்கத்தை திறந்தாலும் ஒவ்வொரு முறையும் ENCODING போய் UNICODE 8 கிளிக் செய்தால் தான் தமிழிலில் தெரிகிறது, ஏன், கவனியுங்கள்.

மன்மதன்
16-08-2005, 05:58 AM
இராசகுமாரன் அவர்களுக்கு தெரிவித்தாகிவிட்டது. இது மென்பொருள் பிரச்சனை என்பதால் அவர் வரும்வரை பொறுத்திருப்போம்.
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
16-08-2005, 06:02 AM
மேலும் போஸ்ட் செய்தால் உடனே ஏற மாட்டேங்குது, இரண்டாவது முறை போஸ்ட் கிளிக் செய்தால், எரேர் வருகிறது, ஆனால் உண்மையில் அது போஸ்ட் ஆகிவிடுகிறது.

மன்மதன்
16-08-2005, 06:15 AM
மேலும் போஸ்ட் செய்தால் உடனே ஏற மாட்டேங்குது, இரண்டாவது முறை போஸ்ட் கிளிக் செய்தால், எரேர் வருகிறது, ஆனால் உண்மையில் அது போஸ்ட் ஆகிவிடுகிறது.

அந்த பிரச்சனை எனக்கு இருக்கிறது.. இன்று சரியாகி விடும்...
அன்புடன்
மன்மதன்

இராசகுமாரன்
17-08-2005, 04:50 AM
மேலும் போஸ்ட் செய்தால் உடனே ஏற மாட்டேங்குது, இரண்டாவது முறை போஸ்ட் கிளிக் செய்தால், எரேர் வருகிறது, ஆனால் உண்மையில் அது போஸ்ட் ஆகிவிடுகிறது.

என்கோடிங்கில் ஒரு சிறு எழுத்துப் பிழையால் இத்தனை பிரச்சனைகள். இப்போது அனைத்தும் சரி செய்யப் பட்டுவிட்டது.

மன்மதன்
17-08-2005, 05:10 AM
நன்றி நண்பரே.
அன்புடன்
மன்மதன்

mgandhi
14-08-2006, 06:48 PM
ஸ்னேகா ஆடவே வேன்டாம் அவர் சிறித்தாலே போதும

இளசு
14-08-2006, 09:31 PM
நண்பர் காந்தி அவர்களே

e-kalappai நிறுவி Unicode-ல் தட்டச்சுங்கள்.

மயூ
16-08-2006, 03:22 AM
நண்பர் காந்தி அவர்களே

e-kalappai நிறுவி Unicode-ல் தட்டச்சுங்கள்.
நான் இ-கலப்பைதான் பாவிக்கின்றேன்......பிரைச்சனை இல்லை!!!!
அல்லது சுரதாவின் பக்கத்தைப் (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm)பாவிக்கலாம். அதுவும் பிரைச்சனை தருவதில்லை!

ஓவியா
04-10-2006, 05:27 PM
ஒரு வாரமாக எனக்கு உடல் நலம் சரில்லை,
அதனால் 10நாட்கள் மன்றம் வர இயலவில்லை...
(என் ரசிகர்களுக்கு: வருந்த வேண்டாம், நான் இப்பொழுது நலம்......:)


மதிப்பிர்கூரிய அறிஞர் சார், வணக்கம்.

மன்னிக்கவும், ஒரு தாழ்மையான கேள்வி

கடந்த பத்து தினங்களில் பதிவான அனைத்து பிணுட்டங்களையும் எப்படி கண்டு படிப்பது....
(பலரின் புதிய பதிவுகளை அல்லது தொடர் பிணுட்டங்களை காணமுடியவில்லை)...

நன்றி

பணிவான வணக்கங்களுடன்
ஓவியா

pradeepkt
05-10-2006, 10:59 AM
ஓவியா, உடம்பு சரியாப் போயிருச்சா???
நல்லது... அடிக்கடி மன்றம் வாருங்கள்.

ஆமா, யாரோ ரசிகர்களைத் தேடுறீங்களே... என்ன விஷயம்?

ஓவியா
05-10-2006, 04:49 PM
ஓவியா, உடம்பு சரியாப் போயிருச்சா???
நல்லது... அடிக்கடி மன்றம் வாருங்கள்.

ஆமா, யாரோ ரசிகர்களைத் தேடுறீங்களே... என்ன விஷயம்?


நன்றி பிரதீப்.

இன்னமும் காய்ச்சல் கொஞ்சம் உள்ளது...
(மன்றதின் மேல் ஒரே ஏக்கமாக இருந்தது அதான், வந்துவிட்டேன்)

ரசிகரா... அதுவந்து அதுவந்து நீங்கதான்னு சொல்ல மாட்டேனே...:D

பாரதி
05-10-2006, 11:17 PM
கடந்த பத்து தினங்களில் பதிவான அனைத்து பிணுட்டங்களையும் எப்படி கண்டு படிப்பது....
(பலரின் புதிய பதிவுகளை அல்லது தொடர் பிணுட்டங்களை காணமுடியவில்லை)...

பணிவான வணக்கங்களுடன்
ஓவியா

தமிழ்மன்ற முகப்பு பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் கருவிப்பட்டையில்

User CP
PhotoGallery
membersList
ebooks Share
New Posts
Search
Quick Links
Log out

என்று இருக்கும். அதில் New Posts என்பதை தேர்வு செய்யுங்கள்.

ஓவியா
06-10-2006, 04:39 PM
தமிழ்மன்ற முகப்பு பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் கருவிப்பட்டையில்

User CP
PhotoGallery
membersList
ebooks Share
New Posts
Search
Quick Links
Log out

என்று இருக்கும். அதில் New Posts என்பதை தேர்வு செய்யுங்கள்.


நன்றி பாரதி,

ஆனால், எனது பிரச்சனை என்ன வென்றால்

ஒரு முறை கடவு சொல்லை பயன் படுத்தி உள்ளே சென்று வேளியில் வந்து, .....மீண்டும் உள்ளே சென்றால்.......பழைய பதிவுகளை காண முடிவதில்லையே....

நான் வழக்கமாக new postடில் இருந்துதான் புதிய பதிவுகளை படிப்பேன்.

பாரதி
06-10-2006, 05:31 PM
அப்படியெனில் ஒவ்வொரு மன்றத்திலும் பதிவுகளின் இடது பக்க ஓரத்தில் இருக்கும் சின்னங்களின் வேறுபட்ட நிறங்களைப் பார்த்தும் நீங்கள் படிக்காத பதிவுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஓவியா
06-10-2006, 05:36 PM
சரி அப்படியே ஆகட்டும்

நன்றி

பாரதி
15-12-2006, 05:32 PM
அன்பு மேற்பார்வையாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,

முன்பு ஏதேனும் பிரச்சினைக்குரிய பதிவு என்றால் அப்பதிவிலிருந்தே மேற்பார்வையாளர்களுக்கு சுட்டிக்காட்ட வழி இருந்தது. இப்போது இல்லையே..? பழைய படி வசதி செய்து தர இயலுமா..?

மிக்க நன்றி.

இளசு
15-12-2006, 06:36 PM
அன்பு மேற்பார்வையாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,

முன்பு ஏதேனும் பிரச்சினைக்குரிய பதிவு என்றால் அப்பதிவிலிருந்தே மேற்பார்வையாளர்களுக்கு சுட்டிக்காட்ட வழி இருந்தது. இப்போது இல்லையே..? பழைய படி வசதி செய்து தர இயலுமா..?

மிக்க நன்றி.

மன்ற மென்பொருள் மாற்றத்தின்போது இது மாற்றப்பட்டுவிட்டது பாரதி.

இன்னும் மாற்றங்கள் செய்ய தலைவர் நாள் குறித்திருக்கிறார்.
இந்த வசதியை மீண்டும் கொண்டு வர அவர் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்.. நன்றி பாரதி!

பாரதி
16-12-2006, 09:41 PM
விளக்கத்திற்கு நன்றி அண்ணா.

ஆதவா
18-12-2006, 04:30 PM
மன்ற நிர்வாகிகளே என் பெயரை ஆதவா என்று தமிழில் மாற்றித்தாருங்கள்...

இளசு
18-12-2006, 05:21 PM
மன்ற நிர்வாகிகளே என் பெயரை ஆதவா என்று தமிழில் மாற்றித்தாருங்கள்...

விரைவில் செய்யப்படும் ஆதவா அவர்களே....

ஆதவா
19-12-2006, 07:29 AM
விரைவில் செய்யப்படும் ஆதவா அவர்களே....

நன்றி இளசு அவர்களே... இதனால் நுழைவுக்சொல் பாஸ்வேர்டு மாறுமா?

ஆதவா
19-12-2006, 12:37 PM
நன்றி மன்ற நிர்வாகிகளே!! என் பெயர் தமிழில் மாற்றப்பட்டுவிட்டது

அறிஞர்
19-12-2006, 12:46 PM
நன்றி இளசு அவர்களே... இதனால் நுழைவுக்சொல் பாஸ்வேர்டு மாறுமா?
தங்களின் நுழைவுச்சொல் தமிழில் பதியவேண்டும். பாஸ்வேர்டு மாறாது.

அறிஞர்
19-12-2006, 12:47 PM
நன்றி மன்ற நிர்வாகிகளே!! என் பெயர் தமிழில் மாற்றப்பட்டுவிட்டதுதமிழ் பெயரில் புதுப்பொழிவுடன்... இருக்கிறீர்கள்.. தொடர்ந்து பங்களியுங்கள்...

guna
20-12-2006, 02:42 AM
தமிழ்மன்ற முகப்பு பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் கருவிப்பட்டையில்

User CP
PhotoGallery
membersList
ebooks Share
New Posts
Search
Quick Links
Log out

என்று இருக்கும். அதில் New Posts என்பதை தேர்வு செய்யுங்கள்.

தற்போது, New Posts-ஐ காணவில்லையே...

புதிய பதிவுகளைப் படிக்க சிரமமாக உள்ளது..
இது தற்காலிகமா? இல்லை நிரந்தரமா?
அறிந்தவர்களை, குணாக்கும் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..

குணா

மயூ
20-12-2006, 02:52 AM
எனக்குத் தெரிகின்றதே அன்பரே

guna
20-12-2006, 03:01 AM
எனக்குத் தெரிகின்றதே அன்பரே

ஆனால் குணாக்கு தெரியலையே..
எதனாலையா இருக்கும்???:confused:
அறிந்தவர்களின் உதவி தேவை..:)

குணா

ஆதவா
20-12-2006, 03:35 AM
தற்போது, New Posts-ஐ காணவில்லையே...

புதிய பதிவுகளைப் படிக்க சிரமமாக உள்ளது..
இது தற்காலிகமா? இல்லை நிரந்தரமா?
அறிந்தவர்களை, குணாக்கும் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..

குணா

அன்பர்களே இது quick links பகுதியில் உள்ளது

guna
20-12-2006, 05:12 AM
அன்பர்களே இது quick links பகுதியில் உள்ளது

"quick links" இருக்கும் "today's post" சொடுக்கினால்,"guna, u do not hv permission to view tis page" என்ற குறிப்பு வருகிறது, இங்கே உதவி கேட்கும் முன்பு, அதையும் முயற்சித்து விட்டேன், ஆதவா..

இருப்பினும், தகவளுக்கு நன்றிகள்:)

குணா

ஆதவா
20-12-2006, 05:33 AM
எனக்கும் அவ்வாறேதான் முதலில் வந்தது,, தற்போது சரியாகிவிட்டது,, அறிஞரைக் கேளுங்கள்

guna
20-12-2006, 08:40 AM
எனக்கும் அவ்வாறேதான் முதலில் வந்தது,, தற்போது சரியாகிவிட்டது,, அறிஞரைக் கேளுங்கள்

தகவளுக்கு நன்றிகள் ஆதவா...

மன்ற நிர்வாகிகளும் அறிஞரும் குணா உதவி கேட்டிருப்பதை இன்னும் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்..
கவனித்திருந்தால் இன்நேரம் உதவியிருப்பார்கள்..

சரி, அவர்கள் கவனிக்கும் வரை காத்திருக்கிறேன்..
வேரு வழி இல்லையே..:)

குணா

ஷீ-நிசி
20-12-2006, 08:42 AM
குணா, ஒருவேளை பண்பட்டவர் தகுதி தேவைப்படும் என்று கருதுகிறேன்

ஆதவா
20-12-2006, 08:43 AM
உம் அவதார்:

ஜன்னலில் காத்திருக்கிறேன் ரோஜாவாக
என்னுடைய கேள்வியின் பதிலுக்கு!!
இன்னலொன்று வந்தது அறிஞரே
மின்னலாய் தீர்த்திடுவீர்...

ஆதவா
20-12-2006, 08:45 AM
குணா, ஒருவேளை பண்பட்டவர் தகுதி தேவைப்படும் என்று கருதுகிறேன்

ஷீ!! எதன் அடிப்படையில் இத் தகுதி வழங்கப்படுகிறது? ஏதேனும் ஐடியா இருக்கா?

ஷீ-நிசி
20-12-2006, 08:51 AM
ஆதவா.. எடுத்த எடுப்பிலேயே எல்லாப் பகுதிக்கும் புதியவர்கள் நுழைய கூடாது என்று இப்படி ஒரு தகுதி நிர்ணயித்திருப்பார்கள்.. என்று நினைக்கிறேன். ஆனால் பண்பட்டவர் என்ற அடைமொழி எல்லாம் மிக அதிகம். வேறு ஏதாகிலும் பெயர் இருந்தால் நலமாக இருக்கும். நிர்வாகி இதை கவனித்தால் நன்று...

அறிஞர்
20-12-2006, 04:05 PM
குணா இந்த குறையை முதல் முறையாக கேள்விபடுகிறேன். ஒரு சில நாட்கள் காத்திருங்கள். சரிசெய்கிறோம்.

அறிஞர்
20-12-2006, 04:06 PM
உம் அவதார்:

ஜன்னலில் காத்திருக்கிறேன் ரோஜாவாக
என்னுடைய கேள்வியின் பதிலுக்கு!!
இன்னலொன்று வந்தது அறிஞரே
மின்னலாய் தீர்த்திடுவீர்...
இது.. எதுக்கு ஆதவா... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
20-12-2006, 04:15 PM
இது.. எதுக்கு ஆதவா... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞரே இது குணாவுக்காக எழுதியது...

அறிஞர்
20-12-2006, 04:25 PM
அறிஞரே இது குணாவுக்காக எழுதியது... கவிதை அருமை..
எல்லா பகுதிகளும் கவிதையாக மாறுகின்றது....:rolleyes: :rolleyes:

ஆதவா
20-12-2006, 04:43 PM
அறிஞரே இது உமக்கு!!!

வாயு போல நிறைந்திருப்பாய்
கவிதைகள் பாராட்டுவாய் எனக்கு.
நேய மது நீ கொண்டாய் எம்மீது
தமிழ் மன்றப் பார்வையே!
தேயு மதி போலுள்ளாய்
இரவுச் சூரியனாய் காக்க-தமிழ்
தாயு மவள் சொல்லு கின்றாள்
அறிஞா! வாழி! நும் புகழோடு!!

guna
21-12-2006, 08:44 AM
குணா இந்த குறையை முதல் முறையாக கேள்விபடுகிறேன். ஒரு சில நாட்கள் காத்திருங்கள். சரிசெய்கிறோம்.

நன்றிகள் அறிஞர் சார்..:)

குணா

guna
21-12-2006, 08:49 AM
குணா, ஒருவேளை பண்பட்டவர் தகுதி தேவைப்படும் என்று கருதுகிறேன்

இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் ஷீ..
அறிஞர் கவனிப்பதாக சொல்லி விட்டார்..

தகவளுக்கு நன்றிகள் ஷீ..

இளசு
21-12-2006, 07:08 PM
அறிஞரே இது உமக்கு!!!

வாயு போல நிறைந்திருப்பாய்
கவிதைகள் பாராட்டுவாய் எனக்கு.
நேய மது நீ கொண்டாய் எம்மீது
தமிழ் மன்றப் பார்வையே!
தேயு மதி போலுள்ளாய்
இரவுச் சூரியனாய் காக்க-தமிழ்
தாயு மவள் சொல்லு கின்றாள்
அறிஞா! வாழி! நும் புகழோடு!!


ஆதவா அறிஞருக்காக
அழகாய் எழுதிய வாழ்த்துப்பா..
அருமை!

பாராட்டுகள்.. நன்றிகள்!

ஆதவா
21-12-2006, 07:17 PM
இளசு அவர்களே நன்றி....

(உங்களுக்கும் ஒரு கவிதை போட்றலாமே)

நாளும் நல்ல கவி ஊரும்
இளசு உம் வார்தையாலே
கேளும் இது பொய்யல்ல
வாழி நீ தமிழுள்ள வரை!!

இளசு
21-12-2006, 07:42 PM
ஆஹா ஆதவா
பக்கத்து இலை பாயாசம் அருமை என்று சொன்னதுக்கா
எனக்கும்....உம்?

உம் தமிழ் அருமை.. அதைச் சுவைத்தபடி.. நன்றி!

ஆதவா
21-12-2006, 07:48 PM
ஆஹா ஆதவா
பக்கத்து இலை பாயாசம் அருமை என்று சொன்னதுக்கா
எனக்கும்....உம்?

உம் தமிழ் அருமை.. அதைச் சுவைத்தபடி.. நன்றி!

நீர் சொன்ன பாயாசம் தேவாமிர்தமாயிற்றே... பாராட்டாமலிருப்பதா?

உமிழ் நீர் வரண்ட சொல்லுவேன்
அமிழ் தம் தானென்று.

(ரெம்ப ஓவராத்தாம் போய்ட்ரிக்கேன்.)

guna
23-12-2006, 05:30 AM
குணா இந்த குறையை முதல் முறையாக கேள்விபடுகிறேன். ஒரு சில நாட்கள் காத்திருங்கள். சரிசெய்கிறோம்.

குறை சரியாகி விட்டது..
சரி செய்தமைக்கு நன்றிகள்..

குணா:)

gayathri.jagannathan
05-01-2007, 05:59 AM
மன்ற நிர்வாகிகளே...

தவறுதலாக ஒரே பதிவை இரு முறை பதித்து விட்டேன்.... செய்த பதிவுகளில் ஒன்றை எப்படி நீக்குவது?

அப்படியே எனது பெயரை தமிழில் மாற்ற உதவுங்களேன்....

thoorigai
05-01-2007, 06:33 AM
உமிழ் நீர் வரண்ட சொல்லுவேன்
அமிழ் தம் தானென்று.

(ரெம்ப ஓவராத்தாம் போய்ட்ரிக்கேன்.)

திரிதன்னில்

எங்கு திரும்பினாலும்
தேன்(தமிழ்) அண்டா!
மனம் அலையுதே
பறந்து வண்டா!!

ஆதவா! அள்ளித்தா இன்னும்
ஆவலைத்தான் விலையா பேசணும்

இளசு
06-01-2007, 07:15 PM
மன்ற நிர்வாகிகளே...

தவறுதலாக ஒரே பதிவை இரு முறை பதித்து விட்டேன்.... செய்த பதிவுகளில் ஒன்றை எப்படி நீக்குவது?

அப்படியே எனது பெயரை தமிழில் மாற்ற உதவுங்களேன்....

காயத்ரி,

1) பதிவுகளை நீக்க நிர்வாகிகள், மேற்பார்வையாளர்களால் மட்டுமே இயலும். உங்களின் செல்லக்கவிதை 2 முறை பதிவில் ஒன்று அகற்றப்பட்டுவிட்டது.

நீங்கள் அதுபோல் பதித்தால் எங்களில் ஒருவருக்கு தனிமடல் அனுப்பலாம்.

2) உங்கள் பயனாளர் பெயர் மாற்றம் பற்றி தலைவர் இராசகுமாரன் அவர்களுக்கு தனிமடல் செய்யுங்கள். நன்றி..

ஓவியா
07-01-2007, 01:36 AM
ஆதவா,
கவிதைகள் அருமையப்பா

உங்க பதிவில் மன்றம் குளிர்ச்சியா (ஐஸ்) இருக்கு போல,
மதி, மயூ, பிரன்க் போல செல்ல பிள்ளையா ஆகியாச்சு போல

மிக்க சந்தோஷம்....ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்

ஆதவா
07-01-2007, 02:28 AM
திரிதன்னில்

எங்கு திரும்பினாலும்
தேன்(தமிழ்) அண்டா!
மனம் அலையுதே
பறந்து வண்டா!!

ஆதவா! அள்ளித்தா இன்னும்
ஆவலைத்தான் விலையா பேசணும்

அருமையா இருக்கு தூரிகை!
என்ன அருமையான பெயர்: தூரிகை. நல்ல அருமையான தமிழ்..

ஆதவா
07-01-2007, 02:37 AM
ஆதவா,
கவிதைகள் அருமையப்பா

உங்க பதிவில் மன்றம் குளிர்ச்சியா (ஐஸ்) இருக்கு போல,
மதி, மயூ, பிரன்க் போல செல்ல பிள்ளையா ஆகியாச்சு போல

மிக்க சந்தோஷம்....ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்

(ஆகா ஒரே ஐஸ் ஆ இருக்கே...)

நீவியம் திரித்த என் தேந்தமிழ் தோழியே
காவியம் நன்றெனச் சொன்ன நீ வாழியே!!
ஓவியம் பேர் படைத்த ஆருயிர் சகோதரி,
தூவுவேன் என் கவி, பாருநீ எல்லா திரி. ----------- (திரியும்)


இப்படியே போய்ட்டிருந்தா இதை வாழ்த்துத் திரின்னு நினச்சுருவாங்க.. அதனால அய்யா இப்பைய்க்கு எஸ்கேப்...

thoorigai
25-01-2007, 08:55 AM
ஐயா,

இந்த விண்ணப்பத்தைதான் நான் தனித்திரியாக (அறியாமல்) இன்று பதித்துள்ளேன். வழிகாட்டுவீரா தயை செய்து...

ஓவியா
09-03-2007, 10:58 AM
இங்கே பல தமிழ் சான்றோர்கள் தமிழில் முற்றும் கற்ற நிலையில் உள்ளனர். அவர்களுக்கு என் பணிவான வணக்கம். :) இந்த பின்னூட்டம் தவறாயின் மன்னிக்கவும் :) .தமிழ் மொழிக்கு நான் இன்னும் சிறுமியே :)

சிறுவர் மன்ற திரியை பூட்டுவதற்கு என்ன காரணம் நண்பர்களே??? :angry:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7755&page=31

தயவு செய்து இந்த திரியைப் பூட்ட வேண்டாம்.

நான் இன்னும் தமிழ்மொழிக்கு சிறுமியே.
(என்னைப் போல் சில மக்களும்)

இந்த திரி தொடருமாயின் என்னை போன்றோர்
பல அறிய தமிழ் வார்தகளை கற்று கொள்ள உதவும்.

என் தாழ்மையான வேண்டுகோள்.

வெற்றி
09-03-2007, 11:34 AM
நான் இன்னும் தமிழ்மொழிக்கு சிறுமியே.
(என்னைப் போல் சில மக்களும்)

இந்த திரி தொடருமாயின் என்னை போன்றோர்
பல அறிய தமிழ் வார்தகளை கற்று கொள்ள உதவும்.

என் தாழ்மையான வேண்டுகோள்.

இதை படித்த உடன் ஓவியா உங்கள்(தமிழ் உணர்வு) மேல் மரியாதை வந்தது உண்மை...
பி.கு:- அது குழந்தைதனமான விளையாட்டாக(சிறுபிள்ளைதனம்!!!) தோன்றியதால் நான் அதில் பங்களிக்கவில்லை..ஆனால் உங்களுக்கு அது பிடித்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது

ஓவியா
09-03-2007, 11:43 AM
இதை படித்த உடன் ஓவியா உங்கள்(தமிழ் உணர்வு) மேல் மரியாதை வந்தது உண்மை...


ஆமாம் நண்பரே

நான் 7 - 11 வயது வரை மட்டுமே 4 பாடம் தமிழ் கற்றேன். :)


காரணமில்லாமல் எதற்க்கு ஒரு திரியை மூட வேண்டும். :angry:

முடிந்தால் ஒரு நாளைக்கு 200 தமிழ் திரிக்கு எண்ணெய் ஊற்றுவோம். :)

தேவையான விசயமோ இல்லை லூட்டியோ. சிறுவர் பூங்காவில்
ஒவ்வொரு திரியிலும் ஒரு விசயம் உல்லது.


அப்படி தேவை என்றால் காரணத்துடன்
சபைக்கு தேவையற்ற திரியை முடக்குவோம் மூடுவோம்.

அறிஞர்
09-03-2007, 02:53 PM
நண்பரின் ஆசைப்படி அந்த திரி மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஓவியா
09-03-2007, 02:56 PM
மிக்க நன்றி சார்

மனோஜ்
10-03-2007, 06:03 PM
இனி 5 எழத்து வார்த்தை தொடருவேம்....

மனோஜ்
10-03-2007, 06:06 PM
பதிவில் புகைபடத்தை இனைப்பது எப்படி நேரடியாக இனைதல உதவி இல்லாது

ஓவியா
06-06-2007, 08:50 PM
வீடியோ திரிகளில் வீடியோ பார்க்க முடியவில்லையே!!!

மன்ற நிர்வாகிகளே உதவுங்கள்.

நன்றி.

அறிஞர்
06-06-2007, 09:30 PM
வீடியோ திரிகளில் வீடியோ பார்க்க முடியவில்லையே!!! நன்றி.
சிறிது பிரச்சனை உள்ளது.. விரைவில் தீர்த்துவைக்கப்படும்.