PDA

View Full Version : கலையாத கோலங்கள்



kavitha
11-05-2005, 11:08 AM
கலையாத கோலங்கள்
--------------------

என் சுவாசத்தைப்போலே
உன் நினைவுகளும்
வந்து வந்து போய்
உயிர் நீதான் என
உரக்க உரைக்கும்


கண்களின் கனவுகள்
நிஜத்தை நினைத்து
கண்ணீராய் மாறி
என்னைக்
கரைத்த பின்னும்
அதன் கோலங்கள் மட்டும்
கலைவதே இல்லை


மெல்லிய ஸ்பரிசமோ
தீண்டும் தென்றலோ
தூரத்து தீபமோ
உயிரின் நாதமோ
முழுமையாய்
அனுபவித்த பிறகு
அங்கே வார்த்தைகளில்லை

அவள் அதில்
தொலைந்துபோனாள்

காவியங்கள் தொலைந்தாலும்
காதாபாத்திரங்கள் தொலையாது
ஊனுடம்பு அழிந்தாலும்
மானுடம் அழியாது
காலம் நகர்ந்தாலும்
காதல் நகராது

pradeepkt
11-05-2005, 11:17 AM
காவியங்கள் தொலைந்தாலும்
காதாபாத்திரங்கள் தொலையாது
ஊனுடம்பு அழிந்தாலும்
மானுடம் அழியாது
காலம் நகர்ந்தாலும்
காதல் நகராது

கொஞ்சம் சராசரியாகிவிட்டாரே கவிதா என்று நான் நினைத்து முடிக்குமுன், கடைசியாக இவ்வரிகளைப் படித்து சந்தோஷத் திடுக்கிட்டேன் சகோதரி!
குமிழிகள் உடையலாம், உள்ளிருக்கும் காற்று?
அருமை அருமை.
இதில் காலமும் காதலும் "நகர்வது" மட்டுமே எனக்குக் கொஞ்சம் புரியவில்லை.

amudha
11-05-2005, 05:25 PM
அழகிய கவிதை கவி!!

//காவியங்கள் தொலைந்தாலும்
காதாபாத்திரங்கள் தொலையாது
ஊனுடம்பு அழிந்தாலும்
மானுடம் அழியாது//--- இந்த வரிகளைப் படித்ததும் ''நினைத்து நினைத்து பார்த்தால்' பாடலில் வரும் ''உலகம் அழியும் உருவம் அழியுமா..''வரிகள் நினைவுக்கு வருது... :)

முத்து
12-05-2005, 12:28 AM
காலம் காயங்களை ஆற்றலாம்
ஆனால்
வடுக்கள் ?

கவிதா,
கவிதை அருமை.

மன்மதன்
12-05-2005, 04:22 AM
காலம் நகரும்..
காதல் நகராது என்றால் ???

காதல் ஒருவரை விட்டு இன்னொருவருக்கு செல்லாது என்பதா?? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் கவிதா??
அன்புடன்
மன்மதன்

kavitha
12-05-2005, 07:44 AM
காதல் ஒருவரை விட்டு இன்னொருவருக்கு செல்லாது என்பதா?? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் கவிதா??
அன்புடன்
மன்மதன்

அதே அதே மன்மதன்! அப்பாடா, இப்போ தான் நம்ம அதிர்வெண்ணுக்கு வந்திருக்கீங்க.. :)

......................................

"காலம் காயங்களை ஆற்றலாம்
ஆனால்
வடுக்கள் ?

கவிதா,
கவிதை அருமை." - முத்து
வடுக்களும் அழியும்.. காலம் கை கூடினால்!
நன்றி


அழகிய கவிதை கவி!!

//காவியங்கள் தொலைந்தாலும்
காதாபாத்திரங்கள் தொலையாது
ஊனுடம்பு அழிந்தாலும்
மானுடம் அழியாது//--- இந்த வரிகளைப் படித்ததும் ''நினைத்து நினைத்து பார்த்தால்' பாடலில் வரும் ''உலகம் அழியும் உருவம் அழியுமா..''வரிகள் நினைவுக்கு வருது...
நன்றி அமுதா.. உங்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா?


கொஞ்சம் சராசரியாகிவிட்டாரே கவிதா என்று நான் நினைத்து முடிக்குமுன், கடைசியாக இவ்வரிகளைப் படித்து சந்தோஷத் திடுக்கிட்டேன் சகோதரி!

எனக்குப்புரியவில்லை பிரதீப். எதை சராசரி என்கிறீர்கள்? பிறகு இல்லை என்கிறீர்கள்?


இதில் காலமும் காதலும் "நகர்வது" மட்டுமே எனக்குக் கொஞ்சம் புரியவில்லை.
இந்த வரிகளின் அர்த்தம் இப்போது புரிந்திருக்குமே!

குமிழிகள் உடையலாம், உள்ளிருக்கும் காற்று?
அருமை அருமை.
உவமை அழகாக இருக்கிறது

மன்மதன்
12-05-2005, 12:29 PM
காதல் ஒருவரை விட்டு இன்னொருவருக்கு செல்லாது என்பதா?? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் கவிதா??
அன்புடன்
மன்மதன்

அதே அதே மன்மதன்! அப்பாடா, இப்போ தான் நம்ம அதிர்வெண்ணுக்கு வந்திருக்கீங்க.. :)


சில நேரம் சில பேர்களுக்கு செல்லுதே.. :D :D

கொஞ்சம் இதை அலசினால், அதாவது ஒருவரை காதலிக்கிறோம் , கல்யாணம் பண்ண முடியவில்லை.. இன்னொருத்தரை கல்யாணம் பண்ணுகிறோம்..அவரை காதலித்துதானே ஆக வேண்டும்..

அன்புடன்
மன்மதன்

pradeepkt
12-05-2005, 03:49 PM
அர்த்தம் இப்போது புரிந்தது கவிதா

Nanban
13-05-2005, 05:40 PM
முன்னுரைகளை
முடிவுரைகளாக
எழுதும் கவிதை...

பின்னுரை எழுதும்போது
புதிதாய் வாழ்க்கை
தட்டுப்படலாம்...

கண்டெடுக்க விரும்பினால்
காதலும் தொலைவதில்லை...

kavitha
16-05-2005, 04:24 AM
கொஞ்சம் இதை அலசினால், அதாவது ஒருவரை காதலிக்கிறோம் , கல்யாணம் பண்ண முடியவில்லை.. இன்னொருத்தரை கல்யாணம் பண்ணுகிறோம்..அவரை காதலித்துதானே ஆக வேண்டும்..

அன்புடன்
மன்மதன்

நான் சொல்வது என்னவென்றால்,
"காதலிக்காதே! (இது எல்லாத்தையும் விட உத்தமம்)
காதலித்தால் கைவிடாதே! (இது நம்பிக்கை)"

எங்கோயோ படித்தது:-
"காதலிக்காதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
காதலிக்காமலே இருப்பவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்"


அர்த்தம் இப்போது புரிந்தது கவிதா
நன்றி பிரதீப்.




முன்னுரைகளை
முடிவுரைகளாக
எழுதும் கவிதை...

பின்னுரை எழுதும்போது
புதிதாய் வாழ்க்கை
தட்டுப்படலாம்...

கண்டெடுக்க விரும்பினால்
காதலும் தொலைவதில்லை...

மதிப்புரைக்கு நன்றி நண்பன்.

காலமெல்லாம் தேடுவதற்கு இது என்ன
வாழ்க்கைக்குப் பொருளா?
வாழ்க்கையின் பொருள் அல்லவா?


பின்னுரை...
எல்லாம் முடிந்தபின் 'பின்னுரை' நடந்தவைகளைப் பற்றியதாய் தானே இருக்கமுடியும்!
நடக்கப்போவதை பின்னுரை எப்படி சொல்லும்?

எப்படி வாழலாம் என்பதை இலக்கியங்கள் கற்றுத்தரலாம்.
எப்படியும் வாழலாம் என்ற போதிலும்,
எப்படி வாழ்கிறோம் என்பதை நிர்ணயிப்பது நாம் தானே!

பிரசன்னா
10-09-2005, 06:01 PM
அழகிய கவிதை கவி!!