PDA

View Full Version : பொட்டலக் காகிதங்கள்



முத்து
12-05-2005, 12:53 AM
பொட்டலக் காகிதங்கள்

தேவையென்றால் யாகம் வளர்ப்பார்கள்
இல்லையென்றால்
வெறுப்புடன் குடைபிடிப்பர்
முணுமுணுத்தது
தூறலாய்.

***

நினைத்தேன்
வாழ்க்கையைக் காதலியாய்.
அதனால்தானோ
விரட்டி விரட்டி அடிக்கிறது?
கோபமாய்
சில சமயம் செல்லமாய்.

***

யாரையும் தொடவிட்டதில்லை
என்னவற்றை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?

***

எனவே காதலி
கடைசியில்
கவிதையாவது கிடைக்கும்.

***

asl? brb rut
மனங்கள் மட்டுமல்ல
சொற்களும் சுருங்கிவிட்டன
இண்டர்நெட்டால்.

***

பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.

***

பிரியன்
12-05-2005, 03:21 AM
பொட்டலக் காகிதங்கள்

தேவையென்றால் யாகம் வளர்ப்பார்கள்
இல்லையென்றால்
வெறுப்புடன் குடைபிடிப்பர்
முணுமுணுத்தது
தூறலாய்.

***

நினைத்தேன்
வாழ்க்கையைக் காதலியாய்.
அதனால்தானோ
விரட்டி விரட்டி அடிக்கிறது?
கோபமாய்
சில சமயம் செல்லமாய்.

***

யாரையும் தொடவிட்டதில்லை
என்னவற்றை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?

***

எனவே காதலி
கடைசியில்
கவிதையாவது கிடைக்கும்.

***

asl? brb rut
மனங்கள் மட்டுமல்ல
சொற்களும் சுருங்கிவிட்டன
இண்டர்நெட்டால்.

***

பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.

***



அழகான கவிதைகள் முத்து..
கவிதை புத்தகம் போட நினைப்பவர்கள் பல பேர்க்கு இது நேர்ந்திருக்கிறது..

களவு போவது தெரிந்தாலும் தடுக்க முடியாதே! அது காதலின் விளையாட்டல்லவா!!!

kavitha
16-05-2005, 04:44 AM
நல்லகாலம்! கடைக்காரனுக்கு போடும் முன் எங்கள் கண்ணில் பட்டது :)
குறும்பாக்கள் நன்றாக உள்ளன. தொடருங்கள்

பரஞ்சோதி
16-05-2005, 04:54 AM
நல்ல கவிதைகள் முத்து.

சகோதரியின் குறும்பாக்களையும் எதிர்பார்க்கிறோம்.

பிரசன்னா
10-09-2005, 06:00 PM
அழகான கவிதைகள் முத்து..