View Full Version : அறிஞரின் வாழ்த்துக்கள்
அறிஞர்
05-05-2005, 11:26 AM
மன்றத்து.... உறவுகளுக்கு வாழ்த்துக்கள்......
மன்றம் ஆரம்பித்த நாள் முதல் உலா வருகிறேன்.....
எந்த புனைப்பெயரை எடுப்பது என்று யோசித்த காலத்தில் தம்பி முத்து எனக்கு என்று அவதார் அமைத்து கொடுத்த பெயர்...
தமிழகத்தில் பிறந்து.. பயின்று.... இப்பொழுது தைவானில் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.... நல்ல நண்பர்களை எப்பொழுதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
மன்ற மூலம் கிடைத்த பல நல்ல உறவுகளுக்கு என்றுமே என் வாழ்த்துக்கள் தொடரும்....
பிரியன்
05-05-2005, 11:53 AM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
அறிஞர்
05-05-2005, 11:54 AM
நன்றி பிரியன்... உங்கள் படைப்புக்கள் என்றுமே ஆனந்தம்தான்.. இன்னும் தாருங்கள்
மன்மதன்
05-05-2005, 12:24 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி அறிஞரே..
இந்தியா ட்ரிப் எப்படி இருந்தது??
அன்புடன்
மன்மதன்
அறிஞர்
06-05-2005, 01:43 AM
நன்றாக இருந்தது நண்பரே......... ஆனால் அலைச்சல்கள்தான் அதிகம்....
நண்பர்கள் பலரை சந்தித்தில் திருப்தி....
பரஞ்சோதி
06-05-2005, 08:31 AM
அறிஞருக்கே அறிமுகமா? சூரியனுக்கே வெளிச்சமா?
தமிழ் மன்றம் என்றாலே அறிஞர் இல்லாமலா?
மன்றத்தின் மீது அக்கறையும், உறுப்பினர்களிடம் அன்பும், நண்பர்களிடம் கேலியும் கிண்டலுமாக என்றைக்கும் எங்களுடன் இருக்க வேண்டுகிறேன்.
அறிஞர்
06-05-2005, 08:52 AM
இல்லை பரம்ஸ் ஊருக்கு போயிட்டு திரும்பி வந்தால்.. ஏகப்பட்ட மாற்றங்கள்....
புதுத்தளம்.... சுவேதா போன்று சில புதுமுகங்கள்... அதான் இந்த அறிமுகம்........
சக்தி என்ன சொல்லுகிறார்... ஊருக்கு எப்பொழுது
பரஞ்சோதி
06-05-2005, 09:10 AM
இல்லை பரம்ஸ் ஊருக்கு போயிட்டு திரும்பி வந்தால்.. ஏகப்பட்ட மாற்றங்கள்....
புதுத்தளம்.... சுவேதா போன்று சில புதுமுகங்கள்... அதான் இந்த அறிமுகம்........
சக்தி என்ன சொல்லுகிறார்... ஊருக்கு எப்பொழுது
அறிஞர் அவர்களே!
சக்தி நலமாக இருக்கிறார், அவரது குறும்புகள் சொல்ல ஆசை, ஆனால் நேரமில்லை.
அவரின் புகைப்படம் புது மன்றத்தில் போஸ்ட் செய்ய நினைத்தேன், ஆனால் பைல் சைஸ் மிகவும் குறைவாகவே போட வேண்டும் என்ற செய்தி வருகிறது, நண்பர் ராஜ்குமார் அதனை அதிகபடுத்தினால் நன்றாக இருக்கும்.
இல்லை என்றால் கூகிளில் போடுகிறேன். மெல்கி இந்திய பயணத்தை மிகவும் ரசித்திருப்பார் என்று நம்புகிறேன்.
நாங்கள் எல்லோரும் நவம்பர் மாதம் இந்தியா செல்ல இருக்கிறோம், திருப்பதி சென்று சக்திக்கு மொட்டை போட இருக்கிறோம்.
சுவேதா
06-05-2005, 10:51 AM
வாழ்த்துக்கும் மற்றும் உங்களை அறிமுகப்படுத்தியதற்கும். எனது நன்றிகள்
அண்ணா!
Narathar
25-05-2008, 09:41 AM
மன்றத்தில் அறிஞ்சரை மீண்டும் வரவேற்பதில் மிக்க மகிழ்கின்றேன்
சூரியன்
25-05-2008, 10:04 AM
மன்றத்தில் அறிஞ்சரை மீண்டும் வரவேற்பதில் மிக்க மகிழ்கின்றேன்
நாரதரே உங்களுக்கு என்ன ஆச்சு.:smilie_abcfra:
சுட்டிபையன்
25-05-2008, 10:37 AM
மன்றத்தில் அறிஞ்சரை மீண்டும் வரவேற்பதில் மிக்க மகிழ்கின்றேன்
நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டார்யையா ஆரம்பிச்சுட்டார்:aetsch013: