PDA

View Full Version : நாளை!!!pradeepkt
13-05-2005, 05:36 AM
வெகுநாட்களாகவே இந்தத் திரியில் ஏதேனும் பங்களிக்க வேண்டும் என நான் எண்ணியதுண்டு. ஆனால் சரியாக எதுவும் அமையவில்லை.
இப்போது நண்பர்கள் கொடுத்த தைரியத்தில், முதல் முறையாகக் களம் இறங்குகிறேன்.

இந்தக் கவிதை அல்லது "கவிதை மாதிரி" ரொம்ப நாளைக்கு முன்னால் குஜராத் பூகம்பத்தின் சமீபத்தில் எழுதியது. திடீரென்று சில நாட்களாக ஓய்வில்லாமல் அலுவலகத்தில் வேலை இருந்தது. மனம் மிக கிக சலிப்புற்று இருந்த வேளையில் நடுவில் புதுதில்லிக்குச் செல்ல வேண்டியிருந்த போது விமானத்தில் கோளாறு காரணமாகத் தரையிறங்கக் கொஞ்ச நேரம் ஆனது. அந்த சமயத்தில் என் மன வெளிப்பாடுகளைப் பேனாவுக்குக் கொண்டு வந்தேன்.

படித்து மலராயினும் சரி, சாட்டையாயினும் சரி, உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

நாளை!

விண்ணில் விரையும்போது,
வெகு நாளைக்கப்புறம்,
வித்து கிளம்புகிறது!

இயந்திர மனிதன்
இற்றுப் போவான் - என்
இதயத்தின் வேக மாற்றங்களுக்கு முன்னால்!

எனக்கு என்ன தேவை?
என்று எனக்குத் தெரிய
எனக்கு என்ன தேவை?

தேடித் திரிந்தும்
தெளிந்தபாடில்லை!

பணம் என்று பாடாய்ப் படுத்தினேன் முதலில்!
"ஒருகோடி" என்று வகுத்திருந்த வரையறைகள்
"இருகோடி" என்று விரிந்த போதும் என்னுள்
ஒரு கோடிட்ட இடம் நிரம்பவேயில்லை!

பாசமோ என்று பரிதவித்தேன் அடுத்து!
"பலருக்கும் வேண்டுமளவு பாசத்தைக் கொடுத்து
அல்லது கொடுப்பது போலேனும் நடித்து
உன் பாசவேட்டையைத் தொடர்ந்து நடத்து"
- உள்ளிருந்து குரல் கட்டளையிட்டது!

கொடுத்தாயிற்று...
நடித்தாயிற்று...
ஆயினும் உள்ளே ஒரு வெறுமை
முடிவில் முடிவிலியாய்த் துரத்தியதில்
மூளை பாளம் பாளமாய்
வெடித்தாயிற்று...!

தற்காலிகச் சுகத்திற்குத்
தொலைக்காட்சியை நாடினேன்!

"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆனேன்"
- தமிழ்நாடு பொன்மகள் வாங்கிய பொன்னையா பேட்டி,
"பதினைந்து வினாடிகளில் பிச்சைக்காரன் ஆனேன்"
- பூத்துக் குலுங்கிய குடும்பம் பூகம்பத்தால் பூஞ்சை பிடிக்க
பூமியில் தவித்த பூமிலால் பேட்டிக்கு நடுவில்!

"பளிச்" சென்று ஒரு வெளிச்சம் -
இருட்டறையில் மெழுகுவர்த்தியாய்!

"நாளை நாளை" என்று எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை வீணாக்கி விட்டேனோ?
எண்ணூறு இடையூறுகளை எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை இன்னலோடு வாழ்வதில் என்ன லாபம்?
இக்கணம் இன்பமாய் வாழ வெளிச்சம் ஆணையிட்டது!

நாளையும் நாளைய நாளாய் மட்டும் கழிப்பேனா?
மெழுகுவர்த்தி வெளிச்சம் நாளையும் வரலாம்...
வெளிச்சம் சுருங்காது...
மெழுகும் உருகாதா?
வர்த்தியும் சுருங்காதா?

நாளை பார்க்கலாம்!

அன்புடன்,
பிரதீப்

Iniyan
13-05-2005, 10:04 AM
நாளையை எண்ணிக் கொண்டே பல பல இன்றுகளை இழந்து தவிக்கும் பல உள்ளங்கள் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. வாழ்த்துக்கள் பிரதீப்

amudha
13-05-2005, 05:27 PM
நிறைய சொல்லி இருக்கீங்க...நல்லா இருக்கு..

இன்னும் கொஞ்சம் கவிதை format இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்பது என்னோட opinion..

இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்!!.. :)

//கொடுத்தாயிற்று...
நடித்தாயிற்று...
ஆயினும் உள்ளே ஒரு வெறுமை
முடிவில் முடிவிலியாய்த் துரத்தியதில்
மூளை பாளம் பாளமாய்
வெடித்தாயிற்று...!//---

Nanban
13-05-2005, 05:34 PM
நாளைய நாளைக்காக
இன்றைய இன்றை
தொலைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் பொதுவானதே...

எத்தனை எத்தனையோ சமாதானங்கள்
எந்த எந்த மூலைகளிலிருந்தோ
வந்து வந்து விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் மனம் நகரும்
நாளைய கனவுகளைத் தேடி..

தேடலற்ற மனங்களில்
இன்றைய தினம்
இன்பத் தினம்
தேடும் சஞ்சாரங்களில்
சிக்குண்டுத் தவிப்பது
கனவு காணத் தெரிந்த
மனம் மட்டுமே..

இன்றைய இன்பமா?
நாளைய சாதனையா?
தீர்மானிக்கத் தெரிந்தால்
இன்றும் சரி
நாளையும் சரி
இன்பத்தின் ஊற்றுகள்
திறந்தே தானிருக்கும்....

பரஞ்சோதி
13-05-2005, 07:59 PM
முதலில் தம்பி பிரதீப் அவர்களுக்கு பாராட்டுகள்.

கன்னி முயற்சி வெற்றி முயற்சியாகிவிட்டது.

தம்பியின் கவிதைக்கு பதில் கவிதையாகவும், பாட கவிதையாகவும் கொடுத்த நண்பன் அவர்களுக்கு பாராட்ட தேவையே இல்லை, அவர் அதை எல்லாம் கடந்தவர்.

இன்றைய இன்பமா?
நாளைய சாதனையா?

ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய வரிகள்.

இன்றைய காயை விட நாளைய கனி தான் இனிக்கும், அதே நேரத்தில் இன்றைய காயே போதும் என்று நினைத்து இனிமையான பழத்தை இழந்தவர்கள் தான் அதிகம்.

babu4780
14-05-2005, 05:18 AM
அருமை பிரதீப் கலக்கிப்புட்டீங்க... வாழ்த்துக்கள்.

pradeepkt
14-05-2005, 07:05 AM
நாளையை எண்ணிக் கொண்டே பல பல இன்றுகளை இழந்து தவிக்கும் பல உள்ளங்கள் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. வாழ்த்துக்கள் பிரதீப்

நன்றி இனியன்.
இன்னும் பல கேள்விகள் என்னுள் விடைதெரியாமலே சுற்றிக் கொண்டிருக்கின்றன.

pradeepkt
14-05-2005, 07:07 AM
நிறைய சொல்லி இருக்கீங்க...நல்லா இருக்கு..

இன்னும் கொஞ்சம் கவிதை format இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்பது என்னோட opinion..

இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்!!.. :)

//கொடுத்தாயிற்று...
நடித்தாயிற்று...
ஆயினும் உள்ளே ஒரு வெறுமை
முடிவில் முடிவிலியாய்த் துரத்தியதில்
மூளை பாளம் பாளமாய்
வெடித்தாயிற்று...!//---

அந்த நாளில் என் எண்ணத்தில் தோன்றியவற்றை அப்படியே கொட்டியது இது. எந்த திருத்தமும் இது முதல் முதலில் எழுதப்பட்ட நாள் முதல் தெரிந்தே செய்ததில்லை.
எனக்கும் எதுகை, இயைபு, புதுக்கவிதை என எந்த வட்டத்திலும் இது பொருந்தாதது குறித்து வருத்தமுண்டு.
கருத்துகளுக்கு நன்றி அமுதா.

pradeepkt
14-05-2005, 07:09 AM
நாளைய நாளைக்காக
இன்றைய இன்றை
தொலைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் பொதுவானதே...

எத்தனை எத்தனையோ சமாதானங்கள்
எந்த எந்த மூலைகளிலிருந்தோ
வந்து வந்து விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் மனம் நகரும்
நாளைய கனவுகளைத் தேடி..

தேடலற்ற மனங்களில்
இன்றைய தினம்
இன்பத் தினம்
தேடும் சஞ்சாரங்களில்
சிக்குண்டுத் தவிப்பது
கனவு காணத் தெரிந்த
மனம் மட்டுமே..

இன்றைய இன்பமா?
நாளைய சாதனையா?
தீர்மானிக்கத் தெரிந்தால்
இன்றும் சரி
நாளையும் சரி
இன்பத்தின் ஊற்றுகள்
திறந்தே தானிருக்கும்....

வாழ்த்தாக, என் எண்ணத்திற்குப் பதிலாக மற்றொரு கவிதை. நன்றி நண்பன்.
நான் தினமும் இன்றைய நாளை வாழ்வதென்று முடிவெடுத்து அடுத்த நாளைக்காகவே சேமித்துக் கொண்டிருந்தேன். இப்போது இன்றைய இன்பங்களை அனுபவிப்பதே நாளைய இன்பங்களுக்கு முதலீடு என்று முடிவு செய்திருக்கிறேன்.

pradeepkt
14-05-2005, 07:12 AM
முதலில் தம்பி பிரதீப் அவர்களுக்கு பாராட்டுகள்.

கன்னி முயற்சி வெற்றி முயற்சியாகிவிட்டது.

தம்பியின் கவிதைக்கு பதில் கவிதையாகவும், பாட கவிதையாகவும் கொடுத்த நண்பன் அவர்களுக்கு பாராட்ட தேவையே இல்லை, அவர் அதை எல்லாம் கடந்தவர்.

இன்றைய இன்பமா?
நாளைய சாதனையா?

ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய வரிகள்.நன்றி அண்ணா. உண்மையில் உங்கள் அனைவருடைய வாழ்த்துகளும் என்னுடைய பசுமையான பக்கங்களை மீண்டும் திருப்பி விட்டன.


இன்றைய காயை விட நாளைய கனி தான் இனிக்கும், அதே நேரத்தில் இன்றைய காயே போதும் என்று நினைத்து இனிமையான பழத்தை இழந்தவர்கள் தான் அதிகம்.

இந்தக் குழப்பத்தில்தான் எது தேவையென்று தீர்மானிக்கத் திணருகிறோம். உங்கள் அனுபவம் பேசுகிறது !

அன்புடன்,
பிரதீப்

pradeepkt
14-05-2005, 07:13 AM
அருமை பிரதீப் கலக்கிப்புட்டீங்க... வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி பெரி.
இதுபோல் பல நிகழ்வுகள் என்னைக் கிளறி விட்டிருக்கின்றன.

மன்மதன்
14-05-2005, 09:11 AM
ப்ரதீப் .. நன்றாக எழுதுகிறீர்கள்.. நிறைய எழுதுங்க. கவிதை பக்கத்தை அடிக்கடி கவனிக்க வையுங்க..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
14-05-2005, 10:56 AM
ப்ரதீப் .. நன்றாக எழுதுகிறீர்கள்.. நிறைய எழுதுங்க. கவிதை பக்கத்தை அடிக்கடி கவனிக்க வையுங்க..
அன்புடன்
மன்மதன்

நன்றி மன்மதன்.
இவைதான் எனக்கு உற்சாக மந்திரம்.

kavitha
14-05-2005, 11:07 AM
நல்லா முயற்சி பண்ணியிருக்கிறீர்கள் பிரதீப்
தொடர்ந்து எழுதுங்கள். சரளமாகும். வாழ்த்துக்கள்

"தேடலற்ற மனங்களில்
இன்றைய தினம்
இன்பத் தினம்
தேடும் சஞ்சாரங்களில்
சிக்குண்டுத் தவிப்பது
கனவு காணத் தெரிந்த
மனம் மட்டுமே.. "


உண்மையான வரிகள்.

pradeepkt
14-05-2005, 11:12 AM
நன்றி கவிதா

பிரியன்
14-05-2005, 04:53 PM
வாழ்த்துக்கள்....

முதல் முயற்சி ஆயினும் நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்..இரண்டொருதடவை வாசித்து பாருங்கள்..ஏதேனும் புதுமையாய் தெரிந்தால் அது கவிதையே......

பிரசன்னா
10-09-2005, 04:12 PM
நிறைய சொல்லி இருக்கீங்க...நல்லா இருக்கு..