PDA

View Full Version : ஹைக்கூ ???



முத்து
10-05-2005, 12:59 AM
அரைஞான் கயிறு

மனிதன்
பூமிக்குப்போட்ட அரைஞான் கயிறு
பூமத்திய ரேகை...

முத்து
10-05-2005, 01:01 AM
நம்பிக்கை..

கடவுள் இன்னமும் மனிதன் மீது
நம்பிக்கை இழக்கவில்லை- சொன்னது
இன்று பிறந்த குழந்தை.

அறிஞர்
10-05-2005, 02:48 AM
பூமத்திய ரேகை.. பற்றி வித்தியாசமான சிந்தனைகள்...


நம்பிக்கையூட்டும் வரிகள்

pradeepkt
10-05-2005, 04:10 AM
ஆகா,
ஹைக்கூ என்பதன் ( இல்லாத ) இலக்கணம் துளியும் மீறாமல் கடைசி இரண்டு வார்த்தைகள் பொட்டில் அடித்தாற் போல்!

பரஞ்சோதி
10-05-2005, 04:28 AM
ஹையா, ஹைக்கூ அருமை.

இது போன்ற ஹைக்கூ நானும் எழுத முயற்சிக்கிறேன்.

முன்பு இளசு அண்ணாவின் முரண்பாக்கள் ஒரு கலக்கு கலக்கியதே, அதையும் தொடரலாமே.

அறிஞர்
10-05-2005, 04:32 AM
ஆகா,
ஹைக்கூ என்பதன் ( இல்லாத ) இலக்கணம் துளியும் மீறாமல் கடைசி இரண்டு வார்த்தைகள் பொட்டில் அடித்தாற் போல்!

ஒஹோ.. இதான் இலக்கணமா...... நன்றி நண்பா...

இனி பரம்ஸின் கவிகளை பார்க்கலாம்...

மன்மதன்
10-05-2005, 04:47 AM
ஹைக்கூ அருமை.. இன்னும் எழுதலாமே..
அன்புடன்
மன்மதன்

முத்து
11-05-2005, 11:23 PM
அறிஞர்,பிரதீப்,பரஞ்சோதி,மன்மதன்,
நன்றிகள்.

முத்து
11-05-2005, 11:27 PM
பிரதீப்,
உண்மையில் ஹைக்கூ இலக்கணம் அவ்வளவாய் எனக்குத் தெரியாது. பழைய திஸ்கி மன்றத்தில் நான் எழுதியவைகளை மீண்டும் யுனிகோடுக்கு மாற்றி இட்டுக்கொண்டிருக்கிறேன்.

pradeepkt
12-05-2005, 04:05 AM
பிரதீப்,
உண்மையில் ஹைக்கூ இலக்கணம் அவ்வளவாய் எனக்குத் தெரியாது. பழைய திஸ்கி மன்றத்தில் நான் எழுதியவைகளை மீண்டும் யுனிகோடுக்கு மாற்றி இட்டுக்கொண்டிருக்கிறேன்.

எனக்கும் அவ்வளவாகத் தெரியாது இந்த சிலவற்றைத் தவிர :)
மொத்தம் 17 வார்த்தைகள் இருக்க வேண்டும்.
கடைசி வரி முன் வரிகளிலிருந்து மாறுபட்டதாய் ஒரு கருத்தைச் சட்டென்று சொல்லி வியக்க வைத்து முடிவுக்கு வர வேண்டும்.
நானும் எழுத முயன்றிருக்கிறேன். நிறைய எழுதுங்கள் முத்து.

kavitha
16-05-2005, 04:39 AM
ஹையா, ஹைக்கூ அருமை.

இது போன்ற ஹைக்கூ நானும் எழுத முயற்சிக்கிறேன்.

முன்பு இளசு அண்ணாவின் முரண்பாக்கள் ஒரு கலக்கு கலக்கியதே, அதையும் தொடரலாமே.


இதே தான் எனக்கும் தோன்றியது.

முத்து அண்ணா இரண்டு ஹைக்கூவுமே மிகவும் நன்றாக உள்ளது.
இதனைக் காட்சிப்பாவில் போடலாம்.

குழந்தை ஹைக்கூ ரொம்ப பிடிச்சிருந்தது.
கடவுள் எப்போதும் நம்பிக்கை இழக்கப்போவதில்லை!!

சுவேதா
16-05-2005, 11:23 AM
முத்தண்ணா! உங்கள் ஹைக்கூ மிகவும் அருமை வாழ்த்துக்கள். எனக்கு மற்ற கவிதைகளை விட ஹைக்கூதான் எனக்கு மிகவும் பிடிக்கும். அண்ணா! இன்னும் இன்னும் எழுதுங்கள்.

பிரியன்
16-05-2005, 03:40 PM
அருமையான ஹைக்கு தந்த முத்துவிற்கு நன்றி...

இதை கண்டவுடன் நீண்ட நாளாய் என் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை பதிவு செய்யலாம் எனும் ஆவல் வந்துவிட்டது.

கண்ணில் ஏக்கம்
அருகில் யாழ்
விரலில்லா கை

இது ஹைக்குவா என்பதை நண்பர்களே முடிவு செய்யட்டும்

pradeepkt
17-05-2005, 04:11 AM
அந்த "விரலில்லா கை" என்பதே இதை ஹைக்கூ என்கிறது.
இது என் கருத்து!

மன்மதன்
31-08-2005, 03:04 PM
மழை வேண்டி மிருகத்திற்குள்
கலப்பு திருமணம்..
தெளிவாய் இயற்கை..

மன்மதன்
31-08-2005, 03:04 PM
தமிழ் உணவகம்
அன்புடன் வரவேற்றது
மீல்ஸ் ரெடி..

மன்மதன்
31-08-2005, 03:06 PM
அசையும்
முட்களுக்கு மத்தியில்
அமைதியாய் அலார முள்..

kavitha
01-09-2005, 06:02 AM
ஹைக்கூ அருமை.ஏற்கனவே பழைய மன்றத்தில் பதித்திருக்கிறீர்களா? படித்தது போல் உள்ளன.

mania
01-09-2005, 06:50 AM
ஹைக்கூ அருமை.ஏற்கனவே பழைய மன்றத்தில் பதித்திருக்கிறீர்களா? படித்தது போல் உள்ளன.

:confused: :confused: என்னென்னமோ முயற்சித்தும் கவியின் எழுத்துக்களுக்கு என்னால் தமிழை கொடுக்கமுடியவில்லையே.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:confused:

gragavan
01-09-2005, 07:45 AM
:confused: :confused: என்னென்னமோ முயற்சித்தும் கவியின் எழுத்துக்களுக்கு என்னால் தமிழை கொடுக்கமுடியவில்லையே.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:confused:ஹைக்கூ அருமையாம்.....எங்கேயோ படிச்சிருக்காரம்........அதைத்தான் பூடகமாகச் சொல்றாங்க.

Mano.G.
01-09-2005, 08:12 AM
தமிழ் உணவகம்
அன்புடன் வரவேற்றது
மீல்ஸ் ரெடி..

அருமையான ஹைக்கூ
சவுக்கடி போல்
தமிழுக்கு இப்படி ஒரு இழுக்கு


மனோ.ஜி

மன்மதன்
03-09-2005, 04:24 AM
ஹைக்கூ அருமை.ஏற்கனவே பழைய மன்றத்தில் பதித்திருக்கிறீர்களா? படித்தது போல் உள்ளன.

ஒண்ணும் புரியலை கவிதா.. உனக்கு இந்த எழுத்துகள் தெரிகிறதா??

pradeepkt
06-09-2005, 04:04 AM
அசையும்
முட்களுக்கு மத்தியில்
அமைதியாய் அலார முள்..
பின்னிட்டய்யா... ரொம்ப ரசித்தேன்.
ஒரு சிறு கருத்து... இதில் இந்த அமைதியாய் என்ற வார்த்தையைத் தூக்கி முன் வரியில் போட்டு அலார முள்ளைக் கீழே போட்டால் கிடைக்கும் திக் ஹைக்கூவிற்கு இலக்கணம்.

மன்மதன்
06-09-2005, 04:17 AM
அசையும் முட்களுக்கு மத்தியில்
அமைதியாய்
அலார முள்..

இப்படியா பிரதீப்..??

pradeepkt
06-09-2005, 05:17 AM
இப்படியும் இருக்கலாம்
அந்தக் கடைசி வரியில் வரும் அலார முள் ஒரு பஞ்ச்
ஹைக்கூக்களுக்குக் ஒவ்வொரு வரிக்கும் தொடர்பில்லாது, கடைசி வரி அனைத்துக்கும் தொடர்பு கொடுத்து ஒரு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று எங்கோ படித்தேன்.

பிரியன்
06-09-2005, 05:28 AM
அலாரமுள்
முட்களுக்கு மத்தியில்
அமைதியாய்

மன்மதன்
06-09-2005, 05:31 AM
அலாரமுள் அடுத்து முட்களுக்கு என்று வருகிறது..

அங்கே அமைதியாய் என்ற ஒரு வாக்கியம் வருவதனால், ஆரவாரம் மிகுந்த ஒரு காட்சி தேவைப்படுகிறது.. இரண்டாவது வரி, முட்களுக்கு மத்தியில்.. முற்றுப்பெறாத மாதிரி..

அலாரமுள்
அசைகின்ற முட்களின் மத்தியில்
அமைதியாய்..

என்று இருக்கலாமா ???

பிரியன்
06-09-2005, 05:34 AM
அமைதியாய், அசையும் இவை இரண்டும் அதிகமான வார்த்தைகள். ஹைக்கூவில் எவ்வளவுக்க்கு எவ்வலவு வார்த்தை சிக்கனம் செய்கிறமோ அந்த அளவு அழகாக இருக்கும். கவிதையை போல ஹைக்கூவில் எல்லாவற்றையும் சொல்லத் தேவையில்லை

பிரசன்னா
09-09-2005, 05:18 PM
ஹைக்கூ அருமை

ஆதவா
07-01-2007, 10:30 AM
அரைஞான் கயிறு

மனிதன்
பூமிக்குப்போட்ட அரைஞான் கயிறு
பூமத்திய ரேகை...

ஆகா!! எப்படிப்பா! இந்தமாதிரியெல்லாம் உங்களுக்கு தோணுது.

தமிழ் உணவகம்
அன்புடன் வரவேற்றது
மீல்ஸ் ரெடி

சவுக்கடி

ஷீ-நிசி
07-01-2007, 12:20 PM
காலையில் தலை நிறைய
பூக்களுடன் சென்றவள் -மாலையில்
வீடு திரும்பினாள் வெறும் கூடையுடன்.

பூக்காரி!

இளசு
07-01-2007, 08:04 PM
முத்து எங்கே..இப்போது???????