PDA

View Full Version : இனிக்கும் கனவுகள்



முத்து
10-05-2005, 12:56 AM
இனிக்கும் கனவுகள்

சன்னல் வழியாய்க் கீழே பார்த்தால்
கட்டெறும்பாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள்..
அந்தச் சாலையின் அருகே பூங்காவில்
உற்சாகமாய் விளையாடும்
சின்னஞ்சிறு பிஞ்சுகள்...

சிறுமிகள் ஊஞ்சலாட..
ஒரு சிறுவன் மணலிலே தனக்கே தனக்காய்
ஒரு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறான்...

இன்பமென்ற வார்த்தையே புரியாமல்
இன்பம் தவிர எதுவுமே அறியாமல்
எண்ணும்போதெல்லாம்
இனிக்கும் நாட்கள்....

அடடா... இன்பமென்றால் அதுதானென்று
யாருமப்போது சொல்லவில்லை...
சொன்னாலும் புரியாத வயது அது....

பள்ளியின் கட்டடங்கள்..
சுற்றி நின்ற பசுமரங்கள்....
அதை நினைத்தால் அழகாயிருக்கிறது..
ஆனால் அது அன்றைக்கென்னவோ
அவ்வளவு அழகாயில்லை...

பள்ளியிலே செய்திட்ட குறும்புகள்தான் எத்தனை..
அதற்காக வாங்கிய பிரம்படிகள் ....

பிரம்படிகள்அன்று வலித்தாலும்..
இப்போது நினைத்தால்
அதுவும் கூடத் தேனாய் இனிக்கிறதே
இது என்ன மாயம்...?

அன்று படித்த சித்திரக்கதையும்..
அம்புலிமாமாவும்.. கார்ட்டூன் படமும்..
இன்றைக்குத்தான் நல்லாவேயில்லை..

மழைநீரில் ஓட விட்ட
அந்தக் காகிகக் கப்பலுக்கு
அன்று செய்த
பிரார்த்தனைகள்...

பக்கத்து வீட்டுப் பையனிடம்..
பள்ளியிலே போட்ட சண்டைகள்..
அப்போது போட்ட சவால்கள், சபதங்கள்..
இப்போது நினைத்தால்
சிரிப்பாய் வருகிறது....

பள்ளிக்கெதிரே
அந்தப் பாட்டி விற்ற சீடைபோல்
இன்று ஏன் எதுவும் சுவையாயில்லை...?

நினைத்ததைச் செய்யச் சுதந்திரமிருந்தாலும்
இன்று எத்தனையோ நண்பர்கள் சுற்றியிருந்தாலும்
ஆயிரமாய்.. லட்சமாய் கையில் புரட்டாலும்..
அநதவகை இன்பம் மட்டும் எங்கே போனது....?

இவையெல்லாம்...
யாருக்கும் புரியாத
மர்மங்கள்...

சன்னல் வழியாய்க் கீழே பார்த்தால்
கட்டெறும்பாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள்..
அந்தச் சாலையின் அருகே பூங்காவில்
உற்சாகமாய் விளையாடும்
சின்னஞ்சிறு பிஞ்சுகள்...

சிறுமிகள் ஊஞ்சலாட..
ஒரு சிறுவன் மணலிலே தனக்கே தனக்காய்
ஒரு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறான்...

amudha
10-05-2005, 01:12 AM
வாவ்..மிகவும் அழகிய கவிதை.."ஞாபகம் வருதே "பாடலை ஞாபகப் படுத்துகிறது... :)

//அன்று படித்த சித்திரக்கதையும்..
அம்புலிமாமாவும்.. கார்ட்டூன் படமும்..
இன்றைக்குத்தான் நல்லாவேயில்லை..

மழைநீரில் ஓட விட்ட
அந்தக் காகிகக் கப்பலுக்கு
அன்று செய்த
பிரார்த்தனைகள்...//

ஆனா நினைவுகளை ஏன் 'கனவுகள்'னு சொல்லி இருக்கீங்க??

முத்து
10-05-2005, 01:14 AM
வாவ்..மிகவும் அழகிய கவிதை.."ஞாபகம் வருதே "பாடலை ஞாபகப் படுத்துகிறது... :)


அமுதா,
நன்றி உங்கள் கருத்துக்கு.

முத்து
10-05-2005, 01:19 AM
ஆனா நினைவுகளை ஏன் 'கனவுகள்'னு சொல்லி இருக்கீங்க??

அமுதா,

கடந்த கால நினைவுகளுக்கும்,
கடந்த இரவில் நாம் கண்ட கனவுக்கும்
அதிக வித்தியாசமுண்டா ?

amudha
10-05-2005, 01:38 AM
ஆமாம், நீங்க சொல்லறது சரிதான்...

மனதில் நிலைத்து நிற்கும் நினைவுகளே பல சமயங்களில் கனவாக போய்விடுகிறது...

அறிஞர்
10-05-2005, 02:43 AM
காலத்தின் மாற்றம்
நினைவலைகளின் ஓட்டம்.........
வெகு அருமை... நண்பா

pradeepkt
10-05-2005, 04:04 AM
அருமை முத்து.
நானும் இப்போதெல்லாம் பேருந்தில் செல்லும்போது நிறைய வேடிக்கை பார்க்கிறேன். எத்தனை வகை மனிதர்கள்? அந்த மனிதர்களுக்குள் எத்தனை வகைக் குழந்தைகள்? அந்தக் குழந்தைகளுக்குள் மறுபடி எத்தனை வகை மனிதர்கள்?
எல்லோருக்கும் ஆட்டோகிராஃப் இருக்கிறது.

அறிஞர்
10-05-2005, 04:34 AM
அருமை முத்து.
நானும் இப்போதெல்லாம் பேருந்தில் செல்லும்போது நிறைய வேடிக்கை பார்க்கிறேன். எத்தனை வகை மனிதர்கள்? அந்த மனிதர்களுக்குள் எத்தனை வகைக் குழந்தைகள்? அந்தக் குழந்தைகளுக்குள் மறுபடி எத்தனை வகை மனிதர்கள்?
எல்லோருக்கும் ஆட்டோகிராஃப் இருக்கிறது.

உம் ஆட்டோகிராபை.. எடுத்துவிடுங்கள்.. அன்பரே.....

pradeepkt
10-05-2005, 06:20 AM
உம் ஆட்டோகிராபை.. எடுத்துவிடுங்கள்.. அன்பரே.....
சீக்கிரமே செய்கிறேன் அறிஞரே.

பரஞ்சோதி
10-05-2005, 06:34 AM
முத்து எங்கள் சொத்து என்பது போல் அல்லவா இருக்கிறது.

அருமையான கவிதை முத்து, என்ன சொல்வது அத்தனையும் உண்மை, அருமை.

உங்களுக்குள் கவிஞன் ஒளிந்திருக்கிறான், மொத்தமாக அவனை வெளியே எடுத்து விடுங்க - விவேக் சொல்ற மாதிரி.

babu4780
10-05-2005, 06:41 AM
காலத்தின் மாற்றம்
நினைவலைகளின் ஓட்டம்.........
வெகு அருமை... நண்பா
முத்து அவர்களே கவிதை சூப்பர்.

அந்த பழய நினைவுகளும் சின்னச்சின்ன கனவுகளும் தான் நமக்கு எப்போதும்
'வினைஊக்கியாக' செயல்படுகிறது என நினைக்கிறேன்.
-பெரி

முத்து
11-05-2005, 11:59 PM
அறிஞர்,பிரதீப்,பரஞ்சோதி,பாபு,
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.

முத்து
12-05-2005, 12:02 AM
அருமை முத்து.
நானும் இப்போதெல்லாம் பேருந்தில் செல்லும்போது நிறைய வேடிக்கை பார்க்கிறேன். எத்தனை வகை மனிதர்கள்? அந்த மனிதர்களுக்குள் எத்தனை வகைக் குழந்தைகள்? அந்தக் குழந்தைகளுக்குள் மறுபடி எத்தனை வகை மனிதர்கள்?
எல்லோருக்கும் ஆட்டோகிராஃப் இருக்கிறது.

உண்மைதான் பிரதீப். எல்லோருக்கும் ஆட்டொகிராப், அழகி இருக்கிறது. அதன் தாக்கமே இதுசம்பந்தப்பட்ட கதைகளை வெற்றிபெற வைக்கிறது.