PDA

View Full Version : தண்ணீரின் தாகம்



முத்து
10-05-2005, 12:43 AM
தண்ணீரின் தாகம்

நான் ஒரு சிரஞ்சீவி !
காலச்சக்கரத்தால் அழிக்கப்படா
சிற்சில பேர்களிலே
நான் முதல்வன்.

நானே பெரும்பகுதி !
இவ்வுலகில் மட்டுமல்ல,
உங்கள் உடலிலும்தான்.

நான் சமத்துவத்திற்கோர் முன்னுதாரணம் !
கர்ப்பக்கிரகக் கடவுளையும்,
காரிருள் நெஞ்சம் கொண்ட கடையோனையும்
சமமாகப் பாவித்து நீராட்டுவதால்.

நான் தவிர்க்கமுடியாதவன் !
மண்ணை,பொன்னை,பெண்ணை வெறுத்தோரும்
என்னை வேண்டாமென்று சொல்லமுடியாததால்.

http://img.photobucket.com/albums/v226/muthukmuthu/thanneer.jpg

நான் பொதுநலவாதி !
பிறரை சுத்தமாக்கி
நான் அழுக்காவதால்.

நான் இவ்வுலகத் தேரின் அச்சாணி !
அதுமட்டுமல்ல,
அத்தேரின் சக்கரங்களும் நானேதான்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என
என்னைப் பாராட்டும் மக்களே !
ஒரு சிறு விண்ணப்பம்,
கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு
என் பெயரைச் சூட்டாதீர் !!!!

amudha
10-05-2005, 01:26 AM
தலைப்பு நல்லா இருக்கு...

//ஒரு சிறு விண்ணப்பம்,
கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு
என் பெயரைச் சூட்டாதீர் !!!! /--இப்படி திடீர் விண்ணப்பம் எல்லாம் போட்டா எப்படி?... தண்ணீர்னு சொன்னா குடிப்பதைவிட 'அடிப்பது' தானே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும்... :)

அறிஞர்
10-05-2005, 02:46 AM
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என
என்னைப் பாராட்டும் மக்களே !
ஒரு சிறு விண்ணப்பம்,
கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு
என் பெயரைச் சூட்டாதீர் !!!!



தண்ணீருக்கே தாகமா.... என்று நோக்கினேன்....

அதின் தாகத்தில் நியாயம் இருக்கிறதே......

pradeepkt
10-05-2005, 04:08 AM
நான் யார் என்று நீர் விளக்குவது சத்தியமாய் நீரே விளக்குவது போலிருக்கிறது, முத்து.
கொஞ்சம் வசன நடை ஆயிருச்சோ?

முத்து
11-05-2005, 11:22 PM
அமுதா, அறிஞர், பிரதீப்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

kavitha
16-05-2005, 04:58 AM
வாவ்! சூப்பரான கவிதை!
இப்படி நாலு பேர் கிளம்பினா போதுமே!
இரட்டை அர்த்த வசனங்கள் ஒழிந்துவிடுமே!
மதுவையும் புறக்கணித்தால் இன்னும் நன்று

சுவேதா
16-05-2005, 11:29 AM
ஆகா மிகவும் நன்றாக உள்ளது அண்ணா ஒவ்வொரு வரிகளும் அற்புதம் அண்ணா மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்!

பிரசன்னா
10-09-2005, 05:58 PM
நான் பொதுநலவாதி !
பிறரை சுத்தமாக்கி
நான் அழுக்காவதால்
ஆகா மிகவும் நன்றாக உள்ளது