PDA

View Full Version : முனிப்பாய்ச்சல்....? பதில் தேடுகிறேன்.

பாரதி
12-05-2005, 04:30 PM
தேதியில்லா குறிப்புகள்

முனிப்பாய்ச்சல்....? பதில் தேடுகிறேன்.
இதே போல இன்னொரு முறை...

அன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேலே இருக்கும். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தொலைபேசியில் செய்தி வந்தது. உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். பேருந்தில் கிளம்பி தூத்துக்குடிக்கு வந்தால் ஏதோ பிரச்சினை காரணமாக பேருந்துகள் எல்லாம் ஓடாது என்பதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்து விட்டு.. இனி தாமதிப்பதில் பயனில்லை என்பதால் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

திரும்பவும் வீட்டுக்கு வந்து, பிரதீப்பை உடன் வர முடியுமா என்று கேட்டேன். உடனே அவசர விடுப்பு சொல்லி விட்டு அவனும் என்னுடன் வர ஒப்புக்கொண்டான்.

கிளம்பி வரும் போது, அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது.. இரவு நேரம் என்பதால் சாலையில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. வாகனத்தில் வேகத்தைக்காட்டும் கருவியில் முள் ஓடாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நான் பிரதீப்பிடம் ஏதோ கேட்க, சற்றே கவனம் அவன் பதிலிலும்- அந்தக்கருவியிலும் சென்றது.

சரியாக அதே சமயத்தில் சாலையில் உண்டாகியிருந்த, நீரில் மறைந்திருந்த பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் உள்ளே இறங்கி விட, வந்த வேகத்தில் நானும் பிரதீப்பும் வாகனத்திற்கு முன்பாக தூக்கி வீசப்பட்டோம். எதிரே எந்த வாகனமும் வராத காரணத்தால் சில சிராய்ப்புகளுடன் எழுந்தோம். வாகனத்தில் எதுவும் பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெக்கானிக்கிடம் உறுதிப்படுத்திக்கொண்டு, சிராய்ப்புகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு, பிரயாணத்தைத் தொடங்கினோம். வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்ட பின் அத்தனை வருடங்களில் வாகனம் ஓட்டும் போது கீழே விழுந்தது அதுவே முதல்முறை.

உள்ளங்கையிலும் சில சிராய்ப்புகள் இருந்த காரணத்தால் வாகனத்தை ஓட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கவே செய்தது. மிதமான வேகத்தில் இரவு சுமார் பதினொன்றரை மணியளவில் தூத்துக்குடியை விட்டு வெளியே வந்தோம். நேரடி பேருந்துத்தடத்தை விட, எட்டையாபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், செக்கானூரணி, உசிலம்பட்டி வழியாக ஊருக்கு செல்வதே குறுக்கு வழி என்பதால் அந்த வழியாக செல்ல முடிவு செய்தோம்.

எட்டையாபுரத்திற்கும், கோவில்பட்டிக்கும் இடையே செல்லும் போது சாலையில் கும்மிருட்டு. சாலை ஓரங்களில் எந்த மின்விளக்கும் இல்லை. சாலையின் இருமருங்கிலும் தோட்டம் . கம்பு அல்லது சோளம் போன்ற பயிர் பயிரடப்பட்டிருந்தது. எந்த ஒரு வாகனமும் எங்களுக்கு பின்போ, முன்போ வரவில்லை. எங்களின் இருசக்கர வாகன வெளிச்சம் மட்டுமே சாலையில் இருந்தது.

கோவில்பட்டிக்கு ஒரு ஐந்து கிலோமீட்டர் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். அப்போது ஏறக்குறைய ஒரு பர்லாங்கு தொலைவில் சாலையின் இடது பக்கத்தில் வெகு தொலைவில் இருந்து பிரகாசமான ஒரு வெளிச்சம்... இரண்டு பெரிய டார்ச் லைட்டுகளை அருகருகே - ஒரு அடி தொலைவில் வைத்தால் எப்படி இருக்குமோ, அது போல இருந்தது. வெளிச்சமும் அதே போல இருந்தது. அது மிகவும் வித்தியாசமாகவும், கவனத்தை கவருவதாகவும் இருந்ததால் அதைப் பற்றி பிரதீப்பிடம் சொன்னேன்... அவனும் கவனித்தான்.

கிட்டத்தட்ட சராசரியான ஒரு ஆள் உயரத்தில் தெரிந்த அந்த வெளிச்சம் அதிவேகத்தில் இடப்புறத்தில் இருந்து வலதுபுறமாக நகர்ந்தது. சாலையை கடந்து வலப்புறமாக சென்ற அந்த வெளிச்சம் சில விநாடிகளில் மறைந்து விட்டது.

வெளிச்சம் கடந்த அந்த இடத்தை நெருங்கிய போது அங்கு எந்த சாலையும் இல்லை என்பது தெரிந்தது. ஆகவே எந்த வாகனமும் தோட்டங்களுக்கிடையே சென்றிருக்க வாய்ப்பே இல்லை. எந்த ஒரு மனிதனாலும் விளக்குகளைப் பொருத்திக்கொண்டு, அந்த நள்ளிரவு வேளையில் தோட்டங்களுக்கு இடையிலும், சாலைக்கு இடையிலும் நம்ப முடியாத அந்த வேகத்தில் நிச்சயமாக ஓடி இருக்க முடியாது. ஒரு வேளை ஏதாவது பறந்து சென்ற பறவையின் கண்களாக இருக்க முடியுமா என்றால் அந்த அளவுக்கு ( சுமார் ஆறு அல்லது ஏழு இஞ்சுகள் கொண்ட வட்டங்கள் ) பெரிய கண்களைக் கொண்ட பறவையை இது வரை நான் நேரில் பார்த்ததில்லை. வெளிச்சங்களுக்கு இடையே இருந்த இடைவெளி கிட்டத்தட்ட ஒரு அடி இருக்கும். எனவே பறவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறும் இல்லை.

காரணமில்லாமல்... மயிர்கூச்செரிதல் என்று சொல்வார்களே... அந்த நேரத்தில் அது எனக்கும் ஏற்பட்டது.

பிரதீப்பிடமும் இதைப்பற்றிக்கேட்டேன். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன். இருவருக்கும் சரியான, அறிவியல்பூர்வமான பதில் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை!

அதிகாலையில் வீடு சென்று சேர்ந்தோம். மருத்துவமனையில் அம்மா நலமாகத்தான் இருந்தார்கள். எனவே மனதுக்கு சற்று நிம்மதி.

சில மாதங்களுக்குப் பின்னர் பேருந்தில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருந்த பயணி என்னுடன் பேசிக்கொண்டு வந்தார். எப்படியோ பேச்சு... இந்த விளக்கைப்பற்றியும் வந்தது. அவர் சொன்னார் - இது "முனிப்பாய்ச்சல்"-ஆக இருக்கும்; இல்லாவிட்டால் கொள்ளிவாய்பேயாக இருக்கும்; அல்லது அம்மன் ஊர்வலம் வந்திருப்பார்! எனக்கு எதுவும் ஆகவில்லை என்பதால் கண்டிப்பாக நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றும் சொன்னார்..! இது உண்மையா..??

-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்

பரஞ்சோதி
12-05-2005, 07:25 PM
பாரதி அண்ணா,

உங்க பதிவை படித்த பின்பு எனக்கும் சந்தேகம் வந்து விட்டது. அத்தனை வாய்ப்புகளையும் தெளிவாக விளக்கி விட்டீங்க, இருந்தாலும் அந்த வெளிச்சம் எப்படி?

ஒன்னுமே புரியலையே?

பாரதி
29-05-2005, 06:25 AM
நன்றி பரஞ்சோதி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வலைப்பூவிலும் சில நண்பர்கள் பலவிதமான விளக்கங்களைத் தந்திருந்தார்கள். ஆனால் எதுவும் என் சந்தேகத்திற்கு விளக்கம் தருவதாக அமையவில்லை..!

பூமகள்
04-01-2008, 06:12 PM
சந்தோசமா பாரதி அண்ணா??
பூவு இன்னிக்கி நிம்மதியா தூங்கினாப்ல தான்..!!
முனிப்பாய்ச்சலாமே..!!

எனக்கு எதுவுமே நினைவில்லை.. பூவு எல்லாம் மறந்துட்டது..!! :D:D

விழுந்து, அடி வாங்கி, முனியிடம் தப்பித்து..பெரிய அதிர்ஸ்டசாலி தான் பாரதி அண்ணா நீங்க..!! :)

யவனிகா
04-01-2008, 07:36 PM
அய்யோ பாரதி அவர்களே...இது போல எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது....சுத்தமாகவே பேய் பிசாசு கடவுள் நம்பிக்கை இதெல்லாம் எனக்குக் கிடையாது...
கேரளாவில் ஒருசமயம் என் வீட்டுக்காரரின் அக்கா வீட்டுக்குச் சென்ற போது, நடு இரவு புளிய மரத்தின் கீழ் நின்று கொண்டு அந்த வயல் வெளியில் தனியாக நடப்பாயா? என்று ரவுசுவின் அண்ணா மெகா ரவுசு கேட்டது...நானும் நடக்க ஆரம்பித்து விட்டு...ரவுசு கையால் பளாரென்று அடி வாங்கினேன்...கல்யாணமன முதல் மாசம் யாராவது பொண்டாட்டியை கன்னத்தில் அறைவார்களா....அது கிடக்கட்டும்...அதாவது நான் அந்த அளவு தைரியசாலியாம்....

இது இப்படியிருக்க நானே....ஆவியைத் தான் பார்த்தோமோ என்று அச்சப்படும் படியாக ஒரு சம்பவம் நடந்தது.ஒரு நாள் கோவை கே.ஜி. தியேட்டரில் படம் பார்த்து விட்டு நானும் என் வீட்டுக்காரரும் பைக்கில் வந்து கொண்டிருந்தோம்....அந்த ரோட்டில் புளிய குளம் சுடுகாடு உள்ளது.பைக்குக்கு முன்னால் ஒரு வேன் சென்று கொண்டிருக்கிறது...வேன் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஆவி போன்றும் ஒரு உருவம்...வேன் பின்னால் நாங்கள் வருவதால் அந்த உருவத்தை மோதிவிடக் கூடும் என்ற காரணத்தால் "பாத்துப் போங்க" என்று இவரிடம் சொல்லி விட்டு கவனமாகப் பார்க்கிறேன்...அப்படி ஒரு உருவமே அங்கு இல்லை..
எப்பவும் இல்லாம எனக்கு மனசுக்கு கருக்குன்னு பட்டது.

அப்பவே ராஜாவிடம் சொன்னேன் இதை...அவரு ஆயிரெத்தெட்டு லாஜிக் இருக்கிற மேஜிக் சொன்னலும் என் மனசுக்கு ஒப்பவே இல்லை...அது யாரா இருக்கும்?பூவு உனக்குத் தெரியும்?

அது கிடக்கட்டும் பாரதி அண்ணா...உங்களுக்கு பேய் ஆம்லெட் போட்ட கதை...தோசை சுட்ட கதை...பாத்திரம் பளப்பளன்னு கழுவிக் கமுத்தி வெச்சு வீட்டை எல்லாம் வாக்குவம் பண்ண கதை எல்லாம் சொல்லவா? இதெல்லாம் சவுதியில் எங்க வீட்டு ஹவுசிங் கேம்பஸில் நடந்திருக்காக்கும்...விளாட்டுக்கு புள்ளி செய்த வேலைகளை தான் சொல்றேன்னு நினைக்க வேண்டாம்...சத்தியமா என் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள்....விரிவா சொல்றேன் என்ன....மனச திடப்படுத்திட்டு ஒரு 3டி கண்ணாடி வாங்கி வெச்சிட்டு ரெடியா இருங்க....

சூப்பர் திரி...மேலெளுப்பியதற்கு நன்றி....

அறிஞர்
04-01-2008, 08:42 PM
என்ன யவனிகா.. புளியக்குளம் சுடுகாடு பத்தி பீதியை கிளப்புறீங்க...

நான் ஊருக்கு போனால் வழக்கமா போற ரோடு...

இளசு
04-01-2008, 10:27 PM
பாரதி

திறம்பட நீ அளித்துவரும் தேதியில்லாக்குறிப்புகளின் ரசிகன் நான்..

ஒவ்வொன்றும் வாழ்வின் ஒரு விள்ளலை அலசி ருசிக்கவைக்கும் பதிவாய் நீ பரிமாறும் பாங்கு அலாதி..அருமை!

வாகனத்தில் இருந்து விழுந்தது இது ''முதல்'' முறை ..என்றால்???

கவனம் தேவை.. அம்மா உடல்நலம் என்பதால் இந்த ஆபத்தான பயணத்தை அங்கீகரிக்கிறேன்.

தேவையின்றி இரவுநேரப்பயணங்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை..

என் கண்ணோட்டம் -

இருள் - மனித மனதின் பரிமாண ஆதிகால பயங்களை உசுப்ப வல்லது.
அப்போது காண/உணரப்படுபவை அறிவியல் தாண்டி மனம் நம் வரலாற்று நினைவு சில்லுகளை சிலுப்பி விடும்..

ஆதியனுக்கு வெளிச்சமும் நெருப்பும் கடவுளானதன் காரணம்
இருளும் அதுதரும் பயம் கொடுக்கும் அனுபவங்களுமே..

டாக்டர் கோவூரின் ''கொள்ளிவாய்ப் பிசாசு'' நிகழ்வு நினைவுக்கு வருகிறது..

மின்விளக்கு - மிகப்பெரிய பகுத்தறிவு ஊழியன்..

இருள் வந்தபோதெல்லாம் அதற்குமுன் வெளிச்சம் தரும் விழா எடுத்தது
பயம் விரட்டவே ..தீபாவளி, கார்த்திகை தீபம் எல்லாம் ஐப்பசி தொடங்கிதான்..

சித்திரை பௌர்ணமியில் நிலாச்சோறு சாப்பிடும் தைரியம் தருவது
இரவல் வெளிச்சம்தான்..

தங்கவேல்
05-01-2008, 12:09 AM
நம்ப முடியாத அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சில உண்மைகள் உண்டு. நம்பலாம். நம்பாமலும் இருக்கலாம். ஜோசியத்தில் ராட்ஷச வேலையில் பிறந்தவர்களுக்கு பேய்கள் தெரியும் என்று சொல்லுவார்கள். எது உண்மை ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பாரதி
05-01-2008, 06:05 AM
விழுந்து, அடி வாங்கி, முனியிடம் தப்பித்து..பெரிய அதிர்ஸ்டசாலி தான் பாரதி அண்ணா நீங்க..!! :)
பல மாதங்களுக்குப் பின மேலெழுப்பியதற்கு நன்றி பூ... கீழே விழுந்ததில் அடி பட்டது உண்மைதான்.. ஆனால் யாரிடமும் அடி வாங்கவில்லை....!!! அப்போது அது முனி என்று முடிவே கட்டி விட்டீர்களா..? யோசித்து யோசித்துதான் எனக்கு தூக்கம் வரவில்லை.. பயத்தினால் அல்ல.

அய்யோ பாரதி அவர்களே...இது போல எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது....சுத்தமாகவே பேய் பிசாசு கடவுள் நம்பிக்கை இதெல்லாம் எனக்குக் கிடையாது...

இது இப்படியிருக்க நானே....ஆவியைத் தான் பார்த்தோமோ என்று அச்சப்படும் படியாக ஒரு சம்பவம் நடந்தது.ஒரு நாள் கோவை கே.ஜி. தியேட்டரில் படம் பார்த்து விட்டு நானும் என் வீட்டுக்காரரும் பைக்கில் வந்து கொண்டிருந்தோம்....அந்த ரோட்டில் புளிய குளம் சுடுகாடு உள்ளது.பைக்குக்கு முன்னால் ஒரு வேன் சென்று கொண்டிருக்கிறது...வேன் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஆவி போன்றும் ஒரு உருவம்...வேன் பின்னால் நாங்கள் வருவதால் அந்த உருவத்தை மோதிவிடக் கூடும் என்ற காரணத்தால் "பாத்துப் போங்க" என்று இவரிடம் சொல்லி விட்டு கவனமாகப் பார்க்கிறேன்...அப்படி ஒரு உருவமே அங்கு இல்லை..
எப்பவும் இல்லாம எனக்கு மனசுக்கு கருக்குன்னு பட்டது.

அப்பவே ராஜாவிடம் சொன்னேன் இதை...அவரு ஆயிரெத்தெட்டு லாஜிக் இருக்கிற மேஜிக் சொன்னலும் என் மனசுக்கு ஒப்பவே இல்லை...அது யாரா இருக்கும்?பூவு உனக்குத் தெரியும்?

அது கிடக்கட்டும் பாரதி அண்ணா...உங்களுக்கு பேய் ஆம்லெட் போட்ட கதை...தோசை சுட்ட கதை...பாத்திரம் பளப்பளன்னு கழுவிக் கமுத்தி வெச்சு வீட்டை எல்லாம் வாக்குவம் பண்ண கதை எல்லாம் சொல்லவா? இதெல்லாம் சவுதியில் எங்க வீட்டு ஹவுசிங் கேம்பஸில் நடந்திருக்காக்கும்...விளாட்டுக்கு புள்ளி செய்த வேலைகளை தான் சொல்றேன்னு நினைக்க வேண்டாம்...சத்தியமா என் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள்....விரிவா சொல்றேன் என்ன....மனச திடப்படுத்திட்டு ஒரு 3டி கண்ணாடி வாங்கி வெச்சிட்டு ரெடியா இருங்க....

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி யவனிகா... உங்களைப் போலவே நானும் நம்பிக்கை இல்லாதவன் என்றாலும் இந்த சம்பவமும், இதைப்போன்ற பிறிதொரு சம்பவமும் என்னை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டன. அறிவியல்பூர்வமாக ஆராய எனக்கு புத்திகூர்மை போதாது போலும். என்றாலும் அடுத்து நீங்கள் தொடங்கப்போகும் சுவாரஸ்யமான திகில் கதையை படிக்க காத்திருக்கிறேன்.

வாகனத்தில் இருந்து விழுந்தது இது ''முதல்'' முறை ..என்றால்???

என் கண்ணோட்டம் -

இருள் - மனித மனதின் பரிமாண ஆதிகால பயங்களை உசுப்ப வல்லது.
அப்போது காண/உணரப்படுபவை அறிவியல் தாண்டி மனம் நம் வரலாற்று நினைவு சில்லுகளை சிலுப்பி விடும்..

ஆதியனுக்கு வெளிச்சமும் நெருப்பும் கடவுளானதன் காரணம்
இருளும் அதுதரும் பயம் கொடுக்கும் அனுபவங்களுமே..

டாக்டர் கோவூரின் ''கொள்ளிவாய்ப் பிசாசு'' நிகழ்வு நினைவுக்கு வருகிறது..

மின்விளக்கு - மிகப்பெரிய பகுத்தறிவு ஊழியன்..

இருள் வந்தபோதெல்லாம் அதற்குமுன் வெளிச்சம் தரும் விழா எடுத்தது
பயம் விரட்டவே ..தீபாவளி, கார்த்திகை தீபம் எல்லாம் ஐப்பசி தொடங்கிதான்..

சித்திரை பௌர்ணமியில் நிலாச்சோறு சாப்பிடும் தைரியம் தருவது
இரவல் வெளிச்சம்தான்..

அண்ணா... இது பழைய திரிதான்..'பூ'தான் விளக்கேற்றி இருக்கிறது.
பயம்தான் அதற்கு காரணமாக இருக்கும் என்பதை நம்ப இயலவில்லை.. காரணம் என்னுடன் இருந்த நண்பனும் அதைப் பார்த்தான். இருவரும் அதைப்பற்றி பேசினோம். ஆனால் என்ன என்பதற்கான முடிவை எங்களால் எடுக்க இயலவில்லை. சதுப்பு நிலக்காடுகளில் வெளிவரும் இயற்கை அல்லது மீத்தேன் வாயு இதற்கு காரணமாக இருக்கவும் வாய்ப்ப்பில்லை. அப்படி இருந்தாலும் ஒழுங்கான வடிவத்தில் சீரான வேகத்தில், ஒரே இடைவெளியில் இரு விளக்குகள் போல செல்வதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை.பார்க்கலாம் எப்போதாவது மனம் தெளிவடைகிறதா என்று.

கீழே விழுந்ததற்கு காரணம் சாலையில் இருந்த பள்ளம் நீரால் நிரம்பி இருந்ததுவும், வாகனத்தின் ஸ்பீடா மீட்டரில் இருந்த பிரச்சினை குறித்து எங்கள் பேச்சும் கவனமும் திரும்பியதுவும்தான். நான் இருசக்கர வாகனம் ஓட்டியதில் இருந்து கீழே விழுந்தது மொத்தம் மூன்று முறை. மேல் குறிப்பிட்டது முதல் முறை. இரண்டாம் முறையும் என்னுடன் பிரதீப் இருந்தார். அப்போதும் மழைக்காலம். திரையரங்கில் பகல் காட்சி பார்த்து விட்டு சாலையின் திருப்பத்தில் மழை நீர் தேங்கி இருந்தது. அதனுடன் எந்த வாகனத்திலிருந்தோ கசிந்த மசகு எண்ணெயும் சேர்ந்திருந்தது. அதை நான் அறியாததால் வழுக்கி விழ நேர்ந்தது. பிரச்சனை ஒன்றும் இல்லை * சிறு சிராய்ப்பைத்தவிர. மூன்றாம் முறை உடன்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது வேண்டுமென்றே ஒரு சரக்குந்து எங்களை பக்கத்தில் இருந்த மணற்குன்றின் மீது ஓரம் கட்டியது. எந்த அடியும் படவில்லை..!!
உங்கள் அறிவுரைப்படி கவனமாகவே இருப்பேன் அண்ணா. நன்றி அண்ணா.

நம்ப முடியாத அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சில உண்மைகள் உண்டு. நம்பலாம். நம்பாமலும் இருக்கலாம். ஜோசியத்தில் ராட்ஷச வேலையில் பிறந்தவர்களுக்கு பேய்கள் தெரியும் என்று சொல்லுவார்கள். எது உண்மை ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கருத்துக்கு நன்றி தங்கவேல். நான் ராட்ஸஷ வேலையில் பிறக்கவில்லை என்று என் குடும்பத்தினை கூறுகிறார்கள்.. ஹஹஹா..

அன்புரசிகன்
05-01-2008, 06:15 AM
இன்னமும் அது கண்டுபிடிக்கப்படவில்லையா? அதிசயம் ஆனால் உண்மை என்பது போல் உள்ளது.

பூமகள்
05-01-2008, 06:22 AM
அண்ணா... இது பழைய திரிதான்..'பூ'தான் விளக்கேற்றி இருக்கிறது.
பூவைக் கொண்டு உறக்கத்தில் திரியை எழுப்பியதற்கு பூக்களே மகிழ்கிறது அண்ணா.:)

நான் இருசக்கர வாகனம் ஓட்டியதில் இருந்து கீழே விழுந்தது மொத்தம் மூன்று முறை.
நீங்க பரவாயில்லனா.. மூனு தடவையோட தப்பிச்சிட்டீங்க..!! :icon_ush:
நான் பின்னாடி உட்காந்தாவே என்னை கீழே தள்ளிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறாங்க...!! :traurig001::traurig001:
இதனால வண்டி அருகில் போனாலே பயமா இருக்கு..!!:sprachlos020::eek:
அப்புறம் எப்படி ஓட்டுவதாம்..! :frown::frown:

அன்புரசிகன்
05-01-2008, 06:41 AM
நீங்க பரவாயில்லனா.. மூனு தடவையோட தப்பிச்சிட்டீங்க..!! :icon_ush:
நான் பின்னாடி உட்காந்தாவே என்னை கீழே தள்ளிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறாங்க...!! :traurig001::traurig001:
இதனால வண்டி அருகில் போனாலே பயமா இருக்கு..!!:sprachlos020::eek:
அப்புறம் எப்படி ஓட்டுவதாம்..! :frown::frown:

நீங்க ரொம்ப நல்லவங்க என்று நினைக்கிறாய்ங்க போல...

மலர்
05-01-2008, 03:21 PM
நான் இதுவரை முனியையோ பேயையோ பிசாசையோ பார்த்ததே இல்லை...
கண்ணாடியில் முகம் பார்க்கும் பழக்கம் இல்லையான்னு கேள்வி எல்லாம் கேக்கப்படாது...
எனக்கும் இதுங்கள எல்லாம் ரொம்ப நாளா பாக்கணும் எண்டு ஆசை தான்....:D:D

யவனிகா
05-01-2008, 03:37 PM
நான் இதுவரை முனியையோ பேயையோ பிசாசையோ பார்த்ததே இல்லை...
எனக்கும் இதுங்கள எல்லாம் ரொம்ப நாளா பாக்கணும் எண்டு ஆசை தான்....:D:D

அட்ரஸ் குடு அனுப்பி வைக்கறேன்...

மலர்
05-01-2008, 04:33 PM
அட்ரஸ் குடு அனுப்பி வைக்கறேன்...
பேஷா...
ஜிடாக் வாங்கோ... குடுக்குறேன்.. :D :D
இதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்.... :icon_rollout: :icon_rollout:

பாரதி
05-01-2008, 10:11 PM
நான் இதுவரை முனியையோ பேயையோ பிசாசையோ பார்த்ததே இல்லை...
எனக்கும் இதுங்கள எல்லாம் ரொம்ப நாளா பாக்கணும் எண்டு ஆசை தான்....:D:D

பார்க்க விரும்பியவர்கள் பார்த்த பின் தங்கள் அனுபவத்தைத் தாருங்கள்.

அட்ரஸ் குடு அனுப்பி வைக்கறேன்...
அனுப்ப விரும்புபவர்கள் அவற்றின் முகவரியை பொதுவில் தாருங்கள்.

நுரையீரல்
06-01-2008, 03:53 AM
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்றமாதிரி, பாரதி அவர்கள் கண்ணுக்கு வெளிச்சமானதெல்லாம் பேய்னு சொல்லலாமா?

பேய் பற்றி கதை படித்திருக்கிறோம், சினிமா பார்த்திருக்கிறோம். ஒருமுறையாவது பேய் அடிச்சு யாராவது இறந்திருக்கிறார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியை கேட்டிருக்கிறோமா?

தாழ்வுமனப்பான்மை அதிகம் கொண்டவருக்கும், ஃபேண்டஸியிலேயே வாழ்க்கை தள்ளுபவர்களுக்கும் பேய், பிசாசு பற்றிய பயம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கும் பேய், பிசாசு பயமெல்லாம் இருந்திருக்கிறது.

அழகான பெண்ணைப் பார்த்தால் காதல் கொள்வது, புரட்சிகரமான சினிமா பார்த்தால் ஒரு நாள் முழுவதும் ஹீரோ போன்று நினைத்துக் கொள்வது, பெரிய பணக்காரன் ஆகி பெரும் செல்வாக்குடன் வாழ்வது போன்ற கனவு காண்பது போன்ற ஃபேண்டஸி வாழ்க்கையெல்லாம் வாழ்வது இல்லை. அனைத்திலும் நிஜத்தையே எதிர்பார்ப்பதால், நிழலை பற்றிக் கவலைப்படுவதில்லை.

இந்தப் பொழுதில் என்ன இருக்கிறதோ அதை அனுபவிப்பது, இந்தப் பொழுதில் என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்கு தீர்வு காண்பது போன்ற அனைத்திலும் தெளிவு வந்துவிட்டால், இந்த உலகில் உள்ள கற்பனையான விஷயங்கள் அனைத்தையும் பற்றிய தெளிவு பிறந்துவிடும்.

இது எல்லாம் சரி. அப்ப நானும், நண்பனும் பார்த்த ஒளி எது? எங்கிருந்து வந்தது? என்று மீண்டும் கேள்வி கேட்பார் பாரதி. நீங்கள் பார்த்ததை வைத்து மூன்றாமவர் கருத்துக் கூற முடியாது.

இருந்தாலும் உங்கள் பேய்க்கதைகள் சுவையாய் இருக்கிறது. பேய்க்கதைகளுக்கென்றே தனிப்பகுதி ஆரம்பித்து, அதில் ஒவ்வொருவருடைய அனுபவத்தையும் பகிரும் அளவுக்கு திரி அமைக்கும் உரிமையை நிர்வாகம் ஏற்படுத்தித் தந்தால், படிப்பவர்களுக்கு சுவையாக இருக்கும், பின்னூட்டம் கொடுப்பதிலிருந்து தெளிவும் பிறக்கும்.

அனைத்து மதங்களிலும் பேய் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பேயிடமிருந்து கடவுள் காப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளை நம்பினால், அவர் நம்மை கயவர்கள் மற்றும் பேய்களிடமிருந்து காப்பாற்றுவார் என்றும் நம்ப வேண்டும்.

கண்ணால் பார்ப்பதை மட்டுமே முழுக்க முழுக்க நம்புவதால், சந்தேகத்திற்கான விஷயங்களைப் பற்றி ஆலோசனை செய்து டைம் வேஸ்ட் செய்வதில்லை.

நுரையீரல்
06-01-2008, 04:12 AM
என்ன யவனிகா.. புளியக்குளம் சுடுகாடு பத்தி பீதியை கிளப்புறீங்க...

நான் ஊருக்கு போனால் வழக்கமா போற ரோடு...
மனிதன் சந்தோஷங்களாலும், பிரச்சினைகளாலும் வாழ பழக்கப்பட்டவன். எது இல்லையோ? அதை நினைத்துத் தான் உள்மனசு ஏங்கும். சந்தோஷம் மிகும்போது ஒருவித bore ஏற்பட்டு எப்படா பிரச்சினை வரும் என்று உள்மனசு ஏங்கும். அந்த உள்மனசை அவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது.

ஒரு நாள் நடுஇரவு பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, மழைக்காலம் என்பதால், புலியகுளம் விநாயகர் கோயில் நேரெதிரேயுள்ள இறக்கத்தில், தேங்கிய தண்ணீரில் பைக் சென்றதால், பைக் மக்கார் செய்து, எப்படியோ மிகச்சரியாக சௌரிபாளையம் இடுகாடு வாசல் வரை சென்று, அதன் முன்னர் பைக் நின்றுவிட்டது.

உடன் யாரும் இல்லை, மழையும் சோ வென பேய்கிறது. அப்போது என் மனதில் இருந்ததெல்லாம், எப்படி மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்யவைப்பது என்பது தான். உதச்சு உதச்சு பார்க்கிறேன், பைக் ஸ்டார்ட் ஆகிறபோல தெரியலை. கடைசியில இடுகாடு கேட்டைத் திறந்து அதற்குள் இருக்கும் திட்டு போன்ற திடலில் தான் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தேன். மழைக்காலத்தில் பேய்களும் கல்லறைக்குள்ளயே தங்கிவிடுமா? இதே இடத்தில் தான் ஒரு ஒளியைப் பார்த்ததாக யவனிகா கூறினார். ஏன் சௌரிபாளையம் இருகாடை ஒட்டி எவ்வளவு வீடுகள் இருக்கின்றன. அங்கெல்லாம் பேய்கள் விஜயம் செய்யாதா?

ஆத்துப்பாலம் சுடுகாடு தெரியும். அதைச்சுற்றிலுமுள்ள குடிசை வீடுகளில் பேயா குடித்தனம் நடத்துகிறது. பசி வந்தால் பத்தும் ப(ம)றந்து போகும் என்று சொல்வார்கள். ஒரு பத்துநாள் கொலைப்பட்டினி கிடங்க பாரது, நீங்க ஒளியைக்கண்ட இடத்திலே போய் ஒரு வாரத்துக்கு இருந்துபாருங்க. ஒளியாவது? எல்லாம் கிலிங்க.

ஆசைகள் அதிகமிருந்தாலும் பேய் பயம் இருக்குமாம். நல்லதொரு சமுதாயம் உருவாக்குவோம் என்று கூவ வேண்டிய தருணத்தில் இருக்கும் நாம், பேயைப் பற்றி பயப்படுவதைப் பற்றி என்ன சொல்வது...

பாரதி
07-01-2008, 04:14 PM
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்றமாதிரி, பாரதி அவர்கள் கண்ணுக்கு வெளிச்சமானதெல்லாம் பேய்னு சொல்லலாமா?

இந்தப் பொழுதில் என்ன இருக்கிறதோ அதை அனுபவிப்பது, இந்தப் பொழுதில் என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்கு தீர்வு காண்பது போன்ற அனைத்திலும் தெளிவு வந்துவிட்டால், இந்த உலகில் உள்ள கற்பனையான விஷயங்கள் அனைத்தையும் பற்றிய தெளிவு பிறந்துவிடும்.

இது எல்லாம் சரி. அப்ப நானும், நண்பனும் பார்த்த ஒளி எது? எங்கிருந்து வந்தது? என்று மீண்டும் கேள்வி கேட்பார் பாரதி. நீங்கள் பார்த்ததை வைத்து மூன்றாமவர் கருத்துக் கூற முடியாது.

இருந்தாலும் உங்கள் பேய்க்கதைகள் சுவையாய் இருக்கிறது. பேய்க்கதைகளுக்கென்றே தனிப்பகுதி ஆரம்பித்து, அதில் ஒவ்வொருவருடைய அனுபவத்தையும் பகிரும் அளவுக்கு திரி அமைக்கும் உரிமையை நிர்வாகம் ஏற்படுத்தித் தந்தால், படிப்பவர்களுக்கு சுவையாக இருக்கும், பின்னூட்டம் கொடுப்பதிலிருந்து தெளிவும் பிறக்கும்.

கண்ணால் பார்ப்பதை மட்டுமே முழுக்க முழுக்க நம்புவதால், சந்தேகத்திற்கான விஷயங்களைப் பற்றி ஆலோசனை செய்து டைம் வேஸ்ட் செய்வதில்லை.

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜா. நானும் பேய், பிசாசு இவற்றில் நம்பிக்கை கொண்டதில்லை. அப்படி நம்பிக்கை இருந்திருந்தால் பதில் தேடுகிறேன் என்ற தலைப்பு தர வேண்டிய அவசியம் இருந்திருக்காது. நான் இதைப்பேய்கதை என்று கூறவில்லை ராஜா. அறிவியல்பூர்வமாக இதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கோடுதான் பதிவு செய்தேன். பொதுவாக தனிநபர் சொல்கிறார் எனில் மனக்குழப்பம் அல்லது மனப்பிராந்தி என்று கூறலாம். என்னுடன் என் நண்பனும் இருந்தான். அவனும் பேய், பிசாசு போன்றவற்றில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவன்!

கண்ணால் பார்த்தை மட்டும் முழுக்க முழுக்க நம்பி, அது என்ன என்று யோசித்ததில் (?) வந்த பதிவுதான் இது.

உங்களின் ஆரோக்கியமான, சமூக சிந்தனை உள்ள கருத்துக்களுக்காக மனமார பாராட்டுகிறேன். நன்றி.