PDA

View Full Version : என் அறையின் மூலையில்

முத்து
10-05-2005, 12:33 AM
என் அறையின் மூலையில் ....

எழுதித் தீர்ந்த
பேனாக்கள்...

உழைத்துத் தேய்ந்த
செருப்புகள்....

பலர் படித்துக் கிழிந்த
புத்தகங்கள்...

காய்ந்து உலர்ந்த
மலர்கள்...

அனைத்தும் கடமை முடித்த
பெருமிதத்தில்...

அறையின் நடுவே புத்தம் புதிதாய்..
நான் மட்டும்.

amudha
10-05-2005, 01:31 AM
எளிமையான, அழகான கவிதை...

உங்களோட கடமை இன்னும் முடியலை-னு சொல்லறீங்களா?

அறிஞர்
10-05-2005, 02:44 AM
புரட்டி பார்க்கும் புத்தகமாய் மாறிடு நண்பா......

pradeepkt
10-05-2005, 04:05 AM
கடமை முடிந்து அடுத்த கடமைக்காய்க் காத்திருக்கிறீர் என்று நானே பொருள் கொள்கிறேன்.

Nanban
10-05-2005, 06:18 PM
என் அறையின் மூலையில் ....

எழுதித் தீர்ந்த
பேனாக்கள்...

உழைத்துத் தேய்ந்த
செருப்புகள்....

பலர் படித்துக் கிழிந்த
புத்தகங்கள்...

காய்ந்து உலர்ந்த
மலர்கள்...

அனைத்தும் கடமை முடித்த
பெருமிதத்தில்...

அறையின் நடுவே புத்தம் புதிதாய்..
நான் மட்டும்.

கவிதையின் முடிவு அருமை. முதலில் படிப்பவர்களுக்கு சட்டெனத் தெரிவது - அறையின் நடுவே புத்தம் புதிதாய் உபயோகத்தில் நைந்த பொருட்கள் தான் தெரிகின்றன. பின்னர் தான் அந்த "நான் மட்டும்" தெரிகிறது. ஒரு வேளை

"நான் மட்டும்
அறையின் நடுவே புத்தம் புதிதாய்"

என்று எழுதியிருந்தால், கவிதையின் தாக்கம் குறைந்திருக்கும். கவிதையின் சூட்சுமமே இந்த "முடிக்கும்" திறன் தான்.

யாருக்கும் உபயோகமற்ற அந்த நான் மட்டும் இறுதியில் வரப் போய்த் தான் கவிதை சட்டென ஒரு திருப்பம் பெறுகிறது. கவிதையும் உயிர் பெறுகிறது.

நன்றி முத்து.

பரஞ்சோதி
10-05-2005, 07:01 PM

முத்தான கவிதை, அத்துடன் சத்தான விளக்கம்.

நண்பனின் விளக்கம் புதிய கவிஞர்களுக்கு நல்ல அறிவுரை.

நண்பன் அவர்கள் தொடர்ந்து கவிதைகளை படித்து தன் விமர்சனத்தை சொல்ல வேண்டும், அதன் மூலம் நான் கவிதைகள் பற்றிய தெளிவு பெற வேண்டும், இறுதியில் கவிதைகள் வடிக்க வேண்டும்.

முத்து
11-05-2005, 11:42 PM
எளிமையான, அழகான கவிதை...

உங்களோட கடமை இன்னும் முடியலை-னு சொல்லறீங்களா?

அமுதா,
கவிதைக்கு நாம் நமது கற்பனைப்படி பொருள்கொள்ளும் சுதந்திரம் வைக்கும் கவிதை நல்ல கவிதை.

வாசகனின் சுதந்திரத்துக்கும் கவிதைக்கும் இடையில் படைப்பாளி வருவதை பலர் எதிர்க்கிறார்கள்.

ஒரு கவிதைக்கு பல பொருள்கள் வருவது சாத்தியமானது. ஆனால் நான் பொதுவாய் மிகக்கனமான, பல்பொருள் தரும் பின்நவீனத்துவக் கவிதைகள் எழுதுவதில்லை(விரும்புவதில்லை, எழுதத் தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம் ) :) .

நான் எழுதியபோது நினைத்தது நீங்கள் மேலே சொல்லியிருப்பதைத்தான்.

ஒரு பூ காய்ந்தவுடன், செருப்புத் தேய்ந்தவுடன் அதன் கடமை முடிந்துவிடுகிறது,பழையதாகிவிடுகிறது, மூலையில் எறியப்படுகிறது. ஆனால் தனது கடமை முடியாத மனிதன் புதிதாகவே இருக்கிறான். மேலும் கடமை முடித்தவை மூலையில் இருக்கும்போது அவன் மட்டும் அறையில் நடுவிலே இருக்கிறான். பூ, செருப்பு போன்றவைகளை வேலைக்காரர்கள், அல்லது நமது காரியத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட மனிதர்கள் எனக் குறியீடுகளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

முத்து
11-05-2005, 11:45 PM
கடமை முடிந்து அடுத்த கடமைக்காய்க் காத்திருக்கிறீர் என்று நானே பொருள் கொள்கிறேன்.

பிரதீப்,
நீங்கள் சொல்லும் பொருள் நன்றாக இருக்கிறது.

முத்து
11-05-2005, 11:47 PM
அறிஞர், பரஞ்சோதி,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

முத்து
11-05-2005, 11:52 PM
கவிதையின் முடிவு அருமை. முதலில் படிப்பவர்களுக்கு சட்டெனத் தெரிவது - அறையின் நடுவே புத்தம் புதிதாய் உபயோகத்தில் நைந்த பொருட்கள் தான் தெரிகின்றன. பின்னர் தான் அந்த "நான் மட்டும்" தெரிகிறது. ஒரு வேளை

"நான் மட்டும்
அறையின் நடுவே புத்தம் புதிதாய்"

என்று எழுதியிருந்தால், கவிதையின் தாக்கம் குறைந்திருக்கும். கவிதையின் சூட்சுமமே இந்த "முடிக்கும்" திறன் தான்.

யாருக்கும் உபயோகமற்ற அந்த நான் மட்டும் இறுதியில் வரப் போய்த் தான் கவிதை சட்டென ஒரு திருப்பம் பெறுகிறது. கவிதையும் உயிர் பெறுகிறது.

நன்றி முத்து.

நண்பன்,
நன்றிகள். முதலில் இக்கவிதையை எழுதியபோது "நான் மட்டும்
அறையின் நடுவே புத்தம் புதிதாய்" என்றுதான் எழுதினேன், பின்னர் இப்போது இருப்பதைப்போல் திருத்தி எழுதியபோது நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. தாக்கம் பற்றி நீங்கள் சொன்ன பிறகுதான் யோசித்துப் பார்த்தேன். நன்றிகள் மீண்டும்.