PDA

View Full Version : MS-Word பிரச்சினை!



poo
11-05-2005, 08:52 AM
ms word (2000) - திறந்தால் மேலே உள்ள file,edit...etc உள்ளிட்ட மெனுக்கள் எதுவும் வராமல் திறக்கிறது. மேலே உள்ள பாரில் எங்கு கிளிக்கினாலும் ஓபன், மினிமைஸ்,மேக்ஸிமைஸ்,குளோஸ் என்ற மெனுக்கள் மட்டுமே வருகிறது!?

கிட்டத்தட்ட full screen option செலக்ட் செய்து பார்ப்பதுபோல இருக்கிறது!

இது ஒரு குறிப்பிட்ட யூஸருக்கு மட்டுமே.. அதாவது அட்மினுக்கு மட்டுமே வருகிறது. மற்ற யூஸர்களுக்கு வழக்கம்போல முழு மெனுக்களோடு ஓப்பன் ஆகிறது!

நல்ல கணனியில் இருந்து ரெஜிஸ்ட்ரி இறக்குமதி செய்து இதில் ஏற்றியும் பார்த்தாகிவிட்டது!

ஆபிஸை சுத்தமாக எடுத்துவிட்டு மீண்டும் நிறுவினாலும் இதே நிலைதான். எக்சல், பவர்பாயிண்ட் உள்ளிட்ட மற்றவைகளில் இந்த பிரச்சினை இல்லை.

நான் சொல்வது எப்படி இருக்குமென உங்களால் யூகிக்க முடிகிறதா/ ? . பல மாதங்களுக்கு முன்பே நான் மன்றத்தில் இதை கேட்டிருந்தேன்.. இன்னமும் விடை கிடைக்கவில்லை.

ஒருமுறை ஒரு (படுபாவி) வல்லுனர் வந்து சரிசெய்தார். ஆனால் அவர் சொல்லித்தர மறுத்துவிட்டார்..

என்ன செய்யும்போது இந்த மாற்றம் வந்ததென தெரியவில்லை.?!

ஆனால் நிச்சயமாக இது சரி செய்யக்கூடியதென நினைக்கிறேன்.. (செஞ்சாரே..)

தயவுசெய்து யாரேனும் உதவுங்கள்..

baranee
11-05-2005, 01:40 PM
பூ உங்க கேள்விக்கு பதில் இங்கு உள்ளது.

http://support.microsoft.com/default.aspx?scid=KB;EN-US;q242368&ID=KB;EN-US;q242368

முதலில் winword /a எனும் கட்டளையை RUN செய்து பாருங்கள் , சரியாகவில்லை எனில் மேலே உள்ள சுட்டியை தட்டி பாருங்கள்.

முயற்சி செய்து விட்டு என்ன நடந்தது என தெரியப்படுத்துங்கள்.

poo
13-05-2005, 04:35 AM
சரியாகிவிட்டது பரணீ.. மிக்க நன்றி!!

winword /a command போட்டதுமே சரியாகிவிட்டது. இருந்தாலும் நீங்கள் கொடுத்த சுட்டியை பிரதியெடுத்து வைத்துக் கொண்டேன்..

(ஆமாம்.. இந்த பிரச்சினையை உருவாக்கறது எப்படி?..ஹிஹி.. நம்மளே உருவாக்கி.. நாமே சரிபண்ணி உதார் விடலாம் பாருங்க.... )

நலம்தானே>? இப்போது எங்கே இருக்கிறீர்கள்?! (கோவையில் இருப்பதாக தலை சொன்னாரே????!!!!)

poo
13-05-2005, 04:40 AM
பரணீ இன்னொரு உதவி..

run -ல் நாம் அடிக்கும் கட்டளைகள் அங்கேயே சேமிக்கப்படுகிறது.. மேலும் recent documents சேமிக்கப்படாமல் இருக்கவும் என்ன செய்வது?! (strat menu--> docu--> Recent documents..)

ரெஜிஸ்ட்ரியில் என்ன மாற்றம் செய்யவேண்டும்?

puppy
20-05-2005, 04:10 AM
பூ

இந்த மாதிரி செய்யுங்க....
start --> settings --> Taskbar and startmenu போங்க
அங்க போனா advancedன்னு ஒன்னு இருக்கும்
அதை தட்டவும்
அதிலே கொஞ்சம் கீழே clearனு ஒன்னு இருக்கும்
அதை தட்டவும்...எல்லாம் போய போய்டும்

பரஞ்சோதி
20-05-2005, 09:54 AM
பூ

இந்த மாதிரி செய்யுங்க....
start --> settings --> Taskbar and startmenu போங்க
அங்க போனா advancedன்னு ஒன்னு இருக்கும்
அதை தட்டவும்
அதிலே கொஞ்சம் கீழே clearனு ஒன்னு இருக்கும்
அதை தட்டவும்...எல்லாம் போய போய்டும்

ஒவ்வொரு முறையும் செய்வதை தவிர்த்து மொத்தமாக அது வராமல் செய்ய வழி இருக்கிறதா?

Mathu
20-05-2005, 01:52 PM
நண்பர்களே MS-Word ல் செய்வதை எப்படி JPEG போமில் பதிவது...!

;) :rolleyes: ;)

baranee
20-05-2005, 02:20 PM
பூ மற்றும் பரம்ஸ் , கீழே உள்ள மாதிரி செய்யுங்க.

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\
Explorer]

[HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\
Explorer]

இந்த இரண்டு இடங்களிலும் ஒரு புதிய "dword" ஐ உருவாக்கி, அதற்கு

"NoRecentDocsHistory" என்று பெயரிட்டு "value" வில் 1 என்று இடுங்கள். பின் கணினியை "restart" செய்யுங்கள்.

அவ்வளவுதான் , செய்து பார்த்து விட்டு என்ன ஆச்சுன்னு எழுதுங்க.





பரணீ இன்னொரு உதவி..

run -ல் நாம் அடிக்கும் கட்டளைகள் அங்கேயே சேமிக்கப்படுகிறது.. மேலும் recent documents சேமிக்கப்படாமல் இருக்கவும் என்ன செய்வது?! (strat menu--> docu--> Recent documents..)

ரெஜிஸ்ட்ரியில் என்ன மாற்றம் செய்யவேண்டும்?

பாரதி
20-05-2005, 11:36 PM
அருமை பரணீ. பாராட்டுக்கள். அன்பு நண்பர்களே, ரெஜிஸ்ட்ரியில் திருத்தங்கள் செய்யும் போது கவனமாக இருங்கள். சிறு பிழை கூட கணினியை செயலிழக்க வைத்து விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

rethinavelu
26-06-2005, 12:55 AM
sent to என்பதை எப்படி தயார் செய்யவேண்டும் அதாவது ஒரு கோப்பை வலது பக்கம் சொடுக்கி sent to கொடுத்து செய்வரை எப்படி confiqure செய்வது
என்னார்

baranee
18-07-2005, 01:54 PM
என்னப்பா பூ மற்றும் பரஞ்சோதி செஞ்சு பாத்தீங்களா ?

baranee
18-07-2005, 02:05 PM
sent to என்பதை எப்படி தயார் செய்யவேண்டும் அதாவது ஒரு கோப்பை வலது பக்கம் சொடுக்கி sent to கொடுத்து செய்வரை எப்படி confiqure செய்வது
என்னார்

ரெத்தினவேலு இது ஒவ்வொரு இயங்கு முறைமைக்கும் ஒவ்வொரு விதமாக செய்யவேண்டும்.

விண்டோஸ் 2000 அல்லது எக்ஸ்பி இருந்தால் - உங்கள் ப்ரொஃபைலிற்கு(C:\Documents and Settings\username) கீழே "SendTo" என்று ஒரு உரை இருக்கும். அதில் ஒரு குறுக்கு வழியினை உருவாக்கினால் போதும் அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு ஒரு கோப்பை வலது பக்கம் சொடுக்கி அச்சு எடுக்கவேண்டுமானால் - உங்கள் கணிணியில் நிறுவி உள்ள அச்செடுப்பாணிற்கு ஒரு குறுக்கு வழியினை உருவாக்கி அதனை இந்த
"SendTo" உரையினுள் இட்டுவிடுங்கள். அதன் பின் கோப்பை வலது பக்கம் சொடுக்கினால் "SendTo" வில் உங்கள் அச்செடுப்பானும் இருக்கும்.

shanker
31-03-2006, 11:25 PM
ms word இல்லதவர்கல் என்ன செய்வது புதிதாக எப்படி போடுரது