PDA

View Full Version : ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழர் முதலிடம்அறிஞர்
12-05-2005, 10:04 AM
ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழர் முதலிடம்

புதுடில்லி மே 12: தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஸ்ரீநிவாசன் நாகராஜன் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூ.பி.எஸ்.சி) யால் நடத்தப்படும் இந்தத் தேர்வில், மொத்தம் 422 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் முதல் 20 இடங்களில் 6 பெண்கள் தேர்வாகியுள்ளனர். பொது வகுப்பிலிருந்து 193 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 118 பேரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பிலிருந்து 64 மற்றும் 47 பேரும் தேர்வாகியுள்ளனர்.


இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களில் ஒரு பொறியாளர், இரண்டு மருத்துவர்கள் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் நான்காவது முறையாக இந்தத் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில் "எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தபோதும், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தேன். முதலிடம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.
--------
நன்றி- விகடன்

பரஞ்சோதி
12-05-2005, 10:14 AM
நல்ல மகிழ்ச்சியான செய்தி. நாம் பெருமைப்பட வேண்டிய செய்தி.
நன்றி அறிஞரே!

மன்மதன்
12-05-2005, 10:19 AM
செய்திக்கு நன்றி அறிரே..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
12-05-2005, 10:53 AM
இது குறித்து அவர் கூறுகையில் "எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தபோதும், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தேன். முதலிடம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.
--------
நன்றி- விகடன்

இதுதான் டாப்பு. கலக்கப்பு.

babu4780
12-05-2005, 11:05 AM
வாவ் ரொம்ப சந்தோஷமான் செய்தி தான்.

BTW இந்த வார "THE WEEK " ல பழய IAS அதிகாரிகளைப் பத்தி ஒரு ஆர்டிகில் வந்துள்ளது..பார்த்தீர்களா??

அறிஞர்
12-05-2005, 12:53 PM
இது மாதிரி பல தமிழர்கள் வெற்றிக்காண வாழ்த்துவோம்.....

எந்த தலைப்பில் பாபு.... காணவில்லையே.. முடிந்தால்.... தகவலை.... ஜிமெயிலில் கொடுங்கள்....

thempavani
14-05-2005, 04:18 AM
ஐ.ஏ.எஸ். தேர்வில், வேதாரண்யம் விவசாயி மகன் கு. இளம்பதி (26) தேசிய அளவில் 18-வது இடம் பிடித்துள்ளார். இவர் பள்ளியிறுதி வகுப்பு வரை தமிழில் படித்தவர்.

thempavani
14-05-2005, 04:19 AM
அரசு உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பி. கண்ணன் (27) அகில இந்திய அளவில் 177-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேட்டூர் தாலூக்கா கோனூர் அருகேயுள்ள மடத்துப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். தந்தை பெருமாள், விவசாயி. தாய் ராஜாம்பாள், இல்லத்தரசி.
குன்னமுடையானூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேட்டூர் வைத்தீஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். பின், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூயில் தமிழ் வழியில் பி.எஸ்சி. வேதியியல் பட்டம் பெற்றார்.

பரஞ்சோதி
14-05-2005, 06:42 AM
கூடுதல் தகவல்கள் கொடுத்த சகோதரி நன்றி.

pradeepkt
14-05-2005, 07:29 AM
அருமை அருமை.

தாய்மொழிக் கல்வி என்பது எவ்வளவு நல்லதென்று இப்போதாவது தெரியட்டும்.
நாம் எந்த மொழியில் படித்தாலும் புரிந்து கொள்வதென்பது தாய்மொழியில் மட்டும்தான் என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணமாக யாரேனும் water என்று கூறினால் உங்கள் மூளை அதை உடனடியாக தண்ணீர் என்று மொழி பெயர்க்கிறதாம்.

எங்கள் கல்லூரியில் பாதிக்குப் பாதி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நான் படித்த வருடத்தில் கிட்டத்தட்ட 25% பேர் தங்கள் தாய்மொழியில் கற்று உள் நுழைந்தவர்களே. அவர்களது கற்கும் திறனும் ஆங்கிலம் தவிர கல்லூரியில் அருமையாகவே இருந்தது.

Mano.G.
21-05-2005, 03:41 AM
இம்மாதிரி தமிழர்களின் வெற்றிகள் நம்மை போல் உள்ளவர்களுக்கு
ஒரு ஊந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,
நாம்மாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது எடுத்துக் காட்டு.


மானோ.ஜி

thempavani
21-05-2005, 04:22 AM
இம்மாதிரி தமிழர்களின் வெற்றிகள் நம்மை போல் உள்ளவர்களுக்கு
ஒரு ஊந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,
நாம்மாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

மானோ.ஜி

மனோ அண்ணாவின் பதிப்பு...

அறிஞர்
24-05-2005, 03:15 AM
மனோ சொன்னது சரிதான்...... நமக்கு உந்துதலாக இருக்கும்..

ஆனால்... நேர்மையான முறையில் அவர்கள் விரும்பும் படி பணியாற்ற முடியுமா என்று ஐய்யம் உண்டு