PDA

View Full Version : 8. கானல் நீர் - பதுமைகள் சொல்லாத.........



gragavan
11-05-2005, 07:51 AM
முந்தைய பாகத்திற்கு இங்கே சொடுக்கவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4891

8. கானல் நீர்

மற்றொரு காலையில் மாரப்பனும் ஆவின்பாலும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். இருவரின் முகத்திலும் அமைதி படர்ந்திருந்தது.

"நிறுத்து வேதாளமே! காட்டை விட்டுச் சென்ற ஆவின்பால் மன்னர்களைச் சந்தித்தாரா? அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள்? நாட்டில் நிலவரம் என்ன? இஇதையெல்லாம் விவரமாகச் சொல்லாமல் ஆவின்பாலும் மாரப்பனும் மீண்டும் சந்திக்கிறார்கள் என்று கூறுகிறாயே! அப்படியானால் ஆவின்பால் காட்டை விட்டு நாட்டிற்குச் செல்லவில்லையா? இஇப்படித் துண்டு துண்டாகச் சொன்னால் எப்படி? சொல்வதைத் திருந்தச் சொல்." கதையில் ஏற்பட்ட இஇடைவெளியால் படபடப்பான பட்டி வெடித்தான்.

வேதாளம் விக்கித்தது. இஇரண்டு அத்தியாயங்களை தூக்கக் கலக்கத்தில் மறந்துவிட்டதை எண்ணி மருண்டது. ஆனால் சடக்கென்று தெளிந்தது. சமாளிக்கும் வழியும் புலப்பட்டது. பட்டியைப் பார்த்து தெளிவாகக் கூறலாயிற்று.

"உஜ்ஜைனி மாகாளிபுரத்தை ஆளும் மானன்னர் விக்கிரமாதித்தன் அவர்களின் இளையவரும் நாட்டிற்கு அமைச்சருமான பட்டியே! கதை சொல்வதிலும் பலவகை உள்ளது. நான் இஇப்பொழுது சொல்லப்போகின்ற விதத்திற்கு முன்கூறல் என்று பெயர். கதையை நடந்தது நடந்தபடியே கூறாமல், வேறு ஒருவரின் வழியாக நடந்தவற்றைக் கூறுவது. இஇந்த முறைமை கலிகாலத்தில் கூத்தர்களால் மிகவும் பயன்படுத்தப்படும். முன்கூறல் முறையிலேயே முழுக்கதையும் கூறுவார்கள். அமைச்சர் பெருமக்கள் மன்னர்களை விட அறிவிற் சிறந்தவராக இஇருக்கவேண்டும். அறிவுடையார் ஆவது அறிவார் என்பது முதுமொழி. இஇதோ பாருங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் இவற்றை எல்லாம் குற்றமற கற்றிருக்கிறார். அதனால்தான் அவர் அமைதியாக கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் நீங்கள்......" இஇழுத்தது வேதாளம்.

விக்கிரமாதித்தனுக்கு அப்போதுதான் உறைத்தது. அவனுக்கும் பட்டிக்கு எழுந்த அதே ஐயம் எழுந்தது. ஆனாலும் கேட்காமல் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பட்டியோ அவசரப்பட்டு கேட்டுவிட்டான். வேதாளத்திடம் மாட்டிக்கொண்டான். விக்கிரமாதித்தன் சுதாரித்துக்கொண்டான். "பட்டியே! என் அன்புத் தம்பியே! இஇடையிடைடே குறிக்கீடு செய்யாமல் கதையைத் தொடர்ந்து கேட்பாயாக. வேதாளமே! தொடர்க."

பட்டியோ நாயிடம் தப்பி பேயிடம் மாட்டிக்கொண்ட நிலைக்கு ஆளானான். தன்னையும் தன் விதியையும் நொந்தவன் வேதாளம் சொல்வதைக் கேட்கலானான்.

வேதாளம் கூறியவை.

மாரப்பன் ஆவின்பாலைப் பார்த்துக் கேட்டான். "மன்னர்கள் என்னதான் கூறுகிறார்கள்?"

" மாரப்பா! நான் காட்டிலிருந்து நாட்டிற்குச் சென்றதும் முதலில் அன்புச்செல்வரைச் சந்தித்தேன். பின்னர் யாதவரைச் சந்தித்தேன். பிறகு அவர்கள் இஇருவரும் சந்தித்தார்கள். உரையாடினார்கள். உரையாடலில் அவர்கள் முடிவுசெய்ததை உன்னிடம் சொல்ல வந்துள்ளேன். சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். சிலவற்றைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இஇதோ நீங்கள் கேட்ட ஐம்பெருங்காப்பியங்களும் சங்க இஇலக்கிய ஏடுகளும் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள்."

"அதெல்லாம் சரி. எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லுங்கள்."

"முதல் கோரிக்கை. செந்நாட்டில் அனைவரும் செம்மொழியே பேசவேண்டுமென்பது. அது நடக்காது. ஏனென்றால் செந்நாட்டார் செம்மொழியையும் அதன் செம்மையையும் மறந்து நீண்ட காலமாகிறது. யாருக்கும் சரியாகப் பேச்சு வரவில்லை. ஆகையால் இஇந்தக் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது.

அடுத்தது. கருநாட்டைப் பற்றி. செந்நாட்டில் வாழும் அயல்நாட்டவர் இஇப்போது வழக்கில் இஇருக்கும் செம்மொழியைக் கற்கவேண்டும் என்று நாம் வலியுறுத்துவதால், கருநாட்டு மன்னர் இஇந்தக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

மூன்றாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது."

"என்ன மூன்றாவதுமா? பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் அன்னையர்களே பாலூட்ட வேண்டும் என்று கேட்பதில் என்னய்யா தவறு இஇருக்கிறது?"

"மாரப்பரே உணர்ச்சிவசப்படாதீர்கள். அன்னையர் குலம்தான் இஇந்தக் கோரிக்கையை நிராகரித்தது."

"அப்படியா ஆவின்பாலாரே! உங்களை வருந்தி என்ன பயன்? நாற்றம் குப்பையில் இருக்க அதை ஏற்றிச் செல்லும் வண்டியை வைவதால் என்ன பயன்? ஆமாம்! அப்படி என்னதான் காரணம் கூறினார்கள்."

"அப்பிடிக் கேளுங்கள் சொல்லுகிறேன். பிள்ளைகளுக்கு பால் கொடுத்தால் அழகு குறைகிறதாம். வயது கூடுகிறதாம். இஇதெற்கெல்லாம் மேலாக அவர்கள் புறநானூற்றுப் பாடலையும் காரணம் காட்டுகிறார்கள். ஈன்று புறந்தருதல் மட்டுமே அன்னைக்குக் கடன். பிறந்த பிள்ளையைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன். ஆகையால் அவர்கள் வேலை பிள்ளையைப் பெற்றுத் தருவதிலேயே முடிந்துவிடுகின்றபடியால் பாலூட்ட மறுக்கிறார்கள்."

"சரி அது போகட்டும். அடுத்தது...."

"சத்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். உடனடியாக இஇருநாட்டு மன்னர்களும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டார்கள். நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காக இஇதோ என்னிடத்தில் சட்டினியைக் கட்டிக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். கூடவே பாருங்கள் இஇட்டிலி. இஇந்தாருங்கள்." சட்டினியையும் இஇட்டிலியையும் மாரப்பன் முன் நீட்டினார் ஆவின்பால். வாங்கிச் சுவைத்த மாரப்பன் முகத்தில் தெரிந்த நிறைவைக் கண்டதும் ஆவின்பால் தொடர்ந்தார்.

"உங்கள் முகத்தில் உண்டான நிறைவைக்காண மெத்த மகிழ்ச்சியாக இஇருக்கிறது. நான் அரசகுமாரையும் மற்றவர்களையும் அழைத்துச் செல்லவா?"

"என்ன அதற்குள்ளாகவா? மற்ற கோரிக்கைகள்?"

"ஆஆமாமாம். மறந்தே போய்விட்டேன். அடுத்த கோரிக்கை....ஆம். ஆட்டு உரல். இதைப்பற்றி நாட்டிலுள்ள அறிவியலார்கள் அனைவரும் கூடிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். திருக்கோயில் பிரசாதத்திற்கும் இஇரண்டு நாட்டு மன்னர்களும் உறுதி கூறியுள்ளார்கள்."

"இஇதெல்லாம் சரி! மற்ற இரண்டு கோரிக்கைகள்."

"அதற்கும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் விடுவிக்கப் படுவார்கள்."

மாரப்பன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயிஇல்லை. நேராக அரசகுமாரிடம் சென்றான். "அரசகுமார் அவர்களே! நாம் பிரியும் வேளை வந்துவிட்டது. இஇன்று இஇரவு உணவிற்குப் பின்னால் நீங்கள் நாடேகலாம். ஏனென்றால் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன."

அரசகுமாரின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. நன்றாக எட்டிப்பார்த்தால் விழுந்துவிடுவோம் என்று எண்ணி கண்ணிலேயே தங்கியது. அந்த நேரத்தில் சோத்துச் சட்டி கோவிந்தன் மூச்சிறைக்க படபடவென ஓடி வந்தான். எதற்கு இப்படி ஓடிவருகிறான்?

(தொடரும்...